All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
அழகான ஆத்மார்த்தமான முடிவு நயனிமா😍😍😍😍😍😍😍😍
அவங்களுக்கிடையேயான பந்தத்தை அத்தனை அற்புதமா விவரிச்சிருந்திங்க😍😍
உடல்கள் சேரும் காதலைவிட இரு உள்ளங்கள் சேர்ந்த காதலை நான் ரொம்பவே ரசிச்சேன்😍😍

உங்க எழுத்தோட மேஜிக்கை நான் இந்த பதிவுல பூரணமா உணர்ந்தேன்😍👏😍👏😍

அபயனோட அத்தனை ரணமும் நீங்கி.. காதலாய் அவள் மடி சேர்ந்து கண்ணுறங்கிய அவன் முகத்தில், நாங்கள் இத்தனைநாள் கண்ட வலி இல்லாது அவனை பார்க்கவே அத்தனை ஆனந்தமா இருந்தது 🤩🤩🤩

லவ் யூ நயனிமா😘😘😘😘
லவ் யூ லோட்ஸ்😍😘😍😘😍

இந்த முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சது😍
ஆனாலும்.....................,

அபயனை தொடர்ந்து வலியோடவும் கஷ்டத்தோடவுமே பாத்துட்டு இந்த கடைசி ஒரு எபியை வச்சு அவன் சந்தோஷமாத்தேன் இருக்கான்னு என் மனசுக்கு நம்பிக்கையே வரமாட்டேங்குது..
சோ எபிலாக் ப்ளிஜ்☺☺☺☺☺
 
நிறைவான பதிவு ma..... சிறப்பா இருந்தது..... மனதுக்கும் நிறைவாக இருக்கிறது.....மனதில் நிற்கும் படைப்பு ma.....
 
Woww akka just want to give u kisses 😘😘😘😘,.... Superb story akka with lovely ending... Intha story close toy heart akka... Love vidulan nd milir.. Thank you giving amazing story akka😍💐❤❤❤❤❤❤❤💝💖
 
jnc

Active member
நெகிழ்வான இறுதி பதிவு.. உங்கள் எழுத்து பயணம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
 
தாமரை

தாமரை
நயனிமா இப்படி ஒரு அருமையான கதையையும், முடிவையும் அந்த முடிவின் தொடக்கத்தில் அபய - மிளிர் வாழ்க்கையின் இன்பத்தையும் வைத்த உங்கள் அழகிய சிந்தனைக்கு எத்தனை பேர் சேர்ந்து எத்தனை கோடி முறை பாராட்டினாலும் அதற்கு ஈடாகாது.

கதையை பாராட்ட வேண்டுமா இல்லை கதை வடித்த சிற்பியைப் புகழ வேண்டுமா இல்லை கதையின் வாயிலாக நான் அறிந்துக் கொண்ட தாமரை மா மற்றும் பல தோழியரின் நட்பை ஆராதிக்க வேண்டுமா என்று சொல்லத் தெரியாத இன்பக் குழப்பத்தில் உள்ளது என் மனது...

குழப்பக் குட்டையில் நான் பிடித்த கவிதை மீன் உங்கள் பார்வைக்கு.. (யாரும் என்னை திட்டக் கூடாது சொல்லிட்டேன்... தாமரை மா தான் என் கவிதைக்கு பொருப்பேத்துக்கறேன் னு சொல்லியிருக்காங்க ஞாபகத்தில வைச்சுக்கங்க...)😂😂😍😍💃💃

கொல்லாமல் கொன்று
புதைக்கும் கதைக் கடல்👈👈
என்றுத் தெரிந்தே குதித்தேன்
என்ன என் தேடல்??🏊🏊🤽🤔

கடந்த கால புயல் அடிக்க,
கதை கடலும் கொந்தளிக்க;
வாழ்க்கையெனும் படகு கவிழ்ந்து அபய-மிளிர் தத்தளிக்க...🚣⚡🚣

திசைக்கொன்றாய் கணவன்-மனைவியினை பிரித்தது விதியின் கோர அதிர்வலை🤔🤕
பிரிந்தே தவித்தவரை மீண்டும் ஒருங்கிணைத்தது காலச் சுனாமியென்ற ஆழிப் பேரலை..🌪🌪

ஊழிக்காலமது உலகினை நெருங்கும் தருணம்...
பெரும் பிரளயமது வாழ்வினையேச் சூழந்திட நேரும்....💨🌋
கலியுகத்து தீமையெல்லாம் நீரில் அமிழ்ந்தொழிய...
உண்மையான நன்மை மட்டுமே மறுயுகத்தை அடைந்திட இயலும்...

உலகமென்பதுவோ வாழ்க்கை போடும் நாடகத்தின் ஒரு பெரிய மேடை..
நடிக்கும் அனைவருமே விதியின் கை நூலின் பாவை...👯👯
பல கோடி உயிர்கள் ஒரு சேர நடிப்பது விந்தை...
இயக்குபவன் இறைவன் எனும் ஒரே தந்தை...🏯🕌💒

ஒரு யுகத்தில் நடந்த கதை
மறு யுகத்தில் மாறும்...
சத்தியமும் அன்பும் மட்டுமே
யுகாந்தத்திலும் வாழும்..🌷🌺🌷

மனக் கோபங்களும் பழி துவேஷங்களும் அன்பு வெள்ளத்தில் அழிந்தேப் போக...
மிதக்கின்றது வாழ்க்கைப் படகு அலைக்கடலில் சிறு துறும்பை போல🌬🍃

இருவரின் தவப் பயனாய் மண்ணில் அவதரித்த சிறு தச்சர்களும்🤼🤼
தடுமாறும் கப்பலதை
நேர்த்தியாகவே பழுது பார்த்திடினும்...

கண்ணுக்குத் தெரியாதச் சிறு ஓட்டைகளோ ஆயிரம் உண்டு படகதனில் - வஞ்சியவள் மனச் சஞ்சலங்களோ??🙆🙆

அன்பென்னும் களிம்பை அள்ளி அபயனவன் பயமின்றி தானே பூச💊💉
மறைந்தன படகில் உள்ள ஓட்டைகளும் மன-சஞ்சலங்களும்⛵⛵

ஒளிர்கின்ற (காந்தி)மதியன்னை தன்னொளி தான் தந்தருள🌙🌛
சூழ்ந்து நின்ற இருளோடு பாவை மனக்குழப்பங்களுமே விட்டகல🌔

குடும்பமாய் மகிழ்வுடனே படகில் பயணிப்போரை ரசித்து விட்டு🚢👨‍👩‍👦‍👦
கரையேற நினைக்கின்றேன்
கடலை விட்டு🌫🌫

கரையேற முடியாமல் என்னை தடுப்பதென்ன?🤔🤔
பல வலைகள் ஒரு சேர என்னை இழுப்பதென்ன?🤔🤔

சாதாரண வலைகள் அல்ல அவை சுலபத்தில் அறுத்தெரிய🥅🥅
கதை கடலில் சேர்ந்தே பயணித்த தோழியரின் கவி வலைகள் என்றறிய ✍✍

அறுத்தெரிய மனமின்றி தானே நானும் - மகிழ்வுடனே
மூழ்குகிறேன் கதை கடலில் மீண்டும் மீண்டும்...💖💖

புயலது கதையில் மட்டும் அல்ல
நிஜத்திலும் வீசும்...
எதிர்த்து நின்று ஜெயித்தாலே
வரலாறு பேசும்...😁😁😁
:smile1::smile1::smiley7::smiley7::smiley7::smiley7:

புஷ்பாமா.. நாலுவரி கவிதைக்கு பயந்து நாலு பக்கம் கதைய பள்ளில தேர்வுல எழுதின நீங்க.. இப்போ.. கலக்கிய கவிதை ய உங்க தமிழாசிரியருக்கு அனுப்புங்க.. நல்லாசிரியர் விருது வாங்கின பூரிப்பு கிடைச்சுடும் 😍😍😍😍😍😍

அசத்துல்.. உவமைக் கவிஞர் சுரதாக்கு அப்புறம்.. நாமதான் போல...நிறைய சுரதாக்கள #KKPN உருவாக்கிருக்கு.. நயனிமா.. தூண்டிவிட்ருக்காங்க.. பல சுடர் விளக்குகளை😘😘😘😘😘😘😘..

அற்புதம்..

அதும்.. கதைக் கடலில்.. தத்தளித்த டைட்டானிக்க உடைஞ்சும் மூழ்காம காதலென்னும் மாயப்பசை கொண்டு ஒட்ட வச்சு ஓடிட்டத வேடிக்கை பார்த்து .. கரை ஏற நினைக்கையில் கவிவலைகளில் விரும்பி சிக்கி மீண்டும் மூழ்கினதா.. போட்ருந்தது 😂😂😂😂😂😂😂😂😂..

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த.. பல இதயங்களை.. ஒரு நூலில் கட்டி இழுத்த இத்தளத்தின் வில்லி.. நம்மை.. ஏறவிட்ருவாங்களா...

வாங்க.. அடுத்த கப்பல் கொண்டு வராங்க.. அதுல ஏறுவோம்..

அது.. ஹாலிவுட் கப்பல்.. படு ஸ்பீட்.. பாத்து கவனமா போகனும்..😉😉😉😉😉😉😉
 
Nayaki

Bronze Winner
அழகான ஆத்மார்த்தமான முடிவு நயனிமா😍😍😍😍😍😍😍😍
அவங்களுக்கிடையேயான பந்தத்தை அத்தனை அற்புதமா விவரிச்சிருந்திங்க😍😍
உடல்கள் சேரும் காதலைவிட இரு உள்ளங்கள் சேர்ந்த காதலை நான் ரொம்பவே ரசிச்சேன்😍😍

உங்க எழுத்தோட மேஜிக்கை நான் இந்த பதிவுல பூரணமா உணர்ந்தேன்😍👏😍👏😍

அபயனோட அத்தனை ரணமும் நீங்கி.. காதலாய் அவள் மடி சேர்ந்து கண்ணுறங்கிய அவன் முகத்தில், நாங்கள் இத்தனைநாள் கண்ட வலி இல்லாது அவனை பார்க்கவே அத்தனை ஆனந்தமா இருந்தது 🤩🤩🤩

லவ் யூ நயனிமா😘😘😘😘
லவ் யூ லோட்ஸ்😍😘😍😘😍

இந்த முடிவு எனக்கு ரொம்ப பிடிச்சது😍
ஆனாலும்.....................,

அபயனை தொடர்ந்து வலியோடவும் கஷ்டத்தோடவுமே பாத்துட்டு இந்த கடைசி ஒரு எபியை வச்சு அவன் சந்தோஷமாத்தேன் இருக்கான்னு என் மனசுக்கு நம்பிக்கையே வரமாட்டேங்குது..
சோ எபிலாக் ப்ளிஜ்☺☺☺☺☺
நானும் வழிமொழிகிறேன்
 
Pushpaprathap

Well-known member
:smile1::smile1::smiley7::smiley7::smiley7::smiley7:

புஷ்பாமா.. நாலுவரி கவிதைக்கு பயந்து நாலு பக்கம் கதைய பள்ளில தேர்வுல எழுதின நீங்க.. இப்போ.. கலக்கிய கவிதை ய உங்க தமிழாசிரியருக்கு அனுப்புங்க.. நல்லாசிரியர் விருது வாங்கின பூரிப்பு கிடைச்சுடும் 😍😍😍😍😍😍

அசத்துல்.. உவமைக் கவிஞர் சுரதாக்கு அப்புறம்.. நாமதான் போல...நிறைய சுரதாக்கள #KKPN உருவாக்கிருக்கு.. நயனிமா.. தூண்டிவிட்ருக்காங்க.. பல சுடர் விளக்குகளை😘😘😘😘😘😘😘..

அற்புதம்..

அதும்.. கதைக் கடலில்.. தத்தளித்த டைட்டானிக்க உடைஞ்சும் மூழ்காம காதலென்னும் மாயப்பசை கொண்டு ஒட்ட வச்சு ஓடிட்டத வேடிக்கை பார்த்து .. கரை ஏற நினைக்கையில் கவிவலைகளில் விரும்பி சிக்கி மீண்டும் மூழ்கினதா.. போட்ருந்தது 😂😂😂😂😂😂😂😂😂..

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த.. பல இதயங்களை.. ஒரு நூலில் கட்டி இழுத்த இத்தளத்தின் வில்லி.. நம்மை.. ஏறவிட்ருவாங்களா...

வாங்க.. அடுத்த கப்பல் கொண்டு வராங்க.. அதுல ஏறுவோம்..

அது.. ஹாலிவுட் கப்பல்.. படு ஸ்பீட்.. பாத்து கவனமா போகனும்..😉😉😉😉😉😉😉
நயனிமா திரியை தூண்டி விட்டாங்கன்னா தாமரை மா உங்களோட தமிழும், பாராட்டும் அந்த கவிதை விளக்கு ஒளிர்விட்டு எரிய தேவையான எண்ணெய்... உங்க கூட சேர்ந்து ஒரு கப்பலில் மட்டுமல்ல பல கப்பல்களில் பயணம் செய்ய வேண்டுமென்பதே என் ஆசை. Thank you very much..தாமரை மா💐💐😍😍😘😘🌷
 
Top