All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல சிஸ் ஆனா படிச்ச வர இந்த கதை எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருந்தது கதை அதுவும் விக்ரம் அதிதி ஜோடி சான்சே இல்ல மேட் ஃபார் ஈச் அதர் கார்த்திக் சைத்ரா இந்த ஜோடி பண்ற குறும்புகள் சேட்டைகள் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சில இடங்கள்ல குழந்தையாகவும் சில இடங்கள்ல முதிர்ச்சியாக இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற விதம் ரொம்ப அருமை கார்த்திக் மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைக்கனும் என்று ரொம்ப ஆசையா இருக்கு அப்புறம் கௌதம் இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் அவன்தான் காதலை சொல்லில் இல்லாமல் செயலில் காட்டியிருக்கிறான் உதயா கௌதமின் காதலுக்காக ஏங்குவதும்அவனுடைய பார்வைக்கான அர்த்தங்கள் புரியாமல் விழிக்கிறது பின் உணர்வுகளின் தாக்கம் தாங்காமல் வெடிக்கிறது இன்றைய பல பெண்களின் மனநிலையை இந்த உதயா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருக்கீங்க இந்த கதையின் முடிஞ்சதுன்னு தோணுது அவ்வளவு அழகாக இருந்து படிக்க அவ்வளவு அற்புதமாக இருந்தது பட் லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல அதுக்குள்ள லிங்க் நீக்கப்பட்டுவிட்டது ஆனால் படித்த வரை ஒரு அருமையான உணர்வு கதையின் உள்ளே வாழ்ந்த உணர்வு
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

இந்த கதையில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவம் என்று சொன்னால் அது மிகையாகாது. முதலில் இந்த தலைப்பே என்னை ஈர்த்துவிட்டது. அதே போல் கதையும் தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியம் மிக்கதாகவே இருந்தது. மதுரையில் தொடங்கி மீண்டும் மதுரையில் அழகரின் தரிசனத்தோடு முடித்திருந்தது மனநிறைவை தந்தது.

என்னை கவர்ந்தவை
பெரும்பாலான கதைகளில் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் எண்ணங்கள் உடையவர்களாகவே இருப்பர். ஆனால் இதில் நீங்கள் எதிர் எதிர் துருவம் தான் ஈர்க்கும் என்னும் விதியை மாற்றி ஒத்த குணம் உடையவர்களுக்கும் ஈர்ப்பு ஏற்படும் என்று அழகாக காட்டிய விதம் அருமை 😍😍

மூன்று ஜோடிகளுக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்தது👌

அன்பான குடும்பத்தோடு பயணிக்க வைத்தது. அண்ணன் - தம்பிகள், அக்காள் - தங்கைகள் ஒற்றுமை மற்றும் பாசத்தை காட்டிய விதம் 👌காளிராஜ் - வசுந்தரா அன்பான அப்பா, அம்மாவாக தங்கள் பெண்களையும் மாப்பிள்ளையையும் வழிநடத்தினார்கள் என்றால் சங்கர் - நண்பனின் துரோகத்தால் அனைத்தையும் இழந்த போதிலும் நற்பண்புகளை இழக்காமல் அப்பண்புகளை தனயன்களுக்கும் கொடுத்து விட்டே சென்றிருக்கிறார்👌

கல்யாண வைபோகத்தில் திருமண அழைப்பிதழ் தொடங்கி சடங்கு, சம்பிரதாயங்கள் அதற்குரிய விளக்கங்கள், மணமேடை அலங்காரங்கள், மாப்பிள்ளை - பெண் உடை வர்ணனை, பெண்ணின் அலங்காரம் என ஒன்றையும் விட்டுவிடாமல், அவர்கள் திருமணத்தை நான் அருகில் இருந்து பார்த்தது போல் ஒரு அனுபவம் 🤩🤩

மதுரையையும் ஸ்விஸையும் சுற்றி காட்டிய விதம். மதுரை நகர் சிறப்பை அழகாக காட்டியிருந்தீர்கள் 👌😊குறிப்பாக ஸ்விஸ் பயணதின் போது உங்கள் வர்ணனை அனைத்தும் அற்புதம் 😯😯👌👏இரயில் பயணம், ஷுரிச் ஏரியில் படகு சவாரி, ரோப் கார் பயணம், தோட்டம், சுவர் சித்திரங்கள், சிங்கத்தின் சிற்பம், பனிக்கட்டிகளில் விளையாடியது என அனைத்தும் மறக்க முடியாதது. புகைப்படங்களும் கூடுதல் சிறப்பு சேர்த்தது. அங்குள்ள உணவு வகைகளையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. மொத்தத்தில் உங்கள் வர்ணனையே என்னையும் அவர்களோடு ஸ்விஸ் பயணத்தை அனுபவிக்க வைத்து விட்டது 😊😊

மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு வகையில் ஈர்த்தாலும், கார்த்தி - சைத்து இவர்கள் செய்த சேட்டைகளை மறக்கவே முடியாது. ஒன்றிரண்டு காட்சிகளை தவிர்த்து அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைத்தவர்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கார்த்தி - இப்படியொரு தம்பி நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவன். சேட்டை ஒருபக்கம் என்றாலும் இன்னொரு புறம் அவனின் முதிர்ச்சியான பேச்சாலும் செயலாலும் பெரிதும் கவர்ந்தவன்😍

பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க
என பொழுது புலர்வதை குறிக்கும் இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தவை😯👌

இணைப்பு தகவல்கள் - நான் அறியா பல தகவல்களை என்னிடம் சேர்த்தவை👌👌👌

நெகிழ்வு பலகை தொடங்கி வம்மி நிறம், பட்டியலட்டை, நிரலாக்கம், ஆளரி அட்டை, இயங்கலை, ......... சுயமி வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களுக்கு அழகான தமிழ் வார்த்தையை கொண்டு சேர்த்தது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

விக்ரமின் வலி

இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்.
ஆனால் உனக்கில்லை.

என அவனின் மொத்த வலிகளையும் மூன்று வரிகளில் ஆழமாக உணர்த்திய விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது 👏👏👏

அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த உங்கள் கவிதை வரிகளை எப்படி மறக்க முடியும்........

தந்தை
அவர் !

உடல் தந்த உயிர்.
உயிர் காத்த மனிதன்
மனிதம் சொல்லி தந்த ஆத்மா
ஆத்மார்த்தமாக நேசிக்க கற்று தந்த
அவர்.. !
எங்கள் தந்தை


........
நோய் பிணி என்றால் அன்னையை
தேட வேண்டுமா?
அவர் தான் எங்களுக்கு
தாயுமானவனாக
இருக்கிறா(ந்தா)ரே !

என முடியும் வரிகள்

விக்ரம் - அதிதி
அதீதங்களும்
அடிபட்டு போகும்
அன்பனின் ஆர்ப்பரிக்கும்
காதல் முன்!


கார்த்தி - சைத்து
விழிநீர் தாங்காத நான்
உனக்கான கண்ணீரிலும் ஆனந்தம் கொண்டு நிற்கிறேன்
..........................
அனைத்தும் வேண்டுமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்
இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் கவனத்தை...
உன் சுவாசத்தை...
உன் காதலை...
உன் தீவிரத்தை...

என முடியும் வரிகள்

...........
இனி ஒரு பிறவியென்றாலும்
உன்னில் நான்.. நான் மட்டுமே
காதலாகவும் உன் உடமையாகவும்

என முடியும் வரிகள்

......
சிக்கி தவிக்கும் என்னை, அன்பால்
வதம் செய்யும் வசியக்காரன் நீ..!

என முடியும் வரிகள்

கெளதம் - சைத்து
என்னை பிடிவாத காதல்

செய்யடி பெண்ணே.. !
உன் காதலின் சுவாசத்தில்,
நொடி நொடியும் புதிதாய்
உயிர்த்தெழுந்து காதல் மோட்சம்
பெறுகிறேன்...

கடற்கரை மணலில் அவன் கரம்
பிடித்து நடக்க ஆசைப்படும் அதே
பழைய கால காதல் பெண் தானே நான்!
........
கண்ணீர் அவனுக்காக எனும் போதும்,
அதன் முதல் துளியை அவன் உதட்டின்
ஈரத்தில் மறந்திட துடிக்கும்
பேராசைக்காரி தானே நான் !

......
காதல் பித்தம் தலைக்கேற்ற
செய்கிறாய் அன்பே... !
உனது நொடி நொடி ரசிப்பும், சிறு சிறு
லயிப்பும் எனக்காக மட்டுமாக
இருந்திட கேட்கும் காதல் பித்தம்
தலைக்கேற்றுகிறாய் என் ஆருயிரே.. !

என முடியும் வரிகள்

.......
ஆழமாய் பதிந்து போன உன் நெற்றி
பொட்டின் அழுத்தத்தில் சொல்லிவிடு
இனி நான் மட்டுமே அங்கு தஞ்சம்
கொள்வேனென....

என முடியும் வரிகள்..

மொத்தமாய், மிக மொத்தமாய்
உன் பார்வையில் என்னை
ஆயுள் கைதியாக சிறையெடு !
வாழ்ந்து பார்க்கிறேன் உன் விழிகளுடனாவது!
..........
நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக

எதை நான் கேட்பின் உனையே தருவாய்
என் மொத்த பிரதிபலிப்பே... !


இவ்வாறு உங்கள் அனைத்து கவிதை வரிகளையும் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டே போகலாம்......
உங்கள் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து போட்டாலே கதையும் அதனுள் அடங்கிவிடும். எளிமையான அந்த வரிகளிலேயே அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.....
*********
விக்ரம் - அதிதி ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் காதலில் மூழ்கி திளைத்தவர்கள் என்று சொல்லலாம் ( காதல் பறவைகள் ) ஊடல் ஏற்பட்ட போதும் அதை விரைவில் சரி செய்து கொண்டவர்கள். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல், தவறு செய்தால் உடனே தங்கள் இணையிடம் சரணடைவது என இவர்கள் புரிந்துணர்வால் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவே திகழ்ந்தனர் 😍😍😍😍

கார்த்தி - சைத்து திருமணம் இப்போது வேண்டாம் என்ற ஒத்த கருத்தினால் இணைந்தவர்கள். வாழ்க்கையை இலகுவாக கடப்பவர்கள். விளையாட்டு பிள்ளைகள் போல் தெரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் அளப்பரியது. ஒரு சின்ன பிரிவால் அவர்கள் அறியாமல் உள்ளத்தில் புகுந்திருந்த காதலை உணர்ந்தவர்கள். அதன்பின் பிரிவு என்ற வார்த்தையே அறியாதவர்கள் (இணைபிரியா பறவைகள்) அவர்கள் சேட்டைகளை போல் அவர்களின் காதலையும் நம்மை இரசிக்க வைத்தவர்கள் 😍😍😍😍😍

கெளதம் - உதயா அழுத்தமான தம்பதிகள். உள்ளம் முழுதும் நிறைந்த தீவிர காதலை தங்கள் இணையிடம் வெளிப்படுத்தாமல் தங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தி கொண்டவர்கள். அவர்கள் வார்த்தையில் சொல்லாத அவர்கள் காதலை உங்கள் கவிதை வரிகள் சொல்லிவிடும். மீண்டும் உங்கள் கவிதை வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிடித்தம், பேராசை, ஆழமான அன்பு, பித்தம் என அவர்கள் சொல்லா காதலை உங்கள் வரிகள் சொல்லிவிட்டது 👌👌👏👏😍😍உணர்வுகளை அடக்கிவைத்து அது ஒரு நாள் வெடித்து சிதறி அவர்களை பிரித்து வைத்து இன்னும் அவர்களை காதல் பித்தம் கொள்ள வைத்தது எனலாம். அதன்பின்னே அவர்கள் உணர்வுகளை இணையிடம் வெளிப்படுத்தி தெளிவு அடைந்தார்கள்😍😍😍😍😍 ( காதல் தீவிரவாதிகள் இவர்கள் ) சொல்லா காதல் செல்லாது என்பதற்கும் இவர்கள் உதாரணம்.

" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " இந்த தலைப்பு இவர்களுக்கே பெரிதும் பொருந்தும் என்று நினைக்கிறேன். முந்தைய ஒரு பதிவில் நீங்கள் போட்ட புகைப்படமும் அதன் வாசகமும் இவர்கள் இருவருக்குமே பொருந்தும் என நினைக்கிறேன். ( இவை இரண்டிலும் என் புரிதல் சரியா இல்லை தவறா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் சிஸ் )
ரம்யா அக்காஆஆஆஆ.....பின்னீட்டீங்க.... செம்ம...சூப்பருஉஉஉஉஉ🙌🙌🙌🙌🙌🙌🙌🙌❣️❣️❣️❣️
 

Subha17

Member
// sis ... //


Welcome back sis ❣


//Actual uh na story uh sunday ve padichiten .... But irundhalum marupadium padika asaiya irundhu cha so once again oru read vitten adha review kuduka late //


Awwwww. ..unga comment eppaium enaku much awaited comment sis 😍 u r a complete reviewer 💘



//seringa sagooo as usual indha story uh padika arambichapo na feel panna vishayam its nothng but a psychological analysis of difference in behavioural pattern in ppl . Surukama sonna extrovert introvert and ambivert ppl oda brain functioning and behaviour analysis . Na correct uh guess senjananu therla ...thappa irundha porutharulga  ... Ivlo azhaga oru psychological romedy kuduthadhuku vazhthukkal....//


Perfect ..! Just perfect !!



இந்த விஷயம் வச்சு தான் total story , athai முதல் comment laiye சொல்லிட்டீங்க 😍😍நிஜமா ஜாலி ஜாலியா இருக்கு 😘


நிறைய பேர் கேட்டாங்க ,ஆனா நான் full explain pannala..kandipa pannanum ninaichean..nyt I will come with short notes on it 😍happy that you mentioned it 💘




//Kalyana sadangu , swiz tour yalla enamo naangale poitu vandhapdi irundhuchi avlo arumai .... //


Ha ha naanum avanga Kuda travel panrean..happy that you traveled with them sis 😍


//Next 3 jodi um adi dhool//

🧡💚


// vikram aditi ambivert  na udhaya goutham bayangara introvert chaitra karthik extrovert (idhula enaku doubt eh ila).//


Undoubtedly u r on point 👏👏👏👏👏👏


// Porupa thangachingala vazhi nadathuradhagatum ,enna tha husband uh irundhalu en self respect enaku mukyam nu ava stand la nikkardhagatum , husband ku critical situation la thol kudukardhagatum yalathulaum aditi score panita //


அதிதி - mrs perfect 😯😯

Love s all, but she has her own pride( self respect) ❤ivalo than athithi which you have summarised well 💘




//thambinga mela uyireye vekkaradhagatum plus thambingaluku porupa pirichi kudukardhagatum appa sonna varthaya meerama nadandhukardhagatum...pondatiya thango thangu nu thangarthagatum sanda pota udane samathanam agarthula um namma vikram suma dhool kelapitaan //


Vikram - Mr.perfect..

கடமையும் காதலும் சரியாக கையாள தெரிந்தவன்..அவனது காதலே அவனது பலம் மற்றும் பலவீனம் ❤



// aduthu ivan enna make oh enna design oh nu namala mandaya pichika vechi , oh adangappa saami ivlo la oru ponna manasu kula ipdi la luvva mudiuma, analum ivlo azhutham kuduthu nu namala yosika vekkardhagatum, chella per vekkardhulaum adha yaarum use seiya kudathunu possessive agarthum ennala thanga mudilaidhella correct ta pannu ana udhaya ta luv uh matu solliradhe nu nenakama iruka mudila sister , but ava mela luv irundhum workaholic uh marura tharunam padikum bo gowtham reminds f so many couples f ths generation in reality , but kadasila avalta luv uh puriya veikaradhu sema  //


Yes sis ..ippo irukka generation Ku தேடல் நிறைய இருக்கு..ஆனா எல்லாரும சைத்து matiri இருப்பது இல்லை, சில நேரங்களில் கௌதம் matiri mariduranga..i have shown them the reflection..if anyone get remedy or correct themselves I would be most happiest..athukaga avangala change panika சொல்லல, its their individuality, but to withhold the relation they want ,there they have to take some steps 🤷🤷🤷🤷



//udhaya , "jaadi ku eetha moodi "  hmmm adengappa evlo ego oru phone call senju pesa adhu avan vangi kudutha phone la analum iva konjam pavam tha gowtham oda azhuthathukkum ivaloda ego kum sema porutham ponga....manasula avan mela avlo luv irundhum avalala express seiyave mudila bcoz ava nature eh avlo expressive illangaradhe azhaga katirkinga...gowtham ava b day ve marandhalum avana yalar munadium vittu kudukama nadakardhu , avan ta irundhu velagi poradhu ,avan mela irukara luv laum kovathulaum avan ta seethu vechi blast agarthu nu suma semaya score pannidara //


நிஜமா எனக்கு இந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும்..எனக்கும் ஓடியே போய் சொல்லிட்டு வரணும் தோணும்..

எல்லாருக்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் ,அதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும்..அப்போ என்ன தான் செய்ய ? இப்படி ஒரு கேள்வி..


ஒருவேளை இதுதான் prblm ,இப்படி தான் ஆகும் nu காட்டுனா யாராவது அவங்களை செக் pannippaanga என்று ஒரு ஆசை 🙈🙈🙈🧡





//Aduthu nama ooosipatasu couple.... Indha story muzhuka karthik ku vidha vidha ma peru vekkardhagatum avan mela luv iruku ana illa nu namala manda kaya vekkardhagtum childish uh irundhalum samayam pathu maturity eh katradhula nu chaitra suma pattaya kelapura ponga adhulaum melagu seeragatha count panni podradhellam chance eh illa...//


ivanga namma pillainga matiri..asusual namma eppadi reaction tharuvoamo athoda copy..yes , சமயத்தில் வரும் maturity 😯😯😯👏👏👏👏👏well done Karthik..my boy has been grown up thaan 💚




//jothi oda luv therinjum adhe alazha handle panna vidham soopero soopeungo.... //


Thank you sis 😍


//Iva ilana kadha romba stress uh poirukum.... Nijamave she s the stress burster f ths story ....//


Yes she s


//Aduthu namma karthik enakennamo inum kuda karthik jothi oda luv vishayathe better uh handle pannirkalamo nu thonichu//


Is it sis 🤔🤔🤔 நில்லுங்க நானும் சிந்தித்து பார்க்கிறேன் 😍


//....ennatha kalyanam venam nu solli solli chaitra va kalyanam senjitalum adhukapro avala vambu ilukardhu avala nalla pathukardhu nu karthick gentle man tha adhulaum thaniya vandhapro daily ava office kelamba thngs la eduthu tharadhu , veetu velaya pirichukardhu nu namala summa yenga vidran pa indha paiyan... //


Ha ha ..நீங்களும் சைத்து மாதிரி சேட்டை செய்யவும்..அப்புறம் உங்க சேட்டை தாங்காது உங்க திங்ஸ் எடுதது வைக்கப்படும் ,🙄🙄🙄



//Jothiya frnd uh pakaren nu verum vaai varthaya sollama avala theda poradhu cheliyan veetu thedi varapo enala ungala ipdi paka mudila nu urugardhu nu romba touchu panitaan  //

Ama enakum antha epila Karthik pdkum..அதும் chaithu pathi pesuvan la அதும் பிடிக்கும் ❣



//aduthu aditi udhaya chaitra amma appa athai mama character yala romba sooper typical uh namma veetu amma appa va kannu munadi pathapdi irundhuchi adhum ponnuku kalyanam agala nu feel panra scene la ditto namma famly la orutra pakrapla irundhuchu....//


Yes..it all happens..namma society ,namma வீடு ,நம்ம பக்கத்து வீடு எல்லாme இணைந்தது தான் இந்த கதை 💘



// Last but not least Sankaran cheliyan oru frnd epdi irukanum oru frnd epdi iruka kudathu idhu rendaum solranga. But sankaran character chance eh ila kudave ivlo nallavaruku ipdi oru saavu vandruka venam nu thonuchi.... Adhumavar yerandhapo ivlo nallavara irundrukavum venam nu tha thonichi  //



Crct நல்லதுக்கு காலமில்லை தான் .ஆனா, அவர் நல்லவரா இருந்தனாள தான் இவளோ நல்லா பசங்களை வளர்க்க முடிந்தது 😍




//jothi ivala pathi pesiye aganum ivala enna solla kalya medaila poi oru paiyanta luv uh sonna ivala immature nu solla mudila adhe neram naa tha sankaran oda saavu ku karanam nu solli cheliyanukaga pazhiya somndhutu yaartaum sollama kollama odi pora po iva ivlo matured uh ivlo thannalamilama yosikarala nu kuda thonudhu ana ivaloda luv uh cheliyan tayum karthick taum sollamaeye irundrukalam .... But again that s how life works ila ... With damage and mistake we mature ilaya//


Last line u have summarised all sis...with damage and mistake we mature ..yes..this s lyf..we fall ,we rise..




//Aga motham sagoo indha story la enaku romba pudichadhu gowtham udhaya than...

Yena ivanga character uh neenga alazhaga kuduthirkinga ....ivanga oruthar mela oruthar avlo luv vechitu moochi adum po poi nazhu thattu thattalamanu irundhuchi plus udhaya characterisation sema avanukaga urugardhu apro avanta ego katradhu avana vittu poradhu apro ammakaga thirumba varadhu nu first half kadupakunalum 2nd half la score pannita gowtham avloego pakuravan udhiya ammata hlp kekarapo namala melt pannitaan  ana unmai tha alot f couples in ths generation are like ths particular couple epdi irukanum epdila sodhapa kudathunu ivangala pathu kathukalam..//


Vikram - athithi - நம்மை அவங்களை பார்த்து கத்துகளாம் எப்படி வாழனும் என்று..

கார்த்திக் - சைத்து - நம்ம இப்படியெல்லாம் இருந்தா நல்லா இருக்குன்னு தோணும்..njoy பண்ண வச்ச pair


Aanaa கௌதம் - உதயா


They are inside ourselves..aetho oru idathil எல்லாரும் இந்த stage cross panranga..so antha உள்ளார்ந்த உணர்வு தான் இவங்க 💘




//..apurom aditya varma entry sathyama edhirpakala analum inba vetriya kamchirkalam inum happy agirpom... Paravala next story la marakama katunga  //

Inba - புகழ் 😍

அவங்கள எங்க கூட்டிட்டு வர 😔😔

அப்படி கதை வந்தா கூட்டிட்டு வரேன் 😍sis 😍




//and ya nadula vara kavidhai la sema sema sema ponga ..... Enna ore korai kadasi vara vikram ku andhe colleg thirumba kedakalaye nu tha sinna varutham.... But adha edhartham ilaya vazhkaila .... Aga mothathula indha story sooper thango //

Athu avanga Appa vendam சொன்னது..அதை விட நிறைய earn பண்ணுவாங்க.. they will shine much brighter...


Thank youuuuuuu so much for the words 😍❣ur comments and perfect mentionING makes me to be good in next level..


As always u rock with a power pack and heart touching comment




//P.s - unga kitta sekrama " kadhalum iladhe kamamum iladhe andha nodi "oda second part yedhir parkarom nu solli thazhamaiudan mokkaiyai mudithu kondu vidai perugiren //



I thoroughly your comment sis 😍

Part 2 🙄🙄🙄🙄innoruka யாரை கொல்ல நான் 🤔🤔🤔🤔
[/QUOTE]
engaluku part 2 kandipa venum 😅yaara vena potu thallunga🗡 .... Pole venalum veinga 😉😉yara potu thallalam nu
 

Vijayanadhi2020

Well-known member
Hi mam., characterization super adhuvum vikram character attagasam ponga . Periya heroism yellam kedayathu but amarthalana gambeeram. Gauthamoda annan medhana mariyathium sari thambi meedhana Paasam m sari azhagu. Karthik chaitra vaaluthanam fantastic . avanga yellorum mookula kerchief vittu vizhayadiya tharunagal kadhayoda classic tharunangal . ivargalin ottrumai manadhai idhamaga varudi selgiradhu. Last ud innum viriva expect pannen (according to the story). Expecting more from u.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

இந்த கதையில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவம் என்று சொன்னால் அது மிகையாகாது. முதலில் இந்த தலைப்பே என்னை ஈர்த்துவிட்டது. அதே போல் கதையும் தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியம் மிக்கதாகவே இருந்தது. மதுரையில் தொடங்கி மீண்டும் மதுரையில் அழகரின் தரிசனத்தோடு முடித்திருந்தது மனநிறைவை தந்தது.

என்னை கவர்ந்தவை
பெரும்பாலான கதைகளில் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் எண்ணங்கள் உடையவர்களாகவே இருப்பர். ஆனால் இதில் நீங்கள் எதிர் எதிர் துருவம் தான் ஈர்க்கும் என்னும் விதியை மாற்றி ஒத்த குணம் உடையவர்களுக்கும் ஈர்ப்பு ஏற்படும் என்று அழகாக காட்டிய விதம் அருமை 😍😍

மூன்று ஜோடிகளுக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்தது👌

அன்பான குடும்பத்தோடு பயணிக்க வைத்தது. அண்ணன் - தம்பிகள், அக்காள் - தங்கைகள் ஒற்றுமை மற்றும் பாசத்தை காட்டிய விதம் 👌காளிராஜ் - வசுந்தரா அன்பான அப்பா, அம்மாவாக தங்கள் பெண்களையும் மாப்பிள்ளையையும் வழிநடத்தினார்கள் என்றால் சங்கர் - நண்பனின் துரோகத்தால் அனைத்தையும் இழந்த போதிலும் நற்பண்புகளை இழக்காமல் அப்பண்புகளை தனயன்களுக்கும் கொடுத்து விட்டே சென்றிருக்கிறார்👌

கல்யாண வைபோகத்தில் திருமண அழைப்பிதழ் தொடங்கி சடங்கு, சம்பிரதாயங்கள் அதற்குரிய விளக்கங்கள், மணமேடை அலங்காரங்கள், மாப்பிள்ளை - பெண் உடை வர்ணனை, பெண்ணின் அலங்காரம் என ஒன்றையும் விட்டுவிடாமல், அவர்கள் திருமணத்தை நான் அருகில் இருந்து பார்த்தது போல் ஒரு அனுபவம் 🤩🤩

மதுரையையும் ஸ்விஸையும் சுற்றி காட்டிய விதம். மதுரை நகர் சிறப்பை அழகாக காட்டியிருந்தீர்கள் 👌😊குறிப்பாக ஸ்விஸ் பயணதின் போது உங்கள் வர்ணனை அனைத்தும் அற்புதம் 😯😯👌👏இரயில் பயணம், ஷுரிச் ஏரியில் படகு சவாரி, ரோப் கார் பயணம், தோட்டம், சுவர் சித்திரங்கள், சிங்கத்தின் சிற்பம், பனிக்கட்டிகளில் விளையாடியது என அனைத்தும் மறக்க முடியாதது. புகைப்படங்களும் கூடுதல் சிறப்பு சேர்த்தது. அங்குள்ள உணவு வகைகளையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. மொத்தத்தில் உங்கள் வர்ணனையே என்னையும் அவர்களோடு ஸ்விஸ் பயணத்தை அனுபவிக்க வைத்து விட்டது 😊😊

மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு வகையில் ஈர்த்தாலும், கார்த்தி - சைத்து இவர்கள் செய்த சேட்டைகளை மறக்கவே முடியாது. ஒன்றிரண்டு காட்சிகளை தவிர்த்து அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைத்தவர்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கார்த்தி - இப்படியொரு தம்பி நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவன். சேட்டை ஒருபக்கம் என்றாலும் இன்னொரு புறம் அவனின் முதிர்ச்சியான பேச்சாலும் செயலாலும் பெரிதும் கவர்ந்தவன்😍

பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க
என பொழுது புலர்வதை குறிக்கும் இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தவை😯👌

இணைப்பு தகவல்கள் - நான் அறியா பல தகவல்களை என்னிடம் சேர்த்தவை👌👌👌

நெகிழ்வு பலகை தொடங்கி வம்மி நிறம், பட்டியலட்டை, நிரலாக்கம், ஆளரி அட்டை, இயங்கலை, ......... சுயமி வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களுக்கு அழகான தமிழ் வார்த்தையை கொண்டு சேர்த்தது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

விக்ரமின் வலி

இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்.
ஆனால் உனக்கில்லை.

என அவனின் மொத்த வலிகளையும் மூன்று வரிகளில் ஆழமாக உணர்த்திய விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது 👏👏👏

அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த உங்கள் கவிதை வரிகளை எப்படி மறக்க முடியும்........

தந்தை
அவர் !

உடல் தந்த உயிர்.
உயிர் காத்த மனிதன்
மனிதம் சொல்லி தந்த ஆத்மா
ஆத்மார்த்தமாக நேசிக்க கற்று தந்த
அவர்.. !
எங்கள் தந்தை


........
நோய் பிணி என்றால் அன்னையை
தேட வேண்டுமா?
அவர் தான் எங்களுக்கு
தாயுமானவனாக
இருக்கிறா(ந்தா)ரே !

என முடியும் வரிகள்

விக்ரம் - அதிதி
அதீதங்களும்
அடிபட்டு போகும்
அன்பனின் ஆர்ப்பரிக்கும்
காதல் முன்!


கார்த்தி - சைத்து
விழிநீர் தாங்காத நான்
உனக்கான கண்ணீரிலும் ஆனந்தம் கொண்டு நிற்கிறேன்
..........................
அனைத்தும் வேண்டுமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்
இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் கவனத்தை...
உன் சுவாசத்தை...
உன் காதலை...
உன் தீவிரத்தை...

என முடியும் வரிகள்

...........
இனி ஒரு பிறவியென்றாலும்
உன்னில் நான்.. நான் மட்டுமே
காதலாகவும் உன் உடமையாகவும்

என முடியும் வரிகள்

......
சிக்கி தவிக்கும் என்னை, அன்பால்
வதம் செய்யும் வசியக்காரன் நீ..!

என முடியும் வரிகள்

கெளதம் - சைத்து
என்னை பிடிவாத காதல்

செய்யடி பெண்ணே.. !
உன் காதலின் சுவாசத்தில்,
நொடி நொடியும் புதிதாய்
உயிர்த்தெழுந்து காதல் மோட்சம்
பெறுகிறேன்...

கடற்கரை மணலில் அவன் கரம்
பிடித்து நடக்க ஆசைப்படும் அதே
பழைய கால காதல் பெண் தானே நான்!
........
கண்ணீர் அவனுக்காக எனும் போதும்,
அதன் முதல் துளியை அவன் உதட்டின்
ஈரத்தில் மறந்திட துடிக்கும்
பேராசைக்காரி தானே நான் !

......
காதல் பித்தம் தலைக்கேற்ற
செய்கிறாய் அன்பே... !
உனது நொடி நொடி ரசிப்பும், சிறு சிறு
லயிப்பும் எனக்காக மட்டுமாக
இருந்திட கேட்கும் காதல் பித்தம்
தலைக்கேற்றுகிறாய் என் ஆருயிரே.. !

என முடியும் வரிகள்

.......
ஆழமாய் பதிந்து போன உன் நெற்றி
பொட்டின் அழுத்தத்தில் சொல்லிவிடு
இனி நான் மட்டுமே அங்கு தஞ்சம்
கொள்வேனென....

என முடியும் வரிகள்..

மொத்தமாய், மிக மொத்தமாய்
உன் பார்வையில் என்னை
ஆயுள் கைதியாக சிறையெடு !
வாழ்ந்து பார்க்கிறேன் உன் விழிகளுடனாவது!
..........
நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக

எதை நான் கேட்பின் உனையே தருவாய்
என் மொத்த பிரதிபலிப்பே... !


இவ்வாறு உங்கள் அனைத்து கவிதை வரிகளையும் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டே போகலாம்......
உங்கள் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து போட்டாலே கதையும் அதனுள் அடங்கிவிடும். எளிமையான அந்த வரிகளிலேயே அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.....
*********
விக்ரம் - அதிதி ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் காதலில் மூழ்கி திளைத்தவர்கள் என்று சொல்லலாம் ( காதல் பறவைகள் ) ஊடல் ஏற்பட்ட போதும் அதை விரைவில் சரி செய்து கொண்டவர்கள். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல், தவறு செய்தால் உடனே தங்கள் இணையிடம் சரணடைவது என இவர்கள் புரிந்துணர்வால் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவே திகழ்ந்தனர் 😍😍😍😍

கார்த்தி - சைத்து திருமணம் இப்போது வேண்டாம் என்ற ஒத்த கருத்தினால் இணைந்தவர்கள். வாழ்க்கையை இலகுவாக கடப்பவர்கள். விளையாட்டு பிள்ளைகள் போல் தெரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் அளப்பரியது. ஒரு சின்ன பிரிவால் அவர்கள் அறியாமல் உள்ளத்தில் புகுந்திருந்த காதலை உணர்ந்தவர்கள். அதன்பின் பிரிவு என்ற வார்த்தையே அறியாதவர்கள் (இணைபிரியா பறவைகள்) அவர்கள் சேட்டைகளை போல் அவர்களின் காதலையும் நம்மை இரசிக்க வைத்தவர்கள் 😍😍😍😍😍

கெளதம் - உதயா அழுத்தமான தம்பதிகள். உள்ளம் முழுதும் நிறைந்த தீவிர காதலை தங்கள் இணையிடம் வெளிப்படுத்தாமல் தங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தி கொண்டவர்கள். அவர்கள் வார்த்தையில் சொல்லாத அவர்கள் காதலை உங்கள் கவிதை வரிகள் சொல்லிவிடும். மீண்டும் உங்கள் கவிதை வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிடித்தம், பேராசை, ஆழமான அன்பு, பித்தம் என அவர்கள் சொல்லா காதலை உங்கள் வரிகள் சொல்லிவிட்டது 👌👌👏👏😍😍உணர்வுகளை அடக்கிவைத்து அது ஒரு நாள் வெடித்து சிதறி அவர்களை பிரித்து வைத்து இன்னும் அவர்களை காதல் பித்தம் கொள்ள வைத்தது எனலாம். அதன்பின்னே அவர்கள் உணர்வுகளை இணையிடம் வெளிப்படுத்தி தெளிவு அடைந்தார்கள்😍😍😍😍😍 ( காதல் தீவிரவாதிகள் இவர்கள் ) சொல்லா காதல் செல்லாது என்பதற்கும் இவர்கள் உதாரணம்.

" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " இந்த தலைப்பு இவர்களுக்கே பெரிதும் பொருந்தும் என்று நினைக்கிறேன். முந்தைய ஒரு பதிவில் நீங்கள் போட்ட புகைப்படமும் அதன் வாசகமும் இவர்கள் இருவருக்குமே பொருந்தும் என நினைக்கிறேன். ( இவை இரண்டிலும் என் புரிதல் சரியா இல்லை தவறா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் சிஸ் )


Ramya sis ❣

நிஜமா என்னால தனித்தனியா பிரிச்சு பார்க்க முடியலை..அத்தனை நேர்த்தி உங்களது விமர்சனத்தில்..உதயா மாதிரி நானும் பலமுறை ரசித்து, ஸ்பரிசித்து பார்க்கிறேன் 🙏நன்றி இத்தகைய நிறைவான கருத்திற்கு வார்த்தை வடலவில்லை இத்தனை நேரம்...


//
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

இந்த கதையில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவம் என்று சொன்னால் அது மிகையாகாது. முதலில் இந்த தலைப்பே என்னை ஈர்த்துவிட்டது. அதே போல் கதையும் தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியம் மிக்கதாகவே இருந்தது. மதுரையில் தொடங்கி மீண்டும் மதுரையில் அழகரின் தரிசனத்தோடு முடித்திருந்தது மனநிறைவை தந்தது.//

மிக்க நன்றி ரம்யா sis 😍
கதையின் தலைப்போடு கதையையும் ரசித்ததற்கு
❤️.

// என்னை கவர்ந்தவை

பெரும்பாலான கதைகளில் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் எண்ணங்கள் உடையவர்களாகவே இருப்பர். ஆனால் இதில் நீங்கள் எதிர் எதிர் துருவம் தான் ஈர்க்கும் என்னும் விதியை மாற்றி ஒத்த குணம் உடையவர்களுக்கும் ஈர்ப்பு ஏற்படும் என்று அழகாக காட்டிய விதம் அருமை 😍😍//

இது போலவும் காட்ட நினைத்ததின் வெளிப்பாடு ரம்யா sis..
இது உங்களை கவர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி
💘

//மூன்று ஜோடிகளுக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்தது👌//

❤️🧡💚நன்றி sis 💚🧡❤️

//அன்பான குடும்பத்தோடு பயணிக்க வைத்தது. அண்ணன் - தம்பிகள், அக்காள் - தங்கைகள் ஒற்றுமை மற்றும் பாசத்தை காட்டிய விதம் 👌காளிராஜ் - வசுந்தரா அன்பான அப்பா, அம்மாவாக தங்கள் பெண்களையும் மாப்பிள்ளையையும் வழிநடத்தினார்கள் என்றால் சங்கர் - நண்பனின் துரோகத்தால் அனைத்தையும் இழந்த போதிலும் நற்பண்புகளை இழக்காமல் அப்பண்புகளை தனயன்களுக்கும் கொடுத்து விட்டே சென்றிருக்கிறார்👌//

நிலை மாறும் மனிதர்கள் .. அம்மனிதர்களின் நிலை ( status) மாறினால் அவர்கள் மனம் மாறுமா ? அப்படியொரு எண்ணம் ! அதை பதிய முயன்றது இக்கதை 💘

//கல்யாண வைபோகத்தில் திருமண அழைப்பிதழ் தொடங்கி சடங்கு, சம்பிரதாயங்கள் அதற்குரிய விளக்கங்கள், மணமேடை அலங்காரங்கள், மாப்பிள்ளை - பெண் உடை வர்ணனை, பெண்ணின் அலங்காரம் என ஒன்றையும் விட்டுவிடாமல், அவர்கள் திருமணத்தை நான் அருகில் இருந்து பார்த்தது போல் ஒரு அனுபவம் 🤩🤩//

எனக்கும் நிறைய இடங்களில் அர்த்தம் தெரியாத வைபோகமாக தான் இருந்தது ரம்யா sis.sari அப்படினா என்ன ! ஏன் செய்றாங்க என சொல்ல படிச்சு பார்த்து கதையில சேர்த்தேன்.அதோடு அவையெல்லாம் தமிழர் பண்பாட்டு மரபுகள்.அதற்கான நினைவூட்டல் அவை ❣️
உங்களுக்கு திருமணத்தை அருகில் கண்ட அனுபவம் கிடைத்ததில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி 😍


//மதுரையையும் ஸ்விஸையும் சுற்றி காட்டிய விதம். மதுரை நகர் சிறப்பை அழகாக காட்டியிருந்தீர்கள் 👌😊குறிப்பாக ஸ்விஸ் பயணதின் போது உங்கள் வர்ணனை அனைத்தும் அற்புதம் 😯😯👌👏இரயில் பயணம், ஷுரிச் ஏரியில் படகு சவாரி, ரோப் கார் பயணம், தோட்டம், சுவர் சித்திரங்கள், சிங்கத்தின் சிற்பம், பனிக்கட்டிகளில் விளையாடியது என அனைத்தும் மறக்க முடியாதது. புகைப்படங்களும் கூடுதல் சிறப்பு சேர்த்தது. அங்குள்ள உணவு வகைகளையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. மொத்தத்தில் உங்கள் வர்ணனையே என்னையும் அவர்களோடு ஸ்விஸ் பயணத்தை அனுபவிக்க வைத்து விட்டது 😊😊//

அத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு பட்டியலிட்டு சொல்வதற்கு நான் தலை வணங்குகிறேன் 🙏
இனிமே அது நம்ம ஸ்விஸ்..நானும் போனதே இல்லை..அதான் அவங்க கூட நானும் சுத்தி பார்த்து விட்டேன் ரம்யா sis 😍


//மூன்று ஜோடிகளும் ஒவ்வொரு வகையில் ஈர்த்தாலும், கார்த்தி - சைத்து இவர்கள் செய்த சேட்டைகளை மறக்கவே முடியாது. ஒன்றிரண்டு காட்சிகளை தவிர்த்து அனைத்து காட்சிகளிலும் சிரிக்க வைத்தவர்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கார்த்தி - இப்படியொரு தம்பி நமக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவன். சேட்டை ஒருபக்கம் என்றாலும் இன்னொரு புறம் அவனின் முதிர்ச்சியான பேச்சாலும் செயலாலும் பெரிதும் கவர்ந்தவன்😍//

நிறைய பேர் அவனை சொல்றாங்க.. ப்ரெண்ட் அஹ் ,இணையா, மகனா ,உறவா ,நீங்க தம்பியா சொல்லியிருக்கீங்க ..
வேணும்னா இப்படி பண்ணலாமே , ஸைத்துவும் கார்த்திக் போல தான்..நானும் ,அம்முவும் ஸைத்து போல தான்..எங்களை நீங்க தத்து எடுத்துகோங்களேன் 🤷🤷🤷

நாங்க ரசம் வச்சு தருவோம் ரம்யா sis ❣️💘


//பெரிய முற்கள் சின்ன முற்களை போட்டி போட்டு துரத்தி விளையாடியதில், வெற்றி பரிசாக சூரியன் மலர்ந்திருக்க
என பொழுது புலர்வதை குறிக்கும் இந்த வரிகள் என்னை மிகவும் ஈர்த்தவை😯👌//

Wowww..இத்தனை குறிப்பிட்டு நீங்கள் சொல்வதால் எனக்கே இவ்வரிகள் மிக பிடிக்கிறது 😘😘😘

//இணைப்பு தகவல்கள் - நான் அறியா பல தகவல்களை என்னிடம் சேர்த்தவை👌👌👌

நெகிழ்வு பலகை தொடங்கி வம்மி நிறம், பட்டியலட்டை, நிரலாக்கம், ஆளரி அட்டை, இயங்கலை, ......... சுயமி வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களுக்கு அழகான தமிழ் வார்த்தையை கொண்டு சேர்த்தது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏//


இத்தனை இத்தனை திருத்தமான வாசகர்கள் இருக்கும் போது ,எனது முயற்சி இன்னும் பெரிதாக இருக்க வேண்டும் என உள்ளம் ஏங்கிறது..


//விக்ரமின் வலி

இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்.
ஆனால் உனக்கில்லை.

என அவனின் மொத்த வலிகளையும் மூன்று வரிகளில் ஆழமாக உணர்த்திய விதத்தை பாராட்டாமல் இருக்க முடியாது 👏👏👏//

இது எனது ஆழ்மன வரிகள்.. அது உங்களை கவர்ந்தது என்பது எனது உள்ளதோடு உறவாடுகிறது உங்களது விருப்பம் ❤️

//தந்தை
அவர் !

உடல் தந்த உயிர்.
உயிர் காத்த மனிதன்
மனிதம் சொல்லி தந்த ஆத்மா
ஆத்மார்த்தமாக நேசிக்க கற்று தந்த
அவர்.. !
எங்கள் தந்தை


........
நோய் பிணி என்றால் அன்னையை
தேட வேண்டுமா?
அவர் தான் எங்களுக்கு
தாயுமானவனாக
இருக்கிறா(ந்தா)ரே !

என முடியும் வரிகள்//

எத்தனை ரசனை உங்களிடம்
உங்களது குறிப்பிடல்
என் மனதிற்கு அத்தனை இன்பம் தருகிறது.விரல் தாளமாக இந்த வரிகள் தட்டி பார்க்கிறது.இதழ்கள் ராகமாக இவ்வரிகளை வாசித்துப் பார்க்கிறது. மனமோ பாடலை இங்கேயே சங்கமிக்கிறது..🙏நன்றி என்னை நானே ரசிப்பது போல செய்து உள்ளீர்கள் 💘



//
விக்ரம் - அதிதி
அதீதங்களும்
அடிபட்டு போகும்
அன்பனின் ஆர்ப்பரிக்கும்
காதல் முன்!


கார்த்தி - சைத்து
விழிநீர் தாங்காத நான்
உனக்கான கண்ணீரிலும் ஆனந்தம் கொண்டு நிற்கிறேன்
..........................
அனைத்தும் வேண்டுமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்
இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் கவனத்தை...
உன் சுவாசத்தை...
உன் காதலை...
உன் தீவிரத்தை...

என முடியும் வரிகள்

...........
இனி ஒரு பிறவியென்றாலும்
உன்னில் நான்.. நான் மட்டுமே
காதலாகவும் உன் உடமையாகவும்

என முடியும் வரிகள்

......
சிக்கி தவிக்கும் என்னை, அன்பால்
வதம் செய்யும் வசியக்காரன் நீ..!

என முடியும் வரிகள்

கெளதம் - சைத்து
என்னை பிடிவாத காதல்

செய்யடி பெண்ணே.. !
உன் காதலின் சுவாசத்தில்,
நொடி நொடியும் புதிதாய்
உயிர்த்தெழுந்து காதல் மோட்சம்
பெறுகிறேன்...

கடற்கரை மணலில் அவன் கரம்
பிடித்து நடக்க ஆசைப்படும் அதே
பழைய கால காதல் பெண் தானே நான்!
........
கண்ணீர் அவனுக்காக எனும் போதும்,
அதன் முதல் துளியை அவன் உதட்டின்
ஈரத்தில் மறந்திட துடிக்கும்
பேராசைக்காரி தானே நான் !

......
காதல் பித்தம் தலைக்கேற்ற
செய்கிறாய் அன்பே... !
உனது நொடி நொடி ரசிப்பும், சிறு சிறு
லயிப்பும் எனக்காக மட்டுமாக
இருந்திட கேட்கும் காதல் பித்தம்
தலைக்கேற்றுகிறாய் என் ஆருயிரே.. !

என முடியும் வரிகள்

.......
ஆழமாய் பதிந்து போன உன் நெற்றி
பொட்டின் அழுத்தத்தில் சொல்லிவிடு
இனி நான் மட்டுமே அங்கு தஞ்சம்
கொள்வேனென....

என முடியும் வரிகள்..

மொத்தமாய், மிக மொத்தமாய்
உன் பார்வையில் என்னை
ஆயுள் கைதியாக சிறையெடு !
வாழ்ந்து பார்க்கிறேன் உன் விழிகளுடனாவது!
..........
நான் நீயாக
நீ என்பது நானாக
நாம் என்பது மட்டும் வாழ்வாக

எதை நான் கேட்பின் உனையே தருவாய்
என் மொத்த பிரதிபலிப்பே... !


இவ்வாறு உங்கள் அனைத்து கவிதை வரிகளையும் குறிப்பிட்டு சொல்லிக்கொண்டே போகலாம்......
உங்கள் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து போட்டாலே கதையும் அதனுள் அடங்கிவிடும். எளிமையான அந்த வரிகளிலேயே அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளலாம்.....//

இதை விட என்ன இன்பம் நான் காண முடியும்..எனது படைப்பிற்கான உங்களது ரசிப்பது என்னை மூச்சு முட்டவும் வைக்கிறது.மூச்சு தந்தும் உயிர்க்க வைக்கிறது.

கதையோடு எழுதிய வரிகள் ..பெரிதாக நான் தமிழும் கற்று தேறவில்லை..

அதிலும் உங்களுக்கு வார்த்தைகள் பிடித்தது என்றால் நீங்கள் மனதால் வாசிகிறீங்க..உணர்வால் எழுதுறீங்க..
நன்றி என்னும் வார்த்தை, உங்களது ரசிப்பின் முன் சிறிதாகி போகிறது
.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Ramyasridhar sis ❣️


//விக்ரம் - அதிதி ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் காதலில் மூழ்கி திளைத்தவர்கள் என்று சொல்லலாம் ( காதல் பறவைகள் ) ஊடல் ஏற்பட்ட போதும் அதை விரைவில் சரி செய்து கொண்டவர்கள். விட்டுக்கொடுத்தல், மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல், தவறு செய்தால் உடனே தங்கள் இணையிடம் சரணடைவது என இவர்கள் புரிந்துணர்வால் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகவே திகழ்ந்தனர் 😍😍😍😍//

ஆமா sis 😊
Perfect couple eppadi இருப்பாங்க என காட்ட நினைத்தேன்..அதான் அப்படியொரு பாத்திரங்கள ❤️



//கார்த்தி - சைத்து திருமணம் இப்போது வேண்டாம் என்ற ஒத்த கருத்தினால் இணைந்தவர்கள். வாழ்க்கையை இலகுவாக கடப்பவர்கள். விளையாட்டு பிள்ளைகள் போல் தெரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் அளப்பரியது. ஒரு சின்ன பிரிவால் அவர்கள் அறியாமல் உள்ளத்தில் புகுந்திருந்த காதலை உணர்ந்தவர்கள். அதன்பின் பிரிவு என்ற வார்த்தையே அறியாதவர்கள் (இணைபிரியா பறவைகள்) அவர்கள் சேட்டைகளை போல் அவர்களின் காதலையும் நம்மை இரசிக்க வைத்தவர்கள் 😍😍😍😍😍//


Perfect..இப்போது வேண்டாம் என்ற ஒத்த கருத்தினால் இணைந்தவர்கள் 💘
வார்த்தையில் அர்த்தம் தேட,
உயிரில் கொண்ட காதல் இல்லாது,
அவர்கள் அவர்களாகவே இருக்கும் இணைகள்..அவர்கள் வாழ்வு சரியோ தவறோ கொண்டாடி வாழ்பவர்கள் 💚


//கெளதம் - உதயா அழுத்தமான தம்பதிகள். உள்ளம் முழுதும் நிறைந்த தீவிர காதலை தங்கள் இணையிடம் வெளிப்படுத்தாமல் தங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தி கொண்டவர்கள். அவர்கள் வார்த்தையில் சொல்லாத அவர்கள் காதலை உங்கள் கவிதை வரிகள் சொல்லிவிடும். மீண்டும் உங்கள் கவிதை வரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிடித்தம், பேராசை, ஆழமான அன்பு, பித்தம் என அவர்கள் சொல்லா காதலை உங்கள் வரிகள் சொல்லிவிட்டது 👌👌👏👏😍😍உணர்வுகளை அடக்கிவைத்து அது ஒரு நாள் வெடித்து சிதறி அவர்களை பிரித்து வைத்து இன்னும் அவர்களை காதல் பித்தம் கொள்ள வைத்தது எனலாம். அதன்பின்னே அவர்கள் உணர்வுகளை இணையிடம் வெளிப்படுத்தி தெளிவு அடைந்தார்கள்😍😍😍😍😍 ( காதல் தீவிரவாதிகள் இவர்கள் ) சொல்லா காதல் செல்லாது என்பதற்கும் இவர்கள் உதாரணம்.//

மிக சரி..சொல்லா காதல் செல்லாது .ஆழ்மன தேடல், அதற்கான போராட்டம் தான் இவர்கள் பாத்திரம்..இவர்களது எதிர்பார்ப்பு வார்த்தையில் சொல்ல எதிர்ப்பார்ப்பு 🙄அது தான் இவர்கள்..


//" எதை நான் கேட்பின் உனையே தருவாய் " இந்த தலைப்பு இவர்களுக்கே பெரிதும் பொருந்தும் என்று நினைக்கிறேன். முந்தைய ஒரு பதிவில் நீங்கள் போட்ட புகைப்படமும் அதன் வாசகமும் இவர்கள் இருவருக்குமே பொருந்தும் என நினைக்கிறேன். ( இவை இரண்டிலும் என் புரிதல் சரியா இல்லை தவறா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் சிஸ் )//



இதுவும் சரி தான் sis 😍..

சைத்து antha செய்தித்தாள் படிக்கும் காட்சியில் உணர்வால் கார்த்திக்கை தேடு வாள் அந்த இடத்தில் இவர்களுக்கும் பொருந்தும்..

இறுதியில் விக்ரமிற்கு இன்னும் காட்சி இருந்தது..அவைகளை நான் எடுத்து செல்லவில்லை..அந்த நிலையில இவர்களுக்குக் பொருந்தும்..

இந்த வாக்கியம் காதலுக்கான தேடல்.. ஏங்கி தவிக்கும் காதல்..அப்படி பார்த்தால் அதிதி தான் இப்படியொரு காதலுக்கு காத்திருப் பாள் ,அங்கு அவளுக்கும் பொருந்தும்..


இப்படி எண்ணி வைத்த தலைப்பு இது ரம்யா sis..


நீங்கள் ,உங்களது ரசிப்பு
எனது எழுத்துகளை சிறக்க செய்கிறது.

உங்களது வார்த்தைகள் எனக்கு
வாழ்த்தாக அமைகிறது..

உங்களது குறிப்புகள் எனக்கு
ஊக்கமாக அமைக்கிறது..

உங்களது பாராட்டுகள் என் மனதோடு இணைகிறது..

இறுதியில் எதை நான் ( எந்த கதை கரு) தந்தாலும் ,உங்களையே ( உங்களது விமர்சனம்) தரும் உங்கள் பண்பு என்னை பெரிதாய் மிக பெரிதாய் உணர்ச்சி அடைய செய்கிறது..

நன்றி !

உங்களது ரசிப்பில்
நெகிழ்வாய் நான்..
உங்களது வாழ்த்தில்
உயிர்ப்பாய் நான் 🙏🙏
🙏❣️😍
 
Top