All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸகியின் 'காதல்போதையடா நீ எனக்கு..' கதை திரி

Status
Not open for further replies.

Jadejavid

Writer'ZAKI'
ei6AI5550765.jpg

தோழமைகளே! உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதையுடைய இரண்டாம் பாகமே இந்த கதை. அமேசன் கிண்டலில் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

என்னை தீண்டாதே என் ஜீவனே

USA Link👇👇

INDIA Link👇👇

இரண்டு கதைகளும் வேறு வேறு கோணத்தில் தான் பயணிக்கும். இருந்தாலும், சில கதாபாத்திரங்கள் தொடர்பான தெளிவை பெற முதல் பாகத்தை படித்துவிட்டு இதை படிப்பது சிறந்தது.

'VILLAIN KID VS HERO KID' போன்றே கதையின் கரு அமைந்திருக்கிறது.
அவனின் முரட்டுத்தனமான காதல், இவளின் ஆழமான காதல் என காதலுக்கும் காதலுக்கும் இடையிலான போர் நம்மை வியக்க வைக்கும்.

இரு துருவங்களுக்கிடையேயான காதல், மோதல், நட்பு, உறவு, நகைச்சுவை, த்ரில்லர், காமம், ரொமேன்ஸ், பிரிவு, வலி என எல்லாமே கலந்த பல திருப்பங்களுடன் கூடிய காரசாரமான த்ரில்லர் காதல் நாவலே இது.

கதை தொடர்பாக உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை மறவாது வழங்குங்கள் நட்பூஸ்😍
 

Jadejavid

Writer'ZAKI'
காதல்போதையடா நீ எனக்கு கதையிற்கான ஒரு சிறிய முன்னோட்டத்தை பதிந்துவிட்டேன்👇👇

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் மாயாவோ அதிர்ச்சியாகி அலைஸ்ஸை பார்க்க, அவளும் யோசனையாக அந்த செய்தியை தான் பார்த்திருந்தாள். அதில் நேற்றிரவு சர்வேந்திரன் சிறையிலிருந்து தப்பித்ததாக செய்தி ஒளிபரப்பாக, இருவருக்குள் அதிர்ச்சியோடு சேர்த்து ஒருவித பதட்டமும் தொற்றிக் கொண்டது.

"அலைஸ், அவன் எப்படி தப்பிச்சான்? உங்க டிபார்ட்மென்ட் செக்யூரிட்டி என்ன அவ்வளவு வீக்கா? ஷீட்! " என்று மாயா கத்த, "ச்சே! அவன் அவ்வளவு ஈஸியா தப்பிக்க வாய்ப்பில்லை மாயூ. டிபார்ட்மென்ட்ல ஒருத்தரோடு ஹெல்ப் கூட இல்லாம அவனால தப்பிக்க முடியாது. ஆனா, யாரு...?" என்று தலையை பிடித்துக் கொண்டாள் அலைஸ்.

இங்கு ரோஹனின் அறையிலும் அதே அதிர்ச்சி தான்.

"ரோக்கி, கண்டிப்பா அவன் பேபிய தேடி தான் வருவான். மாயாவோட சேஃப்டி ரொம்ப முக்கியம். அதுவும், அவன் தப்பிக்கிற அளவுக்கு அவ்வளவு க்யார்லெஸ் ஆ இருந்திருக்காங்க இந்த இட்டாலியன் போலிஸ், ச்சே..." என்று பாபி கத்த, ரோஹனோ அதையெல்லாம் கண்டுக்காது கண்ணாடியின் முன் தான் தயாராகுவதில் மும்முரமாக இருந்தான்.

"என் பிரச்சினை போயிக்கிட்டு இருக்கு? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க ரோக்கி?" என்று பாபி கடுப்படிக்க, "இதெல்லாம் பார்த்தா என் கல்யாணம் தான் நடக்குமா? நான் குடும்பம் தான் நடத்த முடியுமா? குழந்தை குட்டிங்க பெத்து சந்தோஷமா தான் வாழ முடியுமா? லீவ் இட் தருணு" என்று ரோஹன் அசால்ட்டாக சொன்னாலும், அவனின் குட்டி மூளையில் உழன்றுக் கொண்டிருக்கும் பல யோசனைகள் அவனுக்கு மட்டுமே தெரியும்.

-ZAKI💙
 

Jadejavid

Writer'ZAKI'
ஹாய் நட்பூஸ்👋

என்னுடைய முதல் இரண்டு கதைகளை அமேசன் கிண்டலில் ஃப்ரீ கொடுத்திருக்கேன். April 10 to 12 தொடர்ந்து மூன்று நாட்கள் ஃப்ரீ இருக்கும்..

உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி👇👇

என்னை தீண்டாதே என் ஜீவனே👇👇

படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்களை மறவாது அமேஸன் ரிவியூவில் வழங்குங்கள்.

give ur support நட்பூஸ்😍

-ஷேஹா ஸகி
 

Jadejavid

Writer'ZAKI'
அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு சிறிய முன்னோட்டம்👇👇


"ஆஹான்! அப்போ உங்க ப்ரொடெக்ட்க்கு யூஸ் பண்ற சில மூலப்பொருள் எப்படி ஸ்வீட்ஹார்ட் மக்களுக்கு நல்லதா இருக்கும். இந்த மாதிரி தப்பான மூலப்பொரூளால உருவாக்கப்பட்டு விஷமா இருக்குற சில கோஸ்மெடிக் ப்ரோடெக்ட் ஆல அதை யூஸ் பண்றவங்களுக்கு ஸ்கின் ப்ரோப்ளம் கூட வரலாம். அப்போ அதுக்கு பேர் துரோகம் தானே?" என்று சர்வேந்திரன் கேட்டதில், மாயா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். இந்த மாதிரியான வார்த்தைகளை அவரிடமிருந்து அவள் எதிர்ப்பார்க்கவேயில்லை என்பது அவளுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாக காட்டியது.


பின் தன்னை சுதாகரித்தவள், "நல்லா தான் பேசுற, ஆனா, இதுவே நீ என் அம்மாவோட மனசு விட்டு பேசியிருந்தா, நட்புக்காக அவங்க உன் பேருல கம்பனிய விட்டுத் தந்திருப்பாங்களோ, என்னவோ?" என்று அழுத்தமாக சொல்ல, "யாருக்குடி வேணும் உங்க பிச்சை? எனக்கு வேணுங்கிறதை நானே எடுத்துப்பேன். அது முடியலன்னா அதை அழிக்க கூட தயங்க மாட்டேன்" என்று கூறிய சர்வேந்திரன் துப்பாக்கியை அவளை நோக்கி நீட்டி விஷமமாக சிரித்தவாறு ட்ரிகரை அழுத்த போனார்.


அடுத்தநொடி, வீசப்பட்டு வந்த கட்டையொன்று அவர் கையில் விழ, வலியில் அலறியவாறு சர்வேந்திரன் துப்பாக்கியை நழுவ விட்டார். கட்டை வந்த திசையை நோக்கிய மாயாவின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.


அடுத்த கொஞ்ச நேரத்தில், அந்த இடத்துக்கு வந்த ரோஹன், காரை நிறுத்தியதும் காரிலிருந்து பாய்ந்து இறங்கி, தன்னவளை தேடி அந்த குடோனுக்குள் ஓட, பாபியும் அவன் பின்னாலே ஓடினான்.


ரோஹன் அந்த குடோனுக்குள் நுழையும் முன்னே தன் முன் வந்து நின்றவனை பார்த்த ரோஹனின் விழிகள் யோசனையில் சுருங்கி பின் அதிர்ச்சியில் விரிய, அவன் இதழ்களோ, "நீங்களா...?" என்று அதிர்ந்து போய் கேட்டன.


-ZAKI💙
 
Status
Not open for further replies.
Top