All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Avaluku six months la irunthe அந்த problem இருக்கு pregnancy time la yaaro ஒருத்தர் ku இந்த maari varathu தான.... Avanodaya கவலை la இதையும் vera solli avana vethanai படுத்த vendaam nu athuyume sollamal vittutaa... Kadasila kuzhanthai piranthu fix வந்து brain 🧠 la attack aagi ellame maranthu poidra... கொஞ்சம் நேரம் kuda நியாயம் irukurathu illa.... சஞ்சய் அதை avanuku சாதகமா பயன்படுத்தி avangala pirichitaan...... இப்போ அந்த பேய் யால மறுபடியும் fix வந்துடுச்சி..... அந்த mahima எல்லாம் பேய் nu kuda solla kudathu athai விட கேவலம்..... Very very emotional episode mam....
 

Hanza

Bronze Winner
Omg…. Appo Anjali baby kooda konja kaalam vazhthirukka…. Intha padupaavi Sanjay tan vandhu idaila kulappi vittirukkan…. Pawam antha Amar…. Evlo kashtam tan thanguvan 🙄🙄🙄🙄
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அமரின் கடந்த காலத்தை அஞ்சலியிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த பதிவு...

அமரின் தங்கையான ஷர்மிளாவிற்கு தன் பிறப்பை பற்றிய ரகசியம் வக்கீல் மூலம் தைரிய வர அவள் அமரிடம் சரண் அடைந்து விட்டாள்... இளகிய குணமுடைய நம் அமர் தங்கை அழுதால் தாங்குவானா? தன் தங்கையை அம்மாவிடம் அழைத்து சென்றவன் ராம் குமார் இறந்ததையும் கூற அவள் மனதிற்கு அமைதி...

அமர் வருகைக்காக அஞ்சலி குளிரையும் பொருட்படுத்தாது காத்திருந்தது அழகு அவளுக்கு துணையாக தன் வயிற்றிலிருக்கும் மகவு இருந்தாக சொன்னது அழகோ அழகு...

மஹிமாவை எதிர்த்து போராடி ஜெயித்து வந்தாலும் தன் மனதில் இருக்கும் பாரத்தை தாய் தன் குழந்தையிடம் அப்பழுக்கில்லாத அன்பு செலுத்தும் போது குழந்தை தன் கஷ்டத்தை அவளிடம் தான் கண்ணீரோடு பகிர்ந்து கொள்ளும் அதுபோல் அமரும் தன் அஞ்சலியிடம் பகிர்ந்து கொள்ள முயல முதலில் கண்ணீரே வெளி வந்தது... ஒரு நல்ல மனிதனை சூழ்நிலை எப்படி எல்லாம் மாற்றி கெட்ட வழியில் கொண்டு போய் விட்டது என்பதற்கு உதாரணம் அமர்...

மஹிமா நல்ல மனிதனான தன் தந்தையை ஏமாற்றி அமரை திருமணம் செய்து கொண்டாள்... அமரின் திருமண கனவுகள் கானல் நீராய்...

ஸ்ரீ மேம் எழுத்தில் உருவத்தை படைத்து எங்கள் முன் உலாவ விட்டு நாங்கள் இமைக்க கூட மறந்து கண் கலங்குகிறோம் அமரின் வேதனையை நினைத்து...

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...
 

Banumathi Balachandran

Well-known member
அமர் பல தடைகளை தாண்டி அஞ்சலியை கரம் பிடித்துள்ளான் இனியாவது அவன் வாழ்க்கை பாதை நன்றாக இருக்கட்டும்.
 

Shanthigopal

Well-known member
மிக மிக வேதனையை மட்டுமே சுமந்த பதிவு...

இப்படி கூட பெண்கள் இருப்பார்களா மஹிமாவை போல.. அதுவும் முதலிரவு அன்றே வெளியே போய் மற்றொரு ஆணுடன் குடித்து விட்டு வருபவள்.. அச்சோ! அமருக்கு ஏன் இந்த வேதனை? நிஜம் தான் நீங்கள் சொன்னது போல் அமர் விதியை எழுதும் போது கடுங்கோபத்தில் இருந்திருப்பார் போல கடவுள்...

அமுல் பேபி என்று சொல்லி உன் வாழ்க்கையை நீ வாழ் என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்ந்து... இவளுக்கெல்லாம் எதற்கு திருமணம்.. அது தான் காசு கொடுத்த வாங்கிய அடிமை என்று சொல்லி விட்டாளே... தன்மானமிக்க எந்த ஆண் பிள்ளைக்கும் தட்டி எழுப்பி அவமானத்தில் குறுக வைப்பது போல் பேசி அமரின் இயல்பையே மாற்றி விட்டாளே இந்த மஹிமா...

இதில் அடுத்த வந்த மாடலிங்கும் இவனுக்கு துரோகம் செய்து பெண் இனத்தையே நம்பாமல் போய் விட்டான் அமர்.. இதில் ஷோபா கனி மட்டும் விதி விலக்கு... அமர் எடுத்த அடுத்த நடவடிக்கை தான் பணத்தின் கோணத்தில் அனைத்தையும் பார்ப்பது... அக்ரிமென்ட் போடும் போதே... சே! சே! தாங்க முடியவில்லை ஸ்ரீ மேம்... நிஜம் தான்! பெண்களுக்கு மட்டும் தானா கற்பு? இதோ தான் இழந்ததற்காக கதறி அழுகிறானே நம் அமர்.. இதற்கு மூலகாரணமாக இருந்த அஞ்சலி மேல் வெறுப்பு ஆத்திரம் பழி வாங்கும் வெறி... இருந்தாலும் அவனால் அஞ்சலி அழும் போது தன் வலியை அதில் கண்டானே இன்னும் அந்த வலி அவன் ஆழ் மனதில்...

அற்புதம் ஸ்ரீ மேம்... ஒவ்வொரு வரிகளையும் செதுக்கி உள்ளீர்கள்... எங்கள் மனதில் இக்காவியம் ஆழமாய் பவனி வருகிறது...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

வேர் என தாங்கும் அவள்
வேரற்றுக் கிடக்கும் நேரம்...
தாய் என தாங்கும் அவள்
தன்னினைவற்றுக் கிடக்கும் நேரம்...
கண்ணின் மணியாய் காத்தவன்
பெண்ணின் உயிராய் பார்த்தவன்
செயலற்றுப் போகும் கோலம்...
மண்ணில் ஆடவர்க்கு
உணர்வுகள் மறந்த
கண்ணீர் காலம்!

சோதனை ஒன்றே வாழ்க்கையாய்
வேதனை ஒன்றே வாழ்க்கையாய்
வாடும் வாழ்க்கை போராட்டத்தில்
காதல் ஒன்றே சாதனையாய்
மனதை வருடும் போதனையாய்...

காலம் மாறும்
காதலும் வாழும்...!
காதலர் நெஞ்சம்
காவியம் பாட
'அமரஞ்சலி'
அமர காவியமாய்
ஆத்ம ராகம் பாடிடுமே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top