கதையின் தலைப்பில் உள்ளது போல காதலுக்கும் கோபத்துக்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு தம்பதியின் உணர்ச்சிகரமான காதல் கதை..! இறுதியில் கோபத்தை மீறி காதல் ஜெயிக்கிறது.. சொல்ல வந்த விஷயத்தை ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க டியர்.. வாழ்த்துக்கள்..!
தனக்கென யாருமில்லாத ஒருவனுக்கு மனைவி என்ற உறவு வரும் போது அவனுக்குள் ஏற்படும் உணர்வையும், எதிர்பார்ப்பையும், காதலையும், ஆசையையும் நிதிலன் பிரதிபலிக்கிறான்.. ஆனால் இவை நிறைவேறாமல் மனைவியின் நடிப்பால் ஏமாற்றமடையும் போது அவனுக்குள் எழும் கோபம், விரக்தி, மன அழுத்தம் என அவனுடைய ஒவ்வொரு உணர்வையும் ரொம்ப அழகாக கையாண்டிருக்கீங்க..
மாதாந்திர பிரச்சனையின் போது மற்றவர் செய்ய தயங்கும் செயலை மனைவிக்கு அருவருப்பில்லாமல் அவன் செய்யும் போதும், பிரசவத்தின் போது மனைவியின் உயிரை காக்க தன்னை காயப்படுத்தி கொள்ளும் போதும் அவனுடைய காதலின் அளவை உணர முடிகிறது.. ஷிவானி பற்றிய உண்மை தெரிந்த பிறகு அவன் வாங்கி கொடுத்த செருப்புக்கு கொடுக்கும் மதிப்பு கூட தனக்கு இல்லை என கலங்கும் போது மனதை கனக்க செய்கிறான்.. இறுதியில் அவளின் காதலை உணர்ந்து மன அழுத்தத்திலிருந்து வெளி வந்து தன் உயிரை கொன்றவளை உயிராய் கொள்கிறான்.. செம காதல் இவனோடது..
ஷிவானி.. ஒரு தவறை செய்துட்டு இவள் படும் பாடு.. ஹப்பா.. ரொம்ப பாவம் இவனுதான் சொல்ல தோணுது.. கணவனின் கோபத்துக்கு ஆளாகி தன் காதலை நிரூபிக்க ஒவ்வொரு முறையும் அவனிடம் போராடி தோற்றாலும் இறுதி வரை விடாமுயற்சி செய்து அவனோட காதலை உயிர்பிச்சிட்டா.. அதுக்காக இவள் உயிரை விட நினைச்சு கடைசியில் கணவனின் காதல் இவளை காப்பாத்திடுச்சு.. இவர்களின் காதலின் பரிசாக நித்திஷா, சிவனந்தன்.. அழகு குட்டீஸ்..
மொத்தத்தில் கதை ஒரு உணர்வுக்குவியலாக இருந்தது.. குறைவான கதைமாந்தர்களை கொண்ட நிறைவான கதை..!