All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

மன்னவனே!

உன் காதற் பைங்கிளி
கை எட்டும் தூரத்தில்...
உன் காதற் கனவுகள்
மெய் எட்டும் நேரத்தில்...
உன் கானல் வாழ்வினில்
கைதாகி நின்றாயோ...?

துரோகம் சூழ்ந்த உலகில்
ரோகம் தீர்ந்தாலும்....
போகம் சூழ்ந்த உலகில்
தாகம் தீராதோ...!
குழி பறிக்கக் காத்திருக்கும்
குள்ள நரிக் கூட்டத்தில்
புள்ளி மானை ஓடவிட்டு
துரத்தும் துஷ்டர்களை
சூரையாட நினைத்தாயோ...?

காதலில் கூதல் தேடாத அன்பு - இது
காதலில் நேர்மை மாறாத பண்பு
காதலில் காதல் தேடாத அன்பு - இது
காதலில் மேன்மை மீறாத பண்பு
இலக்கியக் காதலில் சிவகாமி - அவள்
மன்னவன் நீதியில் ஏகாங்கி!

காதல் அலைகள் ஓய்வதில்லை - அதன்
கூதல் மழைகள் பாய்வதில்லை! - இனி
காதல் கானல் ஆனாலும் - அதன்
கனவுகள் என்றும் அழிவதில்லை!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Banumathi Balachandran

Well-known member
சஞ்சய் மஹிமாவுடனா இனி அஞ்சலிக்கு என்ன நடக்கப் போகிறது ஏன் அமரால் காப்பாற்ற முடியாது
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? புதிருக்கு புதிர் தான் விடையா? போன பதிவிற்கே நினைத்தேன் அச்சோ நிறைய சந்தோஷத்தை எங்களுக்கு அள்ளி கொடுத்து விட்டார்களே அடுத்தப் பதிவில் இதே நிலை நீடிக்குமா? இல்லை ஏதாவது நாங்கள் நினைத்தே பார்க்காத அதிர்ச்சியான புதிரை போட போகிறார்களா என்று? நானும் கொஞ்சம் புரிந்து வைத்துள்ளேன் போல ஸ்ரீ மேம்ஐ..


கனியின் திருமணத்திற்காக செல்லும் அமர் அஞ்சலியை வைத்தி புரிந்து கொண்டு காண்பது அழகு என்றால் அமர் படகில் ஏற்ற அஞ்சலியை கடலில் போடுவது போல் செய்த செய்கை அழகோ அழகு...

கனியிடம் அஞ்சலி தன் நிலையறிந்து மணப்பெண் தோழியாக வர மறுத்தது... அமர் எடுத்த சேலையை அவள் காரணத்தோடு மறுப்பது... ஒவ்வொரு இடத்திலும் அவள் தன்மானத்தோடும் தன்னிலையறிந்தும் நடந்து கொள்ளும் அஞ்சலி எங்கள் மனதில் சிம்மாசனமிட்டு கம்பீரமாய்...

ஆனால் வைத்திக்கும் அஞ்சலிக்கும் ஓரே நேரத்தில் புது ஆடையை கொடுத்து அவளை மறுக்க முடியாமல் செய்து விட்டான்... அருமை ஸ்ரீ மேம்...

அஞ்சலியின் விருப்பமான அப்போது மறுத்த உணவுகளை இப்போது வாங்கி கொடுத்து இவள் சாப்பிடும் அழகை அமர் ரசித்து மனம் திருப்தி அடைந்தான் என்றால் வேண்டாம் என்று விட்டு விட்ட உணவு பொருட்களை அவன் வருந்த கூடாது என்று சாப்பிட்ட அஞ்சலி.. அற்புதம்.. ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண்முன்...

இரவில் மதுவை கையில் ஏந்தி வருத்ததுடன் அமர்... அதுவும் அஞ்சலி யிடன் அவனைப்பற்றி யோசிக்காமல் அவளைப்பற்றி யோசிக்க சொல்லும் அமர்..

அமர் எப்போதும் வருத்ததோடவே இருக்கும் போதே ஏதோ ஒன்று பெரிதாக நடக்க போகிறதோ என்று நினைத்தோம்... ஆனால் இந்த மஹிமாவுடன் சஞ்சயை... அதுவும் வஞ்சக பார்வையுடன்... அச்சோ வில்லனே இவன் தானா?

கடைசி கவிதை வரிகள் அடுத்து நடக்கப்போகும் செயலுக்கான புதிரின் முன்னோட்டமா ஸ்ரீ மேம்?

அவளுக்கு தான் பிரச்சனையா? அவளை காப்பாற்ற முடியாத நிலையில் அமரா? ஆமாம் வேலைக்காரிக்கு பரிந்து கொண்டு வந்தால் வீட்டு எஜமானியான அவளுக்கு?
 

Chitra Balaji

Bronze Winner
ச்சே சஞ்சய் வெறும் எடுபிடி தானா.... அஞ்சலி ஏன் target panraanu puriyalaye avanuku ethuku அஞ்சலி தேவை padra........ இந்த மஹிமா avana vechi அமர் ah வேவு பாத்து இருக்கா ava seriyana kankoththi பாம்பு.... அஞ்சலி தான் அமர் weakness nu therinji avala vechiye avana மிரட்டி காரியம் saathichikira paavi...... Appo biological father yaaru..... அவன நல்லா use pannikira அந்த பேய்....... Ithanai per தான் avangaluku வில்லனா வருவாங்க ethanai பேர் ah தான் சமாளிக்க poraangalo....... ஆனா அமர் அஞ்சலி oda காதல் enna solrathu chance ah illa athuyum ஒருத்தர் oruthar yum kannaalaye பேசுகிறது semma..... Super Super mam.... Semma semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

பணம் என்றால்
பேயாய் பறக்கும்
பச்சோந்தி உலகம்!

குணம் என்றால்
கேடாய் துறக்கும்
குயுக்தி உலகம்!

பெண்ணே பேயாய்
பல தேகம் தேடும்
கேடு கெட்ட உலகம்!

கண் முன்னே காணும் வேளை
கூசுகின்ற தாய்மைகள்
மிரளும் வேளை!
பேசுகின்ற வாய்மைகள்
பிறழும் வேளை!
பெண் என்னும் பிம்பம்
மண்ணாகிப் போகாதோ...!

தாய்மையில் நிமிர்ந்த பெண்மை
தரணிக்கு தீபமென்றால்...
தாய்மையை விலை பேசும்
தராதரமற்ற பெண் அவள்
மாதர் குலம் அழிக்க வந்த பேயே!

பணம் பேசும் உலகில்
மனம் பேசும் அழகில்
காதலும் காமமும்
ஒற்றைத் தராசில்
துலாக் கோலின் நேர் நின்றால்...
காலம் கலிகாலம்
காட்டும் நீதியென்ன...?

எல்லைகள் மீறும் நேரம்
தொல்லைகள் ஏறும் நேரம்
கொள்ளைகள் மாறும் நேரம்
அவதார மூர்த்தி அவன்
அடியெடுத்து வருவானோ...?
அன்பால் அணைப்பானோ...!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:
Top