All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பார்கவியின் "நீயாக நான், நானாக நீ" கதை திரி

Status
Not open for further replies.

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இதோ அடுத்த எபி போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😍😍😍

25171

அத்தியாயம் 10

பூமியின் சத்தத்தில் அந்த இடமே நிசப்தமாக, அனைவரும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆடிக் கொண்டிருந்த நண்பர்களும், அவளின் அருகே வர, முதலில் வந்த அசோக் பூமியிடம், “என்னாச்சு பூமி” என்று முணுமுணுத்தான்.

சோனுவை முறைத்தவள், “நான் கிளம்புறேன்… நீ என்ன ட்ராப் பண்றீயா…” என்றாள்.

திடீரென்று கிளம்புவதாக சொல்லவும் சற்று குழம்பினாலும், அவளுடன் சென்றான் அசோக். செல்லும்முன் நண்பர்களைக் கண்டு தலையசைக்க, அதில் ஒருவன், “இந்த தடவையும் பாதிலேயே கிளம்புற…” என்று ஏதோ கூற வர, மற்றொருவன் அவனை அடக்கினான்.

இவையெல்லாம் பூமி கண்டாலும், அவளின் யோசனை முழுக்க நடந்த சம்பவத்தில் இருந்ததால், அவள் அதை ஆராயவில்லை.

வெளியே வந்ததும், “என்னாச்சு பூமி…? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று வினவினான் அசோக். அவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் அனைத்தையும் வார்த்தைகளில் கொட்டினாள் பூமி.

எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள், “எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே டேட்டிங் கூப்பிடுவான்…” என்று பொறிந்தாள்.

“ஹே பூமி… வெய்ட் அ செக்… அவன் உன்ன கூப்பிடல… ஆகாஷ கூப்பிட்டுருக்கான்…” என்று அசோக் தெளிவுபடுத்தவும் தான் அதை உணர்ந்தாள் பூமி.

“வாட்… அஷுவையா!!!” என்று திகைத்தவள், மீண்டும் உள்ளே செல்ல, அசோக்கும் அவளின் பின்னே ஓடினான்.

அங்கு பூமியின் கத்தலில் பயந்து பரிதாபமாக (!!!) அமர்ந்திருந்த சோனுவை சுற்றியிருந்த நண்பர்கள் விசாரிக்க, நடந்ததை மெதுவாக கூறிக் கொண்டிருந்தவன், கோபத்தில் உள்ளே வரும் பூமியைக் கண்டு எழுந்தான்.

வேகமாக வந்தவள், சோனுவின் சட்டையைப் பிடித்து, “எவ்ளோ தைரியம் இருந்தா என் அஷுவ டேட்டிங் கூப்பிடுவ…” என்றாள்.

இரைச்சல் அதிகமாக இருந்ததால், அவள் கூறியது மற்றவர்களுக்கு கேட்கவில்லை என்றாலும், அவள் சட்டையைப் பிடித்திழுத்ததால் அவளருகே வந்திருந்த சோனுவிற்கும் அவள் பின்னே வால் போல திரிந்து கொண்டிருக்கும் அசோக்கிற்கும் கேட்டது.

‘போச்சு இவளே காட்டிக் கொடுத்துடுவா போல…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட அசோக், அவளருகே சென்று, “ஹே நீ தான் ஆகாஷ்…” என்று இன்னொரு முறை நினைவு படுத்தினான்.

பூமி சுதாரித்துக் கொள்ள, அவளின் கூற்றில் குழம்பிய சோனு, “யாரது அஷு… நான் அவங்கள கூப்பிடல… உங்கள தான்…” என்று திக்கியவாறே சோனு கூற, “அடிங் திரும்பவும் என்ன கூப்பிடுவியா…” என்று அவனை அடித்தாள் பூமி.

அதுவரையிலும், ‘டேட்டிங்’ என்றதிலேயே அதிர்ந்திருந்த மற்றவர்கள், இவர்களுக்குள் ஏற்படும் சண்டையில் நிகழ்விற்கு வந்து, அவர்களை பிரித்தனர். பின்பு அசோக்கிடம், ஆகாஷை அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

வெளியில் வந்தும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த பூமியை உலுக்கியவன், “எதுக்கு இவ்ளோ கோபம்…” என்றான்.

“பின்ன அஷுவ டேட்டிங் கூப்பிடுவானா… ராஸ்கல்…” என்று பொறுமினாள்.

பூமியின் ‘அஷு’ என்ற அழைப்பை அவள் உணரவில்லை என்றாலும், அசோக் மனதில் குறித்துக் கொண்டான். ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல், “ஓகே ரிலாக்ஸ்…” என்று கூறியபடி வண்டியைக் கிளப்பினான்.

வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது, “ஆமா கிளம்புறப்போ மகேஷ் ‘இந்த தடவயையும் பாதில கிளம்புற’ன்னு சொன்னானே… இதுக்கு முன்னாடி இந்த மாதிரி பிரச்சன நடந்துருக்கா என்ன…” என்று அவள் கேட்டாள்.

‘ஐயோ கரெக்டா கேக்குறாளே… இதெல்லாம் எப்படி தான் நியாபகம் இருக்கோ… எப்படியாவது வாய குடுக்காம எஸ்கேப் ஆகிடனும்…’ என்று நினைத்த அசோக், “அது… அது…” என்று திக்கினான்.

‘ச்சே அவசரத்துக்கு ஒரு பொய் கூட வாயில வர மாட்டிங்குதே… ரொம்ப நல்லவனா வளர்ந்தாலே இப்படி தான்…’ என்று சலித்துக் கொண்டான்… மனதிற்குள் தான்…

அவன் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், “ஒழுங்கா உண்மைய சொல்லு… இல்ல நாளைக்கு அந்த சோனு கூட உன்ன கோர்த்து விட்டுடுவேன்…” என்று மிரட்டினாள் பூமி.

‘அடப்பாவி… இவ செஞ்சாலும் செய்வா…’ என்று பயந்தவன் சென்ற முறை பப்பில் நடந்ததைக் கூறினான்.

“எங்க டீம்ல கதிர்னு ஒருத்தன் இருந்தான்… ஆனா எங்க யாருக்கும் அவன் கூட அவ்ளோ க்ளோஸா பழக பிடிக்கல… ஏன்னா அவன் எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டே இருப்பான்… இடம், சூழ்நிலை எதுவும் பாக்க மாட்டான்… அவனால எங்க ஆஃபிஸ்லயே நெறையா பேரு ஹர்ட் ஆகிருக்காங்க…. ஆனாலும் எங்க டீம்முகிறதால ஒதுக்க முடியல… அளவா பழகுவோம்… போன டைம் மகேஷ் ட்ரீட்டுக்கு இங்க வந்தப்போ தான், அவன் ரொம்ப குடிச்சுட்டு உன்னையும் ஆகாஷையும் தப்பா பேசிட்டான்… அவன் கேரக்டர் தெரிஞ்சு தான், நீயும் ஆகாஷும் ஒரே வீட்டுல இருக்க விஷயத்த அவன்கிட்ட நாங்க யாரும் சொல்லல… ஆனா அவனுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு தான் தெரியல… அவன் உன்ன ரொம்ப பேசவும், ஆகாஷ் கோபத்துல அவன அடிச்சுட்டான். அப்பறம் நாங்க தான் அவன சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வச்சோம்… இதான் அந்த ட்ரீட் பாதிலேயே நின்னதுக்கு காரணம்…” என்று விளக்கினான்.

பூமியோ, ‘இந்த கருவாயன் நமக்காக சண்டை போட்டுருக்கானா…’ என்று நினைத்துக் கொண்டே பயணம் செய்தாள்.

‘என்ன சத்தத்தையே காணோம்…’ என்று திரும்பிய அசோக் அவள் கனவில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை பின்புற கண்ணாடி வழியே கண்டவன், ‘ஹ்ம்ம் முத்திருச்சு…’ என்று எண்ணியவாறு வண்டியை ஆகாஷின் வீட்டை நோக்கி செலுத்தினான்.

*****

பூமியை அங்கு அனுப்பி வைத்துவிட்ட ஆகாஷின் மனமோ நூறாவது முறையாக அவளை அங்கு அனுப்பி வைத்திருக்கக் கூடாது என்று புலம்பியது. இதுவரையிலும் வீட்டிற்குள்ளே பொத்தி வைத்து வளர்க்கப்பட்டவள், இது போன்ற இடங்களுக்கு சென்று பழக்கமில்லாதவள், எவ்வாறு அங்கு சமாளிப்பாள் என்றெண்ணி கவலைக் கொண்டான்.

“ப்ச் அந்த வெள்ளெலி கேட்டுச்சுன்னு அனுப்பியிருக்க கூடாது…” என்று வாய் விட்டு புலம்பியவன், அழைப்பு மணி ஓசை கேட்டு வாசலுக்கு விரைந்தான்.

அங்கு நின்று கொண்டிருந்த அசோக்கையும் பூமியையும் கண்டவன், “அதுக்குள்ள முடிஞ்சுருச்சா…” என்றான்.

பூமிக்கு ஆகாஷை காணவே ஏதோ போலிருக்க, அவனை விலக்கிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள். அவளின் செயலைக் கண்டு புருவம் சுருக்கியவன், “என்ன பிரச்சன டா…”என்று அசோக்கிடம் வினவினான்.

அசோக்கோ, “நாங்க ஈவ்னிங் ஆறரை மணிக்கு அங்க போனோமா…” என்று ஆரம்பித்தவன், அவன் அங்குள்ள பெண்களை சைட்டடித்த கதை, அவர்கள் எதிர்வினையாக செருப்பெடுத்த கதை அனைத்தையும் கூறும்பொழுதே, உடை மாற்றி, தன் மனநிலையையும் மாற்றி வந்தாள் பூமி.

ஆகாஷின் பொறுமை குறையத் துவங்க, பூமியிடம் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ நமுட்டுச் சிரிப்புடன், “உனக்கு ப்ரொபோசல் வந்துச்சு…” என்றாள்.

அதைக் கேட்டதும் உள்ளுக்குள், ‘எவ அவன்னு தெரிலயே…’ என்று எரிச்சல் பட்டாலும், வெளியே “என் பெர்சனாலிட்டி அப்படி…” என்று பெருமையாகக் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட மற்ற இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்பின் நடுவே, “ஆமா ஆமா, ‘பசங்களே’ மயங்கி விழுகுற அளவுக்கு பெர்சனாலிட்டி தான்…” என்றாள் பூமி.

“வாட்…” என்று முதலில் அதிர்ந்தவன், “யாரு…” என்று வினவினான்.

அவர்களும் நடந்தவற்றை சிரிப்புடனும் பல ஹை-ஃபைக்களுடனும் சொல்லி முடித்தனர்.

ஆகாஷோ இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, பூமி மேலும் அவனை சீண்டினாள்.

“எனக்கொரு டவுட்… நீதான அவன் தனியா இருக்குறது பொறுக்காம அவன்கூட போய் பேசுன… அப்போ உனக்கும் அவன் மேல லவ்ஸோ… அச்சோ இது தெரியாம அவன் ப்ரொபோசல ரிஜெக்ட் பண்ணிட்டேனே…” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓட, “ஹே நில்லுடி உருண்ட…” என்று ஆகாஷ் துரத்திக் கொண்டு சென்றான்.

அவர்களைக் கண்ட அசோக், ‘ஒன்னாச்சும் நம்மள கண்டுக்குதான்னு பாரு… இப்போவே இப்படி இதுல கல்யாணம் ஆச்சுனா வீட்டுக்குள்ள யாரு வந்தாலும் தெரியாது போல… சரி அது எதுக்கு நமக்கு… வந்த வேலைய பாப்போம்… ச்சே நைட் நல்லா சாப்பிடலாம்னு மதியம் வேற சரியா சாப்பிடலையே…’ என்று மனதிற்குள் புலம்பியவன், “ஹலோ… வீட்டுக்கு வந்துருக்கேனே, உபசரிப்பெல்லாம் இல்லயா…” என்றான் இன்னும் ஓடிக் கொண்டிருந்த இருவரையும் பார்த்து…

“உபசரிப்பு தான… அவகிட்ட கேளு… பத்து விசில் நூடுல்ஸ் பண்ணித் தருவா…”

“டேய் கருவாயா என் சமையலுக்கு என்ன கொறச்சல்… உனக்கு தான் சாப்பிட குடுத்து வைக்கல” என்று மீண்டும் அங்கு சண்டை துவங்க, ‘இதுங்கள நம்பிட்டு இருந்தா இன்னிக்கு நைட் பட்டினி தான்…’ என்று யோசித்த அசோக், சொல்லாமலேயே கிளம்பிச் சென்றான்.

சண்டை முடிந்த பின் தான் சுற்றுப்புறம் உணர்ந்தவர்கள், அசோக்கை தேட, அவன் சென்று விட்டது தெரிந்தது. “உன் பிரெண்டுக்கு சொல்லிட்டு போகணும்னு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா…” என்று அடுத்த சண்டைக்கு அடித்தளம் போட்டாள் பூமி. இவ்வாறே அவர்களின் சண்டையுடன் அழகாக (!!!) முடிந்தது அந்த நாள்.

*****

அடுத்த நாள் வேலைக்குச் சென்ற பூமியை வரவேற்றது, சோனு அவன் ஊருக்கே சென்று விட்டான் என்ற செய்தி. மற்றவர்களுக்கு விபரம் தெரியாததால், இவர்களின் கேங்கிடம் கேட்க, “ஹீ வாஸ் ஹோம் சிக்…” என்று கூறி சமாளித்தனர்.

அசோக் கூட பூமியிடம், “ஒரு அடி தான அடிச்ச… அதுக்கே அவன் மும்பை போயிட்டான்… ஹ்ம்ம் என் நண்பன் நிலமை தான் பாவம்… உங்கூட எப்படி குப்பை கொட்ட போறானோ…” என்று கிண்டல் செய்ய, பூமியோ அவன் கூறியதில் அவளிற்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதை மனதில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்ததால், அசோக்கிடம் மறுமொழி கூட கூறாது கடந்து சென்று விட்டாள்.

‘இவ எதுக்கு மந்திருச்சு விட்டது மாதிரி இருக்குறா…’ என்று அசோக் தான் புலம்பினான்.

*****

ஆகாஷிற்கு நாட்கள் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி கழிந்தன. அந்த பயிற்சியாளர் மீண்டும் கடுவன் பூனை போல் சுபாவத்தை மாற்றிகொள்ள, அவரின் ரெமோ அவதாரத்திற்கு, இந்த அந்நியன் அவதாரம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது, ஆகாஷிற்கு.

மற்ற தோழிகளிடமும் சகஜமாகவே பேசிப் பழகிக் கொண்டான். புதியவர்களிடம் பேசும்போதோ, அவன் தடுமாறும் போதோ, ரூபா அவனிற்கு துணையாக நின்றாள்.

அன்றைய இடைவேளையில் கேன்டீனில் அமர்ந்திருந்த தோழிகளில் ஒருத்தி, வழக்கம் போல ஆகாஷ் – பூமியின் காதல் கதை பற்றி கேட்க, ஆகாஷும் ஏதோ கூறி வைத்தான். ஆனால், அவர்கள் இருவரையும் இணைத்து பேசுவது ஆகாஷின் மனதிற்கு இதமாகவே இருந்தது.

*****

இப்படியே இரு வாரங்கள் கழிந்திருந்தன. இந்த இரு வாரங்களில், அவன் பெண்ணாகவும், அவள் ஆணாகவும் சந்தித்திருந்த இன்னல்கள் பல.

சட்டையில் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டு கவலையின்றி திரிந்தவனிற்கு, உடை எங்கேனும் விலகியிருக்கிறதா, கயவர்களின் பார்வை தன்னை துளைக்கிறதா என்று பார்க்கவுமே சரியாக இருந்தது. இதில் பல இடங்களில் ‘பொண்ணு தான நீ’ என்ற கேலிப் பார்வைகளும் அடங்கும். அதில் சற்று துவண்டு தான் போனான், ஆகாஷ்.

பெரிய பொறுப்புகள் எதுவும் இல்லாமல் சுற்றித்திரியும் பட்டாம்பூச்சி போல் இருந்தவளிற்கு, வேலையில் பொறுப்புகள் அதிகமானது. அதை கூட ஆகாஷ் மற்றும் அசோக்கின் முயற்சியால் முடித்துவிட்டாலும், அதற்கான அங்கீகாரம் இவளிற்கு கிடைக்காமல், மற்றவர்களுக்கு கிடைப்பதை பார்த்தவளிற்கு மனம் சுணங்கிப் போனது. அதுமட்டுமில்லாமல், வேலை செய்யாமல் பொழுதை கழிக்கும் பெண்களின் கேலிப் பேச்சுகள் அவளை சோர்வுறச் செய்தன.

வேலையிலிருந்து வீடு திரும்பும்போது இதே பதட்டத்துடன் சோர்ந்து வருபவர்களுக்கு மற்றவரின் ஆறுதல் வார்த்தைகளே மருந்தாகிப் போனது. இப்போதெல்லாம் நிறைய பேசினர் இருவரும். காலையிலிருந்து மாலை வரை நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் சந்தித்த பிரச்சனைகளைக் கூறி, அதை தீர்க்கும் வழிகளை ஆலோசித்தனர். ஒன்றாக சமைத்தனர். ஒருவரையொருவர் அவர்களின் உடை முதற்கொண்டு பாராட்டிக் கொண்டனர். சில பல பரிந்துரைகளும் சொல்லியும் கேட்டும் அவர்களின் புரிந்துணர்வை வளர்த்துக் கொண்டனர்.

‘கருவாயா’, ‘ஸ்கை ஹை’, ‘க்ளோபு’, ‘வெள்ளெலி’ போன்ற அழைப்புகள் இப்போது உரிமை அழைப்புகளாக மாறிப் போனது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், மனதளவில் மிகவும் நெருக்கமாகிப் போயினர். ஆனால் அந்த நெருக்கத்தை தான் உணரவில்லை.

அதை உணரவைக்கவே அவன் வருகிறான். பூமியின் தாய் வழி மாமன் மகனான சுந்தர்… அவனின் வருகை இவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும்..?

தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 இதோ அடுத்த எபி போட்டாச்சு... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😍😍😍

25189

அத்தியாயம் 11

அன்று விடுமுறை தினமென்பதால், தாமதமாக எழுந்தனர் ஆகாஷ் மற்றும் பூமி. ஆகாஷ் அவளிடம் பேசிக் கொண்டே சமைக்க, பூமியும் அவனிடம் பேசிக் கொண்டே, அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில், ஆகாஷ் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, பூமி அலைபேசியில் மும்முரமாக யாருடனோ புலனத்தில் செய்தியின் மூலம் பேசிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் பொறுத்து பார்த்த ஆகாஷ், “ஹே க்ளோபு… யாரு கூட கடலை போட்டுட்டு இருக்க…” என்று கேட்டான்.

அப்போதும் குனிந்த தலை நிமிராமல், “சுந்தர் மாமாட்ட தான் பேசிட்டு இருக்கேன்…” என்றாள்.

அதில் கடுப்பான ஆகாஷ், “வெள்ளெலி… எத்தன தடவ என்ன மாமா சொல்லுன்னு சொல்லிருக்கேன்… அப்போலாம் சொல்லாம, இப்போ அவன் மட்டும் மாமாவாம்…” என்று உள்ளுக்குள் அவளை திட்டியவாறு சமைத்துக் கொண்டிருந்தான்.

சுந்தரை சிறு வயதிலிருந்தே ஆகாஷிற்கு பிடிக்காது… அதற்கான காரணம் சுந்தர் இல்லையென்றாலும், இன்று வரை சுந்தரிடம் அவன் பேசியதில்லை. சுந்தர் அங்கிருக்கிறான் என்று தெரிந்தாலே அங்கிருந்து ஒதுங்கி சென்று விடுவான்.

அதற்கு நேர்மாறாக பூமியும் சுந்தரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக சுற்றித் திரிந்தவர்கள். ஆகாஷையும் அவர்களுடன் வருமாறு பூமி அழைப்பாள். ஆனால் அவன் மறுத்து விடுவான். “ஹ்ம்ம் ரொம்ப சீன் போடுற… போ நான் சுந்தர் மாமா கூடவே போய் விளையாடுறேன்…” என்று உதட்டை சுழித்து சென்று விடுவாள், பூமி.

அன்றிலிருந்தே அவளின் ‘சுந்தர் மாமா’வில் ஆகாஷிற்கு வெறுப்பு உருவாகியது. ஆனால் பாவம் அவனிற்கு தெரியாது, பூமி அவனை வெறுப்பேற்றவே சுந்தரை அவனிடம் ‘மாமா’ என்று அழைத்தாளென்று. பூமி சுந்தரை பேர் சொல்லி அழைப்பதே அதிசயம் என்னும்போது எங்கிருந்து மாமா என்று அழைக்கப் போகிறாள்.

கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தவனின் தோளை பிடித்து உலுக்கி, “ஹே ஸ்கை ஹை என்ன ஒரே ட்ரீம்ஸா… யாரு கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க…” என்று கண்ணடித்து கேட்டாள்.

‘இவ ஒருத்தி…’ என்று சலித்துக் கொண்டவன், “என்ன…” என்றான் கடுப்பான குரலில்.

“இப்போ எதுக்கு வேதாளம் முருங்க மரம் ஏறிருக்கு…” என்று அவனை கிண்டல் செய்ய, “என்னன்னு சொல்லு டி உருண்ட…” என்றான்.

“நம்ம சுந்தர் இருக்கான்ல அவன் லீவுக்கு ஊருக்கு போறானாம்… அதான் நம்மள பார்க்க இங்க வந்துட்டு அப்படியே ஊருக்கு போறேன்னு சொன்னான்.” என்று உற்சாகமாக கூறினாள்.

‘இப்போ எதுக்கு இவன் இங்க வரான்… சின்ன வயசுலேயே ஒட்டிப் பிறந்தவங்க மாதிரி ஒன்னா தான் சுத்துவாங்க… ச்சே நான் இப்போ இப்படி இருக்குறப்போ தான் இவன் வரணுமா… கடவுளே எப்படி தான் சமாளிக்கப் போறேனோ…’ என்று மனதில் புலம்பினான் ஆகாஷ். அவனின் மனம் அவனறியாமலேயே அவர்களை அண்ணன் தங்கையாக தான் பார்த்தது…

ஆகாஷ் மறுபடியும் யோசனையில் மூழ்க, “நான் அவனுக்கு கால் பண்ணி வீட்டு அட்ரஸ் சொல்றேன்…” என்று அங்கிருந்து செல்ல முயன்றாள் பூமி.

‘என்னது கால் பண்ண போறாளா…’ என்று அதிர்ந்தவன், அவளின் சட்டையை பிடித்து இழுத்து, “லூசா நீ… இப்போ உன் போன்ல இருந்து கால் பண்ணி என் வாய்ஸ்ல பேசப் போறீயா…” என்று வினவினான் ஆகாஷ்.

“ஸ்ஸ்ஸ் ஆமால… அது ஒரு எக்ஸ்ஸைட்மெண்ட்ல போயிட்டேன்…” என்று சமாளித்தவள், பின் கெக்கபிக்கேவென சிரித்தாள்.

“எதுக்கு டி இப்போ சிரிக்கிற…” என்று கோபமாகக் கேட்டான் ஆகாஷ்.

“அது உன் வாய்ஸ்ல அவன மாமான்னு கூப்பிட்டா அவன் ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு யோசிச்சேன்… சிரிப்பு வந்துடுச்சு…” என்று சிரிக்க, ஆகாஷிற்கும் சிரிப்பு வந்தாலும், அடக்கியவனாக, “அவனுக்கு மெசேஜ் மட்டும் பண்ணு போதும்…” என்றான்.

“ஏன் நீ பேச வேண்டியது தான…” என்று பூமி கூற, “என்னாலலா பேச முடியாது…” என்று மறுத்தான் ஆகாஷ்.

“பெரிய இந்தியா பாகிஸ்தான் சண்ட… பேச முடியாதாம்…” என்று நொடித்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

*****

அந்த நாள் முழுக்க யோசனையிலேயே கழிந்தது ஆகாஷிற்கு. இதுவரை பேசாத ஒருவனிடம், எப்படி நெடுநாள் பழகியது போல் பேச என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். பின் எப்படியும் வேலைக்கு செல்லப்போவதால் சிறிது நேரமே பேச வேண்டிய சூழல் அமையும், அதை எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான், அந்த முடிவில் அவனின் க்ளோபு மண்ணள்ளி போடப்போவதை அறியாமல்.

இரவு உணவை உண்டு கொண்டிருக்கும்போது, “நீ நாளைக்கு லீவு சொல்லிடு…” என்று பூமி கூறவும் புரையேறியது ஆகாஷிற்கு.

“எதுக்கு லீவு…” என்று ஆகாஷ் கேட்டதும், அவனை ஒரு மாதிரி பார்த்தவள், “நாளைக்கு சுந்தர் வரான்னு சொன்னேன்ல…” என்றாள்.

“அதுக்கு நான் ஏன் லீவு போடணும்…”

“லூசா நீ… நீ தான இப்போ பூமி… அவன் உன்ன தான பார்க்க வரான்… அப்போ நீ ஆஃபிஸ் போவியா…” என்று சற்று காட்டமாகவே கேட்டாள் பூமி.

ஆகாஷிற்கு அது புரிந்தாலும், இன்னமும் சுந்தரிடம் பேச அவனிற்கு சங்கடமாக தான் இருந்தது. அதை புரிந்து கொண்ட பூமி, “நானும் ஆஃபிஸ் போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்…” என்றாள்.

“அதென்ன ஒரு மணி நேரம்… லீவே போட வேண்டியது தான…” என்று ஆகாஷ் கூறவும், “அந்த குடுமி மண்டையன் எப்படியும் என் லீவ அப்ரூவ் பண்ண மாட்டான்… நாளைக்கு அவன் வரமாட்டான்னு உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுச்சு… அதான் ஒரு மணி நேரம் மட்டும் தலைய காமிச்சுட்டு வந்துடுவேன்….” என்றாள்.

“உளவுத்துறையா… யாரது…” என்று ஆச்சரியத்துடன் கேட்க, “ஆமா ஆமா அந்த குடுமி மண்டையனோட பி.ஏ வர்ஷாவும் மகேஷும் லவர்ஸ் தான… அவகிட்ட குடுமி நாளைக்கு வருவானா மாட்டான்னான்னு கேக்க சொன்னோம்… ஆமா இவ்ளோ நாள் அங்க இருக்க… இது கூட தெரிஞ்சு வச்சுக்க மாட்டீயா…” என்று அவள் கேட்க, அவனும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தான். ‘ச்சே இது நமக்கு தோணாம போச்சே…’

பூமி சாதாரணமாக ‘குட் நைட்’ சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, அவனிற்கு தான் படபடப்பாக இருந்தது. ‘எல்லாம் இந்த உருண்டையால… இன்னிக்கு தூக்கம் வருமான்னு கூட தெரிலையே… ஐயோ எக்ஸாமுக்கு கூட நான் இவ்ளோ டென்ஷன் ஆகல…” என்று புலம்பியவன், நேரம் கழித்தே உறங்கினான்.

*****

அடுத்த நாள் காலை பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள் பூமி. அவள் வேலை செய்வதை… வேலை என்ற பெயரில் ஏதோ செய்வதை சமையலறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

‘எனக்கு ஏற்கனவே என்னமோ மாதிரி இருக்கு… இதுல இவ வேற…’ என்று அலுத்துக் கொண்டான்.

அலுவலகம் செல்லும்முன், “நான் சீக்கிரம் வந்துடுவேன்… சப்போஸ் எனக்கு முன்னாடி அவன் வந்தா, ஏதாவது பேசி சமாளிச்சுடு….” என்றாள். அவனும் வேறு வழியேயில்லாததால் தலையசைத்தான்.

வீட்டிலிருந்த ஆகாஷ், பூமி சொன்னதைப் போல, சுந்தர் அவளிற்கு முன்னே வந்தால் எப்படி சமாளிப்பது என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். அதிலேயே ஒரு மணி நேரம் கழிய, பூமியின் வரவையே எதிர்நோக்கி காத்திருந்தான்.

அப்போது அழைப்பு மணி ஓசை கேட்க, யாராக இருக்கும் என்று கதவின் இடுக்கின் வழியே கண்டான். வெளியில் பூமி நின்றிருக்க, மனதில் தோன்றிய நிம்மதியுடன் கதவைத் திறந்தவனிற்கு பூமியின் அருகே நின்றிருந்த சுந்தரைக் கண்டதும் அந்த நிம்மதி வற்றிப்போனது.

அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தவனை, பூமி தான் கையில் கிள்ளி சுந்தரை வரவேற்க சொன்னாள். அவன் என்ன பேசுவது என்று முழித்துக் கொண்டிருக்க, சுந்தரே, “ஹே பூமி… என்ன ஃப்ரீஸ் ஆகி நின்னுட்ட… என்ன பார்த்ததும் சண்டை போடுவன்னு நெனச்சேன்…” என்றான்.

அதற்கும் எதுவும் பேசாமல் நின்றவனைக் கண்ட பூமி மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, “பூமி… வெளிய நிக்க வச்சு பேசுவியா… உள்ள கூட்டிட்டு போ…” என்று கூறினாள்.

அப்போது தான் சூழ்நிலை உணர்ந்த ஆகாஷ், “வா…” என்ற ஒற்றை சொல்லுடன் உள்ளே நகர்ந்தாள். சுந்தரும் உள்ளே செல்ல, ‘நல்ல வேள மரியாதை குடுக்கல… இல்ல இப்போவே அவனுக்கு சந்தேகம் வந்துருக்கும்…’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அங்கு அதற்குள் சுந்தர் ஆகாஷிடம் (அவனிற்கு பூமி) கேள்விகளை கேட்க ஆரம்பித்திருந்தான். ஆகாஷும் ‘ம்ம்ம்’ ‘ஹுஹும்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். இடையில் பூமியிடம் ‘என்னைக் காப்பாற்று’ என்ற பார்வை வேறு வீசினான்.

இவையனைத்தையும் கண்டும் காணாமல் பார்த்திருந்தான் சுந்தர். சிறிது நேரத்திலேயே தலை வலிப்பதாகக் கூறி அறைக்குள் சென்று விட்டான் ஆகாஷ்.

‘அச்சோ இப்படி சொதப்பிட்டானே… இப்போ வேற வழியில்ல நம்ம தான் சமாளிச்சாகனும்…’ என்று மனதிற்குள் நினைத்த பூமி, “அது… அவளுக்கு உன் மேல கொஞ்சம் கோபம்…” என்று சுந்தரிடம் கூறினாள்.

அவன் அவளை ஒரு மாதிரி பார்க்க, ‘என்ன இவன் இப்படி பார்க்குறான்… ஒரு வேள நம்பலையோ…’ என்று எண்ணியவள், “என்ன…?” என்று கேட்டாள்.

“இல்ல நீ என்கூட பேசுவன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல… அதான் ஜஸ்ட் அ ஷாக்…” என்றான் சுந்தர்.

‘ஐயையோ மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துட்டேங்கிற மாதிரி இவனுங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க சண்டைய மறந்துட்டேனே… சரி சமாளிப்போம்…’

“அது அறியாத வயசுல புரியாம போட்ட சண்டை இன்னுமா அத பிடிச்சு தொங்கிட்டு இருக்கணும்…” என்று இளிப்புடன் கூறினாள்.

அதைக் கேட்டு சிரித்த சுந்தர், “என்ன அந்த லூசுகிட்ட பேசி பேசி உனக்கும் அவ ஸ்லாங் ஒட்டிக்கிச்சோ…” என்றான்.

‘ஆத்தி பயபுள்ள ஷார்ப்பா இருக்கான்… நம்ம தான் உஷாரா இருக்கணும்…’ என்று மீண்டும் மனதிற்குள் நினைத்தவள், அவனிடம் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

பின் பேச்சு அவர்களைப் பற்றி திரும்பியது. பூமி ஆகாஷின் பணியிடம் பற்றி கூறினாள். என்ன தான் சுந்தரைப் பற்றிய முழு விபரமும் அவளிற்கு தெரிந்திருந்தாலும், ஆகாஷிற்கு தெரியாது என்பதால் சுந்தர் கூறுவதை புதிதாகக் கேட்பது போலவே கேட்டாள்.

“ஐ’ம் அ ஜர்னலிஸ்ட் இன் ****. இதுவரைக்கும் பெங்களூருல இருந்தேன்… இப்போ சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபெர் ஆகிட்டேன்… இங்க வேலைய ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேக் எடுத்து ஊருக்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்…” என்றான் சுந்தர்.

“அப்பறம் எங்க ஸ்டே பண்ண போற..?”

“ஆஃபிஸ் பக்கத்துலயே என் பிரென்ட் வீடு எடுத்து தங்கிருக்கான்… நானும் அவனும் அந்த வீட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கோம்…”

பேச்சு திசை மாறி எங்கெங்கோ சென்று அவர்களின் சிறு வயது வாழ்க்கையில் வந்து நின்றது.

“உனக்கு நியாபகம் இருக்கா… நீ எங்களோட விளையாட வரலைனா, அவ உன் முன்னாடி என்ன மாமான்னு கூப்பிடுவா… நீ அதுலயே டென்ஷன் ஆகிடுவ… ஹாஹா உனக்கு தெரியுமா, உன் முன்னாடி மட்டும் தான் அவ என்ன மாமான்னு கூப்பிடுவா… மத்த நேரமெல்லாம் வாடா போடான்னு தான் கூப்பிடுவா… கேட்டா, மேடமுக்கு உன்ன வெறுப்பேத்தி பார்க்கணுமாம்…” என்று சிரித்துக் கொண்டே கூறினான் சுந்தர்.

‘நல்ல வேள இத அவன்கிட்ட சொல்லல…’ என்று நினைத்து பெருமூச்சு விட்டாள், பூமி.

அவளின் பெருமூச்சிற்கான காரணத்தை தவறாக யூகித்த சுந்தர், “ஆனா நீ ஏன் எங்க கூட விளையாட வரலன்னு அதுக்கு அப்பறம் தான் எனக்கு புரிஞ்சது. பூமி மேல அவ்ளோ பொசசிவ்வா இருந்த ஆகாஷ் ஏன் அவளவிட்டு விலகுனான்னு நானே நிறைய தடவ யோசிச்சுருக்கேன்… ஆனா அதுக்கு காரணம் எங்க பாட்டின்னு அப்பறம் தான் எனக்கு தெரிஞ்சுது…” என்றான்.

பூமிக்கு அவன் கூறிய அனைத்தும் புதிதே… சிறு வயதில், ஆகாஷிற்கு பூமியின் மேல் மீயுடைமை உணர்விருந்திருக்கிறது என்பதே ஆச்சரியம்… ஏனெனில், அவளிற்கு நினைவிருக்கும் வரை அவளிற்கு தெரிந்ததெல்லாம் அவளை விலக்கி வைக்கும் ஆகாஷே… ஆனால் அவன் அவ்வாறு விலகியிருப்பதன் காரணம் தன் பாட்டி என்பது அதிர்ச்சியைத் தான் தந்தது.

‘என்னடா இது புது ட்விஸ்ட்டா இருக்கு… அவன் எப்ப பாரு என்ன மொறச்சுட்டே இருக்க காரணம் அந்த கிழவியா… ம்ம்ம் வாய்ப்பிருக்கு… அந்த கிழவி சும்மா இருக்காம ஏதாவது வம்பிழுத்துருக்கும்… அதான் கருவாயனுக்கு கோபம் வந்துருக்கும்…’ என்று ஆகாஷிற்கு ஆதரவாக சிந்தித்த மனதை அப்போதும் அவள் உணரவில்லை.

“சாரி ஆகாஷ்… எங்க பாட்டி உன்ன எப்படி பேசிருப்பாங்கன்னு எனக்கு புரியுது… ரியலி சாரி ஃபார் தாட்…” என்று மன்னிப்பு கேட்டான் சுந்தர்.

‘அச்சோ அந்த கிழவி என்ன சொல்லுச்சுன்னு தெரிலயே… சரி பொதுவா ஏதாவது சொல்லி விடுவோம்…’

“ஹே சுந்தர்… தப்பே பண்ணாத நீ எதுக்கு சாரி கேக்குற…” என்று கூறி ஏதோ சமாளித்தாள் பூமி.

“அப்பறம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிருக்காம்… கங்கிராட்ஸ் ப்ரோ…” என்று சிரிப்புடன் கூறியவன், “இப்போ என்ன மேரேஜ்ஜுக்கு ட்ரையல் பாக்குறீங்களா… எப்படி போகுது ப்ரீ- மேரேஜ் லைஃப்…” என்று ஆர்ப்பாட்டமாக கேட்டான் சுந்தர்.

‘அடப்பாவி… அந்த கல்யாணத்த நிறுத்த ஏதாவது ஐடியா குடுன்னு சொன்னா, இங்க வந்து வாழ்த்து சொல்லிட்டு இருக்கீயா…’ என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள், பூமி.

“அது தான் எல்லாருக்கும் தெரியுமே… டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி போயிட்டு இருக்கு…” என்றாள் பூமி.

“ஹாஹா அது தான் சூப்பரா இருக்கும்… எப்பவும் ஏதாவது சண்டை அதுக்கப்பறம் சமாதானம்னு வாழ்க்கையோட எந்த இடத்துலயும் சலிப்பே தட்டாம சுவாரசியமா போகும்… இன்ஃபேக்ட் ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் கப்பிள்…” என்று அவன் கூறவும் பூமிக்கு மனதிற்குள் குறுகுறுப்பாக இருந்தது.

ஏனோ முகம் சூடாகி சிவப்பது போலிருக்க, சுந்தரிடம் அதைக் காட்டாமல் மறைக்கும் பொருட்டு, “பூமி தலைவலிக்குதுன்னு உள்ள போய் ரொம்ப நேரமாச்சு… நீ இங்க வெய்ட் பண்ணு… நான் போய் பார்த்துட்டு வரேன்…” என்று கூறினாள்.

அவனோ நமுட்டுச் சிரிப்புடன் ‘சரி’யென்று தலையசைக்க, ‘இவன் எதுக்கு இப்படி சிரிக்கிறான்… என்ற யோசனையுடன் உள்ளே சென்றாள், பூமி.


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 போன எபிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 வெள்ளிக்கிழமை ஆரம்பிச்ச வேலை இப்போ தான் முடிஞ்சது... அதான் எக்ஸ்டரா ஒரு நாள் லீவு எடுத்துகிட்டேன் பிரெண்ட்ஸ்...😐😐😐 ஆனா இன்னைக்கு எவ்ளோ நேரமானாலும் எபி போட்டுடனும்னு இப்போ போட்டுட்டேன்...🙂🙂🙂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😍😍😍 உங்க கமெண்ட்ஸுக்கு ரிப்ளை சீக்கிரமா பண்ணிடுறேன் பிரெண்ட்ஸ்...🙂🙂🙂

25246

அத்தியாயம் 12

பூமி சுந்தரை சமாளித்து ஆகாஷின் அறைக்குள் வந்து பெருமூச்சு விட்டாள். “ச்சே இவன் ஒருத்தன சமாளிக்கிறதுக்கே நாக்கு தள்ளுது… இதுல குடும்பமே வந்தா நம்ம கதி அதோ கதி தான் போலயே…” என்று முணுமுணுத்தாள்.

அவளின் முணுமுணுப்பைக் கேட்டு தான், கடந்த கால வாழ்க்கை பக்கங்களை திருப்பிக் கொண்டிருந்த ஆகாஷ் நிகழ்விற்கு வந்தான்.

“ஹே என்ன இங்க வந்துருக்க… அவன் எங்க…?” என்றான் ஆகாஷ்.

பதில் கூறாமல் அவனையே முறைத்துப் பார்த்தாள். அதில் சுதாரித்தவன், “எதுக்கு இப்போ என்னயே வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு இருக்க…?” என்று வினவினான்.

“ம்ம்ம் வேற வேலை இல்லாம போர் அடிக்குது… அதான் உன்ன பார்த்து டைம் பாஸ் பண்ணிட்டு இருக்கேன்… ஆளப் பாரு… அவன சமாளிக்க ஹெல்ப் பண்ணாம, தனியா விட்டுட்டு ஓடிவந்துட்ட…” என்று நொடித்துக் கொண்டாள்.

“அது… என்னால அவன்கிட்ட பேச முடியல… சொதப்பிடுவேனோன்னு தான் உள்ள வந்துட்டேன்… ஏதாவது கேட்டான்னா என்ன…?”

“ஹ்ம்ம் நீ கோபமா இருக்கன்னு அவனே எடுத்து குடுத்ததும், நானும் அதையே மெயின்டைன் பண்ணிக்கிட்டேன்… நல்ல வேள நேத்து அவனோட சேட் பண்றப்போ, கோபமா இருக்க மாதிரியே மெசேஜ் பண்ணதுனால பயபுள்ள நம்பிடுச்சு…” என்றாள் பூமி.

பின் சுந்தரிடம் பேசியவற்றை, ஆகாஷின் பொசசிவ்னெஸ் தவிர்த்து மற்றவற்றை கூறினாள். ஏனெனில், அவளிற்கு அதைப் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது.. மேலும், சுந்தர் கூறிய ‘மேட் ஃபார் ஈச் அதர்’ரை ஆகாஷிடம் பகிர்ந்து கொள்ளவும் ஒரு மாதிரி இருந்தது.

முன்பானால், இதை வேடிக்கையாக்கி ஆகாஷிடம் கூறி சிரித்திருப்பாள். ஆனால் இப்போதோ அவளின் மனப்பெட்டகத்தில் அவன் மீது சிறு சலனம் தோன்றியிருந்ததால், அவள் அதை மனதிற்குள்ளேயே மறைத்து வைத்து, அது ஏற்படுத்தும் உணர்வை ரசித்திருந்தாள்.

பேசிக் கொண்டிருந்தவள், பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ சிந்தனையில் இருக்கவும், அவளை உலுக்கியவன், “என்ன கண்ண தொறந்துட்டே தூங்குறீயா…” என்று கிண்டல் செய்ய, இதுவரை இருந்த உணர்வுகள் தடைபட, “போடா லூசு…” என்று கூறி வெளியே செல்ல முற்பட்டாள்.

இரண்டடி எடுத்து வைத்தவள், ஆகாஷிடம் திரும்பி, “நீயும் வா… மறுபடியும் என்னால தனியா சமாளிக்க முடியாது…” என்று கூறி அவனை கையோடு அழைத்துச் சென்றாள்.

இருவரும் கையோடு கை கோர்த்து வெளியே வருவதைக் கண்ட சுந்தர் மீண்டும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, ‘இவன் எதுக்கு அடிக்கடி இப்படி சிரிக்கிறான்…’ என்று பூமி யோசித்தாள்.

ஆனால் சுந்தரின் எண்ணப்போக்கை ஒரு நொடியில் கணித்த ஆகாஷ், கையை விலக்க பார்க்க, எங்கே விட்டால் மறுபடியும் உள்ளே ஓடிவிடுவானோ என்று அவனின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டாள், பூமி.

‘ஐயோ அவன் வேற ஒரு மாதிரி பாக்குறானே… இங்க லூசு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு தான் கையப் பிடிச்சு தொங்குவா…’ என்று ஆகாஷ் சலித்துக் கொண்டான். ஆழ்மனதின் ஆசைகள் சலிப்பாக வெளிவருகிறதோ…

“சாரி சுந்தர்… ரொம்ப நேரமா வெய்ட் பண்ண வச்சுட்டோமா…” என்று பூமி சாதாரணமாகத் தான் கேட்டாள். ஆனால் அவர்களிருவரும் நின்றிருந்த நிலை, சுந்தரை வேறு மாதிரி யோசிக்க வைக்க, “அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்று சிரிப்புடன் கூறினான்.

ஆகாஷோ, ‘அடியேய் வாய வச்சுட்டு சும்மா இரு டி…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான். அவர்களின் பேச்சும், சுந்தரின் பாவமும் ஆகாஷையும் வெட்கப்பட வைத்ததோ… அவனின் கன்னங்கள் சிவக்க ஆரம்பிக்க, அதைக் கண்டு தான் சுந்தர் அவர்களுகிடையில் நடந்ததை (!!!) உறுதிபடுத்திக் கொண்டான்.

‘இப்படியே போனா இவளே ஏதாவது உளறிடுவா…’ என்று நினைத்த ஆகாஷ் அவர்களை மதிய உணவிற்காக அழைத்தான்.

உணவு மேஜையில் அமர்ந்து, அவரவர்களே பரிமாறிக் கொண்டு சாப்பிடத் துவங்கினர்.

சுந்தர், “வாவ்… டேஸ்ட் சூப்பரா இருக்கு… ஆகாஷ் நீ இவ்ளோ நல்லா சமைப்பியா…” என்று பூமியைப் பார்த்து கேட்க, அவளோ ஏதோவொரு நினைவில், “நான் சமைக்கல… “ என்றாள்.

“வாட்… நீ சமைக்கலனா… பூமி நீயா சமைச்ச…” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சுந்தர்.

ஆகாஷ் இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், எல்லா பக்கமும் தலையாட்டினான்.

“ஆர் யூ கிட்டிங்…” – இன்னும் அதிர்ச்சி விலகாதவனாக கேட்டான் சுந்தர். அவனிற்கு தான் பூமியின் நளபாகத்தைப் பற்றி தெரியுமே…

இம்முறையும் சமாளிக்கிறேன் பேர்வழி சொதப்பினாள் பூமி. “அது… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் சமைச்சோம்… இன்ஃபேக்ட் நான் தான் பூமிக்கு சமைக்க கத்துக் குடுத்தேன்… ரெண்டு பேரும் சேர்ந்து சமைச்சா ஈசியா வேலை முடியும்ல… அண்ட் ஃபியூச்சருக்கும் யூஸ் ஆகும்ல…” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், அப்போது தான் உளறுவதை உணர்ந்து அவளே பேச்சை நிறுத்தினாள்.

இப்போது சுந்தரின் இதழ்கள் சற்று பெரிதாக விரிந்தனவோ. அதைக் கண்ட ஆகாஷ் வெளிப்படையாகவே தலையில் கைவைத்து குனிந்து உணவிலேயே கவனம் இருப்பதைப் போன்று அமர்ந்து கொண்டான். ‘அவனே நாங்க லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல இருக்க மாதிரி இமேஜின் பண்ணிட்டு இருக்கான்… இதுல இவ கன்ஃபார்மே பண்ணிடுவா போல…’ என்று மனதிற்குள் புலம்பினான்.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், ஆகாஷிற்கு அலைபேசியில் அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது. அசோக் தான் அழைத்திருந்தான். அவன் அறைக்குள் சென்று பேசினான்.

அப்போது தான், வெளியில் நின்றிருந்த பைக்கின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் பூமி. அவளின் சிறு வயது கனவு, பைக்கில் தனியாக பயணம் செய்ய வேண்டும் என்பது. இதற்காகவே தந்தைக்கு தெரியாமல், சுந்தரிடம் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டாள். ஆனால் சுந்தரோ அவள் தனியாக பைக் ஓட்டுவதற்கு அனுமதிக்க வில்லை. அவளின் கனவும் கனவாகவே இருந்தது.

அதை நினைத்து பெருமூச்சு விட்டவளின் மூளையில் ஒரு யோசனை உண்டாக, ஆகாஷ் வருவதற்குள் அதை செயல்படுத்த விரும்பினாள்.

“ஹே சுந்தர்… பெங்களூருல இருந்தே பைக்ல தான் வந்தியா…” என்று ஆச்சரியமாக கேட்பது போல் கேட்டாள். மேலும் அவனிற்கு சந்தேகம் வராத அளவிற்கு சில பல கேள்விகள் அந்த பைக்கைப் பற்றி கேட்டுவிட்டு, “நான் ஒரு தடவ ஓட்டிப் பார்க்கலாமா…” என்று அவளின் அதீத ஆர்வம் வெளியே தெரிந்து விடாதவாறு கேட்டாள்.

“சுயர்…” என்று சுந்தரும் பைக் சாவியை கொடுக்க, ‘அடேய் சுந்து எத்தன தடவ பைக் ஓட்டிப் பாக்குறேன்னு கெஞ்சிருக்கேன்… அப்போலா குடுக்காம, இந்த ஸ்கை ஹை கேட்டவொடனே குடுத்துடுவியா… இரு இரு இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்ன கவனிச்சுக்குறேன்…’ என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடியே பைக்கை உயிர்ப்பித்து கிளம்பினாள்.

*****

அசோக் அழைத்ததும், ஏதோ முக்கியமான வேலை என்று நினைத்த ஆகாஷ், “என்ன டா ஆச்சு… எதுவும் ப்ராப்ளமா…” என்று பதட்டத்துடன் கேட்க, “ப்ராப்ளமா… அதெல்லாம் ஒன்னுமில்லையே…” என்று அசோக் நிதானமாகக் கூறினான்.

“அப்பறம் எதுக்கு டா ஆஃபிஸ் நேரத்துல கூப்பிட்டுருக்க…”

“அது மச்சான்… இன்னிக்கு நம்ம பங்கு மகேஷ் ட்ரீட்… ஹெவி லன்ச்… நல்லா மூக்குப்பிடிக்க சாப்பிட்டேனா… அதான் கண்ணு சொக்குது… நீ வீட்டுல வெட்டியா தான இருப்ப… அதான் கொஞ்ச நேரம் பேசி தூக்கத்த விரட்டலாம்னு நெனச்சேன்…” என்றான் அசோக்.

அதில் கடுப்பான ஆகாஷ், “என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது…” என்றான்.

“மச்சான் அப்போ விடீயோ கால் வரியா…” என்று அசோக் கூற, அவனை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து விட்டு அலைபேசியை அணைக்கச் சென்றான் ஆகாஷ்.

“டேய் மச்சான் வச்சுடாத… ஒரு டவுட்…” என்றான் அசோக்.

‘இப்போ என்ன கேக்க போறானோ…’ என்று நொந்துகொண்டு, “என்ன டவுட்…’ என்றான் பல்லைக் கடித்தவாறு

“நீயும் பூமியும், அவங்கவங்களா இருந்தப்போ ஒரு ப்ரொபோசல் கூட வரலையே… நீங்க மாறுனதுக்கு அப்பறம் எப்படி சட்டுன்னு ப்ரொபோசலா வந்து குமியுது…” என்று தன் சந்தேகத்தை கேட்டான் அசோக்.

அதில் மீண்டும் காண்டான ஆகாஷ், “போன வை டா நாயே…” என்று திட்டிவிட்டு அலைபேசியை துண்டித்தான்.

பெருமூச்சு விட்டு திரும்பிய போது, அங்கு அறை வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்ற சுந்தரைக் கண்டு அதிர்ந்து தான் போனான், ஆகாஷ்.

‘ஐயையோ நான் பேசுனத கேட்டுட்டானோ…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, “என்ன பூமி, இன்னும் என்மேல கோபம் போகலையா…?” என்றான் சுந்தர்.

‘நல்ல வேள எதுவும் கேக்கல…’ என்று ஆகாஷ் நிம்மதியடைந்தாலும், சுந்தரிடம் என்ன பேசுவது என்று குழம்பினான்.

“ப்ச்… எனக்கு தெரியும் பூமி… நீ எதுக்கு என்மேல கோபமா இருக்கன்னு… கல்யாணத்த நிறுத்த ஐடியா கேட்ட உனக்கு நான் எந்த ஹெல்ப்பும் செய்யலங்கிறதுக்காக தான கோபமா இருக்க…” என்று சுந்தர் கூற, அதைக் கேட்ட ஆகாஷின் மனதில் வலி ஏற்பட்டது.

‘ஓ கல்யாணத்த நிறுத்த இவன்கிட்ட ஹெல்ப் கேட்டாளா…’ என்று நினைத்து வருந்தினான். அந்த வருத்தம் அவனிற்கு ஏதோ உணர்த்தும் வேளையில் சுந்தர் பேச்சை தொடர்ந்தான்.

“நீ என்கிட்ட என்ன சொன்னன்னு உனக்கு நியாபகம் இருக்கா, பூமி… கல்யாணத்த நிறுத்தணும்னு சொன்ன… அதுக்கு காரணம் கேட்டப்போ, ‘இப்போ தான் படிச்சு முடிச்சேன்… வேலைக்கு போகணும்… கொஞ்ச நாள் ஆகட்டும்…’னு எத்தனையோ காரணத்த சொன்ன நீ, ஒரு தடவ கூட ஆகாஷ பிடிக்கலன்னு சொல்லவே இல்ல… உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்றது தான் ப்ராப்ளம்… இதே ஆகாஷ ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா நீ மறுக்க மாட்ட…” என்று கூறிய சுந்தரை ஆகாஷ் ஆச்சரியமாகப் பார்த்தான்.

ஆகாஷின் பார்வையை உணர்ந்த சுந்தர், “என்ன மேடம் ஷாக்கா… லூசு தான் பூமி நீ… உனக்கு என்ன பிடிக்குதுன்னு உனக்கே தெரியல… உனக்கு ஆகாஷ பிடிக்கும் பூமி… அவன மட்டும் தான் பிடிக்கும் அஸ் யுவர் பெட்டர்-ஹாஃப்…” என்று அழுத்தமாகக் கூறினான்.

இன்னும் ஆச்சரியம் விலகாத ஆகாஷிற்கு சுந்தரின் கூற்று, சற்று முன்பு மனதில் தோன்றிய வருத்தத்தை குறைத்திருந்தது.

“இது எப்படி எனக்கு தெரியும்… அடுத்து உன் கேள்வி இதுவா தான் இருக்கும்… ஆனா மேடம் ஷாக்லயிருந்து வெளிய வரதுக்குள்ள நானே சொல்லிடுறேன்… நீ அவன்கிட்ட பேசும்போது… ஹுஹும் இல்லயில்ல வம்பிழுக்கும் போது உன் கண்ணுல தெரியுற அந்த எக்ஸ்ப்ரஷன்… அவ்ளோ உயிர்ப்பா இருக்கும்… அது நீ வேற யாருக்கிட்ட பேசும்போதும் நான் பார்த்தது இல்ல, பூமி. அண்ட் நீ அவன்கிட்ட பேசி வம்பிழுக்குற மாதிரி வேற யாருக்கிட்டயும் பேச மாட்ட…” என்று நிறுத்தவும், “அதான் உன்கிட்ட பேசுவா…க்கும்.. பேசுவேன்ல…” என்று முதல் முறையாக அவனிடம் வாய் திறந்தான் ஆகாஷ்.

“என்கிட்ட நீ பேசுறது ஒரு அண்ணன்கிட்ட பேசுற மாதிரி இருக்கும்… ஆனா அவன்கிட்ட தான் நீ உரிமையா பேசுவ… அது பாக்குறதுக்கு கியூட்டா இருக்கும்.. நானே நீங்க ரெண்டு பேரும் பேசுறத பார்த்து ரசிச்சுருக்கேன் தெரியுமா… அண்ட் யூ நோ வாட்.. ஆகாஷுக்கும் உன் மேல லவ்ஸ் இருக்கு…” என்றான்.

அதில் மேலும் அதிர்ந்தான் ஆகாஷ். ‘என்ன நான் அவள லவ் பண்றேனா…’ என்று மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.

“நம்ம ரெண்டு பேரும் இத்தன வருஷமா பேசிட்டு இருக்கோம்… சோ உனக்கு பிடிச்சது, உன்ன பத்தின விஷயங்கள் எனக்கு தெரியுறது பெரிய விஷயம் இல்லை… ஆனா உன்ன விட்டு விலகியிருக்க ஆகாஷுக்கு இதெல்லாம் எப்படி தெரியுதுன்னு நீ யோசிச்சுருக்கியா…”

ஆகாஷும் அதை சிந்திக்கும் போது தான், பூமியைப் பற்றிய எதையும் தான் மறக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

“அவன் நம்மகூட வந்து விளையாடலன்னு நீ ஃபீல் பண்ணப்போ அதுக்கான காரணம் என்னன்னு அப்போ எனக்கு தெரியல… ஆனா அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது, அவன் உன்ன விட்டு விலகுனதுக்கு காரணம் நம்ம பாட்டின்னு…”

சுந்தர் பாட்டியைப் பற்றிக் கூறியதும் இத்தனை நேரமிருந்த இளக்கம் மறைய, ஆகாஷிற்கும் பழைய நினைவுகள் காட்சியாக விரிந்தன.

ஆகாஷின் தந்தை இறந்து, அவனும் அவனின் தாய் மீனாட்சியும், மணிவண்ணன் வீட்டிற்கு வந்த புதிதில், ஆகாஷ் இயல்பாக இல்லை. தந்தையின் இழப்பு அந்த சிறுவனின் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் பறித்திருக்க, அதை மீட்டெடுக்க வந்தவள் தான் பூமி.

பூமி பிறந்திருக்கும் நேரம், மருத்துவமனைக்கு சென்று பார்த்தவனிற்கு, முட்டை கண்களை மூடி மூடி திறந்து, பொக்கை வாய் சிரிப்புடன் இருக்கும் மாமன் மகளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. அன்றிலிருந்து அவளே அவன் துணையாகிப் போனாள்.

பூமியும் அவனைக் கண்டாலே சிரிக்க ஆரம்பித்து விடுவாள். இப்படியே அவர்களின் நாட்கள் அழகாக செல்ல, அதை கெடுக்கவென வந்தது அந்த நாள்.

பூமிக்கு மொட்டை அடித்து காது குத்தும் வைபவம் அவர்களின் குலதெய்வ கோவிலில் நடந்தது. அதற்கு பூமியின் அன்னை விசாலாட்சியின் பிறந்த வீட்டிலிருந்தும் வந்திருந்தனர்.

அங்கு ஆகாஷ் பூமியை தூக்கி வைத்து கொஞ்சுவதைக் கண்டவர்கள், “இப்போவே மாமன் மகள கைக்குள்ள வச்சுக்குறான்…” என்று எதார்த்தமாக பேச, அதைக் கேட்ட விசாலாட்சியின் அன்னைக்கு கோபம் துளிர்விட்டது.

மீனாட்சியும் ஆகாஷும், மகளுக்கு சுமையாகி விட்டனர் என்ற எண்ணம் அவருள் பரவியிருக்க, அவர்களைக் கண்டாலே அவருக்கு ஆகாது. அப்படிப்பட்டவரின் கண்களில் இந்த காட்சி விழ, உள்ளுக்குள் புழுங்கியவர், நேரம் கிடைத்த போது அதைக் கொட்டி விட்டார். ஆனால் கொட்டிய இடம் தான் தவறாகிப் போனது.

“என்ன நீயும் உங்க அம்மாவும் இங்கேயே டேரா போட திட்டம் போட்டுருக்கீங்களா… அதுக்கு தான் இப்போவே என் பேத்திய உங்க பக்கம் இழுக்குறீங்களோ… இத தான் உங்க அம்மா சொல்லிக் குடுத்தாளா… அதுவும் இந்த வயசுலயே… ஏய் இங்க பாரு… என் பேத்திக்கும் என் பேரனுக்கும் தான் கல்யாணம் நடக்கும்… வீணா நடுவுல வந்து ஏதாவது பண்ணலாம்னு நெனச்சீங்க, அவ்ளோ தான்… என்ன புரியுதா…” – இவையே சிறுவனான ஆகாஷிடம் அவர் பேசிய விஷயம்.

அவரின் பேச்சில் பாதி அவனிற்கு புரியவில்லை என்றாலும், அவருக்கு தான் பூமியுடன் பழகுவது பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். அங்கு அவனின் தன்மானம் சீண்டப்பட, அன்றிலிருந்து பூமியை விட்டு தள்ளியே இருந்தான் ஆகாஷ். முதலில் அவள் எவ்வளவு வம்பிழுத்தாலும், பொறுமையாக இருந்தவன், நாளாக நாளாக அந்த பொறுமை காற்றில் பறக்க, அவனும் பதிலுக்கு சீண்ட, இதுவே அவர்களின் வாடிக்கை ஆகிப் போனது.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனின் தோளைப் பிடித்து உலுக்கிய சுந்தர், “என்ன மேடம் ஓல்ட் மெமொரிஸா…” என்று வினவினான். அதை ஆமோதித்த ஆகாஷின் மனது மீண்டும் குழம்ப, தன் குழப்பத்தை சுந்தரிடமே கேட்டான்.

“பாட்டிக்கு எங்க கல்யாண விஷயம் தெரியுமா…” என்று கேட்டான் ஆகாஷ்.

“ஹான் தெரியும்… விஷயம் தெரிஞ்சதுலயிருந்து ஒரே புலம்பல் தான்… ஆனா யாரும் அத கண்டுக்கல… நீயும் அத நெனைக்காத… உனக்கு அவன பிடிச்சுருக்கு, அவனுக்கும் உன்ன பிடிச்சுருக்கு… வேற யாரப் பத்தியும் கவலைப்படாத…” என்று கூறியவன், அவளி(னி)ன் மனநிலையை மாற்ற, “ஹே உனக்கு தெரியுமா இவ்ளோ நேரம் ஆகாஷ் கூட தான் பேசிட்டு இருந்தேன்… அவன் என்கூட பேசுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல… இன்னும் மூஞ்சிய தூக்கிட்டு திரிவான்னு நெனச்சேன்… சின்ன வயசுல என்னமோ நான் உன்ன கடத்தி போற மாதிரி முறைப்பான் ஹாஹா…” என்று கூறி சிரித்தான்.

ஆகாஷும் அவனின் செயல்களை நினைத்து சிரித்தான். அதற்கு பிறகு, சுந்தரிடம் பேச ஆகாஷிற்கு எந்த தயக்கமும் இல்லாமல் போக, சுந்தருடன் பாசப்பயிறை வளர்த்தான் ஆகாஷ்.

நேரம் செல்ல, மாமன் மகளைக் காணாததால், (அவள் இருந்திருந்தால், இந்நேரம் இங்கு வந்திருப்பாள் என்பதை ஆகாஷ் நன்கறிவான்.) “ஆகாஷ் எங்க…?” என்று சுந்தரிடம் கேட்டான்.

“அட அதுக்குள்ள உன் ஆள தேடுற… நான் இவ்ளோ நேரம் மூச்சு விடாம பேசியிருக்கவே வேணாம் போலயே… அதான் அப்போவே தெரிஞ்சுதே, எல்லாத்தையும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்வீங்களாம்…” என்று சுந்தர் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் ஆகாஷை ஓட்டினான்.

‘அடியேய் க்ளோபு… இப்படி சிக்கவச்சுட்டியே…’ என்று செல்லக் கோவம் கொண்டவனிற்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

“ப்பா… வெட்கப்படுறதா இருந்தா சொல்லிட்டு செய் மா..” என்று மேலும் சுந்தர் கிண்டல் செய்ய, தற்காலிகமாக அவர்கள் பூமியை மறந்தனர். பூமியோ நடுரோட்டில் செய்வதறியாது நின்றிருந்தாள்!!!

தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இன்னைக்கு சீக்கிரமாவே வந்தாச்சு...😊😊😊 இதோ அடுத்த அத்தியாயம்... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁 இன்னும் ஒரு எபி ப்ளஸ் குட்டி எபிலாக் தான் இருக்கு பிரெண்ட்ஸ்... முதலயிருந்து படிக்கணும்னு நினைக்குறவங்க படிக்க ஆரம்பிக்கலாம்...🙂🙂🙂

25252

அத்தியாயம் 13

சுந்தரிடம் பைக் சாவியை வாங்கிக் கொண்டு தன் நீண்ட நாள் கனவை நனவாக்க வீர நடை போட்டு, அவனின் பைக் அருகில் சென்றாள், பூமி. பைக்கை தடவியவள், ‘இந்த பைக்க தான எனக்கு குடுக்க மாட்டேன்னு சொன்ன… இத திரும்ப குடுக்குறப்போ ஒரு சின்ன கீறலாவது போடாம குடுக்க மாட்டேன்…’ என்று மனதிற்குள் சபதமிட்டவளிற்கு தெரியவில்லை, கடவுள் அதற்கு ததாஸ்து சொல்லிவிட்டார் என்று…

அவர்களின் வீடு முக்கிய சாலையிலிருந்து சற்று உள்ளே தள்ளியிருந்தது. மதிய வேளை என்பதால் அவ்வளவாக அங்கு கூட்டமில்லை. பூமியும் நெடுநாட்கள் கழித்து வண்டி ஓட்டுவதால், பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே, வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தாள். முக்கிய சாலை வந்ததும், அவளின் கைகள் நடுங்க வண்டியும் லேசாக ஆடியது.

‘ஸ்ஸ்ஸ் பூமி ஸ்டெடி.. பயத்த வெளிய காட்டிக்காம இருக்கணும்…’ என்று தனக்குள்ளயே சொல்லிக் கொண்டாள்.

முக்கிய சாலையிலும் அவ்வளவாக கூட்டமில்லை என்றாலும், அவ்வப்போது கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்று கொண்டு தான் இருந்தன.

அதுவரையிலும் சினிமா பாடலை முணுமுணுத்தவள், இப்போது பக்திப் பாடல்களை பாடிக் கொண்டிருந்தாள்…. ‘கடவுளே எப்படியாவது பத்திரமா என்ன வீட்டுக்கு போய் சேர்த்துடு… உன் கோவில்ல மொட்டை போடுறதுக்கு எனக்கு ரெண்டு அத்த பசங்க இருக்கானுங்க… ரெண்டு பேரையும் நடக்க வச்சே கூட்டிட்டு வந்து மொட்டை போடுறேன்…’ என்று கடவுளிடம் கோரிக்கை வைக்க, அவரோ அவளின் கோரிக்கையை உடனே நிராகரித்தார்.

மனதில் பயமிருந்தாலும், சரியாகத் தான் வண்டியை ஓட்டினாள். ஆனால் அவளின் வேண்டுதலை நிராகரித்த கடவுள், சபதத்தை நிறைவேற்ற அருள் புரிந்தாரோ… எதிர்த்திசையில் அவளிற்கான ஆப்பு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தது.

இன்னும் சிறிது தூரத்தில் வீட்டை அடைந்து விடலாம் என்று நிம்மதியுடன் ஓட்டிக் கொண்டிருந்தவளை சோதிக்கவென எதிரில் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த பெண் தடுமாற, அவளைக் கண்டு இவளும் தடுமாற, கன நேரத்தில் நிகழவிருப்பதை உணர்ந்த பூமி ‘சடன் பிரேக்’கிட்டு விபத்தை தடுத்திருந்தாள். ஆனால் அப்பெண்ணோ பயத்திலேயே நிதானத்தை இழந்து கீழே விழுந்திருந்தாள்.

அதில் பதறிய பூமி, அவசர அவசரமாக வண்டியை விட்டு இறங்கினாள். அவள் இறங்கிய வேகத்திற்கு அதுவும் கீழே விழுந்தது. ஆனால் அதற்குள் அங்கு கூட்டம் கூடி விட்டது.

‘அடேய் ஸ்லீப்பர் செல்ஸ் எங்க டா இருந்தீங்க இவ்ளோ நேரமா…’ என்று பூமி மனதிற்குள் புலம்பினாள்.

கீழே விழுந்ததில் அப்பெண் அழ, சுற்றியிருந்தவர்கள் பூமியை திட்டினர்.

“ஏன் பா… பார்த்து வரக்கூடாது…” என்று பெரியவர் ஒருவர் கேட்க, பூமி அதை மறுத்து சொல்வதற்குள், “இந்த காலத்து பசங்களே இப்படி தான்…” என்று இன்னொருவர் அதற்கு ஒத்து ஊதினார்.

“இல்லைங்க… நான் சரியா தான் வந்தேன்… அந்த பொண்ணு தான் தப்பா வந்துச்சு…” என்று கிடைத்த இடைவெளியில் பூமி பேச, “அந்த பொண்ண பாத்தா பொய் சொல்ற மாதிரியா இருக்கு…” என்றான் அப்பெண்ணிற்கு ரூட் விடும் ஒருவன்.

‘அடேய் என்ன டா ஆச்சு உங்களுக்கெல்லாம்… பொண்ணுங்கன்னா பொய் சொல்ல மாட்டங்களா… என்ன டா முட்டாள்தனமா பேசிட்டு இருக்கீங்க…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.

அங்கு நின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூற, அப்பெண்ணோ நடந்ததைப் பற்றி வாயே திறக்க வில்லை. பூமிக்கு அங்கு நிற்பதற்கே பிடிக்க வில்லை. பைக்கை எடுக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தாளோ, இப்போது அதற்கு நேர்மாறான உணர்வில் இருந்தாள்.

அப்பெண்ணை சமாதானப் படுத்தியவர்கள் (!!!) ஒரு வழியாக பூமியை திட்டிக் கொண்டே கலைந்து செல்ல, அப்பெண் அப்போதும் பூமியைக் கண்டுகொள்ளாமல் அவளின் ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள்.

“ச்சே என்ன பொண்ணு அவ… தப்பு அவ மேல தான்… என்னமோ நான் தள்ளி தான் கீழ விழுந்த மாதிரி அழுகாச்சி சீன் வேற…” என்று முணுமுணுத்துக் கொண்டே பைக்கை நோக்க, அதுவோ ரோட்டின் ஓரம் அனாதையாகக் கிடந்தது.

பூமிக்கு ஒரு நொடி, அவளின் சபதம் நினைவிற்கு வர, “ஆனாலும் கடவுளே, இப்படி என் சபதத்த நிறைவேத்திருக்க வேணாம்…” என்று வாய் விட்டே கூறியவள், பைக்கை தூக்க முடியாமல் தூக்கி, அதை உயிர்ப்பித்தாள்.

*****

மேலும் சில நிமிடங்கள் கடந்திருக்க, இம்முறை சுந்தர், “ஆகாஷ் பைக்க எடுத்துட்டு போய் ரொம்ப நேரமாச்சே…. இன்னும் வரல…” என்று சொன்னதும், “என்னது பைக் எடுத்துட்டு போனாளா..க்கும்… போனானா…” என்று அதிர்ந்தான் ஆகாஷ்.

அவனின் அதிர்ச்சியை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்போது வாசலில் சத்தம் கேட்க, பூமி தான் பைக்கை நிறுத்தி விட்டு தளர்ந்த நடையுடன் உள்ளே வந்தாள்.

ஆகாஷ் அவளின் சோர்வில் ஒரு நொடி பதறி, அவளின் தலை முதல் கால் வரை ஆராய்ந்தவன், அவளிற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்பே நிதானித்தான். அடுத்த நொடியே அவளை முறைக்க ஆரம்பிக்க, பூமியோ அவன் ஒருவன் அங்கிருப்பதையே கவனிக்காதவள் போல், சுந்தரிடம் பேச ஆரம்பித்தாள்.

“சாரி சுந்தர்… உன் பைக்ல சின்ன ஸ்க்ரேட்ச் விழுந்துடுச்சு… ரியலி சாரி…” என்று பூமி மன்னிப்பு கேட்க, அவளின் மனசாட்சியோ, ‘என்னாது சின்ன ஸ்க்ரேட்ச்சா…’ என்று கூற, அதை அடக்கியவள், சுந்தரின் முகத்தையே பாவமாக பார்த்தாள்.

அவனோ, “இட்ஸ் ஓகே ஆகாஷ்… இதுக்கு ஏன் இவ்ளோ சாரி…” என்று சாதாரணமாகக் கூற, அப்போது தான் பூமிக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஏனெனில் இவ்வளவு நேரம் பயந்து கொண்டல்லவா இருந்தாள்… எங்கு சுந்தர் அதற்கு வருத்தப்படுவது போல் பேசினாலோ இல்லை திட்டவோ செய்தால், அன்றைய நாள் முழுக்க ஆகாஷிடமும் அர்ச்சனை வாங்க வேண்டுமல்லவா…

சுந்தரிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பும் நன்றியும் கூறியவள், தலைவலி என்று கூறி அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள். ‘ஷப்பா அந்த கருவாயன் கிட்டயிருந்து தப்பிச்சாச்சு… இன்னைக்கு ஃபுல்லா வெளியவே போகக் கூடாது.’ என்று எண்ண, அவளின் கருவாயனோ மனதினுள் அவளைத் தான் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

‘லூசு… இவ பைக்க எடுக்கக் கூடாதுன்னு தான் என் பைக்க அசோக் வீட்டுல வச்சு பூட்டிட்டு, அவள அசோக் கூட அனுப்பிட்டு இருக்கேன்… லைசன்ஸே இல்லாம பைக்க எடுத்துட்டு போயிருக்கா… கொஞ்சம் கூட பயமே இல்ல…’ என்று ஆகாஷ் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ஏதோ அவசர வேலை இருப்பதாகக் கூறி, சுந்தரும் விடைபெற்றான். அவனை வழியனுப்பியவன் நேரே சென்றது பூமியின் அறைக்குத் தான்.

அறை வாசலில் நின்று கதவைத் தட்டியதும், “எனக்கு டையர்டா இருக்கு ஸ்கை ஹை… எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்…” என்று சோர்ந்து போய் பேச, “கேவலமா நடிக்காத… இப்போ கதவ திறக்கல, கதவ ஒடைச்சுட்டு உள்ள வந்துடுவேன்…” என்றான் ஆகாஷ்.

“இப்போ என்ன வேணும் உனக்கு…” என்று எரிச்சலுடன் (!!!) பூமி கேட்க, “ஹ்ம்ம் என் உடம்புல அடி ஏதாவது பட்டிருக்கான்னு செக் பண்ணனும்… கொஞ்சம் வெளியே வரீங்களா மேடம்…” என்றான் ஆகாஷ்.

அவன் கூறியதில் மனம் வருந்த, ‘அப்போ என் மேல அக்கறை இல்லயா… அவன் உடம்புக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான் பாக்குறானா…’ என்று எண்ணினாள். ஆகாஷ் அவளிற்காக செய்த மற்ற செயல்களை வசதியாக மறந்து போனாள்.

முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டே வெளியே வந்தாள் பூமி.

“அட மேடம் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க… உங்கள வெளிய வரச்சொல்லி கெஞ்சனும்னு நெனச்சேன்…” என்று அவன் கேலியாக சொல்ல, எப்போதும் அதை கிண்டலாக மட்டுமே எடுத்துக் கொள்பவளுக்கு இன்று நடந்த சம்பவங்களின் தாக்கமோ இல்லை ஆகாஷின் மேலான அவளின் பார்வையின் மாற்றமோ, அவன் கூறியதை மனதின் ஆழம் வரை எடுத்துச் சென்று வலியை உணரச் செய்தது.

ஆகாஷும் அவளின் நலன் பற்றிய பயம் கலந்த பதட்டத்தில் இருந்ததால் அவளின் எண்ணப்போக்கை கவனிக்க மறந்து மேலும் வார்த்தைகளைக் கொட்டினான்.

“உன்ன யாரு பைக் எடுத்துட்டு போக சொன்னா… கொஞ்சம் கூட பயமே இல்லயா… ஏதாவது ஆனா என்ன பண்ணுவ… உன்ன என் பொறுப்புல விட்டுருக்காங்க மாமாவும், அத்தையும்… அவங்களுக்கு நான் என்ன சொல்றது… எதுக்கு சொல்றோம்னு புரிஞ்சுக்கவே மாட்டியா…” என்று திட்ட, ஏற்கனவே சாலையில் மற்றவர்களிடம் திட்டு வாங்கிய போதே கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவளிற்கு, இப்போது எந்த கட்டுப்பாடுகளும் அவன் முன் இல்லாமல் போக, அவளின் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தன.

அப்போது தான் அவளின் நிலையைக் கண்டவன், தான் செய்து கொண்டிருக்கும் செயலை நினைத்து தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

அவள் அழுவதைத் தாங்க முடியாமல், “ப்ச் இப்போ எதுக்கு அழுகுற…” என்றான்.

அதில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தவளை, இழுத்து சோஃபாவில் அமர்த்தியவனை கைகளினால் அடித்தவள், “விடு டா என்ன… எப்போ பாத்தாலும் திட்டிட்டே இரு… அந்த லூசு தப்பா வந்ததுக்கு நான் என்ன பண்ணுவேன்… எல்லாரும் என்னையே சொல்றீங்க…” என்று கூறியவள் அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

அவள் கூறியதைக் கேட்டு குழம்பியவன், “யாரு தப்பா வந்தா… என்ன சொல்ற… முழுசா சொல்லு…” என்றான்.

பூமியும் அங்கு நடந்தவற்றை சொல்ல, ஆகாஷிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது மாதிரியான அனுபவங்களை அவனின் நண்பர்கள் பகிர்ந்து கேட்டிருக்கிறான். சில இடங்களில், சில சூழ்நிலைகளில், ஆண் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் மேல் பழி போடும் செயல்கள் இந்த சமூகத்தில் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு பெருமூச்சு விட்டவன், “சரி… நடந்ததையே நெனச்சுட்டு இருக்காத…” என்று ஆகாஷ் கூற, அவனை முறைத்தாள் பூமி.

‘ஏன் இவ இவ்ளோ பாசமா பாக்குறா… அவளுக்கு ஆறுதல் தான சொன்னேன்..’ என்று நினைத்துக் கொண்டே அவளை நோக்கி புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, “’சரி’ சொல்லுவ, ஆனா ‘சாரி’ சொல்ல மாட்டேல…” என்று பூமி முறைத்துக் கொண்டே கேட்டாள்.

முழுதாய் ஒரு நிமிடம் கடந்த பின்பே அவள் கூறியதற்கான அர்த்தம் புரிய, ‘அட க்ளோபே… இவ்ளோ விஷயம் நடந்துருக்கு… ஆனா நான் சாரி கேக்காதது தான் இவளுக்கு பிரச்சனையாமாம்…’ என்று சலித்துக் கொண்டவன், அவளை நோக்கி கைகூப்பி, “எம்மா தாயே சாரி…” என்றான்.

அவனின் செய்கையில் அவளின் அதரங்களும் விரிய, வாய்ப்பை நழுவ விடாமல் உடனே சமாதான உடன்படிக்கை போட நினைத்தான் ஆகாஷ். பூமியும் தன் ‘மன உளைச்சலுக்கு’ காரணமான ஆகாஷின் பர்ஸிற்கு வேட்டு வைத்துவிட்டே சமாதனத்திற்கு உடன்பட்டாள்.

அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டனர். அப்போது பூமி, “நீங்களும் நெறைய கஷ்டங்கள்ல அனுபவிக்குறீங்க… இப்படி யாரு மேல தப்பு இருக்குன்னு கூட சரியா விசாரிக்காம, ஆண்கள் மேல பழிய போடுறாங்க…” என்று வருத்தமாகக் கூறினாள்.

“ஹ்ம்ம் இது மாதிரி சம்பவங்களும் இப்போ நிறைய இடங்கள்ல நடக்க தான் செய்யுது… இப்போ கூட ரீசன்ட்டா நடந்த விஷயம்… ஒரு பொண்ணு அவளோட செர்வன்ட் தான் சொன்ன வேலைய செய்யலன்னு, அவன் மேல பாலியல் தொல்லை கேஸ் குடுத்துருக்கா… ஏதோ அந்த பையனோட நல்ல நேரம், விசாரிக்குறப்போ அந்த கேஸ் பொய்யுனு தெரியவர, தண்டனைலயிருந்து தப்பிச்சுட்டான்… இதுவே அந்த கேஸ சரியான பாதைல விசாரிக்காம போயிருந்தா, அந்த பையன் இப்போ கம்பி எண்ணிட்டு இருப்பான்...” என்று ஆகாஷ் வருத்தமாக கூறினான்.

“ம்ம்ம் ஆமா… எங்க பொண்ணுங்கள ஆதரிக்கணுமோ அங்க சும்மா இருந்துட்டு, இப்படி தேவையில்லாததுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணுவாங்க…” என்றாள் பூமி.

“சில பெண்கள் இப்படி இருந்தாலும், பல பெண்களோட நிலை இன்னும் மோசமா தான் இருக்கு க்ளோபு… கொலை, கற்பழிப்பு, ஆசிட் வீச்சுன்னு எத்தனையோ காரணங்களுக்காக பயந்து பயந்து தான காலேஜுக்கும் வேலைக்கும் போயிட்டு வராங்க… இன்னும் கொஞ்ச நாள்ல அவங்கள காப்பாத்துறதுக்காக மறுபடியும் கிச்சன்ல அடைச்சு வச்சாலும், ஆச்சரியப் படுறதுக்கு ஒன்னுமில்ல…” என்று பெருமூச்சு விட்டான்.

மேலும் சமூகம் சார்ந்த பல விஷயங்களை, அவரவர்களின் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். நாம் நமது கோணத்தில் காணும் காட்சி, மற்றவர்களின் கோணத்தில் வித்தியாசப்பட்டிருப்பதையும் உணர்ந்தனர்.

ஆண்களோ பெண்களோ, இருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் அவரவர்களுக்கேயான கஷ்டங்களும் தடங்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக வாழ்க்கையை சபித்துக் கொண்டும், மற்றவர்களின் மேல் பழிபோட்டுக் கொண்டும் இருப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதில்லை. அதைக் கடந்து தானும் முன்னேறி, தன் துணையையும் முன்னேற்ற பாதையில் அழைத்துக் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். இத்தகைய வாழ்க்கைப் பாடத்தை இவர்களுக்கு உணர்த்த தான் கடவுள் இவர்களிடம் விளையாடினாரோ.

ஆகாஷும் பூமியும் பேசிக் கொண்டே இருந்தவர்கள் நேரத்தை கவனிக்க மறக்க, பூமியின் ‘அலாரம்’ அடிக்க ஆரம்பிக்க, அப்போது தான் மணியை பார்த்தவள், “ஹே ஸ்கை ஹை இவ்ளோ நேரமாகிடுச்சு… எனக்கு பசிக்குது…” என்றாள்.

அவனோ சிரித்துக் கொண்டே, “என்ன நடந்தாலும் சாப்பாடு விஷயத்துல கரெக்ட்டா இரு…” என்று கூற, “இப்போ ஏதாவது சொன்னீயா… பசி மயக்கத்துல காது அடச்சுகிச்சு..” என்று காதை நீவியபடியே பூமி கூறினாள்.

அவளின் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்று, சமைக்க ஆரம்பித்தான். ஆகாஷ், அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு, கேரட்டை கடித்துக்கொண்டே அவன் சமைப்பதை வேடிக்கை பார்த்தாள்.

“டெய்லி இப்படி வேடிக்க பாக்குறீயே… ஒரு நாளாவது ஹெல்ப் பண்றீயா…” என்று ஆகாஷ் கேட்க, பூமியோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, “நானே சமைக்குறேன்னு சொன்னா நீ தான் கேக்க மாட்டிங்குற… தள்ளு இன்னைக்கு நான் அந்த கொரியன் டிஷ் செய்யுறேன்…” என்று எழ, அவளை பிடித்து மீண்டும் அமரச் செய்தவன், “எல்லாம் உன் வாயால தான்…” என்று அவனையே திட்டிக் கொண்டான்.

அதில் பக்கென்று சிரித்தாள் பூமி. அப்போது தான் அவளின் நினைவு, சுந்தர் என்னும் அப்பாவி ஜீவனை நோக்கிச் செல்ல, “ஹே ஸ்கை ஹை, சுந்தர் எங்க..?” என்று கேட்டாள்.

“ஹப்பா இப்பவாவது கேக்கணும்னு தோணுச்சே… ஏதோ வேலையிருக்குன்னு அவன் அப்போவே கிளம்பிட்டான்…” என்றான் ஆகாஷ்.

“அந்த பக்கி என்கிட்ட சொல்லாமையே போயிட்டானா…” என்று பூமி கூற, “நீ ரூமுக்குள்ள போய் அழுதுட்டே இருந்தா, அவன் எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணுவான்…” என்று ஆகாஷ் அவளை வம்பிழுத்தான்.

அங்கிருந்த முருங்கைக்காயை கொண்டு அவனை அடித்தவள், “நான் ஒன்னும் அழுகல..” என்றாள் பூமி.

அவள் சுந்தரைப் பற்றி கேட்டவுடன், இருவருக்கும் சுந்தர் தங்களிடம் கூறியவை நினைவிற்கு வந்தது. இவ்வளவு நேரம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு, இப்போது பேச்சில் தயக்கம் ஏற்பட்டது. இருவருக்குமே மனதினில் மற்றவர்களின் மேல் ஒருவித அழகான உணர்வு தோன்றியிருந்தாலும் அதை வெளிப்படுத்த இருவருமே தயங்கினர்.

இவ்வளவு நேரம் அவன் முன்னே காலையாட்டியபடி அமர்ந்திருந்தவளிற்கு இப்போது கூச்சம் ஏற்பட, “க்கும்… நான் என் பிரெண்ட்ஸ் கிட்ட பேசப் போறேன்…” என்று கூறிவிட்டு அவளின் அறைக்கு ஓடிவிட்டாள்.

அவளின் செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷிற்கு, சுந்தர் அவளிடமும் பேசியிருக்கிறான் என்று புரிந்தது. ஒரு சிரிப்புடனேயே அவள் செல்வதைக் கண்டவன், ‘உனக்கும் என்ன பிடிக்குமா, க்ளோபு…’ என்று மிக மெல்லியதாக அவன் மனதிற்குள் இருப்பவளிற்கு மட்டும் கேட்குமாறு வினவினான்.

அறைக்குள் சென்ற பூமியும், ‘ஓய் ஸ்கை ஹை… சின்ன வயசுல இருந்தே உனக்கு என்ன பிடிக்குமா… உனக்கு என்மேல அவ்ளோ பொசஸிவ்னெஸா…‘ என்று சிரிப்பினுடனே யோசித்தவளிற்கு, சிறுவயது நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்கிரமித்தன.

ஆகாஷ் அவளை ‘பூமிமா’ என்று கொஞ்சுவதும், அவள் அவனை ‘அச்சுமா’ என்று பதிலுக்கு கொஞ்சுவதும் நினைவிற்கு வந்து அவளின் இதழ்களை விரியச் செய்தது.

“அச்சுமா…” என்று முணுமுணுத்தவளிற்கு, இப்போது அவனை அப்படி அழைத்தால் அவனின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் தோன்றியது.

உடனே வெளியே வந்தவள், அவன் இன்னும் சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஒருமுறை இங்கிருந்தே அழைத்துப் பார்க்கலாம் என்று ‘அச்சுமா’ என்று வாயசைப்பதற்கும், அவன் திரும்புவதற்கும் சரியாக இருந்தது.

ஆகாஷ் அங்கிருந்தே ‘என்னவென்று’ கேட்க, பூமியோ திருட்டு முழி முழித்து ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்து அறைக்குள் வந்து விட்டாள்.

“இப்போ எதுக்கு திருட்டு முழி முழிச்சா…” என்று யோசித்துக் கொண்டே சமையலைத் தொடர்ந்தான் ஆகாஷ்.

“டேய் கருவாயா… உனக்கு ஷாக் குடுக்கலாம்னு வந்தா, எனக்கே ஷாக் குடுக்குறீயா…” என்று அவனை செல்லமாக கொஞ்சிக் கொண்டாள் அவனின் க்ளோபு…

இரவு சாப்பிடும் போதும் அமைதியாகவே உண்டனர் இருவரும். ஒருவரையொருவர் பார்க்காத நேரத்தில் பார்த்துக் கொள்வதும், ரகசியமாக சிரித்துக் கொள்வதும் என்று அத்தருணத்தை அழகாக அனுபவித்தனர் இருவரும்.

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் அடுத்து வந்த வாரத்திலும் தொடர்ந்தது. மற்ற நேரங்களில் சாதாரணமாக பேசிக் கொண்டாலும், அவர்களின் பார்வையில் மாற்றம் வந்திருந்தது. அதை இருவருமே உணர்ந்து தான் இருந்தனர். இருப்பினும் மற்றவர் முதலில் கூறட்டும் என்று காத்திருந்தனர்.

இந்த ஒரு வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்… ஊரில் திருவிழா என்று இவர்களை அழைத்த பெற்றோரிடம் ஏதேதோ கூறி சமாளித்தனர். சுந்தர் ஒருவனை சமாளிக்கவே அவர்கள் பட்டபாடு அவர்களுக்குத் தானே தெரியும்…

பூமியின் அலுவலகத்தில்… இப்போது ஆகாஷ் பூமியின் தோழிகளிடம் நன்றாகவே (!!!) பேசினான். அவர்கள் ஆகாஷையும் பூமியையும் இணைத்து கலாய்க்கும் போதும் சிரிப்புடனே கடந்து செல்பவனைக் கண்ட ரூபாவிற்கு சந்தேகம் எழுந்தது. ‘இவங்க ரெண்டும் பேரும் லவ் பண்றாங்களோ… அந்த ஃபிராடு பூமி என்கிட்ட மறைச்சுட்டாளோ…’ என்று உள்ளுக்குள் பூமியை திட்டிக்கொண்டாள்.

ஆகாஷின் அலுவலகத்தில்… பூமி கோபத்தில் யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள். யாரையோ என்ன யாரையோ… ஆகாஷைத் தான் திட்டிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கு முன்பு… அவர்களின் அலுவலகத்தில் புதிதாக சிலர் வேலைக்கு வந்திருப்பகாகவும், அதிலும் பெண்கள் அழகாக இருப்பதாகவும் செவிவழி செய்தி அந்த அலுவலகம் முழுவதுமே பரவியிருந்தது. அசோக் கூட என்னவென்று விசாரிக்க சென்றான்… அவன் கவலை அவனிற்கு…

இந்த களேபரம் அடங்கிய நேரம், புதிதாக சேர்ந்தவர்களில் நால்வர் அவர்களின் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர் என்ற தகவல் வர அங்கிருந்த ஆண்கள் அனைவரும் உற்சாகமானார்கள். அந்த நால்வரும் இவர்களின் இடத்திற்கு வர, அங்கிருந்தவர்கள் அனைவரும் அவர்களிடம் சென்று பேசிக் கொண்டிருக்க, பூமியோ அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல் வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவளின் செயலிலேயே ஈர்க்கப்பட்டாள் அந்த நால்வரில் ஒருத்தி… முதலில் அவளின் பார்வையைக் கண்டுகொள்ளாமல் விட்ட பூமிக்கு, எங்கு போனாலும் தன்னை துளைத்த பார்வையால், எரிச்சல் ஏற்பட்டது.

இடைவேளையில் பூமியே அப்பெண்ணை தனியே அழைத்தாள்.

“உன் பேரு என்ன…?”

“சுஷ்மிதா…” என்றாள் மென்குரலில்.

“வந்ததுலயிருந்து பாக்குறேன், நீ என்னையே பார்த்துட்டு இருக்க…” என்றாள் பூமி சற்று காட்டமாகவே.

முதலில் அப்பெண் அதிர்ந்தாலும், சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “ஐ திங்க் ஐ’ம் இன் லவ் வித் யூ…” என்று கூறிவிட்டாள்.

‘டேய் கருவாயா, உனக்கு அவ்ளோ டிமாண்ட்டா… இத்தன ப்ரொபோசல்ஸ் வருது… அதுவும் ‘அந்த’ மாதிரி ப்ரொபோசல்ஸ் வேற…’ என்று எண்ணியவாறே தன் முன் நின்றிருந்தவளைக் கண்டாள். வெட்கப் படுவதற்கான பெருமுயற்சியில் அப்பெண் இறங்கியிருக்க, ‘இதையெல்லாம் பார்க்கணும்னு என் தலைல எழுதியிருக்கு…’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் பூமி. தன் கைப்பொருளை அவள் பிடுங்கிக் கொள்வது போல் கடுகடுவென இருந்தாள்.

அவளிடம் என்ன சொல்லலாம் என்று யோசித்தவள், சட்டென்று, “நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்…”என்று கூறி வெளியே சென்று விட்டாள்.

அவளின் கூற்றில் அப்பெண் எவ்வளவு அதிர்ந்தாலோ, அதே அளவிற்கு பூமியின் மனச்சாட்சியும் அதிர்ந்து, ‘அடிப்பாவி… என்ன பண்ணி வச்சுருக்க..’ என்று கேட்க, பூமியோ, ‘இப்படி சொன்னா தான் பின்னாடி அந்த கருவாயன் இங்க வந்து வேலை செய்யுறப்போ, ஜொள்ளு விடாம இருப்பா…” என்று அசால்ட்டாக மனதினுள் கூறிக் கொண்டவள் வேலையைத் தொடர்ந்தாள்.

பூமி அப்பெண்ணிடம் தனியாக பேசியதையும், அதற்கு பின் அப்பெண் பேயறைந்தது போல் இருந்ததையும் கண்ட அசோக் பூமியிடம், “ஹே பூமி, சுஷ்மி கிட்ட என்ன பேசுன… அவ முகமே வாடிபோயிருக்கு…” என்று கேட்டான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவளை, அசோக்கின் கேள்வி மேலும் கோபமடையச் செய்ய, “ஹான்… அவ உன்ன லவ் பண்றாலாம்… அத உன்கிட்ட சொல்ல சொன்னா…” என்றதும் அவன் முகம் பிரகாசமடைய, “ஆனா நான் தான், நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டன்னு சொல்லிட்டேன்…” என்று அவனின் தலையில் இடியை இறக்கினாள்.

“அவன் இருக்க வரைக்கும் தான் எனக்கு லவ் செட்டாகாதுன்னு நெனச்சேன்… ஆனா இவ என்ன வாழ்க்கை முழுசும் பிரம்மச்சாரியா இருக்க விட்டுடுவா போலயே…” என்று புலம்பினான், அசோக்.

இவர்களை சேர்க்க வந்த க்யூபிடோ, “இதுங்க ஒருத்தருகொருத்தர் லவ் சொல்லி ரொமான்ஸ் பண்ணுங்கன்னு பார்த்தா, மத்தவங்கள நெருங்க விடாம பண்றதுக்கே நேரம் சரியா இருக்கு இதுங்களுக்கு… ஸ்ஸ்ஸ் இவங்க எப்போ லவ்வ சொல்லி, ரொமான்ஸ் பண்ணி, நான் எப்போ அடுத்த ஜோடிக்கு அம்பு விடுறதோ… கடவுளே அடுத்த அசைன்மெண்ட்டாவது ஈசியா குடுங்க…” என்று புலம்பியது.

அடுத்த ஜோடிக்கு அம்பு விடும் வாய்ப்பு க்யூபிடிற்கு கிட்டுமா, இல்லை இவர்களின் பின்னே இன்னும் அலைய நேரிடுமா…


தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇

 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 நேத்து எபி போடாததுக்கு மன்னிச்சு...🙏🙏🙏 இதோ அடுத்த எபி... படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😍😍😍

25291
அத்தியாயம் 14

இரு நாட்களாகவே ஆகாஷின் முகம் யோசனையில் சுருங்கியிருக்க, பூமி எவ்வளவோ கேட்டும், “ஒன்றுமில்லை…” என்று கூறிவிட்டான். அன்று காலையிலும் பூமி எழுவதற்கு முன்பே, அவனிற்கு வேலை இருப்பதாக பூமிக்கு அலைபேசியில் செய்தி அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டான்.

அதைக் கண்ட பூமிக்கு தான் மனம் ஒருநிலையில் இல்லை. ‘என்னாச்சு இந்த அஷுக்கு… இவனும் டென்ஷனாகி, நம்மளையும் டென்ஷன் ஆக்குவான் பக்கி…’ என்று திட்டினாலும், மனதின் ஓரத்தில் இருந்த பயம் அவளின் நிதானத்தை சோதித்துக் கொண்டு தான் இருந்தது.

அலைபேசியில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே அலுவலகத்திற்கு கிளம்பினாள். அசோக் அவளை அழைத்துச் செல்லும்போது, அவனிடமும் ஆகாஷைப் பற்றி வினவ, அவனோ, “தெரியலையே பூமி… என்கிட்ட அவன் எதுவும் சொல்லலையே…” என்று கூற, அவளின் பயம் அதிகரித்தது.

அலுவலகத்திலும் பூமியின் நேரம் யோசனையிலேயே கழிய, அவளின் சிந்தனையை கலைப்பது போல் அவளின் அலைபேசி ஒலித்தது. அதில் ரூபாவின் பெயரைக் கண்டதும், பரபரப்பாக அதை உயிர்ப்பித்து, “அஷுக்கு என்னாச்சு…?” என்று வினவினாள்.

“அது வந்து… அண்ணா… வந்து…” என்று ரூபா தயங்க, “என்னாச்சுன்னு ஒழுங்கா சொல்லித்தொல டி…” என்று கத்தினாள் பூமி.

ரூபாவும் பூமியின் பொறுமையை மேலும் சோதிக்காமல் நடந்ததை கூறத் துவங்கினாள்.

“நம்ம சினேகாக்கு இன்னும் வாரத்துல கல்யாணம் டி… அதுக்காக அவ இன்னிக்கு ஊருக்கு போக வேண்டியதா இருந்துச்சு… போன வாரத்துலயிருந்தே அவ ஒரு மாதிரி இருந்தா… அவகிட்ட கேட்டா, சரியா தூங்கலன்னு ஏதோ சொல்லி சமாளிச்சா… நாங்களும் கல்யாண டென்ஷன்ல அப்படி இருக்கான்னு விட்டுட்டோம்… ஆனா இன்னிக்கு காலைல ஒரு அஞ்சு மணிக்கு, ரிஷா எனக்கு கால் பண்ணி, ‘சினேகா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா…’ன்னு சொன்னா.. எனக்கு பயங்கர ஷாக் டி… எங்க அம்மாவ எப்படியோ சமாளிச்சு, அவங்க வீட்டுக்கு போற வழில தான் அவங்க அண்ணாக்கு கால் பண்ணிடுவாங்களோன்னு தோணுச்சு… ஆனா நான் அவங்களுக்கு திரும்ப கால் பண்றதுக்குள்ள, அவங்க அண்ணாக்கு கால் பண்ணி சொல்லிட்டாங்க டி… சாரி டி அண்ணாவ இந்த ப்ராப்ளம்குள்ள இழுத்து விட்டதுக்கு…” என்றாள் ரூபா.

பூமியோ, ஒரு நொடி தோழிக்காக கவலைப்பட்டாலும், அடுத்த நொடியே, ‘லூசு… இத என்கிட்ட சொல்றதுக்கு என்ன… நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல…’ என்று தன்னவனை மனதிற்குள் திட்டினாள்.

ரூபாவிடம், “இதுக்கு ஏன் டி சாரி சொல்ற… என்கிட்ட சொல்லிருந்தா நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல… சரி அத விடு சினேகா எப்படி இருக்கா இப்போ...?” என்று பூமி கேட்க, “அவ இப்போ இங்க இல்ல டி…” என்று ரூபா தயங்கியபடியே கூறினாள்.

“என்ன டி சொல்ற… அதுக்குள்ள ஊருக்கு போயிட்டாளா… அவளுக்கு அந்த கல்யாணத்துல இஷ்டமில்லன்னா எதுக்கு டி அனுப்புனீங்க… அதுவும் இந்த மாதிரி நேரத்துல…” என்று ரூபாவை பேச விடாமல் கேள்வி கேட்க, “ப்ச் என்ன பேச விடு பூமி…” என்றாள் ரூபா. பூமி அமைதியானதும் மீண்டும் கதை கூறத் துவங்கினாள் ரூபா.

“சினேகா கல்யாணம் பிடிக்கலன்னு மட்டும் சூசைட் பண்ண ட்ரை பண்ணல… அவளுக்கு வேற ஒருத்தன பிடிச்சதும், அவன் சொன்ன டைமுக்கு வராம போனதும் தான் காரணம்…” என்று ரூபா கூற, அதிர்ந்தாள் பூமி.

“ஹே ரூப்ஸ் என்ன டி சொல்ற… அவ லவ் பண்ணாளா.. அதுவும் நமக்கு தெரியாம… இத்தன வருஷம் பழகிருக்கோம், நம்மகிட்ட கூட சொல்லலையே டி…” என்று பூமி கவலையுடன் கூற, “ப்ச் விடு டி… அவள பத்தி தான் உனக்கு தெரியும்ல…” என்று ரூபா தான் பூமியை சமாதானப் படுத்தினாள்.

“ஆனா அவ லவ் பண்றது ரெண்டு நாளைக்கு முன்னாடியே அண்ணாக்கு தெரியும் டி…” என்று ரூபா அடுத்த அதிர்ச்சியை பூமிக்கு கொடுக்க, ‘ஓ அதான் அவன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருந்தானா…’ என்று நினைத்தவள், “எப்படி தெரியுமாம் உங்க அண்ணாக்கு…” என்றாள் சிறிது கோபத்துடன்.

அவளின் கோபத்தை உணர முடியாத நிலையில் இருந்த ரூபாவோ, “அவ ஆளோட பேசுறப்போ கேட்டுருப்பாங்க போல டி… அவகிட்ட விசாரிசப்போ, அவ ஊருலயே ஒரு பையன லவ் பண்ணதாகவும், அந்த பையன் இப்போ ஃபாரின்ல வேலை பாத்துட்டு இருக்குறதாகவும் சொன்னாளாம். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்து ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குறேன்னு சொன்னானாம்.. அந்த நம்பிக்கைல தான் இவ்ளோ நாள் அமைதியா இருந்தாளாம்… ஆனா ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த பையன் ஏதோ வேலை இருக்கு வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்னு சொல்லவும் இவளுக்கு பயமாகிடுச்சு… அப்போ பேசிட்டு இருக்கப்போ தான் அண்ணாவும் பாத்துருக்காங்க… அன்னிக்கே அண்ணா அவள வீட்டுல பேச சொன்னங்களாம்… அவங்க கூட அவளுக்காக பேசுறேன்னு சொன்னங்களாம்… ஆனா இவ தான் பயங்துட்டு நேர்ல போய் பேசிக்குறேன்னு சொல்லிட்டாளாம்… ஆனா இந்த லூசு எதையெதையோ நெனச்சு பயந்து, அவ ரூம்ல தூக்கு போட்டுக்க முயற்சி பண்ணிருக்கா… நல்ல வேள அங்குட்டு வந்த ரிஷா ஜன்னல் வழியா அவ பண்ற காரியத்தை பார்த்து கத்த, அவளும் ஸ்வேதாவும் எப்படியோ சினேகாவ காப்பாத்திருக்காங்க…” என்றாள்.

பூமிக்கு அதைக் கேட்டு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. இப்படி கோழையாக இருக்கும் தோழியை எண்ணிக் கவலை கொள்வதா, இல்லை அவளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் கௌரவம் கருதி திருமணம் செய்து வைக்க காத்திருக்கும் அவளின் பெற்றோரை எண்ணி நொந்து கொள்வதா என்று புரியாமல் பெருமூச்சு விட்டாள்.

அப்போது பூமியின் மனம் அவளின் தந்தையை எண்ணியது. திருமண விஷயம் தவிர, அவர் எப்போதும் அவளின் விருப்பத்திற்கு தடை விதித்ததில்லை. ஆகாஷிற்கு திருமணம் செய்து கொடுப்பது கூட, அவளே அறியாத மனதை அவர் அறிந்ததாலோ என்று யோசிக்கத் துவங்கினாள்.

ரூபா மேலும் தொடர்ந்தாள். “நானும் அண்ணாவும் அங்க போனதுக்கு அப்பறம் வேக வேகமா அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்… அண்ணா தான் ஏதோ சொல்லி அவளுக்கான ட்ரீட்மெண்ட் தொடங்க வச்சாங்க… உண்மைலேயே அண்ணா இல்லனா நாங்க எப்படி சமாளிச்சுருப்போம்னே தெரியாது…” என்று கூறவும் தன்னவனை நினைத்து பெருமை கொண்டாள் பெண்ணவள்.

“அவளுக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்க சமயத்துல, அவ மொபைலயிருந்து அவ லவருக்கு கால் பண்ணா, அவன் அவளுக்கு சர்ப்ரைஸ் தரணும்னு அவகிட்ட சொல்லாம இந்தியா வந்துட்டானாம்… உடனே அவன ஹாஸ்பிடல் வர சொல்லிட்டு வச்சுட்டாங்க அண்ணா…” என்று ரூபா கூறியதும், “நல்லா சர்ப்ரைஸ் குடுத்தான்… அப்பறம் என்னாச்சு..?” என்று கேட்டாள் பூமி.

“அப்பறம் என்ன அவன் வந்ததும் மேடம் டேம ஓபன் பண்ணிட்டாங்க… அவங்கள தனியா பேச விட்டுட்டு நாங்க வெளிய வந்துட்டோம்… அப்போ அவ மொபைலுக்கு அவங்க அப்பா கிட்டேயிருந்து கால் வந்துச்சு… அவரு ஆளுங்க அவள கூப்பிட வரதாகவும், அவங்க கூட அவள வர சொல்லியும் சொல்லிட்டு அந்த மனுஷன் வச்சதும் இவ மறுபடியும் அழுகைய அரம்பிச்சுட்டா… அண்ணா எவ்ளோவோ சொல்லி பாத்தாங்க, அவள அப்பா கிட்ட பேச சொல்லி… ஆனா அவ கேக்கவே இல்ல… இப்போவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னு பிடிவாதம் பிடிச்சா… வேற வழியில்லாம அண்ணாவும் அவ லவரோட பிரெண்டும் அவங்கள கூட்டிட்டு போனாங்க… அவங்க போன பத்து நிமிஷத்துலயே அவள தேடி அவங்க அப்பா ஆளுங்க இங்க வந்தாங்க… அண்ணா சொல்லிக் குடுத்த மாதிரியே, அவ அப்போவே ஊருக்கு கிளம்பிட்டான்னு சொன்னோம்… ஆனா அவங்க நம்பாம, ரெண்டு பேரு இங்கேயே எங்கள கண்காணிச்சுட்டு இருந்தாங்க… இப்போ அவங்களுக்கு ஏதோ கால் வந்துச்சு டி… கோபமா பேசிட்டே இங்கயிருந்து கிளம்பி போயிட்டாங்க… அவங்க இவ்ளோ நேரம் இங்கயே இருந்ததால, என்னால உனக்கும் கால் பண்ணி சொல்ல முடியல… அவங்கள பாத்தாலே ரவுடி மாதிரி தெரியது டி… எனக்கு என்னமோ பயமா இருக்கு பூமி…” என்று ரூபா கூறி முடித்ததும் பூமிக்கும் பயமாகத் தான் இருந்தது.

“நீ அஷுக்கு கால் பண்ணியா…” என்று பூமி கேட்க, “ரிங் போயிட்டே இருக்கு டி…” என்று பயத்துடன் ரூபா கூறினாள்.

“சரி நான் கால் பண்ணி பாக்குறேன்..” என்று ரூபாவின் அழைப்பைத் துண்டித்தாள்.

கைகள் நடுங்க ஆகாஷிற்கு அழைத்தாள் பூமி. நான்கு முறை அழைத்தும் அவன் எடுக்க வில்லை என்றதும் பூமியின் கண்கள் கலங்க, மூளை அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிடாமல் வேலை நிறுத்தம் செய்தது.

சட்டென்று அவளிற்கு சுந்தரின் நினைவு வந்தது. வேக வேகமாக சுந்தரின் எண்ணை அழுத்தியவள், அவனின் குரலிற்காக காத்திருந்தாள்.

சுந்தர் அழைப்பை ஏற்றதும், “ஹலோ சுந்தர்… எனக்கொரு உதவி செய்ய முடியுமா..?” என்றாள் பூமி.

அவனி(ளி)ன் குரலிலிருந்த பதட்டத்தை உணர்ந்த சுந்தர், “என்னாச்சு ஆகாஷ்… ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க…” என்றான் சுந்தர்.

பூமியும் விஷயத்தை சுருங்க சொல்லியவள், “ப்ளீஸ்… அவளுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ண முடியுமா…” என்றாள்.

“கூல் ப்ரோ… நான் இங்கே பக்கத்துல தான் இருக்கேன்… நான் இப்போவே அங்க போறேன்… அண்ட் என்னோட பிரெஸ் டீமையும் அங்க வரசொல்றேன்…. மேபி பிரெஸ் இருக்குறது தெரிஞ்சா, அவங்க அடிதடில ஈடுபட மாட்டாங்கன்னு நெனைக்குறேன்… நீ கவலைப்படாத… அங்க போயிட்டு சூழ்நிலை எப்படி இருக்குன்னு சொல்றேன்…” என்று பேசிவிட்டு வைத்ததும் தான் பூமிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

மீண்டும் ஒருமுறை ஆகாஷிற்கு அழைத்தாள், ‘ப்ளீஸ் அஷு பிக் தி கால்…’ என்று வேண்டிக்கொண்டே…

*****

இங்கு ஆகாஷோ பதட்டத்தின் உச்சத்தில் இருந்தான். ஏற்கனவே திருமணத்திற்கான ஆவணங்களை முறைப்படி பதிந்திருந்தாலும், இது பெரிய இடத்து பிரச்சனை என்று யூகித்த சார்பதிவாளர் அவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க தயங்கினார்.

ஆகாஷ் தான் அவரை பேசியே அதற்கு சம்மதிக்க வைத்திருந்தான். அதிலேயே அவன் சோர்ந்தும் போயிருந்தான். இடையிடையே அவனிற்கு நிறைய அழைப்புகள் வர, அவற்றை அவன் கண்டுகொள்ளவில்லை.

ஒரு வழியாக திருமணத்திற்கான வேலைகள் அங்கு ஆயத்தமாக, சற்று நிதானித்தான், ஆகாஷ். அப்போது அவனின் அலைபேசியைக் கண்டவன், பூமியின் எண்ணிலிருந்து நிறைய அழைப்புகள் வந்திருக்க, ‘ப்ச்… இவள வேற சமாளிக்கணுமே…’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் அவளிடமிருந்தே அழைப்பு வந்தது.

அவன் அழைப்பை ஏற்கவும், ‘அந்த ரவுடி கும்பல் வெளியில் நிற்கின்றனர்…’ என்ற தகவல் வருவதற்கும் சரியாக இருந்தது. அதை பூமியும் கேட்டிருந்தாள்.

“அஷு நீ உடனே கிளம்பி வா…” என்றாள் பூமி. அப்போது அவளிற்கு அவளின் ‘அஷு’வின் நலனே பெரிதாக தோன்றியது. அவனை உடனே காண வேண்டும் என்ற தவிப்பே, அவளை இப்படி பேசத் தூண்டியது.

“லூசா பூமி நீ… இங்க எவ்ளோ பிரச்சன நடந்துட்டு இருக்கு… இப்போ உடனே கிளம்பி வர சொல்லுற…” என்று தன் கடுப்பை அவள் மீது காட்டினான்.

அவனை எப்படியாவது அங்கிருந்து கிளப்ப வேண்டும் என்று எண்ணிய பூமி, “ப்ச்… இப்போ நீ இருக்குறது என் உடம்புல ஆகாஷ்… இதே நான் அங்க போயிருந்தா நீ என்ன சொல்லிருப்பன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு… அதே தான் உனக்கு இப்போ சொல்றேன்…” என்று ஏதேதோ கூறி அவனின் முடிவை மாற்ற முயற்சித்தாள்.

“பூமி என்ன டென்ஷன் பண்ணாத… உனக்கு உன் உடம்பு மேல தான கவலை… உன் உடம்புக்கு எதுவும் ஆகாது… சோ இப்போ தயவு செஞ்சு கால் கட் பண்ணு…” என்று கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டான்.

அவ்வார்த்தைகள் நேராக பெண்ணின் இதயத்தை சென்றடைந்து அவளை வதைத்தது. அவளின் மனமோ, ‘எவ்ளோ ஈஸியா என் உடம்பு மேல தான் அக்கறைன்னு சொல்ற… உன்மேல இருக்க அக்கறை உனக்கு புரியலையா அஷு… அன்னிக்கும் இப்படி தான் சொன்ன…’ என்று உள்ளுக்குள்ளே அழுதது. உடனே அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

பூமி அழைப்பைத் துண்டிக்கவும் தான், சற்று முன் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வர, ‘ஷிட்… என்ன பேசி வச்சுருக்க இடியட்… யாரு மேலயோ இருக்க கோபத்த அவகிட்ட காமிச்சுருக்க…’ என்று அவனையே திட்டிக் கொண்டவன், பூமிக்கு அழைத்தான். இது பூமியின் முறை போல… அவனின் அழைப்பை அவள் ஏற்கவில்லை.

அதே நேரம் சாட்சி கையெழுத்து போட ஆகாஷை அழைக்க, அவனும் சென்று விட்டான்.

அங்கு திருமணம் நடந்து முடியவும், சினிமாவில் வருவது போல் ரவுடிகள் நுழையவும் சரியாக இருந்தது. அதன் பின்னர் அங்கு வாக்குவாதம் நடக்க, பெண்ணின் தந்தையும் அங்கு வந்துவிட்டார். அவருக்கு முன் பத்திரிக்கையாளர்கள் அங்கு வந்துவிட மகளை எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பத்திரிக்கையாளர்கள் சினேகாவின் தந்தையிடம், “நீங்க உங்க பொண்ணோட காதலுக்கு ஒத்துக்காததால தான் அவங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டாங்களாமே… வேற ஜாதின்னு ஒத்துகலையா சார்… நீங்க உங்க பொண்ணோட காதலனைக் கொன்னுடுவேன்னு மிரட்டுனீங்களாமே…” என்று அவரவர் யூகங்களை வைத்து கேள்விகளால் அவரை துளைத்தெடுத்தனர்.

இதனால் தன் வியாபாரம் பாதிக்கப்படுமோ என்றெண்ணியவர், சிறந்த வியாபாரியாக அவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

பிரச்சனை ஓரளவிற்கு முடிந்தது போல் தெரிய, ஆகாஷ் சினேகாவிடம் சென்றான். அவளருகே இருந்த விவேக் (சினேகாவின் கணவன்), “ரொம்ப தேங்க்ஸ் மா பூமி.” என்றான்.

அவனைக் கண்ட ஆகாஷ், “இனிமே சூழ்நிலை புரிஞ்சுட்டு சர்ப்ரைஸ் பிளான் பண்ணுங்க…” என்று கூறினான். பின்பு சினேகாவிடம் திரும்பியவன், “இனிமேலாவது எதுனாலும் தைரியமா ஃபேஸ் பண்ண பாரு…” என்று கூறினான்.

பின் அவர்களிடம் விடைபெற்றவனை பிடித்துக் கொண்டான் சுந்தர். “ஹே பூமி… உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா… என்ன பண்ணபோறன்னு யாருக்கிட்டயும் சொல்லாம தான் செய்வியா…” என்று திட்ட, ஆகாஷோ மனதிற்குள், ‘அடுத்து இவனா…’ என்று சலித்துக் கொண்டான்.

“அங்க ஆகாஷ் உனக்காக எவ்ளோ டென்ஷனா இருக்கான் தெரியுமா…” என்று அவன் கூறியதும் பூமியின் நினைவு வந்தது. மேலும், ஆகாஷ் தனக்கு அழைத்து பேசியதை சுந்தர் கூற, பூமி தனக்காக இவ்வளவு செய்திருப்பதை எண்ணி அவளின் மேல் காதல் கூடியது. அவன் வார்த்தைகளால் அவளை வருத்தியதும் நினைவிற்கு வர, ‘இன்னிக்கு உனக்கு அடி கன்ஃபார்ம் ஆகாஷ்…’ என்று நினைத்தான்.

தான் கிளம்புவதாகக் கூறி சுந்தரைக் காண, “நீ போ… எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு… அத முடிச்சுட்டு வந்து உன்ன கவனிச்சுக்குறேன்.” என்று அவளை பத்திரமாக அனுப்பி வைத்தான்.

செல்லும் வழியில் மீண்டும் பூமியின் எண்ணிற்கு முயற்சி செய்ய, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவன் உடனே அசோக்கிற்கு அழைத்தான்.

“டேய் மச்சான் பூமி எங்க…?” என்று ஆகாஷ் அசோக்கிடம் கேட்க, “அவளுக்கு உடம்பு முடியலன்னு அப்போவே வீட்டுக்கு கிளம்பிட்டா டா… காலைலயிருந்தே அவ டல்லா தான் இருந்தா… ஏதாவது பிரச்சனையா டா…” என்றான் அசோக்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல மச்சான்… நான் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன்… நான் பாத்துக்குறேன்…” என்றான்.

*****

வீட்டிற்கு வந்த பூமிக்கு அவனின் வார்த்தைகளே மனதில் சுழன்று கொண்டிருந்தது. ‘அவன் எப்படி அப்படி சொல்லலாம்…’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் மனச்சாட்சியோ, ‘நியாயப்படி பார்த்தா நீ தான் பதறிருக்கணும்… பாதிக்கப்பட்டது உன் பிரெண்டு… அங்க உதவி பண்ணிட்டு இருக்கவனையும் கிளம்பி இங்க வர சொன்னா அவனுக்கு கோபம் வராதா… இப்போ நீ அங்க இருந்துருந்து ஆகாஷ் உன்ன வான்னு கூப்பிட்டா உனக்கும் கோபம் வரத்தான செய்யும்… அவனே டென்ஷன்ல இருக்கும்போது இவ வான்னு சொன்னதும் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடனுமாம்…’ என்று அவனிற்கு கொடி பிடித்தது.

‘ஹே நீ எனக்கு தான மனச்சாட்சி… அப்போ எனக்கு தான சப்போர்ட் பண்ணனும்… ஹும் என்ன தான் இருந்தாலும் அவன் எப்படி என்ன பாத்து அப்படி சொல்லலாம்…’ என்று மீண்டும் அதிலேயே வந்து நின்றாள்.

பூமிக்கு புரிந்து தான் இருந்தது. அவ்வார்த்தைகள் அவனின் பதட்டத்தின் வெளிப்பாடு என்று… இருந்தாலும் அவன் வந்து சமாதானப்படுத்தும் வரை இப்படி தான் இருப்பாள். அவனின் ஒரு ‘சாரி’ தான் அவள் கேட்க விரும்புவது… ஆகாஷ் அதை புரிந்து நடப்பானா…

தொடரும்...
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இதோ கதையின் இறுதி அத்தியாயம்...😊😊😊 இதுவரைக்கும் இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...😁😁😁

25308

அத்தியாயம் 15

பூமி இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அழைப்பு மணி ஒலிக்க, ஆகாஷ் தான் என்று அவளிற்கு தெரிந்தாலும், கதவைத் திறக்க அவசரம் காட்ட வில்லை. ’அவன்கிட்ட தான் ஒரு சாவி இருக்குல… அப்பறம் எதுக்கு பெல் அடிச்சுட்டு இருக்கான்…’ என்று மனதிற்குள் புலம்பியபடி கதவைத் திறக்கச் சென்றாள்.

அங்கு ஆகாஷோ பொறுமையற்று பலமுறை அழைப்பு மணியை அழுத்தியிருந்தான். சற்று முன் பூமியிருந்த அதே நிலையில் இப்போது அவனிருக்கிறான்.

மெல்ல கதவைத் திறந்த பூமி, அவனை ஏறிட்டும் பார்க்காமல், உள்ளே செல்ல, பின்னே வந்தவன், அவளின் கைகளைப் பற்றி நிறுத்தினான்.

“சாரி பூமி… நான் அப்படி பேசியிருக்க கூடாது… நான் டென்ஷன்ல…” என்று அவன் சொல்ல வருவதற்குள், “இப்போ எதுக்கு என்கிட்ட சாரி கேட்டுட்டு இருக்க… எனக்கு தான் உன்மேல அக்கறை இல்ல… அப்பறம் எதுக்கு இதெல்லாம்… ஹான் மறந்துட்டேன்… என் உடம்புக்கு ஒன்னும் ஆகலல…” என்று நக்கலாகவே கூறினாள்.

“ப்ச் என்ன பேச விடு பூமி மா…” என்றான் சோர்வாக.

“ஓ இப்போதான் நியாபகம் வந்ததா நான் பூமிமான்னு…” என்று அவனைப் பார்த்து கேட்க, “அப்போ உனக்கு மட்டும் நியாபகம் வந்துடுச்சோ…” என்றான் நமுட்டுச் சிரிப்புடன். அவளை இன்னும் கொஞ்ச நேரம் பேச வைத்தால் சமாதானப் படுத்திவிடலாம் என்று அவனிற்கு நன்கு தெரியும். அதற்காகவே பேச்சை திசை திருப்பினான் அந்த கள்ளன்.

“எனக்கு எப்போவோ நியாபகம் வந்துடுச்சு… இன்னிக்கு கால் பண்ணப்போ கூட எத்தன தடவ ‘அஷு’ன்னு கூப்பிட்டுருப்பேன்… அப்போலாம் கண்டுக்க கூட இல்ல…” என்றவாறே அவனின் பக்கம் வந்திருந்தாள்.

அவனும் அவளை சோஃபாவில் அவனருகே அமர வைத்தவன், “சாரி பூமிமா… இன்னிக்கு செம டென்ஷன்…” என்று நடந்தவைகளை அவளிடம் கூறினான்.

“… அப்போ தான் நீ கால் பண்ண…” என்று அவன் கூறிக்கொண்டே அவளின் எதிர்வினையை பார்க்க, அவளோ கதை கேட்கும் ஆவலில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.

‘அடிப்பாவி… நான் இங்க கஷ்டப்பட்டத சொல்லிட்டு இருக்கேன்… என்னமோ கதை கேக்குற மாதிரி உக்காந்திருக்கா…’ என்று எண்ணியவனை, ‘இப்போ ஏதாவது சொன்ன மறுபடியும் மலை ஏறிடுவா… அப்பறம் உனக்கு தான் கஷ்டம்…’ என்று அவனின் மனசாட்சி எச்சரிக்க, அவனும் அதை ஆமோதித்தவனாக தன் ‘கதை’யைத் தொடர்ந்தான்.

அவன் அனைத்தையும் கூறி முடித்து பூமியைப் பார்க்க, அவளோ கன்னத்தில் கைவைத்தவாறே கண்மூடியிருந்தாள்.

‘தூங்கிட்டாளோ…’ என்று அதிர்ந்தவன், அவள்முன் கையசைத்து “க்ளோபு…” என்று மெல்லிய குரலில் அழைக்க, “ம்ம்ம்… முழிச்சுட்டு தான் இருக்கேன்… என்ன உன் கதைய சொல்லி முடிச்சுட்டியா…” என்று கிண்டலாகக் கேட்க, அவள் இயல்பானதை உணர்ந்து, “என்ன கோபம் போயிடுச்சா…” என்று மெதுவாகக் கேட்டான்.

“அதெல்லாம் நீ வந்தவொடனே போயிடுச்சு… ச்சு இவ்ளோ நேரம் அது தெரியாம, என்ன சமாதானப் படுத்துறேன்னு கதை சொல்லிட்டு இருக்க… ச்சே அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சுச்சே.. இன்னும் இத சாக்கா வச்சு உன்கிட்ட நெறைய வேலை வாங்கலாம்னு நெனச்சேனே…” என்றவளின் குரல் வருத்தம் இருப்பது போல் ஒலித்தாலும், அவளின் கண்களோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

“அடிங்… என்ன காமெடி பீஸாக்கிருக்கியா…” என்று அவளை வழக்கம் போல் துரத்த, “இதுவே உனக்கு தெரியலைனா, என்ன வச்சு எப்படி குடும்பம் நடத்தப் போறீயோ…” என்று கூறிவிட்டு பின்பே சுதாரித்தவள் நாக்கை கடித்தாள்.

அவள் அசந்த நேரத்தில் அவளைப் பிடித்தவன், “எப்படி நடத்துறேன்னு டெமோ காமிக்கவா…” என்று கண்ணடித்துக் கூற, பூமி தான் அவனின் செய்கையில் தடுமாறிப் போனாள்.

அவன் அருகில் வர வர, பூமிக்கு வியர்த்தது. அதையெண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் ஆகாஷ். ‘என் க்ளோபுக்கு பேச்சு மட்டும் தான்…’ என்று செல்லமாகக் கொஞ்சிக் கொண்டான்.

அவனைத் தடுத்தவள், “நில்லு நில்லு நீ என்கிட்ட இன்னும் ப்ரொபோஸே பண்ணல…” என்று உதட்டை பிதுக்கி கூற, அதில் வாய்விட்டு சிரித்தவன், “எப்படி உன் ட்ரைனர் நீன்னு நெனச்சு என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணானே அப்படியா…” என்றான் ஆகாஷ்.

முதலில் அவனை முறைத்தவள், பின் அவனுடன் இணைந்து சிரிக்க ஆரம்பித்தாள். பின் ஏதோ நினைத்தவள், “நம்ம திரும்ப மாறினவொடனே, நீ ஆஃபிஸ் போகும்போது ‘டிப்டாப்’பாலாம் போகக் கூடாது. கலைஞ்ச தலைமுடி, அயன் பண்ணாத சட்டை – இப்படி தான் ஆஃபிஸ் போகணும்…” என்று அவனிடம் கூறியவள், ‘எல்லா பொண்ணுங்க பார்வையும் இவன தான் சுத்திட்டு இருக்கு…’ என்று முணுமுணுத்தாள்.

அவளின் முணுமுணுப்பையும் கேட்டவன், “என்ன க்ளோபு பொசசிவ்னெஸா…” என்று கண்ணடித்துக் கேட்க, “ம்ம்ம் சின்ன வயசுல இருந்தே உனக்கு என்மேல பொசசிவ்னெஸ் இருக்குறப்போ, எனக்கு இருந்தா என்ன தப்பு…” என்று பூமி புருவம் உயர்த்திக் கேட்டாள்.

அவளின் கூற்றில் அவனிற்கு லேசாக வெட்கம் வந்ததோ, அதை மறைக்கும் பொருட்டு, “சுந்தர் சொன்னானா...?” என்று வினவினான்.

அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள் அவனின் தோள் மீது சாய்ந்து, “அப்போவே உனக்கு என்ன அவ்ளோ பிடிக்குமா, அஷு” என்றாள் பூமி.

ஒரு பெருமூச்சுடன், “ஆமா பூமி மா… அப்பா இறந்ததுக்கு பின்னாடி, அம்மாவும் அப்பா நினைப்புல என்கிட்ட சரியா பேசல… அதனால நானும் யாருகிட்டயும் பேச மாட்டேன்… எல்லாரும் சோகமா இருக்க, நானும் எந்த விளையாட்டுத் தனமும் இல்லாம இருந்தேன்… அப்போ தான் நீ பொறந்த… உன்ன பாக்க வந்தப்போ நீ தூங்கிட்டு இருந்த… ஆனா நான் தொட்டதும் நீ கண்ண தொறந்து பார்த்து சிரிச்ச… ரொம்ப நாளுக்கு அப்பறம் நானும் அன்னிக்கு தான் சிரிச்சேன்… அப்போலயிருந்து எனக்கு ஏதாவது கோபம்னாலும் பிரச்சனைனாலும் உன்ன பாக்க தான் வருவேன்… வேற யாருக்கிட்டயும் இதுவரைக்கும் என் பிரச்சனைய ஷேர் பண்ணதே இல்ல… உன் சிரிப்ப பாத்தாலே எனக்கு கோபம் குறைஞ்சுடும்…” என்று அவன் கூறியதும், அன்றொரு நாள் ‘பிரச்சனைய ஷேர் பண்ண ஆளே இல்ல…’ என்று அவன் கூறியது நினைவிற்கு வந்தது.

‘இனிமேல் நான் இருப்பேன்…’ என்னும் விதமாக அவனின் கைகளை இறுக்கிக் கொண்டாள்.

“அப்போ தான் உன் பாட்டி…” என்று கூறும்போதே உடல் இறுக, அவனின் மேல் சாய்ந்திருந்தவளும் அதை உணர்ந்தாள். “விடு அஷு… அந்த கிழவி அப்படி தான் ஏதாவது உளறிட்டு இருக்கும்… அன்னிக்கே நீ சொல்லிருந்தா அத லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருப்பேன்… அத விட்டுட்டு நீ என்கிட்ட பேசாம இருந்துருக்க…” என்று அவனை தலை நிமிர்த்தி பார்த்தாள்.

அவளின் பேச்சில் இயல்பானவன், “உன் வாய் யாருக்கிட்ட இருந்து வந்துச்சுன்னு யோசிச்சுட்டே இருந்தேன்… இப்போ கன்ஃபார்ம் ஆகிடுச்சு…” என்றதும், “என்னையவே கிண்டல் பண்றீயா..” என்று அவனை அடித்தாள்,

“நானும் கல்யாணம் வேணாம்னு சொன்னது, எல்லாம் ரொம்ப சீக்கிரமா நடக்குற மாதிரி இருந்ததால தான்… இன்ஃபேக்ட் சுந்தர் கிட்ட கூட கல்யாணத்த நிறுத்த ஐடியா கேட்டேன்… அவன் ரீசன் கேட்டப்போ எத்தனையோ காரணங்கள் நான் சொன்னாலும், உன்ன பிடிக்கலன்னு மட்டும் நான் சொல்லவே இல்ல… தெரியுமா…” என்று அவள் கூறியதும், ஆகாஷ் சிரித்துக் கொண்டே, “எனக்கு தெரியும்…” என்றான்.

“அந்த எட்டப்பன் சுந்தர் தான சொன்னான்…” என்றாள். “ஆமா… அவன் சொல்லலைனா உனக்கும் என்மேல இருக்க விருப்பம் இன்னும் கொஞ்சம் லேட்டா தெரிஞ்சுருக்கும்… ஹ்ம்ம் நானும் ஏதோ சின்ன வயசுல நடந்தத சாக்கா வச்சுக்கிட்டு இன்னும் அவன்கிட்ட பேசாம இருந்துருப்பேன்…” என்றான்.

பின் சுந்தர் வந்தபோது நிகழ்ந்தவைகளை கூறி சிரித்துக் கொண்டிருந்தனர்.

“நாம எப்போ திரும்ப நம்ம உடம்புக்கு மாறுவோம்…” என்று பூமி கேட்கவும், “ஏன் பூமி மா உனக்கு ஏதாவது பிரச்சனையா… யாராவது தொல்லை பண்றாங்களா…” என்று உண்மையான அக்கறையுடன் வினவினான் ஆகாஷ்.

அவனின் அக்கறையை மனதிற்குள் ரசித்தவள், “இல்ல நீ ரொமான்ஸ் பண்ண பக்கத்துல வரப்போ என் முகத்தையே பார்த்து எனக்கு அந்த ஃபீல் வரலைனா என்ன பண்றது… அதுக்கு தான் கேட்டேன்…” என்று அவனைப் பார்த்து கண்ணடிக்க, அவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன், “ஃபீல் வரணும்னா முகத்த பாக்க வேணாம்…” என்று கூறியவனை தடுத்தவள், “நீ இன்னும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணல…” என்றாள்.

“போடி லூசு… ப்ரொபோஸ் பண்ணல… பொடலங்கா பண்ணலன்னு…” என்று கூறியவனைக் கண்டு மனதிற்குள் சிரித்தவள், “சூப்பர் அஷு… இப்போ தான் எனக்கு பசிக்குது நெனச்சேன்… உடனே சாப்பாட்ட பத்தி யோசிக்கிற… என்மேல உனக்கு எவ்ளோ லவ்… வா வா வா போய் சமைக்கலாம்…” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

“கடவுளே ரொமான்ஸ் பண்ண போனா சாப்பாட்ட பத்தி பேசுறாளே…” என்று முணுமுணுத்தான். இதை அவன் மட்டும் புலம்பவில்லை, அவர்களின் காதல் கைகூட அவர்களின் பின்னே அலைந்து கொண்டிருந்த க்யூபிடும் இதையே தான் நினைத்தது.

“அதெல்லாம் நமக்கு எதுக்கு… ரெண்டு பேருக்கும் அம்பு விட்டாச்சு… இனி அவங்க பாடு… நம்ம நெக்ஸ்ட் ஜோடிய பார்க்க போவோம்…” என்று அது சந்தோஷமாகக் கிளம்பியது.

*****

சாப்பிட்டு முடித்ததும் மறுபடியும் பேச ஆரம்பித்தனர். இம்முறை மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் பூமி.

“நான் ஆணாவும் நீ பொண்ணாவும் இருந்தா நல்லா இருக்கும்னு நம்ம அன்னிக்கு பேசுனோம்… மறுநாளே நாம மாறிட்டோம்… ஆனா இப்போதான் நமக்கு புரிஞ்சுடுச்சே, ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும், பிரச்சனைகள் ரெண்டு பேருக்குமே இருக்குன்னு… ஆனாலும் நம்ம ஏன் இன்னும் மாறல…” என்று பூமி கேட்டாள்.

“உனக்கு அந்த சாமியார் சொன்னது நியாபகம் இருக்கா பூமி… நமக்குள்ள தேட சொன்னாரு… அது நம்ம காதலன்னு தான் நான் நெனைக்கிறேன்…” என்றான் ஆகாஷ்.

“அப்படி பாத்தாலும் இப்போ நம்ம மாறிருக்கணும்ல…” என்று விடாமல் கேட்க, அவள் வாயை அடைத்தவன் (கையால் தான்) “உன் அளவுக்கு அந்த கடவுள் ஸ்பீட் இல்ல போல… கொஞ்சம் பொறுமையா இரு டி…” என்றான்.

பின் பேச்சு மீண்டும் ஆண்கள் பெண்களின் பிரச்சனைகளில் வந்து நின்றது.

“ஏன் அஷு… நம்ம இப்போ மாறுன மாதிரி ஒவ்வொருத்தரும் மாறுனா, மத்தவங்களோட பிரச்சனைகள ஈஸியா புரிஞ்சுக்குவாங்கள.. அப்போ நாட்டுல இத்தன டிவோர்ஸ் கேஸ் வராதுல…” என்றாள் பூமி.

“நீ சொல்றது சரி தான் பூமி. இன்னைக்கு நாட்டுல நடக்குற முக்காவாசி விவாகரத்துகள் கணவன் - மனைவியிடையே சரியான புரிதல் இல்லாத காரணத்துனால தான் நடக்குது… ஆனா இப்படி ஒவ்வொரு ஜோடியையும் மாத்திட்டு இருந்தா அந்த கடவுளே டையர்டாகிடுவாரு…” என்று ஆகாஷ் கூறினான்.

“அப்போ இதுக்கு என்ன தான் சொல்யூஷன்…” என்று பூமி வினவ, “சண்டை போடுறப்போ ஒரே நிமிஷம் நம்மள அவங்க இடத்துல வச்சு, அந்த சூழ்நிலைல நம்ம எப்படி ரியாக்ட் பண்ணிருப்போம்னு யோசிச்சாலே இங்க பாதி சண்டைகள் புஷ்வானம் ஆகிடும்…” என்றான் ஆகாஷ்.

“நீ சொல்றது கரெக்ட் தான் அஷு… ஆனா இதுலயும் எப்பவுமே பொண்ணுங்க தான் விட்டுக்குடுக்கணுமா…” என்று பூமி கேட்க, “சேச்சே அப்படி நான் சொல்லல பூமி, ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இப்படி யோசிச்சாலும் தேவையில்லாத வாக்குவாதங்கள தவிர்க்கலாம்னு தான் சொல்றேன்…” என்றான் ஆகாஷ்.

“சரி சரி அப்போ நம்ம வீட்டுல, நீயே இப்படியெல்லாம் யோசிச்சுக்கோ… அப்போ சண்டையே வராது” என்று அவள் கண்ணடிக்க, “கேடி டி நீ…” என்று அவள் கன்னத்தை கிள்ளினான்.

“நீ இத ஃபீல் பண்ணியான்னு எனக்கு தெரியல பூமிமா… நம்ம ரெண்டு பேரு உடல் மாறியிருந்தாலும், நம்ம கம்ஃபார்ட்டபில்லா தான் இருக்கோம். இதுவே வேற யாரு உடம்புக்குள்ள போயிருந்தா இதே அளவுக்கு அத ஈஸியா எடுத்துருப்போமான்னு தெரியல…” என்றான் அவளின் ‘அஷு’.

பூமியும் அவன் கூறியதை யோசித்துப் பார்த்தவள், “உண்மை தான் அஷு. என்ன தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருந்தாலும், நீ அன்னைக்கு குடிச்சுட்டு உளறினப்போ, உனக்காக ஃபீல் பண்ணேன். இன்ஃபாக்ட் எனக்கு குடிக்கிறவங்கள பார்த்தாலே பிடிக்காது. அவங்க பக்கத்துல கூட போக மாட்டேன். ஆனா, அன்னைக்கு எப்படி உன்கூட உட்கார்ந்து பேசுனேன்னு நானே நிறைய தடவ யோசிச்சுருக்கேன்… இப்போ தான் ஏன்னு புரியுது…” என்றாள்

ஆகாஷோ அவளின் அருகில் வந்து, “என்ன புரிஞ்சுது…?” என்று ‘ஹஸ்கி’ வாய்ஸில் கேட்க, அவனின் பார்வை மாற்றத்தைப் புரிந்து கொண்ட பேதையவளோ, “ஹ்ம்ம்… நம்ம மாறுற வரைக்கும் நோ ரொமான்ஸ்னு புரிஞ்சுது…” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

“போடி உருண்ட…” என்று அவனும் சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

இருவரும் நேரம் கழித்தே உறங்கியதால், அலாரம் அடிக்க கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தனர். இப்போதெல்லாம் ஆகாஷ் இருக்குமிடத்தில் பூமியும் இருப்பதால், காலையிலும் அவன் எழும்போதே எழுந்து அவனுடனே சமையலறையில் பேசிக் கொண்டிருப்பாள்.

எனவே இருவரும் ஒன்றாகவே எழுந்தனர். ஆனால் அவள் அவனறையிலும், அவன் அவளறையிலும்…

முதலில் கண்களை சுருக்கி பார்த்தவர்கள், ஏற்கனவே இருந்த அனுபவத்தால் கண்ணாடி முன்னாடி நின்றிருந்தனர். தலை முதல் கால் வரை பார்த்தவர்கள், தங்கள் உடம்பிற்கே மாறிய மகிழ்ச்சியுடன், இருவரும் ஒரே நேரத்தில் கதவைத் திறந்து வெளியே வந்தனர்.

எதுவும் பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அந்த நிமிடமும் அப்படியே நீண்டது. மெல்ல ஆகாஷ் கைகளை விரித்து ‘வா’ என்று தலையசைக்க, அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டாள் அவனின் ‘பூமிமா’.

எவ்வளவு நேரம் இருவரும் அணைப்பிலிருந்தனர் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே கேட்ட சத்தத்தில் நிகழ்விற்கு வந்தனர்.

பூமிக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருக்க, அவனை விட்டு விலக எத்தனித்தாள். அவனோ அவளின் கைகளைப் பற்றி இழுத்து அவனருகே நிற்க வைத்தவன், குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்தி, தலையோடு தலை முட்டி, மூக்கோடு மூக்கை உரசி, “என்ன மேடம், இப்போ ரொமான்ஸ் ஆரம்பிக்கலாமா…” என்று கேட்டவுடன், வெட்கத்தில் இன்னும் சிவந்தவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

அதையே சம்மதமாக ஏற்றவன் அவள் இதழில் கவிபாட குனிய, அவனிற்கு அவளின் இதயதுடிப்பிற்கு பதில் அவள் வயிற்றின் சத்தம் தான் கேட்டது.

அதில் அவளும் கண்களைத் திறந்து அவனை பரிதாபமாகப் பார்க்க, அவனோ முடியைக் கோதி உணர்ச்சியைக் கட்டுப்படுத்தினான். “எல்லாம் சேர்ந்து எனக்கெதிரா சதி பண்ணது…” என்று புலம்பினான்.

பின் அவளைப் பார்க்க, அவளின் பாவனை அவனிற்கு சிரிப்பை வரவழைக்க, மெல்ல புன்னகைத்தவன், “என்ன பீஸு டி நீ…” என்றான்.

“ஹான் உன் பீஸு தான்… இப்போ வா எனக்கு பசிக்குது…” என்று அவனை கையோடு அழைத்துச் சென்றாள்.



தொடரும்...

உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 
Last edited:

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 ஒரு குட்டி எபிலாக்...😁😁😁 ஆகாஷ் மற்றும் பூமி இதுவரைக்கும் உங்களை ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருப்பாங்கன்னு நம்புறேன்...😊😊😊 இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...🙏🙏🙏 கதையைப் பற்றிய உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க...😍😍😍

25310

எபிலாக்

ஐந்து வருடங்களுக்கு பிறகு…

அதே சமையலறை… அதே ஆகாஷ்… அதே பூமி… பூமி எப்போதும் போல் மேடையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்க, ஆகாஷ் மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன அஷு… இன்னிக்கு இவ்ளோ லேட்டு…” என்று பூமி குற்றப்பத்திரிக்கை வாசிக்க, “ஹான் இன்னிக்கு கோட்டா நீ குடுக்கலல அதான்… இப்போ கூட ஒன்னுமில்ல… நீ உன் அஷுக்கு குடுப்பியாம்… அப்பறம் பாரு எவ்ளோ ஃபாஸ்ட்டா வேலை நடக்குதுன்னு…” என்றான் அவளைப் பார்த்து கண்ணடித்தவாறே…

“ஹுஹும்… நான் இங்கயிருந்து இறங்கனும்… அப்பறம் உன் பக்கத்துல வரணும்… அப்பறம் உன் ஹைட்டுக்கு எக்கணும்… ஹ்ம்ம்… இவ்ளோலாம் என்னால பண்ண முடியாது…” என்று உதட்டை சுழித்துக் கொண்டாள்.

“நீ எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற… மாமாவே பக்கத்துல வரேன்…” என்று அருகில் வந்தவனிற்கு வாகாக கன்னத்தை காட்டியவளிடம், “நீயா வந்தா தான் இங்க, நானா வந்தா இங்க…” என்று அவளின் இதழ்களை நோக்கி செல்ல, “ம்மா…ஆ… எனக்கு பசிக்குது…” என்றான் அவர்களின் செல்ல மகன் புவனேஷ்.

அதில் அவளிடமிருந்து விலகியவன், “பிள்ளைய கூட அவள மாதிரியே பெத்துருக்கா…” என்று முணுமுணுத்தான். அப்போது அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “நீ தான் ஃபாஸ்ட்டா குடுக்கணும்… அத விட்டுட்டு ஸ்லோ மோஷன்ல வந்தா…” என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். ஆகாஷோ கன்னத்தை தடவியபடி சிரித்தான்.

அவர்களின் மகனை பார்த்துக்கொள்ள வேண்டி, வேலையை விட்டிருந்தாள் பூமி. ஆகாஷ் அலுவலகம் கிளம்ப, அவனின் ஆசைகளில் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் பூமி. அவனிற்கு மதிய உணவை கட்டிக் கொடுத்து சிரிப்புடன் வழியனுப்ப, அவசர முத்தத்தை அவளிற்கு வழங்கியவன், பின் மகனையும் தூக்கிக் கொஞ்சினான்.

“அஷுப்பா… பூமிம்மா பேட் மா… நேத்து எனக்குன்னு நீங்க வாங்கிட்டு வந்த சாக்கிய அவங்களே சாப்பிட்டுட்டாங்க… புவிக்கு தரவே இல்ல…” என்று உதட்டை பிதுக்கினான்.

‘அச்சோ போட்டுக் கொடுத்துட்டானே… ஒரு சாக்லேட் சாப்பிட்டதுக்கு விசாரணை கமிஷன் வைக்குற அளவுக்கு ஏண்டா பாக்குறீங்க… இந்த சின்னது அப்படியே அவங்க சித்தப்பன் மாதிரி…” என்று அங்கில்லாத சுந்தரையும் சேர்த்து மனதிற்குள் அர்ச்சித்தாள்.

சுந்தர் தான் புவிக்கு விளையாட்டுத் தோழன். அவனிருந்தால் அவன் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பான். இப்போது சுந்தர் அவனின் காதல் மனைவியுடன் ஹனி-மூன் சென்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் பூமியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஈவ்னிங் வந்து அஷுப்பா கேக்குறேன்… ஓகே வா… எங்க இப்போ அஷுப்பாக்கு டாட்டா சொல்லுங்க…” என்று கொஞ்சிவிட்டு சென்றான்.

*****

மாலையில் புவியை கூட்டிக் கொண்டு பூங்காவிற்கு சென்றவர்கள், வரும் வழியில் அசோக்கின் வீட்டிற்கு சென்றனர்.

வீட்டின் கதவு திறந்து கிடக்க, உள்ளே தலைவியைப் பிரிந்த தலைவனாய், பசலை நோயில் வாடியவனாய், பிரசவத்திற்கு பிறந்த வீட்டிற்கு சென்ற மனைவியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தான்.

“சுமி மா… நான் வேணா நாளைக்கு ஊருக்கு வரவா…”

“அச்சோ மானத்த வாங்காதீங்க… நேத்து தான இங்கயிருந்து கிளம்புனீங்க… இனி அடுத்த வாரம் தான் வரணும்…” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அவனின் மனைவி சுஷ்மிதா.

ஆம் அவர்களின் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த அதே சுஷ்மிதா தான். பூமியின் உதவியுடன் (!!!) அவளிடம் காதலை சொல்லி, அவளையும் சொல்ல வைத்து, பெற்றோரின் சம்மதத்திற்காக இத்தனை வருடங்கள் காத்திருந்து அவளை கரம் பிடித்தும் விட்டான்.

அலைபேசியை அணைத்துவிட்டு திரும்பியவன் அங்கிருந்தவர்களைக் கண்டு, ‘ஆஹா… குடும்பமா வந்துருக்குதுங்களே… இன்னிக்கு எப்படி எப்படி ஓட்டப்போறாங்களோ…’ என்று எண்ணியபடி முழித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் ஓடி வந்து அசோக்கின் கால்களை கட்டிக்கொண்ட புவி, “ஷோக்கு மாமா தூக்கு…” என்று கூற, “என்ன ஷோக்கா கூப்பிடுறான் பாரு உன் பையன்… அப்படியே அவங்க அம்மா மாதிரி…” என்றான்.

பின் அவர்களை உபசரித்து பேசிக் கொண்டிருக்க, “என்ன அண்ணா… ஓவர் லவ்ஸ் போல…” என்றாள் பூமி.

‘எதுக்கோ பிளான் பண்றா போலயே… அலர்ட்டா இரு டா அசோக்கு…’ என்று தன்னைத் தானே கூறிக் கொண்டவன், பொதுவாக தலையாட்டினான்.

“ஆனா ஆஃபிஸ்ல என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு ஜாலியா சுத்திட்டு இருக்கீங்கன்னு தகவல் வந்துச்சே…” என்று பூமி சிரிப்புடன் கூற, “குதூகலமா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சிடாத மா…” என்று கையெடுத்துக் கும்பிட, அங்கு நடப்பது புரியவில்லை என்றாலும் அசோக்கைக் கண்ட புவி நகைக்க, மற்றவர்களும் அவனின் சிரிப்பில் இணைந்தனர்.

ஆகாஷ் – பூமி இருவருக்குள்ளும் சிறு சிறு சண்டைகள் வந்தாலும், அவை பிரச்சனையாகும் வரை வளரவிட்டதில்லை. அவர்கள் தான் ‘நீயாக நான், நானாக நீ’ என்று வாழ்ந்தவர்கள் ஆயிற்றே… இப்போது அன்பு மகனும் அவர்களின் கூட்டில் சேர ‘நாமாக நாம்’ என்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் இந்த வாழ்க்கை மேலும் சிறக்கும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்.

நன்றி!!!


உங்க கருத்துக்களை இங்க பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...👇👇👇
 
Status
Not open for further replies.
Top