All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

மன்னவனே!
துரோகத்தைக் கடந்தாலும்
துவேசத்தைக் கடந்தாலும்
துன்பத்தைக் கடந்தாலும்
துவளாத தென்னவனே!

உன் தந்தையாய் வந்தவன்
தான் என்ற போதையில்
அனைத்தையும் விட்டு விட்டான்!

உன் அன்னையாய் வந்தவள்...
தான், பெண்ணாய் உயிர்த்தாலும்
பிள்ளையை விட்டு விட்டாள்!

உன் தங்கையாய் வந்தவள்...
தான் என்ற அகந்தையில்
உண்மையை விட்டு விட்டாள்!

உன் தாரமாய் வந்தவள்...
தான் என்ற மமதையில்
தரணியைக் கெடுத்து விட்டாள்!

கிட்டிய எல்லாம் எட்டிப் போன வாழ்வில்
முட்டிய தெல்லாம் வெட்டிப் போன தாழ்வில்
பட்டுப் போன கொடிக்கு
கொழுகொம்பாய் காதல் மகள்
கொண்டாடத் துணை நின்றால்
குன்றென நிமிர்வாயே!


மாயத்தில் வாழும்
மயக்கங்கள் எல்லாம்
காயத்தில் வீழ்ந்து
இயக்கங்கள் போகும்!

ஈனப்பிறவிகள்
ஈசிக் கொண்டு நின்றாலும்
வேசித்தனம் செய்தாலும்
தாய்மை மறந்த பெண்ணே - நீ
பெண் குலத்தின் சாபமே!

பெண்ணின் பெருமை போக்க வந்த பேயே! - நீ
மண்ணில் பிறந்ததெல்லாம் வீணே!


ஆகாயத்தில் ஓடும் மேகங்கள் எல்லாம்
ஆசுவாசம் செய்யும் ஆலிங்கனம் கண்டால்
காதல் மேகங்கள் களங்காலாய் தெரிந்தாலும்
மலை மூடும் நேரம் மகத்துவம் தானே!

பெண்ணே!
சேயாய் மிதித்து தாயாய் தாங்கிவிட்டாய்!
சேதாரம் ஆனாலும் ஆதாரம் ஆகிவிட்டாய்!

காதல் செய்யும் மாயங்கள் கண்டால்
காவிய ராகங்கள் பாடிடலாமே!

காதல் மன்னவன் கரையேர இங்கு
காதற் பெண்னவள் கரம் கொடுத்தாளே!
நேர் கொண்ட பார்வையில் நிமிர்வாய் நின்று...
நேரிழை அவளும் உயிர்த்து விட்டாளே!
பேர் கெட்ட மன்னவன் அகம் தான் கொண்டு
சீர் கெட்ட தென்னவன் இதம் சேர்த்தாளே!

காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்
கோலங்கள் மாறும்
சாட்சிகள் மாறும்
காதல்கள் என்றும்
மாறாததன்றோ?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

Banumathi Balachandran

Well-known member
மஹிமாவுக்கு ஆப்பு வைத்தும் அடங்க மாட்டேன் என்கிறாலே

அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
 

Chitra Balaji

Bronze Winner
அட kevalavaathingala avan எல்லாம் ஒரு அப்பன் ah...... மஹிமா oda boyological father அமர் appa va கேட்கவே ஒரு மாறி இருக்கு என்ன jenmanga lo இதுங்க எல்லாம்...... Ava அம்மா.. Mahima... அமர் அப்பா என்னமோ பெரிசா plan panni இருக்காங்க.... Ellaathukum அவன் சொத்து மட்டும் தான் குறி.... ச்சே மிருகமே பரவால போல இதுங்க renduthayum paakum pothu..... Court la case pottutaan... Appa kuda அந்த பேய் அடங்கல naa பெருசா plan panni இருக்கா polaye enna ஆக pooguthoo... Super Super mam.... Semma semma episode....
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பதிவுகள்... அற்புதம் ஸ்ரீ மேம்...

அஞ்சலி அமர் சொல்வது போல் அழகும் அறிவும் ஒருங்கே பெற்றவளே... காதல் கொண்ட மனம் அவன் சிறு மனவேதனையே தாங்காது... மஹிமா அனைவரும் இருக்கும் இடத்தில் நடத்திய நாடகத்தில் உணர்வுகளை சாகடித்து பிணமாய் நிற்கும் அவனை தேற்ற அவன் மனதை கொள்ளை கொண்டவள் முயல... அமர் எப்போதும் தனிமையிலேயே தன் வேதனை எண்ணி நொந்து மனம் இறுகி போய் இருப்பவன்... எல்லோருமே அப்படி தான் ஸ்ரீ மேம்... தனக்கு நெருக்கமானவர்களிடமே நம் மனதில் இளக்கம் வந்து அது கண்ணீராய் வெளி வந்து அவர்களிடம் மட்டுமே தன் உண்மை முகம் வெளிவரும்... அமரின் மனம் இளகி அஞ்சலியை அணைத்து தாயிடம் ஆறுதலை தேடும் சிறு குழந்தையாய் கதற காதல் கொண்ட மனது தாங்குமா? அரவணைத்து ஆறுதல் படுத்தி அமரின் உணர்வுகளை முதல் முதலாய் உயிர்த்தெழ செய்து விட்டாள்... அங்கீகாரம் இல்லாத உறவு தான்... அவள் செய்த இச்செயலால் அவனுக்கு வாழும் ஆசையும், மஹிமாவை எதிர்க்கும் துணிவையும், தைரியத்தையும் கொடுத்து அதை செயல் படுத்தியும் விட்டான்... இதனால் அஞ்சலி பெயர் அடிபடுமே என்று அவன் வேதனையுற அவனுக்கு தைரியம் கொடுத்து அதற்கும் துணிந்து விட்டாள் அவன் காதலி... ஆமாம் ஒரு பெண்ணால் மரணித்த ஆணவன் உணர்வுகள் மற்றொரு பெண்ணால் உயிர்த்தெழுந்தது...

அஞ்சலி காதல் ஒன்றையே தன் உயிர் மூச்சாய் நினைத்து தன் விழியின் வழியே அமர் விழிக்கு அனுப்பி அவளை பழி வாங்க நினைத்த அவனையும் காதலிக்க செய்து அவளே இனி உயிர் மூச்சு என்று இருவரும் பிரியும் தருவாயில் அவன் கண் கலங்களை கண்ட அவள் தன் மன கலக்கத்தை மறைத்து அமரை புன்னகை முகமாய் வழியனுப்புவது அற்புதம்...

மஹிமா இப்படியும் ஒரு பெண் செய்வாளா? அதுவும் பணத்திற்காக தன் மாமனாரையே... இதை எதிர்பார்க்கவே இல்லை ஸ்ரீ மேம்... இதை அமரால் எப்படி ஜீரணிக்க முடியும்? எவ்வளவு வெட்க கேடு? இருந்தாலும் அஞ்சலியின் காதல் இந்த தகாத பந்தத்திலிருந்து விடுபடும் தைரியத்தையும் அதற்கு துணை நின்ற அவன் காதலியும்...

ராம்குமார் மாதிரியான மனிதர்கள் வாழ தகுதியற்றவர்கள்... மஹிமாவிற்கு துணை நிற்கும் அவள் தாய் அவள் ஒரு ராட்சசியே..

வழக்கில் நீதிபதி மஹிமாவிற்கு கண்டனம் தெரிவித்தும் அவள் திமிர் அடங்கவில்லையே..

அற்புதம் ஸ்ரீ மேம்... ஒவ்வொரு காட்சியும் எங்கள் மனகண் முன் உயிரோவியங்களாய்...
 

Lakshmivijay

Well-known member
முதல் பாகம் அருமை ஸ்ரீமா 😍😍😍😍😍

மஹிமா பணத்திற்காக என்ன மாதிரி கேவலமான வேலை செஞ்சிருக்கா..... சிக்கிரமே அமரேந்தர் வாழ்க்கையில் இருந்து இவளை துரத்தி விட்டுடுங்க.....

அஞ்சலி ஆரம்பத்தில் அமரை புரிஞ்சிக்காம இருந்தாலும் அப்புறமா அவனையே காதலிக்கிறது அருமை.....

அமரேந்தர் அஞ்சலி ரெண்டும் பேரும் என்ன சிக்கல்களை சந்தித்து ஒன்று சேர்வார்கள்னு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் ஸ்ரீமா 🥰🥰🥰🥰🥰
 
Top