All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "உயிர் கொய்வாய் நறும் பூவே..." -கதை திரி

Status
Not open for further replies.

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-8



மாயா கூறிய பதிலில் வானதியை அடிக்க உயர்ந்த ஹர்ஷாவின் கை அப்படியே நின்றது.



ஆம்! வானதி மாயாவிடம் "நான் உங்க அண்ணனை திருமணம் செய்துக்கொள்கிறேன், அதற்க்குப் பதில் நீங்கள் என் அண்ணனை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்" என்றாள்.


அவள் போட்ட நிபந்தனையில் வருணன், தாமரை, ஹர்ஷா என அனைவரும் அதிர்ச்சியடைய, ஹர்ஷா தனது தங்கையின் அழகு, படிப்பு, ஆளுமை என்ன, தொழில் உலகில் பெண் வேங்கையென பதினாறு அடி பாய்பவளுக்கு ஒரு பட்டிகாட்டானை திருமணம் செய்து தரச் சொல்லி கேட்கிறாளே என்ற கோபத்தில் அடிப்பதற்கு கையை உயர்த்திவிட்டான்.



மாயாவோ தயக்கம் சிறிதுமின்றி "நான் உன் அண்ணனை திருமணம் செய்துக்கொள்கிறேன்" என்றாள்


ஹர்ஷா அவள் கூறிய பதிலில் அடிக்க உயர்ந்த கை அப்படியே நிற்க, தனது தங்கையை திரும்பி பார்த்தான்.


"மாயு என்ன பேசுறேன்னு தெரிந்துதான் பேசுறியா..? "


"நான் தெரிந்துதான் பேசுறேன் ஹர்ஷா, எனக்கு நந்தனை கல்யாணம் செய்துக்கொள்ள முழு சம்மதம்" என்றாள் தெளிவாக.


தங்கை கேட்டதில் அதிர்ச்சியான வருணன் மாயா சொன்ன பதிலில் நினைவுக்கு வந்தவன் "இது என்றைக்கும் நடக்காது, என் தங்கச்சிய கட்டி வைக்கவே எனக்கு விருப்பம் இல்லை, இதில் நான் இவன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கணுமா..? "கோபமாக கூறினான்.


"அதான் சாரே சொல்லிட்டாரே.. எனக்கும் வானத்திக்கு மட்டும் தான் இந்த கல்யாணம், ஆக வேண்டிய வேலையப் பாருங்க" நக்கலாக ஹர்ஷா கூற..


ஹர்ஷாவின் கண்களை நேருக்கு நேராக பார்த்து "என் அண்ணன் உங்க தங்கச்சி கழுத்துல தாலி கட்டுனாதான், அடுத்த நிமிஷம் நீங்க என் கழுத்துல தாலி கட்ட முடியும்" உறுதியாக கூறினாள் வானதி.


"வானு என்ன பேசுற நீ..! உன் கல்யாணம் முதல்ல நடக்கட்டும் பொறவு, அண்ணனுக்கு நம்ம ஊருளையே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்" என்றார் தாமரை.அவர் கூறிய பதிலில் மாயா கேலியாக பார்த்து வைத்தாள்.


"முடியாதும்மா மாயா அண்ணி அண்ணணை கல்யாணம் பண்ணிகிட்டாதான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பேன், இல்லைன்னா இந்தக் கல்யாணமே எனக்கு வேண்டாம்."


"நான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன் வானு, நீ அவனை கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு பதில் காலம் முழுவதும் இங்கையே இருக்கலாம்" என்றான் வருணன்.


தாமரையின் அருகில் வந்த மாயா அவர் கையைப் பற்றி, அதில் ஒரு அழுத்தம் கொடுத்து, "இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்க ஆண்ட்டி அப்போதான் உங்க பொண்ணுக்கும் நல்லது, பையனுக்கும் நல்லது" என அந்த பையன் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூற,கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார் தாமரை.


"சரி "என்பது போல் தலை அசைத்தவர் "கண்ணா உங்க ரெண்டு பேரு கல்யாணமும் குறித்த நாளுல நடக்கணும்,இல்லை கல்யாணம் நின்னு போச்சு அப்படின்ற விஷயம் ஊருக்குள்ள தெரிந்து, குடும்ப மானம் போறதுக்குள்ள நான் போய் சேர்ந்திடுவேன் "என்று தீவிரமாக.. கூற..


"அம்மா ஏன் மா இப்படி எல்லாம் பேசுறீங்க" எல்லா பக்கமும் தான் அடைபட்டு அதிலிருந்து விடுபட வழி இல்லாததை உணர்ந்தவன் "உங்களுக்கு நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் அவ்வளவு தானே, சம்மதிக்கிறேன்" என்றவன் ஹர்ஷாவையும், மாயாவையும் முறைத்துவிட்டு வெளியேறினான்.


அவன் சென்றதும் ஹர்ஷா வானதியை வெற்றிப் பார்வை பார்த்துவிட்டு, மாயாவை கை பிடித்து அவள் அறைக்கு இழுத்து சென்றவன்..



"மாயு நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா, அவனைப் போய் கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதம்னு சொல்ற.."



"முதலில் இங்கே உட்காரு உன் காயத்திற்க்கு மருந்து போட்டு விடறேன்" என்றவள் காயத்தைச் சுத்தம் செய்து ஒரு பாண்ட் எய்டை ஒட்டிவிட்டவளிடம்..


"நீ எதுக்காக வந்தியோ அதை மட்டும் செய்துவிட்டு என் கூட வந்துவிட வேண்டியதுதானே, அந்த பட்டிகாட்டன் என்று முடிப்பதற்குள்.."


"நிறுத்து ஹர்ஷா இன்னொரு முறை அவரை மரியாதை இல்லாமல் பேசுனே அண்ணனு கூட பார்க்க மாட்டேன். யாரைப் பார்த்து பட்டிக் காட்டான்னு சொல்ற.. அவர் யாருன்னு தெரிந்தும், நீ இப்படி பேசுறது தப்பு, விதி மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால் நாம எல்லாம் அவருக்கு கீழே ,


இப்போ மட்டும் என்ன நம்ம எல்லாத்தையும் விடவும் ஒரு படி உயர்ந்துதான் நிற்கிறாரு, நான் இங்கே வந்த இத்தனை நாளுல ஒரு தப்பான பார்வைக் கூட பார்த்தது கிடையாது.அவ்வளவு கன்னியமானவர் அவரைப் பத்தி இனி தப்பா பேசாதே, நான் இந்த காரியத்தை சாதிக்கணும்னா அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டாள் மட்டும் தான் முடியும்.."


"ஏன் நீ எடுத்துச் சொல்லு புரிந்துக்கொள்வான்.. அதற்காக நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு உன் வாழ்க்கையை பாழாக்கிகொள்வதை நான் விரும்பலை மாயு"


"நானும் எடுத்து சொல்லி புரிய வைத்து கல்யாணத்தை நிறுத்தி, உனக்கும் வானதிக்கும் கல்யாணம் பண்ணி வைத்து, அந்த சாக்கில் எப்படியாவது நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போகணும்னு நினைத்தேன்."


"ஆனால் நீ வந்து எல்லா காரியத்தையும் கெடுத்துட்டே, இனி நான் சொல்றத கண்டிப்பா கேட்கமாட்டார், அவரை வழிக்கு கொண்டு வர இந்த கல்யாணத்தை தவிர வேற வழி தெரியல.."


"நீ வானுக்கிட்ட அப்படி நடந்துகிட்டு இருக்க கூடாது, உன்னை அந்த இடத்துல என்னால் விட்டு கொடுக்க முடியாது. அதான் சப்போர்ட் பண்ணேன் இனிமேலாவது அவளை ஹர்ட் பண்ணாமல் பார்த்துக்கோ சரியா, இதே உன் இடத்தில் வேறு யாரவது இருந்திருந்தால் நந்தனை அடித்த கையை இல்லாமல் செய்திருப்பேன்"முகத்தை கடுமையாக வைத்துண்டு கூறினாள்.


"சாரி மாயு ஏதோ ஒரு வேகத்துல பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடு."


"இந்த மன்னிப்பை என்கிட்டே கேட்காதே, வானுகிட்டே கேளு, அதே போல் நந்தன்கிட்ட மரியாதையா நடந்துக்கணும் இது என்னோட ஆர்டர்" என்றாள் தீவிரமாக..


தங்கையின் அருகில் வந்து தோள் மேல் கையைப் போட்டவன், "மாயு உண்மையச் சொல்லு அவனை.. என்று ஆரம்பித்தவன் அவள் பார்த்த பார்வையில் சாரி அவரை நீ விரும்புகிறாயா..? "

"இல்லை ஹர்ஷா நான் விரும்பல எனக்கு காதல்னு ஒன்று என்றைக்கும் வராது, அவர் என் கிட்ட கன்னியமாக நடந்துகிறார். அதனால் அவர் மேல் எனக்கு மரியாதை இருக்கு, என்னோட வேலை முடிஞ்சதும் எனக்கும் அவருக்கும் ஒத்துவரலையென்றால் பிரிந்துவிடுவோம், நான் என் வழியில் போய்விடுவேன் அவர் அவர் வழியில் போய்டுவார்."

"என்ன மாயு பேசுற..? "

"நான் உண்மையைப் பேசுறேன் ஹர்ஷா.. நீ எப்போதும் எனக்கு சந்தோசமாக இருக்கணும். வானு ரொம்ப வெகுளி அவளை நல்லா பார்த்துக்கொள்"


"நீ சந்தோசமாக இல்லைன்னா நான் மட்டும் எப்படி சந்தோசமாக இருப்பேன். அமமாவுக்கு நான் சத்யம் பண்ணிருக்கேன் உன்னை என்றைக்குமே சந்தோசமாக வைத்து பார்த்துக்குவேன்னு."

"இப்போதும் நான் சந்தோசமாக தான் இருக்கேன்.நான் நினைச்ச காரியம் முடிந்தால் இன்னும் சந்தோசமாக இருப்பேன். பிறகு, உன் கூட வந்துடுவேன் என்றவளை அணைத்துக் கொண்ட ஹர்ஷா, 'உன் கல்யாண வாழ்க்கையில் நீ தோற்கக் கூடாது மாயு, உன் அண்ணன் இருக்கிற வரைக்கும் அதை என்றைகும் நான் நடக்க விட மாட்டேன்' என நினைத்துக் கொண்டான்.


இரவு வேளையில்... வானு வானை வெறித்து கொண்டிருக்க, அவள் அருகில் காலடி சத்தம் கேட்க திரும்பிப் பார்க்க ஹர்ஷா நின்று கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்து விட்டு நகர போக கையைப் பற்றி தடுத்த ஹர்ஷா "எங்க போற? நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்" என்க.

"உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை மரியாதையா கையை விடுங்க.."


"நான் விடறதுக்கு ஒன்றும் உன் கையை பிடிக்கலை, வாழ்க்கை முழுவதும் என் கைக்குள்ள இந்த கையை இப்படி பொத்தி வச்சுக்கத்தான் பிடிச்சுருக்கேன்."


"இதுக்கு எல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை, அண்ணனும் தங்கச்சியும் பிளான் பண்ணி என்னையும், என் அண்ணனையும் அவமானப்படுத்திட்டிங்கள்ள, ரொம்ப ஜெயிச்சுட்டதா நினைக்காதீங்க, இதுல ஜெயிச்சது நான் தான், நான் நினைத்த மாதிரியே நானும் என் அண்ணனும் ஒரே வீட்லதானே இருக்க போறோம், என் பட்டிக்காட்டு அண்ணனுக்கு தான் உங்க குல விளக்கு தி கிரேட் மாயாவாதியைக் கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க எப்படி!" என்று நக்கலாக சொல்ல...


"இங்கே பாரு நான் உன் பக்கத்துல இருக்கும்போது, உன் அண்ணணை பத்தி பேசாதே எனக்கு பிடிக்கல, நீ அந்த சமயத்துல என்னை மட்டுமே நினைக்கணும்னு நான் விரும்புறேன்" என்றான் ஹர்ஷா..


என்ன தோத்து போனதும் பேச்சை மாத்துறீங்களோ..? நீங்க என் மேல் வச்சுருக்கிறது காதல் இல்லை உங்களை நிராகரிச்சுட்டேன்ன்னு, என்னை அடையணும்னு நினைக்கிற வெறி அதை நீங்க காதல்னு சாயம் பூசி கேவலப்படுத்தாதீங்க..

உண்மையான காதலுக்கு காயபடுத்த தெரியாது, அவர்கள் சார்ந்தவர்களை மதிக்க தெரிந்திருக்கும், அவர்களைத் தன் சொந்தமாக நினைக்கத் தெரிந்திருக்கும், விட்டு கொடுத்துப் போக தெரிந்திருக்கும். உங்களை மாதிரி எல்லார் முன்னாடியும் என் பெண்மையை கேள்விகுறியாக மாற்ற தெரிந்திருக்காது.


என் கழுத்துல தாலி கட்டி, உங்க பக்கத்துல வச்சுக்கலாம். ஆனால், என் மனசுல என்றைக்கும் உங்களுக்கு இடம் இல்லை என்று நகர போனவளைப்" பிடித்து நிறுத்தியவன்..


"ஹா.. ஹா.. "என்று சிரித்து "என்ன தமிழ் படம் எதுவும் பார்த்தியா, நல்லா டயலாக் அடிக்கிற, நீ நான் உன் மேல வச்சுருக்கிறதுக்கு என்ன பேரு வேணாலும் வச்சுக்க, ஆனால் நான் உன் மேல வச்சுருக்கிறதுக்கு பேரு காதல்தான், அன்கண்டிஷனல் லவ், அவ்வளவு பொசஸிவ் என் பட்டுக்காட்டு கருப்பட்டி மேல, எனக் கன்னத்தில் கிள்ளியவன், உனக்கு எல்லாமே நானாக மட்டும் தான் இருக்கணும்னு ஆசை.


அதான் உன் அண்ணனை பத்தி பேசும்போதெல்லாம் எனக்கு பிடிக்கல, இனி உன் அண்ணனை பத்தி பேசக் கூடாது புரியுதா, சீக்கிரம் போய் தூங்கு இல்லைனா கல்யாண சமயத்துல டல்லா தெரிவே" என கன்னத்தில் தட்டி விட்டு செல்ல.. வானுவிற்க்கோ அவனை நினைத்து ஆயாசமாக இருந்தது.


அடுத்த நாள் மாயா.. ஒரு இலக்கத்திற்கு அழைத்தவள்.. "பாட்டி..எப்படி இருக்கீங்க, தாத்தா எப்படி இருக்காரு..? "


"........."

"அங்க போகலை இங்கதான் இருக்கேன்."


".........."


"நான் வந்து சொல்றேன்."


".........."



உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொண்டு வர போறேன். ஊருக்கு வரும்போது."


"............"


"அதான் சர்ப்ரைஸ்னு சொல்றேன்ல.."


"............"



"அப்பாகிட்ட எதுவும் சொல்லாதீங்க.."


"............"


"உடம்பை பார்த்துக்கோங்க அடுத்த வாரம் வந்துடுவேன் பை" என்று வைத்தவள், "இன்றைக்கு எப்படியாவது வருணன்கிட்ட பேசணும் "என நினைத்தவள் அவன் தோட்டம் நோக்கிச் சென்றாள்.


வருணன் தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தடி நிழலில் அங்குள்ள ஒரு கட்டிலில் படுத்து கண்ணை மூடி, அதை மறைக்கும் விதமாக ஒரு கையை வைத்து படுத்திருந்தான்.


அவன் அருகில் சென்ற மாயா "நந்தன்" என்று அழைக்க..


மெதுவாக கண் விழித்து எழுந்தவன் அவளைக் கண்டதும் முறைத்து விட்டு நகர முற்பட.. அவன் கையை பிடித்து தடுத்தவள், "நான் உங்ககிட்ட பேசணும் நம்ம வாழ்க்கையைப் பத்தி.."


"அதைப் பத்தி பேச என்ன இருக்கு அதான் எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க, நீங்களும் முடிவு எடுத்தாச்சு"


"பேசித்தான் ஆகணும் நந்தன். என்னை உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும்,இருந்தாலும் இந்த கல்யாணம் நடக்கணும்.. அதான் நல்லது."


"அப்போதான் என் தங்கச்சி உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்குவா, நீங்க கூட அதுக்காகதானே வேலை மெனகெட்டு விவசாயம் பண்ண போறேன்னு ஏமாத்திட்டு வந்து என் வீட்ல உட்கார்ந்து இருக்கீங்க, எங்களோட சொந்தம்னு என் அம்மாகிட்ட சொல்லிருக்கீங்க அதாவது உண்மையா இல்லை என் அம்மாவை மிரட்டி சொல்ல வச்சீங்களா..? "


"அது உண்மைதான் நந்தன் நான் உங்க சொந்தம் தான்" என்றவள்,"நான் இங்க எதுக்கு.."


அவள் ஏதோ சொல்ல வருவதற்குள் "அதான் தெரியுமே என் தங்கச்சிய உங்க அண்ணனுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நாடகம் போட்டு, காரியம் சாதிக்க வந்திங்க அதுவும் செஞ்சாச்சு, என் வாழ்க்கையும் சேர்த்து கெடுத்தாச்சு.. ஊரே எங்க வீட்டைப் பத்திதான் பேசுது, மாப்பிள்ளை பொண்ணு மாறிவிட்டதைப் பத்தி இதற்க்கு மேல் வேற என்ன சொல்ல போறீங்க.."விரக்தியாக கூறினான்


இவனிடம் இப்போது சொல்லிப் புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்தவள், பழைய மாயாவாக கம்பீரமாக "ஆமா அதுக்குத்தான் வந்தேன். உங்க வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்கத்தான் வந்தேன் ,என் பிளான் படிதான் எல்லாம் நடந்தது போதுமா, நாம கல்யாணம் பண்ணிக்குவோம் பிடிச்சிருந்தா சேர்ந்து வாழ்வோம், பிடிக்கலைன்னா பிரிந்துவிடுவோம், இது எல்லாம் வானுக்காகவும், ஹர்ஷாவிற்காகவும் தான், பிரியும்போது நமக்கு கஷ்டமாக இருக்காது என்றவள் ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு.."


"என்ன" என்பது போல் பார்த்தான் வருணன்.


"ஒரு ரெண்டு மாதம் நீங்க சென்னையில் வந்து என் கூட இருக்கணும்"


அதெல்லாம் என்னல முடியாதுங்க,நீங்க வேணும்னா கல்யாணம் முடிந்த அன்னைக்கே கிளம்புங்க, என்னால் இங்க உள்ள வேலை எல்லாம் விட்டுட்டு அடுத்தவங்க வீட்ல மாதக் கணக்கில் தங்க முடியாது" என்று மறுத்தான்.


இங்க பாருங்க நந்தன் எனக்கு அம்மா இல்லை அப்பா மட்டும் தான் அவரும் வெளியூர் போயிருக்காரு, தாத்தா, பாட்டி இருக்காங்க அவங்களால் கல்யாணத்துக்கு வர முடியாது. அவங்க உங்களைப் பார்க்க விருப்பப்படுவாங்க அவங்களுக்காகவாவது கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க.."


"அதுக்கு பிறகு நீங்க ஒரு நாள் கூட அதிகமாக தங்க வேண்டாம்"என்றாள்



அவன் பேச வாய் திறக்கும்போது, ஹர்ஷா அடித்ததில் வீங்கியிருந்த உதடு அசைவு கொடுத்ததும் வலி ஏற்பட "ஆஆ.. "என்று முகம் சுளிக்க, "என்னாச்சு வருணன் வலிக்கிதா..? என்று அவன் இதழ்களை வருடப் போக, அவள் கையைப் பற்றி தடுத்து உதறியவன்..


"சரிங்க பெரியவங்களுக்காக நான் வர்ற சம்மதிக்கிறேன். ஆனால், நீங்க செய்த இந்த துரோகத்தையும், அதனால் ஏற்பட்ட அவமானத்தையும் மறக்க மாட்டேன்" என்று சொல்லி நகர்ந்துவிட்டான்.


இதை அனைத்தையும் மாயாவிடம் இன்றைக்கு எப்படியாவது தன் காதலை சொல்ல வேண்டும் என பின் தொடர்ந்து வந்த செம்பட்டை அவர்கள் திருமணம் செய்து கொள்ள போவதைக் கேள்வி பட்டதும், இதயம் வெடிக்காத குறையாக 'பாவி பங்கு என்னோட குளோப் ஜாமுன கடைசில ஆட்டைய போட்டுட்டேல்ல,நீ அந்த புள்ளைய அன்னைக்கு கட்டிபுடிச்சுட்டு நின்னப்பவே நான் சுதாரிச்சுருக்கணும், ரெண்டு நாள் ஊருக்கு போயிட்டு வரதுக்குள்ள என்னமோ நடந்துருக்கு விசாரிக்கணும்' என நினைத்தவன் கையில் வைத்திருந்த ரோஜா பூவை தூக்கி போட்டு விட்டு, "நமக்கு குளோப் ஜாமுன் இல்லை இனி நம்ம டார்கெட் இளஞ்சியமும், கருவாச்சியும் "தான் என அடுத்த இலக்கை பிடிப்பதற்காகா சென்றது அந்த கிராமத்து பச்சைக் கிளி.


மாயா ஹர்ஷாவை எச்சரித்து இருந்ததால் வருணனை சீண்டாமல் ஒதுங்கியே இருந்தான், வருணனோ திருமணம் நடக்கவிருந்த முதல் நாள் வரைக்கும் தோட்டத்தில் உள்ள சிறிய வீட்டில் தங்கிக் கொண்டான், அவர்கள் இருவரையும் காண பிடிக்காமல்.


நாட்கள் வேகமாக நகர அவர்கள் எதிர் பார்த்த திருமண நாளும் வந்து சேர்ந்தது. வருணன் உணர்ச்சியற்ற முகத்தோடு அப்சரஸ் போன்று அனைவரையும் மயக்கும் அழகோடு அவன் அருகில் நெருங்கி அமர்ந்த மாயாவின் கழுத்தில் இயந்திரம் போல் பொன் தாலியை அணிவித்து தனது சரி பாதியாக ஏற்றுக் கொண்டான்.



அதே போல் ஹர்சாவும் தனது மனம் கவர்ந்த சாக்லேட் நிறத்தழகியை மனதில் மகிழ்ச்சியுடனும், முகத்தில் புன்னகை வழிய தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள, வானதிக்கோ தனது மனம் கவர்ந்தவனை கை பிடித்த மகிழ்ச்சி இல்லாமல் உம்மென்று அமர்ந்திருந்தாள்.அதே வேளையில் மலருக்கும் சரவணனுக்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தது.


சடங்குகள் அனைத்தும் முடிய.. அன்றே சென்னை செல்ல வேண்டும் என ஹர்ஷா அடம் பிடித்ததால், தன் வீட்டு மாப்பிள்ளையின் வார்த்தையை மீறாது அனைவரும் சென்னை செல்ல தயாராக, தாமரையையும் உடன் அழைக்க அவர் தோட்டம், மாடுகள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என மறுத்துவர் வருணனை கண்டு கண்கலங்க..


"அம்மா ரெண்டு மாசத்துல வந்துடுவேன், நீங்க பார்க்கணும்னா ஒரு போன் பண்ணுங்க உடனே வந்துடுறேன்" என்க..


"கண்டிப்பா வருவேள்ள கண்ணா.."


" என்னமா பேசுறீங்க இதான் என் வீடு.இங்க வராமல் எங்க போவேன்" என்றவன் அவரை அனைத்து நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, செம்பட்டையிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு காரில் ஏற, சற்று பின் தங்கிய மாயா, அவர் கையை பற்றி அழுத்தம் கொடுத்து "கவலைப் படாதீங்க ஆன்ட்டி, உங்க பையன் என்றைக்கும் உங்களுக்குத்தான்" என்று சொல்லி அவளும் ஏறிக்கொள்ள..



வானுவிடம் மாப்பிள்ளை கோபப் பட்டு பேசினா, நீயும் துடுக்கா ஏதாவது பேசி வைக்காதே, அனுசரிச்சு போ, அந்த வீட்ல உள்ளவங்களையும் இனிமேல் உன் வீட்டு ஆளுங்களா நினைக்கணும்,எல்லார்கிட்டையும் அன்பா நடந்துக்கணும், இனி அதான் உன் வீடு, நடந்தை நினைச்சுகிட்டு இருக்கமால், புருசனோட நல்லா பிழைக்க பாரு" என அறிவுரை வழங்கியவர், கண்களில் கண்ணீர் வழிய உச்சி முகர.. வானதியும் தாமரையைக் கட்டிக் கொண்டு அழுதவள் நேரமாவதை உணர்ந்து மன வருத்தத்தோடு புகுந்த வீட்டை நோக்கிச் சென்றாள்..



அடுத்த ஐந்து மணி நேரத்தில் மாயா வீட்டின் முன் வந்து நின்றது அந்த வெளிநாட்டு கார், கீழே இறங்கிய வருணனும், வானதியும் மாளிகை போன்று இருந்தா அந்த வீட்டை கண் இமைக்காமல் பார்த்தனர்..


சில நிமிடங்கள் கழித்து அனைவரும் வாசலை அடைய.. கார் சத்தம் கேட்டு மாயாவின் பாட்டி, தாத்தா, அப்பா என அனைவரும் வெளியில் வந்து பார்த்த அனைவருக்கும் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது போல் நின்றனர்.


மாயாவின் பாட்டி கோதை நாச்சியார் அங்கு நின்றிருந்தவனைக் கண்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழப் போக.. இனம் புரியா உணர்வு எழ பாட்டி என்ற கூவலோடு அவரைத் தாங்கிப் பிடித்தான் வருண நந்தன்.


இதைத்தான் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதோ..!!



மலர்வாள்..!!


ஹாய் பிரண்ட்ஸ்...


அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.


போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇

 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-9


கோதை நாச்சியார் மயங்கி விழுந்ததும் அவர் கீழே விழாமல் கைகளில் தாங்கியவன், யாரையும் சட்டை செய்யாது, அவனே அங்குள்ள நீள் இருக்கையில் படுக்க வைத்து, வேகமாக தண்ணீர் எடுத்து வந்து தெளிக்க, மாயாவும், ஹர்சாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தனர் .


மாயாவின் தாத்தா வெங்கடேசன், மாயாவின் அப்பா ராஜவேலு அனைவரும் வருணனைக் கண்டது, கோதை நாச்சியார் மயங்கி விழுந்தது என இரு வேறு அதிர்ச்சியில் இருந்தனர்.


வானதியும், வருணனும் திடீர் என்று அவர்கள் கல்யாண கோலத்தில் வந்து நின்றதால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்ததாக எண்ணிக் கொண்டனர்.


மெதுவாக "பாட்டி, பாட்டி" என்று கன்னத்தைத் தட்ட, அவன் ஸ்பரிசம் பட்டதும் மெதுவாக கண் விழித்த கோதை, தன் முன் நின்றவனை கண்டதும் ஒரு துளி கண்ணீர் உருண்டு விழ தன்னை திடப்படுத்திக் கொண்டு எழ, அவர் எழுவதற்கு வருணன் உதவி செய்ய போக.. அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவரை அதிக உரிமை எடுத்துக் கொண்டதால் கோபமாக பார்க்கிறார் என நினைத்து, தன்னையே கடிந்துக் கொண்டவன், தன் தங்கையின் அருகில் சென்று நின்றுக் கொண்டான்.



வானதியோ 'கிழவிக்கு கொழுப்ப பார்த்தியா.. வயசான காலத்துல கீழ விழுந்த பொட்டுன்னு போயிடும்னு என் அண்ணன் உதவி பண்ணுனா, கிழவி கண்ணாலையே மிரட்டுது, அதுவும் தடி மாடு பேரன் கல்லுகுண்டாட்டம் நிற்கும்போது என் அண்ணன் போய் தாங்குச்சு பாரு அதை சொல்லணும்' என கோதை நாச்சியாரை வசைப் பாடிக் கொண்டிருந்தாள்.


கோதை நாச்சியார் அவரே எழுந்து அமர்ந்து மாயாவைப் பார்த்தார் மாயாவும் கண் மூடி திறந்து, அவர் கையில் ஒரு அழுத்தம் கொடுத்தாள் அதில் எதையும் வெளிப்படுத்தாதே என்ற பொருள் இருந்தது..



அருகில் இருந்த தண்ணீரை எடுத்து பாட்டியை பருக வைத்த பிறகு,
'இங்கே பெரியவங்க எல்லாம் இருக்கும்போது உங்க இஷ்டதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா என்ன அர்த்தம்? "என தன் கம்பீர குரலால் கேட்டார்.


'உன்னை ஒரு ஆளாவே மதிக்கலைன்னு அர்த்தம் கிழவி' வானதி மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாள்.



"பாட்டி நடந்தது நடந்து போச்சு இனி மாத்த முடியாது.. வருணனை தன் அருகில் பிடித்து இழுத்து, இவர் தான் என் லைப் பார்ட்னர், உங்க பேரன் "வருணன நந்தன்" என அந்த பேரனில் அழுத்தம் கொடுத்து சொன்னவள், எங்க ரெண்டு பேரையும் தாத்தாவும், நீங்களும் ஆசீர்வாதம் பண்ணுங்க, தாத்தா.. பாட்டி பக்கத்துல வந்து நில்லுங்க" என்று மாயா கூற.. அப்போதும் அவர் அசையாமல் வருணனைப் பார்த்துக் கொண்டிருந்தார்


"யோவ்.. வெங்கி அங்க என்னையா நின்னுகிட்டு கனவு காணுறே.. இங்க வாயா" என்று அதட்ட..




அதிர்ச்சியில் இருந்து மீண்டவர் என்ன "கோதே.. கூப்பிட்டியா.."என அருகில் வந்து நிற்க.. அவர்கள் காலில் விழுந்தவர்களை இருவரும் மனதில் மகிழ்வோடு "கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஒற்றுமையும் , குழந்தை குட்டிகளோடு, மகிழ்ச்சியான வாழ்வையும் கொடுக்கட்டும்" என இருவர் தலையிலும் கை வைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு மாயவை பாட்டி அணைத்துக் கொண்டு முத்தம் வைக்க, வருணனை இறுக்கி அணைத்த வெங்கடேசன் உள்ளுக்குள் மௌனமாக அழுதவர் "நல்லா இருப்பா" என்றார்.


பிறகு ராஜவேலுவிடம் சென்றவள் "சாரி டாடி" என்றாள்

"பரவாயில்லைமா.. நீ எது பண்ணுனாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் என்றவரின் காலில் விழ, அவர்களை தடுத்து ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்" என்றவர் வருணனிடம் திரும்பி கண்கள் கலங்க அப்படியே தே.. என்று சொல்ல வந்தவரை..


"டாடி.. எங்களுக்கு பசிக்குது அப்புறமாக பேசலாம்" என்றதும் புரிந்துக் கொண்டவர் போல், "சரிம்மா நீங்க சாப்பிடுங்க நான் ஒரு ஆபீஸ் கால் பண்ணிட்டு வர்றேன்" என்று நகர்ந்தார்.


அவர் சென்றதும் நாச்சி பாட்டி, "என்னடா ஹர்ஷா உன் பொண்டாட்டியையே பார்த்துகிட்டு இருக்கே, வந்து ஆசீர்வாதம் வாங்கிகோடா" என்றதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்களை வாழ்த்திவிட்டு..
"உன் பொண்டாட்டி வேண்டா வெறுப்பா காலுல விழறா, இவளுக்காகத்தான் நீ மும்பைக்கு ஓடுனியா, என்னை விட சுமாராத்தான் இருக்கா" என்று சீண்ட..


'அப்படியே கிழவிக்கு மிஸ் யுனிவெர்ஸ்னு நினைப்பு, இதுக்கு நான் சுமாரா இருக்கேனா, பேரு கோதை நாச்சியார்னு வச்சிருந்தா , பெரிய வேலு நாச்சியார் பரம்பரைன்னு நினைப்பு ரொம்ப தான் சிலுப்பிக்குது, இரு கிழவி கவனிச்சுக்கிறேன்' என மனதில் பொருமிக் கொண்டு அவரை முறைத்துப் பார்க்க,


மனதில் சிரித்துக் கொண்ட நாச்சி பாட்டி, "சரி சரி நேரம் ஆச்சு போய் சாப்பிடுங்க.."என்றவர் மாயாவிற்கு கண் காமித்துவிட்டு அறையில் நுழைந்துக் கொண்டார்.


நால்வரும் சாப்பிட்டு விட்டு அவர்கள் அறைக்கு சென்றனர்.மாயா வருணனை அவள் அறைக்கு கூட்டி சென்றாள்.பயணம் செய்த அசதியில் குளித்துவிட்டு வருணன் உறங்கி விட, மாயா பாட்டியின் அறைக்குச்
சென்றாள்.


அங்கு வெங்கடேசன் ஒரு இருக்கையில் விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருக்க, நாச்சியார் பாட்டி ஒரு ஆளுயுர புகை படத்தின் முன், "தேவ் உன்னை அப்படியே அச்சுல வார்த்தது போல இருக்காண்டா உன் பையன், நீயே என் முன்னாடி உயிரோடு வந்து நிற்கிறியோன்னு ஒரு நிமிஷம் என்னால நம்ப முடியலடா, எத்தனை வருஷம் காத்திருப்பு இந்த வீட்டு வாரிசை பார்த்துடனும்னு அது இன்னைக்கு நிறைவேறிருக்கு, ஆனால் என் பேரன் என் கண் முன்னாடி இருந்தும் அவனை உச்சி முகர முடியலை டா.. ஏனா அவங்க வீட்டை விட்டு போனதுக்கு நான் தானே காரணம், நான் அப்படி பேசாமல் இருந்திருந்தா இந்த நிலைமை வந்துருக்காது" என்று கண் கலங்கினார்.



"கோதே.. தினமும் இப்படி கண்ணீர் வடிச்சுக்கிட்டு தானே இருக்கே, இன்னைக்கு உன் வேண்டுதலுக்கு பலான நம்ம பேரன் வந்துட்டான். இனி பொறுமையா அவன்கிட்ட எடுத்து சொல்லி, நம்ம மருமகளையும் சீக்கிரம் அழைச்சுட்டு வந்து மன்னிப்பு கேட்டு ஒரு குடும்பமா வாழ்வோம். நீ இந்த நாளு சுவத்துக்குள்ள அழுது வெளியே கம்பிரமா காட்டிக்கிட்டு இத்தனை வருஷம் நடை பிணமா இருந்தது போதும்.இனி எல்லம் நல்லதா நடக்கும்" என்று ஆறுதல் மொழி கூறிக் கொண்டிருந்தார்.


கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த மாயா "பாட்டி" என்று அழைக்க..


மாயாவை கண்டதும் இத்தனை வருட துக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய கேவலாக எழ, பேத்தியை அணைத்துக் கொண்டு அவளிடம் ஆறுதல் தேடுவது போல் அழுது தீர்த்தவர்..


"மாயா உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாதுடா, இந்த ஜென்மத்துல பார்க்கவே முடியாதுன்னு ஏங்கிகிட்டு இருந்த என் பேரனை கொண்டு வந்து சேர்த்துட்டியே ரொம்ப நன்றி டா.." என கையெடுத்து கும்பிட்டவரை பதறி போய் தடுத்தவள்..


"என்ன பாட்டி, இப்படி எல்லாம் செய்து என்னை சங்கடத்துக்கு ஆளாக்காதீங்க, உங்ககிட்ட நான் தான் சொல்லிருந்தேனே, கண்டிப்பா உங்க பேரனையோ, பேத்தியையோ உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன்னு, என்னோட ஐந்து வருட தேடலுக்கு பிறகு கொண்டு வந்து நிறுத்திருக்கேன் சந்தோசமாக இருங்க.."


"அப்புறம் ஏன் மாயா என்னைய உண்மையை சொல்ல விடாமல் தடுத்தே.. என் மருமகளை ஏன் அழைச்சுட்டு வரல, அவகிட்ட நான் மன்னிப்பு கேட்கணும், அவ எங்க இருக்கான்னு சொல்லு நாளைக்கே நான் போய் பார்க்குறேன்" என்க..


ஒரு நொடி சுருங்கிய மாயாவின் முகம் "பாட்டி அவசரப்படாதீங்க, அதுக்கென்று நேரம் வரும்போது அவங்களை நீங்க பார்க்கலாம், நானும் கூட அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் என் அம்மா சார்பாக"என்றாள்


"நீ எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்" தாடையை பிடித்து கேட்க..


"என் அம்மாவும் ஒரு காரணம் தானே அவங்க போனதுக்கு, அதற்க்கு பிராயசித்தமாதான் வருணனை கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்திருக்கேன்.."


"மாயு உன்னை அவ மன்னிச்சுடுவா ஏன்னா நீ அவள் உயிர் தோழியோட பொண்ணு.. அது மட்டும் இல்லாமல் இப்போ நீ அவளோட மருமகள் டா, என்னை தான் அவ மன்னிக்க மாட்டா.."


"என்ன பாட்டி சொல்றிங்க.."


"ஆமாடா என் பொன்னும், என் மருமகளும் தோழிகள் டா.."


"இதை ஏன் என்கிட்ட நீங்க சொல்லவே இல்லை. "

"அப்போ எனக்கு சொல்ல தோணலடா.."


"ஆனால் என் பேரன், என் மகன் ரத்தம் நான் மயங்கி விழுந்ததும் ஓடி வந்து தங்குனான் பார்த்தியா அதான் ரத்த உறவுன்னு சொல்றது."


மெல்லிதாக புன்னகைத்தவள், "ஆமா பாட்டி அவர் ரொம்ப நல்ல மனுஷன், எல்லாரையும் மதிக்க தெரிந்தவர்" என்றாள் மாயா.


"என் மருமகள் வளர்ப்பு அப்படி டா மாயா, ஒழுக்கமானவனா தான் வளர்த்திருப்பா" என்று பெருமைப் பட..


"பாட்டி மாமா போட்டோவை நாம உண்மையை சொல்ற வரைக்கும் அவர் கண்ணுல படாமல் எடுத்து வச்சுருங்க, நல்ல வேளை ஹால்ல போட்டோ இல்லாமல் போய்டுச்சு.."


"சரிம்மா எடுத்து வச்சுடுறேன்.."


"இந்த ஹர்ஷா பொண்டாட்டி வருணனை நான் ஒதுக்குறேன்னு நினைச்சு இப்படி முறைக்கிறா, அவங்க வீட்லதான் என் மருமகளும், வருணும் இருந்தாங்களா.. என் பேரனுக்காக சண்டை போட்டுதான் ஹர்ஷாவை வேண்டாம்னு சொன்னாளா..? "


"ஆமா பாட்டி.. நந்தன் மேல அவ்வளவு பாசம், வெகுளியான பொண்ணு, ரொம்ப நல்லவள்.."


"பார்த்தாலே தெரியுதும்மா.."


அதன் பின் தாத்தா, பாட்டி இருவரிடமும் வருணைப் பற்றி உரையாடிவிட்டு அவள் அறைக்கு சென்று உறங்கி கொண்டிருந்த வருணனின் அருகில் அமர்ந்து, அவன் இதழில் காய்ந்திருந்த காயத்தை வருடிகொடுத்தவள், அவன் அசையவும் கைகயை எடுத்துக் கொண்டவள், அருகில் படுத்து உறங்கிவிட்டாள்.


இரவு இரண்டு மணி அனைவரும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த சமயத்தில், மாயாவின் அலைபேசி அலறி தூக்கத்தை கலைத்தது, அந்த சத்தத்தில் இருவரும் விழித்து கொண்டனர்.


இந்த நேரத்தில் யார் என்ற யோசனையுடன் போனை பார்த்தவள் அந்த பெயரை கண்டதும்
தாமதிக்காமல் அழைப்பை ஏற்றவள் அந்த பக்கம் சொன்ன செய்தியில் உடனே வர்றேன்.. என்று அழைப்பை துண்டித்தாள்.


"என்னங்க இந்த நேரத்துல யாரு? " என்றான் வருணன்.

"ஒண்ணும் இல்லைங்க ஆபீஸ் கால், ஒரு முக்கியமான வேலை போயிட்டு உடனே வந்துடுறேன்"என்று கிளம்பினாள்..

"என்னங்க இந்த நேரத்துல தனியா போறீங்க, நானும் கூட வர்றேன்.."


"இல்லை நந்தன் எனக்கு இது பழக்கம் தான், போயிட்டு உடனே வந்துடுறேன், நீங்க தூங்குங்க" என்றவள் அவன் பதிலை எதிர் பார்க்காமல் சென்றுவிட்டாள்.


அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு சென்ற வேலையை முடித்துவிட்டு, முகத்தில் தூக்க கலக்கத்தோடு காரை விட்டு இறங்க.. அவளுக்காக நந்தன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.



அவனைக் கண்டதும், முதல் முறையாக தனக்காக ஒரு ஜீவன் வாசலில் காத்துகொண்டிருப்பது, தன் குழந்தை வரவுக்காக ஒரு தாய் காத்து கொண்டிருப்பாளே, அது போல் மாயாவும் அவன் உருவில் தன் தாய் காத்துக் கொண்டிருப்பதை போன்று உணர்ந்தவள்,


கண்கலங்க அனைத்தையும் மறந்தவள் ஓடி வந்து வருணனை இறுக கட்டி கொண்டாள்... முதலில் உடல் விறைக்க நின்றவன்...



அரை தூக்கத்திலையே "தேங்க்ஸ் நந்தன்.. இதுக்கு முன்னாடி அம்மா மட்டும் தான் எனக்காக காத்துகிட்டு இருப்பாங்க அவங்க போன பின்னாடி நான் எப்போ வர்றேன், எப்போ போறேன்னு யாருக்கும் தெரியாது "என்று கூறியதும்..


தன்னிடம் அவள் தாயை உணருகிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன் வாஞ்சையாக அவள் தலையை வருடி கொடுத்து வெகு நேரம் அப்படியே நிற்க.. அவள் முகத்தை குனிந்து பார்க்க அவள் அவன் நெஞ்சையே மஞ்சமாக்கி துயில் கொண்டிருந்தாள்.


அவள் தூக்கம் கலையாதவாறு தனது கைகளில் அள்ளிக் கொண்டவன், மெத்தையில் கிடத்தி, போர்வையை எடுத்து போர்த்திவிட்டு "ராங்கி ராக்கம்மாவுக்கு இப்படி ஒரு முகம் இருக்கா!" ஆச்சரியம் போல் முணுமுணுத்தவன் அவள் அருகில் படுத்து உறங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலையில்.. பறவைகள் ஒலி எழுப்பி, ஆதவன் தனது கதிர்களை சாளரத்தின் வழியே விடியலுக்கான தூது அனுப்பி வானதியின் துயிலை கலைத்தது. படுக்கையில் விட்டு எழுந்தவள், கொட்டாவியை விட்டு, விரிந்து கிடந்த கூந்தலை கொண்டையிட்டு அருகில் பார்க்க ஹர்ஷாவின் இடம் காலியாக இருந்தது..

"எங்க போனாங்க.. நைட் நான் குளிச்சுட்டு வரதுக்குள்ள கும்பகர்ணன் சித்தப்பா மகன் மாதிரி இது வரைக்கும் தூங்காதவன் கணக்கா குறட்டை அடிச்சு தூங்கிட்டு இருந்தாங்க, இப்போ காணோம். சரி எங்கையோ போய் தொலையட்டும் நாம போய் குளிப்போம் "என அடுத்த அரை மணி நேரத்தில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்துகொண்டிருந்தவளை, வேர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த ஹர்ஷா பின்னால் இருந்து அணைத்தான்.


"இங்க பாருங்க ஒழுங்கா என்னை விடுங்க நான் குளிச்சுட்டேன், நீங்க குளிக்காமல் உங்க வேர்வையோட சேர்ந்து என் உடம்பும் பிசுபிசுன்னு இருக்கு" சொல்லிக்கொண்டே விடுபட போராட..


"பிசுபிசுன்னு ஒட்டுதா இன்னும் நல்லா ஒட்டட்டும்"என சொல்லிக்கொண்டே, தாடி அடர்ந்து வியர்வை அரும்பியிருந்த கன்னத்தை அவள் கன்னத்தோடு வைத்து இழைந்தான்..

"ச்சீ.. என்ன பண்றிங்க விடுங்க.. உங்க தாடி குத்துது" என சிணுங்க.. பெண்ணவளின் சிணுங்களில் தன்னை தொலைத்தவன் அவளை திருப்பி அவள் முகம் நோக்கி குனிய, தன் அனுமதி இல்லாமல் தன்னிடம் இழைபவன் கணவனாக இருந்தாலும் எல்லை மீறுவது பிடிக்காமல், அவன் செய்த அனைத்தும் கண்முன் வந்து போக ஹர்ஷாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் வானதி.


அவள் தன்னை அடிப்பாள் என்று எதிர்பார்க்காத ஹர்ஷா அவள் அடித்ததில் அதிர்ச்சியுடன் கன்னத்தைத் தடவ..


"இது அன்னைக்கும், இன்னைக்கும் ஆமபளைன்ற திமிருல என் கிட்ட வரம்பு மீறியதற்கு, அன்னைக்கே நான் அடிச்சிருந்த மறுபடியும் என்கிட்ட நெருங்கிருக்க மாட்டே,
இனி ஒரு தடவை இப்படி நடந்தது தொலைச்சுபுடுவேன்" என எச்சரித்துவிட்டு செல்ல போனவளை,


கை பிடித்து வேகமாக இழுத்து கட்டிலில் தள்ளியவன், நொடியும் தாமதிக்காது அவள் மீது பரவி படர்ந்து அவள் கரங்களை பற்றி "என்னைய அடிக்கிற அளவுக்கு அவ்வளவு தயிரியம் வந்துருச்சா டி உனக்கு, என் தகுதி என்ன உன் தகுதி என்னனு உன் முகத்தை கண்ணாடில பாருடி, உனக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாதுடி,



நீ என்னை அடிக்கிறியா.. அப்படிதாண்டி வரம்பு மீறுவேன் உன்னால என்ன பண்ண முடியும்? " என அவள் மெல்லிய இதழ்களில் அவன் இதழ்களை ஆவேசமாக பொருத்தியவன் அவள் குருதியின் சுவையை அவன் இதழ்கள் உணரும் வரை சுவைத்தவன் அவளை உதறிவிட்டு, அவள் அடித்தது தாங்கமுடியாமல் பதிலுக்கு அவள் கூந்தலை பற்றி நிமிர்த்தி "ஜாக்கிரதை" என கூறி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.


வெகு நேரம் அழுதுகொண்டிருந்தவள் திரும்பவும் அவன் முகத்தை காண பிடிக்காது அவன் குளித்துவிட்டு வருவதற்குள், தன்னை சரி செய்துக் கொண்டு தோட்டத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

அவனும் அவள் மேல் இருந்த கோபத்தில் சொல்லிக்கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டான்.

மாயா தாமதமாக தூங்கியதால் அவளை எழுப்பாமல் வருணன் மட்டும் தன் நன்பனை காண செல்ல தயாராகி கீழே வந்தான்.


"ஏன்.. கோதே..! எப்போ பார்த்தாலும் இந்த புடவையையும், நகையையும் போட்டு சீரியல் வில்லி மாதிரி சுத்துறியே.. ஒரு நாளாவது ஒரு ஜீன்ஸ், டீ ஷர்ட் இப்படி போட்டாத்தானே எனக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.."மிசஸ். ஓல்ட் பேஷன் ஷோ போட்டோசை இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் பார்த்துக் கொண்டு கேட்க..


"யோவ்.. அறிவுகெட்ட வெங்கி பேரபுள்ளைகளுக்கே கல்யாணம் ஆயிடுச்சு, இன்னும் கொஞ்ச நாளுல குழந்தைங்க பிறந்துரும், வயசான கிழம் மாதிரியா பேசுறே.."


"என்னடி எனக்கு அப்படி வயசாயிடுச்சு ஜஸ்ட் எழுபத்தி ரெண்டுதான், இப்போ எல்லாம் பொண்ணுங்க என்ன மாதிரி ஓல்ட் அன்ட் ஹண்ட்ஸம் பையன தான் விரும்புறாங்க.. தெரியுமா..? "

"இந்த வயசுல உங்களுக்கு டிவோர்ஸ் வாங்கணும்னு எதுவும் விருப்ப படறீங்களா..? "


"ஏன் கோதே அப்படி கேட்குறே..? "


"இல்லை எனக்கு விருப்பம் இருக்கு அதான் கேட்டேன்" என்க..


அத்துடன் வெங்கி வாயை மூடிக்கொண்டு அன்றைய நாளிதழை பார்ப்பது போல் பாவனை செய்ய ஆரம்பித்தார்.


அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த வருணன் தயங்கி அவர்கள் அருகில் வந்து நின்றான்


முதலில் அவனை பார்த்த நாச்சி "கண்ணா வாப்பா.. ஏன் அங்கையே நிற்கிற வந்து என் பக்கத்துல உட்காரு"என்று சொன்னதும் தான் தன் மீது அவர்களுக்கு கோபம் இல்லை என்பதை உணர்ந்தான்..


அவர்கள் இருவருக்குமிடையில் அமர வைத்து.. காஃபி கொண்டு வர சொல்லி கொடுத்தவர்கள், நாச்சி பாட்டி அவன் தலையை வாஞ்சையாக வருடியவர், "அம்மா எப்படி இருக்காங்க கண்ணா..?" என்க..


அவரை பார்த்து புன்னகைத்தவன் "நல்லா இருக்காங்க பாட்டி, அம்மா கூட கண்ணானு தான் என்னை கூப்பிடுவாங்க அது மாதிரி நீங்களும் கூப்பிடுறிங்க என்றவன், என் மேல உங்களுக்கு கோபம் இல்லையே..?"


"ஏன் பா அப்படி கேட்குற, உன் மேல எதுக்கு கோபப் படனும்..? "என்று வெங்கி கேட்க..


"இல்லை திடிர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னோம், நீங்களும் என்னை முறைச்சு பார்த்திங்களா அதான் கேட்டேன்."


"இல்லை கண்ணா! உன் மேல நாங்க என்னைக்குமே கோபப்பட மாட்டோம் நீ எங்க பேரன் என தழுதழுத்த குரலில் கூறியவர், தன்னை திடப் படுத்தி கொண்டு மாயா இன்னும் எழுந்திருக்கலையா கண்ணா.."

"ஆமா பாட்டி நைட்டு அவங்களுக்கு ஏதோ வேலை வந்துடுச்சு உடனே கிளம்பி போயிட்டாங்க, அதான் தூங்கட்டும்ன்னு தொல்லை பண்ணல.."


"அவளுக்கு எப்போ பாரு வேலை, வேலை தான் இருபத்தி நாளு மணி நேரமும், சரி நீ என்ன அவளை வாங்க, போங்கன்னு கூப்பிடுற அவள் உன் பொண்டாட்டி பா உரிமையா கூப்பிடு.."


"இல்லை பாட்டி அப்படியே கூப்பிட்டு பழகிடுச்சு திடிர்னு மாத்த முடியாது."


"இனி மாத்திக்க கண்ணா" என நாச்சி பாட்டி கூற..


"என்ன பாட்டி மாத்திக்கணும்.."கேட்டுக் கொண்டே மாயா அவர்கள் அருகில் வந்தாள்.


"என் பேரன உன்னை வாங்க, போங்கன்னு கூப்பிடாமல் உரிமையா பேரு சொல்லி கூப்பிட சொன்னேன்."


"ஓ.. நந்தன் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டாரு பாட்டி.. அவ்வளவு மரியாதை என் மேல" கிண்டலாகச் சொல்ல..


"நீ என்ன நந்தன்னு கூப்பிடுற மரியாதையா மாமான்னு கூப்பிடுற"


"என்ன நந்தன் உங்களை மாமான்னு கூப்பிடணுமாமே கூப்பிடட்டுமா..? " ஒற்றை புருவத்தை ஏற்றி கூற..


"பாட்டி நான் என் ஃபிரண்ட் ஒருத்தரை பார்த்துட்டு வந்துடறேன்" என அந்த இடத்தை விட்டு கழண்டு கொண்டவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு பாட்டியின் அருகில் அமர்ந்தாள்.


நந்தன் வானதியிடம் கூறாமல் தனது தோழனை பார்க்க சென்றதால் ஹர்ஷா அவளிடம் நடந்துக் கொண்டதை பற்றி தெரியாமல் போனது.


அவளும் உடம்பு சரி இல்லை என்ற சாக்கை சொல்லி சாப்பிடாமலே ரூமில் அடைந்துக் கொண்டாள்.


வருணன் தனது நண்பனின் காரில் இருந்து இறங்கி, ஒரு கடைக்கு செல்வதற்கு பேசிகொண்டே ஓரமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், தூரத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் லாரியில் ஒருவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, காதில் உள்ள ஹெட் போனில் பார்த்துட்டேன் சார் வந்துகிட்டு இருக்கான் இன்னைக்கு தூக்கிடுறேன் என்றவன், லாரியை இயக்கி வேகமாக ஓட்டி வர.. வண்டி சத்தம் அருகில் கேட்டதும் திரும்பி பார்த்த வருணன் நடக்கபோதுவதை உணர்ந்து தன் நண்பனை பிடித்து தள்ளிவிட்டு தானும் ஒதுங்கும் சமயத்தில் அவன் மேல் மோதி அருகில் தூக்கி எறியப்பட்டான் வருண நந்தன்..


மலர்வாள்..!!



ஹாய் ஃபிரண்ட்ஸ்...



அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇


 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-10


தன் நண்பனை தள்ளிவிட்டு தானும் ஒதுங்கும் சமயத்தில் ஒரு பக்கம் மோதி தூக்கி எறியப்பட்ட வருணன் உடைபட்டு இருந்த பாலத்தில் புனரமைப்பு வேலைகள் நடந்துக் கொண்டிருந்ததால் அவ்விடத்தில் குவித்து வைக்கப் பட்டிருந்த மணல் குவியலில் மேல் விழுந்தான், அவனை அடித்துத் தூக்கிய லாரி ஒரு இடத்தில் நிற்க, அதன் ஓட்டுநர் திரும்பிப் பார்த்துவிட்டு வண்டியை கிளப்பிச் சென்றான்.


வருணனைச் சுற்றி கூட்டம் சூழ்ந்துக் கொள்ள வலி தாங்க முடியாமல் முனகியவனை அவனது நண்பன் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.


மாயா இத்தனை நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டதால் மிகுதியான வேலைகள் வரிசைக்கட்டி காத்துக் கொண்டிருக்க, அலுவலகத்திற்கு வந்தவள் வேறு எந்த சிந்தனையும் அற்றவளாக அவ்வேலைகளில் மும்மரமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் அவள் அலை பேசி ஒலி எழுப்ப.. புது எண்ணாக இருந்ததும் யோசனையோடு காதில் வைத்தவள்


"ஹலோ" என்றாள்.


".........."


"வாட்! எந்த ஹாஸ்பிடல், நான் உடனே வர்றேன்" என்றவள் ஒரு பிரபல மருத்துவமனையின் முன் வந்து இறங்கி தனது வேக எட்டுக்களை எடுத்து வைத்து உள்ளே வந்தவள், அறை எண்ணை அறிந்துக்கொண்டு அங்குச் செல்ல, வருணன் நண்பன் அவளுக்காக காத்துக் கொண்டிடுந்தான்.


அவளைக் கண்டதும் "மேடம்.."என்றான்

"நீங்கள்" என்று அவள் சந்தேகமாக வினவினாள்.


"நான் தான் மேடம் உங்களுக்கு கால் பண்ணேன், வருணன் பிரண்ட் கிருஷ்ணன்."

"ஓ.. இப்போ எப்படி இருக்கார், டாக்டர் என்ன சொன்னார்.."


"உள்ளே தான் இருக்கார் மேடம், இன்னும் வரல.."


"எப்படி நடந்தது, எங்கே நடந்தது" என்று அவள் கேட்க..

விபத்து நடந்ததைப் பற்றி அவன் விவரிக்க மாயவின் நெற்றி யோசனையோடு சுருங்கியது..

"அங்க தான் ஏதோ வேலை நடக்குதே, நீங்க கூட கார வேற இடத்துல நிறுத்தி வச்சுட்டு நடந்துதான் போயிருக்கிங்க, அப்புறம் எப்படி அங்க லாரி..? "

"அது தண்ணி கொண்டு போற லாரி மேடம், வேலை பார்க்கிற இடத்துக்கு கூட தண்ணிக் கொண்டுவந்துருக்கலாம்"


"ம்ம்.. என்றவள் நீங்க எங்க ஒர்க் பண்றிங்க.."

"நான் வருவாய் துறையில் வேலை பார்க்குறேன் மேடம்.."

"உங்களுக்கு எதிரிங்க யாரும் இருக்காங்களா.."

"ஏன் அப்படி கேட்குறீங்க..? "

"இல்லை சும்மாதான் கேட்டேன்."


"இல்லை மேடம்.."என்றான் அவன்


"அந்த லாரி நம்பர் தெரியுமா..? "


"ஆன்.. நோட் பண்ணி வச்சுருக்கேன்" என்று அவனிடம் அந்த எண்ணைக் கூறினான்.


"சரி" என்றவள் வேறு ஏதும் பேசாமல் மருத்துவர் வரும் வரை அமைதியின்றி ஏதோ சிந்தனையோடு அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தாள்.


கதவை திறந்துக் கொண்டு வந்த மருத்துவர் மாயாவை கண்டதும் "மேடம் நீங்க எங்க இங்க..?"என்க..

"அதுக்கெல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை டாக்டர், நந்தன் எப்படி இருக்கார்" பதட்டத்தோடு கேட்க..


"லாரி மோதி தூக்கி வீசபட்டிருக்கிறார். ஆனால், பெரிய அடி எதுவும் இல்லை, கை மட்டும் கொஞ்சம் பிராக்சராகிருக்கு, அங்கங்க கொஞ்சம் சிராய்ப்புகள் தான் கடவுளோட கிருபையால பிழைத்திருக்கிறார்" என்று கூற..

அப்போதுதான் இவ்வளவு நேரம் இழுத்து வைத்திருந்த மூச்சு காற்றை ஆசுவாசமாக வெளியேவிட்டாள் மாயா..

"நான் அவரை பார்க்கலாமா டாக்டர்..?"

"தாராளமாக பாருங்க மாயா" என்று அவர் அனுமதி தர..

முதலில் அவள் மட்டும் உள்ளே சென்றவள் கையில் கட்டு போட்டு கண் மூடி படுத்திருந்த வருணணை தலை முதல் பாதம் வரை பார்வையைச் செலுத்தி, அவன் அருகில் சென்று "நந்தன்" என்று அவன் நெற்றியைத் தொட்டாள்



அதில் கண்விழித்து பார்த்தவன், எழுந்துக் கொள்ள முயற்சி செய்ய..

"வேண்டாம் நந்தன் படுத்துக்கோங்க.. "என்றவள் அவன் அருகில் அமர்ந்து இப்போ எப்படி இருக்கு, "ரொம்ப வலி இருக்கா" என்று விசாரிக்க..


"ம்ம்.. வலி இருக்கு.." என்று முகம் சுளித்தான் வலி பொறுக்காது.


அவனுக்கு ஏற்பட்ட வலி தனக்கே ஏற்பட்டது போன்று அதைச் சகித்துக் கொள்ள முடியாதவளாக கண்களை மூடி திறந்தவள்..


சில நிமிட அமைதிக்கு பிறகு நான் "டாக்டர பார்த்துட்டு வர்றேன்க.."என்று வெளியே எழுந்துச் செல்ல, வருணனின் நண்பன் உள்ளேச் சென்றான்.


மருத்துவர் ஃப்ராக்சர் மட்டும் தான் வேறு பிரச்சனை இல்லை என்று கூறியதால் மாயா வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்துக் கொள்கிறேன் என்றதும் அவரும் ஒப்புதல் அளித்து விட்டார்.


அவள் திரும்பி வருணன் அறைக்கு வரும் சமயம் இரண்டு காவல் துறையினர் வருணன் நண்பனிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.


அவள் அருகில் சென்று "என்ன விஷயம்" என்க..

"மேடம் உங்க ஹஸ்பண்ட் ஆச்சிடேன்ட் விஷயமா விசாரிச்சுட்டு இருக்கோம், ஆச்சிடேன்ட் பண்ணவன் போலீஸ் ஸ்டேஷன்ல ஆஜராகிட்டான், எதிர் பாராத விதமாக பிரேக் பிடிக்காமல் போனதுல கண்ட்ரோல் பண்ண முடியாமல் இப்படி ஒரு விபத்து நடந்துருக்கு.

உங்க ஹஸ்பண்டையும் பார்த்து பேசிட்டோம்" என்றவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

அப்போதும் அவள் பெரும் யோசனையூடே இருக்க,

"மேடம்.."


"சொல்லுங்க.. கிருஷ்ணா"


"ஒரு விஷயம் மேடம் பிரேக் பிடிக்கலைன்ன்னு சொன்னாங்க, ஆனால் அவன், வருணன் விழுந்த பின்னே வண்டியை நிறுத்தி ஒரு செகண்ட் பார்த்துட்டு போனான் மேடம், நானும் இதை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்" என்றதும்.


அது வரை குழப்பத்தோடு இருந்த மாயாவின் முகம் விகாரமாக மாற,"சரி நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க" என்றாள்.


"சரிங்க மேடம் வருண்கிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்" என்றவன் அவனிடம் கூறிவிட்டு விடைப் பெற்றுச் சென்றான்.


பிறகு யாருக்கோ போன் செய்து பேசிவிட்டு வைத்தவள், வருணனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.


அங்கு கையில் கட்டோடு உடலில் சிறு சிறு காயங்களுடன் வந்து நின்றவனைக் கண்ட நாச்சி பாட்டி, வெங்கி தாத்தா, வானதி அனைவரும் பதறினர்.

"கண்ணா என்ன பா ஆச்சு? இப்படி அடி பட்டு வந்து நிக்கிறியே!" நாச்சி பாட்டி கண்ணீர் மல்க கேட்க..

"பாட்டி எனக்கு ஒண்னும் இல்லை, சின்ன அடிதான்."

"சின்ன அடியா.. கையில கட்டு போட்டுருக்கு இதை போய் சின்னதுங்கற.. "அவன் உடல் முழுவதும் சிறு சிறு சிராய்புகளுடன் இருந்த புண்களை கண்ணீருடன் தடவி பார்த்தார்.


ஏற்கனவே மனதளவில் சோர்ந்து போயிருந்த வானதி இப்போது தன் தமையனை இவ்வாறு கண்டதும் கண்ணீர் ஊற்றெடுக்க, "அண்ணா என்னனா இப்படி வந்து நிற்குறே" என்று அவன் உடல் முழுவதும் ஆராய்ந்துகொண்டிருந்த சமயத்தில் உள்ளே வந்தான் ஹர்ஷா..


வருணன் அடிபட்டிருப்பதை பார்த்தவன் "என்னாச்சு" என்றான்.

பாட்டி நடந்ததைக் கூற..


"இதுவரைக்கும் சிட்டிக்கே வராதவங்க, புதுசா வந்து பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்க்கிறது மாதிரி நமக்கு எதிரே என்ன வருதுன்னு , எதையும் கவனிக்காமல் இருந்தால் இப்படித் தான் ஆகும்" இரக்கமே இல்லாமல் நக்கலாகச் சொல்ல..

அனைவரும் ஒரே சமயத்தில் "ஹர்ஷா" என்று குரலை உயர்த்தினர்.

"ஹர்ஷா என்ன பேசுறேன்னு யோசிச்சு பேசு" என மாயா கூற..

"நான் பொய் சொல்லலியே உண்மையைத் தானே சொல்றேன்"


"நிறுத்துறீங்களா.. இனி ஒரு வார்த்தை என் அண்ணனை பத்தி பேசுனீங்க நடக்குறதே வேற.. இங்க வந்ததில் இருந்துதான் எல்லமே தப்பா நடக்குது, இந்த மாதிரி ஒரு மனுஷன் அடிபட்டு இருக்கும்போது கூட இரக்கமே இல்லாமல் பேசுற வீட்ல நாங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம் என்றவள்..அண்ணா கிளம்புனா நாம நம்ம வீட்டுக்கே போயிடுவோம்" என்றாள்.



வருணனுக்கும் அவன் பேச்சு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் அவனிடம் சண்டை போட சரியான தருணம் இது இல்லை என்பதை உணர்ந்தவன்,

"வானு சொல்றத கேளுமா.. நீ இங்கே இரு. இதான் உன் வீடு, நான் ஊருக்கு போறேன், நான் தான் பார்த்துப் போயிருக்கணும், இந்த ஊரு எனக்கு செட் ஆகலைம்மா.."

"கண்ணா என்னப்பா இப்படி எல்லாம் பேசுறே.. இது உன் வீடு பா, நீ இங்கதான் இருக்கணும்" என்று சேர்ந்தார் போன்று கூறினர் நாச்சி பாட்டியும், வெங்கி தாத்தாவும்


ஒரு வீட்டுக்கு மருமகனா வந்தா அந்த வீட்டையே தன் வீடா சொந்தம் கொண்டாட முடியாது பாட்டி, என் வீடு அதானே நான் அங்க போறதுதான் சரியான முடிவு, இப்படி அடிபட்டு இருக்கப்ப என்னைய பார்த்துக்கவே நீங்க சிரமப்படனும், அதான் ஊருக்கே போகலாம்னு இருக்கேன்."


எ"ன்ன பா பேசுற உனக்கு செய்றது எங்களுக்கு சிரமமா" என்ற நாச்சி பாட்டி மாயாவிடம் திரும்பி ஏதாவது செய் என்ற இறைஞ்சல் பார்வைப் பார்த்தார்.


கண்களை மூடி அவரை அமைதி படுத்தியவள் "இங்க பாருங்க நந்தன் இந்த கோலத்தோடு நீங்க ஊருக்கு போனா உங்க அம்மா வருத்தப்பட மாட்டாங்களா, வானும் உங்களை தனியா போக விற்றுவாளா..? நானும் கூட வர்றேன்னு வருவா அப்புறம் புருஷன் வீட்டிக்கு போன அடுத்த நாளே அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்ணு ஊரு பேசாதா அப்போ மட்டும் உங்க அம்மா சந்தோசமாக இருப்பாங்களா..?

கண்டிப்பா நீங்க ஊருக்கு போகலாம்.உங்க கை குணமானதும் அப்போ நான் தடுக்க மாட்டேன் இப்போ நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க" என்க..


சில நிமிடங்கள் யோசித்தவன் "சரிங்க நான் எனக்கு குணமாகிற வரைக்கும் இங்கே இருக்கேன் என்றவன் வானு நீ அம்மா கிட்ட இதை பத்தி எதுவும் சொல்லக் கூடாது. சின்ன அடிதான்டா சீக்கிரம் சரியாயிடும்" என அவள் தலையை வருடிக் கொடுத்தவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

அதைக் கண்ட ஹர்ஷா அவர்களை காண சகிக்காது அவனது அறைக்குச் சென்று விட்டான்.

மாயாவிற்கோ வானதியை போல் தானும் அவன் தோளில் சாய்ந்துக் கொள்ள மாட்டோமா என்ற எண்ணம் தோன்ற, தன் எண்ணப் போக்கை நினைத்தவள் 'ச்சே.. நான் என்ன இப்படி எல்லாம் நினைக்கிறேன்' என்று தன்னையே கடிந்துக் கொண்டவள்.


"பாட்டி, தாத்தா அவருக்கு ஒண்ணும் இல்லை சீக்கிரம் சரியாயிடும் நீங்க கவலை படாதீங்க உடம்புக்கு நல்லது இல்லை, தாத்தா நீங்க பாட்டிய கூட்டி போங்க.."என்றாள் மாயா

"சரிம்மா.. வா கோதே அதான் பேத்தி தான் ஒண்ணும் இல்லை, பேரனுக்கு சரியாயிடும்னு சொல்றால வா போகலாம்" என அவரை அழைத்துச் சென்றார்.

"வானு நீ உன் ரூம்க்கு போ, நான் உங்க அண்ணன என் ரூம்க்கு கூட்டிடு போறேன்.."

"சரி "என்பது போல் தலை அசைத்தவள் அவன் காதில் ஏதோ சொல்ல, அவனும் "நான் உன்ன தான் கூப்பிடுவேன்.. "என்றான்

"சரி "என்று தலை அசைத்துவிட்டு சென்றாள்.


இவர்கள் இருவரும் ரகசியம் பேசுவதைப் பார்த்துகொண்டிருந்த மாயா.. அவனை அழைத்துச் செல்ல இடுப்பை சுற்றி கையை போடா கூச்சத்தில் நெளிந்தவன்..

"கையை எடுக்கிறிங்களா நானே வர்றேன்.."


"ஏன் கை போட்டா என்னவாம்.."


எ"னக்கும் கைலதாங்க அடி பட்டிருக்கு காலுல இல்லை, என்னால நடக்க முடியும்."


"நானும் நடக்க முடியாதுன்னு சொல்லலியே.. உங்க காலுல அங்கங்க சின்ன காயம் இருக்குல்ல கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தானே நடக்குறிங்க.. பொண்ணு மாதிரி வெட்கப்படாமல் வாங்க" என்றவளை இவள் இப்படி எல்லாம் பேசுவலா என்ற ரீதியில் பார்க்க..

"என்னங்க அப்படி பார்க்குறீங்க..? "


"ஒண்ணும் இல்லைங்க.. "


சரி வாங்க என்று பேசிக் கொண்டே அவர்களது அறைக்கு அழைத்து வந்தவள் ஒரு தலையணையை ஏதுவாக வைத்து அவனை அதில் சாய்த்து அமர வைத்தவள்..


குடிப்பதற்கு பழச்சாறை எடுத்து வந்து குடிக்க வைத்துவிட்டு, "என்னங்க அப்படி உங்க தங்கச்சிகிட்ட ரகசியம் பேசிகிட்டு இருந்திங்க.."


"அது ஒண்ணும் இல்லைங்க சும்மாதான் "தயங்கிச் சொல்ல..


"சும்மா சொல்லுங்க கேட்போம்.."


"குளிப்பதற்கு, பாத்ரூம் போக கஷ்டமா இருந்தா அவளை கூப்பிடச் சொன்னா.."


"அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க..?"கைகளைக் கட்டிக் கொண்டு கேட்க..


"உன்னை தான் கூப்பிடுவேன்னு சொன்னேங்க.."


"அப்புறம் நான் ஏங்க இருக்கேன்.."


"அது வந்து..."


"அது வந்து எல்லாம் இல்லங்க.. நான் உங்க மனைவிங்க என்கிட்ட கேட்டா நான் உங்களுக்கு செய்ய மாட்டேனா, அடலீஸ்ட் என்னை உங்க ஃபிரண்ட்டா நினைச்சசு எதுவாக இருந்தாலும் கேளுங்க, இந்த ரூம்குள்ள உங்களை, என்னையும் தவிர வேறு யாரும் வரக் கூடாது" ஒற்றை புருவத்தை ஏற்றி தீவிரமாக கூற..



"ம்ம்.. சரிங்க" என்று வருணன் பதில் கூறினான்.


"முதலில் இப்படி வாங்க போங்கன்னு கூப்பிடுறத நிறுத்துறிங்களா.. என் பேர சொல்லிக் கூப்பிடுங்க இல்லை உங்களுக்கு எப்படிப் பிடிக்குதோ அப்படி கூப்பிடுங்க.."என்ற மறு வினாடியே..


"ராங்கி ராக்கம்மாணு கூப்பிடவா" ஒரு வேகத்தில் சொல்லிவிட்டு அவள் முகத்தைக் கலவரமாக பார்க்க..


"வாங்க போங்கன்னு கூப்பிடுறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை" என்றவள் குளிப்பதற்க்காக் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.அவள் செல்வதையே சிறு புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்தான் மாயக்காரியின் மாயவன்.

வானு அவர்களது அறைக்குள் வர அங்கு ஹர்ஷா படுக்கையில் குப்பற கவிழ்ந்துக் கிடந்தான்.. அவனை கண்டுக்கொள்ளாது தனது அன்னைக்கு போன் செய்வதற்க்காக படுக்கையில் கிடந்த அலைப்பேசியில் கை வைக்க, அவள் கையைப் பற்றி இழுத்து அவன் மேல் அவளை போட்டுக் கொண்டான்.

அவனிடம் இருந்து இப்படி ஒரு அதிரடியை எதிர் பார்க்காதவள், "என்னை விடுங்க" என்று திமிற..


"ப்ச்.. கொஞ்ச நேரம் பேசாமல் இருடி என்றவன் அவளை இறுக அணைத்துகொண்டு சாரி நான் காலையிலையும், இப்பவும் அப்படி பேசி இருக்கக் கூடாது "என உண்மையான வருத்ததோடு மன்னிப்பு கேட்க..


"மன்னிப்பு கேட்டால் மட்டும் சில விஷயங்கள் சரியாகிடாது "என்றதும் அவளை விட்டு எழுந்து அமர்ந்தவன் "வேற என்ன செய்யணும்..? "என கூர்மையாக கேட்டான்.


அவனை கைப் பிடித்து எழுப்பி கண்ணாடி அருகே அழைத்துச் சென்று நிற்க வைத்தவள், "பார்த்தீங்களா உங்க முகத்தையும் என் முகத்தையும் ஏதாவது பொருத்தம் இருக்கா ஏணி வச்சாக் கூட எட்டாது, அப்புறம் நீங்க இருக்கிறது கோபுரம் நான் இருக்கிறது குடிசை இதெல்லாம் நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது என்னைய விட்ருங்க"காலையில் அவன் பேசியதற்கு பதிலடி கொடுப்பது போல் பேச..


அவள் கையைப் பிடித்து பின்னால் மடக்கி அவன் தேகத்துடன் அவள் தேகம் உரசுவது போல் அணைத்தார் பொன்று பிடித்தவன் "உன்னை விடவாடி இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணேன்.."

"அதான் நானும் கேட்குறேன் ஏன் என்னை கல்யாணம் பண்ணீங்க, இப்படி என்னையும், என் அண்ணனையும் அவமானப்படுத்தவா.. சொல்லுங்க? இப்பக் கூட அடிப்பட்டு வந்துருக்கு, அப்பக் கூட மனிதாபிமானம் இல்லாமல் இப்படி பேசுறீங்"க என்று அழ..


"இங்க பாரு என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன் என்னை மன்னிச்சுடு டி, நீ உன் அண்ணன் மேல அவ்வளவு பாசம் வச்சுருக்கிறது என்னைய என்னமோ பண்ணுது உன் ஒட்டு மொத்த அன்பும் எனக்கே எனக்கு மட்டும் வேணும்னு மனசு கேட்குது. அதனாலதான் நீ உன் அண்ணன் கூட இருக்கும்போது அப்படி என்னை அறியாமல் பேசிடுறேன்.. சாரி டா நதி. இனி, இப்படிப் பேசாமல் இருக்க முயற்சி பண்றேன், நீ எனக்கு வேணும் டி.." என அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்,


"நீயா என்னை புரிஞ்சுகிட்டு வர வரைக்கும் நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன், என்றவன் என்னை உனக்கு பிடிக்குமா நதி" என்று ஏக்கமாகக் கேட்க..


"உன்னை பிடிக்காமல் வேறு யாரை எனக்குப் பிடிக்கப் போகிறது" என நினைத்தவள் எதையும் கூறாமல் அமைதியாகத் தலையைக் குனிந்துக் கொண்டாள்.


அவள் எதுவும் கூறாமல் இருக்கவும் "அப்போ அந்த வெற்றியைத் தான் உனக்குப் பிடிக்கும் அப்படித்தானே..?"என்று சொல்ல..

விழுக்கென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "இது தான் நீ !சிறுத்தைகள் தன் புள்ளிகளை ஒரு போதும் மாற்றிக்கொள்ளாது, அது போல் தான் நீயும் உன் குணங்களை மாற்றி கொள்ள மாட்டாய்" என்ற ரீதியில் பார்த்து வைத்தவள்..

எதுவும் பதில் கூறாமல் அவனிடம் இருந்து விடுபட முயல.. "நான் கேட்டுகிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு போறே பதில் சொல்லு டி" என்று பற்களுக்கிடையே கேட்க..


அவன் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவள் "இது வரைக்கும் உங்களை பிடிக்கிற மாதிரி நீங்க நடந்துகிட்டு இருக்கீங்களா? " என்று சொல்லி நழுவிக் கொண்டாள்.

'சரியான இம்சையா இருக்கா, நான் என்ன அப்படி அவளுக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டேன், அழகா இருக்கேன், பணம் இருக்கு இதெல்லாம் பார்த்து என்னை சுத்தி சுத்தி பொண்ணுங்க வட்டமிட்ட போதும், இவள் பின்னாடி தானே என் மனசு போகுது, இவளைத் தானே உயிரா நினைக்கிறேன், வேற பொண்ணுங்க பின்னாடி நான் சுத்துனது கிடையாது, வேற என்ன நான் செய்ய முடியும்' என்று சிந்தித்தவன் அறியவில்லை..


அழகு, பணம், அடாவடித்தனமாக காதலை வெளிப்படுத்தி பெண்களின் மனது புரியாமல் உயிரற்ற பொருள் போல் அவர்களை அடைய நினைப்பது மனதை மட்டும் நேசிக்கும் பெண்களுக்குப் பொருந்தாது, சில பெண்கள் மனது பூ போன்றது அதை மெல்லிய தென்றல் கொண்டு மெதுவாக திறந்தால் மட்டுமே அம்மலர் மலரும் என்பதை அறியாமல் போனான் ஹர்ஷவர்தன்.

**************************************

அந்த பிரம்மாண்ட வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான் அவன் விஜய் பிரசாத் பாண்டியன் "ச்சே இந்த தடவையும் மிஸ் ஆயிடுச்சே" என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் அலைப்பேசி அழைக்க எரிச்சலோடு ஏற்று காதில் வைத்தவன்..


"என்ன..? "


"நான் தான் அவனை வேற எங்கையாவது அனுப்பி வைங்கன்னு சொன்னேன்லடா, அப்புறம் என்ன வேலை டா பார்த்துகிட்டு இருந்திங்க.. கரெக்ட்டா கட்டு கட்டா பணம், பிரியாணி, சரக்கு எல்லாம் நேரத்துக்கு கிடைக்குதுல்ல, வேலைய மட்டும் செய்ய மாட்டிங்க.."


"அவன் அந்த மாயகிட்ட என் பேர சொல்லக் கூடாது, அவனை போட்டு தள்ளிருங்க" என்றுவிட்டு போனை அணைத்துப் போட்டவன்..


"ஏய்.. மாயா ! ஒரு பொம்பளையா இருந்துக்கிட்டு என் திட்டத்தை எல்லாம் தகுடு பொடி ஆக்குறல்ல.. நீ என்னதான் இடையூறா வந்தாலும் நான் நினைத்ததை அடையாமல் விட மாட்டேன் "என கர்ஜித்தவனை "விஜய்" என்ற குரல் கலைத்தது..


"என்ன காரியம் டா பண்ணி வச்சுருக்கே.. தேவ் பைய்யன என்ன பண்ணி வச்சுருக்கே.."

"ஏன் முப்பது வருசத்துக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணிங்களோ.. நானும் அதைத்தான் பண்ண முயற்சி பண்ணேன்" எகத்தாளமாக கூற..

"இங்க பாரு விஜய் இதோட நிறுத்திக்க.. வீண் பிரச்னையில மாட்டி உயிர விட்டுறாதே.. மாயா எப்படியும் உன்னை கண்டு பிடிச்சு இல்லாமல் ஆக்குறதுகுள்ள எங்கையாவது போய்டு" என்று கூற..


"என்ன மிஸ்டர் பாண்டியன்.. அவ்வளவு பாசமோ மாயா மேல, இப்போ அவள் புருஷன் மேலையும் பாசம் வந்துருச்சு, அவளையும், அந்த ஹர்ஷாவையும் முன்னாடியே போட்டு தள்ளிருப்பேன் நீ சொன்னதுக்காக விட்டு வச்சுருக்கேன்,எனக்கு நீ அப்பாங்கிறதுக்காக அறிவுறை வழங்குவீங்க அதை நான் கேட்டுகிட்டு இருக்கணுமா.. நீங்க என்ன ரொம்ப உத்தமன் மாதிரி பேசுறீங்க உங்க இச்சைக்கு தானே ரெண்டு பேர போட்டுத் தள்ளுனிங்க" என்க..



"உனக்கு சம்மந்தமே இல்லாததுல உரிமைக் கொண்டாடுறது ரொம்ப தப்பு விஜய்.."


"அதே கேள்வியை நான் உங்ககிட்ட கேட்கட்டா"என்று பதில் சொல்ல..

"எப்படியோ கெட்டு ஒழி" என்றவர் வேகமா அந்த அறையை விட்டு வெளியேறினார்..


"எவ்வளவு இடர் வந்தாலும் எல்லமே எனக்கு வேணும், ஹர்ஷா உன் பொண்டாட்டியும் எனக்கு வேணும் டா, அவள் மேல நான் கண்ணு வச்சா நீ அவளை கல்யாணம் பண்ணிக்குவியா.. விட மாட்டேன்டா உங்க எல்லாத்தையும் கொன்னு அனைத்தையும் எனக்கு சொந்தமாக்கிறேன் டா"என்றான் அந்த பேராசை பிசாசு.

****************************************
"அடுத்த நாள் அந்த இருள் சூழ்ந்த அறையில் உன்னை யாரு அனுப்புனா அப்படின்ற உண்மையைச் சொன்னா உன்னை உயிரோடு விட்டுருவேன்" என மாயா அமைதியாக அதே சமயம் அழுத்தமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.


"ஆம்! மாயா மிரட்டிக் கொண்டிருந்தது வருணனை ஆச்சிடேன்ட் செய்த லாரி ஓட்டுனரிடம் தான், அவன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்ததும் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த மாயா தனது ஆட்களிடம் திட்டத்தைச் சொல்ல, அவனை கடத்திக் கொண்டுவந்து அடைத்து வைத்துவிட்டனர்.


"என்னை யாரும் அனுப்பல மேடம், பிரேக் இல்லாமல் தான் வண்டி மோதிடுச்சு என்னை விட்ருங்க"என்று கெஞ்ச..


"பிரேக் இல்லாமல் தான் ஆக்ஸிடெண்ட் பண்ணதும், நின்னு நிதானமா செத்துட்டானா இல்லையான்னு பார்த்துட்டுப் போனியா" என்று கூறிக் கொண்டே அவன் முன் தனது பிஸ்டலை எடுத்து ஊத அதில் கொஞ்சம் நடுங்கியவன்..


"மேடம் என்னை விட்ருங்க நான் புள்ளைக் குட்டிக்காரன்"

"நீ புள்ளைக் குட்டிகாரன் அப்படிங்கிற காரணத்துக்காகத் தான் உன்கிட்ட பொறுமையா பேசுறேன், உண்மையா நீ சொல்லிட்டேனா உன்னோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு" என்றாள்..


"மேடம் நான் உண்மையைச் சொல்லிட்டா, என்ன ஒண்ணும் செய்ய மாட்டிங்களே"


"நீ வெறும் அம்புதான் உன்னை கொன்னு நான் என்ன பண்ணப் போறேன், உன்னை ஏவுன அந்த வில் (அவன்)யாரென்று" கேட்க...

"என்னை ஒண்ணும் பண்ண மாட்டிங்கள்ள.."

"ஒண்ணும் செய்ய மாட்டேன்" என்றுகூறி அவன் சொல்வதைக் கேட்பதற்க்காக கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் மாயா..

"சொல்றேன் மேடம்.. சொல்றேன்"என்றவன் உண்மையைச் சொல்ல வாய் திறக்கும் சமயத்தில் எங்கிருந்தோ காற்றை கிழித்து கொண்டு மின்னல் வேகத்தில் அவன் நெற்றிப் பொட்டை துளைத்தது ஒரு துப்பாக்கிக் குண்டு.


மலர்வாள்..!!


ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

சென்ற பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி

கருத்துத் திரி👇




 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-11


துப்பாக்கிக் குண்டு துளைத்தவும் அவன் உயிர் பிரிய.. சுதாரித்த மாயா குண்டு வந்தத் திசைப் பக்கம் திரும்பிப் பார்த்தாள், அங்கு மேல் மாடியில் ஜன்னல் புறத்தில் நிழல் போன்ற உருவம் தெரிய தன் பிஸ்டலை எடுத்து குறி வைத்துச் சுட்டாள், அதற்குள் அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஓட ஆரம்பிக்க.. மாயாவின் ஆட்களும் அவனைப் பிடிக்க பின்னால் ஓட ஆரம்பித்தனர்.


அவர்கள் ஓடியும் அவனை பிடிக்க முடியாது போக.. மாயாவிடம் வந்தவர்கள்..


" நாங்க எவ்வளவு முயற்சி பண்ணியும் அவனைப் பிடிக்க முடியல மேடம்.."


"ம்ம்.. அவனுக்கு எதுவும் தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்காது, ஏன்னா அவங்களைப் பற்றி தெரிஞ்சவனை நாம பிடிச்சுட்டோம்னு தெரிஞ்சதுமே அவங்களைப் பற்றி எதுவுமே தெரியாதவனைதான் அனுப்பி வச்சிருப்பாங்க.."என்றவள்


இறந்துக் கிடந்தவனைக் காண்பித்து "ஆக வேண்டிய வேலைய பாருங்க, அவங்க குடும்பத்துக்கு எல்லா உதவியும் செய்ங்க.. அவங்கக்கிட்டையும் இவன் யார்கிட்ட வேலை பார்த்தான்னு விசாரிங்க" என்றவள் அந்த டிரைவரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வெளியேறினாள்.



அவள் ஹர்ஷாவை தனது அலுவலகத்திற்கு வர சொல்லி நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.


தன் கை முஷ்டியை மடக்கியவன் "இவ்வளவு நடந்துருக்கு ஒரு வார்த்தை என்கிட்டே சொன்னியா, அவன் மேல் பாய்ந்த குண்டு உன் மேல பாய்ந்திருந்தால் என்னால நினைத்துப் பார்க்கவே முடியல" என்று சொல்லிக்கொண்டே மேஜையில் தன் கை கொண்டு குத்தியவன்..


இதுக்குத் தான் அன்னைக்கே தடுத்தேன் இந்த வேண்டாத வேலை உனக்கு எதுக்குன்னு, அவனை பாதுகாக்கிறதுதான் உன் வேலையா, எத்தனை நாள் அவனை நீ பாதுகாப்பே, கண்ணுக்கு தெரியிற எதிரி கூட நாம அசால்ட்டா இருக்கும்போது ஏதாவது செய்துவிடுகிறான்..


இவனுங்க யாருன்னே தெரியல, கண்ணுக்கு தெரியாமல் ஆட்டம் காட்டுற இவனுங்கள எப்படி கண்டுபிடிக்கிறது.நந்தன் நம்ம வீட்டு வாரிசுன்னு தெரிஞ்சதும் தான் அவனைக் கொல்ல முயற்சி பண்ணிருக்காங்க, இதுக்கு பின்னாடி என்ன காரணமா இருக்கும்னு எனக்கு குழப்பமாக இருக்கு.. ஒரு வேளை பாட்டி மேலையோ, மாமா மேலையோ கோபம் உள்ளவங்க இந்த காரியத்தை செய்றாங்களா..?


அப்படி மாமாவுக்கு எதிரியா உள்ளவங்க யாரு.. அதுவும் அவரோட பையன கொல்ற அளவுக்கு அப்படி என்ன வன்மம்..? "


"அவங்க யாருன்னு கண்டுபிடிக்கத்தான் உன்கிட்ட உதவி கேட்கிறேன் ஹர்ஷா."


"யாரவது ஒரு டிடெக்ட்டிவ வச்சு எனக்கு எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி கோடு, இல்லை நீயே இதுல இறங்கு நந்தன் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம்.."என்று மாயா கூற..


"நான் மும்பைக்கு போற முடிவில் இருக்கேன் மாயு.."


"இந்த பிரச்சனை எல்லாம் முடியிற வரைக்கும் யாரும் எங்கையும் போகக் கூடாது ஹர்ஷா.. அவருக்கு மட்டும் ஆபத்துன்னு சொல்ல முடியாது. நாம எல்லாருமே ஆபத்துல தான் இருக்கோம், ஒரு பிரைவேட் செக்யூரிட்டி ஏஜென்சிய காண்டாக்ட் பண்ணி வீட்டுக்கு செக்யூரிட்டி போடு வீட்டை சுற்றி, டிரைவர் வரைக்கும் செக்யூரிட்டியா தான் இருக்கணும், வீட்டுல யாரும் வெளில போனா கூட செக்யூரிட்டி கூட போகனும், நம்ம சொந்தக்காரங்க, வேலைக்காரங்க சந்தேகபடுற மாதிரி இருந்தா எல்லாத்தையும் வாட்ச் பண்ணி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணனும்"என அனைத்தையும் சொல்லி தமையனிடம் பொறுப்பை ஒப்படைத்தவளை ஆச்சரியமாக பார்த்தவன்..


"சரி மும்பை போகல "என்றவன் அவள் அருகில் வந்து "மாயு நான் இப்பவும் கேட்குறேன் நீ நந்தன காதலிக்கிறியா..? "


ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள்.. "அந்த சம்பவத்துக்கு பிறகு உன்னை தவிர நான் எந்த ஆம்பளைகிட்டையும் நெருங்கி பழகுவது இல்லை, ஆனால் நந்தன எனக்கு பிடிச்சுருக்கு.."



"அப்போ நீ அவனைக் காதலிக்கிற மாயு.."


"இல்லை ஹர்ஷா, எனக்கு ஆம்பளைங்க பக்கத்துல வந்தாவே பயமா இருக்கு, நந்தன் நல்லவர் தான் இதுக்கு முன்னாடி அவர் மாமா பையன் இப்போ எனக்கு என்னில் பாதி.. முன்னாடி முகத்தை திருப்பிகிட்டு போயிருக்காரு அதை அப்போ ஏத்துக்கிட்டேன் ஆனால் இப்போ என்னால் அது மாதிரி நடந்தால் தாங்கிக்க முடியாது.


ஆகையால், எங்க என்னை ஹர்ட் பண்ணிருவாரோன்னு பயமா இருக்கு, அதனால் எனக்கு அவரு பிடித்தம் அப்படின்ற இடத்துலயே இருக்கட்டும், அடுத்த கட்டத்துக்கு நான் போக முயற்சி செய்ய மாட்டேன்."


"ஏன் மாயு அப்படி பேசுறே..? உனக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டவனுக்குத்தான் நீ தண்டனை கொடுத்திட்டியே.. எவ்வளவு தயிரியமானவ நீ.. நான் கலங்கி நிற்கும்போது எனக்கு பக்கபலமா இருந்து எல்லாம் செய்றவ.. எனக்கு இன்னொரு அம்மா மாதிரி நீ இப்படி பேசலாமா..?


"தண்டனைக் கொடுத்தாலும் அன்னைக்கு நடந்த சம்பவம் என் மனசுல ஆறாத வடுவா இன்னும் இருக்கு ஹர்ஷா.. நானும் உணர்வுகள் உள்ள மனுஷிதானே, நந்தன் என்னை ஹர்ட் பண்ணா என்னால் தாங்கிக்க முடியாது"


"நீ சீக்கிரம் அவன் கிட்ட உண்மையை சொல்லு புரிஞ்சுக்குவான்."


"சொல்றேன் ஹர்ஷா."


அவள் பதிலில் கண் மூடி திறந்தவன் அவளை அணைத்து முதுகில் ஆறுதலாகத் தடவிக் கொடுத்து, "எல்லாம் சரியாயிரும் டா உன் அண்ணன் நான் இருக்கேன் "என்று உச்சியில் முத்தம் வைத்தான்.

*************************************

மாயா பல வித யோசனையோடு அவள் அறைக்குள் வரவும், வானதி அவள் அறையை விட்டு வெளியே செல்ல அவளைப் பார்த்து புருவம் சுருக்கியவள் உள்ளேச் சென்றாள்..


அவர்கள் அறையில் வருணன் தாமரையுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.


"சரி மா சீக்கிரம் வந்திடுறேன், நீங்க உடம்ப பார்த்துக்கோங்க, செம்பட்டைக்கிட்டே வாழை தோட்டத்துக்கு தண்ணி விட சொல்லிட்டேன், நீங்க எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சு உடம்ப கெடுத்துக்காதிங்க.."


"ம்ம்.. சரி மா.. வச்சுடுறேன்" என்று அலைபேசியை அணைத்துவிட்டு நிமிர்ந்துப் பார்க்க.. அங்கு அவனையே கைகளைக் கட்டிக் கொண்டு புருவத்தை உயர்த்தி கீழ் உதட்டை வாய் உள்ளே மடக்கி வைத்துக் கொண்டு குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள்.


'அட.. ராக்கம்மா..!! இவங்க எப்போ வந்தாங்க என்னை ஏன் இப்படி கொலை வெறில பார்த்துக்கிட்டு இருக்காங்க'என்று யோசித்தவன்..


"நீங்க எப்போ வந்திங்க..? "


"............."


"சாரி, நீ எப்போ வந்த ராக்கு? " என்று வினவ..


அவன் அவளை அழைத்த தினுசில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டவள், அதே பார்வையைப் பார்த்தவள்..


"நான் என்ன உங்க கிட்ட சொன்னேன்" என்று மாயா கேட்க..


"என்ன சொன்ன.. என்று மண்டையை அவன் சொறிய.."


"நம்ம ரூம்குள்ள யாரும் வர கூடாதுன்னு தானே சொன்னேன். இப்போ ஏன் வானு வந்துட்டு போற..?"


"ஓ.. அதுவா அம்மா என் போன்கு லைன் கிடைக்கலனதும், வானுக்கு கூப்பிட்டுருக்காங்க அதான் போன் கொடுத்துட்டு போறா.."


"ஓ.. என்றவள் சரி சாப்பிட்டிங்களா, நான் சாப்பிட்டேன் ராக்கு நீ சாப்பிட்டியா "என்று கேட்க..


"நீங்க தான் என்னை விட்டு சாப்பிட்டிட்டு இப்போ சாப்டியான்னு கேட்குறீங்க" போலியாகக் கோபித்துக்கொண்டாள்.


"அய்யயோ!! இல்லை நான் நீ வந்ததும் தான் சாப்பிடுறேன்னு சொன்னேன், பாட்டி தான் மாத்திரை போடணும்னு அடம் பிடிச்சு சாப்பிட வச்சுட்டாங்க"


சிரித்தவள் "சும்மா சொன்னேங்க.. நீங்க கரெக்ட் ஆஹ் சாப்பிட்டு, மாத்திரைய போடுங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்."


"வாங்க தோட்டத்தை சுத்தி நடந்துட்டு வரலாம், கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்"


"இல்லை வேண்டாம்.. "நான் இங்கையே இருக்கேன், தயங்கி கொண்டே போர்வையை எடுத்து கழுத்து வரைப் போட்டுக் கொண்டான்.


'ஏன் இப்படி போர்வைகுள்ள மறைச்சுகிறாறு, எதையும் மறைச்சு எதுவும் வச்சுருக்காறோ? ' என நினைத்தவள்..


அவன் அருகில் சென்று அவள் அமர, அவன் தள்ளி அமர்ந்தான்..


அவன் எதிர் பாரத சமயத்தில் போர்வையை உருவ.. பயந்து போனவன் சட்டை போடாமல் இருந்த தேகத்தை அடிபடாத கையை வைத்து மறைத்துக் கொள்ள..


"இப்போ ஏன் என் போர்வையை உருவின.. "என்று கோபமாக கேட்க..


அவன் சட்டை போடாமல் இருந்ததை பார்த்து கண்களை மூடிக் கொண்டு "சாரிங்க நீங்க மறைச்சு வைக்க இப்படி பண்றிங்கன்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேன், நீங்க இந்த கோலத்தில் இருப்பீங்கன்னு தெரியல.. சாரிங்க.."


"நான் வேஷ்டி கட்டுற சமயத்துல வானு வந்துட்டா அதான் என்னை மறைச்சுக்கிட்டு இருந்தேன், அவ போன பின்னாடி கட்டலாம்னு இருந்தா, அதுக்குள்ள நீங்களும் வந்துட்டிங்க அதான் இப்படி போர்த்திக்கிட்டேன் "என்க..


அவன் தன்னை ஒடுக்கிக் கொண்டு கைகளை வைத்து மறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் அவனை காண முடியாது மென்மையாக புன்னகைச் சிந்தி..


"இப்படி கை இருக்கும்போது எதுக்கு சட்டை போடணும் இப்படியே ஃபிரியா இருங்களேன்."


"அதெல்லாம் முடியாது, நான் எப்படி நீ இருக்கும்போது போடாமல் இருக்க முடியும், நீ வெளியே போ நான் போட்டுக்கிறேன்" என்றான்.


"இப்படி கையை வச்சுக்கிட்டு எப்படி நீங்க சட்டை போடுவிங்க, கொடுங்க நான் போட்டுவிடறேன்" என்று மாயா கூற..


"இல்லை நான் வேஷ்டியும் மாத்தணும் நீங்க போங்க.."


"ரொம்ப பண்ணாதீங்க அதான் முழங்கால் வரைக்கும் ஷார்ட்ஷ் போட்ருக்கீங்களே அப்புறம் எதுக்கு வேஷ்டி.."


"நான் இதுவரைக்கும் ஷார்ட்ஸ் போட்டது இல்லை.நீங்க வேஷ்டியை கொடுங்க அதான் எனக்கு வசதி"என்றான்




"இனி போட்டு பழக வேண்டியதுதான் என்றவள், சரி எழுதுறீங்க "என்று கட்டாயப்படுத்தி எழுப்பி நிற்க வைத்தவள்,வேஸ்டியை எடுத்து அவன் இடுப்பில் சுற்ற.. அதில் அவள் கையும் அவன் இடுப்பு பகுதியில் உரசிச் சென்றது.


அவள் அருகாமையும், அவள் கை உரசி சென்றதும் சொல்ல முடியாத ஒரு வித உணர்வை ஏற்படுத்த "வேண்டாம் தாத்தாவை கூப்பிடு அவர் கட்டி விடுவாரு" என்று நெளிய..


"அவருக்கே மூட்டு வலி அவர் மேல வர ரொம்ப கஷ்ட்ப்படனும், அதுக்கு நானே கட்டுவிட்ருவேன்" என்று சொல்லி அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே கட்டி விட்டவள்..


"என்னை பார்த்தா உங்களுக்கு பயமா இருக்கா நந்தன்..? "


"நான் யார பார்த்தும் பயப்பட மாட்டேன் ராக்கு"


"அப்புறம் ஏன் என்கிட்டே இருந்து ஓட பார்க்கிறிங்க..? "



"நான் எங்க ஓட பார்க்குறேன்.. இதோ உன் பக்கத்துல தானே நிற்கிறேன்.."


"அன்னைக்கு உங்க பக்கத்தில் உட்கார்ந்ததும் கோபமா முறைச்சுக்கிட்டு எழுந்து போனீங்க.. இன்னைக்கு இப்படி நெருக்கமாக நிற்க்கிறேன் கூச்சம் தான் படறீங்க, அப்போ என்னை உங்களுக்குப் பிடிச்சுருக்கு அப்படித்தானே? "


"அதெல்லாம் இல்லையே.."


"அப்போ என்ன பிடிக்கல.. "


"அப்படியும் இல்லைங்க.."


"அப்புறம் ரெண்டுமே இல்லனா வேற என்ன? " என்று பேசிக்கொண்டே அவன் சட்டையும் போட்டு முடித்தாள்.


"எனக்குத் தெரியலை உன்னை எனக்கு பிடிக்குதா? இல்லையான்னு?" என்று உண்மையக் கூற..

தன் நுனிக் கால்களால் எக்கி அவன் தாடையை பற்றியவள், "சீக்கிரமே பிடிக்கும் நந்தன்" என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, கீழே வாங்க நான் வெயிட் பண்றேன் என்று சொல்லி சென்றுவிட்டாள்.(உன் பேச்சு ஒன்னு செயல் வேறையாலே இருக்கு புரிஞ்சுக்க முடியலையேம்மா)


வருணன் தான் அவள் தந்த முத்தத்தில் சிலையாக சமைந்து நின்றான்.


அன்று சாயங்காலம் வானதி தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள்..


"ஹேய் பியூட்டி..!!"


"உனக்கு இந்த டி ஷர்ட் சூப்பரா இருக்கு டா.." என்று குரல் கேட்க..


'யாரது இந்த தோட்டத்துக்குள்ள லவ்ஸ் விடறது அதுவும் தெரிந்த குரலா இருக்கே..!!'என்ற யோசனையூடே.. குரல் வந்த இடத்தை நோக்கிச் சென்றாள்


அங்கு கண்ட காட்சியில் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு மறைவாக நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்..


அதற்க்கு காரணம் வெங்கி தாத்தா தான், தன் எதிர் வீட்டு பாட்டியிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார்..


"ஏன் வெங்கி நான் போடற ட்ரெஸ் எல்லாம் அவ்வளவு நல்லா இருக்கா என்ன..!!"


"ஆமா டா லில்லி.. நீ இந்த வயசுலையும், இந்த ட்ரெஸ்ல இருபத்தைந்து வயசு குமாரி மாதிரி இருக்கே"என்று ஜொல்ஸ் விட


"போங்க வெங்கி!! எனக்கு வெட்கமா வருது என்று அந்த பாட்டி நகத்தை கடிக்க, ஏன் வெங்கி உங்க நாச்சிய இந்த ட்ரெஸ் போட சொல்ல வேண்டியதுதானே.."


"யங்ஸ்டர்ஸ் பேசிகிட்டு இருக்கும்போது அந்த ஓல்ட் லேடிய பத்தி பேசாத லில்லி.." கோபமாக கூறினார்.



"இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வானதி வாயில் கையை வைத்து 'யோவ் கிழவா!! உனக்கு இந்த வயசுல மாடர்ன் ட்ரெஸ் போட்ட பாட்டி கேட்குதா? இருயா தங்க வேட்டை ரம்யா க்ரிஷ்ணன் மாதிரி நகையை அள்ளி போட்டுக் கிட்டு சுத்துற உன் நாச்சிய கூட்டிட்டு வந்து உன் மன்மத லீலைக்கு எண்ட் கார்டு போடறேன்' என்று நினைத்தவள் பாட்டியை அழைக்க உள்ளேச் சென்றாள்.



"உனக்கு லில்லிணு எவ்வளவு அழகா மாடர்னா பேரு வச்சிருக்காரு உங்க அப்பா , இவளுக்கு பேரா பாரு 'கோதை நாச்சியார்' ஸ்டைல்லா கூப்பிட முடியல.."வருத்தம் போல் கூற..


"உங்க நாச்சி எப்படி இந்த எட்டு முழம் புடவையை சுத்திகிட்டு திரியிறாங்கன்னு எனக்குத் தெரியல, எனக்கெல்லாம் இந்த மாதிரி ட்ரெஸ் தான் சரி வரும் வெங்கி.."


"ஏன் லில்லி அதைக் கேட்குறே.. ரெண்டு நாள் முன்னாடி கூட கேட்டேன், இந்த மாதிரி டிஷர்ட் ஜீன்ஸ் போடுன்னு அதுக்கு அவ டிவோர்ஸ் வேணுமான்னு கேட்குற.."



"சோ சாட் வெங்கி..!! ஒரு மாடர்ன் ட்ரெஸ் போடவா அப்படி சொன்னாங்க, நீங்க பேசாமல் டிவோர்ஸ் பண்ணிடுங்க" என்று அறிவுரை கூற..


"அப்போ அந்த ஆளுக்கு சோறு யாரு போடுவா..? நீ போடுறியா..?"என்று குரல் கேட்க..


'எவ அவ'என்ற ரீதியில் திரும்பி பார்த்த வெங்கி தாத்தா அதிர்ந்து நின்றார்.. ஏனென்றால் நாச்சி பாட்டி இவர்கள் பேசியதைக் கேட்டு விட்டு உக்கிரமாக முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க.. வானதி அவர் பக்கத்தில் நின்று வாயைப் பொத்தி சிரித்துக் கொண்டிருந்தாள்.


அதற்குள் லில்லி பாட்டி அந்த இடத்தை காலி செய்திருந்தார்..


வானதி சிரித்ததை வைத்து இதற்க்கு காரணம் அவள்தான் என்பதைப் உணர்ந்தவர் "பத்த வச்சுட்டியே பரட்டே" என நினைத்துக்கொண்டு..


"கோதே..!!"என்று அழைக்க..


"என் பேரு உனக்கு ஓல்ட்டா இருக்கா.. காதலிக்கும்போது என்னையா சொன்னே..?

"அப்போ என்னென்னாமோ சொன்னேனே.. அதை நீயே சொல்லிடு வயசான காலத்துல அதெல்லாம் மறந்து போய்டுச்சு "


"இப்போதான் வயசாயிடுச்சுன்னு தெரியுதா அந்த லில்லிகிட்ட குழைஞ்சு பேசுனியே அப்போ தெரியல.. இந்த பேரும், இந்த புடவையும் தான் உனக்கு வேலு நாச்சியார் மாதிரி ராணி தோரணை கொடுக்குதுன்னு சொன்னியே..


இப்போ அதுவே உனக்கு ஓல்ட்டா தெரியுதா.. சுவருல ஒட்டுருக்க பல்லி மாதிரி இருக்கா அவள், அவளோட லில்லின்ற பேரு மாடர்ன்னா இருக்கா.."


"எங்க அப்பா அப்பவே சொன்னாரு போண்டா மாதிரி வீங்கி போயிருக்க இந்த வெங்கி வேண்டாம்னு,போண்டா மாதிரி வீங்கி போயிருந்தாலும் மனசு சுழிய உருண்டை உள்ள இருக்கிற பூரணம் மாதிரி இனிப்பா இருக்கும்னு சொல்லி கட்டிக்கிட்ட என்ன சொல்லணும் யா" என்று புலம்ப..


"அது இல்லை கோதே.."


"இனி ஒரு நிமிஷம் இந்த வீட்ல நீ இருக்க கூடாதுய்யா.. உடனே பொட்டிய கட்டிக்கிட்டு உன் அப்பன் வீட்டுக்கு போ" என்க..


"என் அப்பா எல்லாம் சொர்க்கத்துல இருப்பாரு கோதே.. டிக்கெட் கிடைச்சாதான் அங்க எல்லாம் போக முடியும்."


"நீ அதை பத்தி கவலைப் படாதே உன்னை நானே ஃபிரீ டிக்கெட்ல அனுப்பி வைக்கிறேன்"என்றவர் அங்குமிங்கும் தேடி ஒரு கட்டையா எடுக்க..


"கோதே வேணாண்டி..!! அப்புறம் நீ சுமங்கலியா போகணும்னு சொல்லுவியே அந்த லட்சியம் வீணா போய்டும் டி"என்று வானதி பின்னால் ஒளிந்துக்கொண்டார்..


"அப்படி ஒரு லட்சியம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், பொண்ணுங்க தான் சுமங்கலியா போகனுமா ஆம்பளைங்க சுமங்களான போகக்கூடாதா" என்று அடிக்க துரத்த..



இவர்கள் இருவர் சேட்டைகளையும் பார்த்து ஹர்ஷா பற்றிய கவலையைக் கூட மறந்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் வானதி.



அன்று இரவு ராஜவேலுவைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றாள் மாயா..


"டாட் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.."


"சொல்லுமா.. மாப்பிள்ளை தூங்கிட்டாரா..? "


"தூங்கிட்டாரு.."


"என்ன விசயம்மா..? "


"தேவ் மாமாவுக்கு எதிரிங்க யாரும் இருந்தாங்களா..? "


"எனக்கு தெரிஞ்சு அப்படி யாரும் இல்லையேம்மா.. தேவ் எல்லார்கிட்டையும் அன்பாக பழகுறவன் மா.. அவனுக்கு யாரு எதிரிங்க இருக்க போறா.. ஏன் மா கேட்குற..? "


"இல்லை பா சும்மாதான்.. நீங்க உங்க வேலைய பாருங்க"என்று வெளியேச் செல்ல எத்தனிக்க..


"ஆன்.. மாயா.. ஒருத்தன் இருந்தான் மா.."என்று சொல்ல..

அவளின் நடை தடை பட்டு திரும்பி பார்த்தாள்..


"யாரு பா அது? "


"பாண்டியன் மா அவன் பேரு, அவனும் தேவ்க்கு ரொம்ப நெருக்கம், யாருக்கும் தெரியாமல் கம்பனி பணத்தை கொஞ்சம் கொஞ்சமா கையாடல் பண்ணிருக்கான்,ஒரு தடவை தேவ்க்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆயிடுச்சு, அப்போ உன் குடும்பத்தை வேரறுப்பேன்னு சொல்லிட்டு போனான் மா, அப்புறம் கொஞ்ச நாளுலய்யே தேவ் கார் அச்சிடேன்ட்ல இறந்து போய்ட்டான், அவன் மேல கூட சந்தேகப்பட்டு விசாரணை பண்ணுனாங்க ஆனால் எந்த உண்மையும் தெரியல"என்றார்.


அனைத்தையும் கேட்டவள் "தேங்க்ஸ் டாட்.. "என்று மட்டும் கூறி விட்டு சென்றாள்.


அடுத்த நாள் காலையில் வானதி தலை குளித்து விட்டு, தோகை போன்ற கூந்தலை விரித்து விட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு, வீட்டு வாசலில் கோலம் போட்டு முடித்து நிமிர, அவள் முன் ஒரு ஜோடி ஷூ அணிந்த பாதங்கள் தென்பட்டது.


மலர்வாள்..!!


ஹாய் ஃபிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

சென்ற பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇


 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உயிர் கொய்வாய் நறும் பூவே.." முன்னோட்டம்.. எப்போ இந்த பகுதி வரும்னு தெரியல.. படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிருங்கள்.

"இதை ஏன் பாட்டி என்கிட்ட நீங்க சொல்லல.. நீங்க முன்னாடியே சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சனைக்கு எப்பவோ நாம முடிவு கட்டிருக்கலாம்.." என்றாள்.

"இது இந்த வீட்டு மருமகளுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசியம்.. அதனால் தான் உனக்கு இப்போ சொல்றேன்.. இந்த வீட்டு மருமகளா நீ வராமல் இருந்திருந்தால் என் உயிரே போனாலும் சொல்லிருக்க மாட்டேன்.

இதை அந்த வீட்டு மருமகளோ, இல்லை பெண் பிள்ளைகள் மட்டும் தான் பாதுகாக்க முடியும்.இதை நாங்க பரம்பரையா பாதுகாத்துக்கிட்டு வர்றோம், இதை பத்தி உன் அம்மாவுக்கு தெரியும் அப்படி இருந்தும் உன் அப்பாகிட்ட கூட சொல்லிருக்க மாட்டா.

ஏன்னா உறவாக இருந்தாலும் உன் அப்பா, அண்ணன், நீ எல்லாம் வேற்று மனுஷங்கள் தான் இந்தப் பொருளை பொறுத்த வரைக்கும்.. இதுவே எனக்கு உன் அம்மா மட்டும் தான் வாரிசு என்றால் அவளுக்கு பிறகு உன் மேல் அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு அதை பாதுகாக்குற பொறுப்பை உன்கிட்டை ஒப்படைச்சிருப்பா..

ஆனால், தேவ் தான் இந்த வீட்டு ஆண் வாரிசு இது அவன் மனைவி பாதுகாப்புல இருக்கிறதுதான் முறை, அதுவே அந்த வீட்டு ஆண்கள் பாதுகாப்புக்கு கீழ் வந்தால் அந்த பொருளே அவர்களுக்கு சாபமாக முடியும்!!" என்று நாச்சி பாட்டி கூற..

"இது இப்போ எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா பாட்டி..? "

அதை நான் தேவ்க்கு கல்யாணம் ஆனா அடுத்த நாளே என் மருமகள்கிட்ட ஒப்படைச்சுட்டேன். அவள் எங்க வச்சுருக்கான்னு எனக்குத் தெரியாது. அது அவளுக்கும் தேவ்க்கும் மட்டும் தெரிந்த ரகசியம்.

அவன் அதை அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும்னு முடிவு பண்ணுன கொஞ்ச நாளுலையே விபத்துல இறந்துட்டான். இப்போ அது இருக்கிற இடம் தெரிந்த ஒரே ஆள்னா அது என் மருமகள் தான்"என கரகரத்தக் குரலில் கூறினார் நாச்சி பாட்டி

'அப்போ அந்தப் பொருளை மாமா அரசாங்கத்திடம் ஒப்படைக்க கூடாது அப்டிங்கறதுக்காக நடந்த கொலை இது விபத்து இல்லை 'என்பது மாயாவுக்குத் தெளிவாக புரிந்தது.

அவர்கள் தேடிய பொருளோ கண்கள் கூசும் அளவுக்கு ஒளிவீசிக் கொண்டு அந்த வீட்டில் மிகுந்த பாதுகாப்புடன் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது..

****************************************

மழை சோவென்று பெய்ய அது கூட உரைக்காமல் தான் அறிந்துக் கொண்ட உண்மையில் தன் காரை கூட மறந்தவளாக..நடு ரோட்டில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் மாயா..

'நீங்க இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்பிங்கனு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை, உங்களுக்கு எப்படி மனசு வந்தது இப்படி ஒரு காரியத்தை பண்ண.. இதற்கு எல்லாம் நீங்க பதில் சொல்லி ஆகணும், பதில் சொல்ல வைப்பா இந்த மாயாவதி' என வன்மமாக நினைத்துக் கொண்டு நடந்தே வீட்டிற்கு வந்தவள் உயிரற்ற இயந்திரம் போல் உள்ளே நுழைந்தாள்.

அங்கு ஒற்றை ஸோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு என்றும் இல்லாத கம்பீரத்துடன் ராஜதோரணையில் அமர்ந்திருந்த வருணன்..

"அங்கையே நில்லு" என கர்ஜித்தான்.

அவள் கர்ஜனையில் சுயம் பெற்றவள்.. அவனை நிமிர்ந்து பார்க்க.. மின்னல் வேகத்தில் எழுந்து அவள் அருகில் வந்தவன் அவள் என்ன ஏது என்று உணரும்முன்னே "பளார்" என கன்னத்தில் அறைய அதில் நிலை தடுமாறி தரையில் விழுந்தவள் நெற்றியில் அடிபட்டு செங்குருதி வழிந்தது.

அன்புடன்❤
வியனி

கருத்துத் திரி👇

 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மலர்-12


கோலம் போட்டு நிமிர்ந்த வானதியின் கண்ணில் பட்டது ஷூ அணிந்த ஒரு ஜோடி பாதங்கள்.


அவளைப் பார்த்து மெல்லிதாக புன்னகைத்தவன் "நாச்சி பாட்டி இருக்காங்களா..?"என்றான்.


"நீங்க யாரு..?"


"நான் பாட்டிக்கு தெரிஞ்சவன் தான் என் பேரு பிரசாத்."


"அப்படியா! உள்ளேதான் இருக்காங்க வாங்க "என்று அழைத்தாள்.

அவள் முன்னே செல்ல.. விரித்து விட்டிருந்த கூந்தல் அவள் நடைக்கு ஏற்றார் போல் தோகை விரித்த மயில் போல் ஆடி அசைய.. அவள் பின்னழகை போதை கக்கும் விழிகளுடன் ரசித்துக் கொண்டிருந்தவன்.. "சாக்லேட் பேபி நீ எனக்கு மட்டும் தான்"என வாய் விட்டுக் கூறிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான் விஜய் பிரசாத்.


நாச்சி பாட்டி கால் மேல் கால் போட்டுக் கொண்டு, அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருக்க.. வெங்கி தாத்தா சோகமே உருவாக நேத்து நடந்த சம்பவத்திலிருந்து நாச்சி பாட்டி முகம் திருப்பிக் கொண்டு செல்வதை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.


"ஹாய் பாட்டி" என்று குரல் கேட்க.. இருவரும் வாசல் புறம் திரும்பி பார்த்தனர்..


"ஹாய் விஜய்..!! வா.. வா.. எப்படி இருக்க..? "


"நல்லா இருக்கேன் பாட்டி, நீங்களும், தாத்தாவும் எப்படி இருக்கீங்க" என்றவன் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.


உனக்கு கடவுள் அனைத்தையும் கொடுத்து மகிழ்ச்சியா வச்சுக்கணும் என்று ஆசிர்வதித்தவர்கள் "எல்லாரும் நல்லா இருக்கோம் பா.. உன்னை பார்த்ததில் ரொம்ப சந்தோசம் உட்காருபா" என உபசரித்தார்.


"வானுமா காஃபி கொண்டு வாம்மா.."


"சரி பாட்டி" என்று அடுக்களைக்குள் சென்றாள் வானதி.


"அப்புறம் விஜய்.. இவ்வளவு காலையிலையே வந்துருக்க, ஆச்சரியமா இருக்கு..?"


"இங்க பக்கத்துல தான் பாட்டி என் வீடு.கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கலாம்னு பிசினஸ்க்கு லீவு விட்டுட்டு பெங்களூர்ல இருந்து இங்க வந்துட்டேன்.. இனி அடிக்கடி இங்க வருவேன்" என்று சொல்லிச் சிரித்தான்.


"அதுக்கு என்ன பா.. நீ தாராளமாக இங்க எப்போ வேண்டுமானாலும் வரலாம், இது உன் வீடு" என்றார் நாச்சி பாட்டி..


வானு கொண்டு வந்த காஃபி கோப்பையை அவனிடம் நீட்ட.. அவனோ அவள் முகத்தையே பார்த்துக் கொண்டே.. ஒழுங்காக பிடிக்காமல் வாங்க அவன் மேலையே அனைத்தும் விழுந்து சிந்தியது.


"அய்யயோ மன்னிச்சுடுங்க!! தெரியாமல் விழுந்துடுச்சு" என்று அவள் கை கொண்டே சட்டையை துடைக்க..அவள் கையை பற்றியவன் "என் மேல் தாங்க தப்பு விடுங்க பரவாயில்லை பக்கத்துல தான் வீடு இருக்கு மாத்திக்கிறேன்"என்று கூறினான்.


இதை அனைத்தையும் மாடி படிகளில் இருந்து இறங்கிக் கொண்டே பார்த்துக் கொண்டு வந்தான் ஹர்சவர்தன்..!!


அவன் பின்னால் மாயா.. வருணனை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்..


ஹர்ஷா அவனை அனல் கக்கும் விழிகளுடன் பார்த்தன் என்றால் மாயாவோ ஆராய்ச்சிப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.



நாச்சி பாட்டி "இவன் தான் மா விஜய்.. நாங்க கோவிலுக்கு போயிருந்தோம்ல அப்போ இடையில் எங்க கார் டயர் வெடிச்சுருச்சு, ஸ்டெப்னி வேற இல்லை. இவன் தான் ஹெல்ப் பண்ணான், சென்னை வந்தா வீட்டுக்கு வரச் சொல்லிருந்தேன் அதான் வந்துருக்கான். ரொம்ப தங்கமான புள்ளை" என பாராட்டியவர்.. பதிலுக்கு தனது பேரப் பிள்ளைகளையும் அறிமுகபடுத்தினார்.


வருணனுக்கு கை கொடுத்து தன்னை அறிமுகபடுத்திக்கொண்டவன், ஹர்ஷாவின் புறம் கையை நீட்ட.. அவனை முறைத்துவிட்டு.. "ஹேய் எனக்கு டீ எடுத்துட்டு வாடி" என அவள் தன்னவள் என்ற உரிமையை நிலைநிறுத்தும் விதமாகக் கூறிச் சென்றான்.


'எல்லாம் கொஞ்ச நாள் தாண்ட ஹர்ஷா, அப்றம் எல்லாம் இந்த விஜய் பிரசாத்க்குதான்' என வன்மமாக நினைத்துக் கொண்டவன் வெளியில் சிரித்தார் போன்றே முகத்தை வைத்துக் கொண்டான்.


"சரிங்க பாட்டி அப்போ நான் கிளம்புறேன். பக்கத்துல தானே இருக்கேன் அடிக்கடி இனி சந்திக்கலாம்"என கூறி விடை பெற்றுச் சென்றான்.



அவன் சென்றதும் "பாட்டி அதிகம் பரிச்சயம் இல்லாத ஆளுங்கள வீட்டுக்குள்ள அடிக்கடி அனுமதிக்காதிங்க" என்ற மாயா "ஒரு முக்கியமான மீட்டிங் முடிச்சுட்டு வந்துடுறேன் சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுங்க என வருணனிடம் கூறிச் சென்றாள்..


'இந்த பொண்ணுக்கு எப்போதான் ஆம்பளைங்க மேல் நல்ல எண்ணம் வரப் போகுதோ' என நினைத்தவர் வருணனுடன் கதை அளக்க ஆரம்பித்தார்.


காபி எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு வந்த வானதி.. மெத்தையில் சட்டையில் உள்ள இரு பட்டன்களை கழட்டிவிட்டு குறுக்காக கண் மூடி படுத்திருந்தவன் அருகில் சென்றவள்..


"க்கும்.. இந்தாங்க காஃபீ"என்றாள்.


அவள் சத்தித்தில் மெதுவாக கண் திறந்து எழுந்தமர்ந்து காஃபீயை வாங்கி பருகியவன்.. சிறிது காபீயை வேண்டுமென்றே மேலே ஊற்றிக் கொண்டு.. "இதை துடைச்சு விடு" என்க..


"ஏன் உங்க கை நல்லா தானே இருக்கு நீங்களே துடைச்சுக்கங்க.."


"அவனுக்கும் கை இருந்துச்சே.. நீ தானே துடைச்சுவிட்ட, அப்போ மட்டும் இனிகுத்து, கட்டுன புருசனுக்கு மட்டும் துடைக்க கசக்குதோ!!" நக்கலாக மொழிந்தான்.



"உங்களை மாதிரி ஒரு சந்தேகப் பேயை பார்த்ததே இல்லை ச்சே.. உங்க முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல,ஏன் இப்படி என்னை கொடுமைப்படுத்துறீங்க..? "


அவளை அடிபட்டப் பார்வை பார்த்தவன் வேகமாக எழுந்து அவள் கையைப் பற்றி "நான் உன்னை கொடுமைப் படுத்துறேனா.. நீ தாண்டி இங்க இருந்துகிட்டு என்னை கொடுமை படுத்திற"தனது நெஞ்சு பகுதியை குத்திக் காண்பித்துக் கூறியவன்..


" நான் மட்டும் தான் உன் அன்புக்காக ஏங்குறேன். ஆனால், நீ உன் மேல் நான் வச்சுருக்க அன்பை புரிஞ்சுக்காமல் உதாசீனப் படுத்துறேல்ல.. சரி டி நான் உன்னை சந்தேகப்படறேன்னே வச்சுக்கோ.. இப்போ சொல்லு நீ என்னை விரும்புரியா..? இல்லையா..?"


அவன் மேல் இருந்த கோபத்தில் "நான் உங்களை விரும்பல என்னை ஆளா விடுங்க" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.


அவள் பதிலில் மனதில் மிகப்பெரிய அடிவாங்கியவன்.. "உண்மையாக நீ என்னை விரும்பலையா!!" இயலாமையுடன் சிறு குழந்தைப் போல் கேட்க..

"ஆமாம் விரும்பல.. உங்களை விரும்புற மாதிரி ஏதாவது பண்ணிருக்கீங்களா, எப்போ பாரு ஏதாவது அடாவடித்தனம் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை"என்று குரல் உயர்த்தி பேசினாள்.


அவள் கையை விட்டவன் "சரி.. என்னை மன்னிச்சுடு நான் தான் முட்டாள் தனமா நீ என்னை விரும்புற, உன் அண்ணனுக்காக என்னை வேண்டாம்னு சொல்றேன்னு நினைச்சேன்.


உன் விருப்பம் இல்லாமல் உன்னை கல்யாணம் பண்ணிருக்க கூடாது.இனி உன்னை நான் எந்த விதத்துலையும் தொந்தரவு பண்ண மாட்டேன்" என்று கூறி விருவிருவென வெளியே சென்றான்.


அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள்"நீங்க தான் என் மனசை புரிந்துகொள்ள மாட்டேங்குறீங்க" என்றவள் மெத்தையில் தொப்பென்று அமர்ந்து முகத்தை தன் கரங்களால் மூடிக் கதறி அழுதாள்.


காதல் பறவைகள் இரண்டும் எல்லையற்ற காதலை மனதில் சுமந்துக் கொண்டு ஒருவர் மனதை மற்றவருக்குப் புரியவைக்க முயலாமல், ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டிருப்பது அவர்களுக்கு லாபமா..? இல்லை அவளுக்காக கன்னி வைத்துக் காதுக் கொண்டிருக்கும் அவனுக்கு லாபமா..?

**************************************

"கோதே..!! ஏன் டி இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருக்கே.. முத்துன உன் மூஞ்சிக்கு கேவலமா இருக்கு டி.."


"என்ன சொன்ன வெங்கி.. கேவலமா இருக்கா.. இருக்கும்யா இருக்கும் அப்போ மட்டும் பிஞ்சு மூஞ்சு பஞ்சு பாடினு டயலாக் விட்ட இந்த வாயி, இன்னைக்கு முத்துன மூஞ்ச்னு சொல்லுது. குருடாயில் கொண்டு வர்ற வீங்கி போன பீப்பா மாதிரி இருக்கிற நீ.. சிவகாமி தேவி மாதிரி இருக்கிற என்னை கிண்டல் பண்ற.. எல்லாம் என் நேரம்யா.."


"ஐயோ கோதை!! நான் அந்த அர்த்தத்துல கேவலம்னு சொல்லலடி.. இப்படி கம்பீரமான முகத்த தூக்கி வச்சுக்கிட்டு இருக்கியே அதுக்கு சொன்னேன் டி.."


"போயா நீ பொய் சொல்ற.. நான் உன்னை நம்ப மாட்டேன்."

'என்ன சொன்னாலும் சமாதானம் ஆக மாற்றாளே.. பேசாமல் ஒரு பாட்டைப் பாடி நம்ம வழிக்கு கொண்டு வர வேண்டியதுதான்" என நினைத்தவர்..



"பால்போலே பதினாறில்
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

இணைய தளத்தில் கணிணி களத்தில்
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கணுமே

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்"


என வெங்கி தாத்தா பாட..வெட்கம் வந்து அழையா விருந்தடியாக முகத்தில் ஒட்டிக் கொண்டது நாச்சி பாட்டிக்கு.

"மை டியர் மச்சான் நீ மனசு வச்சா நம்ம ஒரசிக்கலாம் நெஞ்சு ஜிகு ஜிகுஜா" என்று எதிர் பாட்டு பாட.. "ஏன் வெங்கி நான் என்ன பதினாறு வயசு பொண்ணு மாதிரியா இருக்கேன் வெட்கப்பட்டுக் கொண்டே கேட்க.."

"ஆமா டி என் ஜில் ஜில் ஜிகர்ண்டா.. உனக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு" என்று அவர் வாங்கி வந்ததை பையில் இருந்து எடுத்து காண்பிக்க..

கண்கள் இரண்டும் மகிழ்ச்சியில் விரிய "ஐ.. பொறி உருண்டை..!! எனக்கு ரொம்ப பிடிச்சது. நாம லவ் பண்ணும்போது எனக்கு எப்போதும் வாங்கிட்டு வருவியே.. எத்தனை வருஷம் ஆச்சு" என்று கண் கலங்கினார்..


"என்ன கோதை சின்ன குழந்தை மாதிரி கண்கலங்கிகிட்டு.."என தனது காதல் மனைவியை தோளில் சாய்த்துக் கொண்டார்..

"சின்ன குழந்தையாவே இருந்துருக்கலாம் வெங்கி.. தேவ், அகிலாவும் போன பிறகு நம்ம சந்தோஷம் எல்லாம் போய்டுச்சு" என்று வருந்தினார்.

"கோதை.. உனக்கு நான் எனக்கு நீ.. எனக்கு முன்னாடி நீ போன உன் கூடவே நான் வந்துடுவேன் டி.."


"ஏன் வெங்கி இப்படி எல்லாம் பேசுற..? "


"உண்மையைத் தான் சொல்றேன் கோதே.. நீ இல்லைனா எனக்கு எதுவுமே இல்லை. நாம முடிக்க வேண்டிய காரியம் கொஞ்சம் இருக்கு அதெல்லாம் முடிச்சிட்டு போய்ட்டா நம்ம பிள்ளைங்க ஆன்மா சாந்தி அடையும் அது வரையாவது நாம உயிரோடு இருக்கனும்."

"கண்டிப்பா நம்ம பேரப் பிள்ளைங்க ஒன்னா சேர்ந்து அவங்களுக்கு குழந்தை எல்லாம் பிறந்த பிறகு தான் நாம போவோம் வெங்கி" என்றவர் கண் கலங்கியது..


இதை எல்லாம் பாட்டியை பார்க்க வந்த வானதியின் கண்களில் இந்தக் காட்சி விழ.. 'இவர்கள் போல் ஒரு வாழ்க்கையை மன புரிதலுடன், எந்த ஒரு எதிர்பார்பில்லா அன்புடன் ஹர்ஷாவுடன் வாழ மாட்டோமா' என்று ஏக்கமாக இருந்தது.

****************************************

நாட்கள் வேகமாக நகர.. வருணனுக்கு கை நன்றாக குணமாயிருந்தது.


ஹர்ஷா அன்று அவளுடன் பேசியதற்கு பிறகு.. அவளை விட்டு தள்ளியே இருக்க.. அது வானதிக்கு மிகுந்த மன வலியை கொடுத்தது..
இவள் வழியே சென்று பேசினாலும் ஓரிரு வார்த்தைகளுடன் பேச்சை நிறுத்திக் கொள்வான்.


விஜய் பிரசாத்தும் ஹர்ஷா இல்லாத சமயம் அடிக்கடி வீட்டிற்கு வருபவன் பாட்டி, தாத்தா, வருணன், வானதியுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டான்.. அந்த வீடு முழுவதையும் ஒவ்வொரு இன்ச்சாக தன் மனக் கண்ணில் படம் பிடித்தும் கொண்டான்.


அன்றொரு நாள் வருணன் வீட்டிற்குள்ளே இருப்பதால் ஒரு மாற்றத்திற்காக.. மாயா இல்லாத சமயம் வெளியில் சென்றிருந்தான். இரவு வெகு நேரமாகியும் அவன் வராது இருக்கவே.. அவன் அலைபேசிக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மனதில் பயம் கவ்விக் கொள்ள குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.


அந்த சமயத்தில் வருணன் உள்ளே வந்தான். அவளுக்கு இருந்த மன உளைச்சலுக்கு கோபம் மேலோங்க..


"ராக்கு "என்று சிரித்துக்கொண்டே ஏதோ சொல்ல வந்தவனின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தவள் அடுத்த வினாடியே அவனை இறுக கட்டிக் கொண்டு.. "எங்க டா போனே.. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா.. உன்ன தான் அதிகம் வெளில போகாதேன்னு சொல்லிருக்கேன்ல.. உன்ன பார்க்கிற வரையிலும் என் உயிர் என்கிட்ட இல்லை" என்றாள்.


அவள் அடித்ததில் முதலில் கோபம் வந்தாலும் அடுத்தடுத்த அவளுடைய செய்கை இமயமலையின் உச்சியில் நிற்பது போன்ற குளிர்ச்சியை உடல் முழுதும் பரவ செய்து ஒரு வித சிலிர்ப்பை நாடி நரம்பில் எல்லாம் ஏற்படுத்தியது.


பதிலுக்கு தன்னை அறியாமல் அவளை அணைத்துக் கொண்டு உச்சியில் முகம் புதைத்தவன்..


"சாரி ராக்கு.. இன்னைக்கு ஒரு விவசாயம் பற்றிய கருத்தரங்குல கலந்துக்கிட்டேன், அங்கையே டைம் போய்டுச்சு, போனும் சார்ஜ் இல்லாமல் ஓப் ஆயிடுச்சு "என்று கூறினான்.


அவனை விட்டு விலகியவள் "சாரி ஏதோ ஒரு வேகத்துல அடுச்சுட்டேன்.. என் மேல் கோபம் இருந்தா பதிலுக்கு என்னை அடிங்க" என்று கன்னத்தைக் காட்டினாள்.


அவள் செய்கையில் புன்னகை அரும்ப.. அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்.. "நீ எந்த தப்பும் பண்ணல.. நான் தான் பண்ணேன், வேற யார்கிட்டையாவது போன் வாங்கியாவது உனக்கு தகவல் சொல்லிருக்கணும் சாரி" என்று அவள் நெத்தியில் முத்தம் வைத்து..


"நீ ஏன் இவ்வளவு பயப்படுற..? "


"இல்லை உங்களுக்கு சென்னை புதுசுல அதான்" என்று மழுப்பலாக பதில் கூறினாள்.


"நான் நிறைய தடவை சென்னைக்கு வந்துருக்கேன்.. அதனால் நான் ஒண்ணும் தொலைஞ்சுட மாட்டேன் பயப்பிடாதே" என்று கேலியாகக் கூறியவன் "எனக்கு பசிக்குது சாப்பிடலாமா..?"


"நானும் உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன், வாங்க சாப்பிடலாம்" என அழைத்துச் சென்றாள்.


அன்று இரவு அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. தன் உடலையும், முகத்தையும் மறைத்துக் கொண்டு அந்த வீட்டின் அடியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் நாச்சி பாட்டிக்கும், வெங்கி தாத்தாவிற்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய அறையைத் திறந்தான் அவன்.


அந்த அறையை வேறு யாரவது திறந்தால் அபாய ஒலி எழுப்பி.. பாட்டியின் அறையில் மட்டும் சத்தம் கேட்பது போல் செட் செய்யப்பட்டிருந்தது.


அவன் கதவைத் திறந்த அடுத்த வினாடியே பாட்டியின் அறையில் ஒலி எழுப்ப.. கண் விழித்துக் கொண்டார் நாச்சி பாட்டி.


மலர்வாள்..!!


ஹாய் பிரண்ட்ஸ்..


அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

சென்ற பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇


 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

திரும்ப உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன், எல்லாரும் எப்படி இருக்கீங்க..?


"உயிர் கொய்வாய் நறும் பூவே.." நாளைய அத்தியாயத்திலிருந்து சிறு முன்னோட்டம்..

"அறிவு இருக்கா வெங்கி .? இது நம்ம குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே சொல்லக் கூடிய விஷயம் ஹர்ஷாவை கூப்பிட்டா அவனுக்கு சந்தேகம் வராது, மாயா இப்போ நம்ம வீட்டு பொண்ணாயிட்டா, இருந்தாலும் நம்ம வருணிடம் உண்மையை சொல்ற வரைக்கும் அவள்கிட்டையும் இதை பத்தி சொல்லக்கூடாது, நம்ம பாதுகாப்புக்காக வாங்கி வச்சுருக்க பிஸ்டலை எடுத்துக்கிட்டு வாங்க போகலாம்" என்று பிஸ்டலை எடுத்துக்கொண்டு பேஸ்மென்ட் நோக்கிச் சென்றனர்.


அவர்கள் பேஸ்மென்டை நோக்கி வந்துகொண்டிருக்க.. காலடிச் சத்தம் கேட்டதும் கதவை திறக்கும் முயற்சியில் இருந்து பின் வாங்கிய அந்த உருவம் அங்கிருந்த மறைவான பகுதியில் நின்றுக் கொண்டது.



அந்த அறையை நெருங்கிய நாச்சி பாட்டியும், வெங்கி தாத்தாவும் சுற்றி முற்றிப் பார்த்தவர்கள், பிஸ்டலை கதவுக்கு நேராக வைத்துச் சுட.. பயந்துக் கொண்டு கையை மேலே தூக்கிச் சரெண்டெர் என்பது போல் வெளியே வந்தது.


"யார் நீ "என்று நாச்சி பாட்டி கேட்க.. பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது அந்த உருவம்..

"இப்போ சொல்றியா இல்லை இங்கையே உயிரை விட போறியா..? என்று ட்ரிக்கரில் கையை வைக்க, தன் பார்வையால் தரையை நோட்டம் விட்ட அவ்வுருவம், அங்கு கிடந்தத் தகர டப்பாவை எத்த.. பாட்டியின் துப்பாக்கியில் பட்டு துப்பாக்கியை கீழே விழ செய்தது.அந்த சமயத்தைப் பயன்படுத்தி அந்த உருவம் அங்கிருந்து ஓட முயற்சி செய்ய.. சுதாரித்த பாட்டி அந்த உருவத்தை வளைத்து பிடித்துக் கொள்ள, வெங்கி தாத்தா முகமூடியைக் கழட்ட முயற்சி செய்தார்.


திடீரென பாட்டி அந்த உருவத்திடம் ஏதோ உணர்ந்தது போல் பிடித்திருந்த கை தளர.. இதுதான் சமயம் என்று அவர்கள் பிடியில் இருந்து உருவிக் கொண்டு மாயமாக மறைந்தது.



"என்ன கோதே..! திடிர்னு இப்படி விட்டுட்டே.. இன்னைக்கு அவன் யார்னு கண்டுபிடிச்சுருக்கலாம்,எல்லாம் போச்சு"


அந்த உருவம் சென்ற திசையை வெறித்துப் பார்த்த நாச்சி பாட்டி "அவன் இல்லைங்க அவள்"என்று சொல்லி அவரைப் பார்த்தார்.


"என்ன சொல்ற கோதே..? வந்தது ஒரு பொண்ணா..!"என்று அதிர்ச்சியாகக் கேட்க..


"ஆமாம் வெங்கி.. வந்தது ஒரு பொண்ணு..!'
 
Status
Not open for further replies.
Top