All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸகியின் "உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Jadejavid

Writer'ZAKI'
Hii friends.. எனது பெயர் Sheha Zakiya. நான் இந்த தளத்திற்கு புதிய எழுத்தாளர். என்னை பற்றி கூறுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை.. நாவல்கள் வாசிப்பது பாடல்கள் கேட்பது மிகவும் பிடித்த விஷயங்கள்

நானும் இதற்கு முன்னால் ஒரு வாசகராக இருந்தவள் தான்.. தற்போது நாவல் எழுத முயற்சி செய்திருக்கிறேன்.

❤❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤❤

இதுவே என் கதையின் தலைப்பு. சுவாரஸ்யமான பலவித திருப்பங்களுடன் கூடிய காதல் கதை. என்னுடைய முதல் முயற்சி .. நாளையிலிருந்து இக்கதையின் முதல் அத்தியாயம் பதிப்பிக்கப்படும். இக்கதை உங்கள் மனதை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்..
பல எழுத்தாளர்களுக்கு உங்களது கருத்துகளையும் அன்பையும் வழங்கி ஊக்குவித்தது போன்று புதிய எழுத்தாளராகிய எனக்கும் உங்கள் கருத்துகளையும் அன்பையும் வழங்கி ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளும்,

உங்கள் வீட்டு பிள்ளை😍
❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
IMG_20200724_095221.jpg

❤அத்தியாயம் 01❤

மும்பையில்,

சூரியக்கதிர்களை தன்னுள் ஈர்த்து பூமிக்கு தனது ஒளியை வாரி வழங்கிக்கொண்டிருந்தது பௌர்ணமி நிலா.. அந்நிலாவுக்கே சவால் விடுவது போல் அந்தச் சிட்டியின் மத்தியில் அமைந்துள்ள அந்த பிரம்மாண்ட விழா மண்டபம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

பல வண்ண விளக்குகளும் கண்ணை மயக்கக்கூடிய அலங்கரிப்புகளும் மண்டபத்தின் அழகை மெருகூட்டிக்காட்ட, பல விலையுயர்ந்த வாகனங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, நாங்கள் 21ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்கள் யுவதிகள் நவநாகரீக ஆடைகளையும் விலையுயர்ந்த அணிகலன்களையும் அணிந்து மண்டபத்தினுள் நுழைய, கருப்பு ஆடை அணிந்த பாதுகாவலர்கள் அவர்களை கவனித்து உள்ளே அனுமதித்தனர்.

இன்று அந்த விழா மண்டபத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெகதீஸ் அரோராவால் கொடுக்கப்பட்ட பார்ட்டிக்கான ஏற்பாடே நடைபெறுகிறது. மண்டபத்தினுள் கையில் மதுபான குவளைகளுடன் சிலர் கூடியிருந்து பேசிக் கொண்டிருக்க, நடனக்கலைஞர்கள் தமது நடனத்தை அரங்கேற்ற காத்துக்கொண்டிருக்க, மதுபான போத்தல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தன் முன்னால் நின்றுக் கொண்டிருந்தவர்களை கனல் கக்கும் பார்வை கொண்டு எரித்துக்கொண்டிருந்தான் அவன்..

அவன் தான் நம் கதையின் நாயகன் ஆர்யன் சக்கரவர்த்தி.. வெள்ளை ஷர்ட்டுக்கு ஏதுவாக கருப்பு நிற கோர்ட் மற்றும் பேன்ட் அணிந்து, தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்பதை எடுத்தாக்கட்டக்கூடிய முறுக்கேறிய கட்டுக்கோப்பான உடலமைப்பு, அந்த உடை அவனுக்கு மிகச்சிறப்பாக பொருந்தியிருக்க,

அலைஅலையான அடர்த்தியான கேசம், கூர்நேசி, அழுத்தமான சற்று சிவந்த உதடுகள், நிறம் மாநிறம் தான் பெண்களை மட்டுமன்றி ஆண்களை கூட ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு ஒருவித வசீகரத் தோற்றத்தில் இருந்தான்.

பெண்கள் ஆண்களிடத்தில் அழகு என எதிர்பார்க்கும் அளவான மீசை கச்சிதமா டிரிம் செய்யப்பட்ட தாடி, தடித்த ஒட்டிய புருவங்கள் அதற்கு கீழ் முன்னால் உள்ளவர்களை தன் பார்வையாலயே அளவிடக்கூடிய அந்த ஆறடி ஆண்மகனின் காந்தக் கண்கள் இன்று ஏதோ தன் முன்னால் நிற்கும் தன் நணபர்களால் சற்று சிவந்திருந்தது.

ஆதித்யா, ஹரிசரண், அபிமன்யு, சித்தார்த் இவர்களே ஆர்யனின் வலது இடது கைகள். இவர்களை பற்றி சுருக்கமாக கூற வேண்டுமானால் 'ஆதித்யா' அமைதியாக இருப்பான் ஆனால் சற்று கோபக்காரன். 'ஹரிசரண்' பயந்த சுபாவம் ஆனால் தன் நண்பர்களுக்காக அவன் எடுக்கும் ரிஸ்க் அவனுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது போல. 'அபிமன்யு' மொடர்ன் கண்ணன் என்றே சொல்ல வேண்டும். 'சித்தார்த்' எதையும் தாங்கும் இதயம் கிட்டதட்ட 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா இவன் ரொம்ப நல்லவன்டா' அந்தமாதிரி..

ஆனால் இன்று தன் நண்பனை கோபப்படுத்தி குளிர்காய்கின்றனர் அந்நாலு இளங்காளைகளும்.

"என்னடா நாங்களும் எவ்வளவு நேரமா கேட்டுக்கிட்டு இருக்கோம்... பதில் சொல்லவே மாட்டிக்கிற" -அபி

"அம்மா பாவம் டா அவங்களும் உன்கிட்ட எவ்வளவு தடவ தான்டா கெஞ்சுவாங்க. அவங்களுக்கு ஒரு பிடி கொடுக்கவே மாட்டிக்கிற.. உன் மனசுல என்ன தான்டா நினைச்சிக்கிட்டு இருக்க" -ஹரி

அவர்கள் பேசுவதை கண்டுக்காது தன் கையில் வைத்திருக்கும் ஜுஸில் ஆர்யன் கவனமாக இருக்க,
" டேய் பக்கி என்னதான் டா உன் பிரச்சின" - ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்காது ஆதி கோபத்தில் கேட்க,

"டேய் அவங்களுக்கும் சரி உங்ககிட்டயும் சரி பல தடவ சொல்லிட்டேன். இதப்பத்தி பேசாதீங்கன்னு புரிஞ்சுக்கங்களேடா"
-ஆர்யன்

அவன் கூறியதை கேட்டு அபி வேறு புறம் முகத்தை திருப்பி "எவனுக்கு தேவையோ அவன கண்டுக்குறது இல்ல எவன் வேணான்னு சீன் போடுறானோ அவன பிடிச்சு தொங்க வேண்டியது.. காலக்கொடும" என முனுமுனுத்தான்..

"சரி நாங்க புரிஞ்சிக்கிறோம் நாங்க கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு" -சித்து

"முடியாதுன்னா மட்டும் விடவா போற கேளு கேட்டு தொலையும்" -ஆர்யா

" நீ எங்களுக்கு தெரியாம யாரயாச்சும் லவ் பன்றியாடா" - என சித்து கேட்க ஆர்யன் அவனை தீயாய் முறைத்தான்.

"டேய் மடையா எனக்கு கல்யாணமே வேணான்னு சொல்றேன். யாரயாச்சும் லவ் பன்றியான்னு கேக்குற அறிவு கெட்டவனே" -ஆர்யா

"அப்போ ஓகே உன் மனச கவர்ர மாதிரி ஒரு பொண்ண பார்த்தா அவள லவ் பன்னி கல்யாணம் பன்ற ஐடியாவாவது இருக்கா" -ஆதி
இவர்கள் இவ்வாறு கேள்வி கேட்க அவர்களை ஒன்றும் செய்ய முடியாது தற்போதைய நிலையை சமாளிக்க,

"சரி டா என் மனச கவர்ர மாதிரி ஒரு பொண்ண பார்த்தா நீங்க என்ன சொல்றது நானே அவ பின்னாடி லோலோன்னு அலைஞ்சி அவள கரெக்ட் பன்னி கல்யாணம் பன்னிப்பேன் போதுமா " என ஆர்யன் வினவ,

"இது போதும்டா இன்னைக்கு இந்த ஹால்ல இருந்து போகுறதுக்கு முன்னாடி உன் மனசுக்கு புடிச்ச பொண்ண நாங்க கண்டுபிடிக்கிறோம் உன்கூட கோர்த்து விடுறோம் என்னடா ஓகே தானே.. " -என ஹரி வினவ மற்ற மூவரும் (ஆர்யனை தவிர) 'ஓகே' என ஓலமிட்டனர்..

ஆனால் ஆர்யன் அறிந்திருக்கவில்லை இன்று நிஜமாகவே தன் நண்பன் கூறியது போல் தன் மனதை கொள்ளையடிக்கப் போகிறவளை சந்திக்க தான் போகிறோம் என்று..

ஆர்யா, அபி, ஆதி, சித்து, ஹரி ஐவரும் ஐந்துடல் ஓருயிர் போல. பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்து தற்போதும் ஒன்றாகவே வேலை செய்கின்றனர்.

"ஹெலோ லேடீஸ் என்ட் ஜென்ட்ல்மென் வெல்கம் டு அவர் க்ரேன்ட் பார்ட்டி (hello ladies and gentlemen welcome to our grand party)" என ஜெகதீஸ் அரோராவின் குரல் ஒலிக்க அனைவருடைய கவனமும் அவர்பக்கம் சென்றது. நம் கதா நாயகர்களின் கவனமும் கூட..

"இந்த பார்ட்டி எதுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுன்னு உங்களுக்கே தெரியும். இத்தனை வருட என் அரசியல் வாழ்கையில எனக்கு கிடைச்ச அங்கீகாரமா தான் நா இத நினைக்கிறேன். இந்த தருணத்துல என் மகன் ஆர்னவ் அரோராவ உங்களுக்கு அறிமுகப்படுத்த கடமை பட்டிருக்கேன். கம் டு த ஸ்டேஜ் மை பாய்(come the stage ma boy)" என அவர் அழைக்க அவன் மேடை ஏறினான்.

தன் மகனை அழைத்தவர் இன்னும் சில வார்த்தைகளை பேசி தன் கையில் இருந்த மதுபான குவளையை உயர்த்தி பார்ட்டியை ஆரம்பித்து வைக்க மற்ற அனைவரும் அவ்வாறே செய்து தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் அக்கூட்டத்தில் சில கண்கள் மட்டும் ஆர்னவையும் அவனுடன் இருந்த அவன் நண்பர்கள் கிருஷ் மற்றும் ஹரிஷை பழிவாங்கும் வெறியோடு கண்களில் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன...

யார் அந்த கண்கள்???

தொடரும்....❤❤
..................................................
edhawadhu mistake irundha enaya mannichuu.. and story epidi irukkunnu Unga comments a slluga friends.

❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
IMG_20200724_095221.jpg

❤அத்தியாயம் 02❤

முதலமைச்சர் ஜெகதீஸ் அரோரா தனது உரையை முடிக்க, அவ்விழாவின் முதல் நடனம் அரங்கேறயிருக்க வந்த விருந்தினர்களை உறசாகப்படுத்தும் விதமாக பத்து பேர் கொண்ட நடனக்குழு ஹால் நடுவிற்கு வருகை தந்தனர்.

முதலமைச்சரிடமிருந்து தனது பார்வையை நடனக் கலைஞர்கள் நோக்கி திருப்பிய ஆர்யன் அக்கூட்டத்திற்கு மத்தியில் அழகு தேவதையாக இருந்தவளை கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனான்.

அவள் தான் நம் கதாநாயகி ஆருத்ரா.மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறம், மீன் போன்ற விழிகள், சிறிய மூக்கு, இயற்கையிலேயே சிவந்த உதடுகள் இன்று சற்று ஒப்பனைகளுடன் இன்னும் சிவப்பாக காட்டியது.

தலைமுடியை கொண்டையிட்டு அதை சுற்றி மல்லிகைப் பூ அலங்காரம் செய்து சிறிய முடிக்கற்றைகள் அவள் முன்நெற்றியில் தவள மெரூன் நிற அலங்காரத்திற்கான கற்கள் பதித்த ப்ளவுஸும் மெரூன் மற்றும் கருப்பு நிறம் கலந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஸ்கர்டும் அதற்கு பொருத்தமாக கருப்பு நிற போடர் கொண்ட மெரூன் நிற துப்பட்டாவை தன் ஒரு தோளில் மட்டும் படர்ந்தவாறு போட்டு அந்த அழகிய லெஹெங்காவில் பிரம்மன் வடித்த ஐந்தரை அடி உயர சிலை போல் மிதமான ஒப்பனைகளுடன் அழகு தேவதையாக இருந்தாள் நம் நாயகி.

அவ்வழகு மங்கையர் கூட்டத்திற்கு மத்தியில் நடந்து வருபவளை பார்த்து அவள் அழகில் சொக்கித்தான் போனான் நம் கதாநாயகன். ஆருத்ரா பாடல்வரிகளுக்கேற்ப தன் கொடியிடையை வளைத்து நடனமாட ஆரம்பிக்க இவன் கண்ணிமைக்காது மூச்சு விடக்கூட மறந்தவனாக சிலைபோல் நின்றான்.

'பங்கட் பே ஆகே சையான்

மாரோடே பைய்யான்
என்ட் எவ்ரிபொடி ப்ளாம்ஸ் இட் ஒன் ராதா....
ச்சேதே ஹெய் ஹும்கா தைய்யான்
பைரி கன்ஹெய்யா
என்ட் எவ்ரிபொடி ப்ளாம்ஸ் இட் ஒன் ராதா....
ஹோகா வோ லாக்ஹோன் தில் க ச்சோர்
ஹும்கா டோ லாகே போர்
ஹூவா ஹெய் ஏய்சா பவ்லா ஜோ கெஹ்டா ஜாயே...'


என்ற ஹிந்தி பாடலுக்கு ஆருத்ரா தன் உடலை நெளித்து நடனம் ஆட அவளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.

இதை கவனித்த அபி சித்துவையும் ஹரியையும் சுரண்டி
" டேய் சித்து ஹரி அங்கப் பாருங்க டா அவன் அந்த பொண்ணையே குறுகுறுன்னு பார்க்குறான்.." என சொல்ல அவர்களும் அவனை பார்த்தனர்.

அவன் பார்வை போகும் திசையை பார்த்து அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து 'சிக்கிட்டான்யா சேகரு' என மனதில் நினைத்து மூன்று பேரும் தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்.

ஆனால் ஆருத்ராவின் கைகளும் கால்களும் மட்டுமே பாடலின் ஒலிக்கேற்ப அசைவுகளை மேற்கொண்டதே தவிர பாடலுக்கு அபிநயம் காட்ட வேண்டிய அவள் கண்களோ விருந்தினர்களுக்கு மத்தியில் மறைவாக தன்னை சுற்றி நின்றுக்கொண்டிருக்கும் அந்த நான்கு ஜோடி கண்களையே பார்த்தது மட்டுமன்றி பார்வையின் மூலம் சில அர்த்தப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டது..

ஒலித்துக் கொண்டிருந்த பாடல் திடீரென நின்றுவிட அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு அவ்விடமே இருள்மயமானது. நம் கதாநாயகர்கள் உட்பட அனைவரும் திகைப்படைய அடுத்த இரு நிமிடங்களில் மீண்டும் விளக்குகள் ஒளிரப்பட்டன.

ஆனால் ஆர்யனோ முன்பிருந்ததை விட இன்னும் திகைப்படைந்தான். காரணம் நடனமாடிக் கொண்டிருந்த ஆருத்ராவை தற்போது காணவில்லை.

"லைட் ஓஃப் ஆகுறதுக்கு முன்னாடி வர இங்கதானே இருந்தா இப்போ எங்க போனா " என யோசித்தவாறு தன் பக்கத்திலிருந்த மூன்று ஜீவன்கள் தன்னை கூப்பிடுவதை கூட காதில் வாங்காமல் ஆருத்ராவை தேடி சென்றான் ஆர்யன்.

அப்போது தொலைப்பேசி அழைப்பிற்காக வெளியே சென்ற ஆதி அங்கு ஒரு பெண்ணுடன் வம்பிழுத்து 'ராட்சசி ராட்சசி' என அவளை மனதில் வறுத்துக்கொண்டே வர ஆர்யன் செல்வதை பார்த்து,
" டேய் ஆர்யா நில்லுடா" என கத்த கத்த அவன் காதில் வாங்காமல் சென்றதை பார்த்து தன் மற்ற நண்பர்களிடம்,
"என்ன டா ஆச்சு இவனுக்கு.. கூப்பிட கூப்பிட காதுல கூட வாங்காம அப்பிடி எங்க போறான்" என வினவ,

"ஏன் உனக்கு தெரியாதா அவன் இவ்வளவு நேரமா என்ன கருமத்த பன்னிட்டு இருந்தான்னு" -சித்து

"டேய் எல்லாம் அவளால தான் டா.. அவளால தான் லேட் ஆயிடுச்சி.. மறுபடியும் அவ என் முன்னாடி மட்டும் வரட்டும் சட்னி தான் அவ" - தன்னுடன் வம்பிழுத்த அந்த பெண்ணை நினைத்து ஆதி கோபத்தில் கூற,

அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த அபி " எவ அவ.." என வினவ,

"இப்போ எதுக்கு டா என்ன ஒரு மார்கமா பார்க்குற" -ஆதி

"இல்ல பொண்ணு அது இதுன்னு உனக்கு சம்மதமே இல்லாத ஒன்ன பத்தி பேசுறியே அதான்.. நல்லா தானே இருக்க இல்ல.. தலைல டப்பா எதாவது விழுந்திருச்சா " - என அபி கேலியாக கேட்க,

" டேய்ய்ய்..." என பல்லை கடித்த ஆதி எதுவும் செய்ய முடியாது தனக்குத் தானே தலையிலடித்துக் கொண்டு,

"அத விடுங்கடா மட சாம்பிராணிகளா.. நா கேட்டதுக்கு பதில் சொல்லித் தொலைங்க"

"எதையோ மறைக்கிற சரி விடு.. அவன் ஒரு பொண்ண பார்த்தான் டா அவள தான் தேடி போறான்" - ஹரி

"என்னது பொண்ணா.. யார்ரா அவ" - ஆதி

"தெரியல டா. பட் சார் இப்போ ஒரே லவ்வு மூட்ல இருக்காரு போல.. அந்த பொண்ணயே விழுங்குற மாதிரி பார்த்துட்டு இருந்தான் டா.." - சித்து

"என்னது லவ்வா.. அதுக்குள்ளயேவா.. ஒரு இருபது நிமிஷம் நா அங்க ஓரமா போய்ட்டு வரதுகுள்ள லவ்வா...." - என ஆதி ஆச்சரியமாக கேட்க,

"பின்ன உன்ன மாதிரியா இருப்பான் பின்னாடி வர்ர பொண்ணுங்கள மூக்கால முறைச்சே விரட்டி விட.. அவன் பார்த்தான் பிடிச்சது அவ பின்னாடி போய்ட்டான்" -என அபி தோலை குலுக்கி சொல்ல,

'என் நேரம்' என மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட ஆதி,
"சரி சரி விடுங்க அவனுக்கு கோல் பன்னி எங்க இருக்கான்னு கேளுங்க நாம சீக்கிரம் கிளம்பலாம்" -என அவசரப்படுத்தினான்.

அதே சமயம்,

"என் முன்னாடி தானே இருந்தா அதுக்குள்ள மறைஞ்சிட்டா எந்த பக்கம் போனான்னும் தெரியலயே அந்த பொண்ணு யாரா இருக்கும்.."

என யோசித்தவாறே ஆருத்ராவை தேடி தன் கால் போன போக்கில் சென்ற ஆர்யன் மண்டபத்திற்கு பின்னாடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வர, அங்கு கண்ட காட்சியை பார்த்து ஆச்சரியத்தில் விழி பிதுங்கி நின்றான். ஒரு நிமிடத்தில் தன்னை சுதாகரித்தவன் அக்காட்சியை தனது தொலைபேசியிலும் வீடியோவாக பதிவு செய்து கொண்டான்.

பின் சித்துவிடமிருந்து அழைப்பு வர
"இதோ வரேன் டா " என கூறி ஏதோ ஒரு யோசனையில் நெற்றியை விரலால் நீவிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அவசரமாக நகர்ந்தான் ஆர்யன்..



❤தொடரும்...❤
.......................................................


❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
IMG_20200724_095221.jpg


❤அத்தியாயம் 03❤

ஒரு நாளைக்கு பிறகு,
மும்பையில் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில்,

பல மரங்கள் சூழப்பட்ட அந்த அடர்ந்த காட்டின் மத்தியில் இருந்த பங்களா போன்ற ஒரு பழைய வீட்டில் சராசரி மனிதனுடைய உயரத்திற்கும் கூடிய உயரத்தில் நான்கு கண்ணாடி சுவர்களிலான நீர் நிரப்பப்பட்டு அமைக்கப்பட்ட கண்ணாடி பெட்டிக்கு மேலாக தலை கீழாக அரை மயக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தான் ஹரிஷ்.

இந்த காட்டின் மத்தியில் இப்பிடி ஒரு பங்களா இருப்பது பல பேருக்கு தெரியாது. தெரிந்த சிலரும் இவ்வீட்டின் பழைய அமானுஷ்ய கதைகளை நம்பி இந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்கள். ஆனால் இவ்விடம் தொடர்பான இது போன்ற வதந்திகளும் ஒரு சிலருக்கு உபயோகமானது. அதாவது, நம் கதாநாயகிக்கும் அவள் நண்பிகளுக்கும்.

மயக்கத்திலிருந்து ஹரிஷ் சற்று தெளிவடைந்து கண்களை சிரமப்பட்டு திறந்த போது அவன் முன் கொலை வெறியுடன் ருத்ர தேவியாக நின்றுக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

'தான் எப்படி இங்கே' என்று அவன் யோசிக்க மயக்கமடைய முன்னாடி கடைசியாக நடந்தவை அவன் மனக்கண்ணில் தோன்றியது.

(குட்டி ப்ளாஷ்பெக்)

ஆருத்ராவின் நடனம் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது பெண்களுடன் உல்லாசமாக பேசிக் கொண்டிருந்த ஹரிஷின் தொலைப்பேசிக்கு அழைப்பு வந்தது. தனது தொலைப்பேசியை பார்த்தவன் கண்கள் மின்ன அதை ஏற்று,

"ஹாய் பேபி.. ஐ மிஸ் யு பேட்லி பேபி( I miss you badly baby)" - என ஹரிஷ் மதுவை அருந்திய வண்ணம் குழைவாக பேச,

மறுமுனையில் கூறிய செய்தியில்,
"ரியல்லி (Really)??.. நெஜமாவே வந்திருக்கியா.."

மறுமுனையில் ".................."

"டோன்ட் வொர்ரி பேபி (Don't worry baby).. அங்கேயே வெயிட் பன்னு.. இதோ வரேன்.." என தொலைப்பேசி அழைப்பை துண்டித்து ஹரிஷ் வெளியே செல்ல எத்தனிக்கும் போது,

"எங்க டா போற" - என கிரிஷ் கேட்க,

"டேய் என்னோட பேபி வெளில இருக்கா டா.. நா போய் அவள கூட்டிக்கிட்டு வரேன்.. அதுவரைக்கும் நீ இந்த பொண்ணுங்க கூட இரு.." - ஹரிஷ்

"என்ன டா எதுவா இருந்தாலும் நாம மூனு பேரும் சேர்ந்து தானே பன்னுவோம். இப்போ நீ மட்டும் தனியா கிளம்புற" -என சந்தேகமாக ஹரிஷை பார்த்தவாறு கிரிஷ் கேட்க,

"இதுவும் நம்ம மூனு பேருக்கு தான்டா.. இன்ஸ்டால தான் அந்த பொண்ண பிடிச்சேன்.. இப்போ தான் டா அந்த மீனு நம்ம வலைக்குள்ளயே சிக்குது.. இப்போ அவளே என்ன தேடி வந்திருக்கா.. கூடிய சீக்கிரம் நமக்குத் தான் டா விருந்து.." -ஹரிஷ்

தான் யாரை மீன் என்று கூறினோமோ அவள் சாதாரண மீன் அல்ல தனக்கு நரகத்தை காட்டப் போகும் சுறா என்று அவன் அப்போது அறியவில்லை..

"சரி ஏதோ சொல்ற போய் சீக்கிரம் அவக்கூட வா.. ஆர்னவ்கிட்ட என்னால சமாளிக்க முடியாது" -கிரிஷ்

"ஓகே டா.. ஆர்னவ் வந்தா ஒருத்தர இன்வைட் பன்ன நா வெளில போய் இருக்குறதா சொல்லு"- ஹரிஷ்

இவன் கிரிஷுடன் பேசிவிட்டு மண்டபத்தின் பின்னாடியுள்ள அந்த இருட்டுப் பகுதிக்கு வந்தது வரை தான் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது. அப்போது மயக்கமடைந்தவன் இப்போது தான் தெளிகிறான்.

இவன் யோசனையுடன் அந்த அறையை தலைகீழாக சுற்றும் முற்றும் பார்க்க, ஆருத்ராவுடன் இன்னும் நான்கு பெண்கள் அவ்வறையில் இருப்பதை கவனித்து,

"யாருடி நீங்க எல்லாம்?.. என்ன எதுக்குடி இங்க கட்டி வச்சிருக்கீங்க.. நா யாருன்னு தெரியாம என்கிட்ட உங்க விளையாட்ட காட்டாதீங்க.. என்ன விடுங்கடி.. இல்லென்னா உங்களுக்கு தான் விளைவு ரொம்ப மோசமா இருக்கும்" என்று அவன் உச்ச தொனியில் கத்திக் கொண்டிருக்க,

திடீரென அவன் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து கண்ணாடிப் பெட்டியினுள் உள்ள நீரினுள் தொப்பென்று விழுந்தான்.. திடீரென அதனுள் விழுந்ததும் செய்வதறியாது அந்நீரின் குளிரில் அவன் உடம்பு தாங்காது அதில் அவன் தத்தளிக்க, கண்ணில் கோபப்பார்வையுடனும் இதழில் புன்னகையுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர் அவ் ஐந்து மங்கைகளும்..

ஒரு வித ஏளன சிரிப்புடன், " எங்களோட வருங்காலத்த நீ முடிவு செய்றியா..
நீ இந்த நிலமைக்கு வரக் காரணமே உன் கடந்த காலத்துல நீ பன்ன பாவம் தான்" - என ஆருத்ரா கூற,

"என்ன பேபி என்னை பார்க்க துடியா துடிச்ச இப்போ இதுக்குள்ள துடிச்சிக்கிட்டு இருக்க.. ஆர் யு ஓகே பேபி( Are you okay baby) " என கயல் சிரித்துக் கொண்டே கூறி நீரின் குளிரை அதிகப்படுத்த,

அந்த குளிர் அவனை உறையச் செய்து உடம்பில் ஒருவித வலியை ஏற்படுத்த அதை தாங்க முடியாதவனாக செய்வதறியாது நீருக்குள்ளே திணறினான்.

"நீங்க உங்க வாழ்க்கையில பல பொண்ணுங்களோட வாழ்கைய அழிச்சிருக்கீங்க.. ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ எங்க வாழ்கையிலும் அதே தப்ப செஞ்சி இதுவர பன்னதுக்கு சேர்த்து வச்சு தண்டன அனுபவிக்கிறீங்க இன்னும் அனுபவிப்பீங்க.." - என துர்கா கண்ணில் பழி வாங்கும் வெறியுடன் கூறினாள்.

"உங்களால எவ்வளவு வலிய நாங்க அனுபவிச்சமோ அதே வலிய இல்ல இல்ல அத விட அதிகமா அனுபவிப்பீங்க.." -ஆதிரா

"பணம் இருந்தா பன்ன தப்ப மறைச்சிடலாம்னு நினைச்சீங்களா.. அதனால தான் டா உங்களுக்கான தண்டனய நாங்க எங்க கையில எடுத்தோம்.." - ரியா

"இப்போ நீ கதறுர மாதிரி தானே டா அன்னைக்கு அவளும் துடிச்சிருப்பா.. எவ்வளவு கெஞ்சிருப்பா.. நல்லா அனுபவி டா.." - என ஆருத்ரா கூறி இன்னும் நீரின் குளிர்ச்சியை அதிகப்படுத்த,

தன் உடலின் ஒவ்வொரு நரம்பும் சதையும் தன்னையே மாய்த்து கொள்ளும் அளவிற்கு அது ஏற்படுத்தும் வலியை தாங்காது அவன் துடித்து துடித்து இறந்துவிட ஏதோ ஒன்றை வென்று விட்ட மகிழ்ச்சியில் கண்கள் மின்ன அதை பார்த்துக் கொண்டிருந்தனர் அவ் ஐந்து வீர தேவிகளும்.

சிறிது நேரம் எதுவும் செய்ய தோணாது அதே இடத்தில் மௌனமாக நின்றுக் கொண்டிருந்தவர்கள் பின் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

"இனி கொஞ்ச நாளைக்கு நாம இங்க வர வேணாம்.. நம்ம வீட்டில இருந்தே எல்லா வேலையும் செய்யலாம்..." -ஆருத்ரா

"ஆமா.. எப்பிடியும் இந்நேரம் இவன காணோம்னு இவனோட அப்பா டி.ஜி.பி வரை போயிருந்தாலும் ஆச்சரியமில்ல." -துர்கா

"இவன் செத்துட்டான்னு தெரிஞ்சாலே மத்த இரண்டு நாய்களும் அலெர்ட் ஆயிருவாங்க. சோ கொஞ்ச நாள் நாம சாதாரணமா இருக்கலாம்.. அப்போ தான் நாம மாட்டிக்க மாட்டோம்.." -ரியா

"அடுத்து நம்ம டார்கெட் அந்த கிரிஷ்.. அவன் என்ன பன்றான்னு அவனோட நடவடிக்கைய கவனிச்சி அவனுக்கான ஸ்கெட்ச்ச ப்ளான் பன்றது தான் நம்ம அடுத்த வேல.." - கயல்

"கொஞ்சம் பொறுமையா இரு கயல்.. அவசரப்படாத.. முதல்ல இவனோட உடல என்ன பன்றதுன்னு யோசிப்போம்" -ஆதிரா

"நமக்கு நெருங்கினவங்க எந்த நிலைல நமக்கு கிடைச்சாங்களோ இவனும் அப்பிடி தான் அவங்க கைக்கு போகனும்"-என ஆருத்ரா கூற,

மற்ற நான்கு பெண்களும் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு ஏளன சிரிப்புடன் கண்ணில் கனல் தெறிக்க தொட்டிக்குள் செத்த மீனை போல் கிடந்தவனை பார்த்துக் கொண்டிருந்தனர்..
------------------------------------------------------------------------

அந்த இருட்டு அறையில் மாலை போடப்பட்டு சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த அந்த இரண்டு நபர்களின் புகைப்படத்திற்கு முன்னால் கண்களில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தனர் நம் கதா நாயகிகள்..

"உங்கள எங்ககிட்ட இருந்து பிரிச்சவங்கள்ள ஒருத்தன இன்னைக்கு நாம கொன்னுட்டோம்.. அவன் துடிக்க துடிக்க சாகுறத எங்க கண்ணால பார்த்தோம்.. அவங்களுக்கான தண்டனைய எங்க கையால கொடுத்தோம்.. மீதி இருக்கிற அவன்களையும் நிச்சயமா விட மாட்டோம்.. கூடிய சீக்கிரம் அந்த நாய்களுக்கான தணடனையும் காத்திருக்கு.. "

என ஐவரும் மனதில் நினைத்தவாறு கண்களில் நீர் கோர்க்க அவ் ஆள் உயர புகைப்படத்திலிருந்து விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தனர்..
...........................................................................

இரண்டு நாட்களுக்கு பிறகு,

ஹரிஷ் தொடர்பான தகவலை அறிய சி.பி.ஐ அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டார் ஹரிஷின் தந்தை மகேஷ். மும்பையில் அதி முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர். மிகப் பெரிய தொழிலதிபர்.

"ஹெலோ சார் உங்க கிட்ட என் பையன பத்தி சொல்லி இரண்டு நாளாச்சு.. கடைசியா முதலமைச்சர் ஜெகதீஸோட பார்ட்டியில அவன பார்த்தேன்.. இப்போ வரைக்கும் அவன பத்தின தகவல் இல்ல.. என்னாச்சு அவனுக்கு.. எங்க இருக்கான் அவன்.." என மகேஷ் கோபத்தில் கத்த,

"சார் கொஞ்சம் பொறுமையா இருங்க.. உங்க பையன நாங்க தேடிகிட்டு தான் இருக்கோம்.. அவர் மண்டபத்தில இருந்து வெளியானது கூட சிசிடிவி கேமரால ரெகோர்ட் ஆகி இல்ல.. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிருவோம் சார்.." - சி.பி.ஐ அதிகாரி கூற,

"எப்போ சார் கண்டுபிடிப்பிங்க.. எப்பிடி கண்டுபிடிப்பீங்க பொணமாவா.. ஏற்கனவே என்னோட பிஸ்னஸ் எதிரிங்க பல பேர் இருக்காங்க.. அவனுக்கு ஏதாவது ஆச்சு நா உங்கள சும்மா விட மாட்டேன்.."- என உச்ச தொனியில் மகேஷ் கத்த,

"கண்டிப்பா அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுறதுக்கு முன்னாடி அவர பாதுகாப்பா உங்க கிட்ட ஒப்படைப்போம் சார். கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க உங்க எதிரியா சொன்னவங்களையும் விசாரிச்சிட்டு தான் இருக்கோம்."- சி.பி.ஐ அதிகாரி

"சீக்கிரம் அவன் எங்க இருக்கான் அவன கடத்துனது யாருன்னு கண்டுபிடிங்க.. இல்லென்னா நா இத வேற வழில கையாள வேண்டி இருக்கும்..." - என கூறி தொலைப்பேசியை துண்டித்த மகேஷ் ஹரிஷ் பற்றிய யோசனையில் ஆழ்ந்தார்..

ஹரிஷின் தந்தை மகேஷுக்கு தொழில்முறை எதிரிகள் அதிகம் என்பதனால் அவன் எங்கு சென்றாலும் ஐந்து பத்து அடியாட்களும் கூடவே செல்வர். ஒரு முறை மகேஷின் தொழில்முறை எதிரி ஒருவனால் கடத்தப்பட்டும் உள்ளான். அதிலிருந்து அவன் எங்கு சென்றாலும் அவனை கண்காணிக்க மகேஷ் பல ஆட்களை நியமித்திருந்தார்.

ஆனால் அன்று பார்ட்டியில் எல்லாரும் மது அருந்திக் கொண்டு கவனக் குறைவாக இருந்ததாலும் விளக்குகள் அணைக்கப்பட்ட இடைவேளையில் அவன் மண்டபத்திலிருந்து வெளியேறியதனாலும் மகேஷின் அடியாட்கள் அவனை கவனிக்கவில்லை. மூன்று நாட்களாக மகனை காணவில்லை , அவன் பற்றிய சிறு துரும்பு அளவு தகவல் கூட இன்னும் அறியப்படவில்லை என்பதே மகேஷின் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது.

ஆனால், தன் மகன் பற்றி தான் அறியப்போகும் முதல் தகவலே தன்னை நிலைகுலைய செய்யும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை..



❤தொடரும்❤
----------------------------------------------------------- -------------
edhwadhu mistakes irundha sorry friends.. marakama unga comments a slluga❤


❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
IMG_20200724_095221.jpg

❤அத்தியாயம் 04❤

அதே சமயம்,
ஆர்னவின் ஃபார்ம் ஹவுஸில்,

"டேய் உண்மைய சொல்லு அவன் இரண்டு நாளா எங்க போனான்.." - என தன் முன் நின்ற கிரிஷிடம் கோபமாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆர்னவ்.

"எனக்கு சத்தியமா தெரியல டா"-என்று பாவமாக கூறிய கிரிஷை கண்ணில் கோபம் கொப்பளிக்க முறைத்து பார்த்த ஆர்னவ்,

"அவன் கடைசியா உன் கூட தான் இருந்தான்.. இப்போ தெரியலன்னு அசால்ட்டா சொல்ற." - ஆர்னவ்

"நா அன்னைக்கே சொன்னேன்.. அவன பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு அவள அழைச்சிட்டு வரேன்னு போனான்னு.. அதுக்கு அப்பறம் தான் அவன் திரும்ப வரவேயில்லை" - கிரிஷ்

"அவன் எந்த பொண்ணுன்னு உன்கிட்ட சொன்னானா.. ஒரு வேளை அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சு அவள விசாரிச்சா அவன் எங்க இருக்கான் அவனுக்கு என்ன ஆச்சுன்னு சின்ன க்ளூ ஆவது கிடைக்கும்ல.." -ஆர்னவ்

"அதுதான் டா அந்த பொண்ணு யாருன்னு எனக்கே தெரியல.. டென்ஷன் ஆகாத டா அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது... கண்டிப்பா மகேஷ் அங்கிளோட எனிமீஸ் யாரவதா தான் இருக்கும்.. அவர் சீக்கிரமா கண்டுபிடிச்சிறுவாரு டா.. அவன் நம்மகிட்ட வந்துறுவான்.." - என கிரிஷ் ஆர்னவை சமாதானப்படுத்த

"ஓகே டா மச்சி.. அவன பத்தி எதாவது தகவல் தெரிஞ்சா உடனே எனக்கு சொல்லு.. டாடி மூலமா டிபார்ட்மன்ட்ல பேசி அவன தேடிகிட்டு தான் இருக்காங்க" - ஆர்னவ்

"ஆமா டா... பாவம் மகேஷ் அங்கிள் தான் ரொம்ப குழப்பத்துல இருக்காரு.. சீக்கிரமே அவன கடத்தினவங்கள கண்டுபிடிச்சு அவன பாதுகாப்பா மீட்டெடுத்தாலே போதும் டா.." -கிரிஷ்

பின் இருவரும் ஹரிஷ் பற்றிய யோசனையில் நன்றாக குடித்து விட்டு மட்டையாகினர்..
-----------------------------------------------------------------------

நள்ளிரவு 2.00 மணிக்கு,

குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் நீரில் ஊறி உடல் அழுகி பார்க்கவே முடியாதவாறு ஒரு உடல் தென்பட, அப் பிரதேச மக்கள் பொலீஸுக்கு தகவலை தெரிவித்தனர். அந்த உடல் இருந்த நிலை அது யாரென்று கூட அடையாளம் கண்டுக் கொள்ள முடியாதவாறு இருந்தது..

அங்கு வந்த காவலர்கள் அப் பிரதேச மக்களை அப்புறப்படுத்தி அவ் உடலை பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.. பரிசோதனையின் முடிவில் அது தொழிலதிபர் மகேஷின் மகன் என்று தெரிய வர அவர்களுக்கு தகவலை தெரிவித்தனர்.
-----------------------------------------------------------------------

மகேஷின் வீட்டில்,

அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க தனக்கு வந்த தொலைப்பேசி அழைப்பின் சத்தத்தில் விழிப்பு தட்ட அழைப்பை ஏற்று காதில் வைத்தார் மகேஷ். மறுமுனையில் சொன்ன செய்தியில் அவருக்கு தூக்கி வாரிப் போட்டது..

பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவரின் மனையாளும் அழைப்பின் சத்தத்தில் விழித்து தன் கணவனின் முகத்தை காண அவர் அசையாத தோற்றத்திலும் அவர் முத்தில் தெரிந்த உணர்ச்சியிலும் ஏதோ சரியில்லை என உணர்ந்து,

"என்னாச்சுங்க.." என ஹரிஷின் அம்மா வினவ,

திடுரென தன் மனைவியின் குரலில் திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தவர் 'இவளிடம் எப்படி கூறுவது விஷயத்தை சொன்னால் தாங்கிக் கொள்வாளா ..' என அவர் மனதில் நினைத்தவாறு கண்கலங்க அமர்ந்திருக்க,

அவருடைய கண்கள் கலங்கியிருப்பதை கண்ட ஹரிஷின் அம்மா பதட்டமடைந்து அவருடைய கண்களும் கலங்கிய நிலையில்,
" என்னங்க என்னாச்சுங்க.. ஏன் இப்பிடி இருக்கீங்க.. எதாவது பிரச்சினையா.. நம்ம பையனுக்கு எதுவும் இல்லல்ல.." அவர் சற்று அழுத்தமாகவே கேட்க,

அவர் கேட்டதில் மகேஷ் வாய்விட்டே அழுது தன் மகன் தொடர்பான செய்தியை மனைவியிடம் கூற அதிர்ச்சியான ஹரிஷின் அம்மா அச் செய்தியை தாங்க இயலாது அப்படியே மயங்கி சரிந்தார்.

பின் தன் மனையாளுக்கு ஆறுதலாகவும் , பாதுகாப்பாகவும் வீட்டில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வைத்து தன் மகனின் உடலை காண மோட்ச்சரிக்கு தன் ஆட்களுடன் விரைந்தார்.
-----------------------------------------------------------------------

மோட்ச்சரியில்,

ஒரு தந்தை தன் மகனை எந்த நிலையில் காணக்கூடாதோ அத்தகைய நிலையில் கண்ட அவர் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் இதயமே வெடித்து சிதறும் அளவிற்கு அவ்விடத்திலேயே கதற தொடங்கினார்.

அவருடன் வந்த அவருடைய ஆட்கள் அவரை சமாதானப்படுத்த மோட்ச்சரியில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டு தன் மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து ஆக வேண்டிய காரியங்களை செய்தனர்.
----------------------------------------------------------------------

காலையில்,
ஆர்னவின் ஃபார்ம் ஹவுஸில்,

நல்ல குடித்து விட்டு மட்டையாகிருந்த ஆர்னவிற்கு தொலைப்பேசி அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்தவன் ஏற்கனவே மது அருந்தியதால் ஹேங்கோவரில் தலை வலி வேறு அதிகமாக இருக்க தொலைப்பேசியில் சொன்ன செய்தியில் அவனுக்கு தலை சுற்றவே ஆரம்பித்தது.

சொன்ன செய்தியில் மொத்த போதையும் இறங்கி விட அருகிலிருந்த கிரிஷை எழுப்பியவன் தானும் கிளம்பி அவனையும் கிளம்ப சொல்லி கிரிஷ் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாது அவசர அவசரமாக அவனை அழைத்து கொண்டு மகேஷ் வீட்டிற்கு விரைந்து சென்றான்..

துக்க வீடு என்பதை வெளிப்படுத்தும் விதமாக எல்லோரும் வெள்ளை ஆடை அணிந்திருக்க வீட்டு வாசல் வரை வந்தவர்கள் நடு ஹோலில் தன் நண்பன் வெள்ளை துணியால் சுற்றப்பட்டு உயிரற்று ஜடமாக படுத்திருப்பதை பார்த்து செயலிழந்து சிலை போல் உறைந்தே விட்டனர்.

ஹரிஷின் உடலிற்கு அருகில் அவனது தாய் கதறி அழுகுவதை பார்த்து சுற்றி இருப்பவர்களுக்கும் கண்கள் கலங்கின. வீட்டு சோஃபாவில் மகேஷ் தன் மகன் தன்னை விட்டு பிரிந்ததில் மொத்த சாம்ராஜ்யமும் இடிந்து விட்டது போல் சோக உருவமாய் காட்சியளித்தார்..

தன் நண்பனின் உடலின் அருகில் வந்து அமர்ந்த ஆர்னவ் மற்றும் கிரிஷ் தன் நண்பனின் நிலையை பார்த்து இனி அவன் நம்மோடு இல்லை என எண்ணி கதறி அழ தொடங்கினர்.

"மச்சான்.. என்னால தானே டா உனக்கு இந்த நிலைம.. நா உன்ன தனியா விட்டிருக்க கூடாது.. எல்லா என்னோட க்யார்லெஸ் (Careless) தான் டா என்ன மன்னிச்சிறு டா.." - என கிரிஷ் கதறி அழ,

அவனை தன் தோளோடு அணைத்துக் கொண்டு தன் நண்பர்களின் நிலையை எண்ணி அவனை சரியாக கவனிக்காமல் விட்டோமே என்று தன்னை தானே நொந்து கொண்டான் ஆர்னவ்..

அப்போது சரியாக ஹரிஷ் தொடர்பாக விசாரனையை நடத்துகின்ற CBI அதிகாரிகள் இருவர் வருகை தர தன் மகனின் நிலைக்கு இவர்களின் கவனமின்மை தான் காரணம் என்று எண்ணி ஆத்தித்தில் அவர்களின் அருகில் வேகமாக சென்ற மகேஷ் அதில் ஒரு அதிகாரியின் சட்டையை பிடித்து ஆவேசமாக கத்த தொடங்கினார்..

"உங்களால தான் டா என் மகனுக்கு இந்த நிலைம.. நீங்க மட்டும் கவனமா வேலைய பார்த்து என் மகனை கண்டுபிடிச்சிருந்தா இந்நெரம் அவன் உயிரோட இரூந்திருப்பான்..உங்க பொறுப்பில்லாத வேலையால தான் டா அவன் எங்கள விட்டு போய்ட்டான்" - என்று ஹரிஷின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாது அந்த இயலாமை மொத்தத்தையும் கோபமாக மாற்றி அவர் கத்த,

அவர் அருகில் வந்து அவரை சமாதானப்படுத்திய ஆர்னவ் அந்த CBI அதிகாரியிடம் திரும்பி,
"இவனோட இந்த நிலைமைக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சீங்களா.. இவரோட பிஸ்னஸ் எனிமீஸ் யாராவதா... யாருன்னு மட்டும் சொல்லுங்க.. அவனுக்கு என் கையால தான் சாவு.." -என கண்களில் அனல் பறக்க பேசினான் ஆர்னவ்.

" இல்ல சார்.. இவரோட எந்த தொழில் முறை எதிரிகளும் இல்ல.. அந்த கில்லர்ஸ் ரொம்ப கவனமா பக்காவா ப்ளான் பன்னி செய்திருக்காங்க... அவங்க தொடர்பா ஒரு சின்ன எவிடன்ஸ் கூட எங்களுக்கு கிடைக்கல.. நாங்களும் அவங்கள கண்டுபிடிக்க முயற்சி பன்ன தான் செய்றோம்.. ஆனா அவங்கள பத்தி சின்ன தகவல் கூட எங்களால கண்டுபிடிக்க முடியல.. என்ன பொருத்த வரைக்கும் உங்க மறைமுகமான எதிரியா கூட இருக்கலாம்.. சீக்கிரம் நம்மகிட்ட சிக்குவாங்க சார்.."
-என CBI அதிகாரிகளில் முதலாம் நபர் கூற,

ஒரு பெருமூச்சை விட்ட இரண்டாவது CBI அதிகாரி,
"நாங்க உங்கள பத்தி கேள்விப்பட்ட வரை நீங்க மூனு பேரும் எது செய்தாலும் ஒன்னா தான் செய்வீங்க ஒன்னா தான் இருந்திருக்கீங்க..ஒருவேளை இது உங்க மூனு பேருக்கும் விரிக்கப்பட்ட வலையா கூட இருக்கலாம்.. இப்போ இவரோட மகன் அதுக்கு முதல் பலி ஆகியிருக்காரு.. அடுத்த டார்கெட் நீங்களா கூட இருக்கலாம்.. சோ, இனிமே நீங்க இரண்டு பேரும் பாதுகாப்பா இருங்க சேர்.. நாங்களும் எங்களால முடிந்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்றோம்.. கூடிய சீக்கிரம் அவங்கள கண்டுபிடிச்சு கண்டிப்பா உங்ககிட்ட ஒப்படைப்போம் சார்.." -என அவர் கூறி முடிக்க,

அவர் கூறியதன் உண்மையை உணர்ந்த ஆர்னவும் கிரிஷும் யோசனையினூடே அவ் அதிகாரிகளுக்கு ஒரு தலையைசைப்பை கொடுத்து அவர்களை வழியனுப்பி விட்டு, மகேஷை சமாதானம் செய்து ஹரிஷின் உடலுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளையும் செய்து முடித்தனர்.

இச் செய்தி கழுகு கண் போல் செய்திக்காக காத்திருக்கும் பல பத்திரிகை நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் பிரபலத்திற்காக இல்லாத பொல்லாத பொய்களையும் செய்தியில் அள்ளித் தெளித்து செய்தியை வெளியிட அடுத்த ஒரே நாளில் ஹரிஷ் கொலை செய்யப்பட்டது மும்பை மாநகரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது

டிவி செய்திகளிலும் இதுவே தலைப்பு செய்தியாக ஒளிபரப்பாக கதாநாயகிகளை தவிர்த்து இன்னும் சில கண்களும் அவனின் மரணத்தை எண்ணி மின்னின..

ஹரிஷின் மரணத்திற்கு பிறகு தங்கள் நண்பன் தங்களை விட்டு பிரிந்த மனவேதனையில் இருந்த ஆர்னவும் கிரிஷும் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வெறியில் இருந்ததோடு தங்களையும் பாதுகாத்துக் கொண்டனர்..

இவ்வாறு நாட்கள் ஓட,,

ஒரு மாதத்திற்கு பிறகு,

இரவு 8.00 மணியளவில்,

வேலைக் களைப்பில் தன் பக்கத்தில் படுத்திருந்தவன் மேல் காலையும் கையையும் போட்டு உறங்கி கொண்டிருந்த ஆர்யனுக்கு தொலைப்பேசி அழைப்பு வர, தூக்கம் கெட்டு விட்ட கடுப்பில், ஒருவித சலிப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் சொன்ன செய்தியில் பதறியடித்துக் கொண்டு எழுந்தான்...


❤தொடரும்❤
------------------------------------------------------------------------
edhwadhu mistakes irundha sorry friends.. marakama unga comments a slluga❤


❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
IMG_20200724_095221.jpg

❤அத்தியாயம் 05❤
. 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலி..
டனக்கு டனக்கு டனக்கு னக்கா டனக்கு னக்கா'


என்று ஆர்யனின் தொலைப்பேசி ஒலிக்க, அந்த ரிங்டோனுக்கு சொந்தக்காரன் யார் என்பதை புரிந்து, தூக்கம் கெட்டு விட்ட கடுப்பிலும் ஒருவித சலிப்பிலும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்,
"நீங்கள் டயல் செய்த நபர் தற்போது உங்கள் மேல் செம கடுப்பில் உள்ளார்.. இருக்கும் இடத்தை கூறி சற்று நேரம் அங்கேயே காத்திருக்கவும்" - என ஆர்யன் கஸ்டமர் க்யார்(customer care) பாணியில் சொல்ல,

அவன் கூறியதில் குழம்பிய சித்து, "எதுக்கு டா " - என கேட்டு வைக்க,

"ஹான்.. உன்ன உதைக்க தான்.. வை டா ஃபோன " - என ஆர்யன் கத்தி விட்டு கோலை கட் பன்ன போக,

"டேய்.. டேய்.. டேய்.. வச்சிராத"- என சித்து மறுமுனையில் கத்த,

" என்ன டா வேணும் உனக்கு இப்போ.. எதுக்கு டா டிஸ்டர்ப் பன்ற வெண்ண.." - ஆர்யன் கடுப்பாக கேட்க,

"ச்சே.. இப்போ எங்க டா இருக்க .." - சித்து

அவன் கேட்ட கேள்வியில் காண்டான ஆர்யன் " ஹான்.. நடு மண்டையில உச்சி வெயில் பொழக்க ரோட்டுல நின்னுகிட்டு இருக்கேன்.."

'என்ன சொல்றான் இவன் இந்த ராத்திரில இவனுக்கு வெயில் உச்சி மண்டைய பொழக்குதா..'- என சித்து மனதில் நினைத்தவாறு
"என்ன டா உளர்ற.."- என கடுப்பாகி கேட்க,

"காண்டாகுதுல்ல. எனக்கும் அப்பிடிதான் இருக்கு.. தூங்குறவன எழுப்பி கேள்வி கேட்டுகிட்டு இருக்க பன்னி" - ஆர்யன்

"டேய் காட்டெரும..யாருன்னே தெரியாத அந்த பொண்ண ரோட் ரோடா இந்த ஒரு மாசமா தேடி அலையுறியே.. அந்த நினைப்புல தான் கேட்டேன்.. எந்த ரோட்டுல பொறுக்கிகிட்டு இருக்கன்னு.." -சித்து

"இப்போ இந்த அதி முக்கிய கேள்விய கேட்டு என்ன கடுப்பாக்க தான் ஃபோன் பன்னியா.." - என பல்லை கடித்து கொண்டு ஆர்யன் வினவ,

"அது.. ஒன்னுமில்ல டா.. " -என சித்து ஏதோ கூற வர

"ஒன்னுமில்லையா அப்போ வச்சி தொல.." - என ஆர்யன் சலிப்பாக கூற,

"டேய் சொல்ல வர்றத சொல்ல தான் விடே.. நீ தேடுறியே உன் தேவதை அவள மாதிரியே ஒரு பொண்ணு இங்க பப்ல இருக்கா டா.. பட் அவளான்னு தான் சந்தேகமா இருக்கு" - என சித்து கூற அடித்து பிடித்து மெத்தையிலிருந்து எழுந்தமர்ந்தான் ஆர்யன்..

"நிஜமாவா டா"- ஆர்யன் ஆர்வத்தில் கேட்க,

" ஆமா டா.. சீக்கிரம் அவ இடத்தை காலி பன்றதுக்குள்ள கிளம்பி வா.." -சித்து

"ரொம்ப தேங்க்ஸ் டா என் செல்லா குட்டி.. அவள கவனிச்சிக்கிட்டே இரு.. இதோ 15 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.." - என அழைப்பை துண்டித்தவன் அரக்க பறக்க ஃப்ரெஷ் ஆகி ரெடி ஆகி வந்தான்..

உடை மாற்றி ரெடி ஆகி வந்த ஆர்யன் தன் அருகில் படுத்திருந்த அபிமன்யுவை எழுப்ப வர,

"சொல்லு பேபி.. உன் பக்கத்துல வரவா.. வந்துட்டா போச்சு.. தள்ளி விட்டுற மாட்டியே.. சரி சரி கோச்சுக்காத தங்கம்... மொதல்ல மாமா உனக்கு நச்சுன்னு ஒன்னு தரேன்.. அப்றம் நீ மாமாக்கு பச்சக்குன்னு ஒன்னு தரனும் ஓகேவா.. உம்ம்ம்ம்ம்ம்..."

என அபி உதட்டை குவித்து தன் தேவதைக்கு முத்தம் கொடுக்க வர, ஒரே மிதி, மெத்தையிலிருந்து புரண்டு கீழே விழுந்தவன் ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் திருதிரு என விழித்தான்.

நிமிர்ந்து பார்க்க அங்கு அபியை மூக்கு விடைக்க முறைத்துக் கொண்டிருந்தான் ஆர்யன். தன் கனவு தேவதை சன்னி லியோனுடன் ரொமேன்ஸ் பன்னிக் கொண்டிருந்ததை கெடுத்த ஆர்யனை பதிலுக்கு முறைத்த அபி,
"டேய் உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா டா... நெஜத்துல தான் என்ன எவளையும் கரெக்ட் பன்ன விடுறிங்க இல்ல.. கனவுலயாவது அதுவும் என் தேவதை சன்னியோட ரொமேன்ஸ் பன்றதையும் கெடுத்திட்டியே... பாவி.. பாவி.." - என பொறிய,

ஆர்யன் முறைத்த முறைப்பில் அபியோ கப்சிப் ஆகி விட்டான்.

"அடுத்த பத்து நிமிஷத்துல நீ கிளம்பி வர்ற..இல்லென்னா நா வந்து உன்ன ரெடி பன்ற விதத்துல நீ எழுந்து நடக்கவே ஆறு மாசமாகும் புரியுதா.."
- என ஆர்யன் சொல்லிவிட்டு இல்லை இல்லை மிரட்டி விட்டு செல்ல, இன்னும் அதே இடத்தில் இருக்க அபி என்ன முட்டாளா.. அடுத்த 8 நிமிஷத்திலேயே ரெடி ஆகி விட்டான்..

பின் இருவரும் மற்ற மூவரும் சென்ற பப்புக்கு சென்றனர். போகும் வழியில் ஆர்யன் சித்து கூறியதை சொல்ல அதை கேட்ட அபி தன் நண்பன் ஒரு பெண்ணிற்காக நாயாக பேயாக அலைவதை நினைத்து தலையிலடித்துக் கொண்டான்.

பின்ன இவன் மட்டுமா அவளை தேடி அலைந்தான் அவனுக்கு நண்பனான பாவத்திற்கு அவர்களையும் சேர்ந்தல்லவா இந்த ஒரு மாதமாக வீதி வீதியாக குப்பை பொறுக்க விட்டான்..
----------------------------------------------------------------------
மும்பையில் அந்த பெரிய பப்பில்,

நாட்டின் பெரும் புள்ளிகளும் பணக்கார வீட்டு வாரிசுகளும் மட்டுமே வருகை தரும் அந்த பப்பிற்குள் நுழைந்தனர் ஆர்யனும் அபியும்.

அரைகுறை ஆடைகளுடன் ஆண் பெண் வித்தியாசமின்றி கையில் மதுபான குவளைளுடன் செவிப்புலன் கிழியும் அளவிற்கு ஒலிக்கப்பட்ட பாடலுக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தனர் நிகழ்கால தலைவர்கள், தலைவிகள் போதையில் தள்ளாடியபடியே..

இவர்களை பார்த்து முகத்தை சுழித்த ஆர்யன் தன் நண்பர்களை அக் கூட்டத்தில் தேட, அங்கு சித்துவும் ஹரியும் பாரின் பக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்து கையில் ட்ரிங்க்ஸுடன் ஒரு இடத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதை கண்டவன் அருகில் சென்று ஹரியின் தோலை தொட,

பயந்து திடுக்கிட்டு திரும்பிய ஹரி ஆர்யனை கண்டதும் ஒரு பெருமூச்சை விட்டு, "பிசாசே.. ஏன் டா இப்பிடி பேய் மாதிரி வந்து பயமுறுத்துற.."

"போடா என் வென்று" என அவனை திட்டிய ஆர்யன் சித்துவிடம்,

"டேய் எங்க டா என் ஏன்ஜல் அவள கண்டு பிடிச்சிட்டேன்னு தானே கூப்பிட்ட"

"ஆமா டா அங்க பாரு அதோ இருக்கா.. ஆனா அவளான்னு தான் மச்சா தெரியல.. ஒரே கன்ஃபியூஸா(Confuse) இருக்கு.. அன்னைக்கு ரொம்ப அடக்க ஒடக்கமா ட்ரெடிஷனல் ட்ரெஸ்ல இருந்தா... ஆனா இவ இப்பிடி இருக்கா.."
- என சித்து கூறி ஒரு திசையை காட்ட அங்கு பார்த்த ஆர்யனும் ஒரு நிமிடம் விழி விரித்து திகைத்து தான் நின்றான்.

அன்று அந்த லெஹங்காவில் தேவதை போல் காட்சியளித்தவள் இன்று ப்ளக்(Black) டெனிம், வைட் டி-ஷர்ட் அதன் மேலே ப்ளக் ஜெர்கின் போட்டு ஃப்ரீ ஹெயாரில்( free hair) மொடர்ன் மங்கையாக இருந்தாள்.

அவளை கண்டதும் அவன் மனதில் அந்த பப்பின் பாடல் ஒலியையும் தாண்டி அந்த பாடல் கேட்டது...

'உன்னை பார்த்த பின்பு நான்..
நானாக இல்லையே...
என் நினைவு தெரிந்து நான்...
இது போல இல்லையே...

எவளோ எவளொ என்று...
நெடுநாள் இருந்தேன்..
இரவும் பகலும் சிந்தித்தேன்..

இவளே இவளே என்று...
இதயம் தெளிந்தேன்..
இளமை இளமை பாதித்தேன்... '


என்ற பாடல் மனதில் ஒலிக்க அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. அங்கு அவள் ஆண், பெண் சூழ இருக்க பூல் டேபளில்( Pool table) ஸ்டைலாக பந்துகளை லாவகமாக நகர்த்துவதை கண்டவன் அவள் அழகில் சொக்கித் தான் போனான்.

தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்த ஆருத்ரா நிமிர்ந்து பார்க்க அங்கு தன்னையே மூன்று ஆடவர்கள் கவனிப்பதை கண்டு 'என்ன' என்று பார்த்தாள். ஆருத்ரா தன்னை கவனிப்பதை உணர்ந்தும் தன் பார்வையை அகற்றாது அவளையே குறுகுறுவென கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.

அவன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதில் கடுப்பான ஆருத்ரா ஆர்யனின் எதிரில் சென்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு முறைத்து நிற்க, அவள் சென்ற திசையை பார்த்த ஆருத்ராவின் எதிரில் நின்ற கயலும், ரியாவும் அங்கு சென்று அம்மூவரையும் குழப்பத்துடன் பார்த்தனர்.

ஆருத்ரா பேச வாயெடுக்கும் முன் தன் நணபர்களை கண்டு அவர்கள் அருகில் வந்த ஆதி கயலை கண்டு ஆச்சரியத்தில் "நீயா...." என்று கத்த,

அவனை அங்கு எதிர்பார்க்காத கயலும் அவனுக்கு சற்றும் குறையாத ஆச்சரியத்தில் "நீயா...." என்று கத்தினாள்.

'என்ன டா நடக்குது இங்க..' என்ற ரீதியில் அனைவரும் பார்க்க அவர்களோ தங்கள் மூன்றாம் உலகப் போரை ஆரம்பித்திருந்தனர்.

"ஹே நீ என்னடி இங்க பன்ற.. அன்னைக்கு ஏதோ குடும்ப குத்துவிளக்கு மாதிரி டிரஸ் பன்னிருந்த.. உன் பஜாரித்தனமான பேச்ச கேட்டு அப்போவே உன் மேல எனக்கு சந்தேகம் வந்திச்சு டி.... நீயும் இந்த மாதிரி பொண்ணுங்க தானா.."-ஆதி கோபமாக வினவ,

"இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா..என்னையே கேள்வி கேக்குற.. என்ட் நா எப்பிடி வேணா இருப்பேன்.. அதுல உனக்கென்ன டா பிரச்சின டுபுக்கு.." - கயலும் அவனுக்கு சற்றும் குறையாத கோபத்தில் கத்த,

'எது டுபுக்கா...' எனக் கூறி பல்லை கடித்தவன், " ஏய்... இன்னொரு தடவ என்னை டா போட்டு மரியாதை இல்லாம பேசின பல்ல பேத்துறுவேன் டி" -ஆதி

"நீ மட்டும் என்ன என்னை மரியாதையா மேடம்னு சொல்லி சலாமா வக்கிற.. நீ மொதல்ல டி போட்டு பேசுறத நிறுத்து டா டால்டா..." -கயல்

"ஓஹோ.. நா உன்ன அப்பிடி கூப்பிடனும்னு வேற ஆசை இருக்கோ.. மொதல்ல பொண்ணு மாதிரி அடக்க ஒடக்கமா இருக்க கத்துக்கோ டி.." -ஆதி

"அப்போ நீயும் மொதல்ல ஆம்பிள பையன் மாதிரி நடந்துக்க கத்துக்கோ.. என்ட், நா பொண்ணோ பையனோ உனக்கெதுக்கு டா மூடிட்டு போடா.." -கயல்

இவ்வாறு இருவரும் மாறி மாறி Tom and jerry போல் சண்டையிட்டுக் கொண்டிருக்க, இதை வாயில் ஈ நுழையாத குறையாக பார்த்துக் கொண்டிருந்த சித்துவோ ஹரியின் காதில்,
"டேய் இவன் நிஜமாவே நம்ம ஆதியா.. ஒரு பொண்ணுகிட்ட இரண்டு வார்த்தைக்கு மேல பேசி இப்போ தான் டா பார்க்குறேன்.."-என ஆச்சரியம் குறையாமல் கூற,

"ஆமா டா.. அதுவும் இவன் முறைக்கிற முறைப்புல எந்த பொண்ணா இருந்தாலும் இவன்கிட்ட பேசவே தயங்கும்..ஆனா இந்த பொண்ணு அவனுக்கு மேல எனா இருக்கா.." -ஹரி

"டேய் அவன மொதல்ல சமாதானப்படுத்தனும் டா.. நாம பேசினா அவ மேல இருக்குற கோபத்துல நம்மல பொழந்துறுவான்.. இதுக்கு இந்த ஆர்யா பையன் தான் சரி.."
என்று இருவரும் அவனை பார்க்க அவனோ இந்த உலகில் இருந்தால் தானே.. பக்கத்தில் ஒரு கலவரம் நடப்பதையே உணராமல் தன் உலகில் ஆருத்ராவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தான்..

"இவன் என்ன டா பட்டிக்காட்டான் மிட்டாய் கடய பார்த்த மாதிரி அந்த பொண்ணையே வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருக்கான்.. அதுவும் அந்த பொண்ணு இவன கண்ணாலயே எறிச்சிடும் போல.. என்னா முறை முறைக்குது அறிவு கெட்டவன் மொதல்ல அவன் முதுகுலயே ஒன்னு போடு டா..." -சித்து

ஹரி போட்ட அடியில் சுயநினைவிற்கு வந்தவன் அப்போது தான் ஆதி கயலுடன் சண்டையிடுவதை கண்டு புரியாமல் அவர்களை பார்த்தான்.

ஆதியை சமாதானம் செய்த ஆர்யா 'என்ன' என்று வினவ,

"இவளால தான் டா அன்னைக்கு பங்ஷன்ல எனக்கு செம மூட் அவுட் ஆகிருச்சி.." என சொல்லி நடந்ததை கூற தொடங்கினான்..

அன்று பார்ட்டியில் ஆருத்ராவின் நடனம் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது தனக்கு தொலைப்பேசி அழைப்பு வர, மண்டபத்தின் ஒரு மூலைக்கு சென்ற ஆதி பேசிவிட்டு திரும்பி ஃபோனை நோண்டிக்கொண்டே நடக்க, எதோ ஒரு யோசனையில் வந்துக் கொண்டிருந்த கயல் இவன் மீது மோத இருவரும் ஒரு சேர கீழே விழுந்து உருண்டு பிரண்டனர்.

உடனே சுதாகரித்த கயல் எழுந்து "சாரி.. சாரி.." எனக் கூற கடுங்கோபத்தில் எழுந்த ஆதி அங்கு மூலையில் நான்கு பார்ட்ஸாக சிதறிக்கிடந்த தன் தொலைப்பேசியை பார்த்து இன்னும் கடுப்பாகி உச்சஸ்தொனியில் கத்த தொடங்கினான்..

"உன் கண்ண எங்க மண்டைக்கு பின்னாடி வச்சிட்டு வரியா.... யாருக்கு வேணும் உன் சாரி.. எங்க பசங்க இருப்பாங்க.. அவங்கள இடிக்கனும்னே அலையுரது..." -ஆதி


'என்ன இவன் நா பேச வேண்டிய டயலாக்கெல்லாம் இவன் பேசிக்கிட்டு இருக்கான்..' என மனதில் நினைத்த கயல்,
"ஹலோ.. நா என்ன இதையே வேலையா வச்சி அலையுற மாதிரி உங்க இஷ்டத்துக்கு பேசிறிங்க.. தெரியாம தானே நடந்துச்சு அதுக்கு எதுக்கு இப்பிடி தாம்தூம்னு குதிக்கிறீங்க.."

அவளை தீப்பார்வை பார்த்தவன் ,
"உன்ன மாதிரி பொண்ணுங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. இடிச்சது மட்டுமில்லாம என் ஃபோனையும் உடைச்சிட்ட ராட்சசி.." என ஆதி அவன் போக்கிற்கு திட்ட,

அவன் ராட்சசி என்று சொன்னதில் கடுப்பான கயல்,
"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் என்ன டா ஓவரா பேசிக்கிட்டே போற.. எனமோ உன் அழகுல மயங்கி உன் மேல வேணும்னே விழுந்த மாதிரி கதையடிக்கிற.."

"என்ன டி மரியாதை தேயுது..." - ஆதி

"உனக்கெல்லா என்ன டா மரியாதை.. உன் கூட பேசினா எனக்கு தான் டைம் வேஸ்ட் சிடுமூஞ்சி ஆளவிடு டா சாமி" -எனக் கூறி "போயும் போயும் ஒரு நல்ல பைத்தியத்துக்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்" -என முணுமுணுத்து விட்டு அவனை திரும்பி கூட பார்க்காமல் கயல் விரைந்து செல்ல,

அவள் பேசியதில் உச்ச கட்ட கோபத்தில் கொந்தளித்த ஆதி அவள் முணுமுணுத்தது வேறு காதில் விழ,
"இன்னொரு தடவ என் முன்னாடி வந்த நீ சட்னி தான் டி.." - என செல்லும் அவளையே பார்த்து கத்தினான்.

அனைத்தையும் கூறி முடித்தவன் ஆர்யனை பார்க்க அவன் முறைத்த முறைப்பில் ஏதோ கூற வர, ஆர்யன் அவனை 'வாய மூடிட்டு இரு டா' என்ற ரீதியில் சைகையில் சொல்ல ஆதி கயலை முறைத்து விட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

ஆதியை அடக்கிய ஆர்யன் பழையபடி தன் வேலையை தொடர அதாவது சைட் அடிப்பதை தொடர, இவன் பார்க்கும் பார்வையில் எரிச்சலான ஆருத்ரா ஏதோ பேச வாயை திறக்க, அவளை கையால் சைகையில் நிறுத்தியவன் கேட்ட கேள்வியில் மூன்று பெண்களும் விழி பிதுங்க திகைத்து நின்றனர்..



❤தொடரும்...❤

--------------------------------------------------------------------



❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
IMG_20200724_095221.jpg

❤அத்தியாயம் 06❤

"ஹரிஷ்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.." என ஆர்யன் கேட்ட கேள்வியில் மூன்று பெண்களும் விழிபிதுங்கி திகைத்து நின்றனர்.

உடனே சுதாகரித்த ரியா,
"ஹலோ என்ன உங்க இஷ்டத்துக்கு வந்து முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்ககிட்ட சம்மதமே இல்லாம கேள்வி கேக்குறீங்க.. மொதல்ல நீ யாரு மேன்.." - என பொரிந்து தள்ள,

அவளுடைய கோபத்தை அலட்சியம் செய்த ஆர்யன் கூலாக,
"உட்கார்ந்து பேசலாமா லேடீஸ்.. உங்ககிட்ட நிறையவே பேச வேண்டி இருக்கு.." -என சொல்லி அவனும் மற்ற மூவரும் முன்னே நடக்க. வேறுவழி இன்றி அவன் பின்னே சென்றனர் மூன்று பெண்களும்.

தங்களுடன் அபி இல்லாததை உணர்ந்த ஹரி அவனை தேட கோபியர்களுக்கு மத்தியில் புல்லாங்குழல் இல்லாத கண்ணனாக சுற்றி பெண்களுடன் கடலை போட்டுக்கொண்டிருப்பதை கண்டவன் தலையிலடித்துக் கொண்டு அவனை அக்கூட்டத்திலிருந்து இழுத்துட்டு வர நம் அழகு மங்கைகளை கணடவன் "பியூட்டிஃபுல் கேர்ள்ஸ்" என யோகிபாபு பாணியில் கூறி அப்பட்டமாக சைட் அடித்துக்கொண்டு இருந்தான்..

ஆருத்ரா, கயல், ரியா மூன்று பேரும் கையும் களவுமாக மாட்டிப்பட்டதில் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்க அவர்களை கண்களில் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தனர் ஐந்து ஆண்களும்..

சிறிது நேரம் மௌனம் ஆட்சி செய்ய ஆர்யனே பேச்சை ஆரம்பித்தனர்.
"உங்களுக்கும் ஹரிஷ்கும் என்ன சம்மதம் இருக்குன்னு எங்களுக்கு தெரியாது.. ஆனா அவன் சாவுக்கு நீங்க தான் காரணம்னு நல்லாவே தெரியும்.. அதுக்கான ஆதாரம் கூட எங்ககிட்ட இருக்கு.. சோ, நீங்க எங்ககிட்ட எதுவும் மறைக்க முடியாது லேடீஸ்.." -என ஆர்யன் சொல்ல,

மூன்று பெண்களும் 'ஆதாரமா' என்று புரியாமல் பார்க்க அவர்களை ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்த ஆர்யன் ,
"என்ன நம்பிக்கையில்லையா... ஓகே... அப்போ இத பாருங்க எல்லாமே புரியும்.." -என்று தனது தொலைப்பேசியில் அன்று பதிவு செய்த வீடியோவை காட்டினான் ஆர்யன்.

அன்று பார்ட்டியில் ஆர்யன் ஆருத்ராவை தேடி சென்ற நேரம் மண்டபத்தின் பின்பகுதியில் கண்ட காட்சியை தொலைப்பேசியில் பதிவு செய்துக்கொண்டான்.
அதுவே இது..

அதில் மண்டபத்தின் பின்பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த இரண்டு கார்ட்ஸ் கீழே மயங்கியிருக்க ஐந்து பெண்களும் மயக்கமடைந்திருந்த ஹரிஷை தங்களுடைய வாகனம் நோக்கி யாருக்கும் தெரியாமல் தூக்கிச்செல்வதே அதில் படமாக்கப்பட்டிருந்தது.

ஆனால், அன்று ஆர்யன் சித்துவின் அழைப்பை துண்டித்து விட்டு அவர்களின் பின்னால் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின்தொடர முயற்சி செய்ய, ஒரு கட்டத்தில் அவனின் கண்ணிலிருந்து அவர்கள் மறைய பின் ஒரு மாதமாக தேடி அலைந்து இன்றே நம் நாயகனிடம் வசமாக சிக்கி உள்ளனர் நம் நாயகியும் அவளின் நண்பிகளும்.

அதனை பார்த்து ஜெர்க்கான மூன்று பெண்களும் கண்கள் விரிய திகைத்து, தங்களுடைய சிறிய கவனமின்மையால் இவர்களிடம் மாட்டிக் கொண்டதை நினைத்து தங்களை தாங்களே கடிந்துக் கொண்டனர். தன்னை நிதானப்படுத்திய ஆருத்ரா ஆர்யனை நோக்கி,
"இப்போ உங்களுக்கு எங்ககிட்ட இருந்து என்ன வேணும்.."- என கூர்மையான பார்வையுடன் கேட்க,

அவள் கேட்ட விதத்தில் புன்னகைத்து,
"கற்பூர புத்திமா உனக்கு உடனே பத்திக்கிட்ட.." என கூறியவன் அடுத்த நிமிடமே இறுகிய முகத்துடன்,
"உங்ககிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் வேணாம்.. ஆனா எங்களுக்கு அவங்களோட உயிர் வேணும்.. நீங்க எதுக்கு அவனுங்கள கொல்ல நினைக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரிய வேணாம்.. அதுமாதிரி நாங்க பழிவாங்குரத்துக்கான ரீசனும் உங்களுக்கு தெரிய தேவையில்ல.. பட் இரண்டு டீமும் சேர்ந்து இந்த வேலய பன்னலாம்.. என்ன சொல்றீங்க.." -ஆர்யன்

" நாங்க முடியாதுன்னு சொன்னா.." -என கயல் கேட்க,

"நாங்க அவனுங்கள போட்டு தள்ளிட்டு மாட்டிக்காம இருக்க இந்த வீடியோவ டி.ஜி.பி ஓஃபீஸ்க்கு அனுப்பி வச்சிறுவோம்... எப்பிடி வசதி.."-சித்து

சிறிது நேரம் யோசித்த ஆருத்ரா, "சரி நாங்க ஒத்துக்குறோம்.." என சொல்ல கயலும் ரியாவும் அவளை அதிர்ச்சியாகி பார்க்க, கயல் "ருத்ரா.." என அழுத்தமாக கூறி அவள் கையை பிடித்தாள்.

ஆனால் ஆருத்ரா இறுகிய குரலில்,
"ஆனா ஒன்னு.. இந்த விஷயம் வெளில தெரிஞ்சிச்சின்னா அவங்களால எங்கள பிடிக்கவே முடியாது.. அதேமாதிரி உங்கள எங்ககிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முடியாது.." - என எச்சரிக்கும் தொனியில் சொல்ல,

அவள் மிரட்டலில் மற்ற ஆண்கள் ஜெர்க் ஆக, அவளுடைய மிரட்டலை ரசித்த ஆர்யன்,
"சரி அதவிடு.. இனிமே உங்க பாதுகாப்புக்காக உங்ககூட சேர்ந்து வேல பார்க்க போறோம்.." என சொல்லி ஏதோ கூற வர,

அவன் கூறியது தான் தாமதம் மூன்று பெண்களும் 'வட்(What)' என்று கோரஸாக கேட்டு முறைக்க, சற்று பதறிய ஆர்யன்,
"ஐ மீன்.. எங்க பாதுகாப்புக்காகவும்... உங்க கூட சேர்ந்து வேல பார்க்க போறோம்னு சொல்ல வந்தேன்... ஹிஹிஹி" -என்று அவன் சமாளிக்க,

அப்போதும் ஆருத்ரா அவனை முறைத்து பார்க்க பேச்சை மாற்றும் பொருட்டு,
"ஐ அம் ஆர்யன்.. உங்க பேர தெரிஞ்சிக்கலாமா..."- என்று கேட்டு வைக்க,

'ஆருத்ரா' என்று தனது பெயரை கூறியவள் அவனுடைய பெயரை தன் மனதில் 'ஆரா' என பதிந்து கொண்டாள்.. அவளும் முதன்முதலாய் தன்னை நோக்கிய ஆர்யனின் ரசனை பார்வையில் அவனின் காந்தக் கண்களில் தன்னை சற்று தொலைக்கத் தான் செய்தாள். ஆர்யனும் ஆருத்ராவுடைய பெயரை மனதில் 'ஆரு' என சொல்லிக் கொண்டு அவளை பார்வையாலையே துளைத்தெடுத்தான்.

ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்த கயல் தனது பெயரை கூறியவுடன் 'ராட்சசி' என ஆதி அவளை வறுத்தெடுத்தது மட்டுமன்றி கயலும் 'சிடுமூஞ்சி' என அவனை மனதில் கருவிக்கொண்டாள்.இருவரும் ஒருவரையொருவர் அப்பட்டமாக பார்வையாலயே எரித்துக் கொண்டிருந்தனர்.

'இந்த கொலைகாரிங்ககிட்ட நம்மள சிக்க வச்சிட்டானே இந்த ஆர்யா நாய்..' என மனதில் புலம்பியபடி ஹரி நிமிர்ந்து பார்க்க அவனை ரியா முறைப்பதை பார்த்து 'ஆத்தீ...' என மனதில் நினைத்து கண்களை பயத்தில் அங்குமிங்கும் உருட்டியவாறு தலையை கீழே குனிந்து கொண்டான்.

தன்னை நோக்கிய அவனுடைய மருண்ட பார்வையை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் அதை வெளிக்காட்டாமல் வெளியில் முறைத்தபடியே இருந்தாள்.ஹரியுடைய இச் செய்கை அவள் மனதை அவன் பால் ஈர்த்தது எனமோ உண்மை தான்...

பின் அனைவரும் விடைப்பெற்று செல்லும் நேரத்தில் பெண்களை தொடர்பு கொள்ள அவர்களின் தொலைப்பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டனர்.

ஆர்யன் தான் வாகனத்தில் ஏறி செல்லுல் வரை ஆருத்ராவையே விழுங்கி விடுவது போல் பார்க்க அவனது பார்வையில் பெண்ணவள் திணறித்தான் போனாள்.. தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்ட ஆண்கள் தங்கள் திட்டம் நிறைவேறியதை நினைத்து அர்த்தப் புன்னகையை சிந்திக்கொண்டனர்.
------------------------------------------------------------------
அதே இரவு,
ஆருத்ரா வீட்டில்,

"நீங்க அவனுங்கள சும்மாவா விட்டுட்டு வந்தீங்க.. எவ்ளோ தைரியம் இருந்தா வீடியோ எடுத்து எங்களையே மிரட்டுவாங்க.. நீங்களும் சரின்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க.. யோசிச்சு தான் முடிவு பன்னிங்களா.." -என துர்கா ஆவேசமாக கத்த,

அவள் தோளில் கையை போட்டு சமாதானம் செய்த ஆருத்ரா,
"இங்க பாரு துரு கோபப்படாத.. நம்மளுக்கு அவனுங்கள பழி வாங்கினா போதும் இவங்களுக்கும் அதே எண்ணம் தான்.. அதனால தான் சரின்னு சொன்னேன்.. அவங்கள பார்த்தாலும் தப்பானவங்களா தெரியல அவங்களால நமக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"அது எப்பிடி இவ்ளோ உறுதியா சொல்ற ருத்ரா.. ஒருவேள அவங்க எல்லா சேர்ந்து பன்னிட்டு நம்மல மாட்டிவிட்டுட்டா.." -ஆதிரா

"அப்பிடி மட்டும் நடந்தா அவனுங்கள நா கொல்லாம விட மாட்டேன்.."-என கடுங்கோபத்தில் கயல் கூற,

"நாம ஒன்னும் இதே தொழிலா வச்சி சுத்தல்ல.. ஏதோ நம்ம சூழ்நிலையால இந்த நிலைமையில நிக்கிறோம்.. அவ்ளோ தான்.. அவங்கள கொல்றது மட்டும் தான் நம்ம நோக்கம். மத்தவங்களுக்கு நம்மளால எந்த கஷ்டமும் வர கூடாது.. நா வரவும் விடமாட்டேன்.." -என ஆருத்ரா உறுதியாக கூற,

"அப்போ இந்த அஞ்சு பேரால நமக்கு ஆபத்து வந்தா அப்பவும் அமைதியா தான் இருக்கனும்னு சொல்ல வரியா.."- ரியா

"நம்மளோட வேல முடிஞ்சதும் நாம என்ன பன்னனும்னு முன்னாடியே ப்ளான் பன்னியாச்சு... அதுக்கப்றம் யாரு நினைச்சாலும் நம்மள கண்டுபிடிக்க முடியாது நா சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் ..."
-என ஆருத்ரா கூற அதை ஆமோதித்த மற்றவர்களும் தங்களின் வேலையில் கவனமானர்.
-----------------------------------------------------------------
அடுத்த நாள் காலை,
அந்த பெரிய ஹோலில்,

ஹரிஷின் தந்தை மகேஷ், ஆர்னவ், கிரிஷ் மற்றும் ஹரிஷ் கேஸ் தொடர்பாக விசாரனை மேற்கொள்ளும் அந்த முக்கிய CBI அதிகாரிகள் இருவரும் அமர்ந்திருக்க அவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை நடைப்பெற்றது.

"ஹரிஷ் இறந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகிருச்சி ஆனா நீங்க இன்னும் அந்த கில்லர்ஸ்ஸ கண்டுபிடிக்கல்ல.. என்ன தான் பன்னிக்கிட்டு இருக்கீங்க"- என கண்ணில் கோபம் பொங்க கேட்டான் ஆர்னவ்..

"நீங்களும் சீக்கிரம் கண்டுபிடிச்சிருவீங்கன்னு உங்க பேச்ச நா நம்பினா என் பையன கொலை செஞ்சவங்க பத்தி ஒரு சின்ன தகவல் கூட உங்களால தெரிஞ்சிக்க முடியல.." -மகேஷ் ஆத்திரத்தில் கத்த,

"அங்கிள் இவங்க இதுக்கு சரிபட்டு வருவாங்கன்னு எனக்கு தோணல.. ஒரு மாசமா ஈ ஓட்டிக்கிட்டு இருந்திருக்காங்க.. இத நானும் ஆர்னவும் பாத்துக்குறோம்.. அதுல இவங்கள தலையிட வேணாம்னு மட்டும் சொல்லுங்க.." -கிரிஷ் அவர்களை ஏளனமாக பார்த்தபடி சொல்ல,

கிரிஷின் பேச்சில் ஆத்திரமடைந்த அந்த 1ம் CBI அதிகாரி அதை வெளிக்காட்டாமல்,
"எங்கள மன்னிச்சிருங்க சார்.. அவங்களுக்கு எதிரா எந்த ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கல்ல.. நாங்களும் விசாரனை பன்னிக்கிட்டு தான் இருக்கோம்..கொஞ்சம் பொறுமையா இருங்க.."

என அவன் பேசிக்கொண்டிருந்ததை இடைமறித்த ஆர்னவ்,
"இன்னும் எவ்வளவு நாள் பொறுமையா இருக்க சொல்றிங்க சார்ர்.." என நக்கலாக கேட்ட,

"கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிருவோம் சார்.. ஹோல்ல இருந்த அத சுத்தி ஃபிக்ஸ் பன்னியிருந்த எல்லா சிசிடிவி கேமராஸையும் ச்செக்(Check) பன்னோம்.. பட் ஹரிஷ் ஹோல்ல இருந்து வெளில போனது எந்த கேமராவுலயும் பதிவாகியில்ல.. நீங்க சொன்ன மாதிரி பவர் கட் ஆகின நேரம் தான் ஏதோ ஆகியிருக்கு.. என்ட் அங்க இருந்த எல்லா சிசிடிவி கேமராவும் கொஞ்ச நேரம் வேர்க் ஆகாம இருந்திருக்கு..அந்த கேப்ல தான் யாரும் கவனிக்காத மாதிரி கில்லர்ஸ் ஹரிஷை கடத்திருக்காங்க.."
- 2ம் CBI அதிகாரி

"என்ட் நீங்க இந்த கேஸ் தொடர்பா சொன்ன முக்கியமான தகவல்.. அதாவது ஹரிஷ்க்கு கடைசியா ஒரு பொண்ணு கோல் பன்னா அவள இன்வைட் பன்ன தான் அவர் வெளிய போனாறுன்னு.. அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம்.. " - என 1ம் CBI அதிகாரி பேச,

அவர் பேசுவதை குறுக்கிட்ட கிரிஷ்,
"அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டிங்களா.. அப்போ அவள விசாரிக்கலாமே.. அவகிட்ட இருந்து அந்த கில்லர்ஸ் பத்தி தகவல் கிடைக்கலாம்.. ஒருவேள அவளா கூட இருக்கலாம்.." -என சொல்ல,

இடமும் வலமுமாக தலையசைத்த அந்த 1ம் CBI அதிகாரி,
"அந்த பொண்ணு இல்ல சார்.. அந்த பொண்ணு அன்னைக்கு பார்ட்டிக்கு கூட வரல.. இன்னும் சொல்லனும்னா அந்த பொண்ணு அப்போ மும்பையிலயே இல்ல."
- என சொல்ல ஆர்னவ், கிரிஷ், மகேஷ் மூவரும் திகைத்து விட்டனர்.

ஒரு பெருமூச்சை விட்ட அந்த அதிகாரி மீண்டும் தொடர்ந்தார்.
"ஹரிஷ்க்கும் அந்த பொண்ணுக்கும் சோசியல் மீடியால பழக்கம் ஏற்பட்டதா அத ஹரிஷே சொன்னதா சொன்னிங்க.. அதனால அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்க ஹரிஷோட இன்ஸ்டாக்ரேம் அக்கௌன்ட்ட ஹெக்(Hack) பன்னோம்.. அதுல அவர் ஒரு பொண்ணு கூட ரொம்ப க்ளோஸாவே பேசியிருக்காரு.. அந்த பார்ட்டிக்கு கூட அவள இன்வைட் பன்னியிறுந்தாரு..

அந்த பொண்ணு வேற யாரும் இல்ல மகேஷ் சார்.. உங்க பிஸ்னஸ் பார்ட்னர் மிஸ்டர்.அமித்தோட பொண்ணு ஷாயா.. ச்சீஃப் மினிஸ்டர் பார்ட்டி நடக்கும் போது ஷாயா மும்பையிலேயே இல்ல அதுக்கு இரண்டு நாள் முன்னாடி தான் அவங்க ஏதோ வேல விஷயமா டெல்லி போயிருக்காங்க.

அவங்கள மும்பை வரவழைச்சி விசாரிச்சதுல தான் எங்களுக்கு எல்லாமே தெரிஞ்சது.. அன்னைக்கு அவங்க மும்பையில இல்ல என்றதுக்கான ஆதாரம் கூட சரியா இருக்கு.. " என அந்த 1ம் CBI அதிகாரி கூறி முடிக்க,

"ஆனா அன்னைக்கு ஹோல்ல இருக்கும் போது ஷாயாவோட நம்பர்ல இருந்து அவங்க வொய்ஸ்ல தான் ஹரிஷோட பேசியிருக்காங்க.. அவர ஹோல்ல இருந்து வெளிய வர வைக்க அந்த கில்லர்ஸ் ஷாயாவ யூஸ் பன்னிருக்காங்க.." - 2ம் CBI அதிகாரி

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ, 1ம் CBI அதிகாரியே அவ் அமைதியை கலைத்தார்.

"எங்க மேல நம்பிக்கை வைங்க சார். எந்த ஆதாரமும் இல்லாம நாங்க அவங்கள கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்பவே முயற்சி பன்றோம்.. கொஞ்சம் பொறுமையா இருங்க" - 1ம் CBI அதிகாரி

அதை ஆமோதித்த ஆர்னவ், கிரிஷ், மற்றும் மகேஷ்,
"சீக்கிரம் கண்டுபிடிங்க.. ஒரு அளவுக்கு மேல எங்களாலும் பொறுமையா இருக்க முடியாது.. மறுபடியும் உங்கள நம்புறோம்.. அந்த கில்லர்ஸ்ஸ கண்டுபிடிச்சு சீக்கிரம் ஒரு நல்ல தகவல எங்ககிட்ட சொல்லுங்க.. அவங்க செஞ்ச தப்புக்கு அதுக்கும் மேலான தண்டனைய கொடுக்கனும்.."
என கண்ணில் அனல் பறக்க கூறி விட்டு அவ் அறையை விட்டு சென்றனர்.

அவர்கள் சென்றவுடன் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் இரண்டு CBI அதிகாரிகளும். சில நிமிடங்களில் ஹரிஷ் கேஸ் தொடர்பாக விசாரனை செய்யும் இன்னும் சில அதிகாரிகள் வர,

அவர்களை உட்கார சொல்லி அவர்களுடன் ஹரிஷ் கொலை தொடர்பாக சில முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டார்கள் அந்த இரண்டு அதிகாரிகள்.அவர்கள் கூறியதை கேட்ட மற்ற அனைவரும் யோசனையினூடே தலையாட்டி தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க, ஒரு மர்மப்புன்னகையை புரிந்தான் அந்த 1ம் CBI அதிகாரி..


❤தொடரும்❤

-------------------------------------------------------------------

❤ZAKI❤
 
Last edited:

Jadejavid

Writer'ZAKI'
என்னுடைய முதல் கதை உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி கதை அமேஸன் கிண்டலில் புத்தகமாக வெளிவந்துள்ளது. என்னுடைய கதைகளுக்கு வாசகர்களாகிய நீங்க கொடுத்த ஆதரவு மற்றும் கருத்துக்கள் தான் எனக்கு எப்போதுமே மோடிவேட் அ இருக்கு நட்பூஸ்😍😍

அமேஸனில் புத்தகம் வெளியிடுவது தொடர்பாக என்னோட ஏகப்பட்ட சந்தேகங்களை தீர்த்து, எனக்கு உதவி செய்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

இதோ அமேஸன் கிண்டலில் என்னுடைய கதைக்கான லிங்க்
👇👇

கதை பற்றி👇👇

உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி

தங்கள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கதாநாயகிகள்.. அவர்களுக்கு துணையாக நிற்கும் நாயகர்கள்... நாயகர்கள் யாரென்ற உண்மை அவர்கள் துணைவிகளுக்கு தெரிந்தால்...???

இரு துருவங்களுக்கிடையேயான காதல், மோதல், நட்பு, உறவு, நகைச்சுவை, த்ரில்லர், காமம், ரொமேன்ஸ், பிரிவு, வலி என எல்லாமே கலந்த பல திருப்பங்களுடன் கூடிய காரசாரமான த்ரில்லர் காதல் நாவலே இது.
ஐந்து வகையான ஜோடிகள், ஐந்து வகையான காதல் என பெண்கள் துஷ்பிரயோகத்தை எதிர்த்து நிற்கும் பெண்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட காதல் கதை..
எப்போவும் போல உங்க ஆதரவு கொடுங்க நட்பூஸ் And, ரொம்ப ரொம்ப நன்றி❤❤

-ZAKI❤
 
Status
Not open for further replies.
Top