All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரணவியின் களவாடிய கள்வனே

Deepika Vijayakanth

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம்
எனது கதையின் முதல் முன்னோட்டம்
‌‌‍‍
அவனருகில் அவள் நிற்கின்றாள்....மனம் முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே.. அவளருகில் இருப்பவனுக்கோ மனதில் சிறு சலனம்.... எனக்கு இவள் ஈடானவளா என்று எண்ணி அவள் முகம் பார்க்க அவள் முக மலர்ச்சியில் தன் எண்ணத்தை மறந்தான்.

அவன் எழில் முகிலன்
அவள். பனிமலர்
 

Deepika Vijayakanth

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த மான் சிங்கத்திடம் மாட்டுமா? மானின் வேகத்திற்கு தன் குட்டிகளை வேட்டையாட பயிற்றுவிக்கிறது அந்த சிங்கம்... இறுதியில் மானை வேட்டையாடி விட்டது. அந்த வீட்டின் டீவியில் நாம் மேலே கண்ட காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது..அதை சீந்துவார் யாருமின்றி ஒரு பக்கம் நம் நாயகியின் தந்தை செல்வராஜ் தினமலர் நாளிதழின் சுடோகு விளையாடிக் கொண்டிருக்க தாய் பானுமதி எல்லா இல்லத்தரசிகள் போலவே சமையலறையில் தன் ஆட்சியை பிடித்திருந்தார்...

சிறிய அளவிலான தோட்டத்துடன் கூடிய விசாலமான வசதியான வீடு... முன்புறம் கார் பார்க்கிங் போர்டிகோ ... வீட்டில் நுழைந்ததும் வலதும் இடதுமாக இரு பெரிய அறைகள்... பின்புறம் அதே போல் இரு அறைகள்.ஒன்று சமையலறை..மற்றோன்று பொது அறை.. அறைகளுக்கு நடுவே விசாலமான கூடம்...இப்போது கதைக்குள் செல்வோம்...

பனி பனி என்று அழைத்தார் பானுமதி..சற்று நேரம் வரை எந்த பதிலும் இல்லை...சமையலறை விட்டு வேகமாக வெளிவந்து இந்த கத்து கத்தினேன்.இந்த பொண்ணு எங்க போனா...ஒரு பதிலும் தர மாட்டறா...இவளை என்று பல்லை கடித்தவாறே கூறிவிட்டு தேட தொடங்கினார்...
தோட்டத்தில். ஏதோ சலசலப்பு திரும்பினால். ஐந்தாறு நாய்க்குட்டிகளை கையில் அடக்கிக்கொண்டு திரு திருவென முழித்தபடியே நம் நாயகி பனிமலர்...
தாயை கண்டதும் ஓடிவந்து அம்மா ப்ளீஸ் அம்மா குட்டி எல்லாம் கண் திறக்கல.ரொம்ப குளிருது அதுக்கு...நாமே வீட்டுக்கு உள்ள கூட்டிட்டு போகலாம் மா எனவும் பானுமதி முறைத்தபடி அடியே இங்கிட்டு நான் இவ்ளோ நேரம் கத்திட்டு இருக்கேன் நீ நாய் கூட இருக்கியா.. இதெல்லாம் உள்ள வரக்கூடாது..நீ ஒழுங்கா வந்து வேலையை பாரு.. என்றபடியே உள்ளே சென்று விட்டார்...பனிமலருக்கோ ஒன்றும் புரியவில்லை..இவைகளை விட்டுச் செல்லவும் மனமில்லை...முழித்தபடியே நிற்க அந்நேரம் பார்த்து வாக்கிங் சென்றிருந்த அவளது அண்ணன் மகேஷ் உள்ளே வர இவள் நின்றதை பார்த்ததும் அருகில் வர இவள் தேம்ப ஆரம்பித்தாள்...உடனே அவன் பனிமா நான் பார்த்துக்கறேன்..நீ போடா என்றதும் நம்பிக்கை பார்வை பார்த்தபடி நகர்ந்தாள்.....
பனிமலர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி.. செல்வராஜ் பானுமதி தம்பதியரின் இரண்டாம் மகள்..மூத்தவன் மகேஷ்.. அரசு தேர்வில் வெற்றி பெற்று வருமான வரித்துறை அதிகாரியாய் இருக்கிறான்... இளையவன். காமேஷ்.. பத்தாம் வகுப்பு மாணவன்... செல்வராஜ் நடுநிலை பள்ளி ஆசிரியர்.. பானுமதி வீட்டு இல்லத்தரசி..
எந்தவித குறையும் இல்லாத நடுத்தர வர்க்கம்....
பனிமலர் என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்...
அவள் அறையில் குளித்து பள்ளிக்கு கிளம்பி புத்தகத்தை அடுக்கிக்கொண்டே புலம்பினாள்.
என்ன புலம்பல் என்பது அடுத்த பகுதியில்....
காத்திருங்கள்...
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன....
 

Deepika Vijayakanth

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Friends next episode April 14 la iruinthu weekly twise varum..evalo gap vittathuku manikkavum.
 
Top