anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உனக்காக உலகத்தையும் எதிர்ப்பேன் "என்று மதுரா அவனுக்கு கொடுத்த வாக்கை நிறை வேற்ற ப்ராஹ்மபிரயத்தனம் செய்ய வேண்டி வரும் என்று அவளிடம் சொல்ல யாரும் இல்லை ....காலம் அவர்களை வெவ்வேறு திசையில் பிரித்த போது அவனுக்காக போராடுவதாக கூறிய அவள் போராடும் நிலையில் இல்லை .....அவளுக்காக போராடும் நிலையில் அவனும் இல்லை .....கை விட்டு போன சுவர்க்கம் ...வாழ்க்கை ......வெளியில் சிரிப்பு முகமூடி போட்டு கொண்டு உள்ளக்குள் அழும் நரகம் ....தனக்கு தானே உண்மையாய் இல்லாத அவல நிலை ...காதலில் ஜெயித்தும் தோற்று துடிக்கும் நரகம் .
எவ்வளவூ நேரம் அழுதாளோ நேரம் ஆக ஆக அடுத்து செய்ய வேண்டியவை எவை என்று தெளிவாக யோசிக்க ஆரம்பித்தாள்.கண்கள் கனலை கக்க அவளின் முகம் இறுகி போனது .
மறுநாள் காலை ஹர்ஷா உடன் பெரியவர்களிடம் விடை பெற்று கிளம்பினாள் .போவதற்கு முன் அனைவரிடமும் அடுத்து என்ன செய்ய வேண்டும் ,அவள் என்ன செய்ய போகிறாள் என்று தெளிவாக விலகினாள் .
"இது சரி வருமா மதுரா ?தலையை சுத்தி மூக்கை தொடுவது போல் இருக்கே மா ....ரொம்ப ரிஸ்க் இருப்பது போலெ இருக்கேம்மா ...."என்றார் நரசிம்மர் .
"வேறு வழி இல்லை தாத்தா ...அதிரடி தான் சரி வரும் .....காயத்தை கீறி விட்டால் தான் குணமாகும் .....இதை தவிர வேறு வழி இல்லை .....நான் பணயம் வைப்பது என் காதலை .....அது இன்னும் அழியவில்லை என்று 100% எனக்கு தெளிவாக தெரியும் .....அதை நம்பி தான் இந்த முடிவூ எடுத்தேன் ....வந்தால் மலை ...இல்லையென்றால் கயிறு தானே ...போனால் போகட்டும் ."என்றாள் மதுரா .
"மதுரா ....நீயும் என் மக மாதிரி தான் ...மாதிரி என்ன மகளே தான் ...உன்னை நம்பி தான் என் மகளையும் ,அவ பசங்களையும் விடறேன் ......இவங்க வாழ்வுக்கு ஒளி ஏத்துமா .....நீ இந்த வீட்டு குலதெய்வம் ......எங்களை காப்பாத்த வந்த தேவதை .....உன் முயற்சி பலிக்க அந்த கடவுள் துணையாய் இருக்கட்டும் ...."என்றார் மேக்னா அன்னை மதுராவை அணைத்து கதறிய படி .
"சாரி மது ...என்னால் உனக்கு சிரமம் இல்லை ...நீயே உன் வாழ்வை தேடி கொண்டு இருக்கிறே ...இதில் நானும் உனக்கு பாரமாய் ....."என்றவளின் கையை தட்டி கொடுத்த மதுரா ,"உன் காதலுக்கும் ,என் காதலுக்கும் சக்தி இருக்குதான்னு பார்த்து விடுவோம் ....."என்ற மதுரா ஹர்ஷா உடன் ,நரசிம்மர் முன் சொன்ன ராமராஜு என்பவரை சந்திக்க கிளம்பினாள் .
மதுரா கிளம்பியதும் ,மேக்னாவின் புன்னகை என்ற முகமூடி கழன்றது .மதுரா சென்ற திசையையே வெறித்து பார்த்தவாறு நின்றவளை நெருங்கினார் முகேஷ் ரெட்டி.
"அப்பா !அவ உயிரோடு இருக்க கூடாது ."என்றாள் மேக்னா ஆங்காரத்துடன் .
அவள் முகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆடியது .