Hai வாணி !
முதலில் இந்த கதை களத்தை தேர்ந்தேடுத்ததுர்க்கு hats off வாணி ....
இதை இரண்டு கதையாவே பிரிக்கலாம் , அஷு- மீனு , ரிஷி -வர்ஷு
அஷு மீனு இவர்கள் கதை ,பிரச்சனைகள் எல்லாம் சாதாரண எள்ளோரும் எழுதும் கதை தான் அதை குறை சொல்ல ஒன்றும் இல்லை, பட் ரிஷி வர்ஷு களம் மிகவும் ரிஸ்க்... படைப்பாளியாய் நீ மிக பெரிய வெற்றி பெற்று உள்ளாய் மா , ரிஷி , ஆதி ,மித்து போன்றோர்கள் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள், ரிஷி பாத்திர படைப்பு வெகு அற்புதம் , வர்ஷு, அவளே அவளை பற்றி யோசிக்கும் முன்னே அவள் சிந்தனையும் சேர்த்து யோசித்து தேவையானதை முடிக்கும் அற்புதமான மனிதன் , ...திருநங்கைகளின் உணர்வுகள் , வலி துல்லியமாக நீ விளக்கி இருந்தாலும் இந்த சமுதாயத்தில் அவர்களை ஏற்று கொள்ள நெறய மன பக்கவம் வேண்டும் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் , மன்னிக்க வேண்டும் இப்படி சொல்ல, எனக்கு பொய் சொல்ல முடியல, வாவ்,சூப்பர் ,செம்ம அப்படினு வாய் வார்த்தையாக சொல்லலாம் தான், பட் படிக்கும் பொது எனக்கு மைண்ட்ல தோணினத உண்மையா சொல்லணும் னு நெனச்சேன் ,கதை படிக்கும் போது சித்தாராவின் மன நிலை தான் எனக்கும் ஒரு மகனின் அம்மாவாக என்னை தராசில் நிறுத்தும் போது சுயநலமாக , சராசரி மனிதனின் உணர்வு தான் எனக்கும்...ஆனால் உண்மையில் அவர்களை நான் எப்பொதும் கேலி பேசியோ, தாழ்ந்தோ பார்த்தது ,இல்லை இறைவனின் எந்த படைப்பும் தவறு கிடையாது, மக்களாகிய நாம் தான் மாறவேண்டும், கண்டிப்பாக காலம் மாறும் ,நிச்சயம் நம்போவோமாக ...
கதையையே நேற்றே படித்து விட்டேன், நேற்றே விமர்சனம் சொல்லலாமா இல்லை வெறும் சூப்பர்னு சொல்லி முடிச்சுடலாமானு யோசிச்சு து இருந்தேன் , பட் இது சாதாரண கதை கிடையாது, இதை எழுதும் பொது எவவ்ளவு விமர்சனங்கள் உனக்கு வந்து இருக்கும், பட் அதை எல்லாம் தாண்டி நீ எழுதி இருக்கிறாய் என்றால் உனக்கு இதில் எவ்வளவு உறுதி , confident இருக்க வேண்டும் ,அதை ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்ய கூடாது , ரொம்ப பாராட்டுக்கள் செல்லம் ...உன் எழுத்து பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் , அடுத்த கதைக்கு அட்வான்ஸ் ஆல் தி பெஸ்ட் , and also அட்வான்ஸ் பொங்கல் wishes மா
take care