All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8

வேகமாக கதவை அடைந்த சுபாஷினியை.. கோர்ட் சூட் அணிந்த இரண்டு பேர் தடுத்து அவள் யார் விசாரித்தார்கள். திடுமென அவளை விசாரிக்கவும், திகைத்து நின்றாள். அப்பொழுது மாரிமுத்து தான் வந்து “ஸார்! இவங்க இளைய ராஜாவை பார்த்துக்கிறதுக்கு வந்திருக்கிற நர்ஸ்..” என்றுக் கூறினான்.

அதற்கு அவளை மேலும் கீழும் பார்த்தவாறு உள்ளே செல்ல அனுமதித்தார்கள். தன்னுடன் அழைத்து சென்ற மாரிமுத்து அந்த ஹாலில் ஓரமாக நின்றிருந்த தங்கத்திடம் நிற்க வைத்து.. அவனும் பவ்யத்துடன் அங்கே நின்றுக் கொண்டான். அந்த ஹாலை ஒட்டியிருந்த கண்ணாடி அறையினோடு இருந்த அறையில் ரோஹீத்தை படுக்க வைத்திருந்தார்கள். தோட்டம் தெரியும்படி கட்டப்பட்டிருந்த வட்ட வடிவமான கண்ணாடி அறையில் மேலும் இரு பாதுகாவலர்கள் நின்றிருந்தார்கள். ரோஹீத் இருந்த அறையில் சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் ரோஹீத்தை பார்க்க வந்திருப்பது அங்கு நின்ற இரு பாதுகாவலர்களை வைத்து அறிந்துக் கொள்ளலாம். அவர்கள் பேசுவது இவர்களுக்கு கேட்க கூடாது என்று.. அந்த கண்ணாடி அறைக்கு நேர் எதிர் இவர்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சுபாஷினிக்கு புரிந்தது.

ஆனால் வந்திருப்பது யார் என்றுத் தெரியவில்லை. உடல்நிலை சரியில்லாது இருக்கும் பெரிய இராஜாவா அல்லது தற்பொழுது பொறுப்புகளை எடுத்திருக்கும்.. இளைய ராணியின் கணவரா என்று ஆர்வத்துடன் மெல்ல விழிகளை சுழற்றிப் பார்த்தாள்.

அவளது ஆர்வம் புரிந்த மாரிமுத்து மெல்ல “இளைய ராணியும், அவங்க கணவரும்..” என்று மட்டும் முணுமுணுத்தான்.

சுபாஷினி “ஓ!” என்றுக் கிரகித்துக் கொண்டாள்.

அப்பொழுது ரோஹீத்தின் கத்தல் கேட்டது.

“நோ மீன்ஸ் நோ..”

மாரிமுத்துவிற்கும் சுபாஷினிக்கும்.. அவர்கள் என்ன கேட்டிருப்பார்கள்.. ரோஹீத் எதற்கு மறுப்பு தெரிவித்திருப்பான் என்றுப் புரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தார்கள். அங்கு நின்றிருந்த பாதுகாவலர்கள் இருவர் கல் சிலை போல் முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி நின்றிருந்தார்கள். அதைப் பார்த்த இருவரும்.. அவர்களும் எதையும் காதில் வாங்கவில்லை.. என்ற பாவனையில்.. அவர்களைப் போல்.. உணர்ச்சிகளற்று நிற்க முயன்றார்கள்.

அறையினுள் ரோஹீத் “வாட் இஸ் திஸ்! ட்ரீட்மென்ட் எங்கே எடுத்துட்டா என்ன! பாஸ்சன் குடித்து சாவதாய் இருந்தால் கூட.. அரளிவிதை அரைச்சு குடிக்காம.. காஸ்ட்லியான விஷ பாட்டில் வாங்கி குடிக்கணுமா..” என்று இரைந்தான்.

உடனே ரேஷ்மா “ஷ்ஷ் அண்ணா! என்ன பேசறே..” என்று சங்கடத்துடன் கேட்டாள்.

ரோஹீத் “பின்னே என்ன! நான்தான் வரலை. இங்கேயே இருந்திருக்கிறேன்.. என்றுச் சொல்லிட்டேன். ஆனா நீங்க நேரில் வந்து கூப்பிடறீங்க! ஐயம் பைன் இயர்..” என்றான்.

அதற்கு ரேஷ்மாவின் பார்வை கூர்பெற்றது. அவளது அண்ணனனை போலவே!

ரேஷ்மா கூர்ப்பார்வையுடன் “ஒய் இயர்?” என்றுக் கேட்டாள்.

ரோஹீத் அதை விட கூர்மையான பார்வையுடன் “ஒய் நாட் இயர்!” என்றுக் கேட்டான்.

அதற்கு ரேஷ்மா “காரணம் இருக்கு தானே..” என்றாள்.

அதைக் கேட்ட ரோஹீத்தின் முகத்தில் கசந்த சிரிப்பு வழிந்தது. பின் விரக்தியுடன் “ஆனா இன்னும் அந்த காரணம் இல்லையே..” என்றான்.

அதற்கு ரேஷ்மாவினால் உடனே பதிலளிக்க முடியவில்லை. சிறு குன்றலுடன் தலை குனிந்தவள், பின் நிமிர்ந்து “உனக்கு மேரேஜ் ஆகப் போகுது அண்ணா! விரைவில் இந்த சமஸ்தானத்தின் இராஜாவாக பட்டம் கட்டப் போறாங்க..” என்றாள்.

ரோஹீத் விழிகளில் பளபளப்புடன் “அதை ஏன் இப்போ சொல்கிறே?” என்றுக் கேட்டான்.

உடனே பதில் கூற முடியாமல் ரேஷ்மா திணறினாள்.

இந்த மாளிகையை விட்டு அவர்கள் செல்வற்கு ரோஹீத்தின் பழைய காதல் தான் காரணம்! அதனால் அந்த நினைவு வேண்டாம்.. என்று இங்கே இருக்க கூடாது என்று எப்படிக் கூறுவது என்றுத் திணறினாள். ஏனெனில் அக்காரணத்தைக் கூறினால்.. அது எரிகிற தீயில் தணலை அள்ளிப் போட்டது போன்று ஆகிவிடும். ஏற்கனவே இந்த குடும்பத்தின் மேல் கோபத்தில் இருந்த ரோஹீத்திற்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது போன்று ஆகிவிடும். எனவே சற்று திணறியவள், பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு “அவ்வளவு பெரிய சமஸ்தானத்தின் இராஜாவாக போகிற நீ.. இப்படி இந்த சின்ன மாளிகையில் யாருமில்லா தனிமையில் இருந்தாகணுமா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ரோஹீத் “ஓ கமான்! அதுதான்.. என்னையும் உங்களோட சிறைக்குள் இழுக்க போறீங்களில்ல! ஒரு டென் டேஸ்.. எனக்காக மட்டும் என்று நான் இருக்கணும்! அப்பறம் உங்க சிறைக்கு வரேன். துரத்த வேண்டியவங்களைத் துரத்திட்டு.. கடைசியில அந்த சிறையையே தகர்க்கிறேன். இப்போ என்னை விடுங்க..” என்றுக் கத்தினான்.

அதுவரை அண்ணன் தங்கை உரையாடலை அமைதியாக கேட்டு்க் கொண்டிருந்த ஆதர்ஷ், ரேஷ்மாவிடம் “நான் காரில் இருக்கேன்.” என்றுச் செல்ல திரும்பினான்.

ரேஷ்மா “ஆதர்ஷ்..” என்றுக் கரத்தைப் பிடிக்கவும், உதறி தனது கையை விடுவித்துக் கொண்டவன் “உன் அண்ணன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையா பேசறான். அதைக் கேட்டுட்டு நிற்கணுமா! உனக்கு ரோஷம் இல்லாமல் நிற்கலாம். ஆனால் என்னால் நிற்க முடியாது. ரோஹீத்தை இங்கிருந்து அழைச்சுட்டு.. சில பிஸினஸ் டிடெய்ல்ஸ் பேசலாம் என்று வந்தேன். ஆனால் எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் என்னால் நிற்க முடியாது.” என்றுவிட்டு விருவிருவென்று வெளியேறினான்.

ஆதர்ஷ் செல்வதைப் பார்த்து ரோஹீத் சத்தமாக சிரித்தான்.

“விடு ரேஷ்மா! அவன் மானஸ்தன்! அவரைத் துரத்தியடிப்பேன்.. என்றுச் சொன்னதைப் புரிஞ்சுக்கிட்டு கோபத்தோட போறார். என்ன சொன்னார் பிஸினஸ் டிடெய்ல்ஸ் பேச வந்தாரா.. அவர் செய்த சுரட்டலை சமாளிக்க வந்தார்.” என்றுவிட்டு மீண்டும் சிரித்தான்.

அதற்கு ரேஷ்மா “அவர் உன்னோட தங்கை கணவர் அண்ணா! இன்னும் உன்னோட தங்கை அவர் மேலே பைத்தியமா தான் இருக்கா..” என்றாள்.

ரோஹீத் “அதை என்கிட்ட பொறுப்பை ஒப்படைக்கும் முன் யோசித்திருக்க வேண்டும் ரேஷ்மா! நான் பாட்டிற்கு அமைதியாக உலகத்தை சுற்றிட்டு இருந்தேன். நீதான் இதுக்குள்ள இழுத்துவிட்டே! என்னோட அமைதியை கலைச்சு.. கோபத்தைக் கிளறிவிட்டுட்டே! அதோட பலனை அனுபவிச்சு தான் ஆகணும்.” என்றான்.

ரேஷ்மாவிற்கு முதன் முறையாக தனது அண்ணனை வரவழைத்தது தவறோ என்றுப் பட்டது.

மெல்ல ரேஷ்மா “நீ இங்கே இருந்தா.. இந்த மாதிரி நினைச்சு இன்னும் மனம் வேதனைப்படுவே என்றுத் தான்.. இங்கிருக்க வேண்டாம் என்றுச் சொல்கிறேன்.” என்றாள்.

அதற்கு ரோஹீத் “என்னைப் பற்றி என்னை விட உனக்கு நல்லா தெரியுமோ!” என்றுச் சிரித்துவிட்டு.. “உங்களை எல்லாம் பார்க்க பார்க்க தான்.. எனக்கு வெறியேறுது ரேஷ்மா! என்னை இங்கே தனியா விடு.. மனம் ஆறினதும் வருகிறேன்.” என்றான்.

அதைக் கேட்ட ரேஷ்மா முகம் சுருங்க அமைதியாக நின்றாள். ரோஹீத் சிறு முறுவலுடன் தன் கையை நீட்டவும், ரேஷ்மா அருகில் வந்தாள். அவளது தலையை வருடியவன், அமைதியான குரலில் “நீ சொன்ன மாதிரி.. நம்ம சமஸ்தானத்தின் சொத்துக்களை மீட்டு தந்துட்டு நான் இங்கிருந்து போயிருவேன் ரேஷ்மா! ஆதர்ஷிற்கு அவன் தப்பை புரிய வச்சா போதும். அவனும் உன்னை வெறுத்தர மாட்டான். அதனால அவன் ஒண்ணும் உன்னை விட்டுப் போக மாட்டான். என்னோட வேலை முடிந்ததும்.. ஒருவேளை எனக்கு மனைவியாக வரப் போகிறவள், என் மனதுடன் ஒத்துயிருந்தால்.. அவளையும் அழைச்சுட்டு போவேன். இல்லைன்னா.. பட்டம் கட்ட என்று கல்யாணம் கட்டியவளை.. இராஜா வேஷத்தை கலைத்ததும் விட்டுட்டு போயிருவேன். அதனால்.. என்னைப் பற்றி ரொம்ப கவலைப்படாதே! நான் ஒகே! என்னை மேலும் வெறி ஏற்றாதீங்க என்றுத் தான் சொல்கிறேன். நீ போ..! நான் என் கால் சரியானதும் வரேன்.” என்றான்.

ரோஹீத் கூறியதைக் கேட்டு ரேஷ்மாவிற்கு சந்தோஷப்படுவதா.. அழுவதா என்றுத் தெரியவில்லை. தனது தலையை வருடிய அண்ணனின் கரத்தைப் பற்றி முத்தமிட்டுவிட்டு.. “நான் நாளைக்கு வருவேன். நீ வர வேண்டானு சொன்னாலும் வருவேன்.” என்றுவிட்டு வெளியேறினாள்.

வெளியே வந்த ரேஷ்மா சுற்றிலும் பார்த்தாள். அங்கு மாரிமுத்து.. அவனின் மனைவியுடனும்.. இன்னொரு பெண்ணுடனும் நிற்பதைப் பார்த்தாள். அவர்களைப் பார்த்து கையசைக்கவும், மாரிமுத்துவும், தங்கமும் விரைந்தார்கள். சுபாஷினி தானும் அவர்களுடன் செல்ல வேண்டுமா.. இல்லை என்னை அழைக்கவில்லையா என்ற யோசனையுடன் அங்கேயே நின்றுவிட்டாள்.

மாரிமுத்துவும், தங்கமும் ரேஷ்மாவை நெருங்கி வராமல் நான்கடி இடைவௌியில் நின்று வணங்கினர்.

ரேஷ்மா தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டு “என் அண்ணன் யார் என்றுத் தெரியும் தானே! அந்த சமஸ்தானத்தின் இராஜாவாக பொறுப்பேற்க போகிறவர், உங்களுக்கு படியளக்க போகிறவர்.. அவரை எப்படிப் பார்த்துக்கணும் என்றுத் தெரியும் தானே..” என்று அதிகாரத்துடன் கேட்டாள்.

அவர்கள் குனிந்த தலை நிமிராது “நல்லா தெரியுங்க! கடவுளுக்கு செய்கிற பணிவிடை செய்கிற மாதிரி பார்த்துப்போங்க..” என்றனர்.

அதைக் கண்டு ரேஷ்மாவின் முகத்தில் மதர்ப்புடன் கூடிய புன்னகை மலர்ந்தது. அடுத்து அவளின் பார்வை தனியாக நின்றுக் கொண்டிருந்த சுபாஷினியிடம் சென்றது.

“அந்த பொண்ணு உங்க மகளா!” என்றுக் கேட்டாள்.

மாரிமுத்து “என் பொண்ணு சேலம் ஹாஸ்ட்டல தங்கி படிக்கிறாங்க! இது நம்ம மாளிகைக்கு வர வழியில் இருக்கிற கதிரேஷன் சுசீலா பொண்ணுங்க! இந்த பொண்ணு நர்ஸ்க்கு படிச்சிருக்குங்களாம். இந்த பொண்ணு தான் நம்ம இராஜா விபத்துல மாட்டின போது.. முதல்ல பார்த்ததுங்க.. அப்பறம் என்னைக் கூட்டிட்டு போய்.. இரண்டு பேரும் சேர்ந்து தாங்க.. இங்கே கூட்டிட்டு வந்தோம். இராஜா இந்த பொண்ணையே நர்ஸா அவரைப் பார்த்துக்க சொல்லியிருக்காருங்க..” என்றான்.

மாரிமுத்து கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரேஷ்மாவின் விழிகள்.. கடைசியாக அவன் கூறியதைக் கேட்டு இடுக்கியது.

சுபாஷினியின் கையை இளைய இராஜா பற்றிக் கொண்டு இருந்ததை கூறி விடலாமா என்று எண்ணம் தோன்றி.. இளைய இராஜாவிற்கு தெரியாமல் அவரைப் பற்றிக் கூறியது தெரிந்தால்.. அவன் கதி அதோ கதி தான் என்று அமைதியாக நின்றான்.

பின் ரேஷ்மா அவர்களிடம் “நீங்க இங்கேயே நில்லுங்க..” என்றுக் கட்டளையிட்டு விட்டு.. சுபாஷினியை நோக்கி சென்றாள்.

இளைய ராணி தன்னை நோக்கி வருவதை அறிந்த.. சுபாஷினி உள்ளம் வெடவெடக்க.. மேலும் தலைகுனிந்தாள்.

ஏனெனில் சிறு வயதில்.. ரேஷ்மா சுபாஷினி மற்றும் அவள் வயது பெண்களை ஏளனமாக பார்த்து கேலி பேசி சிரித்திருக்கிறாள். தலை முடியை பிடித்து இழுத்து விளையாடுவாள். மேலும் மண்ணை அள்ளி அவர்களின் தலையில் போட்டுவிட்டு கைக்கொட்டி சிரிப்பாள். அதனால் அன்றைய தினத்தில் இருந்து இளைய ராணி என்றாலே சுபாஷினி கடைசி கோடிக்கு ஓடிவிடுவாள். எட்டு வருடங்களில் கோவில் விஷேஷத்திற்கு வந்து கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்ட போதும்.. ரேஷ்மாவிற்கு திருமணம் ஆகிய புதிதில்.. கணவருடன் பெரிய காரில் வீதி உலா போல்.. வந்தாள். அப்பொழுது ஊர்மக்களோடு மக்களாக நின்ற சுபாஷினி மலர்களை தூவி வரவேற்ற பொழுது பார்த்திருக்கிறாள். அப்பொழுது சுபாஷினிக்கு ‘என்னா கலர்! என்ன அழகு!’ என்றுத் தான் தோன்றியிருக்கு.. மற்றபடி.. அவளிடம் கொண்ட பயம் இன்னும் தெளியவில்லை.

அவ்வாறு இருக்கும் பொழுது.. தற்பொழுது தனிமையில் நேருக்கு நேர் ரேஷ்மா வரவும், சிறு பதட்டத்துடன் நின்றிருந்தாள்.

அவளுக்கு அருகில் வந்த ரேஷ்மா “இளைய இராஜா விபத்துல மாட்டிய போது.. நீதான் அழைச்சுட்டு வந்தியாம். அவருக்கு நீதான் நர்ஸா இருக்க போறீயாம். ம்ம்! பெரிய பாக்கியம் செய்தவ தான் நீ! ஆனா அந்த இடத்திற்கு அர்த்தமும் எல்லையும் தெரியும் தானே..” என்றவளின் குரல் இரும்பென இறுகியது.

சற்றுமுன் சிறு தெளிவு பெற்றிருந்த சுபாஷினிக்கு தற்போது ரேஷ்மாவிற்கு பதில் அளிப்பதில் எவ்வித தயக்கமும் இருக்கவில்லை. எனவே குனிந்த தலை நிமிராது “நான் விருப்பப்பட்டால் என் நிலை என்னவாகும் என்றுத் தெரியுங்க.. அந்த பக்கம் இருந்து விருப்பம் வந்தால்.. அதற்கு அர்த்தமும் எனக்கு தெரியுங்க..” என்றவள், கூடவே “எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்குங்க..” என்றாள்.

அதற்கு மதர்ப்புடன் பார்த்த ரேஷ்மா “உன் கல்யாணத்துக்கு.. சமஸ்தானத்தின் சார்பா சீர்வரிசை அனுப்பி வைக்க சொல்றேன்.” என்றாள்.

அதற்கு சுபாஷினி இன்னும் சிரத்தை தாழ்த்தி “நன்றிங்க இளைய இராணி..” என்றாள்.

பின் சுபாஷினியிடம் “இங்கேயே நில்..” என்றுவிட்டு வாசலை நோக்கி சென்றவாறு மாரிமுத்து மற்றும் தங்கத்தை தலையசைத்து அழைத்தாள். உடனே அவர்கள் விரைந்தார்கள்.

அவர்களிடம் ரேஷ்மா நடந்தவாறு “நீங்க சமைக்கிற உணவெல்லாம் என் அண்ணன் சாப்பிட மாட்டார். அதையெல்லாம் அவருக்கு தராதீங்க. அவருக்கு என்று ஸ்பெஷலா சமைக்கிறது ஆள் அனுப்பரேன். அவன் தங்கறதுக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்துக் கொடுங்க! சமையல் நேரம் போக.. அவன் இளைய இராஜாவையும் பார்த்துப்பான்.” என்றுவிட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறினாள்.

அவளுடன் வந்து.. கார் கதவை திறந்துவிட்ட பாதுகாவலன் அந்த காரின் முன்னிருக்கையில் ஏறிக் கொண்டான். மற்ற பாதுகாவலர்கள். அந்த காருக்கு முன்னால் நின்றிருந்த காரில் அவசரமாக ஏறினார்கள். பின் இரு கார்களும் அரண்மனையை விட்டு வெளியேறியது.

அந்த இரு கார்களும்.. கண்ணில் இருந்து மறைந்த பின்பே அதுவரை மூச்சை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூவரும் வெளியே விட்டார்கள். பின் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். அப்பொழுது “சுபா..” என்ற அழைப்பில் மீண்டும் மூவரும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ரோஹீத் படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு விரைந்தார்கள்.

ரோஹீத் “எனக்கு பசிக்குது.” என்றான்.

சுபாஷினி தங்கத்தை பார்க்கவும், அவள் “நான் செய்துட்டேன். ஆனா..” என்று இழுத்தாள்.

ரோஹீத் “என்ன ஆனா..” என்றுக் கேட்கவும், மாரிமுத்து பதிலளித்தான்.

“நாங்க சமைக்கிறது உங்க உடம்புக்கு ஒத்துக்காதுனு இளைய இராணி சொன்னாங்க! அதுனால உங்களுக்கு சமைக்கிறதுக்கு ஆள் அனுப்பறேன்னு சொன்னாங்க..” என்றான்.

ரோஹீத் “அந்த குக் வர வரைக்கு நான் பட்டினி கிடக்கிறதா..” என்கவும், மாாிமுத்து “ஹோட்டலில் இருந்து வாங்கிட்டு வரட்டுங்களா..” என்றுக் கேட்டான்.

உடனே ரோஹீத் “அதை விட டிரெகுலாவா மாறி.. மனுஷன் இரத்தம் குடிக்கலானு இருக்கேன்.” என்றான்.

அதைக் கேட்டு மாரிமுத்து திருதிருவென்று விழிக்கவும், சுபாஷினி சிரிப்பை அடக்கிக் கொண்டு தங்கத்திடம் சரிந்து “சீக்கிரம் நீங்க செய்த டிபனே கொண்டு வாங்க! நாம் இளைய இராணி சொல்ற பேச்சையும் கேட்கணும். இளைய இராஜா சொல்ற பேச்சையும் கேட்கணும்.” என்கவும், தங்கம் விரைந்து சென்று இட்லி மற்றும் சம்பார் சட்டினிகளை எடுத்து வந்தாள். அதன் மணத்திலேயே அதன் சுவையும் தெரிந்தது.

ரோஹீத் கட்டிலில் சாய்ந்து அமர்வதற்காக முதுகிற்கு பின்னால் தலையாணிகளை வைத்திருந்தவர்கள், தற்பொழுது நன்றாக நேராக அமர்வதற்கு ஏதுவாக வைத்தார்கள். அதற்குள் பழைய சமான்கள் போட்டிருந்த அறைக்கு சென்ற மாரிமுத்து.. அங்கு கால் நீளம் குறைவாக கொண்ட சிறு மேசையை சுத்தம் செய்து எடுத்து வந்தான். அதை ரோஹீத் சாப்பிடுவதற்கு எதுவாக கட்டிலின் மேல் வைத்தான். அந்த சிறு மேசையின் இரு கால்களும்.. அவனின் காலிற்கு இருபுறமும் இருக்க.. ரோஹீத் எடுத்து சாப்பிட வசதியாக இருந்தது. தங்கம் அந்த மேசையில் சாப்பிட வேண்டியதை வைத்து.. சிறு ஸ்புனையும் வைத்தாள். அது கொண்டு ரோஹீத் ட்ரீப்ஸ் ஏற்றப்படாத இடது கையால் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

நாலு இட்லியையும் முழுமையாக காலி செய்த பின்பே ரோஹீத் நிமிர்ந்தான். தங்கம் சாப்பிட்டதை அப்புறப்படுத்தினாள். சுபாஷினி அவனுக்கு தண்ணீர் பருக கொடுத்து வாங்கி வைத்த பின்.. அவனுக்கு கொடுக்க மாத்திரையை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது ரோஹீத் “ரேஷ்மா! எனக்கு என்று சமைக்கிறதுக்கு ஆள் அனுப்பிகிறேன் என்றுச் சொன்னாளா?” என்றுக் கேட்டான்.

அதற்கு மாரிமுத்து “ஆமாங்க” என்றான்.


ரோஹீத் “அவன் வந்தா.. சமைக்கிற நேரம் போக மீதி நேரம் என்னைப் பார்த்துப்பான் என்றுச் சொன்னாளா..” என்றுக் கேட்டான்.

மாரிமுத்து அதற்கும் “ஆமாங்க” என்றான்.

அதைக் கேட்ட ரோஹீத் கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்.

பின் “என்னை வேவு பார்க்க ஆள் வைக்கறாளா..” என்றுச் சிரித்தவன், பின் குரல் இறுக “அவனை உள்ளே வர விடாதே! அப்படியே அனுப்பிரு! இது என் ஆர்டர்..” என்றான்.

மாரிமுத்து திகைப்புடன் புரியாது பார்த்தான்.. என்றால் சுபாஷினியோ அதற்கு அர்த்தம் புரிந்து எடுத்து விட்ட அந்த நாலு மாத்திரையை மேலும் மும்மரமாக எடுப்பது போன்று பாவனை செய்தாள். சுபாஷினியை பார்த்த ரோஹீத்திற்கு மேலும் சிரிப்பு வந்தது.

திகைத்து நின்ற மாரிமுத்துவிடம் ரோஹீத் “நான் சொன்னதைச் செய்! நான் கூப்பிடும் போது வா போதும். இப்போ நீ போகலாம்.” என்றதும்.. சரியென்று தலையாட்டிவிட்டு மாரிமுத்து சென்றான்.

அவன் செல்வதைப் பார்த்த ரோஹீத் “இவன் நான் சொன்ன வேலையைச் செய்திருவான். என் தங்கை ஏற்பாடு செய்யும் ஆளை நிச்சயம் உள்ளே விட மாட்டான். ஆனால் இவனே வேவு பார்க்கிற ஆளா மாறுவான் பாரேன். ரேஷ்மாவை பற்றி எனக்கு நல்லா தெரியும்.” என்றுச் சிரித்தான்.

மாத்திரைகளை அவனது கையில் பவ்யமாக வைத்த சுபாஷினி அதற்கு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவளது நிலை பற்றி அவள் தெளிவாக இருந்தாள். அதை மட்டும் செய்துவிட்டு சென்றாள். முன்பை போல் மனம் குழம்பாது என்பதில் தீர்மானமாக இருந்தாள்.

அவளது முகத்தைப் பார்த்த ரோஹீத் “நான் எதாவது பேசினாலோ.. கேட்டலோ சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றாலும் எனக்கு கோபம் வரும்..” என்றான்.

உடனே நிமிர்ந்த சுபாஷினி “எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலைங்க ஸார்! அதுதான் அமைதியா இருந்துட்டேன்.” என்றாள்.

ரோஹீத் “அப்போ.. எதை வேவு பார்க்க நினைக்கிறாங்க என்று உனக்கு தெரியும்.” என்கவும், சுபாஷினி பதில் கூற முடியாமல் திணறினாள்.

அதைப் பார்த்து சிரித்த ரோஹீத் “இடியட்ஸ்! என்னால் எப்படி இன்னொரு காதலை செய்ய முடியும் என்று யோசிக்க மாட்டாங்களா..” என்றவாறு தலையாணியில் சாயவும், சுபாஷினி படுப்பதற்கு ஏதுவாக தலையாணிகளை வைத்துக் கொடுத்தாள்.

ரோஹீத்தின் பார்வை எங்கோ இருக்க.. சுபாஷினி அமைத்துக் கொடுத்த தலையாணியில் தலையை வைத்து நன்றாக படுத்தான்.

அவனின் தற்பொழுது விட்டத்தை வெறித்திருக்க.. “இன்னொரு மலர் உருவாக நான் விட மாட்டேன்.” என்றுத் தீர்மானமாக கூறினான்.

சுபாஷினி என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவளால் நிம்மதியும் கொள்ள முடியவில்லை. அதே சமயம்.. காதல் இல்லை என்றால்.. வேறு என்ன எண்ணத்தில் அவனுடன் வைத்திருக்கிறான் என்ற பழைய பயம் மெல்ல எட்டிப் பார்த்தது.

பின் சுபாஷினியிடம் திரும்பிய ரோஹீத் “நீ மலர் கிட்ட டியுசன் படிச்சியா..” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்டதும்.. சுபாஷினிக்கு உதறல் எடுத்தது. அவளைக் கண்டுப்பிடித்து விடுவானோ என்ற பயம் தொற்றிக் கொள்ள.. ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

ரோஹீத் திடுமென “அப்போ உனக்கு எத்தனை வயசு?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி “சிக்ஸ்டின்..” என்கவும், “ஓ..” என்றுச் சிரித்த ரோஹீத் “நானும் ரொம்ப சின்ன வயசு பொண்ணு பார்க்கிற மாதிரி.. மலர் கிட்ட பழகியிருக்கிறேனோ என்று நினைச்சேன். எல்லாம் புரிந்த வயசு தான்! ஆனாலும் வெரி டேன்ஞ்சரஸ் ஏஜ் தான்!” என்றான்.

பின் மீண்டும் விட்டத்தை பார்த்து படுத்தவனின் நினைவடுக்கில் மலருடன் பழகிய நாட்கள் வந்து சென்றன. வலிக்கு கொடுத்த மருந்தின் உபயத்தால்.. கண்கள் சொருக விரைவிலேயே உறங்கி விட்டான்.

ரோஹீத் உறங்கியதும்.. ட்ரீப்ஸை பார்த்தாள். அது மிக மெதுவாக இறங்கும்படி.. பிரதாப் வைத்திருப்பது தெரிந்தது. எப்படியும் மதியத்திற்கு மேல் ஆகும். அதனால் ட்ரீப்ஸை பற்றித் தற்பொழுது கவலையில்லை. இப்படி போரடித்துப் போய் அமர்வதற்கு வெளியே சென்றுப் பார்த்தால் என்ன என்று மெல்ல வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கு மாரிமுத்துவும்.. தங்கமும் அந்த அறையின் கதவை பார்த்தவாறு அமர்ந்துக் கொண்டிருந்தார்கள்.

ரோஹீத் கூறியது சரியாக போனதை சுபாஷினி கண்டாள். இளைய இராணி கூறமாலேயே வேவு வேலையைத் தொடங்கி விட்டானோ என்றுத் தோன்றியது. ஆனால் பாவம் ஒன்றும் தேறாது என்று நினைத்து விட்டு புன்னகைத்தவாறு அவர்களை நோக்கி சென்றாள்.

அப்பொழுது வாயிலில் ஏதோ சத்தம் கேட்கவும், மூவரும் சென்றுப் பார்த்தார்கள். அங்கு நல்ல உடற்கட்டுடன் ஆறடி உயரத்தில் ஒருவன் பைக்கில் வந்து இறங்கினான். மாரிமுத்து சென்று விசாரிக்கவும், அவன் கன்னடத்தில் அவன் இளைய இராணியால் அனுப்பட்ட ஆள் என்றும்.. ரோஹீத்தை பார்த்துக் கொள்ளவும், சமைத்து கொடுக்கவும் வந்திருப்பதாக கூறினான்.

மாரிமுத்து இளைய இராஜா அவனைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றுக் கட்டளையிட்டு இருப்பதாக கூறினான். அதற்கு அவன் நம்பாமல் இருக்கவும், ரோஹீத் எழுந்ததும் அவனையே கேட்க கூறினார்கள். அதற்குள் சுபாஷினி தங்கத்தை மதிய உணவை தயார் செய்ய கூறினாள்.

தங்கம் எனக்கு ஸ்பெஷலா செய்ய தெரியாதே என்றுத் திணறவும், சுபாஷினி “இளைய இராஜா.. ஒரு வாரத்திற்கு படுக்கை விட்டு எழுந்து நின்று நடக்க கூடாது என்பதால்.. எளிதாக செரிமானம் ஆகிய மாதிரி.. பருப்பு கடைஞ்சு கொடுத்த போதும்.. கூடவே கீரை இல்லைன்னா எதாவது காய்கறியால் பொரியல் செய்துக் கொடுத்திருங்க அக்கா!” என்றாள்.

ஹாலில் ஓரமாக இருந்த நாற்காலியில் ரேஷ்மா அனுப்பிய ஆள் அமர்ந்தவாறு சுற்றிலும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க.. மாரிமுத்து அவனை முறைத்தவாறு நேர் எதிரே அமர்ந்திருந்தான். சுபாஷினி அவன் நோட்டம் விட்டுக் கொண்டிருக்க.. ரோஹீத்தின் அறையில் தனித்து இருப்பதை தவிர்க்க எண்ணி.. தங்கத்துடன் பேசியவாறு சமையலறையில் நின்றுக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் மதிய வேளை நெருங்கையில் “சுபா..” என்று வீடே அதிரும்படி.. ரோஹீத் அழைக்கவும், சுபாஷினி பதட்டத்துடன் அவனது அறைக்கு விரைந்தாள்.

அங்கு ருத்ராமூர்த்தியாக இருந்த ரோஹீத் “இங்கே நீ நர்ஸ் வேலை பார்ப்பதற்காக வந்திருக்கே..! ஜாலியா இந்த மாளிகையை சுற்றிப் பார்க்க வரலை.” என்கவும், சுபாஷினி “மன்னிச்சுக்கோங்க ஸார்! இனி இந்த அறையை விட்டுப் போக மாட்டேன்.” என்றாள்.

பெருமூச்சுகளுடன் கோபம் வடிந்தவனாய் “ஐ வான்ட் வாட்டர்..” என்கவும், சுபாஷினி நடுங்கும் கரத்தால் ஊற்றிக் கொடுத்தாள். லேசாக நடுங்கும் அவளது கரத்தைப் பார்த்தான். ஒரு கையால் கரத்தோடு பற்றியவன்.. ட்ரீப்ஸ் இறங்கிக் கொண்டிருந்த மற்றொரு கரத்தால்.. நீருடன் கூடிய டம்ளரை வாங்கினான்.

ரோஹீத் கரத்தைப் பிடித்ததில் சுபாஷினியின் கரம் மேலும் நடுங்கியது.

உடனே அவளது கரத்தை விட்டவன், அவளை சிறுப் புன்னகையுடன் பார்த்தான், “நான் திட்டியதில் பயத்திட்டியோனு பிடிச்சேன். ஆனா நீ இன்னும் நடுங்கிறே..” என்றுவிட்டு நீரை பருகினான்.

சுபாஷினி “இன்னும் வாட்டர் வேணுங்களா ஸார்..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ரோஹீத் “என் கூட ஏன் பேசுவதைத் தவிர்க்கிறே! காலையில் நன்றா பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு! ரேஷ்மா எதாவது சொன்னாளா..” என்றுக் கேட்டான்.

உடனே சுபாஷினி “அவங்க உங்களை நல்லபடியா பார்த்துக்க மட்டும் தான் சொன்னாங்க! நீங்க திட்டியதை விட.. நீங்க தொட்டது தான் பயமா இருந்தது ஸார்! எங்களைப் பற்றிப் பேச்சு உங்களுக்கு தேவையில்லாதது என்று நெனைச்சேன் ஸார்!” என்றாள்.

அதைக் கேட்டவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

ரோஹீத் ஒருதரம் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது.. அதிகமாக வளர்ந்த மரக்கிளைகளை ஒருவன் வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது கால் இடறி விழுந்தான். விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு விடவும் வலியில் துடித்தான். அதைப் பார்த்த பன்னிரெண்டு வயது நிரம்பிய ரோஹீத் அதிர்ந்து நின்றுவிட்டான். அங்கு உடன் வேலை செய்துக் கொண்டிருந்த மற்றவர்கள் விரைந்து வந்து அவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்.

விழுந்தவனின் மருத்துவ செலவிற்கு.. தொகை சமஸ்தானத்தில் இருந்து உடனே தரவில்லை. விழுந்தவனின் மனைவியை வரவழைத்து அனைவருக்கும் முன்.. அவனது மனைவிக்கு கேட்ட தொகைக்கு மேலேயே கொடுக்கப்பட்டது. உடனே இராஜேந்திர பூபதியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் உள்ளே வந்த தந்தையிடன் ரோஹீத்.. விழுந்தவன் எப்படியிருக்கிறான் என்றுக் கேட்டான். அதற்கு அவர் அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.. என்றுவிட்டு சென்றுவிட ரோஹீத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனது பாட்டி ஏன் என்றுத் தனிமையை நாடி.. தாத்தாவிடம் திட்டு வாங்குகிறார்.. என்று அந்த வயதில் புரிந்தது.

அவனும் வேலையாட்களுடன் அவனது குடும்பத்தினர் இருக்கும் போது.. இருப்பதைத் தவிர்த்தான். அவர்களை விட தாழ்ந்தவர்களிடம் தங்களது அதிகாரத்தையும்.. அவர்களுக்கு தாங்கள் தான் கடவுள் போன்ற பிரம்மையை தோற்றுவிக்க அவன் விரும்பவில்லை. பிடிக்கவும் இல்லை.

ஆனால் தொடர்ந்து அந்த மாயையை மதின்பூர் மக்களிடையே பதிந்து இருப்பது.. சுபாஷினியின் பேச்சில் நன்றாகவே தெரிந்தது.

எனவே ரோஹீத் "இந்த மாதிரி பேசினா.. கேட்கிறதுக்கு டிஸ்கர்ஸடிங்கா சுபா.." என்று முகத்தை சுளித்தான்.

சுபாஷினி "மன்னிச்சுருங்க ஸார்!" என்றுக் கூறுவதைத் தவிர வேறு தெரியவில்லை.

ரோஹீத் ஆழ்ந்த பெருமூச்சு இழுத்துவிட்டு பின் "உன்னை எதுக்கு பிடிச்சிருந்துச்சுனு தெரியுமா! நான் யார் என்றுத் தெரியாம.. ஆர்வத்தோட வந்தே.." என்று மீண்டும் அவர்கள் இருவரைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.

இருவரும் பேசி முடித்த விசயத்தை மீண்டும் கூறி.. அதை அவனது மனதில் உருவேற்ற விரும்பாததால்.. என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆம் என்றுக் கூறினால்.. அந்த பேச்சை அவள் ஊக்குவிப்பது போன்று ஆகிவிடும். இல்லை என்று மறுத்தால்.. அவனது பேச்சை தட்டிப் பேசுவதாக அவனது கோபத்திற்கு ஆளாக நேரிடும். அல்லது எவ்வித பதிலும் அளிக்காது அமைதியாக நின்றுவிட்டால்.. அவனது பேச்சிற்கு மதிப்பு அளிக்கவில்லை என்று சற்றுமுன் குற்றம் சாட்டியது போன்று ஆகிவிடும். எனவே என்ன கூறுவது என்று அவள் திணறுகையில்.. இளைய ராணி ரேஷ்மா அனுப்பிய ஆள் வந்திருப்பது நினைவிற்கு வந்தது.

எனவே "ஸார்! இளைய ராணி உங்களுக்கு சமைத்து கொடுப்பதற்காக அனுப்பிய ஆள் வெளியே வெயிட் செய்துட்டு இருக்காங்க.." என்றாள்.

அதைக் கேட்டவனின் புருவம் கோபத்தில் சுருங்கியது.

ரோஹீத் "அவன் வந்தா திருப்பி அனுப்ப சொன்னேன் தானே! ஆனா நீங்க உட்கார வச்சுட்டு இருக்கீங்களா.." என்றவன், தொடர்ந்து "மாரிமுத்து" என்று கத்தவும், அவன் பதறியடித்து கொண்டு அறைக்கு ஓடி வந்தான்.

ரோஹீத் "அவனை திருப்பி அனுப்ப சொன்னேன் தானே.." என்கவும், மாரிமுத்து அவன் போக மறுத்தத்தைக் கூறினான். உடனே அவனை உள்ளே அழைத்த ரோஹீத் "என் ஆர்டரை மீற அவ்வளவு தைரியமா.." என்று கர்ஜீக்கவும், பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்பியும் கூடப் பார்க்காமல் சென்றான்.

பின் மாரிமுத்துவிடம் தன்னை ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து செல்லக் கூறியவன், சுபாஷினியிடம் "சுபா! மேலே என்னோட பழைய ரூம் தெரியுமா?" என்றுக் கேட்டான். சுபாஷினி மறுப்பாக தலையசைக்கவும், மாரிமுத்து அந்த அறை இருக்கும் இடத்தின் விபரத்தைக் கூறினான்.

பின் ரோஹீத் "அங்கே என் ரூமில் கதவை திறந்து.. ரைட் சைட் இருக்கிற கப்போர்ட்டை திறந்தால்.. அதுல ஒரு சின்ன பாக்ஸ் இருக்கும் எடுத்துட்டு வா..! எட்டு வருஷத்துக்கு முன்னாடி வச்சது அப்படியே இருக்கு! இதுநாள் வரை இங்கே வந்த போது.. சும்மா பார்த்துட்டு வந்திருவேன். இன்னைக்கு அதைத் திறந்து பார்க்கணும் என்று ஆசையா இருக்கு.." என்கவும், தலையசைத்து விட்டு வெளியே வந்த சுபாஷினி மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை பார்த்து பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.

அந்த பரந்த விரிந்த மாளிகை அவளுக்கு தற்பொழுது பயத்தை ஏற்படுத்தியது. இந்த மாளிகை பற்றி பரவிய வதந்திகள் அனைத்தும் நினைவிற்கு வந்தது.

பயத்துடன் இரண்டாக பிரிந்த மாடிக்கட்டில் மெல்ல ஏறியவளுக்கு படிக்கட்டுகள் முடியும் இடத்தில் யாரோ நிற்பது போன்ற பிரம்மை தோன்றியது. கண்களை நன்றாக விரித்து வைத்துப் பார்த்தாள். அங்கு யாரும் இல்லை. ஆனால் யாரோ நின்றிருப்பது போன்ற பிரம்மை நீங்காமல்.. கால்கள் நடுங்க படியேறியவள்.. அங்கு காற்றில் பறந்த திரைசீலையை பார்த்ததும் ஏனோ.. அன்று எரிந்த திரைசீலை நினைவிற்கு வரவும், தற்பொழுது.. அந்த திரைசீலை எரிந்தது போன்று தோன்றியது. தொடர்ந்து மலர்விழியின் குரலும் கேட்டது.

‘ஏன் சுபா! அன்னைக்கு அவர் வந்து என்னைக் கூப்பிட்டதை என்கிட்ட சொல்லுலை.’

உடனே சுபாஷினி “ஆ..” என்று வீரிட்டு அலறியபடி.. யாரோ துரத்துவது போல்.. பதறியடித்துக் கொண்டு படியிறங்கினாள். வேகமாக படியிறங்கியதில் கால் இடறி விட.. கிட்டத்தட்ட கடைசி படி வரை வந்திருந்த சுபாஷினி.. அப்படியே விழப் போனாள். அப்பொழுது.. தனக்கு உடலில் அடி நிச்சயம்! நானும் படுத்த படுக்கையாக வேண்டியது தான் என்று எண்ணியவாறு விழுவதை தடுக்க இயலாது விழுந்தாள்.

ஆனால் அவளை சட்டென்று ஒரு கரம் தாங்க.. அந்த கரத்தோடு கீழே விழுந்தாள்.

என்ன ஒரு அதிசயம் அவளுக்கு எந்த அடியும் படவில்லை. வலியும் இல்லை. இது எப்படி என்று எண்ணுகையிலேயே.. “ஏய் சுபா எழுந்திரி..” என்ற குரல்கள் கேட்க.. அதை மீறி “ம்மா..” என்று வலியுடன் முணுங்கல் குரலும் கேட்டது. அந்த முணங்கல் குரல் முதலில் ஈர்க்கவும்.. குரல் வந்த திசையைப் பார்த்தவள் அதிர்ந்தாள். ஏனெனில் அவள்.. இந்த சமஸ்தானத்தின் இளைய இராஜா.. மற்றும் இனி இந்த சமஸ்தானத்தின் இராஜாவாக போகிற ரோஹீத்தின் மேல் படுத்திருந்தாள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9


மாரிமுத்துவின் உதவியுடன் ரெஸ்ட் ரூமிற்கு சென்று வந்த ரோஹீத்திற்கு சுபாஷினியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே திகைத்து நின்ற மாரிமுத்துவை விலக்கிவிட்டு.. ஒரு காலால் விந்தி நொண்டியவாறு வெளியே வந்தவன், மாடிப்படியின் வளைவில் சுபாஷினி கத்தியவாறு படியிறங்குவதைப் பார்த்தான். உடனே திகைத்தவனாய்.. படியிடம் சென்றான். ஆனால் அதற்குள் இறங்கி வந்திருந்த சுபாஷினி கடைசி படிகளில் வருகையில் கால் இடறி தடுமாறி விழப் போனாள்.

அப்பொழுது எதைப் பற்றியும் யோசிக்காது, தனது கரத்தை நீட்டி விழுந்தவளை இழுத்து தன்மீது போட்டுக் கொண்ட ரோஹீத்திற்கு காலின் வலி அதிகரிக்கவும், தடுமாறி.. அவளோடு விழுந்தான்.

தான் ரோஹீத்தின் மேல் விழுந்திருப்பதை உணர்ந்த பின்பே மாரிமுத்து மற்றும் தங்கத்தின் "எழுந்திரி சுபா.." என்ற பதட்டமான கண்டனக்குரல்கள் கேட்டன. உடனே அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தாள்.

"ஸாரி ஸார்! ஸாரி ஸார்!" என்று சுபாஷினி பலமுறை கேட்டாள்.

மாரிமுத்து "இராஜா!" என்று பதட்டத்துடன் அவனருகே செல்லவும், முகத்தை சுளித்தவாறு எழுந்த ரோஹீத் "ஐயம் ஒகே!" என்றான்.

மாரிமுத்துவும் சுபாஷினியும் ஆளுக்கு ஒரு தோளைப் பற்றி தூக்கவும், ரோஹீத் மெல்ல எழுந்து ஒரு காலை ஊன்றியவாறு நின்றான். மெதுவாக ஒரு காலை ஊன்றி அவர்களுடன் நடந்து வந்தான். சுபாஷினிக்கு அழுகையே வந்துவிட்டது.

ரோஹீத்தை மெல்ல படுக்கையில் கிடத்தியதும் வாய்விட்டு அழுதே விட்டாள்.

"மன்னிச்சுங்க இளைய இராஜா! நான் விழுந்தா விழுந்துட்டு போறேன். நீங்க ஏன் வந்து பிடிச்சீங்க! அதுவும் உங்களாலேயே முடியலை தானே! இப்போ இன்னும் உங்களுக்கு எதாவது ஆகிட்டா.. அந்த பழியையும் என் மேலே விழுவதற்கா.. ஏற்கனவே உங்களுக்கு செய்த பாவத்திற்கு.. எப்படி பிராய்சித்தம் செய்றதுனு தெரியாம இருக்கேன். இப்போ இந்த பாவத்தையும் சுமக்க சொல்றீங்களா.." என்று மூக்கை உறிஞ்சியபடி கண்களில் கண்ணீர் வழிந்தவாறு ரோஹீத்தின் கால்கட்டை ஆராய்ந்தாள்.

சுபாஷினி கூறியதைக் கேட்ட.. ரோஹீத் வாய்விட்டு சிரித்தான். ஏற்கனவே செய்த பாவம் என்று அவள் குறிப்பிட்டதை அவன் கவனித்திருந்தாலும்.. அதை விட அவனுக்கு கேட்க வேண்டிய விசயம் நிறையாக இருப்பதால் அதைக் கேட்டான்.

"அப்படியென்ன நான் ஸ்பெஷல்! இந்த சமஸ்தானத்தில் பிறந்துட்டேன் என்கிறதாலேயே! புல்ஷீட்!" என்றவன் தொடர்ந்து "நீ அப்படி கத்தினா.. என்ன எது என்றுப் பார்க்க வருவது தான் மனித இயல்பு! ஆமா ஏன் அப்படி கத்திட்டு ஓடி வந்தே?" என்றுக் கேட்டான்.

சுபாஷினி என்னவென்று கூறுவாள்.. எனவே சிறு சங்கடத்துடன் தங்கத்தை பார்த்தாள். தங்கம் புரிந்தாற் போன்று தலையை ஆட்டினாள்.

இருவரையும் பார்த்த ரோஹீத் "வாட்ஸ் த மேட்டர்?" என்றுக் கேட்டான்.

சுபாஷினி இன்னும் தயங்கவும், தங்கம் "நீங்க இங்கே தங்கியிருக்கீங்க இல்ல! அதனால அந்த ஆத்மாவுக்கு சந்தோஷமா இருந்திருக்குங்க! அதுதான் சுபா கிட்ட வேலையைக் காட்டிருக்காங்க! அவங்க இன்னும் இங்கே தான் சுத்திட்டு இருக்காங்க!" என்றுப் பவ்யமாக கூறினாள்.

ரோஹீத் புருவத்தை சுருக்கிக் கொண்டு "யார்?" என்றான்.

சுபாஷினி சொல்லாதே என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள். ஆனால் அதை தங்கம் கவனிக்கவில்லை.

இன்னுமும் பவ்யமான குரலில் "அவங்க தான்ங்க! மலருங்க! நீங்க வருவீங்கனு.. உங்களுக்காக இங்கே தான் காத்துட்டு இருக்காங்க! அவங்க கிட்ட மாட்டிக்க கூடாதுனு தான்.. உங்களை இங்கே இருக்க வேண்டான்னு சொன்னேன் இராஜா..!" என்றாள்.

அதைக் கேட்ட ரோஹீத் சத்தமாக சிரித்தான். ஆனால் சிரிப்பு அவனது கண்களை அடையவில்லை. ஏனெனில் கண்களை துயரம் குடிக் கொண்டது.

சத்தமாக சிரித்தவனின் சிரிப்பு சத்தம் மெல்ல மெல்ல தோய்ந்தது. பின் எங்கோ வெறித்தபடி "இறந்தவங்க எல்லாம் ஆத்மாவா.. மனுஷங்க கூட தொடர்பு வைச்சுக்கிற சக்தி கிடைச்சா எப்படி இருக்கும்! புரியாத பல விசயங்களைக் கேட்டு தெரிஞ்சுக்கலாம். நம்மை விட்டுப் போயிட்டாங்க என்ற இழப்பு துயரம் இருக்காது." என்றவன், சிறு பெருமூச்சை இழுத்துவிட்டான்.

பின் மாரிமுத்துவை பார்த்தவன், “ஊர் முழுக்க இந்த கதையைக் கட்டிவிட்டிருக்கியா..” என்றுச் சிறு கண்டனத்துடன் கேட்டான். அதற்கு மாரிமுத்து மறுப்பாக தலையசைத்து “கதையில்லை இராஜா! உண்மைத்தான்! இந்த மாளிகையில் தீயைப் பற்ற வைத்து.. உங்களை எல்லாம் இங்கே இருந்து.. துரத்திவிட்டதும் மலர் அவங்களோட ஆவி தான்!” என்று முடிப்பதற்குள்.. ரோஹீத் நன்றாக வாய் விட்டு சிரித்தான்.

பின் “அன்னைக்கு மாளிகையில் ஆங்காங்கே தீயை வச்சது நான்!” என்று என்றான்.

அதைக் கேட்ட மூன்று பேரும் திகைத்தவாறு அவனைப் பார்த்தார்கள்.

ரோஹீத்தின் கண்கள் கோபத்தில் சிவந்தன.

மாறாத கோபத்துடன் “இந்த சமஸ்தானம், பேர், கௌரவம், அந்தஸ்து தானே.. மலரோட சேர விடாம செய்ததுனு நான்தான் தீயை வச்சேன். இப்போ என்ன சொல்வீங்க.. என்னை பேய் பிடிச்சிருச்சு என்றா! ஹவ் பூலீஷ்.." என்று உதட்டை வளைத்து சிரித்தான்.

பின் சுபாஷினி பார்த்து "நீயும் இதை நம்பறீயா‌!" என்றுக் கேட்டான்.

அதற்கு சுபாஷினி "நம்பற மாதிரி தான் ஸார்.. நடக்கிற விசயம் இருக்கு.." என்றாள்.

ரோஹீத் "அதற்கு பேர் இல்லூஷியன்! இல்லைன்னா.. பீட்பேக் என்றுக் கூடச் சொல்லலாம். உன்னோட உள்ளுணர்வு என்ன நினைக்குதோ அது நடக்குது. நீ பார்த்து பார்த்து என்னை மயக்கினது மாதிரி.." என்றுச் சிரித்தான்.

அதுவரை ரோஹீத் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மூவரும்.. கடைசியில் கூறியதைக் கேட்டு.. திகைத்தார்கள். மாரிமுத்துவும், தங்கமும் சுபாஷினியை ஒரு மாதிரி பார்க்கவும், சுபாஷினி மறுப்பாக தலையசைத்தாள்.

அதைப் பார்த்த ரோஹீத் மாரிமுத்து மற்றும் தங்கத்திடம் “நீங்க இரண்டு பேரும் வெளியே இருங்க..” என்றான். அவனின் பேச்சை மீற முடியாத இருவரும் திரும்பி திரும்பி சுபாஷினியை பார்த்தவாறு வெளியேறினார்கள்.

அவர்கள் சென்றதும்.. ரோஹீத் “எதுக்கு இப்படிப் பயப்படற! நான் சொன்னதில் என்ன தப்பு! உண்மைத் தானே சொன்னேன். எனக்கு அது பிடிச்சுருந்துச்சு! நீ ஆர்வமா ஓடி வந்து பார்த்து பார்த்து.. நீ பார்ப்பதற்காகவே நான் வெயிட் செய்து போக செய்துட்டே தானே..” என்றுச் சிரித்தான்.

சுபாஷினியின் மூளைக்குள் வெளியே நிற்கும் மாரிமுத்துவும் தங்கமும்.. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ என்று பதட்டத்துடன் இருந்ததால்.. ரோஹீத்திற்கு பதிலளிக்காமல் அமைதியாக நின்றாள்.

அவளைக் கூர்மையான பார்வையால் அளந்த ரோஹீத் “பட் நவ் ஐயம் டொட்டலி டிஸ்அப்பாயின்ட்டர்டு! நீயும் மற்றவங்களை மாதிரி.. என்னைப் பார்க்க ஆரம்பிச்சுட்டே! நான் உன்கிட்ட என்னவோ எக்ஸ்பெக்ட் செய்கிறேன். அது என்னவென்று எனக்கு புரியலை. அதனால் உனக்கும் புரிய வைக்க முடியலை.” என்றுப் பெருமூச்சை இழுத்துவிட்டான்.

பின் தொடர்ந்து “நான் இதுவரை யாரிடமும்.. இப்படிப் பேசியதில்லை. உணர்ந்ததும் இல்லை.” என்றான்.

சுபாஷினியின் இதயம் மீண்டும் பலமாக துடிக்க ஆரம்பித்தது.

எனவே சுபாஷினி மெல்லிய குரலில் “நீங்க என்கிட்ட இப்படியெல்லாம் பேசக் கூடாதுங்க! இது உங்களுக்கே தெரியும். பிறகு ஏன் இப்படிப் பேசறீங்க என்றுத் தெரியலை. அதுதான் பயமா இருக்கு..” என்றாள்.

அதைக் கேட்டவனின் கண்கள் கூர்ப்பெற்றது.

“டொன்ட் வெர்ரி சுபா! நான் உன்னை லவ் செய்யலை. அதனால் உனக்கும் உன் குடும்பத்திற்கும் ஒன்றும் ஆகாது.” என்று சர்வசாதரணமாக கூறினான்.

ஆனால் சுபாஷினிக்கு தற்பொழுது தான் முன்பை விட.. இடியே தலையில் வந்து விழுந்தது போன்று இருந்தது.

அவ்வாறு என்றால்.. அவன் பேசியதிற்கு பொருள் என்ன.. என்று அவளது மனம் தடக் தடக் என்றுத் துடித்தது.

அவளது முகத்தைப் பார்த்த ரோஹீத் துளையிடும் பார்வையுடன் “ஒருவேளை நான்.. இப்படிப் பேசுவது பழகுவது.. உனக்கு வேற மாதிரி தோன்றுகிறதா..” என்றுக் கேட்டான்.

பதிலளிக்க வேண்டிய நேரத்தில்.. சுபாஷினிக்கு தொண்டையில் இருந்து வார்த்தைகள் வராமல் தகராறு செய்தன.

அப்பொழுது மாரிமுத்துவின் குரல் கேட்டது.

“இராஜா! உள்ளே வரலாங்களா?”

ரோஹீத் “என்ன விசயம் மாரிமுத்து?” என்றுக் கேட்கவும், மாரிமுத்து உள்ளே வந்து “நீங்க அடிப்பட்டு இங்கிருக்கிறது ஊர் முழுக்க பரவியிருச்சுங்க! உங்களோட நலன் தெரிஞ்சுக்கிறதுக்கு.. ஊர் சனங்க.. வாசலில் நிற்கிறாங்க..” என்றுப் பவ்யத்துடன் கூறினான்.

அதற்கு ரோஹீத் தலையில் அடித்துக் கொண்டு “இதுக்கு என் மேலே எவ்வளவு அக்கறையா இருக்கிறாங்க என்று சந்தோஷப்பட என்னால் முடியலை. அப்படி நான் என்ன ஸ்பெஷல் என்றுத் தான் கேட்க தோணுது. என்னைப் பார்க்க நிற்கிறாங்க என்று நான் வெளியே வந்தால்.. எல்லாரும் இராஜா என்று தலைக்கு மேலே கையை உயர்த்திட்டு பயபக்தியோட நிற்பாங்க! கன்னத்தில் ஒன்றும் தான் போட்டுக் கொள்ளவில்லை. மற்றபடி ஏதோ கடவுளை பார்க்கிற மாதிரி பார்ப்பாங்க! மற்றவங்க என்னை அப்படிப் பார்க்கிறது எனக்கு பிடிக்கலை. ஐ ஹெட் இட்! நீயே நான் நல்லா தான் இருக்கேன் என்றுச் சொல்லி அவங்களை இங்கிருந்து போகச் சொல்லு! அவங்க வேலையைப் பார்க்க சொல்லு..” என்று எரிச்சலுடன் கூறினான்.

அதற்கு சரியென்று தலையை ஆட்டிய மாரிமுத்து சுபாஷினியை பார்த்து “உன் பெற்றவங்களும் வந்திருக்காங்க..” என்றதும்.. சுபாஷினி ரோஹீத்தை பார்க்கவும், அவன் போகலாம் என்பது போல் தலையசைத்தான். உடனே சுபாஷினி அவனை வணங்கி நன்றி கூறிவிட்டு செல்லவும், ரோஹீத் “ஓ காட்..” என்றவாறு விட்டத்தைப் பார்த்தவாறு படுத்துவிட்டான்.

மாரிமுத்து அவளை அங்கிருந்து கிளப்புவதற்காக பொய்யுரைத்தானோ என்றுக் கூட அவனுக்கு சந்தேகம் தோன்றியது.

வெளியே சென்ற மாரிமுத்து தங்கத்திடம் “தங்கம்! நாங்க வர வரை.. நீ இளையராஜாவிடம் இரு!” என்றுவிட்டு வாசலுக்கு விரைந்தான். தங்கமும் உடனே உள்ளே சென்றாள்.

ரோஹீத் கணித்தது மிக்க சரி.. அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பி விட்டு.. சுபாஷினியிடம் தனித்து பேசவும், வெளியே அனுப்பப்பட்ட மாரிமுத்து பதற்றமடைந்தான். எனவே அறையின் சாத்தியிருந்த கதவைப் பார்த்தவாறு “அட கடவுளே! என்ன செய்யப் போறேன்னு தெரியலை. இப்படி நடக்க கூடாதே..” என்றுப் புலம்பினான்.

அதற்கு தங்கம் “அட! எதுக்கு இப்படிப் புலம்பறீங்க!” என்றாள்.

மாரிமுத்து “எதுக்கா!” என்றுவிட்டு சற்று குரலைத் தணித்து “இராஜா அந்த பொண்ணை பற்றிப் பேசினதைக் கேட்டே தானே! அந்த பொண்ணு நம்ம இராஜாவை எப்படியோ மயக்கிட்டா! அதுனால தான்.. இராஜா இளையராணி வந்து கூப்பிட்ட போதும் போகலைனு சொல்லிட்டார். இந்த சுபாவையும் இங்கேயே இருக்க சொல்கிறார். இது உனக்கு தப்பா தெரியலையா..” என்றுக் கேட்டான்.

அதற்கு தங்கம் “அந்த பொண்ணு மயக்கினது மாதிரியும் தெரியலை. நம்ம இராஜா மயங்கினது மாதிரியும் தெரியலை. எப்பவும் நம்ம கூட இயல்பாக பேசுவார் தானே அந்த மாதிரி தான் பேசிட்டு இருக்கிற மாதிரி இருக்கு..” என்றுக் கூறினாள். அதைக் கேட்ட மாரிமுத்து எரிச்சலுடன் “அப்போ அவர் உள்ளே சொன்னதையும்.. நம்மை வெளியே அனுப்பியதையும் பற்றி என்ன சொல்லுகிறே..” என்றுக் கேட்டான்.

ஆனால் தங்கம் அடுத்து மாரிமுத்து பேசியதை காதில் வாங்காதவளாய் “அப்படி ஒருவேளை அவர் சொன்னது நிஜம் என்றால்.. இராஜாவோட பார்வை பட்ட அந்த பொண்ணு கொடுத்து வச்சவ என்றுத் தான் சொல்வேன்.” என்றாள்.

அதைக் கேட்டு திடுக்கிட்ட மாரிமுத்து “என்ன சொல்றே! இராஜாக்கு கல்யாணம் ஆகப் போகுது தெரியும் தானே..” என்றான்.

அதற்கு தங்கம் “தெரியும்! தெரியும்! இராஜா உங்களை எல்லாம் பார்த்து கத்தறதில் தப்பே இல்லை! அவருக்குனு ஒரு மனசு இருக்கு.. என்கிறதை ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்க! நீங்க இப்படி பயந்தே.. இராஜாவை அந்த பொண்ணு பக்கம் தள்ளி விடப் போறீங்க என்றுத் தான் எனக்கு தோன்றுகிறது. அந்த தப்பைச் செய்திராதீங்க! இந்த முறை இராஜா விழ மாட்டார். எல்லாரையும் வீழ்த்திருவார். இந்த மாளிகைக்கு நான்தான் தீயிட்டேனு சொன்ன போது.. அவரோட கண்கள் அப்படி கோபத்துல ஜோலித்தது.” என்றாள்.

தன் மனைவியை மாரிமுத்து விசித்திரமாக பார்த்தான். அவள் கூற வருவது அவனுக்கு புரியாதது.. அவனது துரதிஷ்டமே! ஆனால் தங்கம் ரோஹீத்தின் மனநிலையை சரியாக கணித்துவிட்டாள்.

மாரிமுத்துவிற்கு இன்னும் சுபாஷினியுடன் ரோஹீத் தனியாக பேசுவதே பிரதானமாக பட.. அதைத் தடுக்க என்ன செய்வது என்று எண்ணுகையில் வாயில் சத்தம் கேட்கவும், சென்று எட்டிப் பார்த்தான். அங்கு அந்த ஊர் மக்கள்.. ரோஹீத்திற்கு அடிப்பட்ட செய்தி கேட்டு பார்க்க வந்திருப்பது தெரிந்தது. அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு.. ரோஹீத்திடம் அனுமதி கேட்டு உள்ளே சென்று.. மக்கள் பார்க்க வந்திருக்கும் உண்மையைக் கூறி.. சுபாஷினியின் பெற்றோர் பார்க்க வந்திருப்பதாக பொய்யுரைத்து.. சுபாஷினியை அங்கிருந்து அழைத்து வந்தான்.

அழைத்து வந்தவன்.. அவளுடன் வெளியே சென்று.. அங்கு நின்றுக் கொண்டிருந்த மக்களிடம் இளையராஜா நலமாக இருப்பதாகவும், தற்பொழுது ஓய்வில் இருக்கிறார் என்றும் சிறிது உடல்நலம் தேறியதும்.. அவர்களை வந்துப் பார்ப்பார் என்றுத் தெரிவித்தான்.

அந்த மக்கள் கூட்டத்தில் தனது பெற்றோரை தேடிக் கொண்டிருந்த சுபாஷினியும்.. அவர் தற்பொழுது காலை அசைக்க கூடாது என்றும்.. ஆனால் இரு நாட்களில் நலம் பெற்றுவிடுவார். பிறகு அவரே உங்களைப் பார்க்க வருவார் என்றுத் தெரிவித்தாள்.

அவர்கள் கூறியதைக் கேட்டு திருப்தியுற்ற.. மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்பு போல்.. அந்த சமஸ்தானத்தின் குடும்பத்தினரிடம் பயமும் மரியாதையும் கொண்டிருக்கவில்லை.. என்று நினைத்திருந்த அந்த ஊர் மக்களின் உடலில் ஊறிப் போயிருந்த பயமும் மரியாதையும் தானே வந்து இங்கு ஓடி வந்ததையும் வியப்புடன் உணர்ந்தார்கள்.

அவர்கள் கலைந்து சென்றதும்.. சுபாஷினி மாரிமுத்துவை கேள்வியாக பார்த்தாள்.

உடனே மாரிமுத்து சுபாஷினியை சற்று ஓரமாக அழைத்துச் சென்று பொரிந்து தள்ளிவிட்டான்.

“இராஜா என்கிற மரியாதை எல்லாம் மனசுல இல்லையா! அவரை என்ன நினைச்சுட்டே.. கடையில வச்சுருக்கிற பொம்மை என்று நினைச்சுட்டியா! அழகை காட்டி.. ஆளை மயக்க பார்க்கறீயா! வேண்டாம்.. போயிரு.. அவர் குலம் சூரியன் மாதிரி.. கையெடுத்து கும்பிடலாம். நமக்கு எல்லாம் நல்லதும் செய்வாங்க.. ஆனா தொடணுனு ஆசைப்பட்டா உன்னைச் சுட்டுவிடும்.” என்று எச்சரித்தான்.

மாரிமுத்துவின் வெளிப்படையான எச்சரிப்பில் அதிர்ந்த சுபாஷினி “அண்ணா! நீங்க ரொம்ப தப்பா நினைச்சுட்டிங்க! நீங்க நினைக்கிறது மாதிரி எண்ணம் எனக்கு சத்தியமா இல்லை. எனக்கும் திருமணம் நிச்சயமாகிருக்கு! இராஜா மேலே ஆசைப்பட்டா என்ன நடக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படியிருக்கும் போது.. நானே போய் தீயில் வீழுவேனா! அதனால்.. என் மேல் வீணா பழியைப் போடாதீங்க..” என்றுக் கோபத்துடன் கூறியவளுக்கு கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

அவளது கண்களிலும்.. கோபத்திலும் இருந்த உண்மையைக் கண்டு.. மாரிமுத்து.. சற்றுமுன் சுபாஷினியிடம் பேசியதிற்கு வெட்கி தலைகுனிந்தான். பின் மாரிமுத்து “ஆனா இளையராஜா சொல்வது?” என்று இழுத்தான்.

அதற்கு சுபாஷினி “எனக்கும் அவர் என்கிட்ட பேசற விதத்தைப் பார்த்து பயமா தான் இருக்கு! ஆனா அவர் கண்டிப்பா என்னைத் தப்பா பார்க்கலை. என்னை விரும்பலை. ஆனாலும்.. ரொம்ப பயமா இருக்கு..” என்றாள்.

உடனே மாரிமுத்து “என்னால இங்கே இருக்க முடியாதுனு கிளம்பிருங்களேன்.” என்று ஆலோசனை கூறினான்.

அதைக் கேட்டு அவனை முறைத்த சுபாஷினி “இளையராஜா உத்தரவை மீற சொல்கிறீங்களா! அவரோட பேச்சை மீறினேனு நீங்களே என்னைத் திட்ட வச்சுருவாரு அண்ணா!” என்றாள்.

அதற்கு மாரிமுத்து “நீங்க சொல்றது உண்மைத்தான்! அவர் இங்கே இருக்க போவது.. அந்த காயம் ஆறுகிற வரைக்கும் தான்! அதுவரைக்கும் நீங்க அவர் கூடத் தனியா இல்லாம பார்த்துக்கோங்க! இன்னும் ஒரு நாலு நாள் தாக்கு பிடிச்சுட்டா! அவர் மைசூர் மாளிகைக்கு கிளம்பிருவார். அப்பறம் நாம் அவருக்கு நடக்க போகிற கல்யாணக் கொண்டாட்டத்தில் குஷியாக கலந்துக்குவோம் பாரேன்.” என்றுச் சிரித்தான்.

ஏனோ சுபாஷினியால் உடன் சேர்ந்து சிரிக்க முடியவில்லை.

அங்கு ரோஹீத் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருப்பதைப் பார்த்ததும்.. அறைக்குள் சென்ற தங்கம் சுவற்றோராமாக ஒதுங்கி நின்றாள். ஆள் ஆராவராம் கேட்டு ரோஹீத் தலை நிமிர்த்தி பார்க்கவும், தங்கம் இடுப்பை வளைத்து குனிந்து வணங்கினாள்.

அதைப் பார்த்த ரோஹீத் எரிச்சலுற்றவனாய் “ஓ ஸ்டாப் இட்! இந்த மாதிரி பிஹேவ் செய்வதாக இருந்தால் யாரும் என் முன் வராதீங்க!” என்றான்.

அதற்கு தங்கம் “என்னை மன்னிச்சுருங்க! நாங்க இப்படியிருக்கிறதுக்கு பயமும் மரியாதையும் மட்டும் காரணமில்லைங்க! உங்க மேலே அன்பும் தான்ங்க! அதுவும் நான் உங்க மேலே ஏகத்துக்கும் அன்பை வச்சுருக்கேன்ங்க! என் பொண்ணையும் அம்மாவையும் காப்பாத்தி கொடுத்த சாமி நீங்க! என் பொண்ணு மேலே வச்சுருக்கிற அன்பை விட உங்க மேலே அதிக அன்பு வச்சுருக்கேன்ங்க..” என்று தங்கம் மடைத் திறந்த வெள்ளம் போல்.. தனது மனதில் ரோஹீத்தின் மேல் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையைப் பற்றிக் கூறினாள்.

ரோஹீத் குழப்பத்துடன் அவளைப் பார்க்கவும், தங்கம் “உங்களுக்கு நினைவிருக்காதுங்க! நீங்க செய்த ஆயிரம் நல்லதுகளில் எனக்கு செய்ததும் ஒன்று. ஆனா நீங்க செய்த உதவி என் மனசுல பசுமரத்தாணி போல.. நல்லா பதிஞ்சுருச்சுங்க..” என்றாள்.

ரோஹீத் என்ன என்பது போல் பார்க்கவும், தங்கம் “பத்து வருஷத்துக்கு முன்னாடி.. என் பொண்ணையும்.. அம்மாவையும்.. இங்கே வேலை செய்ய ஆள் எடுத்தாங்க! என் அம்மாவிற்கு ஆஸ்துமா இருக்குங்க! என் பொண்ணை என் அண்ணன் இருக்கிற ஊருக்கு அனுப்பி பெரிய படிப்பு வைக்க ஆசைங்க! ஆனா பெரிய இராஜா இட்ட கட்டளையை மீற முடியாம தவிச்ச போது தான்! நீங்க.. இராஜா கிட்ட சண்டை போட்டு விருப்பப்பட்டவங்க.. வந்து வேலை செய்யட்டும். நீங்களா கூலிக்கு ஆள் எடுக்கிற மாதிரி ஆட்களை தேர்ந்தெடுக்காதீங்க.. என்றுச் சொன்னீங்க! அதைச் செய்தும் காட்டனீங்க! அந்த நன்றி.. என் காலம் முழுமைக்கும் இருக்குங்க..” என்றுக் கரத்தைக் குவித்தாள்.

அதைக் கேட்டு புருவத்தைச் சுருக்கி யோசித்த ரோஹீத் “ஓ! அதுக்கு எதுக்கு.. ஏதோ சாமியை பார்த்த எபெஃக்ட் கொடுக்கறீங்க என்றுத் தான் தெரியலை. தப்பா நடக்கிறதை தடுக்கிறது என் கடமையாக கூட இருக்கலாம். இப்படித்தான்.. உங்களுக்கு வேண்டியதை செய்யற அரசியல்வாதிகளை.. என்னமோ.. அவங்களோட வீட்டில் இருந்து பணம் எடுத்து உங்களுக்கு வேண்டியதைச் செய்துத் தர மாதிரி நினைச்சு கையெடுத்து கும்பிட்டு கும்பிட்டு.. அரசியல் என்பதே பெரிய கடவுளுக்கு அடுத்தபடியான போஸ்ட் போல.. நினைத்து அதுக்கு அடிதடி வேற நடக்குது.” என்றுப் பெரிய விசயத்தை சர்வ சாதாரணமாக கூறினான்.

ஆனால் தங்கம் “எனக்கு உங்க மேலே இருப்பது அலாதி அன்புங்க! நீங்க எப்பொழுதும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் என்னோட தினசரி வேண்டுதலுங்க..” என்றாள்.

அதற்கு விரக்தியுடன் சிரித்த ரோஹீத் “என்னோட சந்தோஷத்தை நானே விட்டுக் கொடுக்க போகிறேன்.” என்றான்.

உடனே தங்கம் “உங்களுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்குதோ அதைச் செய்திருங்க ராஜா! யாரைப் பற்றியும் கவலைப்படாதீங்க..” என்றாள்.

ரோஹீத் “எனக்கு என்ன பிடிக்குதோ அதைச் செய்திராவா! அப்போ இந்த சமஸ்தானம்.. குடும்ப கௌரவம்.. இந்த மரியாதை என்று எதுவும் வேண்டாம் என்னை விட்டுருங்க..” என்றுச் சோர்வுடன் தலையாணியில் தலையைச் சாய்த்தான். இராஜா என்று அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள்.. இதை மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவனுக்கு தெரியும்.

ஆனால் தங்கம் “உங்களுக்கு அதுதான் விருப்பம் என்றால்.. நீங்க பழைய மாதிரி.. வேற நாட்டிற்கே போயிருங்க ராஜா! நீங்க எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்கீங்க என்கிறதே எங்களுக்கு போதும்..” என்றாள்.

அதைக் கேட்டு படுத்தபடியே சிரித்த ரோஹீத் “இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி.. உங்களோட குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு.. நடக்க இருந்த அநியாயத்தை தடுத்தேன் என்கிறதுக்காக என் மேலே மரியாதை வச்சுருக்கீங்க என்றுச் சொன்னீங்க! அதுல நீங்க உங்க குடும்பத்தை எந்தளவிற்கு நேசிக்கறீங்க என்றுத் தான் தெரிந்தது. உங்க அளவிற்கு இல்லை என்றாலும்.. என் குடும்பத்தின் மேலே எனக்கு சின்ன அக்கறையாவது இருக்கணுமே! என் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கே..” என்றுச் சிரித்தான்.

தங்கம் “அதுவும் சரிதான்ங்க!” என்றவள், தொடர்ந்து “இங்கே யாரையும் பிடிக்கலையா..” என்றுத் தன்போக்கில்.. தனக்குள் முணுமுணுத்தவளுக்கு.. ரோஹீத் சுபாஷினியிடம் சிறு இணக்கமாக பேசுவது புரிந்தது. அவளுடன் பழக ஆசைப்படுவதும் புரிந்தது. தனக்கு புரிந்த வகையில் உடனே ரோஹீத்திடம் தனது மனதில் பட்டதைக் கேட்டாள்.

“உங்களுக்கு சுபாஷினியை பிடிச்சுருக்குங்களா ராஜா..” என்றுக் கேட்டாள்.

தங்கம் அவ்வாறு கேட்டதும் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தவன், “இதை எதுக்கு கேட்கறீங்க?” என்றுக் கேட்டான்.

தங்கம் “அச்சோ! ராஜா நானாவது உங்க கிட்ட கேள்வி கேட்பதாவது.. நீங்க உத்தரவிடுங்க.. அதைச் செய்கிறேன். சுபாஷினியை உங்க பக்கத்துலேயே இருக்க வைக்கிறேன்.” என்றுவிட்டு எழுந்து சென்றார்.

அங்கு மாரிமுத்துவிடம் பேசிவிட்டு வந்துக் கொண்டிருந்த சுபாஷினி “அண்ணி! ஏன் வந்துட்டிங்க? இளையராஜா கூப்பிட்டாரா..” என்றுக் கேட்டாள்.

தங்கம் “ஆமா! அவருக்கு வலிக்குதாம்.. வலிக்கு மாத்திரை சாப்பிடலாமானு கேட்டார்.” என்றாள்.

உடனே சுபாஷினி “அச்சோ உடனே சாப்பிடக் கூடாது.” என்றாள்.

தங்கம் “அதை நீயே போய் சொல்லிரு..” என்று அவளை அனுப்பி வைத்தார்.

சுபாஷினி உள்ளே சென்றதும்.. அவளைப் பார்த்து சிரித்த ரோஹீத் “தங்கம் அனுப்பினாங்களா?” என்றுக் கேட்டான்.

அதற்கு சுபாஷினி “ஆமாங்க ஸார்! நீங்க பெயின் டெபளேட் கேட்டிங்களாம். சும்மா நினைச்ச நேரம் அதைச் சாப்பிட கூடாது ஸார்” என்றாள்.

அதைக் கேட்டு மேலும் சிரித்த ரோஹீத் “உன் கூடப் பேசுவது பிடிச்சுருக்குனு சொன்னேன். உடனே அவங்க.. உன்னைக் கூட்டிட்டு வந்து என் பக்கத்தில் இருக்க வைக்கிறேனு சொன்னாங்க! சொன்னதைச் செய்துட்டாங்க..” என்றான்.

சுபாஷினி “பொய் சொன்னாங்களா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ரோஹீத் ஆம் என்றுத் தலையை ஆட்டிச் சிரித்தான்.

சுபாஷினி கோபத்துடன் கதவைப் பார்த்து முறைக்கவும், ரோஹீத் “மாரிமுத்துவும் நீயும் என்ன பிளன் போட்டிங்க?" என்றுக் கேட்டு அவளை அயர வைத்தான்.

சுபாஷினி சிறு குன்றலுடன் “அப்படியெல்லாம் இல்லைங்க!” என்றாள். அதற்கு அவளை அழுத்தமாக பார்த்த ரோஹீத் அதற்கு பின்.. அவளிடம் எதுவும் பேசவில்லை. மாலையில் தங்கம் டீ போட்டு கொடுத்ததும்.. அமைதியாக வாங்கிக் கொண்டவன், அந்த அறையை விட்டு மட்டுமில்லை.. அவனின் மீதும் சிறிதும் எடுக்காது அமர்ந்திருந்த மாரிமுத்துவை அழைத்து.. இந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றிக் கேட்டான்.

அவனும் ஆர்வத்துடன் நான்கடி தொலைவில் நின்று மரியாதையுடன் ஊரில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றிக் கூறினான். சிறிது நேரத்தில் தங்கமும் மாரிமுத்துவுடன் சேர்ந்துக் கொண்டு.. ஊரில் நடந்த சிறு சண்டைகள், விபத்து வரை என்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கூறினார்கள்.

பின்னர் ஏழு மணி நெருங்கையில்.. டாக்டர் பிரதாப் வந்தவர், ரோஹீத்தை பரிசோதித்தார். பின்னர் பணிவுடன் “இளைய ராஜா! காலையில் இருந்ததை விட கண்டிஷன் கொஞ்சம் மோசமாகிருக்கு! மூட்டை அசைத்திருக்கீங்க போல! அப்பறம் ஆபரேஷன் செய்ய வேண்டியது வரும்.. அதனால் நீங்க ஹாஸ்பெட்டல் அன்டர்கேரில் இருப்பது நல்லது.” என்றார்.

அவரது பேச்சில் சிறு குழப்பத்துடன் சுபாஷினி குறுக்கிடுவதை ஓரக்கண்ணில் பார்த்த ரோஹீத்திற்கு விசயம் புரிந்துவிட்டது. எனவே முகத்தில் சிறுப் புன்னகையுடன் “இன்னைக்கு காலையில் என் சிஸ்டர் உங்க ஹாஸ்பெட்டலுக்கு வந்திருந்தாங்களா..” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்ட பிரதாப் “அ.. ஆமா இளையராஜா! உங்க உடம்பு கண்டிஷனை பற்றி மட்டும் தான் கேட்டுட்டு போனங்க! உங்களை நல்லபடியா..” என்றுக் கூறுகையிலேயே ரோஹீத்தின் புன்னகை விரிந்ததைக் கண்டு.. தான் உளறுவது புரிந்து பேச்சை நிறுத்தினார்.

ரோஹீத் “சாதாரண மூட்டு விலகலுக்கு.. ஒருத்தர் சொன்னங்க என்பதற்காக இப்படிச் சொல்வது டாக்டர் ஆன உங்களுக்கு நல்லவா இருக்கு..” என்றுக் கேட்டான்.

அதற்கு பிரதாப் சிறு குன்றலும் அசட்டுச் சிரிப்புமாக “என்ன ராஜா செய்வது! அந்த ஒருத்தர் இளைய ராணியாச்சே..” என்கவும், ரோஹீத் சிரித்தான். டாக்டர் பிராதப்பும் வேறு ஒன்றும் கூறாமல்.. ரோஹீத்தின் காலை பரிசோதித்தார். அவர் கிளம்பும் முன்.. ரோஹீத்தை சங்கடத்துடன் பார்க்கவும், ரோஹீத் சிறு முறுவலுடன் “நான் மறுத்துட்டேன் என்றுச் சொல்லுங்க போதும்..” என்று அனுப்பி வைத்தான்.

பின் இரவு உணவு சாப்பிட்டதும்.. சுபாஷினி மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தாள். போன முறைகள் போல் அல்லாது.. எதுவும் பேசாமல் அமைதியாக ரோஹீத் வாங்கிக் கொண்டான். அதுவும் சுபாஷினிக்கு சங்கடத்தை கொடுத்தது.

இரவு நெருங்கும் வேளையில்.. சுபாஷினி மற்றும் மாரிமுத்துவிடம் ஒருவித பரபரப்பு காணப்பட்டது. சுபாஷினி மாரிமுத்துவிடம்.. மூட்டு விலகிய கால் உறக்கத்தின் போது.. அசையாமல் இருக்க.. இருபக்கமும்.. அணை கொடுத்தாற் போன்று தலையாணியை வைக்க கூறினாள். மாரிமுத்துவிடம் தங்கத்திடம் மாடியில் உள்ள ஒரு அறையில் வைத்திருக்கும் புது தலையாணிகளை எடுத்து வரக் கூறினான். தங்கம் தயங்கவும், மாரிமுத்துவே சிறு பெருமூச்சுடன் சென்றான். செல்லும் முன்.. மாரிமுத்து சுபாஷினியை பார்க்கவும், சுபாஷினி புரிந்தது என்பது போல் தலையை ஆட்டினாள். ரோஹீத்தும்.. சுபாஷினியும் மட்டும் அங்கு இருக்கவும்.. தங்கம் தான் கணவருக்கு உதவ செல்வதாக கூறி அங்கிருந்து அகன்றாள்.

மெல்ல சுபாஷினி ரோஹீத்தை பார்த்தாள். அவனோ.. கையில் இருந்த செல்பேசியில் கவனத்தை வைத்திருந்தான். எனவே சுபாஷினி மெல்லிய குரலில் “டைம் ஆச்சு ஸார்! நான் கிளம்புகிறேன்.” என்றாள்.

உடனே ரோஹீத் “ஒகே சுபா! அப்படியே அந்த டேபளேட்ஸ் டைம் லிஸ்ட் போட்டு தனித்தனி கவர்ல போட்டிரு! நான் எடுத்து சாப்பிட்டுக்கிறேன். இனி நீ வர வேண்டாம்.” என்றான்.

அதைக் கேட்டு சுபாஷினி திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அதைப் பார்த்து சிரித்த ரோஹீத் “வாட்! எதுக்கு இப்படியொரு ரியாக்ஷன்! இதைத் தானே காலையில் இருந்து சொல்லிட்டு இருந்தே! உனக்கு தான் இங்கே இருக்க பிடிக்கலை. பயமா இருக்கே! நாம் பேசியிட்டு இருக்கலாம் ஒரு காம்பேனியன் மாதிரி இரு என்றுச் சொல்லும் போதெல்லாம் முகத்தில் அத்தனை ரியாக்ஷன் காட்டினே! அவ்வளவு கஷ்டப்பட்டு நீ இங்கே வர வேண்டாம். பை த வே தேங்க்ஸ் ஃபார் எவிரிதிங்..” என்றான்.

சுபாஷினி பேச்சிழந்து நின்றாள்.

அவள் விரும்பியது தான் இது! ஆனால் ஏனோ சந்தோஷமாக அவளால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி‌ பிரெண்ட்ஸ்..

ஹெல்த் இஷ்யூ.. பிளஸ்டு ரிசல்ட்.. பொண்ணை காலேஜ்ஜில் சேர்த்துவது என்று மூணு நாளா செம் பிஸி‌‌..

நாளைக்கு மூன்று யூடியாக போட்டறேன்.

அதன் பிறகு‌‌.. வழக்கம் போல்.. ஒருநாள் விட்டு ஒருநாள் யூடிகள் வரும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10

ரோஹீத் சுபாஷினியை இனி வர வேண்டாம் கூறிய பின்பும் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளைப் பார்த்து ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்திக் காட்டவும், தவறு புரிந்தவள் போல்.. இடுப்பு வரை குனிந்து நிமிர்ந்தாள்.

பின் அவன் கூறியது போல் மாத்திரைகளை அந்தந்த வேளைக்கு பிரித்து வைத்து.. தனித்தனி கவரில் போட்டு.. அதன் மேல் பேனாவிலும் எழுதி வைத்தாள். பின் ரோஹீத்தை பார்க்கவும், அவன் விடைக் கொடுப்பது போல் தலையசைத்தான்.

ஆனால் சுபாஷினி அங்கிருந்து செல்லாமல் “என்னை கோவிச்சுக்காதீங்க ஸார்! சின்ன வயதில் இருந்தே உங்களை அண்ணாந்து பார்த்து மரியாதை கொடுத்தே பழகிட்டேன். நீங்க சகஜமா பேசி பழகவும்.. என்னால் அதை ஏற்றுக்க முடியலை. அதனால் தான் போகிறேன்னு சொன்னேன். மற்றபடி உங்க பேச்சை தட்டுக்கிறேனு நினைச்சுக்காதீங்க! உங்ககூட இருக்கிறது பிடிக்காமலும் செல்ல நினைக்கலை.” என்றுத் தன்னைத் தவறாக நினைத்துக் கொள்வானோ என்றுச் சிறுத் தவிப்புடன் கூறினாள்.

அதற்கு ரோஹீத் உடனே பதிலளிக்காமல் மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு “நிஜமா இதுதான் ரிஷன் என்றால்.. நீ போகலாம் என்றுச் சொல்லிட்டேனே! ஐ கேவ் பர்மிஷன்..” என்றுவிட்டு.. உரையாடல் முடிந்தது என்பது போல் அருகில் இருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த.. புத்தகத்தை கையில் எடுத்து பக்கங்களை புரட்டினான்.

சுபாஷினிக்கு சிறு ஏமாற்றம் ஏற்பட்டது. அதை நினைத்து அதிர்ந்தாள். ஏமாற்றம் என்றால்.. அவள் எதை எதிர்பார்க்கிறாள். அவனுடன் இருக்க மீண்டும் வற்புறுத்த வேண்டுமா! ஏன்? என்று அவளது எண்ணங்கள் செல்லவும், தலையை உலுக்கி மீண்டவள், மீண்டும் இடுப்பு வரை குனிந்து அவனை வணங்கிவிட்டு கதவை நோக்கி சென்றாள்.

அப்பொழுது அவனது குரல் கேட்டது.

“ஐ ரிப்பிட்டர்டு! நீ சொன்னது தான் நிஜமான ரிஷன் என்றால்.. நீ வர வேண்டாம். ஆனால் என்னை அவாய்ட் செய்வதற்கு வேற ரிஷன் இருந்தால்..” என்றுவிட்டு பேச்சை பாதியோடு நிறுத்தினான்.

ரோஹீத் பேசவும்.. சுபாஷினி திரும்பிப் பார்த்தாள்.

ரோஹீத் புத்தகத்தில் இருந்து பார்வையை எடுக்காது.. தான் பேசியிருக்கிறான். அவன் பாதியோடு விட்ட வார்த்தைகளை தொடர்வான்! என்ன சொல்லப் போகிறான்! என்று மனம் படபடக்க நின்றாள். அவன் எதுவும் கூறாமல் புத்தகத்தில் இருப்பதைப் பார்ப்பதில் கவனத்தை செலுத்தவும், சிறிது நேரம் நின்றுப் பார்த்துவிட்டு.. முகம் தொங்கியவளாய்.. சுபாஷினி திரும்பி சென்றாள்.

சுபாஷினி சென்றதும்.. புத்தகத்தில் இருந்து பார்வை நிமிர்த்தி சாத்தியிருந்த கதவை பார்த்தவனின் முகத்தில் யோசனை படர்ந்தது.

ரோஹீத்திற்கும் சுபாஷினியிடம் தனது போக்கு விந்தையும்.. குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அந்த காரில் இருப்பது தான் என்றுத் தெரியாமல்.. அந்த காரை ஓட்டியவனிடம்.. சுபாஷினிக்கு சிறு ஈர்ப்பு தோன்றியுள்ளது என்பது அவனுக்கு நிச்சயம்! அந்த கார்காரனின் இடத்தில் தன்னைப் பார்த்ததலால்.. அதிர்ச்சியும்.. தவிப்பும் கொண்டுள்ளாள் என்பதும் அவனுக்கு நிச்சயம்! இம்மனநிலையை கொண்ட சுபாஷினியுடன் இயல்பாக பழக விழைகிறான் என்றால்.. அவன் என்ன எண்ணத்தில் இதைச் செய்கிறான்.. என்றுத் தற்பொழுது ரோஹீத்திற்கு குழப்பமாக இருந்தது.

முதலில்.. போலி அன்பு செலுத்தும் சொந்தங்களையும்.. தன்னிடம் இராஜமரியாதையுடனும் பழகும் மற்றவர்களையும்.. பார்த்து சலித்து போன.. ரோஹீத்திற்கு.. தான் யார் என்றுத் தெரியாமல் முதல் முறையாக ஆர்வத்துடன் சுபாஷினி பார்த்ததால்.. பிடித்திருந்தது என்று நினைத்திருந்தான். தற்பொழுதே அது வேறு மாதிரி அவனுக்கு தோன்றியது. அவள் அவ்வாறு ஆர்வத்துடன் பார்த்தது தான் பிடித்திருப்பது போன்று இருந்தது. சிகையை அழுத்த கோதியவாறு படுக்கையில் படுத்தவன், வலி நிவாரணி மாத்திரையின் உதவியால்.. விரைவிலேயே நித்திரையில் ஆழ்ந்தான்.

வீட்டிற்கு வந்த சுபாஷினியிடம் ரோஹீத்தின் நலம் பற்றி அவளது பெற்றோர்கள் விசாரித்தார்கள். அவளும் அவனது உடல்நிலையைப் பற்றிக் கூறினாள்.

மைசூர் அரண்மனைக்கு செல்லவில்லையா.. என்றுக் கேட்டதிற்கு.. அங்கு அனைவரும் நலம் விசாரிக்க என்று வந்துக் கொண்டே இருப்பார்கள் என்று இங்கு ஓய்வு எடுப்பதாக கூறினாள்.

மேலோட்டமாக பார்த்தால்.. இதுதான் உண்மை ஆனால்.. இதில் ரோஹீத்தின் வெறுப்பு, வெறுமை, ஒதுக்கம் போன்றவையும் அடங்கியிருந்தது. அவை ரோஹீத்தின் விசயங்கள் என்று அதைப் பற்றிக் கூறாமல் விட்டாள்.

மனமும் உடலும் சோர்வுற.. தனது அறைக்கு வந்து படுக்கையில் விழுந்ததும்.. அவளது செல்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள். அவளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட ஆகாஷ் அழைத்திருந்தான். இந்த நேரத்தில்.. ஆகாஷுடம் பேசுவது.. பல விசயங்களில் இருந்து தெளிவு தரும். அவளது குழப்பத்தையும் நீக்கும்.. அவளுக்குரிய இடம் எது என்றும் புரிய வைக்கும் என்று நினைத்தவள், அழைப்பை ஏற்று “ஆகாஷ்! எப்படியிருக்கீங்க?” என்று துள்ளலை வரவழைத்த குரலில் கேட்டாள்.

ஆகாஷ் “ஆஹா! இப்படி ஆசையோடு கேட்கிறவ கூட இல்லாத போது.. எப்படி நல்லாயிருப்பேன். உடனே அங்கே வரத் தோணுதே! நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னை அப்பவே மேரேஜ் செய்துட்டு.. உன்னை என் கூடவே இலண்டன் கூட்டிட்டு வந்திருக்கலாம்.” என்று அவனும் குதுகலமான குரலில் பதிலளித்தான்.

அதைக் கேட்டு சுபாஷினியின் உதடுகள் சிரிப்பில்‌ மலர்ந்தது. ஆகாஷ் “நீ எப்படியிருக்கே! சாப்பிட்டாச்சா!” என்று இயல்பாக விசாரித்தான்.

சுபாஷினி “இல்லை ஆகாஷ் இப்போ தான் வந்தேன்.” என்று ரோஹீத் அடிப்பட்டு வந்திருப்பதையும்.. மாளிகையில் தங்கியிருப்பதையும்.. அவள் அவனுக்கு உதவியாக இருந்து வந்ததையும் கூறிக் கொண்டு வரும்பொழுது ஆகாஷ் இடையிட்டான்.

“நீ எதுக்கு வீட்டில் போய்.. டே கேர் நர்ஸா இருக்கே! நான் இந்த ஜாப்பை விட்டுருனு சொன்னேன் தானே..” என்றான்.

அவனது குரலில் திகைத்த சுபாஷினி “என்ன ஆகாஷ் சொல்றே! எங்க வீட்டிற்கு முன்னாடி காரில் அடிப்பட்டு இருந்தவரைக் கூட்டிட்டு போய்.. உதவியா இருந்தது தப்பா! என் ஜாப்பை விடு.. ஒரு சாதாரண மனுஷி கூட யார்‌ அடிப்பட்ட தனக்கு என்ன என்று இருக்க மாட்டாங்க! உதவி செய்ய தான் பார்ப்பாங்க! அதுவும் அவர் இந்த ஊர் இளைய ராஜா..” என்றாள்.

அதற்கு ஆகாஷ் “ஓ காட்! நான் சொன்னதை ஏன் தப்பா எடுத்துக்கிறே.. நான் தெளிவாக தானே சொன்னேன். ஆக்ஸிடென்ட் ஆனதும் உதவி செய்ததைத் தப்புனு சொல்லுலை. அது கண்டிப்பா செய்து தான் ஆகணும். ஆனா யார் உன்னை வீட்டில் போய் டே கேர் நர்ஸா இருக்க சொன்னது. கேட்டா ராஜானு ஸ்பெஷலா அழுத்தி சொல்றே பார்த்தியா.. அதுக்கு தான் முக்கியமா வேண்டானு சொன்னேன். இப்போ புரிந்ததா..” என்றுக் கூறினான்.

சுபாஷினி “ஏன் அதில் என்ன தப்பு! நான் ஒருதரம்.. அறுபது வயது பாட்டிக்கு.. டே கேர் நர்ஸா அவங்க வீட்டில் பத்து நாட்கள்‌ இருந்திருக்கேன்.” என்றாள்.

அதற்கு ஆகாஷ் “அந்த மேட்டர் வேற.. இந்த மேட்டர் வேற சுபாஷினி! ஓப்பனா சொல்லவா! பார்க்கிறவங்க தப்பா எடுத்துப்பாங்க..” என்றான்.

இதை நினைத்து தான் சுபாஷினி பயந்துக் கொண்டிருந்தாள். ரேஷ்மாவில் இருந்து மாரிமுத்து வரை.. அவள் மேல் இதைச் சொல்லித் தான் குற்றம் சாட்டினார்கள். அதை தற்பொழுது ஆகாஷும் கூறவும்.. சுபாஷினியின் முகம் சிறுத்துப் போனது.

பின் சுபாஷினி மெல்லிய குரலில் “உனக்கு தப்பா தெரியுதா ஆகாஷ்..” என்றுக் கேட்டாள்.

ஆகாஷ் சிறு அமைதிக்கு பின் “எனக்கு பிடிக்கலை சுபாஷினி..” என்றான்.

சுபாஷினி சிறு குரலில் “இளைய ராஜா இனி வர வேண்டாமினு சொல்லிட்டார் ஆகாஷ்..” என்றாள்.

அதைக் கேட்டவன், சந்தோஷத்துடன் “இதை ஏன் முதல்ல சொல்லுலை..” என்றுச் சிரித்தான்.

ஆனால் சுபாஷினியின் முகத்தில் சிரிப்பில்லை. “என்னை எங்கே சொல்ல விட்டிங்க.. லைன்னா.. எல்லாம் இதையும் சொல்லலாமினு நினைச்சேன்.” என்றாள்.

அதற்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுவிட்டு.. அவர்களது வருங்கால வாழ்க்கை பற்றி.. கால் மணி நேரத்திற்கு மேல் பேசினான். பின் அவனது தேநீர் இடைவேளை நேரம் முடிந்தது.. அடுத்த வாரம் பேசுகிறேன் என்றுக் கூறி.. அழைப்பைத் துண்டித்தான்.

ஆகாஷ் அழைப்பைத் துண்டித்ததும்.. அந்த செல்பேசியை வெறுமையுடன் பார்த்தாள். அவனுடன் பேசினால்.. குழப்பம் நீங்கும் என்று நினைத்தாள். ஆனால் அவனது பேச்சு.. அவளை மேலும் குழப்பியது தான் மிச்சம்!

என்ன நடந்தது என்றுத் தெரியாமல் எடுத்தவுடன் அவளை குற்றம் சாட்டுவது போன்று பேசியது அவளுக்கு சிறு எரிச்சலையும் கிளப்பியிருந்தது.

பின் சுசீலா அழைத்ததும்.. இரவு உணவு சாப்பிட்டு விட்டு வந்து படுத்தவளுக்கு வெகுநேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை. மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்தவள், சன்னலை திறந்து ஜமீன் மாளிகையை பார்த்தாள். அந்த இருட்டில் மாடியில் எரிந்த ஒற்றை விளக்கின் ஒளியிலும்.. மதிற்சுவரில் பொருத்தியிருந்த விளக்கின் ஒளியிலும்.. அந்த மாளிகை அமைதியாக தெரிந்தது. பின் சென்று படுக்கையில் விழுந்தவள்.. உடனே உறங்கிப் போனாள்.

அடுத்த நாள் எழுந்தவள் நேராக மதிற்சுவரை நோக்கி தான் சென்றாள். பழையபடி.. சுவற்றில்.. இருகைகளையும் கோர்த்தவாறு வைத்து அதில் முகவாயை வைத்துக் கொண்டு.. மாளிகையை பார்த்தாள்.

பார்வை அங்கிருந்தாலும் அவளது நினைவில் நேற்று நடந்தது முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. ரோஹீத் இந்த சமஸ்தானத்தின் அடுத்த இராஜாவாக பதவியேற்க வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறான். அதனால் அவனுக்கு திருமணமும் நடக்க போகிறது. அவனது முதல் காதலைக் கருக்கியவர்களின் மேல் அவனுக்கு இருக்கும் வெறுப்பில்.. இதை நிர்பந்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். மிகவும்.. மன உளைச்சலான நிலையில் இருக்கிறான்.. இந்த நேரத்தில்.. அவளுடன் பழகுவது அவனுக்கு பிடித்திருக்கிறது என்றுத் தான் அவளை அவனுடன் இருக்க கூறினான். உடலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து இருப்பது போல்.. மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தை தேடுகிறான். அதற்கு மறுப்பு தெரிவித்து.. அவனை இன்னும் காயப்படுத்தி விட்டோமோ.. என்று கழிவிரக்கம் கொண்டாள்.

ஆனால் இன்னொரு மனது.. ஏன் மறுத்தாள்.. என்பதற்கான காரணத்தைக் காட்டியது. தலையை ஆட்டி அதை தனக்கு தானே மறுத்துக் கொண்ட சுபாஷினி.. இல்லை அவர் அவ்வாறு நினைக்கவில்லை. அதை அவரே தனது வாயால் கூறிவிட்டார்.. என்று அவனுக்காக அவளது மனம் சப்புக்கட்டு கட்டியது. அவள் தான் வேண்டாததை எண்ணி பயந்திருக்கிறாள்.

இவ்வாறு பல எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்தவளுக்கு.. இன்னொரு நேரம் எழுந்திருப்பாரா.. மருந்தின் வீரியத்தில் உறங்கி எழும் போது.. கெட்ட கனவுகளுடன் எழுந்திருப்பார்கள். அப்பொழுது அவனிடம் இதமாக பேச்சு கொடுத்து.. அவனது மனநிலையை சரிப்படுத்துவார்களா! என்று சுபாஷினியின் மனம் அவனைச் சுற்றியே சுற்றிக் கொண்டிருந்தது.

அப்பொழுது சுசீலா “சுபா! ஹெ சுபா! அங்கே நின்னு என்ன பாரக்கு பார்த்துட்டு இருக்கே! டெய்லி உனக்கு இதே வேலையா போச்சு..” என்றார்.

பல்வேறு எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்த சுபாஷினிக்கு அவளது அன்னையின் அழைப்பு எரிச்சலடைய செய்வும், முகத்தை மட்டும் திருப்பி “ஏன்மா இப்படி கத்தறே!” என்றாள்.

அதற்கு சுசீலா “ஏன் கத்தறேவா! கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கா! இளையராஜாவை பார்த்துக்கணும் தானே! அவர் தூங்கி எழுவதற்கு முன்.. அவர் முன்னாடி போய் நிற்கணும். நீ என்னனென்ன.. காலைல எழுந்ததும்.. நேரா இங்கே வந்து நின்னுட்டு பாராக்கு பார்த்துட்டு இருக்கே..” என்றுத் திட்டினார்.

சுபாஷினிக்கு அவளது அன்னை என்ன கூறுகிறார் என்று முதலில் புரியவில்லை. பின்பே.. தன் பெற்றோர்களிடம் ரோஹீத் தன்னை வராதே என்றுக் கூறியதைக் கூறவில்லை என்று நினைவிற்கு வந்தது.

சுசீலா “என்ன சுபா இது! இது சரியில்லை. நீ ஹாஸ்பெட்டல் வேலைக்கு போகலைன்னாலும்.. உன்னோட கடமையை மறந்துராதே! அதுவும்.. இப்போ இளைய ராஜாக்கு..” என்றுப் பேசிக் கொண்டிருக்கையில் இடைப்புகுந்த சுபாஷினி “அம்மா அப்போ நான் போகட்டுமா..” என்று கண்கள் பளபளக்க கேட்டாள்.

சுசீலா இவளுக்கு என்னவாகிற்று என்பது போல் பார்க்கவும், சுபாஷினி “ஆமாம்மா! கண்டிப்பா போகணும். அதுவும் நீ சொன்னதால் தான் போறேன்.” என்றுவிட்டு.. கிளம்ப ஓடி வந்தவள், தனது அன்னையை கடக்கும் போது.. “அம்மா நீ போக சொன்னே.. இதோ நான் கிளம்பிட்டேன். அப்படித்தானே..” என்றுவிட்டு பதிலை எதிர்பாராமல் உள்ளே ஓடினாள். பின் அவளது அறைக்குள் போகும் முன் மீண்டும் திரும்பி சுசீலாவை பார்த்து.. “உன் பேச்சை தட்ட மாட்டேன்மா..” என்றுவிட்டு அவளது அறைக்குள் புகுந்தாள். இங்கு சுசீலா குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

பத்தே நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தவள், சாப்பிட்டு போ.. என்று அவளது அன்னையிடம் “அங்கே சாப்பிட்டுக்கிறேன்.” என்றுக் கூறியவாறு வெளியே சென்றாள்.

சுபாஷினி கவலைப்பட்டது மிக்க சரி! அங்கு ரோஹீத் கொடிய கனவின் பிடியில் இருந்தான்.

கோபத்துடன் கையில் தீ பந்தத்தை ஏந்திக் கொண்டு.. மாளிகையின் அனைத்து இடங்களிலும் தீயைப் பற்ற வைத்தான். ஒரு இடத்தில் தீயைப் பற்ற வைத்துவிட்டு திரும்பும் போது.. பெண்ணின் அலறல் ஒன்றுக் கேட்டது. திரும்பிப் பார்த்த பொழுது.. மலர் உடல் முழுவதும் தீ எரிந்துக் கொண்டிருக்க அலறிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும்.. கையில் இருந்த தீ பந்தத்தை போட்டுவிட்டு.. ஓடிச் சென்று அணைக்க முற்பட்டான். ஆனால்.. போகும் வழியில் கால் இடறி விழுந்தான். நிமிர்ந்துப் பார்த்த பொழுது மலர்விழி.. இன்னும் தீயின் தாக்கம் தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தாள். அவளைக் காப்பாற்ற எழ முயன்ற ரோஹீத்திற்கு.. எழ முடியவில்லை. அவனின் காலின் மீது.. கனமாக ஏதோ விழுந்ததில் காலை சிறிது கூட அசைக்க முடியவில்லை. முன்னே மலர்விழியின் அலறலும்.. கால் வலியும் என்று தவித்த ரோஹீத்திற்கு தீயினால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் மூச்சு விட முடியவில்லை. குரலும் எழுப்ப முடியவில்லை.

அப்பொழுது அவனது தோளைத் தொட்டு யாரோ உலுக்கவும், சிரமத்துடன் இமைகளைத் திறந்துப் பார்த்தான். சற்றுமுன் பார்த்த காட்சி.. அங்கு இல்லை. அவன் எங்கே இருக்கிறான் என்று ஒரு நிமிடம் அவனுக்கு புரியவில்லை. திகைப்புடன் சுற்றிலும் பார்த்தவனின் கண்ணில் கவலையுடன் இருந்த சுபாஷினி பட்டாள். சட்டென்று எழுந்த ரோஹீத் சுபாஷினியின் கரத்தைப் பற்றி இழுத்து தன்னுடன் இறுகி அணைத்துக் கொண்டான். சுபாஷினி அதிர்ந்து நின்றாள்.

தன் அன்னை போக சொல்லவும்.. அதை சாக்காக பற்றிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்த.. சுபாஷினி மாளிகைக்குள் நுழையும் போது.. அங்கு யாருமில்லை. நேராக ரோஹீத் இருந்த அறைக்குள் சென்றாள். அங்கு ரோஹீத் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு நிம்மதியுற்றவளாய்.. அவனது அருகில் சென்றவள்.. திகைத்தாள்.

ஏனெனில் புருவங்கள் சுருங்க.. எதையோ கூறத் திணறியபடி.. உடல் நடுங்க.. இமைகளை மூடியவாறு படுத்திருந்தான். அவள் பயந்தது போல்.. உறங்கத்தில் வேண்டாத கனவுடன் போராடிக் கொண்டிருக்கிறான் என்றுப் புரிந்தது. எனவே அவனை அந்த கனவில் இருந்து மீட்க “ஸார்! ஸார்!” என்று அழைத்தாள்.

ஆனால் அவளது குரல் அவனது காதில் விழுந்தது போலவே தெரியவில்லை. நொடிக்கு நொடி.. அவனது தவிப்பும், துடிப்பும் அதிகமாகியது. அதைக் காண சகியாது சுபாஷினி அவனது தோளில் கரம் உலுக்கியவாறு “ஸார்! ஸார்!” என்று அழைத்தாள்.

அவளது அழைப்பு பலன் தந்தது. இமைகளை திறந்துப் பார்த்த ரோஹீத் திகைப்புடன் சுற்றிலும் பார்த்தான். அவனது நிலைமை புரிந்து.. அவனை நடப்பிற்கு கொண்டு வர பேச முயன்ற போது.. சட்டென்று எழுந்தவன், அவளை இழுத்து அணைத்தான். இதை முற்றிலும் எதிர்பாராத சுபாஷினி அதிர்ந்து நின்றாள்.

அவனது தவிப்பையும் துடிப்பையும்.. கண்ணில் பார்த்த சுபாஷினிக்கு.. தற்பொழுது ரோஹீத் இறுக்க அணைத்ததால்.. அந்த தவிப்பையும், துடிப்பையும்.. அவனது மேனியின் மூலம் உணர முடிந்தது. எனவே அதைப் போக்க.. மெல்ல தனது இரு கரங்களையும் உயர்த்தி அவனை அணைத்தவள், அவனது முதுகில் வருடிக் கொடுத்தாள். அப்பொழுது தடார் என்று கதவு திறந்த சத்தத்தில் சட்டென்று அவனிடம் இருந்து விடுப்பட்டு விலகி நின்று யார் என்றுத் திரும்பிப் பார்த்தாள். அங்கு மாரிமுத்து அதிர்ச்சியுடன் நின்றிருந்தான். அவனது பின்னால் தங்கமும் அதே நிலையில் இருந்தாள்.

ரோஹீத் “இப்படித்தான்.. என் பர்மிஷன் இல்லாமல் கதவை திறந்துட்டு வருவியா..” என்றுக் கேட்டவனின் குரலில் பழைய கம்பீரம் இல்லை. அவனது குரல் தோய்ந்து ஒலித்தது. இன்னும் அவன் சரியாக சுயநிலை திரும்பவில்லை என்றுப் புரிந்தது.

மாரிமுத்து “இ…இ.. இளைய ரா..ஜா! நீங்க கத்தின சத்தம் கேட்டுச்சு!” என்றான்.

அதற்கு ரோஹீத் “ஐயம் பைன்! நீ போகலாம்.” என்றவனுக்கு ஏன் கத்தினான் என்ற நினைவு வந்தது.

மாரிமுத்துவும், தங்கமும் தயங்கி நின்றார்கள். மாரிமுத்து சுபாஷினியை அழுத்தமாக பார்த்தான். ஆனால் சுபாஷினி யாரையும் பார்க்க இயலாது திரும்பிக் கொண்டாள். வேறுவழியில்லாமல் மாரிமுத்துவும் தங்கமும் கதவை சாத்திக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் சென்ற பின்பும்.. சுபாஷினியை அவனைத் திரும்பிப் பார்க்க இயலாது நின்றிருந்தாள்.

ரோஹீத் சிறு வருத்தத்துடன் “என்ன செய்திருக்கே சுபா! என்ன செய்தேன்னு புரிஞ்சு தான் செய்தியா..” என்றவன், “மாரிமுத்து கேட்டால்.. ஃபுல் தப்பும் என் மேலே தான்னு சொல்லிரு.. அதாவது நான்தான் உன்னைக் கட்டிப்பிடிச்சேன்னு சொல்லிரு..” என்றான்.

சுபாஷினி மெல்ல அவனைப் பார்க்கவும், ரோஹீத் “ப்ச்! நான்தான் உன்னைக் கட்டிப்பிடிச்சேன். ஆனா அது சுயநினைவு இல்லாத போது.. ஆனா நீ என்னை விலக்கி இருக்கலாமே சுபா! ஒய் சுபா! ஏன் அப்படி பண்ணலை?” என்றுக் கேட்டவன், பின் தன் மீதே சலிப்பு கொண்டவனாய் “ப்ச் விடு..” என்று சோர்ந்து படுக்கையில் சாய்ந்துக் கொண்டான்.

பின் ரோஹீத் சோர்ந்த குரலில் “நான் உன்னை வர வேண்டானு சொன்னேன்.” என்றான்.

அதைக் கேட்ட சுபாஷினிக்கு என்ன கூறுவது என்றுத் தெரியவில்லை. பின்பே அத்தனை நேரம் மனப்பாடம் செய்து வைத்தது நினைவிற்கு வந்தது.

உடனே அவன் புறம் திரும்பி “அம்மா தான் போக சொன்னாங்க.. அதுனால வந்தேன்.” என்றாள். அதைக் கேட்டு அயர்வுடன் முறுவலித்தவன், “அதனால தான் வந்தியா..” என்று அவள் கூறியதையே திரும்ப கூறினான்.

பின் அவனது விரல்களைப் பார்த்தவாறு “நீதான் என்னைத் தொட்டு எழுப்பினியா..” என்றான்.

அதற்கு சுபாஷினி “ஆமா! நீங்க ஏதோ கனவால.. ரொம்ப ஸ்ட்ரகுள் செய்துட்டு இருந்தீங்க! ஏன் என்னாச்சு” என்றுக் கேட்டாள்.

ரோஹீத்திற்கு மீண்டும் அந்த கனவு முழுமையாக நினைவிற்கு வந்தது.

அதற்கு அர்த்தம் என்ன.. மலரை நான் காப்பாற்றியிருக்கலாம் என்று அர்த்தமா.. அல்லது அவள் இறப்பதற்கு நான்தான் காரணம் என்று அர்த்தமா! இவ்வாறு அவனது எண்ணங்கள் செல்லவும்.. அவனது மனம் மீண்டும் தவித்தது. அந்த கனவின் தாக்கம் மீண்டும் அவனைத் தாக்கவும்.. அவனது உடல் தானே நடுங்க.. இருகரங்கள் கொண்டு.. முகத்தை மூடியவாறு.. தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

அப்பொழுது தான்.. சுபாஷினி அவனை நன்றாக கவனித்தாள். அவனது உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இன்னும் கனவின் தாக்கத்தில் இருந்து அவனால் வெளியே வர முடியவில்லை.. என்பது புரிந்தது.

அப்பொழுது போல்.. அவனது முதுகை வருடிக் கொடுத்து ஆறுதல் சொல்ல தயங்கினாள். கையை உயர்த்தி விட்டு.. கீழே போட்டுவிட்டாள். ஆனால் ரோஹீத் அமர்ந்த நிலையில் இருந்து.. மாறாமல் இருக்கவும்.. அவள் அவனுக்காக தவித்தாள். முதலிலேயே வெறுமையுடன் மனதில் காயத்துடன் இருப்பவனுக்கு.. கால் காயம் வேறு! தற்பொழுது இதுவும் சேர்ந்துக் கொள்ள துடிப்பவனைப் பார்க்க இயலாது நின்றாள்.

சில கணங்கள் அமைதியாக நின்றவள், அதற்கு மேல் அவனை அவ்வாறு பார்க்க முடியவில்லை. எதனால் அவனது மனம் அமைதிப்படும் என்றுத் தெரிந்திருந்தால்.. அவனை நோக்கி மெல்ல குனிந்து.. அவனது கரங்கள் இரண்டையும் பற்றி.. அவனது முகத்தில் இருந்து எடுத்தாள். ரோஹீத் திகைப்புடன் பார்க்கவும், அவனது திகைப்பையும்.. இதுநாள் வரை.. அவன் மீது அரச பரம்பரையை சேர்ந்தவன்.. என்று இருந்த மரியாதையையும் பயத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு மெல்ல அவனருகே அமர்ந்தாள்.

தனது கையைப் பற்றியிருந்த அவளது கரங்களை இறுக பற்றிக் கொண்டு ரோஹீத் அமைதியாக அவளைப் பார்த்தான். சுபாஷினி அவனது முகம் பார்க்க தயங்கினவளாய்.. பார்வையை தாழ்த்தியவாறு.. மெல்லிய குரலில் “ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்வது.. இயல்பு தான்! இப்போ உங்களுக்கு அதுதான் தேவை..” என்று தனது கரங்களோடு இணைந்த.. அவனது கரத்தினை இழுத்து தன்னைச் சுற்றிக் கொண்டு செல்லவும்.. அதன் பின் அடுத்த செயலை அவன் தனதாக்கிக் கொண்டான். அவளைத் தன்னுடன் வளைத்து இறுக அணைத்துக் கொண்டான். சுபாஷினியின் கரமும்.. அவனது தோள்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது. ரோஹீத் தனது மனதின் சஞ்சலங்கள் மட்டுப்படுவதை உணர்ந்தான். சுபாஷினிக்கோ உடலெங்கும் பட்டாம்பூச்சி பறந்தது.

அவனது இறுக்கத்தின் அளவு கூடிக் கொண்டே போனது. பின் என்ன தோன்றியதோ! திடுமென அவளை விட்டு விலகினான். திடுமென அவன் விட்டதில் தடுமாறியவளை.. அவன்தான் பிடித்து நிறுத்தி நேராக அமர வைத்தான்.

நேராக அமர்ந்தவளுக்கு சுயநிலை திரும்பவும்.. அவனிடம் இருந்து சட்டென்று எழுந்து நின்றாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாது அந்த அறையில் உள்ள பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரோஹீத் “தெரிஞ்சே தப்பு செய்யறே!” என்று சிறு முணுமுணுத்தவன், இமைகளை இறுக்க மூடிக் கொண்டு.. “அதுக்கு நானும் உடன்பட்டிருக்கேன். நான் உன்னை விலக்கி இருக்கலாம்.” என்று ஆத்திரத்துடன் கூறினான்.

பின் ரோஹீத் உணர்ச்சிகளற்ற குரலில் “மாரிமுத்துவை வரச் சொல்லு..” என்று அவளைப் பார்க்காமலேயே கூறினான்.

சுபாஷினி “எதுக்கு ஸார்?” என்றுக் கேட்டாள்.

மாரிமுத்துவின் குற்றம் சாட்டும் பார்வையை எதிர்கொள்ள பயந்து அவ்வாறு கேட்டாள்.

ரோஹீத் “நான் ரெஸ்ட் ரூம் போகணும்.” என்றான்.

அதற்கு சுபாஷினி “நான் ஹெல்ப் செய்யறேன் ஸார்! என் தோளில் கையை போட்டுக்கோங்க..” என்றுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவள் எதிர்பார்த்தது போல்.. “ஓ.. கட்டியே பிடிச்சாச்சு.. தோளில் கையைப் போட்டால் என்ன என்று நினைச்சுட்டியா!” என்றுக் கேட்டு புன்னகைத்தவனின் குரலில் கேலி மட்டி கிடந்தது. பின் “ஒகே..” என்று எழ முயலவும்.. அவள் குனிந்து.. அவனது ஒரு கரத்தை எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டாள். அவனும்.. அவளுடன் எழுந்து ஒரு காலால் ஊன்றியவாறு குளியலறையை நோக்கி சென்றான். பின் அங்கிருந்து அதே போல்.. வரும்வரை இருவரிடமும் பேச்சில்லை.

படுக்கையில் வந்து அமர்ந்த பின்பும்.. இருவரிடமும் பேச்சில்லை. பின் ரோஹீத் “மாரிமுத்துவை கூப்பிடு! நான் கொஞ்ச நேரம் தோட்டத்தில் உட்காரணும். அப்போ தான் கொஞ்சம் ரெப்ரெஷ்ஷா இருக்கும்.” என்றான்.

அதற்கு சுபாஷினி “இப்போ கூட்டிட்டு போன மாதிரி நானே கூட்டிட்டு போறேன்ங்க..” என்றாள்.

அதைக் கேட்ட ரோஹீத் அவளைத் துளையிடும் பார்வையுடன் பார்க்கவும்.. சுபாஷினி சிறுக் குன்றலுடன் தலைக்குனிந்தாள்.

பின் மெல்லிய குரலில் “என்ன ஸார்! இப்படி குத்திக் காட்டிப் பேசறீங்க! நேத்து நீங்க நிறையா தரம் என் கையைப் பிடிச்சு பேசனீங்க.. இன்னைக்கு நீங்க தான் முதல்ல கட்டிப்பிடிச்சீங்க! அப்போ நீங்க அமைதியானதைப் பார்த்து தான்.. நான் அடுத்த முறை நீங்க தவிக்கவும், நான் கட்டிப் பிடிச்சேன். ஆனா அதை இப்படியா சொல்லி சொல்லிக் காட்டுவாங்க..” என்று அவனை நிமிர்ந்துப் பார்க்காமலேயே மனம் தடுமாற்றத்தை சமாளிக்க முயன்றாள்.

அவள் பேசி முடிக்கும் வரை கேட்டவன், பின் “ரெஸ்ட் ரூம் இங்கே தான் இருக்கு! கொஞ்ச டிஸ்டன்ஸ் தான்! அதுனால பரவாலை. ஆனா தோட்டத்திற்கு போகும் வரை.. உன்னாலும் என்னாலும் முடியாது.” என்றவன், அவள் குறுக்கீடுவதைக் கவனியாது தொடர்ந்து “நான் பிஸிக்கலா மட்டும் முடியாது என்றுச் சொல்லுலை. மென்டலாவும் முடியாது. அப்பறம்.. வேற மாதிரி நடந்திரும்.” என்று அவளை அழுத்தமாக பார்த்தவாறுக் கூறினான்.

ஏதோ சொல்ல வாயைத் திறந்த சுபாஷினி.. ரோஹித் கடைசியாக கூறியதைக் கேட்டு அழுத்த மூடிக் கொண்டவள், அமைதியாக மாரிமுத்துவை அழைக்க சென்றாள். மாரிமுத்து அவளை எரித்து விடுவது போல் பார்த்தான். ஆனால் அதைக் கண்டுக் கொள்ளாத பாவனையுடன் மீண்டும் ரோஹீத்திடம் சென்று நின்றுக் கொண்டாள். ஏனெனில் அவனுடன் இருக்கும் போது.. மாரிமுத்துவினால் எதுவும் கூற முடியாது.

மாரிமுத்து மெல்ல அவனை நடத்தி செல்ல.. சுபாஷினியும் பின்னோடு செனடு ஓடினாள்.

தோட்டத்தில் உள்ள கண்ணாடி வீட்டில் ரோஹீத் பழுப்பேறிய கண்ணாடியின் வழியாக தெரிந்த வானமூட்டத்தை பார்த்தவாறு அமர்ந்திருக்க.. அவனுக்கு முன்னால் இருந்த.. டீபாயில் இருந்த தேநீரை அவனுக்கு பிடித்த விகிதத்தில் அவனுக்காக சுபாஷினி கலந்துக் கொண்டிருந்தாள்.

வானமூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை.. சுபாஷினியிடம் சென்றது. சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த மாரிமுத்துவிடம் “நான் சுபா கூடத் தனியா பேசணும். நீ இங்கிருந்து போ..” என்றான்.

மாரிமுத்து திகைத்தாலும் ரோஹீத்தின் பேச்சை தட்ட முடியாமல் மாளிகைக்குள் சென்று மறைந்தான்.

பின் ரோஹீத் சுபாஷினியை பார்த்தான். அவளுக்கு அவன் கூறியது கேட்டு தான் இருந்தது. ஆனால் தலை நிமிர்ந்து பார்த்தாளில்லை.

ரோஹீத் “சுபா!” என்று அழைத்து “ஆரம்பத்தில் இருந்து.. என் கூடவே இருனு நான் சொல்லிய போதெல்லாம்.. நீ டினைய் செய்துட்டு இருந்தே! அதுக்கு காரணம்.. நாம் பழகுவது டேன்ஞ்ரா போகும் என்கிறதாலேயா? மற்றவங்க தப்பா பேசுவாங்க என்கிறதாலேயா?” என்றுக் கேட்டான்.

சுபாஷினியின் கரம் ஒருகணம் நின்றுப் பின் தனது வேலையில் கவனமானது.

அவளது வதனத்தில் விரலை வைத்து நிமிர்த்திய ரோஹீத் “எனக்கு பதில் தெரியணும் சுபா! இதுவரை நான் உன்கிட்ட நிறையா கேள்வி கேட்டுட்டேன். எதுக்கும் நீ சரியா பதில் சொன்னதில்லை. எதையும் நீ ஓப்பனா சொல்லியிருந்தா.. இப்போ இந்த நிலைமையே வந்திருக்காது. சொல்லு.. முதலில் இருந்து நீ என்னை அவாய்ட் செய்ததிற்கு என்ன காரணம்? நான் இராஜா என்கிற மரியாதையாலும்.. காரில் இருந்தது நான் என்றுத் தெரியாமல் நீயும் விளையாடியதால்.. ஏற்பட்ட சங்கடத்தாலும் என் கிட்ட இருந்து ஒதுங்கிறேனு நினைச்சேன். ஆனா? இல்லை நீயே பதில் சொல்லு..” என்றான்.

ரோஹீத் அவளிடம் பதிலைக் கேட்க.. அவளுக்கோ பதிலாய் கண்களில் இருந்து கண்ணீர் மணித் துளி கன்னத்தில் உருண்டோடியது. அதைத் தனது விரல் கொண்டு துடைத்து விட்டவன் “அப்போ இந்த இரண்டும் தான் காரணமா! இல்லை மூன்றாவது காரணம் என்று எதாவது இருக்கா! நம்மளோட பழக்கம் வேற மாதிரி கொண்டு போயிரும் என்றுப் பயந்தியா! அப்போ ஏன் திரும்பி வந்தே!” என்றுப் புரியாமல் கேட்டவனுக்கு பதில் தெரிந்துவிடவும், சிறு பெருமூச்சுடன் "மை காட்!" நிமிர்ந்தான்.

"என்ன நடக்கும் என்றுத் தெரிந்து புதைக்குழியில் விழுகிற மாதிரி இது.." என்று அவளைச் சிறு வருத்தத்துடன் பார்த்தான். சுபாஷினி கீழுதட்டை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

பின் ரோஹீத் அவளைப் பார்த்து “ரியலி ஸாரி சுபா! காரில் வந்து உன் கூட விளையாடியது எனக்கு இன்டர்ஸ்ட்டா இருந்துச்சு! அதை வச்சுட்டு நீ என் கூட இருனு சொல்லி.. உன் உணர்வுகளைக் கிளப்பிட்டேன்னு நினைக்கிறேன். நான் விளையாடியது.. இதுவரை கொண்டு போகுனு நான் நினைச்சு பார்க்கலை.” என்றான்.

பின் தொடர்ந்து சற்று இறங்கிய குரலில் “என்னோட துயரத்திற்கும்.. வேதனைக்கும் ஒரு பெண் கிட்ட நிம்மதி உணர்கிறேன்.. என்றால் அந்த பெண் என் வாழ்க்கை துணைவியாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாக போகுது, உனக்கு ஏற்கனவே என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு சுபா! அப்போ இது ரொம்ப தப்பு! நேத்து.. உன் மேலே இருக்கிற கோபத்தில் வர வேண்டானு சொன்னேன். இப்போ உன் மேலே இருக்கிற அக்கறையில் சொல்றேன். நீ இங்கே வர வேண்டாம் சுபா! நான் இன்னைக்கே மைசூர் அரண்மனைக்கு போயிறேன்.” என்றான்.

சுபாஷினி திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

சுபாஷினியின் திடுக்கிட்ட முகத்தை பார்த்து மெல்ல சிரித்த ரோஹீத் “இன்னொரு மலர் கருகுவதை என்னால் அனுமதிக்க முடியாது சுபா!” என்றான்.

அவன் கூறுவது புரிய சுபாஷினிக்கு முழுவதாக ஒரு நிமிடம் பிடித்தது. அவளது கண்கள் விரிவதை கண்டு ரோஹீத்தின் சிரிப்பு மேலும் விரிந்தது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11


தன் காதில் கேட்டதை இன்னும் நம்ப முடியாமல்.. சுபாஷினி பார்த்துக் கொண்டிருக்கவும், சட்டென்று குனிந்து அவளது கண்களின் மேல் கரத்தை வைத்து.. தன்னைப் பார்ப்பதைத் தடுத்த ரோஹீத் “வேண்டாம் சுபா! இந்த உண்மை நீ தெரியாமலேயே இருந்திருக்கலாம். நானும் உணரலாமே இருந்திருக்கலாம்.” என்றான்.

சுபாஷினி அவனது கரத்தைப் பற்றி மெல்ல அகற்றவும், அவளது முகத்தில் இருந்து பார்வையை அகற்றியவன், வேறு திசையை பார்த்தவாறு “இடியட் மாதிரி உன் கிட்ட உரிமையோட விளையாடிட்டு இருந்திருக்கேன். எனக்கு அதற்கு உரிமை இல்லைனு கூடத் தெரியலை. இப்போ உன்னை ஹக் செய்த போது.. இன்னும் உரிமை எடுத்துக்க தோணுச்சு! அப்போ தான் நான் செய்துட்டு இருக்கிற தப்பு புரிந்தது. உடனே இது தப்புனு விலகிட்டேன். எனக்கு உன்னை ஹக் செய்யறதுக்கு உரிமையில்லையானு நினைக்கும் போது தான்! நான் உரிமையை மீறி.. உன்கிட்ட பழகியிருக்கிறது புரிந்தது. என் மனசுல காதல் இனி வராதுனு சொன்னேன். அப்போ உன் கிட்ட நான் நடந்துட்ட முறை ரொம்ப தப்பு சுபா! இப்போ என்னால் உன் முகத்தை பார்த்து பேச முடியலை சுபா! நேத்து.. உன் முகத்தை நேராக பார்த்து பேசின தைரியம் இப்போ எனக்கு இல்லை. என்னால் முடியலை. ரோஹீத் என்பது மட்டும் என்னோட அடையாளமா இருந்திருந்தா.. எனக்கு தடையில்லை. அட்லீஸ்ட்.. என்னோட தடைகளை நானே வான்ட்டர்டா தலையில் ஏத்திக்கிறது முன்னே.. உன்னை மீட் செய்திருக்கலாம். பட்..” என்று இருக்கையில் அயர்வுடன் சாய்ந்தவன், “வேண்டாம் சுபா! இந்த கிரிட்டிக்கல் லைஃப் உனக்கு வேண்டாம். நீ போயிரு..” என்றான்.

பின் அவளைப் பார்த்தவன் "என்னைப் பார்த்தா கோழை மாதிரி இருக்கா! யார் எக்கேடு கெட்டாலும் சரி.. எனக்கு என் வாழ்க்கை முக்கியம் என்று முடிவு எடுக்க எனக்கு ஒரு கணம் போதாது சுபா! ஆனா.. நான் இன்னும் உன்னை லவ் செய்கிறேனானு.. கன்பார்மா சொல்ல முடியலை. பிகாஸ் இந்த மாதிரி நிறையா தரம் ஆகிருக்கு!” என்றான்.

அதைக் கேட்டு சுபாஷினி அதிர்வுடன் அவளை நிமிர்ந்துப் பார்த்தாள். அதைப் பார்த்து சிரித்தவன்.. “நீ நினைக்கிற மாதிரி இல்லை சுபா! இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமா தெரியலாம். இட்டாலி நாட்டுல ஓபரா என்று பாட்டு பாடுவாங்க.. முதல்ல எனக்கு அதோட சிறப்பு தோணுலை. அப்பறம் அதோட லயத்தில் லயித்து போய்.. டெய்லியும் ஒபரா ஷோவிற்கு போய் கேட்பேன். அந்த நாட்டுல இருந்து கிளம்பின போது.. எனக்கு டெய்லியும் கேட்காம எப்படி இருக்க போறேனு இருந்துச்சு! அந்த நாட்டை விட்டுப் போன பிறகு.. பென்டிரைவில் நிறையா சாங் ரெக்கார்ட் செய்து வைத்து கேட்டுப் பார்த்தேன். பட் லைவ்வா கேட்ட எஃபெக்ட் கொடுக்கலை. அதனால அதைக் கேட்கிறதை விட்டு.. அந்த போதையில் இருந்து வெளி வர.. நார்வே நாட்டுல நார்த்தன் லைட்ஸ் வருகிற சீசனில் போய் உட்கார்ந்துட்டு வானத்தை வெறித்துப் பார்த்துட்டு இருக்க ஆரம்பித்தேன். அது ஒரு மாதிரி போதை கொடுத்துச்சு. பழைய போதை மறந்துருச்சு! அப்பறம் அங்கிருந்து போற நாளும் வந்தப்போ.. எகிப்து நாட்டுல போய்.. பாலைவனத்தில் இருக்க ஆரம்பித்தேன். நார்த்தன் லைட்ஸ் மேலே இருக்கிற போதையை அது தெளிய வச்சுது. இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு எனக்கு இருக்கும். அப்படி பிரேசலில் கார்னிவேல் கொண்டாட்டத்தை இரசிச்சிட்டு இருந்த போது.. தான், ரேஷ்மா கிட்ட இருந்து இங்கே வரச் சொல்லி ஃபோன் வந்துச்சு!”

“நான் எடுத்த எடுப்பில் வர மாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனா பிறகு யோசித்து பார்த்தப்போ.. என்ன தான் என் குடும்பத்தில் அவங்க அதிகாரத்தின் மேல் வெறுப்பு இருந்தாலும்.. என்னோட பொறுப்பு, கடமை, உரிமை என்று ஒன்று எனக்கு இருக்குது. அதை இதுவரை நான் செய்ததில்லை. அதைச் செய்யணும் என்று நினைச்சேன். என்ன தான் நான் வெறுத்தாலும் பரம்பரை இரத்தம் அதோட வேலையை காட்டும் தானே! எல்லாத்தையும் விட.. இப்படி நாடு நாடா சுத்தரதுக்கு.. இதுவரை ஆனா செலவையும்… இனி நான் வாழப் போற வாழ்க்கைக்கு ஆகிற செலவை சம்பாதிக்க.. தொழிலை ஏற்று நடத்தலானு முடிவுக்கு வந்து.. இந்தியா வந்தேன். ஆனா தொழிலோடு.. குடும்ப பொறுப்பு, பதவி, திருமணம், கடமை, உரிமை என்று எல்லாம் என் தலையில் பெரிதாக விழுந்துருச்சு! இந்த முறை எல்லாத்தை வீசிட்டு போக நினைக்கலை. என் தலையில் நானே ஏத்திட்டதை நிறைவேற்ற.. நினைச்சேன். என் தலையில் ஏற்றியதின் கனம் சில சமயம் மூச்சு முட்டும். அதைப் பொறுத்துட்டு.. நான் வந்த வேலையை முடிச்சுட்டு போக நினைச்சேன். அப்போ ஒருநாள் ரொம்ப தாங்க முடியலை. அப்போ தான் வண்டியை எடுத்துட்டு இங்கே வந்தேன். உன்னைப் பார்த்தேன். நான் முதல்ல சொன்ன மாதிரி.. எனக்கு உன் கூட விளையாடுவது பிடிச்சிருந்துச்சு! அதோட விபரீதம் எனக்கு தெரியலை.”

“முன்பே சொன்ன மாதிரி.. இது ஒரு போதை மாதிரி இருந்துச்சு! ஆனா இதுவரை போதை கொண்ட விசயங்கள்.. உயிரற்ற பொருட்கள் சுபா! ஆனா நீ.. என் உணர்வுகளை பிரதிபலிக்கிற மனுஷி! அதோட தாக்கம் என்னை ரொம்பவே பாதிப்பது உண்மை! ஆனா இந்த போதையும் நிரந்தமில்லாது ஆகிட்டா.. என்ன செய்யறது சுபா! முதலிலேயே எங்களோட அதிகார வர்க்கத்தின் ஆணவ பிடியில் மலரை இழுத்துவிட்ட பாவத்தை சுமந்துட்டு இருக்கேன். இப்போ உன்னையும் இழுத்துவிட்டு.. என்னோடது வெறும் ஈர்ப்பா இருந்துட்டா.. அதுக்கு உன்னை பலியிட்டு அந்த பாவத்தையும் நான் சுமக்க முடியாது சுபா! என்னோட போதைகள் நிரந்தமில்லை. அந்த பயத்திற்காகவும் தான்.. இனி என் முன் வராதேனு சொல்றேன். இதுவரை யார்கிட்டயும்.. இப்படி என் மனசை முழுவதுமாக திறந்து பேசினது இல்லை.” என்று நீளமாக பேசியவன், அவளது முகத்தைக் காண இயலாது வேறு பக்கம் பார்த்தான்.

அவனிடம் தோன்றிய உணர்வுகளுக்கு பெயரில்லை என்று அவனே கூறிவிட்டு.. அதை அடுத்த கணமே அதுவும் தேவையில்லை.. என்று அழித்தவனை தவிப்புடன் பார்த்தாள்.

ஆனால் ரோஹீத் அவளைக் கண்டுக் கொள்ளாது.. நிதானமாக அவள் கலந்து வைத்த தேநீரை எடுத்து இரசித்து பருகினான். பின் “மாரிமுத்து..” என்றுக் கத்தி அழைத்தான். அடுத்த நிமிடமே மாரிமுத்து அங்கு வந்து நின்றதும் அவனிடம் “என்னை இப்போ ரூமிற்கு கூட்டிட்டு போ! அப்படியே மைசூர் பேலஸிற்கு.. ஃபோன் போட்டு.. என்னை உடனே கூட்டிட்டு போக ஏற்பாடு செய்!” என்றான்.

அதைக் கேட்டு மாரிமுத்து திகைத்து நிற்கவும், ரோஹீத் “அவங்க கிட்ட சுபாவை பற்றி மூச்சு கூட விடக் கூடாது. ஒகே..” என்று அவனது குரல் கட்டளையாக வந்தது.

உடனே மாரிமுத்து “சரிங்க இளைய ராஜா!” என்று குனிந்து நிமிர்ந்தான். அவனது முகத்தில் அவனையும் மீறி மகிழ்ச்சி தென்பட்டது.

மெல்ல எழுந்த சுபாஷினி அவளும் இடுப்பு வரை குனிந்து நிமிர்ந்துவிட்டு.. திரும்பியும் கூடப் பாராமல் சென்றாள். வேறு வார்த்தை பேசவில்லை. திரும்பிப் பார்த்தால்.. அழுது குமறி விடுவோமோ என்று அஞ்சினாள். அது அவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அவள் கண்ணில் இருந்து மறையும் வரை.. அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இனி வர வேண்டாம் என்று மட்டும் கூறியிருக்கலாமோ.. இத்தனை விளக்கம் கூறியிருக்க வேண்டாமோ என்றுத் தோன்றியது. ஆனால் இத்தனை விளக்கம் கூறியதால் தான்.. அவளால் செல்ல முடிந்தது.. என்றுச் சிரித்தவனின் சிரிப்பு கசந்து வழிந்து.. தொண்டையை கனத்தது.

சுசீலாவும் கதிரேஷனும் வயலுக்கு கிளம்பும் முன் வந்துவிட்ட மகளை அதிசயமாக பார்த்து விபரம் கேட்டார்கள்.

அதற்கு சுபாஷினி ரோஹீத் இன்று மைசூர் அரண்மனைக்கு சென்றுவிடுவார் என்றுக் கூறினாள். அவர்களும் அதுவும் நல்லது தான் என்றுவிட்டு.. அவளது முகம் வாடியிருப்பதற்கு காரணம் கேட்டார்கள். அவள் தனக்கு உடல்நிலை சரியில்லை.. இளைய ராஜாவை கூட்டிட்டு செல்லும் முன் அங்கிருந்து வந்ததிற்கும் இதுதான் காரணம் என்றுக் கூறினாள். உடனே கவலைக் கொண்ட சுசீலா அவளுக்கு எளிதாக செரிமானம் ஆக கூடிய கஞ்சியை செய்து வைத்துவிட்டு.. ஓய்வெடுக்க சொல்லிவிட்டு கிளம்பினார்.

அவர்கள் சென்றதும் படுக்கையில் விழுந்த சுபாஷினி ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் கேட்கவும்.. அதற்கு ஒருதரம் அழுதாள். அவளது எண்ணம் சரி என்பது போல்.. சிறிது நேரம் கழித்து வந்த மாரிமுத்து வந்து அவளுக்கு நன்றி தெரிவித்து.. இளைய ராஜா மைசூரில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார் என்றுக் கூறி.. சுபாஷினியின் முகத்தை குறிப்பாக பார்த்தான். ஆனால் சுபாஷினி அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

மாலையில் வீடு திரும்பிய அவளது பெற்றோர் அவளது வீங்கிய இமைகளைக் கண்டு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை என்று நினைத்து.. அவளை மருத்துவரிடம் அழைத்து செல்வதாக கூறினர். ஆனால்.. சுபாஷினி சளித்தொல்லைக்கு எப்படி மருத்துவம் செய்தாலும்.. சரியாக நான்கு நாட்களாவது ஆகும்… அதனால் எங்கும் வரவில்லை என்றுக் கூறி சமாளித்தாள். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை.. அவளது மனம் தான் சரியில்லை. அதற்கு தேவையானது கிடைக்கவில்லை என்றால்.. என்றும் சரியாகாது என்று!

அதன் பின் அவளது வாழ்க்கையே மாறிப் போனது. நொடிக்கு ஒருதரம் வளைவு திரும்பும் பார்வையும்.. ஏக்கமுமாக நாட்களைக் கடத்தியவளுக்கு முன் போல்.. சமூக வளைத்தளம் பொழுதைப் போக்கவில்லை. ஆகாஷிடம் இருந்து வந்த அழைப்பிலும் லயிப்பில்லை.

சுபாஷினிக்கு ரோஹீத்திடம் தோன்றிய உணர்விற்கு எதிர்காலமும் இல்லை. மதிப்பும் இல்லை என்று நன்றாக தெரியும். ஆனால் அதில் இருந்து வெளி வர முடியாமல் தவித்தாள். ரோஹீத் அவனது மனநிலையை பற்றி நன்கு தெளிவுப்படுத்திய பிறகும்.. அவனின் மீதிருக்கும் பிரியம் குறையவில்லை. ரோஹீத் சூழ்நிலை கைதியாக இருப்பதை நினைத்து அதற்கு ஒருதரம் அவனை எண்ணி ஒரு மூச்சு அழுதாள். இவ்வாறு அவனது நினைவிலும்.. அவனை மறக்கா முடியாத தனது நிலையை நினைத்தும் நொந்தாள். உடல்நிலை சரியாக நான்கு நாட்கள் ஆகும்.. என்று அவள் கூறிய பொய் காரணத்தால்.. நான்கு நாட்கள் கடந்தும்.. அவள் அதே சோர்ந்து போன முகத்துடன் சுற்றவும்.. அவளது பெற்றோரின் பார்வை அவளின் மீது வித்தியாசமாக படிவதைக் கண்டு தனது மனநிலையை மாற்ற பெற்றோருடன் சென்று அவர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் உடல் நொக வேலைச் செய்து அயர்வுடன் உறங்க பழகினாள்.

இவ்வாறு பத்து நாட்கள் கடந்திருக்க.. ஒருநாள் வழக்கம் போல் விடித்த காலைப் பொழுது.. அவளுக்கு வழக்கமான நாளாக இல்லை.

ஆகாஷின் பெற்றோர்கள்.. வந்திருந்தார்கள். அதனால்.. சுசீலாவும் கதிரேஷனும், சுபாஷினியும் தோட்டத்திற்கு செல்லாமல் இருந்தார்கள். முறைப்படி இனிப்பும் பழமும் சுபாஷினியின் கையில் கொடுத்தவர்களை அமரச் சொல்லி உபசரித்தார்கள்.

சுபாஷினி கொடுத்த நீரை தாகத்திற்கு பருகிவிட்டு.. ஆகாஷின் பயிற்சி காலம் குறைக்கப்பட்டு விட்டதாகவும்.. அதனால் திருமணத்தை தள்ளிப்போடாமல் நடத்தி விடலாம் என்றுக் கூறினர். ஆகாஷ் இன்னும் இரு மாதங்களில் வந்துவிடுவான்.. அவன் இந்தியாவை வந்தடைந்ததும்.. அடுத்த இரண்டு நாளில் நல்ல மூகூர்த்த நாள் இருப்பதால்.. அன்றே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்.. என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அதைக் கேட்டு சுபாஷினியின் பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள். உடனே “அப்படியே செய்யலாம்.” என்று பதிலளித்தார்கள்.

ஆகாஷின் பெற்றோர்கள் “அடுத்த வாரம் நல்ல நாள் வருவதால்.. அப்பொழுதே.. பத்திரிக்கை அடிக்க கொடுத்திரலாமா? பையன் வரும் போது.. வரட்டும். நாம அதுக்குள்ள பத்திரிக்கை கொடுப்பது.. ஜவுளி எடுப்பது, மாங்கல்யம் வாங்குவது மாதிரி மத்த சம்பிராதயங்களை முடிச்சுரலாம். என்ன சொல்றீங்க..” என்றுக் கேட்கவும், சுபாஷினியின் பெற்றோருக்கு மறுப்பு கூற எந்த விசயமும் இல்லை என்பதால்.. உடனே சம்மதித்தார்கள்.

இப்பவே பத்திரிக்கை மாதிரி எழுதி விடலாமா என்றுக் கேட்கவும், கதிரேஷன் பரபரப்புடன் “சுபா! பேப்பரும் பென்னும் எடுத்துட்டு வாம்மா..” என்றார்.

சுபாஷினி உடனே செல்லாமல் தயக்கத்துடன் நின்றாள். சுசீலா ஆகாஷின் பெற்றோர்களை பார்த்து சிரித்துவிட்டு.. மகளின் அருகே வந்தவர், “சுபா வாம்மா..” என்று கையைப் பற்றி அழைத்து செல்ல முற்பட்டார். ஆனால் சுபாஷினி மறுத்துவிட்டு நின்றாள்.

ஏனோ சுசீலாவின் உள்ளம் பதறியது. எனவே “என்ன சொல்வதாக இருந்தாலும் இப்போ வேண்டாம் சுபா! தனியா எங்க கிட்ட சொல்லு..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினார். உடனே சுபாஷினியும் அதே குரலில் “இந்த கல்யாணத்தை நடத்த இனி எந்த காரியமும் செய்ய வேண்டாமினு நீங்களே சொல்லுங்க..” என்றாள்.

அதைக் கேட்டு சுசீலா திடுக்கிட்டார்.

அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மூவருக்கும் ஏதோ விசயம் என்றுப் புரியப்பட.. ஆகாஷின் அன்னை “என்னாச்சு சம்பந்தி! சுபா என்ன சொல்றா?” என்று நேரடியாக அவரிடமே கேட்டாள்.

சுசீலா சற்று திணறிவிட்டு “ஒண்ணுமில்லைங்க! இந்த மாதிரி கல்யாண விசயங்களை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி வைக்கலாம் என்றுச் சொன்னா..” என்று சமாளிக்க முயன்றார்.

அதற்கு அவர் "என்னது தள்ளி வைக்கிறதா! இல்லை நிறுத்தறதா! உங்க பொண்ணு முகமும் சரியில்ல உங்க முகமும் சரியில்ல! என்ன சொல்றது இருந்தாலும் டைரக்ட்டா சொல்லுங்க.." என்றார்.

அதைக் கேட்ட கதிரேஷன் முன் வந்து "சுசீ! என்னாச்சு!" என்கவும்.. சுசீலா பதில் சொல்ல முடியாமல் திணறுவதைப் பார்த்ததும்.. அவருக்கு சுபாஷினி என்ன சொல்லியிருப்பாள் என்றுப் புரிந்து விட்டது.

எனவே அவரும் அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்றுத் தெரியாமல் திணறியதைப் பார்த்த ஆகாஷின் கோபத்துடன் எழுந்தார்.

“ரொம்ப நல்லாயிருக்குங்க! நல்லா பொண்ணை வளர்த்து வச்சுருக்கீங்க! பேசி முடித்து வைத்த கல்யாணத்தை நிறுத்த சொல்றான்னா.. என் பையன் மேலே என்ன குறையை கண்டாள். அப்படியில்லைன்னா உங்க பொண்ணுக்கு வேற ஆள் மேலே பிரியம் இருக்கும் போல! முதல்ல உங்க பொண்ணை பார்க்க வந்தப்போ.. எங்க ஆகாஷை பிடிச்சுருக்குனு சொன்னா.. நல்லா தான் பழகினா.. இப்போ இன்னொரு ஆள் மேல் பிரியம் என்றால்.. என்ன பொண்ணு இது! இப்படிதான் மாறிட்டே இருப்பாளா..” என்று பொரிய ஆரம்பித்தார்.

தங்களது பெண்ணின் மேல் தவறு இருந்ததால்.. அவர் திட்டுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள்.. அவரின் பேச்சு வரம்பு மீறி.. போகவும், “போதுங்க! எங்க பொண்ணு செய்தது தப்பு தான்! அதுக்கு நீங்க கோபப்படறது நியாயம் தான்! அதுக்காக என்ன வேணுன்னாலும் பேசலானு.. பேசரது சரியில்லைங்க! இனி நாம் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காதது நல்லது.” என்று கையெடுத்து கும்பிட்டார்கள்.

உடனே அவர் “நாங்க போகிறோம். பின்னே என்ன என் பையனை கல்யாணம் செய்துக்கோ.. என்று அவ கிட்ட கெஞ்சுவோம் என்று நினைச்சுட்டிங்களா..” என்று திட்டியவாறு கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றதும்.. கைகளை பிசைந்து கொண்டு நின்ற சுபாஷினியிடம் கதிரேஷன் கோபமான குரலில் “இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன காரணம் சுபா?” என்றுக் கேட்டார்.

அவர்கள் கூறிய குற்றச்சாட்டை பற்றிக் கேளாமல்.. என்ன காரணம் என்று அவளிடம் கேட்கவும், சுபாஷினி உடைந்தவளாய் அழ ஆரம்பித்தாள். மகள் அழுவதைக் கண்டு அவளைத் தேற்ற குனிந்த சுசீலாவிடம் “வேண்டாம் சுசீ! அவள் அழட்டும். என்ன காரணம் என்றுத் தெரிந்தால் தான் அவளைத் தேற்றணும். எப்படி இருந்தாலும்.. அவளை ஆறுதல் படுத்துவோம் தான்! ஆனால் அவளோட முடிவு சரியா தவறா என்றுத் தெரிந்த பின் செய்யலாம். அதுவரை அவ அழுதா ஒண்ணும் ஆகிவிட மாட்டா..” என்றுத் தடுத்தார்.

பின் சுபாஷினிடம் கதிரேஷன் “சொல்லு சுபா!” என்றார்.

சுபாஷினி அழுத்த கண்களை துடைத்துவிட்டு “நான் மனமாற தான்.. ஆகாஷை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டேன் அப்பா! ஆனா என் மனம் இன்னொருவர் கிட்ட அலைப் பாயும் என்று நான் நிஜமா நினைச்சு பார்க்கலை. நானும் எவ்வளவோ என்னை கன்ட்ரோல் செய்ய ட்ரை செய்தேன். ஆனா முடியலைப்பா! ஏன்னா என்னோட இந்த அலைப்பாயுதலுக்கும் அந்த பக்கம் அவரிடம் இருந்து மதிப்பு இருக்காது.. நிறைவேறவும் செய்யாது என்றுத் தெரியும். ஆனா நிஜமா என்னால முடியலைப்பா!” என்று குமைந்தாள்.

அதைக் கேட்ட கதிரேஷன் மற்றும் சுசீலாவின் முகத்தில் வெறுப்பு துளிர்விட்டது. அதைப் பார்த்த.. சுபாஷினி “யார் மேலே எனக்கு அபிப்பிராயம் தோன்றியது என்றுத் தெரிந்தா.. இன்னும் என்னை வெறுப்பீங்களா.. இல்லை என்னை பைத்தியக்காரி மாதிரி பார்ப்பீங்களானு தெரியலை.” என்றாள்.

சுபாஷினி கூறியதைக் கேட்டு தாய் உள்ளம் தாங்காது சுசீலா “என்னடா சொல்ல வரே!” என்றுக் கேட்கவும், சுபாஷினி “நம்ம இளையராஜா மேலே நான் ஆசைப்பட்டுட்டேன் அம்மா!” என்றுவிட்டு முகத்தில் கரங்களால் மூடிக் கொண்டு பொங்கி அழ ஆரம்பித்தாள்.

சுசீலாவும் கதிரேஷனும் சுபாஷினி கூறியதைக் கேட்டு அதிர்ந்தார்கள். சுசீலா முன்னே வந்து “என்னடி இது! பைத்தியக்காரத்தனம்..” என்றவர், பின் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு “நீ பெரிய பொண்ணு.. இன்னேரம் உனக்கு எல்லாம் தானே தெரிந்திருக்கும். இளையராஜா மேலே ஆசைப்பட்ட மலர்விழிக்கு என்ன நடந்ததுனு உனக்கு தெரிந்திருக்கும். அதே மாதிரி.. அவங்க ஆசைப்பட்டா.. என்ன நடக்கும் என்று இன்னும் ஊரே ஒதுக்கி வைக்கும்.. காயத்ரியை பார்த்து தெரிந்திருக்கும். இப்படி எல்லாம் தெரிந்தும் எப்படி டி உன் எண்ணம் இப்படிப் போச்சு! சரி கண்ராவி எப்படியோ தோணிருச்சு! ஆனா நீயே இதைப் பைத்தியக்காரத்தனம் என்றுச் சொல்ற தெளிவு இருக்கு தானே! அதை அப்படியே ஒதுக்கி வச்சுக்கிற மெச்சூர்ட்டி கூடவே இல்லாம போச்சு! அதை மனசுல வச்சுட்டு.. கிடைக்கிற நல்ல வாழ்வை நீயே கெடுத்திட்டியே..” என்றுத் தலையில் அடித்துக் கொண்டார்.

அதற்கு சுபாஷினி “இந்த மாதிரி எண்ணத்தை வச்சுட்டு ஆகாஷை மேரேஜ் செய்யறது தப்பு! அப்பவும்.. இப்படி மனம் சஞ்சலப்பட்ட நேரத்தில்.. அவர் எனக்கு ஆறுதலா பேசுவாருனு நினைச்சு ஆகாஷ் கூட பேசினேன். ஆகாஷ் கொஞ்சம் இணக்காம பேசியிருந்தா.. இந்த சஞ்சலத்தில் இருந்து தப்பிச்சு வந்திருப்பேன். ஆனா அவர் அதைச் செய்யலை. அதனால் என் மனம் சரியால. என் மனசுலேயே அந்த சஞ்சலம் தங்கியிருச்சு! இதோட எப்படிம்மா நான் ஆகாஷை கல்யாணம் செய்துக்கிறது!” என்றாள்.

அவளது மனதில் தங்கிய சஞ்சலம்.. ரோஹீத்திற்கும்.. அவளிடம் சிறு ஈர்ப்பு உண்டு என்றுக் கேள்விப்பட்டவுடன் அது அவளது மனதில் பதிந்துவிட்டதை அவள் மறைத்துவிட்டாள்.

சுபாஷினி கூறியதைக் கேட்ட பின்.. கதிரேஷனும்.. சுசீலாவும் செய்வதறியாது திகைத்தார்கள். பின் கதிரேஷன் சுபாஷினியின் அருகில் வந்து “உனக்கே இந்த ஆசை நிறைவேறாது என்றுத் தெரிந்திருக்கு! அதுனால.. நாங்க உன்னை தேற்றுவதை விட.. நீயே உன்னை தேற்றுவது தான் சரி! கொஞ்ச நாளைக்கு இங்கே இருக்க வேண்டாம். கோவையில ஹாஸ்பெட்டல இருந்து இன்டர்வியுக்கு வந்திருக்குனு ஒருதரம் சொன்னியே.. அதற்கு மறுபடியும் ட்ரை செய்து பார்! வேலை கிடைத்ததும்.. அங்கேயே போய் தங்கியிரு! சும்மா இருக்கிறதாலே தானே.. அதையும் இதையும் யோசிக்க தோணுது. உன் மனசு வேற விசயத்துல ஐக்கியமாகிட்டா.. நீ இதில் இருந்து மீண்டு வந்திருவே! என் பொண்ணை பற்றி எனக்கு நல்லா தெரியும். போ.. என்னவென்னு பாரு..” என்றார்.

தந்தை கூறுவதைக் கேட்ட சுபாஷினியின் மனதில் சிறு தெளிவு ஏற்பட்டது. தனது மனதின் சஞ்சலத்திற்கு.. வழி கிடைத்துவிட்டது போன்று இருந்தது. எனவே முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டவள், “சரிபா..” என்கையில் அவளையும் அறியாது.. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அந்த கண்ணீர் அவர்களுக்காக வருகிறது என்றுத் தெரிந்த கதிரேஷன்.. அவளின் தோளை ஆதரவாக அணைத்து விடுத்தார். சுபாஷினி தெளிந்த மனதுடன் அவளது அறைக்கு சென்றுவிட்டதைப் பார்த்த கதிரேஷன் சுசீலாவிடம் திரும்பினார்.

"சுசீ!" என்று‌ அவரது முகத்தைப் பார்த்த போது.. அவர் கலக்கத்துடன் மகளின் அறையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு "கவலைப்படாதே சுசீ!" என்று ஆதரவாக தோளில் கையை வைத்தார்.

சுசீலா "எப்படிங்க கவலைப்படாம இருக்க முடியும்? அவ என்ன சொன்னா பார்த்தீங்களா! எல்லாம் தெரிஞ்சம் இளைய ராஜாவை.." என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

கதிரேஷன் "நம்ம பொண்ணை பெரிய பொண்ணு..‌ அவளுக்கு பக்குவம் வந்துருச்சுனு நினைச்சோம். ஆனா அவ இன்னும் சின்ன பொண்ணாவே இருந்திருக்கா! பக்குவம் வந்த பொண்ணோட மனசை மாத்தறது தான் கஷ்டம்.. இது பிரச்சினை இல்லை சுசீ! நாம வழி நடத்திட்டா போதும்.. அதுல இருந்து வெளியே வந்திருவா.‌. தேவையில்லாத குழப்பம்னு புரிஞ்சுப்பா! அதுனால கவலைப்படாதே!" என்றவளின் முகம் யோசனையில் சுருங்கியது.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த சுசீலா "ஏன்ங்க ஒரு மாதிரி ஆகிட்டிங்க?" என்று விபரம் கேட்கவும், கதிரேஷன் "என் பொண்ணு மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு சுசீ! ஆனா இவளோட பைத்தியக்காரத்தனத்தை இளைய இராஜா எந்த மாதிரி பயன்படுத்தி.." என்பவருக்கு அடுத்து எப்படிக் கூறுவது என்றுத் தெரியவில்லை.

சங்கடமும் பயமுமாக மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

கணவர் கூற வருவது புரிய சுசீலாவும் குறையாத பீதியுடன் கணவரின் முகத்தைப் பார்த்தார். அவரின் மனதில் காயத்ரியை பற்றி எண்ணங்கள் வந்து செல்ல மறுத்தன.

கதிரேஷன் "நீ மெதுவாக சுபா கிட்ட.." என்று முடிப்பதற்குள் சுசீலா "நான் கேட்கிறேன்ங்க.." என்றார்.

கதிரேஷன் "பார்த்து அவ மனசு நோகாம கேளு சுசீ! இப்போ இந்த விசயத்தை கேட்டு முடிச்சுட்டா.. அதுக்கு பிறகு இந்த விசயம் இந்த வீட்டில் மட்டும் இல்ல அவ மனசுக்குள்ளவும் இருக்க கூடாது. அதுனால இப்பவே போய் கேளு.." என்று‌ எச்சரித்து அப்பொழுதே மனைவியை அனுப்பினார்.

கதிரேஷன் கூறியபடி அந்த மருத்துவமனைக்கு இன்னும் நர்ஸ் தேவைப்படுகிறதா.. என்ற விபரங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்த சுபாஷினி அன்னை வரும் ஆரவாரம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

சுசீலா முறுவல் புரிய முயன்றவாறு அவளருகே அமர்ந்து சுபாஷினியின் தலையை வருடி கொடுத்தார். சுபாஷினி சிறு சங்கடத்துடன் புன்னகைக்கவும், சுசீலா "எப்படியோ சுபா! நீ இந்த முட்டாள்தனத்தில் இருந்து வெளியே வர முயற்சி செய்யறீயே அதுவே எங்களுக்கு போதும்.. பழசை எல்லாம் மறந்திரு! அதெல்லாம் தேவையில்லை. உனக்கு இந்த இடைப்பட்ட காலம் அப்படி மறக்க முடியாத எதையும் கொடுக்கலை. நீ அவர் மேலே ஆசைப்பட்ட அவ்வளவு தான்!" என்றாள்.

சுபாஷினி அமைதியாக தலையை ஆட்டினாள். பின் சுசீலா மெதுவாக "நீ இளைய இராஜாவா விரும்பியது.. அவருக்கு தெரியுமா சுபா?" என்றுக் கேட்டார்.

ஒரு கணம் யோசித்த சுபாஷினி.. அவளுக்கும் அவளது பெற்றோருக்கும் இடையேயான சங்கடத்திற்குள் ரோஹீத்தை இழுக்க மனமில்லாது.. "அவருக்கு தெரியாது அம்மா!" என்று மெல்லிய குரலில் கூறினாள்.

அதைக் கேட்டு நிம்மதியுற்ற சுசீலா அடுத்த கணமே கோபம் கொண்டவளாய் "அப்போ நிச்சயம் இது பைத்தியக்காரத்தனமே தான்! இதை நம்பி‌ நடக்க இருக்கிற நல்ல சம்பந்தத்தை வேற கெடுத்து வச்சுருக்கே!" என்று அவளை அடிக்க போனவர், கணவர் கூறியது நினைவிற்கு வரவும் ஓங்கி கையை இறக்கினார்.

பின் "உன் அப்பா சொன்னது சரியா போச்சு! இன்னும் உனக்கு பக்குவமே வரல. இரண்டு வருஷம் வேலைக்கு போ! கொஞ்சமாவது பக்குவம் வரட்டும். அப்பறம் உனக்கு கல்யாணத்தை முடிக்கலாம்." என்றுவிட்டு எழுந்தவர், தனக்கு தானே முணுமுணுத்தவாறு சென்றார்.

அவளது அன்னை செல்வதை கண்களை எட்டாத முறுவலுடன் பார்த்தவள், சிறு பெருமூச்சுடன் விட்ட வேலையை தொடர்ந்தாள். அவளுக்கு அவ்வளவு எளிதாக வேலை கிடைத்து விடவில்லை. இவ்வாறு மேலும் பத்து நாட்கள் கடந்திருந்த வேளையில் பலமுறை முயன்று அவள் எதிர்பார்த்த மருத்துவமனையில் அல்லாது.. ஆகாஷ் வேலை செய்யும் மருத்துவமனையில் தான் வேலை கிடைத்தது. வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை. பலவாறு யோசித்து தயங்கினாள்.

கதிரேஷனிடம் கேட்ட போது.. அவரது மனதில் வேறு எண்ணம் ஓடியது. ஒருவேளை ஆகாஷூம் சுபாஷினியும் வேலை செய்யும் இடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாள். நாளடைவில் விருப்பம் தோன்றலாம்.. என்று நினைத்தார். அதனால் சுபாஷினியும் “அவன் எங்கு இருந்தால் என்ன! அந்த பெரிய ஹாஸ்பெட்டல இரண்டு பேரும் பார்த்துக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் வேற வேற டிப்பார்ட்மென்ட் தானே! அது போக.. அவனைப் பார்த்தால் உனக்கு என்ன பயம் என்றுக் கேட்கவும்.. சுபாஷினி சரி தான் என்று ஒத்துக் கொண்டாள்.

ஏனெனில் சுபாஷினி புற நோயாளி பிரிவில் வேலை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாள்.

அதன்படி.. மருத்துவமனை நிர்வாகமும் இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இருக்கும் பிரிவில்.. புறநோயாளிகளை பிபி, உடல் வெப்பநிலை, எடை பரிசோதித்து.. மருத்துவரிடம் வரிசையாக அனுப்பும் பணியை அளித்தது. அதை சந்தோஷமாக ஒப்புக் கொண்டாள். ஏனெனில் ஆகாஷ் பணி புரிவது குழந்தைகள் பிரிவு!

இன்னும் நான்கு நாட்களில் பணியில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று அழைப்பும் வந்தது. மருத்துவமனைக்கு சொந்தமான நர்ஸ்கள் தங்கும் விடுதியில் சுபாஷினிக்கு தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. இங்கிருந்து செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது தான் சுபாஷினி அந்த சத்தத்தை கேட்டாள்.

அது ஜக்குவார் காரின் ஹாரன் சத்தம்!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

வெகு நாட்களுக்கு பிறகு என்றாலும்.. அவளது இரத்தத்தில் ஊறிப் போன அந்த சத்தத்தை கேட்டதும்.. அவளது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சிலிர்த்தது. தற்பொழுது உறுமலுடன் அவளது வீட்டினை கடக்கும் சத்தம் கேட்டது. எழத் துடித்த கால்களை அடக்கியபடி அமர்ந்திருந்தவளுக்கு.. சப்த நாடியே ஒடுங்கி விடுவது போன்று இருந்தது. உயிர் உள்ள சிலை போல்.. அசையாது அமர்ந்திருந்தாள்.

நமக்குள் எவ்வித உறவும் உணர்வும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவளைப் போக கூறியவன் அவன்! தற்பொழுது.. அவன் வந்திருப்பது தெரிந்து.. இவள் ஓடிச் சென்றுப் பார்த்தால்.. சங்கடம் கொள்வானோ, கோபம் கொள்வானோ அல்லது எச்சரிப்பானோ என்று‌ எண்ணினாள். முதல் இரண்டை விட எச்சரிக்கை செய்துவிட்டால்.. அதை மிகுந்த அவமானமாக உணர்ந்தாள். எனவே எழுந்து ஓட துடித்த கால்களை அடக்கி கொண்டு.. அசையாது அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது அந்த ஹாரன் சத்தம் மீண்டும் கேட்டது. அதுவும் அவளது வீட்டிற்கு முன் நின்று கேட்டது. அதற்கு அர்த்தம் அவளுக்கு புரிந்து தான் இருந்தது. அவன் அவளை அழைக்கிறான். அவளது மனதில் மகிழ்ச்சி நீரூற்று தோன்றியது. ஆனால் தோன்றிய மறுநிமிடமே அது அடக்கியது.

ஏன்?

எதற்கு அவளை அழைக்கிறான்?

காரணம் என்ன?

அவளது காதல் கொண்ட மனது அதற்கு சாதகமாக காரணத்தை யோசித்தது.. ஆனால் அவளது முதல் காதல் தோல்வியால் துவண்ட மனது.. அதிகம் ஆசை கொள்ளாதே நொந்து போவாய் என்று எச்சரித்தது.

மீண்டும் பலமாக ஹாரன் ஒலி தொடர்ந்து கேட்கவும் எழுந்து சென்று விடலாமா என்று யோசிக்கையில்.. ஹாரன் நின்று காரை முடக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அடுத்து கார் எதன் மேலே இடிக்கும் சத்தம் கேட்டதும்.. அதிர்ந்தவளாய் அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாமல் செல்ல வேண்டாம் என்று அவளது மூளை இட்ட கட்டளையை அவளது மனம் ஒதுக்கியபடி.. வெளியே ஓடிச் சென்றுப் பார்த்தாள்.

அங்கு அந்த கருப்பு நிற ஜாக்குவார் கார் அவளது வீட்டின் மதிற்சுவற்றில் இடித்துக் கொண்டு நின்றிருந்தது. அதைப் பார்த்து இன்னும் அதிர்ந்து நின்றாள். மீண்டும் சரித்திரம் திரும்புகிறதோ என்று ஒரு எட்டு எடுத்து வைக்க நினைக்கையில் ஒட்டுநர் இருக்கையில் இருந்த கண்ணாடி இறங்கியது. பின் சிறிது நேரத்திலேயே வேகமாக கண்ணாடி மேலே ஏறியது. அடுத்த கணம் மதிற்சுவரில் இடித்து்க கொண்டு நின்றிருந்த கார்.. எதுவும் நடவாதது போல்.. சற்று பின்னால் சென்று திரும்பி.. பின் மலைப் பாதையை நோக்கி வேகமெடுத்தது.

அவளைப் பலவாறு தவிக்கவும், துடிக்கவும் வைத்துவிட்டு அந்த கருப்பு ஜாக்குவார் கார்.. மலை வளைவு பாதையில் ஏறிக் கொண்டிருக்க.. அந்த கார் கேட் திறந்து உள்ளே செல்வது வரை பார்த்தவள், அடுத்த நொடியே வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல்.. அந்த மாளிகையை நோக்கி ஓடினாள்.

மூச்சு வாங்க ஓடி வந்த சுபாஷினி பெரிய வாயிற் கதவை தாண்டியவள், அடுத்த அடி வைக்க முடியாமல் நின்றுவிட்டாள்.

ஏனெனில் கரங்களை பின்னால் கட்டியவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக் கொண்டு மாடிபடிகள் தொடங்கும் இடத்தில் நின்றுக் கொண்டு அவளைத் தான் அழுத்தமான பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அழுத்தமான பார்வையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும்.. சுபாஷினிக்கு கோபமும் அழுகையும் ஒன்றாய் வந்தது. இத்தனை நாட்களாய் அவள் கடந்த வந்த கடுமையான நாட்களை நினைத்துப் பார்த்தாள்.

இனி வராதே என்று அவன் கூறிய பின்.. ஏமாற்றம் தாங்க முடியாமல் துயரத்துடன் வீட்டிற்கு ஓடியவள்.. அதுநாள் வரை அப்படியொரு துக்கத்தை சந்தித்தது இல்லை. மனசை தேற்ற முடியாமல் இருந்தவளின் வேதனை அவளுடனே முடிந்திருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் ஆகாஷின் பெற்றோர் வந்த போது.. அவளது பெற்றோருக்கும் தெரிய வரவும், ஒரே மகளின் வாழ்வில் விதி விளையாடிய விளையாட்டை கண்டு அவர்கள் எத்தனை வேதனை கொண்டார்கள். அதை எல்லாவற்றையும் விட.. அவளது காதல் பைத்தியக்காரத்தனமாக அல்லவா பார்க்கப்பட்டது. அவளது மனம் தெரிந்து.. அவ்வாறு எண்ணம் தனக்கு இல்லை.. என்றுக் கூறி.. அவளைப் போகச் சொல்லியிருந்தாலாவது.. தனது காதலை பைத்தியக்காரத்தனம் என்று அவளே ஒத்துக் கொண்டிருப்பாள். ஆனால்.. அவனது மனதிலும் சிறு சலனம் தோன்றியதை ஒத்துக் கொண்டவன், ஆனால் அவளது காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றுக் கூறி அல்லவா போகச் சொல்லிவிட்டான். அதனால்.. அவள் பட்ட துயரம் சொல்லி மாளாது.. கைக்கு கிடைத்த சொர்க்கம் எட்டி உதைத்தது போன்று உணர்ந்தாள்.

இத்தனைக்கும் காரணமானவன்.. எவ்வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாது.. அதே மாறாத அழுத்தமான பார்வையுடன் நிற்கவும், அழுகையும் கோபமும் போட்டி‌ போட அவன் முன் சென்று நின்றாள்.

அவளது மனதில் இளைய ராஜா என்ற மரியாதையும், மதிப்பும் மற்றும் பயமும் மறைந்திருந்தது. தன்முன் நிற்பவன்.. தனது மனதை கொள்ளை கொண்டவன், அந்த காதலை ஏற்காதவன் என்ற எண்ணமே தோன்றியது

“இங்கே எதுக்கு வந்தீங்க? இன்னும் இவ உங்களைக் காதலிச்சுட்டு தான் இருக்காளா? இல்லை மறந்துட்டாளானு வேடிக்கை பார்க்க வந்தீங்களா! என் மாளிகைக்கு தானே நான் வந்தேன்னு.. சொல்லி சமாளிக்க பார்க்காதீங்க! என்னை எப்படிக் கூப்பிடுவது என்று உங்களுக்கு இன்னும் மறக்கலை. என்னை எதுக்கு கூப்பிட்டிங்க? அதுதான் எல்லாம் முடிஞ்சுருச்சுனு என்னைத் துரத்தி விட்டுட்டிங்களே!” என்றுப் படபடவென பேசியவளின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடின.

சுபாஷினி பேசி முடிக்கும் வரை.. பார்த்துக் கொண்டிருந்தவன், பின் நிதானமான குரலில் “ம்ம்! நான் உன்னை ரொம்ப ஹர்ட் செய்திருக்கேன். இன்னும் செய்ய போறேன்.” என்றான்.

சுபாஷினி குழப்பத்துடன் பார்க்கவும், ரோஹீத் “எனக்கு ஒரே ஒரு பதிலை மட்டும் சொல்லு! இப்போ என்னைப் பார்த்ததில் உனக்கு சந்தோஷமா.. இல்லை நான் வந்தது பிடிக்கலையா!” என்றுக் கேட்டான்.

ரோஹீத் கூறியதைக் கேட்டு வாய் வார்த்தை மறந்தவளாய் திகைத்து அவனைப் பார்த்தாள்.

ரோஹீத் “ஒகே! என் நிலைமையை சொன்னா.. உனக்கு பதில் சொல்வது ஈஸியா இருக்குனு நினைக்கிறேன். பட் எந்த பதிலாக இருந்தாலும் அது விருப்பம்!” என்றவன், சிறு பெருமூச்சை இழுத்து விட்ட பின் “நான் கடமைக்கு கட்டுப்பட்டு.. உன் காதலை நிராகரிச்சேன். அந்த நிலைமை இன்னும் அப்படியே தான் இருக்கு! ஆனா நினைவிருக்கா.. முதல்ல உன் கூட விளையாடறது எனக்கு சந்தோஷமா இருக்கிறதாலே இங்கே வந்துட்டு இருந்தேன். அப்போ நிச்சயமா.. உன்னைப் பற்றி நினைச்சு பார்க்கலை. அது உன்னோட உணர்வுகளை தூண்டும் நினைச்சு பார்க்கலை. அது நான் செய்த தப்பா இல்லை.. சரியானு எனக்கு தெரியலை.”

“இப்பவும்.. கடமையை சுமக்கிறது எனக்கு பெரிய பாரமாக இருக்கு! எனக்கு மூச்சு திணறுது. என்னால முடியலை. ஆனா எல்லாத்தை விட்டுட்டு ஓட முடியலை. கடைசில என் தாத்தா ஜெயிச்சுட்டார். இந்த இராஜ பரம்பரை இரத்த வாரிசு நான் என்று நிரூபிச்சுட்டேன். இந்த பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆசை கொண்டவனாகவும்.. ஆகிட்டேன். அதுனால.. மனசுல பாரம் ஏறிட்டே இருக்கு. மூச்சு முட்டி செத்துருவேனோன்னு தோணுது. எனக்கு கொஞ்சம் நிம்மதி வேணும் சுபா.. அதை நீ எனக்கு தருவியா? நான் இப்படி வருவதால் உன் மனசு சலனப்படும் என்று எனக்கு தெரியும். எனக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும்.. இப்போ இளைய ராஜாவா இல்லாம காதலனா நினைச்சு.. திட்டினே பாரு! உன்னால தான் தர முடியும். எனக்கு அதை மட்டும் தருவியா! ஆனா நான் உனக்கு முழுசா கிடைப்பது கஷ்டம் தான்! ஆனா எனக்கு பொறுமை ரொம்ப குறைவு! அது நல்லதா கெட்டதானு தெரியலை.” என்றவனின் முகத்தில் இருந்த கம்பீரம் சற்று குறைந்து குன்றல் தோன்றியது.

இமையை ஒரு கணம் மூடித் திறந்தவன், தன்னைக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவனது முகத்தில் சிறு கசந்த முறுவல் தோன்றியது.

பின் “எஸ் சுபா! இது பக்கா சுயநலமா தான் இதைக் கேட்கிறேன். என்னை லவ் செய்வியா சுபா! ஐ ப்ராமிஸ் யு நான் உன்னை டச் கூட செய்ய மாட்டேன். ஆனா என் கூடப் பழகுவதால்.. உன் மனசு ரொம்ப பாதிக்கப்படும் என்று எனக்கு தெரியும். அதுனால தான் முடிவை உன் கிட்ட விட்டுட்டேன். இப்போ பதில் சொல்லு! உன் பதில் என்னவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கிறேன்.” என்றான்.

சுபாஷினி மேலும் குழப்பமும் அதிர்ச்சியுமாக பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து.. “நல்லா யோசிச்சு முடிவை சொல்லு! உனக்கு இது பிடிக்கலைன்னா.. நான் இனி இங்கே வர மாட்டேன். உனக்கு ஒகேனா.. நான் வருவதை நிறுத்த மாட்டேன். நம்ம பழக்கத்தை தூய நட்பு என்று பொய் சொல்ல விரும்பலை. ஆனா நீ என் கூட இருக்கணும். கால முழுவதுக்கும் இருக்கலாம். ஆனா.. மற்றபடி எதையும்‌ தரும் நிலைமையில் நான் இல்லை.” என்று தலை குனிந்து நின்றான்.

ரோஹீத் கூறியதைக் கேட்டு.. முற்றிலும் அதிர்ந்தவளாய் சுபாஷினி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் என்ன சொல்கிறான் என்றுப் புரிந்து தான் சொல்கிறானா! அவனைக் காதலிக்க சொல்கிறான். ஆனால் அவளுக்கு அவன் கிடைப்பது கஷ்டம் என்றுத் திட்டவட்டமாக கூறுகிறான். அதாவது அவனுடன் நேரத்தை கழிக்க கூறுகிறான். முன்பும் இதைத் தான் கூறினான். ஆனால் அதில் தூய்மை இருந்தது. தற்பொழுதில் காதல் இருக்கிறது. ஆனால் இரண்டிலும்.. அவனது நிம்மதிக்காக கேட்கிறான்.

ஆனால் அவளது காதலின் நிலைமை! அவளது காதல் கொடியில் மலர்ந்த மலரை போன்றது. ஒன்று அதைப் பறித்து கையில் வைத்திருக்க வேண்டும்.. அல்லது பறித்து காலில் போட்டு மிதித்திருக்க வேண்டும். இது இரண்டும் அல்லாது கடந்தாவது சென்றிருக்க வேண்டும். ஆனால் அவன் அதை கொடியில் இருந்து பறிக்காமல், கடந்தும் செல்லாமல் இரசிக்க மட்டும் அல்லவா கேட்கிறான். இப்படிப் பார்த்து இரசித்தால்.. அவனுக்கு பறித்து கையில் வைத்துக் கொள்ள மனம் நினைக்குமா! அவனது கையில் சேர்ந்திட அந்த மலர் ஏங்காத!

மலர்விழியின் நிலையை போல்.. அவள் அழித்து போக மாட்டாள்.

காயத்ரியின் நிலையை போல்.. தாழ்ந்து போக மாட்டாள்.

ஆனால் உருகி மருகிய அவளது காதல் அவளுக்கு இப்படியா கிடைக்க வேண்டும் என்று இருந்தது.

காதலுக்கு உயிரையே கொடுப்பேன்.. காதலின் முன் அனைவரும் துச்சம் என்ற வசனங்களையே அவள் கேட்டிருக்கிறாள். அவை பொய்யோ என்று அவளது மனம் அவளிடம் கேட்டது. அது பொய் என்பதால் தான்.. அவனால்.. அவனுடைய குடும்ப கௌரவத்தை உதறி எறிந்துவிட்டு வர முடியவில்லை. அவளால்.. அவனது துயரை புரிந்துக் கொண்டு.. அவளுடைய காதலை புரிந்துக் கொண்டு ஏற்றுக் கொண்டதே போதும்.. என்று நினைக்க முடியவில்லை.. என்று அவளது மனதில் பல்வேறு கேள்விகள் ஒலித்துக் கொண்டிருந்தன.

அவளது மனதில் எண்ணியவைகள்.. அவளது முகத்தில் பிரிதிபலித்ததோ.. அவளைப்‌ பார்த்தவாறு மெல்ல பின்னெட்டுக்களை‌ வைத்து பின்னால் சென்ற ரோஹீத், “நல்லா யோசிச்சு முடிவெடு! மறுபடியும் சொல்றேன். உன் முடிவு எதுன்னாலும் ஒகே! உன்னை நான் நிர்பந்திக்கவில்லை. ஆனா நான்.. எனக்கு.. நீ..” என்று வார்த்தை வராமல் திணறியவன், சிறு மூச்சை இழுத்துவிட்ட பின்.. படிக்கட்டில் ஏறி மாடியில் இருந்த அவனது அறைக்கு சென்றான்.

சுபாஷினி காலில் வேரூன்றியது போல் அசையாது நின்றிருந்தாள்.

ரோஹீத் அங்கிருந்து சென்றாலும்.. ஏனோ‌ அவளுக்கு..‌ அவளது முன் நின்று மீண்டும்‌ மீண்டும் சற்றுமுன் பேசியதை கூறிக் கொண்டிருப்பது போன்று இருந்தது.

அப்பொழுது அவளுக்கு அருகில் வந்த.. மாரிமுத்து “ஐயா! சங்கடப்படறதை பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு! நம்ம எஜமான் இல்லை.. நம்மளோட கடவுள் அவர்! நமக்கு.. வேண்டியதை தரவங்க அவர்! அவர் உன்கிட்ட ஒண்ணு கேட்கிறார்ன்னா.. நீ கொடுத்து வச்சவ தான்!” என்றார்.

மாரிமுத்து கூறியதைக் கேட்டு குழப்பத்துடன் பார்த்த சுபாஷினிக்கு.. ஏதோ முரணாக தெரிந்தது. அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த சாந்தி “என்ன பேசறீங்கன்னு புரிஞ்சு தான் பேசறீங்களா! இது ரொம்ப தப்புங்க!” என்றாள்.

அப்பொழுதும் சுபாஷினிக்கு சற்று நேரம் என்னவென்று புரியவில்லை.

சாந்தி தொடர்ந்து “கடவுள் கேட்டா கையை வெட்டி கையில் கொடுத்திர சொல்றீங்களா!” என்று அவரும் அதிர்ச்சியுடன் கேட்டார்.

உடனே மாரிமுத்து “பளார்னு கன்னத்தில் ஒண்ணு விட்டேன்னு வை.. நான் என்ன சொல்றேன்.. நீ அதை எப்படி மாத்தி பேசி.. அந்த பொண்ணு மனசை மாத்த பார்க்காறே! நீ இவ்வளவு கவலைப்படற அளவுக்கு எல்லாம் இல்லை. அந்த பொண்ணு சந்தோஷமா ஒத்துக்கும். ஐயாவுடன் சேருவதுக்கு இதைத் தவிர வேற வழியில்லை. அந்த பொண்ணு.. இளைய ராசாவை லவ் பண்ணுது. அந்த காதலுக்கு.. இந்த பொண்ணு என்ன வேணுன்னா பண்ணும்.” என்றான்.

உடனே சாந்தி “இப்போ தான்.. அந்த பொண்ணு ராசாவை லவ் செய்வது உனக்கு தெரியுமா! அப்பவே தெரியும் தானே.. அப்போ எல்லாம் விரட்டி விட்டுட்டு.. இப்போ வந்து.. ஐயா கேட்டதிற்கு அந்த பொண்ணை ஒத்துக்க சொல்றீயா! நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு.. அதை மறந்திராதே!” என்றுப் பொரிந்தார்.

மாரிமுத்து “ஏய் போ உள்ளே! இது பெரிய இடத்து விசயம்.. இதுல நாம தலையிட கூடாது.” என்று சாந்தியை இழுத்துக் கொண்டு சென்றார்.

சாந்தி “வேண்டாம் சுபா ஒத்துக்காதே..” என்று கணவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவாறு கத்தினாள்.

சுபாஷினி நின்ற இடத்தில் இருந்து அசைந்தாள் இல்லை. அவளது கண்கள் எங்கோ வெறித்தன. மாரிமுத்து கூறியவை.. அவளது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவன் என்ன கூற வருகிறான் என்றுத் தற்பொழுது புரிந்தது. ரோஹீத் பசு என்று குறிப்பிட்டதை மாரிமுத்து மாடு என்றுக் குறிப்பிடுக்கிறான். இரண்டும் ஒன்று தான்.. ஆனால் வார்த்தை உபயம் மட்டுமில்ல எண்ணங்களும் வேறு அல்லவா!

கனமாய் கால்கள் கனக்க.. நின்றிருந்தவளின் மனதில்.. பல்வேறு எண்ணங்கள் தோன்ற.. ஒரு முடிவை எடுத்தவளாய்.. மெல்ல படியேறி.. ரோஹீத்தின் அறையை நோக்கி சென்றாள்.

அங்கு முதுகை காட்டியவாறு சன்னலுக்கு வெளியே தெரிந்தவற்றை வெறித்தவாறு நின்றிருந்தான். சுபாஷினி கதவிடம் வரவும், அந்த ஆரவாரம் கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் தவிப்பும்.. நிம்மதியும்.. மகிழ்ச்சியும் ஒருங்கே தோன்றியது.

ரோஹீத் “வா சுபா! வந்துட்டியா..” என்று‌ அழைத்தான்.

சுபாஷினி மெல்ல உள்ளே வந்து அவன் முன் வந்து நின்றாள்.

அவளது முகத்தை கண்டு கசந்த முறுவலை தந்த ரோஹீத் “என்னால் முடியல சுபா! என்னால நீ இல்லாம இருக்க முடியலை சுபா! முதல்ல ஒரு சந்தோஷம் தரும் விசயமா இதைக் கேட்டேன். ஆனா இப்போ அது காதலா அது தெரிந்தது.” என்றான்.

சற்றுமுன் தான் நினைத்தையே ரோஹீத் கூறவும்.. மனம் படபடக்க.. அவனைப் பார்த்தாள்.

ரோஹீத் தொடர்ந்து “நான் என்ன செய்தாலும்.. உன் நினைவு துரத்திட்டே வந்துச்சு! நீ என்னருகே வேணுன்னு என் மனசு துடிச்சுது. ஆனா எனக்கு தெரியும்‌.. உன் கூட என்னால் சேர முடியாது. சேரவும் விட மாட்டாங்க! மலருக்கு நேர்ந்த கதி உனக்கு நேரும் என்றுப் பயந்தேன். அன்ட் எஸ் ஒப்பனாவே ஒத்துக்கிறேன். ஒத்துக்கிட்ட கமிட்மென்ட்டை விட்டு.. என்னால் வர முடியலை. ஆனால் என் மனசுல உன் ஞாபகம் அரிச்சுட்டே இருந்துச்சு! அதுதான் உன்னைப் பார்க்க ஓடி வந்தேன். ஆனா நீ எப்படி எடுத்துப்பேன்னு படபடன்னு இருந்துச்சு! நான் ஹாரன் அடிச்சும் நீ வெளியே வராமல் இருக்கவும், என்னால தாங்கிக்க முடியலை. அதனால் தான் காரை உன் வீட்டு மதிற்சுவற்றில் வேண்டும் என்றே முட்டினேன். நீயும் வந்தே! ஆனா அங்கேயே நின்னுட்டே.. மனசு உடைஞ்சு போய்.. மாளிகைக்கு வந்தேன். தலையே வெடிச்சு போய் வந்த எனக்கு.. நீ மட்டும் தான் ஆறுதல் என்று வந்த போது.. நீ என் அருகே வராது போகவும், எனது நெஞ்சே வெடிச்சற மாதிரி இருந்துச்சு! ஆனா சுபா தேங்க்ஸ் சுபா நீ வந்துட்டே! நீ எனக்காக வந்தா.. இன்னொரு விசயத்தையும் சொல்லலாம் என்று இருந்தேன். ரேஷ்மாவுடனான மேரேஜ்ஜை நிறுத்திட்டேன். என்னால்.. இன்னொரு பெண் கூட வாழ முடியாது சுபா!” என்று அவள் அவனுடன் இருக்க சம்மதித்து.. வந்துவிட்டதை கண்டு மகிழ்ந்து அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான்.

ஆனால் சுபாஷினி சட்டென்று பின்னே எட்டு வைத்து நகர்ந்து சென்றாள்.

ரோஹீத் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

சுபாஷினி “இப்போ சொன்னதை ஏன் முதலிலேயே சொல்லுலைங்க ஸார்..” என்று மெல்லிய குரலில் தலையை குனிந்தவாறு கூறினாள்.

ரோஹீத் புரியாமல் “சுபா!” என்றழைக்கவும், சுபாஷினி “நம்ம காதல் நிறைவேறாதுனு தெரிந்தும்.. லவ் செய்யலானு கூப்பிடறதுக்கு முன்னாடி.. இப்போ சொன்னதை.. ஏன் சொல்லுலை ஸார்!” என்றுக் கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

ரோஹீத் இன்னும் புரியாமல் பார்க்கவும், மெல்ல நிமிர்ந்த சுபாஷினியின் கண்களில்.. கண்ணீரும் மகிழ்ச்சியும் இருந்தது.

“இப்போ கூறியதைக் கேட்டு எனக்கு எப்படி இருந்தது தெரியுமா! காதலிக்கிற ஒரு பெண் எதைக் கேட்டு மனம் நிறைந்த சந்தோஷத்தை அடைவாளோ அதைத் தான் சொல்லியிருக்கீங்க! நான் இல்லாமல் நீங்க தவிக்கறீங்க.. என் கூட மட்டுமே ஆறுதலை உணருறீங்கனு சொன்னீங்க! இதைத் தவிர வேற என்ன வேண்டும் எனக்கு! என் காதலுக்கு இது போதும் ஸார்! என் காதலுக்கு நியாயம் செய்துட்டிங்க!” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

பின் அவனை நேராக பார்த்து கையெடுத்து கும்பிட்டு “நான் வருகிறேன் ஸார்! நீங்க என்னைத் தேடியிருக்கீங்க.. என்பதே எனக்கு போதும் ஸார்!” என்றுத் திரும்பிச் செல்ல துவங்கினாள்.

கதவு வரை சென்றவள், திரும்பி ரோஹீத் பார்த்த சுபாஷினி “ஏன் ஸார் முதல்ல என்னை லவ் செய்த விசயத்தை சொல்லுலை?” என்று‌ மீண்டும் கேட்டவளின் குரல் கனத்தது.

“உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா! எனக்கு ஆறுதலாக காதலை கொடு.. பதிலுக்கு அதற்கு எதிர்காலத்தை எதிர்பார்க்காதீங்கனு கேட்டிங்க தானே.. அதுக்கு சம்மதம் சொல்ல தான் படியேறி வந்தேன். ஏன்னா..‌ உங்களை காதல் செய்வது எனக்கு சேவை செய்யற மாதிரி! ஆனா முழுமையான எதிர்காலம் இல்லைன்னு வருத்தம் என் நெஞ்சை அறுத்தது உண்மை ஸார்! ஆனாலும் எனது காதல் விதி இதுதான்‌ என்று அதை ஏத்துக்கிட்டு வந்தேன்ங்க!” என்றவள்‌ மீண்டும் கையெடுத்து கும்பிட்டாள்.

“மிக்க நன்றிங்க! உங்களை காதலிக்கிறவளுக்கு நியாயம் செய்துட்டிங்க! நெஞ்சில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவிட்டிங்க! உங்க காதலை சொல்லி.. எனக்கு கர்வத்தை கொடுத்துட்டிங்க! இந்த சமஸ்தானத்தின் இராஜாவாக போகிறவரின் காதலை பெற்றவள் என்ற திமிரில் சொல்கிறேன். இந்த மாதிரி முறையற்ற.. எதிர்காலமில்லாமல் என்னால் உங்க கூட இருக்க முடியாது. உங்க கூட எல்லாரும் வாழ்த்த வாழ ஆசைப்படறேன். என் காதல் வேண்டும் என்று‌ என்னைத் தேடி இப்போ வந்திருக்கீங்க! இதே மாதிரி.. நான் வேண்டும் என்று வந்து என்னைக் கூட்டிட்டு போங்க! நான் காலமெல்லாம் காத்திருப்பேன். என்னோட காதல் உங்க கையில் சேருமா இல்லை கொடியிலேயே கருகி விடுமா என்பது நீங்க தான் முடிவு செய்யணும். நானும் என் மேரேஜ்ஜை நிறுத்திட்டேன். என்னாலும் இன்னொரு ஆணுடன் வாழ முடியாது.” என்றுவிட்டு.. திரும்பியும் கூடப் பாராமல் கடகடவென படியிறங்கினாள்.

ரோஹீத் ஆணி அடித்தாற் போன்று அசையாமல் நின்றிருந்தான்.

மனப்பாரமும்.. நிம்மதியும் ஒருங்கே தோன்றுமா! அந்த அதிசயம் நிகழுமா!

நிகழும் என்பதற்கு சாட்சி.. தற்போதைய சுபாஷினியின் மனநிலை!

ரோஹீத்தின் காதலை பெற்றதில் நிம்மதியும்.. அவனது கோரிக்கையை மறுத்துவிட்டு வந்ததில் மனப்பாரமும் கொண்டவளாய் சுபாஷினி படியிறங்கி கொண்டிருந்தாள்.

அப்பொழுது “சுபா!” என்றழைப்பில் பிரெக் அடித்தாற் போன்று நின்றுவிட்டாள்.

மெல்ல திரும்பிப் பார்த்தாள்.. மேல் படிக்கட்டில் ரோஹீத் நின்றிருந்தான்.

ரோஹீத் “நான் உன் கூடப்‌ பேசணும். மேலே வா..” என்றான்.

அதற்கு சுபாஷினி மறுப்பாக தலையசைத்து “நீங்க இறங்கி வாங்க..” என்றாள்.

ரோஹீத்தின் விழிகள் இடுக்கியது.

பின் ரோஹீத் “உன்னை லவ் செய்யறேன்னு சொன்னதும்..‌ நான் உன் மனசுல தரம் இறங்கி போயிட்டேன் போல! அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது.” என்றவனின் குரல் நக்கல் இழைந்தோடியது.

அதற்கு சுபாஷினி “ஆமாங்க! இன்னும் ஆழமா என் மனசுல இறங்கிட்டிங்க! இதுவரைக்கும் என்னோடது ஒருதலைக் காதல்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்போ நீங்களும் காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும்.. இன்னும் என்னோட காதலுக்கு ஆழம் கூடிருக்கு..” என்றாள்.

ரோஹீத் “நான் என்ன சொல்றேன்னு தெரிந்தும்.. நல்லா பேசி‌ சமாளிக்கிற சுபா! நீ சொன்ன மாதிரி.. இது கண்டிப்பா என் காதல் கொடுத்த திமிர் தான்!” என்றவனின் உதட்டில் கண்ணை எட்டாத முறுவல் தோன்றியது.

சுபாஷினி தலைக் குனிந்தவாறு “நான் மேலே ஏறி வந்தா..‌ உங்க மேலே பித்தா இருக்கிற நானே கன்வின்ஸ் ஆகிருவேன்.” என்றவள், பின் நிமிர்ந்து “அப்படி ஆகிட்ட.. நாம கண்டிப்பா சந்தோஷமா இருப்போம். ஆனா மற்றவங்க பார்வையில்.. என்னோட கௌரவம் போகுமே ஸார்! இப்போ கூட மாரிமுத்து என்ன நினைச்சார்னு தெரியுமா! நீங்க உங்க கடமையை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நினைக்கும் போது.. நான் என் கௌரவத்தை விட்டுக் கொடுக்கணுமா!” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.

அவளின் மீதிருந்த பார்வையை அகற்றாது சில கணங்கள் அழுத்தமாக பார்த்த ரோஹீத் “நீ என்னை லவ் செய்யறீயா சுபா?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி ‘இப்படி கேட்கணுமா!’ என்பது போல் பார்த்தவளின் பார்வையை கண்ணீர் மீண்டும் தடுத்தது.

ரோஹீத் “நானும் காதலிக்கிறேன்னு சொன்னதிற்கே.. இப்படி சந்தோஷப்படறீயே! என் காதலை அனுபவிக்க வேண்டாமா சுபா! உனக்கு எப்படியோ.. நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா! ஆனா.. நீ நம்ம காதலை வெட்ட வெளிச்சமாக்க சொல்றே! என் கடமையை விட்டுக் கொடுத்து.. உன்னோட கௌரவம் காக்கணுன்னு சொல்றே! நான் ஒரு பிரைவேட் பர்ஷன் என்று உனக்கு தெரியுமா சுபா! என் லவ்வரா உனக்கு.. அது தெரிஞ்சுருக்கணும். இன்னும் என்னைப் பற்றி நிறையா தெரிஞ்சுக்கணும் சுபா! நானும் உன்னைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்.” என்றான்.

ரோஹீத் பேசுவதைக் கேட்ட சுபாஷினியின் மனதிலும் உடலிலும் பல மாற்றங்களை உணர்ந்தாள். அவளது கால்கள் ஓடத் துடித்தன. ஒன்று.. அவனிடம் ஓட வேண்டும்.. அல்லது இங்கிருந்து ஓட வேண்டும்.

ரோஹீத் “ஒகே! நாம் வாய் வார்த்தையால் தான் காதலை சொல்லியிருக்கோம். ஒருவரை ஒருவர் காதலிப்பதை உணர மட்டும் தான் செய்திருக்கோம். அதுக்கே.. எனக்கு நீ எனக்கு எப்போதும் வேண்டும் என்று இருக்கு! உனக்கும்.. அப்படித்தான் என்று எனக்கு நல்லாவே தெரியும். ஆனா.. நாம் இன்னும் ஒருத்தரோட காதலை ஒருத்தர் அனுபவிச்சதில்லை. அதுனால தான்.. என்னோட கடமையை நானும்.. உன்னோட கௌரவத்தை நீயும் விட்டுக் கொடுக்காம இருக்கோம். நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா! என்ன சொன்னே.. நீ வேண்டும் என்றால்.. நான் உன்னைத் தேடி வரணும் என்றுச் சொன்னே தானே! இப்போ நான் சொல்றேன்.. நான் வேண்டும் என்று‌.. நீ என்னைத் தேடி வருவே..” என்றான்.

தற்பொழுது.. சுபாஷினி விக்கித்தவளாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் கூறுவது.. புரிந்தும் புரியாமலும் ஆட்டம் காட்டியது.

அவளது முகத்தை பார்த்தவன், “என்ன செய்ய சுபா! இந்த குடும்பத்தோட ஊறிப்‌ போன.. அதிகாரமும் குடும்ப திமிரும் எனக்கும் இருக்கு இதெல்லாம் எனக்கு வந்துட கூடாதுனு தான் ஒதுங்கி ஒதுங்கி போனேன். இங்கிருந்து போன நாளில் அங்கே என்ன நடந்தது? நான் எப்படி இருக்கேன்? ஏன் இப்படிக் கேட்டேன்? என்று கேட்காம.. நான் சொல்ல வருவது புரியாம.. என்கிட்டவே சவால் விட்டுட்டே தானே! ஒகே பார்த்தாலாம்.” என்றுவிட்டு அகன்றான்.

ரோஹீத் கூறியதைக் கேட்டு.. அவள் எதோ தவறு புரிந்துவிட்டது புரிந்தது. ஆனால் அவள் பேசியதிலும் தவறில்லை. புரிந்துக் கொண்டதில் தான் தவறோ என்று பதறினாள். அவளிடம் பேசிவிட்டு அவனது அறை இருக்கும் காரிடருக்குள் நுழைந்தவனை தடுக்க இயலாது ஸ்தம்பித்து நின்றாள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"தூண்டிலா! நீ ஊஞ்சலா!" கதையை அமேசானில் ப்ரீ கொடுத்திருக்கிறேன்.

இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படித்து தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்..

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13

சுபாஷினியிடம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்த ரோஹீத் ஓய்ந்து போய் அமர்ந்தான். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு இதம் தேட வந்தவனுக்கு இங்கு மேலும் மனவுளைச்சல் அதிகமானது.

சுபாஷினி கேட்டது போல்.. அங்கு வரும்போது.. தனது காதலை முதலில் சொல்ல தான் வேகமாக வந்தான். ஆனால் கடந்த சில நாட்களாக மைசூர் மாளிகையில் அவன் சந்ததித்த நிகழ்வுகளாலும் மற்றும் கேட்ட பேச்சுக்களாலும்.. வரும் வழியில் முழுக்க சுபாஷினியின் நினைவுகளோடு.. இதைப் பற்றியும் நினைத்துக் கொண்டே வந்தான். அதனால் சுபாஷினியை பார்த்ததும்.. அவனது மனவுளைச்சலை தீர்க்க வேண்டி முதலில் அவனுக்கு நிறைவு பெறாத காதலை தர முடியுமா என்றுக் கேட்டு விட்டான். கேட்ட பிறகே கேட்டதை உணர்ந்தவனுக்கு ஏனோ அவனது மனம் அவள் அதற்கு என்ன பதில் கூறுவாள் என்று எதிர்பார்த்தது. எனவே அவளது பதிலுக்காக காத்திருந்தான். அவள் அவனது அறைக்கு வரவும்.. மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். சுபாஷினி.. அவன் கேட்டதிற்கு ஒத்துக் கொண்டிருந்தாலோ அல்லது கௌரவத்தை விட்டு வர முடியாது என்று கூறியிருந்தாலோ.. கண்டிப்பாக மகிழ்ச்சி கொண்டிருப்பான். ஆனால் இவை இரண்டு அல்லாது.. அவனை நிர்பந்திப்பது போன்று கேட்கவும், அவனுள் இருந்த ஊறி போன இராஜ இரத்தம் தனது வேலையை காட்டியது. அவளை விட்டு விட அவனது காதல் மனம் எப்பொழுதும் இடம் கொடுக்காது. எனவே அவளே தன்னைத் தேடி.. அவன் கேட்டதிற்கு ஒத்துக் கொண்டு வருவாள்.. என்றுக் கூறிவிட்டு வந்துவிட்டான்.

ஆனால் இதோ.. அவ்வாறு பேசியதிற்கு வருத்தியவாறு அமர்ந்திருக்கிறான்.

அவன் நினைத்துக் கொண்டு வந்தது என்ன! இங்கு நடந்தது என்ன!

இருகரங்களையும் சிகைக்குள் விட்டப்படி.. அமர்ந்தவன் இங்கு இருந்து சென்ற பின் மைசூர் மாளிகையில் நடந்தது அனைத்தும் நினைத்துப் பார்த்தான்.

ரோஹீத் எதை எண்ணி.. காலில் அடிப்பட்டதும்.. அங்கிருந்து வலியை பொருட்படுத்தார் வந்தானோ.. அது தான் அங்கு நடந்தது.

அவனது அறையே சிறு மருத்துவமனையாகியது. அவனைக் கவனித்துக் கொள்ள.. ஆண் செவிலியர் ஒருவர் பெண் செவிலியர் ஒருவர்! அவனுக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவிற்கு என்று சிறந்த தனி உணவியல் நிபுணர் நிறுவப்பட்டு.. அவரே சமைத்து கொடுத்தார்.

குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஒரு பக்க சுவற்றில் முக்கால்வாசி பாகத்தில் இருந்த மினி தியேட்டர் போன்ற தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹீத் அங்கு வந்த அரை நாள் ஆகிவிட்டது. ஆனால் அவனால் இருப்பு கொள்ள முடியவில்லை. எப்பொழுது படுக்கையில் இருந்து எழுந்திரிப்போம் என்று ஆகிவிட்டது. அவன் ஏதோ மரணப்படுக்கையில் இருப்பது போல்.. அவனிடம் துக்கம் விசாரித்தார்கள். அவனிடம் சிறு அசைவு தோன்றினாலும்.. செவிலியர் அவனருகே வந்து பார்த்தார்கள். அவனுக்கு மூச்சு முட்டியது. சிகைக்குள் கரங்களை விட்டு “ஆ..” என்று கத்த வேண்டும் போன்று இருந்தது.

இவற்றில் இருந்து தப்பிக்க சென்று ஒரு பெண்ணின் உணர்வு பிடியில் மாட்டிக் கொண்டதில்.. மீண்டும் இந்த சிறைக்கு கொண்டு வந்த விதியை நொந்தபடி அமர்ந்திருந்தான்.

அப்பொழுது ரேஷ்மா உள்ளே வந்தாள். அவளுடன் கூடவே அவளது உதவி பெண்ணும் வந்தாள். இதென்ன இராஜா காலமா.. இளவரசி தோழி பெண்ணுடன் சுற்றுவது போல்.. என்று வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

ரேஷ்மா அங்கிருந்த செவிலியர்களிடம் ரோஹீத்தின் உடல்நிலையை விசாரித்துக் கொண்டிருந்தாள். அதுவும் ரோஹீத்திற்கு வெறுப்பாக இருந்தது. ஏனெனில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் வந்து விசாரித்து அவனிடம் பேசிவிட்டு.. அதாவது அவள் மட்டும் பேச.. அவன் வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு போனாள். தற்பொழுது மீண்டும் வந்து விசாரிக்கிறாள்.

விசாரித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த.. ரோஹீத் “எதுக்கு இந்த வேஷம்?” என்று கசந்த முறுவல் புரிந்தான்.

அந்த அறையில் இருந்த மற்றவர்களைப் பார்த்து ரேஷ்மா தலையசைக்கவும், உடனே அவர்கள் வெளியேறினர்.

ரேஷ்மா “எது அண்ணா வேஷம்? நீ ஒரு கண்ணோட்டத்தில் எங்களை பார்க்க ஆரம்பிச்சுட்டே.. அப்போ எல்லாமே உனக்கு அப்படித்தான் தெரியும். ப்ளீஸ் அண்ணா! இதை மாத்திக்கோ.. இல்லைன்னா உன் வாழ்வு நிம்மதியா அமையாது.” என்றாள்.

ரோஹீத் “என்ன என்கிட்டவே பிளாஷீபீ பேசறீயா! ஒரு சாதாரண கால்மூட்டு விலகலுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம், இத்தனை விசாரிப்பு உனக்கே ஓவரா தெரியலையா!” என்றுச் சிரித்தான்.

அதற்கு ரேஷ்மா புன்னகையுடன் “என்ன செய்ய! கால்மூட்டு விலகி படுத்திருப்பது இந்த சமஸ்தானத்தின் இராஜா ஆகிற்றே!” என்றாள்.

ரோஹீத் “புல்ஷீட்!” என்று முகத்தை சுளித்தவன், “அது நானே.. ஏத்தி வச்சுக்கிட்ட பாரம்” என்றான்.

ரேஷ்மா “எப்படியோ..‌ நீங்க எங்க கண்ணு முன்னாடி இருப்பது எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுங்களா!” என்றாள்.

அதற்கு ரோஹீத் *ஏன்.. அந்த பொண்ணை கூட்டிட்டு பாரின் போய் செட்டில் ஆகிருவேன்னு நினைச்சுட்டியா!” என்று நக்கலுடன் கேட்டான்.

உடனே ரேஷ்மா “நீங்க ஒத்துக்கிட்ட கடமையில் இருந்து பின் வாங்க மாட்டிங்க..” என்றுக் கூறிக் கொண்டு போனவள்.. தான் உளறுவது புரிந்து.. “ஆமா..எந்த பெண்ணை சொல்றீங்க? ஓ சுஹந்தாவை மேரேஜ் செய்துட்டு.. இந்த சமஸ்தானத்தை எடுத்து நடத்தாமல் பாரின் போய் செட்டில் ஆகிற ஐடியா இருக்கா..” என்றுச் சிரித்தாள்.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்த ரோஹீத் “உனக்கு சமாளிக்க தெரியலை. திறமை பத்தலை..” என்றான்.

ரேஷ்மா “அந்த திறமை இருக்கிறதால் தான் நீங்க.. இந்த சமஸ்தானத்தை கட்டியாள போகறீங்க..” என்றாள்.

உடனே ரோஹீத் எரிச்சலுடன் “ப்ளீஸ் ஸ்டாப்! ஐயம் டையர்டு டு ஹீயரிங் திஸ் நான்சென்ஸ்! நானே தான் முன் வந்து இந்த பொறுப்பு ஏத்துக்கிறுன்னு சொன்னேன். அதுனால எனக்கு நல்லா தெரியும். ஒவ்வொரு தரமும் பார்க்கிற போதெல்லாம்.. ஒவ்வொருத்தரும்.. சொல்லிக் காட்ட வேண்டாம். எனக்கு மறக்கலை ஒகேவா! இதுக்காக தான்.. ஒரு பெண்ணை விட்டுட்டு வந்திருக்கிறேன்.” என்றான்.

ரேஷ்மா சற்று திகைத்து தான் போனாள். இம்மாதிரி தான் என்று மாரிமுத்து.. சொல்லிக் கேட்டிருக்கிறாள். ஆனால் அதை இவ்வளவு வெளிப்படையாக ரோஹீத் ஒத்துக் கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

அவளது திகைத்த முகத்தைப் பார்த்த.. ரோஹீத் “கொஞ்சம் ஓப்பான பேசலாமா.. உன்னை உள்ளே அனுப்பிட்டு வெளியே நிற்கிறவங்களையும் கூப்பிடு. நான் முடிவு செய்து வைத்திருக்கிறதை எல்லாரும் கேட்கட்டும். கால் சரியானதும்.. சொல்லலாம் என்று நினைச்சேன். ஆனா இப்போ இதுதான் சரியான டைம்மா தெரியுது. இதை நான் இப்போ சொல்லுலைன்னா.. திருப்பி திருப்பி என்னை தொந்திரவு செய்வீங்க..” என்றான்.

இதற்கு மேல் சமாளித்து பயனில்லை.. என்று ரேஷ்மா.. அந்த அறையின் வரவேற்பு பகுதியில் இருந்த தனது பெற்றோர் மற்றும்.. கணவரை அழைத்தாள்.

அவர்கள் வந்ததும்.. அவர்களின் முகத்தைப் பார்த்த ரோஹீத் “நீங்க இப்படிக் கவலைப்படற மாதிரி.. எதுவும் நடக்காது. நான் என் லைஃப்பை மட்டும் பார்த்துக்கிறதா இருந்திருந்தா.. இந்தியாவிற்கு வந்திருக்கே மாட்டேன். அந்த பொண்ணை கூட்டிட்டு வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிருப்பேன்.” என்றவன், ரேஷ்மாவை பார்த்து “ஷீ லவ்ஸ் மீ ரேஷ்மா! ஹெர் லவ் இஸ் வெரி ப்யுர் அன்ட் டிவைன்! அவ நான் ராஜா பரம்பரை என்று எல்லாம் பார்த்து லவ் செய்யலை. இன்னும் சொல்ல போன.. அவ என் முகத்தை கூடப் பார்க்காம அவளோட மனசை என்கிட்ட தொலைச்சா! நான் யார் என்றுத் தெரிந்ததும்.. அவ எப்படி தவிச்சா என்று எனக்கு தெரியும். என்கிட்ட இருந்து அவ விலக தான் பார்த்தா.. நான் கூப்பிட்டு வச்சு பேசி.. அவளோட காதலை வளர்ந்துட்டேன். அவளோட அந்த லவ் என்னை அவ பக்கம் இழுத்துச்சு!” என்றுச் சொல்லிக் கொண்டே போனான்.

பின் நக்கல் சிரிப்புடன் “நான் எதுக்கு இதையெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். நான் என்ன சொன்னாலும் இதெல்லாம் உங்களுக்கு புரியாது. அப்படி புரிந்திருந்தா.. நான் இப்படி இருந்திருக்கவே மாட்டேன்.” என்றவனின் நினைவில் மலர்விழி வந்து சென்றாள்.

பின் சிறு பெருமூச்சுடன் நிமிர்ந்து “நான் அந்த பெண்ணை மேரேஜ் செய்துக்க மாட்டேன். அடுத்த பொறுப்பை ஏத்துக்கிறேன்.. ஆனா ஷோ கேஸ் பொம்மை மாதிரி.. இருக்க மாட்டேன். முழு அதிகாரமும் மரியாதையும் எனக்கு வேண்டும். இந்த முழு சமஸ்தானம் என் கைக்கு வந்ததும்.. அதை இன்னும் மேம்படுத்துவதும்.. அழிப்பதும் என் இஷ்டம்!” என்றான்.

அதைக் கேட்டு இராஜேந்திரர் திடுக்கிட்டு ரேஷ்மாவை பார்த்தார். அதைப் பார்த்த ரோஹீத் சிரித்தவாறு “நிச்சயம்.. இந்த பரம்பரைக்குனு இருக்கிற பேரையும் செல்வாக்கையும் கெடுக்க மாட்டேன். சுதந்திர போராட்டக்காலத்தில் பிரிட்ஷ்க்காரன் ஆபிஸர்ஸிற்கு சப்போர்ட் செய்யற மாதிரி செய்து.. அவங்களுக்கு எதிராக போராடியவர்களுக்கு.. நிதி கொடுத்து உதவிய வம்சம் நம்மளோடது! அந்த பேரை காப்பாத்துவேன். அப்பேற்பட்ட நமக்கே துரோகத்தை காட்டறாங்க! அதை எப்படிச் செய்யணும் என்று நான் லெசன் எடுக்கிறேன்.” என்று சத்தமாக சிரித்தான். ரேஷ்மாவின் கணவன் ஆதர்ஷ் ரேஷ்மாவை முறைத்துப் பார்த்தான். அவளோ அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்.

ரோஹீத் தொடர்ந்து பேச்சு அறுபடாமல் “பட்! த்ரீ கண்டிஷன்ஸ்! உங்களால் அந்த பெண்ணிற்கு எந்த தொந்திரவும் இருக்க கூடாது. என்கிட்ட இருந்து அவளை ஒதுக்கிறதா நினைச்சு மிரட்டி பார்க்காதீங்க! அடுத்து.. எனக்கு இன்னொரு பெண் கூட என்கேஜ்மென்ட் வேண்டாம். அடுத்து.. மதிப்பூர் மாளிகைக்கு போவேன்.. அந்த பெண்ணை அடிக்கடி பார்ப்பேன். அதை நீங்க யாரும் தடுக்க கூடாது. இதுக்கு ஒத்துக்கணும். இல்லைன்னா.. நான் என் லைஃப்பை பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்.” என்றான்.

ரோஹீத் பேசி முடித்ததும்.. அங்கு கடும் நிசப்தம் நிலவியது.

முன்பே இம்மாதிரி.. ரேஷ்மாவிடம் கூறினான் தான்.. ஆனால் அது கோபத்தினால் கூறியது என்று அவள் நினைத்திருந்தாள். பொறுப்பேற்ற பின்.. அதற்கு தகுந்த கடமையை ஆற்றுவான் என்று நினைத்திருந்தாள். தற்பொழுது.. அவளது எண்ணம் ஆட்டம் கண்டது. ஆனால் ரோஹீத்தை விட்டால் வேறு வழியில்லை. அவளது கணவன் செய்து வைத்த குளறுபடியால் சொத்துக்கள் குறைந்த விலைக்கு கைமாறுவது மட்டும் இல்லாமல்.. தரம் குறைந்த பொருட்கள் ஏற்றுமதி.. இவர்களது தலையில் கட்டிவிட்டு.. இவர்களது நிறுவனத்திற்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி.. நல்ல தரம் கொண்ட பொருட்களை வாங்கி.. கணவர் வீட்டின் நிறுவனத்தின் சார்பாக ஏற்றுமதி வெகு ஜோராக நடந்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க.. புதிய பொறுப்பு ஏற்பரால் தான் முடியும். எனவே ரோஹீத்தின் வழியில் சென்று.. அதைச் சரி செய்ய எண்ணினாள்.

அருகில் அமர்ந்திருந்த தனது தந்தையை பார்த்தாள். அவர் கோபமும்.. எரிச்சலுமாக அமர்ந்திருந்தார். மெல்ல அவரது கரத்தை அழுத்திக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்த முயன்றாள்.

இராஜேந்திரர் “சபாஷ்! இந்த வம்சத்தின் வழியே வந்தவனின் வாயில் இருந்து.. வரும் வார்த்தைகளை கேட்க இனிமையாக இருக்கிறது.” என்று நக்கலுடன் கூறினார்.

அதற்கு ரோஹீத் தோள்களை குலுக்கிக் கொண்டு “தேங்க்யு..” என்றான்.

உடனே வெகுண்டவராய் எழுந்த இராஜேந்திரர் “ஏற்க முடியாததை எல்லாம் பேசிட்டு.. அதைச் சொன்ன நன்றி வேற சொல்றீயா..” என்றார்.

தற்பொழுது தான் உடல்நிலை சரியானதால்.. சரியாக நிற்க முடியாமல் தடுமாறவும், சரிய தொடங்கியவரை ரேஷ்மாவும், அவளது அன்னை சாரதாவும் பிடித்து நிறுத்தினார்கள். அங்கிருந்த மற்ற உறவினர்கள் கூடப் பதறிப் போனார்கள். ஆனால் ரோஹீத் அசையாமல் அமர்ந்திருந்தான்.

இராஜேந்திரருக்கு.. தன்னால் முடியாது போன போது.. தோள் கொடுக்க மகன் இல்லாது இருந்த வேளையில்.. சொந்த தம்பி மகன்களில் கையில் பொறுப்பை கொடுக்க மனமில்லை. ஏனெனில் அவ்வாறு கொடுத்தால்.. அது அடுத்த பொறுப்பு அவனது மகனுக்கு.. என்று ஆளும் குடும்பம் மாறிப் போய் விடும் என்று அஞ்சினார். எனவே மருமகனும் மற்றொரு மகன் போன்றவன் தானே.. சொந்த மகளின் கணவன் தானே.. அதனால் மகளின் கையில் பொறுப்பை கொடுப்பது போன்று தானே.. என்று வேற வழியில்லாது.. மருமகனின் கையில் பொறுப்புகளை கொடுத்தார். ஆனால் சிலர் அவரிடம் வாய் வார்த்தையாகவும், சிலர் சில ஆதாரங்களை கொண்டு வந்து காட்டிய பொழுது.. அவரால் நம்ப முடியவில்லை. ஆதர்ஷ் சிறிது சிறிதாக.. சொத்துகளை கைமாற்றுவதும்.. சிலவற்றை அழித்து அவனது தந்தை குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதுமாக இருந்திருக்கிறான். ஆனால் அதைச் சொல்லி.. ஆதர்ஷை பொறுப்பில் இருந்து எடுத்து.. அதை மற்றவர்கள் பேசி.. குடும்ப கௌரவத்தை கெடுக்க அவர் விரும்பவில்லை. எனவே என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுது தான் ரேஷ்மாவே ரோஹீத்தை வரவழைக்கலாம் என்று ஆலோசனை கூறினாள்.

ரோஹீத் வருவான் என்ற நம்பிக்கை இல்லாமல் தான்.. இராஜேந்திரர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ரோஹீத் இம்முறை வரவும்.. எள்ளற்ற மகிழ்ச்சி கொண்டார். அடுத்த பொறுப்பில் வரப் போகிறவன்.. என்று அறிவித்தும், அவனுக்கு திருமணம் பேசியும்.. இங்கேயே கட்டிப் போட நினைத்தார். ஆனால் ரோஹீத் மீண்டும் மதிப்பூரில் ஒரு பெண்ணுடன் சந்தித்து பேசுகிறான் என்றுக் கேள்விப்பட்டு.. கோபம் கொண்டார். ஆனால் ரேஷ்மா தான் அவரை அடக்கி வைத்தாள். இம்முறை அவர் கோபம் ரோஹீத்திற்கு எதிராக எதாவது செய்துவிட்டால்.. பிறகு ரோஹீத்தை இந்த குடும்பத்தில் இருந்து இழக்க வேண்டியது வரும்.. என்று எச்சரித்தாள். அந்த பெண்ணை மறந்துவிட்டு.. ரோஹீத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்றுத் திட்டமிட்டுக் கொண்டிருந்த பொழுது.. அவனே வந்தான்.

இராஜேந்திரரும் ரேஷ்மாவும் மகிழ்ச்சி கொண்டார்கள். ஆனால் இன்னும் மனநிலையில் இருக்கிறானா.. என்றுத் தெரிந்துக் கொள்ள நினைத்தார்கள். அதற்காக விசாரிக்க தான் ரேஷ்மா வந்தாள். ஆனால் அவர்களும் வந்திருப்பதைக் கண்டு கொண்ட ரோஹீத் அனைவரிடமும் பேச வேண்டும் என்றுக் கூறிவிட்டு அவன் கூறியதைக் கேட்டு அடக்கி வைத்திருந்த இராஜேந்திரரின் கோபம் மீண்டும் எழுந்தது.

அப்பொழுதும் தன்னை அடக்கிய மகளிடம் அவரது கோபம் திரும்பியது. அங்கு நின்றிருந்த மருமகனை நேரடியாக குற்றம் கூற இயலாது.

“எல்லாம் உன்னால் வந்தது” என்று வெகுண்டவர்.. ரேஷ்மா கூனி குறுவதைப் பார்த்தார். சுற்றிலும்.. அவரது மற்ற உறவுகள் நிற்கவும் பேச்சை மாற்றினார்.

“ஆமாம் ரேஷ்மா எல்லாம் உன்னால் வந்தது. நான் ரோஹீத்திற்காக என்ன சொன்னாலும்.. என்னை அடக்குவே தானே.. இப்போ பாரு.. அவன் பேசிய இலட்சணத்தை.. இந்த சமஸ்தானத்தை அழிப்பானாம், என்கேஜ்மென்ட்டை முறிப்பானாம்.. அந்த பொண்ணு கூட தொடர்ந்து பழக்கம் வச்சுப்பானாம். என்ன பேச்சு இது! இவன் தான்.. நம்ம சமஸ்தானத்தை கட்டிக் காக்க போறானா! இவனையா.. நம்பி இந்த முழு பொறுப்பையும் கொடுக்க சொல்றே..” என்றுக் கேட்கவும், ரோஹீத் சத்தமாக சிரித்தான்.

பின் “வாவ்! எனக்கு சோல்யுஷன் கிடைச்சுருச்சு! அதுவும் இத்தனை சீக்கிரமா.. எனக்கு சாதகமா கிடைச்சுருக்கு..” என்றுவிட்டு சிரித்தவன், “ஆல்ரைட்! அப்போ நான் இப்பவே கிளம்புகிறேன்.” என்றதும்.. இராஜேந்திரர் “எதுல விளையாடுவது என்றில்லையா! அடுத்த இராஜாவாக போகிறவன் பேசுகிற மாதிரியா பேசுகிறே! ஏதோ த்ரெடு கிரெட் பொறுக்கி மாதிரி பேசுகிறே..” என்றார்.

ரோஹீத் “இன்னொரு பாயிண்ட்ம் எனக்கு சாதகமா கிடைச்சுருக்கு.. இந்த த்ரெடு கிரெட் பொறுக்கி கிட்ட உங்களோட பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.” என்றுவிட்டு ஆதர்ஷை பார்த்து “என்ன மச்சான் உங்களுக்கு சந்தோஷமா..” என்றுக் கேட்டான். ஆதர்ஷ் கோபத்துடன் ரோஹீத்தை பார்த்து பேசத் தொடங்குகையில் ரேஷ்மா இடையிட்டாள்.

ரேஷ்மா “ஒ ஸ்டாப் இட் ரோஹீத்! அப்பா கோபத்துல பேசுறதை எல்லாம் ஒரு பொருட்டா வச்சுட்டு பேசறீங்க! அப்படிப் பார்த்த நீங்க பேசியதை எல்லாம் நாங்க சீரியஸா எடுத்துட்டா என்ன ஆவது? ப்ளீஸ் ஒருத்தரை ஒருத்தர் சாய்ப்பதாக நினைச்சுட்டு வார்த்தைகளை விடாதீங்க! அதை பெருசா எடுத்துக்காதீங்க!” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

பின் தந்தையின் புறம் திரும்பிய ரேஷ்மா “அண்ணா மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கு! அவர் சொன்ன மாதிரி அவரே தான் முன் வந்து ஒத்துக்கிட்டார். நாம் யாரும் வற்புறுத்தலை. அப்போ அவரோட வார்த்தைக்கு.. அவர் நியாயமா நடந்துப்பார்.. யாரும் அவர் மேலே நம்பிக்கை இல்லாம பேசும் வரை..! அதுனால ப்ளீஸ்.. அவர் இதைச் செய்வாரா தகுதியானவரா என்று யாரும் பேச வேண்டாம். இப்போ அவர் சொன்னதிற்கு ஒகேவா என்று மட்டும் சொல்லுங்க..” என்று அங்கு பரவியிருந்த சலசலப்பிற்கு முடிவு கட்டினாள்.

உறவினர்கள் மெல்லிய குரலில் இராஜேந்திரரை சமாதானப்படுத்தினார்கள். அவரும் பெருமூச்சுகளை எடுத்துவிட்டவாறு அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ரோஹீத் அமைதியாக கரங்களை மார்பிற்கு குறுக்கே கட்டியவாறு அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்திற்கு பின் எழுந்த இராஜேந்திரர்.. ரோஹீத்தை பார்க்காது.. “சரி அந்த பொண்ணை மிரட்ட மாட்டோம். இவன் அங்கே போறதுன்னா போயிட்டு வரட்டும். ஆனா ஏற்பாடு செய்த என்கேஜ்மென்ட்டை கேன்சல் செய்ய வேண்டாம்.” என்றார்.

இராஜேந்திரர் கூறியதைக் கேட்ட ரேஷ்மா அதிர்ந்து நிற்க.. மற்றவர்கள் சற்று சங்கடத்துடன் அவர் பேசியதைக் கவனியாத பாவனையுடன் அருகில் இருந்தவரிடம் பேசுவதாய் காட்டிக் கொண்டார்கள்.

ரோஹீத் “வாவ்! வாட் எ டேட்! உன்னை மரியாதையா பார்க்கிற ஜனங்களை.. உன் அதிகாரத்திற்கு கீழேயே வைத்துக் கொள்.. என்பது மட்டும் தான் சொல்லித் தருவீங்க என்று நினைத்தேன். ஆனா இதையும் சொல்லித் தருவீங்களா..” என்றுச் சிரிக்க முயன்றவனுக்கு.. கண்களில் வலியே தோன்றியது.

இராஜேந்திரர் சினத்துடன் “உனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்த முடியாது என்பதை தான் சொல்கிறேன் ரோஹீத்! உன்னோட அப்பாவா.. உன் வாழ்க்கையில சில விசயங்களை அமைக்க எனக்கு உரிமை இருக்கு! நீ சுஹந்தாவை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது என்னோட முடிவு! அதே மாதிரி சில விசயங்களை நீயே அமைச்சுக்கலாம். அதவாது சமூகம் முன்னிலையில் உன் வாழ்க்கையை அமைக்கிறது என் விருப்பம்.. மற்றது உன் விருப்பம்! அதைத் தான் சொன்னேன்.” என்று கம்பீரம் மாறாமல் உறுமினார்.

அங்கிருந்தவர்களுக்கு.. இராஜேந்திரர் கூறியது ஏற்புடையதாக இருந்தது. எனவே அதை ஆமோதிப்பது போல் அனைவரும் ரோஹீத்தை பார்த்தார்கள். ரேஷ்மாவும் நம்பிக்கையுடன் ரோஹீத்தை பார்த்தாள். அவனது முகத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

ஏனெனில் ரோஹீத்தின் முகத்தில் வலி மிகுந்து காணப்பட்டது.

ரோஹீத் “வாவ்! ஒரு அப்பாவா என்னை வழி நடத்தறீங்களா! என்னை எப்படி வழி நடத்திருக்கீங்கனு தெரியுமா அப்பா! சின்ன வயதில் இருந்து ஏதோ சிறையிற்குள் இருக்கிற ஃபீல் கொடுத்து.. பைத்தியம் மாதிரி என்னை கத்த வச்சு.. எட்டு வருஷமா.. பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு.. சொந்தங்களை விட்டு பாரினுக்கு போக வச்சீங்க! சொல்லுங்கப்பா இதைத் தான் வழி நடத்தினதா சொல்றீங்களா! இப்போ இந்த மேரேஜ் செய்ய சொல்றீங்க!” என்று கசந்து முறுவலித்தான்.

உடனே இராஜேந்திரர் “அது நான் சொல்றபடி கேட்காததால் நீயா தேடிக் கொண்ட வழி! அதனால் இப்படியிருக்கே..” என்று ஆத்திரத்துடன் கூறினார்.

அதைக் கேட்ட ரோஹீத் குறுஞ்சிரிப்புடன் “நானே எட்டு வருடங்களாக என் லைஃப்பை வழி நடத்தி.. எப்படியிருக்கேன் என்றுத் தெரியுமா! அடுத்த பொறுப்பை ஏற்றுக்கணும் என்று நீங்களே வந்து கேட்கிற நிலைக்கு வந்திருக்கேன். அதனால்.. என் பர்ஷனல் லைஃப்பை நானே வழி நடத்திக்கிறேன்.” என்றதும்.. அங்கிருந்தவர்கள் வாயடைத்து போனார்கள்.

ரோஹீத் தொடர்ந்து “அப்பறம் என்னோட அப்பாவா.. என் லைஃப் சமூகத்தில் நல்லா இருக்கணும் என்று என்னை மேரேஜ் செய்துக்க சொன்னீங்களே.. அது எனக்காக இல்லை.” என்றவன், தொடர்ந்து “ஒகே! உங்க முடிவை நீங்க சொல்லிட்டிங்க.. அப்பறம் எதுக்கு இத்தனை ஆர்க்குயுமென்ட்ஸ்! ஐ ஃபீல் ப்ரீ நவ்!” என்றுவிட்டு எழ முயன்றான்.

உடனே ரேஷ்மா “அண்ணா ப்ளீஸ்! ப்ளீஸ்!” என்று தடுத்தாள்.

ரோஹீத் “ப்ளீஸ் ரேஷ்மா!” என்றவனின் குரல் கெஞ்சியது.

அதற்கு ரேஷ்மா “ஸாரி அண்ணா!” என்றவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. பின் அதை துடைத்துவிட்டு தன் தந்தையிடம் சென்றவள், “அப்பா! அண்ணன் இரண்டு ஆப்ஷன் தான் கொடுத்திருக்காங்க! அவர் சொன்னதை ஒத்துக்கணும். இல்லைன்னா.. அவர் இங்கிருந்து போவார். நமக்கு நம்ம குடும்ப நிலை தாழ்ந்து போகாதது தான் முக்கியம். எல்லாரும் தலை நிமிர்ந்து பார்க்கிற நம்மை சுட்டிக்காட்டி.. யாரும் பேசிற கூடாது. அதுக்காக தான் நான் போராடுகிறேன் அப்பா!” என்றாள்.

அதற்கு இராஜேந்திரர் “கொடுத்த வாக்கை காப்பாற்றலைன்னாலும் கெட்ட பேர் வரும் ரேஷ்மா!” என்றார்.

ரேஷ்மா “அண்ணா தான் பிடிவாதமா இருக்கிறாரே! அவர் இவ்வளவு இறங்கி வந்ததே பெரிய விசயம்! அவர் ஒத்துக்கலைன்னா.. வாக்கு மட்டுமில்லை குடும்ப நிலையும் போகும் அப்பா..” என்றாள்.

இராஜேந்திரருக்கு இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால்.. ரேஷ்மா கூறியது போல் ரோஹீத் இல்லை என்றால் எதுவுமில்லை. எனவே அமைதியாக இருந்து தனது சம்மதத்தை கூறினார்.

ரேஷ்மா நிம்மதியுடன் மற்றவங்களைப் பார்க்க அவர்களும்.. இராஜேந்திரர் சம்மதித்த பின்.. மாற்று கருத்து இல்லை என்பதால்.. அனைவரும் அமைதியாக நின்று தங்களது சம்மதத்தை தெரிவித்தார்கள்.

ரேஷ்மா ரோஹீத்திடம் சென்று “நீங்க ஜெயிச்சுட்டிங்க.. அண்ணா!” என்றாள்.

அதற்கு மனச்சோர்வுடன் தலையாணியில் நன்றாக சாய்ந்துக் கொண்ட ரோஹீத் “நான் தோற்கலை ரேஷ்மா.. ஆனா ஜெயிக்கவும் இல்லை.” என்றான்.

ரோஹீத் எதைக் குறிப்பிடுகிறான் என்று ரேஷ்மாவிற்கு புரிந்ததால் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட.. மற்றவர்களும் அங்கிருந்த அகன்றார்கள்.

அடுத்த இரண்டு நாட்களில் ரோஹீத் எழுந்து நடக்க ஆரம்பித்தான். சுஹந்தாவுடனான நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதில் ஏன் எதற்கு என்ற கேள்வி.. எழுந்தது. ஆனால் ரோஹீத் நிறுவனத்தின் குளறுபடிகளை சீர் செய்துக் கொண்டு திருமணம் செய்யவிருப்பதாக பொய்யுரைத்தனர். அப்பொழுதும் நல்ல சம்பந்தத்தை விட மனமில்லாது.. சீர் செய்த பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாம். தற்பொழுது நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்றுக் கூறிய பொழுதும்.. இல்லை அது சரிப்பட்டு வராது.. என்று காரணத்தை கூறாமல் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கே.. அந்த மேல்தட்டு வர்த்தகத்தரிடம் இவர்களைப் பற்றி சலசலப்பு பரவியது. இராஜேந்திரருக்கும்.. ரேஷ்மாவிற்கும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் இந்த குடும்பத்தின் தாழாதிருப்பதிற்காக பொறுத்துக் கொண்டனர். அவர்களது நம்பிக்கை வீண் போகாது என்பதற்கு ஏற்ப ரோஹீத் தனது முதல் அடியை எடுத்து வைத்தான்.

அவர்களோடு வர்த்தக தொடர்பு கொண்டிருக்கும் நிறுவனங்களின் சேர்மன்களுக்கு அழைப்பு விடுத்து சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தான். அங்கு அதுவரை அவர்கள் மேற்கொண்ட பரிவர்த்தன பரிமாற்றத்தை பற்றிக் கேட்டறிந்தான். ஆதர்ஷ் செய்து வைத்திருந்த குளறுபடி புரிந்தது. முழுவதையும் தற்பொழுது குறை கூறி.. அவர்களை மாற்றினால்.. நன்மதிப்பு இழக்கப்பட்டு அது பரவி விடும் என்று.. சில மாற்றங்களை மட்டும் தற்பொழுதைக்கு செய்தான். அதை அவர்கள் ஏற்றுக் கொண்ட விசயமும்.. ரோஹீத்தின் நிர்வாக பேச்சும்.. அடுத்த நான்கு நாட்களுக்கு.. அந்த வர்த்தகத்தினரிடையே பெரும் விசயமாக பேசப்பட்டது.

ரோஹீத் கூறியதை நிறைவேற்ற முதல் படி எடுத்து வைத்துவிட்ட மகிழ்ச்சியில்.. அவனைக் காண சென்றனர். ஆனால் அவன் சுபாஷினியை காண இங்கு வந்துவிட்டான்.

அவளுக்கு ஆபத்து வராமல் இருக்கவும், ஆனால் அவளுடன் பழகவும்.. ரோஹீத் அங்கு மலையையே புரட்டிப் போட்டிருக்க.. இங்கு சுபாஷினி.. அவனது காதல் தந்த செருக்கில் அவனே அவளைத் தேடி வந்து.. முறையோடு காதலை அறிவிக்க வேண்டும் என்றுவிட்டு சென்றது.. ரோஹீத்தின் செருக்கை தட்டி எழுப்பியது. அவனது காதல் மனதையும் தான்!

அவள் எதை நினைத்து.. தன்னை மறத்துவிட்டு சென்றாளோ.. அதை அவளுக்கு தந்துவிட முடிவு செய்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14

வீட்டிற்கு வந்த சுபாஷினியின் கால்கள் துணியாய் துவண்டது. நின்ற இடத்திலேயே அமர்ந்து விட்டவளுக்கு.. நடந்த எதையும் நம்ப முடியவில்லை. அவளது மனதில் சலனத்தை ஏற்படுத்திய ரோஹீத்தின் நினைவுகள் மட்டுமே இனி தன் வாழ்நாள் முழுவதற்கும் என்று மனதை தயார்படுத்தியிருந்த வேளையில்.. அவள் முன் வந்தவன், முறையாக அங்கரீக்கப்படாத காதல் வாழ்க்கை வாழ விரும்புவதைக் கூறிய பொழுது.. அதிர்ந்து தான் போனாள். ஆனால் அவளது காதல் கொண்ட மனது.. அவன் புறம் அவளை இழுத்துக் கொண்டு சென்றது. ஆனால் அடுத்து அவனும் அவளை காதலிக்கிறான் என்றுக் கூறிய பொழுதோ.. சுபாஷினியின் நெஞ்சிற்குள் மத்தளங்கள் கொட்டின.

அவளது வாழ்க்கையின் பேறை அடைந்ததைப் போல் உணர்ந்தாள். காதலிக்கிறேன் என்றுக் கூறியவன், அவளுடன் நிறைவேறாக காதல் வாழ்க்கை வாழ விருப்பம் தெரிவித்தது.. காதல் கொண்ட மனதிற்கு முரணாக தெரிந்தது. அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அவளின் காதல் மனம்.. அவனுடன் காதல் வாழ்வை எதிர்பார்த்தது. எனவே தான் அவனது கௌரவத்தை விட்டு.. அவள் வேண்டும் என்றுத் தேடி வர வேண்டும் என்றுக் கூறினாள். அவ்வாறு கூறிய பொழுது.. உண்மையில் மிகுந்த மனநிறைவை கொண்டாள். ரோஹீத்தின் காதல் அவளுக்கு கிடைத்த விட்ட திருப்தி இருந்தது. ஆனால் அடுத்து ரோஹீத் கூறியதைக் கேட்டு சுபாஷினிக்கு தலை சுற்றியது.

தான் கேட்டதில் என்ன தவறு.. அதற்கு எதற்கு இவர் இவ்வளவு கோபம் கொள்கிறார் என்று இருந்தது. அவன் காதல் கொண்ட பெண்ணின் கௌரவத்தை காப்பது அவனது முறை அல்லவா! எனவே அவள் அவளது முடிவில் இருந்து மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் ரோஹீத்தின் காதல் என்ற வார்த்தை அவளது மனதை எவ்வாறு அசைத்ததோ.. அது போல்.. என் காதலை அனுபவிக்க விருப்பமில்லையா என்ற வார்த்தையும் அவளது மனதின் ஆசைகளை கிளறி விட்டது. சிறிது நேரம் அங்கு நின்றிருந்தாள். தனது மனநிலை மாறிவிடுமோ என்று அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். ஆனால் அவனது வார்த்தைகள் இன்னும் அவளை ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது.

மாலையில் முதலில் வீட்டிற்கு வந்த சுசீலா.. இரு தினங்களாக கோவையில் தங்க போவதற்காக வேண்டியதை எடுத்து வைப்பதும் வாங்கி வைப்பதுமாக சுறுசுறுப்பாக இருந்த பெண்.. மீண்டும் அறையிற்குள் முடங்கி இருப்பதைக் கண்டு துணுக்குற்றார். காரணம் விசாரித்த பொழுது.. ஒன்றுமில்லை என்று மறுப்பாக தலையசைத்தாள்.

சுசீலா “எங்களுக்கும் தான்டா.. உன்னை விட்டு பிரியறதுக்கு கஷ்டமா இருக்கு..” என்றதும், சுபாஷினியின மனம் சுட்டது. தனது அன்னையை தாவி அணைத்துக் கொண்டு “நான் பாட்டிற்கு பேசாம இருந்தேனே.. ஏன்மா ஞாபகப்படுத்தி விட்டிங்க.. இப்போ எனக்கு நிஜமா கஷ்டமா இருக்கு..” என்று உண்மையான வருத்தத்தில் அன்னையிடம் ஒடுங்கினாள். சுசீலா ஆதரவாய் அணைத்துக் கொண்டது.. அனைத்திற்கும் மருந்தாக அமைந்தது.

பின் அவளை தயாராக கூறியவர், அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வா.. மனதிற்கு இதமாக இருக்கும் என்று அனுப்பி வைத்தார்.

அங்கு அம்மனை தரிசித்துவிட்டு இருபுறமும் இருந்த மண்டபத்தின் ஒன்றில் ஓய்வாக அமர்ந்திருந்த பொழுது.. கோவில் நிர்வாகிகள்.. வாசலை நோக்கி விரைவதைப் பார்த்தாள். கூடவே சிலரும் ஆர்வத்துடன் யார் என்றுப் பார்க்க விரைந்தார்கள். அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த இருவர் “யாரோ பாலிக்டீஷியனோ.. இல்லைன்னா ஆக்டரோ இருக்கும் போல தெரியுது வா நாமும் போய் பார்க்கலாம்..” என்று எழுந்த செல்லவும், சுபாஷினியும் ஆர்வத்துடன் எழுந்து நின்றுப் பார்த்தாள்.

வாயிலில் இருந்து அவள் இருந்த மண்டபத்தின் பாதை வழியாக சட்டையின் நீண்ட கரத்தை மடித்துவிட்டவாறு வேகமாக உள்ளே வந்தவனை பார்த்தவள்.. உள்ளம் உறைய நின்றுவிட்டாள்.

அவள் பார்த்ததை உணர்ந்தானோ.. ரோஹீத்தின் பார்வை தானே அவள் நின்றிருந்த திசைக்கு திரும்பியது. அவளைப் பார்த்ததும்.. அவனும் நின்றே விட்டான்.

அவனுடன் வந்துக் கொண்டிருந்த கோவில் நிர்வாகி “இராஜா..” என்று கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்க.. அவர்களைப் பற்றி மட்டுமில்லாது.. அவனை சுற்றி நின்று மரியாதையுடன் பார்த்துக் கொண்டிருந்த மக்களைப் பற்றியும் கவலைக் கொள்ளாது அவளை நோக்கி வந்த ரோஹீத் “ஹெ சுபா! கோவிலுக்கு தான் வரப் போகிறாய் என்றுச் சொல்லியிருந்தா.. ஒன்றாகவே வந்திருக்கலாமே..” என்றவன், தொடர்ந்து “இங்கேயே இரு போகும் போது.. ஒன்றா போகலாம். நான் அம்மனை கும்பிட்டு வரேன்.” என்றுவிட்டு அகன்றான்.

அனைவருக்கும் மத்தியில் அவனின் உரிமையான பேச்சில் சுபாஷினி திகைத்து நின்றாள். மற்றவர்களின் பார்வை ஒரு மாதிரி அவள் மேல் படிவதைக் கூட கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. அவன் பார்வையில் இருந்து மறைந்த பின்னரே சுயநிலைக்கு வந்தாள். பதட்டத்துடன் திரும்பிப் பார்த்த பொழுது.. அனைவரின் குறுகுறுப்பான பார்வையை எதிர்கொண்டாள். மேலும் பதறியவளாய் “நான்..” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

எனவே அங்கிருந்து சென்றுவிட்டால் நல்லது என்று சுபாஷினி நான்கு எட்டுக்கள் வைத்திருப்பாள். அதற்குள் ரோஹீத் இங்கேயே இரு.. என்றுக் கூறிச் சென்றது நினைவிற்கு வந்தது. காலம் காலமாக சமஸ்தானத்தின் வாரிசுகள் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாது வாழ்ந்து பழகியதால்.. சமஸ்தானத்தின் வாரிசு இட்ட கட்டளையைாக மட்டுமில்லாது.. அவளது காதலனாக அவன் இட்ட கட்டளையை மீறி சென்றால் கோபம் கொள்வானோ என்று அஞ்சினாள். இன்னும் அவர்களது வரும்படி.. சமஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு தான் வந்துக் கொண்டிருக்கிறது. சுபாஷினிக்கு திருமணம் முடித்திருந்தால் கூட.. பெரிய பொறுப்பு முடிந்தது.. என்று அவளது பெற்றோர்கள் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் தற்பொழுது.. அவனது கட்டளையை மீறி.. அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணினால்.. அவர்களது வாழ்வாதாரத்தை பறிப்பானோ என்று அச்சம் கொண்டாள். எனவே என்ன செய்வது என்றுத் திணறியவாறு நின்றிருந்தாள்.

ஆனால் இன்னும் சுற்றி நிற்பவர்கள் அவளை குறுகுறுவென பார்க்கவும், சுபாஷினி அவசரமாக “அவருக்கு அடிப்பட்ட போது.. நான்தானே நர்ஸிங் செய்தேன். அதுனால இன்னைக்கு வந்த போது.. எனக்கு தேங்க்ஸ் சொல்றதுக்காக கூப்பிட்டார். அதுனால தான் போயிருந்தேன். அவர் மற்றவங்க மாதிரி இல்லை. ஈஸியா பேசுகிறவர்.. அதுனால தான் இங்கே என்னைப் பார்த்ததும் அப்படி பேசினார்.” என்றுக் கூறியவளுக்கு.. இருவரும் காதலை பரிமாறிக் கொண்டது நினைவிற்கு வந்தது. ஆனால் அவர்களது காதலே சொல்லிக் கொண்ட சூழ்நிலை சரியில்லாததால் பொய்யுரைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதை நொந்துக் கொண்டவளுக்கு.. அதற்கு காரணமானவன் மீது கோபமும் துளிர்த்தது.

அவளது பெற்றோருக்கு.. அவள் ரோஹீத்தை காதலிப்பது தான் தெரியும்.. ரோஹீத் அவளை காதலிப்பதை கூறவில்லை. எனவே இங்கே இருப்பவர்கள் மூலம் அவளது பெற்றோரின் காது இந்த செய்தி எட்டினாலும்.. அவர்கள் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளாதவாறு இருக்க வேண்டும் என்று அவ்வாறு கூறினாள்.

அவளுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றுத் தெரிந்தே.. இவ்வாறு பலர் முன்னிலையில் உரிமையாக பேசியிருக்கிறான் என்று சுபாஷினிக்கு புரிந்தது. ரோஹீத் இவ்வாறு உரிமையாக பேசாது.. இவர்களுக்கு முன் அவர்களது காதலை கூறி.. தன்னை அழைத்திருந்தால் போதும்.. அவனது கையை பற்றிக் கொண்டு அவள் சென்றிருப்பாள்.

ஆனால்.. என்று அவளது தன்மானம் மீண்டும் தலை தூக்கவும், அவளது பெற்றோரும்.. அவள் தன்மானத்துடன் வாழ வேண்டும் என்றுத் தான் நினைப்பார்கள். எனவே திரும்பியும் கூடப் பார்க்காமல் கோவிலை விட்டு வெளியேறினாள். கோவிலின் வெளி வாயிலை கடந்த போது.. அவளது முதுகில் யாரோ பார்வையால் துளையிட்டது போன்று சிலிர்த்தது. யார் என்று தெரிந்திருந்த சுபாஷினி.. அடித்து பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அங்கு அவளது தந்தையும் வீட்டிற்கு வந்திருக்கவும், ஒன்றும் நடவாதது போல் தனது அறையிற்குள் சென்று முடங்கினாள். அதற்குள்.. கோவிலில் சுபாஷினியை ரோஹீத் சந்தித்த விசயம் அவர்களது காதுக்கு எட்டிவிட்டது. சுசீலா அவளைச் சாப்பிட அழைக்கவும், மெல்ல வெளியே வந்தாள். அவர்கள் அவளிடம் எப்படி விசாரிப்பது என்று திணறினர். அவளை சந்தேகம் கொள்ளவில்லை.. என்பதை முதலில் தெளிவுப்படுத்தி விட வேண்டும் என்று நினைத்தனர்.

அப்பொழுது அவர்களது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. இருவரும் யார் என்றுப் பார்க்கையில் அங்கு மாரிமுத்து நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆளுக்கு ஒரு விதமாக அதிர்ந்தார்கள்.

மாரிமுத்து முன்னே வந்து “வணக்கமுங்க! ஐயா வந்திருக்காங்க.. சுபாஷினி அழைச்சுட்டு வரச் சொன்னாங்க..” என்றான்.

முன்பு என்றால்.. இளையராஜா கூப்பிடுகிறார் என்று சுசீலா உடனே அனுப்பி வைத்திருப்பார். தற்பொழுது சுபாஷினி இளைய ராஜாவை காதலிக்கிறாள் என்றுத் தெரிந்த பின்.. மிகவும் தயங்கினார். அது மட்டுமில்லாது சுபாஷினி காதலிப்பது தெரிந்தால்.. இளைய ராஜா அதை தவறாக பயன்படுத்திக் கொள்வாரோ என்றும் அஞ்சினார்.

சுபாஷினியின் மனமோ வெதும்பியது. சில நிமிடங்களுக்கு முன்பு தான்.. சமூகத்தின் முன்னிலையில் தன்னை அழைக்க மாட்டாரா என்று எண்ணிக் கொண்டிருக்க.. மாரிமுத்துவின் மூலமாக அழைப்பு விடுத்து அவனது முந்தைய கருத்தில் உறுதியாக இருப்பதை நிரூபித்துவிட்டதை எண்ணி.. அவளது மனம் ஓலமிட்டது.

தாயும் மகளும் திருதிருவென விழித்துக் கொண்டு அமைதியாக இருப்பதைப் பார்த்து.. மாரிமுத்து “இளையராஜா கூப்பிடுகிறார்னு சொல்றேன். அடுத்த நொடியே வராம என்ன செய்துட்டு இருக்கீங்க! அவங்க மேலே இருக்கிற மரியாதையும் பயமும் போயிருச்சா என்ன..” என்று சற்று அதட்டினார்.

உடனே சுசீலா “அவ அப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைங்க! அவரை விட்டுட்டு அவளால் வர முடியாது.” என்றார்.

சுபாஷினியின் முகத்தை பார்த்த மாரிமுத்து சற்று சரியில்லாததை கண்டு அது உண்மை தான் என்று நம்பிவிட்டு சரிதான் என்று தலையை ஆட்டிவிட்டு சென்றான்.

அவன் கண்ணில் இருந்து மறைந்ததும்.. சுபாஷினியின் புறம் திரும்பிய சுசீலா “நீ இப்பவே கோவைக்கு பஸ் ஏறி போயிரு! அங்கே உன் பிரெண்ட் இருக்கா தானே.. அவ வீட்டுல தங்கிரு! திங்கள் கிழமை டுயுட்டியில் சேரும் போது ஹாஸ்ட்டலுக்கு போயிரு..” என்றார்.

சுபாஷினி “அம்மா! என்ன சொல்றீங்க!” என்று திகைப்புடன் கேட்டாள்.

சுசீலா “நீ இங்கே இருப்பது சரியில்லை சுபா! அந்த காயத்ரிக்கு நேர்ந்தது உனக்கு வரக் கூடாது. இதுக்கு மேலே என்னை ஓப்பனா சொல்ல வைக்காதே! என்ன தான்.. நன்றி சொல்ல கூப்பிட்டவர், நல்லா பழகுகிறவரா இருந்தாலும்.. இப்படியா.. ஏழு மணிக்கு மேலே ஒரு பெண்ணை தனியாக கூப்பிடுவார். வேண்டாம் சுபா இது ஏதோ தப்பா தெரியுது. அப்பா கிட்ட சொன்னாலும் நான் சொன்னதைத் தான் சரினு சொல்வார். குத்தகை நிலத்தை பிடுங்கினாலும் பரவாலை. ஆனா அந்த மலர்விழிக்கு நடந்த மாதிரி எதாவது நடந்திருச்சுன்னா.. எங்களால் தாங்கிக்க முடியாது.” என்றார்.

சுசீலா கூறியதைக் கேட்டு சுபாஷினிக்கு திக்கென்று இருந்தாலும்.. ரோஹீத் அவள் மீது கொண்ட காதல்.. தனது அன்னை பயம்படும் அளவிற்கு கொண்டு செல்லாது என்பது நிச்சயம்.. ஆனால் அவனும்.. முழுமை பெறாத காதலை அல்லவா அவளிடம் கேட்கிறான்.

கதிரேஷன் வந்ததும்.. சுசீலா விசயத்தை கூறவும்.. கதிரேஷனும்.. சுசீலா கூறுவதை ஆமோதித்தார். கோவையில் உள்ள சுபாஷினியின் தோழி கவிதாவிற்கு அழைப்பு விடுத்து கூறவும், அவள் தராளமாக வந்து தங்கிக் கொள்ள கூறினாள். கோவைக்கு அருகே வந்ததும்.. தெரிவித்தால்.. பஸ் நிலையத்திற்கு வந்து அழைத்து செல்வதாக கூறினாள். அந்நேரத்தில் சுபாஷினியை தனியாக அனுப்புவது சரியில்லை என்பதால்.. கதிரேஷனும் உடன் செல்வதாய் ஏற்பாடு செய்யப்பட்டது.

கதிரேஷனும் சுபாஷினியும் கோவை செல்லும் பேருந்தில் பயணித்து.. இரவு பத்து மணியளவில் கோவையை அடைந்தார்கள். அங்கு அவளது தோழி கவிதா உறுதியளித்தது போல்.. தனது தந்தையின் துணையுடன் காருடன் அவளுக்காக காத்திருந்தாள்.

கதிரேஷன் அவர்களிடம் சுபாஷினியை ஒப்படைத்துவிட்டு உடனே திரும்பி செல்கிறேன் என்றதிற்கு மறுப்பு தெரிவித்தவர்கள்.. அவரையும் உடன் அழைத்து சென்று அன்றிரவு தங்க கூறினர். சுசீலாவிற்கு ஃபோன் செய்து கதிரேஷன் பத்திரம் தெரிவித்தார். இரவு உணவும் தயார் செய்து வைத்திருந்தார்கள். கதிரேஷனுக்கு மிகுந்த திருப்தியும் நிம்மதியும் கொண்டார். சுபாஷினியின் தோழி கவிதா சுபாஷினி விடுதியில் தங்காமல் அங்கேயே தங்கி கொள்ள கூறினாள். அதை சுபாஷினியும் கதிரேஷனும் மறுத்துவிட்டனர். அன்று இரவு உறங்கிவிட்டு விடியற்காலையிலேயே எழுந்த கதிரேஷன்.. கவிதாவின் தந்தையிடம் தனிமையில் ஊரில் அவளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை கூறி.. அவளுக்கு அவர்கள் தான் இங்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றுக் கூறினார். அதற்கு அவரும் தான் சுபாஷினியை பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார். பின் கதிரேஷன் கிளம்பி ஊருக்கு சென்றுவிட.. சுபாஷினி அவளது தந்தை.. கவிதாவின் தந்தையிடம் பேசியதை நினைத்து பார்த்தாள். அந்த வழியாக சென்ற பொழுது.. அவர்கள் பேசியதை அவளால் கேட்க நேர்ந்தது. அவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

அவளை காதலிப்பவனிடம் இருந்து அவளைப் பாதுகாப்பதா!

அவன் அல்லவா.. அவளது கௌரவத்திற்கு இழுக்கு நேராமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவனோ.. என்று பெருமூச்சுவிட்டவள், அவனும் அவளை காதலிக்கிறான் என்ற நினைவு மட்டும் தனக்கு போதும் என்று முடிவு எடுத்தாள். ஆனாலும் அவன் கூறிய கடைசி வார்த்தைகள் அவளது மனது மட்டுமில்லாது மூளைக்குள் சென்று நரம்புகளை மீட்டிக் கொண்டே இருந்தது.

‘நானும் காதலிக்கிறேன்னு சொன்னதிற்கே.. இப்படி சந்தோஷப்படறீயே! என் காதலை அனுபவிக்க வேண்டாமா சுபா! உனக்கு எப்படியோ.. நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா!’

அன்று மதியம் கவிதா கோவையில் உள்ள ப்ரூக்ஃபீல்டு மாலுக்கு செல்லலாம் என்று அழைத்தாள். தனியாக இருந்தால் தான் நடக்காததை நினைத்து மனம் ஏங்குகிறது. எங்காவது வௌியே சென்றால் நன்றாக இருக்கும் என்று அவளும் சம்மதம் கூற.. இருவரும் ப்ரூக்ஃபீல்டு மாலில் சென்று இறங்கினர்.

அன்று வெள்ளிகிழமை மதிய வேளை என்பதால்.. கூட்டம் குறைவாக இருந்தது. தோழிகள் இருவரும் ஆளுக்கொரு ஐஸ்கீரிம் வாங்கிக் கொண்டு கைகோர்த்தவாறு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுபாஷினியின் கரத்தை யாரோ இழுத்து நிறுத்த சுபாஷினியின் கரத்தை கவிதாவும் பற்றியிருந்ததால்.. அவளும் நடை தடைப் பட சுபாஷினியோடு நின்றாள்.

சுபாஷினியின் கரத்தை ஒருவன் பற்றிக் கொண்டு நிற்பதைப் பார்த்து கவிதா கோபம் கொண்டவளாய் “ஏய் யார் நீ” என்ற பொழுது.. கவிதாவின் கரத்தைப் பற்றியிருந்த சுபாஷினி அவளது கரத்தை உதறிவிட்டு தனது கரத்தால் அவளது வாயை அடைத்தாள்.

“மரியாதையா பேசு கவி! அப்படியெல்லாம் அவரை பற்றிப் பேசக் கூடாது.” என்றாள். ஏனெனில் சுபாஷினியின் கரத்தை பற்றி இழுத்தவன் ரோஹீத்!

கவிதா திகைத்து நிற்கையிலேயே.. சுபாஷினியின் கரத்தை விடாது பற்றிக் கொண்டு நடக்க.. அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

அந்த மாலில் மக்கள் பொதுவாக லிப்ட் மற்றும் எக்ஸ்லேட்டரை உபயோகப்படுத்துவதால்.. ஒவ்வொரு தளத்திற்கும் ஏறி இறங்க தளத்தின் ஓரமான பகுதியில் கட்டப்பட்ட படிக்கட்டுகள் உபயோகப்படுத்த படாமல் யாருமற்று இருந்தது. ரோஹீத் சுபாஷினி இழுத்துக் கொண்டு அங்கு தான் சென்றான்.

சுபாஷினியை அங்கு கொண்டு வந்து நிறுத்தியவன், அப்பொழுது தான் கையை கவனித்தான். அவள் வாங்கிய ஐஸ்கீரிம் வழிந்து.. அவனது கையிலும் ஆகிருந்தது. அதைப் பார்த்து பதறிய சுபாஷினி “ஸாரி ஸார்!” என்று தனது கைக்குட்டையை கொண்டு அவனது கரத்தை துடைத்தாள். ஆனால் அவளிடம் இருந்து கையை விடுவிடுத்து கொண்ட ரோஹீத் அவளது கரத்தில் வைத்திருந்த ஐஸ்கீரிமை பிடுங்கி சாப்பிட ஆரம்பித்தான். சுபாஷினி திகைத்து பார்க்கையில் ரோஹீத் “என்னை மூணு தரம் இன்சல்ட் செய்துட்டே சுபா! முதல்ல என் வீட்டுல! அடுத்து கோவில்ல வெயிட் செய்ய சொன்னேன். ஏன் வெயிட் செய்யலை? உன்னை வரச் சொல்லி மாரிமுத்து கிட்ட சொல்லி விட்டேன். ஏன் வரலை?” என்றுக் கேட்டான்.

ரோஹீத் மிக அருகில் நிற்பதே சுபாஷினிக்கு ஒரு மாதிரி இருக்க.. அவனது முகத்தைப் பார்க்காது வேறு எங்கோ பார்த்தவாறு “அ.. அத்தனை பேருக்கு மத்தியில் உரிமையாய் என்கிட்ட பேசினால்.. தப்பா நெனைச்சுப்பாங்க! அதே மாதிரி நைட் ஆக போக நேரத்துல.. உங்க வீட்டுக்கு வரச் சொன்னா.. என் பெரெண்ட்ஸ் பயந்துக்க மாட்டாங்களா ஸார்! அது மட்டுமில்லாம நீங்க என்னை எதுக்குள்ளவோ இழுக்க பார்க்கறீங்க! என்னால் வர முடியாது ஸார்!” என்றாள்.

ரோஹீத் “உன்னையும் என்னையும் பற்றி அவங்களுக்கு தெரியணும் என்கிறதுக்காக தான் அப்படிப் பேசினேன். உன் பெரெண்ட்ஸுற்கும் தெரியட்டும் என்றுத் தான்.. மாரிமுத்துவை உன் வீட்டிற்கு அனுப்பினேன்.” என்று அசட்டையாக கூறினான்.

சுபாஷினி அதிர்ச்சியுடன் “என்னைப் பற்றி தப்பா நினைக்க தான்.. இப்படி செய்தீங்க என்று எப்படி உங்களால் சொல்ல முடியுது ஸார்! ஆனா நான் யாரும் உங்களை தப்பா நினைச்சுர கூடாதுனு நினைக்கிறேன் தெரியுங்களா ஸார்!” என்றாள்.

அதற்கு ரோஹீத் முறுவலுடன் “இந்த காதல் தான் என்னை உன் பக்கம் இழுத்துச்சு சுபா! அப்போ உனக்கும் எனக்கும் கெட்ட பேர் வந்துர கூடாதுனு தான் நைட்டோட நைட் இங்கே வந்தியா! எனக்கு அப்படித் தெரியலை. என்னை உதாசீனப்படுத்திட்டு இங்கே வந்த மாதிரி தெரியுது. இங்கே வந்தா.. என்னால கண்டுப்பிடிக்க முடியாதுனு நினைச்சியா.. இல்ல வர முடியாதுனு நினைச்சியா! சொல்ல போனா.. அங்கே விட இது வசதி! நம்மை பார்த்து கேள்வி கேட்க யாருமில்லை. யார் பார்ப்பாங்களோ என்று கவனமாக இருக்கவும் தேவையில்லை.” என்று தோள்களை குலுக்கினான்.

ரோஹீத் தொடர்ந்து “மாரிமுத்து வந்து.. உன் அப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும்.. இது ஒரு சாக்கு தான்னு தெரிஞ்சு போச்சு! பால்கனிக்கு வந்து நின்னு பார்த்தா.. நீயும் உன் அப்பாவும்.. வெளியே கிளம்பி வந்தீங்க! அப்பறம் உன் பின்னால் தொடர ஆள் வச்சு இங்கே வரும் வரை தெரிஞ்சுக்கிட்டேன்.” என்றான்.

உடனே சுபாஷினி அச்சத்துடன் சுற்றிலும் பார்க்கவும், “அவங்களை கட் செய்தாச்சு! இனி வேற ஏற்பாடு தான் செய்யணும். ஒருவேளை தேவையிருக்காதோ..” என்றுச் சிரித்தான்.

சுபாஷினி “எதுக்கு ஸார் இதெல்லாம்?” என்றவளின் குரலில் சிறு விரக்தி தென்பட்டது.

அதற்கு ரோஹீத் சிரித்தவாறு கையில் இருந்த ஐஸ்கீரிம் கப்பை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு “பிகாஸ் நாம் லவ் செய்ய போகிறோம். எந்த வித டிஸ்டர்ப்ன்ஸும் இல்லாம..” என்றான்.

சுபாஷினி திகைத்தவளாய் “ஸாரி ஸார்!” என்றுச் செல்ல முயலவும், அவளது கரத்தைப் பற்றி நிறுத்தியவன், “ஃகால் மீ ரோஹீத்!” என்றான்.

சுபாஷினி “வேண்டாம் ஸார்! எனக்கு ஆசையை கிளப்பிவிட்டு.. நீங்க சொன்னதிற்கு ஒத்துக்க வச்சுராதீங்க..” என்றவளுக்கு.. இன்னும் அவனது கண்களை நேராக பார்த்து பேச முடியவில்லை.

அதற்கு ரோஹீத் “என்னோட நோக்கமே அதுதான் என்கிற போது.. நான் ஏன் சும்மா இருக்கணும்!” என்றவன், அவளது முகவாயில் கையை வைத்து தனது முகத்தை பார்க்க வைத்தான்.

அத்தனை நெருக்கத்தில் அவனது கண்களை பார்த்தவளின் இதயம் தாளம் மாறி துடித்தது. ரோஹீத்திற்கும் அதே நிலை தான்! அவளது முகவாயில் இருந்த விரல்கள்.. அவளது முகவாயை இதமாக வருடியது. சுபாஷினிக்கு அடிவயிற்றில் இருந்து புயல் ஒன்று கிளம்பியது.

ரோஹீத் மெல்லிய குரலில் “எனக்கு உன் லவ் வேணும் சுபா! அதுக்கு நான் வில்லன் வேலை பார்க்க கூட ரெடி..” என்றான்.

சுபாஷினி மேலும் திகைக்கவும், ரோஹீத் நமட்டுச் சிரிப்புடன் “ஃகால் மீ ரோஹீத்..” என்றான்.

சுபாஷினி அவனது கரத்தில் இருந்து தனது முகவாயை அகற்றி வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவள், “எனக்கு பழக்கம் இல்லை ஸார்!” என்றாள்.

அதற்கு ரோஹீத் “நீ ரோஹீத் என்றுக் கூப்பிடும் வரை.. நான் கிஸ் செய்தால் என்ன செய்வே!” என்றுவிட்டு முகத்தை திருப்பி இருந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டான். திடுக்கிட்டு திரும்பியவளின் இதழ்களை பார்த்தவன், “ஃகால் மீ ரோஹீத்..” என்கவும், சுபாஷினி விக்கித்து நின்றாள். அந்நேரத்தில் பணியாளர்கள் இருவர் வரவும், ரோஹீத் மெல்ல சுபாஷினியிடம் இருந்து விலகி நின்றான்.

அவர்கள் ஒருமாதிரி சிரித்து கொண்டு போகவும், சுபாஷினி அவளும் விலகியவள், அங்கிருந்து செல்ல முயன்றாள். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. ஏனெனில் ரோஹீத் அவளது கரத்தை இறுக பற்றியிருந்தான்.

“ஸார்!” என்றவாறு அவனது பிடியில் இருந்து தனது கரத்தை விடுவித்துக் கொள்ள நினைக்கையில்.. சட்டென்று மேலும் அவனுக்கு அருகே இழுத்தவன், அவளது கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு “நீ ஸார் என்றுக் கூப்பிடுவதும் எனக்கு பிடிச்சுருக்கு! ஒருவேளை உனக்கும் பிடிச்சுருக்கோ..” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

சுபாஷினி கப்பென்று வாயை மூடிக் கொண்டாள். அப்பொழுது அவளது செல்பேசி அழைக்கவும், ரோஹீத் அவளது தோளில் மாட்டியிருந்த கைப்பையில் கைவிட்டு எடுத்தான். அதில் கவிதா என்று பெயர் காட்டியது.

ரோஹீத் சுபாஷினியிடம் அதைக் காட்டாது “உன் அம்மா பேர் என்ன?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி “சுசீலா! ஏன் கேட்கறீங்க! அவங்களா ஃபோன் போட்டிருக்காங்க! கொடுங்க..” என்று கரத்தை நீட்டினாள். ஆனால் அவளிடம் இருந்து தள்ளி சென்ற ரோஹீத் வேண்டுமென்றே அழைப்பு விடுத்திருந்த கவிதாவிடம் “ஸாரி ஆன்ட்டி! சுபா கூட இப்போ பேச முடியாது. நாங்க ஷாப்பிங் பிஸில இருக்கோம். முடிச்சதும் அவளே ஃபோன் போடுவா! அதுவரை நீங்க உங்க வேலையை பாருங்க..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அந்த பக்கம் இருந்த கவிதா “வாட்! நான் ஆன்ட்டியா!” என்று அதிர்ந்து நின்றுவிட.. சுபாஷினியோ “அச்சோ அம்மா கிட்ட என்ன பேசறீங்க! அவங்க பயந்துக்குவாங்க! கொடுங்க..” என்று அவனிடம் இருந்து செல்பேசியை வாங்க கை நீட்டிக் கொண்டு முன்னே சென்றாள். அவன் தராது கையில் வைத்திருந்த செல்பேசியுடன் பின்னால் கையை கட்டிக் கொள்ளவும், சுபாஷினி அழுது விடுபவள் போல் கெஞ்சினாள்.

அவளை வித்தியாசமாக பார்த்த ரோஹீத் “நீ என்னை லவ் செய்யறே.. உனக்கு என்கிட்ட உரிமை இருக்குனு.. யார்கிட்டயும் சொல்லிறதே! உன்னை பைத்தியம் மாதிரி பார்ப்பாங்க! என்னை லவ் செய்யறதுக்கான அறிகுறி.. உன் கண்ணிலும்.. பார்த்தால் தெரியாத மனசில் மட்டும் தான் இருக்கு! வேற எங்கேயும் இல்ல! இது தப்பாச்சே..” என்று தலையை அசைத்தான்.

ஆனால் சுபாஷினி “ப்ளீஸ் ஃபோனை கொடுங்க.. ஸா..” என்றவள், உதட்டை கடித்து வார்த்தையை நிறுத்திவிட்டு “ப்ளீஸ் தாங்க! அம்மா கிட்ட நான் பேசணும்.” என்றுக் கூறிக் கொண்டிருந்தாள்.

குறுஞ்சிரிப்புடன் அவளது செல்பேசியை ரோஹீத் நீட்டவும், அவசரமாக வாங்கியவள், ஃகால் லாக்கை பார்த்தாள். கவிதா தான் அழைத்திருந்தாள். ரோஹீத் தன்னிடம் பொய்யுரைத்து விளையாடிருப்பது தெரியவும், அவனை முறைக்க முடியாமல் “நான் போகிறேன் ஸ.. நான் போகிறேன்ங்க..” என்று அவனிடம் அனுமதி வாங்குபவள் கூறியவள், அவன் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருப்பதை சிறு சங்கடத்துடன் பார்த்தவாறு படிக்கட்டு பகுதியில் இருந்து வெளியேறினாள்.

அதற்குள் அங்கு கவிதா வந்திருக்கவும், “வா கவிதா போகலாம்.” என்றாள். ஆனால் கவிதா அவளுக்கு பின்னால் நின்றிருந்த ரோஹீத்தை சுவாரசியமாக பார்த்தவாறு “யார்டி அவன்! உன்னை லவ் செய்கிறானா!” என்றுக் கண்ணடித்தாள்.

அதைக் கேட்டு திகைத்து நின்ற சுபாஷினி “அப்படியா தெரியுது! அவர் என்னைத் தனியா இழுத்துக் கொண்டு போய் பேசியது தப்பா தெரியலையா?” என்றுக் கேட்டாள்.

அவள் கேட்டதில் இருந்த அர்த்தம் புரியாது கவிதா “தப்பாவா! செம இன்டர்ஸ்டிங்கா இருக்கு! வாவ்.. இப்படியொரு லவ்வர் வச்சுருக்கியானு இருக்கு! உன் லவ்வர் செம டி!” என்றாள்.

இந்த மாதிரி தான் அவர்கள் இருவரையும் நினைப்பார்களா.. என்ற ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில்.. அவளுக்கு பின்னால் நின்றிருந்த ரோஹீத் “தப்பா நினைப்பாங்கனு நினைச்சுட்டு நீ பார்த்தா தப்பா தான் தெரியும் சுபா! அதுனால மற்றவங்க கண்ணோட்டத்தை நீயே கெஸ் செய்யாதே!” என்றவன், தொடர்ந்து “நல்லா யோசி! நாளைக்கு பார்க்கலாம்.” என்றுவிட்டு சிறு சிரிப்புடன் அகன்றான்.

இந்த புது வித அனுபவத்தில் சுபாஷினி திகைத்து நின்றாள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15

வீட்டிற்கு வந்த பிறகும்.. ஏதோ கனவுலகில் இருப்பவள் போல்.. இருந்த சுபாஷினியை இழுத்துக் கொண்டு.. தனது அறைக்குள் நுழைந்த கவிதா, கதவை சாத்திவிட்டு அவளை படுக்கையில் அமர வைத்தவள், அவளும் அவளுக்கு முன் அமர்ந்துக் கொண்டு தலையாணியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அதில் கையை ஊன்றி.. கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு “ம்ம் சொல்லு சுபா! நான் ரெடி.. யாரும் இப்போ நம்மை டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க..” என்றாள்.

சுபாஷினி திகைப்புடன் “என்ன சொல்ல சொல்றே” என்றுக் கேட்கவும், கவிதா “உன்னை ஏன் அவசரம் அவசரமா பேக் பண்ணி அனுப்பிய கதையை தான்!” என்றாள்.

சுபாஷினி “அ.. அது..” என்று திணறவும், கவிதா “இன்னைக்கு மாலில் பார்த்தவர் நல்லா தானே இருக்கிறார். ஆளும் பார்க்கிறது பெரிய இடமாக தான் தெரியுது. அப்பறம் என்னடி கஷ்டம்! கிடைச்சுது அதிர்ஷ்டம் என்று கட்டி வைக்க வேண்டியது தானே!” என்றாள்.

அதைக் கேட்டு கசந்த முறுவல் புரிந்த சுபாஷினி “ம்ம்! ரொம்ப பெரிய இடம் தான்! அதுதான் இடைஞ்சல்.. அது மட்டுமில்ல.. அவர் என்னை காதலிப்பதும் தான் இடைஞ்சல்..” என்றாள்.

கவிதா “என்னடி சொல்றே! ரொம்ப பெரிய இடம் என்கிறதாலே.. படத்தில் எல்லாம் வருமே! பணக்கார காதலன் ஏழை காதலி என்பதால் வருமே பிரச்சினை.. அதுவா!” என்றாள்.

அதற்கு சுபாஷினி “நான்தான் அதுமட்டும் காரணமில்லனு சொன்னேனே..” என்றாள்.

கவிதா “என்ன சொன்னே!” என்று யோசித்தவள், “போடி! அவர் லவ் செய்யறது எப்படி பிரச்சினை ஆகும்?” என்றுக் கேட்டாள்.

சுபாஷினி “ஆகும் தான்! சரி இத்தனை கொஸ்டின் கேட்டே நான் பதில் சொன்னேன் தானே! நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு! எங்களைப் பார்த்தா.. லவ்வர்ஸ் மாதிரி தான் தெரிஞ்சுதா! வேற மாதிரி தப்பா தெரியலையா?” என்றுக் கேட்டாள்.

கவிதா அவளை ஒரு மாதிரி பார்த்து “என்னாச்சு உனக்கு! மாலிலும் அப்படித்தான் கேட்டே! யார் உன்னை தப்பா பேசியது? நீயும் அவரும் செம ஃபேர் தெரியுமா! மற்றவங்க ஏதோ பேசினாங்க என்கிறதுக்காக.. உன்னை லவ் செய்கிறவரை ஒதுக்காதே! அவரோட லவ்விற்கு ஒகே சொல்லிட்டு.. நீயும் லவ்விக்கோ..” என்று தலையாணி கொண்டு சுபாஷினியை அடித்து சிரித்தாள்.

கவிதா கூறுவதை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தவள், அவள் அடுத்து கூறியதைக் கேட்டு மனம் சுருங்கியது.

‘ஆம்! அவன் அவளைக் காதலிக்கிறான் தான்! ஆனால் வாழ்க்கை முழுவதிற்கும் காதலிக்க மட்டும் கேட்கிறான். அவனுடன் இருந்து திருமணமின்றி காதலிப்பதற்கு இந்த சமூகம் கொடுக்கும் பேரே வேறு! அதற்கு அவள் தனித்து இருந்தே.. அவனை காதலித்துக் கொள்வாள்.’ என்று அவளது யோசனையை முடிவிற்கு கொண்டு வந்த சமயம்.. ‘நன்றாக யோசி’ என்று அவன் கூறியது நினைவிற்கு வந்தது. ஆனால் ஏதை யோசிக்க சொல்கிறான் என்றுத் தான் அவளுக்கு பிடிப்படவில்லை.

அன்றிரவு அவன் கன்னத்தில் இட்ட முத்தங்களின் ஈரம் இன்னும் காயாதது போல்.. கன்னங்களில் ஒருவித குறுகுறுப்பை உணர்ந்தவாறே உறங்க முயன்றவளை தூக்கம் கைவிட்டது.

அடுத்த நாள்.. காலை உணவு முடித்துவிட்டு.. அவளது பெற்றோரிடம் ஃபோன் பேசிவிட்டு.. அமர்ந்திருந்த பொழுது கவிதா வெளியே போகலாம் என்று அழைத்தாள். சுபாஷினி நேற்றைய நினைவில் ரோஹீத்தை சந்திக்க நேரிடமோ என்று‌ அஞ்சி‌ மறுத்தாள். காரணத்தை யூகித்து கவிதா “சரி அவரோட லவ்வை ஏற்றுக் கொள்ளாததும்.. ஏற்றுக் கொள்வதும் உன் இஷ்டம்! இனி நான் அதில் தலையிடல! இனி நீ இங்கே இரண்டு நாள் தான் இருக்க போறே.. நானும் லீவ் முடிஞ்சு.. திங்கள் கிழமை டுயூட்டிக்கு ஜாயின் செய்திருவேன்.” என்றுக் கூறிக் கொண்டே வந்தவள், நான் வேலை செய்யற இடத்துல உனக்கு ஜாப் கேட்க சொன்னேன் தானே! ஆனா நீ கிடைக்கலைன்னு சொல்லிட்டே! அதுனால கிடைக்கிற நேரம் ஜாலியா ஸ்பென்ட் செய்யலாம்டி! ஆனா நீ!” என்று தலையில் அடித்து கொண்டாள்.

பின் தொடர்ந்து “எனக்கு தெரிஞ்சு.. அம்மா அப்பா கிட்ட.. பிரெண்ட் கூட வெளியே போறேன்னு பொய் சொல்லிட்டு.. அங்கே அவங்க லவ்வரை வரச் சொல்லி ஊர் சுத்தும் பொண்ணுங்களை தான் பார்த்திருக்கேன். ஆனா நீ அவரை அவாய்ட் செய்யற! சரி அது உன் விசயம்! இதுக்கு பதில் சொல்லு! நாம் போற இடத்தை இன்னும் நாம் டிசைட் செய்யலை. பின்னே எப்படி அந்த இடத்திற்கு உன் லவ்வர் வருவார்னு நினைக்கிறே! எதாவது ஸ்பை வச்சுருக்காரா.. நேத்து அப்படித்தான் வந்தாரா?” என்றுக் கேட்டாள்.

அதற்கு சுபாஷினி ஆம் என்று தலையை ஆட்டினாள்.

கவிதா “ஆத்தி!” என்று சன்னல் புறம் போகவும், சுபாஷினி “அவங்களை நேத்தே போக சொல்லிட்டாங்க‌‌..” என்றாள்.

கவிதா வியப்புடன் அவளைப் பார்த்து “அதென்னடி அப்படியொரு மரியாதைக்குரிய மறுப்பு! எனக்கு ஒண்ணும் புரியலை. சரி விடு! அப்பறம் என்ன! வாடி ஜாலியா வெளியே போகலாம். நீயே இடத்தை டிசைட் செய்! அதாவது உன் லவ்வர் நாம் இங்கே தான் போயிருப்போம்.. என்று கண்டுப்பிடிக்க முடியாத இடம்..” என்றாள்.

சுபாஷினி நிமிர்ந்து கவிதாவை பார்த்தாள். அவளுக்கு அவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அவள் கூறுவது உண்மை தானே எனவே “சரி கவிதா!” என்றவன், நன்றாக யோசித்து.. “லுலு மாலுக்கு வின்டோ ஷாப்பிங் போகலாமா! சுத்தி பார்க்கவே அரை நாள் ஆகும்.” என்றாள்.

உடனே குஷியான கவிதா “செம இடம்! கடைசில ஐம்பது ரூபாய் சோப்பு டப்பா மட்டும் வாங்கிட்டு வரலாம்.” என்றுச் சிரிக்கவும், சுபாஷினி உடன் சேர்ந்து சிரித்தாள்.

பின் கவிதா “ஓடி ஒளியவும்.. சரியான இடம் தான்! ஒருவேளை உன் லவ்வரை அங்கே பார்த்துட்டா.. தப்பிக்கவும் ஈஸியான இடமா தான் செலக்ட் செய்திருக்கே..” என்றுச் சிரிக்கவும், சுபாஷினி கையில் கிடைத்த தலையாணியை அவள் மேல் வீசினாள்.

பின் இருவரும் லுலு மாலுக்கு சென்றனர். டுவீலர் பார்க்கிங்ல் வண்டியை நிறுத்திவிட்டு லுலு மாலின் வாசலிற்கு வந்த போது.. அங்கு நின்றிருந்த ரோஹீத்தை பார்த்து.. அதிர்ந்த சுபாஷினி ஏதோ தோன்ற கவிதாவை பார்த்தாள். அவள் தோளைக் குலுக்கி “அந்த ஸ்பையை அனுப்பிட்டு உன் லவ்வர் என்னைத் தான் செலக்ட் செய்திருக்கிறார்.” என்றாள்.

சுபாஷினி ஆத்திரத்துடன் முறைக்கவும், கவிதா “அடிப்போடி! ஆள் ஜம்முன்னு இருக்கிறார். உன் மேலே ரொம்ப லவ்வாகவும் இருக்கிறார். அவரை கெட்டியா பிடிச்சுப்பியா.. அதை விட்டுட்டு ஓடறாலாம். நான் போறேன். என்னோட இன்னொரு செட் பிரெண்ட்ஸ் ப்ரூக்ஃபீலில் டிக்கெட்டோட வெயிட் செய்யறாங்க! நான் அங்கே போறேன். யு என்சாய்..” என்றுவிட்டு அகன்றுவிட சுபாஷினி விழித்துக் கொண்டு நின்றாள்.

விழித்துக் கொண்டு நின்றவளை நோக்கி முறுவலுடன் வந்த ரோஹீத் அவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

முதலில் விலையுர்ந்த கைப்பை இருக்கும் பிரிவிற்கு அழைத்து சென்றான். அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் சுபாஷினி எதையும் எடுக்கவில்லை. இப்படித் தனியாக அவனுடன் இருப்பது தவறு என்று மட்டும் கூறினாள். அடுத்து செல்பேசி விற்பனை செய்யும் பிரிவிற்கு அழைத்து சென்று அங்கு புது மாடல் செல்பேசி ஒன்றை அவளுக்காக தேர்வு செய்தான். சுபாஷினி.. பலமாக மறுத்துவிட்டு எழுந்துவிட்டாள். வெளியேற முயன்றவளை பற்றி நிறுத்திய பொழுதும் சுபாஷினி அதையே தான் கூறினாள்.

அடுத்து பரிசு பொருட்கள் இருந்த பகுதியிற்கு சுபாஷினி வரக் கூட மறுத்துவிட்டாள். பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு.. அங்கிருந்த ஸ்னேக்ஸ் பாரிற்கு அழைத்த போதும் அவள் மறுக்கவும், உடனே கோபம் கொண்ட ரோஹீத் “நீ என் கூட இருக்க சம்மதிக்கிறதுக்கு.. நான் கொடுக்கிற இலஞ்சம் என்று நினைச்சுட்டியா! இன்னும் கேவலமாக சொல்லப் போனால்.. நான் உன்னை விலை கொடுத்து வாங்குவதா நினைச்சுட்டியா! இல்ல நானே கீழே இறங்கி வந்து.. நீ போற இடத்திற்கு வந்து உன் பின்னால் அலையவும், நான் சீஃப்பா போயிட்டேனா..” என்றுக் காட்டத்துடன் கேட்டான்.

சுபாஷினி பதறியவளாய் “அப்படியில்லைங்க! என்கிட்ட நீங்க இப்படி உரிமை எடுத்து பழகுவது ஒரு மாதிரி இருக்கு! இந்த பழக்கத்திற்கு தப்பா பேர் வைக்க நினைக்கறீங்க.. அந்த பயமும் இருக்கு!” என்று அரண்ட விழிகளுடன் கூறினாள்.

அவளை ஒரு கணம் அழுத்தமாக பார்த்த ரோஹீத் “உன்னோட முதல் பயத்திற்கு விடை இப்போ தரேன். அடுத்த பயத்திற்கு விடை கொஞ்ச நாள் கழிச்சு தரேன்.” என்றவன், அவளது கரத்தை விடாது அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங்கிற்கு சென்றான். அவனது கருப்பு ஜாக்குவார் காரின் கதவை அவளுக்காக திறந்தவன், அதில் ஏறி அமர கூறினான்.

சுபாஷினி திகைப்புடன் “எ.. எ.. எங்கே ஸார்?” என்கவும், குறுஞ்சிரிப்புடன் “உன்னோட முதல் பயத்தை போக்க..” என்றுவிட்டு அவனே அவளை ஏற்றி அமர வைத்தவன், சுற்றி வந்து.. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவனின் கையில் அவனது வழக்கமான ஹாரன் சத்தத்துடன்.. அந்த கார் கோவை போக்குவரத்திற்குள் பயணித்து.. கோவையில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டிற்கு சென்றது. சுபாஷினி திகைப்பின் உச்சிக்கே சென்றாள்.

அவளது திகைப்பு அடங்கி.. சுற்றும் சூழ்நிலையும் உறைத்த பொழுது.. அவள் அவனது பிளட்டில் இருந்தாள்.

நடப்பதை நம்ப முடியாமல் நின்றிருந்தவளின் முன் வந்து நின்ற ரோஹீத் “உன் பயத்தை போக்கவா..” என்றுக் கேட்டான்.

சுபாஷினி திகைப்புடன் “ஸார்” என்கவும், ரோஹீத்தின் முகத்தில் குறுஞ்சிரிப்பு மலர “ஸாரா..” என்றவாறு அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான்.

ரோஹீத் அருகே வரவும்.. விதிர்த்து போய் விலகியவளை பிடித்து நிறுத்தியவன், “என் உரிமை பத்தி பேசினே தானே! உனக்கு ஒரு விசயம் தெரியுமா.. உன் மேலே உரிமை வேண்டும் என்கிறதால் தான் உன் மேலே காதலே வந்துச்சு! நான் அடிப்பட்டு வந்தப்பவே.. உன்கிட்ட உரிமையா பழக ஆரம்பிச்சதை மறந்துடாதே! நீதான் முதல்ல இருந்தே என்னை மறுத்துட்டே இருக்கே! உன் கௌரவத்தை விட்டு என்கிட்ட வர முடியாதுன்னு சொன்னே! ஆனா என் மேலே இளைய ராஜா என்ற மரியாதையையும் கௌரவத்தையும் நீதான் வச்சுட்டு இருக்கே! அதுனால தான் மனசோட காதலை வச்சுட்டு என்கிட்ட மட்டுமில்ல.. மனசு அளவிலும் நெருங்காம இருக்கே! அப்பறம் எப்படி‌ நீ என்னை‌ லவ் செய்கிறேன்னு சொல்றேன்னு தெரில! ஆனா நான் லவ் செய்வதை மட்டும் புரிஞ்சுக்கிட்டே! அந்த வகையில் எனக்கு சந்தோஷம் தான்! ஆனா என் மனசு புரிய மாட்டேன்குது. உன் மனசுல இருக்கிற மரியாதையையும்.. கௌரவத்தையும் தூக்கி ஏறிஞ்சுட்டு என்னைப் பாரு! என் மனசு புரியும், என் காதல் புரியும், என் நிலையும் புரியும். நான் அன்று பேசியதின் முழு அர்த்தமும் புரியும், என் மேல் முழு நம்பிக்கையும் வரும். என்னைப் பற்றிய பயமும் போகும். உன்கிட்ட இயல்பாக தான் நான் இருக்க முயல்கிறேன். அதுக்கு நீ ஹெல்ப் செய்யணும் சுபா! இல்லைன்னா.. உனக்கு நம்ம உறவு தப்பா தான் தெரியும். நீ என்கிட்ட இயல்பா இல்லைன்னா.. நான் உன்கிட்ட என்னோட ஆளுமையை தான் காதலாக காட்ட முடியும். இந்த மாதிரி!” என்றவன், அவளது இடுப்பை பற்றி தன்னுடன் இழுத்தவன், அவளது இதழில் அழுத்த முத்தமிட்டான்.

விழியகல அவனது தாக்குதலை எதிர்கொண்டவளின் மனசும் மேனியும் லேசாகி காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தாள். கண்கள் சொருக துவண்டவள்.. பிடிப்பிற்காக அவனையே பற்றிக் கொண்டாள். அவளிடம் இருந்து வந்த சிறு இணக்கம் கூட அவனை வெறியேற்றவும், அவளை தன்னுடன் மேலும் இறுக்கியவனும் தனது சுயநிலை இழந்தான். அடுத்து‌ என்ன நடந்திருக்குமோ.. செல்பேசி அழைப்பு இருவரையும் நடப்பிற்கு கொண்டு வந்த பொழுது.. சுபாஷினி படுக்கையில் இருக்க.. ரோஹீத் அவள் மீது படர்ந்திருந்தான். இருவரும் ஒருவருடன் ஒருவர் பின்னி பிணைந்து இருப்பதை உணர்ந்து சிறு தவிப்பும், சங்கடமுமாக பிரிந்தனர்.

ரோஹீத்தின் செல்பேசி மீண்டும் ஒலிக்கவும்.. யார் என்று‌ எடுத்து பார்த்தவனின் முகம் சுருங்கியது.

அழைப்பை ஏற்று காதில் வைத்து “சொல்லு ரேஷ்மா!” என்றான்.

ரேஷ்மா அந்த பக்கம் என்ன சொன்னாளோ..‌ முகம் இறுக அவள் பேசுவதை கேட்டவன் “நான் எங்கே இருக்கேன் என்று நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும். இப்படித்தான் நான் பாட்டிற்கு இருந்தேன். அவசரம், ஆபத்துனு கூப்பிட்டு.. என் வாழ்க்கையை மாற்றினே.. இப்பவும்.. ரொம்ப தப்பான டைமில் ஃபோன் போட்டு.. என்னைக் கூப்பிட்டு அதிகாரம் செய்யறே!” என்றான்.

அந்த பக்கம் இருந்த ரேஷ்மா என்ன கூறினாளோ.. ரோஹீத் ஆத்திரத்துடன் குறுக்கிட்டான்.

“என்ன எனக்கு கிடுக்கு பிடி போடுவதா நினைச்சுட்டாங்களா! என்னோட முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அந்த இரண்டு தான்! ஒண்ணா என்னை விடுங்க.. நான் போய் விடுகிறேன். இல்லைன்னா.. என் இஷ்டத்துக்கு விடுங்க! விட்டுக் கொடுக்கிற மாதிரி கொடுத்து என்னை சீக்கிரம் ஏமாத்திரலானு நினைச்சுக்காதீங்க.. நான் ஒன்றும் முட்டாள் இல்லை.” என்றவனின் முகம் கோபத்தில் சிவந்தது.

ரோஹீத்தின் கோபத்தை பார்த்து சுபாஷினி திகைத்தாள்.

ரேஷ்மா ஏதோ கூறுவும் அசட்டையாக தோளைக் குலுக்கியவன், “அதை எப்படிச் சீர் செய்யணும் என்று எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக்கிறேன். ஆனா என்னை எந்த விதத்திலும் வளைக்க முடியாது. அப்பறம் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன்.” என்றுக் கர்ஜித்தான்.

பின் அழைப்பைத் துண்டித்தவன், சில பெருமூச்சுகளை விட்டுத் தன்னைச் சீர் செய்துக் கொண்டான். நிமிர்ந்து பார்த்தவன், அங்கு அவனது இருவித பரிமாணங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் மிரட்சியுடன் சுபாஷினி அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், முகத்தில் முறுவலுடன் அவளருகே சென்று.. அவளது இரு காதுகளையும் பொத்தினாற் போன்று.. இரு கரத்தாலும் அவளது முகத்தை தாங்கியவன், “பயத்தை போக்கிறேன் என்றுக் கூட்டிட்டு வந்து.. மறுபடியும் பயத்தை காட்டிட்டேனோ..” என்றான்.

“இந்த பயத்தை போக்க என்ன செய்யலாம்.” என்று சத்தமாக கூறி யோசனை செய்பவன் போல் பாவனை செய்தான். சுபாஷினியின் உதடுகள் சிரிப்பதற்கு அறிகுறியாய்.. ஒரு மில்லி லிட்டர் நீண்டு.. பின் பயத்தில் சுருங்கியது. அதைக் கவனித்த ரோஹீத் தனது வலிய உதடுகளை அவளது நெற்றியில் அழுத்த பதித்து எடுத்தவன், அவளை அப்படியே தனது மார்பில் சாய்ந்துக் கொண்டான். சிறிது நேரம் அப்படியே இருந்தான். சுபாஷினியிடம் எவ்வித மறுப்பும் இல்லை. அவளுக்கு மறுக்கவும் தோன்றவில்லை.

அவனது மார்பில் சாய்ந்திருந்த சுபாஷினியின் இதயம் இரயில் தண்டவாளத்தை விட வேகமாக துடித்தது. இதைத் தான் கூறி.. அவனை விட்டு அவள் விலகினாள். அவன் கூறியதிற்கு அவளே விருப்பத்துடன் உடன் பட்டு விடுவாள் என்று அவள் அஞ்சினாள். அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. அவளால் அவனை விலக்கவும், முடியவில்லை, விலகவும் முடியவில்லை. அவளது நிலை உணர்ந்து சிறுச் சிரிப்புடன் அவளை விலக்கியவன், “போகலாமா..” என்றுக் கேட்டான்.

தற்பொழுது சுபாஷினி திகைக்கவும், ரோஹீத் “நீயே என்னைத் தேடி வரணும் என்றுச் சொன்னேன் தான்.. ஆனா இப்படியில்லை சுபா! ஞாபகம் இருக்கா.. நான் உன்கிட்ட முதலில் என்ன சொன்னேன். உன்னை டச் கூட செய்ய மாட்டேன். ஆனால் காலம் முழுவதிற்கும் நீ என் கூட இருப்பியானு கேட்டேன்.” என்று அவளது முகத்தை கூர்ந்து பார்த்தான்.

ஆனால் அவளோ.. அவனைச் சிறிதாக தோன்றிய நமட்டுச் சிரிப்புடன் பார்க்கவும், அவளது சிரிப்பிற்கு அர்த்தம் புரிந்து.. அவனும் சிரித்தான். பின் “பின்னே என்ன செய்ய! நீ என்கிட்ட நடந்துக்கிறதுக்கு ஏற்ற மாதிரி தான் நடந்துப்பேன்.” என்றுக் குறுஞ்சிரிப்புடன் கூறினான்.

பிறகு அவளது அவளை அழைத்துக் கொண்டு பிளட்டை விட்டு வெளியேறியவன், கவிதாவிற்கு ஃபோன் செய்து.. அழைத்துவிட்டு.. அவளை கவிதாவுடன் மால் தியேட்டரில் விட்டுச் சென்றான்.

சுபாஷினியை திட்ட வாயெடுத்த கவிதா.. அவளது முகத்தை கண்டு அமைதியானாள்.

சுபாஷினியின் நினைவுகள்.. சற்றுமுன்.. ரோஹீத்துடன் இருந்ததோடு ஒட்டிக் கொண்டு வர மறுத்தது. இன்னும் அவனது நெருக்கத்தையும் அழுத்தத்தையும் அவளது மேனி உணர்ந்தது. அவளது இரத்தவொட்டம் வெள்ளம் போல் பாய்ந்தோடியது. எவ்வாறு அவனோடு காரில் பயணித்து வந்தாள்.. என்று கேட்டால் அவளிடம் பதிலில்லை. அவனுக்கு எப்படியிருக்கும்.. என்பதை அறிய ஆவல் மனம் கொண்டது.

அவளது மேனில் இத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்க.. அவளது மனதின் ஒர ஓரத்தில்.. இது சரியா.. கடைசியில் அவள் பயந்து போல தானா.. என்று அஞ்சியது. ஆனால் அவனது வார்த்தைகள்.. அவளது ஒரு அச்சத்தை போக்கி.. மறு அச்சத்தை ஏற்படுத்தியது. அவளிடம் அவன் எதையோ எதிர்பார்ப்பது போன்று இருந்தது. அவனது வார்த்தைகள் எதையோ உணர்த்துவது போன்று இருந்தது. ஏதோ கட்டுப்பாடு தளர்வது போன்று இருந்தது. அவனது ஒற்றை முத்ததிற்கு இத்தனை சக்தியா என்று வியந்தாள். அவளது மனம் துள்ளுவதை.. அவளது மனவுளைச்சலாலும் சரி.. பயத்தாலும் சரி.. எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் உணவு முடிந்த பிறகும்.. அறையை விட்டு வெளியே வராமல் படுக்கையில் படுத்திருந்த சுபாஷினிக்கு இன்னும் மயக்கம் தீரவில்லை. இருமுறை கவிதா வந்து வெளியே செல்லலாமா என்றுக் கேட்டுவிட்டாள். எதற்கு என்றுத் தெரிந்த சுபாஷினி மறுப்பாக தலை அசைத்துவிட்டு குப்பற படுத்துக் கொண்டாள். மற்ற நேரத்தில் எப்படியோ.. தோழியின் முகத்தில் தெரிந்த சிவப்பு கவிதாவை வாயடைக்க செய்ய.. நமட்டுச் சிரிப்புடன் அகன்றாள். ஆனால் மூன்றாவது முறையாக வந்து பலமாக உலுக்கி எழுப்பவும், சுபாஷினி “என்னால்

அதற்கு கவிதா “சிலவற்றை தவிர்க்க முடியாது சுபா! நீ இப்போ என் கூட வரலைன்னா.. என்ன நடக்கும் என்று என்னால் கெஸ் செய்ய முடியுது. ஆல்ரெடி உன் லவ்வர் ரொம்ப நேரம் வெயிட் செய்துட்டார். அவர் வீட்டிற்குள் வந்து உன்னை தரதரனு இழுத்துக் கொண்டு போனாலும் போவார். அப்பறம் என் அப்பா உன் அப்பாக்கு கொடுத்த வாக்குபடி.. தடுத்தார்.. என்றால் என் அப்பாவை ஒரே தள்ளி தள்ளிட்டு போவது உறுதி! அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். பேசாம நீயே வந்திரு! நான் கூட்டிட்டு வரேன். நீங்க மாலில் வெயிட் செய்யுங்கனு கெஞ்சி பார்த்துட்டேன். உன்னைப்‌ பற்றி‌ நல்லா தெரிஞ்சுக்கு போல! போக மாட்டேன்கிறார். அவர் கூடத் தான் போயேன்.” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டு சுபாஷினி திகைக்கவும், அவளைப் பற்றி எழுப்பி.. அவளது தோளைப் பற்றித் தள்ளிக் கொண்டு சென்ற கவிதா அவளை பால்கனியில் நிறுத்தினாள். அங்கு வெளியே பார்த்த சுபாஷினி மேலும் திகைத்துப் போனாள்.

கவிதாவின் வீட்டிற்கு பக்கத்தில் சிறு மைதானம் உண்டு. அன்று விடுமுறை தினம் என்பதால்.. அங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு ரோஹீத்தும் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவள் பார்ப்பது உணர்ந்தானோ என்னவோ.. கையில் வைத்திருந்த மட்டையை தோளில் வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தவன், கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை காட்டி.. வா என்பது போல் சைகை காட்டிவிட்டு மீண்டும் விளையாட்டில் மும்மரமானான்.

சிலையாய் நின்றிருந்தவளை‌ பிடித்து உலுக்கிய கவிதா “சீக்கிரம் ரெடியாகு..” என்று‌ உள்ளே தள்ளிக் கொண்டு சென்றாள்.

வேறு‌வழி இல்லாமலா! அல்லது அவனுக்கு உடன்பட்டா! என்று தெரியவில்லை. சுபாஷினி விரைவிலேயே தயாராகி கொண்டு வெளியே வந்தாள்.

அவள் அங்கு வந்த பொழுது.. ரோஹீத் பீல்டிங் செய்துக் கொண்டிருந்தான். அந்த பதினொரு மணி வெயிலில் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி வெகு மும்மரமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். சட்டென்று மதிற்சுவரின் பின்னால் மறைந்துக் கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள்.

அவள் அண்ணாந்து பார்த்து பழகியவனை.. இப்படியொரு நிலையில் அவள் பார்த்தது இல்லை. என்னேரமும் அப்பொழுது தான் குளித்து வந்தவன் போன்று புத்துணர்வுடன் இருப்பான். அன்று விபத்து நடந்த போதும் சரி.. அதன்பின் ஒரு கனவில் இருந்து விழித்து தவித்த போதும் சரி.. அவளுக்கு ஒரு ராஜ்குமாரின் தவிப்பும் கலைந்த தோற்றமும் போன்று தான் இருந்தது. ஆனால் தற்பொழுது மத்திய தரப்பு குடும்பத்தை சேர்ந்தவன் போன்று அந்த இடத்திற்கு வெகு இயல்பாக பொருந்தி போயிருந்தான்.

பார்த்தறியாதவன் மேல் காதல் கொண்டு.. அவன் அவர்கள் மரியாதை செலுத்தும் நிலையில் இருக்கும் சமஸ்தானத்தை சேர்ந்தவன் என்று தெரிந்த போதும்.. தனது காதலை மாற்ற முடியாமல் திணறியவள் அவள்! ஆனால் தனது மனதில் ஆணித்தரமாக நெஞ்சில் பதித்துக் கொண்டாள். அதுவரை காதலின் பாரத்தை மட்டுமே ஏற்றிக் கொண்டே சென்றிருந்தான். ஆனால்.. நேற்று.. சில்லிட்டு போக செய்தான் என்றால்.. இன்றோ சில்லென்ற சாரலை அவன் அறியாமல் ஏற்படுத்திவிட்டான்.

அவளுக்கு முதலில் அந்த கருப்பு நிற ஜக்குவார் கார்காரன் அவனையும் அறியாமல் அவளது மனதில் ஏற்படுத்திய மெல்லிய சாரல் நினைவிற்கு வந்தது. அவளது மனதை அழுத்திக் கொண்டிருந்த காதல் பாரம் குறைந்து மனம் லேசாகி.. துள்ளாட்டம் போட்டது.

ஒரு சிறுவன் தூக்கி அடித்து பந்தை பாய்ந்து சென்று‌ விழுந்து பிடித்தான். உடனே அவனது அணி சிறுவர்கள் “ஹெ” என்று கூச்சலுடன் அவனை நோக்கி ஓடி‌ வந்தார்கள். அவனும் பந்தை பிடித்து விட்ட உற்சாகத்தில் அந்தர் பல்டி அடித்து.. வானை நோக்கி பந்தை வீசி கத்தினான். பின் தன்னை நோக்கி ஓடி வந்த சிறுவர்கள் இருவரை வாரி அணைத்து தூக்கிக் கொண்டு சுற்றினான். மணல் அழுக்கு படிந்த அவர்களது ஆடையை பற்றி அவன் கவலை கொள்ளவில்லை. விளையாடியதால் வியர்த்து கொட்டிய வியர்வையின் நாற்றத்தை பற்றி அவன் கவலை கொள்ளவில்லை. அவனது மனம் பந்தை பிடித்துவிட்ட உற்சாகத்தில் இருக்க.. அவனது உற்சாகத்தில் கலந்துக் கொண்டவர்களோடு தனது கொண்டாட்டத்தை பகிர்ந்துக் கொண்டான்.. அவ்வளவே!

அவனது முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவளது வாழ்நாள் முழுவதிற்கும் மறக்காது. அவளுக்கு அன்று.. அவன் இரசித்த விசயங்களாக கூறியது நினைவிற்கு வந்தது. இதுதான் ரோஹீத்! அவனது உண்மையான முகம் இதுதான்! ஆனால் இப்பேற்பட்டவனுக்கு.. பொறுப்பு என்னும் சுமையை கொடுத்து.. அழுத்திக் கொண்டிருப்பது புரிந்தது. அவனது மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தால் மூச்சடைத்து போகிறவன்.. அவளது நிம்மதியை தேடுவது புரிந்தது. அதுவும் தற்பொழுது.. என்று அவளது நினைவுகள் அதைச் சுற்றி செல்லுகையில்..

கவிதா “என்னடி! ஒளிஞ்சுட்டு நின்னு சைட் அடிக்கிறீயா! இதுக்கா.. வர மாட்டேன்னு பிகு செய்தே!” என்றவாறு அவளை மதிற்சுவரின் பின்னால் இருந்து வெளியே இழுத்து நிறுத்தினாள்.

அசட்டுச் சிரிப்புடன் நின்ற சுபாஷினி கவிதா இன்னும் கிண்டல் அடித்தாள். அதைக் கேட்டு நாணத்துடன் தலைகுனிந்தவளை தான் ரோஹீத் பார்த்தான்.

கவிதா தயாராகி நிற்பதைப் பார்த்து மேலும் உற்சாகம் கொண்டவனாய்.. தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் கூறிவிட்டு.. துள்ளல் நடையுடன் தனது காரிடம் சென்றான். கவிதாவின் தந்தை மதிற்சுவரிடம் வைத்திருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அவரை ஒரு பார்வை பார்த்த கவிதா ‘போ’ என்பது போல் சைகை செய்துவிட்டு.. அவளது தந்தையின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்.

இதுதான் சரியான நேரம் என்று வேக நடையுடன் வந்தவளின் குறுக்கே வந்து நின்ற கார் அவளை அதில் ஏற்றிக் கொண்டு.. அந்த தெருவை விட்டு அகன்றது.

காரை ஓட்டியவாறு ரோஹீத் முறுவலுடன் “எங்கே போகலாம்?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி மனம் அவனுக்கு எங்கு போனால் பிடிக்கும்.. என்று ஒவ்வொரு இடமாக தேர்ந்தெடு பின் கழித்துக் கொண்டிருந்தது. அவளது முகத்தை குனிந்து பார்த்த ரோஹீத் “சீக்கிரம் சொல்லிடு சுபா! இல்லைன்னா என் கார் நேரா என் பிளட்டிற்கு தான் சென்று நிற்கும்.” என்றான்.

அதைக் கேட்டு சுபாஷினியின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

அதைப் பார்த்த ரோஹீத் “என் மனசு இன்னைக்கு ரொம்ப நிறைஞ்சுருக்கு சுபா! இதுதான் என் லைஃப் என்கிற மாதிரி இருக்கு..” என்றவன், தொடர்ந்து காரை ஓட்டியவாறு “நான் ஏன் அந்த மாதிரி பெரிய சமஸ்தானத்தில் பிறந்தேன்?” என்றுச் சிரித்தான். அந்த சிரிப்பில் அத்தனை துயரம் நிறைந்து கிடந்தது.

அவன் கூறியது அந்த விதிக்கு கேட்டதோ.. அவனது செல்பேசி ஒலித்தது.
 
Status
Not open for further replies.
Top