மாயாவி - கதைக்கு நல்லா பொருத்தமா பெயர் வச்சு இருக்கீங்க கா..
ஸ்ரீதர்
- இவனோட நட்பும் காதலும் கண்ணு வியர்த்துடுச்சு... அதிக ஹீரோயிசம் இல்லாத குறும்பும் அன்பும் நட்பும் பாசமும் கலந்த கலவை இவன். என்ன கோபமும் அப்படிதான் அதிகமா வருது.
தனது உயிர் நண்பன் அருளையும் அவனின் மனைவி ஸ்ரீ யின் தங்கை அமுதாவையும் ஒரு விபத்தில் பறி கொடுக்கிறான்.
கொலையாளியை தேடி தேடி தான் சந்தேகப்படும் ஒவ்வொருவரையும் அடிக்க போய் தனது வேலை இழந்து மன அழுத்தத்துக்கு ஆளாகும் ஸ்ரீ க்கு கொலையாளி யார் என்று தெரிய வருது. ஆனாலும் அருளின் குழந்தை உயிரோடு இருப்பதே அப்போது தான் தெரிய வந்து நிம்மிகாக பழி வாங்கும் நினைவை தள்ளி போடுறான். ஹரிதான் (அவனின் தம்பி) பேசி அவன் மனசை கொஞ்சம் மாத்துரான்.
அவனுக்கு அவனின் 10 வருட காதலி மஞ்சுவுடன் திருமணம் நிச்சயிக்க பட்டு வேலைகள் நடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அவனது உடல்நிலை அவனுக்கு தெரிய வர திருமணத்தை நிறுத்துகிறான். ஆனாலும் யாரும் அதை நிறுத்த தயாராக இல்லை.
திவ்யா - அவளது அத்தானின் காதல் அவளுக்கு இல்லை என தெரிய வந்து, வேலையில் நடக்கும் சிறு தவறால் வரும் பிரச்சினைகளால் மிகுந்த மன அழுத்தத்தில் அவள் செய்யும் தவறுகளால் வீட்டில் உள்ளோர் வெறுப்பை தாங்காது சாக போகிறாள்.
இந்நிலையில் இருவரும் சந்திக்கின்றனர். இவள் சாக வந்து முருகனிடம் சண்டையிடும் நேரம் இன்னும் உசுப்பேத்தி விடுறான்.
தன் திருமணத்தை நிறுத்த இவளை கருவியாக அவன் கூட்டி போக அங்கு திவியையே திருமணம் முடிக்கும் சூழல்.
போகும் முன் இருவருக்கும் நடக்கும் பல சண்டைகளில் இவள் செய்த செயல்கள் தெரிய வர இவளை வெறுத்து விடுகிறான்.
திருமணம் முடிந்து வரும் இரவில் மஞ்சுவின் இழப்பை தாங்காது போதையில் அவன் உளரும் அவன் உடல்நிலை கேட்டு திவ்யா அவனுடன் வாழ்வை ஆரம்பிக்கிறாள் அவனுக்கு தெரியாமல்.
அப்போ சந்தேகம் வந்து அவன் செக் செய்யும் சீன் செம்மையாக சிரிப்பு வந்துடுச்சு.
அவளை அவள் வீட்டுல விட்டுட்டு அவ தாலிய தூக்கி எறிந்து விட்டு போரவனுக்கு மறுபடியும் அவளை பார்க்கும் சூழல் அதும் நான்கு மாத கர்ப்பிணியாக.
பயங்கர சண்டை கோபம் எல்லாம் மீறி அவள் மீது சிறு அக்கறை அவள் சீண்டலுடன் அவளுக்கு சமைச்சு துணி காய வச்சுண்ணு போகும் போது தான் அவள் கேரியரா திருப்பி தர அவளை கல்யாணம் பண்ணி அவளுக்கு ஸ்டெத் பரிசு குடுத்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து அவள் மனதை கொஞ்சம் பேசி சரி பண்ணி அவளை மறுபடியும் டாக்டரா மாத்துறான்.
அவனின் கடந்தகாலம் அதில் அவனின் நட்பு அருள் உண்மையில் எவ்வளவு அருமையான நட்பு. எங்கும் எப்பொழுதும் விட்டு கொடுக்காத நட்பு. இவனுங்க பிரச்சினைக்கு பயந்து ஓடிட்டு வெளில கெத்து காட்டுறது செம்மடா சாமி
. அடி வாங்கியும் கூட அது குறையலை நர்சை வம்பு இழுப்பதெல்லாம் சான்ஸே இல்ல பயங்கர சிரிப்பு.
அருள் n அமுதா கல்யாணம் அவங்களோட நிம்மி பேபி பட் அவங்க இழப்பு என்னால படிக்க முடியல அந்த சீன் படிக்கும் போது can't control my dears..
அருள் அவனின் கடைசி நிமிசத்தில் கூட ஸ்ரீ யை காப்பாற்ற ஹரியை அழைப்பது கிரேட் நட்பு.
ஆனால் அவனுக்கு திவி ஒரு வரம் தான். அவன் பிரச்சினை தெரிந்தும் தன்னை அவனுக்கு கொடுத்து அவன் பிள்ளைகளை சுமந்து அவனை அவன் வீட்டோடு இருந்த கசப்பு தீர சேர்த்து என பயங்கரமா அவ காதலை காட்டி இருக்கா.. எல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு முடிவு எடுக்க யாருக்கு மனம் வரும் தெரியலை. Simply great she is... என்ன ஒன்னு ஆவூண்ணா அவன் உதட்டை கடிச்சு வச்சுடுறா. அவனுக்காக மட்டுமே அவள் செய்யும் செயல்கள் அவளின் ஏக்கங்கள் என்ன சொல்ல அதையெல்லாம். அவளின் காதல் புரிந்தும் கூட அவன் நிலையால் அவன் படும் துன்பங்கள் அதை அவளிடம் மறைக்க படும் பாடு இவ்வளவு கஷ்டம் அவனுக்கு வந்திருக்க வேண்டாம்.
ஆனால் அவள் கேரியரை அவன் திருப்பி குடுத்து இருக்கான். பிளஸ் ரெண்டு பேபி அவங்களுக்காக தானே அவளின் வாழ்வு. அவள் வாழ்வை அவள் எதிர்கொள்ள அவனின் கடிதம் படிக்கும் போதும்
ரெண்டுபேரும் முதல் சந்திப்புல இருந்து போடும் சண்டைகள் எப்பா டேய் சாமி ரெண்டு பேருக்கும் வாய் வலிக்குமா வலிக்காதா டா அப்படிதான் கேட்க தோணுச்சு.
முருக்ஸ் உங்க பக்தையை இப்படி நீங்க சோதிச்சு இருக்க வேண்டாம். கடைசியில் இப்படிலாம் நடக்குமா தெரியல பட் திவிக்கு ஒரு ஆறுதல் தான. அவள் காதலுக்கு அட்லீஸ்ட் முருக்ஸ் இதுவாது கொடுத்தாரே. மாயவியாய் மனசை மயக்க தான் செய்யுறான்
ஹரி - இவன் தான் இங்கு ரொம்ப பாவம். மஞ்சுவை திருமணம் முடிப்பதில் தொடங்கி ஸ்ரியை பற்றி வீட்டில் மறைத்து அவனின் ஒவ்வொரு நிமிடமும் கூட இருந்து என அவனுக்கு வெளியில் யாரிடமும் சொல்லி ஆறுதல் கூட தேட முடியா நிலமை
தம்பி ரோல சூப்பரா பண்ணி இருக்கான். திவ்யா மேல வச்சு இருக்க பாசம் சூப்பர்.
மஞ்சு - இத்தனை வருட காதலை விட்டு வேறொருவரை மணப்பது கொடுமை தான். ஆனால் அவளின் நல்லதற்காக மட்டுமே என்று அவள் என்றாவது புரிந்து கொள்வாள். அவள் கொடுக்கும் சாபம் கொஞ்சம் கோபம் வந்தது அதற்கு ஸ்ரீ யின் பதிலில் கூட யாருக்கும் எதும் புரியல. எப்படியோ ஹரியை ஏத்துகிட்டு வாழ்ந்தால் ஓகேதான்.
ஸ்ரீ n திவி
எனக்கு ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சது. இவங்க போடுற சண்டைலாம் கொஞ்சம் நல்லா என்ஜாய் பண்ணி படிச்சேன். சிரிக்க வச்சது மட்டுமில்லாம ரொம்பவே அழ வச்சுட்டாங்க.
ஸ்ரியின் குறும்புகள் அவன் அடிக்கும் லூட்டிகள், திவியிடம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி பேசி வம்பிழுப்பது, வேணும்னே மஞ்சு பேரை சொல்லி த்திவியை தண்டனை தர சொல்வது
என ஒரு அழகான சொல்லப்படாத எதார்த்தமான அன்பு. திவியின் காதலும் கொஞ்சமும் குறைஞ்சது இல்லை.
ஸ்ரீ பத்தி சொன்னா சொல்லிட்டே போலாம். பாண்டிக்கு கிடைச்ச தண்டனை நியாயமான ஒன்னு. என்ன 30வருஷம் கழிச்சு கிடைச்சிருக்கு. ஸ்ரீ யின் வாக்கு நிறைவேறியது.
இந்த கதிர் n நிம்மிக்கு என்ன பிரச்சினை. ரெண்டும் மூஞ்சிய தூக்கிட்டு அழையுது. கதிர் என்னடா நீ பொண்ணு வாய்ஸ் கேட்டதும் மட்டும் அப்படி திரும்பி பாக்குற. ஸ்ரீயை விடக் குறும்பா இவன்..
ஸ்ரீ க்கு என்ன பிரச்சினை, அவன் ஏன் மஞ்சுவை பிரிஞ்சான், திவியை ஏத்துக்க ஏன் தயங்கினான், பாண்டி யார்? அருள், அம்மு இழப்பு யார் காரணம் இதெல்லாம் கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
கவி கா கதை நல்லா இருந்தது. நிறைய கஷ்டமா இருந்தாலும் எதார்த்தம் அப்படினு ஒன்ன கண்டிப்பா ஏத்துக்கத்தான் வேண்டும்.
நிறைய குரும்புகளோடு, சண்டைகளோடு மெல்லிய சோகம் இழையோடிய சூப்பர்ப் ஸ்டோரி. நல்ல flow. கடைசி வரை என்னவா இருக்கும்னு தூண்டும் எழுத்து.
வாழ்த்துக்கள் அக்கா
வெயிட்டிங் சரவணன் கதைக்கு...