All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

பிக்.. சாரி நேத்தே கொடுக்க நெனச்சேன்..
கொஞ்சம் பிஸி..


அப்டேட் படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா..
நேசனை எந்த கணக்குல சேக்குறது..?


நன்றி

Pls drop your valuable comments below,

காதலால் தவி(ர்)க்கிறேன்..! கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு முறையும் சென்னை புக் fairக்கு போய்ட்டு வரனும்ன்னு ரொம்ப இஷ்டம்.. but இப்போ வரை அது நடக்கல..

ஆனா எனக்கு முன்னாடி என் பேரு அங்க போயிருக்குறதை நெனச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..

பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு நடுவுல என் புத்தகங்களும் சென்னை புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருப்பதில் பெரு மகிழ்ச்சி மக்களே...

எழுதறிவித்த இறைவனும்,
என்னை எழுத ஊக்கப்படுத்தும் என் குடும்பத்துக்கும்,
எனக்கு உதவி புரியும் என் அருமை தோழிகளுக்கும், அக்கா, ஆண்டிஸ்க்கும்
என் கதைகளை புத்தகங்களாக வெளியிட்ட அருண் பதிப்பகத்துக்கும்,
தளம் கொடுத்து உதவிய ஸ்ரீ அண்ணிக்கும், மஞ்சு அக்காவுக்கும்


last but not least என் கதையை படிச்சு likes and கருத்து தெரிவித்து உற்சாகமூட்டும் என் நேசமான வாசகர்களுக்கும் மிக்க மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி...🙏🙏🙏🙏🙏

என் முதல் கதை

"உன் விழிகளில் விழுந்த நொடி பாகம் 1 &2 உம்,"

நேரடி கதையாக வெளி வந்துள்ள,

"எந்தன் உயிரே..!
எந்தன் உயிரே..!"


ஆகிய இரண்டு நாவல்களும்

அருண் பதிப்பகம்
stall. no : 545 ல் கிடைக்கும் மக்களே..
இடம் : Y.M. C. A மைதானம்


புத்தகங்களை வாங்கி படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க மக்களே..

Exam எழுதிட்டு result எப்படி வரும்ன்னு நகத்தை கடிச்சு துப்பிக்கிட்டு உங்க கருத்துக்களுக்காக காத்துட்டு இருக்கேன் மக்களே..IMG-20190104-WA0009.jpgIMG-20190104-WA0010.jpgIMG-20190104-WA0011.jpgIMG-20181212-WA0049.jpgIMG-20180709-WA0001.jpgIMG-20180709-WA0000.jpg
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Book Fair க்கு வந்திருக்கிற
எந்தன் உயிரே..! எந்தன் உயிரே..!
novel ல இருந்து இன்னொரு டீசெர் மக்களே..! கொஞ்சம் பெரிய டீசெர் தான்..
படிச்சுட்டு கண்டிப்பா உங்க கருத்துக்களை சொல்லணும் சொல்லிட்டேன்...

Teaser 2:

மயிலாப்பூர்... இரண்டடுக்கு மாடி வீட்டைச் சுற்றி சிறு தோட்டம் போடப்பட்டிருக்க, அங்கே மந்திரா காலையிலே குளித்து முடித்து விட்டு அவளுக்கான தன் காபியை சற்று தள்ளியிருந்த சிறிய திட்டில் வைத்து விட்டு துளசி மாடத்தைச் சுற்றிக் கொண்டிருக்க,

அப்போது தான் துயில் களைந்து எழுந்த நக்ஷத்ரா கொல்லைப் புறத்திற்கு வந்தாள்..


பல் கூட துலக்காமல் பதுங்கி பதுங்கி வந்த நட்ஷூ,

‘போன்ல தான் உன்னை பேச வைக்குறது கஷ்டம்... நேர்ல ரொம்ப சிம்பிள்.. உன்னை தானா பேச வைக்குறேன் இருடி...’ என மனதில் சூழுரைத்தவள் மந்திராவின் காபியை எடுத்து குடிக்க நாக்கு சுட்டு விட,
நாக்கை வெளியே நீட்டி தன் கைகளை விசிறியாக்கியவள் பின் மீதமுள்ள காபியை மடக் மடக்கென பருகி விட்டாள்..

அப்போது தான் மந்திரா சின்னவளின் செயலைக் கண்டு கொண்டவள், “ம்மா..” என கூவ

“காலங்காத்தாலே ஆரமிச்சுட்டாளுங்களா...!” புன்னகையுடன் சலித்த சிவகாமி சட்னியை அரைக்க,

“அடியே!.. நந்தி... எதுக்குடி எனக்கு வச்ச காபியைக் குடிச்ச?.. குளிக்கல, பல்லு விளக்கல.. பத்தாததுக்கு என் கப்பை எச்சி பண்ணிட்ட.. சீ!.. இருடி இன்னிக்கு உன்னை ஒரு கை பார்க்காம விட போறதில்லை...”

கலகலவென சிரித்த நக்ஷத்ரா, “ஏய்!.. யாருடி நந்தி?.. நீ தான் மந்தி, மந்தி... மந்தின்னா என்னன்னு தெரியும் இல்ல... குரங்குன்னு அர்த்தம்.. அம்மா உனக்கு சரியா தான் பேரு வச்சு இருக்காங்க.. எப்பப் பாரு உர்உர்ருன்னு...” என்றவாறு ஓடிச் சென்று இட்லி தட்டை கேடயமாகவும், சாம்பார் கரண்டியை கத்தியாகவும் எடுத்துக் கொள்ள,

மந்திராவும், “நீ விளக்கி சொல்றதுக்கு நான் ஒன்னும் வெள்ளக்காரி இல்லடி நந்தி... யார பார்த்து மந்தின்னு சொல்ற நீ தான் சரியான நந்தி... மாடு... மாடு...” என்றவாறு இன்னொரு இட்லி தட்டு மற்றும் கரண்டியை எடுத்துக் கொண்டு இருவரும் கத்தி சண்டைக்கு பதிலாக கரண்டி சண்டையிட,

“நேரம் வேற ஆகுது இந்த இட்லி தட்டை எங்க வச்சேன்?..” சிவகாமி பரபரப்புடன் சமையலறையில் தேட, நேற்று இரவே அதை கழுவி கொல்லையில் கவிழ்த்தது ஞாபகம் வந்தவராய் அங்கே செல்ல,

தன் மகள்கள் இருவரும் சண்டி ராணிகளாக அங்கே சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்களின் கையில் இருந்த இட்லி தட்டை பறித்தவர் எதுவும் பேசாது திரும்பிச் செல்ல, மகள்கள் இருவரும் சண்டையிடுவதை நிறுத்தி விட்டு சிவகாமியை ஆச்சரியமாய் பார்த்தனர்..

தன் அம்மாவை தடுத்த நக்ஷத்ரா தன் முகவாயில் கை வைத்த படி, “அம்மா.. உங்க பேரை கின்னஸ் புக்ல தான் போடணும்..”

“எதுக்கு...?”

“இன்னிக்கு நீங்க எங்களை திட்டவே இல்ல..”

“உங்களை திட்டி திட்டி எனக்கு தான் வாய் வலிக்குது.. பிள்ளைகளா நீங்க பிசாசுங்க.. உங்களோட மாரடிக்க முடியல..”

“ம்மா நீங்க இன்னிக்கு இவளை திட்டியே ஆகணும் சொல்லிட்டேன்.. பல்லு விளக்காம என் காபியை குடுச்சுட்டு என் கப்பையும் எச்சில் பண்ணிட்டா...” மந்திரா புகார் கூற,

“நக்ஷத்ரா!.. நடு மண்டையில நச்சுன்னு கொட்டு வாங்குறதுகுள்ள ஒழுங்கா குளிச்சுட்டு வா.. இன்னும் பத்து நிமிஷத்துல உங்க அப்பா வந்துருவாரு...” என அறிவிக்க,

நக்ஷத்ரா தன் தந்தை என்ற சொல்லைக் கேட்டதும் அமைதியாய் தன் அறைக்கு ஓட, “ம்மா என் காபி...” என்றபடி மந்திரா தன் அம்மாவின் பின் சென்றாள்.

வீடு கலகலவென பழைய படி ஆனது போல இருந்தது சிவகாமிக்கு...

************ *****************



நக்ஷத்ராவின் வீட்டை ஒட்டி இருந்த அகிலனின் வீட்டிலிருந்து இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனின் இருவிழிகளோடு, இதழ்களும் சேர்ந்து புன்னகைத்தது..

தன் மகள்கள் இருவருக்கும் உணவு பரிமாறிய சிவகாமி, அகிலனின் பிறந்த நாளுக்காக அவனது அம்மா அம்பிகா கொடுத்தனுப்பிய நெய் மணக்கும் கேசரியை தட்டில் வைத்தார்.

நக்ஷத்ரா சப்பு கொட்டி சாப்பிட, ‘காலையில என் காபியையா அபேஸ் பண்ணின?!..’ மனதில் நினைத்த மந்திரா, தன் தங்கை கண் அசந்த நேரத்தில் அவள் தட்டிலிருந்த கேசரியை எடுக்க, “மந்தி ஒழுங்கா என் பங்கு கேசரியை கொடுத்துடு...” என நக்ஷத்ரா சண்டையைத் துவக்க,

மந்திரா முன் வாசலுக்கு ஓட, பின்னோடு ஓடிய நக்ஷத்ராவோ, “மந்தி வேணாம்டி.. ஒழுங்கா குடுத்துரு..”

நட்ஷூ.. “வேணுமா? வேணாமா? ஏண்டி இப்படி குழப்புற?”

“வேணும்டி கொடு.. இல்ல பின் விளைவு மோசமா இருக்கும்..”

“அது எப்படி இருந்தாலும் சரி குடுக்க முடியாதுடி..” என அக்காகாரியும் வம்படி செய்ய,

“இது அகில் அண்ணா பிறந்த நாள்க்கு, அம்பிகா ஆன்ட்டி குடுத்தது தானே!..” என்ற நக்ஷத்ரா விறு விறுவென வீட்டின் உள்ளே செல்ல,

“ஹையையோ!.. அதுக்குள்ள என்ன ப்ளான் பண்ணினான்னு தெரியலையே..” பதறிய மந்திரா கையில் இருந்த கேசரியை சாப்பிட்டுக் கொண்டே உள்ளே செல்ல,

தன் நண்பன் அகிலனை வாழ்த்திவிட்டு, கிப்ட் கொடுத்த அந்த இரு விழிகளுக்குச் சொந்தமானவன் தனியே சிரித்துக் கொண்டிருந்த அகிலனை அழைத்து, “டேய் என்னடா தனியா சிரிச்சுட்டு இருக்க?.. உனக்கு வேப்பிலை அடிச்சு சீக்கிரமே கால் கட்டு போட சொல்லணும்.. இரு ஆன்ட்டியைக் கூப்பிடுறேன்...” என்றான் கிண்டலுடன்..

அகிலன் சிரித்துக் கொண்டே பக்கத்து வீட்டுக் பெண்களின் விளையாட்டைக் கூற, “திரும்பவுமா?” என்றான் அந்த இரு விழிகளுக்குச் சொந்தகாரன் ஆச்சரியத்துடன்..

“திரும்பவுமாவா? எப்பவும் பத்து, இருபது ஷோ நடக்கும்.. ரொம்ப நல்ல பொண்ணுங்க.. என்ன கொஞ்சம் அறுந்த வாலுங்க.. மேகநாதன் அங்கிள் வீட்டுல இல்லாதப்போ தான் இப்படி ஷோ பார்க்க முடியும்.. அவரு ஸ்ட்ரிக்ட்.. அதனால சிவகாமி ஆன்ட்டியும் கண்டுக்காம ப்ரீயா விட்டுருவாங்க..”

“இதுல சேதாரம் என்னவோ எப்பவும் நக்ஷத்ராக்கு தான்.. பெரியவ தப்பிச்சுருவா.. சின்னவ தான் அடிக்கடி அவ அப்பா கிட்ட நல்லா மாட்டிப்பா...”

சற்று நேரத்திற்கு முன்பு நக்ஷத்ரா சூடான காபியை சுட்டு குடித்தது அவன் கண் முன் தோன்றியது..

*********** ***********

“அடியே... இங்க பாரேன்.. ஆளு செம்மையா இருக்காரு.. உனக்கும் அவனுக்கும் ஜோடிப் பொருத்தம் செம்மையா இருக்கும்.. பழிவாங்குறதை விட்டுட்டு இவனை கட்டிக்கிட்டு லைப்பை என்ஜாய் பண்ணு..” என நக்ஷத்ராவை உலுக்க,

“மந்தி நிம்மதியா சாமி கும்பிட விடுடி.. மன்மதனே வந்தாலும் அவனை பழி வாங்கிட்டு தான் மறுவேலை.. என்னை சொல்றியே முதல்ல நீ கல்யாணம் பண்ணு எனக்கு இப்போ தான் பதினெட்டு... உனக்கு தான் ஏழு கழுதை வயசாகுது...”

நட்ஷூ மந்தியின் கல்யாணத்தை பற்றிப் பேச, பேச்சை மாற்றும் பொருட்டு “நீ தேற மாட்ட.. நீ சாமி கும்பிட்டு வா நான் அம்மாகிட்ட இருக்கேன்..” என்றவள் நகர்ந்து விட்டாள்...

அடி பிரதக்ஷனத்தை முடித்த நக்ஷத்ரா சாமியின் முன் நின்று கண் மூடி வேண்ட, கருவறையில் தீபாராதனை காட்டிய ஐயருக்கு அவன் அந்த இரு விழிகளுக்கு சொந்தக்காரன் இரண்டாயிரம் ருபாய் நோட்டை தட்சணை கொடுக்க அதில் மகிழ்ந்த ஐயர், கடவுளின் பாதத்தில் இருந்த மல்லிகைப்பூ சரத்தை மாலையாக மாற்றி அவனின் கழுத்திலும், அவன் அருகில் புடவை கட்டி கண் மூடி நின்றிருந்த நக்ஷத்ராவின் கைகளிலும் கொடுக்க,

ஐயரின் செயலில் அவன் தன் வலது புறம் திரும்ப தனக்கு மிக அருகில் புடவையில் பெரிய பெண்ணாக தெரிந்தவளை நன்கு உற்று பார்த்து விட்டே நகர்ந்தான் அவன்..

********* ******

“நீ சைட் அடிச்ச ஆளை எதுக்குடி என் கூட கோர்த்து விடுற?.., உன் வருங்கால புருஷனை பத்தி ட்ரிம் அடி”

“ம்கும்.. அது நடக்கும் போது பார்க்கலாம்... ஆனா இவங்க உனக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சு..”

“நீ உதை வாங்க போற..”

“சே!.. சே!. உன் உதையை நீயே வச்சுக்கோ!..”

எப்போதும் சண்டையிடும் மகள்கள் இன்று ரகசியம் பேசிக் கொள்ள, சிவகாமி இருவரையும் ஒரு மார்க்கமாய் பார்க்க,

“என்னம்மா சண்டை போட்டாலும் லுக் விடுறீங்க?!.. சமாதானமானாலும் லுக் விடுறீங்க? உங்க பார்வையே சரி இல்ல!..” என நக்ஷத்ரா குறும்புடன் கூற மூவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர்...

*********** ***********
அக்கா தங்கைகளோட சண்டை எப்படி இருக்கு..?


கமெண்ட்ஸ் ப்ளீஸ் மக்களே..

கமெண்ட்ஸ் thread


 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

இதோ அடுத்த அப்டேட் epi 11..
படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க..
அப்போ தான் அடுத்த ud சீக்கிரம் வரும்.. சொல்லிட்டேன்..
நேசனை திட்டினவங்க எல்லாம் வந்து queue ல நில்லுங்க...

Click the following link to read the epi,
Please drop your valuable comments below,
Comments thread
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

book fair க்கு வந்திருக்கும்

❤❤எந்தன் உயிரே..!
எந்தன் உயிரே..! ❤❤

novel ல இருந்து அடுத்த டீசெர்...
பெரிய டீசெரா தான் போட்டு இருக்கேன்..

படிச்சுட்டு ரெண்டுவரி எப்படி இருக்கு சொல்லுங்க மக்களே..! ப்ளீச்..

டீசெர் 3:

மந்திரா காலிங் பெல்லை அழுத்த, நட்ஷூவும் தொடர்ந்து பெல்லை அழுத்தினாள்...

“நட்ஷூ கம்முனு இருடி.. தூங்கிட்டு இருக்குறவங்களுக்கு இர்ரிட்டேட்டா இருக்கும்...”

“அதுக்குத் தானே அடிக்குறேன்.. நம்மளை கூப்பிட வராம என்ன தூக்கம்..?”

“அம்மா கிட்ட சொல்லிருவேன் கம்முனு இரு..” என அக்காகாரி அதட்ட, அவர்களை விட சற்று உயரமான ஒருவன் சுளித்த முகத்துடன் கதவைத் திறந்தான்...

இரு பெண்களும் அவனை மேலும் கீழும் அளக்க, அவனோ “இர்ரிடேடிங் பெல்லோஸ்...” என முணுமுணுத்து விட்டு

“மம்மி... டூ இடியட்ஸ் கேம் ஃபார் ஹோம் கிளீனிங்...” என கத்தியவன் ஒரு அறைக்குள் புகுந்து கதவை சாத்தி தூங்கி விட்டான்..

“மந்தி...” என நட்ஷூ பல்லைக் கடிக்க,

“விடுடி... நம்ம தம்பி தானே.. அடிக்கடி வந்து போனா அவனுக்குத் தெரியும்...”

“உன் தொம்பின்னு சொல்லு... தொம்பியாம் தொம்பி... வெளக்கெண்ணெய்.. இவன் மூஞ்சை வேற அடிக்கடி வந்து பார்க்கணுமாக்கும்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவன் என் கையில அடி வாங்க போறான்..” என நக்ஷத்ரா பொரிந்து கொண்டிருக்க,

“அடடே... வெல்கம் மந்திரா அண்ட் நக்ஷத்ரா... நக்ஷத்ரா உன்னை நேர்ல பார்த்தே எத்தனை வருஷம் ஆகிடுச்சு..” என அபிராமி அவர்களை வரவேற்றார்...

நக்ஷத்ராவுக்கு கடுகடுவென பேச வாய் துடிக்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ஈ என இளித்து வைத்தாள்..

“ரெண்டு பேருக்கும் டிராவல் எப்படி இருந்துச்சு... சாரி கேர்ள்ஸ் ரெண்டு நாளா பீவர்... நைட்டும் டேப்ளட்ஸ் எடுத்துகிட்டேன்.. ஸ்டேஷன் வர முடியல..”

“அச்சோ என்னாச்சு சித்தி..? பரவாயில்லை சித்தி எனக்கு தான் இந்த ஊரு பழக்கமாச்சே.. ஒன்னும் பிரச்சனை இல்ல...” – மந்திரா...

“சரி இருங்க டீ போடுறேன்... வேலைக்கார பொண்ணு வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்..”

“வேணாம் சித்தி... நான் போடுறேன் நீங்க உட்காருங்க...” என்ற மந்திரா டீ தயாரிக்க கிட்செனுக்குள் சென்றாள்...

“அப்புறம் நக்ஷத்ரா எப்படி இருக்க...? உனக்கு இங்க படிக்குறதுல சந்தோஷம் தானே ரொம்ப பெரிய காலேஜ்..”

நக்ஷத்ரா அதற்கும் “ம்ம்ம்..” என சிரித்த படி தலையாட்ட,

“சிவகாமி வளர்ப்புன்னா சும்மாவா... ரொம்ப அமைதியாக இருக்க.. ஆனா நீ என்னை மாதிரியே வாயடிக்குறன்னு இல்ல சிவகாமி சொன்னா..” என்ற அபிராமி தன் அலுவலகம் பற்றியும் இந்த கல்லூரி சீட் கிடைத்தது பற்றியும், அவரது அருமை பெருமை முதற்கொண்டு புருஷன் பிள்ளை என அனைவரை பற்றியும் அள்ளி விட்டு பேசிக் கொண்டிருக்க, நட்ஷூக்கு உண்மையிலே தலை வலிக்க ஆரமித்து விட்டது..

மந்திரா அதற்குள் டீயோடு வந்து விட, “டீ போட இவ்ளோ நேரமா... ரம்பம் தாங்கலடி..” என நட்ஷூ கிசுகிசுக்க,

“மந்திரா என்னம்மா சொல்ற இவ...?” – அபிராமி

“அது வந்து சித்தி... வீடு ரொம்ப நீட்டா வச்சு இருக்கீங்கன்னு சொல்றா...” என சமாளித்தாள்

“ஓஹ்.. தேங்க்ஸ்டா பேபி..” என்றவர் “சரி நீங்க இந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க... இன்னிக்கு நான் லீவ் தான்.. விடிஞ்ச பிறகு நம்ம மத்ததை பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்...” என்றவர் தன் அறைக்குச் சென்று விட்டார்..

"என்னது மறுபடியுமா..?" என நட்ஷூ மந்தியின் காதில் ஓத,

“கம்முன்னு வாடி சித்தி காதுல விழுந்துர போகுது...”

“விழட்டும் அப்பவாது செல்ஃப் டப்பா குறையுதான்னு பார்ப்போம்..” என்ற படி இருவரும் அபிராமி காட்டிய அறையை அடைந்தனர்..

மந்திரா சற்று நேரம் தூங்கி எழலாம் என எண்ணியவள் படுத்து விட, நட்ஷூ கைகளை கட்டிய படி பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

பக்கத்து வீட்டு பால்கனியும் இந்த பால்கனியும் ஒட்டி இருக்க அங்கே கைக்கெட்டும் தூரத்தில் கூண்டும் அதில் வானின் நீலம் மற்றும் மஞ்சள் பச்சை கலந்த வண்ணத்தில் லவ் பேட்ஸ் கீச் கீச்சென சத்தமிட ஆரமித்தது...

“ஹே... லவ் பேட்ஸ்.. ரொம்ப அழகா இருக்கீங்க...” என அந்த பறவைகளிடம் பேசியவள் அருகே இருந்த ஸ்டூல் ஒன்றில் ஏறி இரண்டு வீட்டு பால்கனியும் இணையும் திட்டில் ஏறி அமர்ந்தவள்,

“லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் தக்க திமித்தா...” என பழைய பாடலை சன்னமாய் பாடிக் கொண்டு கூண்டு கம்பிகளில் கை வைத்து அதை வெகு அருகில் பார்த்து பரவசப்பட்டுக் கொண்டாள்...

“நானும் உங்களை மாதிரி தான் இத்தனை நாளா கூண்டுக் குள்ள இருந்தேன்.. ஆனா இப்போ நான் சுதந்திரமா என் சிறகை விரிச்சு பறக்க போறேன்...”

“உங்களையும் எனக்கு சுதந்திரமா விடணும்ன்னு தான் தோணுது.. ஆனா பாருங்க நான் அப்படி பண்ணினா உங்க ஓனர் என்னை டின் கட்டிற மாட்டாரு..” என்றவள் லவ் பேட்ஸுடன் கொஞ்சி கொஞ்சி பேசிய படி அவளது பக்கவாட்டில் எதேச்சையாக பார்க்க,

கதவு நிலையில் சாய்ந்த படி வலது கை நீல நிற ஜீன்ஸின் பாக்கெட்டிலும் இடது கையில்

கண்ணாடி கிளாசும் அதில் பேல் அம்பர் நிறத்தில் ஏதோ நிரப்பப்பட்டிருக்க, மேலே வெண்மை நிற முழுக்கை சட்டையை மடக்கி விட்ட படியும்,

அதில் முதல் பட்டன் போடாமல் இருந்ததில் அவன் திண்ணென்ற மார்பும் அதன் அழகை காட்டிக் கொண்டிருந்தது...,

கைகளில் விலை உயர்ந்த வாட்சும், முகத்தில் அழகாய் சீராக ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், அளவான மீசை முனையில் முறுக்கி விடப்பட்டு இருக்க, இதற்கு நடுவில் பளிச்சென தெரிந்த கரையில்லா அதரங்களும்,

கூர் நாசியும், அடர்ந்த சிகையும், அகன்ற நெற்றியும் லட்சணமாய் இருக்க, ஒவ்வொன்றாக அவனை ஆராயந்தவளின் பார்வை இறுதியில் அவன் கண்களில் நிலைத்தது..

புருவம் இரண்டும் நெறித்து கண்கள் சிவந்து கடும் அனலை கக்கிக் கொண்டு அவளை பார்வையாலே பொசுக்க... அவளுக்கு பகீரென்றது...

அதில் அவளுக்கு சற்று கிலி பிடித்துக் கொள்ள அவளை அறியாமலே இரண்டடி பின்னே தன்னிச்சையாக நகர்ந்தாள் அவள் பால்கனி மீது அமர்ந்திருக்கிறாள் என்பதையும் மறந்து...
முதுகுக்கு பின்னால் பிடிமானம் அற்று அவள் சாய, கைகள் பிடிப்பிற்க்காக அலை மோத, அதற்குள் புவி ஈர்ப்பு விசை அவளை கீழே இழுக்க,

இன்னிக்கு நம்ம செத்தோம் என அவள் மூளைக்கு உரைக்க, பயத்தில் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்...

இடது கை பழக்கமுள்ள அவன் ஒரே எட்டில் அவள் கைகளை கெட்டியாக அவன் பற்றிக் கொள்ள, சில்லிட்டு இருந்த அவள் கைகளில் கதகதப்பு பரவியதை அந்த நிலையிலும் அவள் உணர்ந்தாள்...

‘இன்னுமா தான் விழாமல் இருக்கிறோம்...?’ என்றுணர்ந்தவள் நடுங்கிய உடலுடன் கண்களை திறக்க, அவள் விழாமல் இருக்க அவள் கைகளை கெட்டியாக பற்றி இருந்தான் அவன்..

அவன் கண்கள் என்னவோ இப்போதும் அவளை முறைத்துக் கொண்டு தான் இருந்தது..
அவன் பிடித்திருந்த இடமோ, நான் கோபமா இருக்கேன் என்று எடுத்துரைப்பதைப் போல அவளுக்கு கதகதப்பை வாரி வழங்கிக் கொண்டிருந்தது..

அதில் சுயஉணர்வுக்கு வந்தவள் அவனிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டு, “சாரி.. நான் தெரியாம... லவ் பேட்ஸ்...” என திக்கி திக்கி தடுமாறி கூறியவள் அபிராமி வீட்டு பால்கனியில் சரியாக குதித்து இறங்கியவள் அசடு வழியும் சிரிப்புடன் அவனை திரும்பி பார்த்து விட்டு, ஒரே ஓட்டமாய் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்...

மூடிய கதவுக்கு பின்னே நின்றவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது...

“லவ் பேட்சை பார்த்ததுக்கா இந்த முறை முறைக்குறான்... காலையில அவனவன் காபி, டீ குடிப்பான்னு தெரியும் இவன் விடியறதுக்கு முன்னாடியே பியர் வேற குடிக்குறான்... சை...”

“ஏதோ நம்ம மண்டை உடையாம காப்பாத்திட்டான்.. அது வரைக்கும் சந்தோஷம்... இனிமே அந்த பக்கமே தலை வச்சு படுக்கக் கூடாது... விடிஞ்சதும் முதல்ல இங்க இருந்து பெட்டியை கட்டணும்...” என தனக்குத் தானே பேசியவள் உறக்கம் பிடிக்காமல் எப்போதடா விடியும் என காத்திருந்தாள்...
**** ********
கதை படிக்காதவங்க இந்த அவன் எவன்னு சொல்லுங்க பார்ப்போம்..?
😍😍😍😉😉😉


Comments pls
கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப மகிழ்ச்சிப்பா.. thanks for your love and support... Bigggg hugs for all of u...
நாளைக்கு உங்க எல்லாருக்கும் reply பண்றேன்ப்பா.. கொஞ்சம் tired..

ud எங்கன்னு தானே கேக்குறீங்க.. இதோ கொடுக்கறேன்.. மக்களே...
படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க ப்ளீஸ்..
:love::love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top