மிகவும் அருமையான ஒரு கதைக்களம்.
தொங்கு தொய்வின்றி சீராக செல்கிறது.
காட்சிகள் அனைத்தும் யதார்த்தமானவை.
எல்லாருக்கும் அமர் கயலுக்கு மட்டும் தேவ். ஆரம்பத்தில் anti-hero range ல் இருந்தவன். அனைவரிடமும் பொங்கல் வாங்கியவன்.
(என்னிடமும் தான்)
பின் அவனது உண்மையான காதல் யாரிடம் என்ற நிதர்சனம் புரியப்பட பின் அவனது நடவடிக்கைகள் கண் கலங்க வைக்கிறது.
அவன் கயலுக்காக உருகுவது, தன் சுயமரியாதையையே அவளுக்காக விட்டு கொடுப்பது எல்லாம் தூள்
கயலும் ஆரம்பத்தில் பொறுமையின் சிகரமாய் இருந்து பின் எரிமலையாய் வெடித்து சிதறுவது மற்றும் தேவ் ஐ தன் பின்னால் சுற்ற வைப்பது எல்லாம் அவள் தன்மானத்தின் சின்னம் என்று பறைசாற்றுகிறது.
அமரின் குடும்பம் ஒரு நல்ல கூட்டு குடும்பத்துக்கு எடுத்துக்காட்டு.
இன்பத்திலும் துன்பத்திலும் துணை வருபவர்கள்.
விஷால் "Friend in need is a friend indeed"ற்கு சாலப் பொருத்தமானவன்.
தாரிணி, ஸ்ரீதர் எல்லாம் நச்சுப் பாம்புகள். வேரோடு பிடுங்கப்பட வேண்டியவர்கள்.
இப்படிப்பட்ட திருப்பங்கள் திகில்கள் அற்ற ஒரு குடும்ப கதையை தந்ததற்கு நன்றி அக்கா