All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Pranishasri's கோகுலம் காலனி -1

Punitha karthikeyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோகுலம் காலனி -1

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு


என்று சுப்ரபாதம் பாடி கொண்டே துளசி செடிக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறாரே அவர்தான் பட்டு மாமி. மாமியை ஒரு பார்வை கையிலிருக்கும் பேப்பரை ஒரு பார்வை என்று மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருக்கிறாரே அவர்தான் கிட்டு மாமா.

மாமா ஏன் இப்படி பார்த்திட்டு இருக்காரு வாங்க என்னனு கவனிப்போம்.

மாமி பூஜை முடிந்து வீட்டு வாசலுக்கு வர அப்போது கிட்டு மாமா , டி பட்டு என்றழைத்தார்.

அவர் எதற்கு அழைக்கிறார் என்று அறிந்த பட்டு மாமி, இங்க பாருங்கோ இன்றைக்கு அமாவாசை ஒரு பொழுது நீங்க இருந்து தான் ஆகணும் அதனால பச்சத்தண்ணி கூட தரமாட்டேன் சொல்லிட்டேன் என்றவர் விறு விறு வென வீட்டின் உள்ளே சென்றுவிட்டார்.

அவர் உள்ளே சென்றதும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். அப்போது ஒரு வெளிச்சம் அவர் முகத்தில் அடித்தது. என்னது அது???? தனது காலனியில் குடியிருக்கும் விஷ்ணு தனது வீட்டை கடந்து சென்றதை பார்த்த கிட்டு மாமாவின் மூளையில் மணி அடித்தது. உடனே அவர் , டி பட்டு பட்டு அங்க என்ன பண்ற சீக்கிரம் வா விஷ்ணு வந்திருக்கன் பாரு வரும்போது மறக்காம இரண்டு பேருக்கும் காபி எடுத்தின்டு வா என்றார்.

கிட்டு மாமாவின் குரலை தொடர்ந்து வீட்டின் உள்ளே சமையலறையில் இருந்து ஏதோ பாத்திரம் உருளும் சத்தமும் அதனை தொடர்ந்து கையில் கரண்டியுடன் காளி அவதாரமாக வெளியில் வந்தார் பட்டு மாமி.

பட்டு மாமி, எதுக்கு இப்போ கத்துறேள் நாந்தான் சொன்னேனோ இல்லையோ இன்றைக்கு நீங்க ஒரு பொழுது இருக்கணும்னு பின்ன எதுக்கு கத்துறேள் இந்த பாலா போன காபியை குடிகளனா உங்களுக்கு தூக்கம் வராதா?? பத்தாததுக்கு விஷ்ணு தம்பியை வேற ஏன் இழுக்குறேள்?? என்று பொங்கி எழுந்துவிட்டார்.

(ஆமாங்க கிட்டு மாமாவுக்கு காலையில காபி குடிச்சாதான் பொழுதே போகும் அதுமட்டும் இல்லை யாரையாவது ஷாக்கு வச்சு ஒரு நாளைக்கு 5 காபி குடிச்சிருவாரு இன்னைக்கும் அதே tricka follow பண்ணி திட்டு வாங்கிட்டு இருக்காரு. இன்னுமொரு விஷயம் என்னனா விஷ்ணு வரவே இல்லை பாருங்க மக்களே இவரு பண்ற வேலையை...சரி வாங்க வேற என்ன திட்டு வாங்குறாருனு பார்ப்போம்..)

பட்டு மாமி , ஏன்னா நான் தெரியாமத்தான் கேக்குறேன் நீங்க பண்றது உங்களுக்கே நியாயமா படுறதா?? நீங்க பண்றத பார்த்தா யாராச்சும் நீங்க மிலிட்டரியில இருந்தேள்ன்னு சொன்னா நம்புவாளா??? சொல்லுங்கோ ?? என்று இன்னும் கத்தி கொண்டிருந்தார்.அதனை கேட்டு கொண்டிருந்த கிட்டு மாமாவின் காதில் புகை வந்துகொண்டிருந்தது.

(அந்த புகையை fire engine வந்து மெதுவா அணைக்கட்டும் இப்போ வாங்க இவங்களை பற்றி ஒரு சின்ன intro பார்த்திரலாம்).

கிட்டு மாமா (கிருஷ்ணமூர்த்தி ) வயது 50- மிலிட்டரியில் இருந்து voluntary retirement வாங்கிட்டு வந்திட்டார்.அது ஏன் அப்படினு அப்பறம் சொல்ற.கிட்டு மாமா பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவரோட பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட பட்டு மாமியின் அம்மா லட்சுமி அஃதாவது கிட்டு மாமாவின் அத்தை அரவணைத்து கொண்டார். பின்னர் கிட்டு மாமா படித்து முடித்துவிட்டு மிலிட்டரில் சேர்த்துவிட்டார். பட்டு மாமியின் அம்மாவும் உடல் நலக்குறைவால் இறந்துவிட மாமியை கைப்பிடித்தார் கிட்டு மாமா.அதன்பின் தனது சம்பாத்தியத்தில் கோகுலம் காலனியை உருவாக்கினார்.
முதலில் அவர்களது வீடும் பக்கத்தில் ஒரு வீடும் மட்டுமே இருந்தது...பின்னர் சுத்தி இருக்கும் இடத்தை வாங்கி மேலும் 6 வீடுகளை காட்டினார்.இப்போது கோகுலம் காலனி 'ப' வடிவமாக காட்சியளிக்கிறது. அஃதாவது கிழக்கு பார்த்து இரண்டு வீடு அதற்கு நேர் எதிர் இரண்டு வீடு , வலது புறம் இரண்டு வீடு இடதுபுறம் இரண்டு வீடு நடுவில் புல்லாங்குழல் வாசிப்பது போல் ஒரு கிருஷ்ணர் சிலை அதற்கு முன் ஒரு துளசி மாடம் (அதுக்கு தான் பட்டு மாமி பூஜை பண்ணிட்டு இருந்தாங்க.....சரி சரி மாமா புராணம் போதும் மாமி பற்றி பார்க்கலாம்).

பட்டு மாமி ( பட்டம்மாள்) வயது-45 அந்த காலத்து S.S.L.C. கிட்டு மாமாவின் தந்தை கூட பிறந்த தங்கை மகளே பட்டு மாமி. பார்ப்பதற்கு நடிகை மனோரமா போல் இருப்பார்.ரொம்ப ரொம்ப தங்கமானவர்.கோகுலம் காலனி உருவாவதற்கு முழு காரணமே பட்டு மாமி தான்.

இவர்கள் இருவரின் பாசமும் ஒரு குழந்தைக்கு கிடைப்பது சுயநலம் என்று இறைவன் நினைத்தாரோ என்னவோ அவர்களுக்கு குழந்தையை கொடுக்கவில்லை.அதை நினைத்து கவலை கொள்ளாத தம்பதியர் இருவரும் தங்களால் முடிந்த 10 குழந்தைகளுக்கு sponser செய்து வருகின்றனர்.அதில் ஒருவன் தான் அவர்கள் காலனியில் தங்கியிருக்கும் விஷ்ணு பிரசாத். ஆனால் அந்த விஷயம் அவர்களுக்கும் தெரியாது விஷ்ணுவுக்கும் தெரியாது.

மாமியின் அர்ச்சனை தொடர்ந்து கொண்டிருக்க அப்போது ஒரு பெண் கையில் ஒரு 5 வயது குழந்தையுடன் வந்தாள்.
அவளை பார்த்த பட்டு மாமி தனது அர்ச்சனையை ஓரம் கட்டி வைத்து விட்டு அப்பெண்ணை பார்த்து , வா தேவி , என்ன காலையிலையே இந்த பக்கம் காபி குடிக்குறீயா??? என்றார் புன்னகையுடன். அதை கேட்ட கிட்டு மாமா , என்ன டி பட்டு கேள்வி கேட்டுண்டு இருக்க போய் எடுத்திட்டு வா ரெண்டா எடுத்திண்டு வா என்றார் கிடைத்த கேப்பில் சைக்கிள் ஓட்டியவாறு. அவரை முறைத்து கொண்டிருந்தார் பட்டு மாமி.

இவர்களின் சம்பாஷணையை பார்த்த தேவி சிறிது புன்னகை சிந்திவிட்டு , மாமி எனக்கு காபிலாம் வேண்டாம் இப்போதான் ஆச்சு....கிருஷ்ண ஜெயந்தி வருதுல அதுக்கு ஸ்கூல எனக்கு rehersal இருக்கு பாரதிக்குட்டிக்கு இன்றைக்கு ஸ்கூல் leave அதான் இங்க விட்டுட்டு போகலாம்னு வந்தேன் என்றாள்.

பட்டு மாமி , அதுக்கு என்னடி தாராளமா இருக்கட்டும் இதுல என்ன இருக்கு என்றவர் வாடி என் செல்லம் என்று குழந்தையை தூக்கி கொண்டார்.

தேவி , இந்தாங்க மாமி அவளோட bag உள்ள அவளுக்கு தேவையான things சாப்பாடு எல்லா இருக்கு என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தாள்.

பட்டு மாமி ,கதை நன்னாயிருக்கே ஏன் டி குழந்தைக்கு சாப்பாடு நான் தரமாட்டேனா?? ரெண்டு வேலை சாப்பாடு கொடுக்கிறதால நான் ஒன்னும் குறைஜிரா மாட்டேன் புரியுரதா?? என்றார் கோவமாக .

தேவி , அது இல்லை மாமி என்று ஏதோ கூற வந்தவளை தடுத்த கிட்டு மாமா , பரவாயில்லை தேவிம்மா குழந்தையை விட்டுட்டு போம்மா என்றார்.

அதன்பின் தேவி எதுவும் பேசவில்லை சரிப்பா என்று மட்டும் கூறிவிட்டு குழந்தையை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு விடைபெற்று சென்றுவிட்டாள்.

தேவி வயது-28 ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். கொஞ்சம் முன் கோபம் கொண்டவள் ஆனால் தவறு தன் மீது என்றால் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டாள்.அப்பா , அம்மா கிடையாது.கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.contract வேலை என்பதால் தாயும் பிள்ளையும் இங்கு தனியாக வசித்து வருகின்றனர் . குழந்தையின் பெயர் ஆருத்ரபாரதி.தேவி வேலை பார்க்கும் அதே பள்ளியில் L.K.G. படிக்கிறாள்.கோகுலம் காலனியில் 4 வருடங்களாக குடியிருக்கின்றனர். பட்டு மாமி வீட்டின் நேர் எதிர் வீட்டில் இருக்கின்றனர் .

இவங்களை பற்றி இவ்வளவு போதும் இனி கதைக்குள்ள போகலாம்.

தேவி சென்றதும் பட்டு மாமி குழந்தையை அழைத்து கொண்டு உள்ளே சென்றுவிட்டார். கிட்டு மாமாவும் அமைதியாக newspaper படிக்க தொடங்கிவிட்டார்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இருந்து ஒரு ஜோடி தரிசனம் முடித்து வெளியில் வந்து கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு ஒரு 24 அல்லது 25 வயது இருக்கலாம்.புதியதாக கல்யாணம் ஆனவர்கள் போல இருவரின் முகங்களும் புன்னகையில் பூரித்து போயிருந்தது. ஆனால் ஏனோ அந்த பெண்ணின் முகத்தில் மட்டும் பூரிப்பு குறைந்திருந்தது. அப்போது அவளின் கணவன் , மித்ரா wait பண்ணு நான் வண்டிய எடுத்திட்டு வரேன் என்று கூறி கார் parking செல்ல இவள் தனியாக நின்றாள்.

சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் கைபேசி அழைக்க அதை இயக்கி காதில் வைத்தாள்.

மித்ரா , ஹலோ சரண் எப்படி இருக்க ஏன் டி கல்யாணத்துக்கு வரல? என்றாள் கோபத்துடன்.

சரண்யா , ஹே மெதுவா டி உன்னை எப்படித்தான் mr.ஆதி எப்படி தான் சமாளிக்க போறாரோ ?? என்றாள்.

மித்ரா , ஹ்ம்ம் சமாளிச்சிட்டு தான் மறுவேலை அவருக்கு போடி என்றாள் எரிச்சலாக.

சரண்யா , என்னடி பேச்சு ஒரு மாதிரியா இருக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட முழுசா ஆகல அதுக்குள்ள என்ன எரிச்சல் .

மித்ரா , அதெல்லாம் ஒன்னும் இல்ல டி

சரண்யா, ஹ்ம்ம் இப்போ சொல்ல போறீயா ? இல்லையா??

மித்ரா, ஹ்ம்ம் உங்கிட்ட சொல்றதுக்கு என்னடி கல்யாணம் ஆகி மறுநாள் திருச்செந்தூர் போனோம் டி

சரண்யா , இது நம்ம area ல வழக்கமா நடக்குற ஒண்ணுதான?? என்றாள் இடையில் புகுந்து.

மித்ரா, அடியே அவசர குடுக்கை சொல்றத முழுசா கேளு

சரண்யா , சரி சொல்லு

மித்ரா , நாங்க தனியா போகல மொத்த குடும்பமும் வந்துச்சு அதெல்லாம் எனக்கு problem இல்லை என்னை அவரு சுத்தமா கண்டுக்கவே இல்லை இதெல்லாம் கூட்டு குடும்பத்தில சாதரணம் but கடல் அலையில விழுந்து கையில சுளுக்கு பிடிச்சு வலில நிக்குற அது சரி ஆகிடும் அப்படினு சொல்லிட்டு போயிட்டாரு வீட்டுக்கு வந்ததும் ஏன் இப்படி பண்ணிங்கனு கேட்டதுக்கு எல்லார் முன்னாடியும் என்ன பண்ண முடியும்னு கேக்குறாரு இன்னும் அந்த வீக்கம் சரியாகளை டி என்றாள் வருத்தமாக.

சரண்யா , ஏய் லூசு ஏன் இப்படி பேசுற?? கல்யாணம்னா முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும் கொஞ்சம் adjust பண்ணிக்கோடி என் பட்டுக்குட்டி என்றாள் சமாதான படுத்தும் விதமாக.

மித்ரா , ஹ்ம்ம் adjust பண்ணித்தான் ஆகணும் வேற வழி ... ஆமா உனக்கு தான் கல்யாணம் ஆகளையே அப்பறம் என்ன எனக்கு advise பண்ணிட்டிருக்க

சரண்யா , ஹ்ம்ம் ஹலோ நல்லதை யாரு சொன்ன என்ன?? கேட்டுக்க வேண்டியதுதான என்றாள்.

மித்ரா , சரிங்க மேடம் கேட்டுக்கிறேன் ... ஆனால் ஏன் நீங்க கல்யாணத்துக்கு வரல முதல்ல அதை சொல்லு..

சரண்யா, அதை ஏன் டி கேக்குற அங்க வரணும்னு தான் இருந்த எங்க வீட்டுல ஒரு கிழவி இருக்கே அதுக்கு திடிர்னு நெஞ்சு வலி வந்து ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணிருச்சு

மித்ரா , அப்பறம் என்னடி ஆச்சு பாட்டிக்கு ஒன்னும் இல்லையே என்றாள் பதற்றடத்துடன் .

சரண்யா , அட நீ வேற ஏன்டி அது நல்ல குத்துக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்கு சாதாரண gas drouble அதை அவ்வளவு பெரிய சீன் ஆக்கிருச்சு என்றாள் .

மித்ரா , பெரியவங்களை அப்படி சொல்லாத சரண் சரி விடு இன்னொரு நாள் டைம் கிடைச்சா இங்க வந்திட்டு போ என்றாள்.

சரண்யா , ஹ்ம்ம் try பண்ற.. நீ மனச போட்டு கொழப்பிக்காத உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்.

மித்ரா , சரிடி ஆதி வராரு அப்பறம் பேசுற...மறுவீட்டுக்கு வந்தோம் கோவிலுக்கு அனுப்பி வச்சாங்க இனி வீட்டுக்கு போகணும் டி freeya இருக்கும் போது call பண்ற இப்போ வச்சிரேன் என்றவள் எதிர்முனை சரி என்றதும் போனை வைக்கவும் ஆதி வரவும் சரியாக இருந்தது. மித்ரா வண்டியில் ஏறிக்கொள்ள வண்டி மித்ராவின் வீடு நோக்கி சென்றது.

தொடரும்......

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஹலோ மக்களே ,

என்ன டா கதை எழுத போறேன்னு buildup கொடுத்திட்டு ஆளு காணாமல் போய்ட்டாளேன்னு நினைச்சவங்களுக்கு ஒரு பெரிய மன்னிப்பு கேட்கிறேன். எல்லாரும் என்னை மன்னிச்சுசுசு.......... வீட்டில சில பல சூழ்நிலை சரியில்லை அதனாலதான் எழுத முடியாம போச்சு but இனி இப்படி நடக்காது மக்களே.... சரி இப்போ கதைக்கு போகலாம்........

கோகுலம் காலனில இன்னும் யாரு யாரு இருகாங்க அவங்க எல்லாம் எப்படி பட்டவங்க எப்படினு அடுத்த அத்தியாயத்தில் சொல்ற..... ஹீரோ யாரு ???? ஹீரோயின் யாருனு ??? கதையோட முடிவுல சொல்ற.... அதுவரைக்கும் யோசிச்சிட்டே இருங்க இப்போ உங்களோட like and comments சொல்லுங்க மக்களே........

எப்போதும் உங்களுடன் ,
ப்ரநிஷாஸ்ரீ.
 
Top