வசந்தம் - டீஸர் 10-2
ரிஷியின் வீட்டின் வாயிலில் கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் ரிஷி. அவன் ராமிடம் அவர்கள் சென்று வந்த பிசினஸ் மீட்டிங் பற்றி பேசி கொண்டே வீட்டின் உள் நுழைந்தான்.
அங்கு வீட்டின் ஹாலில் கைகளை பிசைந்தவாறு முகத்தில் அளவற்ற சந்தோஷமும் சிறு பயமும் உள்ளத்தில் கவலையுமாக மாடியையும் வீட்டின் வாயிலையும் மாறி மாறி பார்த்தபடி அம்முவும் (காயத்ரி) அவரின் பக்கத்தில் எதோ தேற்றுவது போல சொல்லிக்கொண்டே செண்பாமாவும் உடன் நின்றிருந்தார் அது போக வீட்டின் வேலைக்காரர்களும் மாடியையே பார்த்துக்கொண்டிருக்க அனைவரின் முக பாவனைகளை உள் நுழையும் போதே கவனித்த ரிஷி அம்முவை நெருங்க நினைக்கும் போது வெளியில் கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தான் அங்குள்ள தாரா, மாலினிராவ், பிரியா ,மீரா, ஹரிஷ்,சாரா, சித்தார்த் எல்லாம் நின்றிருந்தனர்.
இது அனைத்தையும் பார்த்த ராம் எங்கு தங்கள் குட்டு ஏதாவது வெளிப்பட்டு விட்டதோ என திருதிருவென முழித்தான் .
ஏனெனில் அம்மு மற்றும் வேலை ஆட்களை தவிர்த்து மற்ற அனைவரும் அவர் அவர் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு வந்துள்ளனர் என்பதை அவர்களின் உடல் அசைவில் இருந்து ரிஷியால் யூகிக்க முடிந்தது அதிலும் சித்தின் உடல் மொழி அவன் காவல் அதிகாரியாக மட்டுமே வந்துள்ளான் என்பதை ரிஷிக்கு தெள்ளத்தெளிவாக புரியவைத்தது. இதையெல்லாம் பார்த்த
ரிஷியின் புருவம் யோசனையுடன் உயர்ந்தது.
அப்போது வீட்டு வாயிலில் பரபரப்பு தோன்ற அனைவரின் கவனமும் வாயிலை அடைந்ததோடு அங்கு நின்ற பத்திரிக்கையாளர் படையை கண்டு அதிர்ந்து அனைவரும் ரிஷியை நோக்கி திரும்பினர் அங்கு ரிஷி எந்த ஒரு உணர்வும் இன்றி இருப்பதை கண்டு எல்லோருக்கும் திக்கென்று இருந்தது என்றால் எதேச்சையாக ரிஷியின் தலைக்கு மேலே நிமிர்ந்து பார்த்தோர்க்கு (மேட்டர் தெரியாதவரகளுக்கு பா) சப்தநாடியும் அடங்கி விட்டது
அங்கு மாடியில் இருந்து ஆளுமை கலந்த கர்வம் மற்றும் திமிரோடு ரிஷியின் மனைவி(அனு வா இல்ல அநியா னு நீங்க முடிவு பண்ணனும் நண்
பர்களே) இறங்கிவர நடை ,உடை ,பாவனை , ,மற்றும் இன்னும் எல்லாவற்றிலும் ஜூனியர் ரிஷி என்பதை நிரூபிப்பது போல இறங்கி வந்து கொண்டிருந்தது ரிஷியின் புதல்வன் குட்டிக் கண்ணன் மாதவ் கிருஷ்ண ரகு வர்மா
அவர்களின் பின்னே ஜோசப்பின் குடும்பமும் இறங்கி வந்து கொண்டிருந்தது.
வசந்தம் பூக்கும்.................................