All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா!!!’ - கருத்துத் திரி

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...! ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 16)

தங்கப்பன் மாதிரி தகப்பனுங்க இருந்தா.. இந்த மாதிரி அயோக்கியன்ங்களுக்கு பெத்தவங்களோட தயவு கிடைக்காம உடனுக்குடனே தண்டனையும் கிடைச்சிடும் தானே...?

அய்யய்யோ..! இவ ரொம்ப சினிமாவெல்லாம் பார்ப்பா போலவே..? ஆனாலும் மத்தவங்களை எல்லாம் கதி கலங்க வைக்குற இந்த சக்தீஸ்வரனையே இவ இப்படி
கதி கலங்க வைக்க கூடாது.

ஏன்.. ஸ்டேட்டஸ்க்காக இதெல்லாம் சக்குவை செய்யச் சொல்லணும். நாம நேசிக்கிறவங்க எப்படி இருக்காங்களோ அப்படியே அவங்களை ஏத்துக்கறது தானே காதலோட குணம். அவளுக்குன்னு தனியா ஸ்டேட்டஸ் இல்லைன்னு தெரியும் தானே....? அப்புறம் ஏனிப்படி பண்றான்...? அப்ப ஸ்டேட்டஸ் இருந்தா தான் காதலே வரும்ன்னு சொல்றானோ...?

நான் கூட பயந்துட்டேன். இந்த லூசு தர்சனாவும் அந்த வீணாப்போனவன் பிரேம் மாதிரியே பழி வாங்குறேன், புளி கரைக்குறேன்னு சக்குவை ஏதாவது செய்திடுவாளோன்னு
அப்படின்னா... தர்சனாவை சக்தி தான் வைச்சு செய்யபடபோறானோ..? செய்யட்டும், செய்யட்டும்...
நமக்கும் என்டர்டெய்மென்ட் வேணும் தானே..?
😆😆😆
CRVS (or) CRVS 2797
 

CRVS2797

Member
கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...! ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 17)

இவ வேற சும்மா, சும்மா ஐ லவ் யூன்னு கடுப்பை கிளப்பிக்கிட்டு
ஆமா, ஆமா இவ வெட்கப் பட்டாலும் உலக அதிசயமா இருக்குது, துக்கப்பட்டாலும் உலக அதிசயமாத்தான் இருக்குது போங்க.

அடப்பாவி சக்தி...! இவன் விட்டா எல்லாருக்குள்ளேயும்
பொறாமையை மூட்டிவிட்டு
ஒருத்தருக்கொருத்தர் கும்மியடிக்க விட்டுடுவான் போலவே...???

இந்த கன்னிகா சும்மாவே இருக்க மாட்டாளோ...? சரியான
பொறாமைக்கு பிறந்தவ.

அப்பாடா...! அந்த மாட்டுக்கு
இவளுக்கு அது நம்மோட கல்யாணம்ங்கிறதாவது
புரிஞ்சதே, அதுவே உலக அதிசயம் தான்.

ஹ..ஹ..ஹ... அவ அசடானாலும்
அறிவாளி...! அதான் நம்ம சக்திக்கே சர்ப்ரைஸ் கொடுத்துட்டா...! ஷாக்கை குறை, ஷாக்கை குறை..!
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top