All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "பகலவ நிலவே" கதை திரி 🌕🌝

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 10:

அடுத்த நாள் காலை வெண்ணிலா காலை உணவை முடித்த போதே பகலவன் அவளை தேடி வந்துவிட்டான்..

அவள் போனை அவளிடம் கொடுத்தவன், "வீட்டுக்கு பேசுகிறாயா?" என்று கேட்க, அவளுக்கும் அன்னை தங்கையுடன் பேச வேண்டும் போல் இருந்ததால் அமைதியாக போனை வாங்கிகொண்டாள்.

இருவரிடமும் நலம் விசாரித்து கொண்டவள், மனோகர் பற்றிய பேச்சையும் சமாளித்து விட்டே வைத்தாள்.

போனை மீண்டும் அவனிடம் கொடுத்த போது, எப்படியும் பகலவனே மனோகர் பற்றி கேட்பான் என்று தான் அவள் நினைத்தாள்..

ஆனால் அவனோ அதை பற்றி ஒன்றுமே கேட்காமல் போனை மட்டும் வாங்கி கொண்டான்..

"இந்த ரூமிலேயே அடைந்து கிடப்பது போர் அடிக்கவில்லையா பேபி?" என பகலவன் கேட்க,

"ஜாலியாவா இருக்கும்" என்றாள் அவள் கடுப்புடன்.

அதில் மெலிதாக சிரித்துக்கொண்டவன், "வெளியே வா.. பார்த்தி அண்ணாவுடன் ரொம்பவும் பழகிவிட்டாய் போலையே! அவருடன் எதாவது பேசிக்கொண்டிரு.. இந்த டிவிக்கு கூட கனெக்க்ஷன் கொடுத்தாச்சு.. ஏதாவது பார்ப்பதானால் பாரு.. அமேசான், நெட்ப்ளிக்ஸ் எல்லாம் கூட சாப்ஸ்க்ரைப் பண்ணி இருக்கேன்.. ஏதாவது படம் பாரு.. உனக்கு என்ன பிடிக்கும் பேபி?"

அவன் பாட்டிற்கு அடுக்கிக்கொண்டே போக, "நீங்க என்னை கடத்திட்டு வந்திருக்கீங்க.. ஞாபகம் இருக்கா?" என்றாள் வெண்ணிலா ஒரு பக்கம் தலைசாய்த்து கிண்டலாக.

"நல்லாவே இருக்கே.. ஆனால் இனி நீ இங்கு விருந்தாளி போல் தான்.." தெளிவாக அவன் கூற,

"ஏன் இந்த திடீர் மாற்றம் பகலவன்..? எனக்கு நிஜமாவே புரியவில்லை.. நான் தேவை இல்லை என்றால் என்னை விட்டுவிடலாமே.."

முந்தைய நாளில் இருந்து மனதில் ஒரேடியாக உறுத்தி கொண்டிருந்த விடை தெரியாத கேள்வியை அவள் கேட்க, "அது எப்படி மா? நான் சொன்னதை நீ செய்யவே இல்லையே!" என்றான் அவன் அசால்டாக.

இப்போது அவள் தான் திகைத்து விழிக்க வேண்டி இருந்தது..

"எனக்கு சத்தியமா புரியவில்லை பகலவன்" சற்று சத்தமாகவே அவள் கூற,

"வர்மன்" என திருத்தினான் அவன்.

'இதுவா இப்போது முக்கியம்!' என்பது போல் அவள் பார்த்ததை எல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை..

"நீ இந்த வீட்டை விட்டு மட்டும் தான் என் அனுமதி இல்லாமல் வெளியே போக முடியாது பேபி.. மற்றபடி இந்த வீட்டிற்குள் நீ சுதந்திரமா இருக்கலாம்.."

"ஆமா.. ஆமா.. இருப்பாங்க.. யார் யாரோ சுத்தறாங்க.. ஒரு லேடீஸ் கூட கண்ணில் காணும்.." சத்தமாகவே முணுமுணுத்தாள் வெண்ணிலா.

"இங்கு யாரும் உன்னிடம் வந்து பேச மாட்டாங்க பேபி.. நான் இல்லாத நேரம் பார்த்தி அண்ணா வேலையாட்கள் தவிர அதிகம் யாரும் இருக்கவும் மாட்டாங்க.. சோ தைரியமா இரு.." என்றவன் அந்த அறையில் இருந்த டிவிக்கான ரிமோட்டும் அவளிடம் கொடுத்தான்.

"இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்க முடியும் வர்மன்?" தன்னை அறியாமல் அவள் வர்மன் என்று அழைத்துவிட, அதில் உல்லாசமாக சிரித்துக்கொண்டவன்,

"கொஞ்ச நாட்களுக்கு தான்" என்று கண்ணடித்துவிட்டு சென்றுவிட்டான்.

'இவர் என்ன தான் சொல்ல வருகிறார்?' என எத்தனை யோசித்தும் வெண்ணிலாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை.

எப்படியும் அவனால் தனக்கு எந்த ஆபத்தும் நேராது என்ற முழுநம்பிக்கை தன்னை அறியாமல் அவளுக்கு ஏற்பட்டுவிட, மற்றதை பொறுமையாக யோசிப்போம் என முடிவெடுத்துக்கொண்டவள், அவன் சொன்னது போலவே டிவியை சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தாள்..

மதியம் பார்த்தி மேலே வந்த போது, "கீழே சாப்பிட வரியா மா? நானும் நீயும் சேர்ந்தே சாப்பிடலாம்.. வேற யாரும் இல்லை.." என்று அழைக்க, பகலவன் வேலை தான் என்று புரிந்தாலும், மறுக்காமல் அவருடன் சென்றாள் வெண்ணிலா.

இரவோ பகலவனே வந்து அவளை அழைத்து சென்றான்.

அப்போது தான் செழியனை அவளுக்கு அறிமுகமும் படுத்திவைத்தான்..

"இவர் செழியன்.. என் உடன் பிறவா அண்ணா.. எனக்கு எல்லாமே இவர் தான் பேபி.." என அவன் நெகிழ்வுடன் கூற, அவள் மெலிதாக சிரித்துக்கொண்டாள் என்றால், செழியன் தான் பகலவனை ஒரு மாதிரி பார்த்தான்..

அவன் அழைப்பும் அவன் குரலில் இருந்த மென்மையும் ஏதோ உணர்த்த, உணர்ந்த விஷயத்தை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்..

உணவை முடித்துக்கொண்டு வெண்ணிலா மேலே சென்றதும், தன் குழப்பத்தை செழியன் நேரடியாகவே பகலவனிடம் கேட்டும் விட்டான்.

"என்ன நடக்குது பகலவா இங்கே?" என அவன் கேட்க, மெலிதாக தலை கோதி சிரித்துக்கொண்டவன், தன் மனதை மறைக்காமல் கூறியும் விட்டான்.

அவன் கூறிய நொடி பெரும் மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக்கொண்டான் செழியன்.

"ரொம்ப சந்தோசம் பகலவா" என மலர்ந்த புன்னகையுடன் கூறிய செழியனுக்கு, உண்மையாகவே பெரும் மகிழ்ச்சியாக தான் இருந்தது..

இரவு படுக்க போகும் முன் அன்றும் வெண்ணிலவை தன்னுடன் வாக்கிங் அழைத்து சென்றான் பகலவன்.

தெளிவாக மனோகர் பற்றிய பேச்சை தவிர்த்துவிட்டவன், அவள் பிறப்பு, படிப்பு என பொதுவான விஷயங்கள் பேசிவிட்டு சிறிது நேரம் பாட்டும் கேட்டுவிட்டே தூங்க சென்றான்.

அணைத்து மனக்குழப்பங்களையும் தாண்டி அந்த இரவு நேர நடை மட்டும் என்னவோ வெண்ணிலாவிற்கு மிகவும் பிடித்து போனது.

தொடர்ந்து வந்த நாட்களிலும் அந்த இரவு நேர நடை மட்டும் இருவருக்குமே வாடிக்கையாகி போனது.

ஒரு முறை அதே போல் நடந்துகொண்டிருந்த போது பகலவனிடம் அவன் குடும்பம் பற்றி வெண்ணிலா கேட்டாள்.

"உங்கள் அம்மா அப்பா எல்லாம் எங்கே பகலவன்? உடன் பிறந்தவர்களும் யாரும் இல்லையா?" சற்றே சங்கடமாக இருந்தாலும் இப்போதெல்லாம் தன்னிடம் மென்மையாக மட்டுமே பேசும் அவனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் அவள் கேட்டாள்..

அவள் கேள்வியில் அவளை ஒரு முறை வெறுமையாக பார்த்துவிட்டு அவன் பெஞ்சில் அமர்ந்துவிட, அவளும் அவன் அருகில் அமர்ந்தாள்..

"எனக்கென்று யாரும் இல்லை பேபி.. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இதே ஏரியாவே தான்.. சாதா குடும்பம் தான்.. எனக்கு ஒரு ஐந்து வயது இருக்கும் போது ஒரு முறை வந்த வெள்ளத்தில் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டது.. அதில் அம்மா, அப்பா, சொந்தம் எல்லாரும் போய்ட்டாங்க.." கண்களை ஒரு முறை அழுந்த மூடி திறந்தவன், இருள் வானை வெறித்துகொண்டே தொடர்ந்து பேசினான்.

"என்னை போல் தான் செழியன் அண்ணா, அன்று ஆசிரமத்தில் பார்த்தாயே மாதங்கி இருவரும்.. எல்லாரும் குடும்பத்தை இழந்துட்டோம்.. நாங்க மூணு பேரும் சின்ன வயதில் இருந்தே நல்ல ப்ரெண்ட்ஸ்.. அப்படியே ஏதோ கிடைத்த வேலையை செய்துகொண்டிருந்தோம்.. இந்த ஊர் மக்கள் எங்களை நல்லா பார்த்துக்கிட்டாங்க.. தினமும் யாராவது சாப்பாடு கொடுப்பாங்க.. யார் வீட்டு வாசலிலாவது தூங்குவோம்.. சுருக்கமா சொல்லவேண்டுமென்றால் இந்த ஏரியா மக்கள் அனைவருக்கும் நாங்க பொதுவான குழந்தைகள் போல்.. எங்களால் முடிந்த உதவியை எல்லாருக்கும் செய்தும் கொடுப்போம்.. இப்படியே போய்க்கொண்டு இருந்த போது தான் தங்கவேல் அப்பா எங்களை தத்தெடுத்து கொண்டார்.. நம் கட்சியின் முன்னாள் தலைவர்.. இந்த சொத்தெல்லாம் அவருடையது தான்.. நேர்மையான அரசியல்வாதியான அவருக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப இஷ்டம்.. எங்கள் மூணு பேரையும் அவர் தான் வளர்த்து படிக்க வைத்தார் .. அவர் கல்யாணமே செய்துகொள்ளவில்லை.. என்னிடம் மட்டும் ஏனோ அவருக்கு தனி பாசம்.. அவர் சொத்தை எல்லாம் என் பெயரில் எழுதி வச்சுட்டு போய்ட்டார்.. இது நாங்களே சுத்தமா எதிர்பார்க்காதது தான்.. செழியன் அண்ணா தான் எதையும் வீண் பண்ண வேண்டாம், அவருடன் எதுவும் அழிந்ததாக இருக்க வேண்டாம் என்று என்னை வற்புறுத்தி அனைத்தையும் உபயோகிக்க சொன்னார்.. எதுவும் வீணாக போக வேண்டாமே என்று நான் தொழில் தொடங்க, அது இன்று இத்தனை தூரம் வளர்ந்து நிற்கிறது.. அவருடனே வளர்ந்ததாலோ என்னவோ அரசியலும் எனக்கு பழகி போச்சு.."

மறைக்க ஒன்றுமே இல்லை என்பது போல் தன் வாழ்க்கை வரலாற்றையே கூறி முடித்தான் பகலவன்..

பகலவ வர்மன் என்னும் மிக பெரிய சாம்ராஜ்யம் உருவாகும் முன் அவன் எத்தனை பாதைகளை கடந்து வந்திருக்கிறான் என நினைத்தவளுக்கு பெரும் பிரமிப்பாக தான் இருந்தது..

இளமை காலம் முழுவதும் இப்படி ஒரு சூழலிலேயே வாழ்ந்துவிட்டதால் தான், இவன் இத்தனை முரடனாக இருக்கிறான் போல் என நினைத்துக்கொண்டாள் வெண்ணிலா..

அதே நேரம் அவனுள் இருக்கும் ரசிப்பு தன்மையும் புரிய, அது தான் அவனிடம் மென்மையையும் விட்டு வைத்திருக்கிறது என்றும் அவளுக்கு புரிந்தது.

"சாரி வர்மன்" என மெதுவாக அவள் கூற, அது வரை ஏதோ நினைவில் மேலே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தவன், அவள் குரலில் தான் அவள் புறம் திரும்பினான்..

"ஹேய், தட்ஸ் ஓகே பேபி.. முடிந்து போனதை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை.. கடவுள் எனக்கு நிறையவே கொடுத்திருக்கார்.." என அவன் மெலிதாக புன்னகைத்ததில், அவள் மனமும் நிம்மதி அடைந்தது..

பெற்றோர் இல்லாத வேதனை அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது தான்.. ஆனால் அதை விழுங்கி கொள்ளவும் கற்று வைத்திருந்தான்..

மறுநாள் மாலை பகலவன் வெண்ணிலாவை தேடி வந்த போது, அவள் சமையல் அறையில் பார்த்தியுடன் பேசிக்கொண்டே அவருக்கு உதவி கொண்டிருந்தாள்..

"பேபி மேலே வா" என்றுவிட்டு அவன் வேகமாக சென்றுவிட, அவளும் பார்த்தியிடம் ஒரு தலையசைப்புடன் அவனை தொடர்ந்தாள்..

சில நாட்களாக இதெல்லாம் அனைவருக்கும் பழகி விட்டிருந்தது..

வெண்ணிலாவை பகலவன் கடத்தி தான் வந்தான் என்பதை வெண்ணிலா உட்பட அனைவருமே மறந்து தான் விட்டனர்..

ஏதோ அவள் இந்த வீட்டுக்கு வந்த முக்கிய விருந்தாளி போல் தான் நடத்தப்பட்டாள்..

அவள் மனதிலும் அதே போல் பதிய தொடங்கி இருந்தது தான் ஆச்சர்யமான விஷயம்..

மேல் தளம் வரை வந்ததும் நின்று அவள் புறம் திரும்பினான் பகலவன்..

"பேபி என்னுடன் வெளியே வருகிறாயா?" என பகலவன் கேட்க, ஒரு நொடி தன் காதில் சரியாக தான் விழுந்ததா என அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

"ஆ.. என்ன கேட்டீங்க..?" என அவள் மீண்டும் கேட்டுவைக்க,

"வெளியே வருகிறாயா என்று கேட்டேன் பேபி" என்றான் அவன் மீண்டும் நிதானமாக.

"என்னை விட்டுற போறீங்களா?" இதை கேட்கும் போது நியாயப்படி பார்த்தால் அவள் சந்தோசம் தான் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மனம் பதறியல்லவா தொலைத்தது.

"நோ வே பேபி" என பட்டென அவன் கூறிய விடையில், ஆசுவாசமடைந்த மனதை கடினப்பட்டு காறித்துப்பி அடக்கி வைத்தவள், "அப்புறம்?" என்றாள் கேள்வியாக.

"மாதங்கி காப்பகத்திற்கு போக போறேன்.. அதான்.. நீயும் வரியா?"

"நான் இடையில் எங்காவது ஓடி போய் விட்டால் என்ன செய்வீங்களாம்?" குறும்புடன் அவள் கேட்டதில் அசால்டாக சிரித்தவன்,

"அதெல்லாம் என்னை மீறி உன்னால் அசைய கூட முடியாது" என்றான் அழுத்தமாக.

"சரியான வில்லன்" என வெண்ணிலா முணுமுணுக்க,

"அப்கோர்ஸ்.. ஆனால் உனக்கில்லை.. கிளம்பு போவோம்.." என்றுவிட்டு அவன் சென்றுவிட,

"ம்ம் அது என்னவோ உண்மை தான்" என நினைத்துக்கொண்டே அவளும் கிளம்பினாள்.

செழியன், பகலவன், வெண்ணிலா மூவரும் தான் காரில் கிளம்பினர்.

செழியன் வண்டி ஓட்ட, அவன் அருகில் பகலவனும், பின்னால் வெண்ணிலாவும் அமர்ந்திருந்தனர்.

"என்ன ண்ணா மது என்ன சொல்லுறா?" என பகலவன் சீட்டில் ஆயாசமாக சாய்ந்து கொண்டே கேட்க,

"எப்போதும் போல் தான் டா.. நான் நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணுமாம்.." என்றான் அவன் எரிச்சலுடன்.

"பேசாமல் தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிடுவோமா? இவளை இப்படியே விட்டால் அடங்கவே மாட்டாள் போலையே!" பாதி விளையாட்டும் பாதி சீரியஸுமாக பகலவன் கேட்க,

"அதை செய்வதானால் எப்போதோ செய்திருக்க மாட்டேனா டா? கொஞ்சம் பார்ப்போம்.." என்றான் செழியன்.

இருவரும் பேசியதில் இருந்தே மாதங்கியை செழியன் விரும்புகிறான், அவள் திருமணத்திற்கு மறுக்கிறாள் என்னும் வரை வெண்ணிலாவிற்கும் புரிந்தது..

என்ன பிரெச்சனை என்று கேட்க சங்கடமாக இருந்ததால் அவள் அமைதியாகவே வந்தாள்..

மூவரும் காப்பகத்திற்கு வந்து சேர்ந்த போது அங்கு வேலை சரியாக இருந்தது..

அன்று ஒரு ட்ரஸ்டில் இருந்து மொத்தமாக அனைவருக்கும் உடைகள் வந்திருக்க, அதை எடுத்து வைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது.

எப்படியும் வேலை அதிகமாக இருந்ததால் இவர்கள் மூவரும் அதில் இணைந்து கொண்டு உதவினர்..

வெண்ணிலாவை பற்றி செழியன் ஏற்கனவே மாதங்கியிடம் கூறி இருந்ததால், அவள் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.. சாதாரணமாகவே பேசிக்கொண்டிருந்தாள்..

"இவன் ஏதாவது எம்.எல்.எ திமிரு காட்டினாள் சொல்லு நிலா மா.. நாலு அடி போட்டு விடுவோம்.." வேலையை பார்த்து கொண்டே மாதங்கி கூற,

"சரி கா கண்டிப்பா சொல்லுறேன்" என்றாள் வெண்ணிலாவும் பகலவனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே.

அவள் பார்வையை உணர்ந்து சிரித்துக்கொண்டவன், "பார்த்தீங்களா ண்ணா, ரெண்டு பொண்ணுங்க சேர்ந்ததும் நம்மை அடிக்க பிளான் போடறாங்க.. எல்லாம் கால கொடுமை.." என சலித்துக்கொள்ள,

"ஆமா டா.. ஆமா.." என செழியனும் ஒத்து ஊதினான்.

பேசிக்கொண்டே வேலையை முடித்துவிட்டு அன்று இரவு உணவும் அனைவரும் அங்கேயே முடித்தனர்.

மற்ற அனைவரும் தூங்க போய்விட, சில கணக்கு பார்க்கும் வேலை மட்டும் இருந்ததால் மாதாங்கி, செழியன், பகலவன், வெண்ணிலா மட்டும் மாதங்கி அறையில் அமர்ந்து வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

"அய்யா.. அம்மா.." என திடீரென வாசலில் இருந்து பதட்டமான ஒரு பெண்மணியின் குரல் ஒலிக்க, நால்வரும் நிமிரும் போதே ஒரு பெண்மணி வேகமாக உள்ளே ஓடி வந்தார்..

"அம்மா.. அம்மா.. அங்கே.. அங்கே.. குழந்தைகள் பில்டிங் தீ பிடிச்சிருச்சு மா.." என வேகமாக அவள் கூற,

"வாட்..? எப்படி..?" என கத்திகொண்டே பகலவன் எழுந்துவிட, அவனுடன் மற்ற மூவரும் வேகமாக எழுந்தனர்.

குழந்தைகள் வெளியே ஓடிவிட கூடாது என அவர்கள் பிரிவு மட்டும் சற்று உள்தள்ளி தான் இருக்கும்..

இவர்கள் வேகமாக அங்கு வந்து சேர்ந்த போது, அந்த கட்டிடத்தில் நன்றாக தீ பரவ தொடங்கி இருந்தது...

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11:

பகலவன் அதிர்ந்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான்..

அடுத்த நொடி சுதாரித்திருந்தவன், "உள்ளே பசங்க இருக்காங்களா கா?" என்று வேகமாக கேட்க,

"ஆமா தம்பி.. கீழ் தளத்தில் இருந்த பிள்ளைகள் எல்லாம் தூக்கிட்டு வந்துட்டோம்.. அதற்குள் மேலே வேகமா..." என அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே, செழியன் புறம் திரும்பிய பகலவன்,

"அண்ணா தண்ணி, சாக்குப்பை, கோணிப்பை எல்லாம் தயார் பண்ணுங்க.. மது பைர் சர்வீஸ் கூப்பிடு.." என்று வேகமாக கூறிக்கொண்டே அந்த கட்டிட்டம் நோக்கி ஓடி விட்டான்.

ஒரு பக்கம் செழியன் மற்ற உபகரணங்கள் தேடி ஓட, மாதங்கியும் வெண்ணிலாவும் பையர் சர்விஸிற்கு அழைத்தனர்..

பகலவன் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த போதே மேலே இருந்து, "சார்" என ஒரு பெண் கத்த,

"பயப்படாதே மா.. குழந்தைகளை தூக்கிக்கோ.." என்று கூறிக்கொண்டே படிகளில் பரவி இருந்த நெருப்பை பொருட்படுத்தாமல் வேகமாக மேலே ஏறினான் பகலவன்.

அங்கே குழந்தைகள் பார்த்துக்கொள்ள இருந்த பெண் இரண்டு கைக்குழந்தைகளை கையில் தூக்கி கொண்டாள்..

மேலும் மூன்று குழந்தைகளை வேகமாக தூக்கி கொண்டவன், அங்கே பயந்துகொண்டு நின்றிருந்த சற்றே பெரிய குழந்தைகளை பார்த்து, "யாரும் பயப்படக்கூடாது.. அப்படியே ஒண்ணா நில்லுங்க.. அங்கிள் வரேன்.. சரியா..?" என மென்மையாக கூறிவிட்டு அந்த பெண்ணிடம், "வா" என்று கூறிக்கொண்டே முன்னால் நடந்தான்.

நெருப்பின் ஜுவாலையில் சுற்றுப்புறம் எங்கும் தகித்தது தான்.. அதில் கையில் குழந்தையுடன் அந்த பெண் பயந்து நின்றுவிட, "ஒரு குழந்தையை என்னிடம் கொடு" என்றவன் அதையும் வாகாக தூக்கி கொண்டான்.

"வேகமாக பயப்படாமல் நட மா.. தப்பித்து தான் ஆக வேண்டும்.. இது பயப்படும் நேரம் இல்லை.." என்றவன் அதற்கு மேல் நிற்காமல் முன்னால் இறங்கி விட, அந்த பெண்ணும் அவன் கூறியது போலவே அவனை தொடர்ந்து வேகமாக இறங்கினாள்.

அழைத்து வந்த அனைவரையும் வெண்ணிலா மாதங்கியிடம் ஒப்படைத்தவன், மீண்டும் அதே வேகத்துடன் உள்ளே நுழைந்து விட்டான்..

எஞ்சி இருந்ததெல்லாம் ஏழு எட்டு வயதுடைய குழந்தைகள் தான்..

இந்த முறை தீ இன்னும் வேகமாக பரவி இருக்க, அந்த தளத்திற்கு செல்லும் படிகளும் விழுந்துவிடும் அபாயத்தில் இருந்தது..

பெரிய குழந்தைகளாகவே இருந்தாலும், நடத்தி கூட்டி வர முடியாத நிலை..

முன்பு போலவே எஞ்சி இருந்த மூன்று குழந்தைகளையும் தன் மீது தூக்கி கொண்டு தான் வந்தான்..

அதற்குள் படிகளில் நன்றாக தீ பரவி இருக்க, வேகமாக வந்த பகலவன் காலிலும் தீ பரவ தொடங்கியது..

அது ஏற்படுத்திய எரிச்சலை பொருட்படுத்தாமல் வெளியே வந்தவன், குழந்தைகளை இறக்கி விட, "ஐயோ உங்க காலில் நெருப்பு வர்மா" என வெண்ணிலா தான் அதை முதலில் கவனித்து கத்தினாள்.

அதே நேரம் செழியனும் வந்து விட்டான்..

தான் எடுத்து வந்திருந்த தண்ணீரை அவன் முழு வேகத்துடன் பகலவன் காலில் கொட்ட, ஒருவாறு அந்த நெருப்பும் அனைந்தது.

அவன் கை கால் உடல் என எல்லாப்பக்கமும் நிறைய தீ காயங்கள் இருக்க தான் செய்தது..

அதன் வலியை எல்லாம் அவன் கொஞ்சமும் கண்டுகொண்டதாக தெரியவில்லை..

"எல்லாரும் வந்தாச்சா? யாரும் உள்ளே இல்லையே!" சுற்றி இருந்தவர்களை ஆராய்ந்து கொண்டே அவன் கேட்க, "லீலா..." என்றது ஒரு குழந்தை மெதுவாக.

அதன் குரலில் அவள் புறம் திரும்பியவர்களுக்கும், அப்போது தான் அவள் குறிப்பிட்ட அந்த குழந்தை இல்லாததே உரைத்தது..

"மேலே இல்லையே மா!" என பகலவன் யோசிக்க,

"ரூமில் தூங்கிட்டு இருந்தா.. அங்கே நெருப்பு.." என்றாள் அந்த சிறுமி பயத்துடன்.

லீலா இருந்த அறை வாசலில் நெருப்பு பரவி இருக்கிறது என்று புரிய, ஒரு நொடி அனைவருக்கும் திக்கென்றிருந்தது..

"நான் பாக்கறேன்" என்றுவிட்டு பகலவன் நகர,

"நானும் வரேன் டா" என அவனிடம் வந்தான் செழியன்.

அவனை அழுத்தமாக பிடித்து நிறுத்திய பகலவன், "ம்ஹ்ம்.. குழந்தையை எப்படியும் காப்பாற்ற முயற்சிக்கிறேன்.. படி முழுசா நெருப்பு பரவிடுச்சு.. ஜன்னல் பக்கம் வந்து நில்லுங்க.. குழந்தையை பிடிக்க தேவைப்படும்.. அதை கொடுங்க.." பேசிக்கொண்டே அவரிடம் இருந்து ஒரு சாக்கு பையை பிடுங்கி கொண்டு அவன் வேகமாக சென்றுவிட்டான்..

உள்ளே வந்த பகலவன், கண்ணுக்கு நேர் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்த நெருப்பை பார்த்துக்கொண்டவன், ஒரு முறை ஆழ்ந்து மூச்செடுத்துக்கொண்டு கையில் இருந்த பையால் தன்னை முடிந்தவரை சுற்றி கொண்டான்..

அடுத்த நொடி வேகமாக படிகளில் ஏறியவன் உடலில் அனைத்தையும் மீறி சூடு பட்டு, தோள் உரிய தான் செய்தது..

மேலே நன்றாக தீ பரவ தொடங்கி இருந்த அறையை முதலில் அவன் எட்டி பார்க்க, அங்கே ஜன்னலை ஒட்டி கொண்டு நடுங்கி கொண்டு ஒரு சிறுமி நின்றிருந்தது அவன் கண்களில் விழுந்தது..

அவளை பார்த்ததும் அவள் அருகில் ஓடியவன், சிறுமியை தன்னுள் அணைத்தவாரு தூக்கி கொண்டான்..

அவன் தூக்கியதுமே, "அங்கிள்.. எரியுது அங்கிள்..." என சிறுமி அழ தொடங்க,

"ஒன்னும் இல்லை டா.. ஒன்னும் இல்லை.." என அவளை சமாதானம் செய்துகொண்டே எதிரில் பார்த்தவனுக்கு, அந்த அறை கதவருகிலும் நெருப்பு மூடுவது தெரிந்தது..

ஏற்கனவே யோசித்து வைத்து போல் ஜன்னல் கதவை திறந்தவன், வெளியே எட்டி பார்க்க, கீழே செழியன் நின்றிருந்தான்..

"அண்ணா குழந்தையை பிடிங்க.. கேர்புல்.." என பகலவன் கத்த,

"பார்த்து டா" என்றான் செழியனும் கீழிருந்து சத்தமாக.

முதல் தளம் தான் என்பதால் அதிகமாக உயரம் இருக்கவில்லை..

ஜன்னலுக்கு வெளியில் குழந்தையை இறக்கியவன், தன்னால் முடிந்தவரை கைகளை கீழே இறக்கி செழியன் பிடித்துவிட கூடிய உயரத்தில் தான் குழந்தையை விட்டான்..

அவன் விட்ட நொடி கீழே நின்றிருந்த செழியனும் சில பெண்களும் சேர்ந்து குழந்தையை பிடித்துவிட்டனர்.

அந்த ஜன்னல் மிகவும் சிறியதாக இருந்ததால் குழந்தையை மட்டும் தான் அதன் வழியாக பகலவனால் கொடுக்க முடிந்தது.

அவனால் அதில் நுழைய முடியாது...

அவன் வெளியே வருவதற்கு இருந்த ஒரே வழி வெளி பக்கம் தான்..

இப்போது தீ முழு வேகத்துடன் பரவ தொடங்கி இருக்க, வெளியில் இருந்தவர்கள் கொட்டிய நீர் எல்லாம் தீயில் அமிழ்ந்து தான் போயிற்று..

வெளியில் இருந்த அனைவருமே பகலவனுக்காக தான் காத்திருந்தனர்..

உள்ளே படிகள் முழுவதும் தீ பரவி இருந்ததில் செழியன் உள்ளே சென்றாலும், மேலே ஏற முடியாத நிலை..

அங்கு செக்கியூரிட்டி தவிர வேறு ஆண்களும் கிடையாது..

இன்றைக்கென்று பார்த்து அவரும் விடுமுறை எடுத்திருந்ததால், செழியனும் பகலவனும் தான் போராட வேண்டியதாக போயிற்று..

படிகள் முழுவதும் நெருப்பு சூழ்ந்துவிட்டதை பார்த்த பகலவனும், வெளியேற வேறு வழி இருக்கிறதா என்று தான் ஆராய்ந்தான்..

ஒரு பக்கம் செழியன், "பார்த்துக்கோ மாதங்கி" என்றுவிட்டு உள்ளே வர, அதே நேரம் சற்றே நெருப்பு கம்மியாக இருக்கும் இடத்தில் இருந்து கீழ் தளத்தில் குதிக்க இடம் பார்த்து கொண்டிருந்தான் பகலவன்..

அனைவரும் உச்சகட்ட பதட்டத்துடன் நின்றிருக்க, அவர்கள் பதட்டத்தை குறைக்கவென்றே தீயணைப்பு துறையினர் வந்து சேர்ந்தனர்..

அவர்கள் வந்ததுமே செழியன் அவர்களிடம் விஷயத்தை கூற, அவர்களே முதலில் பகலவனை காப்பாற்றி விட்டனர்.

அவர்கள் உதவியுடன் கீழே வந்தவன், முதலில் நேராக வந்து குழந்தைகளை தான் ஆராய்ந்தான்..

"யாருக்கும் ஒன்னும் இல்லையே!" என அவன் கேட்க,

"ஒன்னும் இல்லை சார்.. உங்களுக்கு தான் நிறைய காயம்..." என்றாள் அங்கிருந்த பெண் அவன் காயங்களை பார்த்து கொண்டே.

"ப்ச் ஐ எம் ஓகே.." என்றவன்,

"எல்லாரும் முதியோர் பில்டிங் போங்க.. மது எல்லாத்தையும் பாரு.. இங்கே நாங்க பார்த்துக்கறோம்.." யாரையும் அதிகம் கலங்கி பகலவன் நிற்க விடவில்லை.

இங்கேயே நின்று கொண்டிருந்தாள் பதட்டம் தான் அதிகரிக்கும் என்பதால் அனைவரையும் அப்புற படுத்த தான் அவன் முயன்றான்..

புரிந்துகொண்டவளாய் மாதங்கியும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டாள்..

"நிறைய காயம் வர்மா" என வெண்ணிலா அவன் கையில் இருந்த தீ காயத்தை பார்த்து கொண்டே அழுதுவிடுபவள் போல் கூற,

"அது ஒன்னும் இல்லை பேபி.. பார்த்துக்கலாம்.. இப்போ அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு டா.. எல்லாரும் பயந்திருக்காங்க.. நாங்க இங்கே இருக்கனும்.. நீ அங்கே பார்.." அவளிடம் மட்டும் அப்போதும் அவன் மென்மையாக தான் பேசினான்..

"உங்கள் காயம்" என அப்போதும் அவள் அதிலேயே நிற்க,

"சின்ன சின்ன தீ காயம் தான் டா.. போகும் போது ஹாஸ்பிடல் போய் கொள்வோம்.. இப்போ அங்கே பார்.." என அவளை பிடித்து அவன் திருப்பி விட, அவளும் வேறு வழி இல்லாமல் மற்றவர்களுக்கு உதவ சென்றாள்.

ஒரு பக்கம் பெரும் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது..

அதற்குள் பகலவன் காவல் துறைக்கும் அழைத்துவிட்டான்..

அவர்களும் வந்து அந்த இடத்தை ஆராய்ந்துவிட்டு, பகலவனிடம் வந்தனர்..

"தற்செயலாக விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை சார்.. யாரோ வேண்டுமென்றே தான் செய்திருக்காங்க.. எங்கள் கனிப்பு படி வெளியில் மறைந்திருந்து, ஆள் இல்லாத பக்கம் இருந்த ஜன்னல் ஸ்க்ரீனில் தீ வைத்திருக்கனும்.. பல இடங்களில் வைத்ததால் கவனிக்கும் முன் வேகமா பரவி இருக்கு.. தடயங்கள் சேகரிச்சுட்டு இருக்கோம் சார்.. எல்லாம் முடிஞ்சதும் டீட்டெயில் ரிப்போர்ட் தரேன்.." என இன்ஸ்பெக்டர் கூற,

"ஓகே சார்.. நாளைக்கு நான் ஸ்டேஷன் வரேன்.. கேரி ஆன்.. என் மேனேஜர் உங்களுடன் இருப்பார்.. அவருக்கு அப்டேட் பண்ணுங்க.. நான் கிளம்பறேன்.." என்றவன் தான் வரவழைத்திருந்த மேனேஜரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு செழியனுடன் நடந்தான்..

சற்றே தள்ளி வந்ததும் செழியன் புறம் திரும்பியவன், "அவங்க ஒரு பக்கம் பார்க்கட்டும்.. நான் பிரைவேட் டிடெக்டிவிடம் சொல்லி இருக்கேன்.. எனக்கு உடனடியா இதை செய்தது யாரென்று தெரியணும்.. நீங்க பாலோ பண்ணிக்கோங்க.. அண்ட், இந்த பில்டிங் இனி வேண்டாம்.. இன்வெஸ்டிகஷன் முடிஞ்சதும் இடிச்சுரலாம்.. வேறு இடத்தில் புதுசா கட்ட சொல்லுங்க.. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கனும்.. இங்கு வரை வந்து கைவைக்கும் பொ**** பய யாருனு தெரியணும்.."

பெரும் கோபத்துடன் அடிக்குரலில் கூறிக்கொண்டே பகலவன் வர, "பார்த்துக்கறேன் பகலவா முதலில் ஹாஸ்பிடல் போவோம்" என்றான் செழியன்.

மற்றவர்களை எல்லாம் பகலவன் பார்த்துக்கொள்வான் தான்.. அவனை யாரேனும் பார்த்துக்கொள்ள வேண்டுமே..! அதை தான் முக்கியமாக செழியன் செய்வது..

இருவரும் பேசிக்கொண்டே மதுவை தேடி வர, அதற்குள் அவளும் அனைவரையும் படுக்க அனுப்பி இருந்தாள்..
மதுவும் வெண்ணிலாவும் மட்டும் தான் இவர்களுக்காக காத்திருந்தனர்..

"குழந்தைகள் யாருக்கும் ஒன்றும் காயம் இல்லையே மது?" என பகலவன் கேட்க,

"யாருக்கும் ஒன்னும் இல்லை டா.. கொஞ்சம் பயந்து தான் போய்ட்டாங்க.. சமாதானம் பண்ணி படுக்க வச்சாச்சு.. பெரியவங்க எல்லாரும் குழந்தைங்க பொறுப்பை எடுத்துகிட்டாங்க டா.. கதை சொல்லி தூங்க வச்சுட்டாங்க.. இல்லாதவர்களுக்கு எல்லாரும் சொந்தம் தானே.." என்றாள் மாதங்கி.

"ம்ம் அது என்னவோ உண்மை தான்.. இன்னிக்கு நைட் காவலுக்கு போலீஸ் இருப்பாங்க.. நாளையில் இருந்து இரண்டு செக்கியூரிட்டி அதிகம் வருவாங்க மது.. ஆண்கள் வேண்டாம் என்ற அடம் எல்லாம் விட்டுவிடு.. புரிந்ததா?" அழுத்தமாக பகலவன் கேட்டதில்,

"கண்டிப்பா டா.. சாரி.." என மெதுவாக மது கூற,

"இட்ஸ் ஓகே மது.. பட் இனி ரிஸ்க் எடுக்க முடியாது.. நம்பிக்கையான ஆட்களாக பார்த்து வைக்கிறேன்.. இப்போ போய் நிம்மதியா தூங்கு.. நான் காலையில் வரேன்.." என்றான் பகலவன்.

"ஏற்கனவே மணி மூணு டா"

"ம்ம் கொஞ்சம் தூங்கு.. நானும் ஹாஸ்பிடல் போய்ட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்" என்றவன்,

"வா பேபி" என வெண்ணிலாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்..

நேராக மூவரும் மருத்துவமனை வர, பகலவன் காயங்களை சுத்தம் செய்து அவனுக்கு மருந்தும் கொடுத்தனர்.

ஏற்கனவே மேனேஜரிடம் சொல்லி எடுத்து வர சொல்லி இருந்த உடையை மருத்துவமனையில் வைத்தே மாற்றிக்கொண்டான் பகலவன்.

அங்கிருந்து கிளம்பி அவர்கள் வீடு வந்து சேர்ந்த போது, ஐந்து மணி ஆகிவிட்டது..

"நீ ரெஸ்ட் எடு பகலவா.. காலையில் நான் முதலில் போறேன்..நீ பொறுமையா வா.. போதும்.." என்றுவிட்டு முதல் தளத்தில் இருக்கும் தன் அறைக்குள் செழியன் புகுந்து விட, பகலவனும் வெண்ணிலாவும் மேலே வந்தனர்..

"நீயும் தூங்கு பேபி" என்றுவிட்டு பகலவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்..

சட்டையை கழட்டலாம் என கை வைத்தவன் கதவருகில் நிழலாடுவது தெரிய திரும்பி பார்த்தான்..

வெண்ணிலா தான் நின்றிருந்தாள்..

"என்ன பேபி படுக்கவில்லையா.. வா.. ஏன் அங்கேயே நிற்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே அவன் சோபாவில் அமர, அவளும் உள்ளே வந்து அவனுக்கு சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள்..

அவன் முகத்தை பார்க்காமல் அவன் உடலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் கண்களில், கண்ணீர் கரை கட்டி நின்றதை அவன் அப்போது தான் கவனித்தான்..

"ஹேய் பேபி என்ன ஆச்சு?"

"ரொ.. ரொம்ப வலிக்குதா?"

அவன் கையில் இருந்த பெரிய தீ காயத்தை காண்பித்து கேட்டவளுக்கு, அதற்கு மேல் தாங்காமல் கண்ணீர் வெளியே வந்துவிட்டது..

அதை அவசரமாக துடைத்து விட்டவன், "என்ன பேபி இது! சின்ன குழந்தை மாதிரி.. இதெல்லாம் ஒன்றுமே இல்லை டா.. எனக்கு வலிக்கவே இல்லையே.. பார், நன்றாக சிரித்துக்கொண்டு தானே இருக்கிறேன்.."

ஒற்றை விரலால் அவள் நாடியை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்துக்கொண்டே தான் பகலவன் பேசினான்..

உண்மையாகவே அவன் முகத்தில் வலியை காண்பித்துக்கொள்ளவில்லை தான்..

ஆனால் வலிக்காமலா இருக்கும்..!

"நா.. நான் க்ரீம் போட்டு விடவா? காய்ந்துவிட்டதே..!" என அவள் மெதுவாக கேட்க,

"போடேன்" என உடனடியாக பக்கத்தில் இருந்த க்ரீமை எடுத்து கொடுத்தான் பகலவன்.

கையில் இருந்த சில காயங்களில் மென்மையாக அவள் தடவி விட, அவனோ அமைதியாக அவளை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்..

இத்தனை நாள் அவனுக்குள் இருந்த பெரும் பதட்டத்திற்கு அவள் கண்ணீர் அவனுக்கு அழகாக விடை கொடுத்துக்கொண்டிருந்ததே..!

"முதுகிலும் காயம் இருந்ததே" என அவள் கேட்க, "ம்ம்" என்றவன், அவள் தயக்கம் உணர்ந்து அவள் கையில் இருந்து க்ரீமை வாங்கிவிட்டான்..

"அது சின்ன காயம் தான் டா.. சரியாகிடும் விடு.. ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் பேபி.." சீரியஸாக அவன் கேட்டதில், அவன் முகம் பார்த்தாள் வெண்ணிலா..

"விட்டுவிடு விட்டுவிடு என்று சொல்லி கொண்டே இருப்பாயே! இன்று நீ நினைத்திருந்தால் தப்பிக்க பல மணி நேரம் இருந்ததே.. இந்த வில்லனிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி இருக்க வேண்டாமா? ஏன் ஓடவில்லை?"

அவன் உதட்டின் ஓரம் அடக்கப்பட்ட சிரிப்பில் துடிப்பதையும் சேர்த்தே கவனித்த வெண்ணிலா, இப்போது தன் கவலை எல்லாம் மறைந்து அவனை முறைத்தாள்..

"என்னை பார்த்தால் எப்படி தெரியுது உங்களுக்கு? அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஓடும் அளவு நான் மனசாட்சி இல்லாதவள் இல்லை.." புசுபுசுவென கோபத்துடன் அவள் கூற, இந்த முறை வெளிப்படையாக சிரித்துவிட்டவன்,

"குட்.. இது தான் என் பேபிக்கு அழகு.. முறைத்து கொண்டே வேண்டுமானாலும் இரு.. பட் நோ அழுகை.. பார்க்க சகிக்கவில்லை.. இதே கோபத்துடன் போய் தூங்கு பார்ப்போம்.."

பேசிக்கொண்டே அவன் எழுந்துவிட, அப்போது தான் தன் மனதை மாற்ற தான் அவன் பேசி இருக்கிறான் என்றே அவளுக்கு புரிந்தது..

அதில் பழைய கவலை மீண்டு விட, "உண்மையாகவே வலிக்கவில்லையா?" என அவள் மீண்டும் கேட்க,

"ரொம்பவும் வலிக்கிறது என்று சொல்லி உன் மடியில் படுத்துக்க ஆசையா தான் இருக்கு.. நீ ரெடியா?" கேட்டுக்கொண்டே அவன் அவளை நெருங்க வேறு செய்ய, துள்ளி எழுந்துவிட்டாள் வெண்ணிலா.

"நான் போறேன் போங்க" என்றுவிட்டு அவள் வேகமாக நடக்க,

"நல்லா தூங்கு பேபி" என்ற அவன் குரல் அவளை தொடர்ந்து, அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை தோற்று வைத்தது..

குளிரும்..


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12:

தாமதமாக படுத்திருந்தாலும் வெண்ணிலா சீக்கிரமே எழுந்துவிட்டாள்..

படுத்தவுடன் அலுப்பில் தூங்கிவிட்டவளுக்கு, அதிக நேரம் தூக்கம் வரவில்லை..

மனதில் இருந்த குழப்பத்தில் சீக்கிரமே எழுந்துவிட்டாள்.

ஏழு மணி போல் எழுந்தவள் ப்ரெஷ் ஆகிவிட்டு பால்கனியில் வந்து அமர்ந்தாள்..

அவள் மனதில் விடை தெரியாத ஆயிரம் குழப்பங்கள்..

தலையை அழுத்தமாக தாங்கிக்கொண்டு அமர்ந்தவளுக்கு பெரும் பரிதவிப்பாக இருந்தது.

மனம் உணர்ந்த விஷயத்தை ஏற்றுக்கொள்வதை தவிர அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை..

மனதை ஏமாற்றிக்கொண்டு வாழ அவளால் நிச்சியம் முடியாது..

அதே நேரம் தன் மனதின் ஆசையை ஏற்றுக்கொள்ளவும் அவளுக்கு பல தயக்கங்கள் இருந்தது..

உடனடியாக ஒரு முடிவிற்கும் வர முடியாமல் போக, அப்போதைக்கு யோசித்துக்கொண்டே இருக்க பிடிக்காமல் எழுந்து விட்டாள்..

நேராக கீழே வந்தவள் பார்த்தி கொடுத்த காபியை குடித்துவிட்டு சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தாள்..

அவள் கண்கள் என்னவோ அடிக்கடி வரவேற்பறையை தான் தொட்டு மீண்டு கொண்டிருந்தது..

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல், "இன்னும் வர்மன் வரவில்லையா அண்ணா?" என அவள் கேட்டுவிட,

"தம்பி இன்னும் எழுந்துகொள்ளவில்லை போல் மா.. எழுந்ததும் காபி கேட்டு போன் பண்ணும்.. இன்னும் போனே வரலையே.." என்றார் அவர்.

நேற்று வேறு நிறைய காயங்கள் பட்டதே..! ஏதேனும் உடல் நிலை சரி இல்லையோ என அவளுக்கு பயம் வந்துவிட, "நான் வரேன் ண்ணா" என்றுவிட்டு மேலே வந்தவள், பகலவன் அறை வாசல் வரை ஏதோ ஒரு வேகத்தில் வந்துவிட்டாள்.

கதவு லேசாக திறந்தே இருந்தாலும் உள்ளே செல்ல அவளுக்கு தான் சங்கடமாக இருத்தது.

ஒருவாறு மனதின் பயம் சங்கடத்தை வென்றுவிட, மெதுவாக கதவை திறந்து பார்த்தாள்..

பகலவன் கட்டிலில் தான் படுத்திருந்தான்..

முதுகில் காயம் இருந்ததாலோ என்னவோ, குப்புற படுத்திருந்தான்..

நல்லவேளையாக அவளுக்கு அதிகம் சங்கடம் இல்லாமல், கை இல்லாத ஒரு லூசான பனியன் அணிந்திருந்தான்..

மெதுவாக அவன் அருகில் வரை வந்துவிட்டவளுக்கு, அவனிடம் இருந்து வெளிப்பட்ட சீரான மூச்சுக்காற்றில் நன்றாக உறங்குகின்றான் என்று புரிந்தது..

ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதோ என மனம் அடித்துக்கொள்ள, ஒரு முறை ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டவள் மென்மையாக அவன் கழுத்தில் தொட்டு பார்த்தாள்.

காய்ச்சல் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால் அவளது மெல்லிய ஸ்பரிசத்திலேயே அவன் விழித்துவிட்டான்.

அவள் நிம்மதியுடன் நிமிர்ந்த நொடி கண்களை திறந்துவிட்டவன், "பேபி..! நீதானா..?" என கேட்டுக்கொண்டே தானும் எழுந்து அமர்ந்தான்..

"அச்சோ சாரி வர்மா.. எழுப்பிட்டேனா?" என அவள் பதறிவிட,

"ஹேய் எதற்கு பேபி இத்தனை டென்ஷன்? கொஞ்சம் அலுப்பு.. அதான் தூங்கிட்டேன்.." என அவன் சோம்பல் முறிக்க, அவள் மெலிதாக சிரித்துக்கொண்டாள்.

"மெதுவா தானே தொட்டேன்.. அதற்கே எழுந்துடீங்களே!" ஆச்சர்யத்துடன் அவள் கேட்க,

"கவனமா இருந்தே பழகிவிட்டது பேபி.. நீ உட்காரு.. நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்.." என்றுவிட்டு எழுந்து குளியல் அறைக்குள் புகுந்துகொண்டான்.

பத்து நிமிடத்தில் மீண்டும் வந்தவன், பார்த்திக்கு அழைத்து காபி எடுத்து வர சொன்னான்..

"வெளியே போய் உட்காருவோமா பேபி?"

அவள் முகம் பார்த்தே அவள் மனம் உணர்ந்தவனாக அவன் கேட்க, அவளும் நெகிழ்ந்துவிட்ட மனதுடன் அவனுடன் நடந்தாள்..

இருவரும் வரவேற்பறை சோபாவில் வந்து அமர்ந்தனர்..

"செழியன் அண்ணாவை பார்த்தாயா பேபி? எழுந்துட்டாரா?" என பகலவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவன் போன் அடித்தது.

அதை எடுத்து பார்த்தவன், "நூறு ஆயுசு" என சிறு புன்னகையுடன் கூறிக்கொண்டே போனை எடுத்தான்.

அவன் எடுத்ததும் அவன் உடல் நலம் விசாரித்துவிட்டே செழியனும் பேசினான்.

"இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் பகலவா.. யார் செய்தது என்று கண்டுபிடிச்சாச்சு.." என செழியன் கூற,

"சீக்கிரமே எழுந்து போய்ட்டிங்களா ண்ணா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கலாமே!" என்றான் பகலவன் அவன் நலமே முதன்மையாய் கொண்டு.

"அதெல்லாம் பார்த்துக்கலாம் பகலவா.. வந்து பேசறேன்.." என்றுவிட்டு செழியன் போனை வைத்துவிட்டான்.

"என்னை விட அண்ணா தான் கோபமாக இருக்கிறார்.. மது சம்மந்தப்பட்ட விஷயம் இல்லையா.. அதான்.." பகலவன் பேசிக்கொண்டிருக்கும் போதே பார்த்தி காபியுடன் வர, அதை எடுத்துக்கொண்டவன், பொறுமையாக குடித்துக்கொண்டே ஏதோ யோசித்துக்கொண்டிருந்தான்..

"யாராக இருக்கும் வர்மன்?"

"ஒன்று இரண்டு எதிரியா இருந்தால் சொல்லலாம்.. நமக்கு ஊர் முழுவதும் எதிரி பேபி.. யாரை சொல்ல?" அசால்டாக பகலவன் கூற,

"இத்தனை எதிரிகளை சம்பாதித்து என்ன செய்ய போறீங்க வர்மன்? கொஞ்சம் அமைதியாக இருக்க கூடாதா?" என்றாள் வெண்ணிலா..

"அதெல்லாம் நமக்கு வராது பேபி.. வெற்றிகரமான அரசியல் அமைதியாக எல்லாம் பண்ண முடியாது.. உனக்கு புரியாது விடு.." என அவன் முடித்துவிட, வெண்ணிலாவின் முகமோ வேதனையுடன் சுருங்கி போயிற்று.

தன் யோசனையிலேயே இருந்த பகலவன், அப்போதைக்கு அவளை கவனிக்கவில்லை..

அதே நேரம் செழியனும் வந்துவிட, இருவர் கவனமும் அவன் புறம் திரும்பியது.

"யாரு ண்ணா..?" முதல் கேள்வியாக பகலவன் அதை தான் கேட்டான்.

"தர்மலிங்கம்.. எதிர்கட்சியில் உன்னிடம் போட்டி போட்டு தோற்று போனவன்.. உன் பெயரை கெடுக்க செய்திருக்கிறான்.."

"பொறுக்கி.." என கோபமாக முணுமுணுத்த பகலவன் வாய்க்குலேயே ஏதோ திட்டி கொண்டான்.

"இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம்.. நேரில் மோத துப்பில்லாத நாய்.. கிளம்புங்க ண்ணா.. அவனெல்லாம் பூமிக்கு பாரமா இருந்தவரை போதும்.." கண்கள் கோபத்தில் சிவக்க கர்ஜனையாக ஒலித்த பகலவன் குரலில், வெண்ணிலாவிற்கு உடல் முழுவதும் நடுங்கி விட்டது.

"கொல்ல போறீங்களா?' குரல் நடுங்க அவள் கேட்க, முகத்தில் இருந்த கோபம் கொஞ்சமும் குறையாமல் அவள் புறம் திரும்பியவன்,

"இப்படி செய்தவனை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்சவா?" என்றான் சீறலாக.

அதில் அவளுக்கு மேலும் நடுங்க தான் செய்தது..

இருந்தும் விடாமல், "கம்பளைண்ட் கொடுக்கலாமே" என அவள் மெதுவாக கூற,

"எதுக்கு? போலீஸ் நேரத்தை வீணடிக்கவா? யார் உயிரும் போகாத தைரியத்தில் பேசாதே பேபி.. குழந்தைகளுக்கு ஏதாவது ஆகி இருந்தால்..?" நிதானமாக அவன் கேட்டதற்கு, அவளுக்கு பதில் தெரியவில்லை தான்.

அதற்காக அவன் சொல்வதை அவளால் ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை.

"சட்டம் தண்டனை கொடுக்கும் வர்மா" மெதுவாக இருந்தாலும் அழுத்தமாக அவள் கூற,

"எனக்கு அத்தனை பொறுமை இல்லை பேபி" என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டான் பகலவன்.

இந்த முறை செழியனும் கொலை வெறியில் இருந்ததால் அவனும் அமைதியாக சென்றுவிட்டான்.

வெண்ணிலா தான் தவிப்புடன் நின்றிருந்தாள்..

பகலவன் பாட்டிற்கு வேகமாக கிளம்பி சென்று விட, வெண்ணிலா தான் அவனை தடுக்கவும் முடியாமல், அவன் கூறி சென்றதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் பெரும் தவிப்புடன் அந்த நாளை கடத்தினாள்..

பகலவனோ அன்று மதியமே தீ விபத்து ஏற்படுத்தியவனை பிடித்து விட்டான்..

தனியாக ஒரு இருட்டு அறையில் தூணோடு கட்டப்பட்டு கண்விழித்த தர்மலிங்கத்திற்கோ பயத்திலேயே உயிர் போய் விடும் போல் இருந்தது..

தனக்கு எதிரில் சேரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பகலவனை பயத்துடன் பார்த்தவன், "வேண்டாம் பகலவா.. ஒழுங்கா என்னை விட்டுடு.. எனக்கு ஏதாவது ஆனால் என் கட்சி ஆட்கள் உன்னை சும்மா விடமாட்டாங்க டா.." குரலில் நடுக்கத்துடன் அவன் கூற, மெலிதாக சிரித்து கொண்டே எழுந்தான் பகலவன்.

"அவனுங்களாவது என்னுடன் மோதுவாங்களா? இல்லை உன்னை மாதிரியே முட்டாள் தனமா தான் யோசிப்பாங்களா?" பேசிக்கொண்டே அவன் பக்கத்தில் இருந்த டின்னை எடுக்க, அவனுக்கு பதில் கூட சொல்ல தோன்றாமல் பயத்துடன் அவன் செய்கையை பார்த்துக்கொண்டிருந்தான் தர்மலிங்கம்.

"வே.. வேண்டாம் பகலவா.. பெரிய தப்பு பண்ணுற.."

அவன் திணறலாக பேச பேசவே டின்னை திறந்து அதில் இருந்த மண்ணெண்ணையை அவன் மீது நிதானமாக கொட்டினான் பகலவன்..

"ஒரு காரியம் செய்யும் முன், பக்க விளைவுகள் யோசிக்கணும் தர்மா.. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? இதுவும் அது போல் தான்.. பச்ச குழந்தைகளுக்கு எரியும் என்று யோசிக்க தோன்றவில்லை இல்லையா? அதான் எப்படி எரியும் என்று அனுபவித்தே தெரிந்துகொள்.."

"ஐயோ பகலவா வேண்டாம்.. என்னை விட்டுரு.. நீ எவ்வளவு பணம் கேட்டாலும் தரேன் டா.. ஊரை விட்டே போய்டறேன்.. உன் வம்புக்கே வரமாட்டேன் டா.. என்னை விட்டுரு.."

உயிர் பயத்தில் அவன் அலறியதை எந்த உணர்வுமற்று வெறித்தவன், "என் வம்புக்கு நேரடியாக நீ வந்திருந்தால் நிச்சியம் உயிருடன் இருந்திருப்பாய் தர்மா.. பேட் லக்.." என தோளை குலுக்கிய பகலவன், தீக்குச்சியை பற்ற வைத்து சுண்டி விட, அடுத்த நொடி தர்மலிங்கம் என்னும் மனித மிருகத்தின் உடல் தீக்கு இரையானது.

அவன் பயத்தில் அலறிய நொடி, முந்தைய நாள் 'எரியுது அங்கிள்' என தன்னிடம் பிதற்றிய குழந்தைக்கு நியாயம் செய்துவிட்ட திருப்தி பகலவனுக்கு..

மேலும் அவர்கள் மாட்டாமல் இருக்க தர்மலிங்கம் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்பது போல் ஏற்பாடு செய்துவிட்டு, அனைத்தும் முடித்து அவர்கள் வீடு வந்து சேர இரவாகிவிட்டது.

நேராக தன் அறைக்கு வந்த பகலவன் கண்கள், தானாக வெண்ணிலா அறை மீது படிந்தது..

திறந்திருந்த கதவு வழியாக அவள் கண்களுக்கு தென்படாமல் போக, ப்ரெஷ் ஆகிவிட்டு பார்த்துக்கொள்வோம் என தன் அறைக்குள் புகுந்து கொண்டான்..

குளித்துவிட்டு வந்தவன், ஏதோ தோன்ற பால்கனி வழியாக எட்டிப்பார்க்க, அவன் நினைத்தது போலவே வெண்ணிலா கீழே தோட்டத்தில் தான் நடந்து கொண்டிருந்தாள்.

அவளை பார்த்ததும் தானும் போனை எடுத்துக்கொண்டு கீழே வந்துவிட்டான் பகலவன்..

"தூங்கலையா பேபி" என்று கேட்டுக்கொண்டே அவன் அவளுடன் இணைந்துகொள்ள, அவளோ அவன் கேள்விக்கு பதில் கூறாமல் அவனை ஒரு மாதிரி பார்த்தாள்.

அவள் பார்வையில் இருந்த தவிப்பில் நின்றுவிட்டவன், "என்ன ஆச்சு பேபி?" என்று கேட்க,

"அ.. அவனை என்ன பண்ணினீங்க?" என்றாள் அவள் சிறு பயத்துடன்.

ஒரு நொடி அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாமல் முகம் சுருங்க யோசித்தவனுக்கு, சட்டென புரிந்து விட்டது.

"இன்னும் அதையே தான் யோசித்து கொண்டிருக்கிறாயா? உனக்கு எதற்கு பேபி அதெல்லாம்! நாம் பாட்டு கேட்போமா?"

நடந்ததை சொல்வதில் அவனுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை தான்.. ஆனால் ஏற்கனவே தவித்து கொண்டிருப்பவள் மேலும் தவித்து போவாளே என்று தான் அவன் பேச்சை மாற்ற முயன்றான்.

அவள் விடும் எண்ணத்தில் இல்லை போல்..

"கொ.. கொலை பண்ணினீங்களா? இல்லை தானே?"

விடமால் அவள் கேட்டதில் ஒரு பெருமூச்செடுத்து தன்னை நிலை படுத்தி கொண்டான் பகலவன்..

"பேபி அவன் பாவத்தின் பலன் அவனுக்கு கிடைக்கும்.. அத்தோடு அதை விடு.." அழுத்தமாக பகலவன் கூற,

"அப்போ உங்கள் பாவத்தின் பலன் உங்களுக்கும் கிடைக்குமே!" என்றவளுக்கு இந்த முறை கண்ணீரே வந்துவிட்டது.

அவள் தவிப்பை பார்த்தவனுக்கோ, அடுத்த நொடி அவளை இறுக அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என இரு கைகளும் பரபரத்தது.

ஆனால் எந்த உரிமையில் செய்வான்..!

அந்த நொடி முதலில் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என திடமான முடிவெடுத்தான் பகலவன்..

"பேபி நீ அழும் அளவு எதுவும் நடந்துவிடவில்லை.. நடக்கவும் என்றும் நான் விட மாட்டேன்.. எனக்கு உன்னுடன் கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்கனும் பேபி.. ப்ளீஸ்.." கெஞ்சலாக அவன் கேட்க, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் ஏக்கம் புரிந்தது.

அவளுக்கு உள்ளுக்குள் பெரிதாக அடித்துக்கொண்டது தான்.. மனம் ஏதேதோ யோசித்து குழம்ப தொடங்க, அதை அப்போதைக்கு அடக்கியவள், அவனுக்காக தன் உணர்வுகளை மறைத்து கொண்டாள்..

"பாட்டு போடறீங்களா?" என அவள் கேட்க,

"ஸ்யூர் பேபி.. வா.." என்றவன் அவர்கள் எப்போதும் அமரும் பெஞ்சில் அமர்ந்ததும் பாடலை போட்டு விட்டான்..

"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...."

பாடல் ஒழிக்கும் போது பொதுவாக கண் மூடி சாய்ந்து விடும் பகலவன், இன்று வெண்ணிலாவையே தான் பார்த்து கொண்டிருந்தான்..

அவன் பார்வை செய்தி சொன்னதோ..!

அவளுக்கும் புரிய தான் செய்தது.. இருந்தும் அவள் பாரம் தீரக்கூடியதாக இல்லையே..!

சிறிது நேரம் பாடல் கேட்டுவிட்டு இருவரும் அமைதியாகவே தங்கள் அறைக்குள் சென்றுவிட்டனர்..

இருவருக்குமே அன்று உறக்கமில்லா இரவாக தான் போனது..

பகலவன் அதிகம் குழப்பிக்கொள்ளாமல் அடுத்து என்னவென்று தெளிவான முடிவெடுக்க, வெண்ணிலா தான் பெரும் தவிப்பில் இருந்தாள்..

'பேசாமல் இங்கிருந்து ஓடிவிடேன்' என்று ஒரு மனம் கதற, மற்றொரு மனமோ அதற்கும் முழுதாக ஒத்துழைக்காமல் அவளை பாடாக படுத்தியது..

விட்டுவிடவும் முடியாமல், முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தன் மனதுடன் போராடி போராடி தோற்றுக்கொண்டிருந்தாள்..

'ஏன் என் வாழ்க்கையில் வந்தீங்க வர்மா? நான் உங்களை பார்த்திருக்கவே கூடாது.. நீங்க நிச்சியம் வில்லன் தான்..'

வேறு வழி இல்லாமல் தன் தவிப்பிற்கு காரணமானவனை திட்டி கொண்டே ஒருவாறு தூங்கி போனாள் வெண்ணிலா..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13:

மறுநாள் காலை பகலவன் கீழே வந்த போது அவனுக்கு உணவு வைத்துக்கொண்டே வெண்ணிலவை பற்றி கேட்டார் பார்த்தி..

"தம்பி வெண்ணிலா சாப்பிட வரவே இல்லையே பா.. நேரம் ஆச்சே..!" என அவர் கேட்க, அப்போது தான் உணவில் கை வைத்தவன்,

"இன்னும் வரவில்லையா என்ன?" என்று கேட்டுக்கொண்டே எழுந்துவிட்டான்.

"தூங்குதோ என்னவோ தம்பி.. நீங்க சாப்பிட்டுட்டு போங்களேன்.." என அவர் கூற,

"இல்லை ண்ணா.. பார்த்துட்டு வரேன்.." என்றவன் அங்கே அமர்ந்திருந்த செழியனிடமும் ஒரு தலையசைப்புடன் நகர்ந்துவிட்டான்.

வெண்ணிலா அறை கதவை அவன் தட்டிய போது அவளும் உடனடியாக திறந்தாள்.

சிவந்திருந்த அவள் கண்களை பார்த்ததும் பதறிவிட்டவன், "என்ன பேபி? உடம்பு ஏதாவது முடியவில்லையா?" என கேட்டுக்கொண்டே அவளை தொட்டு பார்க்க, அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.

அவள் உடம்பிலும் சூடு இல்லாததால் நிம்மதியுடன் கை எடுத்துவிட்டவன், "அழுதாயா பேபி?" என்றான் இப்போது அழுத்தமாக.

"என்னை விட்டுறீங்களா?" என திடீரென அவள் கேட்க, ஒரு நொடி அவனே அதிர்ந்து தான் விட்டான்.

"என்ன பேபி?" வேறு ஏதேனும் சொல்ல வருகிறாளா என்ற நப்பாசையில் அவன் மீண்டும் கேட்க, அவளோ மீண்டும் அதையே தெளிவாக கூறினாள்.

"என்னை விட்டுடுங்களேன் வர்மன்.. உங்களுக்கும் மனோகருக்கும் தானே பிரச்சனை.. அவர் பணம் வந்ததும் தந்து விடுவார்.. நானும் வேண்டுமானாலும் சொல்கிறேன்.. என்னை விட்டுருங்க.." மீண்டும் மீண்டும் அவள் அழுத்தமாக கூறியதில், அவன் இலகு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அவன் முகம் இறுகியது..

"விட்டுவிட்டால் என்ன செய்வதாக உத்தேசம்? அவனை கல்யாணம் செய்துகொண்டு ரெண்டு பேரும் சேர்ந்து கடனை அடைக்க போறீங்களா?" நிதானமாக அவன் கேட்க, அவன் வார்த்தைகள் ஏற்படுத்திய வலியில் அவளுக்கு கண்கள் தாங்காமல் கலங்கி விட்டது.

பல்லை கடித்து அழுகையை கட்டுப்படுத்த அவள் போராட, அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், "பதில்" என்றான் அவன் சீறலாக.

பல நாட்களுக்கு பின் அவனிடம் இருந்து வெளிப்பட்ட கோபத்தில் அவள் பயத்துடன் அவனை பார்க்க, "பதில் சொல்லு வெண்ணிலா" என அவள் கண்களை பார்த்து ஆழமான குரலில் கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான் பகலவன்.

அவன் குரலும் பார்வையும் அவளுக்கும் பெரும் பயத்தை கிளப்ப, தானாக அவள் கால்கள் பின்னால் நகர்ந்தது..

ஒரு கட்டத்தில் சோபாவில் முட்டி அவள் தடுமாறி அதிலேயே விழ, பகலவனும் விடாமல் அவள் புறம் குனிந்தான்.

"சோ உன் காதலனை கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறாய் இல்லையா? அன்று அம்மாவிற்காக சம்மதித்தேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா? பிரிவு துயரில் காதல் வந்துவிட்டதோ! இல்லை கல்யாண ஆசையா..?"

"ஐயோ! வர்மா ப்ளீஸ்.." அவன் குத்தல் வார்த்தைகள் தாங்காமல் கத்திவிட்டாள் வெண்ணிலா.

அவளும் எத்தனை நேரம் அமைதியாக இருப்பது..!

கதறுவது போல் அவள் கத்தியதும் தான் அவள் நிலையை உணர்ந்தானோ என்னவோ, பகலவனும் ஒரு முறை அழுந்த கண் மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்..

அவள் முன் இருந்து நிமிர்ந்தவன், பக்கத்தில் இருந்த சோபாவில் தொப்பென அமர்ந்து விட்டான்..

"பதில் சொல்லி தான் தொலையேன் பேபி.. ஏன் என்னை இப்படி டென்ஷன் செய்து பார்க்கிறாய்? உனக்கு அவன் தான் வேண்டுமா?" மீண்டும் அவன் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க,

"ஐயோ இல்லை வர்மா" என அவசரமாக கத்திவிட்டாள் வெண்ணிலா.

மீண்டும் ஏதாவது சொல்லிவிட போகிறானோ என்ற பயம் அவளுக்கு..

அவள் பதிலில் அவன் இறுக்கமும் லேசாக தளர்ந்தது..

"அப்போ அவன் வேண்டாமா?" அவளை பார்த்துக்கொண்டே அவன் கேட்க, அவளும் மறுப்பாக தலையசைத்தாள்.

"ஏனோ?" குரலில் மீண்டிருந்த ஒருவித குறும்புடன் அவன் கேட்க, பதில் தெரிந்துகொண்டே கேட்பவனை ஒரு கையாளாகா பார்வை பார்த்தாள் வெண்ணிலா.

அவன் விட்டுவிட்டாலும்..!

பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என்பது போல் அவன் சட்டமாக அமர்ந்திருக்க, "அவர் மேல் எனக்கு காதல் இல்லை.. அதனால் கல்யாணம் பண்ணிக்க போவதில்லை.." என்றாள் அவள் மெதுவாக.

"முன்பு நீ கல்யாணத்திற்கு சம்மதித்திருந்த போதும் உனக்கு அவன் மேல் காதல் இல்லையே மா!" சிறு நக்கலுடன் சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் கூறியதில், அவளுக்கு இயலாமையில் கோபமும் அழுகையுமாக தான் வந்தது..

"அது என் இஷ்டம்.. நீங்க என்னை விடுவீங்களா மாட்டீங்களா?" கண்களில் கண்ணீரும் குரலில் கோபமுமாக கேட்டவளை ஒரு நொடி முகம் சுருங்க பார்த்தவன், பின் சிறு புன்னகையுடன் எழுந்து முன்பு போலவே அவள் அருகில் வந்தான்..

"ரொம்பவும் அழுத்தம் பேபி நீ.. உன்னை விடணும்.. அவ்வளவு தானே.. விட்டுவிடலாம்.. அதற்கு முன் உனக்கு சில விஷயங்கள் தெளிவு படுத்த வேண்டும்.. முதலில் என்னுடன் வா.. சாப்பிட்டுவிட்டு வருவோம்.. பின் பொறுமையா உட்கார்ந்து பேசலாம்.." மென்மையாக அவள் கண்ணீரை துடைத்துவிட்டு அவன் கூற, அவன் நெருக்கத்தில் எதுவும் பதில் கூற முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் வெண்ணிலா..

அவன் நிமிர்ந்தும், "எனக்கு வேண்டாம்" என அவள் மெதுவாக கூற,

"நானே வார்த்து தரும் தோசை என்றாலும் வேண்டாமா?" என்றான் பகலவன் கனிவுடன்.

அவன் கூற்றில் ஆச்சர்யத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, மறுக்க வாய் வரவில்லை..

"இப்போ வருகிறாயா?" என மீண்டும் அவன் கேட்க, அமைதியாக எழுந்து அவனை தொடர்ந்தாள் வெண்ணிலா.

கீழே செழியன் அவனுக்காக காத்திருக்க, "நீங்க கிளம்புங்க ண்ணா.. நான் வரேன்.." என செழியனை அனுப்பி வைத்தவன்,

"பார்த்தி ண்ணா நீங்க சாப்பிடுங்க" என அவரையும் உணவு மேசையிலேயே விட்டுவிட்டு வெண்ணிலாவை அழைத்து கொண்டு சமையலறைக்குள் சென்றான்.

கலங்கி இருந்த அவள் முகத்தை பார்த்த செழியனும், பார்த்தியும் எதுவும் எதிர் கேள்வி கேட்காமல் அவர்களுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கி கொண்டனர்..

சமயலறைக்குள் வந்தவன் அன்று போலவே அவளை அமரவைத்துவிட்டு, இருவருக்கும் தோசை வார்த்தான்..

அவளுக்கு கொடுத்துவிட்டு அவனும் அங்கேயே அமர்ந்தான்..

"சாப்பிடு பேபி" என அவன் மென்மையாக கூறியதில், அவனை ஓரக்கண்ணால் ரசித்து கொண்டே சாப்பிட்டு முடித்தாள் வெண்ணிலா..

அவள் பார்த்ததை உணர்ந்தே இருந்த பகலவனும் சிறு புன்னகையுடன் உணவை முடித்துக்கொண்டு எழுந்தான்..

இருவரும் உண்டு முடித்ததும் வெண்ணிலாவை அழைத்து கொண்டு தன் அறைக்கு தான் பகலவன் வந்தான்..

"உட்காரு பேபி" என்றுவிட்டு தன் பீரோவை திறந்தவன், அதில் இருந்து ஒரு கோப்பை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.

"உன் மனம் தெளிவாக தான் காத்திருந்தேன் பேபி.. இனி பிரச்சனை இல்லை.. இதை பாரு.. படிக்க தெரியும் தானே?" சிறு கிண்டலுடன் அவன் முடிக்க,

"நான் ஒரு லாயர் என்பதை நியாபகம் வச்சுக்கோங்க" என நொடித்து கொண்டே அவன் நீட்டிய பைலை வாங்கி கொண்டாள் வெண்ணிலா.

அவள் செயலில் மெலிதாக சிரித்துக்கொண்டவன், தானும் அமர்ந்து கொண்டான்..

சாதாரணமாக அந்த கோப்பை புரட்ட தொடங்கியவளுக்கு, அதில் இருந்த விபரங்களை பார்க்க பார்க்க பெரும் அதிர்ச்சியாக இருந்தது..

அதை முழுதாக பார்த்துவிட்டு நிமிர்ந்தவள், "வர்மா" என அதிர்ச்சியுடன் அவனை பார்க்க,

"ஏதாவது புரிகிறதா பேபி?" என்றான் அவன்.

"மனோகர் அக்கவுன்டில் இருந்து சில மாதம் முன்பு யாருக்கோ முப்பது லட்சம் ட்ரான்ஸ்பெர் ஆகி இருக்கு.. ஆனால் எப்படி? யாருக்கு கொடுத்தார்..?" குழப்பத்துடன் அவள் கேட்க,

"ட்ரான்ஸ்பெர் ஆன அக்கவுண்ட் டீடெயில்ஸ்ஸும் இருக்கே பேபி.." என்றான் பகலவன்.

"யாரோ ரவீந்திரன் என்று போட்டிருக்கு"

"அந்த பெயர் உனக்கு தெரிந்திருக்கணுமே பேபி.. நல்லா யோசி.."

பகலவன் கூற்றில் முகம் சுருங்க யோசித்தவளுக்கு, சட்டென நியாபகம் வந்துவிட்டது..

"மனோகரின் தங்கை கணவர்" என அவள் முணுமுணுக்க,

"இப்போ சொல்லு பேபி.. மனோகரிடம் பணம் இல்லையா?" தெளிவாக பகலவன் கேட்க அவளோ விழித்தாள்.

"அதான் ரவீந்தரிடம் கொடுத்துவிட்டார் போலையே.. ஆனால் கடனை அடைக்காமல் அவருக்கு ஏன் கொடுத்தார்? அவரே நல்ல பணக்காரர் தானே..! வரதட்சணை ஏதாவது..!" அவளே ஏதேதோ குழப்பிக்கொள்ள,

"வரதட்சணை கொடுமை எல்லாம் இருந்தால் அவன் தங்கை அமைதியா குடும்பம் நடத்துவாளா?" என பகலவன் கேட்ட போது, அவள் குழப்பம் அதிகமாகி தான் போனது..

"நான் சொல்வதை முழுதாக நம்புவாயா பேபி?" அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டே பகலவன் கேட்க,

"கண்டிப்பா" என்றாள் வெண்ணிலா யோசிக்காமல்.

அதில் நிம்மதியுடன் அவளை பார்த்தவன், அதற்கு மேல் எதுவும் மறைக்காமல் முழுதாக அவளிடம் கூறினான்..

"மனோகருக்கு பூர்விக நிலம் சொந்த ஊரில் இருந்திருக்கிறது பேபி.. அதன் பத்திரத்தை வைத்து தான் கடன் வாங்கி இருக்கிறான்.. ஆனால் அவன் கொடுத்தது போலி பத்திரம்.. அப்போது தான் வட்டி தொழில் ஆரம்பித்த ஒருவரை சுலபமாக ஏமாற்றி விட்டான்.. அந்த நிலம் விற்காமல் இருந்தவரை பிரச்சனை இல்லை.. ஒழுங்காக வட்டி கட்டி இருக்கிறான்.. நிச்சயம் அநியாய வட்டி இல்லை.. நியாயமான வட்டி தான்.."

அன்றைய அவள் குற்றச்சாட்டிற்கு சேர்த்தே பகலவன் கூறினான்.

"திடீரென ஊரில் ஒரு பெரிய மனிதர் மொத்தமாக கடை போல் திறக்க பெரிய இடம் வேண்டுமென்று இவன் இடத்தை கேட்க, யோசிக்காமல் விற்றுவிட்டான்.. அதில் வந்த பணம் தான் இது.. தன் பெயரில் பணம் இருந்தால் பிரச்சனை என்று தங்கை கணவர் பெயரில் மாற்றிவிட்டான்.. அடமானம் வைத்த பத்திரத்திற்கு மதிப்பில்லை என்றதும் அவனுக்கு பணத்தை கொடுக்க மனம் வரவில்லை.. வட்டி கொடுப்பதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி தள்ளிப்போட்டு கொண்டே வந்தவன், மொத்தமாக ஏமாற்றிவிட தான் திட்டம் போட்டிருக்கிறான்.. உன்னை திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு போய்விட்டாள் தொடர்ந்து வரமாட்டார்கள் என்ற எண்ணம்.. அப்படியே வந்தாலும் போலி பத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? எல்லாமே போலி என்று தப்பிவிட திட்டமிட்டிருக்கிறான்.. அவனுக்கு பணம் கொடுத்தவர் நம் தொகுதி ஆள் தான்.. என்னிடம் வந்து அவர் சொன்னதில், நான் மனோகரை ஆராய போய், எல்லாம் தெரிய வந்தது.. அவன் சரியான பண பிசாசு பேபி.. எதற்காகவும் பணத்தை விட மாட்டான்.."

வெண்ணிலா ஒரேடியாக அதிர்ந்து அமர்ந்திருப்பதை பார்த்தவன், தான் கூறிய அனைத்தையும் அவள் ஜீரணித்துக்கொள்ள சற்றே அவகாசம் கொடுத்தான்..

சில நிமிடங்கள் அவன் அமைதியாக அமர்ந்துவிட, வெண்ணிலாவும் கேட்ட விஷயத்தை ஜீரணிக்க முயன்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்..

ஒருவாறு பகலவன் இதெல்லாம் பொய்யாக கூற வேண்டிய அவசியம் இல்லை என்று அவளுக்கு புரிந்தது.

முக்கியமாக எல்லா ஆதாரமும் அவளிடம் கொடுத்திருக்கிறானே..!

"எ.. எனக்கு தெரியாது வர்மா.." தன்னை பற்றி என்ன நினைக்கிறானோ என்ற கவலையில் அவள் கூற,

"ஐ நோ பேபி.. அண்ட் சாரி பேபி.. ஐ எம் ரியலி சாரி.." என்றான் பகலவன் உண்மையான வருத்ததுடன்.

அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்று அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை.

அவள் முகத்தில் இருந்தே அதை படித்தவன், "உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் பேபி.. நீயும் முதலில் அநியாய வட்டி அது இது என்று பேசவும், உனக்கும் அவனை போலவே பணத்தின் மீது தான் ஆசை என்று நினைத்துவிட்டேன்.. அதான் உன்னை வைத்தே அவனை பிடிக்கணும், உனக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேன்.. பொதுவா தவறு செய்பவர்களுக்கு நான் பாவம் பார்ப்பதில்லை பேபி.. ஆனால் உன் விஷயத்தில் ஏதோ கண்ணை மறைத்துவிட்டது.. இன்னும் நிறைய சொல்லணும்.. எல்லாம் சொல்கிறேன்.. முதலில் என்னை மன்னித்துவிடுவாய் தானே.." அவள் கைகளை பிடித்து கொண்டு சிறு தவிப்புடன் கேட்டான் பகலவன்.

அவன் கொடுத்த கஷ்டங்கள் அவளுக்கு அப்போது தான் நினைவே வந்தது.

அவன் இடத்தில் இருந்து பார்க்கும் போது, இது கூட செய்யாமல் அவனால் இருந்திருக்க முடியாதே என்று தான் அவளுக்கே தோன்றியது..

இத்தனைக்கும் அவன் தவறாக ஒரு பார்வை கூட பார்க்கவில்லையே..

"எனக்கு ஒன்றும் கோபம் இல்லை வர்மா.." என அவள் மெதுவாக கூற,

"தேங்க்ஸ் பேபி.. தேங்க்ஸ் டா.." என்றவன் குரலில் அத்தனை நிம்மதி.

"உனக்கு என் மேல் கோபம் இருந்தால் அடித்துவேண்டுமானாலும் கொள் பேபி.. ஆனால் என்னை வெறுத்துவிடாதே.." அவள் கைகளை மேலும் தன் கைகளுக்குள் அழுத்தமாக மூடி கொண்டே அவன் கூற,

"என்னால் உங்களை வெறுக்க முடியாது வர்மா" என்றாள் அவள் மென்மையாக.

"நான் மனோகரிடம் பேசவா வர்மா? நீங்க என்னை கடத்தி வைத்திருப்பதாக சொல்லவா? சொன்னால் பணம் கொண்டு வருவார் இல்லையா?"

"மாட்டான்" சட்டென பகலவன் கூறிவிட, அவனை புரியாது பார்த்தாள் வெண்ணிலா.

"அவர் என்னை விரும்புவதாக கூறினார் வர்மா.. நான் அவரை விரும்பாத பட்சத்தில் அதை பயன்படுத்துவது தவறு தான்.. ஆனால் அவர் செய்ததும் தப்பு தானே.. அதற்கு இது சரியா போகும்.." கோபத்துடன் கூறியவளை பார்த்து மெலிதாக சிரித்துக்கொண்ட பகலவன்,

"அவன் காதலுக்கு எல்லாம் மரியாதை கொடுப்பவனாக தெரியவில்லை பேபி.. எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்.. உனக்கும் அவனை பற்றி தெரிய வேண்டும் இல்லையா..!" என்றான்..

இதற்கு மேல் தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை என்றாலும், பகலவன் கொடுத்த போனை மறுக்காமல் வாங்கி கொண்டாள் வெண்ணிலா.

மனோகருக்கு அழைத்தவள் போனை ஸ்பீக்கரில் தான் போட்டாள்.

எதுவானாலும் பகலவனிடம் மறைக்க அவள் நினைக்கவில்லை..

மனோகர் போனை எடுத்ததுமே பரபரப்பாக தான் பேசினான்.

"எப்படி இருக்கிறாய் நிலா மா? ஏன் இத்தனை நாள் கூப்பிடவே இல்லை.. டவர் கிடைக்கலைனு அத்தை சொன்னாங்க.. வேறு யார் போனில் இருந்தாவது கூப்பிட்டிருக்கலாமே! நான் ரொம்பவும் தவித்து போனேன் தெரியுமா!" அவன் உருகி உருகி பேச பேச, பகலவனின் முகம் இறுகி கொண்டே போனது.

வெண்ணிலாவிற்க்கும் சங்கடமாகவே இருந்ததால், அவள் நேராக விஷயத்திற்கு வந்தாள்.

"மனோகர் கொஞ்சம் நான் சொல்வதை அமைதியா கேளுங்க.. நான் பெரிய ஆபத்தில் இருக்கேன்.. நீங்க கடன் வாங்கி இருந்த ஆள் என்னை கடத்திவிட்டான்.. நீங்க பணத்தை தந்தாள் தான் விடுவேன் என்கிறான்.. பணத்தை கொடுத்து என்னை காப்பாத்துங்க ப்ளீஸ்.." தெளிவாக வெண்ணிலா கூற,

"ஏய் என்ன சொல்கிறாய் நிலா! நீ மும்பை போகவில்லையா? இத்தனை நாள் எங்கே இருந்தாய்? இன்னிக்கு திடீர்னு போன் பண்ணி ஏதேதோ சொல்கிறாய்! அவன் கடத்தல் எல்லாம் செய்யும் அளவு பெரிய ஆள் இல்லையே!"

இத்தனை பதட்டத்திலும் அவன் குள்ளநரி மூளை வேலை செய்ததில் வெண்ணிலாவிற்கே எரிச்சலாக தான் இருந்தது..

"அவர் நேரடியாக கடத்தவில்லை மனோகர்.. அவருக்கு தெரிந்த பெரிய ரௌடி வச்சு கடத்திட்டார்.. இத்தனை நாள் ஒரு வீட்டில் அடைச்சு வச்சு மிரட்டினாங்க.. நான் மறுத்ததும் இன்று கொலை பண்ணிடுவேன்னு சொல்லுறாங்க மனோகர்.. எனக்கு பயமா இருக்கு.. காப்பாத்துங்க.. போலீசில் சொல்லியாவது காப்பாத்துங்க.." கடைசி வரியை ரகசியம் போல் மெதுவாக அவள் கூற,

அவனோ, "போலீஸா..?" என்றான் பெரும் யோசனையுடன்.

"என்னிடம் பணம் இல்லை என்று சொன்னாயா?" நிதானமாக அவன் விவரம் கேட்டதே அவன் காதலின் லட்சணத்தை காட்டி கொடுக்க போதுமானதாக இருந்தது.

"உங்கள் போலி பத்திரம், நில விற்பனை வரை எல்லாம் சாட்சியுடன் காண்பிச்சாங்க" பெரும் எரிச்சலுடன் வெண்ணிலா கூற, அவள் கைகளை ஆறுதலாக பிடித்துக்கொண்டான் பகலவன்.

"அதெல்லாம் அவர்களால் நிரூபிக்க முடியாது நிலா.. நீ கடைசி வரை என்னிடம் பணம் இல்லை என்றே சொல்லிக்கொண்டிரு.. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் விட்டுருவாங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. வைக்கிறேன்.." என்றுவிட்டு அவன் பட்டென போனை வைத்துவிட, தன் கையில் இருந்த போனை பெரும் அதிர்ச்சியுடன் வெறித்து பார்த்தாள் வெண்ணிலா....

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14:

மனோகர் பேசிய லட்சணத்திலேயே பகலவன் கூறியது போல் அவனுக்கு பணம் தான் பெரியது என்று புரிந்துவிட்டது தான்..

ஆனாலும் அவள் ஒரு ஆபத்தில் இருக்கும் போது அப்படியே விட்டுவிட்டு போகும் அளவு கோழையாக இருப்பான் என வெண்ணிலா சுத்தமாக நினைக்கவில்லை.

அவன் கூறிய காதல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்..!

ஏதோ கிடைத்தால் லாபம் என்று முயன்றிருக்கிறான் போல் என நினைத்தவளுக்கு, பெரும் அருவெறுப்பாக போய் விட்டது..

முகம் சுருங்க அமர்ந்திருந்த வெண்ணிலாவின் நிலை பகலவனுக்கும் புரிந்தது..

மென்மையாக அவள் கைகளை பிடித்துக்கொண்டவன், "பேபி" என மெதுவாக கூப்பிட, அவளும் அப்போதும் தான் சுயநினைவிற்கே மீண்டாள்..

மன சுணக்கம் குறையாமல் அவனை பார்த்தவள், "நான் உண்மையாக அவனை விரும்பி இருந்தால் என் நிலை என்ன வர்மா? நீங்கள் கெட்டவராக போய் இருந்தால் இந்த நேரம் என் கதி..? போயும் போயும் அவனுக்காக நான் உங்களை எதிர்த்து, கஷ்டப்பட்டு...." ஏதேதோ நினைவுகளில் அவள் பேச முடியாமல் திணறி போனாள்..

அதற்க்கு மேல் ஒதுங்கி இருக்க முடியாமல் அவள் அருகில் சென்று அமர்ந்தான் பகலவன்..

"பேபி என்னை பார்.. நீ சொன்ன எதுவுமே நடக்கவில்லை.. நீ அவனை விரும்பவே இல்லை.. அண்ட் என்னை வில்லனாக பார்த்த நீயே நல்லவன் பட்டம் வேறு கொடுத்து விட்டாய்.. வேறு என்ன வேண்டும்..! அவனை இனி மறந்துவிடு பேபி.. நான் பார்த்துக்கறேன்.."

அவன் என்னவோ அவளை சாமாதானம் செய்ய சாதாரணமாக தான் பேசினான்.

அவள் தான் அவன் கடைசி வரியில் திடுக்கிட்டு அவனை பார்த்தாள்..

"அவனையும் கொல்ல போறீங்களா?" பயத்துடன் கேட்டவளை புரியாது பார்த்தவன், பின் சத்தமாக சிரித்துவிட்டான்.

"அட லூசு பேபி! என்னை பார்த்தால் பார்த்தவனை எல்லாம் கொல்லும் கொலைகாரன் போலா தெரிகிறது?" சிரித்துக்கொண்டே அவன் கேட்டாலும், அது தானே உண்மை என நினைத்துக்கொண்டாள் வெண்ணிலா.

அவள் முகமே அவளை காட்டிகொடுத்திவிட, இப்போது சிரிப்பதை நிறுத்திவிட்டு அவனும் அவளை சீரியஸாக பார்த்தான்..

"யாருக்கு மரணதண்டனை நியாயமோ அவர்களுக்கு மட்டும் தான் பேபி அது வழங்கப்படும்.. மற்றவர்களுக்க்கு எல்லாம் நான் வில்லன் மட்டும் தான் மா.. கொலைகாரன் எல்லாம் இல்லை.." அவன் அசால்டாக தோளை குலுக்க, அதில் அவனை முறைத்தவள்,

"சட்டத்தை கையில் எடுப்பது தவறு" என்றாள்.

"ப்ச் பேபி, இப்போது இந்த பேச்சு வேண்டாம்.. அந்த மனோகரை நான் ஒன்னும் பண்ண மாட்டேன்.. பணத்தை வாங்கும் வழியை மட்டும் பார்க்கிறேன்.. சரி தானே?" அவன் பேச்சை மாற்றி விட்டதில் அவளும் ஒரு பெருமூச்சுடன் அமைதியாகி விட்டாள்..

"எப்படி வாங்குவீங்க?" என அவளும் முக்கிய பேச்சிற்கே வர,

"யோசிக்கணும் பேபி.. அவன் கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டான்.. உன்னை தூக்கியதற்கு அதுவும் ஒரு காரணம்.. பட் வேற வழிகள் இருக்கு.. இந்த பகலவனிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது தெரியுமா..?" கண்ணடித்து அவன் கூறியதில், தன்னை அறியாமல் சிரித்துவிட்டவள்,

"ஆமாம்.. ஆமாம்.. வில்லன்.." என்றாள் சிரிப்பினூடே.

"அட டா நல்லவன் பட்டம் அதற்குள் பறி போய் விட்டதே!" என அவன் வருத்தப்பட, அவள் சிரிப்பு மேலும் அதிகரித்தது..

எதுவும் யோசிக்காமல் சிரித்துக்கொண்டிருந்தவள் அவன் அப்படியே எழுந்துகொள்ளவும் தான் முக்கிய விஷயம் நினைவு வந்தவளாக தானும் எழுந்தாள்.

"எல்லாம் தான் முடிந்ததே வர்மா.. ந.. நான் போகலாமா...?" முதல் கேள்வியிலேயே மீண்டும் அவள் வந்து நிற்க,

"எதுவும் முடியவில்லை பேபி.. பணம் கைக்கு வரட்டும்.. எதுவும் செட்டாகாவிட்டால், மீண்டும் அவனை மிரட்ட நீ வேண்டாமா?"

எப்போதும் போல் சிரிப்பை மறைத்துக்கொண்டு கேட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான்..

விளையாட்டாக தான் சொல்லிவிட்டு போகிறான் என்று அவளுக்கும் புரிந்தது தான்.

ஆனால் இதன் முடிவும், பகலவன் அடுத்து என்ன செய்வானோ என்ற குழப்பமும் அவளை அரித்து கொண்டே தான் இருந்தது..

செழியனும் பகலவனும் ஏற்கனவே மனோகரிடம் இருந்து எப்படி பணத்தை பறிப்பது என்று திட்டமிட்டு முடித்திருந்தனர்..

அன்றே செழியனிடம் அதை பற்றி பேசினான் பகலவன்..

"அந்த ப்ரோகரிடம் பேசினீங்களா ண்ணா?" என்று பகலவன் கேட்க,

"ம்ம் இரண்டு நாள் முன்பு பேசினேன் டா.. அந்த மனோகர் எதுவும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறானாம்.." என்றான் செழியன்.

"இன்று பேசி பார்க்க சொல்லுங்க ண்ணா.. அவன் சம்மதிக்க வாய்ப்பிருக்க்கு.." அழுத்தமாக பகலவன் கூறியதில், மறுக்காமல் போனுடன் நகர்ந்தான் செழியன்..
மனோகர் மும்பை போகும் முன் அங்கு ஒரு வீடு வாடகைக்கு பார்க்க சொல்லி தன் நண்பனிடம் கூறி இருந்தான்.. அதே நேரம் நெட்டில் தானும் தேடி கொண்டிருந்தான்..
இது பகலவனுக்கு தெரிய வர, ஒரு ப்ரோக்கரிடம் சொல்லி நெட் மூலமாக ஒரு பெரிய வீடு கம்மி விலைக்கு வருவதாக சொல்லி மனோகரை வாங்க வற்புறுத்த சொல்லி இருந்தான்..
ஒரு கோடி மதிப்புள்ள வீடு நாற்பது லட்சத்திற்கு வருகிறது என்பது எப்படியும் மனோகர் ஆசையை தூண்டும் என்பது பகலவனின் கணிப்பு..

முதலில் மனோகர் வாங்குவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை தான்.

ஆனால் இன்று வெண்ணிலாவுடன் பேசிய பின் எப்படியும் கையில் இருக்கும் பணத்தை எதிலாவது முடக்கிவிட அவன் முயல்வான் என்று தான் பகலவன் நினைத்தான்..

அதே தான் நடக்கவும் செய்தது..

இந்த முறை மனோகர் சம்மதித்து விட, அடுத்து நடந்த அனைத்துமே படு வேகமாக நடந்தது..

மனோகர் வீட்டை பார்க்க ஒரு முறை செல்ல வேண்டும் என்று தான் நினைத்தான்..

ஆனால் ஒரே வாரத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட, இரண்டு முறை அலைய முடியாது என்பதால் ஒரே முறையாக ரெஜிஸ்ட்ரேஷனுக்கே சென்றான்.

ஒரு முறை அவனிடம் வீட்டை காண்பித்த புரோக்கர், ஓனரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு ரெஜிஸ்ட்ரேஷனும் செய்து கொடுத்துவிட்டு, தன் கமிஷனை வாங்கி கொண்டு சென்றுவிட்டான்.

அப்போதைக்கு வெண்ணிலா இல்லாவிட்டாலும் வேறு யாரையேனும் திருமணம் செய்து கொண்டோ, இல்லை தனியாகவோ சீக்கிரமே மும்பை வந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் மனோகர்..

இத்தனை பிரச்சனைக்கு இடையில் வெண்ணிலா எப்படி அவள் வீட்டுடன் பேசினால் என்பதை யோசிக்க அவன் மறந்துவிட்டான்..

அவன் மனம் முழுவதும், தான் தப்ப வேண்டும் என்பதில் மட்டும் தான் இருந்தது..

அலுவலகத்தின் அருகில் மாறப்போவதாக காமாட்சியிடம் கூறி வீட்டையும் மாற்றி கொண்டு சென்றுவிட்டான்..

மொத்தமாக அவன் வெண்ணிலவை விட்டு ஓட நினைத்தது, பகலவனுக்கும் வசதியாக தான் போயிற்று.

அவன் திட்டம் வேகமாக நிறைவேறியது.

ரெஜிஸ்ட்ரேஷன் முடித்துவிட்டு மீண்டும் வந்த மனோகருக்கு அதற்கு மேல் தான் சோதனையே காத்திருந்தது..

சென்னை வந்த மறுநாளே மனோகர் மும்பையில் இருக்கும் தன் நண்பனிடம் தான் வீடு வாங்கியதை கூற, அவனும், 'இத்தனை கம்மி விலையில் வீடா? நானும் பார்க்கனும்..' என்றான்.

மனோகர் கொடுத்த முகவரியில் அவன் சென்று பார்த்த போது, அங்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருந்தது..

அவன் விசாரித்த போது இது தங்கள் வீடு என்று அவர்கள் அடித்து கூறினர்..

போன வாரம் வந்து பார்த்த போது காலியாக இருந்ததே என்று கேட்டதற்கு,இது வரை வெளியூரில் வேலையில் இருந்தவர்கள் இரண்டு நாட்கள் முன்பு தான் மாற்றலாகி வெளியூரில் இருந்து வந்ததாகவும் கூறினர்...

மனோகரிடம் வீட்டை காண்பித்தவன் போலி சாவி தயாரித்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் அவன் நண்பன்..

உண்மையாக அந்த வீட்டு ஓனர் பகலவனுக்கு தெரிந்தவர் என்றோ அவர் அனுமதியுடன் தான் இது நடந்தது என்றோ அவர்களுக்கு தெரியாதே!

அதை அவன் நண்பன் மனோகரிடம் கூற, அவனோ அடித்துபிடித்து கொண்டு மீண்டும் மும்பை ஓடினான்..
அவனுக்கும் அதே பதில் தான் கிடைத்தது..

அவன் வீடு வாங்கிய புரோக்கர் நம்பர், ஓனர் நம்பர் எதுவுமே எடுக்கப்படவில்லை.

யார் வீடும் அவனுக்கு தெரியவில்லை..

தன்னிடம் இருந்த பத்திரத்தை வைத்து நண்பன் உதவியுடன் விசாரித்த போது தான், அது போலி பத்திரம் என்றே தெரிந்தது..

மனோகர் மொத்தமாக அந்த ப்ரோகிரை தான் நம்பி இருந்தான்..

அவன் அழைத்து போன ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் கூட வேறு ஏதோ ஆஃபிஸ் என்று தெரிய வந்த போது, அவன் ரொம்பவும் நொந்து விட்டான்..

ஹிந்தி தெரியாததால் கண்மூடி தனமாக நம்பி தொலைத்திருந்தான்..

தன்னை யாரும் ஏமாற்றிவிடுவார்கள் என்ற எண்ணமே இல்லை போல்..

"நாற்பது லட்சம் டா.. ஏதாவது உதவி பண்ணு.." என அவன் நண்பனிடம் கதற,

"தெளிவா ஏமாற்றி இருக்காங்க மனோ.. சட்டப்படி ஒன்றும் பண்ண முடியாது.. தனியார் வைத்து தேட வேண்டும் என்றால் செலவாகும்.." என நிதர்சனத்தை கூறினான் அவன் நண்பன்..

இரண்டு நாளாக ரோட் ரோடாக அலைந்துவிட்டு வந்தவனுக்கு அடுத்த அடி வேலையில் காத்திருந்தது..

ஆம் அவனை வேலையை விட்டு தூக்கி விட்டனர்..

காரணம் ஏதேதோ கூறினர்.. தனியார் நிறுவனம் என்பதால் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை..

ஒரேடியாக மேலும் மேலும் விழுந்த அடியில் அவனும் துவண்டு போய் விட்டான்..

அவன் தெருவில் நின்று விட்டான் என்றதும் அவன் தங்கை குடும்பமும் ஒதுங்கி கொண்டது..

அவனுக்கு வெண்ணிலா நினைவு வந்தது தான்..

ஆனால் அவளை தேட போய் மேலும் எதிலாவது மாட்டிக்கொள்ள கூடாதே என்று விட்டுவிட்டான்..

இப்போதைக்கு அவன் தெரு தெருவாக அலைந்து வேலை தான் தேடி கொண்டிருந்தான்..

எத்தனை அலைந்தாலும் இனி அவன் படிப்பிற்கேத்த வேலை அவனுக்கு கிடைக்காது...

ஏதாவது சாதா வேலை தான் செய்தாக வேண்டும்..

வெண்ணிலாவிடம் கூறியது போல் பகலவன் அவன் உயிரை எடுக்கவில்லை தான்.. ஆனால் உயிரை மட்டும் தான் விட்டுவைத்திருந்தான்..

மற்ற அனைத்தும் பிடுங்கி விட்டான்..

அனைத்தும் முடிய கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஆனது..

இந்த இரண்டு வாரமும் பகலவன் அதிகம் வெண்ணிலாவை பார்க்க வரவில்லை..

சில சமயங்களில் இரவு நடையில் மட்டும் இணைந்து கொண்டான்..

அதிலும் அதிகம் பேசவில்லை.. பாடல் போட்டு விட்டு அமைதியாக தான் இருந்தான்..

எதுவாக இருந்தாலும் அவனே சொல்லுவான் என்று அவளும் அமைதியாகவே இருந்தாள்..

அன்று இரவு சற்று சீக்கிரமே வந்துவிட்டவன், உணவை முடித்ததும் அவளை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு வந்து விட்டான்..

மனோகரிடம் பணத்தை பறித்துவிட்டதை கூறியவன், அதை எப்படி செய்தான் என்றும் சேர்த்தே கூறினான்..

அவன் கூறியதை பெரும் ஆச்சர்யமும் குழப்புமாக கேட்டுக்கொண்டவள், "இதை முதலிலேயே செய்திருக்கலாமே வர்மா?" என கேட்க, அவளை பார்த்து ஒரு மாதிரி சிரித்தவன்,

"இதற்கான பதில் உனக்கு நாளை சொல்கிறேன் பேபி.. இது மட்டும் இல்லை.. நீ விட்டுவிடு விட்டுவிடு என்று அனத்தி கொண்டே இருக்கிறாயே, அதற்கான விடையும் நாளை சொல்கிறேன்.. இப்போதைக்கு இந்த நேரத்தை அனுபவிப்போமா..!" என கேட்டுக்கொண்டே அமர்ந்துவிட்டவன், அன்று வழக்கத்திற்கு மாறாய் அவளை சற்று நெருங்கி அவள் கைகளை பிடித்துக்கொண்டு தான் அமர்ந்திருந்தான்..

அவளும் என்ன நினைத்தாளோ எதுவும் மறுக்காமல் அமர்ந்திருந்தாள்..

எப்போதும் போல் இருவர் மனதையும் லேசாக்குவது போல் பாடலும் ஒலித்தது..

"தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையமம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே…

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோட
இந்த ஒலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரு ம் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல"

மறுநாள் காலையிலேயே பகலவனும் செழியனும் கிளம்பிவிட்டனர்..

பகலவன் கிளம்பும் போது வெண்ணிலா அவனை கேள்வியாக பார்க்க, "ஈவினிங் பேபி" என்றுவிட்டு சென்றுவிட்டான்.

அவன் தனது திட்டத்தை செழியனிடம் கூறிய போது, "நீ தனியா போவது இப்போது பாதுகாப்பில்லையே பகலவா!" என்றான் செழியன் யோசனையுடன்.

"இதற்கெல்லாம் பாடி கார்டஸ் கூட்டிட்டு போனால் நல்லாவா அண்ணா இருக்கும்? எனக்கென்று பிரைவசி வேண்டாமா?" என்றான் பகலவன் சலிப்புடன்.

"அது சரி தான் பகலவா.. ஆனால் இப்போது நிலைமை மோசமா இருக்கு டா.. அந்த தர்மலிங்கம் ஆளுங்க உன் மேல் தான் சந்தேகப்படறாங்க.. போதாத குறைக்கு ஆகாஷ் அப்பா வேறு அவன் கேஸை நோண்டிட்டு இருக்கான்.. நீ பாதுகாப்பில்லாமல் எங்கும் போவது பெரிய ரிஸ்க் பகலவா.. புரிஞ்சுக்கோ.." அழுத்தமாக செழியன் கூற, பகலவன் யோசனையுடன் அமர்ந்துவிட்டான்.

செழியனும் யோசித்து வேறு திட்டம் கூற, அது பகலவனுக்கு சரியாக தான் பட்டது.

"ஓகே ண்ணா" என்றவன், "மதுவையும் கூட்டிட்டு வாங்களேன் ண்ணா.. அந்த தீ விபத்துக்கு பின் அவள் ரொம்பவும் சோர்வா இருக்கா.. அவளுக்கும் ஒரு நல்ல சேஞ்சா இருக்குமே!" என்றான்.

"அவள் வரமாட்டாளே டா" சலிப்புடன் செழியன் கூற,

"அது உங்க சாமர்த்தியம்" என தோளை குலுக்கினான் பகலவன்.

அதில் மெலிதாக சிரித்து கொண்ட செழியன், "கூட்டிட்டு வரேன் டா" என முடித்துவிட்டான்.

சிறிது நேரத்தில் மதுவிற்கு அழைத்த செழியன், விஷயத்தை கூற, அவளோ அவன் நினைத்தது போலவே அட்சரம் பிசகாமல் மறுத்தாள்..

"நான் எதுக்கு செழியா? நீங்க போங்க" என அவள் கூற, இந்த முறை செழியனுக்கும் கொஞ்சமும் பொறுமை இல்லாமல் கோபம் தான் வந்தது.

"உன்னை கூட்டிட்டு போய் ஒன்னும் பண்ணிட மாட்டேன் மது.. ஒரு அரை மணி நேரம் என்னுடன் இருப்பதால் உன் வாழ்க்கை ஒன்றும் தலைகீழாக மாறிவிடாது.. நீ வருகிறாய்.. அவ்வளவு தான்.. நான் ஈவினிங் வரேன்.." என காய்ந்தவன், அந்த பக்கம் பதில் வராமல் போக,

"வருகிறாய் தானே?" என்றான் கடுப்புடன்.

அவன் கெஞ்சலை எல்லாம் புறம் தள்ளியவளுக்கு, அவன் கோபத்தை புறம் தள்ளும் தைரியம் வரவில்லை.

"வரேன்" என அவள் முணுமுணுக்க,

"அங்கே ஒன்றும் பிரச்சனை இல்லையே? கட்டிட வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதா?" என்றான் செழியன்.

அதற்கும், அவள், "ம்ம்" என்று மட்டும் கூறிவைக்க,

"சரி வைக்கிறேன்" என அவளிடம் வீராப்பாக கூறிவிட்டு போனை வைத்தவன், இங்கே தலையில் அடித்து சிரித்து கொண்டான்..

'பெரிய பெண் மாதிரி யோசிப்பதில் ஒரு குறையும் இல்லை! ஒரு திட்டை தாங்குவதில்லை.. குழந்தை தான் டி நீ..'

போனில் இருந்த தன்னவள் படத்தை பார்த்து கொஞ்சி கொண்டான் செழியன்..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15:

மாலை நேரம் செழியன் மதுவை அழைத்துவர முன்னால் சென்று விட, பகலவன் மட்டுமே வீட்டிற்கு வந்தான்..

நேராக வெண்ணிலாவை தேடி வந்தவன், "பேபி கிளம்பு.. வெளியே போகிறோம்.." என ஒரு வித துள்ளலுடன் கூற,

"எங்கே வர்மா? காப்பகத்திற்கா?" என்றாள் வெண்ணிலா.

"நோ பேபி.. எங்கே என்று சஸ்பென்ஸ்.. நீ கிளம்பு.. உன்னை எங்கும் கடத்தி போய் விட மாட்டேன்.." என குறும்புடன் அவன் கூற,

"ஆமா ஆமா நீங்க என்னை கடத்தவே மாட்டீங்க" என ராகம் பாடினாள் வெண்ணிலா.

அதில் இருவருமே சிரித்துவிட, "கிளம்பு பேபி.. குவிக்.." என்றுவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான் பகலவன்.

முகம் அலம்பி சற்றே நல்ல சுடிதாராக போட்டு கொண்டு வெண்ணிலா தயாரானபோது, அவனும் வந்துவிட்டான்..

இயற்கையாகவே கொள்ளை அழகுடன் இருந்தவளை ரசித்துகொண்டே வந்தவன், "உன்னை போலவே எல்லாரும் இருந்துவிட்டாள் மேக் அப் கம்பெனி எல்லாம் இழுத்து மூட வேண்டியது தான் பேபி.." என கூற,

"ஏன்? நானும் மேக் அப் எல்லாம் போடுவேன்.. உங்களுக்கு இது போதும் என்று தான் ஒன்றும் போடவில்லை.. மேக் அப் கிட் கூட வாங்கி கொடுக்க முடியாத அளவு கஞ்சமா இருப்பீங்க போலையே!" என்றாள் வெண்ணிலா விளையாட்டாக.

"நீ கேட்டால் ஒரு பியூட்டி பார்லரே வீட்டில் வச்சு தரேன் பேபி.. ஆனால் நான் மேக் அப் இல்லாத இந்த முகத்தை தான் காலம் முழுக்க ரசிப்பேன்.." ஆழமாக அவன் பேச, பேச்சு வேறு எங்கோ செல்வதை உணர்ந்து சட்டென வாயை மூடிக்கொண்டாள் வெண்ணிலா.

அவள் அமைதியானதை பார்த்து சிரித்து கொண்ட பகலவன், அதற்கு மேல் வம்பு வளர்க்காமல் அவளுடன் நடந்தான்.

இருவரும் காரில் ஏறியதும், மற்றொரு கார் அவர்களை தொடர்ந்தது..

வீட்டை விட்டு வெளியே வந்ததுமே அதை கவனித்த வெண்ணிலா, "நம்மை தான் பாலோ பண்ணுறாங்களா?" என பின்னால் வரும் காரை காண்பித்து கேட்க,

"ஆமா பேபி.. நம்ம பாதுகாப்பிற்கு தான்.." என்றான் பகலவன்.

"பாதுகாப்பில்லாமல் எங்குமே போக முடியவில்லை இல்லையா?" ஒரு மாதிரி குரலில் வெண்ணிலா கேட்க, அவளை புரியாமல் பார்த்தவன்,

"பாதுகாப்பு முக்கியம் தானே பேபி.. அய்யா எவ்வளவு பெரிய ஆளு..!" என விளையாட்டாக முடிக்க பார்க்க,

"நல்லவராக இருந்தால் பயம் எதற்கு?" என்றாள் அவள் மெதுவாக.

அவனால் உடனடியாக பதில் கூறிவிட முடியும் தான்.. ஆனால் ஏதேனும் வாக்குவாதம் செய்து இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை..

"நல்லவனாகவே இருந்தாலும், பதவிக்கு சிலது தேவை படும் பேபி.. அதை விடேன்.." என அவன் முடித்துவிட, ஒரு பெருமூச்சுடன் அவளும் அமைதியாகிவிட்டாள்..

அவளுக்கும் அந்த நேரத்து இனிமையை கெடுத்துக்கொள்ள மனம் இல்லை போல்..!

போகும் வழியில் செழியன் மதுவையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.. அவர்கள் இருவரும் தனி காரில் தான் வந்தனர்..

சிறிது நேரத்தில் அனைவரும் பீச்சிற்கு வந்து சேர்ந்தனர்.

"ஹை பீச்சுக்கு போறோமா? சொல்லி இருக்கலாமே வர்மா..!" பீச்சை பார்த்ததும் சிறு பிள்ளையாக குதூகலித்த தன்னவளை நெகிழ்வுடன் பார்த்த பகலவன்,

"என் பேபிக்கு பீச் என்றால் ரொம்பவும் பிடிக்கும் இல்லையா?" என மென்மையாக கேட்க, அவன் பேச்சை சரியாக கவனிக்காதவள்,

"ஆமா வர்மா" என வெளியில் பார்த்து கொண்டே கூறிவைத்தாள்..

"இறங்கு பேபி" என்றுவிட்டு அவன் இறங்க, அவர்களுடன் செழியன் மதுவும் இணைந்து கொண்டனர்..

கடல் அருகில் வரும் வரை நால்வரும் பொது விஷயங்கள் தான் பேசிக்கொண்டே வந்தனர்..

இரவு கவிழ தொடங்கி இருந்த நேரம் அது..

அழகாய் வீசிய தென்றல் காற்றும், கடல் அலையின் ஓசையும், ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையும், அந்த இடத்தை அத்தனை ரம்மியமாக காட்டியது..

"யாருமே இல்லையே வர்மா?" என வெண்ணிலா கேட்க,

"இது பிரைவேட் ஏரியா பேபி.. நமக்கு மட்டும் ஸ்பெஷல்.." என்றான் பகலவன்.

கடல் அருகில் அவர்கள் நெருங்கிய போது, அங்கு ஒரு அழகிய போட் ஒன்று நின்றிருந்தது..

செழியனும் மதுவும் பின் தங்கிவிட, வெண்ணிலாவை மட்டும் அழைத்து கொண்டு அதன் அருகில் வந்தான் பகலவன்..

"ஏறு பேபி" என அவன் கூற, அப்போது தான் அவர்கள் தங்களுடன் வராததை கவனித்தவள், "அவங்க..?" என்றாள் குழப்பத்துடன்.

"நோ பேபி.. நாம் மட்டும் தான் போகிறோம்.. கொஞ்ச நேரத்தில் வந்து விடலாம்.. ஏறு.." என பகலவன் கூற, அவளுக்கு ஏதோ உறுத்தியது..

"இல்லை அவர்களும் வரட்டுமே" என தயக்கத்துடன் வெண்ணிலா கூற,

"என் மேல் நம்பிக்கை இல்லையா?" என்றான் பகலவன்..
இறுகிவிட்ட குரலில் அவன் கேட்டாலும், அப்போதும் உடனடியாக சம்மதிக்க மனம் வராமல் அவள் தயங்கினாள்..

"பேபி ஏறு.. உன்னை எதுவும் செய்ய மாட்டேன்.. அப்படியே நான் ஏதாவது தவறாக நடந்துவிடுவேன் என்று பயம் இருந்தால், இந்தா இதை பிடி.." என தன் கோர்டில் இருந்த கன்னை எடுத்து கொடுத்தவன்,

"என்னை சுட்டு கொன்னுடு.. தற்காப்புக்காக கொன்றால் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.." என அவள் கையில் துப்பாக்கியை திணிக்க, முதல் முறை அத்தனை அருகில் கன்னை பார்த்ததே அவளுக்கு நடுங்கி விட்டது..

"கடவுளே..! பிடிங்க வர்மா.." என மீண்டும் அவள் அவன் கையிலேயே கன்னை கொடுக்க, அதை வாங்காமல் கையை இழுத்துக்கொண்டவன்,

"நான் உன்னை ரேப் பண்ணிட்டா என்ன பண்ணுவ பேபி? வச்சுக்கோ.. தேவைப்படும்.." என்றான் அவன் விடாமல்.

அப்போது தான் அவன் முகத்தையே பார்த்தவளுக்கு, அது பெரும் கோபத்துடன் இறுகி இருப்பதே தெரிந்தது..

அவள் பயந்தது வேறு எதற்க்கோ! அவனோ தவறாக அல்லவா புரிந்துகொண்டு, கோபப்பட்டு கொண்டிருக்கிறான்..

"ப்ச் வர்மா, உங்களை நம்பாமல் இருக்கும் அளவு நான் முட்டாள் இல்லை.. இதை முதலில் பிடிங்க.. பயமா இருக்கு.." என்றவள் குரலில் உண்மையான பயத்தை உணர்ந்தவன், அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியாமல் அதை வாங்கிக்கொண்டான்.

"ஏறுகிறாயா பேபி.. ப்ளீஸ்.." கோபத்தை மூட்டைகட்டி விட்டு அவன் தன்மையாகவே கேட்க, உள்ளுக்குள் படபடத்தாலும் மேலும் மறுத்து அவனை ஒரேடியாக சோதிக்க மனம் வராமல் அவளும் ஏறிவிட்டாள்.

பகலவனும் வெண்ணிலாவும் ஏறியதும் போட் கிளம்பிவிட, செழியனும் மதுவும் கடற்கரையிலே அமர்ந்து விட்டனர்..

அவர்களுடன் வந்த பாடி கார்ட்ஸ் சற்றே தள்ளி கார் அருகில் நின்றிருந்தனர்..

மணலில் மது அமர, அவள் அருகில் செழியனும் அமர்ந்து கொண்டான்..

"கடைசியா ஒரு நான்கு வருடம் முன்பு இது போல் வந்திருப்போமா மது! எத்தனை அழகான நாட்கள்.. உன் மடியில் படுத்துக்கவா மது?"

அன்றைய அழகிய நாட்களின் நினைவில் அவன் ஆசையாக கேட்க, "ம்ஹ்ம்" என மெதுவாக மறுத்தவள் கண்களும் கலங்கி தான் இருந்தது.

"இன்னும் எத்தனை நாட்களுக்கு எனக்கு இந்த தண்டனை? செய்யாத தப்புக்கு இன்னும் எத்தனை நாட்கள் நான் தண்டனை அனுபவிப்பது டி.." ஒருவித சலிப்புடன் செழியன் கேட்க, அவனை வேதனையுடன் பார்த்தாள் மாதங்கி.

"உங்களை யாரு தண்டனை அனுபவிக்க சொன்னது செழியா? நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழுங்க.. அது தான் எனக்கும் சந்தோசம்.."

"உனக்கு மட்டும் சந்தோசம்னு சொல்லு டி.. என்னை ஏன் கூட்டு சேர்க்கிறாய்? எப்போ டா நான் உன் வாழ்க்கையில் இருந்து போவேன் என்று காத்துக்கொண்டே இருக்கிறாய் தானே! பாரு, ஒரு நாள் மொத்தமா செத்து போக போறேன்.. அப்போ தான் உனக்கும் நிம்மதி.. எனக்கும் விடுதலை.." கோபத்துடன் கத்திகொண்டே எழுந்து நின்றுவிட்டான் செழியன்.

அவனும் எத்தனை வருடம் தான் பொறுமையாக இருப்பது.

அவள் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து தான், என்றேனும் ஒரு நாள் தானாக மனம் இறங்குவாள் என்று காத்திருந்தான்.

அவளோ ஒரே வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறி கொண்டிருந்ததில், அவன் பொறுமை கரைந்து தான் போனது.

என்றுமே அவன் கோபத்தை தாங்கும் சக்தி மதுவிற்கு இருந்ததில்லை..

அதனால் மட்டும் தான் இத்தனை நாள் பொறுமையாக இருந்தான்..

இன்றோ அவளே அந்த பொறுமையின் எல்லையை கடந்துவிட்டாள்..

அவன் எழுந்ததும் வேகமாக தானும் எழுந்தவள், "இப்படி பேசாதீங்க செழியா" என அழுதுகொண்டே கூற, அவள் புறம் திரும்பியவன், "இப்போதே அழுது முடித்துவிடாதே மது.. கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள்.. என்றானாலும் பொய்யாகவாது என் பிணத்தின் முன் அழ தேவைப்படும்.." கடுப்புடன் அவன் கூற,

"ஐயோ திரும்ப திரும்ப இப்படி பேசாதீங்களேன் செழியா.. என்னால் தாங்க முடியவில்லையே.." என அவனை அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள் மாதங்கி.

எது எதையோ நினைத்து அழ ஆரம்பித்தவள் அழுகை ஒரு முடிவிற்க்கு வர வெகு நேரமானது..

ஏதோ கோபத்தில் கத்திக்கொண்டிருந்த செழியன் தான், அவளை சாமாதானப்படுத்த பாடாத பாடு பட்டு போனான்..

"சாரி டி.. அழாதே ப்ளீஸ்.. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் மது மா.. மன்னிச்சுடு டி.. அழாதே ப்ளீஸ் டா.." என அவன் மீண்டும் மீண்டும் கெஞ்சியது எதுவுமே அவள் அழுகையை அத்தனை சீக்கிரம் நிறுத்தவில்லை..

கடைசியில் அவன் தான் வெகுவாய் தவித்து போனான்..

*****************

போட் நடு கடலுக்கு வரும் வரை பகலவனும் வெண்ணிலாவும் எதுவும் பேசி கொள்ளவில்லை..

சுற்றிலும் மெல்லிய சாம்பல் நிற இருட்டு, கடல் காற்று, கப்பல் பயணம், கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை நீர் சூழ்ந்த உலகம், எல்லாவற்றிற்கும் மேல் தங்கள் உயிரானவர்களின் அருகில் அமர்ந்திருப்பது என அந்த சூழலில் இருவருக்குமே ஒன்றும் பேச தோன்றவில்லை.

நடுக்கடல் வரை வந்ததும் போட்டை நிறுத்த சொல்லிவிட்டு வெண்ணிலாவிடம் வந்த பகலவன், "அப்படி நிற்போம் வா பேபி" என அவளை அழைத்து கொண்டு வந்து ஒரு பக்கம் நின்று கொண்டான்.

காற்றில் முடி பறக்க அதை ஒதுக்கிவிட்டு கொண்டே வெண்ணிலா கடலை ரசிக்க, அவள் செய்கையை தனதாக்கி கொண்டு அவள் முடி காற்றை மென்மையாக ஒதுக்கிவிட்டான் பகலவன்..

அவன் செயலில் அவள் அவன் புறம் திரும்ப, "நேற்று நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவா பேபி?" என்றான் பகலவன் அவள் கண்களை பார்த்து கொண்டே.

எதை சொல்கிறான் என்று யோசித்தவளுக்கு நொடியில் மனோகர் விஷயம் என நினைவு வந்தது..

"ம்ம்" என்று மட்டும் அவள் கூற, அவனும் கைகளை கட்டி சாய்ந்து நின்றுகொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

"நான் நினைத்திருந்தால் நிச்சியம் முதலிலேயே மனோகரை வேறு வழியில் பிடித்திருப்பேன் தான் பேபி.. ஆனால் உன்னை பார்த்ததும் எல்லாம் மாறி விட்டது.." ஒரு நொடி நிறுத்தியவன் அவள் முகம் அதிர்ச்சியுடன் விரிவதை பார்த்து மெலிதாக புன்னகைத்து கொண்டே தொடர்ந்து கூறினான்.

"எஸ் பேபி.. உன்னை முதல் முதலில் பீச்சில் அவனுடன் பார்த்த போதே எனக்குள் ஒரு சலனம்.. உன் மென்மையான அழகோ, கண்ணியமோ ஏதோ ஒன்று என்னை ஈர்த்து விட்டது... இரண்டாம் முறை ஆசிரமத்தில் பார்த்த போது அந்த சலனம் அதிகரித்து தான் போனது.. முக்கியமா மனோகர் தவறானவன் என்று தெரிந்த்து பின், எப்படியாவது உன்னை அவனிடம் இருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்தேன்.. அதே நேரம் உன்னை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று என் மனம் ஒரே அடம்.. அதான் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து மனோகரை சாக்காக வைத்து உன்னை கடத்திட்டேன்.. முதலில் நீ மனோகருக்கு சப்போர்ட் பண்ணவும் நீயும் எல்லாம் தெரிந்து அவனை போல் பணத்திற்கு ஆசைப்படுகிறாய் என்று நினைத்துவிட்டேன்.. அதில் கண்மூடித்தனமான கோபம்.. என் மனதை பாதித்த பெண் தவறாக போய்விட்டாலோ என்ற எண்ணம், என்னை அதிகம் யோசிக்க விடவில்லை பேபி.. இப்போதும் சொல்கிறேன், நான் செய்து தவறுகளுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு.." பேசிக்கொண்டே அவள் கைகளை பிடித்துக்கொண்டவன்,

"உனக்கு உணவு கொடுக்காத இரண்டு நாளும் நானும் சாப்பிடவில்லை பேபி.. அன்று உனக்கு தோசை வார்த்து கொடுத்த போது தான் நானும் சாப்பிட்டேன்.. உன்னை இருளில் விட்டுவிட்டு என்ன செய்கிறாயோ என்ற பதட்டத்தில் தான் உன் அறை வாசலில் நடந்து கொண்டிருந்தேன் பேபி.. அதுவே உன்னை பயமுறுத்தும் என்று நினைக்கவே இல்லை டா.. அன்று தான் எனக்கு கண் திறப்பு.. அன்று நீ பேசியதை காது கொடுத்து கேட்டபின் தான் உன் மனம் புரிந்தது.. எஸ் பேபி, ஐ லவ் யு...! என்னை கல்யாணம் பண்ணிக்கறயா பேபி? எனக்கு காலம் முழுக்க உன்னுடன் இருக்கனும்.. இந்த பகலவனை கட்டி இழுக்கும் சக்தி கொண்ட ஒரே குளிர் நிலவு நீ தான் பேபி.. ஐ நீட் யு.."

தன் கைகளுக்குள் இருந்த அவள் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்து கொண்டு மென்மையாக தன் காதலை கூறினான் பகலவன்..

பகலவன் காதலை கூறுவான் என்று வெண்ணிலா ஓரளவு எதிர்பார்த்தாள் தான்..

அதற்கு பயந்து தான் அவள் வர மறுத்ததும்..

ஆனால் மொத்தமாக எல்லாமே அவளுக்காக தான் செய்திருப்பான் என்பது அவள் சுத்தமாக எதிர்பார்க்காதது.

"முதல் முறை பார்த்த போதேவா வர்மா?" ஏதோ ஆர்வத்தில் அவள் கேட்டுவிட,

"எஸ் பேபி" என்றான் அவன் சிறு புன்னகையுடன்.

அவன் பதிலிலும் புன்னகையிலும் ஒருவாறு சுயநினைவுக்கு மீண்டவளுக்கு, அப்போது தான் மனம் விழித்துக்கொண்டது..

அவன் கைகளில் இருந்து தன் கையை அவள் மெதுவாக உருக, அவளை முகம் சுருங்க பார்த்துக்கொண்டே அவள் கையை விடுவித்தான் பகலவன்..

"உனக்கும் என்னை பிடிக்கும் இல்லையா பேபி?"

அவள் முகத்தில் இருந்தே ஏதோ தவறாக யோசிக்கிறாள் என்று புரிந்தே அவன் கேட்க, அவன் பயந்தது போல் தான் பதிலும் கிடைத்தது..

"எனக்கு உங்களை பிடிப்பது இருக்கட்டும் வர்மா.. ஒரு கொலைகாரனையோ, அரசியல்வாதியையோ கல்யாணம் பண்ணும் தைரியம் எனக்கில்லை.. என்னால் பகலவனுடன் பயந்து பயந்து வாழ முடியாது.. நான் பிடித்திருக்கிறதா என்று யோசிக்கவே நீங்கள் வெறும் வர்மனாக தான் இருக்க வேண்டும்.. முடியுமா..?"

நடக்க வாய்ப்பே இல்லை என்று அவளுக்கு தெரியும் தான்.. இருந்தும் ஒரு நப்பாசையில் தான் கேட்டாள்..

அவள் மனம் அவனுக்கும் ஓரளவு தெரியும் என்பதால், அவன் ஒன்றும் பெரிதாக அதிர்ந்து விடவில்லை..

"அதாவது நீ என்னை விரும்பவே இல்லை.. அப்படி தானே?" மற்றைய அனைத்தும் விட்டுவிட்டு அவன் காதலை மட்டுமே பிடித்து கொண்டான்..

அவளோ அதன் பக்கமே வர தயாராக இல்லை..

"நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லுங்க வர்மா.. நான் ஒரு வக்கீல்.. என்னால் எப்படி ஒரு கொலைகாரனை நியாயப்படுத்த முடியும்?"

"அதற்காக தவறு செய்பவர்களை கொஞ்ச சொல்கிறாயா பேபி?"

வேறு வழி இல்லாமல் அவன் தான் அவள் வழிக்கு வந்தான்..

"அதற்கு தான் போலீஸ் சட்டம் என்று இருக்கு வர்மா.. அவங்க பார்த்துப்பாங்க.. இந்த அரசியில் வேண்டாமே வர்மா.. நிம்மதியா வாழவே முடியாது.."

அவனுக்கு புரியவைக்க முடியுமா என்று தான் அவள் முயற்சித்தாள்.. அவள் மனம் புரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை..

அதே நேரம் அவளை விட்டுக்கொடுக்கவும் அவனால் முடியும் என்று தோன்றவில்லை..

மெதுவாக அவள் அருகில் வந்தவன், அவளை நெருங்கி நின்று அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டான்..

"நீ என்னை விரும்புகிறாய் பேபி.. எனக்கு நல்லாவே தெரியும்.. நான் எந்த தவறும் செய்வதில்லை பேபி.. மற்றபடி என் புற வாழ்க்கை நம் வாழ்க்கையை நிச்சியம் பாதிக்காது.. அதை விட்டுவிட்டு நம்மை பற்றி மட்டும் யோசிக்க கூடாதா?" மென்மையாக அவன் பேசியதில் இளகிய மனதை பிடித்துவைப்பது அவளுக்கு பெரும் பாடாக இருந்தது.

பட்டென கையை உருவிக்கொண்டு திரும்பிவிட்டவள், "முடியாது வர்மா.. நான் உங்களை விரும்பவுமில்லை.. அதை பற்றி யோசிக்கவும் முடியாது.. போலாம்.." என முடிப்பது போல் கூற, அவள் மனதை தெளிவாக படித்தவனோ அதை மாற்றும் வழி தெரியாது தவித்து போனான்.

"பேபி இதை எல்லாம் என்னால் விட முடியாது.. அரசியல் என் ரத்தத்தில் ஊறி போனது.. அதை விட்டால் பகலவன் என்னும் தனி மனிதனே இல்லாமல் போவான் பேபி.. அதற்காக உன்னையும் என்னால் விட முடியாது.. நீ எனக்கு வேண்டும் பேபி.. என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது டி.. மனோகர் விஷயத்தை லேட்டா சொன்னது கூட உன்னுடன் இருக்கும் ஆசையில் தான்.. இரண்டு கண்ணில் ஒன்றை இழந்தாலும் குருடு தான் பேபி.. என்னை வாழ்நாள் குருடனாக்காதே டி.. ப்ளீஸ்.."

ஊருக்கே சிம்மசொப்பனமாக இருக்கும் பகலவன் என்னும் மாமனிதன், காதலுக்காக தன்னிலை இறங்கி அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான்..

அவளுக்கும் புரிந்ததோ என்னவோ! அவள் கண்களும் கலங்கி போயிற்று..

"என்னை தர்மசங்கட படுத்தறீங்க வர்மா.. வேண்டாம்.. என்னால் முடியவில்லை.." மிகவும் போராடி அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் பேசுவது அவனுக்கும் புரிந்தது.

"என் மேல் நம்பிக்கை இல்லையா பேபி?" கடைசியாக இறுக்கமாக அவன் கேட்க, திரும்பி அவன் முகம் பார்த்தவள், "என்னால் முடியவில்லை வர்மா" என்றாள் மீண்டும்.

அவளுக்கு தான் அவன் நிலை புரியவில்லை.. அவனுக்கு அவள் நிலை நன்றாகவே புரிந்தது.

ஒரு முறை ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டவன், "போலாம் பேபி.. நீ நாளை உன் வீட்டுக்கு போகலாம்.. போ...போட்டை திருப்ப சொல்கிறேன்.."

அவனுக்கும் தொண்டை அடைத்தது போல்..! அதிகம் நிற்காமல் நகர்ந்து விட்டான்.

போட் எடுத்த பின்பும் அவளிடம் வராமல் அவன் வேறு மூலையில் நின்றுவிட, அவளும் அவன் விட்டு சென்ற இடத்திலேயே நின்றிருந்தாள்..

கைகளை கட்டிக்கொண்டு இருள் வானை வெறித்துகொண்டு அமைதியாக பகலவன் நின்றிருக்க, வெண்ணிலாவோ தன் அனுமதி இல்லாமல் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே மற்றைய பக்கம் நின்றிருந்தாள்.

வந்த போதிருந்த இதமான மனநிலை சுத்தமாக மறைந்தே இருவரும் வந்து சேர்ந்தனர்..

போட்டில் இருந்து முதலில் இறங்கிய பகலவன், அவளுக்கு உதவியாக அமைதியாக கை நீட்ட, அவளும் அவன் கைகளை பிடித்துக்கொண்டு இறங்கினாள்..

இருவரும் செழியன் இருந்த இடத்தை நோக்கி வர, அதற்குள் மதுவை சமாதானம் செய்து முடித்து தேத்தி இருந்தான் செழியன்..

இவர்கள் வருவதை பார்த்ததும், "பகலவன் வரான் மது மா" என செழியன் கூற, அவளும் அவன் மார்பில் இருந்து விலகி, கண்களை துடைத்து கொண்டாள்..

"வா மது மா" என அவளையும் அழைத்து கொண்டு பகலவனை நோக்கி நடந்தவன், தற்செயலாக பகலவன் பின்னால் பார்க்க, அங்கே இருந்த பழைய போட் பின்னால் யாரோ ஒருவன் மறைந்திருப்பது போல் தெரிந்தது..

சந்தேகம் வந்ததும் அதை உறுதி செய்துகொள்ள அவன் உற்று பார்க்க, அவன் பயந்தது போலவே போட்டிற்கு பின்னால் இருந்தவனை கூர்ந்து பார்த்ததில், அவன் கையில் துப்பாக்கியை எடுத்தது தெரிய, அவன் பகலவனை தான் குறி பார்க்கிறான் என புரிந்த நொடி, வேகமாக பகலவன் நோக்கு ஓடினான் செழியன்.

"பகலவா நகரு டா" என கத்திகொண்டே அவனை பிடித்து செழியன் தள்ளிவிட, பகலவன் முதுகிற்கு குறி வைத்து அவன் சுட்ட குண்டு, செழியன் மேல் பாய்ந்திருந்தது..

கண் இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட செயலில், சுட்டவன் பயந்து அங்கிருந்து ஒரு பக்கம் ஓட முயற்சிக்க, நொடியில் நடந்ததை கணித்து அவன் காலில் தன் கன்னால் சுட்டுவிட்ட பகலவன், அடுத்த நொடி செழியனிடம் ஓடி விட்டான்..

மண்ணில் விழுந்திருந்த செழியனின் உடலில் இருந்து வெளியேறி கொண்டிருந்த ரத்தத்தை பார்த்ததும், "அண்ணா....." என பயத்துடன் அவன் அலறியது அந்த இருள் வேளையில் பயங்கரமாக எதிரொலித்தது..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16:

பகலவன் ஒரு பக்கம் செழியனிடம் செல்ல, அதற்குள் பாடி கார்ட்ஸும் அங்கு விரைந்து வந்திருந்தனர்..

சிலர் சுட வந்தவனை பிடிக்க, இருவர் பகலவனிடம் ஓடி வந்தனர்..

"அண்ணா.. அண்ணா.." என பகலவன் செழியனை எழுப்ப முயன்று கொண்டிருக்க, செழியனோ முழுதாக மயங்காமல் வலியுடன் போராடி கொண்டிருந்தான்.

வெண்ணிலா ஒரு பக்கம் பெரும் பதட்டத்துடன் நிற்க, மதுவோ, "செழியா..." என அழுதுகொண்டே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

"சார் தூக்குங்க சார்.. ஹாஸ்பிடல் போகலாம்.." என ஒருவன் கூற பகலவனுக்கும் அப்போது தான் மூளையே வேலை செய்தது..

மூன்று ஆண்கள் சேர்ந்து செழியனை தூக்க, பெண்களும் அவர்களை வேகமாக தொடர்ந்தனர்..

தன் காரில் பகலவன் செழியனை பின்னால் படுக்க வைக்க, மது அவனை மடியில் தாங்கி கொண்டாள்..

"அவனை நம்ம கஸ்டெடியில் வைங்க" என வேகமாக கூறியவன், வெண்ணிலாவும் ஏறியதும் காரை எடுத்தான்.

மது மடியில் படுத்திருந்த செழியனும் முழுதாக மயங்கி இருக்கவில்லை..

விடமால் தன்னை பார்த்து அழுதுகொண்டிருந்தவள் கண்களை மெதுவாக துடைத்துவிட்டவன், "எனக்கு கரி நாக்கு போல் மது மா, இன்றே நடந்துவிடும் என்று நினைக்கவே இல்லை.. இனியாவது நிம்மதியாக இரு.." மெதுவாக அவன் கூற,

"செழியா.." என கதறிவிட்டாள் மது.

"உங்களுக்கு ஒன்னும் ஆகாது செழியா.. நா.. நானும் உங்களுடனே வந்துடுவேன்.." அழுகையினூடே அவள் புலம்ப, அதில் மெலிதாக சிரித்துக்கொண்ட செழியன்,

"கடைசியில் சொர்க்கத்தில் தான் சேரனும் போல்" என கூறிக்கொண்டே கண்ணை மூடிக்கொண்டான்.

அவனால் வலி தாங்க முடியவில்லை தான்..

வலியை முழுதாக காண்பித்துக்கொண்டாள் மது தாங்கமாட்டாளே என்று தான் அவன் பல்லை கடித்து பொறுத்து கொண்டிருந்தான்..

வெண்ணிலாவிற்கும் இருவரும் பேசுவதை பார்த்து கஷ்டமாக தான் இருந்தது..

அவள் சமாதானம் சொல்லலாம் என திரும்பிய நொடி, அதை உணர்ந்து அவள் கையை பிடித்தான் பகலவன்..

அவன் செயலில் அவள் அவனை பார்க்க, 'பேசாதே' என்பது போல் மறுப்பாக தலையசைத்தான் அவன்..

இந்த அக்னி பரீட்சை வலியை முழுதாக மது அனுபவிக்க வேண்டும் என்று அவனுக்கு புரிந்தது..

அது மட்டும் தான் அவள் மனதை மாற்றும்..

மருத்துவமனையில் செழியனை சேர்த்த பின்பும் மது ஒரு பக்கம் அழுதுகொண்டு அமர்ந்திருக்க, வெண்ணிலா தான் அவளுக்கு ஆறுதலாக அமர்ந்திருந்தாள்..

கையில் தான் குண்டு பாய்ந்திருந்தாதால், ஆபரேஷன் செய்து எடுத்துவிடலாம், ஒன்றும் பயம் இல்லை என்று மருத்துவர் கூறிய பின்பும், மதுவின் அழுகை ஒன்றும் குறையவில்லை..

செழியனை ஆபரேஷன் தியேட்டர் கொண்டு போய் விட, பகலவனும் ஒரு பக்கம் போனுடன் நகர்ந்து விட்டான்..

சுட்டது யாரென்று விசாரிக்க சென்றவனுக்கு, அவன் ஆகாஷின் தந்தை அனுப்பிய ஆள் என்று தெரிந்தது..

ஆகாஷ் கடைசியாக பகலவனை பார்க்க வந்ததை எப்படியோ கண்டுபிடித்திருந்தவர், அவன் மகனை உயிருடன் விட்டிருக்க மாட்டான் என்று யூகித்திருந்தார்..

அடையாளம் தெரியாமல் கிடைத்த பிணம் அவர் மகன் தான் என்று சில நாட்கள் முன்பு தான் தெரிய வந்ததில் தான், பகலவனை கொல்ல முயன்றிருக்கிறார்..

செழியனை சுட்டவனை கொன்றுவிட கூறிவிட்டவன், அதே நேரம் ஆகாஷ் தந்தையின் தொழிலை முழுதாக அழிக்கவும் அப்போதே ஏற்பாடு செய்துவிட்டான்..

எல்லாம் முடித்துவிட்டு அவன் வந்த போது, இன்னுமும் மது அழுதுகொண்டு தான் அமர்ந்திருந்தாள்..

"அழாதீங்க அக்கா.. அண்ணாக்கு ஒன்னும் ஆகாது.." என வெண்ணிலா சமாதானம் கூறிக்கொண்டிருக்க, இருவரையும் பார்த்த பகலவனுக்கு ஏனோ கோபம் தான் வந்தது..

"இப்போ ஏன் டி இப்படி அழுதுகொண்டிக்கிறாய்? அவர் நல்லா இருந்தபோது அவரை கொஞ்சமாவது மதித்தாயா? உங்களுக்கெல்லாம் செத்தால் தான் புரியுமா?" எரிச்சலுடன் பகலவன் காய,

"ஏன் டா நீயும் அவரை மாதிரியே பேசற" என தாங்கமாட்டாமல் அவன் தோளில் சாய்ந்து அழுதாள் மாதங்கி.

அவள் தன்னிடமே ஆறுதல் தேடவும், அவனால் கோபத்தை பிடித்துவைத்துக்கொள்ள முடியவில்லை..

அவன் கண்களும் கலங்கி தான் போயிற்று..

"இனியாவது உன் வரட்டு பிடிவாதத்தை விட்டுவிடு மது.. அண்ணா பாவம்.. இனியும் நீ அடம் பிடித்தால் நானே உன்னை மன்னிக்க மாட்டேன்.." அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"இல்லை டா.. இல்லை.. நான் அவரை விட்டு எங்கும் போக மாட்டேன்.. மன்னிச்சுடு டா.." குழந்தை போல் வேகமாக கூறியவளை, மென்மையாக அணைத்துக்கொண்டவன்,

"சரி.. சரி.. அழாதே.. அண்ணாக்கு ஒன்றும் இல்லை டி.. அமைதியா இரு.." என அவளை சமாதானம் செய்தான்.

சிறிது நேரத்தில் ஆபரேஷன் முடிந்து, "செழியனை போய் பார்க்கலாம்" என மருத்துவர் கூறிவிட்டு போக,

"வா பகலவா" என்று கூறிக்கொண்டே எழுந்தாள் மது.

அவள் எழுந்த பின்பும் தான் எழுந்துகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தவன், "நான் வரவில்லை மது" என்று இறுக்கமாக கூற, அவனை புரியாமல் பார்த்தாள் மது.

"நீ போ டி.. பெரிய தியாகினு நினைப்பு.. குறுக்கே வரார்.. ஒரு குரல் கொடுத்தா பத்தாதா! ஏதாவது ஆகி இருந்தால் நான் குற்ற உணர்வில் சாகவா!" எரிச்சலுடன் பகலவன் பேசியதில் தான், அவன் கோபமாக இருக்கிறான் என்றே மதுவிற்கு புரிந்தது..

"கோபப்படாதே பகலவா" என மெதுவாக மது கூற,

"ஒரு மண்ணும் வேண்டாம்.. போ டி.." என்றான் அவன் எரிச்சலுடன்..

அவன் கோபம் புரிந்து மதுவும் அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.

செழியனோ முதல் விஷயமாக பகலவனை தான் கேட்டான்.

"என் மேல் கோபமாக இருக்கானா மது?" என செழியன் கேட்க,

"ஆமா செழியா.. வர மாட்டேன் என்றுவிட்டான்.." என்றாள் மது.

அதல் மெல்லிதாக சிரித்துக்கொண்டவன், "பெரிய கோபம்! அதிகபட்சமா ஒரு மணி நேரத்திற்குள் வந்துவிடுவான்.." என்றான் அவன் தம்பியை நன்கு உணர்ந்தவனாய்.

அதில் மதுவும் மெலிதாக சிரித்து கொண்டே, அவன் கையை பிடித்துக்கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள்..

"என்ன மா! இன்னும் சாகாமல் இருக்கானே என்று ரொம்பவும் அழுதிருப்பாய் போலையே!"

அவன் வேண்டுமென்றே வம்பிழுக்க, அவனை முறைத்தவள், "பேசாமல் ரெஸ்ட் எடுங்க செழியா.. என்னிடம் அடி வாங்காதீங்க.." என்றாள் கோபம் போல்.

"இனியாவது என்னை ஏற்றுக்கொள்வாயா மது மா?" ஏக்கத்துடன் கேட்டவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவள், அவன் கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தாள்.

"சாரி செழியா.. இனி சத்தியமா எதற்காகவும் உங்களை பிரிய மாட்டேன்.. நிம்மதியா தூங்குங்க.." மென்மையாக அவள் கூற, அவனும் நிம்மதியுடன் கண் மூடி கொண்டான்..

புரிதலுடனான அழகான காதல் அவர்களுடையது.

அங்கும் என்றுமே அதிகம் வார்த்தைகள் தேவைப்பட்டதில்லை..

மனவேதனையில் ஒதுங்கி போன பெண்ணவளையும் அவனின் உயிர் காதல் மீண்டும் இழுத்து தான் வந்து விட்டது..

ஒரு நாளில் முடிய கூடிய பந்தமில்லையே இது...!

விவரம் தெரிந்த வயதில் இருந்து ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருக்கின்றனர்..

இப்போது யோசித்தால் அவன் தன்னை விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்த்ததே பெரும் முட்டாள் தனமாக தான் மதுவிற்கு தோன்றியது..

வெளியில் இருந்த பகலவனோ இன்னுமும் கோபம் குறையாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்..

அவன் அருகில் வந்து அமர்ந்த வெண்ணிலா, "ஏன் இத்தனை கோபம் வர்மா? பாவம் அவர்.. உங்களை எதிர்பார்ப்பார் தானே..!" என மெதுவாக கூற, அவளை நிமிர்ந்து பார்த்தவன் முகம் மேலும் இறுகி தான் போயிற்று.

"கோபம் தான் பேபி.. அவரை யார் குறுக்கே வர சொன்னது! ஏதாவது ஆகி இருந்தால் மதுவிற்கு யார் பதில் சொல்வது.. நான் செத்து தொலைத்தால் என்ன? எனக்காக அழ கூட யாரு இருக்கா? யாரும் இல்லாத அனாதை தானே நான்.. மனதார விரும்பும் நீயும் இல்லை என்று ஆகிவிட்டது.. நிம்மதியாக செத்திருப்பேன்.. தேவை இல்லாமல் கெடுத்துட்டார்.. முதலில் இவரை வெளியில் கூட்டிப்போவதை நிறுத்தணும்.. முடிந்தால் அவருக்கும் மதுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து வெளியூர் எங்காவது அனுப்பிடனும்.. ம்ஹ்ம், வாழ தான் கொடுத்துவைக்கவில்லை என்றால், சாவும் கொடுத்துவைக்கவில்லை போல்..! ப்ச் இன்னும் எத்தனை நாளைக்கு? பாதுகாப்பில்லாமல் நாலு முறை வெளியே போனால் போதும்.. எவனாவது கொன்னுருவான்.. நிம்மதியா போய் சேரலாம்.."

சலிப்புடன் கூறிக்கொண்டே அவன் சாய்ந்து அமர, வெண்ணிலாவால் தான் அவன் வார்த்தைகளை தாங்கவே முடியவில்லை..

"ஏன் இப்படி பேசறீங்க வர்மா? நீங்க நல்லா இருக்கணும்.." கலங்கிய குரலில் கூறியவளை சாய்ந்த வாக்கிலேயே திரும்பி பார்த்தவன்,

"இருந்து என்ன பேபி கிழிக்க போகிறேன்? நீ இல்லாமல் வாழ வேண்டும்.. ப்ச் என்னால் முடியும் தோன்றவில்லை.."

தான் பேச பேச அவள் முகம் மேலும் கலங்குவதை பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது..

அதற்கு மேல் அங்கு உட்கார முடியாமல் எழுந்துவிட்டவன், அமைதியாக சற்று தள்ளி நின்றுவிட்டான்..

அவள் காதலை மறுத்த வேதனை, அவனுக்காக செழியன் உயிரை பணயம் வைத்தது, எல்லாம் சேர்ந்து அவனை ரொம்பவும் பலவீனமாக்கி இருந்தது..

எப்படிப்பட்டவனையும் கோழையாக்கி வேடிக்கை பார்க்கும் அருமை காதலுக்கு மட்டும் தான் உண்டு போலும்..!

பகலவன் பேசிவிட்டு போனதும் உறைந்து போய் அமர்ந்திருந்த வெண்ணிலாவிற்குமே, அப்போது தான் ஒரு விஷயம் அப்பட்டமாக புரிந்தது..

அவனுக்கு ஏதாவது ஆனால் அவளால் தாங்க முடியுமா! கண்டிப்பாக முடியாதே!

அடுத்த நிமிடம் நிச்சியம் இல்லாத வாழ்க்கை..

இதில் அவனை முழுதாக இழப்பதா!

அதே நேரம் அவன் தவறுகளுக்கும் துணை போக முடியாதே..!

அவள் நியாயம் அவளுக்கு..

சிறிது நேரம் தீவிரமாக யோசித்தவள், அழுத்தமாக ஒரு முடிவெடுத்திருந்தாள்..

தான் எடுக்கும் முடிவு சரியா தவறா என்று கூட அவளுக்கு தெரியவில்லை..

அதே நேரம் இது பகலவனை மாற்றுமா என்றும் அவளுக்கு உறுதியாக தெரியவில்லை..

ஆனால் நிச்சியம் அதற்குள் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து விட முடியும்..

அது கண்டிப்பாக வேண்டுமென இந்த நொடி அவளுக்கு உறுதியாக தோன்றிவிட்டது..

மெதுவாக எழுந்து பகலவன் அருகில் சென்றவள், "வர்மா" என மெதுவாக அழைக்க, அதுவரை ஏதோ நினைவில் நின்றிருந்தவன், "சொல்லு பேபி" என்றுகொண்டே திரும்பினான்.

அவன் அழைப்பும் அதில் இருந்த மென்மையும் அவளுக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது..

எப்படி இவனால் முடிகிறது? அவன் காதலை அவள் மறுத்திருக்கிறாள்.. அவள் இல்லாத வாழ்க்கையை, அவன் வெறுக்கும் அளவு தள்ளி இருக்கிறாள்.

ஆனாலும் அவள் மேல் அவன் காட்டும் அன்பு குறையவே இல்லையே..!

அடுத்து நொடி எதுவும் யோசிக்காமல் அவனை அணைத்து விட்டாள் வெண்ணிலா..

அவள் செயலில் அவன் தான் பதறி விட்டான்..

"ஹேய் பேபி என்ன பண்ணுற..?" என அவன் விலக முயல,

"என்னை தள்ளிடுவீங்களா வர்மா?" என்றாள் அவள் நகராமல்.

அவனால் எப்படி முடியும்..!

"என்ன செய்து கொண்டிருக்கிறாய் பேபி?" சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டே அவன் கேட்க,

"லவ் பண்ணுறேன்" என்றாள் அவள் சிறு புன்னகையுடன்.

"ப்ச் விளையாடாதே பேபி.. ஏதோ டென்ஷனில் பேசிட்டேன்.. அதற்காக நீ பாரிதாபப்பட வேண்டாம்.. நகரு பேபி.." தானாக அவளை விலக்க மனம் வாராமல் போக, அவளிடம் கெஞ்சினான் பகலன்..

அவன் கூற்றில் அவனை நிமிர்ந்து பார்த்தவள், "என்னை பார்த்தால் பரிதாபப்படுவது போல தெரிகிறதா வர்மா?" என அவன் கண்களை பார்த்து அவள் கேட்க, அவள் பார்வையில் அவன் கண்களும் கட்டுண்டு போனது..

"தெரியலை பேபி.. என் கண்களுக்கு காதலாக தான் தெரிகிறது.. முன்பும் அப்படி தான் தெரிந்தது.. எனக்கு தீ காயம் பட்ட போது, நான் கொடுக்கும் உணவை நீ சாப்பிடும் போது, இரவு பாட்டு கேட்கும் போது, இப்படி எல்லா நேரத்திலும் என் மீதான உன் காதலை நான் பார்த்திருக்கேன் பேபி.. அதை நம்பி தானே என் காதலை சொன்னேன்.. ஆனால் உன் மனம்...?"

மீதியை நீதான் சொல்ல வேண்டும் என்பது போல் நிறுத்தினான் பகலவன்..

"எல்லாமே உண்மை தான் வர்மா.. நான் உங்களை விரும்பறேன் தான்.. உங்களுடன் வாழனும் என்று ஆசையா இருக்கு.. எந்த கேள்வியும் கேட்காமல் என்னை ஏத்துப்பீங்களா?"

அவள் வார்த்தைகளில் ஏதோ மறைபொருள் இருக்கோ என அவனுக்கு தோன்றியது..

"பேபி நான்..." என அவன் தொடங்க,

"எதுவும் வேண்டாம் வர்மா.. எனக்கு உங்களை பிடிக்கும்.. உண்மையை சொல்ல போனால் முதல் முறை பார்த்ததில் இருந்தே பிடிக்கும்.. அன்று ஆசிரமத்தில் உங்களை பார்த்தேனே, அன்றே நிறைய முறை உங்களை பார்த்து கொண்டிருந்தேன்.. மரத்தில் சாய்ந்து நின்றிருந்தீங்களே, அப்போதே ஏதோ ஈர்ப்பு.. வேறு யாரும் என்னை கடத்தி இருந்தால் இத்தனை தைரியமா இருந்திருப்பேனா தெரியவில்லை வர்மா.. ஆனால் உங்களிடம் ஏதோ நம்பிக்கை.. அது கடைசி வரை வீண் போகவேயில்லை.. ஒரு கட்டத்தில் அந்த நம்பிக்கை காதலா மாறிடுச்சு வர்மா.. என்னை அப்படியே உங்களால் ஏத்துக்க முடியாதா..?"

அவள் சொல்ல சொல்ல அவனுக்கே பெரும் பிரமிப்பாக தான் இருந்தது..

அவளுக்கு அவனை பிடிக்கும் என்று அவனுக்கு தெரியும் தான்.. ஆனால் முதலில் இருந்தே விரும்பி இருப்பாள் என்பது அவன் சுத்தமாக எதிர்பார்க்காதது..

எல்லாவற்றையும் மீறி அவள் திடீர் மாற்றம் அவனுக்கு உறுத்த தான் செய்தது..

"பேபி ஒரே நிமிடத்தில் உன் தடங்கல் எல்லாம் என்ன ஆனது?" யோசனையுடன் அவன் கேட்க,

"என்னவோ ஆனது வர்மா.. அதை கேட்டுக்கொண்டே இருக்க போறீங்களா? இல்லை என் காதலை ஏத்துக்க போறீங்களா?"
அவள் பதில் அவன் உறுத்தலை அதிகம் தான் படுத்தியது..

அவன் முகம் சுருங்கியே இருக்க, அதில் அவனை முறைத்தவள், "வேண்டாட்டி போங்க.. நான் தனியாவே வாழ்ந்துக்கறேன்.." என்றுவிட்டு அவள் திரும்பி நின்று விட, அவளை யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான் பகலவன்..

"பேபி" என அவளை பிடித்து திருப்பியவன், "எனக்கு என்னவோ பயமா இருக்கு டி" என மனதை மறைக்காமல் கூற, அவளுக்கும் உள்ளுக்குள் வலிக்க தான் செய்தது..

ஆனால் எதிர்காலத்தை நினைத்து இப்போதைய மகிழ்ச்சியை கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை..

அடுத்த நொடி மீண்டும் அவனை அணைத்துக்கொண்டவள், "இப்போ பயம் போச்சா மிஸ்டர் வர்மன்?" என கண்சிமிட்டி கேட்க, அவள் அழகில் தன்னை தொலைத்தவன், இந்த முறை தானும் அவளை அணைத்துக்கொண்டான்..

"நீ இப்படியே இருப்பதானால் பயமே வராது பேபி.." என மெதுவாக அவன் அவள் காதருகில் கூற,

"இருந்துட்டா போச்சு" என்றவள் மேலும் அவனுடன் ஒன்றிக்கொண்டாள்.

அவன் குழப்பங்களுக்கு விடையே கிடைக்கவில்லை தான்..

ஆனால் என்றேனும் ஒரு நாள் வெளியில் வந்து தானே ஆக வேண்டும், அப்போது பார்த்துக்கலாம் என நினைத்தவன், இப்போது அவளை படுத்த மனம் வராமல், அந்த நேரத்து இனிமையை அனுபவித்து கொண்டான்..

பாவம் அவள் மனம் தெரிந்திருந்தால், நிச்சியம் சந்தோசப்பட்டிருக்க மாட்டான்..

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17:

செழியன் எதிர்பார்த்தது போலவே அடுத்த முறை செழியன் விழித்த போது, பகலவன் அவனை பார்க்க வந்துவிட்டான்..

உள்ளே வந்த பின்பும் அவன் விடாமல் முறைக்க, "போதும் டா.. சும்மா முறைக்காதே.." என்றான் செழியன் சிரித்து கொண்டே.

"ப்ச் உங்களை முறைக்காமல் என்ன செய்ய? அறிவில்லையா ண்ணா! ஒரு குரல் கொடுத்தால் நான் கவனித்திருக்க மாட்டேனா? உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தால் நான் என்ன செய்வேன்?" மனம் கேட்காமல் அவன் புலம்ப, அவன் கைகளை மென்மையாக பிடித்துக்கொண்ட செழியன்,

"எனக்கு ஆபத்தென்றால் நீயும் இதை தான் டா செய்திருப்பாய்.. அந்த நேரத்தில் எதுவும் யோசிக்க தோணலை பகலவா.." என்றான்.

அதை அவனும் ஒத்துக்கொள்ள தான் வேண்டி இருந்தது.. அவனும் யோசித்திருக்க மாட்டான் தான்..

"இனி ஒரு முறை இப்படி பண்ணாதீங்க அண்ணா.. நம் இருவரில் யாருக்கு ஆபத்து வந்தாலும் ஒன்று தான்.. உங்க உயிரை கொடுத்து நீங்க காப்பாற்றினால், நிச்சியம் என்னால் நிம்மதியா வாழ முடியாது.. குற்ற உணர்வே என்னையும் கொன்று விடும்.." அழுத்தமாக கூறினான் பகலவன்.

"விடு டா.. நாம் என்று கவனக்குறையா இருந்திருக்கோம்! எல்லாம் காதல் படுத்தும் பாடு.." விளையாட்டாக செழியன் கூறியதில், பகலவனும் சிரித்துக்கொண்டான்..

மருந்தின் வீரியத்தில் செழியன் உறங்கிவிட, பெண்களிடம் வந்தான் பகலவன்..

"ரெண்டு பேரும் கிளம்புங்க.. காப்பகத்தில் விட்டுறேன்.. நைட் இங்கே இருக்க வேண்டாம்.. காலையில் வந்து கூட்டிட்டு வரேன்.." என பகலவன் கூற,

"நான் அவருடன் இருக்கேன் பகலவா" என்றாள் மாதங்கி.

"நடு இரவு ஆகிப்போச்சு மது.. மூணு பேரும் இங்கே இருக்க முடியாது.. நான் அண்ணாவுடன் இருக்கேன்.. அவர் தூங்கிட்டார்.. இனி காலையில் தான் எழுந்துப்பார்.. உன்னவர் கண்விழிக்கும் போது நீ இங்கே இருக்கலாம்.. இப்போ கிளம்பு.. பேபி நீயும் மதுவுடன் இரு.. தனியா இருக்க வேண்டாம்.." என அவன் முடித்துவிட, அதற்கு மேல் அவனை எதிர்க்க முடியாமல் இருவரும் அவனுடன் கிளம்பினர்..

இருவரையும் காப்பகத்தில் இறக்கிவிட்டவன், "காலையில் வரேன்" என்றுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டான்.

உள்ளே வந்து படுத்த இரு பெண்களுக்குமே மன உளைச்சலில் தூக்கமே வரவில்லை..

"இந்த பகலவன் எதற்கெடுத்தாலும் அடம்.. ப்ச் நான் அவருடனே இருந்திருப்பேன்.." என மது புலம்ப,

"அவர் ஏதாவது காரணத்தோடு தான் சொல்லி இருப்பார் கா" என்றாள் வெண்ணிலா.

"அது உண்மை தான்.. ஆனாலும் எனக்கு பதறுதே.." மனம் கேட்காமல் மது புலம்ப, அவளை ஆச்சர்யமாக பார்த்த வெண்ணிலா,

"இத்தனை அன்பை வைத்துக்கொண்டு ஏன் கா அண்ணாவை பிரிஞ்சீங்க?" என்றாள்

"சொல்ல கூடாதுனா சொல்ல வேண்டாம் கா" அவர்கள் பர்சனல் விஷயத்தில் தலையிடுகிறோமோ என்ற பயத்தில் சேர்த்தே தான் வெண்ணிலா கூறினாள்.

"உனக்கு தெரியாமல் இனி என்ன டா பர்சனல்..! சொல்கிறேன்.." என்றவள் எதுவும் மறைக்காமல் கூறவும் செய்தாள்.

"நானும் செழியனும் சின்ன வயதில் இருந்து ஒன்றாக தான் டா வளர்ந்தோம்.. எங்கள் நட்பு இயல்பாகவே ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்து விட்டது.. இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு உயிர்.. ஐயாவிடம் சொன்ன போது, சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று அவரும் சந்தோஷமாகவே சொன்னார்.. எல்லாம் நன்றாக தான் போயிற்று.. அந்த ஒரு நாள் வரும் வரை.. அன்று..." பேசிக்கொண்டே வந்தவளுக்கு மீண்டும் அந்த நாளின் நினைவில் தொண்டை அடைத்துவிட்டது.

"அன்று நான் ஒரு ஆசிரமத்திற்கு உதவிக்கு போய்விட்டு வரும் போது லேட் ஆகிவிட்டது நிலா மா.. செழியன் கட்சி வேலையில் இருந்தார்.. அவர் அழைத்து போக வரேன் என்று சொன்னபோது, நான் தான் கேட்கவில்லை.. ஒரு ஆட்டோ பிடித்து வந்துவிடுவதாக அடமாக கூறிவிட்டேன்.. எதிர்க்கட்சி ஆட்கள் என்னை தொடர்ந்திருப்பார்கள் போல்..! எனக்கு தெரியாது.. ஐயாவை ஒழிக்க வேண்டும், அவரை மனதளவில் பலவீனமாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.. அதற்கு மாட்டிய பலியாடு நான்.."

ஒரு மாதிரி மூச்சுமுட்டுவது போல் அவள் நிறுத்த, "அக்கா விட்டுருங்க வேண்டாம்." என்றாள் வெண்ணிலா ஏதோ புரிந்தவளாய்.

அதற்குள் தானே தேறிக்கொண்ட மாதங்கி, "இல்லை நிலா மா.. முழுதா சொல்லிடறேன்.." என்றுவிட்டு தொடர்ந்தாள்.

"நான் வந்த ஆட்டோவை ஒருவன் வழிமறித்து, என்னை இழுத்து போய்..."

"அக்கா..." என வெண்ணிலா அதிச்சியுடன் அவளை பார்க்க,

"ஆமா டா.. என்னை பலவந்தப்படுத்தி என்னை மானபங்க படுத்திவிட்டான்.. கொல்லவும் நினைத்தான் போல்.. அதற்குள் என்னை தேடி செழியன் வந்துவிட்டார்.. அவர் தான் என்னை கண்டுபிடித்து, அவனையும் அடித்துபோட்டுவிட்டு என்னை மருத்துவமனையில் சேர்த்தார்.."

"அதற்கு மேல் எனக்கு எல்லாமே வெறுத்துவிட்டது நிலா மா.. எதுவுமே பிடிக்கவில்லை.. சாக தோணலை.. ஆனால் வாழவும் பிடிக்கவில்லை.. பகலவன் இதற்கு காரணமான ஒருத்தரையும் விடாமல் தேடி தேடி கொன்றான்.. உண்மையை சொல்லப்போனால் அந்த சம்பவத்திற்கு பின் தான் அவன் இரக்கமே இல்லாமல் மாறிவிட்டான்.. நானும் செழியனும் கூட இத்தனை கோபம் வேண்டாம் என்று சொல்லி பார்த்தோம்.. அவன் கேட்பதே இல்லை.. ஐயாவுக்கும் இந்த கவலையிலேயே உடம்பு மோசமாகி விட்டது.. எனக்கு ஒரேடியாக எதுவும் பிடிக்காமல் போனதில், நான் தான் இந்த ஆசிரமம் வைத்துக்கொடுக்க சொன்னேன்.. பகலவனும் ஏற்பாடு செய்துகொடுத்தான்.. நான் செழியனுக்கு வேண்டாம் என்று தோன்றியது நிலா மா.. என்னவோ உடம்பெல்லாம் கூசி போயிற்று.. ஒரேடியாக மறுத்தால் அவர் விட்டுவிடுவார் என்று நினைத்தேன்.. முட்டாள் தனம் என்று இப்போது தான் புரியுது.."

"அண்ணா உங்களை ரொம்ப விரும்பறார் கா.." மெதுவாக வெண்ணிலா கூற,

"ம்ம் தெரியும் டா" என்றாள் மாதங்கியும் சிறு புன்னகையுடன்.

"எவனோ செய்த தவறுக்கு நீங்கள் இருவரும் ஏன் கா வாழ்க்கையை இழக்கணும்? சந்தோசமா வாழ்ந்து காட்டுங்க கா.." ஒருவித தீவிரத்துடன் வெண்ணிலா கூற, அதில் அவள் தலை கோதி மெலிதாக சிரித்த மாதங்கி,

"வாழதாண்டா போறேன்.. இனியும் என் செழியவனை கஷ்டப்படுத்த நான் தயாராக இல்லை.. அவர் தலையெழுத்து நான் தான் போல்.." விளையாட்டாக அவள் கூற, இரு பெண்களும் சிரித்துக்கொண்டனர்..

மாதங்கியிடம் பேசிவிட்டு படுத்த வெண்ணிலாவிற்கு, இப்போது தன்னவனின் எல்லையில்லா கோபத்திற்கான காரணமும் புரிந்தது..

*******************

செழியனை டிஸ்சார்ஜ் செய்யும் வரை பகலவனும் மதுவும் தான் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்..

தான் ஒழுங்காக வீட்டிற்கு வரும் வரை வெண்ணிலாவை காப்பகத்திலேயே இருக்க சொன்னான் பகலவன்.

"நான் உங்கள் வீட்டில் இருக்க கூடாதா?" வீராப்பாக அவள் கேட்க,

"நான் அதிகம் வீட்டில் இருக்க முடியாது பேபி.. அதான் உன்னை இங்கே விடறேன்.. நான் இல்லாமல் நீ அங்கே இருக்க வேண்டாம் டா.. நல்லா இருக்காது.." என்றான் அவன் மென்மையாக.

"இத்தனை நாள் நல்லா இருந்தது, திடீரென்று ஏன் நல்லா இல்லாமல் போச்சு?"

"ப்ச் பேபி, வீம்புக்கு பேச கூடாது.. நான் கடத்தி வைத்திருக்கும் பெண்ணுக்கும், நான் காதலிக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கு.."

"அப்போ முதலில் இருந்தே காதலித்ததா சொன்னதெல்லாம் பொய்யா..?"

வாயில் கை வைத்துக்கொண்டு அவள் கேட்க, வலிக்காமல் அவள் தலையில் கொட்டியவன், "உன்னை விட்டுவிட மனசே வரவில்லை பேபி.. ஆனால் இப்போது யோசித்தால் சரியா வரும் என்று தோன்றவில்லை.. ஒழுங்கா இங்கே இரு.. அண்ணாவை டிஸ்சார்ஜ் செய்ததும் உன் விஷயத்திற்கு வருவோம்.." என்றுவிட்டான் பகலவன்.

*****************

அன்று செழியனை டிஸ்சார்ஜ் செய்துவிட, அவனுடன் மதுவும் வீட்டிற்கு வந்திருந்தாள்..

செழியன் அறை வரை உடன் வந்த பகலவன், "நீங்க ரெஸ்ட் எடுங்க ண்ணா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு வந்து மதுவை கூட்டிட்டு போறேன்.." என்றுவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்றுவிட்டான்.

கட்டிலில் வாகாய் அமர்ந்து கொண்டு செழியன் கை நீட்ட, மதுவும் மறுக்காமல் அவன் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.

"மது மா நம் கல்யாணத்துக்கு அப்புறம் காப்பகத்தை பார்த்துக்க யாரையாவது ஏற்பாடு பண்ணனும் இல்லையா? உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"

"ம்ம் நானும் யோசிச்சேன் செழியா.. யாரோ ஒருத்தர் கையில் கொடுக்க முடியாது.. நம் காப்பகத்திலேயே ஆரம்பத்தில் இருந்து என்னுடன் எல்லா பொறுப்பும் பார்த்துக்கொள்ளும் ராஜம் அம்மா இருக்காங்களே! அவர்களிடமே கொடுத்துவிடலாமா என்று பார்க்கிறேன்.. நானும் பகலில் போய் இருந்துகொள்வேன்.. மற்றபடி இப்போது தான் பகலவன் பாதுகாப்பிற்கு வேறு நிறைய பேர் போட்டுட்டானே.. ஒன்றும் பிரச்சனை இல்லை.."

"நீ அங்கேயே இருப்பேன் என்று அடம் பிடிப்பாய் என்று நினைத்தேன் மது மா"

அவள் காதுமடலில் கோலம் போட்டுக்கொண்டே அவன் பேச, அவன் கையை பட்டென தட்டிவிட்டு அவன் மார்பில் சாய்ந்துகொண்டவள், "எனக்கும் அப்படி சொல்ல தான் ஆசை செழியா.. ஆனால் உங்களால் பகலவனை விட்டு வர முடியாது இல்லையா? அதனால் நானே வரேன்.." என்றாள் தெளிவாக.

"எப்போதும் பெண்கள் தான் விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது இல்லையா? சாரி மது மா.." மென்மையாக அவன் கூற,

"நமக்குள் என்ன செழியா ஆண் பெண் என்றெல்லாம்! உங்களை பற்றி எனக்கு தெரியாதா? பகலவன் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு எனக்கும் முக்கியம்.." என்றாள் மாதங்கி.

"இருவர் கல்யாணமும் ஒரே நேரத்தில் பண்ணிடலாம் இல்லையா செழியா?"

"இல்லை மது மா.. வெண்ணிலாவிற்கு ஏதோ ட்ரைனிங் இருக்காம்.. அதெல்லாம் முடிந்தபின் தான் அவர்கள் கல்யாணமாம்.. அது வரை நாம் காத்திருக்க கூடாதாம்.. உன் நண்பன் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. எனக்கு கசக்குமா என்ன?"

அவள் கன்னத்தில் இதழ் ஒற்றி அவன் கூற, "உங்கள் லொள்ளு அதிகமாகிகிட்டே போகுது.. ஒழுங்கா தூங்குங்க" என்று கூறிக்கொண்டே வேகமாக எழுந்துவிட்டாள் மாதங்கி.

அவளது சிவந்திருந்த முகத்தை பார்த்து மேலும் சிரித்துக்கொண்டவனும் அமைதியாக படுத்துவிட்டான்..

சிறிது நேரத்தில் வந்த பகலவன் மதுவை அழைத்து வந்து காப்பகத்தில் விட்டுவிட்டு, வெண்ணிலாவை தனியாக பேச அழைத்து வந்தான்..

"அண்ணா எப்படி இருக்காங்க வர்மா?" என அவள் கேட்டதற்கு,

"நல்லா இருக்கார் பேபி.. ஒன்றும் பிரச்சனை இல்லை.. இப்போது உன் விஷயம் பேச தான் வந்தேன்.. நான் சொல்வது சரி வருகிறதா பார்க்கிறாயா?" என்றான் பகலவன்.

"பார்க்கலாமே" என விளையாட்டாக கூறிக்கொண்டே அவள் மரத்தில் சாய்ந்து நின்று கொள்ள, அவனும் சிறு புன்னகையுடன் அவள் தலை கோதி விட்டு தொடர்ந்து பேசினான்..

"மும்பையில் உனக்கு ட்ரைனிங் கொடுப்பதாக இருந்த வக்கீலிடம் ட்ரைனிங் போகிறாயா பேபி? அவரிடம் உண்மையாகவே உனக்காக பேசி பெர்மிஷன் எல்லாம் வாங்கி விட்டேன்.. உன்னிடம் சொன்ன தேதி மட்டும் தான் பொய்.. இன்னும் ஒரு வாரத்தில் உண்மையாகவே நீ போவதாக தான் இருந்தது.. எதுவும் பிரச்சனை என்றால் அப்புறம் சொல்லிக்கொள்ளலாம் என அதை நான் மாற்றவே இல்லை.. போகிறாயா?"

"கடனை வசூலிக்க கடத்தும் பெண்ணுக்கு யாராவது இத்தனை பண்ணுவாங்களா? நீங்க என்ன மேக் வர்மா?" ஆச்சர்யமும் கிண்டலுமாக அவள் கேட்க,

"நீ உண்மையாகவே மனோகரை விரும்பி இருந்தால் கூட இதை நான் செய்திருப்பேன் பேபி.. உனக்கு புரிய வைப்பது மட்டும் தான் என் நோக்கம்.. மற்றபடி உனக்கு என் மேல் காதல் வராவிட்டால், உன்னை காட்டாயப்படுத்தி இருக்க மாட்டேன் டா.." தெளிவாக கூறியவனை போலியாக முறைத்தவள்,

"அப்போ துறைக்கு எஸ்கேப் ஆகும் பிளான்னும் இருந்ததா? நான் இல்லாவிட்டால் வேறு நல்ல பெண்ணாக பார்த்து சைட் அடித்திருக்கலாம் என்று தோணுதோ?" இடுப்பில் கைவைத்து கொண்டு உண்மையான கோபத்துடன் அவள் கேட்க, அவள் முகத்தை அழுத்தமாக பிடித்து தன் புறம் நிமிர்த்தினான் பகலவன்.

"என்னை பற்றி என்ன நினைத்தாய் பேபி? என் மனதை பாதித்த ஒரே பெண், முதல் பெண் நீ தான்.. நீ இல்லாவிட்டாலும் கடைசி பெண்ணும் நீயாக தான் இருந்திருப்பாய்.."

எந்த குறும்பும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாக அவன் கூறியதில், அவள் மனமும் நெகிழ்ந்து தான் போயிற்று..

"அத்தனை காதலா..?" காற்றுக்கே வலிக்கும் குரலில் அவள் கேட்க, சுற்றிலும் ஒரு முறை பார்த்து கொண்டு மேலும் அவளை நெருங்கியவன்,

"என்ன செய்தால் டி நம்புவாய்..? உயிரை கொடுத்து நிரூபிக்க கூட நான் தயார் தான்.. உனக்கு ஓகே வா..?" என்றான் மேலும் அழுத்தமாக.

அவன் வார்த்தைகளில் பதறி வேகமாக அவன் வாயை மூடியவள், "உங்கள் உயிரை கொடுத்தால் தான் ஆச்சா? உங்கள் மூலமாக எனக்குள் ஒரு உயிரை கொடுத்து கூட நிரூபிக்கலாம் மிஸ்டர் வர்மா.." என கூறிவைக்க,

"அடிப்பாவி" என அலறி விலகிவிட்டான் பகலவன்.

அவன் நகர்ந்ததும் அவள் சத்தமாக சிரிக்க, "என் பேபி ரொம்ப கெட்ட பெண்ணா ஆகிட்டிங்க" என அவள் காதை திருகினான் பகலவன்.

"வலிக்குது வர்மா" என அவள் சிணுங்கியதில் விட்டுவிட்டவன், "முதலில் கேட்ட கேள்விக்கே பதில் வரவில்லை.. மற்ற எல்லா லொள்ளும் செய்கிறாய்.. மும்பை போகிறாய் தானே?" முதல் கேள்வியில் அவன் வந்து நிற்க,

"உங்களுக்கும் மும்பையில் ஏதோ வேலை இருக்கிறது என்று சொன்னீங்களே! நீங்களும் வருவதனால் போறேன்.." என்றாள் அவள்.

"எனக்கு அவசர வேலை இல்லையே பேபி.."

"என்னுடன் வர மாட்டிங்களா?"

"நீ ட்ரைனிக் போகிறாய் டி.. அதை கவனிக்க வேண்டாமா..?"

"உங்களையும் கவனித்து அதையும் கவனிக்க என்னால் முடியும்.. நீங்க வரீங்களா இல்லையா?"

"இப்போது எதற்கு இந்த அடம் பேபி..?"

மனதில் தோன்றிய இனம் புரியாத பயத்துடன் அவன் கேட்க, "உங்களுடன் இருக்கணும் வர்மா.. அவ்வளவு தான்.. என்னுடன் இருக்கனும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?" வேதனையுடன் அவள் கேட்டதில், அவன் மனம் உருகி போயிற்று.

"எனக்கு ஆசை இல்லாமல் இருக்குமா பேபி? நீ ட்ரைனிங் முடிச்சுட்டு வா டி.. கல்யாணம் பண்ணிக்கலாம்.." பொறுமையாக அவன் கூறியதில் அவள் முகம் ஒரு மாதிரி மாறி போயிற்று..

சட்டென சுதாரித்து கொண்டவள், "எப்படியும் உங்களுக்கும் வேலை இருக்கு தானே! வாங்களேன்.. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு மூணு இல்லை நாலு மாசம்.. ஓடியே போய்டும்.. ப்ளீஸ் வர்மா.." அவன் சட்டை பட்டனை திருகி கொண்டே அவள் கெஞ்ச, அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை..

"சரி பேபி.. போவோம்.. அதுவரை இங்கேயே இரு.. அடுத்த முகூர்தத்திலேயே செழியன் அண்ணா கல்யாணமும் வைத்துவிடலாம் என்றிருக்கிறேன்.. அதை முடித்துவிட்டு கிளம்புவோம்.. உன் வீட்டில் என்ன சொல்ல போகிறாய்?”

"அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம் வர்மா.. நான் மும்பையில் இருப்பதாகவே இருக்கட்டும்.. மனோகர் பற்றி மட்டும் எச்சரித்து விடுகிறேன்.." என்று முடித்துவிட்டாள் வெண்ணிலா..

குளிரும்.

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18:



அடுத்த நான்கு நாட்களில் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடும் செய்துவிட்டான் பகலவன்..



செழியன் மது இருவரும் பெரிய அளவில் எதுவும் வேண்டாம், கோவிலில் சிம்பிளாக செய்தால் போதும் என்று கட்டாயமாக கூறி விட்டனர்.



ஒரு வரவேற்பாவது வைத்தே தீருவேன் என அடம் பிடித்து பகலவன் தான் அவர்களை சம்மதிக்க வைத்திருந்தான்..



திருமணத்தன்று மாலையே ரெசெப்ஷன் என முடிவு செய்திருந்தனர்..



பகலவன் வெண்ணிலாவுடன் மும்பை போக போவதையும் கூறி இருந்தான்..



"என்ன டா திருமணத்திற்கு முன்பே ஹனிமூனா?" என செழியன் கிண்டல் செய்த போது, சிறு வெட்கத்துடன் சிரித்துக்கொண்டவன்,



"பேபி ஆசைப்படுகிறாள்" என்று கூற,



"உனக்கு ஆசையே இல்லையாக்கும்?" என அதுக்கும் கிண்டல் செய்தான் செழியன்.



அனவைருக்கும் உடை எடுக்க நால்வரும் சேர்ந்து தான் சென்றனர்.



மதுவிற்கு என்று செழியன் எடுத்தது போக, தனியாக புடவை நகை என பகலவனும் எடுத்தான்..



"டேய் ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என மது கடுப்படிக்க,



"அப்படி தான் டி எடுப்போம்.. உன் வேலையை பாரு.." என அவளை அடக்கிவிட்டான் பகலவன்.



செழியன் மதுவிற்கு எடுத்ததும், மது ஆசிரமத்திற்கு தேவையானதை வாங்க சென்றுவிட, அடுத்து வெண்ணிலவை அழைத்து கொண்டு அவளுக்கு எடுக்க வந்தான் பகலவன்.



அவன் பாட்டிற்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என பார்க்க, "கொஞ்சம் கம்மியா பாருங்க வர்மா" என்றாள் அவள் சங்கடத்துடன்.



"மதுவிற்கு சொன்னது தான் உனக்கும் பேபி.. அமைதியா தேர்ந்தெடுக்கும் வேலையை மட்டும் பார்" என அவன் மிரட்ட, வேண்டுமென்றே பக்கத்து செக்ஷினில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் புடவையை எடுத்தவள்,



"எனக்கு இது தான் பிடிச்சிருக்கு" என்றாள் வீம்பு போல்.



அவள் கொடுத்த புடவையை அமைதியாக வாங்கியவன், "இதை பில் போடுங்க" என்று கொடுத்துவிட்டு, குழப்பத்துடன் தன்னை பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா பக்கம் திரும்பினான்.



"ரைட் பேபி.. உனக்கு பிடித்ததை எடுத்தாச்சு.. இனி என் பேபிக்கு நான் எடுப்பதை நீ தடுக்க கூடாது.. அமைதியா நில்லு.." என்று கூறி கண்ணடிக்க, அவள் தான் இப்போது 'ஆ' என்று விழித்தாள்..



அவள் விழிப்பதை பொருட்படுத்தாமல் ஒன்றிரண்டு புடவைகளை அவள் மேல் வைத்து பார்த்தவன், பிங்க் நிறத்தில் வெள்ளை கற்கள் பதித்திருந்த ஒரு அழகான புடவையை தேர்ந்தெடுத்தான்.



"பிடிச்சிருக்கா பேபி" என அவன் கேட்க,



"பிடிக்கலை போங்க" என்றாள் அவள் வீம்புடன்.



அதில் சிரித்துக்கொண்டவன், "தட்ஸ் ஓகே பேபி.. எனக்கு பிடிச்சிருக்கு.. எனக்காக கட்டிக்கோ.." என்றுவிட்டு அதையும் பில்லுக்கு அனுப்பிவிட்டான்.



"நீங்க என்னை மதிக்கவே மாட்டேங்கறீங்க வர்மா" என அவள் குறைபட்டு கொண்டே வர,



"இதில் நான் மதித்தால், நீ பார்க்கும் சங்கடத்தை நான் மதிப்பது போல் ஆகிவிடும் பேபி.. அப்புறம் என் காதலுக்கு என்ன அர்த்தம்? சோ நோ மரியாதை.."



அவன் குரலில் இருந்து அவன் விளையாட்டாக பேசுகிறானா சீரியஸாக பேசுகிறானா என்றே புரியாமல் போக, அவளுக்கு அதற்கு மேல் பேசும் தைரியம் வரவில்லை.



நகைகள் அவனே மெலிதாக இரண்டு மட்டுமே எடுக்க, அவளுக்கு நிம்மதியாக போயிற்று..



ஒரு பக்கம் ஆசிரமத்திற்கு வாங்க வேண்டியது முடிந்ததும் மதுவை சுடிதார் இருந்த பக்கம் அழைத்து சென்றான் செழியன்.



"எனக்காக எடுத்துக்கொள்வாயா மது மா?" என அவன் கேட்க, இந்த முறை அவளும் மறுக்கவில்லை..



"நீங்களே எடுங்க செழியா" என்றுவிட்டாள்.



கடல்நீல நிறத்தில், வெகு அழகாய் இருந்த ஒரு காட்டன் அனார்கலி சுடிதார் அவனுக்கு மிகவும் பிடித்துவிட, "இதை போட்டு வருகிறாயா மது மா?" என்றான் செழியன்.



அவளும் மறுக்காமல் வாங்கி சென்று அணிந்து வந்தாள்..



சில வருடங்கள் முன்பு தான் பார்த்த மதுவாக நொடியில் மாறி வந்தவளை பார்த்தவனுக்கு, ஒரு நொடி மகிழ்ச்சியில் கண்கள் கூட கலங்கி விட்டது.



அவளை அமைதியாக அழைத்து வந்து அங்கிருந்த ஆளுயர கண்ணாடி முன் நிறுத்தி வைத்தவன், "என் மது டி" என கண்ணாடியை காட்ட, அவனை நெகிழ்வுடன் பார்த்தவள்,



"உங்கள் மது தான் செழியா.. எப்போதுமே உங்கள் மது தான்.." என்றாள் அவன் புறம் திரும்பி.



மேலும் நான்கைந்து சுடிதார் அவன் வாங்கிய போது, அவள் தடுக்கவில்லை.



அவன் ஆசைக்காக உடையும் மாற்றாமல் அந்த சுடிதாருடனே கிளம்பினாள்.



அவளை அப்படி பார்த்த பகலவனுமே ஒரு நொடி அதிர்ந்து தான் விட்டான்.



அவனுக்கும் அவளை முன்பு போல் பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி..



"என்ன ண்ணா மதுவை அழைத்துபோய்விட்டு, அவள் தங்கையை கூட்டிட்டு வர்றீங்களே! மது எங்கே..?" என்று பகலவன் கிண்டல் செய்ய,



"அது ஓல்ட் பீஸ் டா.. இவள் நியூ பீஸ்.. அதான் பிக்கப் பண்ணிட்டேன்.." என்றான் செழியனும் கிண்டலாக.



"நான் உங்களுக்கு ஓல்ட் பீசா..? இந்த ஓல்ட் பீஸ் பின்னாடி அலைஞ்சதெல்லாம் மறந்து போச்சா..? நான் டிரஸ் மாற்றுகிறேன் போங்க.." என மது நகர போக,



"ஐயோ இரு டி.. நீ செய்தாலும் செய்வாய்.. மன்னிச்சுடு தாயே..." என அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தான் செழியன்..



சிரிப்பும் கலகலப்புமாக நால்வரும் உணவையும் முடித்து கொண்டு தான் கிளம்பினர்.



திருமணத்திற்கு முந்தைய நாள் செழியனும் பகலவனும் கட்சி ஆபிசில் வேலையில் இருந்த போது, ஒரு முக்கிய பிரச்சனை பற்றி பேசினான் செழியன்..



"அந்த கெமிக்கல் பாக்டரி பற்றி விசாரிக்க சொல்லி இருந்தாய் இல்லையா பகலவா, அது பெரிய ஆபத்து தான்.. அதன் கழிவு காற்றிலும் நீரிலும் கலக்கும் போது, சுற்றி இருக்கும் மக்கள் உடல் நலத்தை கண்டிப்பா பாதிக்கும்.. அதுவும் அவன் ஊருக்கு நடுவில் இருக்கும் இடம் வேறு கேட்டிருக்கான்.. ஆள் வேறு கொஞ்சம் பெரிய ஆள்.. மற்ற தொழில்களில் கொடிகட்டி பார்ப்பவன்.. இப்போது இதில் கால் வைத்திருக்கிறான்.. செல்வாக்கு அதிகம்.."



"நாம் மறுத்தாலும் செய்வான் என்று சொல்றீங்களா?"



"வாய்ப்பிருக்கு பகலவா.." என்றான் செழியன்.



"இருக்கட்டும் ண்ணா.. இப்போதைக்கு அப்ரூவல் கொடுக்க முடியாது என்று மட்டும் சொல்லுங்க.. அடுத்த பிரச்சனை வரும் போது பார்த்துக்கலாம்.. ரொம்ப துள்ளினால் கையை காலை உடைத்து போட வேண்டியது தான்.."



"ப்ச் பகலவா! எதற்கெடுத்தாலும் வன்முறையா? நீ பேசாமல் ஊருக்கு கிளம்பு.. நான் பார்த்துக்கறேன்.." என்றான் செழியன்.



"அண்ணா எக்காரணம் கொண்டும் பாக்டரி வர கூடாது.. நிலை கைமீறி போனால், உடனே என்னிடம் சொல்லுங்க.." என பகலவன் கூற,



"சொல்லிவிடுவேன் டா முரடா" என செழியன் சிரித்துக்கொண்டே கூற, அதில் பகலவனும் சிரித்துவிட்டான்..



திருமண நாள் அழகாய் விடிந்தது..



இப்போதைய கட்சி தலைவர் தலைமையில், ஆசிரமத்தில் வேலை செய்பவர்கள், நெருங்கிய நண்பர்களுடன் மிக அழகாய் நடந்தது செழியன் மாதங்கி திருமணம்..



தாலி கட்டும் முன் செழியன் அவள் கண்களை ஒரு நொடி உற்று பார்க்க, அதில் அப்பட்டமாக தெரிந்த காதலில் பெரும் மகிழ்ச்சியுடன் அவள் கழுத்தில் மங்கள நாணை பூட்டி அவளை தன் சரி பாதியாக ஏற்று கொண்டான்..



மாலை வரவேற்பு பெரிய மண்டபத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தான் பகலவன்..



பெண்கள் இருவரும் அவரவர் இணைகள் தேர்ந்தெடுத்திருந்த புடவையை தான் கட்டிக்கொண்டிருந்தனர்..



செழியன் மேடையிலேயே வெட்கம் இல்லாமல் மனைவியை சைட் அடித்துக்கொண்டிருக்க, சற்றே கூட்டம் குறைந்திருந்த வேலையில் வெண்ணிலாவை தனியாக தள்ளி கொண்டு வந்தான் பகலவன்..



"என்ன பேபி இந்த புடவை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, இப்படி கட்டிக்கொண்டு ஆளை கொன்றால் என்ன செய்வதாம்..?"



ஒரு அறைக்குள் அவளை தள்ளிக்கொண்டு வந்திருந்தவன், அவளை கதவோடு சாற்றி கிறக்கமாக கேட்க, "என்ன செய்வது? நீங்க ஆசையா வாங்கிகொடுத்தீங்களே, பாவம் வருத்தப்படுவீங்களே என்று தான் கட்டிகொண்டேன்.. சுமாரா தான் இருக்கு.." என அப்போதும் முறுக்கி கொண்டாள் அவள்.



"ம்ம் ஒரு வார்த்தை கூட விட்டு கொடுக்காமல் பொய் சொல்லும் இந்த உதட்டை என்ன செய்யலாம்..?" அவள் இதழ்களை மென்மையாக வருடியபடியே அவன் கேட்க, அதில் சட்டென முகம் சிவந்து தலை குனிந்தாள் வெண்ணிலா.



"நிமிரு டி வாயாடி" என அவளை பிடித்து அழுத்தமாக நிமிர்த்தியவன், அவள் நெற்றியில் அழுத்தமாக தன் முதல் ஆச்சாரத்தை பதித்தான்.



"சீக்கிரம் உரிமையுடன் என்னிடம் வா பேபி.. இங்கே உன்னை வெளிப்படையாக சுற்ற கூட விட முடியவில்லை.. கஷ்டமா இருக்கு பேபி.." உண்மையான வேதனையுடன் கூறிக்கொண்டே அவன் பின்னால் நகர, அவனை இழுத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் வெண்ணிலா.



"என் பாதுகாப்பிற்காக தானே ஒதுங்கி இருக்க சொன்னீங்க வர்மா.. நீங்க எனக்கு நல்லது மட்டும் தான் செய்வீங்க.. இப்படி முகத்தை வைத்தால் பார்க்க சகிக்கவே இல்லை.. என்ன வைத்தியம் பண்ணலாம்?" தீவிரமாக அவள் யோசிக்க,



"என்ன வேண்டுமானாலும் செய்யலாம் பேபி.. நான் உன்னை போல் வெட்கமெல்லாம் பட மாட்டேன்.. கம் ஆன்.." என குனிந்து கன்னத்தை காண்பித்தான் அவன்.



அதில் செல்லமாக ஒரு அடி போட்டவள், தான் சாய்ந்திருந்த அவன் நெஞ்சில் மென்மையாக இதழ் பதித்தாள்.



"என் இடம்" என என்று கூறி அவள் சிரிக்க,



"உனக்கு மட்டுமேயான இடம் பேபி" என்றான் அவனும் அழுத்தமாக.



வெளியில் ஆள் நடமாட்டம் கேட்டதில், இருவருமே அதற்கு மேல் தனித்திருக்கமால் பிரிந்து சென்றுவிட்டனர்.



அன்று இரவு செழியன் அறையில் மெலிதாக முதலிரவு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.



ஆசிரம பெண்களும், வெண்ணிலாவும் தான் மாதங்கியை தயார் செய்து அனுப்பி வைத்தனர்.



ஒரு வித படபடப்புடன் அவள் அறைக்குள் வர, "பாரு டா! மதுவிற்கு வெட்கமா? ஐயோ என் வீர பெண் மதுவை காணுமே..! நான் போலீசில் கம்பளைண்ட் கொடுக்க போறேன்.." என அவள் வந்ததுமே வம்பிழுத்தான் செழியன்.



"ப்ச் சும்மா இருங்க செழியா.." இயல்பாக தன் படபடப்பு குறைந்து அவள் அவனை அடிக்க, அதை அமைதியாக வாங்கிகொண்டவன்,



"வந்து உட்காரு டி.. ஏதோ உன் மேல் நான் பாய்ந்து விட்டது போல் ரியாக்ஷன் கொடுத்துட்டு நிக்கற!" சாதாரணமாக கூறிக்கொண்டே அவன் அமர, அவளும் அவன் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்தாள்.



"ரிலாக்ஸா இரு மது மா.. உனக்கு என்று சம்மதமோ அன்று வாழுவோம்.. கடைசி வரை வெறும் நண்பர்களாக இருப்பதானாலும் எனக்கு ஓகே தான் டி.. இப்படி ஏதாவது செய்து என்னை அசிங்கப்படுத்தாதே.. படு.. தூங்குவோம்.." என்றவன் அதற்கு மேல் அமர்ந்திருக்காமல் சற்று தள்ளி படுத்தும் விட்டான்.



மாதங்கி தான் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்..



என்ன மாதிரி மனிதன் இவன்! என்று தான் அவளுக்கு முதலில் தோன்றியது.



கிட்டத்தட்ட விவரம் தெரிந்த வயதில் இருந்து அவளை காதலிக்கிறான்..



எத்தனை வருடம் ஓடி விட்டது..



இன்னுமும் எப்படி அவனால் ஒதுங்கி இருக்க முடிகிறது..!



இயல்பான உணர்வுகளை கூட அவளுக்காக கட்டுப்படுத்தி கொள்கிறான்.. அவளானால் சுயநலமாக தன்னை பற்றி மட்டுமே யோசித்து கொண்டிருக்கிறாள்..



"செழியா" என மெதுவாக அவள் அழைக்க,



"சொல்லு டா" என்றான் அவன்.



"எ.. எ.. எனக்கு ஒன்னு வேணும்" என அவள் மெதுவாக கூற,



"என்ன வேணும் என் மதுக்கு?" என்றான் அவன் அவளை கொஞ்சிக்கொண்டே.



"பத்து மாதத்தில் குட்டி செழியன் வேணும்" மெதுவாக அவள் கூறி முடிக்க, அவன் முகமோ சட்டென இறுகி போயிற்று.



"என்ன டி தியாகம் பண்ணுறயா? என்னை பார்த்தால் உடம்புக்கு அலைபவன் போல் தெரிகிறதா?" கோபத்துடன் கேட்டுக்கொண்டே அவன் எழுந்து அமர்ந்து விட, அவன் கோபத்தை ரசித்து கொண்டே அவன் மேல் சாய்ந்து கொண்டாள் மாதங்கி..



"ஏன் என்ன என்னவோ யோசிக்கிறீங்க செழியா? எனக்கு உங்களுடன் வாழனும் என்று ஆசை இருக்காதா? நம்மை போல் அழகாய் இரண்டு குழந்தை வேண்டும் என்று ஆசை இருக்கிறாதா? நடந்ததை நானே மறக்க நினைக்கிறேன் செழியா.. புரிஞ்சுக்கோங்க.." மெதுவாக அவள் கூற,



"அப்போ சிறிது நேரம் முன்பு உன்னிடம் காணப்பட்ட பதட்டம்?" என்றான் அவன் இப்போதும் முழுதாக தெளியாதவனாக.



"அது இயல்பா எல்லா பெண்களுக்கும் இருப்பது செழியா.. இந்த நேரத்தில் வெட்கமும் பதட்டமும் இல்லாவிட்டால் தான் அதிசயம்.."



"நிஜமா தான் சொல்கிறாயா மது மா?" லேசான குழப்பத்துடன் கேட்டவனை பார்த்தவளுக்கு மனம் பாகாய் உருகி போயிற்று..



"என் செழியா" என அவனை ஆசையாக அனைத்துக்கொண்டவள், அவளே அவன் இதழ்களை சிறை செய்து விட, அதற்கு மேல் எப்போது செழியன் அதை தன் செயல் ஆக்கிக்கொண்டான் என்று இருவருக்குமே தெரியாது..



மிக அழகாய் மலர்ந்தது அவர்கள் வாழ்க்கை..



******************


மறுநாள் மும்பை கிளம்புவதை பற்றி வெண்ணிலாவிடம் பகலவன் பேச போக, அவள் கூறிய கண்டிஷன்களை கேட்டு அவன் பெரிதாக அதிர்ந்து போனான்..


"விளையாடதே பேபி.. அதெல்லாம் முடியாது.." என அவன் திட்டவட்டமாக மறுக்க, அவளோ விடாமல்,


"நோ மிஸ்டர் வர்மன்.. நான் சொன்னதை நீங்கள் செய்தால் தான் வருவேன்.." என வீம்புடன் கூறி, அவனை மேலும் குழப்பி விட்டாள்...

குளிரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19:



பிளைட்டில் டிக்கெட் போடறேன் என்று கூற மட்டும் தான் பகலவன் வந்தது..



வெண்ணிலாவோ, "ட்ரைனில் போகலாம்" என்று கூற,



"எதுக்கு பேபி?" என்றான் அவன் புரியாமல்.



"பிளைட்டில் போனால் ஒரு மணி நேரம் தான்.. ட்ரெயின் என்றால் ஒரு நாள் முழுதா போகலாம் வர்மா.. ஜாலியா இருக்கும்.. பர்ஸ்ட் எ. சி யில் போடுங்க.. அங்கே தான் கூட்டம் இருக்காது.." தெளிவாக அவள் கூற, அதை அவன் மறுக்கவில்லை.



"சரி பேபி" என்றுவிட்டான்.



அடுத்து அவள் சொன்னது தான் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..



"அங்கே தங்க ஒரு வீடு பாருங்க வர்மா.. நானும் நீங்களும் மட்டும் தங்குவது போல் ஒரு ஒற்றை படுக்கையறை பிளாட் கூட போதும்.." சாதாரணமாக அவள் கூற,



"ஏய் என்ன உளறுகிறாய் பேபி..!" என்று கத்திவிட்டான் பகலவன்.



"என்ன உளறிவிட்டேனாம்..?" அவள் சிரித்துக்கொண்டே கேட்க,



"பின்னே இது உளறல் இல்லையா? உனக்கு ஏற்கனவே பி. ஜி எல்லாம் பார்த்தாச்சு.. நீ அங்கே தங்கு.. எனக்கு ஆபிஸ் ஸ்டாப்ஸ் தங்கும் ரூம்ஸ் இருக்கும்.. நான் அங்கே தங்கி கொள்வேன்.. அவ்வளவு தான்.." அவன் அழுத்தமாக முடிக்க,



"நோ மிஸ்டர் வர்மன்.. நான் சொன்னதை நீங்கள் செய்தால் தான் நான் வருவேன்.." என்றாள் அவளும் அவனுக்கு சளைக்காத அழுத்தத்துடன்.



அதில் அவன் குழப்பம் தான் அதிகமானது.



"ப்ச் என்ன பேபி? நாம் எப்படி இப்போது ஒரே வீட்டில் இருக்க முடியும்? நோ பேபி.. ரொம்ப தப்பாகிடும்.." மெதுவாக அவன் கூற,



"அதெல்லாம் ஒரு தப்பும் ஆகாது வர்மா.. உங்களுக்கு என்னுடன் இருக்க வேண்டாமா?" கெஞ்சலாக கேட்டவளை பார்த்தவனோ, 'இவளுக்கு எப்படி புரியவைப்பது' என்று தவித்து போனான்.



"பேபி உன்னுடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு என்னால் அடக்க ஒடுக்கமா இருக்க முடியாது டி.. கல்யாணம் வரை எந்த வம்பும் பண்ணாமல் கொஞ்சம் சும்மா இரேன்.." சலிப்புடன் கூறியவனை மேலும் நெருங்கி நின்றவள்,



"உங்களை யார் இப்போது அடக்க ஒடுக்கமா இருக்க சொன்னதாம்..? ரொம்பவும் நல்லவர் மாதிரி பேசறீங்க..!" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.



"இதில் நான் நல்லவன் தான் பேபி.." அவள் கண்களை பார்த்து அவன் கூற,



"காதலிக்கும் பெண்ணிடம் ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை வர்மா.." என்றாள் அவள் கண்ணடித்து.



"போ டி வாலு" என அவள் தலையில் கொட்டியவன்,



"வீடு வேண்டாமே பேபி" என கெஞ்ச,



"ம்ஹ்ம்.. வீடு தான் வேண்டும்.. நீங்கள் தான் வேண்டும்.. ஏற்பாடு பண்ணுங்க.." என அவள் திட்டவட்டமாக கூற,



"எப்படியோ போ.. ஏற்பாடு செய்கிறேன்.." சலித்துக்கொண்டாலும் வேறு வழி இல்லாமல் அவளுக்காக ஒத்துக்கொண்டான் பகலவன்..



அவள் கேட்ட எதையுமே அவனால் முழுதாக மறுத்துத்தொலைய முடியவில்லை..



மறுநாள் இரவு ட்ரைனில் இருவரும் கிளம்பினர்..



முதல் வகுப்பு என்பதால் அதிகமாக யாரும் இருக்கவில்லை..



அதிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருந்த சீட்டுகள் காலியாக தான் இருந்தது..



வெண்ணிலா ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் சென்று அமர்ந்தான் பகலவன்..



"சுத்த வேஸ்ட் வர்மா நீங்க.. இங்கே வாங்க.." என அவள் தனக்கு பக்கத்தில் தட்டி அழைக்க,



"நான் வேஸ்ட்டா? தேவை தான் டி.." என புலம்பிக்கொண்டவன், மறுக்காமல் அவள் அருகில் சென்றும் அமர்ந்துகொண்டான்..



அவன் அமர்ந்ததும் சற்றே தள்ளி அவன் மார்பில் சாய்ந்து கொண்டு வெண்ணிலா வேடிக்கை பார்க்க, அவன் கைகள் அனிச்சை செயலாய் அவளை சுற்றி வளைத்துக்கொண்டது..



"வீட்டில் மனோகர் பற்றி சொல்லிவிட்டயா பேபி?"



கல்யாண வேலையில் அதை மறந்திருந்தவன், இப்போது தான் நினைவு வந்து கேட்டான்.



"ம்ம் சொல்லிட்டேன் வர்மா.. அவன் நல்லவன் இல்லை, இப்போது தான் தெரியவந்தது, அவன் வந்தாலும் வீட்டுக்குள் விடாதீங்க என்று மட்டும் சொல்லி இருக்கேன்.."



"அவன் உன் வீட்டு பக்கம் வர மாட்டான் மூன் பேபி.. எதுக்கும் ஒரு பாதுகாப்பிற்க்கு சொல்லி வைப்பது நல்லது தான்.." என்றான் பகலவன்.



"உங்களை மீறி வந்துட்டாலும்..! ஆமா அவனை விட்டு வச்சிருக்கீங்க இல்ல..?" திடீரென முளைத்த சந்தேகத்துடன் அவள் நிமிர்ந்து பார்த்து கேட்க,



"அப்படி பார்க்காதே டி.. அவன் இப்போது கௌரவமாய் ஒரு கார் ஷெட்டில் கார் துடைக்கும் வேலை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்.. சந்தேகம் இருந்தால் கடை அட்ரஸ் தரேன்.. போய் பார்த்துக்கோ.." என்றான் அவன் அவசரமாக.



அவன் வேகத்தில் சிரித்துக்கொண்டவள், மீண்டும் முன்பு போலவே அவன் தோளில் முகம் புதைத்து கொண்டாள்..



"ஜன்னலை திறக்க முடிந்தால் நல்லா இருக்கும் வர்மா" என அவள் கூற,



"பாவி பேபி.. இது ஏ. சி கோச்.. நீ தானே கூட்டம் வேண்டாம் என்றாய்.." என்றான் அவன் அவள் தலையை கோதியவாரே.



"கூட்டம் தான் வேண்டாம் என்றேன்.. காத்து வேணுமே.. உங்கள் நிலைக்கு ஒரு ஸ்லீப்பர் கோச் முழுவதும் நீங்க புக் பண்ணி இருக்க வேண்டாமா? கஞ்சம் மாதிரி இரண்டே இரண்டு டிக்கெட் எடுத்திருக்கீங்க.."



"ம்ம் எல்லாம் இப்போ வந்து சொல்லு.. உன் போக்கே சரி இல்லை பேபி.."



"எல்லாம் சரியா தான் இருக்கு" என நொடித்துக்கொண்டவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது..



"காற்று தானே என் பேபிக்கு வேணும்.. வா.." என அவன் எழுந்துகொள்ள, அவளும் அவனுடன் எழுந்தாள்.



அவளை அழைத்துக்கொண்டு ஏ. சி கோச் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன், கதவருகில் சென்று நின்று அவளை உள்பக்கமாக நிறுத்தி கொண்டான்..



"காத்து போதுமா பேபி" அடங்காமல் பறந்த அவள் முடியை மொத்தமாக பின்னால் எடுத்துவிட்டு கொண்டே அவன் கேட்க,



"போதுமே" என்றாள் அவள் குதூகலமாக.



ஒரேடியாக பறந்த அவள் முடியை மொத்தமாக சேர்த்து பிடித்தவன், அவள் நடுவில் மட்டும் போட்டிருந்த பேண்டை கழட்டி, போனி டெயில் போல் இறுக்கமாக போட்டு விட்டான்..



"நான் கதவு பக்கத்தில் நிக்கறேன் வர்மா" என கேட்டுகொண்டே அவள் நகர, அவளுக்கும் கதவுக்கு இடையில் கையை நீட்டி தடுத்தவன்,



"இதை தாண்டி போக கூடாது பேபி" என்றான் கண்டிப்பாக.



"ஏன்! இடுப்பில் தூக்கி வைத்து கொள்ளுங்களேன்! அது ஒன்று தான் குறை" என போலி கோபத்துடன் அவள் பழிப்புக்காட்ட,



"யாரும் வராத இடமாக இருந்தால் அதையும் செய்து விடுவேன்" என்றான் பகலவன்.



முகத்தில் வேகமாக மோதிய காற்றை ரசித்துக்கொண்டே நின்றவள், எப்போது அவன் மீது சாய்ந்தாள், எப்போது தூங்கி போனால் எதுவும் தெரியாது..



தன் மீது சிறு குழந்தை போல் வாகாய் சாய்ந்து கொண்டு தூங்கும் தன்னவளை மென் புன்னகையுடன் பார்த்தவன், 'இதில் நான் குழந்தையா என்று கேள்வி வேறு..!’ என சலித்து கொண்டே, அவளை தூக்கி கொண்டான்..



ஒற்றை கையால் கதவை திறந்து தங்கள் சீட்டில் வந்து அவன் அவளை படுக்க வைக்க, சரியாக அவன் நிமிரும் போது அவன் சட்டையை பிடித்து இழுத்தாள் வெண்ணிலா..



"தூக்கிட்டிங்களே!" என அரைகுறை தூக்கத்துடன் அவள் கிண்டலாக கேட்க,



"எப்போதும் போல் நீ தான் பேபி ஜெயித்தாய்" என மென்மையாக கூறி, அவள் நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு நகர்ந்தான் பகலவன்..



அவளுக்கு போர்த்தி விட்டுவிட்டு தானும் பக்கத்துக்க சீட்டில் படுத்து கொண்டவன், நன்றாக தூங்கும் தன்னவள் அழகை ரசித்து கொண்டே தூங்கி போனான்..



விடிந்த நேரத்தில் முகத்திற்கு அருகில் ஏதோ மென்மையான காற்று வீசுவது போல் இருக்க, அது கொடுத்த உணர்வில் தான் பகலவன் கண்விழித்தான்..



வெண்ணிலா தான் அவன் அருகில் குனிந்து அவன் முகத்தில் ஊதி கொண்டிருந்தாள்..



"க்ளோஸ் அப் வாசனை இழுக்குதா வர்மா?" என அவள் கலாட்டாவாக கேட்க,



"உன் வாசனை தான் பேபி இழுத்தது" என்று கூறிக்கொண்டே எழுந்து அமர்ந்தான் பகலவன்.



அவள் இருவருக்குமே காபி வாங்கி வைத்திருக்க, அவனும் ப்ரெஷ் ஆகி வந்ததும் இருவரும் காபியை குடித்தனர்..



"என்ன டிபன் வேணும் பேபி?" என பகலவன் கேட்க,



"மசால் தோசை, பூரி, பொங்கல்" என்று அடுக்கினாள் அவள்.



"ஹேய் ட்ராவளில் இத்தனை எல்லாம் சாப்பிட கூடாது பேபி.. ஒத்துக்காது.. ஒழுங்கா கம்மியா சாப்பிடு.."



"அதெல்லாம் முடியாது.. நீங்க ஆர்டர் எடுத்துக்கோங்க.." என வந்தவரிடம் அவள் அனைத்தையும் சொல்ல, பகலவன் தான் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்...



"பேபி, நான் பேபி என்று கூப்பிடுகிறேன் என்பதற்காக நீ உண்மையாவே பேபி இல்லை டி.. வக்கீல் அம்மா கொஞ்சமாவது சொல்வதை கேளேன்.." சலிப்புடன் கூறியவனை பார்த்து,



"ஹி.. ஹி.." என சிரித்து வைத்தவள், "பசி வர்மா" என வயிற்றை தடவி காட்ட,



"இந்த ஒரு வேளை தான் பேபி.. இனி நான் தான் ஆர்டர் பண்ணுவேன்.. நீ அமைதியா தான் வரணும்.." என அழுத்தமாக கூறி விட்டான்.



உண்டு முடித்ததும் மீண்டும் அவனை பிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டவள், அவன் தோளில் சாய்ந்து கொள்வது, அவன் மடியில் படுத்துக்கொள்வது, என்று தான் பொழுதை களித்தாள்..



எப்போதும் போல் இருவரும் பாட்டு கேட்டுக்கொள்ளவும் தவறவில்லை..



இடை இடையில் கிடைத்ததை எல்லாம் பகலவன் பேச்சை கேட்காமல் அவள் கொரித்துக்கொண்டே தான் வந்தாள்..



அதன் வினை மும்பையை அடைந்ததும் அவளுக்கு வாந்தி வர ஆரம்பித்தது..



ரயிலில் இருந்து இறங்கியதுமே ஒரு முறை சென்று அவள் வாந்தி எடுத்துவிட்டு வர, "எல்லாவற்றையும் சாப்பிடாதே என்று சொன்னால் கேட்டியா பேபி? இப்போ பார் உடம்பு முடியவில்லை.." என வேதனையும் கோபமுமாக அவளை கடிந்துக்கொண்டே அழைத்து சென்றான் பகலவன்.



போகும் வழியிலேயே ஒரு மருத்துவமனையில் காண்பித்து மருந்து மாத்திரையும் வாங்கிக்கொண்டு தான் சென்றனர்..



அவர்களுக்கு என தனியாக அவன் ஏற்கனவே ஒரு கார் ஏற்பாடு செய்திருந்ததால், பயண பிரச்சனை இருக்கவில்லை..



ஒரு மிக பெரிய கேட்டட் கம்யுனிட்டியில், நான்காம் தளத்தில் இருந்த ஒரு ஒற்றை படுக்கையறை பிளாட்டை அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தான் பகலவன்..



ஒற்றை படுக்கை அறை வீடு என்று தான் பெயரே ஒழிய, வீடு என்னவோ நல்ல பெரிதாக தான் இருந்தது..



வீட்டிற்குள் நுழைந்ததுமே அதை ரசிக்க கூட முடியாமல் மீண்டும் அவளுக்கு குமட்ட, "வாஷ் பேசின் வர்மா" என்றாள் அவள் வாயை மூடி கொண்டு



"வா" என அவளை வேகமாக வாஷ் பேசின் அருகில் அவன் அழைத்து செல்ல, மீண்டும் ஒரு முறை வாந்தி எடுத்து ஓய்ந்தவள், அதற்கு மேல் தெம்பில்லாமல் அவன் மீதே சாய்ந்து விட்டாள்..



"இது தேவையா பேபி?" என சலித்துக்கொண்டே, அவள் வாயை துடைத்து விட்டு, அவளை தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்து மாத்திரையும் கொடுத்தான் பகலவன்..



மாத்திரை போட்ட சிறிது நேரத்தில் வயிறு சமன்பட்டு விட, "இப்போ பரவாயில்லை வர்மா" என்றாள் அவள் மெதுவாக.



"அப்போ தூங்கு பேபி.. காலையில் சரி ஆகிடும்.." என்றவன் மென்மையாக அவள் தலையை பிடித்துவிட, அதன் சுகத்தில் அவன் மடியிலேயே படுத்து உறங்கிவிட்டாள் வெண்ணிலா..



அவள் நன்றாக உறங்கியதும் அவளை மடியில் இருந்து இறக்கி விட்டவன் சற்று தள்ளி படுத்து கொண்டு தானும் உறங்கிவிட்டான்..



********************************



செழியன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவனை முறைத்து கொண்டு கோபத்தை கடினப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டிருக்க, எதிரில் இருந்தவனோ பெரும் கோபத்தில் கொதித்து கொண்டிருந்தான்..



"யோவ் என்ன ஓவரா பண்ணுறீங்க? எவ்வளவு பணம் வேணுமானாலும் வாங்கிக்கோங்க.. ஒழுங்கா அப்ரூவல் கொடுங்க.. அப்பாவை தாண்டி நான் முதல் முதலா எடுத்திருக்கும் ப்ராஜெக்ட் இது.. இது கைவிட்டு போனால் எனக்கு பெரிய அசிங்கமாகிடும்.."



கொஞ்சமும் பொறுமை இல்லாமல் அவன் குதிக்க, "லுக் மிஸ்டர் ரக்ஷன்.. நீங்க கேட்டிருக்கும் இடம் ஊருக்குள் இருக்கு.. உங்கள் கெமிக்கல் பாக்டரி திறந்தால் நிலத்தில் இருந்து, மக்கள் உடல் நலம் வரை எல்லாமே பாதிக்கப்படும்.. எல்லாம் நாங்க தெளிவாக விசாரிச்சாச்சு.. தெரிந்தே அனுமதி கொடுக்க நாங்க முட்டாள் இல்லை.. நிறைய இடத்தில் பணம் கொடுத்து வேலை வாங்கி உங்களுக்கு பழக்கம் போல்.. இங்கே அது நடக்காது என்று கேள்விப்படவில்லையா? பகலவன் பற்றி விசாரிக்காமலா வந்தீங்க?"



"எல்லாம் கேட்டுட்டு தான் வந்தேன்.. அந்த ஆள் எங்கே முதலில்?" எரிச்சலுடன் ரக்ஷன் கேட்க, மெலிதாக சிரித்த செழியன்,



"நானாக இருப்பதால் தான் நீங்க உட்கார்ந்து பேசிட்டு இருக்கீங்க ரக்ஷன்.. அவன் இருந்தால் கைநீட்டி விட்டு தான் பேசவே செய்வான்.. அவன் அந்தஸ்த்தெல்லாம் பார்த்து அடங்கும் ஆள் கிடையாது.. அவன் இல்லாதது நல்லதுனு நினைச்சுக்கோங்க.. நீங்க இப்போ கிளம்பலாம்.. எனக்கு வேலை இருக்கு.." என செழியன் ஒரு பைலை எடுத்துக்கொண்டு குனிந்து விட,



"நான் பேசிட்டு இருக்கேன் செழியன்" என்றான் அவன் கடுப்புடன்.



அவன் குரலில் கண்களை மட்டும் நிமிர்த்தி அவனை பார்த்தவன், "மரியாதையா சொல்லும் போதே கிளம்பிடு ரக்ஷன்.." என அடிக்குரலில் உருமாளாக கூற, அதில் அவனுக்கு லேசாக பயம் வந்திருக்க வேண்டும்..



தனியாக வேறு வந்துவிட்டதால் அப்போதைக்கு வம்பு வளர்க்காமல் கோபத்துடன் எழுந்து விட்டான்..



"மிஸ்டர் செழியன் உங்கள் பகலவனிடமும் சொல்லுங்க.. என் பாக்டரி இதே இடத்தில் வரும்.. நீங்க பார்க்க தான் போறீங்க.." என கத்திவிட்டு சென்றுவிட்டான்.



அவன் சென்றதும் ஒரு பெருமூச்சுடன் இருபக்கமும் தலையாட்டி கொண்ட செழியன், முதலில் அதை பகலவனிடம் கூறலாம் என்று போனை எடுத்தான்..



கொஞ்சமேனும் நிம்மதியாக இருப்பவனை தொல்லை செய்ய வேண்டாம் என்று தோன்றி விட, பார்த்துக்கொள்ளலாம் என போனை அமைதியாக வைத்துவிட்டான்.



அன்று வீட்டிற்கு வந்த பின்பும் அவன் அதே யோசனையுடன் சுத்த, "என்ன ஆச்சு செழியா? ஏன் என்னவோ போல் இருக்கீங்க?" என மாதங்கியே கேட்டுவிட்டாள்.



அப்போது தான் சாப்பிட்டுவிட்டு படுக்க வந்திருந்ததால், அவள் மடியில் படுத்துக்கொண்டே விஷயத்தை கூறினான் செழியன்..



அவன் கூறியதை கேட்டவள், "எதுவும் பெரிய பிரச்சனையா செழியா? எதுக்கும் பகலவனிடம் சொல்லி விடலாமா?" என கவலையுடன் கேட்க,



"இல்லை மது மா.. அவன் உடனே கிளம்பி வந்துடுவான்.. பாவம் அவன் மன அமைதியுடன் இருந்தே பல வருடங்கள் ஆகி விட்டது.. இப்போது தான் கொஞ்சம் இந்த பிரச்சனையில் இருந்தெல்லாம் ஒதுங்கி இருக்கான்.. நிம்மதியா இருக்கட்டும் மது மா.. நான் பார்த்துக்கறேன்.." என்றுவிட்டான் செழியன்.



"ஒன்னும் பயம் இல்லையே?"



"ஒரு பயமும் இல்லை டி" என்றவன் அப்படியே அவளை பிடித்து இழுத்து விட, அதற்கு மேல் அங்கு பேச்சிற்கு இடமில்லாமல் போனது...

குளிரும்..

 
Status
Not open for further replies.
Top