All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "வஞ்சிக்கொடியும்! வத்தலக்குண்டின் ரகசியமும்!!" கதை திரி

Status
Not open for further replies.

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 44

கண்ணாத்தா கிழவி கொடுத்த ஷாக்கில் இருந்து முதலில் மீண்டு வந்தது நம் மாதவனே. அந்த பேய் சொல்லியதை கேட்டு உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்தது மாதவனுக்கு.

பின்னே இருக்காதா இவ்வளவு நேரம் இந்த பேயை கண்டு பயந்து நடுங்கிய அவனுக்கு, இது ஒரு டம்மி பீசிலும் கம்மியான பீசாக இப்போதுதான் தெரிகிறதே.

போயும் போயும் இந்த நமத்து போன பீசுக்காகவா பயந்தோம் என தன்னையே காரி துப்பிக் கொள்ளலாம் போல் இருந்தது. அதே எண்ணத்துடன் தன் அருகில் இருந்த தன் ஆருயிர் நன்பனை காண அவன் முகத்திலும் அவ்வளவு அதிர்ச்சி.

"டேய் சங்கரு"

மெல்ல அவனை மாதவன் உசுப்ப "டேய் இந்த கெழவிக்காடா நாம பயந்து செத்தோம்"

நம்பவே முடியாத குரலில் அவனும் தன் பங்கிற்கு கேட்க, இவனும் கடுப்புடன் தலை ஆட்டி வைத்தான்.

இங்கோ தன் புருவத்தை சுருக்கிய அரவிந்து "ஏய் கெழவி என்னா சொன்ன உனக்கே இது தெரியாதா? அப்புறம் என்னதான் உனக்கு தெரியும். உனக்கு போயா அவ்ளோ பில்டப் கொடுத்து வச்சாங்க என் வீட்ல" என முன்னதை சுத்தமாகவும் கடைசி வரியை வாய்க்குள்ளும் முணகிவைத்தார்‌.

அரவிந்த் முணகியதை யார் கேட்டார்களோ இல்லையோ அவர் தவப்புதல்வன் கேட்டு விட்டான். சரி இதைப்பற்றி அப்புறம் கேட்டுக்கொள்வோம் என அமைதி காத்தான்.

"ஏலேய் அரவிந்து சும்மா நிறுத்துடே. எனக்கு என்னா தெரியும் இந்த வரபடத்துலதேன் பொதையல எடுக்குற விடை இருக்குன்னுட்டு. என் மாமனாரு இந்த எடத்துல பொதையலு இருக்குன்னுட்டுதேன் சொன்னாவ.

அதை வச்சு இந்த எடத்துலதேன் அந்த பொதையல பொதைச்சு வச்சிருக்காங்கன்னு நெனச்சேன். அதேன் இந்த ரெண்டு பயலையும் கூட போய் கடப்பாரு மம்மூட்டி எல்லாம் எடுத்தார சொன்னேன்"

கிழவி சொன்னதை கேட்டு கடுப்பான மாதவன் "அப்ப உனக்கு என்னதான் தெரியும் கெழவி. பொதையல் எங்க இருக்குன்னு கூட தெரியாமதான் எங்கள போட்டு அந்தபாடு படுத்தினியா. இவங்கள எல்லாம் கடத்திட்டு வர சொன்னது மட்டுமில்லாம மறுபடியும் எங்க ரெண்டு பேரையும் இந்த இத்துப்போன கடப்பாறைய எடுக்க அவ்ளோ தூரம் நடக்க வச்சிட்டல்ல" என ஒரு எமோஷனில் கத்திவிட்டான்.

அதை கேட்டு பல்லை காட்டிய கிழவி "சரி அதை விடுடா என் செல்லாக்குட்டி, இப்ப எல்லாரும் வாங்க வாங்க போயி சட்டுபுட்டுன்னு அந்த பொதையல எடுத்துட்டு இந்த எடத்தை காலி பண்ணுவோம்" என்றது.

கிழவி கூறியதை கேட்டு அங்கிருந்தவர்களுக்கு கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது‌. இந்த கிழவி பிளஸ் இவர்கள் முன்னோர்கள் என அனைவரும் செய்த செயலால், இன்று சம்மந்தமே இன்றி பாதிக்கப்படுவது இவர்கள்தானே அந்த கடுப்புதான்.

"அத்தை நீங்க மாமாவோட இங்கையே இருங்க, கதிரு நீயும் இங்க அத்தைக்கூடவே இரு நானும் உங்க அக்காவும் மட்டும் உள்ள போயிட்டு வரோம்"

சலித்த படி சித்து சொன்னதை கேட்டு ஹப்பாடா என்று மகிழ்ந்த மாதவன் ஆளுக்கு முன்னால் சரி என்றான். அதை கேட்டு அவனை முறைத்த சித்து

"என்ன சரி. எங்க எல்லாரையும் இங்க கடத்திட்டு வந்துட்டு எங்க தப்பிக்க பாக்குற மேன். ஒழுங்கா நீயும் உன் பிரண்டும் என்கூட உள்ள வரீங்க, இல்ல உங்க ரெண்டு பேரோட காலையும் ஒடச்சிவிட்டுதா வேற வேலை பார்ப்பேன் பாத்துக்க"

சித்து வெறிக்கொண்டு தன் அத்தை மகனை பார்த்து உறும, உடன் வர ஒப்புக்கொண்ட அவன் அப்படியே ஆஃப் ஆகிவிட்டான். வேறு வழி பேயை நம்பி இறங்கியதிலிருந்தே நாயை விட கேவலமாய் தானே சுற்றிக் கொண்டிருக்கிறான்.

அப்படியே அங்கு ஓரமாய் கிடந்த கேசவனை சித்து திரும்பி பார்க்க, மனிதன் இன்னும் அந்த சுவரை விட்டு நகரவில்லை.

'சம்மந்தமே இல்லாம இந்த பீசு எப்புடி உள்ள வந்திருக்கும்'

தனக்குத்தானே சித்து கேட்டுக்கொண்டாலும் அந்தாளிடம் பேசி நேரத்தை கடத்தாமல் வீரா மற்றும் நம் டூ இடியட்ஸ் உடன் உள்ளே நுழைந்தான்.

எல்லாருக்கும் முன் அந்த பாதையில் உள்ளே நுழைந்த அரவிந்த், "மை சன் இந்த பாதை இருட்டா இருக்குடா ஒரு தீப்பந்தத்தை தூக்கிட்டு வா" என்று சவுண்ட் விட சித்து மாதவன் இருவரும் ஆளுக்கொரு பந்தத்தை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

ஒற்றையடி பாதை போல் அந்த குகைக்குள் அந்த பாதை போய்க்கொண்டே இருக்க, கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் நடந்தப்பிறகு அவர்கள் கண்முன் அந்த பாதை மூன்றாய் பிரிந்து நின்றது.

"இது வேறையா! ச்சே இந்த பொதையல மறச்சு வச்ச ஆளு சரியான கூறுகெட்ட குக்கரா இருப்பானோ. அதான் என் கைல இருந்து ஒரு சொம்பு பிளட்ட‌ வச்சு இந்த கதவை ஓப்பன் பண்ணிட்டனே இன்னும் என்னய்யா பண்ணனும்"

நொந்துப்போய் சித்து பொலம்பித்தள்ள அதை ஆமோதிக்கும் வண்ணம் நம் அரவிந்தும் பேசி வைத்தார்.

"ஆமா மைசன், இந்த பாட்டன் பூட்டனுங்க எல்லா மூளைய மூட்டைல கட்டி வச்சிட்டு இருந்திருப்பானுங்க போலடா. நம்ம ஜீவன வாங்குறானுங்க"

இப்போது இந்த மூன்று பாதையில் எந்த பக்கம் செல்வது என அனைவரும் குழம்பிபோய் நிற்க,

"ஏய் கெழவி எங்கள எல்லா கூட்டிட்டு வந்துட்டு நீ என்ன அமைதியா நிக்கிற. ஒழுங்கா இதுல எந்த பக்கம் போறதுனு போய் பாத்துட்டு வந்து சொல்லு" என கிழவியிடம் சித்து பொறுப்பை விட்டான்.

கிழவியும் சரி போய்தான் பார்ப்போமே என்ன ஆகிவிடும் என தானும் முன்னால் சென்றது. முதல் பாதைக்குள் கிழவி செல்ல அந்த பாதை போனது போனது போய்க்கொண்டே இருந்தது. கிட்டதட்ட சில மைல்கள் தூரம் போய் பார்த்த கிழவி 'இதுக்கு மேல நம்மால ஆவாது சாமி' என கடுப்பாகி திரும்ப வந்துவிட்டது.

வெளியே வந்த பேய் சித்து தன்னை ஏதும் கேட்டு திட்டும் முன் வேகமாய் அடுத்த பாதைக்குள் புகுந்தது. அதை கண்ட சித்து "ஏய் கெழவி நில்லு" என கத்த கத்த கிழவி அடுத்த பாதைக்குள் சென்றிருந்தது.

"யோவ் மாதவா என்னயா அந்த கெழவி நா கூப்புட கூப்புட கண்டுக்காம போகுது. அங்க என்னத்த பாத்துச்சுன்னு சொல்லாம போகுது. நீ அந்த பேயோட அசிஸ்டென்ட் தானே அது வந்தா நிறுத்துயா"

சித்து இருக்கும் கடுப்பை எல்லாம் தன் அருகில் விதியே என நின்றிருந்த மாதவனிடம் காட்ட

"இங்க பாருங்க சித்து, அந்த கெழவி என்னையெல்லாம் மனுசனாவே மதிக்கிறது இல்ல. இதுல அதுக்கிட்ட போய் என்னைய கேட்டு சொல்ல சொல்லுறீங்களே"

பாவம் மாதவனும் நொந்து போய் பேச, இது தேறாது என தன் பார்வையை அடுத்த டார்கெட்டிடம் திருப்பினான் சித்தார்த்.

"ஆமா நைனா நீ வெளிய இருக்கும்போது என்னவோ அந்த கெழவிய பத்தி சொன்னியே, அந்த டம்மி பீசுக்கு என்னவோ பில்டப்லாம் தந்தாங்கன்னு அது என்னா மேட்டர்"

அவனை விடுத்து அடுத்ததாய் அருகில் இருந்த அரவிந்தை பார்த்து கிழவி வரும்வரை டைம் பாஸ் பண்ண சித்து பேச்சை எடுத்தான். அரவிந்தோ அவர் தந்தை தாத்தா கூறிய ஃபிளாஷ் பேக், அதற்கு இவர் தந்த எக்ஸ்பிரஷன் என அனைத்தையும் தன் மனதிற்குள் ஓட்டி பார்த்து அன்றைய தன்னை நினைத்து நொந்தார் மனிதர்.

"அது ஒன்னும் இல்லடா மவனே, இந்த கெழவி என்ன பண்ணுச்சுன்னு அப்ப யாருக்கும் தெரில. ஆனா இது மந்திரவாதிய வச்சு என்னவோ பண்ணுச்சுன்னு மட்டும் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு. அதான் இதோட போட்டோவ காட்டி, இது ஒரு சூனியகார கெழவி, ரொம்ப ஆபத்தானது, அப்புடி இப்புடின்னு பயங்கர பில்டப் தந்து வச்சிருந்தாங்கடா. அதுவும் இது என்னையவே லாக் பண்ணவும் நானும் அது எல்லாம் உண்மைனு நம்பி தொலைச்சுட்டேன்‌"

அரவிந்த் சொன்னதை கேட்டு சித்து சிரிக்க, அவனை வெறுப்பாய் பார்த்தார் அவன் தந்தை. இவர்கள் இங்கு சிரித்துக் கொண்டிருக்கும் நேரம், அங்கே இரண்டாவது பாதைக்குள் சென்றிருந்த கிழவி பேய் வேகமாய் வெளியே வர அதை துரத்திக்கொண்டு அதன் பின்னால் ஒரு வவ்வால் கூட்டமே வந்தது.

"ஆஆஆஆ....."

வவ்வால் வேகமாய் வந்து தங்கள் மீது மோதி சென்றதில் சித்துவின் கூட்டம் கத்தி கதறிக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் சென்று சுவரோடு பதுங்க, சிறிது நேரத்தில் அந்த வவ்வால் கூட்டம் வந்த வழிக்குள்ளே சென்றது.

"ஹப்பாடி எல்லா போயிருச்சு" என நிம்மதி பெருமூச்சு விட்டு பாதையின் பக்கம் சித்து வர, அவனை பின்தொடர்ந்து மற்றவர்களும் வந்தனர்.

இங்கு நடந்ததற்கு காரணமான கிழவியை தான் வந்ததும் கோவத்தில் தேடினான் சித்து. அந்த கிழவியோ இங்கே நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் மூன்றாவது பாதையின் முன் நின்றிருந்தது.

"ஏய் கெழவி அதுஇதுனு டைலாக் பேசி எங்களை இங்க கூட்டிட்டு வந்து கொல்ல பாக்குறியா. ஒழுங்கா நான் கூப்புடும்போதே இங்கவா, இல்ல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. உன் இஷ்டத்துக்கு நீ அடுத்த பாதைக்குள்ள போயி வேற எதையாவது கூட்டிட்டு வந்துறாத"

நடந்த நிகழ்வில் சித்து வெறிகொண்டு கிழவியை கண்டு கத்த, அதை சிறிதும் கண்டுக் கொள்ளாத கிழவியோ வேகமாய் மூன்றாவது பாதைக்குள் நுழைய சென்றது. ஆனால் பாவம் போன வேகத்தில் எதோ ஒரு சக்தியால் அப்படியே தூக்கி வெளியே வீசப்பட்டது.

அதை கண்டு மற்றவர்கள் வாயை பிளந்து பார்க்க, "ஐயோ அம்மா" என அடிவாங்கிய எபெக்டில் மெல்ல இவர்களிடம் வந்தது கிழவி பேய்.

"இத அப்போதே செய்திருக்கலாம், அடியாவது மிச்சமாகியிருக்கும்" சித்து கிழவியை வாரிவிட்டு "சரி எந்த வழில போனும் சொல்லித்தொலை" என்றான்.

"எலே சித்தார்த்தா எனக்கு என்னவோ அந்த மொத பாததேன் வழினுட்டு தோணுது. ரெண்டாவது பாதையில வவ்வா இருக்கு. மூனாவது பாதைக்குள்ள போகவே முடில. ஆனா என்ன மொத பாதை ரொம்ப தொலவு போகனும்போல"

கிழவி பேய் தான் போய் வந்ததை வைத்து ஒரு கணிப்பாய் சொல்ல, சித்துவும் வீராவும் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்தனர். இருவருக்கும் பேய் சொல்வதை நம்ப மனம் மறுக்க

"அங்கிள் எனக்கு இந்த பாட்டி சொல்றதுல நம்பிக்கை இல்ல. எதுக்கும் ஒருடைம் நீங்க போய் பாருங்களே அப்புறம் முடிவு பண்ணலாம்" சற்று உஷாராக வீரா கூறினாள்.

அவள் சொன்னதால் ஒத்துக் கொண்ட அரவிந்த் முதல் பாதையில் சென்று பார்க்க, அது இருக்காது என்றுதான் அவர் மனம் அடித்துக் கூறியது. எனவே மூன்றாவது பாதைக்குள் மெல்ல கையை நீட்டி பார்க்க, கை உள்ளே போனது.

கிழவி பேயை தூக்கி அடித்த அந்த பாதை இப்போது அரவிந்தை உள்ளே செல்ல முழுதாய் அனுமதித்ததில், 'எப்புட்ரா' என எல்லோரும் ஆச்சரியமாய்‌ பார்த்து இதுல எப்படி உள்ள போறது என யோசித்து நின்றனர். ஆனால் வீராவின் மனதிற்குள் மட்டும் ஒருவேளை இப்படி இருக்குமோ என ஒரு விஷயம் தோன்றியது.

"சித்து எனக்கு என்னவோ உங்களால உள்ள போக முடியும்னு தோணுது" என்றவளை புரியாது பார்த்த சித்து "எப்படி" என்றான்.

"சித்து அந்த புதையல வச்ச ஆளோட காண்செப்ட் என்ன, அவரோட ரத்த வாரிசு மட்டும்தான் இந்த புதையலை எடுக்கனும் அப்படின்றதுதானே. அதான் பாட்டியால போக முடியல அங்கிளால முடியுது. அப்ப உங்களாலையும் போக முடியும்"

பாயிண்ட் பாயிண்டாய் வீரா சொன்ன பின்னரே அதை யோசித்த நம் பையன் 'ஆமால்ல' என்று உணர்ந்து, தைரியத்தை திரட்டிக்கொண்டு அந்த பாதைக்குள் நுழைந்தான். எந்த சேதாரமும் இல்லாது சேபாக நுழைய முடியவும், இதுதான் சரியான பாதையென புரிந்தது சித்துவுக்கு.

அதன்பின்னர் மற்றவர்களையும் தன்னோடு அழைத்து வெற்றிகரமாக முதல் கண்டத்தை தாண்டி 'ஆண்டவா இதுக்கு மேல எந்த கண்டத்தையும் தாங்க இந்த உடம்புல தெம்பு இல்ல. பாத்து பதமா பண்ணி விடுப்பா' என்ற வேண்டுதலுடன் உள்ளே நுழைந்தான் அரவிந்தின் புதல்வன்.

மேலும் ஒரு அரை மையில் அந்த பாதையில் நடக்க, அந்த பாதையின் முடிவு ஒரு விசாலமான இடத்தில் இவர்களை கொண்டு சென்றுவிட்டது. அவர்களை கட்டி வைத்திருந்த இடத்தை விட சற்று பெரிதாகவே இது இருக்க தன்னிடம் இருந்த மேப்பை எடுத்து அந்த இடத்தோடு ஒப்பிட்டு பார்த்து இங்குதான் அந்த புதையல் இருக்கிறது என ஒருவழியாய் கண்பார்ம் பண்ணினான் சித்து.

மேப்பில் ஒரு அம்பு குறி போட்டு புதையல் இருக்கும் இடத்தை அது காட்டியிருக்க, நல்லவேளை மம்முட்டி கடப்பாரை சகிதம் நம் டூ இடியட்ஸை அழைத்து வந்தது நல்லதாய் போனது என நிம்மதி பெருமூச்சு விட்டு முன்னால் ரெண்டு அடி தான் எடுத்து வைத்திருந்தான்.

அவன் பின்னால் நின்றிருந்த வீரா அவனை சடாரென பிடித்து பின்னால் இழுத்திருந்தாள்.

'ஏன்டி' என்ற கேள்வியோடு சித்து பார்க்க, வீரா அவன் தலையை பிடித்து சைடில் திருப்பி காட்டினாள். அங்கே சுவரில் ஒரு கத்தி குத்தியிருக்க சித்துவுக்கு ஒன்னும் புரியவில்லை. தலை சொறிந்தபடி "என்னடி ஆச்சு" என்று குழப்பத்தில் கேட்டான் சித்து.

"சித்து நீங்க கால் வச்ச நேரம் அந்த கத்தி இந்த சைடு சுவத்துல இருந்து பறந்து வந்துச்சு, அதான் நான் உங்களை புடிச்சு இழுத்தேன். ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சிருக்கீங்க"

வீரா சொன்னதில் 'அட கேடுகெட்டு திருட்டு நாயே, இவ்ளோ டெக்னிக்கா ஆட்டைய போட்டதெல்லாம் மறைச்சு வச்சிருக்க. என்னதாய்யா உன் மனசுல நெனச்சு இதெல்லாம் பண்ணி வச்ச' கடுப்பாக எண்ணி வைத்தான் சித்து.

இதற்கு மேல் இன்னும் எனென்ன கண்டம் எல்லாம் காத்திருக்க போகிறதோ என்று பயத்தோடு முன்னால் சித்து பார்த்து நிற்க, அவனின் கையை ஆதரவாய் பிடித்துவிட்டாள் வீரா நான் இருக்கிறேன் என்று சொல்வதைப் போல். அந்த புதையலை எடுக்க இன்னும் என்னென்ன கண்டத்தை தாண்டனுமோ என்று என்னும் போது கண்ணை கட்டியது நம் புதையல் தேடும் கேங்குக்கு.

-ரகசியம் தொடரும்

 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரகசியம் - 45

அங்கே நின்றிருந்த யார் முகத்திலும் சற்றும் தெளிவில்லை. அதுபோக முன்னால் சென்றால் கத்தி வந்து பின்னால் குத்துமே, அதனால் எப்படி உள்ளே செல்வது, இன்னும் இங்கே என்ன புதுவித டுவிஸ்ட் இருக்கிறது என பயந்து போய் நின்றிருந்தனர் நம் சித்து கேங்.

"டேய் மவனே அந்த மேப்ல எதாவது குளூ போட்டுக்கான்னு பாருடா. நீ உன் இஷ்டத்து போயி கத்தி குத்து வாங்கி செத்து கித்து தொலைச்சிடாதடா"

மகனின் மீதிருந்த அக்கரையில்தான் நம் அரவிந்தும் பேசினார். ஆனால் எப்போதும்போல் அவர் டோனில் நக்கல் தொனி கலந்துவருவதை அவரால் தடுக்கமுடியவில்லை.

"அடஇருயா நீ வேற நானும் அதைத்தான் பாக்குறேன். எங்க இதுல எப்புடி எந்த வழியா போகனும்னு போட்டிருக்கே தவிர வரப்போற டேஞ்சரை எல்லாம் எப்படி பேஸ் பண்றதுன்னு போடலையா" சித்து பதற்றத்தில் அவனும் கடுகடுத்து வைத்தான் அவனை பெற்றவரிடம்.

"ஏய் கெழவி என்ன அப்புடியே செலையாட்டம் நிக்கிற. உள்ள போவ எதாவது வழி தெரியுமா உனக்கு"

எல்லோரும் குழப்பத்தில் நிற்பதை கண்டு மாதவன்தான் கிழவியிடம் கத்தினான். கண்ணாத்தா பேய்க்கு நம் டூ இடியட்ஸ் பயந்ததெல்லாம் அந்த காலம், எப்போது கிழவி ஒரு டம்மி பீசு என தெரிந்ததோ அப்போதுலிருந்தே கிழவி மீதான மரியாதை போய்விட்டது இருவருக்கும்.

மாதவன் கேட்டதற்கு "நான் என்னத்தடா கண்டேன்" பாவம் போல் பதில் சொல்லியது கண்ணாத்தா பேய்.

கிழவியின் பதிலில் கடுப்பாகிய சித்துவோ "நான் என்னத்த கண்டனா, ஏய் கெழவி உனக்கு என்னதா தெரியும். எங்க எல்லாரையும் இங்க இழுத்துட்டு வரமட்டும் தெரியும்ல" என எகிறினான்.

இதை எல்லாம் கண்டுக்கொள்ளாது "இப்ப என்ன பண்றது வீராம்மா? என்ன பண்லாம்னு எனக்கு எதுவும் தோனலையே, நீயே சொல்லும்மா"

பதற்றத்தில் எந்த ஒரு ஐடியாவும் வராததால் வீராவிடம் கேட்டு நின்றார் அரவிந்த்.

"ஆமா வீரா என்ன பண்றதுன்னு எதாவது ஐடியா பண்ணு செல்லம். அந்த வெவஸ்த்த கெட்ட முன்னோர் முண்டம் என்னென்ன வேல பண்ணி வச்சுட்டு போயிருக்கு பாரு. நீதான் எதாச்சும் ஐடியா பண்ணி எல்லாரையும் காப்பாத்தி விடனும்டா"

சித்து தன் பங்கிற்கு அவனும் வீராவிடமே கேட்டு வைக்க, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்த‌ வீராவுக்கு எப்போதும்போல் 'இனி இவங்களை நம்பி அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை' என்ற உண்மை காலதாமதமாக புரிந்தது.

'ஆனா என்ன பண்றதுன்னுதான் எனக்கும் புரியலையே. சரி‌ யோசிப்போம்' என உள்ளே அலறிய வீரா, அவர்கள் இருந்த இடத்தை சாதாரணமாய் சுற்றி பார்க்க அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

'இப்பன்னு பாத்து என் சிஐடி கண்ணுக்கும் ஒரு எழவும் தெரியமாட்டேங்குதே. இப்படியே போனா சரிவராது' என கண்களை மூடி நன்கு மூச்சை இழுத்து விட

"என்ன வீரா இந்த நேரம்னு பாத்து மூச்சு பயிற்சி எல்லாம் பண்ற. சீக்கிரம் கண்ண தொறடி" சித்து வேறு நான்சிங்கில் வந்தான்.

தன் கவனத்தை ஒன்று திரட்ட முயன்றிருந்த வீரா சித்துவின் நாராசமான வார்த்தைகளை கேட்டு கடுப்பில் கண்ணை திறந்து "கொஞ்ச நேரம் உங்க வாயை மூடுங்க சித்து என்னை யோசிக்க விடுங்க" கத்தி விட்டாள் வீரா.

கோபத்தில் வீரா எகிறிக் கொண்டு வந்ததில் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டான் சித்து. சித்துவை ஆஃப் செய்தவுடன் தன்னை சாந்தப்படுத்திக் கொண்ட வீரா, தங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என ஒவ்வொரு இடத்தையும் நன்கு உற்று பார்க்க அப்போதுதான் அந்த வித்தியாசம் அவளுக்கு கொஞ்சம் தெரிந்தது.

"சித்து கொஞ்ச தள்ளுங்க"

தன் அருகில் நின்றிருந்த சித்துவை சற்று ஓரமாக தள்ளிவிட்டு கீழே குனிந்து ஒரு இடத்தில் இருந்த மண்ணை தட்டிவிட, மற்றவர்கள் வீராவை குழப்பமாய் பார்த்து நின்றிருந்தனர்.

"அங்கிள் சித்து இங்க பாருங்க" அந்த இடத்தை வீரா சுட்டிக்காட்ட, அங்கு ஐந்து விரல்கள் கொண்ட கையின் அச்சு போல் ஒரு சிம்பல் இருந்தது.

"இந்த கை சிம்பல் இதை பாருங்க‌. அங்க குகை கதவை திறக்க கூட இந்த மாதிரி ஒரு சிம்பல் மேலதான் சித்து கை வச்சாரு"

வீரா சுட்டிக்காட்டியப் பின்னரே அதை உணர்ந்த சித்து "ஆமா வீராம்மா! நீ சொல்றது கரெக்ட். இது அதேமாதிரி ஒரு சிம்பல்தான். இருடா இதேமாதிரி சிம்பல் வேற எங்கையாவது இருக்கான்னு பாக்குறேன்" சித்து நின்ற இடத்திலிருந்தே எட்டி பார்க்க, அதே மாதிரி வரிசையாக அங்கங்கு சிம்பல்கள் இருப்பதை கண்டு அதை வீராவிடமும் காட்டினான்.

"சித்து எனக்கு என்னவோ இந்த சிம்பல் மேல கால் வச்சு போனா எந்த ஆபத்தும் வராதுனு தோனுது"

வீரா சொன்னதற்கு அரவிந்த் ஆளுக்கு முன் ஆமாம் என மண்டையை ஆட்டி "டேய் மவனே எனக்கு என்னவோ அந்த சிம்பல் மேலையே நடந்துபோனா நாம போக வேண்டிய இடத்துக்கு போயி சேந்தர்லாம்னு தோனுதுடா. அதனால டைம் வேஸ்ட் பண்ணாம சட்டுப்புட்டுனு அதுமேல நடந்து போடா" வீரா சொன்னதை அச்சுப்பிசகாமல் தானும் சொல்லி சித்துவை ஏவிவிட்டார் மனிதர்.

"ஓகே ஓகே! மொதல்ல இருக்க சிம்பல் மேல காலை வச்சு பாக்குறேன் கத்தி கடப்பாரன்னு எதாவது வருதான்னு பாருங்க. அப்படி எதுவும் வரலைனா அப்படியே எல்லாரும் என்ன பாலோ பண்ணி பின்னாடியே வந்திருங்க"

தன் பின்னால் நின்றிருந்த வீரா மாதவன் சங்கர் மூன்று பேரிடமும் கூறிய சித்து ஊரில் இருந்த அத்தனை தெய்வத்தையும் கும்பிட்டு, தன் வலது காலை அதுவும் சற்று எட்டவே நின்று அந்த சிம்பலில் வைத்து அழுத்தினான் சித்து. வீரா சொல்லியிருந்ததைப் போலவே எந்த பக்கம் இருந்தும் எந்த ஆயுதமும் வரவில்லை.

"ஹப்பாடி எதுவும் ஆகலை" நிமம்தி அடைந்த சித்து

"வீரா நான் முன்னாடி போறேன், நீங்க பின்னாடியே வந்திருங்க என்னமா" பாசமாய் கேட்ட சித்துவை திட்டக்கூட முடியாது சரியென தலையை ஆட்டி வைத்தாள் அவன் அன்புக்காதலி.

மிக மெதுவாக கவனமாக ஒவ்வொரு சிம்பலிலும் தன் காலை எடுத்து வைத்து முன்னேறி சென்ற சித்து ஒருவழியாக அந்த இடத்தை கடந்தான். அவன் பின்னால் வீரா, மாதவன் மற்றும் சங்கர் மூவரும் வர, அவர்களுக்கு பின்னால் தாங்கள் பேய் என்பதையே மறந்து அவர்களைப் போலவே வந்த கண்ணாத்தா கிழவியையும் அவனின் ஆருயிர் தந்தையையும் கண்டு தலையில் அடித்துக் கொண்டான் சித்து.

"ஏய் கெழவி, யோவ் நைனா! உங்க ரெண்டு பேருக்கும் பேருக்காவது மூளைன்னு ஒன்னு இருக்கா. அவங்கதான் மனுஷங்க இப்புடி வராங்க, உங்க ரெண்டு பேருக்கும் என்னா கேடு வந்துச்சு. செத்துப்போய் பேயா சுத்துறீங்கல, அப்படியே காத்துல பறந்து வர தெரியாதா"

சித்து இருவரையும் கேவலமாக திட்டியப்பின்னரே அதை உணர்ந்த கிழவி "அட ஆமால்ல, இது எனக்கு தோனாமா போயிட்டுதே" என்றவாறு முன்னால் பறந்தது.

"அ..அது எனக்கும் தெரியும்டா மவனே! ஆனா உங்கள மாதிரி நடந்து பாக்கலாமேன்னு நானும் டிரைப் பண்ணுனேன்" அரவிந்த் கேவலமாக சமாளித்து இளித்து‌ வைக்க, த்தூ என துப்பினான் மகன்‌.

இப்படி அமளிதுமளியுடன் இரண்டாவது லெவலையும் வெற்றிகரமாக நம் சித்துவின் கேங் முடித்துவிட "சித்து இன்னும் நாம எவ்ளோ தூரம்தான் போகனும் அந்த மேப்ப பாருங்க" என்றாள் வீரா சலிப்பாக.

தன் பேக்கெட்டில் இருந்த மேப்பை எடுத்த சித்து அதை ஒரு இரண்டு நிமிடம் குறுகுறுவென பார்த்தவனின் முகம் சட்டென பிரகாசமானது.

"வீராம்மா அவ்ளோதான் போலடா, இங்கபாரு நாம நிக்கிறது இதோ இந்த இடம். இங்க இருந்து கொஞ்ச தூரம் முன்னே போனா இதோ இங்க ரெட் மார்க் பண்ணிருக்கே அங்கதான் புதையல் இருக்கும் போல"

சித்து காட்டியதை தானும் பார்த்த வீரா 'ஹப்பாடா ஒருவழியா எல்லா கண்டத்தையும் தாண்டி வந்துட்டோமா' நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஆனால் 'என்னவோ ஒன்னு இடிக்குதே' என்று வீராவின் மனதிற்குள் தோனவும்‌ செய்தது. எனவே ஆளுக்கும் முன் வேகமாக முன்னேறி செல்லப் போன சித்துவை பிடித்து பின்னே இழுத்து தடுத்தாள்.

"என்னாச்சு வீரா, எதுக்குடி என்ன புடிச்சு இழுத்த" புரியாமல் பையன் கேட்டு நிற்க

"இல்ல சித்து இங்க பாருங்க‌. இதுல இன்னும் கொஞ்ச தூரம் கோடு இருக்கு. ஏற்கனவே நம்ம உள்ள வரதுக்குள்ள எவ்ளோ டேஞ்சர் இருந்தது. நீங்க பாட்டுக்கு அசால்ட்டா கால வச்சு வேற ஏதாச்சும் நடந்துட்டா என்ன பண்றது. இருங்க யோசிச்சு கால வைப்போம்" முன்னெச்சரிக்கை செய்தாள் வீரசுந்தரி.

அவள் சொன்னதிலும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்தது. ஏனெனில் இந்த புதையலை மறைத்து வைத்திருக்கும் அந்த முன்னோர் இங்கு எதாவது புதுவித டுவிஸ்டை வைத்திருக்கும் பிராபபிளிட்டி இருநூறு பர்சண்ட் இருப்பதை உணர்ந்து சித்துவும் அமைதியாக நின்றுக்கொண்டான்.

'என்னப் பண்ணலாம்' தீவிரமாக வீரா யோசிக்க, அவளை சுற்றி நின்றிருந்த மூன்று மனித மாக்கான்கள் மற்றும் இரண்டு பேய் ஜந்துக்கள் வீரா என்ன சொல்ல போகிறாள் என பார்த்திருந்தார்களே தவிர சின்னதாக யோசிக்கும் பாவைனையை கூட தரவில்லை. முடிலில் வீராவின் தீவிர முயற்சியின் பலனாய் ஒரு ஐடியாவும் கிடைத்தது.

மாதவனை நோக்கி திரும்பிய வீரா "மாதவன் நீங்க என்ன பண்றீங்க, உங்க கைல இருக்க கடப்பாரைய கொண்டு போய் அங்க இருக்க கட்டத்துல வைங்க. ஆனா ரொம்ப பக்கத்துல போயிடாமா, கொஞ்சம் தூரமா இருந்தே வைங்க. சித்து எதுக்கும் நீங்க மாதவன சப்போர்டா பிடிச்சுக்கோங்க. ஏன்னா எதுவேனா நடக்கலாம், இல்ல நடக்காமலும் போகலாம்"

வீரா எதற்கு சொல்கிறாள் என புரியாத போதும் அவள் சொன்னதை இருவரும் அப்படியே செய்தனர்‌. மாதவன் உசாராக நன்கு தூரமாக தள்ளி நின்றபடி கடப்பாரையை வைக்கப்போக அவன் பின்னால் சித்து அவனை ஸ்ராங்காக பிடித்துக் கொண்டான்.

பெரிய பெரிய கட்டங்கள் இருக்க ஒரு கட்டத்தில் அந்த கட்டாரையை வைக்க, ஒன்றும் ஆகவில்லை.

"ஹப்பாடா ஒன்னும் ஆகலை" சந்தோஷத்தில் மாதவன் இதுவரை லேசாக அங்கே வைத்திருந்த கடப்பாரையை சற்று வேகமாக வைத்து அழுத்த, இதுவரை சாதாரண தரையாக இருந்த அந்த கட்டம் டமாரென்ற சத்தத்துடன் திறந்துக்கொண்டது.

சத்தம் கேட்ட அதிர்ச்சியில் சித்து மாதவனை பிடித்து பின்னால் இழுக்க, பொத்தென இருவரும் மல்லாக்க விழுந்தனர். கொஞ்ச நேரம் என்ன ஆனது என்றே புரியாமல் திகைத்து போய்விட்டனர் இருவரும்.

"என்ன ஆச்சு வீரா" அதிர்ச்சியில் ஆந்தைப்போல் கண்களை விரித்த சித்து கேட்க

"அது ஒன்னுமில்ல சித்து இப்ப கடப்பாரைக்கு பதிலாக நாம காலை வச்சிருந்தோம்னா டமார்னு பூமி பொழந்து நாம எல்லாம் அந்த குழில விழுந்திருப்போம் அவ்வளவுதான்" அசால்டாக சொல்லி நிறுத்தினாள் அவள்.

வீரா சொன்ன தினுசில் தாங்கள் கடப்பாரையை வைத்த இடத்தை எட்டிப்பார்த்த சித்துவின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது. பின்னே அதனுள் பத்தடி பள்ளம் இருக்கிறதே. அவசரப்பட்டு சித்து காலை வைத்திருந்தால் பப்பரப்பே என வழுக்கி தாறுமாறாக உள்ளே விழுந்திருப்பானே. இவ்வளவு பெரிய ஷாக்கில் இருந்து சித்து வெளியே வரும்முன் அந்த பள்ளம் மீண்டும் மூடிக்கொண்டது.

அடுத்து இருக்கும் இந்த பெரிய தடையை பார்த்ததில் மூளை வேலை நிறுத்தம் ஆகிவிட, இதை தாண்ட என்ன செய்வதென வீராவை பார்த்து நின்றான் பாவப்பட்ட அரவிந்தின் மகன்.

-ரகசியம் தொடரும்

 
Status
Not open for further replies.
Top