All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வியனியின் "உயிர் கொய்வாய் நறும் பூவே..." -கதை திரி

Status
Not open for further replies.

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே...

அடுத்த கதையோடு வந்துவிட்டேன்.. "உயிர் கொய்வாய் நறும் பூவே..."அதிலிருந்து ஒரு முன்னோட்டம் பதிந்துள்ளேன். இதன் பதிவுகள் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பதிவிடப்படும்.இந்த கதைக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள் தோழமைகளே..

"ஆஹா.. அவ்வளவு பாசமலரா நீங்க..! அப்புறம் கல்யாணம் ஆனதும் நீங்க உங்க அண்ணனை விட்டு பிரிஞ்சுதானே இருக்கணும் அப்போ என்ன பண்ணுவீங்க..? "என்று நிருபர் கேட்க..

அதுவா சார் என்று சொல்ல வந்தவன்.. திடீர் என்ற கேட்ட வண்டி சத்தத்தில் திரும்பியவன், "அதோ வாரான் பாருங்க அவன் என் சொந்தக்காரன் இந்த ஊருதான். என் தங்கச்சி என்னை விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டாள், நானும் அவளை விட்டு இருக்க மாட்டேன் அதான் ஒரே வீட்ல பெண் எடுத்து பெண் கொடுக்க போறோம், அதனால் அவன் தங்கச்சிய நான் கட்டிக்க போறேன், என் தங்கச்சிய அவன் கட்டிக்க போறான்" என்றான்.

****************************************
'அய்யயோ இன்னைக்கு ஏன் இந்தம்மா நம்மல கூப்பிடுறாங்கனு தெரியலையே நான் வேற வேலைக்கு புதுசு..' என்று நினைத்து கொண்டே அருகில் வர.. அவளிடம் எதுவும் கேட்காமல் 'பளார்' என்று அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

அவள் அடித்த அடியில் தலை கிர்ரென்று சுத்த நின்று கொண்டிருந்தவளிடம், "ஒழுங்கா வேலை பார்க்க தெரியாதா..? இப்படித்தான் வயசானவங்க இருக்கிற வீட்ல, மாடி படில எண்ணையை ஊத்தி வைக்கிறதா..? யாரவது வழுக்கி விழுந்தா என்ன பண்றது. நீ புதுசுங்கிறதால ஒரு அடியோடு விடறேன் இல்லை தொலைச்சு போட்டுருவேன்" என எச்சரித்துவிட்டு, வழக்கம் போல் பூஜை அறைக்கு சென்றாள்.

****************************************

"உன்னால நான் அந்த கம்பனிக்கு கூட போக பிடிக்காமால் எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்துருக்கேன். நீ அங்க கல்யாணதுக்கு தயாராகிட்டுருக்கியா..? என்ன சொன்னே..? என் தங்கச்சிய உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னாதான் என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேல்ல.."

"நான் உன் பட்டிக்காட்டு அண்ணனுக்கு என் தங்கையை கட்டிக்க என்ன தகுதியிருக்குன்னு கேட்டதுக்கு.. என்னை வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சுட்டு போனே.. இப்போ சொல்றேண்டி உன் கல்யாணத்தன்னைக்கு உன் கழுத்துல ஏறுற தாலி நான் கட்டுறதாதான்டி இருக்கும் இதை யாராலயும் மாத்த முடியாது. நீ என் காதலை புரிஞ்சுகிட்டு என்னைக்காவது ஒரு போன் பண்ணி என்ன விரும்புறேன்னு சொல்லுவேன்னு ஆசையா காத்துக்கிட்டுருந்த என் மனதை நோகடிச்சுட்டேல்ல. அது கூட பரவாயில்ல ஆனால் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது என் மனசை காயப்படுத்துன உன்னை மன்னிக்கவே மாட்டேண்டி பல்லை கடித்து கொண்டு கூறியவன். இனி உன் அண்ணன் எங்க கையில.. நீ உன் அண்ணன் கூட ஒரே வீட்ல இருக்கணும்னு நினைக்கிறத மட்டும் நான் என்னைக்குமே நடக்க விடமாட்டேண்டி இதுதான் உனக்கு சரியான தண்டனை"என வன்மமாக நினைத்து கொண்டான்.

****************************************
"ம்ம்.. உங்க நேர்காணலை பார்த்தேன், என்னோட ஃபார்மிங்குக்கு நீங்கதான் எல்லா உதவியும் பண்ணனும், அது தவிர வேற ஏதாவது பண்ணனும்னு ஆசை இருக்கு எல்லாத்தையும் நீங்கதான் கவனிச்சு செஞ்சு தரணும்அதுக்கு பணம் எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கோங்கோ..

நாளையிலிருந்து வேலையை ஆரம்பிச்சுடுங்க" என்றவள் அவன் பதிலை எதிர் பாராது திரும்பவும் அமர்ந்து கொண்டு போனில் தலையை நுழைத்து கொண்டாள்.

அவள் கட்டளை இடுவது போல் பேசியது அவனுக்கு அவள் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியது.

"ஹலோ மேடம்.." என்று அழைத்தவனை..

தனது கூரிய விழிகளை கொண்டு நோக்கியவள்.. 'சொல்' என்பது போல் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.


"எனக்கு நிறைய வேலை இருக்கு என்னால உங்களுக்கு உதவி பண்ண முடியாது.இந்த ஊருல நிறைய பேரு விவசாயம் நல்லா பண்ணுவாங்க அவங்க கிட்ட கேட்டு பாருங்க.. இப்போ இடத்தை காலி பண்றிங்களா"என்று கூறினான்.


தலையை ஒரு பக்கமாக சாய்த்து அவனை பார்த்தவள், "எனக்கு நீங்க தான் செஞ்சு தரணும் மிஸ்டர்.நந்தன்" என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

"என்னால முடியாதுன்னு நானும் சொல்லிட்டேன் மேடம்.." அவனும் அழுத்தமாக கூறினான்.


"நீங்க செய்விங்க நந்தன்.. வீணே உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணாமல், நடக்க வேண்டிய வேலைய பாருங்க" என்றாள்.

****************************************
வானுவோ 'பரவாயில்லையே.. எவ்வளவு பணக்கார பொண்ணு கீழே உட்கார்ந்து சாப்பிடுறாங்க' மெச்சுதலாக எண்ணி கொள்ள தாமரைக்கோ அவளின் செயல் மனதில் கிலி பிடித்து கொண்டது.


வயலும், வாழ்வும் நிகழ்ச்சியை சுவாரசியமாக பார்த்து கொண்டிருந்தவன், தனது பக்கத்தில் ஆளை மயக்கும் வாசனை திரவியத்தின் மணம் வீச, அருகில் திரும்பி பார்த்தான். அவன் கால் மேல் அவள் கால் உரசும் அளவிற்கு சம்மணம் இட்டு அமர்ந்திருந்தவளை கண்டதும் தீ சுட்டார் போல் எழுந்தவன் அவளை முறைத்து விட்டு வெளியே செல்ல, தாமரை தன் மகனை ஒரு முறை பார்த்துவிட்டு, மாயாவிடம் ஒரு வெற்றி பார்வையை வீச.. கேலியாக இதழ் வளைத்தாள் மாயாவதி.

அன்புடன்♥
வியனி

கருத்துத் திரி👇

 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-1
19689

இளம் பரிதி புதிதாக ஜனித்த குழந்தையை போல் மெல்ல எட்டுக்கல் வைத்து முகில் என்னும் போர்வையை விலக்கி கொண்டு வெளியே வந்தது, அதன் வரவை கொண்டாடும் விதமாக புள்ளினங்கள் கானம் இசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, காலை நேர கிராமத்து பரபரப்பில் உற்சாகமாக இயங்கி கொண்டிருந்தது செந்தாரையூர்(கற்பனை ஊர்).

எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல் எங்கெங்கு காணினும் பசுமை செறிந்து பார்ப்பவரின் கண்களுக்கும், மனதுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்துவது போன்று பதினைந்து ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பக்கம் வாழை தோப்பு, தென்னந்த் தோப்பு, இன்னொரு பக்கம் பாரம்பரிய நெல் சாகுபடி, கத்தரி தோட்டம், பூந்தோட்டம், கற்றாழை சாகுபடி, கீரை வகைகள் என பயிரிடபட்டு அதை பாதுகாப்பதற்கு முள் வேலிகளை அமைக்காமல், மரங்கள், மூலிகை செடிகள் போன்றவற்றை கொண்டு இயற்க்கை முறையில் உயிர் வேலி மரங்களை பாதுகாப்பு வேலியாக அமைக்கப்பட்டிருந்த இயற்க்கை வேளாண்மையை சுற்றி பார்த்து கொண்டிருந்தான் பரபரப்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கும் பிரபல தொலைக்காட்சி நிருபர்.


“என்ன சார் சுற்றி பார்த்திட்டிங்களா” என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவனின் கண்களில் ஆறடி உயரத்தில், மாநிறத்தில், சராசரியான உடல் வாகுடனும், முகத்தில் எப்போதும் புன்னகை குடி கொண்டு அனைவரையும் அருகில் சென்று பேச தூண்டும் தோழமையான தோற்றத்துடன் முகத்தில் குறுஞ்சிரிப்புடன் ஒரு வெள்ளை சட்டை, கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து எளிமையாக நின்றிருந்தான் 'நம் கதையின் நாயகன் வருண நந்தன்.'


பதிலுக்கு புன்னகை செய்த அந்த நிருபர், “சுற்றி பார்த்தாச்சு சார்.. ரொம்ப அருமையா பண்ணிருக்கீங்க இந்த முப்பது வயசுலயே..!! எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கு சார்"


“சரி சார் வந்த வேலையை ஆரம்பிச்சுடலாம் என்றவன் ஒளிப்பதிவாளரிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டி சில பல அறிமுகங்களை பதிவு செய்துவிட்டு, நாம் இப்போ சந்திக்க போற அந்த மனிதர் வேறு யாரும் இல்லைங்க இந்த சின்ன வயசுலயே பாரம்பரிய நெல் ரகங்களை சோதனை முறையில் பயிரிட்டு, அதன் சிறப்புகளை அறிந்து, விவசாயிகள் மத்தியில் அதை கொண்டு சேர்த்து, இளைஞர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, குளங்களை தூர்வாரி, மழை நீர் சேமிப்பை பற்றி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறி, அதை சுற்று வட்டார கிராமங்கள் முழுவதும் அமைத்து, அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இன்னைக்கு செழிப்பாக இந்த பகுதியை மாற்றுனது மட்டும் அல்லாமல், பல வருடமாக தரிசாக இருந்த நிலத்தை வாங்கி அதை இன்னைக்கு விளைச்சல் நிலமாக மாற்றி இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குற மதிப்பிற்குரிய இளம் விவசாயி "திரு வருண நந்தன்" அவர்களை தான் இந்த வாரம் நம்ம நம்பிக்கை நட்சத்திரம் நிகழ்ச்சியில் சந்திக்க போகின்றோம்..” என்று மூச்சு விடாமல் பேசிமுடித்தான் அவன்.

கேமரா அவன் பக்கம் வருணன் பக்கம் திரும்பியது.“வணக்கம் சார்” என்றான் வருணன்.


“உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி “என்று நிருபர் கூற..


“எனக்கும் ரொம்ப சந்தோசம் சார்” என்று பதிலுக்கு புன்னகை செய்தான்.


“முதலில் இவ்வளவு மாற்றங்களை கொண்டுவந்ததுக்கு வாழ்த்துக்கள் என்றவன் உங்களுக்கு விவசாயத்தில் எப்படி ஆர்வம் வந்துச்சு..? “


“நன்றி.. எனக்கு விவசாயத்தில் ஆர்வம் எப்போ வந்ததுன்னு எனக்கே தெரியலை, ஏன்னா எங்க அப்பா ஒரு விவசாயி அவர் இரண்டு ஏக்கர் நிலத்துல விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தாரு, நானும் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் அவருக்கு அங்க போயி உதவி பண்ணுவேன் அப்படியே எனக்குள்ள அந்த ஆர்வம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். நான் வீட்ல இருந்ததை விட இங்கதான் அதிகமாக இருந்துருக்கிறேன் என்று கூறி புன்னகை செய்தவன், பிறகு என்னோட படிப்பை கூட வேளாண்மை சம்மந்தமாக தான் எடுத்து படிச்சேன்..”


“அது வரையிலும் எங்கப்பா செயற்கை உரங்களை பயன்படுத்துகிட்டு இருந்தாங்க.. நான் விவசாயம் சம்மந்தமாக நம்மாழ்வார் அய்யா காணொலியை பார்ப்பேன், சில பயிற்ச்சி வகுப்புகளில் கலந்துக்கிட்டு, அங்கு உள்ளவங்களுக்கிட்டே ஆலோசனை பெற்று அதன் மூலமாக இயற்க்கை முறையில விவசாயம் பண்ணனும்னு ஆர்வம் வந்தது, படிக்கும்போதே பாரம்பரிய நெல் ரகங்களை ஊர், ஊராக என் நண்பர்களுடன் சேர்ந்து விவசாயிகளிடம் இருந்து வாங்கி சேமித்து எங்க நிலத்துலையே அதை நடவு செஞ்சு பார்த்து அதனுடைய சிறப்பு எல்லாம் தெரிஞ்சுக்கிட்டோம்.."


"பிறகு நான் படிப்பை முடிச்சதும் வங்கியில் கடன் பெற்று இந்த தரிசு நிலத்தை வாங்கி பண்படுத்தி முழுவதும் இயற்க்கை முறையில் செஞ்சு பார்த்தேன், இதன் முழு பயனை அடைய எனக்கு ஐந்து வருடங்கள் ஆனது.ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன், எல்லாரும் திட்டுனாங்க ஏன் இந்த வேண்டாத வேலைன்னு, நான் யாருடைய சொல்லையும் கேட்காமல் என்னுடைய முயற்சியை செய்தேன் அதற்கு பிறகு அடுத்தடுத்த வருடங்களில் நல்ல பலன் கிடைச்சது"என்று கூறி முடித்தான்.

"நீங்க கிட்ட தட்ட முழு நேர விவசாயியாக பனிரெண்டு வருடங்கள் இருந்துருக்கீங்க அப்படித்தானே சார்? " அந்த நிருபன் கேட்க..

"ஆம்" என்பது போல் தலை அசைத்தான்.

அந்த நிருபன் கத்தரி தோட்டத்தை சுத்தி பார்க்க அங்கு மண்கலயங்களாக இருந்தது.. "என்ன சார் இங்க பானை வச்சிருக்கீங்க."

"அதுவா சார் இது வேப்பம் புண்ணாக்கு தண்ணீர் சார்.. கத்தரி செடி வச்ச ஒன்பதாவது நாள் வேப்பம் புண்ணாக்கையோ இல்லை, வேப்ப முத்துவையோ இடிச்சு தண்ணில போட்டு வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாலை நேரத்துல தெளிச்சா வேர் பூச்சி, தண்டு புழு, வேர் புழு இதெல்லாம் விழுகாமல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியோட வளரது மட்டும் இல்லாமல் நல்ல விளைச்சலையும் கொடுக்கும்" என்றான் வருணன்.
"ஓ.. அருமை சார்.. "என்க


"அது மட்டும் இல்லாமல் காய்ப்பு நின்றதும் அதை அப்படியே மடக்கி உழுது அதுல நடவு செய்யும்போது அதுக்கு இயற்கைக்கு உரமாகவும் பயன்படும்" என்றான்.


"அப்புறம் இது கருங்குறுவை நெல் தானே சார், இதை பத்தி சொல்லுங்க" என்க..


வருணன்.. "இது நூற்றி பத்து நாள் பயிர், நெல் கருப்பாகவும், அரிசி சிவப்பாகவும், நான்கு அடி வரை வளர கூடியது, அதிகம் தண்ணீர் நின்றாள் கூட எதுவும் ஆகாமல் தாங்கி வளரும் அதிக மகசூலையும் தர கூடிய நம்ம பாரம்பரிய நெல் ரகம், இதோட நெல் மணிகள் ஒரு வருடம் பூமியில் கிடந்தாலும் மட்கி போகாது, ஒரு வருடம் கழித்து கூட முழைக்கும் தன்மையுடையது அதற்க்கு எப்போது என்ன இயற்க்கை உரங்கள் இட வேண்டும் என அனைத்தையும் கூறினான். "


"நாம இப்போ சாப்பிடுற அரிசிக்கும் இதுக்கும் உள்ள வித்யாசம் என்ன சார்."


"நம்ம இப்போ அதிகமாக உபயோகிக்கிற வெள்ளை பொன்னி அரிசில பிரெட்டுல இருக்கிற அதே சர்க்கரை அளவு(100 கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கு)இதை மட்டும் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு எதிர் காலத்துல சர்க்கரை நோய் வர அதிகம் வாய்பிருக்கு, இதே நம் பாரம்பரிய அரிசியான இதுல மற்ற அரிசிகளை விட நான்கு மடங்கு இரும்பு சத்து, இரண்டு மடங்கு கால்சியம் சத்து, நல்ல கொழுப்பு நிறைந்திருக்குது, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் நம்ம மூட்டுகளையும் வலுப்படுத்தும், கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம், சாதாத்துடன் மூலிகை சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டு வந்தா யானைக்கால் நோய் மட்டுபடுத்தும், குஷ்ட நோய், விஷகடியை கூட போக்கும்" என்று மருத்துவ தகவல்கலையும் சேர்த்து கூறினான்

"மணக்கத்தை வாலன் கருங்குருவை மூன்றும்
பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் -இணக்குமுற
ஆக்கியுண்டாற் கரப்பான் ஆருமென்பர்கள் சிலர் பார்க்குள் இதயெண்ணிப் பார்."

மணக்கத்தை அரிசி, வாலன் அரிசி, கருங்குறுவை அரிசி, இம்மூன்றும் புண்ணையும், சிறு நஞ்சுகளையும் நீக்கும்

அவன் பயன்படுத்தும் பசுந்தாள் உரம், இயற்க்கை மண் புழு உரங்கள், ஜீவாமிர்த கரைசல், தேமோர் கரைசல், இயற்க்கை பூச்சி விரட்டிகள் பற்றியும் விளக்கியவன், தனது வாழை தோட்டம், கற்றாழை சாகுபடி அனைத்தையும் பயிர் செய்யும் முறையை விளக்கி சுற்றி காண்பித்தான்.



எல்லா இடத்திலையும் வளர கூடிய, அதிகளவு நீர் தேவை படாத கற்றாழை சாகுபடியை ஊக்குவித்து பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலமாக அறுவடை செய்து மதிப்பு கூட்டி ஜெல், ஷாம்பு, எண்ணெய், சோப்பு போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருவதை பற்றியும் கூறியவன்.

அடுத்து உயிர் வேலி மரங்கள் அமைப்பது பற்றியும் அது அமைப்பதற்கு விவசாயிகளுக்கு உதவி செய்வது பற்றியும், தன் கிராமத்தில் பள்ளி செல்லும் இளம் பருவதினற்கு அவர்கள் விருப்பத்தோடு வாரா வாராம் இயற்க்கை விவசாயம் கற்று கொடுப்பதை பற்றியும் விளக்கினான்.

ரொம்ப அருமையா விளக்குனீங்க சார் "எல்லாத்தையும் சொன்னிங்க உங்க குடும்பத்தை அறிமுகபடுதலையே என்று கேட்டான்"

"அதுக்கு என்ன சார் அறிமுகபடுத்திட்டா போச்சு"என்றவன்..

தனது தாயை கை வளைவுக்குள் கொண்டு வந்து "இவங்க என் அம்மா தாமரை, நான் எந்த முயற்சி எடுத்தாலும் எனக்கு துணையாக இருப்பாங்க இதுவரைக்கும் மறுப்பு சொன்னது இல்லை, என் அப்பா ஐந்து வருடம் முன்னாடி ஒரு விபத்துல இறந்துட்டாங்க. "


அடுத்து "வானதி" என்று அழைக்க.. அங்கு உள்ள பசுக்களுக்கு தண்ணீர் காட்டி கொண்டிருந்தவள் திரும்பினாள், ஐந்தரை அடி உயரத்தில் மா நிறத்தில், இடை வரை தாண்டிய நீண்ட கூந்தலும், வேல் போன்ற விழிகளுடன், பேரழகியாக இல்லாமல் இருந்தாலும் கிராமத்து பெண்களுக்கே உரித்தான பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்க தூண்டும் தெகிட்டாத அழகுடன் இருந்தவள் "இதோ வரேண்ணா"என்றவள் வருணன் அருகில் வந்தாள்.


"இவங்கதான் சார் என் குட்டி தங்கச்சி பேரு வானதி, கொஞ்ச நாள் ஒரு மென்பொருள் நிறுவனத்துல வேலை பார்த்தாங்க, எங்களை விட்டு இருக்க முடியலைன்னு விட்டுட்டு வந்துட்டாங்க" தங்கையை பார்த்து குறும்பாக சொல்ல, தன் அண்ணன் தன் மானத்தை வாங்கியதில் அவனை பார்த்து பொய்யாக முறைத்தாள்.


"ஆஹா.. அவ்வளவு பாசமலரா நீங்க, அப்புறம் கல்யாணம் ஆனதும் நீங்க உங்க அண்ணனை விட்டு பிரிஞ்சுதானே இருக்கணும் அப்போ என்ன பண்ணுவீங்க"என்று நிருபன் கேட்டான்.


அதுவா சார் என்று சொல்ல வந்தவன்.. திடீர் என்ற கேட்ட வண்டி சத்தத்தில் திரும்பியவன், "அதோ வரான் பாருங்க அவன் என் சொந்தக்காரன் இந்த ஊருதான் என் தங்கச்சி என்னை விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டாள், நானும் அவளை விட்டு இருக்க மாட்டேன் அதான் ஒரே வீட்ல பெண் எடுத்து பெண் கொடுக்க போறோம், அதனால் அவன் தங்கச்சிய நான் கட்டிக்க போறேன், என் தங்கச்சிய அவன் கட்டிக்க போறான் என்று சொல்லி அருகில் வந்தவனை வெற்றி மாறன் என்று அறிமுகபடுதினான் வருணன்." இன்னும் சிலவற்றை கேட்டு தெரிந்துகொண்ட அந்த நிருபன்.



"வெரி இன்ட்ரெஸ்டிங் சார் உங்களை சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி இந்த இயற்க்கை விவசாயத்தை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்ல என்னோட வாழ்த்துக்கள் சார்.


கடைசியா நிகழ்ச்சியை பார்த்துகிட்டு இருக்கிறவங்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க..


நிகழ்ச்சியை பார்க்கிறவங்களுக்கு மட்டும் இல்லை ஒட்டு மொத்த நாட்டுக்குமே சொல்ல விரும்புறது, நமக்கு பசிக்கு உணவு கொடுக்கிற தாயான இந்த மண்ணை ரசாயன உரங்களை போட்டு மலடாக்காதிங்க,இந்த மண்ணுல விளைஞ்சத சாப்பிட்டு பெண்ணும் மலடாகுறா, ஏன் தாய் பாலு கூட நஞ்சா மாறி போய்டுச்சு, ஒரு கார்ப்ரேட் கம்பெனிகிட்ட போய் சொத்தை விதைகளையும், உரங்களையும் வாங்கி நிலத்தை நாசம் செய்யாமல், நம்ம பாரம்பரிய விதைகளையே பயிரிட்டு மண் நலத்தையும் பேணுங்க, உங்கள் உடல் நலத்தையும் பாதுகாத்துக்கங்க அதனால் எல்லாரும் நம்ம பாரம்பரிய வேளாண்மையான இயற்க்கை வேளாண்மைக்கு திரும்புங்க, இன்னொரு பசுமை புரட்சி என்ற ஒன்று வந்தால் அது இயற்க்கை உரங்களை சார்ந்த விளைச்சலை முன்னிறுத்திதான் வர வேண்டும் என்று கூறியதுடன் அந்த நேர்காணலை முடித்தனர்."



நேர்காணல் நடந்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நேர்காணலை ஒரு ஜோடி விழிகள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பார்த்து கொண்டிருந்தது.


மலர்வாள்..!!

வணக்கம் நண்பர்களே..

எல்லாரும் எப்படி இருக்கீங்க.. என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே... கதையை தொடர்ந்து அடுத்த கதையோடு வந்துவிட்டேன், இந்த கதைக்கும் உங்களது ஆதரவை தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்.

முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

நன்றி.

கருத்துத் திரி👇


 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-2



ஒரு வாரம் கடந்த நிலையில் வருணனுக்கு வேலைகள் வரிசை கட்டி காத்து கொண்டிருந்தது.பல்வேறு பயற்சி வகுப்புகளுக்கு சென்று விவசாயிகளுக்கு இயற்க்கை விவசாயம் பற்றி பயிற்சிகள் கொடுக்கவும்,உயிர் வேலி மரங்கள் அமைப்பதற்கு உதவுவதும், தன் நிலத்தில் உள்ள வேலைகளை பார்க்கவும், வார இறுதியில் இளம் பருவத்தினருக்கு தனது நிலத்தில் வைத்தே செய்முறை விளக்கமளித்து கொண்டிருந்தான்.


இன்று அவனுடைய நேர்காணல் ஒளிபரப்பாக இருந்ததால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காகா வெற்றி தனது தங்கை மலருடன் வந்து சேர்ந்தான்.



மலர் விழி பெயரை போன்றே எப்போழுதும் வாடாத மலராக, குறும்பு புன்னகையுடன், சிறு வயதிலிருந்தே வருணனை மச்சான்.. மச்சான்.. என்று சுற்றி வருபவள். வருணன் மேல் அவள் கொண்ட விருப்பத்தின் பொருட்டு, வெற்றியும் தங்கையின் மீது கொண்ட பாசத்தால்.. வருணனின் ஒரே வீட்டில் திருமணம் செய்து ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்ற சட்டத்திற்கு ஒத்துக்கொண்டு நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் வரை வந்து நிற்கிறது.



தனது அண்ணனின் வண்டியில் இருந்து இறங்கியவள்.. "அத்தே.. அத்தே.. "என்ற அழைத்து கொண்டு ஆரவாரத்தோடு உள்ளே வந்தாள் மலர்.

"ஸ்ஸ்.. சப்பா.. இந்த வீட்ல உள்ளவங்களுக்கு நீ இப்படி கத்தி கத்தியே ஒரு காது கேட்காமல் போச்சு, இன்னொரு காதையும் அதே மாதிரி செவிடாக்க திட்டம் போட்டுட்டே போலே.. அப்போதானே கல்யாணம் முடிஞ்சதும் உன் மாமியாரே எப்படி திட்டினாலும் காதுல விழாது" என்று காதில் விரலை வைத்து குடைந்து கொண்டே அவள் அருகில் வந்தாள் வானதி.


அவளை போலியாக முறைத்தவள்.. " இங்க பாரு புள்ள.. என்னோட நாத்தனாறாக போறென்ற ஒரு காரணத்துக்காக உன்னை எதுவும் பண்ணாமல் சும்மா விடறேன், இல்லை கல்யாணம் நடந்த அடுத்த செகண்டே அண்ணியார் கொடுமையை ஆரம்பிச்சிடுவேன் ஜாக்கிறதே" என்று மலர் மிரட்டினாள் .


"ஓஹோ.. அவ்வளவு தூரம் அம்மணி வந்துட்டிகளோ..? என்னை தொடணும்னா என் அண்ணனை தாண்டி தான் தொடணும்"என்று வீர வசனம் பேச..

"அடி ஆத்தி உனக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கா.. கல்யாணம் ஆகட்டும் என் மச்சான இந்த முந்தானையில முடிஞ்சு வச்சுக்கிட்டு உன்னை ஓட ஓட துரத்துறேன் பாரு"என்று தன் தாவணியில் முடிந்து காட்டி சவால் விட்டாள் மலர்.


"மலரு ரொம்ப பகல் கனவு காணாதே புள்ள அது என்னைக்கும் என் உடன் பிறப்பு கிட்டே நடக்காதாக்கும், அதை உன் மண்டையில ஏத்திக்க அண்ணியாரே"என்று வானதி கூற..

"உனக்கு ஏண்டி இந்த நல்ல எண்ணம் என் மச்சான முந்தானையில முடிஞ்சு வச்சுக்கிறதுக்கு பகல் கனா காணாதேன்னு சொல்றவ, நீ வேணா என் அண்ணன முந்தானையில முடிஞ்சு வச்சுக்கோ நான் எதுமா சொல்ல போறேன்?" என்க
அவள் கூறியதில் வானதி முகம் ஒரு நொடி இறுகி பின் சகஜ நிலைக்கு திரும்பியது.. இவர்களின் இந்த அலப்பறையை நிறுத்த சமையல் அறையிலிருந்து வெளியே வந்தார் தாமரை.

"இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டிகளா ரெண்டு பேரும்.. எப்போதான் ஓயுமோ உங்க பஞ்சாயத்து.. ஒரு வூட்ல ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு எப்படி என் மவனும், மறுமவனும் சமாளிக்க போறாகளோ ?" என்று கூற...


அவர் புலம்பலில் சிரித்தவர்கள், அவர் அருகில் வந்து இரு புறமும் கட்டிகொண்டனர் இரு பெண்களும்..

"அத்தே இது சும்மா.. எங்களுக்கு பொழுது போக வேண்டாமா அதேன் இப்படி சும்மா ஒரண்டை இழுக்கிறது , நாங்க ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்குவோமே தவிர பிரிய மாட்டோம்"என்று மலர் கூறினாள், அவர்களின் இந்த ஆசை என்றும் நிறைவேறாது என்பதை அவர்களிடம் யார் சொல்வது..


இவர்களின் பிணைப்பை பார்த்து, தாமரைக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அப்பொழுது வருணனும், வெற்றியும் உள்ளே வர இந்த காட்சி அவர்களின் கண்ணில் பட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தனர்.


"என்ன மா.. இன்னைக்கும் இந்த வாலுக ரெண்டும் சேட்டையை கொடுத்து உன்னை இம்சை பண்ணுதுகளா "என்று கூறி கொண்டே உள்ளே வந்தான் வருணன் உடன் வெற்றியும் வந்தான்.

மெல்லிதாக புன்னகைத்தவர் "ஆமா கண்ணா.." தாமரை எப்போதும் வருணனை செல்லமாக அப்படித்தான் அழைப்பார்.. "ஆனா இவுக ரெண்டு பேரும் இப்படி பண்ணாட்டியும் நம்ம வீடே கலகலன்னு இருக்காதே.." எனக்கும் பொழுதும் போகாது என்று இரு பெண்களையும் கட்டிகொண்டார்.


"அத்தே இந்தாங்க மச்சான் கொடுத்த பேட்டி இன்னைக்கு டீவில வருதுல்ல அந்த சந்தோசத்தை கொண்டாடதேன் கேசரி செஞ்சு எடுத்தாந்துருக்கேன் " என்று ஒரு தூக்கை கொடுத்தாள் மலர்.


" அண்ணே வாண்ணே.. எதுக்கும் மெடிக்கல்ல ரெண்டு மாத்திரை வாங்கிட்டு வருவோம்."


"எதுக்கு டா வானு மாத்திரை.." என வருணன் கேட்டான்.

"எண்ணனே புரியாம பேசுற இதை சாப்பிட்ட பொறவு எப்படியும் ஆஸ்பத்திரிக்குதேன் போவணும்.. முன்னாடியே வாங்கி வச்சுக்கிட்டா அங்க போக தேவை இல்லை.பொறவு இதை தின்னுட்டு வயித்துக்கு ஏதாவது சேதாரம் பண்ணி, வீட்டுக்கும், காட்டுக்கும் நடக்க வேண்டியதா இருக்கும். ஏற்கனவே கொரோனா அறிகுறில இதை வேற சேர்த்திருக்காகளாம் நமக்கும் கொரோனானு புடிச்சுட்டு போயிரப்போறாகா" என்று கிண்டல் அடித்தாள் வானதி.



அவள் பேசியதில் வருணன் சிரிக்க..
மலரோ அவளை முறைத்து கொண்டு.. "ஏண்டி உன்னை மாதிரின்னு நினைச்சியா? படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லிட்டு அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து அத்தே சமைக்க சொன்னா படிக்கிறேன்னு சொல்லி தப்பிச்குவே, ஆனா அங்கேயும் போயி படிக்காம கும்பகர்ணி கணக்கா நல்லா உறங்குவே, படிப்பு முடிஞ்சதும் இங்க மாட்டு சாணிய அள்ள சொல்லுவாகன்னு மெட்ராசுக்கு ஓடிட்டே.. அங்கேயும் தனியா சமைச்சு சாப்பிட முடியலைன்னு என் அண்ணண விட்டு இருக்க முடியாதுனு பாசமலர் படம் ஓட்டி வேலைய விட்டு வந்து என் கிட்ட வம்பு வளர்க்குறே, நான் எல்லாம் படிப்பையும் படிச்சுக்கிட்டு என் மச்சான் வயிறும், மனசு நிறையணும்னு விதவிதமா சமைக்க கத்துக்கிட்டேனாக்கும்" என்று அவளும் சண்டைக்கு கிளம்பினாள்.



அவள் மெட்ராஸ் என்ற வார்த்தையில் மனதில் வலி ஏற்பட.. அதை மறு நிமிடமே 'நினையாதே மனமே' என்று உதறி தள்ளி முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாள். அவள் முகத்தில் வந்து போன வலியை யார் கவனித்தார்களோ இல்லையோ வெற்றி கவனித்து தன் மனதில் குறித்து கொண்டான்.


இவர்கள் விட்டாள் பேசிகொண்டே செல்வார்கள் என்பதை உணர்ந்த தாமரை "சரி, போதும் புள்ளைகளா நீங்க வம்பு வளர்த்தது.. மணியாயிடுச்சு நிகழ்ச்சி போட்டுறுவான்" என்று திசை திருப்ப அனைவரும் ஆர்வத்துடன் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு குழுமினர்.

அதே வேளையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சென்னை மாநகரத்தில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் போட் கிளப் சாலையில் பிரம்மாண்டமாக நின்றது அந்த நான்கு அடுக்கு மாளிகை..
முன்புறம் பச்சை பசேல் என்று பலவகையான மரங்களும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், நாசி வழியே புகுந்து மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் நறுமணத்தோடு குண்டு மல்லி கொடிகள், முல்லை கொடிகள், செவ்வந்தி பூக்கள், செம்பருத்தி, அரளி பூ , டெய்சி பூக்கள், சங்கு பூ, பல வண்ண ரோஜா செடிகளும் பூத்து குலுங்க அழகிய தோட்டம் அமைக்கபட்டிருக்க அதை பராமரிக்கும் வேலைக்காரர்கள் தங்கள் பணியை செவ்வென செய்து கொண்டிருந்தனர்.


அந்த வீட்டின் போர்டிகோவில் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்கள் வரிசையாக நிற்க அவர்களின் செல்வ செழிப்பை அது சொல்லாமல் சொல்லியது.
வீட்டின் உள்ளே உள்ள வேலைக்காரர்கள் குண்டூசி விழுந்தால் கூட அந்த சத்தம் எதிரொலிக்கும் அளவிற்கு அமைதியாக தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர்..அந்த வீட்டை ஆளும் மகாராணிக்கு பயந்து.


வேலைக்காரர்கள் காலை உணவு உண்ண சாப்பாட்டு மேசையில் பலவித பதார்த்தங்களை அடிக்கிவைத்து அமைதியாக அவளின் வரவுக்காக காத்து கொண்டிருந்தனர்.



அவர்கள் எதிர் பார்த்துகொண்டிருந்தவளோ ஐந்தரை அடி உயரத்தில், சிவந்த நிறத்தில், பிறை போன்ற நுதழும், அழகான வில் போன்ற புருவங்களும், எடுப்பான நாசியும், அதற்க்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக மூக்குத்தி வளையமும், எவரையும் எடைபோடும் கூரிய விழிகளும், இயற்கையில் சிவந்த அதழ்களும், தோள் வரை வெட்டி விட்ட கூந்தலை போனிடைல் இட்டு, பிசினஸ் சூட் அணிந்து செதுக்கி வைத்த நவீன பல்லவன் சிற்பம் போல் மாடி படிகளிலிருந்து டொக், டொக் என்று அவள் அணிந்திருந்த ஹீல் ஒலி எழுப்ப வந்தவள் முகத்தில் மருந்துக்கு கூட புன்னகை இல்லாமல் உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருந்தது . பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தொழில் உலகில் பெண் சிங்கமாய் கர்ஜித்து எதிரிகளை தன் கண்ணசைவில் ஆட்டம் காண வைக்கும்" தி கிரேட் பிசினஸ் வுமன் மாயாவதி."

கீழே வந்தவள் சாப்பாட்டு மேசையில் உணவை அடுக்கி கொண்டிருந்த பெண்ணை சொடுக்கிட்டு அழைத்தாள்.

'அய்யயோ..! இன்னைக்கு ஏன் இந்தம்மா நம்மல கூப்பிடுறாங்கனு தெரியலையே..? நான் வேற வேலைக்கு புதுசு' என்று நினைத்து கொண்டே அருகில் வர.. அந்த பெண்ணிடம் எதுவும் கேட்காமல் 'பளார்' என்று அவர் கன்னத்தில் ஒங்கி அறைந்திருந்தாள் மாயா.

அவள் அடித்த அடியில் தலை கிர்ரென்று சுத்த நின்று கொண்டிருந்தவளிடம், "ஒழுங்கா வேலை பார்க்க தெரியாதா..? இப்படித்தான் வயசானவங்க இருக்கிற வீட்ல, மாடி படில எண்ணையை ஊத்தி வைக்கிறதா..? யாரவது வழுக்கி விழுந்தா என்ன பண்றது. நீ புதுசுங்கிறதால ஒரு அடியோடு விடறேன் இல்லை தொலைச்சு போட்டுருவேன்" என எச்சரித்துவிட்டு, வழக்கம் போல் பூஜை அறைக்கு சென்றாள்.அங்கு பல தெய்வங்களுக்கு மத்தியில் நிழல் படத்தில் இன்னொரு தெய்வமாய் மாலை இட்டு, அழகாக சிரித்து கொண்டிருந்தார் மாயாவின் தாய் அகிலா, அப்படத்தின் முன் கண் மூடி சில நொடிகள் நின்றவள், பின் உணவு மேசைக்கு வந்தாள்.


அவள் அவ்விடத்திற்கு வந்த பிறகு ஏற்கனவே அமைதியாக இருந்த இடம், இப்போது ஆழ்ந்த நிசப்தத்தை தத்தெடுத்து கொண்டது. தனது இருக்கையில் அமர்ந்தவளுக்கு உணவு வைக்க பட, அதை சாப்பிட்டு கொண்டே நியூஸ் சேனலை ஒவ்வொன்றாக மாற்றி கொண்டு ஒரு சேனலில் வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

"குட் மார்னிங் மாயா"என்ற காலை நேர உற்சாகத்தோடு அவள் எதிர் இருக்கையில் அமர்ந்தார் மாயாவின் தந்தை ராஜவேலு.


பதிலுக்கு" குட் மார்னிங் டாட்" என்றவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.


அப்போது பிரபல செய்தி சேனலில் வருணன் நேர்காணல் ஒளிபரப்பாகி தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தி கொண்டிருந்தான். 'காலங்காத்தாலையே வேற நியூஸ் இல்லாத மாதிரி இதை போடரானுங்க' என நினைத்தவள் அந்த சேனலை மாற்றுவதற்காகா எதிர்சையாக நிமிர்ந்தவள் கண்ணில் இந்த காட்சி பட.. அவள் விழிகள் அங்குமிங்கும் நகராது, இமைக்காது அக்காட்சியை பார்த்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் ராஜவேலுவிற்கு அழைப்பு வர, அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதால் அந்த நேர்காணலை பார்க்க தவறிவிட்டார்.



நேர்காணலை முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் கண் கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தவள்
சில நிமிடங்கள் கழிய ஒரு இலக்கத்திற்கு அழைத்து "இந்த நியூஸ் சேனலை பாரு" என்று மட்டும் சொல்லிவிட்டு போனை அணைத்து வைத்தாள்.


ராஜவேலு பேசிவிட்டு மீண்டும் வந்தமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.எதுவும் கேட்டால் மட்டுமே பதில் சொல்லும் குணம் உள்ளவள் என்பதால் அந்த நேர்காணலை பற்றி தன் தந்தையிடம் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டாள்.


"டாட்.."

"சொல்லு மா.."

"நான் கொஞ்ச நாள் வெளியூர் போறேன்.."

"வெளியூரா..!! இப்போ எதுக்குமா, ஏதாவது வேலையா போறியா..? ஏற்கனவே, ஏகப்பட்ட வேலை இங்கே இருக்கேம்மா.."


"வேலை சம்மந்தமா இல்லை, எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுது கொஞ்ச நாள் இந்த தொழிலை எல்லாம் உங்க கிட்ட விட்டு போறேன் நீங்க பார்த்துக்கோங்க."


"உடம்பு எதுவும் சரி இல்லையாம்மா.."பதட்டதோடு அவர் கேட்க..


அவளோ " நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்" அவரிடம் முகத்தில் அடித்தார் போல் கூறினாள்.


அவரும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாது.இது வரையிலும் தொழிலை பற்றி மட்டுமே சாப்பிடும்போதும், ஏன் தூங்கும்போதும் கூட சிந்திப்பவள், திடீர் என்று அதை எல்லாம் அவரிடம் பார்த்துக்கொள்ள சொல்வதை எண்ணி சில நொடிகள் யோசித்தவர்.

"சரி மா இதுக்கு மேல நான் சொன்னால் நீ கேட்கவா போறே..? உன் விருப்பம் எதுவோ அதையே செய்.. எங்கம்மா கிளம்புற யூரோப்பா..? "


"ஆமா, வர மூணு மாதம் ஆகும் என்னை அடிக்கடி கூப்பிட்டு தொந்தரவு பண்ணாமல் எல்லாத்தையும் நீங்க பார்த்துக்கோங்க.. எதுவும் அவசரம்னா அவன்கிட்ட கேட்டுக்கோங்க" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாள்.

"பார்த்தியா அகிலா இவளை! உன் பையன்தான் ஐந்து மாதமாக அவன் பிசினஸ என் தலையில கட்டிட்டு, மும்பையில தொழில ஆரம்பிச்சு அங்க போய் உட்கார்ந்துருக்கான்.மாயாவும் இப்போ எல்லாத்தையும் என் தலையில கட்டிட்டு போறா.. நீயும் நிம்மதியா போய் சேர்ந்துட்ட, நான் மட்டும் இந்த வயசான காலத்துல ஓய்வு இல்லாமல் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தனியா இருக்கணும் என்னவோ போ" என்று தன் மனைவி தன் முன்னால் இருப்பது போல் சலித்து கொண்டார்.



அதே சமயத்தில் அந்த நிகழ்ச்சியை, உடலில் வியர்வை சொட்ட.. சொட்ட.. கைகளால் திரையில் தெரிந்த உருவத்தின் வடிவத்தை அளந்து கொண்டு,கண்களில் கனலோடு பார்த்துகொண்டிருந்தான் அவன்.



மலர்வாள்..!!


ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇


 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-3


நமது வர்த்தக தலைநகர் மும்பையில் பணக்காரர்களும், நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பாந்தராவில் விலை உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி வீடு ஒன்றில் ஆறடி உயரத்தில், சிவந்த நிறத்தில், கன்னியர் மனதை களவாடும் அனைத்து அம்சங்களும் பொருந்தி வர, உடலில் வியர்வை ஆறாய் வெற்று மேனியில் பெருக்கெடுக்க, தொங்க விடபட்டிருந்த பஞ்சிங் பாகில் கால் நுனிகள் தரையில் பட்டும் படாமல் நர்த்தனம் ஆட, இரு கைகளையும் மடக்கி குத்தி கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். மாயாவின் பாசமிகு அண்ணன் ஆனால் தொழில் உலகிற்கு இவர்கள் அண்ணன் தங்கை என்பது யாருக்கும் தெரியாது.ஆண்கள் என்றாலே எட்டி நின்று பழகுபவளுக்கு அவள் தந்தையும், அண்ணனும் மட்டுமே விதி விலக்கு.அதுவும் அண்ணனுடன் மட்டுமே அதிகம் நெருக்கம் அதுக்கு காரணமும் உண்டு.

தொழில் உலகில் தனது தடத்தை பதித்து வெற்றிகரமாக தொழிலில் சாதனை செய்து கொண்டிருப்பவன், எதிரிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் துவம்சம் செய்யும் வல்லமை பெற்றவன் அப்பேற்பட்டவன் ஒரு பெண்ணால் சென்னையில் இருந்து ஓடிவந்து தனது இருப்பிடத்தையும், தொழிலையும் இங்கே அமைத்து கொண்டு கோலோச்சி கொண்டிருப்பது என்ன விந்தையோ..?


ஹர்ஷா அடுத்த இரண்டு மணி நேரம் பிற உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, வெண்ணிற துவாளையால் தன் மேனியில் வழிந்த வியர்வையை துடைத்துகொண்டிருக்க.. அவன் அலைபேசி அலறியது எடுத்து பார்த்துவிட்டு காதில் வைத்தவன்..


"..........."


"எதுக்கு" என்று கேட்பதற்கு அந்த பக்கம் அழைப்பு துண்டிக்கப்பட, யோசனையுடன் அந்த நியூஸ் சேனலை வைத்தவன் அதில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிகழ்ச்சியை பார்த்தவன் ஒரு நிமிடம் தன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ந்தான். பிறகு முகத்தில் கோபம் கொப்பளிக்க தொலைக்காட்சி பெட்டியின் அருகில் சென்று வானதியின் உருவத்தில் கையை வைத்து, அவள் வடிவத்தை கைகளால் அளந்துகொண்டே..


"கல்யாணம் பண்ணிக்க போறியா..?.
உன்னால நான் அந்த கம்பனிக்கு கூட போக பிடிக்கமால் எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்துருக்கேன். நீ அங்க கல்யாணதுக்கு தயாராகிட்டுருக்கியா..!! என்ன சொன்னே..? என் தங்கச்சிய உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னாதான் என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேல்ல.."


"நான் உன் பட்டிக்காட்டு அண்ணனுக்கு என் தங்கையை கட்டிக்க என்ன தகுதியிருக்குன்னு கேட்டதுக்கு.. என்னை வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சுட்டு போய்ட்டேல்லடி. இப்போ சொல்றேண்டி உன் கல்யாணத்தன்னைக்கு உன் கழுத்துல ஏறுற தாலி நான் கட்டுறதாதாண்டி இருக்கும் இதை யாராலயும் மாத்த முடியாது. நீ என் காதலை புரிஞ்சுகிட்டு என்னைக்காவது ஒரு போன் பண்ணி என்ன விரும்புறேன்னு சொல்லுவேன்னு ஆசையா காத்துக்கிட்டுருந்த என் மனதை நோகடிச்சுட்டேல்ல. அது கூட பரவால்ல ஆனால் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது என் மனசை காயப்படுதுன உன்னை மன்னிக்கவே மாட்டேண்டி" பல்லை கடித்து கொண்டு கூறியவன்.. "இனி நீ உன் அண்ணன் கூட ஒரே வீட்ல இருக்கணும்னு நினைக்கிறத மட்டும் நான் என்னைக்குமே நடக்க விடமாட்டேண்டி இதுதான் உனக்கு நான் கொடுக்கிற சரியான தண்டனை"என வன்மமாக நினைத்து கொண்டான்.

பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில் வருணன் தன் வாழை தோட்டத்திற்கு ஏழு நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்த கரைசலை தண்ணியோடு விடுவது வழக்கம் என்பதால் இன்றும் அது போல் விட்டு கொண்டுருந்தவன்... "பங்கு" என்று சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.
அடிக்கின்ற வெயிலுக்கு சற்றும் பொருந்தாத ஜெர்கினை அணிந்து கொண்டு, கண்ணில் குளிர் கண்ணாடியுடன், தலைமுடிக்கு பச்சை நிறத்தில் கலர் செய்து கொண்டு ராமராஜன் போடும் பஞ்சு மிட்டாய் கலரில் பாண்ட் உடுத்தி கொண்டு ஹி... ஹி... என்று சிரித்து கொண்டு நின்றிருந்தவனை கண்டவன்..

"டேய் செம்பட்டை, பங்காளி எப்படா சிங்கப்பூர்ல இருந்து வந்தே..? வர்றேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலையே.. திடிர்னு வந்து நிக்கே.."

"எல்லாம் ஒரு சூர்ப்ரெஸ் தான் பங்காளி.."

"டேய்.. என்னா பிரசு.."

"அதான் டா.. இன்ப அதிர்ச்சி.. உனக்கு இங்கிலிஷ் தெரியாதா..? என்னத்தே காலேசுக்கு போய் படுச்சுயோ"


"விளங்கிடும் டா செம்பட்டை, என்னடா செம்பட்டையா இருந்த உன் முடி பச்சை நிறத்துல இருக்கு. அப்புறம் என்ன அடிக்கிற வெயிலுக்கு இந்த மாதிரி உடுத்திருக்கிற.. உள்ள வேகளே..? "


"இனிமேட்டு ஊருக்குள்ள ஒரு பயலும் என்னை செம்பட்டைன்னு சொல்ல கூடாது அதேன் இப்படி. பொறவு இந்த மாதிரி உடுப்புல ரெண்டு நாளைக்கு ஊருக்குள்ள திரிஞ்சாதானே ஷோக்கா இருக்கும்.. வெளிநாட்டுல இருந்து வந்தவன்னு தெரியும். அதேன் ஊருல அத்தை மவ, மாமா மவ எண்ணெய் தலை இளஞ்சியம், கருவாட்டு மண்டை கருவாச்சி இவளுக வீட்டு பக்கமெல்லாம் ஒரு தடவை போயிட்டு வந்தேன் தக்காளி அப்பாவும் கண்டுகிட மாட்டேங்குறாளுகடா வருத்தமாக சொல்ல.. அதை விடுடா அவளுகள அப்புறம் கவனிச்சுக்கிறேன் வீட்ல அம்மா, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காக? "

"ம்ம்.. எல்லாம் நல்லா இருக்காக டா."

"அப்புறம் உனக்கு கல்யாணம் கூடிடுச்சுன்னு கேள்வி பட்டேன். அண்ணன், தங்கச்சி ரெண்டு பேரும் பிடிச்ச பிடில ஒரே வீட்ல வாக்கப்பட போறியே.. அசத்துடா பங்காளி.."

மெல்லிதாக சிரித்த வருணன் "இதற்க்கு பொறவு திரும்ப வெளி நாட்டுக்கு போறியா இல்லை இங்கையே காடு கரைய பார்க்க போறியா.."


"அஞ்சு வருஷம் உழைச்சதே முதுகு தண்டு தேஞ்சு போய் கெடக்குது இனிமேட்டு இங்கதேன் விவசாயத்தை பாத்துகிட்டு.. உன் கூட ஊரை சுத்திகிட்டு இவளுக ரெண்டு பேருல எவளையாவது கால் விழுந்தாவது சரி கட்டி கல்யாணத்தை பண்ணி, இங்கையே காலம் தள்ள வேண்டியதுதான் பங்காளி."


"அதுக்கு என்ன பங்கு உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லுவாகளா, நாளைக்கே வேணும்னாலும் மாமா கிட்ட நான் பேசுறேன்.."என்று வருணன் கூற..
"இதுக்கு தாண்டா என் பங்கு வேணும்றது " என சிலாகித்தான் செம்பட்டை.


மாயா தனது அலுவலகத்தில் அவள் கேட்ட தகவல் அனைத்தும் தாங்கிய கோப்பை ஒவ்வொரு பக்கமாக திருப்பி பார்த்துக்கொண்டிருந்தவள் 'இந்த திட்டத்தை எப்படி செயல் படுத்தி அவர்கள் குடும்பத்தை எவ்வாறு நெருங்க வேண்டும் 'என்று சிந்தனையில் இருக்க.. அவள் அலைபேசி அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக அழைத்தது.அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்..


"சொல்லு ஹர்ஷா"

"............"

"இல்லை நான் இப்போ தனியா போறேன்.."


".............."


"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீ நான் சொல்லும்போது வந்தா போதும். இப்போ அவள் உன்னை பார்த்தாள் நம்ம திட்டம் நடக்கமால் போக கூட வாய்ப்பிருக்கு.."

"............."

"முதல்ல நம்ம இடத்துக்கு கூட்டிட்டு வரணும் அப்பறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.."

"................"

"அவங்களுக்கு தெரியாது.."

"................"

"அவங்களுக்கு சொல்ல வேண்டாம் நம்ம திட்டம் வெற்றியடையட்டும் அப்புறம் சொல்லிக்காலாம். இப்போ சொன்னால் உடனே கிளம்பி வந்துடுவாங்க.."

"..............."

"அவசரப்பட கூடாது.ஒவ்வொரு காயாதான் நகர்த்தனும்"

"................"


"நாளைக்கே போறேன்.. அங்க போய்ட்டு என்ன நிலவரம்னு உனக்கு சொல்றேன்.. ம்ம் பை"என்று அலை பேசியை அணைத்தவள் தனது இருக்கையில் சாய்ந்து கொண்டு கண் மூடியவள்.. ஒரு முடிவு எடுத்தவளாக அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு பிரபல மருத்துவமனையில் முன் தனது காரில் வந்து இறங்கி உள்ளே சென்றாள்.

இரவு வேளை தென்றல் காற்று சுகமாக மேனியை தீண்டி இன்பத்தை தந்து கொண்டிருக்க, மொட்டை மாடியில் நின்ற வானதியின் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகளாக வழிந்து கொண்டிருந்தது..


'ஏன் அப்படி என் அண்ணனை பத்தி பேசுனீங்க..? நீங்க உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா உங்க தங்கச்சிய தர முடியாதுன்னு சொல்லிருக்கலாம் ஆனால் இப்படி என் அண்ணனை அவமானப்படுத்திருக்க கூடாது.நீங்க மட்டும் பட்டிக்காட்டு பொண்ண கட்டிக்கலாம் ஆனால் என் அண்ணே உங்க தங்கச்சிய கட்டிக்ககூடாது அப்படித்தானே..? "

"நீங்க என் கிட்ட நேரடியா கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்ட போது உங்க மேல எனக்கு துளி அளவு கூட காதல் இல்லை. நான் வேலை பார்க்குற கம்பனிக்கு முதலாளியாத்தான் தெரிஞ்சிங்க.."
"எனக்கு என்னைக்கு கல்யாணம் அப்படின்ற பேச்சை ஆரம்பிச்சாங்களோ அன்னையிலிருந்து உங்க நினைவு என் மனசு ஆழத்திலிருந்து கீறி புண்ணாக்குது. ஆனால் என் அண்ணனை அவமானப்படுத்தி பேசுன உங்களை தேடி நான் என்னைக்கும் வர மாட்டேன்.நான் பிடிவாதம் பிடிச்சதாலதான் என் அண்ணன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுருக்கான். இல்லை கல்யாணமே வேண்டாம் அப்படின்ற முடிவுல இருந்தான்.. பாவம் மலர் அவ அண்ணனே ரொம்ப நாளா மனசுல நினைச்சுகிட்டு இருக்கா இந்த கல்யாணம் மூலமா அவள் வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்' என்று மனதில் பேசி தனக்கு தானே ஆறுதல் கூறி கொண்டிருந்தாள்.


அடுத்த நாள் காலையில் தோட்டத்தில் வேலை குறைவாக இருந்ததால் அதை முடித்து விட்டு வருணனும், செம்பட்டையும் பேசி கொண்டே நிலத்தை பார்வையிட்டு கொண்டு வந்தனர்.

அந்த சமயத்தில் பக்கத்து நிலத்தில் மண்டி கிடந்த கரு வேல மரங்கள், முட் செடிகளை அந்த இடத்தில் இருந்து அப்பறம் படுத்தும் வேலை துரிதமாக நடந்து கொண்டிருந்தது.


"என்ன பங்கு.. பங்காளி பிரச்சனையில பல வருசமாக கோர்ட்ல கேஸ் இழுத்துக்கிட்டு கிடக்குது.. இவங்கே நிலத்தை சீர் படுத்திகிட்டு இருக்காங்கே என்ன விஷயமாக இருக்கும்? "என்று செம்பட்டை கேட்க..

"அதான் பங்கு எனக்கும் தெரியல., இரு கேட்போம்" என்றவன் அந்த நிலத்திற்கு இருவரும் சென்றனர்.

"என்ன மாரி முத்து மாமா.. கேஸ் எல்லாம் முடிஞ்சுருச்சா விவசாயம் பண்ண போறிகளா..?"

"அட வாங்க மாப்பிள்ளையாலா... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.."

"நீங்க ஊர பக்கம் வந்தாதானே மாமா பாக்கிறதுக்கு."


"என்ன மாப்பிளை பண்ண சொல்லறீக, இந்த நில பிரச்சனையால விவசாயம் பண்ண முடியலன்னு ஊர விட்டு போனோம். அங்கையே ஒரு தொழில ஆரம்பிச்சு வீடு எல்லாம் கட்டி அதான் இருப்பிடம்னு முடிவு பண்ணியாச்சு அதேன் ஊரு பக்கம் போக்கு வரத்து குறைஞ்சுட்டு.."

"இப்போ என்ன மாமா விவசாயம் பண்ண போறிகளா..? "

"இல்லை மாப்பிள்ளை கோர்ட்ல தீர்ப்பு எனக்கு சாதகமா வந்துடுச்சு.. பசங்க எல்லாம் இனி விவசாயம் பார்க்க முடியாது சொல்லிட்டானுவ.. அதேன் டவுன் பார்ட்டி ஒன்னு ரெண்டு மடங்கு தரேன்னு சொல்லிச்சு பசங்க சொன்னதுக்கு பொறவு என்னால எதுவும் பேச முடியல அதான் வித்துட்டேன் மாப்பிள்ளை."

"என்ன மாமா இப்படி பண்ணிட்டியே..!! இன்னும் கொஞ்சம் வருசத்துல நீங்க நினைச்சாலும் விவசாய நிலத்தை வாங்க முடியாது, இப்படி சோறு போடற பூமியை விதுப்புட்டிகளே.. நல்லா விசாரிச்சுதானே கொடுத்தியே..? "

"அதெல்லாம் பண்ணிட்டேன் மாப்பிள்ளை, விவசாயம் தான் பண்ண போறாகலாம்.. அதான் தைரியமா கொடுத்தேன்."


"அப்போ சரி மாமா வேலை முடிஞ்சதும் வீட்ட பக்கம் வந்துட்டு போங்க.."


"கண்டிப்பா வாரேன் மாப்பிள்ளை"என்றவரிடம் விடை பெற்று கொண்டு செம்பட்டையை வீட்டில் விட்டுவிட்டு யோசனையோடு தனது வீட்டிற்கு வந்தான். வந்தவன் வீட்டின் முன் விலை உயர்ந்த வெளி நாட்டு கார் ஒன்று நிற்க.. புருவத்தை சுருக்கியவன் 'நம்ம வீட்டு முன்னாடி வெளி நாட்டு கார் நிக்கிது, யாரா இருக்கும்? 'என்று சிந்தனையோடு உள்ளே வந்தவன் கண்ணில் அந்த காட்சி பட எப்போதும் சாந்தமான புன்னகை மட்டும் தவழும் முகத்தில் கோபத்தின் ரேகை படர்ந்தது.



மலர்வாள்..!!

ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇

 
Last edited:

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-4



வீட்டிற்குள் நுழைந்தவன் கண்களில்.. மரத்தால் செய்யப்பட்ட இருக்கையில் ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து, கால் மேல் கால் போட்டு, தனது அலை பேசியில் முகத்தை நுழைத்துக்கொண்டு ஒரு பெண் அமர்ந்திருக்க, தாமரை அவள் அருகில் பதட்டத்தோடு நின்றார்.

அவருக்கு மரியாதை கொடுக்காமல் தனது வீட்டிலையே சட்டமாக ராணி தோரணையில் அமர்ந்து கொண்டு அலைபேசியில் ஏதோ செய்து கொண்டிருந்த காட்சியை பார்த்தும் பிடிக்காமல் போக, எப்பொழுதும் சாந்தம் தவழும் வதனத்தில் கோப ரேகை படற ஆரம்பித்தது வருணனின் முகத்தில்..!!


அவன் காலடி அரவம் கேட்டு தாமரை வாசலை பார்க்க, அவனின் முகத்தில் தெரிந்த கோபத்தின் அளவை புரிந்துகொண்டவர்.


தனது பதட்டத்தை மறைத்துக் கொண்டு "கண்ணா வாப்பா! ஏன் அங்கையே நிற்கிறே? " என்ற சத்தத்தில்.. மாயாவும் வாசல் புறம் திரும்பி பார்த்தாள்.


அவளை முறைத்து கொண்டே உள்ளே வந்தவன், தாயின் கெஞ்சல் பார்வையில் கோபத்தை கட்டுப்படுத்தியவன்.


"யாரும்மா இந்த பொண்ணு" என்று கேட்டான்.


அவன் கேட்டதற்கு தாமரையை அவள் பார்க்க, அதில் 'அவனுக்கு பதில் சொல்' என்ற கட்டளை தொனித்திருந்தது.


தாமரை முகத்தை கஷ்டப்பட்டு சிரித்தார் போன்று வைத்து கொண்டவர்... "அது.. வா.. கண்ணா, இந்த பொண்ணு என் தூரத்து உறவுல அண்ணன் ஒருத்தர் இருக்காரு அவரோட பொண்ணு.."


"அண்ணன் பொண்ணா! அவரை பற்றி இதுவரையிலும் என்கிட்ட நீங்கள் சொன்னது இல்லையே மா..?"

"இல்லை பா.. அவங்களோட அதிகம் ஒட்டுதல் இல்லை. அதை பற்றி சொல்ல வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது."


"ம்ம்.. "என்றவன் அவள் எதுவும் பேசமால், தன் தாய் மட்டுமே பதில் சொல்லி கொண்டிருக்க, கொஞ்சம் கூட அசையாமல் சிலை போல் அமர்ந்து போனை நோண்டி கொண்டிருந்தவளின் மேல் எரிச்சல் மிக..

"இப்போ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க, உங்க அண்ணன் பொண்ணு" என்று அழுத்தி கேட்டான்.


"ஒண்ணுமில்ல கண்ணா, நம்ம மாரிமுத்து அண்ணா நிலத்தை, இந்த பொண்ணுதான் வாங்கிருக்காம் பா, அப்படியே அவங்க அப்பா சொல்லிருபாரு போல, நமக்கு அங்க சொந்தம் இருக்குன்னு அதான் பார்த்துவிட்டு, உன்கிட்ட உதவியும் கேட்க வந்துருக்கு"

"அப்படியா..!" என்று அதிசயம் போல் கேலியாக இதழ்களை வளைத்தவன், "இவங்க இப்படி உட்கார்ந்துருக்கிறதை பார்த்தால் உதவி கேட்டு வந்துருக்கிற மாதிரி தெரியலியே..!


ஏதோ இந்த வீட்டை ராஜ்ஜியம் பண்ண வந்தவங்க மாதிரில இருக்கு" என்று கூற, அபொழுதும் அவள் தன் நிலையை மாற்றாது யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறான் என்ற ரீதியில் அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.


"அது கண்ணா.."என்று ஆரம்பித்தவரை கை நீட்டி தடுத்தவன், "உதவி வேணுங்கிறவங்க பேசட்டும் மா, அவங்க என்ன ஊமையா..? நீங்க உள்ளே போங்க நான் பேசிக்கிறேன்" என்றதும் மாயாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.


அவன் பேசிய அனைத்தையும் கேட்டவள், போனை அருகில் வைத்துவிட்டு, எழுந்து நின்று அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து..

"என் பெயர் மாயாவதி, என் தாத்தா, பாட்டிக்கு கிராமத்துல ஒரு பண்ணை வீடு அமைச்சு, நிறைய மரங்கள் எல்லாம் நட்டு ஒரு பசுமையான, அமைதியான சூழலுல ஓய்வு எடுக்கணும்னு விருப்பப் படறாங்க.அதனால், அவங்க கல்யாண நாளன்று இதை ஒரு பரிசாக கொடுக்கவேண்டுமென்று நான் ஆசைப்படறேன்.


"அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்."


"நீங்க விவசாயம் பண்ண உதவி பண்றதா இங்க உள்ளவங்க சொன்னாங்க.சோ, என்னோட பார்ம் ஹவுஸ் அமைக்க நீங்கதான் எல்லா உதவியும் பண்ணனும். அது தவிர வேற ஏதாவது பண்ணும்னு ஆசை இருக்கு, எல்லாத்தையும் நீங்கதான் கவனிச்சு செஞ்சு தரணும் அதுக்கு பணம் எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கோங்கோ.


நாளையிலிருந்து வேலையை ஆரம்பிச்சுடுங்க" என்றவள் அவன் பதிலை எதிர் பாராது திரும்பவும் அமர்ந்து கொண்டு போனில் தலையை நுழைத்து கொண்டாள்.

அவள் கட்டளை இடுவது போல் பேசியது வருணனுக்கு அவள் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியது.

"ஹலோ மேடம்.." என்று வருணன் அழைக்க, தனது கூரிய விழிகளை கொண்டு நோக்கியவள் 'சொல்' என்பது போல் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.


"எனக்கு நிறைய வேலை இருக்கு என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. இந்த ஊருல நிறைய பேரு விவசாயம் நல்லா பண்ணுவாங்க அவங்க கிட்ட கேட்டு பாருங்க, இப்போ இடத்தை காலி பண்றிங்களா..? " என்று கூறினான்.


தலையை ஒரு பக்கமாக சாய்த்து, தனது ஒற்றை புருவத்தை அழகாக உயர்த்தி அவனை பார்த்தவள், "எனக்கு நீங்க தான் செஞ்சு தரணும் மிஸ்டர்.நந்தன்"என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

"என்னால் முடியாதுன்னு நானும் சொல்லிட்டேன் மேடம்.." அவனும் அழுத்தமாக கூறினான்.


"நீங்க செய்விங்க நந்தன்.. வீணே உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணாமல், நடக்க வேண்டிய வேலைய பாருங்க" என்றாள்.


கண் மூடி திறந்தவன்.. "முதல்ல என் வீட்டில் இருந்து வெளியே போங்க, நான் பெண்ங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறவன், என் பொறுமையை சோதிக்காதிங்க கிளம்புங்க.."


மகனின் பேச்சை கேட்ட தாமரை.. அவன் அருகில் வந்து "கண்ணா.." என்று தயங்கியவர் "இந்த பொண்ணு நம்ம வீட்லதான் பா தங்க போகுது" தயக்கத்தோடு கூறினார்.

"என்ன மா சொல்றீங்க..? அவங்களுக்கு இங்க வசதி எல்லாம் பத்தாது, ஒரு வயசு பைய்யன் இருக்கின்ற வீட்டில் ஒரு பெண்ண தங்க வைக்க முடியாது.ஊரு, உலகத்தில் உள்ளவங்க எல்லாம் தப்பா பேசுவாங்க, அவங்கள டவுன்ல உள்ள ஹோட்டல்ல தங்கிக்க சொல்லுங்க.."


மாயா திரும்பி தாமரையை பார்க்க.."கண்ணா அவங்க அப்பா நம்மள நம்பி இங்க அனுப்பி வச்சிருக்காரு, இங்க யாரும் எதுவும் தப்பா பேசமாட்டாக, என் புள்ளை பத்தரை மாத்த தங்கம்னு தெரியும்!அம்மா சொல்றதே கேளு, நீ தான் அந்த பொண்ணுக்கு உதவி பண்ணனும், நம்ம வீட்ல தங்கவும் அனுமதிக்கணும் எனக்காக இதை பண்ணு" என்று கெஞ்சி கேட்டார்.


தன் அன்னையின் பேச்சை மறுக்க முடியாதவன், "செஞ்சு தொலைக்கிறேன் உங்களுக்காக, ஆனால், இந்த வீட்ல என்ன வசதி இருக்கோ அதோடு தான் இருக்கணும் அதிக படியா எதுவும் எதிர் பார்க்க கூடாது" என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்து விட்டு உள்ளே சென்றான்.


தாமரை பக்கம் திரும்பியவள் "குட்" என்று கூறினாள்.

தாமரை ஏதோ சொல்ல வாய் திறக்க, அதை கலைக்கும் விதமாக உள்ளே நுழைந்தாள் வானதி.


"அம்மா நம்ம வீட்ல கார் நிற்குதே.."என்று சொல்லி அன்னையின் அருகே உள்ளவளை பார்க்க, பாதியில் வார்த்தை அப்படியே நின்றது. அவள் வீட்டில் ஒரு அழகு சிலை நிற்பதை பார்த்து.

'நானும் மெட்ராஸ்ல அழகிகல பார்த்திருக்கேன். ஆனால், இப்படி ஒரு பளிங்கு சிலையை பார்த்தது இல்லையே! என்ன கலர், என்ன ஸ்டைல்.. ம்ம்.. நாமளும்தான் இருக்கோமே!' என்று தன்னை கீழே குனிந்து பார்த்துவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டவளை..

"வானு" என்று குரல் கலைத்தது.


கனவில் இருந்து விழித்தவள் போல்,"என்னமா? " என்றாள்.


"இவ தான் மா என் பொண்ணு வானதி, வானு இவங்க நம்ம சொந்தக்காரக, ஒரு சோலியா வந்துருக்காவ, இங்க தான் கொஞ்ச நாள் தங்குவாக, நீ மாடில உன் அறை பக்கத்து உள்ள அறையை சுத்தம் பண்ணி, அவுகளுக்கு வேண்டியது எல்லாம் செஞ்சு கொடுக்கணும்."


"ம்ம்.. சரி மா"


"ஹாய்.. எப்படியும் என்னை விட பெரியவங்களா தான் இருப்பிக , சொந்தக்காரகளா வேற போய்ட்டிக, உங்கள எப்படி கூப்பிடறது..?"


யோசிக்காமல் "அண்ணின்னு" கூப்பிடு மாயா கூறினாள்



'அண்ணி' என்ற வார்த்தையில் தாமரைக்கு 'திக்' என்றிருந்தது.


அவளை பார்த்து சிரித்த வானதி, "ஒகே அண்ணி அப்படியே கூப்பிடுறேன்" என்றவளை ஆராய்ச்சி பார்வை பார்க்கவும் தவறவில்லை மாயா.


"சரி அண்ணி, நான் உங்களுக்கு அறையை தயார் பண்ணிவிட்டு கூப்பிடுறேன்" என மேலே சென்றாள்.


அவள் சென்றதும்.. தாமரையிடம் திரும்பியவள் "என்னமோ சொல்ல வந்திங்களே சொல்லுங்க.."


"அடுத்த மாதம் கல்யாணம்மா.."


"அதனால் நான் என்ன
பண்ணனும்..?"


"எந்த பிரச்சனையும்.." அவர் முடிப்பதற்குள் அவள் பார்த்த பார்வையில் கப் என்று வாயை மூடிக்கொண்டார் தாமரை.


மேலும் எதுவும் அவரிடம் கூறாமல் தனது கை பேசியை எடுத்து கொண்டு வெளியே சென்றாள்.


'கடவுளே இந்த பொண்ணால எந்த பிரச்சனையும், என் குடும்பத்துக்கு வராமல் நீ தான் பா பார்த்துக்கணும்' வேண்டுதலை வைத்தார்.


சிறிது நேரத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த மாயா, படுக்கையின் நடுவே கால்கள் இரண்டையும் கீழே போட்டு, கைகள் இரண்டையும் விரித்து விட்டத்தை பார்த்தபடி படுத்தவள், 'நான் எடுத்த காரியத்தை எந்த வழியிலாவது நிறைவேற்ற வேண்டும்' என நினைத்து கொண்டே படுக்க, அவள் கைபேசியும் ஒலி எழுப்பியது.


தன் தமையன் என்றதும் ஏற்று காதில் வைத்தாள்


"..........."


"பார்த்தேன்.."


"............"


"ரொம்ப வெகுளியா இருக்கா டா, அண்ணின்னு கூப்பிட சொன்னேன், ஏன் எதுக்குன்னு தயக்கமே, இல்லாமல் கூப்பிடுறா, உன்னை சமாளிக்க அவளால் தான் முடியும்" மெல்லிதாக புன்னகை செய்து கொண்டே கூறினாள்.


"............."


எனக்கு பிடிச்சுருக்கு.நான் நல்லா இருக்கேன்.நீ என்னையை நினைத்து வருத்தப்படாதே, எல்லாம் நாம நினைத்தபடி நடக்கும். நான் சொல்லும்போது வந்தால் போதும், இப்போ எனக்கு கொஞ்சம் சோர்வாக இருக்கு. அப்புறம், பேசுறேன்" என தனது கை பேசியை அணைத்தாள்.




இரவு வேளையில் அனைவரும் தரையில் அமர்ந்து உணவு உண்ண.. மாயாவும் இரவு உணவிற்காகா கீழே இறங்கி வந்தாள்.


"வாங்க அண்ணி! இங்க எல்லாரும் சாப்பாடு மேசை இருந்தாலும் கீழே உட்கார்ந்து சாப்பிட்டுத் தான் பழக்கம். நீங்க சாப்பாடு மேசையில் உட்காருங்க, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" வானதி கூறினாள்.

அவர்கள் பேச்சு எதையும் கண்டுகொள்ளாமல் பொதிகையில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான் வருணன்.

"இல்லை அதெல்லாம் வேண்டாம்" வானதியிடம் மறுத்தவள், சிறிதும் தாமதிக்காமல் இது வரையிலும் தரையில் அமர்ந்து சாப்பிட்டு பழக்கம் இல்லாதவள், தனது தந்தை, தமையனை தவிர மற்ற ஆண்களை அவளின் ஒற்றை பார்வையில் அவள் அருகில் வர பயப்பிடும் அளவிற்கு தூரத்தில் வைத்து பழகுபவள் வருணன் அருகில் அமர்ந்து கொண்டாள்.


வானுவோ 'பரவாயில்லையே.. எவ்வளவு பணக்கார பொண்ணு கீழே உட்கார்ந்து சாப்பிடுறாங்க!' மெச்சுதலாக எண்ணி கொள்ள, தாமரைக்கோ அவளின் செயல் மனதில் கிலி பிடித்து கொண்டது.


வயலும், வாழ்வும் நிகழ்ச்சியை சுவாரசியமாக பார்த்து கொண்டிருந்தவன், தனது பக்கத்தில் ஆளை மயக்கும் வாசனை திரவியத்தின் மணம் வீச, அருகில் திரும்பி பார்த்தான். அவன் கால் மேல் அவள் கால் உரசும் அளவிற்கு சம்மணம் இட்டு அமர்ந்திருந்தவளை கண்டதும் தீ சுட்டார் போல் எழுந்தவன் அவளை முறைத்து விட்டு வெளியே செல்ல, தாமரை தன் மகனை ஒரு முறை பார்த்துவிட்டு, மாயாவிடம் ஒரு வெற்றி பார்வையை வீச.. கேலியாக இதழ் வளைத்தாள் மாயாவதி.


அவர்கள் வீட்டில் என்ன சமைத்தார்களோ குறை கூறாமல், அமைதியாக சாப்பிட்டுவிட்டு வானதியுடன் மேல சென்றவள், சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு, காற்றாட நடந்து கொண்டிருந்தவள்.. கீழே எட்டி பார்க்க, வருணன் ஒரு கயிற்று கட்டிலை போட்டு கொண்டு அதில் படுத்திருந்ததை சிறிது நேரம் வெறித்து பார்த்தவள், தனதறைக்கு தூங்க சென்றாள்.



அடுத்த நாள் சனிக்கிழமை அழகாக விடிந்தது. கிராமத்தில் அதிகாலை எழும் பழக்கம் என்பதால் வருணன் எழுந்து, மாடுகளுக்கு வைக்கோல் வைப்பதும், புண்ணாக்கு, தவிடு கலந்து நீர் காட்டிவிட்டு.. வெளியில் அமர்ந்து தாமரை போட்டு கொடுத்த தேநீரை அருந்தி கொண்டிருக்க..


வானதி வாசலில் சாணம் கலந்த நீரை தெளித்து, பெருக்கிவிட்டு கோலம் போட்டு கொண்டிருந்தாள்.


மாயா அதிகாலையில் எழுந்து வாகன இரைச்சலற்று, சுகமாக வீசிய தென்றல் காற்று மேனியை தழுவ, அந்த குளுமையை அனுபவித்து கொண்டே ஜோக்கிங்கை முடித்துவிட்டு வருணனை பார்த்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.


வெளியில் அமர்ந்திருந்த வருணன், 'இந்த பொண்ணு எப்போ எழுந்து போச்சு.. பரவாயில்லையே சீக்கிரம் எழுந்துருச்சுருக்கு' என்று மெச்சுதலாக பார்த்து விட்டு தனது தோட்டத்திற்கு சென்று விட்டான்.


நேரம் கடந்து செல்ல.. சாப்பிட வீட்டிற்கு வந்த வருணனை தேடி வந்த செம்பட்டை, அங்கே நின்ற காரை கண்டதும் வாயை பிளந்தான்.


'ஆஹா.. இவ்வளவு சொகுசான காரு, நம்ம பங்கு வீட்ல நிக்கிதே.. நாம வேற ஜெர்கின் போட்டுருக்கோம்.. இந்த காரோட நின்னு ஒரு செல்ஃபீ எடுத்து மூஞ்சி புக்குல போட்டுற வேண்டியதுதான்' என்று நினைத்தான்.


அந்த காரின் அருகில் சென்று விதவிதமாக செலஃபீ எடுக்க..
"டேய் செம்பட்டை.. "என்ற சத்தத்தில் எருமை மாடு போல் செல்ஃபி எடுக்கின்றேன் பேர்வழி என , காரை உரசி உரசியே அதன் நிறத்தை மங்க செய்தவன் திரும்பி பார்த்தான்.


"என்ன பங்கு.. முக்கியமான வேலையில இருக்கும்போது தொல்லை பண்ற.."


"இது முக்கியமான வேலையா..? நாலு நாளா ஒரே ஜெர்கின துவைக்காம உடுத்திகிட்டு பக்கத்தில வர முடியல ஒரே எலி செத்த வாடையா வருது. இதுல துரை முக்கியமான வேலை பார்க்கிறாராம்ல.. இன்னைக்கு நீ அதை கழட்டி தூர எறியல..


உன் அத்தை, மாமாகிட்ட நானே பொண்ணு கொடுக்காதிகன்னு சொல்லுவேன் எப்படி வசதி..? "



"என்ன பங்கு இதுக்கெல்லாம்..போய்" என்றவன் வார்த்தை இடையில் நின்றது.


அவன் வார்த்தை பாதியில் நின்றதும், அவன் பார்த்த திசையில் இவனும் பார்க்க, மாயா அவன் பேசுவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.


அவள் அவனை அவ்வாறு பார்த்து கொண்டிருந்ததை, இன்னொரு ஜீவன் கண்களில் கோபம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தது.


மலர்வாள்..!!


ஹாய் ஃபிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇

 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-5


மலர் எப்பொழுதும் போல் வருணன் வீட்டிற்கு வந்தவள், வீட்டின் முன் கார் நிற்பதைக் கண்டதும் 'யாராக இருக்கும்? ' என்று சிந்தித்துக் கொண்டே அருகில் வந்தாள்.

அங்கு வருணன் செம்பட்டையுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க, வாயிற் படியில் ஒரு பெண் நின்றுக் கொண்டு வருணனையே ஊன்றிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவள்



'யார் இவ? என் மச்சானை இந்தப் பார்வைப் பார்க்குறா, ஒரு வாட்ட சாட்டமான ஆம்பளையே பார்த்துடக் கூடாதே, அப்படியே கொத்திகிட்டுப் போற மாதிரியே பார்ப்பாளுங்க, இவ கண்ணுல கொல்லியை வைக்க கொஞ்சமாச்சும் கண்ணு அங்க இங்கே நகருதா' என மனதில் கரித்துக் கொட்டிக் கொண்டு, அந்தி வானம் போல் கோபத்தில் சிவந்திருந்த முகத்தோடு மாயாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


செம்பட்டையோ பேச்சை இடையில் நிறுத்திவிட்டு மாயாவை வாயிலிருந்து ஜொள்ளு வலியாதா குறையாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், 'நீ இனிமேட்டு யாருகிட்ட சொல்லிப் பொண்ணுக் கொடுக்க வேண்டாம்னு சொன்னாலும் பரவாயில்லை பங்கு, நான் போட்டிருக்க ஜெர்கினுக்கும், என் கலரான முடிக்கும் பொருத்தமா நச்சு பிகரோட இலவச இணைப்பா காரும் கிடைச்சிருக்கு, இனிமேட்டு என் குறிக்கோளே இந்த பிகரை மடக்கி கல்யாணம் பண்ணி பச்சை நிறத்துல முடி உள்ள பிள்ளைகளா பெத்துக்கிறதுதான்' என நாட்டை உயர்த்தும் அடுத்த ஐந்தாண்டு செயல்படுத்த வேண்டிய திட்டம் போல் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

வருணன் மாயாவை திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு, செம்பட்டை தலையில் ஒரு தட்டு தட்டினான்.


"ஏன் பங்கு அடிச்ச..? "


"மூஞ்ச பாரு நல்லா புள்ளைப் புடிக்கிறவன் மாதிரி,ஏற்கனவே பார்க்க சகிக்காது இப்போ ஏன் இப்படி கேவலமா வச்சுருக்கே? "



'அடப் பாவி பங்கு நான் ரொமான்டிக்கா முகத்தை வச்சுருக்கிறது உனக்கு கேவலமா இருக்கா' என நினைத்தவன் "அது ஒன்னும் இல்லை பங்கு" என ஆரபித்தவனை..

கை நீட்டித் தடுத்த வருணன் "நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.நான் இங்க நிக்கிறாகல்ல, இவுகள அவுக தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போகனும் நீயும் வரியா..? "

"என்ன பங்கு இப்படி கேட்டுபுட்ட, வர்றேன்." இனிமேட்டு இந்தப் புள்ளை இருக்கிற இடத்தை விட்டு நீ அடிச்சு துரத்துனாக் கூட, இந்தப் பட்டணத்து குளோப் ஜாமுன விட்டு நகர மாட்டேன் டா' என்று மனதில் நினைத்தான்(அவளை பத்தி தெரியாமல் பேசிகிட்டு இருக்கே உனக்கு அடி கண்பார்ம் டி)

அவளைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப் போவதைக் கேட்டவுடன் மாயாவை முறைத்துக் கொண்டிருந்த மலர்.

"மச்சான்.. "என அழைத்துக் கொண்டே அருகில் வந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

அவள் இவ்வாறு நெருங்கி அவன் கையைப் பிடித்ததைப் பார்த்த மாயா மலரை பார்த்து நக்கலாகச் சிரித்தாலா இல்லையா என்னும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மெல்லிதாக அவள் அதழ்கள் வளைந்தது.


வருணன் மலர் பிடியிலிருந்து தன் கரத்தை உருவிக் கொள்ள முயற்சி செய்ய, அவளோ மேலும் மாயாவைப் பார்த்துக் கொண்டே இறுக்கிப் பிடித்தாள்.



அவள் இவ்வாறு நெருக்கமாக நடந்துக் கொள்வதுப் பிடிக்காமல், அவளின் கையை வலு கொண்ட மட்டும் பிரித்து எடுத்துவிட்டு.. முறைத்தவன், மாயாவை பார்த்து "வாங்க" என்று சொல்லி முன் நடந்தான்.


செம்பட்டை அப்போதும் மாயாவை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, அவன் தலையில் மீண்டும் ஒரு தட்டு தட்டிவிட்டுச் செல்ல..

"நான் அந்தப் புள்ளைய சைட் அடிக்கறத தெரிஞ்சுகிட்டே, மண்டையில தட்டிட்டுப் போறியா பங்கு, நீ சூசைட் பாயிண்ட்கே காவடி எடுத்தாலும் அந்த சந்தனக் கட்டை இந்த பச்சைக் கிளிக்குத்தான்" கலரிங் செய்த தனது முடியை கோதிக் கொண்டே முணுமுணுத்தான்.


"என்ன டா அங்க பண்றே..? "


"இந்த வந்துட்டேன் பங்கு.."குரல் கொடுத்துக் கொண்டே வருணன் பக்கம் சென்றான்.

மாயாவோ சற்று பின் தங்கி, மலரை நேருக்கு நேராகப் பார்த்து தனது ஒற்றை புருவத்தை உயர்த்தி, அவள் காதருகே.. "உன் மச்சானே என் கிட்ட இருந்து முடிஞ்சா காப்பத்திக்கோ, அப்புறம், உனக்கு சரவணன்னு யாரையும் தெரியுமா..?" மாயா ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டுவிட்டு வருணனை நோக்கி நகர்ந்து விட்டாள்.

அவள் 'சரவணன்' என்று உதிர்த்த வார்த்தையில் பேஸ்த்தடித்ததுப் போல் அப்படியே நின்றாள் மலர்.

பேச்சு சத்தத்தில் வெளியே வந்த வானதி சிலைப் போல் நின்றிந்த மலரைக் கண்டு,

"அடியேய் மலரு ஏன் இப்படி புடிச்சு வச்ச புள்ளையாரு கணக்கா வெளியே நிக்கிறவ.. வூட்டுக்குள்ள வர வேண்டியதுதானே" என அவளை உலுக்கினாள்.


"ஆங்.." என கனவில் இருந்து விழித்தவள் போல், "யார் அது?"

"என்ன டி காடு, கரை பக்கம் பொழுது சாயும்போது போனியா, முனி எதுவும் புடிச்சுகிச்சா, என்ன பார்த்து யாருன்னு கேட்குற.."


நான் உன்ன சொல்லல புதுசா ஒருத்தி, ஈறு குச்சி மாதிரி ஒல்லியா, நல்ல உயரமா, வெள்ளாவில வச்சு அவிச்சவ கணக்கா வெளுத்து போய் போனாலே அவளைத் தான் கேக்கேன்."


"மாயா அண்ணியவா கேட்குறே.."


"நான் குத்துக் கல்லாட்டம் ஒருத்தி நிக்கேன்.என் முன்னாடியே அவள அண்ணின்னு கூப்பிடுவே, இனிமேட்டு நீ அவளை அண்ணின்னு கூப்பிடக் கூடாது, நான் மட்டுந்தே உனக்கு அண்ணி விளங்குச்சா..? "


"இப்போ ஏன் உனக்கு இவ்வளவு ரோசம் வருது, அவுக எனக்கு மாமா பொண்ணுன்னு அம்மா சொன்னாக, அதேன் முறை வச்சுக் கூப்பிடுறேன்."


"ஓ.. இப்போ புரிஞ்சுடுச்சு புள்ள.. அவுக அழகா இருக்காகா, என் அண்ணனுக்கு முறைப் பொண்ணு வேற, என் அண்ணன எதுவும் அபேஸ் பண்ணிடுவாகண்ணு பயம் வந்துடுச்சா.."கேலியாக கேட்டாள்.


"நிறுத்து வானு.. இன்னும் ஒரு தடவை என் முன்னாடி அந்த வார்த்தையைச் சொல்லாத, அவ என்ன சொன்னா எங்கிட்ட தெரியுமா.."


"என்ன சொன்னாக மலரு..? "


மென்று விழுங்கியவள்.. "அதை விடு, அவ எதுக்கு இங்க வந்துருக்கா..? "


"அதுவா அவுகதே நம்ம மாரிமுத்து மாமா தோட்டத்தை வாங்கியிருக்காக, அதுல ஒரு வீடும், தோட்டமும் போடணுமா அதேன் அண்ணங்கிட்ட உதவி கேட்டு வந்துருக்காக.. எப்படியும் ஒரு மூணு மாசமாவது தங்குவாக."


இவ்வளவு வசதி உள்ளவள் வசதி குறைவாக உள்ள இந்த வீட்டில் அவள் தங்கி இருப்பது, இது அனைத்தும் திட்டமிட்டு நடப்பது போன்று உள் மனம் அடித்துக் கூறியது மலருக்கு.அது மட்டும் அல்லாமல் தன்னை இப்போதுதான் அவள் முதல் முறையாக பார்க்கிறாள்.ஆனால், தன்னைப் பற்றி தன் தாயிக்கும், தமையனுக்கும் தெரியாததைக் கூட கூறவும், இவள் இங்குள்ள அனைவர் பற்றியும் தெரிந்துக் கொண்டே வந்திருக்கிறாள் என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஊர்ஜிதமாகியது.


'ஆனால், ஏன் வந்திருக்கிறாள்? யாருக்காக வந்திருக்கிறாள்?' என யோசித்தவள், 'ஒரு வேளை வருணனுக்காகா வந்திருப்பாளோ' என்று மனம் கூறுகையிலையே உடல் நடுங்கியது அவளுக்கு.


"ஏய்.. என்ன திரும்பவும் யோசிக்க ஆரம்பிச்சுட்டியா.."


"நான் சும்மாதேன் சொன்னேன், அவுக அந்தஸ்துக்கும், வசதிக்கும், அழகுக்கும் என் அண்ணனை நினைச்சு கூட பார்க்க மாட்டாக, என் அண்ணே உனக்குத்தேன் வா உள்ளே போவோம்" என இருவரும் உள்ளே சென்றனர்.


இங்கு மாயாவோ செம்பட்டையை கழட்டி விட செய்துவிட்டு, வருணனின் பைக்கில் பின்னால் அமர்ந்து தோட்டத்திற்குச் சென்றாள்.


"அடேய் பங்கு உனக்குத்தான் உன் மலரு இருக்காளே.. அப்புறம் ஏன் டா என் பட்டணத்து குளோப் ஜாமுன இப்படி லவட்டிகிட்டு போறே.. அந்த குளோப் ஜாமுன் எனக்கு மட்டும் தான் அதுல பங்கு எல்லாம் தர முடியாது.

இருடா அங்க வந்து அவளை உன்கிட்ட இருந்து காப்பாத்துறேன்.." எனச் சொல்லிகொண்டே தோட்டத்தை நோக்கி பொடி நடையாக நடந்துச் சென்றான்.


அவனுடன் பைக்கில் வந்து இறங்கிய மாயாவை "வாங்க உங்க தோட்டத்துக்குப் போவோம்" என்று வருணன் நடக்க..


"இருங்க மிஸ்டர்.நந்தன், முதல்ல உங்கத் தோட்டத்தைச் சுற்றிக் காமிங்க, பிறகு என் தோட்டத்தைப் பார்க்கலாம்"என்றாள்.


"சரி வாங்க காமிக்கிறேன்" என்று தனது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொன்றாக விலக்கி சுற்றி காமித்துக்கொண்டிருக்க, அங்கே வயல் தலையில் ஒரு ஆழமான குட்டையில் விரால் குஞ்சுகள் நீந்தி கொண்டிருப்பதைக் கண்டவள்.


"மீன் எல்லாம் வளர்க்குறீங்களா நந்தன் ரொம்ப அழகா இருக்கு.இது வரையிழும் பிஷ் டேங்க்ல தான் இவ்வளவு குட்டியா பார்த்துருக்கேன் ரொம்ப அழகா இருக்கு, எனக்கு அதை பிடிச்சு கையில தரிங்களா..?" முகத்தை சுருக்கி கேட்டவளின் கண்களில் என்ன கண்டனோ!


உடனே சிறு குஞ்சுகளை ஒரு டப்பாவில் பிடித்து, அவள் கைகளில் அவன் கைகள் உரசும்படி மீனை விட.. மாயாவின் உடல் கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல், பாறை போன்று இறுகி போயிருந்த, அவள் மனதில் முதல் முறையாக அவன் தொடுகையில் சொல்ல முடியாத உணர்வும், ஒருவகையான சிலிர்ப்பும் ஓடி மறைந்தது.


அந்த குஞ்சுகளோடு விளையாடியவள், "நீங்க மீன் வியாபாரம் எல்லாம் பண்றிங்களா நந்தன்?"


"அப்படியும் வச்சுக்கலாம்ங்க.. இது இந்த நெல்லு வயலுக்காக வளர்க்கிற குஞ்சுகள்."

"நெல்லு வயலுக்காகா எதுக்கு வளர்க்குறீங்க..? "

"அதுவாங்க.. இந்த விரால் குஞ்சுகள் நைட்டான இந்த வரப்பைத் தாண்டிக் குதிச்சு, நெல் வயலுல பயிரை தின்னும் பூச்சியை எல்லாம் தாவிப் பிடிச்சுச் சாப்பிடும், அதோடக் கழிவு பயிருக்கு எருவா மாறிடும்.

இதனால் பூச்சியும் குறையும், எருவும் கிடைக்கும், விளைச்சலும் அதிகமாகும்.விடிஞ்சதும் திரும்ப தாவி குதிச்சு இந்த குட்டைக்கே வந்துடும்..ஆனால், இதெல்லாம் ரசாயன உரம் பயன்படுத்துற நெல் வயலுல வளர்க்க முடியாது."


"ஓ.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.. நந்தன்!. நீங்க புத்திசாலிதான்.. பயிருக்கு இயற்க்கை முறையில் உரமும், பூச்சி கொல்லியும் கிடைக்குது, இந்த மீன்கள் வளர்ந்ததும் வருமானமும் கிடைச்ச மாதிரி ஆச்சு."


நான் புத்திசாலி இல்லைங்க... ஆயிரம் ஆண்டுகள் முன்னாடி வாழ்ந்த இந்த முறையைப் பாடி வைத்த ஆண்டாள்தாங்க புத்திசாலி.


"என்ன சொல்றிங்க எனக்கு புரியல..? "


"ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகல

பூங்குவளைப் போதில் பொறிவண்டு
கண்படுப்ப


தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை
பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பேரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிரைந்தேலோ!எம் பாவாய்!"

"சாத்தியமா புரியலைங்க..!"

"சொல்றேன் கேளுங்க "

நெல் வயலுல மீன் திரியும், அதனுடைய கழிவு நெற்பயிருக்கு எருவாகுது, அந்த நெல்லோட வைக்கோலும், தவிடும், பசுவுக்கு உணவாகுது, பசுவோட கழிவு நிலத்துக்கு உருமாகும்.மனுஷனுக்கு அரிசி, மீன், பால் மூணும் உணவாகுது அதாங்க இதற்க்கு அர்த்தம்.


"வாவ்..! ரொம்ப அருமைங்க.. அதுவும் உங்க வாயால கேட்கும்போது இன்னும் ரொம்பப் பிடிச்சுருக்கு நந்தன்" ஆழ்ந்து ஒலித்தது அவள் குரல்.


"நன்றிங்க.. இயற்க்கை ஒரு அட்சய பாத்திரம் மாதிரிங்க,அதை நல்ல முறையில் நாம பாதுகாத்தா, அது அள்ள அள்ள குறையாத அளவுக்கு வளங்களை அள்ளிக் கொடுக்கும்.நாம தான் பாதி சாகடிச்சு வச்சிருக்கோம்."


அவன் பேசிகொடண்டே... அடுத்ததை பார்க்க நகர, இவளும் உடன் நகர வரப்பில் கால் தடுக்கி விழாப் போக, அவள் விழாமல் இருக்க, அவள் இடையில் கை கொடுத்து இழுக்க அவன் மீது மோதியவளின் தலை அவன் நெஞ்சு பகுதியில் மஞ்சம் கொள்ள, அவனின் இதய துடிப்பு அவள் உயிர்வரை சென்று தாக்கியது.


அவர்கள் தனியாக இருப்பது மலருக்கு பக்கென்றிருக்க, மனம் கேட்காமல் பின் தொடர்ந்த மலரும், செம்பட்டையும் இந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.


மலரோ வெளி வர துடித்த அழுகையை உதடு கடித்து அடக்கியவள், அந்த காட்சியை காண சகிக்காது வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள்.


செம்பட்டையோ "டேய் பங்கு நான் மட்டும் சாப்பிட வேண்டிய குளோப் ஜாமுன, இப்படி சின்ன பின்னம்மா உடைச்சுட்டியேடா, உனக்குத்தான் இந்த ஊரு ரவா லட்டு இருக்குல்ல, அப்புறம் ஏன்டா என் பட்டணத்து குளோப் ஜாமுன ஆட்டைய போட்டே.. எப்படியாவது என் பட்டணத்து குளோப் ஜாமுன என்னை லவ் பண்ண வைக்கல நான் செம்பட்டை இல்லை டா.. "சொல்லிவிட்டு நகர்ந்தான்.


வருணனோ ஒரு நொடி திகைத்தவன் அவளிடமிருந்து தன்னை பிரிக்க, சுயம் பெற்ற மாயா."சாரி நந்தன் கால் ஸ்லிப் ஆயிடுச்சு."


"பரவாயில்லைங்க.. மத்ததை நாளைக்குப் பார்த்துக்கலாம் வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று நகர்ந்தவனை தடுத்தவள்.


"நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்."

"சொல்லுங்க.. "

"நீங்க என்னை வாங்க போங்கன்னு கூப்பிடுறத நிறுத்துங்க, உங்களை விட ஐந்து வயசு சின்னவ, உங்களுக்கு உறவு முறை வேறு" என்று கூற


"இங்க பாருங்க.. என்கிட்ட நீங்க ஒரு உதவி கேட்டு வந்துருக்கீங்க, அதை என் அம்மா சொன்னதால உங்களுக்குச் செய்ய ஒத்துக்கிட்டேன். இந்த புதுசா வர்ற உறவு முறை எல்லாம் எனக்கு வேண்டாம்."



"நான் உங்களுக்கு புது உறவு இல்லங்க ரொம்ப பழைய உறவு, அது எப்படியென்றால் " என்று ஆரம்பித்தவளை..


"நிறுத்துறீங்களா கொஞ்சம்.நான் தான் சொல்லிட்டேனே அத்தோடு விடுங்க.."

"நான் சொல்றதை நீங்க கேட்டு தான் ஆகணும் மிஸ்டர்.நந்தன்" மாயவின் பழைய திமிர் வந்து ஒட்டி கொள்ள..


"கேட்காட்டி என்ன பண்ணுவிங்க..? " காட்டாமாக வருணனும் கேட்டான்.


"இந்த மாயாவைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியாது. என் காரியம் நடக்க எந்த எல்லைக்கு வேண்டுமானலும் போய் ஜெயிச்சு காட்டுவேன்."


"வாங்க போங்கன்னு கூப்பிடுற இதே வாயால என்னைய உரிமையா கூப்பிட வைப்பேன், நீங்க வேண்டுமென்றால் வெயிட் பண்ணி பாருங்க.. "அமர்த்தலாக கூறினாள்.

"அதையும் பார்க்கலாம்..!"என்றதோடு அவன் முன் செல்ல..

"ச்சே.. இவனை இங்க எதற்காக அழைத்து வந்தேனோ அதைப் பற்றி பேசாமல், வேற எதை எதையோ பேசிகிட்டு இருக்கேன், நீ எதுக்கு இங்க வந்த, நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே மாயா" என கடிந்துக் கொண்டவள் அவன் பின்னால் சென்றாள்.


அவள் சொல்ல நினைத்ததை இன்று சொல்லியிருந்தாள் பின்னாலில் அவன் அவளை இகழ்ந்து பேச போவதை தடுத்திருப்பாள் மாயா.விதி யாரை விட்டது அதன் வழி தானே நம் பயணங்கள் தொடர்கின்றன.


இரவில் காற்றாட மொட்டை மாடியில் யோசனையோடு நடந்துகொண்டிருந்தவளின் சிந்தனையை அவளது கை பேசி கலைத்தது.


கை பேசியில் ஒளிர்ந்த எண்ணை கண்டதும், புருவம் மத்தியில் முடிச்சிட ஏற்றுக் காதில் வைத்தவள், அந்த பக்கம் சொன்னச் செய்தியில் அதிர்ச்சி அடைந்தவளாக.

வாட்..?


"............."


"உங்களை எல்லாம் நம்பித்தானே பொறுப்பை ஒப்படைச்சேன்.சிசிடிவி ஃபுட்டேஜ் செக் பண்ணிங்களா, அங்க எல்லாரும் என்ன பண்றாங்க..? "


"............"


"ஜாம்பர் வச்சு செயல்படாமல் பண்ணிருக்கானா, செக்யூரிட்டிய டயிட் பண்ணுங்க ஹாஸ்பிட்டல் முழுதும். ஒரு துரும்பு கூட அங்க நுழையக் கூடாது.இனி இந்த மாதிரி நடந்தால் நீங்க யாரும் உயிரோட இருக்க மாட்டிங்க ஜாக்கிரதை" என கர்ஜித்துவிட்டுப் போனை வைத்தாள்.

'என்ன நடந்தாலும், சீக்கிரம் இந்த காரியத்தை முடிச்சு, சென்னைக்கு பேக் பண்ணனும். தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்து' என நினைத்தவள்..


"என் கண்ணுலையே விரலை விட்டு ஆட்டுற உன்னைப் பார்க்கிற அன்னைக்கு என் கையால கொல்லுவேன் டா "பல்லைக் கடித்துக் கொண்டுக் கூறினாள் அனைவருக்கும் புரியாத புதிராக மாய வேலை செய்யும் மாயாவதி.


மலர்வாள்..!!

ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇


 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் கொய்வாய் நறும் பூவே... கதையிலிருந்து சிறு முன்னோட்டம்..


அவன் முன் சாகவாசமாக இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு, ஒரு கையில் கன்னத்தைத் தாங்கி, சுவாரஸ்யமாக படம் பார்ப்பது போல் அவனைப் பார்த்தாள்.

அவனோ" மாயா... என்னை விட்டுடு, ஏதோ ஆசையில பண்ணிட்டேன். நான் எங்கையாவது கண் காணாத இடத்திற்குப் போயிடுறேன்."

"இந்த ஒரு தடவை மன்னிச்சுடு.."ப்ளீஸ் என்று கெஞ்ச..

அவன் கெஞ்சுவதை எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்..
"அன்னைக்கும் இப்படித்தானே கெஞ்சுனேன், விட்டுயா, இன்னைக்கும் அதே சொத்துக்காக கொலை பண்ற அளவுக்கு போயிருக்கே.. உன்னை என்ன பண்ணலாம்" சொல்லிக் கொண்டே.. ஒரு கட்டரை எடுத்து அவன் முன் ஆராய்ச்சி செய்ய..

அந்த கட்டரை பார்த்துப் பயந்தவன் "ப்ளீஸ் மாயா.. நான் பண்ணது தப்புதான், அதான் உன் அண்ணன் என் கையை உடைச்சானே.."

"அப்படி இருந்தும் நீ திருந்தலையே.."ராகமாக இழுக்க..

"இனிமேல் திருந்திடுவேன் மாயா என்னை விட்டுரு.."

"விட்டுறலாம்.. ஆனால் இது வரைக்கும் நடந்துகிட்ட எல்லாத்துக்கும் தண்டனை கொடுக்கணும்ல, அதைக் கொடுத்துட்டு விட்டுறேன். பயப்பிடாதே உன்னைக் கொல்லமாட்டேன்" என்றவள்.


அவன் கையை பூ போல பற்றி, "பரவாயில்லையே அழுக்கு இல்லாமல் சுத்தமா வச்சுருக்கே" எனக் கூறி, நடுவிரல் நகத்தில், கட்டுரை வைக்க, அவள் செய்யப் போவதை உணர்ந்தவன்..

"மாயா.. ப்ளீஸ் மாயா.. நான் உன் அத்தைப் பையன் என்னை விட்டுரு" என்று கெஞ்ச..

அவன் கெஞ்சல் அனைத்தையும் காதில் வாங்காதவள்..

"இது என் கிட்ட தப்பா நடந்துகிட்டதுக்கு" எனக் கூறி அவன் நகத்தில் கட்டுரை வைத்து அழுத்த அந்த கட்டிடமே நடுங்கும் அளவிற்கு கதற கதற அவன் நகத்தை பிடிங்கி எறிந்தாள்.


அவன் மரண ஓலம்... காதைக் கிழிக்க அதை எதையும் சட்டை செய்யாதவள், அடுத்த நகத்தில் கட்டடரை வைத்து "இது பல பெண்களை ஏமாத்துனதுக்கு "எனச் சொல்லி அடுத்த நகத்தை பிடிங்கி எறிந்தவள்.

"கடைசியாக இது நீ அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை பண்ண முயற்சி பண்ணதுக்கு" என்று கூறி ஐந்து விரல் நகங்களையும் அவன் கதறியும் சலனேமே இல்லாமல் பிடிங்கி எறிந்தவள்..


அந்த வலியிலும்.. என்னை விட்டுரு மாயா.. இனி இப்படி பண்ண மாட்டேன் என அரை மயக்கத்திலும் அவன் பிதற்ற..

"ஆம்பளைன்ற திமிறுல தானே இதெல்லாம் செஞ்ச.. அதையே இல்லாமல் செஞ்சுட்டா..?" என்க..


"ப்ளீஸ் மாயா அப்படி எதுவும் செஞ்சுடாதே.. என்னை விட்டுரு"என்று குளரி குளரி அவன் பேச..


"பொண்ணுங்கள மனுஷியா நினைக்காமல், வெறும் சதையா நினைக்கிற உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் இதான்டா தண்டனை" என்றவள்..

தன் பி ஏவை அழைத்து .. டாக்டர் வந்தாச்சா என்று கேட்டாள்

"வெளில வெயிட் பண்றாரு மேடம்.."

சரி.. இவன் இனிமேல் எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது.ஏன்டா வாழ்றோம்னு நினைச்சு நினைச்சு இவனே தற்கொலைப் பண்ணிக்கிட்டு சாகனும், அனஸ்தீசியா கொடுத்துப் பண்ணத்திங்க, அவன் கதறல் என் காதுல விழணும்"

"சரிங்க மேடம்.."


"இந்த மாயகிட்ட விளையாண்ட இதான் கதி!" என சொல்லி இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டவள் வெளியில் செல்ல, டாக்டர் உள்ளே வந்து அவள் சொன்ன படி செய்ய, அந்த இடமே அவன் கதறலில் நடுங்க, அது எதுவும் தன் காதில் விழாதது போல், குளிர் கண்ணாடியை ஸ்டைலாக மாட்டிக்கொண்டு காரில் ஏறிச் சென்றாள் மாயாவதி.







கருத்துத் திரி👇

 
Last edited:

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-6


பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில்... மாயா அவள் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவளைச் சாப்பிட அழைப்பதற்கு வந்திருந்தாள் வானதி.

அந்த சமயத்தில் மெத்தையில் கிடந்த அவள் அலைபேசி ஒலி எழுப்பியது.


அதைக் கண்ட வானதி.. "அண்ணி.. அண்ணி "என்று அழைத்தாள்.

"சொல்லு வானதி குளிச்சுகிட்டு இருக்கேன், என்ன விஷயம்?"என்று கேட்டாள் மாயா.


"உங்க போன் ரொம்ப நேரமா அடிச்சுகிட்டு இருக்குது அண்ணி."


"யாருன்னு பார்த்து சொல்லு.." என்று உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள்.


மாயாவின் போனை எடுத்துப் பார்த்தவள்.. "வருன்னு யாரோ பண்றாங்க அண்ணி.."


சில நொடிகள் யோசித்த மாயா.. "நீயே அட்டென்ட் பண்ணி நான் குளிச்சுட்டு இருக்கேன், அப்புறம் கூப்பிடுவாங்கன்னு சொல்லு."என்றாள்

"சரி அண்ணி" என்றவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்.


"ஹலோ.."என்றாள்.


அந்த பக்கம் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தது.



மறுபடியும் "ஹலோ" என்றாள்.


இப்போதும் அதே அமைதி நிலை அந்தப் பக்கம் நீடித்தது.

"ஹலோ.. யாருங்க போன் பண்ணிட்டு பேசாம இருக்கிய, மாயா அண்ணி குளிச்சுகிட்டு இருக்காவ பொறவு, கூப்பிடுறேன்னு சொல்லிருக்காகா"தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு அழைப்பை அணைக்கப் போக..



அந்த பக்கம் "இச்சு" என்று சத்தம் அழுத்தமாக அவள் செவிப்பறையைத் தாக்கியது.


வானுவிற்கோ அந்த பக்கம் கேட்ட முத்தச் சத்தத்தில் தூக்கி வாரிப் போடா, தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள்.


நேரில் குழாய் அடி சண்டைக்கு போவது போல் பாவாடையைத் தூக்கி சொருகியவள், நாதாரி பயலே, எவன் டா அவன் எனக்கு முத்தம் கொடுக்கிறவன், நேருல மட்டும் மாட்டுடா, உன் குறுக்க உடைச்சு சூப் வச்சி நான் குடிக்கல, நான் என் அண்ணனுக்கு தங்கச்சி வானதி இல்லடா.."என்று கூறியவள் மேலும் சில வார்த்தைகளை அர்ச்சனை செய்துவிட்டு போனை வைத்தவளுக்கு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.


குளித்துவிட்டு வெளியே வந்த.. மாயா அவள் அவ்வாறு நிற்பதைப் பார்த்து 'தன் தமையன் ஏதோ சித்து வேலை செய்திருக்கிறான் 'என்பதை உணர்ந்தவள் இதழ்களில் ஒரு இளம் முறுவல்.


ஆம்..! சிறிது நேரத்திற்கு முன்பு அழைத்திருந்தது ஹர்ஷவர்தன் தான், வானு வரு என்று சொன்னதுமே, அவளைப் பேச வைத்தாள் ஏதாவது அவள் மனதில் உள்ளதைத் தெரிந்துக் கொள்ளலாம் என்று மாயா நினைத்திருந்தாள்.

ஆனால், அவள் கோபமாக இருப்பதைப் பார்த்து, ஏதோ நடந்திருக்குக்கிறது என்று யூகித்தவள்..

"வானதி என்னாச்சு.. ஏன் கோபமா இருக்கே.."

"அண்ணி அது யாரு போன்ல..? "

"ஏன் என்னாச்சு..? "

"அண்ணி இப்போ போன் பண்ணுனவன் எனக்கு முத்தம் கொடுத்துட்டான்" என்க..


'டேய்.. ஹர்ஷா இப்படியா டா பண்ணி வைப்ப' என நொந்துக் கொண்டவள் 'இதை எப்படிச் சமாளிக்கலாம்' என்று யோசித்தவள், "வேற ஏதாவது சொன்னானா?"என்றாள்.


"எதுவுமே பேசலை..
முத்தம் மட்டும் கொடுத்தான்"என்றாள் வானதி.


"அது ஒண்ணும் இல்லை வானதி.. என் ஃபிரண்டோட பொண்ணு வாய் பேச முடியாது, என் மேல ரொம்பப் பாசமா இருப்பாள், அவள் தான் போன் பண்ணி முத்தம் கொடுத்துருப்பா" என்றாள் சமாளிப்பாக.

"ஓ... அதான் பேசலையா... நான் ஒருத்தி அந்த பாப்பாவை திட்டிட்டேன் என தலையில் அடித்துக் கொண்டவள், சாரி சொல்லிடுங்க அண்ணி, இப்போ சாப்பிட வாங்க"என்று நகர்ந்துவிட்டாள்.


செல்லும் அவளையே பார்த்தவள்.. "எதைச் சொன்னாலும் நம்புறா, வெகுளிப் பொண்ணு "என முணுமுணுத்தாள்.


மும்பையில் இருந்து ஹர்ஷா தனது தங்கைக்கு போன் செய்ய, அந்த பக்கம் 'ஹலோ 'என்றதும் யார் என்பதை உணர்ந்துக் கொண்டவன் அமைதியாக இருந்தான்.

திரும்பவும் அவள் கத்த விளையாடி பார்க்கலாம் என்று நினைத்தவன் ஒரு முத்தம் வைக்க, பதிலுக்கு அவள் பல அர்ச்சனை மாலைகளை அவனுக்கு சூடா, காதில் ரத்தம் வராதா குறையாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், 'என் அண்ணனுக்கு தங்கச்சி வானதி இல்லடா.. 'என்ற வாக்கியத்தில் இத்தனை நேரம் இருந்த இளகுத் தன்மை மறைந்துப் போனை அணைத்துத் தூக்கி எறிந்தவன்..



"எப்போ பாரு அண்ணே.. அண்ணேன்னு சொல்லிக்கிட்டு, எனக்கும் தான் தங்கச்சி இருக்கா, அவள் உன்னை மாதிரியா என்னைச் சுத்தி சுத்தி வர்ற.. நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்க, உன்னை அப்படியே கொல்லனும் போல வருதுடி, ஆனால், முடியல லவ் பண்ணித் தொலைச்சுட்டேன் டி.. இதுக்கு மேலே முடியாது டி பட்டிகாட்டு எள்ளுருண்டை, வர்றேன் டி உன் ஊருக்கே, அங்கிருந்து உன்னை நான் உன் அண்ணனோட தங்கச்சியா இல்லாமல், இந்த ஹர்ஷவர்தனோட பொண்டாட்டியா கூட்டிட்டு வருவேன் டி, உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாட்டியும் என நினைத்துக் கொண்டான்.

நாட்கள் கடக்க.. மாயாவின் நிலத்தை உழுது நம்மாழவார் சொன்ன முறைப்படி இருபது வகையான விதைகளைக் கலந்து, நிலத்தில் விதைத்து, அதை அறுபது நாட்களுக்குப் பிறகு மடக்கி உழுது பயிர் செய்தால் ஐம்பது வருடமாக கெட்டுப் போயிருந்த நிலம் கூட.. அறுபது நாட்களுக்கு பிறகு பயிர் செய்யக் கூடிய அளவிற்கு பண்பட்ட நிலமாக மாறி விடும், மாயாவின் நிலத்திலும் அவ்வாறு செய்து பயிர் வளர ஆரம்பித்திருந்தது.


அவள் நிலத்தைச் சுற்றி இயற்க்கை வேலியை அமைக்க, கிளுவை மரங்களை வெட்டி இடை வெளி வெட்டி ஊன்றி, நொச்சி, முல்லை, பொன் அறளி, மயில் கொன்றை போன்ற கொடிகளை படர விட்டிருந்தனர்.உயிர் வேலி மரங்கள் பாதுகாப்பு வேலியாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், உணவு தொழிற்சாலையாகவும், புயல் காலங்களில் பாதுகாப்பு அரணாகவும், மண் அரிப்பை தடுப்பதில் பெரும் பங்காற்றுகின்றன..


மாயா தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அவள் முன் வந்து நின்றாள் மலர்.

"எதுக்காக நீ இங்க வந்துருக்கே? " என்று மலர் கேட்டாள்.

'உனக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா..!'என்று ரீதியில் பார்த்துவிட்டு நகர போனவளை கை நீட்டி தடுத்தவள், "நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ.."

"பார்த்தா தெரியல விவசாயம் பண்ண வந்துருக்கேன்" நக்கலாக சொல்ல..

"மத்தவங்க வேண்டுமானால் நீ சொல்வதை நம்பலாம், நான் நம்ப மாட்டேன், பதில் சொல்லு.."

"உன்னை மாதிரி ஒருத்தன் காதலுக்கு சம்மதம் சொல்லிட்டு, அவன் உன் அப்பாவைக் கொன்ன குடும்பத்தோட வாரிசுன்னு தெரிஞ்சதும் வேண்டாம்னு சொல்லிட்டு, இன்னொருத்தனை எதுவுமே நடக்காத மாதிரி கல்யாணம் பண்ணிக்க தயாராகிட்டியே.. அந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்க மட்டும் வரல" என்று அவளை இடம் பார்த்து அடித்தாள் மாயா..!


"உன... உனக்கு இது எப்படித் தெரியும்" திக்கி திணறிப் பேச..

"கேலியாக சிரித்த மாயா.. உங்க வீட்ல உள்ளவங்க எல்லாருடைய ஜாதகமும் எனக்குத் தெரியும். வருணனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்க உன் அம்மாவுக்கு விருப்பம் இல்லேன்ற விஷயமும் தெரியும், உன் அண்ணன் சொன்னதுக்காகாத்தான் உன் அம்மா சம்மதிச்சாங்கன்னு தெரியும்."

அவள் பேச பேச அதிர்ந்து சிலையாக நின்றாள் மலர்.

"நான் சொல்றதை கேளு, நந்தன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், அவன் உன்னைய விரும்பல, நீ உனக்கொருப் பாதுகாப்பான வாழ்க்கை வேண்டும் அப்டிங்கிறதுக்காகா வருணன விரும்புறதா சொல்லிக்கிட்டு இருக்கே..

அதை விடப் பாதுகாப்பான வாழ்க்கையை உனக்கு சரவணன் கொடுப்பான், வளர்ந்து வர்ற தொழில் அதிபன், உன்கிட்ட அவன் பொய் சொல்லிக் காதலிச்சிருந்தாலும், அவன் காதல் உண்மையானது, அவன் தான் உனக்கு சரியானவன்."


"இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்கோ"என்று மாயா கூற..


"ஓ.. இப்போதான் புரியுது! இந்தக் கல்யாணத்தை நிறுத்த அவன் அனுப்புன ஆளா நீ என்ற மலர். நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கோ யாரு என்னப் பண்ணி இந்த கல்யாணத்தை தடுக்க முயற்சி பண்ணாலும் இந்த கல்யாணம் நடக்கும் என்றாள்."


"வீணா என் கிட்ட சவால் விடாதே.. இந்தக் கல்யாணம் நடக்காது. அதை, உங்க அம்மாவே நிறுத்துவாங்க, நிறுத்த வைப்பேன்" என்ற மாயா நகர்ந்து சென்றாள்.


அடுத்த நாள் தாமரையிடம் மாயா கை நீட்டி ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருக்க.. இதை தூரத்தில் இருந்து பார்த்த வருணன் அவர்கள் அருகில் வந்தான்.

"என்ன மா இவங்க ஏன் கோபமா பேசுறாங்க, நீங்களும் அமைதியா இருக்கீங்க" என்றான்.

"அதான் உங்க புள்ளை கேட்குறார்ல.. சொல்லுங்க அத்தை" என்றாள் அழுத்தி.

தடுமாறிய தாமரை "அது ஒண்ணுமில்லைக் கண்ணா, இந்தப் பொண்ணு இங்கே தங்கிருக்கிறதுக்கு, சாப்பாட்டுக்கு எல்லாம் காசு கொடுத்துச்சு, அதே நான் வாங்களை. அதை வாங்கிக்கச் சொல்லி கோபமா பேசுது" என்றார்.

"ஏங்க நாங்க என்ன காசுக்காகவ இதெல்லாம் செய்றோம், இது கிராமம்ங்க, இங்க யாரும் பணத்துக்காகா எதுவும் செய்ய மாட்டோம் உங்க பணத்தை நீங்களே வச்சுக்கோங்க "என்றவன்.

"அம்மா நான் ரத்த தானா முகாம்ல ரத்தம் கொடுக்க போறேன், லேட்டா தான் வருவேன்" என்று சொல்லிக் கிளம்ப..


"இதுதான் சமயம் என்று யோசித்தவள்.. நந்தன் நானும் வர்றேன் என்னையும் கூட்டிட்டு போங்க" என்றாள்.

"நீங்க ஏன் அங்கே...? "

"நானும் பிளட் டொனேட் பண்ணனும்.."


"சரி வாங்க" என்றுக் கூறி அழைத்துச் சென்றான்.


அவன் வண்டியில் பின்னால் நெருங்கி அமர்ந்தவள், அவன் தோள் மீது கைகளை போட்டு கொண்டவள், கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்துக் கொண்டே வந்தாள் மாயா.. அவள் கை போட்டுருப்பது, அவஸ்தையாக உணர்ந்தவன்..

"கையை எடுங்க பின்னாடி உள்ள கம்பியை பிடிச்சுக்கோங்க.."என்றான்

"எனக்கு பைக்ல போய் பழக்கம் இல்லை மிஸ்டர். நந்தன், இப்படி உங்களைப் பிடிச்சுக்கிட்டாத்தான், விழா மாட்டேன்" என மேலும் நெருங்கி அமர்ந்தாள்.


ரத்தம் கொடுத்து முடித்ததும், "நந்தன் நான் டாக்டரைப் பார்த்துட்டு வர்றேன்" என்று சொல்லி கிளம்பியவள் அங்குள்ள மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தாள்.

"என்னங்க அப்படி சீரியசா டாக்டர்கிட்ட பேசுனீங்க..? "

"அது ஒண்ணும் இல்லை நந்தன், பொண்ணுங்க சம்மந்தப்பட்ட விஷயம்" என்றதும் அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான் வருணன்.


திருமணத்திற்கு ஏழு நாட்கள் இருக்க.. நாளை அனைவரும் துணி எடுக்க செல்வதாக முடிவு செய்திருந்தனர்.

மாலை வேளையில் மாயா மாடியில் நடை பயின்று கொண்டிருக்க.. அவன் போன் ஒலி எழுப்பியது.. அதை ஏற்று காதில் வைத்தவள்.

...............

நம்ம இடத்துல வைங்க நான் உடனே வர்றேன் என்றாவள், அங்குள்ளவர்களிடம் அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு சென்னைக்குச் சென்றாள்.

நான்கு மணி நேரத்திற்க்கு பிறகு...

அந்த அறை முழுவதும் சிறு வெளிச்சம் கூட உள்ளே வர முடியாதா அளவிற்கு இருள் படர்ந்திருக்க, தனக்குப் பிடித்த ஜோக்கர் படப் பாடலை கண்கள் மூடி கேட்டுக்கொண்டிருந்தாள், அதுவே படர்ந்திருந்த இருளுக்கும், அந்த இசைக்கும் ஒரு வித பயப்பந்தை தொண்டைக்கும் வயிற்றுக்கும் உருளச் செய்தது, அந்த அறையில் ஒரு இருக்கையில் கை, கால்கள் கட்டி போட்டு அமர வைத்திருந்தவனுக்கு..!


அந்த இசை முழுதையும் கேட்டு முடித்த பிறகு கண்களைத் திறந்தாள் மாயாவதி. அந்த இடத்தை விட்டு எழுந்தவள், மின்சார விளக்கை உயிர்பித்து, மெதுவாக அவன் அருகில் சென்றாள்.

அவளைக் கண்டதும் அவனுக்கு பெண் ரூபத்தில் கருப்பு உடை அணிந்த காலன் தன் முன் நிற்பது போல் தோன்ற, எச்சிலை கூட்டி விழுங்கினான்.


அவன் முன் சாகவாசமாக இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு, ஒரு கையில் கன்னத்தைத் தாங்கி, சுவாரஸ்யமாக படம் பார்ப்பதுப் போல் அவனைப் பார்த்தாள்.

அவனோ" மாயா... என்னை விட்டுடு, ஏதோ ஆசையில பண்ணிட்டேன். நான் எங்கையாவது கண் காணாத இடத்திற்குப் போயிடுறேன்.இந்த ஒரு தடவை மன்னிச்சுடு.."ப்ளீஸ் என்று கெஞ்சினான்.

அவன் கெஞ்சுவதை எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்..
"அன்னைக்கும் இப்படித்தானே கெஞ்சுனேன், விட்டுயா, இன்னைக்கும் அதே சொத்துக்காக கொலை பண்ற அளவுக்கு போயிருக்கே.. உன்னை என்ன பண்ணலாம்" சொல்லிக் கொண்டே.. ஒரு கட்டரை எடுத்து அவன் முன் ஆராய்ச்சி செய்தாள்.

அந்த கட்டரைப் பார்த்துப் பயந்தவன் "ப்ளீஸ் மாயா.. நான் பண்ணது தப்புதான், அதான் உன் அண்ணன் என் கையை உடைச்சானே.."

"அப்படி இருந்தும் நீ திருந்தலையே.."ராகமாக இழுத்துக்கு கூறினாள்.


"இனிமேல் திருந்திடுவேன் மாயா என்னை விட்டுரு.."


"விட்டுறலாம்.. ஆனால், இது வரைக்கும் நடந்துகிட்ட எல்லாத்துக்கும் தண்டனை கொடுக்கணும்ல, அதைக் கொடுத்துட்டு விட்டுறேன். பயப்பிடாதே உன்னைக் கொல்லமாட்டேன்" என்றவள்.


அவன் கையை பூ போல பற்றி, "பரவாயில்லையே அழுக்கு இல்லாமல் சுத்தமா வச்சுருக்கே" எனக் கூறி, நடுவிரல் நகத்தில், கட்டுரை வைக்க, அவள் செய்யப் போவதை உணர்ந்தவன்..

"மாயா.. ப்ளீஸ் மாயா.. நான் உன் அத்தைப் பையன் என்னை விட்டுரு" என்று கெஞ்ச..

அவன் கெஞ்சல் அனைத்தையும் காதில் வாங்காதவள்..

"இது என் கிட்ட தப்பா நடந்துகிட்டதுக்கு" எனக் கூறி அவன் நகத்தில் கட்டுரை வைத்து அழுத்த அந்தக் கட்டிடமே நடுங்கும் அளவிற்கு கதற கதற அவன் நகத்தைப் பிடிங்கி எறிந்தாள்.

அவன் மரண ஓலம்.. காதைக் கிழிக்க அதை எதையும் சட்டை செய்யாதவள், அடுத்த நகத்தில் கட்டடரை வைத்து "இது பல பெண்களை ஏமாத்துனதுக்கு "எனச் சொல்லி அடுத்த நகத்தைப் பிடிங்கி எறிந்தவள்.

"கடைசியாக இது நீ அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை பண்ண முயற்சி பண்ணதுக்கு" என்று கூறி ஐந்து விரல் நகங்களையும் அவன் கதறியும் சலனேமே இல்லாமல் பிடிங்கி எறிந்தாள்.


அந்த வலியிலும்.. "என்னை விட்டுரு மாயா.. இனி இப்படிப் பண்ண மாட்டேன்" என அரை மயக்கத்திலும் அவன் பிதற்ற..

"ஆம்பளைன்ற திமிறுல தானே இதெல்லாம் செஞ்ச.. அதையே இல்லாமல் செஞ்சுட்டா..?" என்க..


"ப்ளீஸ் மாயா அப்படி எதுவும் செஞ்சுடாதே.. என்னை விட்டுரு"என்று குழறி குழறி அவன் பேச..


"பொண்ணுங்கள மனுஷியா நினைக்காமல், வெறும் சதையா நினைக்கிற உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் இதான்டா தண்டனை" என்றவள்..

தன் பி ஏவை அழைத்து .. "டாக்டர் வந்தாச்சா" என்று கேட்டாள்

"வெளில வெயிட் பண்றாரு மேடம்.."

"சரி.. இவன் இனிமேல் எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது.ஏன்டா வாழ்றோம்னு நினைச்சு நினைச்சு இவனே தற்கொலைப் பண்ணிக்கிட்டு சாகனும், அனஸ்தீசியா கொடுத்துப் பண்ணத்திங்க, அவன் கதறல் என் காதுல விழணும்"

"சரிங்க மேடம்.."


"இந்த மாயகிட்ட விளையாண்ட இதான் கதி!" எனச் சொல்லி இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டவள் வெளியில் செல்ல, டாக்டர் உள்ளே வந்து அவள் சொன்ன படி செய்ய, அந்த இடமே அவன் கதறலில் நடுங்க, அது எதுவும் தன் காதில் விழாதது போல், குளிர் கண்ணாடியை ஸ்டைலாக மாட்டிக்கொண்டு காரில் ஏறிச் சென்றாள் மாயாவதி.


நேராக ஹாஸ்பிடலலுக்கு சென்றவள்.. "இனி ஆபத்து இல்லைன்னு நினைக்கிறேன், இருந்தாலும் செக்யூரிட்டி டயிட்டாவே இருக்கட்டும், நான் இங்க வந்தது யாருக்கும் தெரியக் கூடாது, அப்பாவுக்கு கூடா.. யூரோப்ல இருக்கிற மாதிரியே மைண்டைன் பண்ணுங்க, காண்டாக்ட்ல இருக்கேன்னு சொல்லுங்க, அவங்க கேட்டாலும் இதே பதிலே சொல்லுங்க.. சரியா..? "என தன் பி ஏ விடம் கூறினாள்

"சரிங்க மேடம் "என்றான் அவனும்..

அடுத்த நாள் மாலை செந்தாரையூருக்கு வந்தவள் அசதிக் காரணமாக தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.


கிராமத்தில் மணப்பெண்ணைப் புடவை எடுக்க அழைத்து செல்வது வழக்கம் இல்லை என்பதால், வானுவையும், மலரையும் வீட்டில் விட்டு செல்ல, மலர் சிறிது நேரம் அங்கே தங்கிவிட்டு தனது வீட்டிற்கு சென்றவள்.சாயங்காலம் அனைவரும் வந்த பின்னரே.. வருணன் வீட்டிற்கு வந்தாள்.

தாமரை மலருக்கு அவர்கள் எடுத்த முகுர்த்த புடவையை எடுத்துக் காட்டி கொண்டிருக்க.. மலரின் அம்மா.. தனம்..

"என்ன வானதியே கண்ணுல காணல "என்றார்.

"இந்நேரம் வண்டிச் சத்தம் கேட்டதுக்கு குதிச்சுகிட்டு வந்துருப்பாளே.. என்ன பண்றான்னு தெரியல.. என்ற தாமரை இருங்க நான் போய் கூட்டிட்டு வர்றேன்" என்று எழ..

"இருங்க அண்ணி நானும் வர்றேன்.. எல்லாத்தையும் அங்க உள்ள ரூம்லதானே வைக்க போறியே, எல்லாத்தையும் மேலையே எடுத்துட்டு போயி பார்த்துக்குவோம்"என்று சொல்லிவிட்டு அனைவரும் ஆளுக்கொரு பையைத் தூக்கிக் கொண்டு மேலே சென்று வானதி அறையின் கதவைத் திறக்க அங்கே கண்டக் காட்சியில்.. அனைவரும் அதிர்ச்சியில் கையில் இருந்த பை தானாக கீழே விழ.. வருணன் முகத்தில் எரிமலைப் போல் சீற்றம் வெடித்துச் சிதற தயாராக இருந்தது.


மலர்வாள்..!!

ஹாய் பிரண்ட்ஸ்...

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

கருத்துத் திரி👇

 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்-7


கதவைத் திறந்தவர்களின் கண்ணில் பட்டது ஹர்ஷா வானதியின் இதழில் அவள் திமிற திமிற கவிபாடிக் கொண்டிருந்ததைதான், ஆம்! ஹர்ஷா அலைபேசியில் அவள் குரலை கேட்டதுமே இருப்பு கொள்ளாதவன், அடுத்த நாளே மாயாவிடம் கூறாமல் மும்பையில் இருந்து விமானத்தில் வந்திறங்கியவன், வாடகை வண்டியைப் பிடித்துக் கொண்டு வருணன் வீட்டை அடைந்தான்.


அவன் வந்தபோது அனைவரும் துணிக்கடைக்குச் சென்றிருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் மாயாவிற்கு அழைக்க, அவள் போன் சார்ஜ் இல்லாமல் அணைப்பில் இருந்தது.


அப்பொழுது அங்கு வேலை செய்யும் ஒருவர்.. "தம்பி யாரு ஊருக்கு புதுசா?" என்று கேட்க..


கடுப்பாக "ஆமாம்"என்றான்..


"யார பார்க்க வந்துருக்கீக..? "


"மாயாவ பார்க்கணும்" என்றான்..


"ஓ.. பட்டணத்து பாப்பாவையா.. அவுக மாடில இருப்பாக நீங்க போய் பாருங்க, என்னைத்தேன் வீட்டை பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்காகா என்றார்" அந்த பெரியவர்..


பதிலுக்கு ஒரு நன்றி கூட அவரிடம் உரைக்காமல், தனது பேகை தூக்கிக் கொண்டு மேலே வர.. மாயா உறங்கிக் கொண்டிருந்தாள், அவளை எழுப்பாமல் பேகை வைத்துவிட்டு அவள் அருகில் சென்று மெல்லிய புன்னகையோடு தலையை வருடி கொடுத்தவன், 'உனக்கு இது தேவையா நீ பாட்டுக்கு ராணி மாதிரி இருக்கிறத விட்டுட்டு இந்த பட்டிக்காட்டுள காட்டுலையும் மேட்டுலையும் சுத்திகிட்டு இருக்கே'என்று நினைத்து பெருமூச்சு விட்டவன்.


வானதியின் அறை, தன் அறைக்கு பக்கத்தில்தான் என்று மாயா ஏற்கனவே கூறியிருந்ததால், வீட்டில் யாரும் இல்லை, அவளும் இருக்கமாட்டாள், எனவே அவள் அறையை நோட்டமிடலாம் என்று சென்றவன் கதவை திறக்க.. வானதி சாளரத்தின் அருகில் நின்று கொண்டு வெளியே வெறித்துப் பார்த்து அழுது கொண்டிருக்க, அது அவளுக்கு பின்னால் நின்றதால் அவனுக்கு தெரியாமல் போனது,அவளும் ஆழ்ந்த சிந்தனையில் தன் நினைவுகளை தொலைத்ததால் கதவு திறக்கும் சத்தமும் அவள் காதில் விழாமல் போனது.


பாவாடை தாவணி அணிந்திருந்த்தால் மறைத்தும் மறைக்காமல் தெரிந்த அவளின் மாந்தளிர் நிறத்தில் இருந்த மெல்லிடை அவனுக்கு காட்சி அளிக்க, அவள் மேல் உள்ள கோபம் எல்லாம் தண்ணீரில் போட்ட உப்பைப் போல் கரைந்து ,அவன் மனம் முழுவதும் அவள் மேல் காதல் என்ற ஒன்று மட்டுமே வியாபிக்க மெதுவாக எட்டுக்கல் எடுத்து வைத்து அவளை நெருங்கி இடையைப் பற்றினான்.


திடீரென்ற தீண்டுதலில் தூக்கி வாரிப் போட திரும்பியவள் கண்டது இத்தனை நேரம் யாருக்காக அழுதுக்கொண்டிருந்தாளோ அவனே அவள் முன் நிற்க.. "ஹர்ஷா சார்" என்று உதடுகள் தானாக முணுமுணுத்தது.


"பரவாயில்லையே.. என் பேரு கூட உனக்கு ஞாபகம் இருக்கா..? " கேலியாக கூறியவன், அவளை இன்னும் நெருக்கமாக இழுத்து நிற்க வைத்தான்..


அப்பொழுதுதான் அவன் தன் இடையைப் பற்றி இருப்பதை உணர்ந்தவள் அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்ய.. அவள் தன்னிடம் இருந்து விலகுவது பிடிக்காமல் அவள் கையை பின்னால் மடக்கி தன் புறம் இழுக்க அவன் மீதே மோதி நின்றாள்.


"ஹர்ஷா சார்.. இது ரொம்பத் தப்பு என்னை விட்டுடுங்க, என் வீட்டுகுள்ள அதுவும், என் ரூம்குள்ள வந்து இப்படி தப்பா நடந்துக்கிறிங்க, என் அண்ணன் மட்டும் இதை பார்த்துச்சு அவ்வளவுதான்"என்க..


"என்னடி செய்வான் உன் பட்டிக்காட்டு அண்ணன், அதுவும் இந்த ஹர்ஷாவை என்ன செய்ய முடியும்.உடனே வர சொல்லுடி நான் உன் ரூம்லையே இருக்கேன்.அவனால, என்னை ஒண்ணும் செய்ய முடியாது.மாட்டு சாணத்தை எப்படி உரமாக்கலாம்,செடிக்கு எப்படி தண்ணீர் பாய்ச்சணும் இதைத் தவிர அவனுக்கு என்னத் தெரியும்" என்று அவனை அவமானப்படுத்தினான்.


அதில் வெகுண்டவள் "என்ன டா சொன்னே என் அண்ணனை பத்தி" மரியாதையைக் கைவிட்டவளாக சண்டைக்கு கிளம்பியவள்,"என் அண்ணன் அந்த மாதிரி மாட்டுச் சாணத்தை உரமாக்களனா உங்க பணக்கார வர்க்கம் ஆர்கானிக் ஃபுட் சாப்பிடுறிங்களே" அது எங்க இருந்து வரும் என்றவள்.."மரியாதையா இங்கே இருந்து போய்டு உன்னை எனக்கு பிடிக்கவே இல்லை, அதுவும் என் அண்ணனை மரியாதை இல்லாமல் பேசுறவனை சுத்தமாக பிடிக்காது, எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் முதல்ல என் கண் முன்னே நிற்க்காமல் கிளம்புங்க" என்று குரலை உயர்த்தினாள்.


அவள் கல்யாணம் என்று சொன்னதும் கேட்கக் கூடாத வார்த்தையைக் கேட்டவன் போல், அவன் பிடித்திருந்த அவள் கரத்தில் மேலும் அழுத்தம் கூட்டி, பல்லைக் கடித்துக் கொண்டு, "என்னடி சொன்ன கல்யாணமா, கல்யாணம் நடக்கும் அது யாரு கூடாத் தெரியுமா என் கூட மட்டும் தான்" மமதையாக பேச..


"நல்லா கனவு காணுங்க உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது, அதுவும் என் அண்ணனை பத்தி தப்பா பேசுன மனுஷனை நான் என்னைக்குமே ஏத்துக்க மாட்டேன்" என்றாள்.


"ஓ.. அப்படியா அப்புறம் நான் என்ன இளிச்சவாயனா, இத்தனை நாள் காதலிச்சவளை அடுத்தவனுக்கு விட்டு கொடுத்துட்டு எங்கிருந்தாலும் வாழ்கணு பாட, ஹர்ஷா வர்தன் டி.. என்னுடையதுன்னு நான் முடிவு பண்ணிட்டேனா அது எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும், சாக்கடையில் கிடந்தாக் கூட எனக்குத்தான், உனக்கு கொஞ்ச நாள் டைம் கொடுத்தேன் நீயா என்னை தேடி வருவேன்னு, ஆனால் நீ வராமல் கல்யாணத்துக்கு தயாராகிட்ட" என்று சொல்ல...


"உங்களுக்கு மட்டும் விருப்பம் இருந்தால் பத்தாது சார் எதிரில் இருப்பவங்ககுக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டுட்டுதான் உயிருள்ள பொருளை உரிமை கொண்டாடணும், அதும் உங்களை மாதிரி அடுத்தவங்கள மதிக்க தெரியாதவங்களுக்கு, என் அப்பா மாதிரி நினைக்கிற என் அண்ணனை தரக் குறைவாக பேசியவருக்கு, என்னை உரிமை கொண்டாட தகுதியே இல்லை"
என்று முடிப்பதற்குள் அவள் மெல்லிய இதழ்களில் தன் வன்மையான இதழ்களை பொறுத்தியிருந்தான் அந்த அடாவடி காதலன், அதில் அவனிடம் இருந்து விடுபட திமிற, அந்த சமயத்தில் தான் அனைவரும் கதைவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தனர்.


அதைக் கண்டவர்கள் அதிர்ச்சியில் பையை கீழே போட.. வருணனோ தன் வீட்டிற்குள்ளே ஒருவன் நுழைந்து, தன் தங்கையின் அறைக்குள்ளே வந்து அவளிடம் அத்து மீறிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனை துண்டு துண்டாக வெட்டி போடும் அளவிற்கு கண்முன் தெரியாத அளவிற்கு ரௌத்திரம் பொங்க...


"டேய்.." என்று கத்திக் கொண்டே.. தனது தங்கையிடம் இருந்து அவனைப் பிரித்து எடுத்து அடிக்க கையை ஓங்க, அவன் கையைத் தன் தமையன் மீது தீண்டாது பிடித்த மாயா, இருவருக்கும் இடையில் வந்து நின்றாள்.


மாயா அவர்கள் பேச்சு சத்தத்தில் விழித்துக் கொண்டவள் எழுந்து அமர, அருகில் ஒரு பேக் இருப்பதைக் கண்டு திடிகிட்டவள் "ஹர்ஷா.. இப்போ ஏன் வந்தான் சரியான அவசரக்காரன்" என்று முணுமுணுத்தவள், வானதி அறையில் வருணன் சத்தம் கேட்க என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தவள் சிறிதும் தாமதிக்காது அவள் அறை நோக்கி ஓடியவள் வருணன் ஹர்ஷாவை அடிக்க ஓங்கிய கையைச் சரியான நேரத்திற்குப் பற்றி தடுத்திருந்தாள்.


அவள் கையைப் பற்றியதும் கோபம் கொண்டவன், "என் கையை முதல்ல விடுங்க அவனை நான் கண்ட துண்டமா வெட்டி என் வீட்டு நாய்க்கு போடல, நான் ஒரு நல்ல ஆம்பளையே இல்லைங்க."


என் வீட்டுக்கு வந்து, அடுத்த வாரம் கல்யாணம் ஆகப்போற பொண்ணுகிட்ட இப்படி தப்பா நடந்துகிறவன நான் வெட்டல என் தங்கச்சிக்கு அண்ணணாக இருக்கிறதுல அர்த்தமே இல்லைங்க" என்று கத்தினான்.


"கொஞ்சம் பொறுமையா இருங்க நந்தன் பேசிக்கலாம் என்று மாயா"கூற..


"என்னங்க சொல்றிங்க.. பேசிக்கலாமா, இதுவே அவன் தங்கச்சிகிட்ட நான் இந்த மாதிரி நடந்திருந்தால் என்னங்க பண்ணிருப்பான்" என்று வருணன் கூற..


"டேய்... யாரைப் பத்தி பேசுறேன்னு தெரியுமா" என ஹர்ஷா உறும..


"ஏன் டா உன் தங்கச்சினா ஒரு மாதிரி அடுத்தவன் தங்கச்சினா ஒரு மாதிரியா" சினம் கொண்ட வேங்கையென பொங்கியவன் மாயா கையை உதறிவிட்டு ஹர்ஷாவின் மூக்கில் ஒரு குத்து வைக்க, அவன் அடி நாசி உடைந்து அதிலிருந்து ரத்தம் பொலபொலவென வழிய தடுமாறிய ஹர்ஷா தன்னை நிதானித்து நின்றவன், ஒரு பட்டிகாட்டான் தன்னை அடித்தது கோபத்தைக் கிளப்ப வருணன் முகத்தில் தனது நரம்போடிய கையை மடக்கி ஒரு குத்து குத்த உதட்டில் பல் வெட்டி கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்து வருணனுக்கு..


அதிர்ச்சியில் இருந்த அனைவரும் அவர்கள் அடித்துக் கொண்டதும் வெற்றி, மலர், தாமரை என அனைவரும் வருணனைப் பிடிக்க, மாயாவோ ஹர்ஷாவை பிடிக்க அதில் ஓவராக திமிற 'பளார்' என தன் தமையனின் கன்னத்தில் அறைந்திருந்தாள் மாயா..

அவள் அடித்த அடியில் ஹர்ஷா அமைதியாக.. வருணன் கூட திமிறலை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தவன்..


"இவன் உங்களுக்கு என்ன வேணும்?"என்று அழுத்தமாக கேட்டான்.


மாயா கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் "என் அண்ணன்" என்க..


அங்குள்ள அனைவருக்கும் அவள் பதில் அதிர்ச்சியளிக்க, இத்தனை நாள் மாயா பழகியும் தன்னிடம் உண்மையை மறைத்தது வானதிக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.


"ஒரு பொறுக்கி அண்ணன் பண்ண தப்புக்கு, எதுவுமே பேசாமல் இருக்கிற உங்ககுக்கு இந்த வீட்ல இடம் இல்லை உடனே கிளம்புங்க" என்றான்.


"யார பார்த்து பொறுக்கின்னு சொல்றிங்க நந்தன் மைண்ட் யோர் வொர்ட்ஸ்"என்றாள்.


"பொறுக்கிய பொறுக்கின்னு சொல்லாமல் தியாகின்னா சொல்லுவாங்க.." இகழ்வாய் வருணன் கூறினான்.


"இங்க பாருங்க நந்தன் வளவளன்னு பேச வேண்டாம். நான் நேரா விசயத்துக்கு வர்றேன் என் அண்ணன் தான் வானதி வேலை பார்த்த கம்பனியோட எம்.டி, அவன் அவளை விரும்பியிருக்கான், அவகிட்டையும் விருப்பத்தைச் சொல்லிருக்கான் அவள் ஒத்துக்களை, அதான் இப்படி நடந்துக்கிட்டான், நான் அவன் இப்படி நடந்துக்கிட்டத ஆதரிக்கல, நடந்துடுச்சு மாத்த முடியாது.



இனி நடக்க போறதைப் பார்ப்போம் இப்போ நான் கேட்குறேன் என் அண்ணனுக்கு உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணி வைங்க, நல்லா பார்த்துக்கொள்வான் வானதி மேல் உயிரையே வச்சிருக்கான், எங்க அவள் அவனுக்கு கிடைக்காமல் போய்டுவாளோ அப்படின்ற பயத்துல தான் இப்படி நடந்துக்கிட்டான்" என்றாள்.


"யாரு இவனுக்கா.. கேலியாக சொல்லியவன், வெற்றியைப் பிடித்து இழுத்து தங்கம் மாதிரி ஒரு மாப்பிள்ளை இருக்கும்போது, இவனுக்கு நான் என் தங்கச்சிய கட்டிக்கொடுக்கணுமா,அதுவும் சைக்கோ மாதிரி நடந்துகொள்பவனுக்கு கொடுக்க மாட்டேன், வானுக்கிட தப்பா நடந்துக்கிட்டதை கூட ஒரு வெறி நாய் கடிச்சதா நினைச்சுகுவேனே தவிர இவனுக்கு தர மாட்டேன் என் வானு என் வெற்றிக்குத்தான்" என்றான்.


"அது நான் இருக்கிற வரைக்கும் நடக்க விடமாட்டேன், இவ்வளவு தூரம் நான் கண்ணால பார்த்த பிறகு இந்த கல்யாணம் நடக்காது.நான் அப்பவே சொன்னேன் இந்த குடும்பம் வேண்டாம்னு இந்த பாவி மக கேட்டாளா, இப்போ நல்லா தெரியுதா லட்சணம்" என்று தனம் வசைபாடிக் கொண்டிருந்தார்.


"ஏன் அத்தை இப்படி பேசுறீங்க, அவன் பண்ண தப்புக்கு என் தங்கச்சி என்ன பண்ணுவா" என்று வருணன் பேச...


"இவ ரூம்குல்லையே வந்துருக்கான் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா" வானதியை பற்றி தப்பாக பேச..


"அத்தே.." என்று கத்தியவன், "தப்பா பேசாதீங்க என் தங்கச்சியை பத்தி, வெற்றியிடம் திரும்பி வெற்றி நீ சொல்லுடா என் தங்கச்சிய கட்டிக்கிவியா..? " மாட்டியா..? "


"அவன் என்ன சொல்றது நான் சொல்றதுதான் முடிவு"என்றார் தனம்.


"நீ சொல்லுடா வெற்றி என்று வருணன்" கேட்க அன்று வானதி முகம் சுருங்கியதை வைத்து எதையோ கண்டுகொண்டவனாக "இல்லை டா அம்மா விருப்பம் தான் என் விருப்பம்" என்றான் வெற்றி.


அதில் உடைந்து போன வருணன் எந்த காலத்துலடா நீங்க எல்லாம் இருக்கீங்க, ஒரு பொண்ணுக்கு விருப்பம் இல்லாமல் ஒரு விஷயம் நடந்தா அதுக்கு அவள் மேலையே பழியை போட்டு, அவளை இந்த சமுதாயத்தில் வாழவிடாமல் பண்ணிடுறிங்க, ஒரு ஆம்பளை எது வேண்டுமானாலும் பண்ணலாம் கணக்கு இல்லை, அவனை தட்டி கேட்கமாட்டிங்க அப்படித்தானே" ஆதங்கமாக கூறியவன்.


"இதே வானு நிலைமையில் மலர் இருந்திருந்தால் , அவனை கொன்னு போட்டுட்டு அவள் கழுத்துல தாலி கட்டிருப்பேன்டா" என்க..


அவன் பேச பேச இமைக்காமல் மாயா அவனைப் பார்த்துகொண்டிருக்க, மலர் மனதில் குற்ற உணர்ச்சியில் ஒரு வலி பரவியது.


"சரி போங்க டா.. என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்காமலா போயிடுவான்" என்றவன் அழுதுகொண்டிருந்த வானதியின் கண்ணைத் துடைத்துவிட்டு அணைத்துக் கொண்டான்.


"வெற்றியோ மலர்.."என்று ஆரம்பிக்க "என்னை நம்பி வர போறவளை நான் கை விட மாட்டேன்டா" என்று வருணன் கூறினான்.


தனமோ... "நான் இந்த வீட்ல எந்த சம்மந்தமும் வச்சுக்க விரும்பல, அப்படி மலரு அவனைத்தான் கலயாணம் பண்ணிக்கணும் ஆசை பட்டா நான் செத்த பிறகு பண்ணிக்கட்டும்" என்க.


"அம்மா என்று மலரும் வெற்றியும்" அவர் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டனர்.


"நான் பேச்சுக்கு சொல்லல, உண்மையா சொல்றேன், நான் சொல்ற மாதிரி நீங்க கேட்டு நடக்கல, என்னை உயிரோடு பார்க்க முடியாது."


அதற்குள் வானதி அவர் அருகில் சென்று "அத்தை தயவு செய்து மலர் ஆசையையாவது நிறைவேறட்டும் அவளுக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க" எனக் கெஞ்ச.. அவள் பேச்சை உதாசினபடுத்தி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.


மலரிடம் வந்தவன் "மலரு உனக்கு விருப்பம்னா சொல்லு, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" வருணன் சொல்ல .. கண்ணீர் ஆறாக பெருக தன் மனதை திடப் படுத்தி கொண்டவள், தந்தை சிறு வயதிலே இறந்ததும் கஷ்ட்டப்பட்டு வளர்த்த அன்னையின் முகம் மனதில் ஊசலாட..


"என்னால என் அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாது மாமா, அத்தோடு உங்க உயர்வான குணத்துக்கு நான் தகுதி இல்லாதவள்" என்று கூறியவள் மாயாவை 'சொன்னது போல் செய்துவிட்டாயே' என்ற பார்வைப் பார்த்துவிட்டு அழுதுக்கொண்டே ஓடினாள், இதில் அவள் அறியாத ஒன்று மாயா எதுவுமே செய்யாமல் அனைத்தும் அவளுக்கு சாதகமாக அமைந்தது தான், தனம் வெற்றியை கை பற்றி இழுத்துக் கொண்டு "நல்ல குடும்பம்" எனக் கூறி அவனை அழைத்துச் சென்று விட்டார்


அவ்வளவு நேரம் உணர்வற்று நின்றிருந்த தாமரை தொப்பென்று அமர்ந்து வாய்விட்டு கதற.. வருணனும், வானும் அருகில் சென்று "அம்மா அழாதீங்க"என்று தேற்ற..


"எப்படி கண்ணா அழாமல் இருக்க சொல்ற, உங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் இப்படி நட்டாத்துல நிக்கிதே.. இப்படி ஒரு விஷயம் நடந்ததுன்னு தெரிஞ்சா ஊரே கை கொட்டிச் சிரிக்குமே கண்ணா, பொம்பளை புள்ள அவளுக்கு மாப்பிளையே கிடைக்காதே"என்ற அழுதார்.


அவர் அருகில் வந்த மாயா "இங்க பாருங்க ஆண்டி அழாதீங்க இப்போ ஒண்ணும் கெட்டுப் போகலை, நீங்க பிக்ஸ் பண்ண தேதிலையே இந்த கல்யாணம் நடக்கும் ஹர்ஷாவுக்கு, வானதிக்கும் என்ன சொல்றிங்க யோசிச்சு சொல்லுங்க" என்க..


வருணன் ஏதோ மறுத்து பேச போக.. "கண்ணா இவ்வளவு தூரம் நடந்த பிறகு வேற மாப்பிள்ளை நாம பார்க்க முடியாது பா, கல்யாணம் வரைக்கும் வந்து நின்னு போன பொண்ணை யாரும் கட்டிக்க மாட்டங்க கண்ணா.."


"அதுக்கு என்னமா பண்ணனும்"உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.


"அந்த பையனுக்கே கட்டி வெச்சுடுவோம் பா" எனக் கூற, ஹர்ஷாவின் இதழ்களில் நினைத்ததைச் சாதித்துவிட்ட மமதையில் புன்னகை அரும்பியது.


"என்ன மா பேசுறீங்க, நான் வானுக்கு நல்ல மாப்பிள்ளையா கொண்டு வந்து இறக்குறேன், இந்த அயோக்கியனுக்கு மட்டும் என் தங்கச்சியைக் கட்ட மாட்டேன்."



"நீ மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்துவ, நாளைக்கு இங்க நடந்தது தெரிஞ்சு உன் தங்கச்சிய தப்பா பேசுனா என்ன பண்ணுவ, அப்படி அவனுக்கு உண்மை எல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணாலும், ஏதோ ஒரு சண்டையில் இதைச் சொல்லி காமிச்சா அவள் தங்குவாளா" கிராமத்து மனுஷியாக பேசினார் தாமரை.


"அம்மா.. அதுக்காக இவனுக்கு" என்று ஆரம்பிக்க..


"போதும் கண்ணா, இந்தக் கல்யாணம் நடக்கணும் பா.." என்க..


"வருணன் வானு நீயாவது சொல்லுமா அம்மாகிட்ட வேண்டாம்னு, உன் அண்ணன் உனக்கு உன்னை புரிந்துக் கொண்டவனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று சொல்ல..

அவனை அணைத்துக் கொண்டு கதறியவள், ஒரு முடிவு எடுத்தவளாக
தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவள், மாயாவிடம் "நீங்க என்னை ஏமாத்திட்டிங்கள்ல பரவாயில்லை, நான் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறேன்.ஆனால், நான் சொல்ற ஒரு கண்டிஷனுக்கு நீங்க ஒத்துக்கணும்" என்றாள்.


"என்ன சொல்லு" என்றாள் மாயா


வானதி போட்ட கண்டிஷனில் ஹர்ஷாவிற்கு கண்கள் இரண்டும் கோவை பழம் போல் சிவக்க "யாருகிட்ட என்ன கேட்குறேன்னு தெரியுமா" அலை கடல் போல் பொங்கி எழுந்தவன் அவளை அடிப்பதற்குக் கையை ஓங்க..


மாயா கூறிய பதிலில் அப்படியே அடிக்க ஓங்கிய கை நின்றது.



மலர்வாள்..!!

ஹாய் பிரண்ட்ஸ்..

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.

போன பதிவிற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.


கருத்துத் திரி👇

 
Status
Not open for further replies.
Top