காதல் ரோஜாவே -4
அடுத்த நாள் காலையில் NGMN குரூப் ஆப் கம்பெனி வெளியே நின்று அந்த பிரமாண்டமான கட்டிடத்தை பார்த்ததுமே நிலாவுக்கு பயம் வந்துவிட்டது..... கால் மணி நேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தாள்..... உள்ளே போக பயத்தில் கால் வரவில்லை..... வெளியே இருப்பவர்கள் அவளை ஒரு மாதிரி பார்க்க, மனதில் தைரியத்தை கொண்டு வந்து இனி என்ன நடந்தாலும் எதிர் கொண்டே ஆக வேண்டும் என்ற நினைப்புடன் உள்ளே சென்றாள்....
அங்கு ரிஷி receptionistயிடம் எதோ கேட்டு கொண்டிருந்தான்..... நிலா நேராக சென்று ரிஷி பக்கம் போய் பார்ப்பானா பார்ப்பானா என்று அவனையே பார்த்து கொண்டு நின்றாள் ..... ரிஷியோ அவளை பார்த்து விட்டான் ஆனால் கண்டும் காணாதது போல் சென்று விட்டான்..... ஐயோ இப்போ தனியா தான் போய் அவனை பார்க்கணுமா, பேசாம இப்படியே ஓடி விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் பொதே அந்த receptionist, மேம் உங்களை சித்தார்த் சார் கூப்புறாங்க என்றாள்......
அடுத்த நொடி சித்தார்த் அறைக்கு சென்றாள்...... சித்தார்த் போன் பேசிய படி chairஐ சொழட்டி கொண்டிருந்தான்......கொஞ்ச நேரம் போன் பேசி விட்டு நிலாவிடம் வந்தவன் டைம் என்ன என்றான் எடுத்த எடுப்பிலே ..... நிலா மணியை பார்க்க அது 10:40 காட்டியது.......
அவள் அமைதியாக கீழே குனிந்து நின்று கொண்டிருந்தாள்....... நாளையில் இருந்து எட்டு மணிக்கு சரியாக உள்ளே இருக்கனும் என்றவன் ...... நீ வேலை பார்க்க போவது நெட்ஒர்க் ட்ரான்ஸ்மிஷஸின் (network transmission)என்று அவள் செய்ய போகும் வேலையை அவனே தெளிவாக விவரித்தான்......
அவளுக்கோ அவன் சொன்ன எதுவும் சரியாக விளங்க வில்லை இருந்தாலும் புரிந்ததா என்று சித்தார்த் புருவத்தை உயர்த்தி கேட்டதும் புரிந்தது என்று தலையை ஆட்டி விட்டாள்....... ஒரு சின்ன சாம்பிள் மட்டும் இப்போ செய்யட்டும் என்று எண்ணியவன் சரியாக அரை மணி நேரத்தில் செய்து கொண்டு வந்து காட்டு என்றான் உடனே பியூனை வர சொல்லி அவளுக்கான இடத்தை காட்ட சொல்லிவிட்டான்......
பியூன் காட்டிய இடத்தில் ஒரே ஒரு chair டேபிள் கம்ப்யூட்டர் இருந்தது .... அதில் அமர்ந்து அதை எடுத்து பார்க்க ஒன்னும் புரியவும் இல்லை அவன் சொன்ன எதுவும் நினைவிலும் வரவில்லை....
அடுத்த 1 மணி நேரத்தில் நிலாவை பியூன் வந்து சித்தார்த் கூப்பிடுவதாக சொல்லி விட்டு சென்றான்...... பயத்தில் கை எல்லாம் நடுங்க கண்களில் நீர் நிரம்பி சித்தார்த் முன் நின்றாள் ......
எப்போ முடித்து வந்து காட்ட சொன்னேன்.... உன்னை கூப்பிட ஒரு ஆள் அனுப்பநுமா என்று அவள் கையை பற்றி இறுக்க, முடிகிரியோ இல்லையோ சொன்ன நேரத்துக்கு வந்து ரிப்போர்ட் செய்யணும் என்று தெரியுமா தெரியாத என்று கையை மேலும் இறுக்கினான் ..... இல்ல சார் அது அது எப்படி பண்ணனும்னு கொஞ்சம் டவுட் ah இருந்தது அதான் என்று வலி தாங்க முடியாமல் சொல்லி முடிப்பதற்குள் திணறி விட்டாள்......
வலிக்குது சார் விடுங்க சார் ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டிருந்தாள்.... சித்தார்த் அவள் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தான் கண்ணில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டிருக்க அவளின் முக்கு மட்டும் நன்றாக சிவந்து இருந்தது.......
சித்தத்திற்கு பொதுவாக பெண்கள் அழுதாள் சுத்தமாக பிடிக்காது...... ஆனால் நேற்று நிலா அழும் போது அவள் முகம் லைட்டா பிங்க் ஆக இருந்தாலும் மூக்கு மட்டும் சிவந்து போய் இருந்தது.... அதற்காகவே அவளை அழ வைத்து ரசித்து கொண்டிருந்தான்..... கதவு தட்டும் சத்தம் கேட்கவும் தான் அவள் கையை விட்டான்.....
சித்தார்த் என்ன இது என்று நியூஸ்பெபேருடன் உள்ளே நுழைந்தான் சச்சின்....... என்ன தைரியம் இருந்த இப்படி எழுதுவாங்க... எழுதுணவங்கள சும்மாவா விட்ட என்று அவன் கத்தியத்தில் நிலா நடுங்கி விட்டாள்..... அப்போ தான் சச்சின் நிலாவை கவனித்தான் ஹே இந்த பொண்ணு என்டா இப்படி அழுதுட்டு நிக்குது என்றான்......
சித்தார்த்தோ கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் நீ கத்துனா கத்துக்கு தான்டா பாவம் பயந்து போய் அழுவுற என்று அதுதான் உண்மை போல் சொன்னான்......
சச்சினோ சாரி சாரி நான் எதோ டென்ஷன்ல கத்திட்டேன்.... நீங்க போய் வேலையா பாருங்க என்றான் ..... சித்தார்த் போனில் ரிஷியை அழைத்து ரூம்க்கு வர சொன்னான்...... ரிஷி வந்ததும் அவளுக்கு வேலையை பற்றி விவரிக்க சொல்லி இன்று அவள் செய்ய வேண்டிய வேலையை சொல்லிவிட்டு அதை முடித்ததும் வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பி வைத்தான்.......
சச்சின் ஒரு லீடிங் கம்பெனியின் டைரக்டர்..... சித்தார்த்தின் மாமா மகன்..... அவன் அந்த நியூஸை பார்த்து பொறுக்க முடியாமல் சித்தார்த்தை பார்க்க வந்துவிட்டான்.......
என்ன சித்தார்த் இது இப்படி போட்டுருக்காங்க நீ என்னடானா கூல் அஹ இருக்க என்றதும் சித்தாத்திற்கு அதைப் பற்றி பேச சிறிதும் விருப்பம் இல்லை..... விடு சச்சின் அதை நான் ஹாண்டில் பணிக்குறேன் நீ டென்ஷன் ஆகாதடா என்றான்...... பின்பு பிசினெஸ் பற்றி பேச்சு திரும்ப அதை பற்றி கொஞ்சம் நேரம் பேசிவிட்டு சென்றான் சச்சின்.......
இங்கு நிலாவுக்கு கை கன்றி போய்விட்டது.... ரிஷி அவளை அவனுடைய ரூம்க்கு அழைத்து சென்றான்........ பின் அவளுக்கு வேலையை விவரிக்க நிலாவோ அழுகை நிற்கவே இல்லை கண்களை துடைத்த கொண்டே இருந்தாள்..... அதை பார்த்த ரிஷிக்கு கடுப்பாகி விட........ ஒன்னும் அவசரம் இல்லை முதல அழுது முடிங்க அப்புறம் நான் சொல்லவா, எனக்கு என்ன வேற வேலை வெட்டி இல்ல நீங்க அழுகுறத பார்க்குறது தான் என் வேலையினு நினைச்சீங்களா என்றதும் நிலாவோ நிமுந்து கூட பார்க்காமல் அமைதியாக உக்காந்திருந்தாள்....... அதை பார்த்த ரிஷிக்கு பாவமாக போய்விட்டது....
சரி பத்து நிமிஷம் பிரேக் எடுத்து ரீஃபிரஷ் ஆகிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தான்..... அவள் வந்ததும் வேலையை பொறுமையாக சொல்லிக் கொடுத்தான் ..... அவளும் தெளிவாக எல்லாத்தையும் கேட்டுக்கொண்டாள்..... சித்தார்த் சொன்ன வேலையை அவளுக்கு சொல்லிவிட்டு முடித்ததும் சித்தர்த்திடம் காட்டுமாறு சொல்லிவிட்டான்.....
சித்தார்த்திடம் வந்த ரிஷி, நிலாவுக்கு வேலையை விவரித்து விட்டதாக தகவல் சொல்லி விட்டு சென்றான்....... சித்தார்த்துக்கோ இவள் இதற்கே வலிக்குது என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள் இன்னும் போக போக என்ன செய்வாள்....... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள இப்படியா..... நிலா இனி நான் உன்னை சும்மா விடமாட்டேன் என்று வன்மமாக எண்ணிக்கொண்டான்.......
நிலாவோ அவளுக்கு கொடுத்த வேலையை முடித்து மணி பார்க்க அது ஏழு என்று காட்டியது......சித்தார்த்தை தேடி சென்றாள் அவனோ அதை சரி பார்த்து விட்டு அதில் உள்ள தவறுகளையும் திருத்த சொல்லி அனுப்பினான்...... தவறுகளை சரி செய்ய மணி 9 ஆகிவிட்டது..... அதை கொண்டு போய் அவனிடம் காட்டிவிட்டு வந்ததும் பசி எடுக்க, நேற்று அம்மா ஊட்டி விடச் சொல்லி சாப்பிட்டதோடு சரி இப்போ வரைக்கும் சாப்பிடவில்லை....... எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஹாஸ்டலுக்கு கிளம்பினாள்
நிலா நேற்று இரவே ஒரு தனியார் ஹாஸ்டலில் போய் சேர்ந்துவிட்டாள் .... அவள் சிம் கார்டையும் உடைத்துவிட்டாள்....... ஒரு நிமிஷம் தான் என்ன செய்து கொண்டிருக்கோம் என்று ஒன்றுமே புரியவில்லை...... வேறு என்ன சொல்லிருந்தாலும் அவள் அதை கண்டிப்பாக செய்திருக்க மாட்டாள், அவள் அம்மா தங்கச்சி வைத்து மிரட்டுகிரனே அவர்களுக்கு எதாவது என்றால் தன்னால் கண்டிப்பாக தாங்கி கொள்ள முடியாது.............யாரிடம் உதவி கேட்பது, எப்படி இதற்கு தீர்வு கொண்டு வருவது என்று ஒன்னும் தெரியாமல்...... அவர்கள் நலன் கருதி தான் இப்படி தனியாக வந்து நிற்கிறாள் ........
********-----------*********
சித்தார்த் வீட்டுக்கு செல்ல அங்கு சித்தார்த்தின் அம்மா ரேவதி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார்....... சித்தார்த்தால் அவன் அம்மாவின் முகத்தை பார்க்க கூட முடியவில்லை.......அவன் அப்டியே அவன் அறைக்கு செல்ல..... அதை கவனித்த ரேவதி "ஒரு நிமிஷம் சித்தார்த் உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன், உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா ????? " என்று கேட்க ..........
சித்தார்த்திற்கு அவன் அம்மா கேட்க்கும் கேள்விக்கு பதில் கிடையாது என்று நன்றாக புரிய...... "இல்ல அம்மா இன்னிக்கு வேலை ரொம்ப அதிகமா இருந்தது அதான் ரொம்ப களைப்பயிருக்கு நாளைக்கு பேசலாமா " என்றவன் அவர் பதிலுக்கு கூட எதிர்ப்பார்க்காமல் அறைக்கு சென்றுவிட்டான்.......
ரேவதி பெரிய மகன் போவதையே பார்த்து கொண்டு நிற்க....... "என்னாச்சு மா ", என்று கேட்டான் ரேவதின் இளைய மகன் கிருஷ் என்னடா நினைச்சுட்டு இருக்கான் அவன் மனுசுல, ஒரு நிமிஷம் நின்னு பேச கூட முடியாதுனு சொல்லிட்டு போறான்டா என்றார்..... விடுங்க மா அவன் எதோ மன கஷ்டத்தில இருக்கான் இந்த நேரத்துல நாமலும் அவனா டிஸ்டர்ப் பண்ண வேணாம்..... அவனே வருவான் விடுங்க என்க....... ரேவதிக்கு தான் மணம் அடித்துக்கொண்டது..... அவனா சாப்பிடுவது வர சொல்லுடா என்றார்......
கிருஷ், சித்தார்த்தை தேடிச் சென்றான்..... உள்ளே சித்தார்த் பால்கனியில் நின்று கொண்டுருக்க கிருஷ் வருவதை கூட உணராமல் எதையோ யோசித்து கொண்டிருந்தான்...... கிருஷ் 2 முறை அழைத்து பின்பு தான் சுய நினைவுக்கே வந்தான்.......
என் சித்து அம்மாகிட்ட சரியா பேசல அவங்க எவ்வளவு வருத்த படுறாங்க தெரியுமா...... உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குனு எனக்கு புரியுது அதுக்காக அம்மாவா கஷ்ட படுத்தாத வா வந்து சாப்பிடு..... நீ சாப்ட்ருக்க மாட்டேன்னு அம்மாக்கு தெரியும் நாங்களும் சாப்பிடல வா போய் சாப்பிடலாம் என்று அழைக்க....... ஏன்டா இன்னும் சாப்பிடாம இருக்கீங்க, சரி வா போய் சாப்பிடலாம் என்று டின்னிங் டேபிள் நோக்கி சென்றான்.......
அங்கு அவனுக்காக காத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் சென்றவன்...... அம்மாவின் கையை பிடித்து, சாரி மா நான், என்று எதோ சொல்ல வர அதற்குமேல் அவனை பேசவிடாமல்... விடு சித்து உனக்கு மனசு கஷ்டம் தர எதையும் நாம பேச வேணாம்........ வா சாப்பிடலாம் என்று ரெண்டு மகன்களுக்கும் எடுத்து வைத்துவிட்டு தானும் சாப்பிட்டார்........
இப்போ ரேவதிக்கு சற்று நிம்மதியாக இருந்தது....... எங்கே தன் பெரிய மகன் பழைய விஷயத்தையே நினைத்து உடைந்து விடுவானோ என்று பயந்து போய்விட...... இப்போ அவன் இப்படி பேசுவதை பார்க்க சற்று நிமித்தியாக இருந்தது.......
ரேவதிக்கு எப்போதுமே பெரிய மகன் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது........ அதை ஒரு நாள் மகனே உடைத்து ஏறியபோகிறான் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை......