All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ருதியின் "அவளே என் தோழனின் வசந்தம்" - கதை திரி

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம்-1


2016 ஆம் ஆண்டு - ஜனவரி மாதம்


நிலா மகள் தன் வேலை நேரம் இன்னும் சில மணித்தியாலங்களில் முடிவதோடு தான் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தாள். அதற்கு அந்நிலா மகள் ஆயத்தம் செய்யும் போது கதிரவன் தன் கரணங்களை மேல்லேழுப்பினான். அந்நேரத்தில் மும்பை நகரத்தில் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் ###### அந்த பகுதியில் ஓர்பெரிய அரண்மனையின் மேல் தளத்தில் உள்ள அறையில் ( அது ஒரு படுக்கை அறை என்று சொன்னால் நடுத்தர மக்கள் என்னை அடிக்க வந்து விடுவார்கள் ) அந்த அளவிற்கு மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு முழு வீட்டையே உள்ளடக்கியிருந்த இருந்த அறையில் இரண்டு ஆர்6 ரக ஆடி காரையே நிறுத்தும் அளவிற்குள்ள இடத்தையே முழுவதும் அடக்கி இருக்கும் அந்த பெரிய கட்டிலின் மெத்தையில் ஒரு ஓரத்தில் ரிஷி உறக்கத்தில் இருந்தான் . அவன் தூங்குகிறான் என்று பெயர் ஆனால் தூக்கத்தில் கூட தன் உள்ளுணர்வுகளையும் மூளையையும் விழிப்புடன் வைத்திருப்பவன் அவன் பக்கத்தில் அவனின் அன்புக்குரிய. (இம்சைக்குரிய)மனைவி நோநோநோ தோழி அதாவது அவனுக்கு தான் தோழி ஆனால் அவளுக்கு? அவள் அனுரிதா . ரிஷிக்கும் அவன் குடும்பத்தார்க்கும் தான் அவள் அனுரிதா அவளை பொறுத்தவரை ? . சிறிது நேரத்தில் ரிஷி கண் விழித்தான் அப்போது தன் அருகில் நிர்மாலமான முகத்துடன் அவள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் விளைவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அனுவை பார்த்து பெருமூச்சுடன் தன் காலை கடன்களை முடிக்கச் சென்றான் .


(இந்நேரத்தில் அவனைப் பற்றி முழுமையாக பார்த்து விடுவோம்)
ரிஷி அவனின் முழு பெயர் ரிஷிதேவ்யாதவ்வர்மா 29 வயது இளைஞன் . இவனின் தாய் தந்தை ரிஷி பத்து வயது சிறுவனாக இருக்கும் போது எதிர்பாரா விபத்தில். சிக்கி உயிர் இழந்து விட்டனர் அதன் பின் இவனை வளர்த்தது இவன் தாய் ஜானகியின் தங்கையாகிய காயத்ரி தான் . ஜானகி விபத்தில் இறக்கும் போது காயத்ரிக்கு வயது 21 அப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது அத்திருமணம் ரிஷியின் மனநிலையையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றுணர்ந்த காயத்ரி அத்திருமணத்தை நிறுத்தியதுடன் வேறுறொரு திருமணமும் செய்துக் கொள்ளவில்லை .


இப்போது ரிஷி வர்மா இன்டஸ்டீரிஸின் ஒரே வாரிசு . வர்மா இன்டஸ்டீரிஸ் என்பது (1.varma jewellery showrooms,2.textile showrooms 3.textile industries,4.construction industries,5.varma financial services 6.varma hospitals,7.varma pharmaceuticals). அதோடு அவன் தந்தை தென் இந்தியாவில் ஆரம்பித்த தேவ் குருப்ஸ் ஆஃப் ஸ்கூல்ஸ் ஆண்ட் காலேஜஸ்ஸின் எம்.டி இவன் ( 1.dev boarding schools ,2.dev CBSE schools,3.dev Matric schools,4.dev medical colleges ,5.dev arts and science colleges,6.dev’s fashion technology 7.dev engineering colleges ) PLUS VARMA’S AND DEV’S CHARITABLE TRUSTS .இவன் தந்தையும் இவன் பாட்டனார்களும் சேர்த்து வைத்ததுபோதாது என்று ரிஷியும் தனியே ஜெ.ஆர் (J.R ) செயின்ஸ் ஆஃப் ஹோட்டல்ஸ் அண்ட் ரேஸ்டாரண்டை நிறுவி வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறான்.


ரிஷி/யது என்று நெருங்கிய நண்பர்களாலும்

தேவ்/ரிஷிகண்ணா என்று பெற்றோர்களாலும்

தயா/ஷிவ் என்று அவன் மனம் கவர்ந்தவளாலும்

ஆர்.வி என தொழில் வட்டத்தாராலும் அழைக்கப்படும் அவன் ஆறு அடி உயரம் தினமும் உடற்பயிற்சி மற்றும் கட்டுக்கோப்பான உடல் கம்பீரமான நடை மும்பை இந்தியர்களுக்கே உண்டான வெள்ளை நிறமும் அது மட்டுமின்றி அவனின் நீலக் கண்களும் கன்னத்தில் விழும் குழியும் அவனை பார்ப்பவரை சுண்டி இருப்பதோடு அல்லாமல் அவனின் முக்த்தில் உள்ள தேஜஸ் எல்லாம் ரிஷியை முதல் முறை பார்ப்பவரை திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும் .


(இனி ரிஷி என்ன செய்கிறான் என்று பார்ப்போம்)
ரிஷிகாலை கடன்களை முடித்து விட்டு ஜாக்கிச் செல்ல தயாரானான் அப்போது காலை மணி ஆறு தன் அறையை விட்டு வெளிவந்து மாடியில் இருந்து கீழிறங்கினான் அப்போது தான் ஓர் இருவர் எழத் தொடங்கி இருந்தனர் ரிஷி யாரையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய ஒட்டத்தை தோட்டம் சுற்றி ஓட ஆரம்பித்தான் .


(ரிஷி ஓடிக் கொண்டிருக்கும் போது நாம் ரிஷியின் அரண்மனையை பற்றி பாப்போம் வாங்க)
ரிஷியின் வீடு மூன்று தளங்களை கொண்ட வீடாகும் அந்த வீட்டை சுற்றி விண்ணளவு மதில்களும் பத்து/பன்னண்டு அடி உயர பெரிய வாசற்கதவுகளும் அந்த கதவின் பக்கத்தில் ஆறு/ஏழு பாதுகாவலர்கள் சுற்றி கொண்டிருந்தனர் அந்த வாசற் கதவை தொடர்ந்து ஒன்றை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நீள் கார் ஓடும் பாதை அந்த பாதையின் இருமருங்கிலும் கண்ணைப் பறிக்கும் மலர்களும் செடிகளும் மலர்கள் பூத்தும் செடிகளில் காய் கனிகள் காய்த்தும் பழுத்தும் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்தது அதை தொடர்ந்து இடது பக்கம் ஒரு பெரிய போர்டிக்கோவும் அதில் பத்து /பண்ணண்டு கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன வலது பக்கம் வீட்டின் முக்கிய நுழைவாயில் இருந்தது வீட்டின் நுழைவாயிலுக்கு அடுத்து பெரிய வரவேற்பு அறையும் அதை தொடர்ந்து பெரிய ஹாலும் இருந்தன ஹாலின் இடப்பக்கத்தில் விஸாலமான சாமி அறையும் வலப்பக்கத்தில் நான்கு கெஸ்ட் ரூம்களும் இருந்தன ஹாலை தொடர்ந்து இருபது முப்பது நபர்கள் சாப்பிடும் அளவிற்கு பெரிய சாப்பாட்டறையும் அதனுள்ளே பெரியபெரிய ஹோட்டல் ஓனர்களே வியக்க தக்க வகையில் அளவில் பெரிதாகவும் மிக மார்டனாகவும் இருந்தது சமயலறை .சாப்பாட்டு அறைக்கு வெளியே இடதுப் பக்கத்தில் வளைந்த மாடிப்படிகளும் மாடிபடிகளுக்குகீழே வரும் போது வரும் இடதப்பக்கத்தில் கொஞ்சம் விஸ்தாரமாக இரண்டு லிஃப்ட் இருந்தது மாடியின் முதல் தளத்தில் எட்டறைகளும் அதற்கு மேல் தளத்தில் நான்கு அறைகளும் எனமொத்தம் அந்த வீட்டில் பதினைந்து அறைகள் இருந்தன அதில் இரண்டில் ஒன்று உடற்பயிற்சி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது இன்னொன்று அலுவலக பயன்பாட்டிற்கென்றே உருவாக்கப்பட்டது.

(இவ்வளவு போதும்னு நினைக்கிறேன் இனி ரிஷி என்ன செய்யறான்னு பாப்போமா)

அந்த காலை நேரத் தை மாதத்து பனியை அனுபவித்த படி ரிஷி ஓர் அரை மணி நேரம் ஓடியிருப்பான் அவன் கால்கள் தான் ஓடியதே தவிர அவன் மனம் முன் இரவு நிகழ்ந்ததை பற்றி அசைப்போட்டுக் கொண்டிருந்தது . அப்போது அவன் பக்கத்தில் பெண்ணின் குரல் ஒன்று கதறிக் கொண்டே அலறுவது போல் கேட்டது உடனே அவன் தன் ஒட்டத்தை நிறுத்திவிட்டு சுற்றி முற்றி பார்த்தான் அங்கு அவனை சுற்றியோ அவன் கண்களுக்கு எட்டிய தூரம் வரையிலோ எவரும் இல்லை என்றவுடன் அது தன் மனபிரமை என நினைத்து தன் தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினான் . சிறிது. நேரத்தில் அவன் வீட்டின் ஹாலில் நுழைந்த போது அவன் கண்களில் பட்டது அங்கு நடுநாயகமாக மாலையிடப்பட்டு மாட்டப்பட்டிருந்த இறைவனடி சேர்ந்து விட்ட அவனின் தாய் தந்தை படத்தின் பக்கத்தில் அவன் கை பட வரைந்த அவனின் மனம் கவர்ந்தவளின் ஓவியத்தை தான் அதைப் பார்த்ததும் அவன் கண்களில் உண்டான கோபத்தை காண்பவரின் இதயம் அந்நிமிடமே தன்துடிப்பை நிறுத்திக் கொள்ளும் என்பது சர்வ நிச்சயம். .

அடுத்த சில நிமிடத்தில் அந்த இருந்த பொருட்கள் கீழே விழுந்து நொருங்கும் சத்தத்தில் அவ்வீட்டின் வேலை ஆள் முதற்கொண்டு அவ்வளவு நேரம் தூக்கத்தில் இருந்தவர்களும் தத்தம் அவர்வர் வேலைகளை செய்து கொண்டிருந்தவர்களும் அடித்து பிடித்தும் பதறித் கொண்டும் நடுங்கிக் கொண்டும் அங்கு வந்தனர் இருவரைத் தவிர ‌‌ஒருவர் காயத்ரி (இனி அம்மு) அந்நேரம் கோவிலுக்கு சென்றிருந்தார் மற்றொருவர்?

அந்த ஹாலில் இருந்த எல்லோரும் கோபத்தில் உடல் விரைத்து முகம் இறுகி கண்கள் சிவக்க நின்றிருந்த ரிஷியை நெருங்கவும் நடுங்கி அங்கேயே நிற்கவும் அங்கிருந்து அகலவும் பயந்துக் கிடந்தனர்

‍இவர்கள் இங்கு நடுங்கி கொண்டிருக்க இந்த பிரச்சினைக்கு முழு காரணமானவளோ அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழும் குழந்தை இரண்டு கண்களையும் எப்படி கசக்கிக் கொண்டே வருமோ அப்படி கசக்கிக்கொண்டு சிறிதும் பயமின்றி ஆற அமர நடந்து வந்ததோடு அல்லாமல் ஹாலில் இருந்த நிலையை எள்ளளவு கூட கண்ணிலோ கருத்திலோ எடுத்துக் கொள்ளாமல் நேராக ரிஷியிடமே சென்று தன் தூக்கத்தை கெடுப்பது போல் இடைஞ்சல் செய்தவரை வேலையை விட்டு நீக்குமாறு அதிகாரமாக உத்தரவிட்டு விட்டு அதோடு தன் வேலை முடிந்தது என்பது போல நேராக அங்கிருந்த பெரிய சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள் அனுரிதா(அனு)

அவள் நடவடிக்கையை பார்த்த அந்த ஹாலில் இருந்த எல்லோரும் ஒரொரொர் மனநிலையில் இருந்தனர் சிலர் ஆச்சரியமாகவும் சிலர் பயத்துடனும் சிலர் சந்தோஷமாகவும் பார்த்தனர் இருவரைத் தவிர அவ்விருவரில் ஒருவனின் கண்களில் மென்மையும் ஆனந்தமும் குடி கொண்டது என்றால் இன்னொருவனின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது

இனி அனுவின் நிலை


வசந்தம் பூக்குமா?,…,…………
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் -2

அனுவின் செய்கையை பார்ப்பவர்கள் ஆச்சரியபடாவிட்டால் தான் அதிசயம் ஏனெனில் அந்த கொடுமையான கோர சம்பவத்தின் பின் அனுவின் நடவடிக்கையே முற்றிலும் மாறியிருந்தது அவளுக்கு யாரையும் தெரியவுமில்லை தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை சொல்ல போனால் ரிஷியை தவிர யாராலும் அவளை நெருங்க கூட முடியவில்லை

ரிஷியிடம் கூட முதலில் எல்லாம் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் கூறுவாள் அப்படி பட்டவள் இன்று இவ்வாறு நடந்து கொண்டால் அனைவருக்கும் ஆச்சரியத்தை மட்டுமில்லை சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்த அதே நேரத்தில் ரிஷியிடம் சில காலமாக உண்டான அதித மாற்றம் நடுக்கத்தையும் பயத்தையும் ஓரு சேர கொடுத்தது என்றால் மிகையாகாது.

ஆனால் இதை எல்லாம் பற்றி கவலை கொள்ள வேண்டியவளோ அதை பற்றிய சிந்தனையோ பயமோ துளியுமின்றி ரிஷியிடம் உத்தரவுயிட்டு விட்டு நேரா அங்கிருந்த சோபாவிற்கு சென்று தன் முக்கியமான வேலையை தொடர ஆரம்பித்து விட்டாள் ( அதான் பா தூங்கறது நமக்கு சாப்பாடும் தூக்கமும் தான் முக்கியம் )

அனுவின் இச்செயலை கண்டு ஓருவனுக்கு கொலைவெறி கிளம்பியது (அது ரிஷி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு) அவளை கண்டு கோபம் கொண்டது ரிஷி அல்ல ராம்சரண் (இனி ராம்) [இப்போ இவன் ஏன் மூக்க நுழைக்கிறான் நீங்க யோசிக்கறது புரியுது வேற ஓன்னும் இல்லை அது தன்னோட காலை தூக்கத்தை கெடுத்துட்டு அவ அழகா படுத்து தூங்கினா யாருக்கு தான் கோபம் வராது அதிலையும் இந்த ராம் எத வேண்டுமானாலும் விட்டு கொடுப்பான் அவனோட தூக்கத்தையும் சாப்பாட்டையும் விட்டே தரமாட்டான்

சுருங்க சொன்னால் இவனும் அனுவும் அடித்து கொள்வதே இவ்விரு விஷயத்திற்காக தான் இருக்கும்.] ராம் கோபத்துடன் அங்கிருந்த சோபாவில் சுகமாக எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த அனுவை நெருங்கினான்

ஆனால் இவ்வளவு நேரம் தன் சுய உணர்வில் இல்லாமல் அனுவின் மாற்றத்தில் சந்தோஷம் அடைந்திருந்த ரிஷியின் கோபம் சூரியனை கண்ட பனி துளியாக விலக ராம் கோபத்துடன் அனுவை நெருங்குவதை கண்டவன் ராமை தடுத்தான் பின் ரிஷியே அனுவின் அருகில் அவள் தலையை கைகள் நடுங்க கோதினான்

அதோடு அவள் நெற்றியில் மென்மையாக இதழோற்றி அவளை தன் கைகளில் சிறு பிள்ளை போல ஏந்தி கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான் ரிஷி அனுவை தூக்கிச் செல்வதை அங்கு இருந்த சிலர் கண்களில் பழிவெறி மின்ன பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனுவை ரிஷி மாடிக்கு தூக்கிச் சென்ற பிறகு ராம் மணியை பார்க்க அதுவோ ராமின் மனநிலை தெரியாமல் நேரம் காலை 7.10 என காண்பித்து தன் வேலையை சரியாக செய்தது

அதை கண்டு அதிர்ந்த ராமோ தூக்கம் பறி போன வருத்தத்தை விட இன்றைய மீட்டிங் பற்றி நியாபகம் வர அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் சரி பார்க்க வேண்டும் என்பதும் அம்மீட்டிங் பற்றி ரிஷிக்கு நினைவு படுத்தவில்லை எனில் அவனின் இன்னொரு ருத்ர தாண்டவத்தை காண வேண்டியிருக்கும் என்பதும் ராமுக்கு பயத்தை ஏற்படுத்த வேலையாட்களை அழைத்து அந்த ஹாலை சுத்தம் செய்யுமாறு கூறி விட்டு தன் அறைக்து செல்ல திரும்புவதற்க்கும் அம்மு [காயத்ரி] ஹாலின் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

கடவுளிடம் மனுக்களை போட்டு விட்டு அப்போது தான் வீட்டுக்கு வந்திருந்தார் அவர் வீட்டின் உள்ளே நுழையும் போது அந்த ஹாலில் பொருட்கள் உடைந்து சிதறிக் கிடப்பதும் வீட்டில் உள்ளவர்கள் அங்கு கூடியிருந்ததும் அவ்விடத்தில் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்தார் அதை உணர்ந்தவுடன் அவரை அறியாமலே என்ன நடந்ததோ என்ற பதட்டம் அவரிடம் வந்து ஓட்டிக் கொண்டது.

அம்முவின் பதேட்டத்தை நொடியில் உணர்ந்த ராம் அவரை அமரவைத்து அவருக்கு அருந்த நீர் கொடுத்து அவரிடம் பக்குவமாக அங்கே நடந்ததை எடுத்துரைத்தான்.

ராம் கூறிய உடன் தான் ஹாலில் புதிதாக மாட்டப்பட்டிருந்த படத்தை கவனித்தார் அதை கண்டவுடன் அப்பெண்ணின் முகம் அவருக்கு மிகவும் பரிச்சயமானதாக தோன்றியது பின் அப்படம் எவ்வாறு அங்கு வந்தது? அப்படத்தில் இருக்கும் பெண் யார் ? இப்படத்தைக் கண்டு ரிஷிக்கு ஏன் கோபம் வந்தது ? என ராமிடம் கேட்டார் ராமும் தனக்கு ஓன்றும் தெரியாது என்றும் தானும் அதை பற்றி தான் யோசிப்பதாகவும் கூறினான்.

பின் ராம் அம்முவிடம் அம்மு இன்னைக்கு ஆஃபிஸ்ல் பத்து மணிக்கு ஓரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுக்கான ஏற்ப்பாடு சரியா இருக்கா பாக்க வேண்டும் அதனால நான் போய் சீக்கரமா கிளம்பறேன் என அம்முவிடம் கூறி சென்றான்.



(அவர்களுக்கு எங்கு தெரியப் போகிறது அப்பெண்ணை பற்றிய முழு உண்மை ரிஷிக்கே தெரியாதென்பதும் எல்லா விஷயங்களும் ஓரே ஓருத்திக்கு தான் தெரியும் என்பதும் ஆனால் அ்வ்வோருத்தியும் யார் கண்களுக்கும் புலபட மாட்டாள் அப்படி அவள் புலப்பட்டு விட்டாள் இத்தனை காலமாக மண்ணோடு மண்ணாக புதைந்து போன பல ரகசியங்கள் வெளி வரும் அப்படி வெளி படும் ரகசியம் அக்குடும்பத்தையே திசை தெரியாமல் இழுத்து செல்வதோடு அவர்கள் அனைவரையும் உரு தெரியாமல் அழிக்கும் வல்லமை கொண்டது என்பதை யார் அவ்விருவரிடம் சொல்வது)


அம்மு மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார் அப்போது ராம்-மீரா இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்

அதாவது மீரா தன் சைகையால் ராமிடம் கோபமாக எதையோ கூற அதற்கு ராமும் கோபத்துடன் சத்தமாக எதோ சொல்கிறான் அதை கவனித்த அம்மு வேகமாக கீழிறங்கி அவர்களிடம் வந்து எதற்காக சண்டை போடறீங்க என்றுக் கேட்டார்

அதற்கு அவ்விருவரும் பதில் கூறாமல் தங்கள் முகத்தை திருப்பி வேறு வேறு திசையில் பார்வையை பதித்து கையை கட்டிக் கொண்டு நின்றனர். இவர்களின் சிறு பிள்ளை தனத்தை அம்முவால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை ஆனாலும் சுதாரித்து அவர்களை சமாதான படுத்தி சண்டைக்கான காரணத்தை கேட்க முயன்றார் அவரின் கேள்வி கெஞ்சகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவ்விருவரும் அப்போதும் தங்களின் நிலையில் இருந்து மாறாமல் முறைத்து கொண்டிருந்தனர்

ஆனால் இவ்வளவு நேரம் படபடப்புடன் கையை பிசைந்து கொண்டிருந்த பிரியா அம்முவிடம் வந்து அம்மு அது..வந்து அது..வந்து என திக்கி திணறி இழுத்தாள் அவள் திக்குவவதை கண்டு அவள் பயந்திருப்பதை புரிந்து கொண்ட அம்மு அவளிடம் வந்து அவளை அனைத்து சோபாவில் அமரவைத்து ஆசுவாச படுத்தி என்னடா பிரியா என்னாச்சு ஏன் இதுங்க இரண்டும் அடிச்சுக்குதுங்க என்று கேட்டார்.

அதற்கு பிரியா கூறியதை கேட்டு அம்மு சிரித்து விட்டார் .(அம்மு சிரிப்பதற்கான காரணம் தெரிய வேண்டுமா சரி அப்போ பிரியா என்ன சொன்னா பார்ப்போமா)

அது அம்மு அது ராமண்ணா நேத்து காலையில லேட்டா அதாவது ஏழறைக்கு தான் எழுந்தாங்க அதனால ஆஃபிஸ்க்கு சீக்கரமா போகனும் சொல்லி மீரா கிட்ட அவங்களோட சட்டைய அயர்ன் பண்ணி தரச் சொல்லி கேட்டாங்க ஆனா மீரா நீ லேட்டா எழுந்தது உன் தப்பு அதனால நான் அயர்ன் பண்ணி மாட்டேன் என்று சொல்லிட்டாங்க

இதனால் ராமண்ணா ஆஃபிஸ்ல திட்டு வாங்க வேண்டியதா போச்சு அந்த கோபத்தில அண்ணா மீராவோட டொனி (Tony) ( மீராவின் செல்ல டெடி) ஒளிச்சு வச்சதோட மீரா ஸ்கைப்.( Skype)( மீராவிற்கு பிடித்த. ஸ்கை பூளூ கலர்ல அவ ஆசையா வாங்கின ஸ்கூட்டி) பெட்ரோல் டேங்கல தண்ணியும் சர்க்கரையும் கலந்து வச்சுட்டாங்க .இதை கேட்டு அம்மு சிரிக்காமல் என்ன செய்வார் .

பிரியா இதை சொல்லி முடிப்பதற்கும் ரிஷி அலுவலகம் செல்ல கிளம்பி மாடியிலிருந்து இறங்கி வரவும் சரியாக இருந்தது பிரியா ரிஷியை கண்டவுடன் அம்முவின் ஒளிந்து கொண்டாள்

இதை ரிஷி பார்த்தாலும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் அவனுக்கு பிரியாவின் பயந்த சுபாவம் பற்றி நன்றாக தெரியும் (இங்கு பிரியாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் அவள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட பயந்து அலறி விடுவாள்

பொதுவாக சிலர் பல்லி கரப்பான்பூச்சி பயப்பிடுவர் ஆனால் நம் பிரியாவோ கட்டேரூம்பை கண்டால் அலறி அடித்து தூர ஒடி விடுவாள் இருட்டை கண்டால் பயம் யாராவது கொஞ்சம் குரல் உயர்த்தி பேசினால் போதும் இவள் உடம்பு நடுங்கவும் வாய் திக்கவும் ஆரம்பித்து விடும்.

ஆண்கள் இருக்கும் பக்கம் தலை வைத்து படுக்க கூட மாட்டாள் இப்படி இருப்பவள் ஹரிஷை எவ்வாறு திருமணம் செய்தாள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும்

அதற்கு முழு காரணம் வானதியும் அனுவும் தான் அதன் பிறகும் ஹரிஷிடம் பழக பிரியாவிற்கு ஒரு வருடம் பிடித்தது இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால் பொறுமையின் சிகரமான ஹரிஷ் ராமின் திள்ளுமுள்ளான செயல்களுக்கு கூட கோபபடாத ஹரிஷை அந்த ஒரு வருடத்தில் அவனின் பெருமையான பொறுமையை இழக்க வைத்ததோடு அல்லாமல் அவனை மூன்று முறை கோபபட வைத்த பெருமை பிரியாவையே சாரும். )

பிரியா தன் பின்னே ஒளிவதை கண்ட அம்மு அவளை பார்த்தார் பின் பிரியா பார்வை சென்ற திசையில் அவரும் பார்வையை பதித்தார் அங்கு ரிஷி அலுவலகம் தயாராக இருப்பதை கண்டு அங்கிருந்த நால்வரையும் உணவு உண்டு விட்டு செல்லும் மாறு கூறிவிட்டு பிரியாவை கை பற்றி தன் கையோடு சாப்பட்டறைக்கு அழைத்துச் சென்றார் .

அவரின் பின் மற்ற மூவரும் இணைந்து நடந்து கொண்டே ஹரிஷை பற்றி மீராவிடம் விசாரித்தான் ரிஷி மீராவும் ஹரிஷிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினாள் ( ஒ இவனை பத்தி சொல்ல மறந்துட்டேன் ஹரிஷ் ஏழு எட்டு மாசமா கோமால இருக்கான் வர்மா ஹாஸ்பிட்டல தான் அவனுக்கு சிகிச்சை போய்கிட்டு இருக்கு. )

பின் மீராவிடம் எதுவும் தேவை என்றால் தன்னை அழைக்க கூறினான் மீரா அதற்கு சரி என்றவுடன் ரிஷி ராமிடம் அலுவலக சம்மந்தமாக பேசிக் கொண்டே உணவறைக்கு சென்றான்

உணவு உண்ண அமர்ந்த பின் ரிஷி ராமிடம் எதோ கேட்க அதற்கு ராமிடம் இருந்து பதில் வராததால் ரிஷி ராமை நிமிர்ந்து பார்த்தான் பார்த்தவனுக்கு பீ.பி ஹய் ஸ்பிடில் எகிறியது என்றால் மீரா வாலும் பிரியாவாலும் சிரிப்பை கட்டு படுத்தவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்

ஒரு கட்டத்திற்கு மேல் மீராவால் அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்து விட மீரா சிரிக்கும் சத்தம் கேட்டு மும்முரமாக உணவு உண்பதில் இருந்து தன் கவனத்தை அவளை நோக்கி செலுத்தினான் அதாவது சாப்பாட்டு தட்டை விட்டு தலையை நிமிர்த்தினான் அவன் தலை நிமிர்ந்தவுடன் அதுவரை சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த பிரியாவும் சிரிக்க ஆரம்பித்தாள்

அம்மு மீரா பிரியாவின் சிரிப்பு சத்தம் கேட்டு சமயல் கட்டில் இருந்து வெளியே வந்தார் அவர் சாப்பாட்டு மேஜையை நெருங்கும் சமயத்தில் தான் ரிஷி ராமை கோபமாக முறைப்பதையும் மீரா பிரியா இருவரும் ராமை பார்த்து சிரிப்பதையும் கவனித்தார் எதற்காக ராமை கண்டு அவ்விருவரும் சிரிக்கிறார்கள் என யோசித்துக் கொண்டே அவனை நெருங்கி பார்த்தவருக்கும் மெல்லிய சிரிப்பு அரும்பியது.
பின் சிரிப்பு வராமல் என்ன செய்யும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராம் சாப்பிட்ட விதம் அப்படி அதாவது அவன் சாப்பிடுகிறான் என்று சொல்வதை விட அச்சாப்பாட்டை வெளுத்து வாங்கினான் என்றே கூற வேண்டும் அதுவும் எப்படி என்றால் ஒரு கையில் பூரியும் ஒரு கையில் இட்லியும் வாயில் பொங்கலும் என்று இருந்தான் .

சிறிது நேரம் பொருத்த ரிஷி இதற்கு மேலும் தாமதித்தால் இன்று அலுவலகம் சென்ற மாதிரி தான் என்பதை உணர்ந்து தன் உணவை முடித்துக் கொண்டு தட்டில் கை கழுவி விட்டு எழுந்து சென்றான் ராமோ ரிஷி எழுந்து செல்வதை கூட உணராமல் உண்டு கொண்டிருந்தான் . இதில் விஷயம் என்னவென்றால் ராம் சாப்பாட்டு பிரியன் என்பது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் இருப்பது அம்முவின் கைமணம் ஆம் அம்முவின் சமயலை சாப்பிடுபவர்கள் அவரின் சாப்பாட்டிற்கு அடிமையாகி விடுவர் என்று சொன்னால் அது மிகையாகாது .அப்படி இருக்க சாப்பாடு என்றால் உயிரையும் விடும் ராம் அம்மு செய்த சாப்பாட்டை இவ்வாறு உண்ணாமல் இருந்தால் தான் ஆச்சரியம் .

பிரியா ராமை தட்டி ரிஷி செல்வதை காண்பித்தாள் ரிஷி செல்வதை கண்டு தான் சீக்கிரம் செல்லா விட்டால் ரிஷியிடம் மண்டகபிடி நிச்சயம் என்பதை உணர்ந்த ராம் தன் சாப்பாட்டு தட்டை ஏக்கத்துடன் பார்த்து விட்டு அதில் இருந்த ஒரு பூரியை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டு ரிஷியை நோக்கி ஓடினான் .
ரிஷி வருவதை கண்ட வீர் (ரிஷியின் பிரித்யேக பாதுகாவலன் ரிஷிக்கு அவனின் பென்ஸ் காரின் கதவை திறந்து விட்டு விட்டு ரிஷியை நோக்கி சல்யூட் அடிக்க அதற்கு ரிஷி பதிலாக தலையசைத்து விட்டு காரின் பின் பக்கம் ஏறி அமரவும் அவன் அமர்ந்தவுடன் வீர் காரின் கதவை சாத்தவும் ரிஷியை நோக்கி பின்னால் ஓடி வந்த ராம் அக்காரின் முன் கதவை திறக்கவும் சரியாக இருந்தது

ராம் காரில் ஏறியவுடன் அந்த கார் கிளம்பியது . கிளம்பியது ரிஷியின் கார் மட்டுமல்ல அதற்கு முன்னும் பின்னுமாக இருந்த நான்கு கார்களும் தான் அதில் ஓரொரு காரிலும் ஐந்து பேர் (வண்டி ஓட்டுபவரோடு சேர்த்து அவர்களும் செக்யூரிட்டி நிறுவனத்தால் பயற்றுவிக்க பட்டவர்கள் தான் ) என மொத்தம் இருபது பேருடன் அலுவலகம் நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள் முதலில் இச்செக்யூரிட்டிகளை கவனிக்காத ரிஷி சிறிது தூரம் சென்றதும் தான் அக்கார்கள் தன்னை தொடர்வதை கண்டு ராமை பிடித்து உலுக்கினான் ராமும் ரிஷியின் உலுக்கலில் வானதியும் ஆடிட்டர் ராகவும் தான் செக்யூரிட்டிக்கு ஏற்பாடு செய்ய சொன்னதாக கூறினான் .

------------------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த பிரம்மாண்டமான பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் இருந்தவர் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர் மணி காலை ஒன்பது நாற்பத்தி ஐந்து இந்த பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் தான் வர்மா குருப்ஸ் (Varma groups) தேவ் குருப்ஸ் (Dev groups) ஜெ.ஆர் ஹோட்டல்ஸ் (J.R. Hotels ) இவற்றின் மொத்த அதிகாரமும் இங்கு தான் உள்ளது இக்கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு தொழில்களின் நடப்புக்களும் கணக்குகளும் பராமரிக்க பட்டு வருகிறது இதேபோல் தான் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமில்லாமல் வெளி நாடுகளில் இருக்கும் ஒரு சில கிளைகளுக்கும் இங்கிருந்துதான் கட்டளைகள் பிறப்பிக்க படும் எங்குமே ரிஷிக்கு தெரியாமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பதே இதற்கான அர்த்தம்.

அந்த அலுவலகத்தை சுற்றி ஒரு திசைக்கு இரு வாயில் என எட்டு வாயில்களும் ஒவ்வொரு வாயிலுக்கும் ஐந்து செக்யூரிட்டி விதம் மொத்தம் நாற்பது செக்யூரிட்டிகளும் எட்டு வாயிலை சுற்றி முப்பத்திரண்டு ஸிஸி கேமராக்கள் அது அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் பத்து பன்னண்டு ஸிஸி கேமரா மற்றும் ஒவ்வொரு தளத்திலும் மூன்று/நான்கு ப்ஃயர் எக்சிட் என இது போல பாதுகாப்பு முறைமைகள் எந்த விதத்திலும் குறையில்லாமல் இருந்தது இதில் ஆறு வாயில் தான் அலுவலக பணியாளர்கள் பயன்படுத்தலாம் மீதமுள்ள இரண்டு வாயிலில் ஒன்று ரிஷியின் தனி பயன்பாட்டிற்கும் மற்றொன்று அலுவலக சம்மந்த படாத வெளி நபர் பயன்பாட்டிற்கும் ஆகும்

அந்த அலுவலகத்தின் தரையின் கீழே(under ground) கார் பார்க்கிங் தரை தளத்தில் ரிஷப்ஷன் அதற்கு எதிரில் பெரிய வெய்ட்டிங் ஹால் அதில் ஏழு/எட்டு சோபக்களும் அதற்கு நடுவில் நான்கு டீப்பாயும் போடப்பட்டிருந்தது அந்த ஹாலை தொடர்ந்து இடது பக்கம் ஆறு லிஃப்டும் அதற்க்கு வலது பக்கத்தில் மாடிப் படிகளும் அமைக்க பட்டிருந்தது இது போக இதற்கு எதிர் புறத்தில். அதாவது ரிஷப்ஷனின் வலது பக்கத்தில் இரண்டு லிஃப்ட் தனியாக ரிஷியின் பயன்பாட்டிற்காக இருந்தது. மிச்சமுள்ள அத்தளத்தை நிரப்பியவாறு அந்த அலுவலகத்தின் கேண்டீன் விசாலமாக இருந்தது அதன் பின் இருந்த ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு தொழில் நடந்து கொண்டிருந்தது கடைசி இரண்டு தளத்தை தவிர்த்து கடைசி தளத்தில் எல்லா வசதியுடன் ஒரு ரூம் மட்டும் ஒன்று உள்ளது . கடைசி தளத்திற்கு முன் தளத்தில் பெரிய. மீட்டிங் ஹால் ஒன்றும் ஆடிட்டோரியம் போல் பெரிய இன்னொரு ஹாலும் இருந்தது
இக்கட்டிடத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் தான் இன்று வெளி நாட்டவருடன் ஒப்பந்தம் நடக்கவிருக்கிறது எப்போதும் அவ்வலுவலக மீட்டிங் மட்டும் தான் அங்கு நடக்கும் வெளி ஒப்பந்த மீட்டிங் எல்லாம் ஜெ.ஆர் ஹோட்டலில் தான் நடக்கும் இன்று ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் இங்கு நடக்கிறது.

________________________________________________________________________

அந்த கார்கள் வரிசையாக அவ்வலுவலகத்தின் முன் நின்றன அதிலிருந்து முதலில் இறங்கிய வீர் வேகமாக வந்து ரிஷிக்கு கதவை திறந்து விட்டான் ரிஷி வீர் கார் கதவை திறந்தவுடன் கம்பீரமாக அதிலிருந்து இறங்கி தன் வேக நடையில் அவன் கோட்டையின் உள் நோக்கி நடந்தான் .

ரிஷி வேகமாக செல்ல ராமோ வீரை முறைத்து கொண்டே அவனிடம் சென்று டேய் வீரா மரியாதை தெரியுமா தெரியாதா என்று கேட்டான் ( மக்களே இந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம் வரலாம் என்னடா இவ கதையோட லோக்கேஷன் மும்பை சொல்லிட்டு எல்லாரும் தமிழ் பேசறாங்களே அப்படினு மன்னிச்சுகோங்க பா எனக்கு ஹிந்தி சுத்தமா தெரியாது அதோட எப்பவும் போல அவங்க ஹிந்தில பேசறத தமிழ்ல கொடுக்கிறதா நினைச்சுக்கோங்க ப்ளீஸ் )அதற்கு வீரோ நான் மரியாதை இல்லாம என்ன பண்ணிட்டேன் என்று ராமை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே வினாவினான் ஏனெனில் அவனுக்கு ராம் பற்றி நன்றாக தெரியும் அவன் தன்னை கலாய்ப்பதற்கு தான் இவ்வாறு வினவுகிறான் என்று.


அது ஒன்னுமில்ல நீ பாஸுக்கு மட்டும் கதவை திறந்து விட்டு சல்யூட் அடிப்பய எனக்கும் சல்யூட் அடி மேன் ராம் அப்படி கூறியவுடன் வீர் ராமை முறைத்தான் ராமோ அதை தூசு போல் தட்டி விட்டு வீரை சல்யூட் வைக்கு. மாறு ஏவினான் வீரும் முறைத்துக் கொண்டிருந்தவன் திடிரென சல்யூட் அடித்தான் வீர் தனக்கு சல்யூட் அடித்ததை நினைத்து சந்தோஷமாக இருந்த ராம் அவன் விரைப்பாக நிற்பதை கண்டு வீரிடம். அட உன் பெயர் வீர் அப்படின்னு எல்லாருக்கும் தெரியும் அதுக்குனு நீ வரச்சுகிட்டே நிக்காம கொஞ்சம் ஜாலியா இரு என்ன என்று சொன்னான் அப்போதும் வீர் அவன் நிலையில் இருந்து மாறாமல் இருக்க அப்போது தான் தன் பின்னே நிழல் ஆடுவதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கு ரிஷியை கண்டதும் ராமின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.

ரிஷியோ ராமை கண்டு கொள்ளாமல் வீரை கண்களால் காரை விட்டு விலக சொல்லி விட்டு காரில் இருந்த கோப்பை எடுத்துக் கொண்டு ராமை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் ரிஷி அங்கிருந்து அகன்றவுடன் ராம் வீர் மேல் கோபமாக பாயச் சென்றான் அதையும் ரிஷியின் ராம் என்ற கோபக் குரல் தடுத்தது ராம் வீரை பார்த்து எனக்கு ஒரு நேரம் கிடைக்காமைய போய்டும் உன்னை அப்போ வெச்சு செய்யறேன்ட அதற்கு வீர் நேரம் வரும் போது அத பாத்துக்கலாம் போ போ என்று நக்கலாக கூறினான் ராமும் வீரை முறைத்துக் கொண்டே ரிஷியின் பின் சென்றான்

ரிஷி தன் அறையை அடைந்து அவனின் இடத்தில் அமர்வதற்கும் ராமின் தொலைபேசி ஓலிப்பதற்கும் சரியாக இருந்தது விமானம் பனிப்பொழிவு காரணமாக தாமதமானதால் மீட்டிங்கை வேறு மாற்றி தரக் கேட்டு ராமிற்கு அதாவது தற்போதைய ரிஷியின் பி.யேவை தொடர்பு கொண்டிருக்கின்றனர். இதை ராம் ரிஷியிடம் பகிர ரிஷியோ முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் மீட்டிங்கை இரண்டு நாள் கழித்து வைக்கலாம் என்று சொல்ல சொன்னான்.

பின் சிறிது நேரம் சில முக்கியமான கோப்புகளை சரி பார்த்து கையெழுத்து இட்டு கொண்டிருக்க அவன் தொலைபேசி சத்தமிட்டு அவனுக்கு ஏதோ தகவல் (message) வந்ததாக காண்பித்தது ரிஷி தன் போனில் வந்த தகவலை கண்டு திகைத்து எழுந்தான் அவன் எழுவதை கண்டு ராம் எழுந்து ரிஷியை பார்த்தான் ராம் தன்னை காண்பதை உணர்ந்த ரிஷி அவனிடம் ராம் நா வீட்டுக்கு போறேன் நீ இங்க எல்லாத்தையும் பார்த்துக்கோ என கூறி விட்டு வீட்டை நோக்கி பறந்தான். ரிஷி இங்கு வீட்டிற்கு பயத்துடன் வர அங்கு அவனின் அனு அவனை அழகாக வரவேற்றாள்


வசந்தம் எப்படி வரவேற்றது காணலாம் காத்திருங்கள்...................................


வசந்தம் பூக்கும்..........................................................................
 
Last edited:

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் -3

ராமிடம் ரிஷி கூறிவிட்டு தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தான் இவன் தன் காரை வீட்டு போர்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கினான் இறங்கிய உடன் தான் கவனித்தான் தன்னை நோக்கி ஒரு நபர் ஓடி வருவதைக் அதை கண்டவுடன் ரிஷியை அறியாமலே அவன் உள்ளே பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது அவனும் அந்நபரை நோக்கி நகர்ந்தான் அவன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த நபர் திடீரென்று தான் ஓடி வந்து கொண்டிருக்கும் பாதையில் இருந்து விலகினாள் அவள் விலகவும் ரிஷியின் மேல் தண்ணீர் பீச்சியடிக்கவும் சரியாக இருந்தது

எல்லோரும் என்ன நடக்கின்றது என்று மற்றவர் அதாவது அங்குள்ளவர்கள் உணர்வதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது அங்கு நனைந்தவன் சாதாரணமாக இருக்க அவன் நனைவதற்கு காரணமானவளோ தனக்கும் அதற்கும் எச்சம்பந்தமும் இல்லை என்பது போல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க இதை பார்த்துக்கொண்டு இருந்தோரும் அவ்விடத்தில் இருந்த வேலைக்காரர்களும் தான் இனி என்ன நடக்குமோ என்ற பயத்திலும் பதற்றத்திலும் இருந்தனர். ஆனால் கோபப்பட வேண்டியவனோ பயப்பட வேண்டி அவளோ அதற்கு நேர்மாறாக இருந்தனர்

(சரி இப்போது ரிஷியின் மேல் நீர் ஊற்றியது யார் என்று தெரிய வேண்டுமானால் தெரியனுமா அப்போ ரிஷி அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டில் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் பார்ப்போமா)

ரிஷியும் ராமும் அலுவலகத்திற்கு சென்றபின் பிரியா மீரா அம்மு மூவரும் உணவு உண்டு விட்டு எழுந்தனர் பின் ப்ரியாவும் மீராவும் அம்முவிடம் அம்மு நாங்க வீட்டுக்கு போறோம் என்று சொல்லி கிளம்பினர் உடனே அம்மு அவ்விருவரிடம்
" நீங்க ரெண்டு பேரும் ஹரிஷை பார்க்க போகவில்லையா என்று கேட்டார் அதற்கு மீரா அம்மு வானதி அம்மா நான் பார்த்துக்குறேன் நீங்க போயிட்டு வாங்க சொல்லிட்டாங்க ஆனாலும் அவங்களுக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காது இல்லையா அதனால வீட்டில வந்து சமைச்சு எடுத்துட்டு போகலாம் அப்படின்னு வந்தோம் இங்கே வந்த இடத்துல இந்த ராம் எருமை பண்ணின வேலையால எல்லாம் சொதப்பிடுச்சு என்றாள்."

அம்மு உடனே
"சரி சரி அதெல்லாம் இப்போ பெரிசு பண்ணாத நான் இப்ப இங்கேயே சமைச்சு தரேன் வானதி அக்காவுக்கு கொண்டுபோய் கொடு வானு அக்காக்கு துணி மணி வேணும்னா அவங்களோட டிரஸ் இங்கே 4 செட் இருக்கு அதுல தேவையானதை எடுத்துட்டு போங்க"
என்று கூறி அம்மு சமையல் அறைக்கு சென்றார் அவர் பின்னோடு மீராவும் ப்ரியாவும் சென்றனர் மூவரும் சேர்ந்து அடுத்தவேளைக்கான உணவை செய்வதில் கவனம் செலுத்தினர் அப்போது திடீரென்று ஏதோ விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு அடித்து பிடித்து கொண்டு வந்தனர் வேலையாட்களும் அங்கு கூடினர் அப்போது அம்மு மேலே நிமிர்ந்து பார்த்த போது அங்கு அனு அப்போதுதான் தூங்கி விழித்த நிலையில் கண்ணை கசக்கிக் கொண்டு மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தாள் அவள் இறங்கும் போது கைபட்டு அந்த பூ ஜாடி உடைந்து இருக்கலாம் என கணித்தார் இவர்கள் எல்லோரும் அணுவை கவனித்துக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ பதினாறு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது அந்த ஸேப்ஃஹர்டு கஃன்ஃகள் (shepherd kangal) வகையை சேர்ந்த நாய் அதைக் கண்டு மீராவும் அம்முவும் பயந்தனர் என்றான் பிரியா அலறிய விட்டாள் (பின் சிறு எறும்புக்குக் கூட பயப்படுபவள் இந்த பெரிய வேட்டை நாயை கண்டு அலறுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை)

இவர்கள் இவ்வாறு பயப்படுவதை கண்ட அனு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள் அவளின் சிரிப்பு சத்தத்தில் அவளின் இருப்பை உணர்ந்த மற்ற மூவருக்கும் பகீரென்றது (பின்னர் பயம் வராமல் என்ன செய்யும் அனுவிற்கு நடந்த அந்த சம்பவத்தின் பின் அவளுக்கு நாய் பூனை அதாவது செல்லப்பிராணிகளின் அருகில் சென்றால்கூட மூச்சு முட்ட ஆரம்பித்துவிடும்) அதனாலேயே செல்லப்பிராணிகளை அவளருகில் விடாமல் இருந்தனர் அதுதான் அவர்களின் பயத்திற்கும் காரணம் சரி இனி அனு என்ன செய்கிறாள் என்று பார்ப்போமா

(அதோடு இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று அது என்னவென்றால் எப்பொழுதும் அந்த நாய் இல்லை இல்லை அதன் பெயர் டைகர் அதை நாய் என்று சொன்னால் அனு என்னை தீர்த்து கட்டி விடுவாள் என்னை மட்டும் இல்லை உங்களையும் தான்)


டைகர் அனுவை சுற்றிச் சுற்றி வந்தது டைகர் உள்ளே வந்ததுமே அதன் பின்னேயே டைகர் மற்றும் அதன் நண்பர்களான டாம் ஜெஃப்ரி ஜாக்கி(Tom, Jeffrey, Jackie) இவற்றை பராமரிப்பவரான வேலு வந்தார் இவர் இக்குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளாக வேலை பார்ப்பவர் நம்பிக்கைக்குரியவர் கூட குடும்பத்திற்காக தன் உயிரையும் கொடுக்க தயங்காதவர் இவருக்கு அனு மற்றும் ரிஷி என்றால் பிரியம் அதிகம் தான் ஏனெனில் மற்றவர்கள் அவரை ஒரு வேலையாளாக பார்த்தாலும் அனுவும் ரிஷியும் அவரை தாத்தா தாத்தா இன்று பிரியமாக சுற்றி வருவார்கள்

வேலுவும் உள்ளே நுழைந்தவுடன் அங்கிருந்த சூழ்நிலையை கண்டு தன் கையை பிசைந்தார் அவரை கவனித்து அவரின் நிலையை உணர்ந்த மீரா அம்முவிடம் அனு கவனிக்காதபடி சைகையால் எதையோ கூறினாள் பின் அவள் மெதுவாக நகர்ந்து சமையலறைக்கு சென்றாள் அவள் சமையலறைக்கு நகர்ந்தவுடன் அம்மு பிரியாவை பார்த்து அதாவது அனுவை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டே ப்ரியாவிடம் "ப்ரியாமா இன்னிக்கு இந்த ரிஷி எங்க போனான் தெரியலை சரி அதை விடு இன்னைக்கும் தோட்டத்துல அந்த நீல நிற ரோஸ் பூத்திருக்கு அத பறப்பு தரச் சொல்றேன் நீ அன்னிக்கு கேட்டிருந்த தானே" என்று கூறினார் அம்மு ஏன் அப்படி கூறினார் என்றால் அனுவிற்கு பூக்களை கொய்வது அதாவது செடியிலிருந்து பரைப்பது பிடிக்காது அதனாலேயே அப்படி கூறினார்

பின் வேலுவிடம் திரும்பி "வேலு அண்ணா சின்னாவை வரச்சொல்லுங்க என்று கூறினார் அதற்கு வேலுவும் சரிமா வரச் சொல்றேன்" என்று அவர் சொல்லி முடிக்கவும் அவரை அனு மின்னல் வேகத்தில் கடக்கவும் சரியாக இருந்தது அனு அங்கிருந்து சென்றவுடன் அம்மு வேலுவிடம் "வேலு அண்ணா சீக்கிரம் டைகர் கூட்டிட்டு போங்க எனக் கூறினார்". வேலுவும் தலையாட்டிவிட்டு டைகரை இழுத்துச் சென்றார் அவர் பாதி தூரம் எடுத்துச் சென்றிருக்க மாட்டார் அவரின் கையிலிருந்து துள்ளி தன்னை விடுவித்து கொண்டு அதுவும் அனு சென்ற திசை நோக்கி ஒரே பாய்ச்சலில் சென்றது அது துள்ளியதில் தடுமாறிய அவர் சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்துவிட்டது உடனே உள்ளே ஓடிச்சென்று மூன்று பெண்களிடமும் இதைக் கூறினார்

இதைக் கேட்ட உடனே மூவருக்கும் பயம் அதிகரித்தது அந்த பயத்துடனே அடுத்த நொடியே அவர்களும் தோட்டத்தை நோக்கி ஓடினர் பின் வேலு அம்மு பிரியா மீரா நால்வரும் சேர்ந்து அனு டைகர் இருவரின் தேடிக்கொண்டே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாக சென்றனர் அதில் பிரியா தேடிக்கொண்டே மரத்தடியில் வந்து நிற்கவும் அவளைக் கண்டு மீரா அவளை நெருங்கவும் அவ்விருவர் மேலும் தண்ணீர் விழவும் சரியாக இருந்தது திடீரென தண்ணீர் தன்மேல் விடவும் ப்ரியா அலறிக்கொண்டே துள்ளிக் குதித்தாள் அவள் அலறல் சத்தம் கேட்டு அங்கு தோட்ட வேலைக்காரன் முதற்கொண்டு எல்லோரும் அவ்விடத்தில் கூடிவிட்டனர்

அவர்களின் நிலை கண்டு அனு சிரிக்க ஆரம்பிக்கவும் டைகர் துள்ளிக்குதித்தது என்றால் அங்குள்ளவர்களும் தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாமல் சிரிக்க ஆரம்பித்தனர் ஆனால் இங்கு பாவத்திற்குரிய ஜீவன்களான பிரியாவும் மீராவும் அனுவை முறைத்துக் கொண்டு இருந்தனர்

அப்பொழுது அனு மெதுவாக மரத்திலிருந்து இறங்கினாள் அவள் இறங்கவும் அம்மு அவள் அருகில் வந்து அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தார் அவளுக்கு எதுவும் இல்லை என்றவுடன் தான் அவருக்கு மூச்சே சரியாக வந்தது அனு கீழே இறங்கவும் அதுவரை அனுவை முறைத்துக் கொண்டிருந்த மீராவும் பிரியாவும் அவளை துரத்த ஆரம்பித்தனர் அவர்கள் தன்னை துரத்துவதை கண்ட அனுவும் ஓட ஆரம்பித்தாள் ஓடும் பொழுது பிரியாவிற்கு அங்கிருந்த டியூப் கண்ணில் பட அதை மீராவின் சுட்டிக்காட்டினால் மீராவும் அதை எடுத்துக்கொண்டு அனுவை நோக்கி வைத்து நீரைப் பீச்சுவதற்கும் ரிஷி காலிலிருந்து இறங்கி அனுவை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது ரிஷியின் வரவை கவனித்த அனு கடைசி நிமிடத்தில விலக்கிக் கொள்ளவும் ரிஷியின் வரவை எதிர்பாராத மீரா தண்ணீரை நிறுத்தாமல் பீச்சுவதற்கும் சரியாக இருந்தது


ரிஷியின் வரவை எதிர்பாராத மீரா தண்ணீரை நிறுத்தாமல் பீச்சியதால் ரிஷி தொப்பலாக நனைந்தான் அப்போதும் மீரா ரிஷியை எதிர்பாராமல் பார்த்ததால் வந்த அதிர்ச்சியில் தண்ணீர் டியூப்பை கீழே போடாததால் இன்னமும் நனைந்து கொண்டிருந்தான் இதைக்கண்ட அனு குதூகலித்து சிரித்தாள் அவளின் சிரிப்பு சத்தத்தில் உணர்வுக்கு வந்த மீரா தண்ணீர் டியூப்பை தூக்கிப்போட்டுவிட்டு நடுநடுங்க நின்றாள்

அங்கிருந்த அனைவரும் நடுங்கிக் தான் இருந்தனர் ஏனென்றால் ரிஷியின் கோபம் அப்படி ஆனால் ரிஷியோ இப்பயம் தேவையில்லை என்பதை உணர்த்துவதுபோல் தன் முகத்தில் ஒரு புன்முறுவலை படரவிட்டான் முன்னிருந்தவர் எல்லாம் அசந்து விட்டனர் பின் அசராமல் எப்படி இருப்பர் எப்போதும் சிரிப்பு என்றாலே மில்லி மீட்டர் அளவிற்கு உதட்டை இழுத்து வைப்பவன் அதுவும் இந்த ஒன்றரை வருட காலமாக சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவன் இன்று இவ்வாறு கன்னத்தில் குழி கண்கள் பளபளக்க அழகாக முறுவலித்தாள் யார் தான் அசர மாட்டார்கள்

பின் ரிஷி அங்கிருந்த அனைவரையும் கண்களாலேயே கலைய உத்தரவுயிட்டுவிட்டு அனுவை கைப்பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்துவிட்டு தானும் அவள் முன் அமர்ந்து அனுவிடம்

"அனுமா ஏன் இப்படி பண்ண "என்று கேட்டான்

ஆனால் அவளோ அதை அவனிடமே திருப்பி " எப்படி பண்ணேன் "என்று கேட்டாள் ரிஷி அதற்கும் கோபப்படாமல் "அனுமா எதுக்கு மீரா பிரியா மேலேயும் தண்ணீர் விட்ட ஏன் மீரா உன் மேல தண்ணி பீச்ச வரும்போது என்ன பார்த்த உடனே விலகின" என்று கேட்டான் அதற்கு அவள் " உங்க ரெண்டு பேருக்கும் பனிஷ்மென்ட் வேண்டாமா" என கேட்டாள்

அதைக் கேட்டவுடன் ரிஷி "பனிஷ்மென்ட்டா எதுக்கு எங்க மூணு பேருக்கும் பனிஷ்மென்ட் நாங்க என்ன தப்பு பண்ணினோம்" என வினாவினான் அதற்கு அவள் ரிஷி இடம் "நீ என்கிட்ட சொல்லாம போனதுக்கும்" ப்ரியாவை காட்டி "டைகரை பார்த்து அலறினதுக்கும் மீராவுக்கு நான் வேணும்னு பண்ணல பிரியா மேல் தண்ணி விடும்போது மீராவும் குறிக்க வந்துட்டா அதான் அவ மேல தண்ணி பட்டுச்சு" என்றாள்
அனு கூறியதை கேட்டவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது ஆனால் அதை அடக்கி கொண்டனர் இல்லை என்றால் அதற்கும் தண்டனை என்ற பெயரில் ஏதாவது செய்துவிட்டால் பின் ரிஷி அனுவிடம் " சாரி சாரி அனுமா நான் கிளம்பும்போது நீ தூங்கிட்டிருந்தேன் அதான் உன்ன எழுப்பல உனக்கும் தூங்கும்போது யாராவது கூப்பிட்டா பிடிக்காது நீயே சொல்லு நான் என்ன பண்ணனும்" என்று கேட்டான்

அதற்கு அனு சிறிது யோசித்துவிட்டு" ரிஷி நான் தூங்குகிறேன் இனிமேல் பார்க்காதே உனக்கு மட்டும் பர்மிஷன் தரேன் நான் தூங்கினாலும் என்னை எழுப்பி சொல்லிட்டு போய்ட்டு வா சரியா" என்றாள்.
ரிஷியும் "சரி அனு நீ சொல்லுற மாதிரியே உன்கிட்ட சொல்லிட்டு போறேன் சரியா "என்றான்.
உடனே அனு "போயிட்டு வரேன் சொல்லுனும் ரிஷி" என்று கூறினாள்.

அவன் கூறியதைக் கேட்ட ரிஷி சிரித்துக்கொண்டே "சரி உன் கிட்ட சொல்லிட்டு போயிட்டு வரேன் சரிதானே" எனக் கேட்டான்.

அனுவும் "ம்ம் ஓகே "என்றாள்.

அவ்வளவு நேரம் அனுவையும் ரிஷியையும் ரசித்துக்கொண்டிருந்த அம்மு அப்போது ரிஷியிடம் வந்து "ரிஷி அனு எழுந்து ஒரு மணி நேரம் ஆச்சுப்பா இன்னும் அவ காபி கூட குடிக்கல" எனக் கூறினார்.

உடனே ரிஷி அனுவிடம் திரும்பி" என்ன அனுமா இது இப்படியா எதுவும் சாப்பிடாம குடிக்காம இருக்கிறது" என்று கேட்டான் .

அதற்கு அனு" நீ ஏன் என்னை விட்டுட்டு போனே நான் எழுந்த உடனே உன்னைத்தான் ரூம்ல தேடினேன் அங்க நீ இல்லை என்று உடனே கீழே வந்து தேடினேன் இங்கேயும் நீ இல்லை எனக்கு எப்படி அழுகையா வந்தது தெரியுமா இதுல இந்த காயு வேற நீ யார்கிட்டயும் சொல்லாம போயிட்டேன்னு சொன்னாங்க அதைக் கேட்டவுடனே நான் கூட நீ என் மேலே கோபப்பட்டோ இல்லை பிடிக்காமலோ தான் போயிட்டியோ நினைச்சேன் அப்புறம் சாப்பிட்டியானு கேக்குறியே அறிவு இருக்கா உனக்கு" என்றாள்.

அதற்கு ரிஷி உடனே " எனக்கு அறிவு இல்லை தான் செல்லம்" என்றவுடன்

"சுப் குறுக்க பேசாதே அப்புறம் நான் பேச வந்தது மறந்துவிடும் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்" ரிஷியோ கண்களில் குறும்பு மின்ன" என்ன பாத்து அறிவு இருக்கா என்று கேட்டடா "என்று கூறினான் .

உடனே அனு அவனைக் கோபமாக முறைத்து "பின்ன கேட்காமல நீதானே சொன்னே எழுந்து பிரஸ் ஆயிட்டு எதுனாலும் குடிக்கணும் சாப்பிடனும்னு சொன்னே" என்றாள். அதற்கு ரிஷியிடம் இருந்து பதில் வரவில்லை என்றவுடன்" என்ன முழிக்கிற நீதான சொன்ன அதோட இத எல்லாம் நீதானே என்னை கூட இருந்து செய்ய வைப்ப அது வந்து பிரஷ் பண்ண வைக்கிறது குளிக்க ஹெல்ப் பண்றது சாப்பாடு ஊட்டி விடறது எல்லாமே பண்ணுவ இப்ப வந்து ஏன் செய்யலைன்னு என்ன வந்து கேக்கறே போ உனக்கு என் மேல பாசமே இல்லை போ நான் உன் கூட பேசமாட்டேன் போ போ "என ரிஷியை பிடித்து தள்ளிவிட்டுவிட்டு சத்தம் போட்டு அழுது கொண்டே மாடிக்கு சென்று விட்டாள்.

அவள் அழுவதை கண்ட மீரா பிரியா அம்மு மூவருக்கும் கண்களில் நீர் கோர்த்தது என்றால் ரிஷிக்கு நெஞ்சில் ரத்தம் வடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும் அவனால் வாய்விட்டு அழக்கூட இயலவில்லை அதுவும் ரிஷிக்கு அனு அவன் தாய்க்கு நிகரானவள் அவன் கஷ்டத்தில் இருக்கும்போது அவனை தாயாய் தோழியாய் எல்லாமாகவும் இருந்து மடி தாங்கிய அனுவை இந்நிலைக்கு ஆளாக்கிய வரை கண்டுபிடிக்கக் கூட முடியாத தன் இயலாமையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஆனால் ஒன்று அனுவின் இந்நிலைக்கு காரணமானவர்கள் மட்டும் அவன் கைகளில் கிடைத்தால் அவர்கள் நரக வேதனை அனுபவிப்பர் என்பது மட்டும் சத்தியம் ரிஷியின் கண்கள் சிவந்திருப்பதையும் கை நரம்புகள் புடைத்திருப்பதையும் கண்ட அம்மு அவனிடம் வந்து அவன் தோள்களை பிடித்து அழுத்தினார் அதில் தெளிந்தவன் அம்முவை நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.

ரிஷி தன்னை நிமிர்ந்து பார்த்தவுடன் அம்மு ரிஷி இடம் "ரிஷி போ போய் அனுவை சமாதான படுத்து" என்றார். ரிஷியோ அம்முவை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தான் அவன் கண்களில் வேதனையை உணர்ந்த அம்மு "என்ன ரிஷி ஏன் இவ்வளவு வேதனைப்படுற எல்லாம் சரியாயிடும் "கூறினார் .
அதற்கு ரிஷி" எல்லாம் சரி அம்மு ஆனால் அனு நல்லபடியா குணமாகி வந்து என்ன கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லணும் "என்று கேட்டான்.
அம்முவும் அதற்கு "அனு கேள்வி எல்லாம் கேட்க மாட்டா நீ கவலை படாத "என்று கூறினார் .
அதற்கு ரிஷி "அம்மு நீ கவலை படாதே அப்படின்னு சொல்றே ஆனால் நான் எப்படி கவலை படாமல் இருக்க முடியும் அனுவை இப்படி மனநிலை சரியில்லாத நேரத்துல நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு எவ்வளவு உறுத்தலா இருக்கு தெரியுமா அதுவும் என்னால் அனுவை என் மனைவிய அதாவது அவளோட முகத்துக்கு கீழ பாக்கவே முடியவில்லை நாளைக்கே அனு குணமாகி வந்து உனக்கு எப்படி என்ன கல்யாணம் பண்ணிக்க மனசு வந்தது நான் உன்னை என் உயிர் நண்பனா தானே பாத்தேன் அப்படின்னு கேட்பாளே நான் என்ன பதில் சொல்லுவேன் எப்படி அவ முகத்தை பார்ப்பேன் அதோட நான் தினம் தினம் நரகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன் அம்மு சொல்லு அம்மு அவ அப்படிக் கேட்டா நான் என்ன செய்யணும் "என்றான்

அம்முவால் இதற்கு என்ன பதில் கூற முடியும் அவரும் மனதிற்குள் ஒவ்வொரு நொடியும் அழுது கொண்டுதான இருக்கிறார் ஆனாலும் தன் முன் அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் ரிஷி இப்படி குழந்தையாக மாறி என்ன செய்வது என புரியாமல் முழித்துக் கொண்டிருப்பதை அவரால் காண முடியவில்லை அதனால் ரிஷி இடம் "ரிஷி நீ அனுவை குழந்தையாக பார்த்துக் கொள்வது எங்களுக்கு தெரியும் அனுவும் நிச்சயம் அவள் குணமானவுடன் அவளின் உயிரின் பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் அதற்காகத்தான் இதெல்லாம் என்பதையும் புரிந்து கொள்வாள் இல்லையேல் நாம் புரிய வைக்கலாம் சரியா "கூறினார்.

இவர்கள் இவ்வாறு வருந்தி கொண்டிருப்பதையும் அனு அழுவதையும் கண்ட இவர்கள் பக்கத்தில் யார் கண்களுக்கும் புலபடாத உருவம் அவர்களின் நிலையைக் கண்டு தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்றும் தானும் ரிஷி இவ்வாறு வருந்துவதற்க்கும் காரணமாகி விட்டோமே என்றும் நினைத்து கதறிக் கதறி அழுதது.


வசந்தம் பூக்கும்...........................................!
 
Last edited:

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பா நான் வந்துட்டேன் 😉( என்னடா இவ இன்னும் இரண்டு வாரத்துக்கு நம்மள தொல்லை பண்ண மாட்டானு நிம்மதி இருந்தோம் :)இப்படி கழுத்தறுக்க வந்துட்டாளேனு:LOL::mad: )நீங்க நினைக்கிறது புரியுது என்ன பா பண்ண உங்களுக்கு கெட்ட நேரமா இருந்துருக்கு வீட்டுக்கு வரேன் சொன்னவங்க அவங்களுக்கு ஏதோ வர முடியாத சூழ்நிலையால வரத போஸ்ட் பாண்ட் பண்ணிட்டாங்க அதான் நான் சீக்கிரமா வந்துட்டேன் :) ( சரி சரி வந்தது வந்துட்ட விஷயத்த சொல்லிட்டு கிளம்பு நாங்க எங்க வேலைய பாக்கனும் )நான் அடுத்த யுடி போட்டுட்டேன் படிச்சுட்டு ஓரு வார்த்தை கருத்து திரில சொல்லிட்டு போங்க :confused: அடுத்த அத்தியாயம் முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா தர முயற்சி பண்றேன்.
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம் டீஸர்-4


இன்று


அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து மிக வேகமாகவும் பரபரப்பாகவும் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள் பின் பரபரப்பாக கிளம்பாமல் என்ன செய்வாள் அவள் மகன் செய்து வைத்திருக்கும் காரியம் அப்படி அவள் வேலையில் இருந்த போது அவள் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது அதாவது அவளுடைய மகன் மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் என்று அவன் பள்ளியில் இருந்து அழைத்திருந்தார்கள்

ஆனால் அவளுக்கு தெரியும் அவள் மகன் விழுந்திருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது ஆனால் வேறு யாருக்காவது அவனால் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று சரியாக கணித்து விட்டாள் ஏனென்றால் அவர் மகன் தான் பெரிய குறும்புக்காரன் ஆயிற்றே அவன் செய்யும் குரங்கு வித்தைகளும் கோமாளித்தனங்களும் மற்றவர்கள் தங்களை மறந்து ரசிக்கும்படி இருந்தாலும் அது கண்டிப்பாக யாராவது ஒருவருக்கு பிரச்சனை கொடுப்பதாகவே முடியும் அதுவும் அப்படி ஒருவருக்கு அது பிரச்சினை கொடுத்தது என்றால் அந்நபர் இவர்களுக்கு அதாவது தாய்க்கோ அல்லது மகனுக்கோ ஏதாவது பிரச்சனை கண்டிப்பாக கொடுத்திருப்பர் அதற்கு பதிலடி தான் அவள் மகன் செய்யும் காரியம்

அவள் வந்த வேகத்திற்கு பள்ளியை வந்து அடைந்திருந்தாள் . பள்ளியை வந்து அடைந்ததும் அவள் கண்டது அவள் மகனை பிடிக்க அந்தப் பள்ளியில் உள்ள எல்லோரும் அவனின் எல்லா பக்கமாகும் ஓடிக்கொண்டிருக்க அவனும் நான் யார் கைகளுக்கும் பிடி பட மாட்டேன் என்று வளைந்து நெளிந்து அப்படியே பிடிபட்டாலும் மெதுவாக நழுவியோ இல்லை அவர்களைப் பார்த்து சிரித்தோ இல்லை அவர்களிடம் மயக்கும்படியாக பேசியோ யாரிடமும் சிக்காமல் தலையில் கட்டுடன் ஓடிக்கொண்டிருந்தான் மாதவ் கிருஷ்ண ரகு------- அவனைப் பிடிக்க வந்தவர்களில் சிலருக்கு கைகளிலும் கால்களிலும் கட்டு இருந்தது.

இதைக் கண்டு திகைத்து நின்றிருந்தால் அநாமிகா
 
Last edited:

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry pa lateta vandhadhuku:giggle: intha week is tharamudiyala so teaser potturuken ud next week condippa thandhuran periyya udyyavum Thara try pannaren :smiley55: okva teaser padichutu konjam adotha kurai Niraj Kalla karuthu thirilla sollittu pongapa pls..
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம்-4

இன்று



அந்த காலை வேலையில் அந்த ரம்யமான நேரத்தில் தமிழகத்தின் தென்கோடியாம் முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி அம்மாவட்டத்தில் தக்கலை என்னும் ஊரில் அதாவது ரப்பர் மரங்களும் அதற்குரிய தொழிற்சாலைகளும் முந்திரி எஸ்டேட்டும் அதற்குரிய தொழிற்சாலைகளும் என முந்திரி மற்றும் ரப்பர் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றை முக்கியத் தொழிலாகக் கொண்ட அவ்வூரில் அந்த ஏக்கர் கணக்கான முந்திரி எஸ்டேட்களும் ரப்பர் எஸ்டேட்களும் அதில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கான வீடு மருத்துவம் பள்ளி கல்லூரி முதலியவும் கொண்டு ஏக்கர் கணக்கான நிலத்தை அக்காலத்திலேயே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டடங்களும் என பார்க்க சிறு நகரமாக தோன்றிய அவ்விடத்தில் அந்த காலை நேரத்தில்அந்த எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு என இருக்கும் குடியிருப்பில்ஒரு சிறு வீட்டில் ஒற்றைப் படுக்கை அறை கொண்ட அவ்வீட்டில் அவள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவள் மகன்.

தான் வேலைக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டும் மதிய உணவிற்கு சமைத்துக் கொண்டும் தன் மகனை பிளே ஸ்கூல் இருக்கு தயாராக்கி உட்காரவைத்துவிட்டு மற்றவைகளை சீக்கிரமாக முடிக்க எத்தனித்தாள் இதையெல்லாம் விட அவளுக்கு பெரிய வேலை அவள் மகனை தயார்படுத்தி உட்கார வைப்பது தான் அது முடிந்து விட்டது அதனால் மற்றவை விரைவாக முடித்துவிடலாம் என்று வேகமாக செய்ய ஆரம்பித்தாள்.

காலை மணி ஒன்பது இருக்கும் தன் வேலைகளை முடித்துக்கொண்டு மகனையும் அழைத்துக்கொண்டு வீட்டின் கதவை பூட்டிவிட்டு சாவி தன் கையில் வைத்து கொண்டு மகனின் கையை பிடித்த நடக்க ஆரம்பித்தாள் பத்து நிமிடத்தில் அவள் தன் மகனை தான் வேலை பார்க்கும் இடத்திலேயே உள்ளஸ்கூல் லோடு இணைந்திருந்த ப்ளே ஸ்கூலில் மகனை விட்டு விட்டு தன் மருத்துவமனையை நோக்கி சென்றாள் அவள் மருத்துவமனையில் தன் வேலை இடத்துக்குவந்து அமரவும் அவளை நோக்கி அவள் தோழி/சகோதரி அந்த ஹாஸ்பிடலின் முழு பொறுப்பையும் பார்த்துக் கொள்ளும் ஜோசபின் மனைவி மேரி அதுமட்டுமின்றி தன் மாமியாரின் சொல்லிற்கு இணங்க அநாமிகாவிற்கும் அங்கு பைனான்ஸ் பகுதியில் வேலை வாங்கிக் கொடுத்தவள். அவள் அநாமிகாவை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது.



"என்ன அநாமிகா மாதவ ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டியா"-மேரி

"ஆமாம் மேரி அக்கா அவனை விட்டுட்டு இப்பதான் வரேன் அதான் லேட்டாயிடுச்சு சாரி" -அநாமிகா

"பரவால்ல அநாமிகா அதனால் என்ன பத்து நிமிஷம் தான் லேட் ஆச்சு ஆமாம் மாஸ்டர் இன்னைக்கு என்ன குறும்பு பண்ணாரு ஸ்கூலுக்கு போகாம இருக்க"-மேரி

"நல்ல வேளை கேட்டீங்க மேரி அக்கா இன்னிக்கு எனக்கு பயமாயிடுச்சு சார் அழகா தூங்கி எழுந்திச்ச உடனே பரண் மேலே ஏறி அட்டைப்பெட்டிக்கு நடுவுல படுத்து இருந்தாரு முதலில் என்னால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை அதோடு பரண் மேலே ஏறுவான் என்று நான் கற்பனை கூட பண்ணி பார்க்கவில்லை எப்போதும் போல கட்டில் அடியில் இருக்கானா இல்ல பாத்ரூமில் இருக்கானா இல்ல பீரோல ஏதாவது ஒரு ஸேல்ஃப்ல மறைந்து இருக்கானா அப்படின்னு பார்க்கும் போது தீடிரென்று தும்மல் சத்தம் கேட்டு அது எங்கேருந்து வருது அப்படின்னு தேடி பார்த்தா பரண் மேலே சரியா வைச்சுருந்த அட்டைப்பெட்டி சாஞ்சு அதிலிருந்த பொருள்களெல்லாம் சிறிது கீழே சிதறி கிடந்தது அப்பறம் தான் பரண் மேலே கூர்ந்து கவனித்தால் சாரோட பிஞ்சுகால் தெரிஞ்சுது அதுக்கப்புறம் அவனை எப்படியோ கெஞ்சி மிரட்டி எல்லாம் செஞ்சு கீழே இறங்க வைத்து ஸ்கூலுக்கு கிளப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது"-அநா

இதைக் கேட்டவுடன் மேரி சிரிப்பை அடக்க முடியவில்லை பின் சிரிக்காமல் என்ன செய்வாள் தினம் தினம் இப்படி ஏதாவது ஒன்றை செய்து எல்லோரையும் கலங்கடிக்கும் அவனை என்ன தான் செய்வது என நினைத்து மேரி சிரித்துக் கொண்டிருக்கும் போதே ஜோசப் அங்கு வந்தான்.

"என்ன மேரி எதுக்கு பேய் மாதிரி சிரிக்கிற"-ஜோசப்

அவன் இப்படி கேட்டவுடன் மேரி அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மேரி முறைத்தவுடன் ஜோசப் அவளிடம் பம்முவது போல நடித்த படியே "அது ஒன்னும் இல்லப்பா நோயாளிகள் எல்லாம் உன்னை பார்த்து பயப்படறாங்க வேணுமென்றால் நீயே பாரேன்" என்று அவளிடம் காலையிலேயே வம்பிழுத்தான் இதுதான் ஜோசப்

ஜோசப்பும் இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவன் தான் என்று கூறினால் எவரும் நம்பமாட்டார் அந்த அளவிற்கு மிகவும் ஜாலியான பேர்வழி அவன் இத்தனைக்கும் அந்த ஹாஸ்பிடலின் மொத்தப் பொறுப்பும் ஜோசப் இடம் தான் உள்ளது அதாவது அந்த மருத்துவமனையின் டீன் என்று கூட சொல்லலாம் அவனின் வயது வெறும் 35 தான் ஆனால் பார்ப்பதற்கு வயது தெரியாது மிகவும் இளமையானவனாக தான் இருப்பான் அதற்காக உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை வலிமையாக வைத்துள்ளான் என்று கூறினாலோ அல்லது நினைத்தானோ அது தவறு அவனுக்கு முதலில் ஒழுங்காக தூங்கி எழுவதற்கோ சரியாக சாப்பிடுவதற்கோ கூட நேரம் இருக்காது அப்படியே இருந்தாலும் அவன் உடற்பயிற்சி எல்லாம் செய்ய மாட்டான் ஏன் வீட்டில் ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டான் அவன் வேலைகளைக்கூட வேறு ஒருவர் தான் செய்து தர வேண்டியிருக்கும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் அவன் ஒரு சோம்பேறி ஆனால் அதே நேரத்தில் தொழில் பக்தி மிகவும் உள்ளவன் ஆதலால் தான் இந்த மருத்துவத் தொழிலில் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளான் அதுமட்டுமின்றி அவனின் சோம்பேறித்தனம் எல்லாம் அவன் வீட்டுக்குள் மட்டும் தான் வெளியிடங்களில் மற்றவருக்கு உதவி செய்வதில் இவனுக்கு வல்லவன் இவனே.



மேரி இவளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவளும் அந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் தான் ஆனால் ஜோசப் மற்றும் அவள் மகன் கிறிஸ்டோபர் தவிர மற்றவர்களிடம் மிகவும் அன்பாக அதே நேரத்தில் அமைதியாகவும் பழகக்கூடியவள் ஜோசப் மற்றும் அவள் மகனிடம் மட்டும் கொஞ்சம் காரசாரமாக நடந்து கொள்வாள் அப்படி நடக்கவில்லை எனில் இருவரும் அவளை தூக்கி சாப்பிட்டு விடுவர் அதோடு இவளின் முகத்திற்கு மட்டுமே இருவரும் அடங்குவர் அதிலும் ஜோசப் சில நேரம் மேலே செய்தது போல் ஏதாவது செய்து அவளிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வான் ஆனாலும் ஒரு சில நேரங்களில் மேரி ஜோசஃபின் இந்த அலட்டல்களை மனதிற்குள் ரசித்ததுண்டு ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள் காரணம் ஜோசஃபின் அடாவடி அதிகமாகிவிடும் என்று தான் ஆனால் இருவரும் அப்படி ஒரு அன்னியோனமான தம்பதிகள்தான் அதுவும் இந்த வயதில் இத்தனைக்கும் இவர்கள் இருவருக்கும் மரியம் தான் அதாவது ஜோசபின் தாய் தான் திருமணம் செய்து வைத்தார் மேரி ஓர் அனாதை ஸ்காலர்ஷிப்பில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவள் ஜோசபின் தாய் மரியம் இளம் விதவை அதாவது ஜோசபின் தந்தை மடா குடிகாரன் குடித்து குடித்தே திருமணமான மூன்றாவது வருடத்தில் இறந்து விட்டான் அதன்பின் மரியம் தான் கூலி வேலைக்கு சென்று ஜோசஃபை நன்றாக படிக்க வைத்தார் ஜோசஃபும் அந்த சிறு வயதிலேயே தாயின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நன்றாக படித்து ஸ்காலர்ஷிப் மூலமாக டாக்டர் பட்டம் பெற்ற ஹாஸ்பிட்டலில் வேலை பார்த்துக்கொண்டே மேலே படித்து இந்நிலைக்கு வந்தான் ஒருநிலைக்கு வந்து சிறிது காலம் இருக்காது மரியம் மேரியை கூட்டி வந்து இவள் தான் உன் வாழ்க்கை துணை என்று கூறிய போது மறு பேச்சு பேசாது அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் அவளை மேலும் படிக்க வைத்து நன்றாக பார்த்துக் கொண்டான்.

மரியம் அவரும் மிகவும் நல்லவர் என்று தான் கூற வேண்டும் பின் ஒரு அனாதையை அதுவும் தன் மகனுக்கு நிகராகபடித்தவளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் அவருக்கு எவ்வளவு பெரிய மனது இருக்க வேண்டும் அதோடு மட்டுமன்றி அநாமிகா அனாதரவாக வயிற்றில் குழந்தையோடு வந்து நின்று திக்குத் தெரியாத காட்டில் திருதிருவென குழந்தை போல் முழித்த அவளை தீயவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்து வந்ததோடு அல்லாமல் தான் யார் என்றே அவளுக்கே தெரியாது என்று கூறியபோது அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மகளாக பாவித்து அவளுக்கு எல்லாம் செய்தவர் அவளுக்கு இருப்பிடமும் கொடுத்து அவளின் பிரசவத்திற்கும் துணையாக இருந்து ஒரு தாயாய் அவளை நன்றாக பார்த்துக் கொண்டார் அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர் அவர்.

மதர் லூயிஸ் அங்குள்ள சர்சில் பாதிரியாராக மட்டுமின்றி அந்தசர்ச் டிரஸ்ட்டின் மூலியமாக நடத்தப்படும் அனாதை இல்லத்தை பொறுப்பேற்று நடத்துபவர்(மேரி வளர்ந்த அனாதை இல்லமும் அதுவே ஆகும்).



ஆன் இன்னொரு முக்கிய ஒருவரைப் பற்றி சொல்ல மறந்துட்டேன் அது ஜோசப் மேரியின் மகன் கிறிஸ்டோபர் ராஜ்.

ரகுவுக்கு அதாவது மாதவ் கிருஷ்ணாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பன் பார்ப்பதற்கு அமைதியானவன் ஆக தெரியும் ஆனால் இவன் தந்தையைப் போல் தான் ஆனால் மாதவ் அளவிற்கு குறும்புக்காரன் இல்லை அதே நேரத்தில் மாதவ் செய்யும் குறும்புத்தனங்கள் கூட இருந்து ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் அவன் சொல்வதை அச்சுப் பிசகாமல் செய்பவனும் இவன் தான்.

இத்தனைக்கும் இவன் மாதவை விட இரண்டு வயது பெரியவன் அதாவது மாதவிற்கு மூன்றரை வயது தான் ஆனால் கிறிஸ்டோபர்ற்கு ஐந்து அரை வயது ஆகிறது அதோடு மாதவை தன் குழந்தையாக பாவித்து அவனை தன் சிறகுக்குள் அடை காப்பது போல் மற்றவரிடமிருந்து காப்பாற்றுபவன் அண்ணன் நண்பன் ஸ்கூலில் ஒரு சில சமயம் மாதாவிற்கு தாயாக கூட நடந்து கொள்பவன்.

சரி இனி அநாமிகா என்ன செய்கிறாள் என்று பார்ப்போமா



அநாமிகா அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து மிக வேகமாகவும் பரபரப்பாகவும் கிளம்பிக்கொண்டிருந்தாள் பின் பரபரப்பாக கிளம்பாமல் என்ன செய்வாள் அவள் மகனை பள்ளியில் கொண்டு விட்டு வந்து முழுதாக இரண்டு மணி நேரம் கூட ஆகவில்லை அவள் மகன் செய்து வைத்திருக்கும் காரியத்தால் அவள் வேலையில் இருந்த போது அவள் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது அதாவது அவளுடைய மகன் மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் என்று அவன் பள்ளியில் இருந்து அழைத்திருந்தார்கள்.



ஆனால் அவளுக்கு தெரியும் அவள் மகன் விழுந்திருந்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது ஆனால் வேறு யாருக்காவது அவனால் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று சரியாக கணித்து விட்டாள் ஏனென்றால் அவள் மகன் தான் பெரிய குறும்புக்காரன் ஆயிற்றே அவன் செய்யும் குரங்கு வித்தைகளும் கோமாளித்தனங்களும் மற்றவர்கள் தங்களை மறந்து ரசிக்கும்படி இருந்தாலும் அது கண்டிப்பாக யாராவது ஒருவருக்கு பிரச்சனை கொடுப்பதாகவே முடியும் அதுவும் அப்படி ஒருவருக்கு அது பிரச்சினை கொடுத்தது என்றால் அந்நபர் இவர்களுக்கு அதாவது தாய்க்கோ அல்லது மகனுக்கோ ஏதாவது பிரச்சினை கண்டிப்பாக கொடுத்திருப்பர் அதற்கு பதிலடி தான் அவள் மகன் செய்யும் காரியம்.



அவள் வந்த வேகத்திற்கு பள்ளியை வந்து அடைந்திருந்தாள் . பள்ளியை வந்து அடைந்ததும் அவள் கண்டது அவள் மகனை பிடிக்க அந்தப் பள்ளியில் உள்ள எல்லோரும் அவனின் எல்லா பக்கமாகும் ஓடிக்கொண்டிருக்க அவனும் நான் யார் கைகளுக்கும் பிடி பட மாட்டேன் என்று வளைந்து நெளிந்து அப்படியே பிடிபட்டாலும் மெதுவாக நழுவியோ இல்லை அவர்களைப் பார்த்து சிரித்தோ இல்லை அவர்களிடம் மயக்கும்படியாக பேசியோ யாரிடமும் சிக்காமல் தலையில் கட்டுடன் ஓடிக்கொண்டிருந்தான் மாதவ் கிருஷ்ண ரகு------- அவனைப் பிடிக்க வந்தவர்களில் சிலருக்கு கைகளிலும் கால்களிலும் கட்டு இருந்தது..



இதைக் கண்டு திகைத்து நின்றிருந்தால் அநாமிகா

அவள் திகைத்து நின்றதற்கான காரணம் மாதவின் தலையில் இருந்த கட்டோ இல்லை மற்றவர்கள் அவனைத் துரத்தியதோ இல்லை அவள் திகைத்து நின்றதற்கான காரணம் கிறிஸ்டோபரின் தலையிலும் கையிலும் இருந்த கட்டு தான் அப்போது தான் கிறிஸ்டோபருக்கும்(இனி ராஜ்) அடிபட்டது தெரிந்து வந்திருந்த மரியம் அநாமிகாவை பார்த்து விட்டு அவளிடம் வந்து அவள் தோளைத் தொட்டார் யாரோ தன் தோளைத் தொடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள் அங்கு மரியம் நிற்பதைக் கண்டு ஒன்றும் கூறாமல் திரும்பி மாதாவின் முன் சென்ற நின்றாள் தன் முன்னே தன் தாயை கண்டவுடன் அதுவரை ஓடிக்கொண்டிருந்த மாதம் அவளைக் கண்டவுடன் திருட்டு முழி முழித்து சுற்றும் முற்றும் பார்த்தான் அவன் முழிப்பதை கண்டு மற்றவர் எல்லோரும் அவனின் அந்த கண் உருட்டலில் ஒரு நிமிடம் மயங்கி நின்றனர் என்று கூறினால் மிகையாகாது.





சிறிது நேரம் கழித்து எல்லா நடைமுறையையும் முடித்துக் கொண்டு எல்லோரும் வீட்டுக்கு வந்தனர் வீட்டிற்கு வந்தவுடன் மரியம் ராஜை தூக்கிக்கொண்டு பொய் படுக்கையில் விடச் சென்றார் அந்த நேரத்தில் அநாமிகா மாதவை போட்டு அடி பின்னி எடுத்து விட்டாள் ஆனால் மாதவோ அவள் அடித்த அந்த அடிக்கு எந்த ஒரு எதிர்ப்போ சத்தமுமின்றி அமைதியாக அமர்ந்திருந்தான்.



அப்போது தான் தங்கள் மகனுக்கும் அடிபட்டிருப்பது தெரிந்து வந்திருந்த மேரி-ஜோசப் தம்பதி அநாமிகா மாதவை போட்டு அடிப்பதை பார்த்து விட்டு இருவரும் ஒடி வந்து ஜோசப் அநாவிடம் இருந்து மாதவை பிரிக்க மேரி அநாவின் கைகளை பிடித்து அவளை தள்ளி இழுத்து சென்றாள்



பின் மேரி அநாவை அமர வைத்து தண்ணீர் பருக வைத்துவிட்டு



"என்ன அநா ஏன் இப்படி பண்ற எதுக்காக கிருஷ் போட்டு இந்த அடி அடிக்கிறே"



"பின்ன என்ன மேரி அக்கா அவன் செய்து வைத்திருக்கும் வேலையால் ராஜ்ற்க்கு எப்படி அடி பட்டிருக்கு தெரியும்மா அதுமட்டுமல்லாமல் இவனோட குறும்புத்தனமும் சேட்டையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கு இன்னிக்கு எதுக்காக இப்படி செய்தான் கேளுங்க அக்கா".





"அநிமா இன்னிக்கு நடந்ததில் கிருஷ்ணா மேலே எந்த தப்பும் இல்லை அந்த கிரண் அம்மா இல்ல அவங்க தான் கிருஷ் கிட்ட கிருஷ்க்கு அவனோட அப்பா இல்லாததுனால அவன் கூட சேரக்கூடாதுனும் உங்கள பத்தி நீங்க தப்பா ஆனவங்க அப்படின்னும் கிரணோட அம்மா ஒரு மாதிரி நேத்து பேசினாங்க அத பாத்து மத்த பசங்க எல்லாம் எப்படி சிரிச்சாங்க தெரியுமா இத அவன் என்கிட்ட சொன்னவுடனே நான் தான் இன்னைக்கு அவங்கள ஏதாவது பண்ணனும் அப்படின்னு ஸ்கூலுக்கு போனவுடனே ஒரு மரத்து மேலே ஏறி அதிலிருந்து கிரண் அம்மா வரும் போது வரும்போது அவங்க மேல பெரிய கல்லு எறிய சொன்னேன் அவனும் எறிஞ்சான் அப்படி எரியும் போது அவன் கால் தடுக்கி கீழே விழப்போனான் அவன் கீழே விழுந்தத பார்த்து நான் பிடிக்கப் போகும் போது எனக்கும் அடிபட்டிச்சு இதில்ல கிருஷ்ணா மேலே என்ன தப்பு அவங்கப்பா இல்லாதது அவன் பண்ண தப்பா சொல்லுங்க அநிமா கிரணோட அம்மா நேத்திக்கு எவ்வளவு தப்பா எவ்வளவு கடுமையா பேசினாங்க தெரியுமா"-ராஜ்



இதைக் கேட்டவுடன் மேரியும் ஜோசப்பும் மரியமும் அநாமிகாவை கேள்வியாகவும் குற்றம் சாட்டும் பார்வையுடனும் பரிதாபத்துடனும் பார்த்தனர்



அவர்களின் பார்வையை தாங்கிக்கொள்ள முடியாத அனாமிகா ஓடிச்சென்று ஒரு ரூமினுள் அடைந்து கொண்டாள்



ரூமினுள் இருந்த அநாமிகாவிற்க்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை அவளால் தன் மகனின் தந்தையைப் பற்றி ஒன்றும் கூற இயலாது ஏனென்றால் இப்படி ஒரு மகன் உருவானதே அவன் தந்தைக்கு தெரியாது அதாவது மாதவ் அவன் தந்தை சுய நினைவோடு இருக்கும் போது உருவானவன் அல்ல இதை எப்படி மாதவிடம் அவளால் கூறமுடியும் அதோடு அவளுக்கு தான் யார் என்றே இன்னும் தெரியாத புரியாத நிலையில்தான் எப்படிப்பட்ட நிலையில் இந்த ஊருக்கு வந்தோம் இப்போது என் நிலையில் இருக்கிறோம் என்பதையும் நினைத்துப் பார்க்கும்போது அவளால் கண்ணீர் விடுவதை தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

------------------------------------------------------------------------------------





இதே நேரத்தில் மும்பையில் ரிஷி ஒரு பக்கம் அனுவைத் தேடிக் கொண்டிருக்க மறுபக்கம் வில்லன்களும் அனு தங்கள் கைக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும் என்று மும்மரமாக அவளை எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருந்தனர்.











வசந்தம் பூக்கும்................................................................
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai naan vandutten:) sorry friends and sisters ud perussa kodukaren sollirunthen but kodukka midiyalla manichukonga pa please konjam busy padipaiyum konjam paakanum illaiya freinds
aan aapparam unnga ellarukum oru information aadhavathu eni sunday sunday correct tta ud vathurum aadhu peruso chinnatho okay :smile1: but nallaikku ud iruikkathu next sundat aathavathu 24th march lla irunthu condippa sunday sunday ennalla mudicgha varai one illa rendu ud tharen
 
Last edited:

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசந்தம்-5


2019ஆம்ஆண்டு


இடம் --- கன்னியாகுமரி


அநு தன்னுடைய கடந்த காலத்தில் நடந்தவற்றை நியாபகபடுத்த முயன்று பார்த்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு இரண்டு காட்சிகள் தெளிவு இல்லாமல் மங்கலாக தெரிந்தன



ஒன்று ஒரு நடுத்தர வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஒரு நடுத்தர வயது பெண்மணி தன்னை தூக்கத்திலிருந்து எழுப்ப முயற்சிப்பது போல தோன்றியது



மற்றொன்று ஒரு பெரிய பங்களாவில் தன்னை துரத்திக்கொண்டு இருவர் ஓடி வருவது போலவும் தான் அவர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக ஓடுவது போலவும் என ஒர் வடிவம் இல்லாத இரண்டு மூன்று காட்சிகள் அவள் கண்முன் மாறி மாறி வந்தன அது அவளுக்கு பெரும் தலைவலியை கொடுத்ததோடு பயத்தையும் கொடுத்தது



இந்த பயத்தால் தன் காதுகளில் கைகளை வைத்துக் கொண்டு சுருண்டு அமர்ந்திருந்த அவளை ஒரு பிஞ்சு கைகளின் ஸ்பரிசம் அவள் நினைவுகளில் இருந்து மீட்டு எடுத்தது



அங்கு அவள் மகன் மது அவளின் முகத்தை பாவமாக பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அவனை கண்டவுடன் அவனை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு

"மது கண்ணா ஐயம் சாரிடா என்ன மன்னிச்சிடு இந்த அம்மாவ மன்னிச்சிடு மது சாரி கண்ணா" என்று அழுதாள்

அதற்கு அவள் மகன் அநுவின் கண்ணீரை துடைத்துக் கொண்டே "அம்மா நீயீ அளாத நான் இனி ஒங்கா இக்கேன் இமேல் யார்கிட்யும் சண்டக்கு போ மாடேன் "என்று மழலையில் கூறினான்



இங்கு இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு மும்பையில் அனு மும்முரமாக எல்லா இடங்களிலும் தேடப்பட்டு கொண்டிருந்தாள்

----------------------------------------------------------------------------------------------------------------------------



2019ஆம்ஆண்டு


இடம்----மும்பை


ரிஷியின் இல்லம்


அந்த பெரிய சோஃபாவில் அமர்ந்து ரிஷி அலுவலக கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான்



அப்போது தன் பக்கத்தில் ஏதோ நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான் அங்கு சித்தார்த்தும் அவன் மனைவி சாராவும் நின்று கொண்டிருந்தனர்



சித்தார்த் இவன் மும்பையின் டெபுடி கமிஷனர் ஆக சிறுவயதிலேயே பணியமர்த்தப்பட்டவன் அதற்குக் காரணம் இவனின் திறமை என்று கூறினாள் மிகையாகாது இவனும் ரிஷியின் நெருக்கத்துக்கு உரியவனே

சாரா இவள் மகப்பேறு மருத்துவராக வர்மா ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது



"ஏன் ரிஷி இப்படி இருக்க நிஜமான ரிஷிகயாவே மாறிட்டாயா"-சாரா

சாரா இப்படி கேட்பதற்கு காரணம் இருக்கிறது அதாவது கம்பீரமாக எப்பவும் சிரிப்புடனும் அதனால் கன்னத்தில் ஏற்படும்குழி யுடனும் இருக்கும் ரிஷி இன்றுகண்களில் ஜீவன் இன்றியும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டும் கன்னங்களில் தாடியுடனும் இருந்தால் என்ன செய்வது அவன் இவ்வாறு இருப்பதற்கு காரணம் அனு தொலைந்த்தால் என்று அனைவரும் நினைத்திருந்தனர் ஆனால் அதற்கு காரணம் அவன் அனு மேலே அவன் வைத்திருந்த காதலை உணர்ந்த்தால் தன்னையே வெறுக்கிறான் என்று தெரிந்தால்?



"ரிஷி அனு எங்க இருக்கா அப்படின்னு கண்டுபுடிச்சிடலாம் ஆனா நீ கொஞ்சம் உன்ன மாத்திக்கணும்".

"அனுவுக்கும் ஹரிஷுக்கும் எப்படி ஆக்சிடன்ட் ஆச்சு அப்படின்னு விசாரித்துக் கொண்டு தான் இருக்கேன் அது முன்னாடியே பிளான் பண்ணப்பட்ட ஆக்சிடென்ட் தான் அப்படின்னு நிறுபனம் ஆயிடுச்சு ஆனால் எதுக்காக அப்படிங்கறது தான் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை அதையும் சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம்"-சித்

"அதே மாதிரி அணுவையும் கண்டுபிடித்து விடலாம் நீ அதுக்காக இப்படி உன்னையே வருத்திக்காதே"-சித்

ரிஷியின் நிலையைக் கண்டு இவர்கள் வருந்திக் கொண்டிருக்க இவர்களின் வருத்தத்தையும் ரிஷியின் நிலையையும் நினைத்து வேறு ஒரு இடத்தில் இருந்த நான்கு ஜோடி கண்களில் ஆனந்தம் குடி புகுந்தது என்றால் ஒரு ஜோடி கண்கள் மட்டும் இது போதாது இன்னும் அனுபவிக்க வேண்டியது உள்ளது என்று குறிப்பு காட்டியது



அதோடு ரிஷியை இன்னும் ஒன்றுமில்லாமல் வீழ்த்துவதற்கு அடுத்த சதித் திட்டத்தையும் உருவாக்கியது

அதன் எதிரொலி ராமின் தொலைபேசியாக ஒலித்தது



அதாவது மும்பையில் உள்ள வர்மா டெக்ஸ்டைல் ஷோரூம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது அதில் இருபத்திஐந்து பேர் அவ்விடத்திலேயே இறந்துவிட்டனர் என்றும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர்களுக்கு மேல் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர் என்றும் அவற்றில். பதினைந்து பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராமின் தொலைபேசி வாயிலாக தகவல் வந்து சேர்ந்தது இதை கேட்ட ராம் உடனே டிவியை ஆன் செய்து விட்டான் அதில் வந்த ஸ்க்ரோலை கண்டவுடன் ரிஷி ராம் சித் மூவரும் அந்த ஷோரூமை நோக்கி விரைந்தனர்



அங்கு அவர்கள் சென்றவுடன் அவ்வளவு நேரம் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்ள அந்த ஷோரூம். மனேஜரை உளுக்கிக். கொண்டிருந்த பத்திரிக்கைகள். ரிஷியை கண்டவுடன் அவனை சூழ்ந்து கொண்டு சகட்டு மேனிக்கு கேள்விகளை கேட்க தொடங்கியது



ரிஷியிடம் சார் இந்த தீ விபத்து நீங்க ஸேக்யூரிட்டி மேஷர்ஸ் சரிய பின்பற்றாததுனால தான் அப்படின்னு சொல்லராங்களே அப்படியா என்று ஒரு நிருபர் கேட்டு முடிக்கவில்லை அதற்குள் மற்றொருவர் சார் போன வருஷம் சென்னை சில்ஸ்ல நடந்த மாதிரி பணத்துக்காக தான் இந்த தீ விபத்து அப்படின்னும் இதை நீங்க தான் பண்ணினீங்க. அப்படின்னும் பேசிக்கறாங்க நீங்க என்ன சொல்றீங்க சார்

அதற்கு ரிஷி கேள்வி கேட்ட அந்த இரண்டு நீருபர்களையும் ஒரு நிமிடம் நிமிர்ந்து அவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் ரிஷி தங்களை நிமிர்ந்து பாத்த உடனேயே தங்கள் தலையை குனிந்து கொண்டனர்



பின் ரிஷி யாருடைய கேள்விக்கும் எந்தவித பதிலும் சொல்லாமல் அங்கிருந்து அகன்றான்





இதிலிருந்து ரிஷி எப்படி மீள்கிறான் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்









வசந்தம்பூக்கும்…………………………………
 
Top