All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Beauty Tips

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

அழகு கலையில் நிபுணர்கள் பெண்கள்... உங்களுக்கு தெரிந்த அழகு குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 
கன்னத்தை பளபளப்பாக்கும் தக்காளி

தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்கி, அதில் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.


சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.


தக்காளி விழுது மற்றும் பாதாம் விழுதை சம அளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.


நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து காணப்படும். அவர்களுக்கு தக்காளியின் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் மிருதுவாகும்.


தக்காளி சாறு, தேன் மற்றும் சிறிது சமையல் சோடா இந்த மூன்றையும் நன்றாக கலந்து, பேஸ் மாற்றி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையம் மறையும்.


தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
 

Nandhininila

Active member
முகம் பளபளப்பாக ( Simple and Very easy.)

தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை கலந்து முகத்தில் பேக் மாதிரி போட்டு காய்ந்தவுடன் கழுவினால் முகம் பொலிவு பெரும். வீட்டிலேயே facial செய்த பயன் பெறலாம்.:):):)
images.jpg
 

Rmya

Member
முகத்தின் பொலிவிற்கு:
சிறிது அளவு அரிசி மாவு
புளித்த தயிர் (அல்லது) சிறிது எலுமிச்சை சாறு
இரண்டையும் கலந்து face pack போல் முகத்தில் போடவும்..
15 நிமிடங்கள் கழித்து நன்கு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும்....
முகத்தில் உள்ள கருமை நிறம் மறையும்....(rice flour act as scrubber and removes the black Ness)
 

Eswarikasirajan

Active member
♥பெண்களின் தோலில் ஆங்காங்கே கருமை படர்கிறதா?

♥பாவாடை அணியும்பகுதி, கழுத்தின் பின்பகுதி, அக்குள், பிரேசியர் லைன் கருமையை எப்படி போக்குவது, வராமல் எப்படி தடுப்பது என சில யோசனைகள்...

♥இடுப்பின் கருமை
புடவையோ, சுடிதாரோ இறுக்கி கட்டுவதால் அங்கு கருமை படிகிறது. அதைப்போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் ஆயில் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச்சுற்றி தடவி, மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து விடும். பின் 2 டீஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் கடலை மாவு கலந்து பேக் போடவும். காய்ந்தவுடன் கழுவி விட்டு மாய்ச்சரைசர் போடவும். இதை வாரத்தில் 3 நாட்கள் தொடர்ந்து செய்ய கருமை மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

♥பின் கழுத்தின் கருமை
ஒரு ஸ்பூன் தவிடு எடுத்து ஈரக்கையினால் அதைத் தொட்டு, தினமும் குளிக்கும் முன் கழுத்தின் பின்புறம் மசாஜ் கொடுக்க, இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி 2 டீஸ்பூன், 1 டீஸ்பூன் தேன் கலந்து ‘பேக்’ போட்டு பத்து நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால் கருமை காணாமல் போவதுடன் சருமமும் மிருதுவாகும்.

♥அக்குள் பகுதியின் கருமை
அக்குள் பகுதியில் வியர்வை மற்றும் அழுக்கு சேர்ந்து கருமை படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க இருமுறை ஏதாவது எண்ணெய் கொண்டு அக்குளுக்கு மசாஜ் கொடுத்து கழுவவும். மாதுளம்பழத்தின் கொட்டைகளை உலர்த்தி அதிலிருந்து 1 டீஸ்பூன் பொடி எடுத்து தண்ணீர் சேர்த்து குழைத்து, 2 சொட்டுகள் தேங்காய் எண்ணெய் கலந்து மசாஜ் செய்யுவம். 1 டீஸ்பூன் தேனுடன் ½ மூடி எலுமிச்சைச் சாறு கலந்து ‘பேக்’ போடவும். காய்ந்தவுடன் கழுவவும். 15 நாட்களுக்கு ஒருமுறை பார்லரில் ‘பிளீச்’சும் செய்யலாம்.

♥பிரேசியர் லைன்
மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பிரேசியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையை ஏற்படுத்துகிறது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். குளிக்கும் முன், ஒருநாள் விட்டு ஒருநாள் 1 டீஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெய் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்து விடும்.
 

Sri Divyaa

Member
Home made waxing:
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை பழம் - 1
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
மூன்றையும் கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். ஸ்பூனால் கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
Semi solid ஆக வரும் போது ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி சூடு தணியும் வரை காத்து இருக்கவும்.
8780

பிறகு முடி உள்ள இடத்தில் தடவி 10 second கழித்து எடுக்க வேண்டும்.

8781
 

Attachments

  • Screenshot_20190711-083909.png
    Screenshot_20190711-083909.png
    920.3 KB · Views: 12

Anuya

Member
முகம் பளபளப்பாக:

முல்தானி மெட்டி 2 டீஸ்பூன், சொத்துக்காற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் , ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும்.....
 

Kalai karthi

Well-known member
காய்கறிகள் கட் பண்ணும் போது தோலை முகத்தில் தடவி கொள்ளலாம். உதாரணமாக பீட்ரூட் கட் பண்ணிய தோலை முகத்தில் தடவி கொள்ளலாம் நல்லது. வெண்டைக்காயில் முன்னும் பின்னும் கட் செய்வதை முகத்தில் தடவி கொள்ளலாம் முகம் நன்றாக இருக்கும்.
 

Kalai karthi

Well-known member
தீப்புண் ஏற்பட்டால் உடனே லேவண்டர் அரோமா எண்ணெய் தடவுங்கள். வயிற்றுவலி இருந்தால் பெப்பர்மெண்ட் ஆயில் ஓரு சொட்டு வென்னீரில் குடிங்கள் சரியாகிவிடும். கண் எரிச்சல் இருந்தால் ரோஸ் வாட்டர் கண்மூடி மெதுவாக கண்ணைச் சுற்றி தடவுங்கள் சரியாகிவிடும்
 
Top