All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Short stories

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு குட்டி கதையோடு வந்துருக்கேன், படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

"கிருஷ்ணையின் தூரிகை.."

"மேடம்..! சர்வதேச அளவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த பெண் ஓவியருக்கான பரிசை வின் பண்ணிருக்கீங்க, எப்படி இந்தத் தருணத்தை உணருரீங்க" என்று கேட்டான் குழுமியிருந்த பத்திரிக்கையாளர்ளிலிருந்து ஒருவன்

"எல்லாரும் வெற்றி பெற்றால் சொல்றதுதான்.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என மெல்லிதாக இதழ் விரித்து புன்னகைத்தாள் அவள்!!

"மேம்.. உங்கள் ஓவியங்கள் அனைத்திலும் கருமை நிறமும், துயரம் நிறைந்த சம்பவங்களும் விரவியிருக்கு, காண்பவர் மனதை ஒரு நிமிடமாவது அசைத்து பார்க்கிற அளவுக்கு தூரிகையோடு விளையாடி இருக்கிறீங்கன்னு சொல்லலாம்" என்றவன்,

"உங்களுடைய ஓவிய பாணிக்கு கருமை நிறத்தை நீங்க ஏன் தேர்ந்தெடுத்திங்க..? அதற்க்கான காரணத்தை சொல்ல முடியுமா..?"

"பிக்காஸோ கூட தான் துயரம் மிகுந்த காலங்களில் நீல நிறத்தை பயன்படுத்தி ஓவியங்களை தீட்டிருக்காரு அது உங்களுக்கு தெரியுமா..?" பதில் கேள்வி அவளிடமிருந்து அந்த நிரூபனுக்கு வந்தது..

"தெரியாது மேம்.."என்றான் தலையை சொரிந்துக் கொண்டே..

"நான் கலவையான நிறங்களை தேர்ந்தெடுத்திருந்தா இதை குறிப்பிட்டு கேட்டுருப்பீங்களா..? கருப்பான நிறத்தை தேர்ந்தெடுத்ததும் தானே இந்த கேள்வியை கேட்குறீங்க.." என்றாள் நக்கலாக..

"அப்படி இல்லை மேம்.." என்று மழுப்பலாக பதில் அளித்தான் அவன்.

"சரி பதில் சொல்றேன்.. நான் கருமை நிறத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்.. நான் மட்டும் தான்" என்றாள் பார்வையை சுழலவிட்டு

"எப்படி மேம்..?"

"நான் பிறந்ததிலிருந்து, இப்போது வரைக்கும் என்னோட நிறத்தால் நான் சந்திச்ச அவமானம், கேலி அனைத்தையும் என்னோட ஓவியத்தில் வாயிலாக பிரதிபளிச்சுருக்கேன்.. நான் தீட்டுற ஒவ்வொரு சோக சித்திரமும் என் மனதில் தேங்கி கிடந்த வலியின் வடிகாலாதான்.. இப்போது உங்கள் முன் உயிரோட்டமுள்ள ஓவியங்களா உயிர் பெற்று நிற்கிறது.."என்று பதில் அளித்தாள்

"நீங்களும் நிற வெறியால் பாதிக்கப்ட்டுருக்கிங்களா.? ஆச்சரியமா இருக்கு மேம்' என்றான் நிருபன்

அதற்கும் புன்னகை செய்து தொடர்ந்தவள்.."என் அப்பா கருப்பு.. நானும் கருப்பா பிறந்துட்டேன், அந்த சமயம் எங்க பாட்டி நான் கருப்பா பிறந்த ஒரு காரணத்துக்காக என்னை பார்க்காமல் போய்ட்டாங்க.. ஆனால், அவங்க பையன் கருப்பா பிறந்தாலும் பாராட்டி, சீரட்டி வளர்க்காமலா போய்ட்டாங்க..? இதை நான் கேட்டதுக்கு ஆம்பளைக்கு கருப்பு தான் அழகு, பொண்ணுங்களுக்கு சிவப்பு தான் அழகுன்னு பதில் வேற சொன்னாங்க"என்றவள்..

"பெண்களுக்கு கண்ணுக்கு மட்டும் தான் மை அழகா இருக்கணும், அந்த மையே உடல் முழுதும் இருந்தால் அது அழகு இல்லையான்னு கேட்டதுக்கு பொட்டை கழுதைக்கு இவ்வளவு வாயான்னு அடிச்சுட்டாங்க" என்றாள்

"என்ன மேம்.. இப்படி எல்லாம் பண்ணிருக்காங்க..?"

"ம்ம்.. ஏன்.. என்னோட அத்தைங்க அவங்களோட குட்டி பசங்க எல்லாரும் கருவாச்சின்னு கிண்டல் பண்ணும்போது கூட அந்த பசங்களை திட்டாமல் சிரிச்சு என்கரேஜ் பண்ணாங்க.. அது எல்லாம் என் மனசை ரொம்ப பாதிச்சது, பல நாள் அதை நினைச்சு தனிமையில் அழுதுருக்கேன், என்னை மட்டும் ஏன் இப்படி கருப்பா படைச்சே ஆண்டவா..! இவங்களுக்கு என்னை பிடிக்காத மாதிரி உனக்கும் என்னை பிடிக்காமல் தான் இப்படி என்னை படைச்சிட்டியான்னு சாமிகிட்ட போய் கதறுவேன்.. அப்போதெல்லாம் என் அம்மாவும் அப்பாவும் தான் என்னை தேத்திருக்காங்க.. என்னை நானே வெறுத்த காலங்களும் உண்டு.. நான் யாருடனும் சேராமல் தனிமையிலிருக்கும்போது என்னை நானே சந்தோசமா வச்சுக்க கையிலெடுத்த ஆயுதம் தான் ஓவியம்..!!

இந்த மனிதர்களிடம் கிடைக்காத அத்தனை சந்தோஷமும் நான் ஏந்துன தூரிகையில் எனக்கு கிடைச்சது,முதலில் நான் தான் கருப்பு, என்னோட கற்பனைகளாவது வண்ணமயமா இருக்கணும்னு நினைச்சு கருப்பு கலரை எந்த விதத்திலும் உபயோகிக்காமல் கலர் கலரான நிறங்களை மட்டுமே பயன்படுத்தினேன்.ஆனால், எனக்கு ஏதோ முழுமையடையாத உணர்வு, அந்த சமயத்தில் தான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன் கருமை இல்லாமல் எந்த ஒன்றும் முழுமையடையாதுன்னு.. பகலுக்கு அடுத்து இரவு வந்தால் தானே அந்த நாளுக்கே ஒரு முழுமை கிடைக்கும்,அந்த இரவால் தானே வானில் மின்னுற நட்சத்திரங்கள் நமக்கு அழகா தெரியுது, மனதிற்கு நிம்மதியை கொடுக்குது.."என்றவளின் குரலில் சிறிய வலியின் சாயல் தெரிந்ததோ என்னவோ அங்கு நிசப்தம் நிலவியது..

"கருப்பு இல்லாமல் இந்த உலகம் இல்லைன்னு புரிந்துகொண்ட வேளை தான், நான் என்னையே உணர்ந்த தருணம், அன்றைக்கு தான் பல வருடங்கள் கழித்து கண்ணாடியின் முன் நின்று என்னை நானே ரசிக்க ஆரம்பிச்சேன், என்னை கேலி பேசுறவங்களை எல்லாம் கண்டுக்காமல், என்னோட முன்னேற்றத்துக்கான வேலைகளை பார்க்க ஆரம்பிச்சேன். நான் கருப்பா இருப்பது தான் என்னுடைய அழகு அதனால் தான் கடவுள் என்னை கருமையா படைச்சுருக்காருன்னு எனக்குள்ளையே சொல்லி சொல்லி நம்பிக்கையில் வளர்த்துக்கிட்டேன். நான் கருப்பா இருக்கேன்னு எந்த ட்ரெஸ் எல்லாம் எனக்கு நல்லா இருக்காதுன்னு சொன்னாங்களோ அந்த ட்ரெஸ் எல்லாத்தையும் போட்டேன், நான் செய்யாத ஒரு விஷயம் எந்த ஒரு கிரிமையும் முகத்துக்கு பயன்படுத்தாமல் இருந்ததுதான்"என்றாள்.

"மேம்.. இப்போதான் எவ்வளவோ மாறிடுச்சே.. மாடலிங்லிருந்து, சீரியல் வரைக்கும் கருப்பா இருக்கிற பொண்ணுங்க நாயகியா நடிக்கிறாங்களே.." என்றான்.

"அதுலையும் அவ கருப்பா இருக்கிறதால் அவ சந்திக்கிற பிரச்னைகளை தானே காட்டுறிங்க.. சாதாரண கதை களமாகவா அந்த கதைகள் நகருது, ஒரு விளம்பர படத்தில் கூட கருப்பா இருக்கிற பொண்ணு இன்னொரு பொண்ணோட அறிவுரையில் அழகு சாதன பொருட்கள் உபயோகபடுத்துவதால், சிவப்பான மாதிரி தானே காட்டுறாங்க.. ஏதோ ஒன்னு ரெண்டு பேர நடிக்க வைக்கிறிங்க, இல்லை கருப்பு நிறத்துல மேக் அப் போட்டு நடிக்க வைக்கிறிங்க.. மஹா பாரத கதையில் பாஞ்சாலி பவித்ர அக்னியிலிருந்து பிறந்ததால் அவளோட உண்மையான நிறம் கருமை தான்.. அதனால் அவளுக்கு இன்னொரு பெயர் கிருஷ்ணை(கருமையானவள்) ஆனால் படத்திலையோ, சீரியல்லையோ அப்படியா காமிக்கிறிங்க, நல்லா கலரா தானே காமிக்கிறிங்க, இதெல்லாம் நடக்கும்போது நாங்க எப்படி மாறிடுச்சுன்னு ஒரு மாயையை உருவாக்கிக்கொள்ள முடியும்..?

இன்றைக்கு நம்ம ஊரில் இருக்கிற சாமி சிலை கருப்பா இருக்கும்போது, காலண்டர் படத்தில் இருக்கிற சாமி மட்டும் இளஞ் சிவப்பு நிறத்தில் கொலுவிருக்கு, காரணம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரவிவர்மா வரைந்த ஓவியத்தின் நீட்சியை இன்றைக்கு வரைக்கும் கடை பிடிக்கிறோம்.. அவர் வரைந்த ஓவியங்களின் மாதிரியைதான் இன்று வரைக்கும் பயன்படுத்துகிறோம், என்ன ஒரு முரண்பாடு..! பார்வதி தேவியா இருக்கும்போது கடவுள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறாங்க, காளி அவதாரம் எடுக்கும்போது மட்டும் கருமையான நிறத்துக்கு மாறின மாதிரி காட்டுறாங்க,அப்போ சிவப்புங்கிறது மென்மை, கருமைங்கிறது வன்மை நிறைந்த நிறமா..?"

"உலகத்தில் உள்ள என்பது சதவீத மக்கள் கருப்பா இருக்கும்போது அதை தாழ்த்தி ஏன் பேசணும்.. நாளைக்கு நீங்க செத்தாலும், நான் செத்தாலும் பிணம் தான்னு சொல்லுவாங்க, கருப்பு பிணம், சிவப்பு பிணம்னு யாரும் சொல்ல போறது கிடையாது. அதே மாதிரி எந்த நிறத்தில் இருந்தாலும் அழகு அழகு தான், இதில் கருப்பு, சிவப்புன்னு பாகுபாடு எதற்கு, சில வீட்டில் பெற்றோர்களே கருப்பா இருக்கிற பெண் குழந்தைங்க மனதில் அந்த பொண்ணு நிறுத்தை சொல்லி சொல்லி.. தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்றது, கண்ட கிரீமை எல்லாம் வாங்கி உபயோக படுத்த சொல்லி அந்த குழந்தைங்க இயற்க்கை அழகையே மங்க செய்றாங்க.."என்றாள்.

"மேம்.. நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ஆனால், கருப்ப பத்தி பேசுற நீங்க ஏன் கருப்பா இருக்கிறவரை கல்யாணம் பண்ணாமல் கலரா இருக்கிறவரை பண்ணிக்கிட்டிங்க..? "என்க..

அந்த கேள்வியால் கூட்டத்தில் சிறு சிரிப்பலை பரவியது..

அவளும் அவர்களுடன் இணைந்து சிரித்தவள்.. "நல்ல கேள்வி..! என்னை கிட்ட தட்ட ஒரு பதினைந்து பேரு பொண்ணு பார்க்க வந்துருப்பாங்க, அதில் பல பேரு நான் கருப்பா இருக்கிறதினால் அதிக வரதட்சணை கேட்டாங்க, சில கருப்பா இருக்கிற மாப்பிள்ளைங்க, கருப்பா இருக்கிற அவங்க வீட்டு பொண்ணுங்க அவங்களே கருப்புன்னு உணராமல் நான் கருப்பா இருக்கேன்னு வேணானுண்ணு சொல்லிட்டாங்க.. ஏன்னா அவங்க வீட்ல உள்ளவங்க எல்லாரும் கருப்பு, வரவளாவது கலரா இருந்தால் தானே பார்குறவங்க மத்தியில் கொஞ்சம் பெருமையா இருக்கும்னு சொன்னாங்க.. அப்போ யாரும் வாழ கல்யாணம் பண்ணல மத்தவங்க பெருமை பேசணும் என்பதற்காகத்தான் இங்க பல திருமணங்கள் நடக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன்..

அப்போது முடிவு பண்ணேன் என்னை யாரு எனக்காக மட்டுமே புரிஞ்சு ஏத்துக்கிறாங்களோ அவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு, அந்த சமயத்தில் தான் என் கணவர் வந்தாரு "ஆண் தேவதை" மாதிரி,ஏதவது ஒரு நிலையில் என் நிறத்தை பத்தி கேலி பண்ணிடுவாரோன்னு பயந்து அவரை வேண்டாம் என்று சொன்னேன், அப்போதும் அவர் என்னை விடாமல் கன்வின்ஸ் பண்ணி.. எனக்காக மட்டுமே என்னை கல்யாணம் செய்துக் கொண்டார்.இன்னைக்கு நான் இவ்வளவு தூரம் வந்து அவார்ட் வாங்குனதுக்கு காரணமும் அவர் தான்.." என்று சொன்னாள்..

"சூப்பர் மேம்.. உங்களோட இந்த சாதனை, தன் நிறத்தால் முடங்கி போயிருக்க பல பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு பூஸ்ட் மாதிரி இருந்தது, கடைசியா என்ன சொல்ல விரும்புறீங்க மேம்..?"

"நிறத்தாலையோ, உருவத்தாலையோ யார் மனசையும் கஷ்டப்படுத்தாதிங்க முக்கியமா வீட்டில் உள்ள குழந்தைகள் மனதில் நிறத்தை பற்றிய தப்பான எண்ணத்தை உருவாக்காதிங்க, உங்களை யார் கிண்டல் செய்தாலும் அது அண்ணனோ, தம்பியோ, தங்கச்சியோ, அக்காவோ, வீட்டுக்காரரோ யாராக இருந்தாலும் அந்த இடத்தில் உங்க சுயமரியாதையை விட்டு கொடுக்காதீங்க.. நம்ம சமூகம் இது போன்ற கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், முதலில் அந்த மாற்றத்தை நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். இதுதான் அழகுன்னு யாரும் ஒரு எல்லையில் வரையறுக்க முடியாது. அது நாம் பார்க்கிற பார்வையில் தான் இருக்கு.. நாம செய்ய வேண்டிய காரியமே மத்தவங்களை கஷ்டப்படுத்தி அதுல சுகம் காணாமல் அன்பு செய்யிறது மட்டும்தான்.. எல்லாருக்கும் அன்பை கொடுத்து பாருங்க வாழ்க்கையே வண்ணமயமா இருக்கும்.."என்று முடித்தாள் ஓவியப் பெண்

நல்லதை விதைப்போம்..!! நல்லதை மட்டுமே சிந்திக்கவும், செயலாற்றவும் செய்வோம்..!! ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.. இந்த தினம் மட்டும் அல்லாது ஒவ்வொரு தினத்தன்றும் மாதரை போற்றி.. பாடுவோம்..!!

அன்புடன்
வியனி❤
 
Mirshi

Good attempt dear and a very good concept 😍😍😍...

the last lines unmai...
March 8 மட்டுமே மகளிர் தினம் என்று இல்லாது எல்லா நாளுமே மாதரின் thinaamaga பார்க்கணும்..❤
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
T
Good attempt dear and a very good concept 😍😍😍...

the last lines unmai...
March 8 மட்டுமே மகளிர் தினம் என்று இல்லாது எல்லா நாளுமே மாதரின் thinaamaga பார்க்கணும்..❤
Thank u so much sis.. 😍😍
 
Top