All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முருகன் ப்ரவீனின் "என் ஜீவன் உன்னிடத்தில்..." - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Murugan Praveen

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைத்து சதோதர, சகோதரிகளுக்கும் வணக்கம்,

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.. உங்கள் கமெண்டுலாம் படிச்சு எனக்கு ரொம்பவே சந்தோஷம். ஞாயிறு மட்டும் தான் என்னோட கதையை உங்களிடம் சேர்க்க முடியுமென்று நினைக்கிறேன்.

இன்னைக்கு ஞாயிறு தானே னு யாராவது சண்டைக்கு வந்தா.. உங்கள் அன்பிற்கு நான் என்றும் கடன் பட்டவன்.. பகிர முடியாத காரணத்தினால் இந்த வாரம் முடியாமல் போனதற்கு எனக்கும் வருத்தம் தான்.. உங்கள் சகோதரனை மன்னித்து அடுத்த ஞாயிறு வரை காத்திருங்கள்.

திட்டனும்னு முடிவு பண்ணிருந்தாலும்...அதை செய்யலாம்
 
Last edited:

Murugan Praveen

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மதிமுகமும், மழலை குணமும்,
மேகக்கூந்தல் நீள விரித்தாட; நகையும் பொன் நகையொலியாய் சத்தமிட;
பெண்ணவள் விழியால் பேசும்
பாஷைகளை பெயர்த்து தர
மொழியின் வரியில்
வார்த்தைகள் போதவில்லையே!

தேவதை பாதங்கள் பூமியினில்
பட்டதுவோ,
தென்மேற்குப் பருவகாற்றும்
தென்றலாய் மேனியை தீண்டுதே..!!

செவ்விதழ் திறந்து செல்வி இவள் பேசும் மொழிகளோ,
வண்டிகளின் ரீங்காரங்களிளும் சங்கீதங்களாய் என்னை சேருதே..!!

சாலையின் சிக்னல்-லில் நின்று கொண்டிருந்த ப்ரவீன், அவர்களுக்கான பச்சை வர்ண விளக்கு வர ஒரு நிமிடம் இருப்பதால், தன் கண்களை சுழல விட்டவன், அங்கே பேருந்து நிலையத்தில் தன் தோழியிடம் பேசி சிரித்து கொண்டிருந்த பெண் சற்று வித்தியாசமாக தெரிந்தாள்.. தான் எத்தனையோ அழகான பெண்களை கடந்து வந்து இருக்கிறோம், இந்த பெண்ணிடம் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம் என அப்போது உணராமல் போனான் பிரவீன். பச்சை வர்ண விளக்கு எரிந்த உடன் தன் காரினை நகர்த்தியவனின் நினைவுகளில் அந்த பெண்ணின் பின்பங்களே வர.. அவள் யாராக இருக்கும் என்ற எண்ணமே வந்து கொண்டிருந்தது..

தன் மனதில் இருந்த காதலில்

"எங்கயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவதென்ன மாயம் மாயம்"
என பாடி கொண்டே காரினை ஓட்டினான்.


சகோதர சகோதரிகள் அனைவர்க்கும் வணக்கம்...
இந்த ஞாயிறு உங்கள் கதை தராமல் விட்ட குற்றத்திற்காக. ஒரு சின்ன டீஸர்.. ரொம்ப சின்னது தான்... எப்படி இருக்கு, உங்களுக்கு பிடிச்சு இருக்கா னு கமெண்ட் பன்றிங்களா... ud கண்டிப்பா வரும் ஞாயிறு வரும்.. உங்கள் சப்போர்ட் தருவிங்க னு நம்புறேன்.

உங்கள்
முருகன்IMG-20190115-WA0010.jpg
 

Murugan Praveen

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் ஜீவன் உன்னிடத்தில்"


சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!
உங்கள் காத்திருப்பிற்கு மிகவும் நன்றி... உங்களை பார்க்க பிரவீன் அர்ச்சனாவுடன் பிரியா வும் வருகிறாள்!
அமைதியான, அன்பான பெண்ணாக வருகிறாள்..
உங்கள் ஆதரவை தேடி என்னுடன்.. பிரவீனுக்கு ஏத்த ஜோடியாக வருகிறாள்...


(ரொம்ப லெந்தா போகுதோ, ஆதரவை கேக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு)


அத்தியாயம் 2:

" என் தென்றல் வந்த வேளை
ஒரு சாரல் வீச கண்டேன்!
குயில் பாடும் சோலை
இந்த சாலை ஓரம் கண்டேன்!
ஆகாய தாமரை
ஆற்றிலே வீற்றிருக்க
அழகான பூவிவளை
பூமிதனில் பார்த்திருக்க
என் இதயம் கூறுதே
என் இவளும் நீதானே!!
என்னவளும் நீதானே!! "


இரவுகள் இனிதே முடிந்து விடியலை ஆரம்பிக்கும் முந்நேரமே தன் வீட்டில், சந்தன வாசமும், மங்கள சங்கீதமும் கேட்க, சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு பூஜை அறையை நோக்கி விரைந்தார், லட்சுமி.
எல்லா செல்வமும் வாழ்வினில் பெற்றும் அதை முழுதே அனுபவிக்காமல் தன் வாழ்க்கை ஆரம்பித்த சில வருடங்களிலேயே, ஒரு விபத்தில் தன் கணவனையும், தன் கால்களையும் இழந்து, மகளுக்காகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் லட்சுமி.

தன் அன்னை போலவே, பொறுமையாகவும், தன்னடக்கமாகவும், அனைவரிடமும் அன்பாகவும், தன் தந்தை இல்லாமல்
தவித்த போதும், இந்நாள் வரையில் தந்தை இல்லை என்ற நினைப்பை மறக்கும் அளவிற்கும் இத்தனை நாள் அன்பாக பார்த்துக்கொண்ட அன்னைக்காக எதுவும் செய்யும் அன்பு மகளாகவே இருப்பாள் பிரியா.

( மகளுக்காகவே வாழும் அன்னை, மகளுக்கு காதல் என்று ஒன்று வந்தாள் ஏற்பாரா? இல்லை தன் அன்னைக்காக எதுவேண்டுமென்றாலும் செய்ய துணியும் மகள், காதலை மறப்பாளா? )

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா
ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்"
என ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பாடி முடித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி காட்டிவிட்டு வெளியில் வந்தவள், "அம்மா எடுத்துக்குங்க" என்று தீபத்தை தன் அன்னையிடம் நீட்டினாள், பிரியா.


தீபத்தை தொட்டு எடுத்துக்கொண்ட லட்சுமி, தான் விபூதி வைத்து விட்டு, தன் மகளுக்கு குங்குமம் எடுத்து வைத்தார்.


தீப தட்டை பூஜை அறையில் வைத்துவிட்டு, வாங்க அறையில் உட்காருங்கள்.. நான் சென்று சமையல் வேலையை பார்க்கிறேன்..
என்று நகர்ந்த மகளை அழைத்து..
பிரியா கொஞ்ச நேரம் பக்கத்தில் உட்காருமா, எப்பொழுது பார்த்தாலும் வேலை பார்த்துக்கொண்டே இருக்காதே..
சரி, அது இருக்கட்டும்.. கலந்தாய்வுக்கு போகணும் னு சொன்னாயே.. எப்பொழுது.. என லட்சுமி கேட்க..
நாளைக்கு மா.. என்று பதிலளித்தவள் அம்மா.. நான் சென்று வர இரண்டு நாள் ஆகுமே.. உங்களை எப்படி தனியாக விட்டு செல்வது.. எனக்கு உங்கக்கூடவே இருந்தால் போதும், படிப்பு போதுமே? என்று நீண்ட யோசனையில் கேட்டாள், பிரியா.


லட்சுமி, "பிரியா பெண்களுக்கு படிப்பு ரொம்பவே முக்கியம்! எனக்கு என்ன இரண்டு நாள் தானே நான் பார்த்துக்கிறேன், ஆர்த்தி இங்கே இருப்பாள் அவள் என்னை கவனித்து கொள்வாள்".


"சரிம்மா, நீ சென்று சமையல் வேலையை பார் என்று மகளை அனுப்பிவிட்டவர், மகளை பிரிந்து இருக்க வேண்டுமே என்று கவலை கொண்டாலும், இப்படி ஒரு மகளை பெற்றிருக்கிறோம் என்று பெருமை கொண்டார்.


சிறிது நேரத்திற்கு பிறகு சமையல் முடித்து வந்தவள்.. அம்மா, ஆர்த்தி படத்துக்கு கூப்பிடுறா நான் போயிட்டு வரவா?"

லட்சுமி, "சரிம்மா பார்த்து போய்ட்டு வாங்க.. இதுக்கெல்லாம் கேட்கணுமா.. இன்னும் கொஞ்ச நாள் ல காலேஜ் போயிடுவ அதன் பிறகு படிப்புனு இருப்ப இப்பவே வெளியில் போன தான் உண்டு" என் தன் மகளிடம் பேசி கொண்டிருக்க.


"சரியா சொன்னிங்க மா, எங்க கூப்பிட்டாலும் வர மாட்டேன்.. அம்மா தனியா இருப்பாங்க னு சொல்லிட்டு இருக்கா" என்றபடி உள்ளே நுழைந்தாள் ஆர்த்தி.

ஆர்த்தி, "அதான் அம்மாவே சொல்லிட்டாங்களே இன்னும் என்ன சீக்கிரம் கெளம்பி வாடி" என்று தன் தோழியை அதட்ட.

"எங்கடி இப்பவே கூட்டிட்டு போற, சாப்பிட்டதும் போகலாம்" என்று லட்சுமி கூற,

"சாப்பாடா என்ன சாப்பாடு மா" என ஆர்வமாய் கேட்ட ஆர்த்தியை, “உப்புமா.. வேணுமா??” என சண்டை இழுத்தாள், பிரியா. ஏனென்றால் ஆர்த்திக்கு பிடிக்காத ஒரே சாப்பாடு உண்டு என்றால், அது உப்புமாவாக தான் இருக்கும்.

உப்புமா என்றதும் அம்மா, எனக்கு வெளியில் ஒரு வேலை இருப்பதாக கூறி நகர்ந்த ஆர்த்தியை, "நில்லுடி அவ விளையாடுறா, உனக்கு பிடித்த பொங்கல் தேங்காய் சட்னியோடு தயாராக இருக்கு, வா சாப்பிடலாம்" என அழைத்தார் லட்சுமி.

மூவரும் உண்டு முடித்ததும்.. அம்மா போய்ட்டு வரோம்.. என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தனர்.

ஆர்த்தி, "பிரியா உன் வண்டி எங்கடி?" என்று தன் இரு சக்கர வாகனத்தை கேட்கவும் தான்.. பிரியாவுக்கு, தன் வண்டியை சரி செய்ய கடையில் விட்டது ஞாபகம் வந்தது..

வண்டியை கடையில் விட்டு இருக்கிறேன். அந்த அண்ணா சரி பண்ணிட்டேன் னு சொன்னாங்க. நாம பஸ் ஸ்டாண்ட் க்கு போனால் வாங்கிக்கொள்ளலாம்.

**********************************

பிரபா உண்டு முடித்தவுடன், பிரவீன் தன் அன்னையிடம், "அம்மா நாங்க போயிட்டு வருகிறோம்" என்று சொல்லிவிட்டு செல்ல அதுவே அவனுக்கு தொல்லையாக முடிந்தது.

ஏனென்றால் இதற்கு முன்பு வெளியில் செல்லும் போது எப்போதும் சொல்லிவிட்டு சென்றதில்லை..

இன்று தங்கையால் நடந்த விபரீதத்தில் இருந்து தப்பிக்க நினைத்து மறுபடியும் அவனே சென்று மாட்டிக்கொண்டான்.

மீரா, "என்னடா புதுசா சொல்லிட்டு போற, ஒழுங்கா பத்திரமா போயிடு வாங்க!" என்றார்.

பிரபா, "அம்மா அது ஒண்ணுமில்ல, சார் நல்லவராமாம்" என பிரபா சேட்டையை ஆரம்பித்தாள் .

பிரவீன், "அம்மா சரி இனி சொல்லிட்டு போகல.. மனுஷன திருந்த விட மாட்டீங்களே!" என்று தன் அன்னையிடம் சொன்னவன்.

தன் அலுவலக வேலை சம்பந்தமான போன் கால் வந்ததும் பேச வெளியில் சென்ற கணேஷும் வர, இவர்கள் மூவரும் கிளம்பவும் சரியாக இருக்க.

அர்ச்சனா, "மாமா இன்னைக்கு நாங்களும் வெளில போறோம் வீட்ல யாரும் இல்ல உங்களுக்கு ஜாலி தான்" என்று பிரவீனின் தந்தையை கேலி செய்ய ஆரம்பித்தாள்.
"ஆமாம், என் பொண்டாட்டிய நான் கொஞ்சமா வேற யாரு பண்ணுவா?" என்று சிரித்தபடி சரி பத்திரமா போயிடு வாங்க என்று ஆதுரமாக அர்ச்சனா தலையை தட்டிவிட்டார்.

இவ்வளவு நேரம் அன்னையிடம் அரைட்டை அடித்தவர்கள், தந்தையை பார்த்ததும் அமைதியாக நாங்க போயிடு வரோம் பா என்று சொல்லிவிட்டு நகர்ந்தனர்.

மீரா, "விளையாட்டு பிள்ளைங்க" என்று உள்ளே சென்று விட்டார்.

கணேஷ், பிரவீன் பார்த்து பொறுமையா வண்டியை ஓட்டு, பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு, வா. சரியா...

"சரிப்பா" என்று சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினான், பிரவீன்.


இவர்களும் வெளியில் கிளம்பினர். சிறிது தூரம் கடந்த நேரத்தில் சாலையின் கூட்ட நெரிசலில் பொறுமையாக சென்று கொண்டிருந்த பிரவீனின் முன் ஒரு பெண் யாரோ சில பார்வையற்ற குழந்தைக்களுக்காக சாலையை கடக்க உதவி செய்து கொண்டிருந்தாள்.

சிறிது சலனப்பட்ட நெஞ்சோடு வண்டியை நகர்த்திய பிரவீன், அதிக தூரம் செல்லவில்லை, வண்டியை நிறுத்துவதற்கான சிகப்பு நிற சிக்னல் பார்த்து வண்டியை நிறுத்தினான்.

சாலையின் சிக்னல்-லில் நின்று கொண்டிருந்த பிரவீன்.. அவர்களுக்கான பச்சை வர்ண விளக்கு வர அறுபது வினாடிகள் மீதம் இருக்கையில்.. தன் கண்களை சுற்றி சுழல விட்டவன்.

தான் சிறிது நேரத்திற்கு முன்பு பார்த்த அதே பெண். தன் தோழியுடன் புன்னகையின் விளக்கமாய்.. இந்த உலகத்தில் இவர்கள் இருவரும் மட்டும் தான் இருப்பது போன்று.. சந்தோசமாய் பேசி கொண்டிருந்தாள்..

இவள் அழகை பார்த்ததும்.. குணத்தை பார்த்தும்.. மயங்காமல் போவனோ இந்த மடையன்.

தன் கண்களாலேயே கவிதை படி கொண்டிருந்தான்.

மதிமுகமும் மழலை குணமும்
மேகக்கூந்தல் நீள விரித்தாட, நகையும் பொன் நகையொலியாய் சத்தமிட
பெண்ணவள் விழியால் பேசும்
பாஷைகளை பெயர்த்து தர
மொழியின் வரியில்
வார்த்தைகள் போதவில்லையே!

தேவதை பாதங்கள் பூமியினில்
பட்டதுவோ,
தென்மேற்குப் பருவகாற்றும்
தென்றலாய் மேனியை தீண்டுதே..

செவ்விதழ் திறந்து செல்வி இவள் பேசும் மொழிகளோ,
வண்டிகளின் ரீங்காரங்களிளும் சங்கீதங்களாய் என்னை சேருதே.

வாகனங்கள் கிளம்பவும்.. பிரவீன் பேருந்து நிலையத்தில் நின்று பேசி கொண்டிருந்த பெண்ணையே பார்த்து கொண்டிருந்தான்.


பின்னால் இருக்கும் வாகனங்கள் சத்தத்தை எழுப்ப, வண்டியை எடுத்தவன் மனதில் காற்றின் மொழியாக கேட்ட
"எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை எந்தன் சாலை ஓரம்
வருவதென்ன மாயம் மாயம்"
என்ற வரிகள் அவனின் சிந்தனையை அதிகரித்தது.

(உண்மையாகவே பிரவீன், பிரியாவை முன்னவே சந்தித்து இருப்பானா... வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்)

நட்பும் காதலும் தொடரும்.......

image_search_1544980015280.jpgimage_search_1547876440401.jpgimage_share_1538300641581.jpg
 
Last edited:

Murugan Praveen

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் ஜீவன் உன்னிடத்தில்"

அத்தியாயம் 3:

“பார்வையில் பதிந்த

பாவையவள் யாரோ?

பேதையவளை நினைத்தே தினம்

பித்தம் கொள்ள வைக்கிறாள்.

திரும்பும் திசையாவும்

திரையாய் மனதில் விரிகிறாள்..

தேடி பார்க்கிறேன்

திடீரென மறைகிறாள்!!”



தன் மனதில் வந்த காதலால் சுற்றம் மறந்து தன்னை மறந்து, மனதிற்கு வந்த காதல் பாடல்களை பாடி கொண்டே வந்தான், பிரவீன்.



ரொம்ப நேரம் பொறுத்து வந்த பிரபா, "டேய் அண்ணா போதும் டா, முடியல. ஒரே காதல் பாட்டாகவே பாடிக்கொண்டு வருகிறாய்.. யாரையாவது பெண்ணாய் பார்த்தாயா?" என தனக்கு எப்பொழுதும் வரும் சரியாக சந்தேகத்தை தன் அண்ணனிடம் கேட்டாள்.



அர்ச்சனா, "என்னடா பிரவீன், திடீர்னு ரொம்ப சந்தோசமா வர, என்ன விஷயம் டா " தோழியாய் அவள் இருப்பினையும் தெரிவித்தாள்.



அர்ச்சு அதெல்லாம் ஒன்னும் இல்ல, சும்மா தான், என்று சமாளிக்க முயற்சி செய்தான். ஆனால் பிரவீன் வழிந்து கொண்டே பேசுவதை நம்பாமல் பார்த்த இருவரையும் பார்த்து, என்ன என வினவ,



"உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா, ஒரு பொய் சொல்ல கூட தெரியாது.. பிரபா சொன்னது போல யாரையாவது பார்த்தாயா?, எங்கடா பார்த்த? எங்க இருக்கா?" என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டாள்.



இவர்களிடம் ஏதாவது மறைக்க முடியுமா, எப்படியும் இவங்க கிட்ட சொல்லித்தான் ஆகணும், சரி இப்பவே சொல்லுவோம்.



காரினை சற்று பொறுமையாக சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு தன் தோழியின் புறம் திரும்பியவன்.



அர்ச்சு, நாம் சிக்னலில் நிற்கும் போது, பக்கத்துல இருந்த பேருந்து நிலையத்தை நோக்கி ஒரு பெண் வந்தாள், அவள் பெண்ணா இல்லை தேவதையா என்றே தெரியாத அளவுக்கு இருந்தா... இவன் கூறிக்கொண்டு இருக்கவும் ஓ..ஓ.. அப்படியா எனும் அளவுக்கு ம்ம்...கொட்டி கொண்டு அமர்ந்து இருந்தனர் இருவரும். பிரவீன் மேலும் தொடர, அவள் வரும்போது மழையில் நீர் கோர்த்து இருந்த மரங்களின் இலைகளை, அவள் தோழியின் மீது அடித்து விளையாடி கொண்டே வந்தாள்.



நாம் சின்ன வயதில் விளையாடுவோமே அது போல, அப்பொழுதுதான் அங்க ஒரு கண்தெரியாத ஒரு குழந்தை சாலையை கடக்க நின்றதை பார்த்தேன். நான் சென்று தூக்கலாம் னு காரில் இருந்து இறங்க போனால், அங்கு வந்த அந்த பெண், அக்குழந்தையை தூக்கிக்கொண்டு இந்த பக்கம் வந்து விட்டு செல்கிறாள்.



அவள் திரும்பி என்னை கடந்து செல்லும்போது எதையோ எடுத்துக்கொண்டு போனது போலவும் ஒரு மாயை உலகத்தில் இருப்பது போலவும் தோணுது.

நான் செய்ததையும் செய்யுறா, நான் செய்ய நினைப்பதையும் செய்யுறா... எனக்கு அந்த பெண்ணை வேறு எங்கேயோ பார்த்த மாதிரியான நினைவுகள் வருகிறது. ஆனால் எங்கு என்று தான் தெரியமாட்டேன் என்கிறது.



இவ்வளவு நேரம் கற்பனை செய்து பேசிய நண்பனை விசித்திரமாக பார்த்தாள், அர்ச்சனா.



"என்ன அர்ச்சு, இவன் தேவதை, மழை, நீர், குழந்தை னு புலம்பிக்கொண்டே போகிறான்" என்று பிரபா அர்ச்சனா காதை கடித்தாள்.



"என்னடா பிரவீன் சொல்ற, பார்த்தவுடனே காதலா?" அர்ச்சனாவும் தன் சந்தேகத்தை கேட்டாள்.



"தெரியல அர்ச்சு, அந்த பெண்ணை பார்த்ததிலிருந்து அவளோட நெனப்பாவே இருக்கு, மறுபடியும் பார்க்க மாட்டோமா னு மனசு தவிக்குது.." மீண்டும் பிரவீன் கற்பனையில் மிதக்க.



அர்ச்சனா, "சரிடா பிரவீன், பக்கத்துல தானே பார்த்தோம், எப்படியும் அங்கே தான் எங்கேயாவது தங்கி இருப்பா, கண்டுபிடித்துவிடலாம்."



பிரபா, அர்ச்சு எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு.. இவன் ஏற்கனவே அந்த பெண்ணை பார்த்த மாதிரி இருக்குனு னு கூறுகின்றான் என்றால், நமக்கு தெரியாமல், என்னவோ பன்னிருக்கான்.



அர்ச்சனா, பிரபா இந்த விசயத்துல நான் என் நண்பனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன், ஏன் னா என் நண்பன் என்கிட்ட எதையும் மறைக்க மாட்டான், என பெருமிதத்துடன் தன் நண்பனை நோக்கினாள், அவனும் அர்ச்சனாவை தான் பார்த்து கொண்டிருந்தான்.



அர்ச்சனா, தன் அண்ணனுக்கு சாதகமாய் பேசவும், "போச்சு போ" என தலையில் கை வைத்தாள், பிரபா.



"டேய் அண்ணா, எங்களை இங்கேயே தான் நிற்க வைக்க போகிறாயா " என தாங்கள் நிலையை நினைவுபடுத்தினாள் பிரபா.



"சரிடா பிரவீன், வண்டியை எடு" இந்த விஷயத்தை பொறுமையா பேசலாமென அர்ச்சனாவும் மொழிந்தாள்.



பிரவீன் காரை வேகமாக ஒட்டிக்கொண்டு செல்ல, பிரபா வாயை மூடாமல் பேசிக்கொண்டே வந்தாள்,



"டேய் அண்ணா, நீ போகின்ற வேகத்தை பார்த்தால், அந்த பெண்ணை நினைத்துக்கொண்டே எங்கேயாவது விட்டுவிடுவாயோ என பயமாக இருக்கு" என்று பிரபா கூற,



இவளை என்ன செய்வது என பிரவீன் நினைத்து கொண்டு பொறுமையாக வண்டியை ஓட்டினான்.



நீண்ட நேரமாக காரிலேயே சுற்றிக்கொண்டு இருந்ததால் பிரபாவுக்கு கடுப்பாக இருக்க, "டேய் அண்ணா எங்கடா போறோம், காரை நிறுத்தவே மாட்டேன் என்கிறாய்" என் சத்தம் போட்டு, எனக்கு பசிக்குற மாதிரி இருக்கு என கூற..



"என்னது பசிக்குதா!!" என ப்ரவீனும், அர்ச்சனாவும் ஒரு சேர அதிர்ந்தனர்.



வீட்டிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம் தான் இருக்கும் அதுக்குள்ள உனக்கு பசிக்குதா என இருவரும் பிரபாவை பார்க்க, நான் பாவம் என்பது போல் முகத்தை வைத்து கொண்டு இருந்த பிரபுவை பார்த்து, சரி சரி எதாவது ஜூஸ் கடையா பார்த்து நிறுத்துடா என்று அர்ச்சனா கூற, தங்கை நடிப்பதை உணர்ந்தவன், அர்ச்சனா கூறியப்பின் மறுக்க முடியாதவனாய் சாலையின் ஓரத்தில் இருந்த இளநீர் விற்கும் கடையில் வண்டியை நிறுத்தினான் பிரவீன்.



ப்ரவீனுக்கும் அர்ச்சனாவுக்கு ஏதும் வேண்டாம் என்பது போல் நின்றிருக்க..பிரபா இரண்டாவது இளநீர் வாங்கி குடித்து கொண்டிருந்தாள்.



அதை பார்த்து கொண்டிருந்த பிரவீன் அர்ச்சனா மேல் தான் செல்லமாய் கோபம் கொண்டான். இவள் இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறாளோ. ரெண்டு பேரு இங்கே நிற்கின்றோமே எங்கேயாவது கண்டுகொள்கிறாளா.. அவள் பாட்டுக்கு அடுத்த இளநீர் வாங்கி குடித்து கொண்டு இருக்கிறாள்.



அர்ச்சனா, "டேய் அவ சின்ன பொண்ணு இப்படி சாப்பிடுவதற்கெல்லாம் கண்ணு வைக்காத.." என் பிரவீனை அதட்டினாள்.



ஒரு வழியாக இரண்டு இளநீர் போதும் என்று பெருந்தன்மையாக முடித்து விட்டு தான், தன் அண்ணனையும் அர்ச்சனாவையம் பார்த்தாள், பிரபா.

****************************************

(ஆர்த்தி யாருனு நான் இன்னும் சொல்லவே இல்லையே.. ஆர்த்தி பற்றிய சிறிய பிளஷ்பாக்)

சில மாதங்களுக்கு முன் தான் பிரியாவும் லட்சுமி அம்மாவும் இந்த ஊருக்கு வந்தனர்..



அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் ஏற்கனவே வேலை பார்த்து கொண்டிருந்தார் ஆர்த்தியின் அன்னை. அவர் இறப்பிற்கு பின் தன் படிப்பினை விட்டுவிட்டு அந்த வேலைக்காக, லட்சுமி அம்மாவிடம் வேலைக்கேட்டு வந்தவள் தான் ஆர்த்தி.



தன் மகள் வயதில் இருப்பவள், படிப்பை பாதியில் விட்டுவிட்டு இப்பொழுது வேலை கேட்டு வந்திருப்பதை நினைத்து வருந்தினார், லட்சுமி.



லட்சுமி, நான் படிக்கச் வைக்கிறேன் படிக்கிறியா இந்த வேலை எல்லாம் வேண்டாம் என ஆர்த்தியிடம் கூற,



ஆர்த்தி, அதெல்லாம் வேண்டாம்மா, என் அம்மா இங்கே தான் வேலை பார்த்து இவ்ளோ நாள் என்னை படிக்க வைச்சாங்க. அவங்க கடைசியா இருந்த இந்த இடத்துலயே எனக்கு வேலை கொடுத்தீங்கனா, அதுவே எனக்கு போதும்.. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.. நாம் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் கஷ்டமா இருக்க கூடாது னு.



இந்த வயதிலேயே பெரிய மனுஷியாக பேசுபவள் இப்படி தாய் தந்தையின்றி இருக்க வேண்டிய நிலையிலா வாழ வேண்டும் என வருந்தினார், லட்சுமி.



உன்னால எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, இவ்ளோ பெரிய வீட்ல நானும் என் பொண்ணு மட்டும் தான் இருக்க போகிறோம், நீயும் என் மகள் மாதிரி தான்.



உன்னோட அம்மா இங்கே தானே இறந்ததாக சொன்ன, என்ன அம்மா வா நெனச்சுக்க, எனக்கும் இன்னொரு பொண்ணு கிடைத்த மாதிரியும், என் மகளுக்கும் ஒரு துணை கிடைத்த மாதிரி இருக்கும் என லட்சுமி விவரிக்க,



அம்மா, அப்படினா இரண்டு கண்டிஷன், இங்கே சமையல் வேலை நான் தான் பார்ப்பேன். இரண்டாவதா நான் என்னோட வீட்டில் இருந்தே வரேன் அவங்க வேலை பார்த்த இடத்தை எப்படி என்னால மறக்க முடியாதோ அதே மாதிரி அவங்க என்னோட இருந்த வீட்டையும் என்னால மறக்க முடியாது)



சரிம்மா, உன்னுடைய கண்டிஷனுக்கு எனக்கு சம்மதம் என்று ஆர்த்தியின் தலையை முட்டி சந்தோசபட்டார், லட்சுமி.



லட்சுமி, உள்ளே சமையல் செய்து கொண்டிருந்த பிரியாவை அழைத்து, பிரியா இந்த பொண்ணு பேரு ஆர்த்தி, நமக்கு துணையா இருக்க சேர்த்து இருக்கேன். உனக்கு இந்த பொண்ண பிடிச்சிருக்கா? என் மகளிடம் கேட்க. உனக்கு பிடிச்சிருக்கா அம்மா என பதில் கேள்வி கேட்டாள், பிரியா.



உங்களுக்கு பிடித்து இருந்தால் எனக்கும் பிடிச்சு இருக்கு, என் கூறிய பிரியாவிடம், "இந்த பொண்ணு நம்மலோட தங்க மாட்டாளாம், இந்த பொண்ணு தான் சமைப்பளாம்" என ஆர்த்தி கூறிய கண்டிஷனை தெரிவித்தார் லட்சுமி.



அம்மா, அதெல்லாம் முடியாது. நான் தான் சமைப்பேன். ஆர்த்தி வேணும்னா நாமளோடு சேர்ந்து சாப்பிடட்டும். என சண்டைக்கு நின்றாள், பிரியா.



"அம்மா, நான் சொன்ன கண்டிஷனுக்கு சரினு தான் சொன்னிங்க. இப்பொழுது மாத்தி பேச கூடாது, நான் தான் சமைப்பேன், அது என்னோட வேலை" என ஆர்த்தியும் சண்டைக்கு போனாள்.



சரி ஆளுக்கு ஒரு நாள் சமைங்க..சாப்பாடு வந்தா போதும் என்று லட்சுமி விலகி கொண்டார்.



இருவரும் பேச்சுக்காக சண்டை போட்டாலும், ஒருவற்கு மற்றவரை பிடித்து போக சண்டையாக ஆரம்பித்த உறவு சில மாதங்களிலே நல்ல நட்பாக மலர்ந்தது.

இருவரும் மாறி மாறி தன்னிடம் காட்டும் அன்பில், தான் வேலைக்காக தான் இங்கு வந்தோம் என்பதை மறைந்தே போனாள், ஆர்த்தி.

தன் அன்னை நினைவுகள் வரும்போதெல்லாம் மட்டும்.. தன் வீட்டிற்கு சென்று தங்கி கொள்வாள். லட்சுமி அம்மாவும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.


****************************************
(இன்றைய நாள்)
****************************************



வீட்டிலிருந்து வெளியில் வந்த பிரியாவும், ஆர்த்தியும் விளையாடிக்கொண்டே வந்து பேருந்து நிலையத்தில் வந்து நின்றனர்.

தாங்கள் பேருந்து நிலையத்தை அடைந்ததும் தன் வண்டியை சரி செய்ய கொடுத்து இருந்த அண்ணனிற்கு தன் அழைப்பை கொடுத்தாள் பிரியா.

சிறிது நேரத்தில் அவரும் இவர்களது வண்டியை சரி செய்து எடுத்து வந்து கொடுத்து விட்டார்.

வண்டியை வாங்கி ஓட்டிவந்த பிரியா, சரிடி எங்கே போகலாம் என கேட்க.

ஜீவா தியேட்டர் க்கு போலாம் இன்னைக்கு தல படம் வந்திருக்கு. கூட்டம் அல்லுதாம். எப்படியாவது டிக்கெட் வாங்கணும், சீக்கிரம் போ என தோழியிடம் கூறினாள், ஆர்த்தி.

சரி என்று பிரியாவும் வேகமாக சென்றாள்..

*****************************************

அர்ச்சனா, "பிரவீன் படத்துக்கு போலாமா, படம்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆகுற மாதிரி இருக்கு... "

பிரபா, "சூப்பர் அர்ச்சு.. நானும் அதான் சொல்லலாம் னு இருந்தேன். இன்னைக்கு நம்ம தல படம் ஜீவா ல வந்திருக்கு.. அங்க போகலாம்.. மதியம் சாப்பாட்டுக்கு அங்கேயே ரெஸ்டாரண்ட் ல சாப்பிடுக்கலாம்" என கூற.

பிரபா எப்போதும் சாப்பாடு பற்றியே பேசி கொண்டு இருந்ததால்..

(எப்ப பாரு சாப்பாடு, சாப்பாடு) என்ற அளவுக்கு மனதிற்குள் நினைத்தவன், தங்கையை வெட்டலாமா, இல்லை குத்தலாமா என முறைத்துவிட்டு, அமர்ந்து இருந்தான், பிரவீன்.

அர்ச்சனா அருகில் இருப்பதால்.. அவனால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் போனது.

அப்படியே சண்டைக்கு நின்றாலும், அர்ச்சனா அவள் சின்ன பெண் நீ தான் விட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கூற ஆரம்பித்துவிடுவாள்.

இவர்கள் இருவரும் அடிக்கடி இப்படி சின்ன சின்ன விளையாட்டு சண்டைகள் போடுவார்கள். அர்ச்சனா இருந்தால் பிரபாவோட அலைப்பறைக்கு அளவே இருக்காது. ஏன் என்றால் அப்பொழுது தான் பிரவீன் அடிக்காமல் எல்லாவற்றையும் செய்வான்.

சிறிது நேரத்தில் அந்த ஊரில் பெரிய தியேட்டரான ஜீவா தியேட்டர் வாசலில் வண்டியை நிறுத்தினான்.


பெரிய நடிகர்களின் படம் என்றால் அந்த தியேட்டர் சுற்றிலும் கூட்டம் அலைமோதும். அன்றும் அதுபோலவே இருந்தது.


டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அதிமாக இருக்க.. தியேட்டர் வெளியே யாராவது பிளாக் ல டிக்கெட் விற்கிறார்களா என் பார்த்தான், பிரவீன்.


சிறிது நேரம் கழித்து வந்த பிரவீன், வாங்க உள்ளே போகலாம் தங்கையையும் தோழியையும் அழைத்தான்.


பிரபா, கூட்டம் அதிகமா இருக்கே, நீ மட்டும் எப்படி டா வாங்குன..



பிரவீன், இந்த மாதிரி பெரிய நடிகர்களின் படம் ஓடினா, சைடுலேயே ப்ளாக்ல, அவங்கள பொய் பார்த்தாலே டிக்கெட் வங்கிடலாம்.


இவர்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டு கொண்டிருந்த இரண்டு ஜீவன்கள் இவர்களை நோக்கியே வந்தனர்.


"எஸ்கியூஸ் மீ" என தன் பின்னே இருந்து அழைத்த குரலை நோக்கி திரும்பியவன், அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த ஒரு பார்வையை வீசினான், பிரவீன்.


ஆமாம். அழைத்தது அவன் சாலையில் பார்த்த தேவதை .. பிரியாவே தான்.


பிரவீன், "என்னயா கூப்பிடிங்க.." என் கேட்க.


ஒரு உதவி வேணும், உங்களால் செய்ய முடியுமா? பிரியா கேட்டாள்.


என்ன உதவி என்றே கூறாமல் உதவினு மட்டும் சொன்னால் என்ன புரியும்.


பிரவீன், என்ன உதவி..


எங்களுக்கு இரண்டு டிக்கெட் எடுத்து தர முடியுமா? என பிரியா கேட்க.


சரி பணத்த தாங்க. நான் டிக்கெட் வாங்கிட்டு வருகிறேன் என்று பிரவீன் கிளம்ப,


அர்ச்சனா, பிரவீன் படத்துக்கு டைம் ஆயிட்டு பாரு.


பிரவீன், அர்ச்சு ஐந்து நிமிடங்கள் நான் இப்போது வந்து விடுவேன் என வேகமா சொல்லி கொண்டு கிளம்பினான்.


ப்ளாக்ல விற்றவங்க கிட்டயும் டிக்கெட் தீர போகுது கடைசி ரெண்டு டிக்கட் என்று கத்தி கொண்டிருந்தான்.


அதை வாங்கி வந்து கொடுத்தவனிடம். நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.


இவ்வளவு நேரம் உதவி செய்து கொண்டிருந்தாலும்.. தன்னையே பார்த்து கொண்டிருந்த பையனை.. பார்க்க பிரியாவுக்கும் தெவிட்டவில்லை. தான் உள்ளே செல்லும் வரை பிரவீனையே திரும்பி திரும்பி பார்த்து சென்றால் பிரியா.


இவர்கள் இப்படி பார்த்துக்கொள்வதை மனதில் வைத்துக்கொண்டாலும்.. இப்பொழுது படத்திற்கு செல்வோம் என பிரவீனை அழைத்து சென்றனர் இருவரும்.


(ஆண்களுக்கு மட்டும் தான் பார்த்ததும் காதல் வர வேண்டுமா)

image_search_1544979826910.jpg
நட்பும் காதலும் தொடரும்......

***************************************
 

Murugan Praveen

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைத்து சகோதரிகளுக்கும் வணக்கம்,

வழக்கம் போல உங்களிடம் மன்னிப்பு கேட்க தான் வந்து இருக்கேன்... வர ஞாயிற்று கிழமை எங்க வீடு குடி போகிறோம்..

ஆதலால் இந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாளும், செம வேலையா போய்ட்டு..

உடல் நிலையும் சரி இல்லாமல் போய் விட்டது. இரண்டு நாட்களில் இந்த வாரத்திற்கான அத்தியாயம் தரேன்.

சகோதரரை மன்னித்து விடுங்கள்.

உங்கள் ஆதரவை விரும்பும் சகோதரன்

முருகன்.
 
Status
Not open for further replies.
Top