Santhalakshmi Narayanan
Well-known member
எண்ணங்களின் வண்ணம் நீயடி...
கருமை அழகுதான்.. ஆனால் எண்ணங்களில் கருமை படிந்திருப்பது அழகல்ல.. அத்தகைய எண்ணங்களை உடையவன்தான் Cricket player cum businessman சிவேஷ்.. செம திறமைசாலி, புத்திசாலி.. என்ன.. எல்லா கெட்ட பழக்கங்களையும் கத்து வச்சிருக்கான்.. அவன் எண்ணங்களில் படிந்திருக்கும் கருமையை அகற்றி வண்ணம் பூச வருகிறாள் journalist ராதா..
அவள் மனசுல அவன் மீது இருக்கும் ஹீரோ இமேஜை முதல் சந்திப்பிலேயே கண்டபடி வாயை விட்டு உடைச்சிடறான் சிவா.. ஆனால் அதற்கு எதிர்பதமாக அவளறியாமலேயே அவன் மனசுல அவ கால் தடம் பதிக்க ஆரம்பிச்சிடறா..
நிலைமை இப்படி இருக்க அவனுக்கு நடக்கற ஒரு கார் விபத்தின் பின் நிகழும் நிகழ்வுகள் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கின்றன.. அதுவும் காதல் திருமணம்.. காதல் மனைவியாக கணவனை நேசிக்கும் அவள் மனதை ஒரு வித பயம் உறுத்திக் கொண்டிருக்கிறது.. காதல் கணவனாக உருகி அவளுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தவன் அவள் மனதின் பயத்தை மெய்ப்பிப்பது போல தீடிரென கடுஞ் சொற்களை வீசி அவளை காயப்படுத்தறான்.. இவர்களின் காதல் எப்படி சாத்தியமாச்சு?? அவனின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?? அனைத்தையும் மீறி ராதா எவ்வாறு அவனின் மனதை அறிகிறாள் என்பதே மீதி கதை.. !
இந்நாள் செய்யும் தவறுகள் பிந்நாளில் நிம்மதியை குலைக்கும் என்பதை தாமதாக உணரும் சிவேஷ்.. தேர்ந்த விளையாட்டு வீரனாக மைதானத்தில் ஜொலிப்பதும், கட்டுபாடற்ற வாழ்க்கை முறையில் திளைப்பதும், ப்யூட்டி ப்யூட்டினு காதலியிடம் உருகுறதும், உயிர் போனால் போகட்டும் என விரக்தியில் பேசுவதும், அவள் மனதின் பயத்தை போக்க முடியாமல் திணருவதும், குற்றவுணர்வில் தவிப்பதும் என பல்வேறு பரிமாணங்களை காட்டறான்.. சில நேரம் கோபப்பட வைக்கறான், சில நேரம் பாவப்பட வைக்கறான்.. காதலால் மனம் மாறி புடம் போடப்பட்ட தங்கமாக ஜொலிக்கிறான்.. இறுதியில் ஒரு நல்ல காதலனாக, கணவனாக மனதை கவர்கிறான்..
எப்போதும் மனதில் கணவனை பற்றிய ஒரு அலைப்புறுதலுடன் இருக்கும் ராதா சிவாவின் காதலை அறிந்தும் பயம் கொள்வதும், அவனை பற்றிய உண்மையை அவன் வாயாலேயே அறிந்ததும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தடுமாறுவதும், கடைசியில் நிதர்சனத்தை உணர்ந்து கணவனை மனவேதனையில் இருந்து காத்து தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதும் என அவனின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றிய தேவதையாகவே வாழ்கிறாள்..!
கோவிந்தன்-ஜானகி நல்ல தம்பதியினராகவும், நல்ல மனிதர்களாகவும், வீட்டின் பெரியவர்களாக பேரன், பேத்தி வாழ்க்கையை மலரச் செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டு வெற்றியும் பெறுகிறார்கள்..
சத்யா-பவானி.. நல்ல பெற்றோரா இருந்தாலும் பையன் ஜகஜ்ஜால கில்லாடியா இருந்ததால அவனை அவங்களால கண்ட்ரோல் பண்ண முடியலை..
தொழில் போட்டியால கொலை முயற்சி பண்ற அளவுக்கு போன மயூரன் சிவா, ராதா ரெண்டு பேருக்கும் ரெண்டு முறை குறி வச்சு ஒரு வகைல அவங்களுக்கு நல்லது பண்ணி இருக்கான்.. முதலாவதுல சிவா மனசு மாறினான்னா ரெண்டாவதுல ராதா மனசு மாறினா..
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த் திருவிழா பற்றி சொல்லி இருந்தது படிக்க ரொம்ப நல்லா இருந்தது..
அழகான கதை.. ரொம்ப என்ஜாய் பண்ணேன்... உங்களோட அடுத்தடுத்த கதைகளும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் டியர்