All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரமிளா பரசுவின் "அழகிய காதல் தீயே" - கதை திரி

Status
Not open for further replies.

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9.♥ அழகிய காதல் தீயே ♥

அனைவரும் முதலில் மரகத ஏரிக்கு சென்றனர்.இந்த ஏரி தமிழ் நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்.ஏரியின் நடுவில் ஓர் நீரூற்றும் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரிகள் செய்யப்படும். இங்கே இவர்கள் அனைவரும் ஏரியின் அழகை இரசித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.அங்காங்கே அமர்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.எனவே அங்கே சென்றவர்கள் இருக்கையில் அமர்ந்து அங்கு ஏற்கனவே படகு சவாரி நடந்து கொண்டிருக்க அதையும் ஏரியை சுற்றியுள்ள இயற்கை எழிலையும் இரசித்தவாறு பேசிக் கொண்டு இருந்தனர்.

அனைவரும் போட்டிங் செல்லலாம் எனவும் விக்கியும், ராகவ்வும் சென்று அதற்கான டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர்.சிறிது நேரத்தில் இவர்களுக்கான சவாரி நேரம் வரவும் குமார், மாலா, இவர்களோடு சேர்ந்து சிவா ஒன்றிலும் , விக்கி-சாலினி ஒன்றிலும், ராகவ்- கீர்த்தி ஒன்றிலும் , விஜய்- மேகா ஒன்றிலும் என தனித்தனியாக நான்கு படகுகளில் ஏறி அமர்ந்து தங்களது படகு சவாரியை தொடர்ந்தனர்.

இங்கு விக்கி சாலினி சற்று பயத்துடன் இருக்க அவளிடம் என்ன ஆச்சுடா எதுக்காக ஒரு மாதிரி இருக்க என்று கேட்டான்.அவள் அவனிடம் , அது ஒன்னும் இல்லைங்க பஸ்ட் டைம் இப்படி போறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்.

அவள் கூறியதும் அவள் கையை பற்றியவன் அவளிடம், நீ ஒன்னும் பயப்படாத நான் தான் உங்கூடவே இருக்கேன்ல அப்புறம் என்ன வேணும்னா நாம கொஞ்சம் சுலோவா போலாம் என அவள் கையை தன் கைக்குள் வைத்தபடியே இருவரும் பேசிக்கொண்டே சவாரி செய்தனர்.

அனைவரும் தங்களது படகு சவாரியை முடித்து வரவும் அனைவரும் ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்தனர்.பின் அங்கிருந்த பூங்காவிற்கு சென்றனர்.

பூங்காவிற்கு வந்ததும் பெரியவர்கள் இருவரும் அமர்ந்து விட சிறியவர் அனைவரும் பூங்காவை சுற்றி வலம் வந்தனர்.விக்கி சாலினியை அழைத்து கொண்டு தனியாக செல்ல இங்கு கீர்த்தி மேகாவிடம் பேசியவள் அவளது படிப்பை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.அப்போது மேகா அவளிடம் அவர்களது திருமணத்தை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.

கீர்த்தியும் அவளிடம் தனக்கும் ராகவ்விற்கும் இருந்த காதலையும் அவர்களது திருமணத்தை பற்றியும் சொல்ல ஆரம்பிக்க ராகவ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

கீர்த்தி, ராகவ் இருவரும் பக்கத்து வீடு என்பதால் சிறு வயதில் இருந்தே இருவரது குடும்பமும் நல்ல நட்புடன் பழகி வர இவர்களும் தங்களது நட்பை தொடர்ந்தனர்.இவ்வாறு இவர்களது நட்பு தொடர்ந்து கொண்டிருக்க கீர்த்தியை முதல் முதலில் சேலையில் கண்டவன் அவளது அழகில் தன் மனதை அவளிடம் தொலைத்திருந்தான். இவன் அவளை ஒன்சைடாக விரும்பி கொண்டிருக்க அவளோ இவனிடம் நண்பன் என்ற முறையிலே இவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

ராகவ் தன் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்.அதே சமயம் கீர்த்தியின் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய அதை அறிந்த ராகவ் தன்னால் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என வேதனையில் இருந்தான்.கீர்த்தியின் வீட்டில் திருமணத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்க அனைவரும் தங்களது வேலையை செய்து கொண்டு இருக்க கீர்த்தியின் அண்ணன் பிரபு ராகவ் வீட்டிற்கு வந்து அவனை அழைத்து வந்தவன் அவனிடமும் திருமண வேலைகளை பார்க்குமாறு கூறினான்.ராகவ் , பிரபு இருவரும் ஒன்றாக படித்ததால் தன் நண்பன் என்ற முறையில் அவனிடம் உரிமையாக அவனிடம் வேலைகளை பார்க்குமாறு கூறினான் பிரபு.

திருமண நாள் அன்று அவளுக்கு பார்த்திருந்த மாப்பிளை அவனுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தான் ஏற்கனவே வேறு ஒரு பெண்னை விரும்புவதாகவும் கூறி லெட்டர் எழுதி வைத்து விட்டு சென்றிருந்தான்.இதை கண்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் ஏதேதோ பேசி இவர்களை மேலும் நோகடிக்க இதை கண்ட ராகவ் தன் பெற்றோரிடம் சென்று அவன் கீர்த்தியை விரும்புவதாக கூறி தானே அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறவும் , அவனின் பெற்றோரும் அவனை புரிந்து கொண்டு தன் மகனுக்காக கீர்த்தியின் பெற்றோரிடம் சென்று தன் மகனுக்கு அவளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கவும் அவர்களும் யோசித்து இறுதியில் ராகுவிற்கு கீர்த்தியை திருமணம் செய்து வைத்தனர்.

ராகவ்வும் கீர்த்தியிடம் தான் அவளை விரும்பியதை கூறிவிட்டான்.இதை கேட்டவள் அவன் தன்னை காதலித்ததை நினைத்து மகிழ்ந்தாள். திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதை கூறி முடித்து ராகவ்வை பார்க்க அவன் இவளை காதலுடன் பார்த்து கொண்டிருந்தான்.இவர்களது பார்வையை கண்ட மற்றவர்கள் இருவருக்கும் தனிமையை அளித்து விலகி சென்றனர்.

சிவா, விஜய், மேகா மூவரும் பேசிக் கொண்டு இருக்க சிவாவிற்கு போன் வரவும் அவன் போனை எடுத்து கொண்டு இருவரிடமும் சொல்லி விட்டு போன் பேச சென்று விடவும் இவர்கள் இருவரும் அப்படியே பூங்காவில் சிறிது நேரம் நடக்கலாம் என கூறி நடந்து கொண்டிருக்கும் போது விஜய் அவளை பார்த்து கொண்டு அமைதியாக நடந்து வந்தான்.

அவன் அமைதியாக இருக்கவும் மேகா அங்கிருந்த இருக்கையில் சென்று அமர அவனும் சென்று அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.அவனிடம், என்ன ஆச்சு மாமா எதுக்காக திடீர்னு அமைதியாகிட்டிங்க அப்படி எதப்பத்தி யோசிக்கிறிங்க என கேட்டாள்.

அவள் தன்னிடம் கேட்டதும் அவளிடம் முதலில் ஒன்னுமில்ல சும்மா என்றதும் அவனை நம்பாமல் பார்த்து ஓஓ என்று மட்டும் கூறினாள்.அவள் அவ்வாறு கூறவும் விஜய் அவளிடம் சரி நாம போலாமா எல்லாரும் வந்து இருப்பாங்க எனவும் அவனுக்கு தன்னிடம் எதுவும் கூற விரும்பவில்லை போல என்று நினைத்துக்கொண்டு அவளும் சரி போலாம் என்றான்.

பின் அனைவரும் மாலா- குமார் இருந்த இடத்திற்கு வந்தனர்.மதிய உணவை அங்குள்ள ஹோட்டலில் முடித்தவர்கள் மாலை வரை அங்கிருந்தகுளுமையை அனுபவித்தவாறு பேசிக்கொண்டும் இருந்தவர்கள் அருகில் இருந்த சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு சென்றனர்.சிறியவர்கள் அனைவரும் சிறு பிள்ளைகளாக மாறி அங்கிருந்த ஊஞ்சல், சறுக்கு மரம் அனைத்திலும் மாறி மாறி விளையாடினார்கள்.

மாலை ஐந்து மணிக்கு மேல் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் நோக்கி சென்றனர்.அங்கு சென்றதும் விக்கி சாலினியை அழைத்து கொண்டு ஹோட்டல் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்து சென்றான்.அங்கு சென்றவன் அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி தந்தான்.அவளும் தன் கணவன் வாங்கி தந்த அனைத்தையும் மகிழ்ச்சியாக வாங்கி கொண்டாள்.

மாலை மயங்கி இரவு சூழும் நேரம் விக்கி அனைவரையும் ரெடியாகி வருமாறு கூறினான். அனைவரும் ரெடியாகி வரவும் அனைவரையும் அழைத்து கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேடிசீட் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு சென்றவர்கள் நுழைவு சீட்டுகள் வாங்கி கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.அங்கு அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

லேடிசீட் இந்த இடம் ஏற்காட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இங்கே தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரை கண்டு ரசிக்கலாம்.அதுவும் இரவு நேரங்களில் மலையில் இருந்து பார்த்தால் சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.வானிலை சரியாக இருந்தால் இங்கிருந்து மேட்டூர் அணையை கூட பார்க்க முடியும்.

இங்கு இவர்கள் அனைவரும் தொலைநோக்கி மூலம் பார்த்தவர்கள் இரவு நேரத்தில் ஒளி வெளிச்சத்தில் அவ்விடம் ஜொலிப்பதை கண்டு அதனை கண்டு மகிழ்ந்தனர். அவ்விடம் முழுவதும் அவ்வளவு அழகாக காட்சி அளித்தது.பின் அனைவரும் கிளம்பி தங்களது அறைக்கு சென்றனர்.

மறுநாள் காலை அருவிக்கு சொல்வதால் தேவையான உடைகளை எடுத்து வைத்து கொள்ளுமாறு கூறவும் அவர்களும் அதனை எடுத்து கொண்டு கீழே வந்தனர்.பின் அனைவரும் கிள்ளியூர் அருவிக்கு சென்றனர்.

கிள்ளியூர் அருவி : இந்த இடம் ஏற்காட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மழை காலங்களில் இங்கு தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படும்.அப்போது அங்கு சென்றால் மிகவும் நன்றாக இருக்கும்.

அருவிக்கு வந்தவர்கள் ஆர்ப்பரித்த கொட்டும் அருவியை பார்த்து மகிழ்ந்தனர்.அவ்வருவியை பார்த்ததும் அனைவருக்கும் உடனே அதில் சென்று ஆட்டம் போட தோன்றியது.

அங்கிருந்து கிளம்பி பக்கோட பாயிண்ட் என்னும் இடத்திற்கு சென்றனர்.அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அப்படியே சேர்வராயன் மலை கோவில் சென்றனர்.

மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது.ஒரு மெல்லிய குகையில் உள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் , சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டது.

அங்கு சென்றவர்கள் கடவுளை வணங்கி விட்டு அங்கிருந்து தெரியும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

இவ்வாறு அங்கிருந்த ஒரு வாரமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று மகிழ்ந்தனர்.பின் அனைவரும் ஊருக்கு செல்லலாம் என கிளம்பி வரும் போது கீர்த்தி தலை சுற்றி மயக்கம் அடைந்தாள்.அவள் மயக்கம் அடையவும் பதறிய ராகவ் என்ன செய்வது என தெரியாமல் நிற்க மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனதென்று பார்க்குமாறு கூறினார்.அவனும் கீர்த்தியின் நாடியை பிடித்து பார்த்தவன் பின் கீர்த்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளது மயக்கத்தை தெளிய வைத்தான்.

அவள் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்ததும் தான் மற்றவர்கள் சிறிதளவு நிம்மதி அடைந்தனர்.மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனது என்று கேட்க அவனோ ராகவ் அருகில் சென்று அவனது கையை பற்றி அவனுக்கு வாழ்த்து கூறினான்.மாலாவிற்கு புரிந்து விட அவர் கீர்த்தியின் அருகில் சென்று அவளிடம் கேட்டு தனது சந்தேகத்தை உறுதி செய்தவர் ராகவ்வை பார்க்க அவன் என்னவென புரியாமல் நிற்க மாலா அவனிடமும் மற்றவர்களிடமும் கீர்த்தி கர்ப்பமாக உள்ளதை கூறினார்.

அவர் கூறியதை கேட்ட ராகவ் தன் மனைவியை அனைத்து கொண்டான்.பின் மற்றவர்கள் அனைவரும் அவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அதே மகிழ்ச்சியுடன் அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.

விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.சாலினி இறுதி ஆண்டும், மேகா இரண்டாம் ஆண்டில் இருந்தனர்.விக்கியும் , சாலினியும் தங்களது வாழ்வை சந்தோசமாகவும்,காதலுடனும் கழித்தனர்.

அன்று காலை எழுந்ததில் இருந்து சாலினி வருத்தமாகவே இருந்தாள்.அனைவரும் காலை ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க மாலா சாலினியிடம் ,என்ன ஆச்சுமா எதுக்காக டல்லா இருக்க உடம்பு எதுவும் சரியில்லையா என கேட்டார்.

அவர் கேட்டவுடன் சாலினி அவரிடம் , அது உடம்பு நல்லாதான் இருக்கும்மா என்றாள்.குமார் அவளிடம் அப்புறம் எதுக்காக எப்படியோ இருக்க சாலினிமா என்றார்.உடனே சாலினி இன்னைக்கு அம்மாவோட நினைவு நாள் அப்பா எனக்கு அம்மா ஞாபகமாக இருக்கு என்றாள்.

விக்கியின் வீட்டில் உள்ள யாரும் இதுவரை சாலினியின் பெற்றோர்களை பற்றி கேட்டதில்லை .அவர்களுக்கு இருவரின் பெற்றோரும் தற்போது உயிரோடு இல்லை என்பது மட்டுமே தெரியும் மற்றபடி அவர்களது பெற்றோர் காதல் திருமணம் செய்ததால் அவர்களுக்கு சுற்றம் என யாரும் இல்லை என்பது மட்டுமே தெரியும்.

ஆனால் இன்று சாலினி தன் அன்னையின் நினைவு நாள் என கூறவும் ஏனோ குமாரின் மனது துடித்தது. அவரோ எதை பற்றியோ நினைத்து கொண்டிருந்தார்.

காதல் தீ வளரும்....

(Tq for your supporting frds🙏🙏🙏😊😊😊)
 
Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
10.♥ அழகிய காதல் தீயே ♥

குமார் எதை பற்றியோ யோசித்துக் கொண்டு இருந்தவர் சாலினியிடம் அவளது அன்னையின் பெயரை கேட்டார்.அவள் தன் அம்மாவின் பெயர் தமயந்தி என கூறவும் அவரது மனம் படபடத்தது.இருந்தும் அது தான் நினைத்தவராக இருக்க கூடாது என்று மனதில் நினைத்து கொண்டே மீண்டும் அவளிடம் அவளது தாயின் முழுப்பெயரை கேட்டார்.அவர் திரும்ப திரும்ப சாலினியிடம் அவளது தாயை பற்றி கேட்கவும் மாலாவும் மற்றவர்களும் எதுக்காக இவர் இப்படி கேட்டு கொண்டு இருக்கிறார் என்று நினைத்தனர்.

சாலினியும் தன் மனதில் கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகுது ஆனா இதுவரை இவர்கள் யாரும் அவளது குடும்பத்தை பற்றி எதுவும் கேட்கவில்லை , அப்படி இருக்க இன்று அவளது மாமனார் இன்று அவளது தாயின் நினைவு நாள் என்று கூறியதும் திடீரென எதையோ யோசித்துக் கொண்டு இருந்தவர் அவளிடம் அவளது தாயின் பெயரை கேட்டதும் இவளும் பதில் சொல்ல அவரோ இன்னும் யோசனையுடன் அவளது தாயின் முழுப்பெயரை கேட்டதும் என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக தன் தாயின் முழுப்பெயர் ' தமயந்தி தேவி ' என்றாள்.

சாலினி சொல்லிய பெயரைக் கேட்டதும் அவரது கண்கள் கலங்கியது.இருந்தும் அவர் தான் நினைப்பவரும் சாலினியின் அம்மாவும் ஒரே ஆளாக இருக்க கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டார்.ஆனால் பாவம் அப்போது அவர் அறிந்திருக்கவில்லை அவர்கள் இருவரும் ஒன்று தான் என்று.குமார் சாலினியிடம் , உங்க அம்மா போட்டோ உன்கிட்ட இருக்கா என கேட்க அவளும் இவர் எதற்காக கேட்கிறார் என்று புரியாமல் அவரிடம், ம்ம் இருக்குப்பா என்றாள்.

அவள் போட்டோ தன்னிடம் இருக்கிறது என கூறியதும் அந்த போட்டோவை உடனே தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.அவளும் சரி என தனதறைக்கு சென்று கபோர்டில் வைத்திருந்த தன் அன்னையின் போட்டோவை எடுத்தவள் அந்த போட்டோவில் உள்ள தன் அம்மாவின் படத்தை வருடியவள் அதை தன் மாமாவிடம் காட்டுவதற்காக கீழே எடுத்து வந்தாள்.

அவள் கீழே வரும்வரை மிகவும் பதட்டமாக இருந்தவரை பார்த்த விக்கி தன் தந்தையிடம் , அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு எதுக்காக இவ்வளவு டென்ஷனா இருக்கிங்க என கேட்டதற்கு அவர் கொஞ்ச நேரம் இருப்பா சொல்றேன் என கூறிவிட்டு மாடியையே பார்த்து கொண்டு இருந்தார்.அங்கிருந்த மற்ற மூன்று பேரும் என்னவாக இருக்கும் என தெரியாமல் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.

சாலினியும் போட்டோவை எடுத்து கொண்டு கீழே வந்தாள்.அவள் கீழே வந்த அடுத்த நொடி அவளிடம் ,அந்த போட்டோவை இங்கதாம்மா என்றார்.அவளும் சரி என அவரருகில் சென்று தன் கையில் வைத்திருந்த தன் அம்மாவின் படத்தை அவரிடம் நீட்டினாள். அவள் நீட்டிய அந்த போட்டோவை தன் கைகள் நடுங்க அவளிடம் இருந்து வாங்கினார்.

அந்த போட்டோவை அவளிடம் இருந்து வாங்கியவர் உலகில் உள்ள எல்லா தெய்வத்தையும் வேண்டிக்கொண்டு தன் கையில் வைத்திருந்த போட்டோவை திருப்பி பார்த்தார்.

அதை பார்த்து குமாரின் கண்கள் கலங்க தன் கண்களை அழுந்த தேய்த்து கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த போட்டோவை பார்த்தவர் மயங்கி சரியவும் அதே நேரம் தன் தந்தையின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனித்து கொண்டு இருந்த விக்கி அவர் மயங்கி சரிவதை பார்த்தவன் உடனே அவரது அருகில் சென்று அவரை தாங்கி பிடித்து அப்படியே அந்த சோஃபாவில் அவரை படுக்க வைத்தான்.

அவர் மயங்கி விழவும் மாலா அழுதவாறே அவரது அருகில் சென்று அவரை எழுப்பி கொண்டு இருக்க அவர் சிறிதும் அசையாமல் மயக்க நிலையில்லே இருந்தார்.உடனே மேகா உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து தர விக்கி அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவரது மயக்கம் தெளியாமல் இருப்பதை பார்த்த சாலினி உடனே தன் அண்ணனுக்கு போன் செய்தாள்.

இன்று தன் அம்மாவின் நினைவு நாள் என்பதால் அவருக்கு வருடந்தோறும் கொடுக்கும் திதியை காலை எழுந்தவுடன் கோவிலுக்கு சென்று தன் தாய்க்கு திதியை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தவன் இன்று தன் அம்மாவின் நினைவாக இருக்கவும் லீவ் சொல்லி விட்டு வீட்டில் இருந்தான்.அப்போது தான் சாலினி விஜய்க்கு போன் செய்தாள்.

தன் தங்கையிடம் இருந்து போன் வரவும் ஆன் செய்யவும் சாலினி அவனிடம்,' அண்ணா மாமா திடீர்னு மயக்கம் ஆகிட்டாரு தண்ணீ தெளிச்சு எழுப்பினாலும் எந்திரிக்கல நீ சீக்கிரம் வீட்டுக்கு வாண்ணா 'என்று கூறி போனை வைத்தவள் விக்கியிடம் சென்று விஜய்க்கு போன் செய்து அவனை வர சொன்னதை பற்றி கூறினாள்.

பின் தனது மாமனாரின் அருகில் சென்று நின்றவள் அவரது கையில் இறுக்கமாக தன்னோடு சேர்த்து அனைத்தவாறு இருந்த தன் அன்னையின் படத்தை அவரின் பிடியில் இருந்து எடுத்தவள் தன் தாயின் படத்தையும் தன் மாமாவையும் பார்த்தவள் தன் அம்மாவிடம் உனக்கும் மாமாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்குனு தெரியல உன்னோட படத்தை பார்த்து ஏன் மாமா அழுதாறு , மயங்கி விழுந்தார்னு ஒன்னுமே புரியல ம்மா என்று தன் அம்மாவிடம் தன் மனதிற்குள் பேசிக் கொண்டு இருந்தாள்.

சாலினி போன் செய்த சிறிது நேரத்தில் விஜய் விக்கியின் வீட்டிற்கு வந்தடைந்தான்.அவன் வந்தவுடன் விக்கி அவனிடம், ' மச்சா அப்பாக்கு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் பாருடா பயமா இருக்கு ' என்றான்.விக்கி கூறியதும் விஜய் அவனது தோளை தட்டி டேய் நீ ஒன்னும் கவலப்படாம இருடா நா என்னனு பாக்குறேன் மாமாக்கு எதுவும் ஆகாது என தன் மச்சானிடம் ஆறுதல் சொல்லி விட்டு குமாரை செக் செய்ய ஆரம்பித்தான்.

அவரை செக் செய்து தேவையான ஊசியை போட்டுவிட்டு விக்கியிடம் ,ஒன்னும் இல்லடா மாமா ரொம்ப எமோஷனல் ஆகிட்டார் போல அதான் அவருக்கு பிபி அதிகமாகி மயக்கம் வந்து இருக்கு என்றவன் இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சுடுவாறு என்றான்.விஜய் கூறியதை கேட்டதும் தான் அனைவரும் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர்.

பின்பு விஜய் தன் தங்கையிடம் , 'உனக்கு இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா எனவும் அவளும் இருக்கு என்றவள் இன்று காலையில் நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினாள் '.அவள் கூறிய அனைத்தையும் கேட்டவன் அவளிடம் அப்போ மாமா நம்ம அம்மாவோட போட்டோவை பார்த்து தான் மயக்கம் ஆகிட்டாரா? என்று கேட்டான்.

சாலினியும் ஆமா அண்ணா என்றவள் அவனிடம் உனக்கு நம்ம அம்மா பற்றி வேற எதாவது தெரியுமா என்றாள்.அவனும் ஏதோ சொல்ல வரவும் அதே நேரம் சரியாக குமார் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்க்கவும் இதை பார்த்த மேகா விஜய்யை அழைத்து மாமா அப்பா கண் முழிச்சுட்டாங்க எனவும் விஜய் அவர் அருகில் சென்று அவரை செக் செய்தவன் இப்போ மாமாக்கு எல்லாம் நார்மலா இருக்கு என்றான்.

பின் விக்கியும், விஜய்யும் அவரை கீழே இருந்த அவரது அறைக்கு அழைத்துச் சென்று அவரை கட்டிலில் வசதியாக அமர வைத்தனர்.மற்ற அனைவரும் இவரை பார்த்து கொண்டு இருக்க ,அவரோ விஜய், சாலினி இருவரையும் இன்று தான் முதல் முறை பார்ப்பதை போல் அண்ணன் தங்கை இருவரையும் கண்களில் நீர் வழிய பார்த்து கொண்டு இருந்தார்.

குமார் அவர்களையே பார்த்து கொண்டு இருக்க விஜய் தான் அவர் அருகில் சென்று, ' மாமா என்ன மாமா எதுக்காக எங்க இரண்டு பேரையும் இப்படி புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க என்றான் '. இதுவரை விஜய்யும் , சாலினியும் தன்னை இதுவரை மாமா என்று அழைத்த போது அவருக்கு தோன்றாத உணர்வு இன்று அவன் அவ்வாறு அழைக்கும் போது ஏற்பட்டது.உடனே தன் அருகில் அமர்ந்து இருந்த விஜய்யை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டவர், சாலினியையும் பார்த்து தன் அருகில் வருமாறு அழைத்தார்.அவள் வரவும் அவளது தலையை வருடியபடி விஜய், சாலினி இருவரையும் தன்னுடன் சேர்த்து அனைத்து கொண்டார்.இதை பார்த்து மற்றவர்கள் குழப்பமாக இருக்க விக்கி அவனின் தந்தையிடம் அப்பா உங்களுக்கு ஏற்கனவே இவங்களோட அம்மாவ உங்களுக்கு தெரியுமா என்றான்.

அதை கேட்ட குமார் இவங்க அம்மாவ எனக்கு எப்படி தெரியாம போகும் எனவும் , அனைவரும் இவரை என்ன என்பதை போல் பார்க்க அதை கண்டவர் என்னோட 'அக்காவ' எனக்கு எப்படி தெரியாம போகும் என்றார். அவரது 'என்னோட அக்கா ' என்ற வார்த்தையை கேட்டு விஜய்யும், சாலினியும் அவரை திகைத்து பார்த்தனர்.விஜய் தான் முதலில் தெளிந்து அவரிடம் என்ன மாமா சொல்றிங்க எங்க அம்மா உங்க அக்காவா என நம்ப முடியாமல் கேட்டான்.ஆமாம் என கூறியவர் தங்களது கடந்த காலத்தை பற்றி கூற ஆரம்பித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் என்னும் கிராமத்தில் தான் குமாரின் தந்தை இராஜேந்திரனின் குடும்பம் வசித்து வந்தனர்.இராஜேந்திரன் தான் அவ்வூரின் தலைவர் என்பதால் எப்போதும் ஊர் பிரச்சனைகளை பார்த்து கொண்டு இருக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும்.இவரது மனைவி கோமதி அவருக்கு தன் கணவனையும் , தனது இரண்டு பிள்ளைகளையும் கவனிக்கவே சரியாக இருக்கும்.

இராஜேந்திரன்- கோமதி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள்.ஒரு மகள், ஒரு மகன்.மகள் தமயந்தி தேவி, மகன் குமார்.இவர்களது வீட்டில் அனைவரும் அவளை தமயந்தி என அழைப்பதை விட தேவி என்றுதான் அழைப்பர்.தேவி அவளது வீட்டில் அனைவருக்கும் செல்லமாக வளர்ந்த பெண்.குமார் தேவியை விட மூன்று ஆண்டுகள் சிறியவன்.தேவிக்கு தன் தம்பி குமார் என்றால் மிகவும் பிடிக்கும்.வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் குமாரை தன்னுடனே இருக்குமாறு பார்த்துக் கொள்வாள்.அதே போல் குமாருக்கும் தன் அக்கா என்றால் மிகவும் பிடிக்கும்.அவளிடம் எதையும் மறைக்க நினைக்க மாட்டான்.அவளை தனது இன்னொரு அம்மாவாகவே நினைப்பான்.

தேவி சிறு வயதில் இருந்தே பார்க்க அழகாகவும் , அமைதியான பெண்ணாக இருப்பதால் அவளை பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துவிடும்.இவளும் அனைவருடனும் நன்கு பழகுவாள்.இப்படி இருக்க அவள் தனது பள்ளி படிப்பை முடிக்கவும் அவளது உறவினர்கள் இவளது பெற்றோரிடம் இவளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்குமாறு கூறினார்கள்.

இதை அறிந்த தேவி தன் பெற்றோரிடம் இப்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்றும் தான் மேலே கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசை படுவதாகவும் கூறி எப்படியோ தனது தந்தையை சம்மதிக்க வைத்தாள்.இராஜேந்திரன் அவள் படிக்க சம்மதம் தெரிவிக்கவும் உடனே கல்லூரியில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படிக்க ஆசைப்பட்டு அதையே தேர்ந்தெடுத்தாள்.ஒரு மாதம் எந்த பாதிப்பும் இன்றி கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள் தேவி.அவளது வாழ்வை மாற்றும் நிகழ்வு வரப் போவதை அறியாமல் தனது தம்பியுடன் விளையாடி கொண்டும் , வீட்டில் உள்ளவர்கள் மூலம் அதிகமான பாசத்தை அனுபவித்து கொண்டும் இருந்தாள்.

தேவி தனது கல்லூரியின் முதலாம் ஆண்டு படிப்பை முடித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாள்.அதே சமயம் தனது இளங்கலை படிப்பை முடித்து விட்டு முதுகலை படிப்பை தொடரவென தேவி படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்தான் இளங்கோ.அன்று தான் தேவியின் வாழ்வு மாற ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டது விதி.இருவரும் ஒரே பேருந்தில் தான் கல்லூரி செல்ல வேண்டும்.இளங்கோ வந்து சேர்ந்த இரண்டு வாரம் எந்த விதமான மாற்றம் இன்றி சென்று கொண்டிருந்தது.

குமாரும் தனது பள்ளி படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தான்.அவனுக்கு அவனது அக்கா தேவி தான் அவனது முதல் தோழி அதன் பிறகே மற்ற நண்பர்கள்.இப்பழக்கத்தை சிறு வயதில் குமார் மாற்றி கொள்ளவில்லை.இவ்வாறு அழகாக சென்று கொண்டு இருந்தது இவர்களது வாழ்க்கை.

அன்று காலை கல்லூரிக்கு கிளம்பிய தேவி பேருந்திற்காக காத்திருந்தாள்.சிறிது நேரத்தில் பேருந்து வர அதில் ஏறிக்கொண்டாள்.பேருந்து இவர்களது ஸ்டாப்பை தண்டி அடுத்த ஸ்டாப்பில் நிற்க அந்த கூட்டத்தில் உள்ளே நுழைந்து இவள் அருகில் வந்து நின்றான் இளங்கோ .அவள் அருகில் வந்தவன் தனது கையில் இருந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்து வைத்திருக்குமாறு கூறினான்.அவளும் உதவி தானே என நினைத்து அவளும் சரி என அவனிடம் இருந்து வாங்கி வைத்தாள்.

இவ்வாறு தொடங்கியது இவர்களது நட்பு.நாட்கள் செல்ல செல்ல இளங்கோ தேவியின் மீது காதல் கொண்டான்.அதே போல் தேவியும் அவனது குணத்தை கண்டு இவளும் அவள் மீது காதல் கொண்டாள்.எனவே இவர்களது உறவு நட்பை தாண்டி காதல் என்னும் அழகிய உறவை தொடர்ந்தது.இருவரும் தங்களது படிப்பை முடித்த அன்று இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டு இருப்பதை கண்டவர்கள் இராஜேந்திரனிடம் கூற அவரும் ஊராரின் பேச்சைக் கேட்டு அவரும் தன் மகளிடம் கூட விசாரிக்காமல் இளங்கோவை அடிக்க ஏற்பாடு செய்தார்.

அவரது ஆட்களும் அவர் கூறியபடி அவனை அடித்து இழுத்து வந்தனர்.அவர்களை தேவியும் இளங்கோவும் எவ்வளவோ தடுத்தும் அவர்களால் முடியவில்லை.எனவே வந்தவர்கள் அவர்களை அழைத்து கொண்டு சென்றனர்.அங்கு சென்றதும் அவள் அவளது தந்தையிடம் எவ்வளவு எடுத்து சொல்லி இளங்கோவை விட்டு விடுமாறு கூறியும் அவர் இவளின் பேச்சை கேட்பதாக இல்லை.இறுதியில் தன் தந்தையை எதிர்த்து பேசி இளங்கோவை அழைத்து கொண்டு அவ்வூரை விட்டே சென்று விட்டாள்.அன்றுதான் குமார் தனது அக்காவை இறுதியாக பார்த்தது.அதன் பிறகு இரண்டு வருடத்திற்கு பின் இராஜேந்திரன் தன் மகள் தன் பேச்சை கேட்காமல் ஊராரின் முன்பு தன்னை அவமானம் படுத்தி சென்று விட்டாள் என்று நினைத்து கவலை பட்டே தன் உயிரை துறந்தார்.

குமார் தான் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு சென்று தன் அன்னையை பார்த்துக் கொண்டார்.அவரது அன்னை கோமதிக்கும் எப்படியாவது தன் மகளை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தார்.பின் குமாருக்கு மாலாவை திருமணம் செய்து வைத்தவர் தன் மகளை பார்க்காமலே இறைவனடி சேர்ந்தார்.குமார் தான் தன் தாய் இறந்த பின் அங்கு இருக்க பிடிக்காமல் தன் மனைவியை அழைத்து கொண்டு சென்னை வந்தடைந்தார்.

சென்னைக்கு வந்தவர் அயராது உழைக்க ஆரம்பித்தார்.இவர்களுக்கு விக்கியும் , மேகாவும் பிறந்தனர்.அதன் பின் இவர் உழைப்பால் முன்னேறி இன்று சொந்தமாக தொழிற்சாலை நடத்தி வருகிறார்.வருடங்கள் பல கடந்தாலும் குமாரின் மனதில் தனது அக்காவை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று தினமும் நினைத்து கொண்டிருப்பார்.

ஆனால் இன்றோ அவரது அக்கா இறந்து விட்டாள் என தெரியவும் அவரால் அதிர்ச்சி அடையாமல் வேறு என்ன செய்ய முடியும் .அதுவும் இன்றி தன் அக்காவின் பிள்ளைகள் அவர்களது பெற்றோரின் இறப்பிற்கு பிறகு யாரும் இல்லாமல் இவ்வளவு நாட்களாக அவர்கள் இருவரும் எவ்வளவு துன்பம் அடைந்திருப்பார்கள் என நினைத்தவாறே தன் அக்காவின் பிள்ளைகளை தன் மருமகன் , மருமகளையும் தன்னோடு அனைத்து விடுவித்தவர் இதை அனைத்தையும் கூறி முடித்தார்.

குமாருடன் அந்த இடத்தில் இருந்து வெளிவந்த தேவி அவனோடு சேர்ந்து அவனது வீட்டிற்கு சென்றனர்.அங்கு இளங்கோவின் அம்மா இவர்களை ஏற்க மறுக்க அங்கிருந்து இளங்கோ தன் நண்பனின் உதவியுடன் சென்னை வந்தடைந்தவன் ஒரு கோவிலில் வைத்து தேவியை திருமணம் செய்து கொண்டார்.

அந்த நண்பன் மூலமாக ஒரு வீடு ஏற்பாடு செய்து அங்கே தங்கினார்கள்.பின் இளங்கோ தான் படித்த படிப்பின் உதவியால் அங்கிருந்த ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.இவர்கள் இருவரது வாழ்வும் நன்றாக சென்றது .தேவிக்கு தான் தன் தம்பி குமாரின் நினைவாகவே இருக்கும்.அப்போது எல்லாம் இளங்கோ தான் தன் மனைவியை சமாதானம் செய்வார்.இப்படியே அழகாக இவர்களது வாழ்க்கை சென்று கொண்டு இருக்க ஆறு வருடங்கள் கழித்து இவர்களுக்கு விஜய் பிறந்தான்.பின் இவர்களது அழகான சிறிய குடும்பத்தில் மீண்டும் நான்கு வருடங்களுக்கு தேவதையாக வந்தவள் தான் சாலினி.

காதல் தீ வளரும்.....

Tq for your supporting frds🙏🙏😊😊
 
Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9.♥ அழகிய காதல் தீயே ♥

அனைவரும் முதலில் மரகத ஏரிக்கு சென்றனர்.இந்த ஏரி தமிழ் நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்.ஏரியின் நடுவில் ஓர் நீரூற்றும் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரிகள் செய்யப்படும். இங்கே இவர்கள் அனைவரும் ஏரியின் அழகை இரசித்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.அங்காங்கே அமர்வதற்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.எனவே அங்கே சென்றவர்கள் இருக்கையில் அமர்ந்து அங்கு ஏற்கனவே படகு சவாரி நடந்து கொண்டிருக்க அதையும் ஏரியை சுற்றியுள்ள இயற்கை எழிலையும் இரசித்தவாறு பேசிக் கொண்டு இருந்தனர்.

அனைவரும் போட்டிங் செல்லலாம் எனவும் விக்கியும், ராகவ்வும் சென்று அதற்கான டிக்கெட்டுகளை வாங்கி வந்தனர்.சிறிது நேரத்தில் இவர்களுக்கான சவாரி நேரம் வரவும் குமார், மாலா, இவர்களோடு சேர்ந்து சிவா ஒன்றிலும் , விக்கி-சாலினி ஒன்றிலும், ராகவ்- கீர்த்தி ஒன்றிலும் , விஜய்- மேகா ஒன்றிலும் என தனித்தனியாக நான்கு படகுகளில் ஏறி அமர்ந்து தங்களது படகு சவாரியை தொடர்ந்தனர்.

இங்கு விக்கி சாலினி சற்று பயத்துடன் இருக்க அவளிடம் என்ன ஆச்சுடா எதுக்காக ஒரு மாதிரி இருக்க என்று கேட்டான்.அவள் அவனிடம் , அது ஒன்னும் இல்லைங்க பஸ்ட் டைம் இப்படி போறது அதான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்.

அவள் கூறியதும் அவள் கையை பற்றியவன் அவளிடம், நீ ஒன்னும் பயப்படாத நான் தான் உங்கூடவே இருக்கேன்ல அப்புறம் என்ன வேணும்னா நாம கொஞ்சம் சுலோவா போலாம் என அவள் கையை தன் கைக்குள் வைத்தபடியே இருவரும் பேசிக்கொண்டே சவாரி செய்தனர்.

அனைவரும் தங்களது படகு சவாரியை முடித்து வரவும் அனைவரும் ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்தனர்.பின் அங்கிருந்த பூங்காவிற்கு சென்றனர்.

பூங்காவிற்கு வந்ததும் பெரியவர்கள் இருவரும் அமர்ந்து விட சிறியவர் அனைவரும் பூங்காவை சுற்றி வலம் வந்தனர்.விக்கி சாலினியை அழைத்து கொண்டு தனியாக செல்ல இங்கு கீர்த்தி மேகாவிடம் பேசியவள் அவளது படிப்பை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.அப்போது மேகா அவளிடம் அவர்களது திருமணத்தை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தாள்.

கீர்த்தியும் அவளிடம் தனக்கும் ராகவ்விற்கும் இருந்த காதலையும் அவர்களது திருமணத்தை பற்றியும் சொல்ல ஆரம்பிக்க ராகவ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

கீர்த்தி, ராகவ் இருவரும் பக்கத்து வீடு என்பதால் சிறு வயதில் இருந்தே இருவரது குடும்பமும் நல்ல நட்புடன் பழகி வர இவர்களும் தங்களது நட்பை தொடர்ந்தனர்.இவ்வாறு இவர்களது நட்பு தொடர்ந்து கொண்டிருக்க கீர்த்தியை முதல் முதலில் சேலையில் கண்டவன் அவளது அழகில் தன் மனதை அவளிடம் தொலைத்திருந்தான். இவன் அவளை ஒன்சைடாக விரும்பி கொண்டிருக்க அவளோ இவனிடம் நண்பன் என்ற முறையிலே இவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

ராகவ் தன் படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்.அதே சமயம் கீர்த்தியின் வீட்டில் அவளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்ய அதை அறிந்த ராகவ் தன்னால் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என வேதனையில் இருந்தான்.கீர்த்தியின் வீட்டில் திருமணத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்க அனைவரும் தங்களது வேலையை செய்து கொண்டு இருக்க கீர்த்தியின் அண்ணன் பிரபு ராகவ் வீட்டிற்கு வந்து அவனை அழைத்து வந்தவன் அவனிடமும் திருமண வேலைகளை பார்க்குமாறு கூறினான்.ராகவ் , பிரபு இருவரும் ஒன்றாக படித்ததால் தன் நண்பன் என்ற முறையில் அவனிடம் உரிமையாக அவனிடம் வேலைகளை பார்க்குமாறு கூறினான் பிரபு.

திருமண நாள் அன்று அவளுக்கு பார்த்திருந்த மாப்பிளை அவனுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தான் ஏற்கனவே வேறு ஒரு பெண்னை விரும்புவதாகவும் கூறி லெட்டர் எழுதி வைத்து விட்டு சென்றிருந்தான்.இதை கண்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் ஏதேதோ பேசி இவர்களை மேலும் நோகடிக்க இதை கண்ட ராகவ் தன் பெற்றோரிடம் சென்று அவன் கீர்த்தியை விரும்புவதாக கூறி தானே அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறவும் , அவனின் பெற்றோரும் அவனை புரிந்து கொண்டு தன் மகனுக்காக கீர்த்தியின் பெற்றோரிடம் சென்று தன் மகனுக்கு அவளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கவும் அவர்களும் யோசித்து இறுதியில் ராகுவிற்கு கீர்த்தியை திருமணம் செய்து வைத்தனர்.

ராகவ்வும் கீர்த்தியிடம் தான் அவளை விரும்பியதை கூறிவிட்டான்.இதை கேட்டவள் அவன் தன்னை காதலித்ததை நினைத்து மகிழ்ந்தாள். திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதை கூறி முடித்து ராகவ்வை பார்க்க அவன் இவளை காதலுடன் பார்த்து கொண்டிருந்தான்.இவர்களது பார்வையை கண்ட மற்றவர்கள் இருவருக்கும் தனிமையை அளித்து விலகி சென்றனர்.

சிவா, விஜய், மேகா மூவரும் பேசிக் கொண்டு இருக்க சிவாவிற்கு போன் வரவும் அவன் போனை எடுத்து கொண்டு இருவரிடமும் சொல்லி விட்டு போன் பேச சென்று விடவும் இவர்கள் இருவரும் அப்படியே பூங்காவில் சிறிது நேரம் நடக்கலாம் என கூறி நடந்து கொண்டிருக்கும் போது விஜய் அவளை பார்த்து கொண்டு அமைதியாக நடந்து வந்தான்.

அவன் அமைதியாக இருக்கவும் மேகா அங்கிருந்த இருக்கையில் சென்று அமர அவனும் சென்று அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.அவனிடம், என்ன ஆச்சு மாமா எதுக்காக திடீர்னு அமைதியாகிட்டிங்க அப்படி எதப்பத்தி யோசிக்கிறிங்க என கேட்டாள்.

அவள் தன்னிடம் கேட்டதும் அவளிடம் முதலில் ஒன்னுமில்ல சும்மா என்றதும் அவனை நம்பாமல் பார்த்து ஓஓ என்று மட்டும் கூறினாள்.அவள் அவ்வாறு கூறவும் விஜய் அவளிடம் சரி நாம போலாமா எல்லாரும் வந்து இருப்பாங்க எனவும் அவனுக்கு தன்னிடம் எதுவும் கூற விரும்பவில்லை போல என்று நினைத்துக்கொண்டு அவளும் சரி போலாம் என்றான்.

பின் அனைவரும் மாலா- குமார் இருந்த இடத்திற்கு வந்தனர்.மதிய உணவை அங்குள்ள ஹோட்டலில் முடித்தவர்கள் மாலை வரை அங்கிருந்தகுளுமையை அனுபவித்தவாறு பேசிக்கொண்டும் இருந்தவர்கள் அருகில் இருந்த சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு சென்றனர்.சிறியவர்கள் அனைவரும் சிறு பிள்ளைகளாக மாறி அங்கிருந்த ஊஞ்சல், சறுக்கு மரம் அனைத்திலும் மாறி மாறி விளையாடினார்கள்.

மாலை ஐந்து மணிக்கு மேல் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் நோக்கி சென்றனர்.அங்கு சென்றதும் விக்கி சாலினியை அழைத்து கொண்டு ஹோட்டல் அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்து சென்றான்.அங்கு சென்றவன் அவளுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி தந்தான்.அவளும் தன் கணவன் வாங்கி தந்த அனைத்தையும் மகிழ்ச்சியாக வாங்கி கொண்டாள்.

மாலை மயங்கி இரவு சூழும் நேரம் விக்கி அனைவரையும் ரெடியாகி வருமாறு கூறினான். அனைவரும் ரெடியாகி வரவும் அனைவரையும் அழைத்து கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேடிசீட் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு சென்றவர்கள் நுழைவு சீட்டுகள் வாங்கி கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.அங்கு அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

லேடிசீட் இந்த இடம் ஏற்காட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இங்கே தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரை கண்டு ரசிக்கலாம்.அதுவும் இரவு நேரங்களில் மலையில் இருந்து பார்த்தால் சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும்.வானிலை சரியாக இருந்தால் இங்கிருந்து மேட்டூர் அணையை கூட பார்க்க முடியும்.

இங்கு இவர்கள் அனைவரும் தொலைநோக்கி மூலம் பார்த்தவர்கள் இரவு நேரத்தில் ஒளி வெளிச்சத்தில் அவ்விடம் ஜொலிப்பதை கண்டு அதனை கண்டு மகிழ்ந்தனர். அவ்விடம் முழுவதும் அவ்வளவு அழகாக காட்சி அளித்தது.பின் அனைவரும் கிளம்பி தங்களது அறைக்கு சென்றனர்.

மறுநாள் காலை அருவிக்கு சொல்வதால் தேவையான உடைகளை எடுத்து வைத்து கொள்ளுமாறு கூறவும் அவர்களும் அதனை எடுத்து கொண்டு கீழே வந்தனர்.பின் அனைவரும் கிள்ளியூர் அருவிக்கு சென்றனர்.

கிள்ளியூர் அருவி : இந்த இடம் ஏற்காட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மழை காலங்களில் இங்கு தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படும்.அப்போது அங்கு சென்றால் மிகவும் நன்றாக இருக்கும்.

அருவிக்கு வந்தவர்கள் ஆர்ப்பரித்த கொட்டும் அருவியை பார்த்து மகிழ்ந்தனர்.அவ்வருவியை பார்த்ததும் அனைவருக்கும் உடனே அதில் சென்று ஆட்டம் போட தோன்றியது.

அங்கிருந்து கிளம்பி பக்கோட பாயிண்ட் என்னும் இடத்திற்கு சென்றனர்.அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு அப்படியே சேர்வராயன் மலை கோவில் சென்றனர்.

மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டிருந்தது.ஒரு மெல்லிய குகையில் உள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் , சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டது.

அங்கு சென்றவர்கள் கடவுளை வணங்கி விட்டு அங்கிருந்து தெரியும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

இவ்வாறு அங்கிருந்த ஒரு வாரமும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று மகிழ்ந்தனர்.பின் அனைவரும் ஊருக்கு செல்லலாம் என கிளம்பி வரும் போது கீர்த்தி தலை சுற்றி மயக்கம் அடைந்தாள்.அவள் மயக்கம் அடையவும் பதறிய ராகவ் என்ன செய்வது என தெரியாமல் நிற்க மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனதென்று பார்க்குமாறு கூறினார்.அவனும் கீர்த்தியின் நாடியை பிடித்து பார்த்தவன் பின் கீர்த்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளது மயக்கத்தை தெளிய வைத்தான்.

அவள் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்த்ததும் தான் மற்றவர்கள் சிறிதளவு நிம்மதி அடைந்தனர்.மாலா விஜய்யிடம் அவளுக்கு என்ன ஆனது என்று கேட்க அவனோ ராகவ் அருகில் சென்று அவனது கையை பற்றி அவனுக்கு வாழ்த்து கூறினான்.மாலாவிற்கு புரிந்து விட அவர் கீர்த்தியின் அருகில் சென்று அவளிடம் கேட்டு தனது சந்தேகத்தை உறுதி செய்தவர் ராகவ்வை பார்க்க அவன் என்னவென புரியாமல் நிற்க மாலா அவனிடமும் மற்றவர்களிடமும் கீர்த்தி கர்ப்பமாக உள்ளதை கூறினார்.

அவர் கூறியதை கேட்ட ராகவ் தன் மனைவியை அனைத்து கொண்டான்.பின் மற்றவர்கள் அனைவரும் அவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அதே மகிழ்ச்சியுடன் அனைவரும் சென்னை வந்தடைந்தனர்.

விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.சாலினி இறுதி ஆண்டும், மேகா இரண்டாம் ஆண்டில் இருந்தனர்.விக்கியும் , சாலினியும் தங்களது வாழ்வை சந்தோசமாகவும்,காதலுடனும் கழித்தனர்.

அன்று காலை எழுந்ததில் இருந்து சாலினி வருத்தமாகவே இருந்தாள்.அனைவரும் காலை ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க மாலா சாலினியிடம் ,என்ன ஆச்சுமா எதுக்காக டல்லா இருக்க உடம்பு எதுவும் சரியில்லையா என கேட்டார்.

அவர் கேட்டவுடன் சாலினி அவரிடம் , அது உடம்பு நல்லாதான் இருக்கும்மா என்றாள்.குமார் அவளிடம் அப்புறம் எதுக்காக எப்படியோ இருக்க சாலினிமா என்றார்.உடனே சாலினி இன்னைக்கு அம்மாவோட நினைவு நாள் அப்பா எனக்கு அம்மா ஞாபகமாக இருக்கு என்றாள்.

விக்கியின் வீட்டில் உள்ள யாரும் இதுவரை சாலினியின் பெற்றோர்களை பற்றி கேட்டதில்லை .அவர்களுக்கு இருவரின் பெற்றோரும் தற்போது உயிரோடு இல்லை என்பது மட்டுமே தெரியும் மற்றபடி அவர்களது பெற்றோர் காதல் திருமணம் செய்ததால் அவர்களுக்கு சுற்றம் என யாரும் இல்லை என்பது மட்டுமே தெரியும்.

ஆனால் இன்று சாலினி தன் அன்னையின் நினைவு நாள் என கூறவும் ஏனோ குமாரின் மனது துடித்தது. அவரோ எதை பற்றியோ நினைத்து கொண்டிருந்தார்.

காதல் தீ வளரும்....

(Sorry frds late updateku . Pls give your support 🙏🙏🙏😊😊)
 
Status
Not open for further replies.
Top