All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரியா வரதராஜனின் 'காதல் ரோஜாவே' - கதை திரி

Status
Not open for further replies.

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 5

நிலா அடுத்த நாள் காலையில் சீக்கிரமே கம்பனிக்கு சென்று விட அங்கு இன்னும் சித்தார்த் வரவில்லை...... அந்த கம்பெனியை பார்க்க பார்க்க அவளுக்கு பிரம்மிப்பாக இருந்தது எப்படி ஒருவனாக இருந்து இவளவு பெரிய கம்பெனி உருவாக்கி இருக்கிறன் என்று நினைத்து கொண்டிருக்கும் போது........

சித்தார்த் புயல் வேகத்தில் உள்ளே சென்றான்....... அதுவரை இருந்த மன அமைதி போய் ஒரு பயம் வந்துவிட்டது....... இன்னிக்கு அவன் சொல்லும் வேலையை கவனமாக செய்யவேண்டும், இனி எந்த காரணம் கொண்டும் அவன் முன் அழுதுக் கொண்டு நிற்க கூடாது என்று எண்ணிய படி சித்தார்த் தேடி சென்றாள்.......

நிலா கதவை தட்டி உள்ளே செல்ல, சித்தார்த்தோ ஷெல்ப்பில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்...... சித்தார்த் வைட் ஷரட்டும் ப்ளூ ஜீன்ஸ் உம் அணிந்திருக்க அவனின் ஆறு ஆடி உயரத்திற்கு கம்பிரமாக இருக்க........அதையே நிலா கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ........

சித்தார்த் அவளை பார்க்கவும் அவள் கை வீங்கி இருப்பது கண்ணில் பட அவள் முன் சொடுக்கு இட்டவன் .... என்ன இன்னிக்கு நாள் முழுக்க இப்படி பாத்துட்டு நிக்க போறியா என்று நக்கலாக கேட்க......... அவளுக்கு அவமானமாக இருந்தது...... இப்படியா அவனை வாய் திறந்து கொண்டு பார்க்கவேணும் என்று எண்ணிய படி அவனிடம் இல்லை வேற எதோ யோசைனையில் இருந்து என்று அவள் சொல்லி முடிக்கும் முன் ஒரு கை காட்டி அவளை நிறுத்த சொன்னவன்.......

இன்னிக்கு அவள் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிவிட்டு இன்னிக்கு ஈவினிங்குள் முடித்து என்னிடம் சைன் வாங்க வேண்டும் என்றான்.......

சித்தார்த்தின் அறையில் ஒரு மூலையில் இருந்து பார்த்தால் நிலாவின் இடம் தெரிய....... சித்தார்த் அங்கு நின்று அவளையே பார்க்க, முதல் நாள் அவளை சந்தித்தபோது இருந்த தைரியம் இப்பொது அவளிடம் இல்லை மாறாக வேதனை பயம் மட்டுமே இருந்தது......

நிலா வேகமாக செய்து கொண்டிருக்க என்ன முயன்றும் அவளால் செய்து முடிக்க முடியவில்லை....... அந்த பக்கம் வந்த ரிஷி இன்னும் நிலா கிளம்பவில்லை என்றதும் அவள் அருகில் வந்து, என்ன நிலா நீங்க இன்னும் கிளம்பவில்லையா என்றான்.... இல்லை சார் ஒர்க் கொடுத்தாங்க அத ஈவினிங்குள் முடிக்க சொன்னாங்க என்றாள்....... ஏன் இன்னும் முடிக்கவில்லை என்க....... இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கு என்றாள்......... சரி வெயிட் பண்ணுங்க நான் சார்கிட்ட கேட்டுட்டு வரேன் என்றவன் நேராக சித்தார்த் அறைக்கு சென்றான்......

சித்தார்த்திடம் சில கோப்பைகளில் சைன் வாங்கிவிட்டு..... சார் நிலா இன்னும் கிளம்பல.... நீங்க கொடுத்த வேலையை அவங்க இன்னும் முடிக்கலையாம் என்றான் ரிஷி ........ சரி அவள வந்து என்னை பார்க்க சொல் என்றான்...... அடுத்த நிமிடம் நிலா அவன் அறைக்குள் இருந்தாள்......

லேசாக மேஜை மீது அமர்ந்தவாறு காபியை உரிந்து கொண்டிருந்தான் சித்தார்த் ........அவள் அருகில் வந்து கோப்பை வாங்க வர அவன் எங்கு நேற்று போல் தன் கையை தான் பிடிக்கப்போகிறான் என்ற பயத்தில் தன்னையும் மீறி ஒரு அடி தள்ளி நின்றாள்........ அதை பார்த்து சிரித்தபடியே அவள் கையில் இருந்த கோப்பையை பிடிங்கினான்....... அவள் முடித்த வரை வாங்கி பார்த்தவன் சட்டென்று கோப்பையை அவள் முகத்திலே எறிந்து விட்டான்........

நேற்று தன் வேலை எல்லாம் விட்டு விட்டு பொறுமையாக சொல்லி கொடுத்தான் அதுவும் புரியவில்லை என்றதும் ரிஷியிடம் சொல்லி தரச் சொன்னான் ........ அப்படி இருந்தும் அவள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றதும் கோபம் தலைக்கு எற.......

ஒரு வேலையை கூட உன்னால உருப்படியா செய்ய முடியாத.......கொடுத்த வேலையை முழுசாவும் முடிக்கவும் இல்லை அத ஒழுங்காகவும் பண்ணல ... கவனம் வேலையில் இருந்தாதான இல்லனா எத்தனை பேரு சொல்லி கொடுத்தாலும் புரியாது என்று நக்கலாக சொல்ல...... நிலாவுக்கு புரிந்துவிட்டது காலையில் அவனை பார்த்ததைதான் அவன் இப்படி சொல்கிறான் என்று...... என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது நான் சொன்ன வேலையை முடிச்சுட்டுதான் கிளம்பனும் என்றுவிட்டான் ........

நிலா தன் கோப்பையை எடுத்துக்கொண்டு தன் இடத்திற்கு சென்றவள்.......... இதுவரை நிலா இவ்வளவு ஸ்ட்ரெஸ் அனுபவித்ததே இல்லை...... இன்று இந்த ஸ்ட்ரெஸ் தாங்க முடியாமல் அவளுக்கு தலை வலியே வந்துவிட்டது.......இந்த வேலையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதை செய்ய ஆரம்பித்தாள்........

இன்னும் நிலா இடத்தில் லைட் எரிவதை கவனித்த ரிஷி அங்கு வர........... ஏன் நீங்க இன்னும் கிளம்பல என்றான்......... இல்லை சார் மறுமடியும் செய்ய சொல்லிட்டாங்க என்றாள் ......... அவள் கோப்பையை வாங்கி பார்த்த ரிஷிக்கு தலையிலே அடித்து கொள்ளலாம் போல் இருந்தது........ சரி என் ரூம்க்கு வாங்க என்றான்......

நிலா, இந்த வேலையினு இல்லை எந்த வேலையா இருந்தாலும் நீங்க உங்க மைண்ட்டா பிரீ வச்சுக்கிட்டா தான் உங்களால ஒழுங்கா வேலை செய்ய முடியும்........ நீங்க வேலை பார்க்குறது எவ்வளவு பெரிய கம்பெனினு உங்களுக்கு தெரியுமா...... இந்தியாவின் நம்பர் ஒன் நெட்ஒர்க் கம்பெனி...... இந்த கம்பெனியில் வேலை கிடைக்காதான்னு எவ்வளவு பேரு கஷ்டபட்ராங்கானு தெரியுமா.......... இதில் உங்களுக்கு பிரைட் பியூச்சர் இருக்கு என்க.......

எப்படி சார் இப்படி மனசாட்சி இல்லாம பியூச்சர் பற்றி பேசுறீங்க என்றாள்........ இங்க பாருங்க நிலா நீங்க பண்ணுனது ரொம்ப தப்பு......... நீங்க எழுதுன ஆர்டிகிள்னால அவருக்கும் அவங்க குடும்பத்துக்கும் எவ்வளவு பெரிய அவமானமுனு யோசிச்சீங்களா........ நீங்க பாட்டுக்கு உங்க விருப்பத்துக்கு எழுதுவீங்க உங்கள சும்மா விட்டுருவாங்களா....... உங்கள பத்தி மட்டுமே யோசிக்காம நீங்க பண்ணுனதுனால ஒரு குடும்பமே மன கஷ்டத்தில் இருகாங்க..........

உங்க அம்மா தங்கையை பார்க்க முடியலேன்னு உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு....... அதே மாதிரி சார் அவங்க அம்மா தம்பி முகத்துல முழிக்க முடியாம வேதனை படுறாரு....... உலகத்தில யாரும் கெட்டவங்க கிடைத்துங்க அவங்க அவங்க பக்கத்தில அவங்களுக்கு ஒரு நியாயம் இருக்கும் நிலா...... கவலைப்படாதீங்க காலம் எல்லாத்தையும் மாற்றம் என்றான் .......

நிலா முதல் முறையாக தான் செய்த தவறை உணர்ந்தாள்.......... இப்பொது சித்தார்த் செய்தது எல்லாம் அவளுக்கு சரியாகவேபட்டது..... அவளுக்கு சற்று யோசிக்க டைம் கொடுத்து அவளுக்கு காபி எடுத்து கொண்டு வந்தான் ரிஷி ........ அவளிடம் காபியை நீட்ட..... எதபற்றியும் யோசிக்காம நான் சொல்லி தராத நல்ல கவனிங்க........ எதாவது புரியலான கேளுங்க என்றவன் எல்லாத்தியும் தெளிவாக சொல்லி கொடுத்தான் .........பிறகு வேலை செய்தவள் 2 மணிக்கு எல்லாம் முடித்துவிட்டாள்..... அதை வாங்கி செக் செய்துவிட்டு குட் போய் சார்கிட்ட காட்டுங்க என்றான்.........

சார் இன்னும் இருக்காங்களா என்றாள்.......ம் இருக்காங்க என்றான்....... ரெண்டு பேரும் இப்படிதான் தினமும் லேட்டாக போவீங்களா என்றாள் நிலா ....... அதற்கு ரிஷி ஒரு அழகாக சிரித்துவிட்டு இல்லை வேலை இருந்த எவ்வளவு லேட்டானாலும் முடிச்சுட்டு தான் போவோம்......... இன்னிக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை நான் உங்களுக்காக தான் இருக்கேன் ..... சாரும் உங்களுக்காக தான் இருக்காரு....... ஒரு பொண்ணு தனியா ஆபீஸ்லா விட்டுட்டு போற அளவுக்கு நானும் என் சாரும் மோசமானவங்க இல்லை என்றான் ........

நிலா நேராக சித்தார்த்திடம் சென்று கோப்பையை நீட்டினாள் அதை வாங்கி பார்த்துவிட்டு..... சரி வா கிளம்பலாம் என்றான் சித்தார்த்.... இல்லை நான் போய்க்கிறேன் என்று நிலா சொல்ல... வா போலாமுன்னு சொன்னேன் என்று அழுத்தி சொல்ல சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்தவள் ....... ரிஷியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்..........

அவளுக்காக காரில் வெயிட் செய்து கொண்டிருந்தான்........ அவள் ஏறி அமர்ந்ததும் மெதுவாக காரை செலுத்தினான்...... அதில் பிளேயரை ஆன் செய்ய ...... நிலா சீட்டில் சயந்து கண்களை முடி பாட்டை கேட்டு கொண்டு வந்தாள்......

இதயத்தில் எதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே .......

கடல் அலை போலே வந்து
கரைகளை ஆளும் ஒன்று
முழுகிடும் மணம் பின் வாங்கவில்லையே.......

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாக அது போக கொண்டேனே ......

எனக்கு என்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று.....

சித்தார்த் சற்று என்று பிரேக் அடித்து காரை நிறுத்தினான்....... அதுவரை பாட்டை ரசித்து கேட்டு வந்த நிலா மேல கண்ணை திறக்க.......சித்தார்த் இறங்கி அங்கு இருக்கும் மெடிக்கல் சென்றான்..... பின் எதோ வாங்கி கொண்டு காரை எடுக்க........நிலாவை ஒரு பார்வை பார்த்த படியே காரை கிளப்பினான்.......

அவள் ஹாஸ்டல் வந்ததும் காரை நிறுத்தி..... நிலா என்று மெதுவாக கூப்பிட்டான், ஹாஸ்டல் வந்ததை கண்டதும் தேங்க்ஸ் என்றவள் இறங்கவும் அவனும் அவள் பின்னெ யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த படிய சென்றான்........ அவள் கையில் வலி நிவாரண மருந்து ஒன்றை திணித்துவிட்டு திரும்பி பார்க்காமல் காரை எடுத்து சென்று விட்டான்.......

நிலாவோ எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை .......தன் கை வீக்கத்தை கவனித்துதான் இந்த மருந்தை வாங்கி கொடுத்திருக்கிறான் என்று அவளுக்கு நன்றாக புரிந்தது........ அதே போல் அவள் ஹாஸ்டல் முகவரி அவள் சொல்லவில்லை....... இன்று ஒரு நாள் லேட் நைட் கம்பெனியில் தனியாக இருந்தற்கே ஹாஸ்டல் வரை கொண்டு வந்து விட்டு செல்கிறான்....... என்று அவன் தன்னை கவனித்து வருகிறான் என்பதே அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.........


***********---------------------------**********
காலை பொழுது அழகாக விடிய, சச்சின் ஒரே உற்சாகமாக இருந்தான்...... இந்த நாளுக்காக தான் அவன் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தான்........ அவன் காதலை உணர்ந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது..... இன்றுவரை அவளிடம் தன் காதலை வார்த்தையால் சொல்லவில்லையே தவிர தன் செயலால் அவளுக்கு உணர்த்த தவறவில்லை...... இன்று அவளை சந்திக்கபோகிறோம் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருக்க தன் காதலை கேட்டு அவள் என்ன சொல்லுவாள் எப்படி ரியாக்ட் பண்ணுவாள் என்ற ஆர்வம் இனொரு பக்கம் இருந்தது....... அவளை பார்க்கப்போகிறோம் என்ற ஆவலுடன் சீக்கரம் கிளம்பி அறையை விட்டு நேராக அன்னை சாரதாவிடம் சென்றவன் என்ன மா இன்னும் கிளம்பாம இருக்கீங்க என்றான்.......

நீ எங்கடா இவ்வளவு அவசரமா கிளம்பிட்டா என்று கேட்டாரே பார்க்கணும்...... என்ன மா என்று அவன் எரிச்சலுடன் ஆரம்பிக்க சதாசிவம் உள்ளே வருவதை கவனித்துவிட்டு இல்லை மா நீங்கதானே நேத்து வெளியே போகணும் என்றிர்கள் அதான்......

அதுக்குன்னு இப்படி விடிஞ்சதும் அங்க போகணுமா???? இங்க இருக்குற வீட்டு தானே ஒரு எட்டு மணிக்கு போலாம் என்றார் சதாசிவம்.......

சச்சினின் தந்தை, சித்தார்த்தின் தாய் மாமன் தான் சதாசிவம், நீதிபதியாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்.......மிகவும் கண்டிப்பானவர் அதே போல் மிகவும் நேர்மையானவர்....... இதுவரை ஒரு பொய்யான தீர்ப்பை வழங்கியதில்லை..... அதுனாலே அவர் மீது எல்லாருக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்....... சச்சின் தன் தந்தை முன் குரலை உயர்த்தி கூட பேசமாட்டான்...... அவர் மீது பயம் கலந்த மரியாதை அவனுக்கு......


***********------------------*********

அன்று சித்தார்த் பிறந்தநாள் வீடே விழா போல் அலங்கரிக்க ரேவதி தன் கையிலே இன்று சமையல் செய்ய வேண்டும் என்று பரபரப்பாக சித்தார்த்திற்கு பிடித்த ஹல்வாவை செய்து கொண்டிருந்தார்......

அம்மா அம்மா என்று கத்தி கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜனனி........ ரேவதியை பார்த்ததும் கட்டிக்கொண்டாள், ரேவதி வெளியே பார்த்த படிய அப்பா அம்மா எங்கே என்றார் ...... இதோ வந்துருவாங்க மா சித்தார்த், கிருஷ் எல்லாம் எங்க மா என்றாள்..... நைட் தூங்கவே ரொம்ப லேட் ஆகிருச்சு அதான் இன்னும் எந்திரிகளடா என்க அதற்குள் ராமகிருஷ்ணன் லட்சுமி இருவரும் வந்தவிட அவர்களை தொடர்ந்தே சதாசிவம் சாராத சச்சின் மூவரும் வந்துவிட்டனர் ..........

ஜனனி ரேவதின் தங்கை லட்சுமியின் மகள்....... ரேவதிக்கு மகள் இல்லை என்ற குறை தீர்தவள்......எப்போதும் ரேவதியை அம்மா அம்மா என்று சுத்தி சுத்தி வருவாள்........ வார்த்தைக்கு கூட இன்று வரை ரேவதியை பெரியம்மா என்று அழைத்தது இல்லை.......

ரேவதி கூட பிறந்தவர்கள் ஒரு அண்ணன் ஒரு தங்கை........ ஒரு வீட்டு விசேஷம் என்றால் எல்லாரும் ஒன்று கூடிவிடுவார்கள்...... அதே போல் பிள்ளைகள் யாருக்காவது பிறந்தநாள் என்றால் எல்லாரும் சேர்ந்து குல தெய்வ கோவிலுக்கு செல்வது அவர்கள் வழக்கம்.......

சச்சின் வருவதை கண்ட ஜனனி கிட்சேன்க்குள்
சென்று மறைந்துக் கொண்டாள் ...... அதை அறியாத சச்சின் அவளை கண்களாலே தேடி கொண்டிருந்தான்...... மனதில் சச்சினிக்கு எங்கு ஜனனி வரவில்லையே என்று சந்தேகம் வர அடுத்த நொடி இல்லை கண்டிப்பாக வருவாள் இது அவள் செல்ல அண்ணனின் பிறந்தநாள் ஆயிற்றே என்று எண்ணும் போதே.....


ஜனனி கிட்சேன்னில் மறைந்து கொண்டு வெளியே எட்டி எட்டி பார்த்து கொண்டிருக்க அதை பார்த்த படி உள்ளே நுழையந்த கிருஷ், இவ யாரு கூட ஐஸ் பால் விளையாண்டுக்கிட்டு இருக்க என்று பார்க்க கண்களிலே எதையோ தேடிய படி உக்காந்து இருக்கும் சச்சின் தென்பட....... அட பாவிகளா ரூட் இப்படி போகுதா என்று எண்ணிய படிய அவன் பக்கத்தில் அமர்ந்தான் கிருஷ்.......

சித்தார்த்திற்கு இன்று தன் பிறந்தநாள் என்பது சுத்தமாக நினைவில்லை........ வழக்கம் போல் ஆபீஸ்க்கு தயாராகி கிழே வர, சித்தார்த் வருவதை கவனித்த எல்லாரும் மாற்றி மாற்றி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அப்போது தான் அவனுக்கு நினைவே வந்தது.......

ஜனனி ஓடி வந்து சித்தார்த்தை கட்டி பிடித்து ஹாப்பி பர்த்டே சித்து அண்ணா என்க....... சித்தார்த் ஒரு அழகான சிரிப்புடன் தாங்க்ஸ்டா என்றான்.......

ரேவதி எல்லாரையும் சாப்பிட அழைக்க எல்லாரும் சாப்பிட சென்றனர்....... சித்து அண்ணா எனக்கு 2 மாசம் லீவு அதுனால உங்கிட்ட இன்டென்ட்கு வரலாம்னு இருக்கேன் என்றாள் ஜனனி..... ஏன் ஜனனி நீ சச்சின் கிட்ட இன்டென்ட் போகலாமே அதான் உன் படிப்புக்கு சமந்தா பட்ட கம்பெனி என்றான் சித்தார்த்...... சச்சினோ ஜனனி என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வத்துடன் அவளையே பார்த்து கொண்டிருக்க, எப்படியும் நான் படிச்சதுக்கு சமந்தப்பட்ட வேலைக்கு தான் போகப் போறேன் அதுனால இன்டென்ட் வேற பில்ட்டில் பண்ணலாம்னு நினைக்குறேன் என்றதும்........ சச்சின் கிருஷ்யிடம் உலகத்திலே இவ்வளவு விநோதமா உன் தங்கச்சியால மட்டும் தான் டா யோசிக்க முடியும் என்றான்..... சரி இன்னைக்கே சேர்ந்துக்கோ என்றான் சித்தார்த் .....

இன்னைக்கு தான் குல தெய்வ கோவிலுக்கு போறமே சித்தார்த் என்றார் லட்சுமி........ ஓஹ் ஆமாலா மறந்துட்டேன் சித்தி , சரி நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க எனக்கு இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு.. அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பது போல் எழுந்து சென்று விட்டான் சித்தார்த் ........

இப்படி போன என்ன அண்ணா அர்த்தம்...... இப்போ எல்லாம் அவன் விருப்பத்துக்கு தான் எல்லாத்தியும் செய்றான்...... என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலா அண்ணா என்று சதாசிவத்திடம் முறையிட, சதாசிவத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை....... விடுமா எல்லாம் சரி ஆகிரும் என்று சொல்லிக் கொண்டிருக்க அதையே பாவமாக பார்த்து கொண்டிருந்த சச்சின் மனதில் அட பாவி நான் என்னடா பன்னுனேன் உனக்கு இனிமே இதுங்க கோவிலுக்கு கிளம்பாதுங்களே இன்னைக்கு நாம காதலை சொன்ன மாதிரிதான் என்று எண்ணி கொண்டிருந்தான் சச்சின்.......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

லாஸ்ட் டைம் லைக் அண்ட் கமெண்ட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப நன்றி....... நெஸ்ட் ud போட்டுட்டேன் படிச்சுட்டு மறக்காம எப்படி இருக்குனு கமெண்ட்ல சொல்லுங்க........ நிறையோ குறையோ கமெண்ட் சொல்லிருங்க please ......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே -6

எல்லோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்னு கூட...... பெரியவர்கள் தங்கள் கவலையை மறந்து மனம் விட்டு பேசி சிரிக்க நினைக்க, இளையவர்களோ காதலுடன் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி தங்கள் காதலை பரிமாற நினைக்க ..... விதியோ வேறு படி நினையைத்தது போல்....... சந்தோஷமாக செல்ல வேண்டிய தருணங்கள், மண சங்கடத்துடன் நிமிடங்கள் ஓடி கொண்டிருந்தது.........

எல்லாரும் அமைதியாக இருக்க, ஜனனி தான் சூழ்நிலை மாற்ற எண்ணி எவ்வளவு நேரம் இப்படியே சோககீதம் வசிப்பிங்க...... சித்தார்த் அண்ணா கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு...... எல்லாம் அடுத்து நடக்க வேண்டிய வேலையை பாருங்க என்க........

சாத்தான் ஏன் வேதம் ஓத்தது , எதோ திட்டம் திட்டிட்டா போலவே என்று மனதில் எண்ணி கொண்டான் கிருஷ்....... கிருஷ்யின் நினைப்பு சரிதான் என்பது போல, சரி அவங்க பேசிகிட்டு இருக்கட்டும் நம்ம மேல ரூம்க்கு போலாம் கிருஷ் , சச்சின் வாங்க போலாம் என்று தன் விஷயத்தில் குறியாக இருந்தாள் ஜனனி ......

மூவரும் பொதுவாக எதோ பேசி கொண்டிருக்க, ஜனனி சச்சின் இருவரின் பார்வை ஒருவரை ஒருவர் தீண்டி செல்ல அதை கவனித்த கிருஷ் அவர்களுக்கு சற்று தனிமை தர எண்ணி போன் பேச வேண்டும் என்று எழுந்து வெளியே சென்றுவிட்டான்......

சச்சின் இப்போதே தன் காதலை சொல்லி விடலாம், இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைப்பது கஷ்டம் சொல்லி விடலாம் என்று ஒரு மனம் எண்ண இனொரு மனமோ அவளும் தன்னை விரும்புகிறாளா இல்லை நான்தான் அவள் தன்னை விரும்புவதாக எண்ணி கொண்டிருக்கிறேன் என்று ஏதேதோ எண்ணி கொண்டிருக்க ...... கிருஷ் எப்போ வெளியே போவான் என்று அதற்காகவே எதிர் பார்த்து கொண்டிருந்த ஜனனி அவன் எழுந்து செல்லவும்.....

ஜனனியோ எழுந்து வந்த அவனுக்கு எதிர்புறம்
மண்டியிட்டு சச்சினின் கையை பற்றி அவன் கண்ணை பார்த்து மெதுவான குரலில்.......சச்சின் என்னை உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியல....... ஆன எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்து....... நான் எந்த நிமிஷம் உங்கள காதலிக்க ஆரம்பிசெய்னு எனக்கு தெரியல சச்சின்....... ஆன இனி வாழற ஒவவொரு நாளும் உங்க கூட வாழணும்னு ஆசை படுறேன் ......... இது சரியா தப்பான்னு எனக்கு தெரியல சச்சின்............நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியல...... . ஐ லவ் யூ சோ மச் ........என் உயிரோட சேர்த்து என்னையும் உங்களுக்காக தரேன்....... ப்ளீஸ் என்னை உங்க வாழ்கை துணையா ஏத்துப்பீங்களா என்க.......

அவள் ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாகவும் அழுத்தமாகவும் சொல்ல ..... அவள் பேசி முடித்த அடுத்த நொடி அந்த அறையே அமைதியாக இருந்தது ....... சச்சினுக்கோ கனவா இல்லை நினைவா என்பது போல் ஜனனியை பார்க்க அவளோ அவனின் பதிலுக்காக எதிர் நோக்கி காத்திருப்பது புரிய.......

மணம் முழுக்க சந்தோசத்தில் நிறைந்து இருக்க அதை அவன் புன்னகையே காட்டி கொடுத்து விட .........
இந்த நிமிடம் இன்னும் நீல இதயம் துடிக்க....... எந்த வார்த்தையை உபயகித்து என் காதலை உனக்கு உணர்த்த என்று மனம் எங்க...... வார்தைகள் வராமல் சண்டிதனம் செய்து கொண்டிருந்தது........

அவளின் நெற்றியில் முத்தம் பதித்து அவன் சமத்தை தெரிவித்தவன் ..... இதுவரை நான் எவ்வளவு பிசினஸ் மீட் அன்டன் பண்ணிருக்கேன் ஆனால் இதுவரை யாருகிட்டயும் கொஞ்சம் கூட தடுமாறுனது இல்லை........உன் கண்ணை பார்த்ததும் நான் ஃபுல் பிளாங்க் ஆகிட்டேன்...... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஜனனி....... என் பெயர் கூட எவ்வளவு அழகுன்னு நீ கூப்புட்டதும் தான் எனக்கு தெரியுது ........ யூ ர் மைன் ஜனனி என்று தன் மொத்த காதலையும் ஒரு வரியில் உள்ளடைக்கு சொன்னான் சச்சின்.........

********************---------------------*************

கம்பனிக்கு சென்ற சித்தார்த் நேராக ரிஷியை தான் அழைத்தான்........ ரிஷி அந்த ஆர்டிகிள் மேட்டர்ல இருந்து மக்கள டைவர்ட் பண்ணனும் என்றான்........... ஓகே சார் அப்போ வேற நியூஸ் அஹ ஹைலைட் ஆகணும் என்றான் ரிஷி ......... சற்று நேரம் யோசனைக்கு பிறகு பிரபல நடிகரை பற்றி தகவலை கூறி அதை வெளியிட சொன்னான்........

இதுவரை சித்தார்த் பிறந்தநாள் அன்று எந்த ஒரு கமிட்மென்ட்டும் வைத்துக் கொள்ளமாட்டான் ...... இன்று சித்தார்த் கம்பனிக்கு வந்ததை அங்கு வேலை செய்பவர்கள் வித்தியாசமாக பார்த்து பேசி கொள்ள....... அப்போ உள்ளே நுழையந்த நிலாவிற்கு இன்று சித்தார்த்தின் பிறந்தநாள் என்று காதில் விழு சித்தார்த்தின் அறைக்கு சென்றாள் ........

இதுவரை தான் நினைத்து கூட பார்க்க விரும்பாத ஒன்று........ இப்படி ஊரு அறிய வைத்துவிட நிலாவின் மேல் கோவம் திரும்பியது ....... அவளுக்கு இது எப்படி தெரிந்தது என்று சித்தார்த் யோசித்து கொண்டிருக்க அந்த நேரம் சரியாக உள்ளே நுழைந்தாள் நிலா.......

நீ யாரு சொல்லி அந்த மாதிரி எழுதுன என்று சித்தார்த் கோவத்துடன் அவளை பற்றி உலுக்க .......... அதான் எழுதியாட்சி அதுக்கு தண்டனையை எங்க குடும்பத்துல இருந்து என்ன பிரிச்சிடீங்க அப்புறம் என்ன வேணும் உங்களுக்கு என்றாள் நிலா உதட்டை சுளித்தபடி அதே கோபத்துடன்....... அவள் எதிர் பார்க்கும் முன் அவள் கழுத்தை பற்றி இறுக்கியவன்......... சொல்லு யாரு சொன்னது உன்னை எழுத சொல்லி என்றான்.......... வருண் தேவ் என்றாள் திக்கி தெனரி...... அவளை அப்டியே கிழே தள்ளியவன் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான்........

சித்தார்த்திற்கு இது வருண் தேவ்வின் வேலை என்பது நன்றாக தெரியும் அவனின் யூகம் சரியா என்பதை தெரிந்து கொள்ளவே நிலாவிடம் கேட்டான் ...... அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு கம்பனிக்கு திரும்பினான்........

சித்தார்த் நினைத்தது போலவே அந்த நடிகரை பற்றிய செய்தி பெரிய அளவில் பேசி கொள்ளப்பட்டது......... அடுத்த சில நொடிகளிலே வருண் தேவ் NGMN குரூப் ஒப் கம்பெனி வந்துவிட்டான்.......Receptionistயிடம் சித்தார்த்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி தன் பெயரை சொல்லி காத்துக் கொண்டிருந்தான் ........ உடனே சித்தார்த் அவனை உள்ளே வர சொல்ல உள்ளே சென்றான் வருண் தேவ்.........

சித்தார்த் chairயில் சாயந்த படி வருணை ஏளனமாக பார்க்க, வருணே ஆரம்பித்தான்
லுக் சித்தார்த் நான் இங்க ஏன் வந்துருக்கேனு தெரியுமா உனக்கு என்றதும் சித்தார்த் நக்கலாக சிரித்து, என்ன என்ன நீ வந்தியா நான் வர வச்சுருக்கேன் உன்னைய......... நான் அடிச்ச அடிக்கு இங்க ஓடி வந்துருக்க அப்படிதான...... நான் எப்போவும் உன்னைய மாதிரி பின்னாடி யாருக்கும் தெரியாம திருட்டு தனமா குத்தமாட்டேன் என்றான் ஏளன சிரிப்புடன்..........

அப்போ என்கூட மோதி பார்க்கணும்னு முடிவு பண்ணிருக்க அப்படி தானே என்றான் வருண் தேவ்.......... சாரி மிஸ்டர் வருண் தேவ் நான் எப்போவும் எனக்கு சரி சமமாக இருக்குறவங்க கூட தான் மோதி எனக்கு பழக்கம்......... அதுக்கு நீங்க இன்னும் கொஞ்சம் வளர வேண்டும் என்றதும் அவனை முறைத்துவிட்டு எதுவும் பேச முடியாமல் அவனை எப்படியாவது பழி வாங்கிய தீற வேண்டும் என்ற நினைப்புடன் வெளியே சென்றான்.........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்நேரம் சரியாக நிலா கோப்பைகளை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வந்து யாரு மேலையோ இடித்து கோப்பைகளை தவற விட்டாள்......... இடித்ததை யாரு என்று பார்க்க அது வருண் தேவ் என்று தெரிய வந்ததும் ஸதம்பித்து நின்றுவிட்டாள்........


நிலா அங்கு வேலை செய்வதை தவறாக புரிந்து கொண்ட வருண் தேவ்........ என்ன என்கிட்டவே விளையாடுறியா???? உன்னைய துடிக்க துடிக்க கொல்லாமா விடமாட்டேன் டி என்று மிரட்டிவிட்டு சென்றான்..........


நிலாவோ பயத்துடன் சித்தார்த்தை காண சென்றாள்...... அவன் தன்னை வருண் தேவ்விடம் இருந்து காப்பாத்திவிடுவான் என்ற நம்பிக்கையில் சித்தார்த் அறைக்கு செல்ல.......


சார் வருண் வருண் தேவ் என்றாள் பயத்தில் திக்கிய படி........ சித்தார்த்தோ அமர்த்தலாக அவளை பார்த்து அதுக்கு என்றான்........ அவன் அவன் என்னையா கொன்றுவேன்னு சொல்றான் என்றாள் அழுகையுடன்........... சித்தார்த்திற்கு என்ன சொல்ல என்றே புரியவில்லை ....... பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் என்னிடம் வந்து அடைக்கலம் கேக்கிறாளே...... நிலாவை பார்க்க சிறு குழைந்தை போல் இருந்தது............ இருந்தாலும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் நிலாவிடம், அதுக்கு நான் என்ன டி பண்ணனும் என்று ஒவவொரு வார்த்தையும் அழுத்தம் கொடுத்து அவன் கேட்க............ நிலாவோ ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.........


எனக்கு மட்டும் எப்படி எல்லாம் நடக்குது அன்னிக்கு நான் அப்படி எழுதிருக்கவே கூடாது........ அந்த ஒரு ஆர்டிகிள் எழுதுனனால எப்படி தினம் தினம் செத்து பொழைக்கிறேன்....... எப்படி எல்லாம் கூடவா மனுஷங்க இரக்கமே இல்லாம இருப்பாங்க........ நான் செத்த கூட அவருக்கு கவலை இல்லை என்று நினைக்கும் போதே மனசு வலிக்க கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்த்தது.........


வருண் தேவ் 26 வயது நிரம்பியவன் ....... ஆறு அடி உயரத்திற்கு மேல் அழகான உடற் கட்டுடன் பார்க்க மாடல் போல் இருப்பான்....... படிப்பை யூஸ்யில் முடித்துவிட்டு இப்பொது தன் அப்பாவின் பிசினஸ்சாய் பார்த்துக் கொண்டிருக்கிறான்...... இதுவரை சிறிய அளவிலான ப்ராஜெக்ட் தான் செய்யுது கொண்டிருந்தான் இப்பொது தான் டீஎம் என்ற ப்ராஜெக்ட்காக தான் எல்லாத்தியும் இன்வெஸ்ட் செய்து பெரிய அளவில் செய்து கொண்டு இருக்கிறான்...... ஒரே ஒரு போன் கால் மூலம் சித்தார்த் அந்த ப்ரொஜெக்ட்டை அவன் செய்வதாக சொல்ல அந்த கம்பனியின் md இந்தியாவின் நம்பர் ஒன் கம்பெனி கூட செய்வது என்பது கனவில் கூட எண்ணத்த ஒன்று...... இன்று அது நடக்கபோகுது என்றதும் வேண்டாம் என்பரா என்ன ??? சற்றும் தாமதிக்காமல் சரி என்றவர்..

வருண் தேவ்க்கு கால் செய்து நான் இந்த ப்ரொஜெக்ட்டை உங்களுக்கு தர எனக்கு விருப்பம் இல்லை என்றதும் வருண் தேவ்க்கு அது பெரிய அதிர்ச்சிதான் இதில் கோடி கணக்கில் இன்வெஸ்ட் செய்துருக்கிறான்........ இதில் தோல்வி என்றால் அவன் மீண்டும் எழுவது மிகவும் கடினம் என்பது புரிய என்ன என்ன காரணம் நல்லதான போய்ட்டு இருக்கு உங்களுக்கு எதாவது குறையா இருந்த சொல்லுங்க நம்ம சரி பணிக்காலம் என்று கேட்க அவரோ சந்தோஷத்தின் உச்சில் இருந்து NGMN குரூப் ஒப் கம்பெனி md எங்க கூட சேர்ந்து இந்த ப்ராஜெக்ட் செய்ய ஆசை படுறாங்க என்றதும்......... வருண் தேவ்க்கு புரிந்துவிட்டது, சித்தார்த் வேண்டும் என்றே இதை செய்து இருக்கிறான் என்று .......... அதற்குதான் சித்தார்த்தை நேரில் சென்று சந்தித்தான்...... அங்கு நிலாவை அவன் சிறிதும் எதிர்பார்க்க வில்லை........ அவளை கொன்றுவிட என்று வெறி வர அவனின் ஆட்களை வைத்து அவளை கண்காணிக்க சொன்னான் வருண் தேவ்..........


வேலையை முடித்துகொண்டு, இன்று சீக்கிரமே கிளம்பிவிட நிலாவின் மணம் பாரமாக இருக்க கோவிலுக்கு செல்லலாம் என்று எண்ணி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றாள்........


அங்கு நிலாவின் அம்மா மீனாட்சி பாதியாக இளையதுபோய் கண்ணில் அவரின் உயிரையை தேக்கி வைத்து....... மும்பை சென்ற தன் பெரிய மகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றதும் அவளுக்கு எதோ ஆகிவிட்டது என்று எண்ணி ஆண்டாள் சன்னதி முன் அமர்ந்து அவள் என்னிடம் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று கண்ணில் கண்ணீருடன் வேண்டி கொண்டிருந்தார்.............


பெருமாளை கும்பிட்டுவிட்டு ஆண்டாள் சன்னதிக்கு வர அங்கு அவள் அம்மாவை கண்டுவிட்ட நிலா, தன் அம்மா படும் வேதனையை பார்க்க முடியாமல் இதற்கு செத்தே போய்விடலாம் என்றே தோன்றியது....... தன் அன்னை தன் கண் முன்னே துடித்து கொண்டிருக்க அவரை அனைத்து நான் இருக்கும் போது நீ எதுக்கும் கவலை படவேண்டாம் என்று சொல்ல முடியாத இந்த நிலையில் இருப்பதை விட உயிராய் விட்ரலாம் என்று எண்ணி அங்கு இருந்து ஹோஸ்டேளுக்கு செல்ல..........


வழியில் ஏழு பேர் அவளை கேலி செய்த படி பின்னெ வந்தனர் நிலா தன் வேகத்தை கூடினால் அவர்களும் அவள் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தனர்............. அவர்களிடம் இருந்து தப்ப எண்ணி நிலா ஓட அவர்களும் அவள் பின்னே ஓடி வந்தனர் ......அந்நேரம் நல்ல இருட்டி இருக்க ,யாரும் தனக்கு உதவ மாட்டார்களா என்று எண்ணியபடி பின்னெ பார்த்த படி ஓட அங்கு வந்த காரின் மேல் மோதி கிழே விழுந்துவிட்டாள்.........


காரில் இருந்து சித்தார்த் இறங்கி வந்தான்......... சித்தார்த்தை பார்த்ததுமே அந்த ஏழு பேரும் வந்த பாதையை நோக்கி திரும்பவும் ஓடிவிட்டனர்......... ஒரு பெண்ணை பக்கத்தில் வைத்து கொண்டு அவர்களிடம் சண்டை போட வேண்டாம் என்று எண்ணிய சித்தார்த்........ அவர்களை விட்டு விட்டு


நிலாவை பார்க்க அவளோ பயத்தில் நடுங்கி கொண்டிருக்க அவளை அப்படி தூக்கி காரில் அமர வைத்தான்............நிலாவுக்கு மூச்சு வாங்க அப்படியே அமர்ந்து இருந்தாள்...........சித்தார்த் அவளுக்கு தண்ணி கொடுக்க அதை வாங்கியவள் ஒரு வாயில் குடித்து முடித்தவளின் கை நடுக்கம் மற்றும் நிற்கவில்லை.....


சற்று நேரம் கழித்து காரை எடுத்தான் சித்தார்த்......... வழி எங்கும் மொவுனமே ஆட்சி செய்ய சித்தார்த்தின் பார்வைதான் அடிக்கடி நிலாவை தழுவி சென்றது ...... ஒரு பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தினான் சித்தார்த்.......


கார் நின்றதும் ஹாஸ்டல் என்று எண்ணி இறங்க போனால் அது எதோ வீட்டு என்றதும்.......... அவனை கேள்வியாக பார்க்க........இறங்கு இது என் வீட்டுதான்........ இன்னைக்கு நைட் இங்க இருந்துட்டு காலையில போ என்றான் சித்தார்த் .......... முடியாது என்னை கொண்டு போய் என் ஹாஸ்டல்லா விடுங்க என்றாள் நிலா ....... அடுத்த நொடி கிழே இறங்கியவன் அவள் கையை பற்றி இழுக்க அவளோ அவள் கையை விடுவித்துக் கொள்ள போராடி தோற்றவள்...... ஒன்னும் செய்ய முடியாமல் அவன் பின்னே சென்றாள்..........


ரேவதி கிருஷ் ஜனனி மூவரும் எதோ பேசி கொண்டிருக்க ......... சித்தார்த் நிலாவுடன் உள்ளே நுழைந்தான் ........ அம்மா இவங்க நம்ம கம்பனியில வேலை செய்றவங்க இன்னிக்கு நம்ம வீட்டுல தான் தங்க போறாங்க என்றான்........


ரேவதிக்கு நிலாவின் முகத்தை பார்த்ததுமே எதோ பிரச்னை என்று புரிந்தது....... சரி பிரெஷ் ஆகிடுவாங்க சாப்பிடலாம் என்றவர் நிலாவுக்கு கெஸ்ட் ரூமை காட்டினார்........


ரேவதி வந்து நிலாவை சாப்பிட அழைக்க பேருக்கு சாப்பிட்டு விட்டு சென்றவள் ....... அன்றைய நாளின் களைப்பில் உடனே தூங்கியும் விட்டாள் ....... காலையில் சித்தார்த் சென்று நிலாவை பார்க்க அவள் நல்ல தூக்கத்தில் இருக்கவும் ரேவதியிடம் அவளை எழுப்ப வேண்டாம்........ அவளை எங்கும் தனியாக அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றான்.........


நிலாவுக்கு முழிப்பு வர, ஒரு நிமிடம் தான் எங்கு இருக்கிறோம் என்று ஒன்றும் புரியவில்லை ........ நேற்று நடந்த அனைத்தும் நியாபகம் வந்தது ....... மணியை பார்க்க அது பத்தரை என்று காட்ட ..........ஐயோ இனொருத்தவங்க வீட்டுக்கு வந்து இப்படியா தூங்கணும் என்ன நினைப்பாங்க என்று எண்ணிய படியே அறையை விட்டு வெளியே சென்றாள்........


ரேவதி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார்........ நிலா வருவதை கவனித்துவிட்டு...... ஜனனியின் டிரஸ் ஒன்றை கொடுத்து குளிச்சிட்டு வாமா சாப்பிடலாம் என்றார் ரேவதி........ அவரிடம் வேண்டாம் என்று மறுக்காமல் டிரஸ் வாங்கி கொண்டவள் குளித்து விட்டு வர ..........


அவளுக்கு பரிமாறிவிட்டு ரேவதியும் சாப்பிட்டார்....... சரிமா அப்போ நான் கிளம்புறேன் என்றாள் நிலா ......... இல்லை உன்னை நைட் சித்தார்த் கொண்டுபோய் விடுறதா சொல்லிருக்கான் என்றார் ரேவதி....... நிலாவுக்குமே தனியாக செல்ல பயமாக இருக்க சரி என்று இருந்துவிட்டாள்.........


கொஞ்ச நேரம் ரேவதியிடம் பேசி கொண்டிருந்த நிலாவுக்கு ரேவதியை மிகவும் பிடித்தவிட்டது........ மதிய உணவை இருவரும் சேர்ந்து செய்தனர்..... ரேவதி தன் குடும்ப கதை எல்லாம் நிலாவிடம் சொல்லி கொண்டிருந்தார்............


நிலாவிற்க்கு இப்பொது மனசு உறுத்தியது....... ஐயோ நான் எழுதிய ஆர்ட்டிகளால் இவரும் அல்லவா பாதிக்க பட்டிருப்பார்.......... என்ன மாதிரியான முட்டாள்தனத்தை செய்துருக்கேன் என்று தோன்றியது நிலாவிற்கு........


கண் கேட்டு பின் சூரிய நமஸ்காரம்...........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

லாஸ்ட் டைம் லைக் அண்ட் கமெண்ட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப நன்றி....... நெஸ்ட் ud போட்டுட்டேன் படிச்சுட்டு மறக்காம எப்படி இருக்குனு கமெண்ட்ல சொல்லுங்க........ நிறையோ குறையோ கமெண்ட் சொல்லிருங்க please ....
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 7


ரேவதி நிலாவை பார்த்து பார்த்து கவனித்து கொண்டார்.......... இதுவரை தன் மகன் எந்த ஒரு பெண்ணையும் இதுபோல் வீட்டுக்கு எல்லாம் அழைத்து வந்தது இல்லை........ பெண்கள் என்றால் சற்று தள்ளிய நிற்பவன்........ கல்யாணம் பேச்சு எடுத்துலே பிடி கொடுக்கமாட்டான்....... அப்படி இருப்பவன் ஒரு பெண்ணை அழைத்து வந்ததும், தன் மகன் நிலாவை காதலிக்கிறானோ என்று சந்தேகம் வர நிலாவை ஆராய்ந்தார்.......... பார்க்க அழகாவும் லட்சணமாகவும் இருக்கும் அவளை பார்க்க பார்க்க அவருக்கு தேகட்டவில்லை இப்படி ஒரு பெண்ணை யாருக்கு தான் பிடிக்காது என்றே தோன்றியது.........


நிலா அங்கு இருக்கும் தோட்டத்திற்கு செல்ல ஒரு பக்கம் முழுக்க ரோஜா செடி , மல்லி செடி என்று பார்க்கவே வண்ணமயமாக இருக்க அங்கே அமர மேசைகளும் இருந்தது...... சோழர் லைட் அங்காங்கே பொருத்து பட்டிருந்தது....... அந்த இடம் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்து..... நிலா சென்று ரோஜா செடிக்கு பின் இருக்கும் மேசையில் அமர்ந்தாள்....... அந்த இடத்தில் தன் கவலைகளை மறந்து செடிகளை ரசித்து படி அமர்ந்து இருந்தாள்..........


வீட்டுக்கு வந்த சித்தார்த் நிலாவை தேடிய படி தோட்டத்திற்கு வர .............. அங்கு ரோஜாக்களுக்கு நடுவே அழகான ரோஜா போல் அமைந்திருக்கும் நிலாவை பார்த்து சற்று தடுமாறி தான் போனான் சித்தார்த்.........அவள் அருகில் சென்றவன் இங்க என்ன பண்ற நிலா என்றான்...... இல்லை நான் காலையிலே கிளம்பிறேன்னு சொன்னேன் அம்மா நீங்க வந்ததுக்கு அப்பறம் தான் போகணும்னு சொல்லிட்டாங்க அதான் என்றவள் அவன் திட்டுவானோ என்று அவன் முகத்தையே பார்த்த படி நின்றாள் ........


நான் அத கேட்கலை தோட்டத்தில என்ன பண்றனு கேட்டேன் என்றான்........ இல்லை நீங்க வந்ததும் சொல்லிட்டு கிளம்பலாம்னு காத்துகிட்டு இருந்தேன் , அப்போ நான் கிளம்புறேன் சார் என்று அந்த இடத்தை விட்டு செல்ல எத்தனிக்க, ஒரு நிமிஷம் என்று அவள் கையை பற்றி தடுத்தவன்., நீ இனிமேல் இங்கதான் இருக்க போற..... உனக்கு எப்போ ஆபத்து வருமுன்னு என்னால தினமும் பாத்துகிட்டு இருக்க முடியாது என்றான் சித்தார்த்........


ஆடு குட்டி நினைத்துனு ஓணான் அழுதுச்சான் அது மாதிரி இருக்கு இவரு பேசுறது ........ நேத்து நான் போய் அழுத போது இல்லாத அக்கறை இப்போ என்ன என்று தோன்ற..... நீங்க ஏன் சார் எனக்கு என்ன ஆபத்து வருதுன்னு பார்க்கணும் என்று நக்கலாக கேட்க........ அது ஒன்னும் இல்லை நிலா உனக்கு பிரச்சனைனு ஒன்னு வந்த அது என்னால மட்டும் தான் வரணும் என்று அவளை விட நக்கலாக பதில் சொன்னான் சித்தார்த்....... அதை கேட்ட நிலாவுக்கு எரிச்சலாக இருந்தது.........என்னை விட்ருங்க சார் நான் போறேன் என்க.... எங்க போகணும்???? உன்னோட பொருள் எல்லாத்தியும் அங்க இருந்து எடுத்துட்டு வந்தாச்சு என்றான் சித்தார்த்.........


என்னால எப்படி உங்க வீட்டுல தங்க முடியும் தலையை குனிந்த படி அவள் சொல்ல........ அவன் ஒற்றை விரலை வைத்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் ........ உன்னை எங்க வீட்டுல தங்க சொல்லல..... அந்த வீட்டு பக்கத்திலே ஒரு சிறிய வீட்டு இருக்க அதை காட்டி அதுவும் என் வீட்டுதான் நீ அங்கே தங்கிக்கோ என்றான் சித்தார்த் மென்மையாக........


நிலாவுக்கு சித்தார்த்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை........ ஒரு பக்கம் தன்னை வலிக்க வலிக்க அடிக்கிறான் இனொரு பக்கம் தன்னை அவனே காக்கவும் செய்கிறான்............ஆனால் எதோ ஒன்று தன்னை அவன் பக்கம் இழுப்பதை உணர தான் செய்தாள் ...........


************----------------------***********


சதாசிவம் எதோ யோசித்தபடி உள்ளே நுழைந்தார் அதை கவனித்த சாராத என்னவென்று கேட்க...... இல்லை சாராத வழியில என் நண்பன் நாரயணனா பார்த்தேன், அவங்க பொண்ணுக்கு மாப்பிளை பார்த்துட்டு இருகாங்க அதான் நம்ம சச்சின் கேட்குறாங்க என்றார் சதாசிவம்....... அந்த பொண்ணு நம்ம சச்சினுக்கு தோழிதாங்க ரொம்ப நல்ல பொண்ணு என்றார் சாராத ........


ஜனனி காதலை சொல்லுவாள் என்று சச்சின் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை......... இந்த 8 வருடம் எப்படி இருந்தானோ....... அவள் காதலை சொன்ன பிறகு அவளை பிரிந்து இருக்கும் இந்த ஒரு நாள் ஒரு யூகம் போலவே தோன்ற தன் காதலை வீட்டில் சொல்லி கல்யாணம் செய்ய வேண்டும் என்று எண்ணிய படி தன் அன்னை சாரதாவை தேடி சென்றான்..........


அங்கு சதாசிவமும் சாரதாவும் எதோ பேசி கொண்டிருக்க...... என்ன அம்மா ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல என்றான் சச்சின்....... எல்லாம் உன் கல்யாணம் விஷயம் தான் என்றார் சாராத ........


சச்சினுக்கோ என்ன இப்போ எல்லாம் நம்ம எதாவது சொல்லனுமுனு நினைச்சாலே நமக்கு முன்னாடி எல்லாரும் சொல்லிறாங்க என்று எண்ணி கொண்டிருக்க.......... பொண்ணு உனக்கு சின்ன வயசுல இருந்தே நல்ல தெரிஞ்ச பொண்ணு தான், நாளைக்கு போய் நம்ம பொண்ணு பார்க்கலாம் என்க .......... சச்சின் மனகண்ணில் ஜனனி தெரிய உற்சாகத்துடன் ....... எதுக்கு மா இந்த போர்மாலிட்டீஸ் எல்லாம், நான் என்ன அவள முதல் தடவையா பார்க்க போறேன் என்றான் .......


சதாசிவத்துக்கு சச்சின் சொல்லுவது சரியாக பட......... சரி நாளைக்கு கை தாம்பாளம் மாற்றி நமக்குள்ள நிச்சியம் மாதிரி பணிக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்.......


காதலிக்கும் பெண்ணை பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் செய்ய போகிறோம் என்று சச்சின் சந்தோசத்தின் எல்லைக்கே சென்று இருந்தான்..... அவன் சந்தோஷத்துக்கு ஆயுள் குறைவு என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை........


*****************-------------------------************


நிலாவை கொலை செய்ய வந்த ஆட்கள் அவள் தப்பிவிட்டதாகவும் சித்தார்த் வந்து அவளை காப்பாற்றியதாகவும் இப்பொது அவள் சித்தார்த்தின் பாதுகாப்பில் இருப்பதாக வருண் தேவ்விடம் கூற ...... மீண்டும் மீண்டும் சித்தார்த்திடம் தோற்று போவதை அவனால் ஏற்றுகொள்ள முடியாவில்லை ............. பழிவாங்கியே தீர வேண்டும் என்று வெறிபிடித்து தக்க சமயத்துக்கு காத்திருந்தான் வருண் தேவ்....... நிலா இப்பொது ஒரு சூப்பர் மார்க்கெட் வந்திருப்பதாக அவனின் ஆள் ஒருவன் கால் பண்ணி செய்தி சொல்ல....... அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு இருந்தான் வருண் தேவ்......


நிலா வீட்டை சுத்தம் செய்துவிட்டு, வீட்டுக்கு சில பொருட்கள் தேவைப்பட அதை வாங்க சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தாள்......... சோப்பு எடுத்துவிட்டு திரும்ப அவள் அருகில் நிற்கும் வருண் தேவ் பார்த்து ஒரு நொடி இதய துடிப்பு நின்றுவிட்டது நிலாவிற்கு........


என்ன நிலா நேத்து ரொம்ப ஓடவிட்டாங்க போல என்று சிரிக்க........ நிலாவுக்கு பயத்தில் கை எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது........ ஹே கூல் கூல் நான் இனிமே உன்னை எதுவும் செய்யமாட்டேன் நிலா என்னை நம்பு....... அதுக்கு நான் சொல்லுறத நீ செய்யணும் என்றான் வருண் தேவ் ........


போதும்...... நீங்க சொன்னதை செஞ்சனால தான் இவ்வளவு கஷ்டபட்டுட்டு இருக்கேன்......... என்ன பன்னிருவிங்க மிஞ்சிபோன என்னை கொன்றுவிங்களா.......தினம் தினம் செத்து பொழைக்க ஒருத்தரிய செத்துறேன் என்று சொல்லிவிட்டு அழுக...... வருண் தேவ் அவன் போன் எடுத்து எதையோ நிலாவிடம் கட்ட......... அதை பார்த்த நிலா ஸதம்பித்து நின்றுவிட்டாள் .............
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

லாஸ்ட் டைம் லைக் அண்ட் கமெண்ட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப நன்றி....... நெஸ்ட் ud போட்டுட்டேன் படிச்சுட்டு மறக்காம எப்படி இருக்குனு கமெண்ட்ல சொல்லுங்க........ நிறையோ குறையோ கமெண்ட் சொல்லிருங்க please ....
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 8


சதாசிவம் அவர் வீட்டிலே நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்...... மிக எளிமையாக குறுகிய இடைவேலையில் செய்ய இருப்பதால் நெருங்கி சொந்தத்திற்கு மட்டும் அழைப்பு விடுத்து இருந்தார்.............


ஜனனிக்கு இந்த செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது........ சச்சின் இன்னொரு பெண்ணுடன் நினைத்து கூட பார்க்க முடியவில்லை ஜனனியால்....... இல்லை கண்டிப்பாக இருக்காது...... மணம் நம்ப மறுத்தது ..... அன்று தன் காதலை சொன்ன போது சச்சின் முகத்தில் இருந்த சந்தோசம் கண்டிப்பாக போய் இல்லை ......நீ என்னுடையவள் என்று அவன் அதை எவ்வளவு உணர்ந்து அவளுக்கு உணர்த்த சொன்னான், கண்டிப்பாக அதை வார்த்தைக்காக சொன்னது இல்லை .....என்று அவள் மணம் அவனுக்காக வாதாட....... அவன் மேல் இருந்த நம்பிக்கையில் கண்டிப்பாக சச்சின் தன்னை திருமணம் செய்து கொள்ளுவான்...... எந்த நொடியிலும் தன்னை கை விடமாட்டான் என்று அவளை விட அவன் மேல் அதிகம் நம்பிக்கை இருந்தது அவளுக்கு ....எதுவாக இருந்தாலும் நேரில் சந்தித்து கேட்டு கொள்ளலாம் என்று பிங்க் நிற பட்டு புடவை அணிந்து அவளுக்கும் சச்சினுக்கும் நிச்சியம் என்பது போல் கிளம்பி சென்றாள்.........


ஜனனி முகத்தில் எதையும் காட்டி கொள்ளாமல் இருக்க........கிருஷ் தான் அவள் முகத்தை படிக்க முயன்று தோற்றான்....... ஜனனி சகஜமாக இருப்பது போல் காட்டிக்கொள்ள கிருஷ்யிடம் சித்தார்த்திடமும் பேசி கொண்டே அவர்களுக்கு நடுவில் அமர்ந்து இருந்தாள்.......


இந்த பொண்ணு தான் சச்சினுக்கு நிச்சயம் பண்ணபோறோம் என்று சுபத்ராவை சாராத அறிமுகம் படுத்தினர்........ சுபத்ராவை பார்க்க மிகவும் அழகாக இருந்தாள்................


அந்நேரம் சரியாக ஜனனியை பார்த்தவாறே சச்சின் கிழே வர, அவன் முகத்தில் தான் எத்தனை சந்தோசம், வந்து அவளுக்கு எதிர்புறம் அமர்ந்தான்....... அவனுக்கு அருகில் சுபத்திரா அமர ........ ஜனனிக்கு அப்போது உண்மையாகவே வலிக்க தான் செய்தது தான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு பெண் அமர்ந்து இருக்கிறாள் என்று அந்த வலியுடனே சச்சினை பார்த்தாள்..... அவனோ பக்கத்தில் சிரித்தபடி எதோ பேசி கொண்டிருக்க........ அவன் சிரிப்பில் தன்னை மறந்து கண் அசைக்காமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள்........


அவ்வளவு நேரம் சச்சின் மீது இருந்த நம்பிக்கை இப்போ ஆட்டம் கண்டுவிட கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்க ஆரம்பித்தாள்.......... நிச்சய பத்திரிகை வாசிக்க ஜனனிக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது...... எத்தனை நாள் சச்சினையும் தன்னையும் மனக்கோணத்தில் வைத்து கற்பனை செய்திருப்பாள்....... இப்படி வேறு ஒரு பெண்ணுடன் இணைத்து பார்க்க தங்க முடியாமல்......... கிருஷ் கையை இறுக்க பற்றி கொண்டாள்....... கிருஷ்க்கும் ஜனனியின் நிலை புரியதான் செய்தது......


சதாசிவம் சாரதாவின் புதல்வன் சித்தார்த்திருக்கும், நாரயணன் தனலட்சுமி செல்வ புதல்வி சுபத்திராவிருக்கும் என்று படிக்க ஒரு நிமிடம் சச்சினுக்கு ஒன்றும் புரியவில்லை.......அருகில் அமர்ந்து இருக்கும் சுபத்ராவை பார்க்க அவளும் அவனை பார்த்து புன்னகைத்தாள் .......... சச்சினுக்கு இப்போ தான் புரிந்தது நேற்று அம்மா சொன்னது ஜனனியை இல்லை என்று......


ஜனனிக்கு கத்தி அழுக வேண்டும் போல் இருக்க அதற்கு மேல் அந்த இடத்தில் இருக்க பிடிக்காமல், கிருஷ் என்னால சத்தியமா முடியல கிருஷ் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறியா ப்ளீஸ் என்று கெஞ்ச..... சரி என்று ஜனனிக்கி தலை வலி வீட்டுக்கு செல்கிறோம் என்று சித்தார்த்திடம் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்..........


சச்சினுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.......இதை எப்படி நிறுத்துவது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் புரியாமல் இருக்க....... ஜனனியின் கலங்கி கண் மட்டும் மனதில் வந்து வந்து சென்றது...... முதலில் ஜனனிக்கு புரிய வைக்க வேண்டும் மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தோன்ற........ ஜனனியை தேடி சென்றான்.......


வீட்டில் நுழையந்த அடுத்த நொடி கிருஷ் அவளை கேள்வியால் தொலைத்து எடுத்து விட்டான்........ அவளுக்கே இன்று என்ன நடந்தது என்று புரியாமல் இருக்க கிருஷ்க்கு என்ன விடை சொல்ல முடியும்...........எனக்கு தெரியல கிருஷ் என்று அவன் தோல் சாய்ந்து
அழுது கொண்டிருந்தாள் ...... அப்படி உனக்கும் சச்சினுக்கும் என்ன தான் பிரச்சனை என்று கேட்க....... அப்படி ஏதாவது இருந்தால் தானே...... என் காதலை சொன்ன பிறகு நான் சச்சினிடம் பேசவே இல்லை........ பிடிக்கவில்லை என்றால் அன்றே சொல்லிருக்கலாமே, இது என்ன என் உணர்வுகளோடு விளையாடுகிறான் என்று சொல்லி முகத்தை மூடி கொண்டு அழுகும் தங்கை எப்படி ஆறுதல் அளிப்பது என்று தெரியாமல் பார்த்து கொண்டிருக்க ........


அந்நேரம் சச்சின் உள்ளே நுழையந்தான் , ஜனனி அருகில் சென்று அவள் கையை பிடித்து ஜனனி என்க....... ஜனனிக்கு எங்கு இருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ சற்றென்று அவன் கையை உதறியவள் என்னை தொடாதிங்க....... உங்கள பார்க்கவே எனக்கு பிடிக்கல என்று கத்த ..... நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேளு ஜனனி என்றான் மன்றாடும் குரலில் ...... என்னிடம் சொல்வதற்கு என்ன இருக்கு....... நான் யாரு உங்களுக்கு...... அதை சொல்லும் போது அவள் குரலில் அத்தனை வேதனை இருக்க.... அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவள் அறைக்கு சென்று கதவை சாற்றி கொண்டாள்........ஜனனி கதவை திற நான் சொல்றதா ஒரு நிமிஷம் கேளு ஜனனி என்று கதவை தட்டி கொண்டிருந்தான் சச்சின் .........பிறகு கிருஷ்யை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்..........


கிருஷ்க்கு சச்சினை பற்றி நன்றாக தெரியும் அவன் இப்படி எல்லாம் செய்பவன் அல்லா........
அதே போல் மாமா அத்தை இருவருமே சச்சினின் ஆசைக்கு தடங்கலாக இருபவருகளும் இல்லை....... அது மட்டும் இல்லாமல் ஜனனி இந்த வீட்டு பொண்ணு அவளை எப்படி வேண்டாம் என்று சொல்லுவார்கள் என்று யோசித்து கொண்டிருந்தான்........


காரை வேகமாக எடுத்தவன் highways சென்று நிறுத்தினான்........... மணம் முழுக்க பாரமாக இருக்க....... உங்களை பார்க்க பிடிக்கவில்லை என்ற ஜனனியின் வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது....... அவளுக்கு தன்மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை என்று நினைக்கும் போதே மணம் வலித்தது...... ஒரு நிமிடம் ஏன் சச்சின் என்று கேட்டிருந்தால் போதுமே ......... தன்மேல் தான் தவறு அதை மறுப்பதிற்கில்லை.........


காதலுக்கு முக்கியமே நம்பிக்கைதான்....... இதே சுழ்நிலை ஜனனிக்கு ஏற்பாடு இருந்தால் சத்யம் செய்து என் ஜனனி அப்படி இல்லை என்று சொல்லிருப்பானே அந்த நம்பிக்கை அவளிடம் இல்லாமல் போய்விட்டதே........எட்டு வருடங்களாக அவள் தன்னை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை என்றாலும்....... அவளின் இந்த கோவம் வெகு நாட்கள் நீடிக்காது சீக்கிரமே தன்னை தேடி வருவாள் என்று நம்பினான் சச்சின்

**************--------------------------**************


நிலாவுக்கு வேலையும் அந்த இடமும் ஒரு அளவுக்கு பழகி இருந்தது......... வேலை புரிந்தாலும் சொன்ன நேரத்திற்கு முடிக்க சற்று சிரமாக தான் இருந்தது ...... இன்று ஈவினிங் மீட்டிங் இருக்கிறது என்று காலையிலே ரிஷி அவளை கூப்பிட்டு சொல்லி இருந்தான்........ அதற்கு நேரமாக மீட்டிங் ஹாலுக்கு சென்றாள் நிலா..........


இன்று எதற்காக மீட்டிங் என்று யாருக்கும் தெரியாததால் எல்லாரும் எதையோ யூகித்து சித்தார்த்திற்காக காத்து கொண்டிருந்தனர்....... அவர்களை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் கொஞ்ச நேரத்திலே உள்ளே நுழைத்தான் சித்தார்த்........


சித்தார்த் வந்ததுமே எல்லாரும் உற்சாகம் ஆகிவிட்டனர்....... அதுவரை இருந்த களைப்பு நீங்கிவிட அவனின் எனர்ஜி அவர்களுக்கும் தொற்றி கொண்டது ....... எல்லாரையும் ஒருமுறை பார்த்துவிட்டு தொடங்கினான் சித்தார்த் ........


எல்லாரும் இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட்ல ரொம்ப பிஸியா இருக்கீங்க........ எல்லாருக்கும் ஒர்க் லோட் அதிகம், ரொம்ப ஸ்ட்ரெஸ் அஹ பீல் பண்றீங்கனு எனக்கு தெரியும்...... சோ ஐ திங்க், டைம் டு டேக் எ பிரேக் (So i think, time to take a break) என்க எல்லாரும் இன்னும் உற்சாகம் ஆகிவிட்டனர் ....... மீண்டும் தொடர்ந்தான், நம்ம lets shine India with NGMN என்று ஒரு ஈவென்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.........ஆனால் என்ன மாதிரி ஈவென்ட்னு முடிவு பண்ணல.......என்ன ஈவென்ட் பன்னலாமுன்னு முடிவு பண்ணதான் இந்த மீட்டிங் என்றான் ..........


எனக்கு இந்த தடவ கார் ரேஸ் வைக்கமுன்னு ஒரு எண்ணம் நீங்க எல்லாரும் என்ன நினைக்குறிங்க என்று கேட்க எல்லாரும் அவர்கள் கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தனர்....... மாரத்தான், ஒர்க் ஷாப், கனபெரென்ஸ், கலை நிகழ்ச்சி, பார்ட்டி என்று சொல்லி கொண்டே போக அவர்கள் சொல்லிய எதுவும் அவனுக்கு திருப்தியாக இல்லை...... நிலா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்து கொண்டிருக்க....... நிலா நீங்க இதுல எது ஓகேனு சொல்லுங்க என்றான் ........


இதுல எதுவும் எனக்கு ஓகேனு தோணல.......
ஒர்க் ஷாப் கனபெரென்ஸ் என்ன தான் நம்ம இன்டெரெஸ்ட்டிங்கா கொண்டு போக நினைச்சாலும் அது கடமைக்காக செஞ்ச மாதிரி தான் இருக்கும்...... பார்ட்டி என்றால் செலிபிரிட்டி, பிசினஸ் ஆட்களை மட்டுமே தான் அழைப்போம், மக்களுக்கு சென்று அடையாது........ மாரத்தான் யாராவது வைத்து கொண்டே தான் இருப்பார்கள் அதுல கண்டிப்பா நம்மளோட தனியாக தெரியாது.......அது மட்டும் இல்லாமல் இதில் எந்த ஈவென்ட் என்றாலும் ஒரே ஒரு ஊரில் தான் வைப்பதாக இருக்கும்.......... let's shine India with NGMN என்று பெயர் எப்படி அதற்கு பொருந்தும் என்க......... சித்தார்த்துக்கு அவள் சொல்வது சரியாகபட..........


அப்போ என்ன பன்னலாமுன்னு சொல்றிங்க என்றான்...... இந்த ஈவென்ட் நடத்த காரணம் கண்டிப்பா NGMN ப்ரோமோஷன்காக தான்....... மக்களிடம் சென்று அடையவே இதை செய்கிறோம்........... அப்போ இதை உபயோகமகா செய்யலாமே.......ஆல் இந்தியா கால் பந்து டௌரான்மெண்ட் செய்யலாம்......இந்தியாவை பொறுத்த வரை கால்பந்து வீரர்களுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு ....... அதுவும் இல்லாமல் இந்தியாவிற்குள்ளவே மோதி கொள்ளும் போது மக்கள் அவரவர் மாநிலத்திற்கு ஆதரவு அளிப்பார்கள்........ நம்ம அவங்க திறமையை வெளி கொண்டு வந்த மாதிரியும் இருக்கும்.......ப்ரோமோஷன் செய்த மாதிரியும் இருக்கும் .......... இறுதி போட்டியை பெரிய விழா போல் செய்யலாம் என்பது என் யோசனை என்று அவள் பேசி முடிக்க அங்கு இருப்பவர்கள் எல்லாரும் கரகோஷம் எழுப்ப........... சித்தார்த் அவளின் யோசனையில் பிரமித்து போய் விட்டான்....... நிலாவிடமே அந்த ஈவென்ட் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டான்............ நாட்களும் அதன் போக்கில் ஓடி கொண்டிருந்தது........


ஜனனி இப்பொது சித்தார்த்தின் கம்பெனியில் தான் இன்டென்ட் செய்து கொண்டிருக்கிறாள் ....... ரிஷி தான் அவளுக்கு ட்ரெயின் பண்ணி கொண்டிருந்தான்....... ஜனனியின் கவனம் வேலையில் சிறிதும் இல்லை, எப்போதும் ஒரு யோசனையிலே இருந்தாள் ........எதையும் கற்று கொள்ளும் மனா நிலையில் ஜனனி இல்லை....... ரிஷிக்கு தான் என்ன செய்யவது என்று புரியவில்லை.........


அன்று கிருஷ் NGMNக்கு வந்து சித்தார்த்திடம் பேசி கொண்டிருந்தான்......... நிலா கதவை தட்டி கொண்டு உள்ளே வர........ ஒரு கோப்பாய் நீட்டினாள்...... அவன் அதை சரி பார்த்து கொண்டிருக்க..... ரிஷி உள்ளே நுழையந்தான் சார் ஜனனி ஒர்க் ஒழுங்கா கத்துக்க மாட்டேங்குறாங்க என்க.......... விடு ரிஷி சின்ன பொண்ணு தான ரொம்ப போர்ஸ் பண்ணாத, இது அவ பீல்ட் இல்லை என்றான்....... அதுக்கு இல்லை சார் அவங்க ரொம்ப ரெஸ்ட்லெஸ் அஹ இருகாங்க என்றான்...........


சித்தார்த்தும் கவனித்து கொண்டுதான் இருக்கிறான் இந்த நான்கு நாட்களாக அவள் எல்லாருடனும் ஒதுங்கி இருப்பது போல் இருக்க.......ஜனனி எப்போதும் வாய் ஓயாமால் பேசி கொண்டே இருப்பாள்....... இதுவரை அவள் இவ்வளவு அமைதியாக இருந்து அவன் பார்த்ததே இல்லை......... விஷயம் எதோ பெருசு என்று புரிய...... அவளிடம் கேட்டுவிட வேண்டும் என்று அவளை கூப்பிட்டான்..........


ஜனனி வந்ததும், என்ன ஆச்சு ஜனனி உனக்கு என்றான் எடுத்த எடுப்பிலே...... அவன் கேட்ட கேள்வியில் சற்று தடுமாறியவள் கிழே பார்த்தவாறு ஒன்னும் இல்லை என்றாள்........ அவள் முகத்தை நிமிர்த்தி உண்மை சொல்லு என்றான் அழுத்தமாக........


சித்தார்த்திடம் இதை பற்றி சொல்லிவிட்டால்...... அவன் எல்லாம் பிரச்னையும் தீர்த்து இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடுவான்....... சித்தார்த்திடம் சொல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தான் கிருஷ், ஆனால் அதற்கு தகுந்த சந்தர்ப்பம் அமையவில்லை........ இப்போ வாய்ப்பு கிடைக்க ஜனனிக்கு பதில் கிருஷ் சொன்னான்........


சச்சின் ஜனனி ரெண்டு பேரும் லவ் பண்றங்க...... அவனுக்கு நிச்சயம் ஆனதுனால தான் அவ அப்செட்டா இருக்கா என்றான் கிருஷ்.......


அவன் என்ன நினைச்சுட்டு இருக்கான் ஒரு பொண்ணு லவ் பண்ணி இன்னோரு பொண்ண கல்யாணம் பணிப்பானா, வா ஜனனி என்றான் சித்தார்த் ...... எங்க அண்ணா என்றாள்......அவனை என்னவென்று கேட்க வேண்டாமா என்றான்........என்ன கேட்க போறிங்க எனக்கு வாழ்க்கை தர சொல்லிய அண்ணா .......அவனாலா வேறு பெண்ணுடன் வாழ முடியுமுன்னா ...... என்னால் என்று அதற்கு மேல் பேச முடியாமல் அழுக..........


அவள் அழுவதை காண பொறுக்காமல், ஜனனி அழுகாத..... நான் இருக்குற வரைக்கும் நீ எதுக்கும் அழுக கூடாது ஜனனி...... உனக்காக நான் இருக்கிறேன்......... நீ ஆசைபட்டது உனக்கு கண்டிப்பா கிடைக்கும் என்று சித்தார்த் கிருஷ் இருவரும் ஜனனியை சமாதானம் செய்து கொண்டிருக்க.......


அதை பார்த்த நிலாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது........ தனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தால், தானும் இப்படி ஒரு நிலைக்கு வந்துருக்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது......... இதேபோல தானே நான் இருக்கிறேன் உன்கூட என்று சொல்லி இருப்பான்......... தான் இப்படி அனாதை போல் யாரும் இல்லாமல் நிற்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது என்று தோன்றியது நிலாவிற்கு ...........
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
First elarukum very very very sorry...... story pathiley ipadi stop panitu ponathuku...... ivalvu peru enaia tedirukinga apdinathum i'm really very happy..... work tension nama site pakam kuda vara mudiathu situation agiruchu...... life la mukiamana oru stage la iruken konjam hardwork panuna life la settle agiralamnu so anga concentrate pana poi inga vara mudiuma poiruchu...... so again i'm really sorry for all the readers...... again going to continue kadhal Rojavey from today........ i need all ur love and support.........
 
Status
Not open for further replies.
Top