All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
"எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்!

இனிய தோழி,

காத்திருந்த நெஞ்சங்களை
கலகலக்க வைத்ததென்ன...
பூத்திருந்த கண்களை
படபடக்க வைத்ததென்ன...
பார்த்திருந்த பார்வைளை
பரிதவிக்க வைத்ததென்ன...
எழுத்தின் வேகத்தில்
எண்ணத்தின் விவேகத்தில்
அரசியாய் அன்பால்
அகிலத்தை ஆள்வதற்கு
காவிய வரிசையாய்
கரம் சேர்ந்த காதல்கள்...
புத்தகமாய் இருந்தாலும்
புன்னகைக்க வைத்ததென்ன...!

எதை தொலைத்தோம்
என்று புரியாது....
எதை தேடினோம்
என்று தெளியாது...
கண்கட்டு வாழ்க்கையில்
கரைந்திட்ட நாட்களில்
இழந்திட்ட உயிர்ப்பை
மீட்டெடுக்க வந்ததுவோ....
எனக்காக வா, நான் உனக்காகவா...
என...
பாட்டெழுதி பாந்தமாய்
பாவை நெஞ்சை உசுப்பி விட்டு...
காதலின் காவியத்தில்
அன்பின் அறம் சேர்க்க...
அரும்பிய புதுப் பூவாய்...
சூரியனும் சந்திரனும்
காதல் கவி பாட....
போர்க்களமாய் ஒர் களத்தை...
அமர்க்களமாய் முன்னிறுத்தி...
கொஞ்சும் மொழி பேசும்
பிஞ்சு மொழி கிள்ளையுடன்
சந்திரவதனியையும்
சூர்ய நாராயணனையும்
வழக்காடும் காதையிலே
வழக்குரைக்க வகை செய்த
எழுத்தரசி வித்தியிலே
வியக்காமல் இருப்போமா...?

வாழ்த்துகள் தோழி, எதிர்பாரா நேரத்தில் எதிர்பாராத விருந்து... நன்றி தோழி.
வாவ் ! 🤩🤩🤩 பிரமாதம்!!. சூப்பர்.!!!
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி செல்வி :)
அருமை மா… அழகான கவிதை… சூரியனும், சந்திரனும் எதிர் எதிர் குணமென்றாலும், ஒன்று இல்லையென்றால் இன்னொன்று இல்லையே. அது போல் தான் இவ்விருவரும்…
 
vijirsn1965

Bronze Winner
Superb ud mam Surya Chandhravadhaniyai thirumanam seiya ninaipathu etharkaakavo vittathai pidippathaaka veru solkiraan thambi Aadhi veettodu maappillaiyaaka ponathaal vantha varuththamo Niranjanuku Chandra thangai kuzhanthaiyai sumappathu pidikkavillai kandipa yaarum than kuzhanthaiyaaka ninaika maattaarkal atharkellaam periya manadhu veandum oru vidhaththil Suryanarayanan ninaipathu correct Akil Chandra ku thangai kuzhanthai Surya ku thambi Magan so evarkal eruvarum thirumanam seithaal thaan sarivarum kuzhanthaiyaiyum nantraaka paarthu kolla mudium ud arumai mam viji
 
Vaishanika

Bronze Winner
சூரி வண்டில போன ஆளு சந்திராவோட பெஸ்ட் பிரண்ட்டு.
அதையப் பாத்துட்டு பொசுங்குறியே.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

நல்ல முடிவுதான் சந்திரா. குழந்தையோட ஏத்துக்குற ஆளை தான் கண்ணாலம் பண்ணிப்பேனு சொல்லறது.
கிடைக்குமா??:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.
இங்கன ஒருத்தன் திட்டம் போட்டு கிட்டு இருக்கானே🫤🫤🫤🫤🫤. அதுவும் கண்ணாடிய பாத்து. அவுனுக்கே தெரிகிறது நாம தார்ரோடு
சந்திரா தக்காளி சட்னி ன்னு.😏😏😏😏😏
 
நன்றி விஜி மா :)
சூர்யாவின் எண்ணம் என்னென்னு போக போக தெரிய வரும்.
 
ஶ்ரீகலா

Administrator
சூரி வண்டில போன ஆளு சந்திராவோட பெஸ்ட் பிரண்ட்டு.
அதையப் பாத்துட்டு பொசுங்குறியே.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

நல்ல முடிவுதான் சந்திரா. குழந்தையோட ஏத்துக்குற ஆளை தான் கண்ணாலம் பண்ணிப்பேனு சொல்லறது.
கிடைக்குமா??:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.
இங்கன ஒருத்தன் திட்டம் போட்டு கிட்டு இருக்கானே🫤🫤🫤🫤🫤. அதுவும் கண்ணாடிய பாத்து. அவுனுக்கே தெரிகிறது நாம தார்ரோடு
சந்திரா தக்காளி சட்னி ன்னு.😏😏😏😏😏
நன்றி Vaishanika :)
ஹா ஹா சில நேரங்களில் கருப்பு, வெள்ளையும் பெஸ்ட் காம்பினேசன் 😉
 
Indhumathy

Well-known member
சந்திரா நிரஞ்சனை புரிஞ்சுகிட்டு அவளே வேணாம்னு சொல்லிட்டா... குழந்தையோட ஏத்துக்க ரெடியா கண்ணு முன்னாடியே ஆள் இருக்கும் போது எங்க போய் தேடப் போறீங்க... 😏

சூர்யா கருப்பு தான் அழகே..... 😍😍😍😍🤗🤗🤗 அதை விட எவ்வளவு பொறுப்பா இருக்க.... அந்த வெள்ளை பூசணியை தட்றோம் தூக்றோம்... 🤪🤪😜😜
 
நன்றி இந்துமதி :)
அதானே நம்ம தல ரெடியா இருக்காரே 🤭 ஹா ஹா வெள்ளப்பூசணி தட்ட, தூக்க வேண்டாம். நம்ம தலய நோக்கி வரும் வந்தே தீரும் 😉
 
Top