ஆதியிவன்.. .இவன் ஆதியிவனே தான்...
2100ம் காலத்தில் நடக்கும் கதை.. அறிவியல் முன்னேற்றத்தை நினைத்து வியக்கும் நமக்கு அதே அறிவியல் முன்னேற்றத்தினால் எதிர்காலத்தில் எல்லாம் செயற்கையாக மாறுகையில் அதனால் ஏற்படும் விளைவுகள்..
விலங்குகள், தாவரங்களின் பரிமாண வளர்ச்சி, கெமிக்கல் உணவுமுறைகள், அதன் விளைவாக விரைவில் நோய்வாய்ப்படும் மனிதர்கள், செயற்கை கருத்தரிப்பு, இயற்கையைக்கு தீங்கு விளைவித்தால் அந்த இயற்கையும் நம்மை திருப்பி தாக்கும் என்பதற்கு அவ்வப்பொழுது ஏற்படும் நிலநடுக்கம் என்று படிப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும் அனைத்தும் சிந்தக்க வேண்டிய விசயங்கள்.
உணவுத்துறையில் வேலைபார்க்கும் துருதுருநாயகி ரியா, அதாவது செயற்கை உணவுப்பொருட்கள் தயாரிப்பது.. மாதஇறுதி நாட்களில் அரசால் ஏற்பாடு செய்யப்படும் பொருட்காட்சிக்கு சென்ற இடத்தில் சாகரவீரனானின் சாகசத்தில் வியந்து, அவன் பார்வையில் தடுமாறி நிற்க. முதல் சந்திப்பிலேயே தங்களின் நுண்ணிய உணர்வால் தங்கள் இணையை கண்டு கொள்ளும் இடம் சூப்பர்.
இருவரும் காதலை பரிமாறிக்கொள்வது, உணர்வுகளாலே தன் இணையை உணர்வது என அவர்களின் காதல் அற்புதம்.
வீரா ரியாவின் சண்டைகள் ரசிக்கும் படியாக இருந்தது. முக்கியமா அவனது டான்ஸ்… பெண்களைப் பற்றி புலம்புவது..
தான் காதலித்தவன் மனிதன் இல்லை ஹீயூமேலியன் என்று தெரிந்து அதனால் எற்படும் ஏமாற்றம், கோபம் அவளது உதாசீனம்.. ப்ரஜனின் வலிகள் அழகாக சொல்லிருக்கிங்க.
ஆய்வுக்கூடத்திலிருந்து தப்பிய ஹீயூமேலியன்கள் பழிவாங்க வரும் இடத்தில் பரிதாபமாக இறப்பது.. அதைக்கண்ட ப்ரஜனின் வேதனைகள், புலம்பல்கள் தன் இனத்தைக் காத்து.. அவர்களும் பூமியில் வாழ தகுதியுடையவர்கள் தான் என்று நிரூபிக்க அவன் போராடும் இடங்களும், அவனது வேகம், விவேகம், திட்டமிடுதல் அனைத்தும் வியக்கத்தக்கது.
வீரா மேல் கோபம் வரலை. தன்னால் முடியவில்லை என்ற இயலாமை தான் ப்ரஜன் மீது பொறாமையைத் தூண்டியிருக்கிறது. அதனால் தவறான வழிக்குச் சென்று நல்லவேளையாக காலம் கடப்பதற்குள் தப்பிவிட்டான். ப்ரஜன், வீராவின் பாசப்பிணைப்பு காட்சிகள்.. வீராவை சிறுபிள்ளையாகத் தான் காட்டுகிறது. துரோகம் என்று தெரிந்தும் அவனுக்காக வருந்தும் இடத்திலும், அவன் மாட்டிக்கொள்ளக்கூடாதே என்று பதறும் இடத்திலும், திரும்பி வருவான் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் ப்ரஜனை என்னவென்று சொல்ல.. அனைத்திலும் சிறந்து விளங்கி உயர்ந்து நிற்கிறான்.
ஷியாமளாவின் பேச்சுக்களும், அதில் இருந்த அவருடைய நியாயமான ஆதங்கங்கள் அனைத்தும் சரியே..
மகேஷ் தன்வினை தன்னைச்சுடும். கடைசியில் வாசு பேசியது அருமைக்கா.. முதலில் ப்ரஜனுடைய கோரிக்கையை ஏற்காவிட்டாலும் அவனது சாதூரியமான பேச்சும், அதில் பொதிந்துள்ள உண்மைகளையும் அரசாங்கமும், மக்களும் ஏற்றுக்கொள்வது எல்லாம் அருமையாக இருந்தது.
ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக ப்ரஜன் மனதை கொள்ளை கொண்டுவிட்டான். ரொமான்ஸ் அருமை.. என்ன இன்றும் கொஞ்சம் வச்சிருக்கலாம் பரவாயில்லை..
மொத்தத்தில் உலகில் அனைத்து உயிர்களும் பொதுவானது.. அவர்களுக்கு பூமியில் வாழ உரிமை உண்டு. செயற்கையை தவிர்த்து இயற்கையை வரவேற்க்க வேண்டும். அதை ஆர்பாட்டம் இல்லாமல் அழகாக சொல்லியிருக்கிங்கக்கா.. வாழ்த்துக்கள்.. இதே போன்று நிறைய கதைகள் கொடுக்கணும்..
ரொம்ப நாளைக்கு பிறகு ரிவ்யூ கொடுத்திருக்கிறேன். பரிசு வேணும் அக்கா..