All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ருதியின் "அவளே என் தோழனின் வசந்தம்" - கதை திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் எல்லாருக்கும் வணக்கம் நான் ஸ்ருதி முதலில் ஸ்ரீகலா மேம்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் இந்த தளத்தில் கதை எழுத வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி ஸ்ரீ மேம் இதுதான் என் முதல் கதை ஏதோ ஒரு ஆர்வத்தில்:sick::sick: எழுத வந்துட்டேன் பா நீங்க கொஞ்சம் பாத்து பண்ணுங்க:) ப்ளீஸ் பா
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னைக்கு இரவுக்குள்ள கதையோட கதாபாத்திரமும் முன்னோட்டமும் மட்டும் கொடுக்கிறேன் அடுத்த வாரத்தில் இருந்து வாரத்துக்கு ஓரு அத்தியாயம் கொடுக்கிறேன் பா :):)
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமைதியாக அடக்கமாக இருந்தவள்/இருப்பவள் அவனிடம் மட்டும் விளையாட்டு குழந்தையாக மாறிய விந்தை என்ன?

எல்லோருக்கும் சிம்மமாக விளங்கும் அவன் அவளுக்கு மட்டும் மென்மையானவனாகவும் கனிவானவனாகவும் யாவுமாணவனாகவும் இருக்கும் மாயம் என்ன?

இவ்விருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தது / இருப்பது / இருக்கப் போவது -தோழி /மனைவி

அவளே என் தோழனின் வசந்தம்


பார்க்கலாம் யார் யாரின் வசந்தம் என்றும்

யார் வாழ்க்கையை யார் வசந்தம் ஆக்குகிறார்கள் என்றும் பார்க்கலாம் வாருங்கள்
 
Last edited:

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிஷிதேவ்யாதவ்வர்மா (ஆர்.வி)-
இவன் இவனுக்கு உண்மையாக இருப்பவருக்கும் உறுதுணையாக இருப்பவருக்கும் நண்பன்/ ரட்சகன் இவனுக்கு துரோகம் செய்பவருக்கும் இவனை அழிக்க நினைப்பவர்க்கும் நரகத்தை காட்டும் நரசிம்மன்/ எமன்/ அசுரன்



ஹரிஷ் -நட்பிற்கு இலக்கணம் இவன்



அனுரிதா -குறும்பு மற்றும் தியாகம் செய்வதற்காகவே படைக்கப் பெற்றவள் திரும்பத் திரும்ப படைக்கப்படுபவள்


ஜனநிகா -இறந்த காலத்தில் முக்கியமானவள் நிகழ்காலத்தில் யார் கண்களுக்கும் புலப்படாதவள் எதிர்காலத்தில் ?

அநாமிகா -இவள் பெயரைப் போலவே இவள் யார் என்று இவளுக்கே தெரியாது

அநாமிகாவின் மகன்-மாதவ் கிருஷ்ண ரகு -------(குட்டிக்கண்ணன்) குறும்பு செய்வதில் அந்த மாயக் கண்ணனை போல வல்லவன் இவன்


இவர்களோடு ரிஷியின் குடும்பம், ஹரிஷ் மனைவி மற்றும் அவனது குடும்பம், அனுரிதா குடும்பம் ,ஜனநிகா குடும்பம், மற்றும் இவ்ஐவரின் தோழர் தோழியர் ,வில்லன் வில்லிகள் எல்லோரை பற்றியும் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் டீஸர்-1

2016 ஆம் ஆண்டு -ஜனவரி மாதம்


அந்த காலை நேரத் தை மாதத்து பனியை அனுபவித்த படி ரிஷி ஓர் அரை மணி நேரம் ஒடியிரூப்பான் அவன் கால்கள் தான் ஒடியதே தவிர அவன் மனம் முன் இரவு நிகழ்ந்ததை பற்றி அசைப்போட்டுக் கொண்டிருந்தது அப்போது அவன் பக்கத்தில் ஓரு பெண் கதறிக் கொண்டே அலறுவது போல் கேட்டது உடனே அவன் தன் ஒட்டத்தை நிறுத்தி விட்டு சுற்றி முற்றி பார்த்தான் அங்கு அவனை சுற்றியோ அவன் கண்களூக்கு எட்டிய தூரம் வரையிலோ எவரும் இல்லை .

யாரும் இல்லை என்றவுடன் அது தன் மனபிரமை என நினைத்து தன் தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டே வீட்டின் (இல்லை இல்லை அரண்மணையின்) உள் வாயிலை நோக்கி ௐடினான் .

சிறிது நேரத்தில் அவன் வீட்டின் ஹாலில் நுழைந்த போது அவன் கண்களில் பட்டது அங்கு நடூநாயகமாக மாட்டப் பட்டிருந்த இறைவனடி சேர்ந்துவிட்ட அவனின் தாய் தந்தை படத்தின் பக்கத்தில் அவன் கை பட வரைந்த அவனின் மனம் கவர்ந்தவளின் ஓவியத்தை தான் அதை பார்த்ததும் அவன் கண்களில் உண்டான கோபத்தை காண்பவரின் இதயம் அந்நிமிடமே தன் துடிப்பை நிறுத்திக் கொள்ளும் என்பது சர்வ நிச்சயம்


ரிஷியின் கோபத்தை எதிர் கொள்ளப் போவது யார்?
ரிஷிக்கு கேட்ட அலறல் சத்தம் உண்மையெனில் அலறியது யார்?
ரிஷியின் அந்த மனம் கவர்ந்தவள் யார்?
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் டீஸர்-2


2015 ஆம் ஆண்டு -மே மாதம்

அந்த நடுஇரவு நேரத்தில் போக்குவரத்து அற்ற நெடுஞ்சாலையில் வேகு வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற ஆடி கார் அதில் இருந்த மூவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர் .

வண்டி ஒட்டிக் கொண்டிருந்தவன் எப்படியாவது அந்த காரில் இருந்த மற்ற பெண்களை காப்பாற்றி விடும் நோக்கத்துடன் சென்று கொண்டிருந்தான் .

அந்த காரின் பின் இருக்கையில் இருந்து பெண்(அநி) எப்படியாவது தன் மடியில் தலையில் கட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய ஷாலையும் மீறி வழிந்து கொண்டிருந்த ரத்தத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவளை காப்பாற்ற வழி கேட்டு கடவுளை மன்னாடிக் கொண்டிருந்தாள்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவளோ (அதி )அந்த உயிர் போகும் சமயத்திலும் தன்னைக் காப்பாற்ற நினைப்பவளுக்கு வரவிருக்கும் பேராபத்தில் இருந்து அவளையும் தன் உயிர் நண்பனையும் காப்பாற்ற தனக்கு உதவி புரியும் மாறு கடவுளை வேண்டிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அதிக ரத்தப்போக்கின் காரணமாகவும் தலையில் பட்ட அடியின் காரணமாகவும் மயங்க ஆரம்பத்தாள் .அதி மயங்குவதை கண்ட அநி அவளை தட்டி எழுப்பினாள்.தன் அதி தன் முடிவு தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாளோ என்னவோ அநியிடம் விடம் யதுவை காப்பாத்து யதுவை காப்பாத்து யதுவை உன்னால் தான் காப்பாத்த முடியும் என்று திக்கில் திணறி கூறினாள்.ஆனால் அதி கூறியது அநி பதட்டத்தில் இருந்ததாலும் கார் சென்று கொண்டிருந்த வேகத்தால் வந்த இரைச்சலாலும் அவள் கூறியது அவளுக்கு புரியவில்லை அநிக்கு காப்பாத்து என்ற வார்த்தை மட்டும் தான் புரிந்தது யாரை காப்பாத்த வேண்டும் எதற்காக காப்பாத்த வேண்டும் என்று புரியவில்லை ஆனாலும் அதி இருக்கும் நிலையில் அவளுக்கு மன சமாதானம் வேண்டும் என்பதை உணர்ந்து அதி கூறியதை செய்வதாக சொல்லி அதி நிதானமாக இருக்க சொல்கிறாள் .

வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் இதை கவனித்ததால் அவன் தன் வண்டிக்கு நேராக வந்த லாரியை பார்க்கவில்லை ஆனால் அதி அந்த லாரியை கவனித்ததோடு நிமிடத்தில் யோசித்து கார் கதவை தன் காலால் உதைத்து திறந்து கஷ்டப்பட்டு எழுந்து அநியை பார்த்து ஸாரி அநி என்று கூறி அவளை பிடித்து வெளியே தள்ளினாள் இதை கண்டு அதிர்ந்த வண்டி ஒட்டிக் கொண்டிருந்தவன் அதியிடம் என்ன செய்கிறாய் என்று கத்தினான் அப்போது தான் அவன் இருப்பை உணர்ந்து முன் கதவையும் தன் முழு சக்தியையும் வெளிபடுத்தி திறந்தாள் அவள் அக்கதவை திறந்ததை அவன் உணர்வதர்க்கு முன் அவனை பிடித்து வெளியே தள்ளினாள் அதி தள்ளிய வேகத்தில் தன்னை கட்டுபடுத்த முடியாமல் வெளியே இருந்த புதரில் விழுந்தான் அவன் விழுந்த இடத்தில் இருந்த கல்லில் தலை முட்டியதில் அவன் பின்தலையில் மிகபலமாக அடி பட்டது .

அந்த அடியையும் மீறி அவன் எழ முயன்ற போது அவன் கண்டது எதிரில் வந்த லாரி அந்த ஆடி காரை தூக்கி எறிந்து விட்டு சென்றதையும் வேறு ஒரு அதிர்ச்சிகரமான காட்சியையும்தான் அதை பார்த்ததாலும் ஏற்கெனவே பட்ட அடியாலும் மயக்க நிலையிக்கு சென்றான் ஹரிஷ் பிரபாகர்.



வசந்தம் வருமா ?.......
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் டீஸர்-3

2015 ஆம் ஆண்டு - ஜூன் மாதம்


ஜனநிகாவின் மாமா மணிகண்டன் மிகவும் இடிந்து போய் இருந்தார் தன் மகளை போன்று தான் வளர்த்தவள் இன்று இவ்வுலகில் இல்லை என்பதை இன்னமும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளின் எதிர்கால வாழ்க்கைக்காக தனக்கு திருமணம் கூட செய்து கொள்ளாதவர் ஆனால் இன்று அதற்கு எதற்கும் பலனில்லாமல் போனதை மணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அதுவும். நிகா சாதாரணமாக இறந்திருந்தால் கூட இவ்வளவு வேதனையாக இருந்திருக்காது அவள் நான்கைந்து பேரால் கற்பழிக்கப்பட்டு ‌கொலை செய்யப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

இவர் இப்படி வருந்த ஜனாவின் தம்பி வெங்கட் தன் அக்காவை கொன்றவர்கள் மட்டும் யார் என்று தெரிந்தால் அவர்களை கண்ட இடத்திலேயே வெட்டும் வெறியில் இருந்தான்.

இங்கு (கல்யாணியை தவிர) ‌‌இவர்கள் எல்லோரும் ஜனா இப்படி கொடுரமாக இறந்து விட்டாளே என்று வருந்திக்கொண்டிருக்க. லக்ஷ்மி மட்டும் அந்த முகம் தெரியாத பெண்ணிற்காக வருந்தினார் அவரின் உள்ளுணர்வு அவர் மகள் இறக்கவில்லை என்று உறுதியாக கூறியதை நம்பினார் இதுவரை அவரின் உள்ளுணர்வு பொய்யித்ததில்லை அவரும் முதலில் அந்த உடலை பார்த்து விட்டு மகள் இறந்து விட்டதாக தான் எண்ணி துவண்டு சடலத்தின் அருகில் விழுந்தார்.

அந்த உயிர் அற்ற உடலைப்பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்கள் திடீர் என மின்னியது பின் அவர் என்ன நினைத்தாரோ ஆனால் லக்ஷ்மியின் உள்மனம் அடித்துக் கூறியது அது தன் மகள் அல்ல என்று ஆனாலும் அவரின் தாய் மனம் அந்த இறந்த பெண்ணைப் பார்த்து வருந்தியது எந்த ஒரு பெண்ணிற்கும் இந்நிலை வரக்கூடாது என்றும் அப்பெண்ணை இந்நிலைக்கு தள்ளியவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் மாறு பிரார்த்தித்தது அப்போது லக்ஷ்மியின் பக்கத்தில் யார் கண்களுக்கும் புலப்படாது இருந்த அந்த புகை உருவம் அவரின் தாய் பாசத்தையும் நல்ல மனதையும் கண்டு தானும் கண்ணீர் வடிந்தது…


வசந்தம்வருமா………………..
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் போட்டுட்டேன் :):) படிச்சுட்டு எப்படி இருக்குனு கருத்து திரியில் ஓரு வார்த்தை சொல்லிட்டு போங்க பா:)
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நான் வந்துட்டேன்;)
ஃப்ரெண்ட்ஸ் நான் வாரத்துக்கு ஒரு யுடி தரேன் சொல்லியிருந்தேன் இல்லையா ஆனால் இந்த வாரம் மட்டும் 2 யுடி தரேன் அதுக்கு பதிலா நீங்க எனக்கு ஒரு ரெண்டு வாரம் கேப் தரனும் (அதானே பார்த்தேன் என்னடா இவ இரண்டு யுடி தராளேனு:mad: நீங்க கோபப்படுவது புரியுது)ஆனா என்னோட நிலை அப்படி என் வீட்டுக்கு நிறைய கெஸ்ட் வராங்கப்பா அதோட நாங்க இருக்கற வீடு வேற ரொம்ப பழைய வீடு பா கெஸ்ட் டா வரவங்களும் வெளி நாட்டுலேருந்து வராங்க அதனால நிறைய வேலை இருக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ளீீஸ் :oops::rolleyes:
 
Last edited:
Top