All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நறுமுகையின் "அனிச்சப்பூவே உதிராதே" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே... நான் இனி உங்கள் நறுமுகை... ரொம்ப நன்றி ஸ்ரீமா நான் கேட்டதும் திரி ஓபன் பண்ணி குடுத்துட்டீங்க... அதுவும் ஒரே நாளுக்குள்ளயே ...நான் இவ்வளவு சீக்கிரம் எதிர்பாக்கல.. ரொம்ப ரொம்ப நன்றி எனக்கு வாய்ப்பு குடுத்ததுக்கு கண்டிப்பா என்னால முடிச்ச அளவுக்கு என்னோட பெஸ்ட் குடுப்பேன்... பட் கொஞ்சம் பயமாகவும் இருக்கு இது வரைக்கும் நான் கவிதைகள், சிறுகதைன்னு கிறுக்கி இருக்கிறேன்.. முதல் தடவை ஒரு முழு தொடர்கதை எழுத விரும்புகிறேன் ... நிறை குறைகளை தயங்காமல் எடுத்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோன்... உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடும் ஆதரவோடும் ... என் முதல் கதையை ஆரம்பிக்க விரும்புகிறேன் தோழிகளே... 😊
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனிச்சப்பூவே உதிராதே... !

ஹீரோ பெயர் மனோகரப்பாண்டியன்.. முகம் பார்க்கும் கண்ணாடிப் போல இவன்.. அன்பைக் காட்டினால் அன்பால் கொல்லுவான்... இவனுக்கு எதிரியாய் இருபவனைக்கூட மன்னித்து விட்டுவிடுவான்.. துரோகியாய் இருபவனை வஞ்சம் வைத்து தீர்க்க இவனை போல யாராலும் முடியாது .. (ஆக மொத்தம் யாரா இருந்தாலும் கொல்லுவான் 😂)..

ஹீரோஹின் பெயர் மெல்லினா.. பெயரை போலவே மென்மையானவள்... அதிகம் வாய்திறந்து பேசாவிட்டாலும் தன் கண் பார்வையிலே கதை பேசும் காரிகை இவள்...இவளுக்கு கோபம் வந்தாள் மட்டும் கொற்றவை ஆகிவிடுவாள்...

அனிச்சப்பூவே உதிராதே... !
டீஸர் -1

சியாமளா.. சியாமளா..என்று இருமுறை தண்ணீர் தெளித்தும் எழாமல் இருந்ததால் ... மெல்லி நீ போய் கார் எடுடியம்மா ... உடனே போகலாம் ஹாஸ்பிடல்க்கு...

அவர் வந்தவுடன் தான் ஒரு தெளிவு வந்தது மெல்லினாவுக்கு... உடனே கார் எடுத்து வாசலில் இவள் நிற்கவும்... அபிராமி மாமியும் சரியாக சியாமளாவை காரில் உட்காரவைத்து தானும் உட்கார்ந்தார்... கார் அவர்கள் ஏறியதும் சீறி பாய்ந்தது மெல்லினாவின் கைகளில்....

ஹாஸ்பிடலில்... டாக்டர் அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு... என்ன ஆச்சு டாக்டர்... என்றாள் வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டு ... பக்கத்து வீட்டு மாமி அவள் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்தார் ஆறுதலாக...
பயப்பட ஒன்னும் இல்லை இப்போதைக்கு... பட் பிபி அதிகமாகி மயக்கம் வந்திருக்கு... குறைக்க டேப்லெட் குடுத்து இருக்கேன்.. ஆனா இன்னொரு முறை இது மாதிரி ஆகாம பாத்துக்கோங்க.. பிபி அதிகம் ஆகி ரத்தக்குழாய் வெடிக்க வாய்ப்பிருக்கு.. அப்பறம் எங்களால காப்பாத்த முடியாது... பிபி கண்ட்ரோல்ல வச்சிக்க டேப்லெட் தரேன் ஒழுங்கா டைம்க்கு குடுத்துடுங்க... அவங்கள ஓவரா ஸ்ட்ரெஸ் குடுக்காம பாத்துக்கோங்க.. மனசுக்கு பிடிச்ச விஷயம் செய்ய சொல்லுங்க... அவங்கள முடிச்சவரைக்கும் இயல்பா இருக்கவைங்க... என்று டாக்டர் கூறிவிட்டு சென்றுவிட்டார்...

மெல்லினாவுக்கு பயத்தில் வேர்த்துக்கொட்டி விட்டது... அம்மாவுக்கு அந்த நிலைமை வந்தால்.. அய்யோ.. நாம அனாதை ஆயிடுவோமே.. எனக்குனு அம்மா மட்டும் தானே இருகாங்க... இனிமேயாச்சும் அவங்களை சந்தோசமா வச்சுக்கணும்.. அவங்க விருப்பப்படி இருக்கட்டும்... என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்...

இரண்டு நாள் ஹாஸ்பிடல் வாசம் முடிந்து வீடு திரும்பிய பின்... ஹால் சோபாவில் சியாமளா டிவி பார்த்துக்கொண்டிருந்தார்...

அவருக்கும் தனக்கும் க்ரீன் டீ போட்டு எடுத்துக்கொண்டு அவருக்கு எதிரில் உட்கார்ந்தாள் மெல்லினா...

அம்மா... டீ எடுத்துக்கோங்க...

ம்ம்.. என்று டிவி பார்த்துக்கொண்டே டீ குடித்தார்...

அம்மா நீங்க ஆசைப்பட்ட மாதிரி... அந்த ஊருக்கு போங்க ... அவரை போய் பார்த்துட்டு வாங்க... என்று கவனமாக தன் பெயரைச் சேர்க்காமல் சொன்னாள்...
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனிச்சப்பூவே உதிராதே... !

டீஸர்.. 2

மெல்லினா கட்டுக்கடங்காத கோபத்துடன் தோட்டத்திற்கு சென்றாள்...

" விட்டு தள்ளு மெல்லி அவனெல்லாம் ஒரு ஆள்ளுன்னு... அவன் பேசியதை நினையாதே என்று மனதை அமைதிப்படுத்திக்கொண்டே அவளுக்கு பிடித்த ஜாதிமல்லி பந்தலை நோக்கி சென்றாள் ...

அங்கே இருந்த ஜாதிமல்லி கொடி கீழே விழுந்து மண்ணுக்கும் கல்லுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு அல்லாடியது...

அதை பார்த்ததும் அங்கே இருக்கும் தோட்டக்காரனை தேடினாள் .. அவன் இல்லாமல் போகவும்.. அவளே அந்த கொடியை எடுத்துவிட்டு.. பந்தலின் மேலே படர்ந்து விட முயற்சித்தாள்.. எட்டாமல் போனதால் அங்கே இருந்த சிறு மண் குவியல் நேற்று பெய்த மழையால் ஈரமாகி கல் போல் இருந்தது.. அதன் மேல் ஏறி கொடியை படர விட முயன்றாள்.. அவளுக்கு இப்போதும் எட்டாமல் போனதால் பாதங்களை தூக்கி நின்றாள்... சட்டென மண்குவியல் பாரம் தாங்காமல் சரியவும்.. சரியான பிடிப்பில்லாமல் அவளும் கூடவே சரிந்து மண்ணை நோக்கி சென்றாள்...விழுந்து விடத்தான் போகிறோம்.. என்று பயந்து கண்களை மூடிக்கொண்டிருக்கும் போதும்.. திடீரென ஒரு வலிமை பொருந்திய இரும்புக்கை அவளை தாங்கவும் அவள் உடல் மண்ணை நோக்கி செல்லாமல்.. அந்த காந்தம் கொண்ட இரும்பு கைகளை நோக்கி சென்று ஒட்டிக்கொண்டது...

தான் இன்னும் விழுந்து விடாமல் இருக்கிறோம் என்று உணர்வை கொண்டு வந்தது மெல்லினாவுக்கு இடையில் பதிந்திருந்த அந்த கைகளின் அழுத்தத்தால்...

யாரது என்று ஒரு நொடி திடுக்கிட்டாலும்... பின் சுதாரித்து அந்த இரும்பு கைகளை இடையிலிருந்து விடுவிக்க போராடிக்கொண்டே கோபமாக ஏறிட்டு அந்த கைகளின் சொந்தக்காரனை பார்த்தவளின் விழிகளிலிருந்தது என்ன??

ஆசையா? கோபமா? காதலா? அதிர்ச்சியா? இல்லை வேறு உணர்வா??

கண்டுப்பிடிங்க தோழிகளே.. 🤩🤩
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே... தாமதத்திற்கு மன்னிக்கவும்.... 3&4 யூடி சேர்த்து கொடுத்திருக்கேன்... நீங்க கேட்ட மாதிரி பெரிய யூடியாவும் கொடுத்திருக்கேன்... படிச்சிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...

என் நலத்தை பற்றி விசாரித்த எல்லா தோழிகளுக்கு...ரொம்ப நன்றி... இப்போ... கொஞ்சம் நன்றாக உள்ளேன்... நெக்ஸ்ட் ud எப்போ கொடுப்பேன்னு.. தெரியல... அதுக்கும் சேர்த்துதான் 2 ud கொடுத்திருக்கேன்... அட்ஜஸ்ட் கரோ... லவ் யூ செல்லம்ஸ்... 😍😍😘😘😘
 
Last edited:
Status
Not open for further replies.
Top