All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Kavi 27

Member
உங்களுடைய எல்லா கதைகளும் அருமை ஸ்ரீ மேம். நான் உங்களுடைய கதையின் மிக பெரிய fan தெரியுமா? எப்படி தான் உங்களால் கதையை இப்படி எழுத முடியுது. ஒவ்வொரு கதையும் அருமையாக இருக்கும் படிக்க ஆரம்பிச்ச அதையை முடிக்காமல் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. அவ்வளவு அருமையாக கதை இருக்கு ஸ்ரீ மேம். உங்களுடைய எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் ஸ்ரீகலா மேம்.
 

ஶ்ரீகலா

Administrator
உங்களுடைய எல்லா கதைகளும் அருமை ஸ்ரீ மேம். நான் உங்களுடைய கதையின் மிக பெரிய fan தெரியுமா? எப்படி தான் உங்களால் கதையை இப்படி எழுத முடியுது. ஒவ்வொரு கதையும் அருமையாக இருக்கும் படிக்க ஆரம்பிச்ச அதையை முடிக்காமல் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. அவ்வளவு அருமையாக கதை இருக்கு ஸ்ரீ மேம். உங்களுடைய எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள் ஸ்ரீகலா மேம்.

மிக்க நன்றி மா :) தொடர்ந்து படியுங்கள்...
 

Chitra Balaji

Bronze Winner
Avan படப்பை முடிக்க தான் அவன் அம்மா avvallavu கஷ்டம் pattu அந்த வீடு la irunthu இருக்காங்க avanuku உரிய வயது வந்த ஒடனே lawyer ah kuppitu சொத்து எல்லாம் padichi ellame அமர் per தான் ezhuthi vechi irukaaru avan தாத்தா அதுல அந்த ஆளு ku avvallavu kovam..... அவன் அம்மா avvallavu chinna வயசுல எல்லா poruppai yum avan thalai mela vechi poitaanga avanala business ah பழைய நிலமை ku கொண்டு vara முடியாமல் romba கஷ்டம் padraan...... மஹிமா oda அப்பா kita help கேட்டு காசு வாங்கி ஓரளவுக்கு சரி கட்டி இருக்கான்.... கனி வீடு பக்கதுல தான் இருக்காளா அஞ்சலி avala vechi என்ன panna poraan... Super Super mam... Semma semma episode
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...


பொறுப்பில்லாத தந்தை...
அவர் மேல் நம்பிக்கை இல்லாத பாட்டன்...
தடுமாறி கீழே விழுந்த தொழில்...
மீட்டெடுக்க போராடும் போட்டி களத்தில் எதிரியின் முன் அமர்...


எல்லாமே சரி தான்... அவன் சரி செய்து அவனுக்கு துணை நிற்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் போது அவனை தடுமாற விட்ட தாய்...


என்ன தவறை கணவன் தனக்கிழைத்த போதும் ஒரு தாயாக அவனுக்கும் பெண்ணிற்கு கூட இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கு...


கண்டிப்பாக அவர் கேட்ட செய்ய மாட்டேன் என சொல்ல மாட்டான் அவர் உதவ நினைத்த மக்களுக்கு வாரி கொடுத்து இருப்பான்...


தவறிய தாய் என‌ தான் சொல்ல தோன்றிய தருணம் அது...
அவங்க மனுசி தான், அவங்களும் பெண் தான்...
ஆனால் அவங்க தாய் என்பது தான் யோசிக்க வேண்டிய கட்டம் அது.


அது தான் தவறான ஆளின் பின் மகள் பயணமானாள் என்பது மறுக்க முடியாது அல்லவா...


தொழிலை முன்னேற்ற பாடுபடும் மகன் தங்கையை கூட இருந்து பார்க்க முடியும் அவங்க எப்படி யோசிக்கலாம் இது ஏற்றுக்கொள்ள மன ஒப்பவில்லை...
இந்த தாயின் மகன் தானே... எல்லாமே தவறாக தான் சிந்திப்பான் 😏😏😏😏


பதினைந்து வயது அஞ்சலி....


இதுவே போதும் வேற எதாவது சொல்லனுமா என யோசித்தால் தேவையில்லை போலும்...


பறக்கும் வண்ணத்துப்பூச்சிக்கு
தெரியாது தான் அழகென்று...


அதை கையில் வைத்துக் கொண்டு
ஆசைபடுபவனுக்கு தெரியும்
அது அழகோவியம் தான் என்று...


பறக்கும் வானில் சுதந்திரமாய் திரிந்தவளை தந்திரலோகத்திற்கு
சிறை செய்தால் அதுவும் சந்தர்ப்பவாதியாய் பறக்கத்தான் செய்யும்...


பட்டாம்பூச்சி பறந்த படியே இருந்திருக்கலாம் அழகாய் பறந்து
விளையாடி இருக்கும்....


இந்த 15+வயதில் இருந்தே 20+ஆகறதுக்குள்ள அவளுக்கு எந்த அளவுக்கு maturity இருக்கும் தெரியாமல் இந்த ஹீரோ ஆர்மிஸ் உருட்டுவதை பார்க்கும் போது தான் சிரிப்பு வரும்...


ஸ்ரீ மா செம அருமை ஆக போகுது கடந்த காலம்...


கண்டிப்பாக அவளுக்கு சீன் புரியுது பார்கலாம் இனி வரும் எபியில் வெயிட்டிங் ஸ்ரீ மா ❤️❤️
 

TM Priya

Well-known member
ஒரு நல்ல ஆண்மகனாய் உன்னை ஆளாக்கிய திருப்தி மட்டும் போதும் என்ற பத்மினி மகனுக்கு 21 வயது முடியவேண்டியே அமைதியாய் இருந்தாரா...எதிர்த்துப் பேசாத நல்ல ஆண்மகன் உனக்கு அடிமையா மஹிமா..கனி உன்னோட அன்பும் நட்பும் சூப்பர் மா..அமர் பாவம் மா..தாயும் அவங்க வழியைப் பார்த்துட்டு போய்ட்டாங்க‌..தந்தையைப் பத்தி சொல்லவே வேண்டாம்..தங்கை இவன் பொறுப்பில்...வீர்தேவ் பணத்திற்குப் பதிலா மகளை திருமணம் பண்ணி வைச்சிட்டான்...அஞ்சலி வைத்து அமர் கனவு கண்டா அதை அந்த சூர்யபிரகாஷ் சிதைச்சிட்டானா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி மேம்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

ஏற்றிய பாரத்தில்
ஏகாந்தம் தொலைத்த
ஏகாங்கியவன்...
கண்ட கனவுகள்
காலாவதியே!

மாற்றிய நேரத்தில்
மாமாங்கம் தொலைத்த
மன்னவனவன்...
கொண்ட நினைவுகள்
காலாவதியே!

தந்தையின் துரோகத்தில்
தாயின் தன்மானத்தில்
தனியாய் நிற்கின்ற கன்று
தடுமாறித் தேருவது நன்று!

தாயாய் தங்கையை
தாங்க நினைத்தவன்
தோளாய் தோழியை
தாங்கிக் கொண்டவன்
தேடிய பாதையில்
ஓடிய மானோ...
பெண்ணவளோ!

பதின் வயதின் மருட்சியில்
புள்ளி மானாய் துள்ளியவள்
கவரிமான் பரம்பரையில்
கற்பு நெறி வளர்த்தாலும்
பொன்மானைத் தேடி
பொய்யாகிப் போனாளோ!

சுய நலக் கூட்டத்தில்
சுகவாசியான பெண்ணே! - உன்
சுகபோக அடிமையாய்
மன்னவனை வளைத்தாயோ...?

காலத்தின் கட்டாயத்தில்
துரோகத்தின் பரிதவிப்பில்
துணையாய் மாறியவன்
தன்மானம் காத்துவிட்டு
அடிமை சாசனம் மாற்றிவிட்டான்!

துரோகியை வதம் செய்ய
புள்ளிமானைப் பிடித்தாலும்
கவரிமான் என்றுணர
காலந்தான் வேண்டுமம்மா?

ஆடிப் பாடிய சிட்டுக்குருவி
ஆலோலம் கேட்கும் ஆசையிலே
ஆழ்மனங்கள் ஆவலாய்
ஆர்ப்பரிக்கும் வேளையிலே...

அடுத்த அஸ்த்திரம்
பிரம்பாஸ்த்திரம் என்று
பிரம்மனும் படைத்தானோ...?
இதன் இலக்கு அவளானால்
எய்பவன் அவதார புருஷனே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top