All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Subasini

Well-known member
தன்னை உயிர்பித்து கொள்ள துடிக்கும் அர்ஜூன்...

உயிர்பிக்க அவன் உறிஞ்சியது அவளுடைய மானமோ அவனோடு
பிணைத்திருக்க, உயிர் உயிர்க்க அவன் சித்தம் தெளிய அவளிழந்ததை மீட்டெடுக்க அவன் போராடும் களமே வேறாக இருக்குமோ....

தன்னை தொலைத்து அவனை மீட்டி எடுக்கும் பெண்ணவளால் குற்ற உணர்வு என மேல் சாயம் பூசிய காதலால் ராவணாக மார்பை நிமிர்த்தி அகங்கரிக்கும் அவனை ராமனாக அழகாக செதுக்கும் நாள் தான் இனி வரும் காலங்களில் இருக்குமோ...

அவளை அவன் இதழனைத்து கவிபாடும் நேரம் அவனை இடையூறு செய்யும் கண்களுக்கு புலப்படாத கரடி யாரென கண்டு பிடிக்காத இந்த ஹீரோ ஆர்மி மிகவும் தோய்வு நிலையில் இருப்பதை இங்கு சுட்டி காட்டுகிறேன் ஸ்ரீ மா 😁😁😁😁😁
ஹீரோ ஆர்மிஸ் தூங்கிட்டு இருக்காங்க போல 😁😁😁😁

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤❤ தலைவர் மிகவும் கட்டுப்பாட்டோடு இருப்து எங்கே உடைய போகும் தருணம் படிக்கு வெயிட்டிங் 😂😂😂
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!





இனிய தோழி,





கண்ணன் அவன்


தேவனும் அல்ல!


மாயக்காரனோ...?


கிருஷ்ணன் அவன்


ராமனும் அல்ல!


தந்திரக்காரனோ...?


ராதை அவள்


பேதையும் அல்ல!


நவீன நர்த்தகி


நவரசம் காட்டும்


காதல் யோகியோ...?





கன்னமிட்டவன்


கைகொண்ட கன்னி!


கன்னமிட்டவன்


மெய்கண்ட கள்ளி!





கைதியாய் நின்றாலும்


கரைதேடா பெண்மை!


செய்தியாய் கொன்றாலும்


திரைதேடா உண்மை!





குற்றமுள்ள நெஞ்சு


மறுகி நின்ற போதும்,


அச்சமுள்ள நெஞ்சு


குறுகி நின்ற போதும்,


மிச்சமுள்ள நெஞ்சு


உருகி நின்றதென்ன...!


காதல் தேடாத


மன்னனவன் முன்னால்


காதலால் ஆடுமோ...


ராதையவள் நெஞ்சம்!





பழிபாவம் தீர்க்க


நீதி கேட்ட கள்வன்!


விழிதாபம் தீர்க்க


ஆதி கேட்ட கள்வன்!


வழி மாறி நின்றால்


விதியாடும் அன்றோ...?





விதியோடு போகும் காதல் மதி - இது


சதியோடு போகும் காதல் விதி!


காதல்...! காதல்...! காதல்...!


தன்னுயிரை மீட்டிய காதல்!


தன்னுணர்வை ஈட்டிய காதல்!


காதல் போயின் சாதல்!


காதல் புரியா காரிய வாதி!


காமம் தேடும் வீரிய வாதி!


காரியம் பெரிதோ...


வீரியம் பெரிதோ...


யாவும் சிறிதோ


காமத்தின் முன்னே!





காமத்தின் வழியில் அவன்!


காதலின் வலியில் அவள்!


காமம் வழியோ...?


காதல் வலியோ...?


மீட்கும் வேளையில்


வலி நிவாரணி - அது


காமத்தின் வழி வென்ற காதலோ...?





வாழ்த்துக்கள் தோழி, நன்றி








 

Banumathi Balachandran

Well-known member
சாய்க்கு ஒரு பெரிய ஆப்பு வைத்து துரத்தி விட்டாச்சு ஆனால் அவள் அடி பட்ட நாகமாக மாறி அவர்களுக்கு என்ன செய்ய காத்திருக்கின்றாலோ?

கண்ணன் கடனை அடைத்து அனுவை காப்பாற்ற நினைத்து அவளை திருமணம் செய்து அவனை புலம்பவிட நினைத்தாய் ஆனால் அவன் அவளை கடத்தி உன்னை புலம்பவிட்டு விட்டான்.

கடந்த காலத்தில் அப்படி என்ன தான் செய்தாய் இப்படி அவனை பரிதவிக்க வைக்கின்றாயே
 

vijirsn1965

Bronze Winner
ennada ithu avan enna seithaalum yeappadi pesinaalum thannaiye kurai solli kolkiraale appadi enna seithiruppal yean anu eranthathaaga kuri aval thaai abiramiyidamirunthu avalai maraikka veandum super aduththa udiku aavaludan waiting mam(viji)
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அடுத்தது என்ன நடக்குமோ என ஒவ்வொரு நாளும் ஆர்வத்தை தூண்டும் அத்தியாயங்கள்...

இறந்தவள் என்று நினைத்த அனுவை பார்த்த கிருஷ் சிறிய அதிர்ச்சியை காட்டி உடனே மறைத்து அவளிடம் வெறுப்போடு பேசினாலும் சாய் தொட்டவுடன் வாந்தி எடுக்கும் கிருஷ்... அப்போது அனுவை தவிர அவனால் மற்றவளை நினைக்க கூட முடியாது...
அவளை கொல்ல நினைத்தவன் அவளால் மிக பெரிய அவமானத்தை சுமந்தவன்.. அவள் பேர் கெட வேண்டும் என்று தன் பெயரையும் ராவணனாக்கி கொண்டவன்.. அவளை தன்னிடம் வரவைத்து பழி தீர்க்க அமைச்சர் பதவியையே உதறி தள்ளியவன்.. அவள் மட்டுமே அவனுக்கு இலக்கு.. இதனால் எந்த எல்லைக்கும் செல்வான் போல..

ஆனால் அனுவின் வருத்தமும் கலக்கமும் ஒருபுறம் என்றால் கிருஷின் மேல் அவளுக்கு உள்ள புரிதல் அதாவது ராவணன் என்றாலும் நீங்க ராமனே என்பது அபாரமான புரிதலால் கிருஷ் முகத்திலும் அற்புதமான புன்னகை...

எதிர்மறையான காவியம் என்றாலும் ஸ்ரீ மேம் நேர்மறையாக்க தெரியாதவரா என்ன!!!!

அபிராமி சுயநலத்தின் மொத்த உருவம்... அனு உயிரை கொடுத்து அவள் மகள் உயிரை மீட்க வேண்டுமாம்... அபிராமி அனுவின் அன்னை என்றால் அவள் நடவடிக்கை? அனு உயிரோடு இருப்பதை மறைத்த கணவன்.. அபி அனுவின் அன்னை தானா??

அனு கண்ணன் அழகான தோழமை.. அனு பணம் கொடுத்து உதவுவது பெரிதென்றால் அவளை காப்பாற்ற திருமணம் வரை கண்ணன் சென்றது அற்புதமான தோழமை...

அனுவை கடத்திய நம் நாயகன் அவளை முத்தமிட்டப்பின் வியர்த்து நடுங்குவது ஏனோ? அனு சொல்வது பலித்துவிட்டதாக வேதனைப்படுவது ஏனோ? நிறைய விடை தெரியாத கேள்விகள்??

அவன் வேதனையை கண்டு துடிக்கும் நம் நாயகியின் மனதை நாயகன் புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ?காமத்தை வென்று காதலாகும் போதா?
காதலை தோற்கடித்து காமம் வென்ற போதா?
அதனால் நம் நாயகி துடிக்கும் போதா? அப்போதாவது அவன் மனம் பழி தீர்த்த இறுமாப்புடன் அவளிடம் அடைக்கலம் ஆகும் போதா?

அற்புதமான காவியம்.. ஒவ்வொரு வாக்கியமும் தேன் துளிகள்... ஒவ்வொரு கவிதையும் சிந்திக்க தூண்டும் எதிர்கால நிகழ்வுகள்... உணர்ச்சி பிழம்புகள்..

அற்புதம் ஸ்ரீ மேம்... தாங்கள் ஒவ்வொரு கதையையும் காவியமாக்கி அதில் நாங்கள் மூழ்கி தத்தளித்து எங்களையும் பதமாக கரை சேர்த்துவிடுவீர்கள்.. ஹா! ஹா!

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்..
 
Top