All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரமிளா பரசுவின் "அழகிய காதல் தீயே" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை இத்தளத்தில் அறிமுகம் செய்து வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி சகி.

நான் பிரமிளா பரசு. தேனி மாவட்டத்தை சேர்ந்தவள். படித்தது ஆங்கில இலக்கியம் .ஆனால் சிறு வயது முதலே கதைகள் படிப்பதில் ஆர்வம் கொண்டவள். எப்படியாவது கதை எழுத வேண்டும் என நீண்ட நாள் ஆசை.அது இப்போது நிறைவேறி உள்ளது.

எனக்கும் எனது கதைகளுக்கும் உங்களது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எனது எழுத்து பயணத்தை இங்கு தொடர்கிறேன். மிக்க நன்றி சகோக்களே🙏🙏🙏😊😊😊😊😊
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17223

1 .♥ அழகிய காதல் தீயே♥



காலை எழுந்தவுடன் ஜாக்கிங் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் விக்கி என்ற விக்னேஸ்வரன். உள்ளே வந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவனது தங்கை மேகாவை வம்பிழுக்க ஆரம்பிக்க அவளும் பதிலுக்கு தன் அண்ணனுடன் வம்பிழுத்துக் கொண்டு இருந்தாள்.இவர்களது சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து கையில் காப்பியுடன் வெளியே வந்தார் இவர்களது தாய் மாலா.

தன் அன்னை வருவதைக் கண்ட விக்கி எதுவும் தெரியாத நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு தன் தாயை காண அவரோ வழக்கம் போல் தன் மகனை எதுவும் சொல்லாமல் அவனிடம் காப்பியை கொடுத்து விட்டு தன் மகளை நோக்கி அவளிடம், எதுக்குடி எப்ப பாரு அவன்கூட வம்பிழுத்துகிட்டு இருக்க? என்று கேட்க அவளோ அவரிடம் ,ஐயோ அம்மா நான் ஒன்னும் வம்பிழுக்கல உன்னோட அருமை மகன் தான் என்கிட்ட பஸ்ட் சண்டை போட்டான் எனக்கூறி சினுங்க அண்ணன், தங்கை இருவரையும் பார்த்து முறைத்த மாலா இருவரிடமும் முதல்ல போய் இரண்டு பேரும் குளிச்சிட்டு ரெடியாகி வாங்க என கூறி இருவரையும் அவரவர் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு சமையல் வேலையை கவனிக்க சென்றார்.

குமார் - மாலா தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு மகன், ஒரு மகள்.மகன் விக்கி என்ற விக்னேஸ்வரன் M.A, M.philமுடித்து விட்டு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியராக பணியாற்றுகிறான்.மகள் மேகா பள்ளி கல்வியை முடித்து விட்டு தன் அண்ணன் பணியாற்றும் கல்லூரியிலே இவளும் B.A English முதலாம் ஆண்டு சேர்ந்து உள்ளாள் நாளை முதல் இவளுக்கு கல்லூரி ஆரம்பமாகிறது.குமார் சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.மாலா குடும்பத் தலைவி.

மாலா காலை உணவை தயார் செய்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு மகனுக்கு தேவையான மதிய உணவை லன்ஸ்பாக்ஸில் எடுத்து வைத்து விட்டு வர அப்பாவும் மகளும் ஏதோ பேசிய படி டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தனர்.அவர்கள் இருவருக்கும் உணவை எடுத்து வைத்து கொண்டு இருக்கும் போதே விக்கியும் மேலே தனது அறையில் இருந்து இறங்கி கீழே வந்தான்.வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற பேன்ட் அணிந்து அதை இன் செய்த படி வந்த மகனை பார்த்த மாலா புன்னகையுடன் அவனுக்கும் காலை உணவை பரிமாறினார்.

சாப்பிட்டு முடித்ததும் விக்கி சிறிது நேரம் அம்மா, அப்பா, தங்கையுடன் பேசி விட்டு தன் கார் சாவியையும் , காலேஜ் கொண்டு செல்லும் பையையும் எடுத்துக் கொண்டு அம்மா ,அப்பாவிடம் சொல்லி விட்டு தன் தங்கை மேகாவிடம் நாளைக்கு இதே நேரம் நீயும் காலேஜ் கிளம்ப ரெடியா இரு குரங்கு என கூறி அவளிடம் இரண்டு அடியை வாங்கி விட்டு காலேஜ் கிளம்பி செல்ல குமாரும் ஆபிஸ் கிளம்பினார்.அவர்கள் இருவரும் சென்ற பின் அம்மா ,மகள் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

காலேஜ் வந்தடைந்த விக்கி காரை பார்க் செய்து விட்டு ஆபிஸ் ரூம் சென்று கையெழுத்து போட்டு விட்டு மூன்றாவது மாடியில் உள்ள தனது பகுதியான English Department வந்து அங்கிருந்த மற்ற ஆசிரியர்களிடம் பேசி விட்டு தனது டேபிளில் வந்து அமர்ந்தவன் அன்றைய வகுப்பிற்கு தேவையான புக்ஸை எடுத்து வைத்து விட்டு தனது நண்பனும் தன்னுடன் பணியாற்றும் சக ஆசிரியரான ராகவிடம் பேசிக்கொண்டு இருக்க காலை வகுப்புகள் தொடங்குவதற்கான மணி அடிக்க தனது கிளாஸ் ரூம் நோக்கி சென்றான்.இன்று தான் விடுமுறை முடிந்து இரண்டாம் ,மூன்றாம்வருட மாணவர்களுக்கு காலேஜ் தொடங்கி உள்ளது நாளை முதல் வருட மாணவர்களுக்கு ஆரம்பம் என்பதால் விக்கி B.A செகன்ட் இயர் கிளாஸ் சென்றான்.

விக்கி கிளாஸிற்குள் நுழையவும் மாணவர்கள் எழுந்து நின்று விஷ் செய்யவும் இவனும் சிரித்துக் கொண்டே விஷ் செய்து விட்டு அனைவரையும் உட்கார சொல்லி விட்டு தான் கொண்டு வந்த புக்கை டேபிளில் வைத்து விட்டு மாணவர்களிடம் பேசத் தொடங்கினான்.லீவ் எப்படி போனது எனகேட்டு விட்டு மாணவர்களிடம் சில அறிவுரைகள் கூறி விட்டு அவர்களிடம் கிளாஸ் ஆரம்பிக்கலாமா எனக் கேட்க அவர்களும் ஆர்வத்துடன் சரி என்றனர்.ஏனெனில் அவனது சொல்லித்தரும் முறை மாணவர்களை மிகவும் ஆர்வமாக பாடத்தை கவனிக்கும் படி எளிதாகவும் அனைவருக்கும் புரியும்படியும் இருப்பதால் மாணவர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக பாடத்தை கவனிப்பார்கள்‌.எனவே இந்த டிபார்ட்மெண்ட் மற்றும் இன்றி இவன் செல்லும் வேறு டிபார்ட்மெண்ட் மாணவர்களும் கூட இவனது வகுப்பை எதிர் பார்த்து காத்திருப்பார்கள் அவ்வளவு ஆர்வத்துடன். மொத்தத்தில் அந்த காலேஜில் விக்கிக்கு என ஒரு தனி இடமும் மாணவர்களிடம் அவனுக்கென ஒரு தனி மரியாதையும் உண்டு.

இப்படியே அன்று காலேஜ் முடிய மாலை வீட்டிற்கு வந்தவன் தனது அறைக்கு சென்று பிரஷ் ஆகி உடை மாற்றிக் கொண்டு கீழே வர மாலா அவனுக்கு டீயை கொண்டு வந்து தர அதை குடித்து விட்டு மொபைலை பார்த்து கொண்டு இருக்க அவனருகே வந்த மேகா அவனது செல்லை பிடிங்கி கொள்ள உடனே அண்ணன்,தங்கை இருவரும் தங்களது சண்டையை ஆரம்பித்தனர்.காலேஜில் இருக்கும் விக்கிக்கும் வீட்டில் தங்கையுடன் சிறு பிள்ளை போல சண்டையிடும் விக்கிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி காலேஜில் பொறுப்பான ஆசிரியனாகவும், மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பவன் வீட்டிலோ சிறு பிள்ளை போல் தன் தங்கையுடன் டாம்&ஜெர்ரி போல அவளுடன் சண்டை போட்டு கொண்டு உள்ளான்.இவர்கள் சண்டையிடுவதை பார்த்த மாலா அவர்கள் அருகில் சென்று இருவரது காதையும் திருகியவாறு இருவரிடமும் என்ன ஏதேன்று கேட்டு இவர்களது பஞ்சாயத்தை தீர்த்து வைத்தார்.

மாலை ஆறு மணிக்கு மேல் தனது அறையில் இருந்து வந்த விக்கி பைக் சாவியை எடுத்து கொண்டு பிரண்டை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றான்.வீட்டில் இருந்து வந்தவன் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று அவனது நண்பனுக்காக காத்திருந்தான்.சிறிது நேரத்திற்கு பிறகு காலேஜில் அவனுடன் படித்த நண்பன் சிவா விக்கியை தேடி அவன் இருக்கும் இடத்திற்கு வந்தான். சிவா வந்தவுடன் அவனை வரவேற்ற விக்கி அவனை உட்கார சொல்லி பேச ஆரம்பித்தான்.சிவா M.A முடித்து விட்டு அவனது அப்பா மற்றும் அண்ணனுடன் சேர்ந்து தங்களது பிசினஸ் பார்க்க சென்று விட்டான் . இருந்தாலும் இருவரும் தினமும் மேசஜ் , போன் மூலம் பேசிக்கொண்டும் அடிக்கடி சந்தித்தும் தங்களது நட்பை தொடர்கின்றனர்.இருவரும் பேசி முடித்த பின் சிவா டைம் ஆவதாக கூறி கிளம்பினான்.

சிவா கிளம்பியதும் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து எழுந்து வர அப்போது அங்கே சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்த பெண் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த விக்கியின் மீது வந்து மோத அவனும் அவள் கீழே விழாமல் இருக்க அவளை பிடித்து கொண்டான்.தான் யார் மீதோ மோதியதும் கீழே விழ போன தன்னை விழாமல் தன்னை பிடித்ததையும் உணர்ந்தவள் அவனிடமிருந்து விலகி தன் கண்ணை கட்டியுள்ள துணியை கழட்டி விட்டு தன் எதிரே உள்ளவனை பார்த்தாள்.அவனும் தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவள் அவனை பார்த்து சாரி சார் என்றாள். அவளையே பார்த்துக் கொண்டு இருந்த விக்கி தன்னிலை அடைந்து அவளிடம் என்ன என்று கேட்கவும் மீண்டும் அவனை பார்த்து விட்டு இடித்ததற்காக சாரி என்றும் கீழே விழாமல் பிடித்ததற்காக தேங்ஸ்ம் கூறினாள்.

அவள் தன்னிடம் சாரி&தேங்ஸ் கூறவும் அவளை பார்த்து புன்னகைத்த விக்கி அவளிடம் இட்ஸ் ஓகே என கூறி பார்த்து கவனமா விளையாடுங்க என கூறி விட்டு அவ்விடத்தை விட்டு சென்றான்.அவன் சென்றதும் அவளும் அவன் சென்ற திசையை பார்த்து தனக்குள் சிரித்துவிட்டு குழந்தைகள் அருகில் சென்று அவர்களுடன் விளையாட ஆரம்பித்தாள். அவளிடம் இருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்த விக்கி பைக்கை நிறுத்தி விட்டு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைய அவன் சிரித்துக் கொண்டே வருவதை பார்த்த மேகா அவனிடம் என்ன அண்ணா நீயா தனியா சிரிச்சுகிட்டே வர என்ன ஆச்சு எனக் கேட்க அவனும் அவளிடம் பார்க்கில் நடந்ததை கூறினான். அவன் கூறியதைக் கேட்ட மேகா அவனிடம் என்ன பார்த்ததும் அந்த பொண்ணு மேல உனக்கு சம்திங் சம்திங்கா என கேட்கவும் அவன் அவளது தலையில் கொட்டி அது எல்லாம் ஒன்னும் இல்ல எனக்கூறி தனது அறைக்கு சென்று விட்டான்.

மறுநாள் காலை எழுந்தவுடன் என்றும் இல்லாத ஒரு புது வித உணர்வுடன் ஜாக்கிங் சென்று விட்டு குளித்து ரெடியாகி கீழே வந்து சாப்பிட்டு முடித்ததும் மேகாவை அழைத்து கொண்டு காலேஜ் கிளம்பினான்.காலேஜ் வந்ததும் மேகாவை இறக்கி விட்டு மேலே மூன்றாவது மாடியில் உள்ள டிபார்ட்மெண்ட் போகுமாறு கூறி அவளை அனுப்பி விட்டு காரை பார்க் செய்ய சென்றான். காரை நிறுத்தி விட்டு வந்து கொண்டிருந்த விக்கியின் மீது தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு திரும்பிய பெண் இவன் மீது மோதி நின்றாள்.அவன் மீது மோதிய அப்பெண் அவனை பார்க்க அதிர்ந்து போய் அவனையே பார்த்தாள்.அவனும் அதே போல் அவளை பார்த்து அதிர்ந்தான் , ஏனெனில் அவன் மீது மோதிய அப்பெண் நேற்று பார்க்கில் மோதிய அதே பெண் என்பதால் இருவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதில் இருந்து மீண்டவன் அவளை பார்த்து சிரித்து விட்டு ஆபீஸ் சென்று விட்டு தனது டிபார்ட்மென்ட் நோக்கி சென்றான்.

வகுப்பு ஆரம்பிப்பதற்கு மணி அடிக்கவும் வகுப்பிற்கு சென்றான் .அவனுக்கு இன்று முதல் வகுப்பே B.A பஸ்ட் இயர் .அவன் உள்ளே வர அனைவரும் எழுந்து விஷ் செய்து விட்டு அமர அவனும் தலையசைத்து அவர்களை பார்த்து புன்னகைத்தான்.பின் மாணவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடமும் அவர்களது பெயரை கேட்டு பேசிக் கொண்டு இருக்க மேகாவோ தன் அண்ணனை ஏதோ புதிதாக பார்ப்பதை போல் பார்த்தாள் . அவளின் முறை வரவும் எழுந்து முன்னால் வந்தவள் தன்னை அறிமுகம் செய்து கொள்ள அவனும் மற்றவர்களிடம் கேட்பதை போல் இவளிடமும் கேட்டு மாணவர்களின் அறிமுக வகுப்பு முடிய இரண்டாவது வகுப்பிற்கான மணியும் அடிக்க அவர்களிடம் இருந்து விடைபெற்று அடுத்த வகுப்பிற்கு சென்றான் ‌

அடுத்ததாக M.A பஸ்ட் இயர் வகுப்பிற்கு வர அங்கு நேற்று மாலையும், இன்று காலையும் பார்த்த அதே பெண் அந்த வகுப்பில் இருப்பதை கண்டவன் தன் மனதில் ஓஓ இவ நம்ம டிபார்ட்மெண்ட் தானா என்று நினைத்து கொண்டான்.அவளும் அதே போல் இவனை பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.மாணவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடமும் கேட்டு கொண்டு இருக்க அப்பெண்ணும் எழுந்து முன்னாள் வர அவளிடம் அவளது பெயரை கேட்டான் விக்கி.அவன் கேட்கவும் அவள் தனது பெயர் சாலினி எனக்கூறி தன்னை பற்றி கூறத் தொடங்கினாள்.சாலினி B.A,B.Ed முடித்து விட்டு ஒருவருடம் பள்ளியில் ஆசிரியையாக இருந்ததாக கூற அதைக் கேட்ட விக்கியும் , மாணவர்களும் பிறகு எதற்காக மீண்டும் படிக்க வந்து உள்ளாள் என கேட்க அவளேம் தான் M.phil,P.hd படிக்க வேண்டும் என ஆசை என்பதால் வேலையை விட்டு விட்டு மீண்டும் படிக்க வந்துள்ளதாக கூறினாள்.இதைக் கேட்ட விக்கி அவளை பார்ட்ட மாணவர்களும் அவளிடம் வாழ்த்தை கூறினார்கள்.


காதல் தீ வளரும்.......
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2 . ♥ அழகிய காதல் தீயே ♥




விக்கி சாலினி சொல்லியதை கேட்டு அவளை பாரட்டி முடிக்க மாணவர்களுக்கான பாட திட்டத்தை கூறி முடித்து வகுப்பு முடியவும் நாளை முதல் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம் என்று கூறி விட்டு தனது டிபார்ட்மென்ட் நோக்கி சென்றான்.அவன் சென்றதும் மாணவிகள் சாலினியுடன் பேசத் தொடங்கினார் .அவளுடன் பேசத் தயங்கிய ஒரு சில மாணவிகளும் கூட அவள் அனைவருடனும் ஜாலியாக பேசுவதை பார்த்து அவர்களும் இவர்களுடன் இணைந்து பேசிக்கொண்டு இருந்தனர்.


மாலை காலேஜ் முடியவும் மேகா விக்கி வருவதற்காக காத்து கொண்டு இருந்தாள்.அவன் வந்தவுடன் அவளிடம் காரை எடுத்து வருவதாக கூறிவிட்டு பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றான்.அங்கு சாலினியும் தனது ஸ்கூட்டியை எடுப்பதற்காக வரவும் இருவருக்கும் காலையில் நடந்த மோதல் நினைவிற்கு வர இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.பின் இருவரும் அவரவர் வண்டியை எடுக்க சென்றனர். விக்கி காரை எடுக்க சென்றதும் மேகா அங்கிருந்து சற்று வெளியே வந்து விக்கிக்காக காத்திருந்தாள்.அவன் வரவும் இவளும் வண்டியில் ஏற வீட்டை நோக்கி சென்றனர்.


விக்கி மேகாவிடம் இன்று முதல் நாள் எப்படி போனது எனக் கேட்க அவளும் அதைப் பற்றி கூறி விட்டு அவனிடம் ,டேய் அண்ணா இன்னிக்கு கிளாஸ்ல எல்லாரும் உன்ன பத்தி தான்டா பேசிட்டு இருந்தாங்க அதுவும் எங்க கிளாஸ் கேர்ள்ஸ் எல்லாம் சேர்ந்து உனக்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சுடுவாங்க போல எனக்கூறி சிரித்தாள். அது மட்டுமின்றி அவனிடம் நீ காலேஜ்ல நடந்துக்கறத பார்த்து எனக்கே நீ என்னோட அண்ணன் தானனு எனக்கு கன்பியூஸ் ஆகிட்டேன் என்றும் கூறினாள்.அவள் கூறியதைக் கேட்ட விக்கி சிரித்துக் கொண்டே அவளிடம் இப்பவாவது உன்னோட அண்ணனோட அருமை பெருமைகளை பார்த்து தெரிஞ்சுக்கடி என கூறினான்.இப்படியே பேசிக்கொண்டே இருவரும் வீட்டிற்கு வந்தடைந்தனர்.


சாலினியும் தனது வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றவள் காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தனது வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினாள்‌.வீட்டிற்கு வந்தவள் வண்டியை நிறுத்தி விட்டு கதவை திறந்து உள்ளே சென்றவள் வாங்கி வந்த பொருட்களை உள்ள வைத்து விட்டு தனது அறைக்கு சென்று பிரஷ் ஆகி வந்தவள் சமையல் அறைக்கு சென்று டீ போட்டு எடுத்து கொண்டு சோபாவில் வந்து அமர்ந்து அதை குடித்து கொண்டு இருக்க சரியாக அவளது மொபைல் சினுங்கியது.சாலினி போனை எடுத்து யார் என்று பார்க்க திரையில் கண்ட எண்ணைக் கண்டு புன்னகையுடனே அதை ஆன் செய்து பேசத் தொடங்கினாள்.மறுமுனையில் அவளது அண்ணன் விஜய் அவளிடம் வீட்டிற்கு வந்துவிட்டாளா என கேட்டு பேசிக்கொண்டு இருந்தான்.சிறிது நேரம் தன் அண்ணனுடன் பேசி முடித்து விட்டு வீட்டை பெருக்கி சுத்தம் செய்து முடித்து டி.வி பார்த்து விட்டு தன் அண்ணன் வருவதற்குள் இரவு உணவிற்கான சமையலை செய்ய ஆரம்பித்தாள்.


விஜய், சாலினி இருவரும் பெற்றோரை இழந்தவர்கள்.இவர்களது அம்மா தமயந்தி சாலினி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நோயினால் இறந்துவிட்டார்.அவர் இறந்த பின் இவர்களது அப்பா இளங்கோ தான் அவர்களை தனியாளாக இருந்து வளர்த்து இருவரையும் படிக்க வைத்தார்.விஜய்யைஅவன் விரும்பிய மருத்துவ படிப்பை படிக்க வைத்து அவனை மருத்துவர் ஆக்கினார்.சாலினி ஆசிரியை ஆக வேண்டும் என கூறியதால் அவளை அவள் விரும்பும் English literature படிக்க வைத்தார்.சாலினி மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்த சமயம் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திடீரென ஏற்பட்ட தன் தந்தையின் இழப்பால் அண்ணன் தங்கை இருவரும் செய்வதறியாது நின்றனர்.தன் தங்கையை பார்த்த விஜய் தன்னை தேற்றி கொண்டு சாலினியை சாமாதானம் செய்து சிறிது நாளில் அவளை பழையபடி மாற்றி அவளை காலேஜ் அனுப்பி வைத்து விட்டு தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்று தன் வேலையை செய்து அவளை B.Ed படிக்க வைத்தான்.அவளும் படித்து முடித்தவுடன் தன் அண்ணனிடம் வேலைக்கு போக ஆசை படுவதாக கூற அவனும் அவளது விருப்பத்திற்காக அவள் வேலைக்கு செல்ல சரி என சம்மதித்தான்.விஜய் சரி என கூறவும் சாலினி அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் அங்கு வேலை செய்தால். பின் விஜய் தான் அவளிடம் வேலைக்கு போனது போதும் எனக் கூறி அவள் மேலே படிப்பதற்காக அவளை இப்போது காலேஜில் சேர்த்து உள்ளான்.


அங்கே விக்கியின் வீட்டில் அனைவரும் இரவு உணவை சாப்பிட்டு கொண்டு இருக்க குமார் தன் மகளிடம் இன்று காலேஜ் எப்படி போனது என கேட்க அவளும் தன் அண்ணனிடம் கூறிய அதே பதிலை தன் தாய், தந்தையிடமும் கூறினாள்.அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.பின் படுக்க சென்றனர்.தன் அறைக்கு வந்த விக்கி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான் . மொபைலில் பேஸ்புக் பார்த்து கொண்டு இருக்கும் போது அவனுக்கு சாலினியின் நினைவு வர அவளது பேரை போட்டு அவள் பேஸ்புக்கில் இருக்கிறாளா? என தேடி பார்த்தான்.அவன் எதிர் பார்த்த படியே பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுடன் எடுத்த போட்டோவை முகப்பு படமாக வைத்திருந்தால்.அதை ஓப்பன் செய்தவன் அவளை பற்றிய டீடெய்ல்ஸ் அறிந்துக்கொண்டு அவளுக்கு பிரண்ட்ஸரெக்வஸ்ட் அனுப்பினான்.பின் அவள் படத்தை தனது போனில் சேமித்துவிட்டு அதை பார்த்தவாறே தூங்கிவிட்டான்.


மறுநாள் காலை எழுந்த சாலினி குளித்து முடித்து காப்பி போட்டு முடித்து தன் அண்ணனை எழுப்பி கொடுத்து விட்டு சமையல் வேலையை கவனிக்க சென்றாள்.காலைக்கும்,மதியத்திற்கும் சமைத்து முடித்து இருவருக்கும் தேவையான மதிய உணவை லன்ஸ்பாக்ஸில் எடுத்து வைத்து விட்டு உடை மாற்றி ரெடியாகி வர விஜய்யும் ரெடியாகி சாப்பிட வந்தான்.அவன் வரவும் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் வீட்டை பூட்டி கொண்டு கிளம்பினார்கள்.


மாணவர்களுக்கே உரிய குறும்போட காலேஜ் தொடங்கியது‌.காலை வகுப்பு எதுவும் இல்லாததால் டிபார்ட்மெண்ட்டில் அமர்ந்து மதிய வகுப்பிற்கான நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தான்.மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் அனைவரும் வெளியே செல்ல மாணவிகள் மட்டும் வகுப்பில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.சாலினியும் அவளது தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட அமர அனைவரும் உணவை பகிர்ந்து சாப்பிட்டனர்.சாலினியின் உணவை சாப்பிட்ட அனைவரும் அவளது சமையலை பாராட்டினர்.உணவு இடைவேளை முடிந்து மதிய வகுப்பு ஆரம்பிக்க சாலினியின் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அடுத்து யாருடைய வகுப்பாக இருக்கும் என காத்திருக்க விக்கி உள்ளே வர மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.அவன் வந்ததும் இனி தான் தான் அவர்கள் வகுப்பிற்கு இன்சார்ஜ் எனக்கூற மாணவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

மருத்துவமனையில் இருந்த விஜய் இனி பேசன்ட் யாரும் இல்லை என நினைத்து வீட்டிற்கு கிளம்பும் போது சரியாக ஒரு பேசன்ட் வரவும் அவரை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டிற்கு சென்றான்.வீட்டிற்கு வரவும் சாலினி அவனுக்கு குடிக்க டீ போட்டு தர அவனும் குடித்து விட்டு சாலினியிடம் ரெடியாகி இருக்குமாறு சொல்லிவிட்டு தானும் ரெடியாகி வர தனதறைக்கு சென்றான்.அவளும் சரி எனக்கூறி ரெடியாக சென்றாள்.இருவரும் ரெடியாகி வர அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான்.

கோவிலில் சாமி கும்பிட்டு முடிய சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டு கிளம்பினார்கள்.அங்கு இருந்து நேராக அவளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.இது அவன் பிரியாக இருக்கும்போது இருவரும் சேர்ந்து கோவில், பார்க் என சாலினியை அழைத்துச் செல்வான்.இருவரும் தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டு பேசிக் கொண்டு இருக்க உணவு வரவும் சாப்பிட்டு முடிக்கவும் விஜய் சாலினிக்கு பிடித்த ஐஸ்கிரீம் ஆர்டர் செய்ய அவள் சாப்பிட்டு முடிக்கவும் வீட்டிற்கு சென்றனர்.

இரவு சரியாக 11.55 மணியானதும் விக்கியும் , மேகா இருவரும் சேர்ந்து தன் தாயின் அறைக்கு சென்று கேக்கை ரெடியாக வைத்துக்கொண்டு 12 மணியானதும் மாலாவை எழுப்பி தன் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரை கேக் வெட்ட செய்தனர்.குமார்,விக்கி,மேகா மூவரும் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்து கூறி முடித்து தூங்க சென்றார்கள்.மறுநாள் காலை அனைவரும் ரெடியாகி கீழே வர மூவரும் மாலாவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்தை கூறி அவரவர் வாங்கிய கிப்டை கொடுத்தனர். மாலா அவர்கள் தந்த கிப்டை பார்த்து மகிழ்ந்தார்.பின் விக்கி, மேகா இருவரும் தன் தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.விக்கி தன் மேகாவை அழைத்துக் கொண்டு காலேஜ் சென்றான்.


வழக்கம் போல கல்லூரி அதற்குரிய பரபரப்புடன் செயல்பட்டது.மாலை வீட்டிற்கு வந்த விக்கியும்,மேகாவும் ரெடியாகி வரவும் அனைவரும் அருகில் உள்ள கோவில்லுக்கு சென்றனர்.சாலினியும் அன்று கோவிலுக்கு வந்து கடவுளை வணங்கி விட்டு அமர்ந்திருக்க விக்கியின் குடும்பமும் அவளுக்கு அருகில் வந்து அமர சாலினியை பார்த்த மேகா அவள் அருகில் சென்று பேச ஆரம்பித்தாள்.சாலினியுடன் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த விக்கியும் அவர்கள் அருகில் சென்றான்.அவனை பார்த்த சாலினி எழுந்து நிற்க அவனோ அவளை பார்த்து புன்னகைத்து காலேஜில் மட்டும் இந்த ரெஸ்பேக்ட் போதும் வெளிய தேவை இல்லை எனவும் மேகா சாலினியிடம் அவள் படிக்கும் கல்லூரியை கேட்டு உறுதி செய்தவள் தானும் அங்கே தான் படிப்பதாக கூறினாள்.இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கவும் மேகாவிடம் சாலினியை எப்படி உனக்கு தெரியும் எனக் கேட்டான்.


விக்கி அப்படி கேட்கவும் தான் சாலினியை இன்னும் தன் அண்ணனுக்கு அறிமுகம படுத்தவில்லை என்ற நினைவே அவளுக்கு வந்தது .பின் தன் அண்ணனை சாலினிக்கு அறிமுகம் செய்து விட்டு, விக்கியிடம் சாலினியை பற்றி கூற தொடங்கினாள். சாலினி ஆசிரியையாக வேலை செய்தது மேகா படித்த பள்ளியில் தான் எனவே அவளை தெரியும் எனக் கூறியவள், பள்ளியில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது இருவரும் நன்கு பேசி பழகியதாக கூறினாள்.இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே இவர்கள் அருகில் வந்த குமாரும்,மாலாவும் இந்த பெண் யார் என கேட்க விக்கி முதலில் தன் காலேஜ் ஸ்டூடண்ட் எனக்கூற மேகா மாலாவிடம் அம்மா நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே எங்க ஸ்கூல்ல இருந்த சாலினி மிஸ் பத்தி அவங்கதான் இவங்க எனவும் இப்போது மேற்படிப்பிற்காக தான் படிக்கும் அதே காலேஜில் படிப்பதாகவும் கூறி முடிக்கவும் பெரியவர்கள் இருவரும் அவளை பார்த்து புன்னகைத்தனர்.அவர்கள் அருகில் சென்றவள் இருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீர் என தங்களது காலில் விழுந்தவளை ஆசிர்வதித்தவர்கள் எதுக்கும்மா இது எல்லாம் எனக் கேட்க அவளும் புன்னகையுடன் இதில் என்னம்மா இருக்கு பெரியவங்க உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனா எதுவும் பெரிய தப்பு இல்லையேம்மா எனக் கேட்க மாலா சாலினியை அனைத்து கொண்டார்.பின் நேரம் ஆகிவிட்டது எனக்கூறி அவர்களிடம் இருந்து விடைபெற்று தன் வீட்டிற்கு சென்றாள்.


இவ்வாறு நாட்கள் செல்ல ஒரு நாள் மேகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது . காலை எழுந்து ரெடியாகி கீழே வந்தவன் மேகா இன்னும் சாப்பிட வராமல் இருக்கவும் விக்கி தன் தாயிடம் அவளை பற்றி கேட்க அவளுக்கு பீவராக இருக்குனு படுத்து இருக்காப்பா எனக்கூறினார்.விக்கியும் சாப்பிட்டு முடித்ததும் தன் தங்கையின் அறைக்கு சென்று பார்க்க அவள் முனங்கி கொண்டு படுத்திருந்தாள்.அவள் அப்படி இருப்பதை பார்த்ததும் அவள் அருகில் சென்று அமர்ந்து அவளது கழுத்து, நெற்றியை தொட்டும் பார்க்க காய்ச்சல் நெருப்பாக கொதித்தது உடனே அவளை எழுப்பி அமர வைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டு சாப்பிட்டயாடா எனக் கேட்க அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.உடனே தன் தாயை அழைத்து அவளுக்கு கஞ்சியை கொண்டு வருமாறு கூறி அவளது தலையை வருடியபடி அமர்ந்து இருந்தான்.மாலா கஞ்சியை எடுத்துக் கொண்டு வர அவரிடம் இருந்து அதை வாங்கியவன் தானே தன் தங்கைக்கு ஊட்ட ஆரம்பித்தான்.அவள் வேண்டாம் எனக் கூறியும் கேட்காமல் அவளுக்கு ஊட்டி முடித்து விட்டு தன் தாயிடம் அவளுக்கு வேறு உடையை மாற்றிவிடுமாறு கூறிவிட்டு வெளியே சென்றவன் காலேஜ்க்கு போன் செய்து இன்று தன் விடுமுறையை கூறிவிட்டு மேனகாவின் கிளாஸ் இன்சார்ஜ் ஆன ராகவிடமும் போன் செய்து தன் தங்கையின் விடுப்பை அறிவித்து விட்டு மேகாவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

மருத்துவமனைக்கு வந்தவன் மேகாவின் பெயரை பதிந்து விட்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு இவர்களது முறைக்காக காத்திருந்தான்.சிறிது நேரத்தில் இவர்கள் முறை வரவும் நர்ஸ் இவர்களை உள்ளே அழைத்தார்.இவர்கள் உள்ளே வரவும் விஜய் யாருக்கு உடம்பு சரியில்லை என கேட்க விக்கி தன் தங்கையை காட்டி நேற்று இரவில் இருந்து பீவராக இருப்பதாக கூறினான்.விஜய் தன் அருகில் உள்ள இருக்கையில் அமர சொல்லி அவளை பரிசோதிக்க ஆரம்பித்தான்.விக்கியோ விஜய்யை பார்த்ததில் இருந்து ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தான், அதே போல் விஜய்யும் அவனது வேலையை செய்தபடி விக்கியை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என நினைத்துக் கொண்டு இருந்தான்.விஜய் மேகாவை பரிசோதித்து ஊசி போட்டு விட்டு மாத்திரை எழுதி கொடுத்து விட்டு மூன்று நாட்கள் கழித்து வருமாறு கூறினான்.அவன் கூறியதை கேட்டு கொண்டு அவன் தந்த மருந்து சீட்டை வாங்கி பார்த்தவன் அதில் அவனது பெயரை பார்த்தவன் அவன் யார் என ஞாபகம் வந்து அதை அவனிடம்மே கேட்கலாம் என நினைத்துக் கொண்டு இருக்க அவன் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த விஜய் அவனிடம் என்ன என்று கேட்டான்.

விஜய் என்ன என்று கேட்கவும் விக்கியும் அவனிடம் உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது அதான் யாரா இருக்கும்னு யோசனையாக இருக்கு எனவும் , அவனும் அவனிடம் எனக்கு உங்கள பார்க்கும் போது அப்படித்தான் இருக்கு என்று கூறினான்‌.விக்கி சிறிது நிமிட யோசனைக்கு பின் அவனிடம் உங்க முழு பேர் விஜய்பிரகாஷ் தான எனக் கேட்க விஜய்யும் ஆம் எனவும் சிறு சிரிப்புடன் அவன் படித்த பள்ளியின் பெயரை சொல்ல விஜய் விக்கியிடம் ஆமா நான் அந்த ஸ்கூல்ல தான் 1-12 வரைக்கும் படிச்சேன் இது எப்படி உங்களுக்கு தெரியும் எனக் கேட்டான்.விஜய் அப்படி கேட்கவும் விக்கி அவன் அருகில் வந்து நின்று அவனிடம், டேய் விஜி இன்னும் நான் யாருனு உனக்கு தெரியலையாடா என்றான்.


விஜய்யோ அவன் தன்னை தன் நண்பர்கள் மட்டுமே அழைக்கும் 'விஜி' என்ற பெயரை கூறி பேசியவனை பார்த்து சிறிது யோசனைக்கு பின் நீ, 'விக்கி ' தானடா என்றான் மகிழ்ச்சியுடன்.விக்கியும் சிரித்துக் கொண்டே ஆமாடா எப்படியோ என்ன கண்டுபிடிச்சுட்ட எனக்கூறி தன் பள்ளி நண்பனை அனைத்துக் கொண்டான்.அங்கு அமர்ந்திருந்த மேகாவோ இவர்கள் இருவரும் பேசியதையும் கண்டு எதுவும் புரியாமல் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருக்க அப்போது அங்கு வந்த நர்ஸ் இன்னும் இரண்டு பேர் காத்திருப்பதாக கூறவும் விஜய் விக்கியிடம் டேய் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா எனக்கூறி அங்கிருந்த நர்ஸிடம் இவர்களை தனக்கு ஒதுக்கி இருக்கும் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு அடுத்த பேசன்ட்டை கவனிக்க ஆரம்பித்தான்.விஜய்யின் அறையில் காத்திருந்த விக்கி மேகாவிடம் மாத்திரை வாங்கி வருவதாக கூறிவிட்டு மெடிக்கல் சென்று மாத்திரைகள் வாங்கி வரவும் விஜய் அவனது அறைக்கு வந்தவன் விக்கி வரும்வரை மேகாவிடம் அவளது படிப்பை பற்றி பேசிக்கொண்டு இருக்க விக்கியும் அங்கு வந்த பின் அவனிடம் தன் தங்கையும் அதே காலோஜில் தான் படிப்பதாக கூறி அவளது பெயரை சொல்ல விக்கியும் , மேகாவும் விஜய்யிடம் அவளை எங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் தெரியும் என்றவன் அன்று ஒரு நாள் சாலினியை தன் குடும்பத்தினர்கள் அவளை சந்தித்ததை பற்றி கூறினான்.பின்பு விஜய்யை மேகாவிற்கும், அவளை விஜய்க்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.விக்கி,விஜய் இருவரும் எட்டு வருடங்களுக்கு பிறகு சந்திப்பதால் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு போன் நம்பரை வாங்கி கொண்டனர்.விக்கி விஜய்யிடம் கிளம்புவதாக கூறவும் விஜய்யும் சரி என்றவன் மேகாவை பார்த்து மாத்திரையை டைம்க்கு சாப்டு நன்கு ரெஸ்ட் எடுக்கும்படி கூறிவிட்டு விக்கியிடம் மூன்று நாட்கள் கழித்து அழைத்து வருமாறு கூறினான்.அதைக்கேட்ட விக்கியும் சரி எனக் கூறி அவனை பிரியாக இருக்கும்போது போன் செய்யும்படியும் , அவனை ஒரு நாள் வீட்டிற்கு வரும்படியும் கூறி விட்டு இவர்கள் இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

காதல் தீ வளரும்.........


Hi frds paduchutu unnga comments etha irrunthalum sollunga frds .tq 😊😊😊
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3.♥ அழகிய காதல் தீயே ♥



விக்கி விஜய்யிடம் கூறி விட்டு வீட்டிற்கு வந்தவன் தன் தாயிடம் மேகாவின் உடல் நிலை பற்றி கூறிவிட்டு அவளை அவளது அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்து விட்டு தனது அறைக்கு சென்றான்‌.தனதறைக்கு வந்தவன் கட்டிலில் அமர்ந்து தன் போனில் உள்ள சாலினியின் புகைப்படத்தை பார்த்து அவளிடம் நீ என்னோட பிரண்டோட தங்கச்சியா இருப்பனு நான் நினைக்கவே இல்ல, உன்ன பஸ்ட் பார்த்த அன்னிக்கே எனக்குள்ள நீ வந்துட்ட அதுக்கு பிறகு மறுநாளே காலேஜ்ல பார்த்ததும் எனக்கு இருந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல.அதுக்கு பிறகு தினமும் உன்ன கிளாஸ்ல பாக்க செய்யனு இருந்தேன்.அன்னிக்கு எங்க வீட்ல இருக்க மத்தவங்க கூட நீ பழகுன விதம் அப்பா, அம்மா இரண்டு பேர்க்கிட்டயும் நீ ஆசிர்வாதம் வாங்குனதுனு எல்லாம்மே எனக்கு ரொம்பவும் பிடிச்சு இருந்துச்சு என கூறி அவளது போட்டோவை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான்.

இரண்டு நாட்கள் கழித்து மேகாவிற்கு பீவர் கொஞ்சம் விடவும் காலேஜ் போவதாக கூறவும் குமார் இன்னும் இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுக்கும்படி கூற மேகா அவரிடம் இப்போது உடம்பு நல்லா இருக்குப்பா வீட்ல படுத்துட்டே இருக்க போர் அடிக்குது அதனால நான் காலேஜ் போறேன்ப்பா என அவரிடம் கூறிவிட்டு காலேஜ்க்கு கிளம்ப, விக்கியும் அவளை அழைத்துக்கொண்டு காலேஜ்க்கு சென்றான்.

காலேஜ் வந்தவன் அவளை வகுப்பில் சென்று விட்டு விட்டு அங்கிருந்த ஒரு மாணவனிடம் M.A பஸ்ட் இயர் சாலினியை தான் டிபார்ட்மெண்ட் அழைத்ததாக கூறி அவளை அழைத்துவருமாறு அனுப்பி விட்டு டிபார்ட்மெண்ட்டிற்கு சென்றான்.டிபார்ட்மெண்ட் சென்றவன் உள்ளே போகாமல் வெளியே நின்று சாலினிக்காக காத்திருந்தான்.அவள் வரவும் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு அவளிடம் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டான்.இவளும் பதிலுக்கு என்ன என்பது போல் அவனை பார்த்தாள் ‌.


ஏற்கனவே சாலினியிடம் விஜய் விக்கியை பற்றி சொல்லி இருந்ததால் அவளும் இப்போது இரண்டு நாட்களாக விக்கியிடம் தன் அண்ணனின் நண்பன் என்ற முறையில் அவனை பார்க்கும் போது விஷ் செய்வதும் , பேசுவதும்மாக இருந்தாள்.அதனால் தான் விக்கி அவளிடம் உதவி கேட்டது. அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து அவளிடம் மேகாவின் உடல்நிலை பற்றி கூறி விட்டு இன்று காலேஜ் வந்துள்ளதாக சொல்லவும் சாலினி இப்போ எப்படி இருக்கு என அவளது நலன் பற்றி இவனிடம் கேட்டாள்.அவனும் பதிலுக்கு இப்போ ஓகே என கூறியவன் அவளிடம், ஒரு இரண்டு நாட்கள் மட்டும் மதியம் மேகாவுடன் அமர்ந்து சாப்பிட முடியும்மா? எனக் கேட்டான்.

அவன் கூறியதும் சரி என்றவளிடம் அவ உடம்பு சரியில்லாட்டி சரியா சாப்பிட மாட்டா அதான் பிரண்ட்ஸ் கூட இருந்தாலும் சாப்டாம விட்டுறுவா ஆனா நீ இருந்த அவள எப்படியாச்சும் சாப்ட வச்சுறுவனு தான் உன்ன அவக்கூட சாப்ட முடியும்மானு கேட்டேன் என்றாள்.அவளும் பதிலுக்கு தான் அவளை பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு வகுப்பிற்கு சென்றாள்.அவனிடம் கூறியபடி மதிய உணவு இடைவேளையில் தன் தோழிகளிடம் இரண்டு நாட்கள் தங்கையுடன் சேர்ந்து சாப்பிட்டு வருவதாக கூறிவிட்டு மேகாவை தேடிச் சென்றாள். அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த சிக் ரூம் சென்றவள் இனி இரண்டு, மூன்று நாட்கள் அவளுடன் தான் சேர்ந்து சாப்பிட போவதாக கூறி விட்டு இருவரும் சாப்பிட தொடங்கினார்கள்.

விக்கி சொன்னது போலவே மேகாவும் நான்கு வாய் சாப்பிட்டு விட்டு அதற்கு மேல் சாப்பிட முடியாது என பாக்ஸை மூட போகவும் சாலினி அவளை மிரட்டி சாப்பிட வைத்தாள் .அப்படி இருந்தும் வேண்டாம் என மறுக்கவும் சாலினி எதுவும் சொல்லாமல் அவளது உணவை எடுத்து மேகாவிற்கு ஊட்ட ஆரம்பித்தாள்.இதை மேகாவை பார்க்க வந்த விக்கி பார்த்து விட்டு தன் மனதில் என் தங்கச்சிக்கு ஏத்த அண்ணி தான் என தன்னவளை பார்த்து நினைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.அவன் உள்ளே வந்ததை பார்த்த மேகா விக்கியிடம் , ' டேய் அண்ணா போதும்னு நீயாவது சொல்லுடா நான் சொல்ல சொல்ல கேட்காம அக்கா ஊட்டிட்டே இருக்காங்கடா ' என தன் அண்ணனை தனக்கு சப்போட்டிற்கு அழைத்தாள்.சாலினிய உங்கூட சேர்ந்து சாப்பிட அனுப்புனதே நான்தான்டி லூசு எனவும் மேகாவோ இருவரையும் பார்த்து செல்லமாக முறைத்தாள்.இப்படியே இரண்டு வாரம் சென்றது.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலேஜ் விடுமுறை என்பதால் அன்று காலை எழுந்து ரெடியாகி விஜயுடன் சேர்ந்து கோவிலுக்கு செல்ல அங்கே விக்கியின் குடும்பமும் விடுமுறையை கழிக்க என நினைத்து காலை கோவிலுக்கு சென்று விட்டு அப்படியே ஷாப்பிங், மூவி போக பிளான் பண்ணி முதலில் கோவிலுக்கு வந்திருந்தனர். விஜய்யை பார்த்து விட்ட விக்கி அவனை அழைத்து வந்து தன் பெற்றோரிடம் மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்தி வைத்தான். ஸ்கூல் படிக்கும் போது எப்போதாவது தான் அவனது பெற்றோரை பார்த்து உள்ளதால் இன்று பார்த்து அவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது மாலா விஜய்யிடம் அவர்களது பெற்றோரை பற்றி கேட்கவும் அவர்களிடம் தங்களது பெற்றோர்கள் இருவரும் இல்லை என்றும் தானும் தன் தங்கையும் மட்டும் தான் எனக் கூறவும் , மாலாவும் ,குமாரும் அவனிடம் இனி உங்கள் இருவருக்கும் நாங்கள் உள்ளோம் எனக்கூறி அண்ணன் ,தங்கை இருவரையும் தன்னுடன் சேர்த்து அனைத்து கொண்டார் மாலா.

அவர்களிடம் பேசி விட்டு கிளம்புவதாக கூறவும் விஜய்யிடம் இன்னைக்கு உனக்கு லீவ் தான வீட்டுக்கு போய் என்ன செய்ய போறிங்க அதுக்கு இரண்டு பேரும் பேசாம எங்க கூட வாங்க என மாலா கூறவும் வேண்டா ம்மா அடுத்த தடவ வரோம்மா என மறுக்க நான்கு பேரும் இருவரையும் பேசி தங்களோடு வர சம்மதிக்க வைத்தனர்.விஜய்யும் சரி எனக்கூற அனைவரும் கோவிலில் இருந்து வெளியே வரவும் விக்கி இருவரையும் தங்களது வண்டியிலே வரும்படி கூற விஜய் தாங்கள் இருவரும் பைக்கில் வந்ததாக கூறவும் விக்கி விஜய்யிடம் , டேய் மச்சா வண்டிய இங்கேயே ஒரு ஓரம்மா பார்க் பண்ணிட்டு வாடா திரும்ப வரப்ப உங்கள இங்க டிராப் பண்ணிடுறேன் எனவும் அவனும் சரி என வண்டியை நிறுத்தி லாக் செய்து சாவியை எடுத்து கொண்டு வர அனைவரும் காரில் ஏறி முதலில் ஹோட்டலுக்கு சென்றனர்.

அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவு ஆர்டர் செய்து பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து நேராக படத்திற்கு சென்றனர். படம் முடியவும் மதிய உணவை முடித்த பின் ஷாப்பிங் சென்றவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மாலை விஜய்யையும் சாலினியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார்கள்.பின் விஜய் கிளம்புவதாக கூற அவர்களை தடுத்த மாலா முதல் தடவ வீட்டுக்கு வந்துட்டு எதுவும் சாப்டாம போனா எப்படி இரண்டு பேரும் நைட் சாப்ட்டுதான் போகனும் எனக்கூறி விட்டு இருவரும் தங்களது அறைக்கு சென்று விட்டனர்.

பெரியவர்கள் உள்ளே சென்று விட சிறியவர்கள் நான்கு பேரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.சிறிது நேரம் கழித்து மேகா சாலினியை அழைத்து கொண்டு வீட்டை சுற்றி காட்ட சென்று விட்டாள்.அவர்கள் இருவரும் சென்றபின் விக்கி விஜய்யுடன் தங்களது பள்ளி நண்பர்களை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும் போது விக்கி விஜய்யிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் எனவும், விஜய் அவனிடம் எதைப்பற்றி பேச வேண்டும் என கேட்கவும் அவன் தயங்கி கொண்டே சாலினியை விரும்புவதாக கூறினான்.அவன் தன் தங்கையை விரும்புவதாக கூறியதைக் கேட்டவன் அவனிடம் எப்போ இருந்து எனக் கேட்கவும் அவனும் அவளை சந்தித்தது முதல் இன்று வரை அவளை காதலிப்பதை பற்றி கூறினான்.இதைக்கேட்ட விஜய் எதையோ யோசித்துக் கொண்டு இருக்க விக்கி அவன் கூற போகும் பதிலுக்காக காத்திருந்தான்.

விக்கி விஜய்யை அழைக்க அவனிடம் நீ லவ் பன்றது சாலுக்கு தெரியும்மா எனவும், விக்கி இல்ல இன்னும் அவகிட்ட எதுவும் சொல்லல உன்கிட்ட தான்டா பஸ்ட் சொல்றேன் நீ சொல்றது பொறுத்துதான் வீட்லயும் , அவக்கிட்டயும் சொல்லனும் எனவும் அவனை அனைத்து கொண்ட விஜய் நான் என்ன வேண்டானாடா சொல்ல போறேன் என்று அவனது சம்மதத்தை தெரிவித்தான்.

விஜய் தனது சம்மதத்தை கூறவும் மகிழ்ச்சியாக அவனை கட்டிக்கொண்டு அவனிடம் நன்றி கூறினான். மேகாவும், சாலினியும் வர விக்கி அவர்கள் மூவரிடமும் சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு தனது பெற்றோரின் அறைக்கு சென்றான். அவன் உள்ளே வரவும் அவனிடம் என்னப்பா எதாவது பேசனும்மா எனக் கேட்கவும் ஆமாம் என்றவன் விஜய்யிடம் கூறிய அனைத்தையும் தனது பெற்றோரிடம் சொல்லி முடித்தான்.அவன் கூறியதைக் கேட்ட மாலா அவனிடம் எனக்கு அவள கோவில்ல பார்த்து பேசுனப்பவே இவ எனக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சு இப்ப நீயும் அதே தான் சொல்ற என்றவர் எங்களுக்கு இதுல முழு சம்மதம் எனக் கூறினார்.


பெற்றோர்களும் அவனது காதலுக்கு சம்மதம் தர தன் தங்கையையும் விடாமல் அவளை தனியாக அழைத்து அவளிடமும் கூற அவளோ தனக்கு பிடித்த சாலினி அவளுக்கு அண்ணியாக வர போவதை நினைத்து மகிழ்ந்தாள்.விஜய்யும் சாலினியும் மட்டும் அங்கே அமர்ந்திருக்க தன் அண்ணனை பார்க்க அவன் சந்தோசமாக இருக்கவும் அவனிடம் என்னவென்று கேட்க அவன் தன் தங்கையின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டு அவளிடம் , விக்கியபத்தி நீ என்னடா நினைக்கிற எனவும் , திடீரென தனது அண்ணன் விக்கியை பற்றி கேட்கவும் அவர பத்தி சொல்ல என்ன இருக்கு என அவன் பரவா இல்ல உனக்கு தோனுறத சொல்லு எனவும் அவளும் தன் மனதில் அவனை பற்றி இதுவரை நினைத்துக் கொண்டு இருந்ததை கூறத் தொடங்கினாள்.

அவள் தன் அண்ணனிடம் சொல்ல ஆரம்பிக்கும் போதே அங்கு வந்த நான்கு பேரும் அப்படியே நின்று கொண்டு அவள் கூறியதைக் கேட்க தொடங்கினார்கள்.சாலினி விஜய்யிடம் அண்ணா நான் ஒரு விசயத்தை உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன் எனவும் அவன் என்ன என்று கேட்கவும் அவளுக்கும் விக்கிக்கும் நடந்த சந்திப்பை பற்றி கூறியவள் அப்போது இருந்து அவர எனக்கு பிடிக்கும் ஆனா அவருக்கு என்னை பிடிக்குமோ இல்லையோனு பயந்து போய் என்னோட காதல எனக்குள்ளையே வச்சு யாருக்கும் தெரியாம மறைச்சுட்டேன் எனக்கூறி அழவும், விஜய் அவளது கண்ணீரை துடைத்து விட்டு என்கிட்டயாவது சொல்லி இருக்கலாமேடா என்றான்.அவனிடம் இல்ல அண்ணா உனக்கு தெரிஞ்சா நீ எனக்காக அவருக்கு விருப்பம் இல்லாட்டியும் அவர்க்கிட்ட நீ எனக்காக பேசி அவர கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சுடுவனு தான் உங்கிட்ட சொல்லல சாரி அண்ணா என அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

காதல் தீ வளரும்....

( Hi frds pls give your support and comments .tq 😊😊)
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
4. ♥ அழகிய காதல் தீயே ♥


சாலினி தன் அண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்ததை விக்கியும் அவனது பெற்றோரும் , தங்கையும் கேட்டு கொண்டு இருந்தனர்.விக்கியோ அவளும் தன்னை விரும்புவதாக கூறியதைக் கேட்டவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை .ஆனால் மறு நிமிடமே அவள் தன்னை நம்பாமல் தனது காதலையே மறைத்து இருக்கிறாள் என வருந்தினான்.உடனே தனது வருத்தத்தை விடுத்து தன்னவளிடம் தனக்கும் அவளது மீதுள்ள காதலை அவளுக்கு உணர்த்திட நினைத்தான்.

தான் நினைத்ததை செயல்படுத்த நினைத்து அவள் அருகில் சென்று அவளை அழைக்கவும் ,அவள் திரும்பிய அடுத்த நொடி அவளை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான். அவன் இப்படி அவளை அனைக்கவும் மற்ற அனைவரும் இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்கள் இருவருக்கும் தனிமையை கொடுக்க நினைத்து அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் சென்ற பின் வெகு நேரம் ஆகியும் விக்கி சாலினியை தன்னோடு அனைத்தவாறே இருக்க முதலில் தன்னை மீட்டுக் கொண்ட சாலினி அவனை பார்க்க அவனும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.அவனது பார்வையை சந்திக்க முடியாமல் எப்படாயோ அவனது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவனிடம்மிருந்து விலகி அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.அவள் தன்னிடமிருந்து விலகி செல்லவும் அவளை பார்த்து செல்லமாக முறைத்துக் கொண்டு இவனும் அவளருகில் சென்று அமர்ந்து அவளது கையை பற்றிக் கொண்டு அவளிடம் ," ஐ லவ் யூ" சாலினி என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு இவள் அழ ஆரம்பித்தாள்.விக்கியும் தனது காதலை அவளிடம் சொல்லி விட்டு அவளது முகத்தை பார்த்தவன் அவள் அழுது கொண்டு இருக்க அவளருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளது முகத்தை தன் புறம் திருப்பியவன் அவளது கண்ணீரை துடைத்து விட்டு அவளை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டு அவளிடம் தன் காதலை பற்றி கூறினான்.அவன் கூறிய அனைத்தையும் கேட்ட சாலினி அவன் தோளில் சாய்ந்து கொள்ளவும், அவன் சாலினியிடம் நீ என்கிட்ட உன்னோட லவ்வ சொன்னா நான் உன்னை வேண்டாம்னு சொல்லுவேனு நீ எப்படி என்னைப் பத்தி அப்படி நினைக்கலாம். இது தான் நீ எம்மேல வச்சு இருக்க நம்பிக்கையா எனக் கேட்கவும் சாலினி அவன் கூறியதைக் கேட்டு மீண்டும் அழத் தொடங்கினாள்‌. அவனும் அவளை சிறிது நேரம் அழவிட்டவன் பின்பு அவளிடம் இப்போதாவது உன்னோட லவ்வ என்கிட்ட சொல்லுவியா என்றான்.

அவளும் அவனிடம் தன் காதலை கூறினாள்.பின் எதற்காக அவனிடம் அவளது காதலை சொல்லாமல் மறைத்தது ஒரு வித பயத்தில் எங்கே என்னோட லவ்வ உங்ககிட்ட சொல்லி நீங்க என்ன தப்பா நினச்சுடுவிங்களோ, இல்ல என்னை உங்களுக்கு பிடிக்கலனு சொல்லிடுவிங்களோனு பயத்துல தான் நா என்னோட காதல உங்க கிட்ட சொல்லல என்றவள் அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.

சாலினி அவனிடம் மன்னிப்பு கேட்கவும் அவளை பார்த்து முறைத்தவன் அவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு இனி எப்பவும் என்கிட்ட சொல்ல நினைக்கிறத மறைக்காம என்கிட்ட சொல்லு ஒத்துகிறனோ இல்லையோ ஆன எதையும் உனக்குள்ள வச்சுக்கிட்டு கஷ்டப்படாம இரு என்றவன் இனி நம்ம இரண்டு பேருக்கு இடையில இனி நோ தேங்ஸ் & சாரி ஓகேவாடி செல்லம் என்றவன் முதன்முறையாக அவளின் நெற்றியில் தனது காதல் முத்தத்தை பதித்தான்.அவளும் அவன் கூறியதைக் கேட்டு சரி என்றவள் வெட்கத்துடன் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

இவர்கள் இங்கு பேசிக் கொண்டு இருக்க குமாரும் ,மாலாவும் விஜய்யிடம் அவர்களது திருமணத்தை சீக்கிரம் நடத்த வேண்டும் என பேசி முடிவெடுத்து விட்டு மாலா இரவு உணவை ரெடி செய்ய சென்றார்.பின் அனைவரும் மகிழ்ச்சியாக இரவு உணவை சாப்பிட்டு முடித்ததும் விஜய் அவர்களிடம் கிளம்புவதாக கூறவும் தனது அறைக்கு சென்ற மாலா விஜய் , சாலினி இருவருக்கும் இன்று மாலில் எடுத்த உடையை கொடுக்க அவர்கள் முதலில் தயங்கவும் விக்கி விஜய்யிடம் வாங்கி கொள்ளுமாறு கூறவும் இருவரும் மகிழ்ச்சியாக அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு அவர் தந்ததை வாங்கிக் கொண்டனர்.விக்கியும் , சாலினியும் ஒன்றாக சேர்ந்து குமார் - மாலா காலில் விழுந்து ஆசி பெற்றனர்.விக்கி கார் சாவியை எடுத்து கொண்டு வர அனைவரிடமும் கூறிவிட்டு அண்ணன் தங்கை இருவரும் கிளம்பி வெளியே வரவும் விக்கியும் காரை கிளப்ப சாலினியை விக்கியின் அருகில் முன்னால் அமருமாறு கூறி விஜய் பின்புறம் சென்று அமர விக்கி விஜய்யின் வீட்டை நோக்கி சென்றான்.


முதலில் நேராக சாலினியை வீட்டில் இறக்கி விட்டு அவளிடம் நாளைக்கு பாக்கலாம் எனக்கூறி அவளிடம் இருந்து விடைபெற்று விஜய்யுடன் காலையில் சென்ற கோவிலுக்கு சென்றார்கள்.கோவிலுக்கு சென்று விஜய் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வரவும் அவனிடம் கிளம்புவதாக கூறி விக்கி தனது வீட்டிற்கு கிளம்பவும் விஜய்யும் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்தான்.

விஜய் வீட்டிற்கு வரவும் அவனிடம், அண்ணா எம்மேல கோவம்மா இருக்கியா எனக் கேட்டாள்.அவள் அப்படி கேட்கவும் அவளிடம் அது எல்லாம் ஒன்னும் இல்லடா நீ என்ன வேண்ணும்னா மறச்ச விடுடா அதான் இன்னைக்கு சொல்லிட்ட இல்ல.அவனுக்கு மட்டும் இல்லாம எங்க எல்லாரோட சம்மதமும் உனக்கு தெரிஞ்சதே அது போதும் போடா போய் தூங்கு எனக்கூறி அவளை அவளது அறைக்கு அனுப்பி வைத்தான்.

இங்கு வீட்டிற்கு வந்த விக்கி அம்மா, அப்பாவிடம் பேசி விட்டு தனதறைக்கு சென்றவன் இன்று காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்தவன் தனது காதலுக்கு அனைவரும் சம்மதித்ததை நினைத்து மகிழ்ந்தான்.உடை மாற்றிக் கொண்டு படுக்க சென்றவன் தூக்கம் வராமல் விஜய்யிடம் இருந்து வாங்கிய சாலினியின் போன் நம்பரை தனது போனில் சேவ் செய்தவன் அவளுக்கு போன் செய்தான்.

சாலினியும் தூங்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.அப்போது சரியாக அவளுக்கு போன் வரவும் அதை ஆன் செய்யவும் மறுமுனையில் விக்கி அவளிடம் , ஓய் செல்லக்குட்டி நீ இன்னும் தூங்கலையா எனக் கேட்கவும் இங்கு இவள் தூக்கம் வரல எனக் கூறவும் இருவரும் இவர்கள் சந்தித்த நாளில் இருந்து இதுவரை நான்கு மாதங்களாக பேசாமல் இருந்ததிற்கு சேர்த்து வைத்து தூங்காமல் இரவில் பேசிக்கொண்டு இருந்தனர்.சாலினியின் அறையில் லைட் எரிவதை கண்ட விஜய் அவளது அறைக்கு சென்று பார்க்க அவள் தூங்காமல் போன் பேசிக்கொண்டு இருக்கவும் அவள் விக்கியுடன் பேசுவது தெரிந்ததால் அவளை பார்த்து சிரித்து விட்டு தனது அறைக்கு சென்றான்.


மறுநாள் காலை வழக்கம் போல் காலேஜ் கிளம்பினார்கள்.அன்றும் வண்டியை நிறுத்த வந்த சாலினியை பார்த்து மற்றவர்கள் அறியாதவாறு அவளை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான் .அதே போல் அவளது வகுப்பிற்கு கிளாஸ் எடுக்க சென்ற போதும் பாடத்தை முடித்து விட்டு அட்டடென்ஸ் எடுத்து முடிய இன்னும் வகுப்பு முடிவதற்கு நேரம் இருப்பதால் மாணவர்களிடம் பேச ஆரம்பித்தான்.அப்போது அவன் மாணவர்களிடம் யார் யாருக்கு டான்ஸ் ஆட தெரியும் , பாடத் தெரியும் எனக் கேட்கவும் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை பற்றி கூற சாலினியின் தோழிகள் அனைவரும் சாலினி நன்றாக பாடுவாள் எனவும் வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சாலினியை பாட சொல்லுமாறு விக்கியிடம் கத்த தொடங்கினர்.

விக்கியும் மாணவர்கள் கேட்ட படி அவளை பாடும்மாறு கூற அவள் மறுக்கவும் மாணவர்கள் மீண்டும் அவளை பாடும்மாறு வற்புறுத்த விக்கி மற்ற மாணவர்கள் யாரும் அறியாமல் சாலினியிடம் பாடும்படி சைகை செய்தான்.அவன் சைகையை புரிந்துக் கொண்டவள் சரி என்பதை போல் தலையசைக்கவும் விக்கி அவளை அழைத்து ஸ்டேஜில் வந்து நின்று படும்படி கூறிவிட்டு அவன் கீழே இறங்கி தனது போனில் ரெக்கார்டர் ஆன் செய்து இவள் பாட போகும் பாட்டை கேட்க தயாராக அவளை பார்த்தபடி வகுப்பறையின் இறுதியில் சென்று சுவரில் சாய்ந்து நின்றுக்கொண்டான்.

அவளும் இவனை பார்த்தவாறே தனக்கு பிடித்த பாடலை பாடத் தொடங்கவும் மொத்த வகுப்பறையே அமைதியாக அவளது பாடலை கேட்டு கொண்டு இருந்தனர். அதே போல் விக்கியும் தன்னவளின் பாடலை கேட்டு தன்னை மறந்து இரசித்து கொண்டு இருந்தான்.அவளும் இவனை பார்த்த படி பாட்டை பாடி முடிக்கவும் மாணவர்கள் அனைவரும் கைத்தட்டி இவளை பாராட்ட அச்சத்தில் இயல்புக்கு வந்தவன் அவள் நின்ற இடத்திற்கு வந்தவன் நைஸ் எனக்கூறி விட்டு அவளது இடத்திற்கு சென்று அமரும்படி கூறி விட்டு திரும்பவும் அவ்வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்கான மணியடித்தது.

காலை வகுப்புகள் முடிந்து மதிய உணவு இடைவேளையின் போது விக்கி அவளது போனிற்கு நன்றாக பாடியதாக அவளை பாராட்டி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினான்.அந்த கல்லூரியில் போன் அலோவ் என்பதால் சாப்பிட்டு முடித்து தன் போனை பார்த்தவள் அவளுக்கு விக்கி அனுப்பிய மெசேஜை பார்த்து விட்டு பதிலுக்கு பல ஸ்மைலிகள் போட்டு அவனுக்கு அனுப்பினாள்.

மாலை காலேஜ் முடியவும் வீட்டிற்கு வந்தவன் தனது அறையில் அமர்ந்து காலை ரெக்கார்டர் செய்த அவள் பாடிய பாட்டை தனது லேப்டாப்பில் சேவ் செய்து விட்டு அதை தன் போனின் ரிங்டோனாக செட் செய்தவன் மீண்டும் ஒரு முறை அவள் பாடிய பாட்டை கேட்க தொடங்கினான்.இப்படியே அந்த வாரம் சென்றது.காலேஜில் மாணவர்களுக்கு மாத தேர்வு நடப்பதால் விக்கி சாலினிக்கு போன் செய்து பேசாமல் இருந்தான்.

இதற்கிடையில் மாலா விக்கியிடம் திருமணம் பற்றி பேச அவன் இந்த செமஸ்டர் எக்ஸாம் முடிந்தபின் பார்ப்போம் என கூறி விட அனைவரும் அதற்காக காத்திருந்தனர்.இவ்வாறு சாலினியின் தேர்வு முடிந்ததும் முறைப்படி விக்கியின் குடும்பத்தினர் விஜய்யின் வீட்டிற்கு சாலினியை பெண் கேட்டு சென்றனர்.பின் அனைவரும் கலந்து பேசி அடுத்த மாதம் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கு முன் அடுத்த வாரம் நிச்சயம் வைப்பதாகவும் முடிவு செய்தனர்.பின் சாலினி சென்று சமையல் வேலையை பார்க்க மேகாவும் அவளுக்கு உதவியாக அவளுடன் சென்று விட இங்கு விஜய் நிச்சயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பொறுப்பான அண்ணனாக அவர்களிடம் கேட்டு கொண்டு இருந்தான்.

குமாரும் , மாலாவும் அவனிடம் என்ன செய்ய வேண்டும் என கூறியவர்கள் அவனிடம், நீ எதுவும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம்ப்பா எல்லாம் நாங்க பார்த்துகிறோம் என்றனர்.இவ்வாறு பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்ததும் இன்று விடுமுறை என்பதால் மேகா தன் அண்ணனிடம் பீச்சிற்கு போலாமா எனவும் பெரியவர்கள் இருவரும் நீங்க நாலு பேர் போய்ட்டு வாங்க நாங்க வீட்டுக்கு போறோம் என கூறவும் இவர்களும் சரி எனக்கூறி அவர்களை காரில் அனுப்பி வைத்து விட்டு விஜய்யின் வீட்டில் இருந்த இரு வண்டியில் போகலாம் என கூறி விட்டு நான்கு பேரும் சேர்ந்து விளையாடிய படி பேசிக் கொண்டு இருந்தனர்.

மாலை ஆனதும் சாலினியும் , மேகாவும் ரெடியாகி வரவும் விஜய் வீட்டை பூட்டி கொண்டு வெளியே வரவும் விக்கி விஜய்யிடம் சாலினி எங்கூட வரட்டும் நீ மேகாவ கூப்டு வாடா எனவும் அவனும் சரி எனக்கூற விக்கி - சாலினி பைக்கில் செல்ல ; விஜய் மேகாவை அழைத்து கொண்டு ஸ்கூட்டியில் சென்றான்.

கடற்கரைக்கு சென்றதும் நான்கு பேரும் சேர்ந்து சிறிது நேரம் கடல் அலையில் நின்று விட்டு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.சிறிது நேரம் செல்ல விக்கி விஜய்யிடம் , நீயும் மேகாவும் பேசிட்டு இருங்க நாங்க இரண்டு பேரும் அப்படியே கொஞ்சம் நடந்துட்டு வரோம் என கூறி சாலினியை தனியாக அழைத்து கொண்டு சென்றான்.அவர்கள் இருவரும் சென்றதும் விஜய்யும், மேகாவும் என்ன பேச என யோசித்துக் கொண்டு இருக்க முதலில் மேகாவே அவனிடம் அவனது வேலையை பற்றி பேச ஆரம்பித்தாள்.

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்க அங்கே சாலினியை அழைத்து கொண்டு சிறிது தூரம் நடந்தவன் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு அவளையும் அமர வைத்து அவளிடம் பேசிக் கொண்டு இருந்தவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய கிஃப்ட் செய்த பெட்டியை எடுத்து அவளிடம் கொடுத்து அதை பிரித்து பார்க்க சொன்னான்.



காதல் தீ வளரும்.........
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
5. ♥ அழகிய காதல் தீயே ♥






விக்கி தான் வாங்கிய கிப்டை அவளிடம் கொடுத்து அதை பிரித்து பார்க்க சொல்லவும் சாலினியும் ஆர்வத்துடன் அதை பிரிக்க ஆரம்பித்தாள்.அவள் ஆர்வத்துடன் பிரிப்பதை பார்த்து அவளை கிண்டல் செய்தான்.அவளே அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.



சாலினி கிப்டை பிரித்து பார்க்க அதில் ஒரு அழகிய செயின் மற்றும் மோதிரம் இருந்தது.அதில் இருந்த செயினை பார்க்க அதனுடைய டாலர் இதய வடிவத்தில் இருக்க அதன் மீது " VS " என்று இருவரின் பெயரின் முதல் எழுத்து பதிக்கப்பட்டு இருந்தது .அதே போல் மோதிரமும் இதய வடிவத்தில் இருக்க அதன் மீது மூன்று அம்புகளுடன் இனணக்கப்பட்டு கற்கள் பதித்து அழாக இருந்தது .அதை இரண்டையும் பார்த்து கொண்டு இருந்தவளிடம் பிடிச்சு இருக்கா என்று கேட்டான்.

அவன் பிடித்ததா எனவும் வேகமாக தலையை ஆட்டிக் கொண்டே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு என்றாள்.அவளிடமிருந்து அதை வாங்கியவன் இது நான் உனக்கு தந்த
பஸ்ட் கிப்ட் சோ இத நீ எப்பவும் கழட்டக்கூடாது என்றவன் தானே அவளது கழுத்தில் செயினை போட்டு விட்டு விரலில் மோதிரத்தையும் போட்டு விட்டவன் அந்த மோதிர விரலில் இதழ் பதித்து " ஐ லவ் யூ" டி என்றுக்கூறி அவளை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான்.


இங்கே விஜய்யும்,மேகாவும் முதலில் பேசவே தயங்கியவர்கள் சிறிது நேரத்தில் சகஜமாக பேச ஆரம்பித்து ஒருவர் பற்றி ஒருவர் கேட்டு அறிந்து கொண்டு நண்பர்களாகினர். விக்கி சென்று வெகு நேரம் ஆனதால் விஜய் விக்கிக்கு போன் செய்ய அதை ஆன் செய்து பேசிய விக்கி சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு மீண்டும் இருவரும் அலையில் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.


பின் ஒரு வழியாக பேசிக்கொண்டே விக்கி சாலினியை அழைத்து கொண்டு விஜய் இருக்கும் இடத்திற்கு வந்தான்.அவர்ஙள் இருவரும் வந்து தங்கள் அருகில் அமரவும் மேகா தன் அண்ணனிடம் என்ன டா பேசி முடிச்சாச்சா இல்ல இன்னும் அண்ணி கூட எதுவும் பேசனும்மா என கேட்டு அவனை கிண்டல் செய்தாள்‌.இப்படியே நான்கு பேரும் பேசி முடித்து இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து தங்களது வண்டியில் விஜய்யின் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்கு கிளம்பும் போதே விக்கி தன் தந்தைக்கு போன் செய்து விஜய்யின் வீட்டிற்கு டிரைவரிடம் காரை அனுப்புமாறு கூறியதால் இவர்கள் நான்கு பேரும் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருக்க சிறிது நேரத்தில் டிரைவர் வரவும் விக்கி, மேகா இருவரும் விஜய் ,சாலினியிடம் கூறிவிட்டு கிளம்பினர்.


நிச்சயத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்க மாலா குமாரிடம் இந்த வாரம் நிச்சயத்திற்கு விக்கிக்கும், சாலினிக்கும் துணி எடுக்க போக வேண்டும் என்றார்.அதன்படி அந்த வார இறுதியில் குமார் விஜய்க்கு போன் செய்து சாலினியை அழைத்து கொண்டு கடைக்கு வருமாறு கடையின் பெயரை கூறி விட்டு இவர்களும் கடைக்கு கிளம்பினர்.அவர் பேசி முடிக்கவும் விஜய் தன் தங்கைக்கு போன் செய்து கடைக்கு செல்ல ரெடியாக இருக்குமாறு சொல்லிவிட்டு மருத்துவமனையில் தனது வேலையை முடிந்த அளவு பார்த்து விட்டு நேரமாகவும் வேறு ஒரு டாக்டரை இவனுக்கு பதிலாக பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்று குளித்து ரெடியாகி தன் தங்கையை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றான்.


கடைக்கு வந்தவர்கள் விஜய் வருவதற்காக காத்திருந்தனர். விஜய் வந்ததும் அவர்களிடம் லேட் ஆனதற்கு மன்னிப்பு கேட்கவும் அவனிடம் குமார், நாங்களும் இப்பதான் வந்தோம் அதனால ஒன்னும் இல்ல இதுக்கு போய் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க எனக்கூற, மாலா சரி வாங்க உள்ள போவோம் எனவும் அனைவரும் கடைக்குள் சென்றனர்.


உள்ளே சென்றதும் மாலா முதலில் சாலினிக்கு எடுப்போம் எனவும் மற்றவர்களும் அவர் கூறியதற்கு சரி என்று கூறி பட்டுச்சேலை பிரிவிற்கு சென்றனர்.சாலினியிடம் அவளுக்கு பிடித்த புடவையை எடுக்கும்படி கூறிவிட்டு மாலா , மேகாவும் வேற புடவைகள் பார்க்க சென்றுவிட குமாரும் விஜய்யும் பேசிக்கொண்டு இருக்க விக்கி சாலினியுடன் சேர்ந்து அவளுக்கு புடவை பார்த்து கொண்டு இருந்தான்.


ஒவ்வென்றாக பார்த்து கொண்டு இருக்க அங்கிருந்தவரிடம் ஒரு புடவையை காட்டி அதை எடுக்க சொன்னான்.அவரும் அவன் கூறிய புடவையை எடுத்து பிரித்துக் காட்டினார்.இளஞ்சிவப்பு நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்து புடவை முழுவதும் ஸ்டோன் பதித்து அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்க அதை சாலினியிடம் காட்டி அவளிடம் எப்படி இருக்கு என கேட்க அவளுக்கும் அந்த புடவை பிடித்து விட அதை மற்றவர்களிடம் காட்ட அவர்களுக்கும் பிடித்து விட அதையே நிச்சய புடவையாக எடுத்தனர்.பின் விக்கிக்கும் அவளது புடவை நிறத்திலே உடை எடுத்து விட்டு மற்றவர்களுக்கு எடுக்க செல்ல விஜய் சாலினியிடம் இன்னும் அவளுக்கு தேவையான உடையை எடுக்க சொல்ல அவளும் இரண்டு புடவையும், சுடியும் எடுத்தாள்.ஆடைகள் எடுத்து முடித்ததும் நகை கடைக்கு சென்று இருவருக்கும் மோதிரம் எடுத்தனர்.சாலினிக்கு V என்று எழுத்து பதித்த மோதிரமும்; விக்கிக்கு S என்று பதித்த மோதிரமும் எடுத்தனர்.விஜய் தன் தங்கைக்கு சில நகைகளை எடுத்தவன் , விக்கிக்கும் தன் சார்பாக ஒரு மோதிரம் எடுத்திருந்தான்.


நிச்சயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு நெருங்கிய சொந்தங்களையும், நண்பர்களையும் அழைத்திருந்தனர்.விக்கியும் தன்னுடன் வேலை செய்பவர்களையும், சிவாவையும் அழைத்திருந்தான்.சாலினி கல்லூரியில் தங்களுக்கு திருமணம் நடக்க போவதை கூற வேண்டாம் என நினைத்து அவளுடன் இதற்கு முன் படித்த கல்லூரி தோழிகளை மட்டும் அழைத்திருந்தாள்.நிச்சயத்தை விஜய்யின் வீட்டிற்கு அருகில் உள்ள மண்டபத்தில் வைத்திருந்தனர்.


அனைவரும் எதிர்பார்த்த நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது.மாலைதான் விழா என்பதால் காலையே வி‌ஜய்யின் வீட்டிற்கு வந்தவள் சாலினிக்கு கைகளில் மெகந்தி போட்டு முடித்து அங்கிருந்தவாறே விஜய், சாலினியுடன் சேர்ந்து மண்டபத்திற்கு சென்றாள்.விக்கியின் வீட்டில் அவனுடன் சிவா, ராகவ் இருவரும் வீட்டில் இருந்து மண்டபத்திற்கு வந்து தேவையான ஏற்பாடுகளை செய்து விட்டு வருபவர்களை வரவேற்க சென்றனர்.சாலினிக்கும் அலங்காரம் செய்ய ஆட்கள் வர அவள் தன்னுடன் மேகாவை அழைத்துக் கொண்டு ரெடியாக சென்றுவிட்டாள்.

மாலை ஆறு மணிக்கு மேல் அனைவரும் வரவும் நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கப்பட்டது.விக்கியையும், சாலினியையும் அழைத்து அவர்களிடம் நிச்சய உடையை கொடுத்து மாற்றி வருமாறு அனுப்பினார்.இருவரும் உடை மாற்றி வர நிச்சய பத்திரிக்கை வாசித்து தட்டு மாற்றி முடிக்கவும் இருவரையும் மோதிரம் மாற்றுமாறு கூறினர்.இருவரும் மோதிரம் மாற்றி முடிக்க மாலா தனது மருமகளுக்காக வாங்கிய நகையை போட்டு விடவும், விஜய்யும் விக்கிக்கு வாங்கிய மோதிரத்தை போட்டுவிட வந்தவர்கள் அனைவரும் இவர்களை வாழ்த்தி, ஆசிர்வதித்து சென்றனர்.நல்லபடியாக நிச்சயம் நடந்து முடிந்தது.



விடுமுறை முடிந்து வழக்கம் போல கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.விக்கியும், சாலினியும் காலேஜில் மற்றவர்கள் அறியாதவாறு தங்களது காதலை தொடர்ந்தனர்.இதற்கிடையில் விஜய், மேகாவின் நட்பும் அதிகமாகியது.விக்கியின் பெற்றோரும் , விஜய்யும் திருமணத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.விக்கி தன் குடும்பத்தினரிடம் திருமணத்தை சிம்பிளாக வைத்துக்கொள்ளலாம் என கூறியதால் திருமணத்தை அவனது குலத்தெய்வம் கோவிலில் வைக்க ஏற்ப்பாடு செய்தனர்.



விஜய் தன் தங்கைக்கு திருமணம் நடக்க போவதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் திருமணத்திற்கு பிறகு தன் தங்கையை பிரிய போவதை நினைத்து வருந்தினான்.பின் தன் தங்கை தன் நண்பனையே திருமணம் செய்து கொள்ள போவதை நினைத்து தன்னை தானே தேற்றி கொண்டு திருமணம் வேலைகளை விக்கியின் பெற்றோரிடம் கேட்டு செய்து கொண்டு இருந்தான்.


கல்லூரியில் விக்கிக்கு திருமணம் ஆகப்போவதை அறிந்த மாணவிகள் கவலையடைந்தனர். விக்கி ஏற்கனவே சாலினியிடம் நம்ம இரண்டு பேருக்கு கல்யாணம் நடக்க போறது பற்றி உன்னோட பிரண்ட்ஸ்க்கும் உன்னோட கிளாஸ்க்கும் தெரிய வேண்டாம் என்றதால் அவளும் தன் தோழிகளும் விக்கிக்கு திருமணம் ஆகப்போவதை பற்றி பேசும்போது இவளும் தனக்குள் அவர்கள் பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டு அமைதியாக இருப்பாள்.


விக்கி சாலினியிடம் போன் செய்து பேசுவதை மட்டும் தினமும் சரியாக செய்து விட்டு தான் தூங்கவே செல்வான்.அதே போல் அன்று இரவு பேசிக் கொண்டு இருக்கும் போது சாலினி தன் தோழிகள் இவனது திருமணத்தை பற்றி பேசியதை கூறினாள்.அதைக்கேட்ட விக்கி அவளிடம் அந்த கல்யாண பொண்ணே நீ தானு தெரிஞ்சா உன்ன ஏதாவது சொல்லுவாங்கனுதான் நான் உன்னோட பிரண்ட்ஸ்க்கு கூட தெரிய வேண்டானு சொன்னேன் என்றான்.மறுநாள் காலை கல்லூரி சென்றவன் தன் டிபார்ட்மெண்ட் HODயிடம் மட்டும் தங்களது திருமணம் பற்றி கூறினான்.இவ்வாறு நாட்கள் செல்ல திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும்போதே மாலாவை தவிர மற்ற ஐவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு ஆறு பேருடன் சேர்ந்து சிவா, ராகவ் இருவரும் சேர்ந்து வேன் ஏற்பாடு செய்து குமாரின் சொந்த ஊரான மதுரையை நோக்கி சென்றனர்.


மதுரை வந்தவர்கள் அங்குள்ள குமாரின் மற்றொரு வீட்டிற்கு வந்தனர்.ஏற்கனவே அந்த வீட்டை அங்குள்ள வேலையாட்கள் மூலமாக சுத்தம் செய்து அந்த வீட்டை அலங்கரித்து வைத்திருந்தனர்.குளித்து முடித்து சாப்பிட்டவர்கள் ரெஸ்ட் எடுக்க தங்களுக்கு ஒதுக்கிய அறைக்கு சென்றனர்.குமார், மாலா ஒரு அறையிலும் ;சாலினி, மேகா ஒரு அறையிலும்; விஜய் ,விக்கி அவனது நண்பர்கள் நான்கு பேரும் ஒரு அறையிலும் தாங்கி கொள்ளுமாறு கூற அதன்படி அவரவர் அறைக்கு சென்றனர்.


மறுநாள் காலை சீக்கிரம் எழுந்த மாலா விக்கி, சாலினியை எழுப்பி திருமணத்திற்கு முதல் நாள் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்தார்.அன்று பகல் முழுவதும் மேகா சாலினிக்கு மெகந்தி வைத்து விட்டு தனக்கும் வைத்து முடித்தாள்.பின் மாலை வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க விக்கி சாலினியிடம் ஏதாவது பாட்டு பாடுமாறு கேட்க அவள் முதலில் மறுக்க பின் விக்கியின் அன்புத் தொல்லை தாங்காமல் அவளும் பாட ஆரம்பித்தாள்.அவளது பாடலை கேட்டு மற்றவர்கள் அவளை பாராட்டினர்.மேகா உடனே பாட்டு பாடி விளையாடலாம் எனவும் பெரியவர்கள் இருவரும் தாங்கள் விளையாட்டிற்கு வரவில்லை எனவும் சிறியவர்கள் மட்டும் கலந்து கொண்டு ஆளுக்கொரு பாடலை பாடினர்.இவ்வாறு பேசி விளையாடிய படி அன்று இரவு வரை கலகலப்பாக இருந்தது.பின் இரவு பத்து மணிக்கு மேல் ஆகவும் மாலா காலை சீக்கிரம் எழுந்து ரெடியாகி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் அனைவரையும் சென்று படுக்குமாறு கூறினார்.


மற்றவர்களும் சரி என சென்று விட மாலாவுடன் சேர்ந்து விஜய் நாளைக்கு கோவிலுக்கு எடுத்து செல்ல தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.அனைத்து வேலையும் முடியவும் விஜய்யை சென்று படுக்குமாறு கூறினார் குமார்.விஜய் ஏதோ யோசனையில் இருக்க அவனிடம் என்னவென்று கேட்க அவன் அவர்கள் இருவரிடமும் சாலினியை நன்றாக பார்த்து கொள்ளுமாறு ஓர் அண்ணனாக அவர்களிடம் அவளை பற்றி கூறினான்.அவன் கூறியதைக் கேட்ட இருவரும் அவனிடம் சாலினியும் மேகா மாதிரி எங்களுக்கு இன்னொரு பொண்ணு மாதிரி தான் அதனால நீ அவளப்பத்தி கவலப்படாம இருப்பா எனக்கூற அவர்கள் இருவரிடமும் நன்றியை கூற மாலா அவ மட்டும் இல்ல நீயும் எங்க பையன் தான் அதனால எங்களுக்கு நன்றி எல்லாம் சொல்லி எங்கள பிரிச்சு பாக்காத என்று கூற அவனும் சரிம்மா இனிமே இப்படி பேச மாட்டேன் என்றான்.மாலா அவனிடம் நீ எதையும் யோசிக்காம போய் படுத்து தூங்கு எனக்கூறி அவனை அவனது அறைக்கு அனுப்பி விட்டு அவர்களும் தங்களது அறைக்கு சென்றனர்.

காதல் தீ வளரும்......

(Tq for your supporting frds🙏🙏🙏😊😊😊)
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6. ♥ அழகிய காதல் தீயே ♥





விஜய்யை தூங்குமாறு கூறிவிட்டு தனது அறைக்கு சென்றவர்கள் தன் மகனுக்கு நாளை நடக்க போகும் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே உறங்கினார்கள் இருவரும்.இங்கு தனதறைக்கு போகும்போது தன் தங்கையின் அறைக்கு அருகில் வந்தவன் அறையில் இருந்து பேச்சு சத்தம் கேட்க அவள் இன்னும் தூங்கவில்லை எனத்தெரியவும் விஜய் அவளது அறை கதவை சத்தம் வராமல் மெதுவாக தட்டினான்.


பெண்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததால் முதல் முறை கதவு தட்டும் சத்தம் கேட்கவுமே சாலினியிடம் தான் சென்று பார்ப்பதாக கூறி மேகா சென்று கதவை திறந்தாள்.கதவை திறந்தவள் விஜய் வெளியே நிற்பதை கண்டு என்ன மாமா இந்த நேரத்துல இங்க வந்து இருக்கிங்க தூங்கலயா எனக் கேட்டாள்.அவள் அவனிடம் கேட்டபடியே உள்ளே செல்ல வழிவிடவும் அவனும் உள்ளே வந்தவன் மேகாவிடம் சாலினிய பாக்கனும் போல இருந்தது அதான் வந்தேன்மா என்றான். சரி நீங்க பேசிட்டு இருங்க எனக்கூறி வெளியே செல்ல போனவளை தடுத்த அண்ணன் தங்கை இருவரும் அவளிடம் வெளிய எல்லாம் போக வேண்டாம் என்றனர்.விஜய்யும் அவளிடம் நான் ஒன்னும் ரகசியம் எல்லாம் பேச வரல, சும்மா பாக்கதா வந்தேன் அதனால் நீ இங்கேயே இரும்மா எனவும் அவளும் சரி மாமா நான் வெளிய போல நீங்க அண்ணி கூட போய் பேசுங்க என்றவள் அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.

விஜய்யும் தன் தங்கையின் அருகில் வந்து அமர்ந்தவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான்.பின் சாலினி தன் அண்ணனை அழைத்து அவனிடம் என்ன அண்ணா எதுவும் பேசாம என்ன இப்படி பாத்துட்டு இருக்க என்றாள். அவன் தங்கை தன்னை அழைத்ததில் தன் யோசனையில் இருந்து மீண்டவன் அவளிடம் இப்ப மட்டும் நம்ம அம்மா, அப்பா இருந்து இருந்தா உனக்கு கல்யாணம் நடக்கபோவது நினைத்து எவ்ளோ சந்தோஷப்பட்டு இருப்பாங்க இல்லடா என்று கூறி கண் கலங்கினான்.


தன் அண்ணன் கண் கலங்கியதை பார்த்ததும் சாலினி வேகமாக தன் அண்ணனின் கண்ணீரை துடைத்து விட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவளும் தன் பெற்றோரை நினைத்து கலங்கினாள்.தன் மீது சாய்ந்திருந்த தன் தங்கையின் தலையை வருடியபடி ஒரு அண்ணனாகவும் அவளது தந்தையின் இடத்தில் இருந்து அவளிடம் திருமணத்திற்கு பிறகு அவள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தன் தங்கைக்கு சில அறிவுரைகள் கூறினான்.சாலினியும் அவன் கூறிய படி நடந்து கொள்வதாக கூற அண்ணன் தங்கை இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டு இருக்க சாலினி விஜய்யின் மடியில் படுத்து பேசிக் கொண்டு இருந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.


அவள் உறங்குவதை பார்த்த விஜய் அவளை கட்டிலில் படுக்க வைத்தவன் எழுந்து மேகாவின் அருகில் வந்தான்.அதுவரை அண்ணன் தங்கை இருவரின் அன்பையும், பாசத்தையும் பார்த்து கொண்டு இருந்தவள் விஜய் தன் அருகில் வரவும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே சேரில் இருந்து எழுந்து நின்றாள்.அவளிடம் தூங்கவிடாமல் வந்து தொந்தரவு செய்ததற்காக அவளிடம் மன்னிப்பு கேட்க அவளோ அவனிடம், ஐயோ மாமா இதுல என்ன இருக்கு விடுங்க நீங்க வந்து பேசுன பிறகு அண்ணிக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என கூறினாள்.அவள் கூறியதைக் கேட்டு புன்னகையுடன் அவளிடம் போய் படுக்குமாறு கூறியவன் அவளிடம் குட்நைட்டை சொல்லி விட்டு தனதறைக்கு சென்று படுத்தான்.


மறுநாள் காலை அழகிய பொழுதாக விடிய மாலா சாலினியை எழுப்பி குளித்து ரெடியாகும் படி கூறி விட்டு மேகாவையும் எழுப்பியவர் சாலினிக்கு உதவியாக இருக்க சொல்லி விட்டு தானும் சென்று ரெடியாகி விக்கியை எழுப்ப சென்றார்.அவர் விக்கியின் அறைக்கு சென்ற போது விஜய் எழுந்து குளித்து ரெடியாகி வரவும் அவனை பார்த்து பேசி விட்டு விக்கியையும் அவனது பிரண்ட்ஸையும் எழுப்பி ரெடியாகும்மாறு கூறி அனைவருக்கும் காபி போட சென்றார்.


சாலினியின் அறையில் அவள் குளித்து முடித்து சாதாரனமாக ஒரு புடவையை அணிந்து கொண்டு வெளியே வந்து மேகாவை குளிக்க அனுப்பினாள்.மேகா வருவதற்குள் தனது ஈரமான கூந்தலை காயவைத்தாள்.மேகா வரவும் சாலினியை கண்ணாடி முன்னால் அமர வைத்து அவளுக்கு தலை சீவ ஆரம்பித்தாள்.மேகா சாலினிக்கு தலை சீவி முடித்து தலை நிறைய மல்லிகை பூவை வைத்து முடிக்க மாலா அறைக்கு வந்து இவர்கள் ரெடியாகி விட்டார்களா என பார்க்க வந்தவர் சாலினி ரெடியாகி கொண்டு இருக்க அவளை சீக்கிரம் ரெடியாகுமாறு கூறிவிட்டு வெளியே சென்றார்.பின் மேகா சாலினியிடம் திருமணத்திற்கு எடுத்த புடவையை அவளிடம் கொடுத்து அதை மாற்றி வர சொன்னவள் தானும் தலைவாரி பூ வைத்து முடித்து தனக்கு எடுத்த புடவையை கட்டி முடித்து அதற்கு மேட்சாக வளையல், கம்மல், இன்னும் சில நகையை போட்டு ரெடாயானவள் சாலினி புடவை மாற்றி கொண்டு வரவும் அவளுக்கு விஜய் அவளது திருமணத்திற்கு எடுத்திருந்த நகைகளை போட்டு விட்டு அவளை ரெடியாக்கி இங்கேயே இருங்க அண்ணி எனக்கூறி தன் அன்னையை காண சென்றாள்.

வெளியே வந்தவள் தன் அம்மாவிடம் சாலினி ரெடியாக இருப்பதை கூறிவிட்டு தன் புடவையை காட்டி எப்படி இருக்கும்மா என்று கேட்க மாலாவும் தன் மகளை பார்த்து அவளது நெற்றியில் முத்தமிட்டு நன்றாக உள்ளது என்றார்.அவளிடம் நீ போய் உங்க அண்ணன் ரெடியாகிட்டானானு போய் பார்த்து அவனை சீக்கிரம் வர சொல்லு எனக்கூறி அவளை அனுப்பி வைத்தார்.


மேகாவும் தன் அண்ணனை காண அவனது அறைக்கு சென்று கதவை தட்டினாள்.கதவை தட்டவும் விஜய் வந்து கதவை திறந்தான்.கதவை திறந்த விஜய் அழகு தேவதையாக சேலையில் வந்து நின்ற மேகாவை பார்த்து அப்படியே நின்றான்.அவன் நிற்பதை பார்த்த சிவா அவன் அருகில் வந்து அவனிடம் யார் விஜய் கதவு தட்டுனது எனக் கேட்க விஜய்யை வேஷ்டி சட்டையில் பார்த்த மேகாவும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் சிவாவின் அழைப்பில் தன்னிலை அடைந்தவள் அவனிடம் அண்ணா விக்கி ரெடியாகிட்டானா என்று கேட்டவாறு விஜய்யை நகரவும் இவளும் அவன் பின்னாடியே உள்ளே வந்து தன் அண்ணனை கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.


குமார் விஜய் மற்றும் விக்கியின் நண்பர்களை அழைத்து ஹாலில் இருந்த கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை வேனில் எடுத்து வைக்குமாறு அவர்களை அனுப்பி விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றார்.அனைத்தையும் எடுத்து வைத்தவர்கள் நல்ல நேரம் தொடங்கவும் மாலா சென்று சாலினியை அழைத்து வர , விஜய் விக்கியை அழைத்துவர கடவுளை வணங்கி விட்டு அனைவரும் வண்டியில் ஏறி கோவிலை நோக்கி சென்றனர்.வண்டியில் ஏறிய பின்பே தன்னவளை பார்த்த விக்கி அவளது எளிமையான திருமண அலங்காரத்தில் அவள் மேலும் அழகாக தெரிய அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.அவளும் தன்னவனை மணமகனாக வேஷ்டி சட்டையில் பார்த்தவள் அவனை பார்க்க அவனோ அவளை பார்த்து கண்ணடித்து சூப்பர் என சைகை செய்தான்.அவன் கண்ணடிக்கவும் அவனை பார்க்காமல் மேகாவிடம் திரும்பி அமர்ந்து அவளிடம் பேச ஆரம்பித்தாள்.இதை பார்த்த அவனது நண்பர்கள் அவனை கிண்டல் செய்ய ஆரம்பிக்க விக்கியோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னவளையே பார்த்து கொண்டு இருந்தான்.இதை அனைத்தையும் பார்த்த விஜய் தன் தங்கையையும் தன் நண்பனையும் நினைத்து புன்னகைத்தவன், சாலினியின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த மேகாவை பார்த்தவன் மீண்டும் அவளது அழகில் தன்னை தொலைத்தான்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு கோவிலை வந்தடைந்தனர்.கோவிலுக்கு வந்தவர்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவில் பூசாரி கேட்க கேட்க ஒவ்வொன்றாக எடுத்து கொடுத்து கொண்டு இருந்தனர்.பின்பு பூசாரி மணமக்களை அழைத்து வருமாறு கூறினார்.விஜய்யும் விக்கியின் நண்பர்களும் விக்கியை அழைத்துவந்து அமர வைக்க, மாலாவும் மேகாவும் சாலினியை அழைத்து வந்து விக்கியின் அருகில் அமர வைத்தனர்.


இருவரும் வந்து அமர்ந்த பின் சில மந்திரங்களை கூறி மாங்கல்யம் இருந்த தட்டை அங்கிருந்தவர்களிடம் காட்டி ஆசி பெற்று வர மாங்கல்யத்தை எடுத்து விக்கியிடம் தந்து கட்டுமாறு கூறி மந்திரங்களை கூறத் தொடங்கினார்.விக்கி சாலினியின் கழுத்தில் தாலியை கட்டி அவளை தன்னவள் ஆக்கினான்.பின் அவளது நெற்றியிலும் , வகிட்டிலும் குங்குமம் இட்டு தாலியிலும் குங்குமம் வைத்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டான்.இதை பார்த்து விக்கியின் நண்பர்களும் , அவனது தங்கையும் கிண்டலடிக்க விஜய் தன் தங்கைக்கு திருமணம் முடிந்ததை நினைத்து கண்கலங்கினான் .இவை அனைத்தையும் சிவா தனது கேமரா மூலம் படம் பிடித்தான்.பின்பு அக்னியை வலம் வந்து அவளது காலில் மெட்டியை போட்டு விட்டபின் இருவரும் சேர்ந்து குமார்-மாலாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க இருவரையும் ஆசிர்வதித்தனர்.மாலா கண்கலங்க தன் மகனையும் , மருமகளையும் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டார்.

அவர்களிடம் ஆசி பெற்றவர்கள் விஜய்யின் அருகில் சென்று சாலினியும் , விக்கியும் விஜய்யின் காலில் விழ அவர்களை தடுத்தவன் இருவரையும் தன்னுடன் சேர்த்து அனைத்து கொண்டான்.சாலினி தன் அண்ணனை அனைத்து கொண்டு அழவும் விஜய்யும் கலங்கிய படி அவளஅவள அண்ணனும் பிரியனும்னு கவலப்படாம இருடா அவன் டெய்லி நம்ம வீட்டுக்கு வந்து உன்ன பாத்துட்டுதான் போவான் லீவ்ல எல்லாம் நம்ம கூடத்தான் இருப்பான் அதுக்கு நான் பொறுப்பு என்றதும் தான் அழுகையை நிறுத்தினாள்.குமாரும் அவளிடம் இனி உன்னோட அண்ணன் தனியா இல்லம்மா அவனுக்கு உன்னோட சேர்ந்து நாங்க எல்லாம் இருக்கோம் நீ கவலப்படாம இரு என்றார். மேகா தன் அண்ணன், அண்ணிக்கு வாழ்த்து கூறி தனது கிப்டை இருவருக்கும் கொடுத்தாள்.பின் அவனது நண்பர்கள் இருவரும் வாழ்த்தி கிப்டை கொடுக்க, விஜய் தன் சார்பாக தனது கிப்டை தரவும் சிறிது நேரம் கோவிலுக்கு இருந்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.இப்போது இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு வர மற்றவர்கள் இவர்களை கிண்டல் செய்து கொண்டும் தங்களுக்குள் பேசிக் கொண்டும் வந்தனர்.


வீட்டிற்கு வரவும் மாலா இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லி கடவுளை வணங்கினர்.அனைத்து சடங்குகளும் முடிய உடை மாற்றி கொண்டு அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.பின் மதிய உணவை முடித்துக் கொண்டு அனைவரும் ரெஸ்ட் எடுக்க சென்றனர்.மாலாவின் அறைக்கு வந்த விக்கி நாளை காலை ஊருக்கு கிளம்பலாம் என்றான் .அவர்களும் சரி எனக்கூற விக்கி தன் அறைக்கு சென்று சாலானியுடன் பேசிக் கொண்டு இருந்தான்.அன்று இரவு சாலினி அவனது அறைக்கு வர சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார்கள்.விக்கி அவளிடம் அவளது படிப்பு முடிந்ததும் தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தனர்.பின் விக்கி அவளிடம் காலை வேகமாக எழுந்ததால் அவளை படுத்து ரெஸ்ட் எடுக்குமாறு கூறியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் உடை மாற்றி கொண்டு வந்து படுக்கவும் இவனும் அவளருகில் படுத்து அவளை தன்னோடு சேர்த்து அனைத்து கொண்டு படுத்தான்.மறுநாள் காலை அனைவரும் சென்னைக்கு கிளம்பி சென்றனர்.


மூன்று நாட்கள் கழித்து விக்கியும், சாலினியும் எடுத்த விடுமுறை முடிந்து கல்லூரிக்கு செல்ல ரெடியாகினர்.மேகா சென்னை வந்த மறுநாளே காலேஜ் செல்ல இவர்கள் இருவரும் இன்றுதான் செல்ல உள்ளனர்.காலை ரெடியாகி கீழே வந்தவர்கள் சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல விக்கி மேகாவை அழைத்து கொண்டு போவதாகவும், சாலினி தன் ஸ்கூட்டியில் வருவதாகவும் ஏற்கனவே பேசி முடிவெடுத்த படி மூவரும் வீட்டில் சொல்லி விட்டு காலேஜ் கிளம்பினர்.


விக்கி முதலில் வந்தவன் தன் காரை நிறுத்தி விட்டு இறங்காமல் சாலினி வரும்வரை காத்திருந்தவன் அவள் வந்து வண்டியை நிறுத்தியதும் கீழே இறங்கியவன் வழக்கம் போல் தன் மனைவியை பார்த்து கண்ணடித்து விட்டு தனது டிபார்ட்மெண்ட் நோக்கி சென்றான்.அவன் உள்ளே வரவும் அவனுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவனிடம் வாழ்த்துக்களை கூறினார்கள்.

அதே சமயம் சாலினி தன் வகுப்பிற்குள் வரவும் அவளை பார்த்த அவளது தோழிகள் அவளது கழுத்தில் இருந்த புது மஞ்சள் தாலியையும், அவளது நெற்றி வகிட்டில் வைத்திருந்த குங்குமத்தையும் பார்த்தவர்கள் அவளிடம் எப்போது திருமணம் நடந்தது என்றும் , எதற்காக அழைக்கவில்லை என்றும் கேட்க அவள் ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் , திடீரென ஏற்பாடு செய்ததால் யாருக்கும் சொல்லவில்லை என்று கூறி அவர்களை சமாளித்தாள்.



காதல் தீ வளரும்......

(Give your support and comments frds. Tq 🙏🙏🙏😊😊😊😊)
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7. ♥ அழகிய காதல் தீயே ♥




சாலினியிடம் அனைவரும் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்க அவளும் அனைவருக்கும் பதில் சொல்லி சமாளித்துக்கொண்டு இருந்தால்.அப்போது முதல் பாட வேலைக்கான மணி அடிக்கவும் விக்கி வகுப்பிற்கு வர அனைவரும் எழுந்து நின்று குட்மார்னிங் சொல்லி விட்டு அமர அவனும் பதிலுக்கு கூறி விட்டு மாணவர்களிடம் தான் வராமல் இருந்த இந்த ஒரு வாரத்தில் என்ன செய்தார்கள் என கோட்க மாணவர்கள் பதில் கூறினார்கள்.அப்போது ஒரு மாணவன் எழுந்து அவனிடம் அவனுக்கு திருமணம் ஆனதற்கு வாழ்த்து கூற மற்ற மாணவர்களும் அவனுடன் சேர்ந்து விக்கிக்கு வாழ்த்துக்கள் கூற அவனோ யாரும் அறியாமல் சாலினியை பார்த்து புன்னகைத்தான்.அதை பார்த்த அவளும் பதிலுக்கு அவனை பார்த்து புன்னகைத்தாள்.


மாணவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து கூறி முடிக்கவும் அவர்களிடம் தன் நன்றியை தெரிவிக்கவும், சாலினியின் தோழி மதுமிதா அவனிடம் , சார் இந்த கிளாஸ்ல இருக்க என்னோட பிரண்டுக்கும் மேரேஜ் முடிந்து இன்னைக்கு தான் அவளும் வந்து இருக்கா சார் அதனால நாங்க எல்லாரும் சேர்ந்து அவளுக்கு விஷ் பன்னலாமா சார் என அவனிடம் பெர்மிஷன் கேட்டாள்.


அந்த மாணவி கூறியதைக் கேட்டவன் பொதுவாக பார்ப்பதை போல் சாலினியை பார்க்க அவளும் இதை எதிர் பார்க்கவில்லை என்பதால் தன் முகத்தை பாவமாக
வைத்தபடி இவனை பார்த்தாள்.அவளது முகபாவனையை பார்த்தவுடன் இவனுக்கு சிரிப்பு வந்து விட தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த மாணவியிடம் சரி எனக்கூறவும் அவள் தன் அருகில் அமர்ந்து இருந்த சாலினியை எழுப்பி விட அவளும் வேறுவழியின்றி எழுந்து நிற்கவும் அவளை பார்த்த அவளது வகுப்பு பாய்ஸ் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க விக்கி சாலினியை பார்த்து முன்னாடி வந்து நில்லுங்க என்றான்.


சாலினியும் விக்கி கூறியதைக் கேட்டு முன்னால் வந்து நிற்கவும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவளுக்கு வாழ்த்துக்கள் கூற அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறியவள் தன் மனதில் ஒரு கல்யாணத்துக்கு எத்தனை தடவ தான் விஷ் பன்னுவாங்களோ என்று நினைத்துக்கொண்டு நிற்க விக்கியும் மாணவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவனும் தன் சார்பாக அவளுக்கு வாழ்த்து கூற சாலினியும் அதை புரிந்து கொண்டு அவனிடம் நன்றி கூறிவிட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தாள்.பின் விக்கியும் பாடம் நடத்த ஆரம்பித்தான்.


மதிய உணவு இடைவேளையின் போது விக்கி ராகவனுடன் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டு இருக்க ராகவ் விக்கியிடம் அவனது திருமணத்தன்று சாலினியின் அண்ணன் விஜய்யும், விக்கியின் தங்கை மேகாவும் ஒருவரை ஒருவர் மெய்மறந்து பார்த்து கொண்டு இருந்ததை பற்றி கூறி அவனிடம் மேகாவ விஜய்க்கு தான் கல்யாணம் செய்து வைக்க போறிங்களா என்றுக்கேட்டான்.


அவன் கூறியதைக் கேட்ட விக்கி ராகவ்விடம் அப்படி எல்லாம் இது வரை நாங்க யோசிக்கவே இல்லை என்றவன் , அவனிடம் அப்படி அவர்களுக்குள்ள ஏதாச்சும் இருந்த ரொம்ப சந்தோஷம் படுறவன் நானா தான் இருப்பேன் ஏன்னா அவனவிட ஒரு நல்லவன் கிடைக்க மேகா ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தன் மச்சானை நினைத்து மகிழ்ந்தான்.மாலை கல்லூரி முடிய காலை வந்தது போல் இப்போதும் சாலினி வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய பின் இவனும் தன் காரில் மேகாவை அழைத்து கொண்டு அவளது பின்னால் சென்றான்.


மூன்று பேரும் வீட்டிற்கு வரவும் மாலா அவர்களை பிரஷசாகி வருமாறு கூறி விட்டு இவர்களுக்கு டீ போட சென்றார்.தங்கள் அறைக்கு வந்த விக்கியும், சாலினியும் தங்களது பைகளை வைத்து விட்டு பிரஷசாகி உடை மாற்றி விட்டு அமர மாலா டீயை இவர்களது அன்றைக்கே கொண்டு வரவும் சாலினி அவரிடம் நீங்க எதுக்கும்மா மேல வந்திங்க என்ன கூப்டா நான் வந்து எடுத்துட்டு வந்து இருப்பேனே என்றாள்.இதைக்கேட்ட மாலா விக்கிக்கு டீ கொடுத்து விட்டு அவளிடமும் ஒரு கப்பை தந்தவர் அவளை தன் அருகில் அமர வைத்து அவளிடம் , இதுல என்னம்மா இருக்கு நீயும் இப்பதான வந்து இருக்க அதனாலதான் நானே கொண்டு வந்தேன் என்றவர் சிறிது நேரம் அவர்கள் இருவரிடமும் பேசி விட்டு கீழே சென்றார்.

அவர் சென்றதும் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது விக்கி அவளிடம் காலை இருவருக்கும் தனித்தனியாக வாழ்த்து கூறியதை பற்றி இருவரும் தங்களது மனதில் நினைத்துக்கொண்டு இருந்ததை கூறி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

மாலை ஆறு மணி ஆனதும் தனதறையில் இருந்து கீழே இறங்கி வந்த சாலினி பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வர ஹாலில் அமர்ந்து மூவரும் பேசிக்கொண்டு இருக்க சாலினி வருவதைப் பார்த்த மேகா அவள் வந்து விக்கியின் அருகில் அமரவும் அவளிடம் , என்ன அண்ணி இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு என்று கேட்க அவளும் இன்று நடந்ததை கூறினாள்.இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அண்ணன் தங்கை இருவரும் தங்களது பாச சண்டையை ஆரம்பித்தனர்.சாலினிக்கும் இங்கு வந்த நாளில் இருந்து இவர்களது பாச சண்டையை பார்த்து பழகி விட்டதால் இவர்கள் இருவரிடையே மூக்கை நுழைக்காமல் அண்ணன் தங்கை இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டையை அமைதியாக அமர்ந்து பார்த்து இரசித்து கொண்டு இருந்தாள்.


இவர்கள் இருவரும் சீரியசாக சண்டை போடுவதாக கூறி காமடி செய்து கொண்டு இருக்க தன் அண்ணனிடம் இருந்து தப்பித்த மேகா தன் அண்ணியின் அருகில் சென்று , 'என்ன அண்ணி நாங்க இங்க சின்சியரா சண்ட போட்டுட்டு இருக்கோம் எங்கள விலக்கி விட்டு சமாதானம் செய்விங்கனு பார்த்த ,நீங்க என்னடான்னா ஏதோ காமடி படம் பார்க்கிற மாதிரி எங்க இரண்டு பேரையும் பார்த்து சிரிக்கிறிங்க ' என கேட்டாள்.உடனே விக்கியும் தன் தங்கையுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவனும் தன் மனைவியிடம் , ஏம்மா சாலினி இங்க உன்னோட புருஷன் நான் இந்த குட்டி சாத்தான்கிட்ட மாட்டிக்கிட்டு இந்த பிசாசுகிட்ட அடி வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆகிட்டு இருக்கேன்.நீ வந்து என்ன இந்த பேய்க்கிட்ட இருந்து காப்பத்தனும்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லாம நாங்க போடுற சண்டையை பார்த்து சிரிக்கவா செய்ற நீ எல்லாம் நல்லா வருவம்மா என்று தன் மனைவியையும் தன் தங்கையையும் கிண்டல் செய்தான்.

இதைக் கேட்ட சாலினி தன் கணவனை பார்த்து பொய்யாக முறைக்க அவளை பார்த்து விக்கி கண்ணடிக்கவும் அவனிடம் மேகா அருகில் இருப்பதை சைகையால் கூறினாள்.ஆனால் மேகாவோ இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் அண்ணனை கொலை வெறியோடு முறைத்து கொண்டு இருந்தாள்.மேகா இப்படி நிற்பதை பார்த்த சாலினி தன்னையே பார்த்து கொண்டு இருந்த தன் கணவனை மேகாவை பார்க்குமாறு அவனிடம் கூற அவனோ அசால்ட்டாக என்ன என்று கேட்டவாறு தன் தங்கையின் புறம் திரும்பி பார்க்க அவளோ இடுப்பில் கை வைத்து கொண்டு பயங்கர பாசத்துடன் தன் அண்ணனை பார்த்தாள்.


அவனும் தன் தங்கை தன்னை இவ்வளவு பாசமாக பார்ப்பதை கண்டு அவளருகில் சென்று , மேகா குட்டி என்ன ஆச்சுடா எதுக்காக அண்ணன இவ்வளவு பாசமா பாக்குறீங்க என கேட்டு தன் தங்கைக்கு ஐஸ் வைக்க , அவளோ இதில் மேலும் கடுப்பாகி அவனை அடிக்க தொடங்கினாள்.மேகாவுடன் பேசுவதை கேட்டே சாலினிக்கு சிரிப்பு வர சிரித்தால் தன் கணவன் மீண்டும் கிண்டல் செய்வானோ என்று எண்ணி கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருக்க மேகா அவனை அடிக்க தொடங்கவும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.அவள் சிரிப்பதை பார்த்த அண்ணன் தங்கை இருவரும் அவளை முறைக்கவும் தன் வாயை மூடிக்கொண்டு சிரிப்பை அடக்க முயன்றாள்.

மேகா திரும்பவும் தன் வேலையை (அடிப்பதை)தொடங்க அதில் கடுப்பான விக்கி தன் தங்கையை நோக்கி எதுக்காக அடிக்கிறனு சொல்லிட்டாவது அடிடி என்றான் முகத்தை பாவமாக வைத்து கொண்டு.அவன்அப்படி சொல்லவும் அவனை அடித்து கொண்டே அவனிடம் ,டேய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்ன பாத்து நீ குட்டிசாத்தான், பிசாசு, பேய்னு சொல்லுவ என்ன பார்த்தா அப்பிடியா இருக்கு உனக்கு இன்னைக்கு உன்ன என்ன பன்றேன்னு பாருடா என்று மீண்டும் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

இவர்கள் மீண்டும் அடிதடியில் இறங்க சாலினி இவர்களைப் பார்த்தவாறு தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.அதே நேரம் சரியாக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு போகும் முன் தன் தங்கையை பார்க்க விஜய் விக்கியின் வீட்டிற்கு வரவும் ,தன் அண்ணன் தன் அடியில் இருந்து தப்பித்து ஓடவும் அவனை விரட்டி பிடிக்க வந்த மேகா விஜய்யின் மீதே மோத அவள் ஓடி வந்து மோதிய வேகத்தில் இருவரும் கீழே விழுந்தனர்.


மேகாவோ கீழே விழ போகும் பயத்தில் கண்னை மூடிக்கொண்டாள் அதனால் தான் அவளுக்கு தான் யாரின் மீது மோதினோம் என்று தெரியாமல் போனது.தன் பின்னால் வந்த தன் தங்கையை காணாமல் அருகில் இருந்த அறையில் இருந்து வெளியே வந்து தன் தங்கையை தேடியவன் பார்த்தது என்னவோ, விஜய் கீழே விழுந்து கிடக்க அவன் மீது பயத்தில் கண்னை மூடி கொண்டு இருந்த மேகாவை அனைத்த படி இருந்த இருவரையும் தான்.அவர்களை அவ்வாறு பார்த்தவுடன் அவனுக்கு இன்று மதியம் தன் நண்பன் ராகவன் இவர்களை பற்றி கூறியதுதான் நினைவு வந்தது.

அதே நேரம் இவர்கள் இருவரையும் தேடிக்கொண்டு வந்த சாலினியும் தன் அண்ணன் மீது மேகா இருப்பதை கண்டு கீழே விழுந்ததால் இருவருக்கும் ஏதேனும் அடி பட்டு இருக்குமோ என்று பதறியவள் அவர்கள் அருகில் சென்று மேகாவை அழைக்க விக்கியும் அறையில் இருந்து வெளியே வந்து மேகாவை எழுப்பி விட்டு தன் மச்சானை தூக்கி விட்டு அவனை அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தான்.மேகாவை தன்னருகே அமரவைத்த சாலினி அவளிடம் கீழே விழுந்ததில் ஏதேனும் அடிபட்டதா என கேட்கவும் அவள் இல்லை என்று கூற விக்கியோ வாயை வைத்து கொண்டு அமைதியாக இருக்காமல் தன் மனைவியிடம் நீ அடிபட்டதானு கேட்க வேண்டியது அவக்கிட்ட இல்ல உன்னோட அண்ணன்கிட்டதான் நீ கேட்கனும் பாவம் என் மச்சான் இவ தான் அவன் மேல இருந்தா இல்ல அப்புறம் எப்படி இவளுக்கு அடிபடும் அது தான் சேப்பா இவன் காப்பத்திட்டான் இல்ல எனவும் தன் அண்ணனை முறைத்து விட்டு தன் அம்மாவை காண சென்றாள் மேகா.

இரவு குமார் ஆபீஸில் இருந்து வரவும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது மேகா தன் அண்ணனை தன் தந்தையிடம் மாட்டிவிட அவரும் தன் மகளுக்கு சப்போர்ட் செய்து தன் மகனை பார்த்து முறைக்கவும் மேகா தன் அண்ணனை பார்த்து பழிப்புகாட்டிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.சாப்பிட்டு முடியவும் விஜய் அனைவரிடமும் கூறிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பும் போது மேகாவை திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு சென்றான்.அவன் மேகாவை பார்த்ததை கண்ட விக்கி விஜய்யிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து கொண்டான்.


இவ்வாறு காலை நேரத்தில் காலேஜ் செல்ல மாலை அனைவருடனும் பேசி விளையாட படிக்க என்று ஐந்து மாதங்கள் அழகாக செல்ல முதலாம் ஆண்டிற்கான இறுதி தேர்வு ஆரம்பித்தது.சாலினி , மேகா இருவரும் முதலாம் ஆண்டு என்பதால் இருவருக்கும் ஒரே நேரத்தில் தேர்வு ஆரம்பித்தது.தேர்வு ஆரம்பிப்பதற்கு முன் படிக்க விடுமுறை அளிக்கப்பட்டது .காலை கல்லூரி சென்று வரும் விக்கி மாலை வீட்டிற்கு வந்ததும் இருவருக்கும் பாடத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை கேட்டு சொல்லி தந்து விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பிப்பான்.இவ்வாறு லீவ் முடிந்து இன்று இருவருக்கும் தேர்வு ஆரம்பித்தது.விக்கி காலை வேகமாக சென்று விடுவதால் சற்று தாமதமாக சாலினியே தனது ஸ்கூட்டியில் மேகாவை அழைத்து சென்றாள்.


காலேஜ் வந்ததும் அவரவர் தேர்வறையை பார்த்து விட்டு அங்கு சென்றனர்.அப்போது விக்கி சாலினிக்கு , வந்தாச்சா, என்று கேட்டு மெசேஜ் அனுப்பினான்.அவளும் வந்து விட்டதாகவும் எக்ஸாம் ஹாலில் இருப்பதாக கூற அவளுக்கு ஆல் தி பெஸ்ட் என அனுப்பி விட்டு தன் வேலையை பார்க்க அலுவலகத்திற்குள் சென்றான்.முதல் நாள் தேர்வு முடியவும் மதியம் வீட்டிற்கு வந்தவர்களை மாலா சாப்பிட அழைத்தார் .அவர்களும் சாப்பிட்டு முடித்ததும் அடுத்த தேர்விற்காக படித்து கொண்டிருந்தனர்.


இரண்டு பேப்பர் முடியவும் இனி இரண்டு நாட்கள் கழித்துதான் சாலினிக்கு தேர்வு இருந்ததால் மேகா யாருடன் செல்வது என யோசிக்க ஆரம்பித்தாள்.விக்கி காலை எட்டு மணிக்கே சென்று விடுவான்.இவர்களுக்கு பத்து மணிக்கு மேல் தான் தேர்வு என்பதால் வீட்டில் இருந்து லேட்டாகவே கிளம்புவார்கள்.எனவே சாலினி மேகாவிடம் ஸ்கூட்டியில் செல்லுமாறு கூறினாள்.மேகாவும் சரி என அவளது வண்டியில் சென்றாள்.இப்படியே இருவரும் தங்களது முதல் வருடத்திற்கான தேர்வை முடித்தனர்.தேர்வு முடிந்ததும் இரண்டு வாரம் கல்லூரி விடுமுறை விடப்பட மூவரும் மகிழ்ச்சியாக விடுமுறையை கழிக்க திட்டமிட்டனர்.

காதல் தீ வளரும்.......


(Hi frds pls Give your support and your valuable comments frds 🙏🙏🙏🙏)
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8.♥ அழகிய காதல் தீயே ♥





கல்லூரி விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிட்டனர் மூவரும்.அதன்படி எங்கு செல்லலாம் என யோசித்து ஏற்காடு செல்ல முடிவெடுத்தனர்.அன்று மாலை விஜய் விக்கியின் வீட்டிற்கு வரவும் அவனிடமும் ஏற்காடு போக பிளான் செய்ததை கூறி அவனையும் லீவ் போட முடியும்மா என கேட்டான்.

விக்கி கூறியதைக் கேட்ட விஜய் சிறிது யோசனை செய்ய வீட்டில் இருந்த மற்றவர்களும் அவனை வருமாறு கூறவும் விஜய்யும் வேறு வழியின்றி தான் வேலை செய்யும் மருத்துவமனை நிர்வாகியிடம் ஏதேதோ சொல்லி ஒரு வாரம் விடுமுறை பெற்றான்.இதை அவர்களிடம் சொன்னதும் மகிழ்ந்தனர்.சாலினி தான் விக்கியிடம் ,நாம எப்படியும் டிராவல்ஸ்ல தான வண்டி புக் பன்றோம் அதனால உங்க பிரண்ட்ஸ் சிவா அண்ணா, ராகவ் அண்ணா இரண்டு பேரும் வரங்களானு கேளுங்க அவங்களும் வந்தா நம்ம மேரேஜ் அப்போ போன மாதிரி எல்லோரும் சேர்ந்து ஜாலிய போகலாம் எனவும் மற்றவர்களும் அவள் கூறியதையே அமோதிக்க விக்கியும் தன் நண்பர்களுக்கு போன் செய்தான்.

விக்கி சிவாவிற்கு போன் செய்து அவனிடம் ஏற்காடு செல்வதை பற்றி கூறி அவனிடம் வருகிறானா என கேட்க அவனும் வருவதாக கூற ராகவ்விடம் கேட்டு பிறகு மற்ற டீடெயில்ஸ் சொல்றேன் என சிவாவும் சரி என்றான்.அதே மாதிரி ராகவ்வுக்கும் போன் போட்டு கேட்க அவன் தன் மனைவியிடம் கேட்டு சொல்றேன்டா என்றான்.அவன் சொன்னது போல் தன் மனைவி கீர்த்தியிடம் கேட்கவும் அவளும் சரி என்றாள்.உடனே அதை விக்கிக்கு போன் செய்து இருவரும் வருவதாக சொன்னான்.

விக்கியும் தன் பிரண்ட்ஸ் வருவதாக சொன்னதை வீட்டில் சொல்லவும் அவர்களும் சரி எனவும் எப்போது கிளம்பலாம் என பேசி முடிவெடுத்து டிராவல்ஸ்க்கு போன் செய்து ஏற்காடு போவதை கூறி நாளை காலை வண்டியை வீட்டிற்கு வருமாறு ஏற்பாடு செய்து விட்டு தனது நண்பர்களையும் கிளம்பி காலை தன் வீட்டிற்கு வருமாறு கூறினான்.விஜய்யும் அவர்களிடம் நாளை காலை வருவதாக கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றான்.அவன் சென்றதும் இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் தங்களுக்கு தேவையான உடைகளை எடுத்து பேக் செய்து விட்டு உறங்கினார்கள்.


மறுநாள் காலை அனைவரும் ரெடியாக இருக்க விஜய் , சிவா வரவும் பேசிக் கொண்டே ராகவ்விற்காக காத்திருக்க அவனும் தன் மனைவியுடன் வந்து சேர்ந்தான்.அவன் வரவும் சாலினியும் மாலாவும் அனைவரையும் சாப்பிட வருமாறு கூறி சாப்பாட்டை எடுத்து வைத்தார்கள்.அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவும் அனைவரும் வண்டியில் ஏறி அமர்ந்தார்கள்.மாலா-குமார் , விக்கி-சாலினி, ராகவ்-கீர்த்தி என மூன்று ஜோடிகள் ஒன்றாக அமரவும் , விஜய் , சிவா இருவரும் ஒரு சீட்டில் அமர மேகா ஒரு சீட்டில் அமரவும் இவர்களது பயணம் ஏற்காடு நோக்கி சென்றது.


வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில் மேகா தனது அண்ணியிடம் பாட்டு பாடுமாறு கேட்டாள்.சாலினியும் சரி என பாட ஆரம்பித்தாள்.இப்படியே அனைவரும் பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக் கொண்டும் நேரம் போவதே தெரியாமல் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.இடையிடையே மாலா அவர்களுக்கு சாப்பிட நொறுக்கு தீனிகளை தர அதையும் சாப்பிட்டு விட்டு தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர்.மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஏற்காடு நோக்கி சென்றனர்.அனைவரும் காலையில் இருந்து போட்ட ஆட்டத்தில் டயர்டாகி உறங்கி விட சாலினியும் , விக்கியும் தூங்காமல் பேசிக்கொண்டு இருந்தனர்.

ஏழு மணிநேர பயணத்திற்கு பின் சேலம் மாவட்டம் வந்தடைந்தனர்.அங்கிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இவர்களது வண்டி பயணித்தது.ஏறக்குறைய இருபது கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி வண்டி சென்று கொண்டிருந்தது.





ஒரு வழியாக இவர்கள் புக் செய்த ஹோட்டலை வந்தடைந்தனர்.

ஏற்காடு பற்றி : ஏற்காடு இது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகரமாகும்.இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது.ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது‌.இது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.' ஏரிக்காடு 'என்பதே நாளைடைவில் மருவி ' ஏற்காடு 'என மாறிவிட்டது. இது சேலத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.





பத்தொன்பதாம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டை கண்டறிந்தார்கள்.சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக்பர்ன் இங்கு காப்பிச்செடி ,ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார்.ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கம் ஆகும்.சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம்பெற்றுள்ளன.இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம்.இங்குள்ள ஏற்காடு அருவியில் நீர் நிரம்பினால் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும்.இங்குள்ள மலைக்கோயில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயில் ஆகும்.

இங்குள்ள பக்கோடா முனை என்னும் இடத்தில் இருந்து பார்த்தால் கீழே உள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கும். ஏற்காட்டில் 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 40,000 பேர் வாழ்கின்றனர்.இதில் பழங்குடி மக்கள் 24,499 பேர் உள்ளனர்.இங்குள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் பழங்குடி மக்களே.


இங்குள்ள மக்களின் முக்கிய ஆதாரமாக காப்பிச்செடி தோட்டங்கள் உள்ளன.1820 ஆம் ஆண்டு திரு MD காக்பர்ன் என்பவரால் காப்பி செடி ஆப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு Grange எஸ்டேட்டில் நடவு செய்யப்பட்டது.பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி ,வாழை ,ஆரஞ்சு ,கொய்யா கருப்பு மிளகு ,ஏலக்காய் போன்றவை இங்கு விளைவிக்கின்றன.சந்தனம் ,தேக்கு மற்றும் சில்வர் ஓக் ஏராளமாக உள்ளன.

காலநிலை: குளிர் காலம் செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிவுக்கு வரும்.குளிர்காலத்தில் மலைகளில் மூடுபனி படர்ந்திருக்கும்.குளிர்காலத்தில் வெப்ப நிலை 12°C முதல் 24°C ஆகவும், கோடை காலத்தில் 16°C முதல் 30°C ஆகவும் இருக்கும். சராசரி மழை அளவு 1500-2000 மில்லிமீட்டர் ஆகும்.

சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 80 சுற்றுலா இடங்களை ஆங்கில அரசு வெளியிட்டுள்ளது. அதனால் பல இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வரத்தொடங்கினர்.

இவர்களது வண்டி ஹோட்டலை வந்தடைய அனைவரும் இறங்கினர்.இறங்கி ஹோட்டலை பார்த்து இரசித்து கொண்டு இருந்தனர்.



ஹோட்டலை சுற்றி அழகிய மரங்கள் நிறைந்து இருக்க நடுவில் அமைந்திருந்தது அவ்விடம்.அதன் முன்புறம் அழகிய நீச்சல் குளம் அமைந்திருந்தது அதையே பார்த்துக் கொண்டு இருக்க விக்கியும் , விஜய்யும் உள்ளே சென்று தங்களது விவரத்தை கூறி தங்களுக்கு புக் செய்திருந்த அறைகளின் சாவியை வாங்கி கொண்டு வந்தவர்கள் அவர்களை அழைத்து கொண்டு அவரவர் அறையை நோக்கி சென்றனர். அறைக்கு சென்றவர்கள் குளித்து முடித்து இரவு உணவிற்காக அனைவரும் வரவும் அங்கு கீழே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் பின்புறம் பூங்கா போன்று அமைத்திருந்த இடத்திற்கு சென்று அமர்ந்தவர்கள் குளிர் காற்றை அனுபவித்தவாறு பேசிக்கொண்டு இருந்தனர்.பின் அனைவரும் உறங்க சென்றனர்.

தங்களது அறைக்கு வந்த விக்கியும்,
சாலினியும் அங்கிருந்த பால்கனியில் நின்று இயற்கை காற்றை இரசித்தவாறு இருக்க விக்கி சாலினியை அனைத்து கொண்டு அவளிடம் இந்த இடம் பிடித்துள்ளதா என்று கேட்டான்.அவளும் அவன் தன்னை அனைத்ததால் வெட்கத்துடன் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்து தன் வெட்கத்தை மறைக்க முயற்சித்து ம்ம்ம் என்று மட்டும் தலையாட்டினாள்.

அவள் வெட்கத்துடன் தன் மீது சாயவும் அவளை இரசித்து பார்த்தவன் அவளை நிமிர்த்தி அவளிடம் என்ன என்பதை போல் புருவம் உயர்த்தினான்.ஏற்கனவே வெட்கத்தில் இருந்தவள் இப்போது தன்னை அவனிடம் இருந்து பிரித்து தன்னையே பார்த்து கொண்டு இருப்பவனை பார்த்து பெண்ணவள் அவனிடம் இருந்து தள்ளி வந்தவள் மீண்டும் வெட்கத்துடன் கீழே குணிந்து கொண்டாள்.தன்னவளின் செய்கையை கண்டு அவளருகில் சென்றவன் தன்னவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அனைத்து விடுவித்தவன் அவளை இயல்புக்கு கொண்டு வர அவளிடம் இயற்கை சூழலைப் பற்றி பேச ஆரம்பித்தான். அவளும் அவன் நினைத்ததை போல் தன்னை சகஜ நிலைக்கு மாற்றி கொண்டு இவனுடன் சேர்ந்து பேச ஆரம்பித்தாள்.இருவரும் பேசிக்கொண்டே எப்போது தூங்கினார்கள் என்றே தெரியாமல் உறங்கியவர்கள் காலை பறவைகளின் சத்தத்தை கேட்ட விக்கி அப்போது தான் அவளை அனைத்தவாறு இருப்பதையும் தன்னவள் தன் மார்பின் மீது தலை வைத்து உறங்கி கொண்டிருந்ததை பார்த்தவன் புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை நன்றாக படுக்க வைத்து விட்டு எழுந்து குளியலறை நோக்கி சென்றான்.

குளித்து முடித்து வந்தவன் தன்னவளை எழுப்பி குளித்து விட்டு வருமாறு கூறினான்.அவள் குளிக்க சென்றதும் காப்பி ஆர்டர் செய்து விட்டு பால்கனியில் நின்று காலை நேரத்தில் பனிபடர்ந்த இயற்கையை பார்த்து இரசித்து கொண்டு இருந்தான்.சாலினி குளித்து முடித்து பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து வர அவளை பார்த்து அவளது அழகில் தன்னை மறந்து நின்று இருந்தவனை அறையின் காலிங் பெல் சத்தம் நிகழ்வுக்கு கொண்டு வந்தது. உடனே சென்று கதவை திறந்தவன் அங்கு நின்றிருந்த வெயிட்டரிடம் இருந்து தான் ஆர்டர் செய்த காப்பியை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவன் தனக்கும் தன்னவளுக்கும் சேர்த்து அவனே அதை கப்பில் ஊற்றி எடுத்துக் கொண்டு பால்கனியில் போடப்பட்டிருந்த இருக்கைக்கு சென்றவன் சாலினியையும் அழைத்தான்.

அவள் அங்கு வரவும் அவளிடம், டிரஸ் சூப்பர்டி என்றவன் அவளிடம் காப்பி கப்பை நீட்டினான்.அவளும் பதிலுக்கு புன்னகைத்தவள் அவன் தந்த காப்பியை குடித்து விட்டு இருவரும் காலை நேர அழகை இரசித்து கொண்டு இருந்தனர்.சிறிது நேரம் கழித்து இருவரும் ரெடியாகி கீழே வர மற்றவர்களும் ஒவ்வொருவராக ரெடியாகி கீழே வந்தனர்.

அனைவரும் தங்களது காலை உணவை முடித்ததும் மேகா விக்கியிடம் இன்று எங்கே செல்லலாம் என கேட்க விக்கி அவளிடம் இன்று மரகத ஏரிக்கு சென்று விட்டு அப்படியே அங்குள்ள பூங்காவிற்கு செல்லலாம் என்றான். விக்கி கல்லூரி படிக்கும் போது தன் நண்பர்களுடன் ஏற்கனவே இங்கு வந்து உள்ளதால் விக்கிக்கும் ,சிவாவிற்கும் இங்குள்ள பாதி இடங்கள் தெரியும் என்பதால் முதலில் அங்கு செல்லலாம் என முடிவெடுத்து டிரைவரிடம் அவர்கள் செல்ல இருக்கும் இடத்தை பற்றி கூறினான்.அவருக்கும் அங்குள்ள இடங்கள் தெரியும் என்பதால் அவரும் சரி எனக்கூற இவர்கள் அனைவரும் வண்டியில் ஏறி அமர வண்டி மரகத ஏரியை நோக்கி சென்றது.

காதல் தீ வளரும்.....


(Tq for your support frds🙏🙏🙏🙏😊😊😊😊)
 
Status
Not open for further replies.
Top