All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "என்மனதை கொய்த திமிரே" - கதை திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே🙏🙏🙏

நான் மாலினிராஜா அதாங்க "கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே" கதை எழுதினேனே அதே மாலினிராஜாதான். இப்பொழுது எனது நாான்காவது கதையை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.

முதல் நன்றி ஶ்ரீமாக்குவுக்குதான். என்னையும் ஒரு எழுத்தாளரா அங்கீகரித்தற்கு. நன்றி ஶ்ரீமா🙏🙏🙏

முந்தைய கதைகளுக்கு தோழமைகள் நீங்கள் கொடுத்த ஆதரவு இன்றும் மறவேன். மிக்க நன்றி தோழமைகளே எனது இந்த கதைக்கும் உங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

இன்று இரவு முதல் டீஸரை பதிவிடுகிறேன். படித்து எப்படி இருக்குனு சொல்லுங்க. நன்றி அன்புடன்

மாலினிராஜா
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏🙏 முதல் டீஸர் இதோ போட்டுட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்கு என்று ஓரிரு வார்த்தைகள் சொன்னால் மிக மகிழ்ச்சியாவேன் 😍😍😍 உங்கள் அன்புடன் நான் மாலினிராஜா. Happy Valentine's Day to all my lovely friends ❤❤❤

என்மனதை கொய்த திமிரே

TEASER

24383

“ஏய் மீனு சொன்னா கேளு. மாமனை பார்த்தா பாவமா இல்லையா?”

மாமனின் முகத்தை அந்த விடியா வேளையில் பார்க்க முற்பட்டாள்,

‘க்கும் இருட்டும் இதுவும் ஒரே கலரு இதுல எங்குட்டு நான் முகத்தை பார்க்குறது. முதல்ல இந்த மாமன் எங்கே நிக்குதுனு கூட தெரியலையே!!

சரி பார்க்க வர மனுசனுக்கு… கொஞ்சம் வெளுப்பா சட்டை போடனும்னு தோனுச்சா... எவன் கண்ணிலும் அகப்படக் கூடாதுனு ஏதோ அதோட தோலுக்கு தோதா காப்பிக் கொட்டை கலரில் சட்டை போடிருக்கு போல’ என்ற யோசனையுடன் தலையை வலப்பக்கம் திருப்பினாள். தலையில் கட்டியிருந்த டார்ச்சின் உதவியால் கருத்தமாமன் முகம் தெரிந்தது.

‘தேன் நிலவு ஜெமினி கணேசன் கருப்பா இருந்தா என் மாமன் போலதான் இருப்பாரு போல’ எண்ணங்கள் தரிக்கெட்டு எங்கோ ஓடியது.

“மீனு மாமனை மன்னிச்சிருடி இனிமேல் அந்த கனகா காக்காவை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்”. அவனின் முகம் பார்த்ததில் மறந்துபோன விஷயம் அவனே ஞாபகப் படுத்தி ஆப்பை தேடிக் கொண்டான்.

“அட.. அட.. அட.. இவரு பெரிய சூரியகுஞ்சி பேச்சை பாரு காக்காவாம் காக்கா. இவரே காக்கா இதுல இன்னொரு காக்காவ பார்த்து கருப்புனு சொல்லுதாம்”

“மாமன் கலரு கருப்புனாலும் மனசு கரும்புடி”

“அதான் விதவிதமா எறும்பு வந்து சுத்துதோ?”

“மீனு அப்படி சொல்லாதடி நான் வேணுமுனு அப்படி பன்னல”

“ஆமாம் மாமா நான் வேணுமுனு நீ நினைக்கல…. அப்படி நினைச்சிருந்தா இப்படி பன்னிபுட்டு என் முன்னுக்கு தலை குனிஞ்சு நிற்பியா” என்று அங்கிருந்து நகரபோனவளை நிப்பாட்டியது அவன் பாடல்

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க இன்று ஏனிந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

“யோவ் தப்பு பன்னிட்டு பாட்டா பாடுரே எடு அந்த தொடப்பக்கட்டைய” அங்கும் இங்கும் தேடியவளின் கைகளில் எதுவுமே அகப்படாமல் போனது. அதை கண்டவன் குதூகலத்துடன் அடுத்த பாட்டை தொடர்ந்தான்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது. இந்த மீனுக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் குத்துகிறது

“யோவ் என் அத்தை பெத்த சொத்தை. செத்தய்யா இன்னிக்கு நீ என் கைல ” கத்திக்கொண்டே துரத்தியவளின் கைகளில் அகப்படாமல் பாம்பை போல் நெளிந்து நெளிந்து அந்த இருட்டில் ஓடியே போனான் வேங்கடம். “யோவ் வெங்காயம் என் கைல நீ மாட்டுன, உனக்கு சங்குதான் மாமோய்” அவனை துரத்த முடியாமல் மூச்சிறைக்க கத்தினாள் மீனலோச்சினி.
 
Status
Not open for further replies.
Top