THAVAM --7 தவம் --7
கருணாகரனின் கோபம் அவ்வளவூ சீக்கிரம் அடங்கவில்லை.சுமனை அடி பின்னி எடுத்தான் . அல்வினும் அந்த பெரியவரும் அவனை மீண்டும் கஷ்ட பட்டு சுமனிடம் இருந்து பிரித்து விலக்கி நிறுத்தினர்
"விடுங்க அப்பா என்னை .......இவனுக்கு இது எல்லாம் போதாது ...."என்று உறுமினான் கருணாகரன்.
"அவனை கொல்வது எளிது பா .......மாசிலாமணி சார் உன் குரு ஆச்சே ....அவருக்காக பாரு பா ....."என்றார் பெரியவர்
மாசிலாமணி என்ற அந்த பெரியவரின் பெயரை கேட்டதும் கருணாகரன் நிதானித்தான்.
"எத்தனை மாத்திரை கொடுத்து இருக்கே ஆல்வின் ?"என்றான் கருணாகரன்.
"மூன்று ......அட் லீஸ்ட் 2 டேஸ் ஆகும் இவன் கண் விழிக்க ....."என்றான் ஆல்வின் என்று அழைக்க பட்டவன்
"பத்தாது ஆல்வின் ....ஒரு வாரம் இவன் கண் விழிக்கவே கூடாது .....மருந்தை இஞ்செக்ட் பண்ணிட்டே இருக்க சொல்லிடு ....ராயப்பேட்டை ஆல்பர்ட் கிட்ட சொல்லி இவனை கல்கத்தா சதுப்பு நில காட்டில் விட்டு விட சொல்லு .....ஒரு கையையும் காலையும் கவனிச்சுடு ...இனி அவனுக்கு அந்த கை பயன் பட கூடாது .....ஆட்டோ பின்னாடி யார் போய் இருக்கா ????/"என்றான் கருணாகரன்.
"ராசுவும் ,அப்துல்லாஹ்வும் ....நீங்க கிளம்புங்க ....இவனை நாங்க பார்த்துகிறோம் ."என்றான் ஆல்வின்
தலை அசைபோடு அந்த பெரியவரும் , கருணாகரனும் தங்கள் காரில் கிளம்பி விட , ஆல்வின் ......அவன் உடன் இருந்தவர்களும் கிழே கிடந்தவனை கல்கத்தா சதுப்பு நில காட்டிற்கு பேக் செய்தனர் ,அவன் கை,கால் உடைக்க பட்டு அதற்கு கட்டு கட்டிய பிறகு .அங்கு இரு தென்னம் மரங்களுக்கு இடையேஇருந்து இருள் மறைவில் இருந்து கயிற்றினை கையால் சுருட்டியவாறு இரு வேலை ஆட்கள் வெளி வந்தனர் .
((((அட மதுராவை பிடிக்க போய் இவன் குழியில் விழுந்தது இவர்கள் தூக்கி பிடித்த கயிற்றலா .....செம பிளான் தான் .மதுரா அறியாமல் ,இவர்கள் மதுரா முன்னே வராமலே சுமனை காலை தட்டி விட்டு மதுரா திரும்புவதற்குள் குழியில் விழ வைத்து அவளை காப்பாற்றி விட்டனர் .ஆனால் மதுரா அறியாமல் ஏன் இந்த வேலை ????/இருக்கும் ஆபத்து தெரிந்தால் தானே மதுராவும் தன்னை காத்து கொல்ல முடியும்.......
என்ட்ரியே கை ,கால் உடைப்புனு அதகள படுத்தறான்.ஏன் பா அவனை உயிரோடு விட்டே ????எத்தனை பெண்களின் வாழ்வில் விளையாடி இருப்பான் ??4 பெண்களின் மரணத்திற்கு இவன் காரணம் என்று ஹனி கூட சொல்லுச்சே .......கொன்று விடு பா . ....கூட வேற நிறைய ஆட்கள் இருகாங்க .....அடியாட்களா ??????ஒரு வேலை மகேஷ் பாபு பிஸினெஸ்மேன் படம் போலெ டான்னா நீயி ??????ஏன் பா இந்தஆக்ஷன் கொஞ்சம் அந்த சோனா பிசாசு கிட்டே காட்டுப்பா.மதுரா குட்டிய ரொம்ப செஞ்சுட்டா பா .....கொஞ்சம் இல்லை நிறைய கவனி . .......4 எபிசொட் ரொம்ப ஓவர் ஆட்டம் ....தாங்க முடியல .....நேரே சென்று சோனவை நாலு காட்டு காட்டி இருக்கலாமே .....எதற்கு வெளியே வெயிட் பண்ணிட்டு இருந்தான்......யார் பெத்த புள்ளையோ நீயி .....அந்த ராட்சசன் கை கால் உடைப்புக்கு ,புது ட்ரெண்ட் டா கல்கத்தா சதுப்பு நில காட்டுக்கு பேக் எனக்கு பிடிச்சு இருக்கு )))
சில வினாடிகளில் முன் சென்ற ஆட்டோவை பிடித்தது அந்த கருப்பு நிற கார் .ஆட்டோவின் வேகத்திற்கு ஈடு கொடுத்த படி அதன் பின்னால் பயண பட்டது.பைக்கில் பின் தொடர்ந்தவர்கள் ,காரில் இருந்தவன் ஏதோ சைகை செய்ய அவர்கள் விலகி கொண்டனர் .ஹை வெயில் டோல் பூத் அருகே ஆட்கள் இருந்த இடத்தில் ஆட்டோ நிறுத்தினார் சபரி .
"என்ன அண்ணா ,வண்டி மீண்டும் ரிப்பேர் ரா ???/"என்றாள் மதுரா
"இல்லை தங்கச்சி ....டிபன் சாப்பிடு ....எப்போ சாப்பிட்டேயோ என்னவோ ....சூட இருக்கும் போதே சாப்பிடு "என்று டிபன் பாக்ஸில் இருந்து ஆவி பறக்கும் இட்லி ,சுட சுட சாம்பார் கொடுத்தார்
காலையில் சாப்பிட்டது .அதன் பிறகு ஒரு முறை ஜூஸ் மட்டுமே குடித்து இருந்தாள்.இந்நேரம் வரை பச்சை தண்ணீர் கூட சோனா கொடுக்க வில்லை .தமிழர்களின் விருந்தோம்பல் என்ற பண்பினை அவள் அறியவில்லை போல் இருக்கு (அதுக்கு என்ன தான் நல்லது தெரிஞ்சு இருக்கு இது தெரிவதற்கு ?)
வெகு வேகமாக நான்கு ஐந்து இட்லிகளை விழுங்கிய பிறகே தெம்பு மீண்டு விட ,"ஐயோ அண்ணா ....நானே எல்லாம் சாப்பிடுகிறேன் .....உங்களுக்கு ?""என்றாள் தயக்கத்துடன்
"எனக்கு ஏற்கனவே வாங்கி கொடுத்து.........வாங்கி சாப்பிட்டுட்டேன் தங்கச்சி ...நீ வெசன படாதே ...சாப்பிடு .....உள்ளே இன்னும் இட்லி இருக்கு ...காபி ,தண்ணீர் பாட்டில் கூட இருக்கு ...நீ நிம்மதியா சாப்பிடு ..நான் வெளிய நிற்கறேன் ....சாப்பிட்டு அங்கே லேடீஸ் ரூம் இருக்கு .....முகம் கை கால் கழுவிக்கோ ...."என்ற சபரியின் தடுமாற்ற பேச்சினையோ ,சபரி கொடுத்த உணவூ 5 ஸ்டார் ஹோட்டல் பெயரில் இருந்ததையோ ,கிழே இறங்கிய சபரி பின்னால் சற்று தூரத்தில் நிறுத்த பட்டு இருந்த கருப்பு காருக்கு சைகை காட்டியதையோ மதுரா கவனிக்கவில்லை
(((குழந்தை கைக்கும் வாய்க்கும் சண்டையில் இருக்குது பா .மிட் நைட் சுட சுட இட்லி ,சாம்பார் ....எனக்கு ஒரு பிளேட் பார்சல் பா ....அதுவும் இ .சி .ஆர் ரோட்டில் கடல் காற்று முகத்தில் அடிக்க சூடாக சாப்பிடும் சுகம் ....ஹம்ம்ம்ம்ம் யம்மி .....குழந்தை சாப்பிடுது .கண் வைக்க கூடாது )))
அவள் உண்டு முடித்து ,தன்னை சுத்தம் செய்து கொண்டதும் மீண்டும் ஆட்டோ கிளம்பியது .பின்னால் இடை வெளி விட்டு தொடர்ந்தது அந்த கறுப்பு கார் .ஒரு மணி நேர பயணம் கடந்து ,சுபாவின் வீட்டு முன் நின்றது ஆட்டோ .சபரி இருந்ததால் பாதுகாப்பு உணர்வோ ,மதுரா ஆட்டோவிலேயே உறங்கி விட்டு இருந்தாள் .உடல் களைப்போடு ,மனமும் வெகுவாக பாதிக்க பட்டு இருந்ததால் ,தன்னை மீறி உறங்கி இருந்தாள் மதுரா .
"மதுரா ....மதுரா .....வீடு வந்தாச்சு ......உள்ளே வந்து தூங்கு மா ...."என்றாள் சுபா மெல்ல தட்டிய படி .அந்த நள்ளிரவிலும் சுபாவும் ,பாலாஜியும் மதுராவிற்காக கண் விழித்து காத்து கிடந்தனர் ( நம்ம ஆளு கொடுத்து வச்ச ஆள் தான் போல் இருக்கு .இப்படி ஒரு நட்பூஸ் கிடைச்சிருக்கே ....சுபா கண்ணு உனக்கு உடனடியா .....மெரினா பீச் ல சிலை வைக்க சொல்லி நான் ஐ .நா சபைக்கே பரிந்துரை செய்கிறேன் .....ஹ்ம்ம் நமக்கு இப்படி யாரும் கிடைக்க மாட்டான் என்கிறார்களே .....இப்போ தான் பானு ,சினேகா ,மஹா ன்னு ஹலோவில் இருக்கோம் .....சுபா மதுரா ரேஞ்சுக்கு போக ரொம்ப நாள் ஆகும் போலெ இருக்கு .)
கண் விழித்த மதுரா எதிரே நின்ற தோழியை கண்டதும் நடு ரோடு என்று கூட பாராமல் அணைத்து கொண்டாள் ..."சுபா !பாலு அண்ணா ,சபரி அண்ணா மட்டும் இல்லைன்னா என் நிலைமை நெனைச்சு கூட பார்க்க முடியலைடீ "என்று உடல் பதற கூறினாள்
"ஷ் ...மதுரா !என்னடீ இது.....சின்ன குழந்தை போலெ ......அதான் பத்திரமா வந்துடேல .....இனி அந்த சனியன் ஆச்சு அவள் வேலை ஆச்சுன்னு விட்டுட்டு ஊருக்கு கிளம்பும் வழியை பாரு ...."என்றாள் சுபா
மதுரா ஏதோ சொல்வதற்குள் ,"மதுரா !நடு ரோட்டில் நின்று தான் பேசணுமா .....உள்ளே போ மா ...பொறுமையா பேசிக்கலாம் ..."என்றான் பாலாஜி
"ஐயோ ....சபரி அண்ணாவுக்கு பணமே தரலியே .....பசி அறிஞ்சு சாப்பாடு கூட அவர் தான் வாங்கி கொடுத்தார் ..."என்ற மதுரா ஹாண்ட் பாக் தேட
"நீ உள்ளே போ தங்கச்சி .....பணத்தை புறவூ வாங்கிக்கறேன் ......சுபாமா ,தங்கச்சி பயந்து கிடக்கு உள்ளே கூடி போ ....வரேன் பாலு ...."என்றவர் ஆட்டோவை கிளப்பி சென்றார் .
பெண்கள் இருவரும் உள்ளே சென்றதும் வீட்டின் வாயில் கதவை மட்டும் பூட்டாமல் சாத்திய பாலாஜி ,காம்பௌண்ட் கேட் மூடாமல் திறந்து விட்டான் .....ஹாலில் மதுரா அமர்ந்ததும் சூடான ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள் சுபா
"சாரி சுபா ....ரொம்ப சாரிடி ...நீயே மாசமா இருக்கே ...இந்த மாதிரி சமயத்தில் உன்னை மிட் நைட் இப்படி தொல்லை பண்ணிட்டேன் ......சாரி அண்ணா .....சாரி சுபா "என்றாள் மதுரா இறங்கிய குரலில்
"பெரிய மனுசி மாதிரி பேசிட்டு இருந்த கடிச்சுடுவேன் ...ஒழுங்கா பாலை குடிடீ ....."என்றாள் சுபா மதுராவின் தலையில் கொட்டிய படி
அப்போதும் மதுராவின் முகம் தெளியாததை கண்டு பாலாஜி ,"மதுரா !.....நீ கூட பிறக்க வில்லை என்றாலும் என் சகோதரி நீ தான் .....ரகுவிடம் ,அவனுக்கு மனைவி ஒருத்தங்க வந்தா இப்படி தான் சாரி கேட்பியா என்ன .....இதனால் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை ...நீ நல்ல படியாக வந்து சேர்ந்ததே போதும் .....என் வீட்டு பெண்ணுக்கு செய்கிறோம் ...இதில் நீ வருந்த என்னமா இருக்கு ......பட் இதுவே உனக்கு ஒரு பாடமாய் இருக்கட்டும் மதுரா .....எத்தனையோ பேர் சொல்லியும் ...அப்பா சொன்னார் என்று மாட்டினே இல்ல ....இனி இது தெரிந்தால் அவரே உன்னை வேலைக்கு அனுப்ப மாட்டார் ......நாளை காலை குன்னூருக்கு கிளம்பும் வழியை பாரு ......டிக்கெட் புக் செய்து நானே உன்னை கொண்டு போய் விட்டு வரேன் .....உன் சம்பாத்தியத்தில் தான் உன் வீட்டு அடுப்பு எரியும் நிலமை இல்லை .....வேலைக்கு போய் தான் ஆக வேண்டும் என்றால் கார்த்திக் ஆஸ்திரேலியாவில் இதை விட நல்ல ,பாதுகாப்பான வேலை ஏற்பாடு செய்வான் ....துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும் மதுரா ."என்றான் பாலாஜி கண்டிப்பான குரலில்
பெருமூச்சை வெளி ஏற்றிய மதுராவின் முகத்தை பார்த்த மற்ற இருவரும் திகைத்தனர் ."அண்ணா !நீங்க சொல்வது எல்லாம் சரி தான் .ஆனால் அந்த துஷ்ட ஜென்மம் பெவிகால் போட்டு விலக்கவே முடியாமல் ஒட்டி கொண்டே தான் தீருவேன் என்று சபதத்தில் இருந்தால் நான் என்ன அண்ணா செய்வது ????"என்றவள் அன்று மாலை சோனாவின் பங்களாவில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்
சோனா வெட்கம் ,கூச்சம் ,பண்பாடு என்று அறியாமல் சொன்ன சிலவற்றை கட் செய்து விட்டு மேலாக நடந்ததை ,அவள் பேசியதை கூறவும் பல முறை தடுமாற வேண்டி இருந்தது .எப்படி பூசி முழுகி சொன்னாலும் சோனாவின் பேச்சு மகா கேவலமான குற்றச்சாட்டாக தானே இருந்தது.கேவலத்தை எப்படி நல்லதாக கூற முடியும் ....அதுவும் குடும்ப பெண்கள் சொல்ல அஞ்சும் வார்த்தைகள் .
மற்ற இருவரும் திக் பிரமை பிடித்து அமர்ந்து இருந்தனர் .கேட்ட தங்களுக்கே இதை ஜீரணம் செய்வது கஷ்டமாக இருக்கும் போது குற்றம் சாற்ற பட்ட மதுராவின் நிலை !!!!
"சனியன் ....சனியன் .....இது எல்லாம் பிறக்கவில்லை என்று எவன் அழுதது .....வாயில் பச்சை பச்சையா வருது ...சும்மாவடீ விட்டு வந்தே ....பொண்ணா அது கர்மம் ......சரியான கீழ்ப்பாக்கம் கேஸ் ......psycho .......இப்படி எல்லாமா ஒருத்தி பேசுவா .....அதுவும் திருமணம் ஆனவள் ...தன் கணவனை பற்றி ....சே கருணா சார் யாரு ....என்ன மாதிரி மனுஷன் ....அவரை போய் ......மனசே ஆறலைடீ ....."என்றாள் சுபா வேதனையோடு
'சிஸ்டர் 'என்று எந்த பெண்ணையும் வாய் நிறைய அழைப்பவன் .பெண்களுக்கு மரியாதையை தர தயங்காதவன் .....பெண்களை சமமாக கருதும் உத்தமன் ...இவனை போய் ......சே .....நல்லவங்களுக்கு எல்லாம் சீக்கிரம் சாவு வருது .இந்த சோனா மட்டும் குத்து கல்லு போலெ இருக்கு .....போய் தொலைஞ்ச கூட நிம்மதியா இருக்கும் 'மனதிற்குள் புலம்பி தள்ளினாள் சுபா
PENANCE WILL CONTINUE ........ தவம் தொடரும்..................