All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Pranishasri's கோகுலம் காலனி -2

Punitha karthikeyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணநாயகாய கணதைவதாய
கணாத்யக்ஷாய தீமஹி..
குண ஷரீராய குண மண்டிதாய
குணேஷானாய தீமஹி..
குணாதீதாய குணதீக்ஷாய குண
ப்ரவிஷ்டாய தீமஹி..
ஏகதந்தாய வக்ரதுண்டாய கௌரி
தனயாய தீமஹி..
கஜேஷானாய பாலசந்த்ராய ஸ்ரீ
கணேஷாய தீமஹி..(ஏக தந்தாய..)


என்ற பாடலை கேட்டு சமையலறையிலிருந்து வேகமாக வந்தாள் மீனலோக்ஷினி . ஆனால் அவள் என்ன எதிர் பார்த்து வந்தாளோ அதுதான் நடக்கவில்லை.ஒரு பெருமூச்சுடன் அந்த அறைக்குள் நுழைத்தாள்.அங்கு அவளின் தோழி தீக்ஷிதா பாடலை ஒலிக்கவிட்டுவிட்டு கட்டில் மேல் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு அதில் தலை சாய்த்து இருந்தாள்.அவள் அருகில் சென்று அமர்ந்த மீனா , தீக்ஷி என்றழைத்தாள் .

அவளை நிமிர்ந்து பார்த்த தீக்ஷி மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.

மீனா , இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க போற தீக்ஷி என்றாள் .

இப்போதும் பதில் இல்லை.......

மீனா, இந்த பாட்டை கேட்டு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா ???

இப்போதும் பதில் இல்லை......

மீனா , ஏன் இப்படி யார்கிட்டயும் பேசாம எல்லாரையும் கஷ்டப்படுத்துற

இப்போதும் பதில் இல்லை......

மீனா, பழசை எல்லாம் மறந்திட்டு பழைய மாதிரி இருக்க கூடாதா???

இப்போதும் பதில் இல்லை.......

இவளை இப்படியே விட்டாள் சரியா வராது என்று நினைத்த மீனா , நீ இப்படியே இருந்தேன்னு வை உனக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டிருவாங்க..... உன்னோட வாழ்க்கையில ஒரு நாள் நடந்த கூத்துக்காக இப்படி உன் வாழ்க்கையை வாழாமல் எப்போ பாரு உம்முனு சந்தோசமே இல்லாமல் உன்னையும் கஷ்ட படுத்திட்டு உன்ன பெத்தவங்களையும் கஷ்டப்படுத்துறீயே இது நியாயமா ?? சொல்லுடி.....இதோ பாரு இதுதான் நான் உனக்கு சொல்ற கடைசி அறிவுரை இனி நான் பேசமாட்டேன் எப்போ நீ பழைய மாதிரி மாறுவியோ அப்போதான் நான் உன்கிட்ட பேசுவேன்....இப்போ கிளம்பு பட்டு மாமி அவங்க வீட்டுக்கு சாப்பிட கூப்ட்டிருக்காங்க வரமுடியாதுனு சொன்ன சப்புன்னு அடிச்சிருவ கிளம்பு என்றவள் அறையை விட்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்.

மீனா சென்றதும் தீக்ஷி பெரும் அதிர்ச்சியில் இருந்தாள். இத்தனை நாள் தனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஜீவன் மீனா மட்டும் தான் அவளும் இப்படி சொல்லிவிட்டாளே என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அமர்ந்திருந்தாள். பின் சிறிது யோசிக்க ஆரம்பித்தாள் . அவள் கூறுவதும் சரிதானே ஒரு நாள் நடந்த கூத்துக்காக வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க வேண்டுமா ?? தானும் சந்தோசமாக இல்லாமல் மற்றவர்களையும் சந்தோசமாக இருக்கவிடாமல் என்ன இது எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கிறேன். இனி இப்படி இருக்கக்கூடாது. கொஞ்சமாவது மாறவேண்டும் என்று நினைத்தவள் கண்களை அழுந்த துடைத்து கொண்டு தனக்கு தேவையான உடைகளை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.

வாங்க மக்களே அவள் குளிச்சிட்டு வரட்டும் நாம அவங்களை பற்றி பார்த்துவிடுவோம்.

மீனலோக்ஷினி மற்றும் தீக்ஷித்தா இருவருக்கும் 22 வயது சொந்த ஊரு நாகர்கோவில். இருவரும் மருத்துவ கல்லூரியில் கடைசி வருடம் படிக்கின்றனர். இருவரும் கோகுலம் காலனியில் பட்டு மாமி வீட்டிற்கு இடது புறம் உள்ள வீட்டில்.இரண்டு வருடங்களாக வசிக்கின்றனர் .மீனா மிகவும் அமைதியான குணம் கொண்டவள் என்றாள் தீக்ஷி பயங்கர அடாவடி குறும்புகாரி. இவர்கள் வாழ்வில் வந்த ஒரு புயல் இருவரின் குணங்களையும் மாற்றிவிட்டது. ( அது என்ன புயல் அப்படினு கேள்வி வருதா ??? அதை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்ற இப்போ மீனா என்ன பண்றான்னு பாக்கலாம் வாங்க )..

தனது அறைக்கு வந்த மீனாவின் கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அழைப்பு மணி அடிக்க அதனை திறந்து பார்த்தாள். புதிய எண்ணிலிருந்து whatsapp msg வந்திருந்தது.அதனை திறந்து பார்க்க அதில்

என் குறுஞ்செய்தியை இயக்கிய
உன் விரல்கள் போல்
என் காதலை எப்போது
உன் மனதால் இயக்க போகிறாய்
பெண்ணே !!!!!!


என்று இருந்தது. வந்ததே கோபம் மீனாவுக்கு.உடனே அந்த எண்ணுக்கு அழைத்தாள் ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை. அவ்வளவு தான் தனது அர்ச்சனையை தொடங்கிவிட்டாள்.' விளங்காத பயலுக கையில ஒரு போன் கிடைச்சிறக்கூடாது உடனே ஒரு 10 நம்பர் தட்டி msg பண்ணியிரவேண்டியது வேலை இல்லாத வெட்டி பயலுக' என்ற திட்டிக்கொண்டிருந்தவள் தீக்ஷி வந்ததை கவனிக்கவில்லை.

தீக்ஷி , மீனு மீனு மீனு என்று கத்திக்கொண்டிருக்க மீனா இன்னும் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.தீக்ஷி மீனுவை பிடித்து உலுக்க அதில் சுயஉணர்வுக்கு வந்த மீனு தீக்ஷியை பார்த்து வாயை பிளந்து விட்டாள்.

தலைக்கு குளித்து தலை முடியை இரு பக்கமும் முடி எடுத்து கிளிப் மாட்டிருந்தாள் வெள்ளை நிற சல்வார் அணிந்து இடது கையில் ஒரு தங்க வளையல் வலது கையில் bracelet , புருவத்துக்கு மத்தியில் சிறு பொட்டு நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து (என்னது குங்குமம்மா??? 😳😳😱😱) கழுத்தில் மெல்லிய செயின் பார்ப்பதற்கு தாலி செயின் போல் இருந்தது. இவ்வளவு நேரம் அவள் அழகில் வாய் பிளந்திருந்த மீனு கடைசியாக அவளது செயினை பார்த்ததும் முகம் வாடிவிட்டது.

மீனா , செயினை தான் கலட்டமாட்டேங்குற atleast அந்த குங்குமத்தையாவது வைக்காம இருக்கலாம்ல ?? என்றாள் வருத்தமாக

தீக்ஷி , ஊரை ஏமாத்தலாம் மீனு என்னோட மனசாட்சியை ஏமாத்தமுடியாதுல என்றாள் விரக்தியாக . இதற்குமேல் இதை பற்றி பேசவேண்டாம் என்று நினைத்த மீனு , சரி டி வா போகலாம் மாமி wait பண்ணுவாங்க தேன்மொழி அக்கா வேற போகும் போது கூப்பிட சொன்னாங்க என்றவள் பூட்டும் சாவியும் கையில் எடுத்துக்கொண்டாள்.

தீக்ஷி , ஆமா அந்த அக்கா மாசமா வேற இருகாங்க பார்த்து கூட்டிட்டு போகணும் ஒரே காலனி தான் ஆனால் எவ்ளோ தூரம் நடக்கணும் very bad என்றாள்.

அதனை கேட்ட மீனு மீண்டும் வாயை பிளக்க இந்த முறை அவளின் வாயை மூடிய தீக்ஷி , door lock என்றாள்

மீனு , என்னடி இப்படி ஆகிட்ட ????

தீக்ஷி , நீதானே மாறு மாறுன்னு சொன்ன அதான் மாறிட்டேன் என்றவள் மீனுவை இரண்டு அடி போட .அவள் அடித்த இடத்தை தடவி கொண்டே மீனு , இந்த மாற்றம் உடம்புக்கு ஆகாதுடி என்றாள் .

தீக்ஷி , யாரு உடம்புக்கு

மீனு , எனக்குத்தான்

அதற்கு தீக்ஷி சிரித்துவிட அதனை மனதில் நிரப்பி கொண்ட மீனு அவளை அழைத்து கொண்டு அவர்களுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் தேன்மொழி வீட்டின் calling bell ஐ அழுத்தினாள்.இரண்டு முறை அழைத்தும் பதில் இல்லாமல் போக தீக்ஷி வேகமாக கதவை தட்ட அப்போதும் தேன்மொழி வெளியில் வரவில்லை.பின்னர் தீக்ஷி , 'தேன்மொழி ஏய் தேனு' என்று அழைக்க இப்போது ஒரு கரம் பின்னாடி இருந்து தீக்ஷியின் தோளில் தட்ட அழைப்பது மீனு என்று நினைத்த தீக்ஷி, 'அட சும்மா இரு மீனு நம்ம dean பையன இவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவள் என்ன பெரிய இவளா?? கதவை தட்டுனா கூட திறக்கமாட்டேங்குற' என்று கூறி மீண்டும் தட்ட இம்முறை பின்னால் இருந்து குரல் வந்தது , தீக்ஷி மேடம் பூட்டியிருக்குற கதவை எவ்ளோ தட்டினாலும் திறக்காதுனு உங்க dr மூளைக்கு தெரியலையே .

குரல் வந்த திசையில் பார்க்க அங்கே கைகளை கட்டிக்கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக தேன்மொழி நின்றுகொண்டிருந்தாள்.அவளை பார்த்து அசடு வழிந்த தீக்ஷி , ஹி ஹி நீ இங்க என்ன பண்ற ???

தேன்மொழி , என் வீட்டு முன்னாடி நின்னுட்டு என்னை பார்த்து என்ன பண்றனு கேக்குற அதை நீதான் சொல்லணும் என்றாள் .

மீனு , மாமி வீட்டுக்கு போகும் போது கூப்பிட சொன்னிங்களா அதான் வந்தோம் .

தேன்மொழி , ஹ்ம்ம் சரி வாங்க மாமி wait பண்ணுவாங்க போகலாம் என்றாள் .

அதற்கு மற்ற இருவரும் கோரஸாக , சரிங்க officer என்றனர் நமட்டு சிரிப்புடன்.


தேன்மொழி , கொழுப்பு டி உங்களுக்கு ஏன்டி ஒரு senior னு தான் எனக்கு மரியாதை இல்லை atleast உங்க professor ஓட மனைவின்னு கொஞ்சமாச்சும் மதிக்கிறிங்களா டி அதுசரி dean கே மரியாதை இல்லை இதுல எங்க இருந்து எனக்கு கிடைக்க போகுது .. என்றவள் முன்னே செல்ல அவள் பின்னாள் இருவரும் சிரிப்புடன் சென்றனர்.

அவங்க மாமி வீட்டுக்கு போகட்டும் அவங்க போறதுக்குள்ள தேன்மொழி பத்தி பார்த்திரலாம் .

தேன்மொழி சிறிய வயதிலே அனாதை ஆசிரமத்தில் விடப்பட்டவள் . படிப்பே தனது மூச்சாக நினைத்து படித்து பனிரெண்டாம் வயதில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தாள் . ஆதலால் நிறைய தொழில் அதிபர்கள் முன் வந்து உதவ மருத்துவ கல்லூரியில் சேர்ந்தாள் . அங்குதான் முரளியை சந்தித்தாள். முரளி இவளின் சீனியர்.இருவருக்கும் காதல் மலர அது கல்லூரி முழுதும் கொடிகட்டி பறந்தது. முரளி தேன்மொழிக்கு சீனியர் என்றாலும் அந்த மருத்துவ கல்லூரி டீன் மகன் என்பது முரளியை காதலிக்க ஆரம்பித்த பின்னர் தான் அவளுக்கு தெரிய வந்தது. முரளி படிப்பை முடித்து அதே கல்லூரியில் ஆசிரியராய் பணியில் சேர்ந்தான் . அதன்பின்னர் இவர்கள் இருவரின் காதல் முரளியின் வீட்டிற்கு தெரியவர பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.இறுதியில் தனது வீட்டினை எதிர்த்து தேன்மொழியை கைப்பிடித்தான் முரளி. அதன்பின் மீனலோக்ஷினி மூலம் கோகுலம் காலனியில் வீடு காலியாக இருப்பதை தெரிந்து கொண்ட இருவரும் இங்கு குடிவந்தனர். இவர்கள் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது தேன்மொழி 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

திருநெல்வேலியில் ஒரு புகழ் பெற்ற shopping complex . மித்ரா போன் பேசிக்கொண்டே படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள். அவள் முன்னாள் அவளது கணவன் ஆதி சென்றுகொண்டிருந்தான்.

மித்ரா , சரிங்க சரண்யா பாட்டி நான் உடம்பை நல்லா பார்த்திக்கிறேன் நீங்க உங்க அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளையை ஒழுங்கா கல்யாணம் பண்ற வேலைய பாருங்க

சரண்யா , என்ன டி கொழுப்பா ?? அவனவன் தவம் கிடக்குறான் பிள்ளை இல்லனு உனக்கு உடனே கிடைச்சிட்டுனு அலட்சியமா இருந்திராத பக்கி கவனமா இரு உன் மாமியார் வேற சரியில்லைன்னு சொல்ற பேசாம உங்க அம்மா வீட்டுல போய் கொஞ்ச நாள் இருந்திட்டு வரலாம்ல

மித்ரா , எத்தனை நாள் டி அங்க போய் இருக்கமுடியும் சொல்லு ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு புருஷன் வீடுதான் நிரந்தரம்...ஹ்ம்ம் பார்த்துக்கலாம்

சரண்யா , ஹ்ம்ம் நீ சொல்றதும் சரிதான்... ஆமா அப்படி என்ன தாண்டி உன்னோட மாமியார் பன்றாங்க ???

மித்ரா , ஹ்ம்ம் அதை ஏன் டி கேட்கிற...அவங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை . ஆதிக்கு பிடிச்சதால மட்டும் தான் இந்த கல்யாணம் நடந்திருக்கு . வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டாள் குற்றம் னு சொல்றமாதிரி தான் இங்க நடக்கு. எல்லா வேலையும் நானே செய்யணும். செய்து கொடுத்தாலும் ஏதாவது குறை சொல்லுவாங்க..இப்போ நான் pregnant ஆ வேற இருக்கிறேனா காலையில சுத்தமா எழும்பவே முடியல மசக்கை அதிகமா இருக்கு எது சாப்பிட்டாலும் vomit பண்ணிடுறேன் ரொம்ப tired ஆ இருக்கு அதனால காலையில நேரம் கழிச்சி எழுந்திக்கிறேன் வாசல் சுத்தம் பண்ண முடியல அதுக்கு ஜாடையா பேசுறாங்க. இன்னைக்கு காலையில கூட தலைவலி எழும்பவே முடியல ஆதிக்கு இன்னைக்கு தான் நேரம் கிடைச்சது கடைக்கு போக வேற வழி இல்லாம கிளம்பி வந்தேன் அதுக்கு இவ்ளோ நேரம் படுத்திருந்தா இப்போ சிங்காரிச்சிட்டு கிளம்புறானு பேசுறாங்க இன்னும் என்னலாம் வர போகுதோ தெரியல என்றாள் வருத்ததுடன்.

சரண்யா , என்னடி இது அடுக்கிட்டே போற ஆதிகிட்ட இதெல்லாம் சொல்லலாம்ல ????

மித்ரா , அட நீ வேற ஏன்டி ஆதிகிட்ட சொன்னா மட்டும் என்ன ஆகும் ஒன்னும் ஆகாது..எங்க அம்மா அப்படித்தான் புலம்பும் நீ கண்டுக்காதன்னு சொல்லுவாரு அவ்ளோதான்..

சரண்யா , என்னடி இப்படி சொல்ற ??

மித்ரா , அது என்னோட தலை எழுத்து நடக்குறது நடக்கட்டும்.சரி அதைவிடு உன்னோட அவர் பத்தி சொல்லு..

சரண்யா , அட நீவேற conform ஆச்சுன்னா சொல்ற சரிடி எங்க வீட்டு ஹிட்லர் கத்துது நான் அப்பறம் பேசுறடி என்றவள் காலை cut செய்துவிட்டாள்.

போனை உள்ளே வைத்த மித்ரா மீதி shopping ஐ முடித்து கொண்டு ஆதியுடன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.அங்கு தனக்கு நேர போகும் துன்பத்தை பற்றி அறியாமல்.

தொடரும்......

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


ஹாய் மக்காஸ்

என்னடா epi-1 கொடுத்திட்டு ஆளையே காணும்னு திட்டிட்டு இருக்கீங்களா மன்னிச்சிருங்க வரலக்ஷ்மி விரதம் அப்படி இப்படி நேரம் கிடைக்கவே இல்லப்பா எழுதுறதுக்கு....இனி சின்ன update ஆச்சும் கண்டிப்பா வந்திரும்.இன்னைக்கு அப்டேட் எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க மக்களே.

எப்போதும் உங்களுடன் ,
ப்ரநிஷாஸ்ரீ.
 
Top