anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீ எனக்கு எதுக்கு ஹெல்ப் செய்யரே ...இதில் உனக்கு என்ன லாபம் ?"என்றாள் சோனா .
"எனக்கு என் திருமணம் நடக்கும் இல்லை ......நம்ம இருவரின் பாதையில் உள்ள நெருஞ்சி முள் போய்ட்டா நம்ம வாழ்க்கை நமக்கு தானே ?"என்றாள் மேக்னா .
"யாரை திருமணம் செய்ய இப்படி துடிக்கறே ?"என்றாள் சோனா சந்தேகமாக .
"அதை மதுரா திருமண மேடையில் வந்து தெரிஞ்சுக்கோங்க சோனா மேடம் ....நான் என்ன மதுரா மாதிரி லூசா ?நீங்க எருமை மாடு ஏரோபிளேன் ஒட்டுது என்றால் அதை நம்ப ....நம்ம இருவருக்கும் பொது எதிரி மதுரா ...அவ மேல் மட்டும் கான்செண்ட்ரட் செய்யுங்க .....நான் உங்களுக்கு உதவ வந்தேன் ....உதவிட்டேன் .....நீங்க தான் துணிஞ்சு இறங்குவீங்க ....இது தான் என் நம்பர் ...ஏதாவது தேவை என்றால் போன் செய்யுங்க ....இந்த விஷயம் நமக்குளேயே இருக்கட்டும் ....வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் ....."என்றாள் மேக்னா .
"ஏன் தெரிந்தால் என்ன .இதை செய் செய்யாதே என்று எனக்கு ஆர்டர் போட நீ யாரு ?"என்றாள் சோனா .
"நீங்க நூறு பேருக்கு கூட சொல்லுங்க ......எனக்கு என்ன வந்தது ...நீங்க ஜெயிக்கணும் என்பதற்காக சொன்னேன் .....இல்லை இந்த முறையும் தோத்து தான் போவேன் என்று நீங்க அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன் ...உங்க தலை எழுத்து அவ்வளவூ தான்ன்னு நான் போயிட்டே இருப்பேன் .....போன முறை பூ விஷயத்தில் ,சுமன் ecr ரோடு காமெடி எல்லாம் ரிசல்ட் எப்படி வந்தது என்று யோசித்து பாருங்க ....யோசிங்க சோனா ....உங்களை சுத்தி கருணா ஆட்கள் இருக்காங்க ...நீங்க ஒரு அடி வைப்பதற்குள் அவங்க 100 அடி முன்னால் இருக்காங்க .....உங்க பிளான் எல்லாம் சொதப்ப இதுவும் ஒரு காரணம் ....யுத்தத்தில் வெற்றியின் ரகசியமே ...எதிராளி எதிர்பாராத போது ,எதிர் பாராத இடத்தில இருந்து ,எதிர் பாராத முறையில் தாக்க வேண்டும் என்பதை சாணக்கிய தந்திரம் சொல்லுது .....element ஆப் surprise என்ற வார்த்தை கேள்வி பட்டு இருக்கீங்களா ....இப்போ அது உங்க பக்கம் இருக்கு ...இந்த பிளான் உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் .....இப்போ சொல்லுங்க சத்திரியனாய் பல முறை தோற்க போகிறீர்களா இல்லை சாணக்கியனாகி யோசித்து ஜெயிக்க போகிறீர்களா ...யோசிங்க சோனா ....நல்லா நிதானமா யோசிங்க ................உங்களுக்கே புரியும் நான் என்ன சொன்னேன் என்று ............பை ."என்ற மேக்னா போனை துண்டித்து விட்டு அதுவரை பிடித்து வைத்து இருந்த பெருமூச்சினை வெளியிட்டாள் .
அவள் நிலையை பார்த்த அவன் அவளுக்கு தண்ணீர் பாட்டில் ஓபன் செய்து கொடுக்க அரை பாட்டில் காலி செய்தாள்
"சுப்பா ..........தலையால் தண்ணீர் குடிக்க வைப்பது என்று கேள்வி பட்டு இருக்கேன் ...இன்னைக்கு தான் அதை புரிஞ்சுக்கிட்டேன் ....ஆனா சும்மா சொல்ல கூடாது செம கிரிமினல் பிரைன் தான் அவளுக்கு ......இல்லைன்னா கருணா மாதிரி ஒருவனை இத்தனை வருடம் அடக்கி வைக்க முடியுமா என்ன ?"என்றாள்
"உன்னை நம்பினாளா .....?"என்றான் அவன் .
"தெரியலை ......மதுரா பின்னாடி கேமரா தூக்கிட்டு எவனாவது அலைய ஆரம்பித்தால் தெரிஞ்சுட்டு போக போகுது . "என்றாள் அவள் .
"ஏண்டீ ...அந்த சூர்யா என்ன அந்த அளவூ பொறாமை பிடித்த குரங்கா என்ன ?"என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்
-
"என்ன சொல்வது ....காலேஜ் டேஸ் பகை ஆச்சே .........இருக்காதா என்ன ...........திரும்பவும் அவன் லவ் ஆப் லைப் திரும்ப கிடைத்து இருக்கு ...நடுவில் விஜய் புகுந்து ஜொள் பேக்டரி ஓபன் செய்தா எரியமா போகுமா என்ன ?"என்றாள் அவள்
"உனக்கே ஓவர்ரா இல்லை இது ......பாவம் உன் புருஷன் .......செத்தான் உன் கையில் மாட்டி ....."என்றான் அவன் .
"இதுக்கே பயந்தா எப்படி ..............அந்த கிறுக்கு பிடிச்ச என்ற புருசனுக்கு இருக்கு தனி கவனிப்பு ........மாட்டினான் ..கதற கதற பிழிஞ்சி எடுக்க வேண்டியது தான் ......"என்றாள் மேக்னா .
"ஐயகோ நண்பா உனக்கு இந்த நிலைமையா வரணும் .............கடவுள் கூட உன்னை காப்பாத்த முடியாது ....இப்போ எங்கே ?"என்றான் அவன் .
"காரை மாத்தணும் ....உன் கார் அங்கே ஷாப்பிங் மாலில் இருக்குலை ....எடுத்துட்டு கிளம்பனும் ."என்றாள் மேக்னா .
அரைமணி நேரம் கழித்து மதுராவின் போன் அடித்தது .
"என்னமா ...."என்றாள் மதுரா .
"எங்கே இருக்கே ..............காலையில் போன் செய்தாங்க சமபந்தியம்மா வருவதாக ...இப்போ மணி மதியம் ஒண்ணு ....இன்னும் கிளம்பாம என்ன செய்துட்டு இருக்கே ..........?"என்றார் கடுப்போடு .
"அம்மா அத்தை தான் நல்ல காரியம் பேச போவதற்கு முன் சாமி கும்பிடணும் என்று வடபழனி முருகன் கோயிலுக்கு கூப்பிட்டு வந்தாங்க ...அங்கே கல்யாணம் நடந்தது ...........ஐயோ அம்மா எனக்கு இல்லை ....முருகருக்கு அம்மா முருகருக்கு .....சொல்வதை ஒழுங்கா கேளுங்க ..........அதை முடிச்சிட்டு இப்போ தான் வரோம் ....இன்னும் ஒரு பதினைந்து நிமிடத்தில் வீட்டில் இருப்போம் ....."என்றாள் மதுரா .
"போன் செய்து லேட்டாகும் என்று சொன்னா குறைந்தா போய்டுவே .....நிச்சயமா உனக்கு கோயிலில் திருமணம் நடக்கலை தானே ...............என் கேட்கிறேனா .............உன்னை நம்ப முடியாது மகளே அதனால் தான் ....இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்து நீ ரத்தத்தையே குடிக்கும் சிகப்புரோஜா பட பூனை ஆச்சே .....ஏன் இப்படி எல்லாம் பேசுறேன்னா ....வேண்டுதல் அதான் ....என் மகள் என்னை மீறி போய்ட்டா என்ற வேதனை ...இத்தனை வருடம் உயிர் கொடுத்து வளர்த்த பெற்றோர்களை விட ஒரே நாளில் வந்த காதலுக்கு மகள் முக்கியத்துவம் கொடுத்து விட்டாளே என்ற ஆதங்கம் ....தனக்கு தானே மாப்பிளை பார்த்து அதை பேசி உறுதி செய்து கொண்டு மாப்பிள்ளை வீட்டாருடன் வந்து திருமணம் பேசும் அளவுக்கு எங்களை என் மகள் ஒதுக்கி வைத்து விட்டாளே என்ற மரணவலி தான் மகளே ....சாரி மிஸஸ் மதுராக்ஷி சூர்யா பிரதாப் ..."என்றாள் பவானி கதறலாக .
"அம்மா !எதையும் மனம் விட்டு பேசும் நிலையில் நானும் இல்லை ...எல்லாதையும் விளக்க எனக்கு நேரமும் இல்லை ....அதை கேட்க உங்களுக்கு பொறுமையும் இல்லை ...........நானே என் வாழ்க்கை எனக்கு கிடைக்குமா ...கிடைத்தாலும் நிலைக்குமா என்ற பயத்தில் இருக்கிறேன் அம்மா .....சிரித்து சிரித்து பேசுவதால் எல்லாம் நன்றாக போகிறது என்று அர்த்தம் இல்லை அம்மா .....சிரிப்பு என்ற முகமூடிக்கு பின் கண்ணீரும் பல நேரங்களிலும் இருக்கும்மா ......நேரம் வரும் .... எல்லாத்தையும் சொல்றேன் ......இப்போ என்ன நடக்குதோ அதன் படி நடங்க ...."என்றாள் மதுரா .
மகளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அந்த தாயின் மனதை பிசைய ஆரம்பித்தது .அடி வயத்தில் ஏதோ பயப்பந்து உருள ஆரம்பிக்க தவித்து போனார் .
"ராணிமா ...என்னடா ஒரு மாதிரி பேசுறே ....."என்றார் தவிப்புடன் .
"சொல்றேன் மா .....உன் கிட்டே சொல்லாமல் ?...........இப்படியாவது பேசுறேனே என்று சந்தோச படு ...இருக்கும் பிரச்னை தாங்க முடியாமல் பைத்தியம் பிடிக்காமல் இருப்பதே பெரிசு தான் அம்மா ......."என்றாள் மதுரா .