All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

இதோ எட்டாவது எபி..
ரெண்டு பேருக்குள்ளையும் இப்போ தான் ஏதோ fire ஸ்டார்ட் ஆகி இருக்கு.. உங்களுக்கு எப்படி தெரியுது..? பத்திக்குமா..? இல்ல புஸ்ஸுன்னு ஆகிடுமா..?
படிச்சுட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க..


நன்றி
உமையாள் ஆதி..


please leave your valuable comments below,
காதலால் தவி(ர்)க்கிறேன்..! - கமெண்ட்ஸ் thread
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

இதோ அடுத்த அத்தியாயம்.. கதையில புதுசா வந்து இருக்குற ரெண்டு ஆளுங்க யாரு..? யாரு என்ன பிரச்சனை பண்ண போறங்கன்னு guess பண்ணுங்க பார்ப்போம்..

உங்க கருத்துக்களை அறிய waiting
நன்றி
உமையாள் ஆதி

Click the following link to read the epi 9..
please leave your valuable comments below,

காதலால் தவி(ர்)க்கிறேன்..! - கமெண்ட்ஸ் thread
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே ஒரு நற்செய்தியோட வந்துருக்கேன்..😍😍

என்னோட அடுத்த கதையான
எந்தன் உயிரே..!
எந்தன் உயிரே..! novel
நேரடி புத்தகமாக (direct publishing) அருண் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மன மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் மக்களே.. :love::love:


எனது கதையை புத்தகமாக வெளியிட்ட அருண் சாருக்கும் அருண் பதிப்பகத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.. 🙏🙏

என் முதல் கதையான உன் விழிகளில் விழுந்த நொடி novel பாகம் 1 & 2 யும் கிடைக்கும் மக்களே..

ஜனவரி 04 தேதி முதல் புத்தகங்கள் கிடைக்கும் மக்களே.. வாங்கி படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க..
ஆவலோடு காத்திருக்கிறேன்..


சென்னை 42வது புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 4 முதல் ஜனவரி 20ம் தேதி வரை நந்தனம், Y.M.C.A மைதானத்தில் நடைபெற உள்ளது.

கிடைக்கும் இடம் : அருண் பதிப்பகம்

Stall நம்பர் : 545, Y.M.C.A மைதானம், நந்தனம்.

அனைவரும் வருகை தந்து புத்தகங்களை வாங்கி உங்கள் ஆதரவை தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.. 😘😘❤❤
நன்றி மக்களே..
உமையாள் ஆதி❤❤
IMG-20181212-WA0049.jpgIMG-20181228-WA0004.jpgIMG-20180709-WA0000 (1).jpgIMG-20180709-WA0001.jpg
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

உங்க நேசன் அண்ட் ரூபா நாளைக்கு வருவாங்க..

இப்போ Book fair க்கு வரவிருக்கும் என் அடுத்த கதை

❤❤ எந்தன் உயிரே!.. எந்தன் உயிரே!..❤❤

நாவல்ல இருந்து சின்ன
டீசெர் போட்டு இருக்கேன் படிச்சுட்டு ஜொள்ளுங்கோ..😍😍😍😍❤❤❤❤🙏🙏🙏
ஹீரோஸ், ஹீரோயின்ஸ் :
உதய், உதித், நக்ஷத்ரா, மந்திரா
😍😍😍😍
இவர்கள் உங்கள் மனதை கவர்வார்கள் என்று நம்புகிறேன் மக்களே..🙏🙏🙏


#டீசெர்1:

வியர்வை வடிந்தாலும் அவன் முகம் பொலிவுடன் இருந்தது... வசீகர அழகுடன் கிளீன் ஷேவில் ஹிந்தி ஹீரோக்களுக்கு போட்டியாக இருந்தான்...

கையில்லா பனியன் அவன் புஜத்தையும் அதன் வலிமையையும் எடுத்துக் காட்ட,

கூரிய கண்களுடன் நொடிக்கும் குறைவாக அவளை கவனித்தவன் பக்க வாட்டு படிக்கட்டில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து சிறிதளவு தண்ணீர் அருந்தியவன் அவளைக் கண்டுகொள்ளாமல் பந்தை கையில் எடுத்து அதை தட்டிக் கொண்ட கிரௌண்ட்டுக்குள் சென்று விளையாடத் துவங்கினான்...

இவள் ‘ஞே..’ என விழித்த படி நின்றிருந்தாள்.

‘என்ன? பார்த்தான் ஆனா ஒண்ணுமே பேசாம போயிட்டானே?..

தன் தோள் பையை கழற்றி வைத்தவன், அங்கிருந்த ஒரு ஸ்டுடென்ட் கையில் இருந்த பாலை வாங்கியவன் பாஸ்கட் பால் கோர்ட்டுக்கு வெளியே நின்ற படி தான் நின்ற இடத்திலிருந்தே ரிம் என்றழைக்கப்படும் அந்த கூடையின் உள்ளே பந்தை சரியாக போட்டவன்,

கண்ணசைவிலே அவளிடம் அந்த பாலை எடுத்து வரச் சொல்ல, நெஞ்சில் மூண்ட கோபத்துடன் அவன் சொன்னதை செய்தாள்.

“உனக்கு ஐந்து நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள இந்த பாலை அந்த கூடைக்குள்ள போடணும்...” என அவன் கூற, தன் கண்கள் அகல அவனைப் பார்த்தாள்..

“என்ன பார்க்கிற...? நீ கூப்பிட்டதுமே வர்றதுக்கு நான் என்ன உன் லவ்வரா...? இல்ல உன் புருஷனா?” என நிறுத்தி நிதானமாக அதேநேரம் நமட்டுச் சிரிப்புடன் வேண்டுமென்றே கேட்டான்...

அதில் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே அவனை முறைத்த படி, “நீங்க இப்போ பந்தை எடுத்துட்டு வர சொன்னதும் கொண்டு வந்தேனே அப்போ நான் என்ன உங்க லவ்வரா? இல்ல பொண்டாட்டியா?..” என பதிலுக்கு திமிராகவே கேட்டாள்...

அவள் அவனையே ஆராய்ந்து கொண்டிருக்க, “என்ன அப்படி பாக்குற..? என்னை தெரியுதா..?” என்றான் கள்ளச்சிரிப்புடன்

******** **********

“ம்ம்ம்... இங்க தான் ஜாயின் பண்ணி இருக்கியா லட்டு..ஊஊ...? என லட்டுவை அழுத்தி உச்சரித்தவன் என்ன கோர்ஸ்?..”
என்றான்..


“எதுவா இருந்தா என்ன பண்ண போறீங்க?.. இப்போ என் கூட வர முடியுமா முடியாதா?..” என்றவள் முகத்தை திருப்ப,

“ஓஹ் போலாமே பார்க், பீச் சினிமா, பப் எங்க வேணா போலாம்.. ஐ’ம் ரெடிடா லட்டு..”

“என்ன நக்கலா..?”

“இல்ல விக்கலு.. சும்மா செய்யுறதுக்கு நீ என்ன என் முறை பொண்ணு பாரு... முடிஞ்சா இந்த பாலை ரிம்ல ஒரு முறையாவது போட்டுட்டு வந்து என்னை கூப்பிடு..” என்றவன் நமட்டுச் சிரிப்புடன் விருட்டென அங்கிருந்து சென்று விட்டான்...

பாடவேளை ஆரமிப்பதற்கான மணி ஒலிக்க, அதில் சுயநினைவிற்கு வந்தவள்

“படுபாவி!.. உன் திமிரையெல்லாம் அடக்குறதுக்கு ஒரு அடங்கா பிடரி தான் உனக்கு பொண்டாட்டியா வருவா...” என்று சாபமிட்ட படி தன் வகுப்பை நோக்கிச் சென்றாள்.
😍😍😍😍😍❤❤❤
 
Status
Not open for further replies.
Top