All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Oooooooo.... என்னயா nadakuthu inga.... சூர்யா Prakash kaaga thaan அஞ்சலி ku இது எல்லாம் பண்றான் ah.... Sharmi yaaru amar தங்கச்சி ah avalaala தான் சூர்யா va ஒரு அளவுக்கு mela நெருங்க முடியலையா.... சூர்யா ethuku அஞ்சலி ah தேடி வந்தான்... Rendu perum love 😍 pannikitu இருந்தாங்க la..... அவல love 😍 pannikitu irukkum pothe vera பொண்ணு kuda dating poi இருக்கான் ah..... Iva பிரிஞ்சி vanthutaala...... Marupadiyum இப்போ ethuku avala தேடி வந்து இருக்கான்...... அமர் ஏன் agreement கல்யாணம் panni இருக்கான்.... பேர் ku thaan husband and wife ah...... அந்த advertisement ah பாத்து எல்லாரும் avala oru maari paakuraanga..... Super Super mam... .. Semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,


மேல்தட்டு நாகரீகத்தின்
பரிணாம வளர்ச்சியில்
விசித்திரமான வாழ்வு - இது
சரித்திரம் ஆனால் தாழ்வு!

நான் எனது என்ற தன்னகங்காரம் - இங்கே
நாராசப் பேச்சினில் நர்த்தனம் ஆட...
கணவன் அவன் தன் வழியில்
மனைவி அவள் தனி வழியில்
கிழக்கும் மேற்கும் ஈர்க்காத நேரம்
வடகிழக்கில் வழக்காகுமோ...?

கீழ்தட்டு நாகரீகத்தின்
பகுமான வளர்ச்சியில்
அசாத்தியமான வாழ்வு - இது
சத்தியம் ஆனால் வீழ்வு!

நாம், நமது என்ற மன அலங்காரம் - இங்கே
நாகூசாப் பேச்சினில் நர்த்தனம் ஆட...
பெற்றவர் அவர் தன் வழியில்
பிள்ளைகள் அவர் தனி வழியில்
திசைக்கொன்றாய் சிதறும் நேரம்
வகைக்கொன்றாய் கணம் சேர்க்குமோ?

தேவன் அவன் ஆட்டத்தின் வேகம்
தேவியை அழிக்க களம் தேடும் என்றால்...
தேவி அவள் ஆட்டத்தின் விவேகம்
தேவனை நினைக்க களம் மாறுமோ...?

ஆடுகளத்தில் ஆணும் பெண்ணும்
அடங்காமல் ஆடும் நேரம்
வெற்றியும் தோல்வியும்
விதி அதன் கைகளிலோ....?

வித்யாசமான கருவில்
விருத்தம் பாடும் கதையில்
விகல்பமில்லா நடையில்
வீழ்த்துவது வித்தகி அவர்
எழுத்தரசியின் கைவண்ணமே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

Hanza

Bronze Winner
நல்ல புருஷன் பொண்டாட்டி.... 🤦🏻‍♀️
இவனை எனக்கு பிடிக்கவே இல்ல
நல்லா வருவீங்க டா ....
பாவம் அஞ்சலி ....
 

Jayanthi Krishna

Active member
ஒரு விளம்பரம் நடிச்சதுக்கா இத்தனை கஷ்டம்...

யார் அந்த சூர்யா ... இவனால தான் அஞ்சலியை அமர் கொடுமை படுத்றானா?:unsure::unsure:

அஞ்சலியை விட அமரின் வாழ்க்கை கொடுமையா இருக்கும் போலயே. :oops::oops:

ம்ம்ம் அக்ரிமென்ட் கல்யாணம்... கணவன் ஒரு திசை மனைவி ஒரு திசை . நல்லா வருவீங்கடா..:confused:

ஒரு விதத்தில் அமரை நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது... யாருக்காக இப்படி கல்யாணம் செஞ்சு தவறான வாழ்கையில் பயணிக்கிறானோ....:rolleyes::rolleyes:

ரெண்டு துருவங்களும் இணையும் நாளை எதிர்பார்க்கிறேன்...

சூப்பர் ஸ்ரீ அக்கா...:FlyingKiss:
 

Banumathi Balachandran

Well-known member
டேய் என்னடா நடக்குது இங்க அஞ்சலிய தேடி சூர்யா வர்றான், அமர்வுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது🤔🤔🤔


அஞ்சலி தைரியமான பெண் அவள் அழுவது சூர்யாவை நினைத்து இல்லை என்றால் பின் எதை நினைத்து?

அமர் டேய் என்னடா இப்படி அநியாயம் பன்ற
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்... ஆரம்பமே அமர்க்களம்...

அஞ்சலி ஒரு ஜான்சிராணியே தான்... இப்படி தெறிக்க விடுறா... ஒரு பெரிய குடும்பத்தின் சுமை தாங்கியாய் அறிமுகம் ஆகும் அஞ்சலி... ஒரு ஒண்டி குடித்தனம் நடக்கும் இடத்தில் தண்ணீருக்காக குடி நீர் வண்டியை எதிர்ப்பார்ப்பது, அதற்காக அக்கம் பக்கத்தினர் அடாவடியை தன் அதிரடி பேச்சால் தம் உரிமையை நிலை நாட்டி கொள்வது.. அருமை ஸ்ரீ மேம்...

எந்த வர்க்க குடும்ப நிலை என்றாலும் அதற்கேற்றார்போல் தாங்கள் பயன்படுத்தும் எழுத்து சொல்லாடல்கள் எங்களுக்கு ஆச்சரியமூட்டுகின்றன... அற்புதம்...

பொறுப்பற்ற தாய்.. குடியே தன் புகலிடம் என நினைத்து அதற்காக வீட்டில் எது கைக்கு கிடைத்தாலும் அடமானம் வைத்து என்றும் குடிமகன்களாக திகழும் தந்தை அண்ணன்.. ஐவருக்கு மத்தியில் நம் நாயகி குடும்பத்தை சுமக்கும் சுமைதாங்கியாய்...

அமரேந்தர் அழகான பெயர்... அப்பெயருக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு நாளும் வித விதமான பெண்களின் நடனத்தை ரசிப்பவனோ? இருந்தாலும் கனியை நினைத்தாலே அவன் மனதில் ஒரு மகிழ்ச்சியும் கனிவும் வருகிறது என்றால் அதுவும் தாயிற்கு அடுத்து கனிக்கு மட்டுமே மரியாதை என்றால்.. அவன் ஒன்றும் அனைத்து பெண்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவனாக சித்தரிக்கப்படவில்லை... தானாக வருபவர்களையே அவன் பயன்படுத்தி கொள்கிறான்...

இதில் என்ன ஒரு புதிர் என்றால் அவனின் terms and conditions என்ன? அடுத்து மனைவி அழைக்கிறாள்? என்று வருகிறது. அருமை ஸ்ரீ மேம்...

இப்படி பல புதிர்களை எங்கள் முன் நிறுத்தி அர்ஜூனை போல் தன் இலக்கு ஒன்றே குறி என்பது போல் என்றும் மறவாத இக்கதையும் எல்லா கதைகளை போல அழியா காவியமாக உருவெடுக்க என் வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 
Top