ஏபி-13
அதிகாலை நாலு மணிக்கே மையூவுக்கு விழிப்பு தட்டி எழுந்துவிட. . அய்யயோ இவளோ நேரம் தூங்கி இருக்கேனா நேரம் ஆச்சே இன்னைக்கு ஆபீஸ் வேற போகணுமே இவங்க வேற எழுந்துட்டாங்களானே தெரியலையே அம்மா வேற நேத்தே சொன்னாங்க சீக்கிரம் எழுந்து கூடமாட வேளையே பார்க்கணும்னு என தனக்கு தானே பேசிக்கொண்டே அவசரமாக . எழுந்து மாற்று உடையே எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் குளித்து உடை மாற்றிவிட்டு தான் இருந்த அறையே விட்டு வந்து பார்த்தவள் கார்த்திக் இன்னும் எழாமல் உறங்கி கொண்டு இருப்பது தெரிந்தது.. ” ஹப்பாடா இன்னும் தூங்கிட்டு தான் இருக்காங்க என்று மையூ கீழே சென்றாள்
வீட்டின் அமைதியே பார்த்து இன்னும் யாரும் எழவில்லை தெரிந்தது ,எல்லாரும் வருவதுக்குள் வேலையே முடித்து விடலாம் என்று முதலிலஅவளுக்கு பிடித்த பூஜை அறைய நோக்கி நடந்தாள் அப்போதுதான் அங்கே வேலை பார்ப்பவர் உறங்கி கொண்டு இருந்தவர் . இவளை கண்டதும்.அவசரமாய் எழுந்து
” என்னம்மா ஏதும் வேணும்களா . “என கேட்க
” எனக்கும் ஒன்னும் வேணாம் . நீங்க பால் மட்டும் காய்ச்சி வையுங்க.. நான் பூஜை முடிச்சுட்டு வந்துறேன்.. என்று சொல்லிவிட்டு . பூஜை அறைக்கு சென்றவள்
அங்கே.. அறையே சுத்தம் செய்து.. விளக்கு ஏற்றி..வீடு முழுவதும் தூபம் போட்டுக்கொண்டே
வந்தாள் முருகன் துதி பாடிக்கொண்டே
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே. என பாட ஆரம்பிக்க..
_____________________
ரகு.. தூக்கத்தில் , என் பொண்டாட்டிக்கு வேற வேலை இல்லை.. சாமத்துல தான் தூபம் போட்டு விட்டு உசுர வாங்குவா..என திரும்பி படுக்க அப்போது தான் அவர் அருகில்.. ராஜி இருப்பது தெரிந்து.. இவ இங்க இருக்கா வெளியே யாரு சாம்பிராணி புகை போட்டுவிட்டது.. என ராஜியை எழுப்பி விட..,ராஜி எழுந்திரிம்மா
ஏங்க. கொஞ்சம் நேரம் சும்மா இருங்க நான் தூங்கணும்.. இப்போ எதுக்கு எழுப்புறிங்க என
அவர் திரும்பி படுத்து உறங்கி விட்டார்
அடியே.. எழுந்துரி ம்மா வெளியே என்ன சத்தம்.. நீ தான் டிவி போட்டுவிட்டு வந்தியா, தூபம் வேற போட்டு இருக்கு
அதை கேட்டு எது நானா ராஜியும் எழுந்து அமர.. அப்போது தான் அவருக்கு அந்த குரல் கேட்டது..
ஆமாங்க யாரா இருக்கும்..ஒரு வேலை நந்தினியா இருக்குமா..
ரகு தன் மனைவியே முறைத்து ” அவளா, நல்லா என் வாயில எதாவுது வந்துவிட போகுது ராஜி.. கௌசிக்கே அந்த கேட்ட பழக்கம் கிடையாது.. அவ பெத்த பொண்ணு.. நந்தினிக்கு இருக்குமா என்று சொல்லிவிட்டு வா முதல வெளியே போய் பார்க்கலாம் என இருவரும் வெளியே சென்று பார்க்க..
அங்கே வீடு முழுவதும்.. தூபம் போட்டு.. தீபாராதனை.. கட்டி பூஜையே முடித்துவிட்டு. மையூ வர சரியாக இருந்தது
மையூவை பார்த்து ராஜி என்னம்மா இந்த நேரத்துல..என கேட்க
அவரை பார்த்து அத்தை அது இன்னைக்கு வெள்ளிக்கிழமைல அதான்..
நல்ல பொண்ணும்மா நீ அதுக்குன்னு இவ்வளோ சீக்கிரமே. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமே, என மையூவை ஆராய்ந்த படி கேட்க
பரவாயில்லை அத்தை காபி சாப்பிடறீங்களா ,
அது எல்லாம் வேண்டாம் ம்மா., இன்னும் கொஞ்சம் நேரம் ஆகணும்
சாரி அத்தை உங்க தூக்கத்த கெடுத்துட்டேனா
அடடா என்னமா நீ அது எல்லாம் ஒன்னும் இல்லை.. கல்யாண வேலை அசதில தூங்கிட்டேன். இல்லைனா. இந்நேரம் வீட்டு வேலைல நேரம் சரியாய் போய் இருக்கும்.அவரும் அவளிடம் அன்பாய் வீட்டின் வழக்கத்தை சொல்லிக்கொண்டு இருந்தார்
சரிங்க அத்தை காலையில என்ன செய்யணும் சொல்லுங்க அத்தை அதையே செஞ்சுடுறேன் ,மையூ கேட்க அப்போதுதான் தான் கார்த்திக். மாயா மாயா என அழைத்த படி. கீழே இறங்கி
வந்தான்.
“அவன் குரல் கேட்டு. என்னங்க என்று அவன் முன்னாள் சென்று நிற்க.
” ஓ காட் நீ இங்க தான் இருக்கியா உன்னை மேல தேடிட்டு இருந்தேன் அதான்.
நான் அப்போவே கீழே வந்துட்டேன் , ஏதும் வேனுமாங்க அவள் கேட்க
எனக்கு ஒன்னும் வேண்டாம் நீ கிளம்பி ரெடியா இரு இன்னைக்கி நீ ஆபீஸ் போகணும் என சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்
ராஜி மருமகளை. கேள்வி உடன் பார்த்த படி நின்றார். ரகுவோ ராஜி பேசட்டும் என செய்தி தாள் உடன். அங்கே இருந்த சோபாவில் அமர்ந்துவிட
ராஜி என்னமா இது ஆபீஸ் அது என்னமோ சொல்லிட்டு போறானே, கார்த்திக் என்ன விசயம் கேட்க
மையூ மனதுக்குள் கடவுளே இப்பிடியா சொல்லிட்டு போவாங்க.. இப்போ அத்தைக்கு என்ன பதில் சொல்லுவேன். என அவள் திணற அப்போது பார்த்து நந்தினி. அங்கே வந்தாள்
அத்தை இப்போ எதுக்கு இந்த விசாரணை.. மையூ நேத்து என் கிட்ட சொன்னா நானும் சரி நீ எப்போவும் போல உன் வேளைக்கு போ சொல்லிட்டேன். கார்த்திக் அப்புறம் உங்க கிட்ட நானே பேசுறேன் சொன்னேன்.. அவ போகட்டும் அத்தை. அப்போ தானே அவ டிரீட்மெண்ட்க்கு உதவும் அந்த பணம். என நந்தினி அவள் போக்கில் பேச
ராஜிக்கோ . கோபம் தலைக்கு ஏறியது.. ” என்ன பொண்ணு இவ அப்பிடியே இவளை அறைஞ்சா தான் என்ன. என்று தோன்றியது.. இதுக்கு மேல் அவளை பேசவிட்டாள் சரி வராது என்று நிறுத்து நந்தினி போதும் நீ பேசினது ,முழுமையா கோபத்தை காட்ட முடியலைன்னு நாளும் சற்று கடுமையா தான் அவர் பேசினார் கல்யாணம் முடிஞ்ச மறுநாளே வீட்டு மருமக வேலைக்கு போறேன் சொன்னா. நம்மள பத்தி நாலு பேரு என்ன சொல்லுவாங்க அதுவும் இல்லாம மையூ வேலைக்கு தான் போகணும் என்ன அவசியம்.
நந்தினிக்கு .” ஆஹா. அத்தை இப்பிடி பேசுறது நமக்கு ஆபத்து ஆச்சே . என துணைக்கு வேதாச்சலத்தை தேட அவள் நினைத்தது போல் அவர் அங்கே வந்து சேர்ந்தார் ..
என்னம்மா என்ன பிரச்சனை காலங்காத்தால என கேட்க
இல்லை மாமா மையூ வேலைக்கு போகணுமா இதோ இவ என்னமோ பெரிய மனுசி மாதிரி. அவளுக்கு சரின்னு வேற சொல்லி இருக்கா அப்புறமா நம்மகிட்ட சொல்லணும் இருந்தாலாமா என்னனு நீங்க கேளுங்க..
ஹ்ம்ம் இது முன்னவே எனக்கு தெரியுமே ராஜி நீ எதுக்கு கோப படுற.. மருமக வேலைக்கு போகட்டும்.. என மருமகளை பார்வையில அடக்க. அவர் பேச்சுக்கு மரியாதையை கொடுத்து ராஜி அமைதி ஆகிவிட்டார்..
ராஜியின் முக மாறுதலை.. கவனித்த மையூ உண்மையிலே பயந்துவிட்டாள். மெல்ல ராஜி சென்று அவர் கையே பிடித்து அத்தை.. உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் போகல.. என அழுத்துவிடுவது போல் சொல்ல.
அதைக்கண்டு ராஜி.. ” ச்சு அது எல்லாம் ஒன்னும் இல்லை மையூ நீ போய் கிளம்பு சாப்பாடு.. எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரத்துல ரெடி ஆகிடும் என்று சொல்ல.
அப்போது தான் விஸ்மையாவுக்கு நிம்மதி ஆனது. அவரை பார்த்து தேங்க்ஸ் அத்தை.. என சொல்லிவிட்டு அவளோட அறைக்கு சென்று விட்டாள்
நந்தினி தான் வேதாச்சலம் இடம் சென்று.. என்ன தாத்தா அத்தை இவ்வளோ கோப படுறாங்க நான் இந்த வீட்டு பொண்ணு தானே என கண்ணீரை துடைத்த வராத படி.. கேட்க.
வேதாச்சலம் , ” நந்தினி. அது கோபம் இல்லை வருத்தம் பெரியவங்க இருக்கும் போது நீங்களா முடிவு பண்ணினா நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வரும் போது அது எவ்வளோ கஷ்டமா இருக்கும்னு யோசிக்கணும் நந்தினி, அதுக்கு தான் ராஜி பயப்படுறது
” இருந்தாலும் தாத்தா “
” போதும் நந்தினி. உனக்கு வெளியே போற இருக்குல்ல அத பாரு ராஜியை அத மறந்துட்டா. நீ ஏன் இந்த விசயத்தை பேசி இன்னும் பெருசா ஆக்குற ” என சற்று அவர் குரல் உயர்த்தி சொல்ல.
இனி பேசி ஒரு பயன் இல்லை என்று நந்தினி மனதுக்குள் ராஜியை திட்டியே படி சென்றாள்..
” அவள் சென்ற உடன் வேதாச்சலம் ராஜியை அழைக்க”
” சொல்லுங்க மாமா “
நீ இனி ஏதும் பேச வேண்டாமா .. எல்லாம் கார்த்திக் பார்த்துக்குவான்.. சரியா. ஒரு குழப்பமும் வேண்டாம் . என அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.
இங்க தனது ஜோகிங் முடித்து விட்டு அறைக்கு திரும்பியவன் அங்கே மையூ இன்னும் கிளம்பாமல்.. ஏதோ யோசித்த படி அமர்ந்து இருப்பதை பார்த்து
என்ன இவ இப்பிடி உட்காந்து இருக்கா ..அவள் அருகில் சென்று
” மையூ ” என அவன் அழைக்க.
அவள் இடம் இருந்து எந்த ஒரு பதில் இல்லாமல் போக .. மீண்டும் குரல் உயர்த்தி மையூ ..மையூ என்று அழைக்க.
அப்போது.. தான் மையூ , ” ஹான். ஏ, என்னங்க எப்போ வந்திங்க.. “
” நான் வரத்து இருக்கட்டும். என்ன ஆச்சு உனக்கு அப்பிடி என்ன யோசனை.. யாரு வரா -போறா கூட தெரியாத அளவுக்கு.. “
” இல்லங்க.. பெருசா ஒன்னும் இல்லை. நந்தினி இன்னைக்கு அத்தை கிட்ட பேசினது பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன் அவ்வளோ தான்.”
” ஓ. ” அதற்கு மேல் அவன் ஏதும் பேசவில்லை.
வேதாச்சலம் அவனுக்கு முன்பே நந்தினி பேசியது எல்லாம் சொல்லிவிட., அவன் நந்தினியை பற்றி மேலும் அவளின் செய்யலை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். இன்னும் சொல்ல போலாம் அவள் எந்த அளவிற்கு. தான் போவாள் தான் பார்ப்போமே என்று அவள் வழியில் சென்று அவளுக்கு சரியான புகட்டணும் என முடிவு செய்தான் அவன் இப்போ மாயாவும் இப்பிடி சொல்லவும்.. அவன் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமா தன இருந்தது.. இருந்தும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல். மையூவிடம் விடு மையூ எல்லாம் நான் பார்த்துகிறேன்.. இப்போ நீ கிளம்பு ஆபீஸ்க்கு, .
சரிங்க என்று அவள் கிளம்ப வர சென்று விட..
கார்த்திக் அங்கே இருந்த மற்றோரு அறைக்கு சென்று கிளம்பி வந்தான்.. போலாமா மையூ .
” போலாம்ங்க “
என இருவரும் கீழே வர அவர்கள் வருவதை பார்த்து ராஜி. மனதுக்குள் . இப்போ போல . எப்போவும் ரெண்டு பெரும் ஒண்ணா இறக்கணும் கடவுளே என வேண்டினார்.
ராஜி அருகில் வந்த கார்த்திக். ” அம்மா மையூ இன்னையில இருந்து ஆபீஸ் போறதா அதுவும் இல்லாம அவ படிச்சது ஏதும் வேஸ்ட் ஆகா வேண்டாமே. தான் நான் சரின்னு சொன்னேன். “அவன் தாய்க்கு விளக்கம் குடுக்க
“சரி கார்த்திக். ஆனா “
” ஒரு பயம் வேண்டாம் மா . நான் பார்த்துகிறேன். என்று அவன் சொல்லிவிட.. “
“பிறகு ராஜி மையூவிடம் ‘ இங்க பாரும்மா ஆபீஸ் போனதும். எப்போ எல்லாம் பிரீ டைம் கிடைக்குதோ போன் செய்து பேசணும்.. . சரியாய் என சின்ன குழந்தை சொல்வது சொல்ல. “
” அவளும் அவர் சொல்லுவார்த்துக்கு எல்லாம் சரி என்று தலை அசைத்துவைத்தால். “
” கார்த்திக்.. அவள் செய்கையே பார்த்து மனதுக்குள் சிரித்த படி அமர்ந்து இருந்தான் பிறகு.. வரையே திறந்து பேசினா. ராஜியிடம் யார் வாங்கி கட்டி கொள்வது. “
நேரம் ஆகி கொண்டு இருந்ததால். ” கார்த்திக் ,’ போதும் ம்மா மிச்சத்தை ஈவினிங் பேசிக்கோங்க நேரம் ஆச்சு , வா மாயா போகலாம். சொல்லி முடிக்கும் போதே
நந்தினி.. அங்கே வந்துவிட்டாள் ..’ கார்த்திக் மாயா ஆபீஸ்க்கு கிளம்பிட்டா போல . “
” அதுவரையில் தான் தாய் இடம் சிரித்த முகத்துடன் பேசி கொண்டு இருந்தவன்.. இவளை கண்டதும் ஒரு வித இறுக்கத்துடன்.. ” வெறுமென ” ஹ்ம்ம் ” என்று சொல்லிவிட்டு முன்னாள் சென்றுவிட..
இப்போது மாயாவுக்கு அவன் பின்னால் செல்வதா என்கிற குழப்பதுடன் இருந்தாள்
நந்தினி ராஜி இதற்கும் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்று அவசரமாக.. ‘ மையூ வா கிளம்பலாம்.. நேரம் ஆச்சுல்ல என்று வெளியே இருந்தே கத்தி அழைத்தான்
சரிங்க அத்தை அப்போ கிளம்புறேன் பை நந்து என இருவரிடமும் விடை பெற்று கிளம்ப போக
ஒரு நிமிஷம் மையூ , நானும் உன்கூட வரேன் என நந்தினியும் விஸ்மையவுடன் கிளம்பி சென்றாள்
இவ்வாறு கார்த்திக் -விஸ்மையா செல்லும் இடம் எல்லாம் நந்தினியும் செல்ல
ராஜி தான் ரகுவிடம் புழம்பி தள்ளிவிட்டார்..” என்னங்க இது ஊர்ல இல்லாத நியாயமா இருக்கு “
” இப்போ என்ன ஆச்சு ராஜி.. எதுக்கு இவ்வளோ கோபப்படுற ”
” ஆமாங்க நான் கோப போடுறது மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுது.. ஆனா இங்க நடக்குறது. ஏதும் உங்களுக்கு தெரியாதே.. “
” ஹே.. நான் என்னம்மா பண்ணினேன் சொன்ன தானே தெரியும் “
” இங்க பாருங்க. முதல உங்க தங்கிச்சி குடும்பத்தை அவங்க வீட்டுக்கு அனுப்பிவிடுங்க.. “
” என்ன ராஜி இது நீ இப்பிடி எல்லாம், பேசுவியா “ரகுவிற்கு அவ்வளோ ஆச்சரியம்
“ஏன் நான் என்ன ஊமையா.. , இவ்வளோ நாள் இப்பிடி பேசிருக்கேனா இல்ல இப்பிடி பேசி இருக்கேனா கேட்குறேன் இங்க என் புள்ளையோட வாழ்க்கையே.. போயிடும் போல இருக்குங்க .புள்ளையும் -மருமகளும் எங்க போனாலும் கூடவே போறா.. அவ… இப்பிடியே கார்த்திக் இருக்க தான் அவனுக்கு கல்யாணம் செய்து வச்சோமா நாம.. “
” ஹ்ம்ம் பிரச்சனை பெருசா தான் இருக்கு போல.. என ரகு யோசித்தவர்.. , சரி ராஜி இத பத்தி நான் அப்பா கிட்ட பேசுறேன்.. “என அப்போதைக்கு மனைவியே சமாதானம் செய்யே
” அது எல்லாம் தெரியாது நீங்க என்ன பண்ணுவீங்களோ பேசுவீங்களோ கௌசி நந்தினி அவங்க வீட்டுக்கு நாளைக்கே போய் ஆகணும் சொல்லிட்டேன்.. என்று முடிவாக சொல்லிவிட.. “
” ரகு.., சரி ராஜி நான் பேசுறேன் நீ இமோஷனல் ஆகிட்டு உடம்ப கெடுத்துக்காத.. “
” அரை மனதோடு.. வேறு வழி இல்லாமல்.. உறங்க சென்றார்.
” இரவு வெகு நேரம் கழித்து.. மையூ அறைக்குள் வர.. கார்த்திக்.. இன்னும் தனது லப்டோபைல் ஏதோ வேலை பார்த்து கொண்டு இருந்தான் “
அதை பார்த்து ., ”ஏங்க இன்னும் நீங்க தூங்கலையா. “
இனி தான் ம்மா கொஞ்சம் வேலை இருக்கு , நீ டப்ளேட்ஸ் எல்லாம் போட்டாச்சா.. “
” ஹ்ம் போட்டாச்சுங்க.. “
இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல்.. அவள் . தலை குனிந்த .. படி அமர்ந்து இருக்க.
கார்த்திக் தான் பேச ஆரம்பித்தான்.. , ‘ அப்புறம் வேலை எல்லாம் எப்பிடி போகுது..”
” நல்லா போகுது. , எல்லாரும் நல்ல பழகுறாங்க.. என பேச ஆரம்பித்தவர்கள்.. ” பிடித்தது பிடிக்காதது.. என அவர்களை பற்றி பேச , இப்பிடியே என்ன பேசினோம் , எதற்காக பேசினோம் தெரியாமல் இருவரும் நேரம் போனது தெரியாமல் பேசி கொண்டு இருந்தார்கள் [ இதை தான் ஸ்வீட் நத்திங் சொல்லுறவார்களோ ]
போதும் மையூ .. ரொம்ப நேரம் ஆச்சு தூங்கலாமா
.
” ஓகே குட் நைட் என சொல்லிவிட்டு அவள் அடுத்த ரூம்க்கு சென்று விட்டாள் ..
“
கார்த்திக் அவள் போன பின்பும் அப்பிடியே அமர்ந்து.. ” நந்தினியை பார்க்கறதுக்கு முன்னாடி உன்ன பார்த்து இருக்க கூடாதா மாயா., இப்போ விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் நான் தவிக்கிறது உனக்கு புரியுதா. . என மௌனமாய்.. அவள் அறையே பார்த்து பேசி கொண்டு இருந்தான்..
இவனது புழம்பலுக்கு வழி சொல்லுவது போல் ஏதும் நடந்துவிடாதா , ஹ்ம்ம் காலமும் கடவுளும் தான் சொல்ல வேண்டும்..
காற்று வீசும்.. ….