All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேவ் மித்ரனின் 'அன்பே... ஆராத்யா' - கதைத்திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Arun Gourav Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Friends, Dear Writers, Novelists, Poets, Readers and all..

I am going to write a story which I am presently conceiving titled Anbae.. Aaraadhya.. Which is going to be a romantic thriller story.. The key characters are gonna be Dev and Aaraadhya.. the plot revolves around Chennai and Australia.
with tons of love, suspense, poetic narrations and all, you will feel like being a part of the story.. I will try to write as interestingly as possible. As I am not a full time writer, It will take little time in between.. Keep encouraging me to write more for you. The story will be certainly in Thamizh.. My wishes to All.. Stay blessed.

with lots of love,
Dev Mithran
 
Last edited:

Arun Gourav Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பே.. ஆராத்யா..

அத்தியாயம் - 1


இதழ்கள் பிரிக்காமல் புன்னகைக்கும்
சாருஹாசினி வகை ஜாதிப்பூ அவள்.
சமயங்களில் முரடன்
இவன் முகம் இருக்குமானால்
அவள் பூ முகம் தாங்காது.

அவள் கண்களில் கண்ணீர் தங்காது.

ஆராத்யாவின் நினைவுகளோடு பிரிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தான் தேவ்.

தேவ் எழுதிய.. அவளின் நினைவுகளில் உருப்பெற்ற அக்கவிதை அவன் கைகளில் இருந்து அவிழ்ந்து கீழே விழுகிறது

நறுமுகையே
நாணம் கொண்டு நீ சிரிக்கையில் உதிர்ந்திடும்
வெட்கப்பூக்களை
உலராமல் சேமித்து வை

ஊன் உறக்கம் தொலைத்து
உன் நினைவுகளை மட்டும் உண்டு வாழும்
உன்னவன் உயிர் காக்கும்
அருமருந்து அவை..


எழுதிய கவிதை வரிகளின் வார்த்தைகளை
மீண்டும் கழன்று விழும் அவன் கண்ணீர்த்துளி
நனைக்கிறது.

காதலி ஆராத்யாவின் நினைவுகளில் மூழ்கிய நிலையில் தேவ் சாய்ந்து கிடக்க
ஒரு மெல்லிய குரல் தூரத்தில் அவனை அழைப்பது போல் கேட்கிறது, உறக்கம் கலைந்து மெல்ல கண் விழிக்கிறான் தேவ். எதிரில் அவன் வாழ்க்கை காதலி ஆரத்யாவாய் நிற்கிறது.

காண்பது நிஜமா இல்லை கனவா.
கண்கள் பனிக்க, விழிகள் உறைந்தவனாய் அவளைப் பார்த்து நின்றான்.

தூர தேசத்தில்.. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில்
நூறு மாடி கட்டிடத்தின் கடைசி மாடியில் ஆள் அரவமற்ற ஒரு பெரிய அறை அது.

அனாதையாய் இங்கிருக்கும் இவனை எப்படி இவள் கண்டு கொண்டாள். மகிழ்ச்சி ஒருபுறம், இது மிகவும் ஆபத்தான இடமாயிற்றே.. இங்கே என் ஆராத்யா.. அதுவும் தனியாய்.. நான் என்ன செய்வேன்.. தேவ் துடித்துப் போனான்.

தேவ்.... அன்பே இங்கே வா.. வென உரக்க அழைத்தாள்.. பாவம் ஆராத்யா.. அவன் அவளை நெருங்க முடியாதபடி இடையில் ஒரு நெடிய மதிலாய் கண்ணாடி சுவர்.

மெல்ல ஒரு பயங்கர வெள்ளை உருவம் கையில் துப்பாக்கியுடன் அவனை நெருங்குகிறது,
கதறுகிறாள்.. தேவ்.... அழுது வெடிக்கிறாள் ஆராத்யா..

ஆராத்யா நீ போய் விடு.. அலறுகிறான் தேவ்..

அந்த வெள்ளை உருவம் ஆங்கிலத்தில் ஆராத்யாவை பார்த்து கூறுகிறது.. ஓடி விடு இல்லையேல் நீயும் செத்து விடுவாய்..

முதல் குண்டு தேவ் இடது காலில் பாய்கிறது.

போய் விடு ஆராத்யா ப்ளீஸ் .. ஐ டெல் யூ.. ஜஸ்ட் மூவ் ஆன்.. ஐ லவ் யூ டா.. ப்ளீஸ்..

அவள் உடனடியாக ஒரு மதில் பின்னால் மறைந்து தன கைகளில் இருந்து செல்போனை எடுத்து டயல் செய்கிறாள்.

எதிர்முனையில் டேனியல். ஆராத்யாவுடன் தி சண்டே டைம்ஸ் ஆஸ்திரேலியப் பத்திரிகையில் பணிபுரியும் நண்பர்.

தேவ், பிபிசி-யின் ஆஸ்திரேலிய டிவிஷனில் பணிபுரியும் ஒரு உலகத்தரமான டாக்குமெண்டரி பில்ம் மேக்கர் , இந்தியாவில் பிரபலமான ஆனந்த் பட்வர்தனிடமும், அமெரிக்காவின் மைக்கேல் மூரிடமும் உதவியாளராகவும் சில வருட காலம் பணியாற்றியவன்.
சென்னை லயோலா கல்லூரியில் பி. ஏ ஆங்கில இலக்கியமும் முதுகலையில் மாஸ் கம்யூனிகேஷனும் படித்த அவனுக்கு உண்மையை உள்ளபடி சொல்வதை தொழிலாய் செய்வதில் பெரு விருப்பம்.
அதில் ஏற்பட்டது தான் இந்தக் குழப்பம்.

முரண் என்னவெனில் ஆராத்யாவை காதலிப்பதில் மட்டும் கம்பன் ஷெல்லி போல் கவிதையாய் உருகுவான். கவிதை போலொரு காதலி கிடைத்தால் மனம் உருக்கத்தானே செய்யும்..

ஆ.... தற்பொழுது குண்டடி பட்ட வேதனையில் துடிக்கிறான் தேவ் .. அழைக்கிறான் மீண்டும்.. மீண்டும்..
வலியைத் தாள இயலாமல் கதறி அவன் அழைக்க.... நூறு மாடி கட்டிடமே அதிர்ந்தது.... அன்பே...... ஆராத்யா...... ஆராத்யா...... என் அன்பே.....

தேவ் நெற்றிப்பொட்டில் வெள்ளையனின் துப்பாக்கி முனை இப்போது..
 
Last edited:

Arun Gourav Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவள்மேல் இதனால் இவன்
காதல் கொள்வானென்பதும்
சங்கல்பமாய் விழுந்த உயிர்மெய் விதையது
விருட்சமாய் உருமாறி வாழ்வின் எல்லைவரை
அவரைக் கொண்டு செல்லுமென்பதும்
காதல் வேள்வி முன்நின்று
மெய்தவமியற்றுபவரே அன்றி
மற்றோர் அறியார்.


ஆராத்யா அப்போது தான் மொபைலில் டேவிட் உடனான உரையாடலை பதற்றத்துடன் பேசி முடித்த நொடியில் சட்டென்று திரும்பினாள், கண்களில் அதிர்ச்சியான அந்தக் காட்சி.

வெள்ளையன் தேவ் நெற்றியில் சுடப் பார்க்கிறான்..

யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு வெள்ளையன் கவனம் சிதற.. இதயம் நொறுங்குண்டவளாய் தேவ்.. என ஓடி வருகிறாள் ஆராத்யா.
இப்போது துப்பாக்கியின் முனை இவள் நெஞ்சைக் குறி வைக்கிறது.

மயக்க நிலையில் இருந்து விடுபட்ட தேவ் மெல்ல கண்விழித்து இதைப் பார்க்கவும்.. ஆராத்யாவின் நண்பர் டேவிட் அங்கே ஓடி வரவும்.. வெள்ளையன் டப்.. டப் என ஆராத்யாவை குறிபார்த்து சுடும் வேளையில் கண்ணாடியைத்
துழைத்த குண்டு குறி தவறி டேவிட் ஆராத்யா
நடுவே பாய்கிறது.

மீண்டும் தேவ் நெற்றியில் துப்பாக்கி திரும்ப, தேவ் தட்டி விடவும் தலை தப்பிய அது அவன் வலது தோள்பட்டையில் இறங்கியது. ஐயோ அலறினான் தேவ்.
பின் வெள்ளையன் துப்பாக்கியை தன் மறு கையால் வேகமாகத் தட்டி விடுகிறான், வெகுண்ட வெள்ளையன் தேவ் நெற்றியில் ஒரு குத்து விடவே,

கண்கள் சிவக்கப் பார்க்கிறான் தேவ்..
விசையுறு பந்தினைப் போல்
மனம் விரும்பியபடி செல்லும்
உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்
இதைத் தருவதில்
உனக்கெதும் தடையுளதோ

முண்டாசுக் கவிஞனின் வரிகள் காதில் மந்திரமாய் ஒலிக்க..

மூச்சை இழுத்துப் பிடிக்கிறான், வெள்ளையன் வயிற்றில் ஒரே மிதி. உடைந்த கண்ணாடி சுக்கு நூறாய் தெறிக்க திமுதிமுவென வெள்ளையன் காற்றில் பறந்து போய் பொத்தென விழுகிறான். தொம்மென்றொரு ஓசை கேட்கிறது. ஓடி வந்த டேவிட் அவன் நெஞ்சில் திம்மென்று ஒரு குத்து விட்டு அவன் முகத்தை பதம் பார்க்கிறான்.

தேவ்.. என பதறியபடி அருகில் வந்த ஆராத்யா அவன் மூர்ச்சையடைவதைக் கண்டு டேவிட்.. இங்கே வாவென என அலறுகிறாள்.

உடனடியே ஓடி வந்து டேவிட் அவனைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு எதிரில் இருந்த லிஃப்டை நோக்கி ஓடுகிறான்..
இருவரும் ராயல் மெல்போர்ன் ஹாஸ்பிடலுக்கு அவனை அழைத்து செல்லவும்.. தன்
பத்திரிக்கைக்கான சிபாரிசின் பேரில் உடனடியாக அவனை அட்மிஷன் செய்து ஸ்ட்ரெச்சரில் ஐ சி யூவிற்கு கொண்டு செல்லவும் பதட்டத்துடன் அருகில் இருந்த சேரில் சாய்கிறாள் ஆராத்யா.

கண்களை மூடுகிறாள், ஐந்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இன்டெர்ன்ஷிப் ட்ரைனிங்கில் இருந்த போது ..

சாமியெர்ஸ் ரோடு, சென்னை, டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் முதன் முதலில் தன் காதல் தேவனைச் சந்தித்த நிகழ்வுகள்

"சார் இங்கே நாங்க இன்டெர்ன்ஷிப் வந்திருக்கோம், என் பேர் ஆராத்யா, இவ என் ஃபிரென்ட் நிர்மலா, உங்களுக்கு இங்க யாரைப் பார்க்கணும்னு சொல்லி கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா"

"நிச்சயமா.. ஸ்ட்ரெயிட்டா போய் நெஸ்ட் லெஃப்ட் போங்க.. அங்கே சீஃப் எடிட்டர் ரூம் இருக்கும்.. வெளியே பெர்மிஷன் கேட்டு, நீங்க உள்ளே போய் பார்க்கலாம்" தேவ் பதிலளித்தான் .

பை தி வே நீங்க ஜர்னலிஸ்ட்டா, ஆராத்யாவின் கேள்விக்கு சிரித்தபடி தேவ் கூறினான். இல்ல நானும் உங்கள மாதிரி தான் இன்டெர்ன்ஷிப் பண்ண வந்திருக்கேன்.
வாவ் லவ்லி சார்.. தேங்க் யூ வெரி மச், ஆராத்யா.

என்னங்க சார்ன்னு சொல்லீட்டிங்க, அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்ல.. என் பேரு தேவ், நீங்க தேவ் ன்னே கூப்பிடலாம்.
தேங்க் யூ தேவ்.. நைஸ் நேம், தேவ்.. நாம அப்புறம் மீட் பண்ணலாம் என்றாள் ஆராத்யா.

புன்னகைத்தபடி சொல்லி உள்ளே நகர்ந்தார்கள் ஆராத்யாவும், நிர்மலாவும்

"ஹேய்.. ஸ்மார்ட்டா இருக்கான்ல்ல, சூர்யா மாதிரி இருக்கான்" நிர்மலா

" ஏய் பேசமா வாடி, அதுக்குள்ள சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டா, என்றாள் சலித்தபடி.

"இல்லடி எனக்கு ஏற்கனவே ஒரு மாமா பையன் இருக்கான், அவனை சமாளிக்கவே சரியா இருக்கு, ஐ திங்க் உனக்கு செட் ஆவான்னு தோணுது, என்றாள் நிர்மலா கிண்டலாக

" இங்க பாரு, வந்த வேலைய விட்டுட்டு மறுபடியும் ஆரம்பிச்சுடாதே" சிரித்தபடி சொன்னாள் ஆராத்யா.

பெர்மிஷன் கிடைத்த கையோடு நன்றி தெறிவிக்கத் தேடினாள் தேவனை.

வெளியே கேன்டீனில் நின்றபடி ஜர்னலிஸ்ட் ரேகாவிடம் சிரித்து பேசி கொண்டிருந்தவனிடம்..

ஹாய் தேவ்.. பேசலாமா.., ஆராத்யா

ஹேய், வாட் ஹேப்பெண்ட், தேவ் கேட்டான்

"வீ காட் இட், ரொம்ப நன்றி" ஆராத்யா

கிரேட் யா.. தேவ் சிரித்தபடி சொன்னான். பை தி வே இவங்க ரேகா, இங்கே தான் ஒர்க் பண்றங்க, என்னோட பெஸ்ட் பிரென்ட் என்றான்.
நாளைக்கு நாம மீட் பண்ணலாம் ஆராத்யா.. ரிப்போர்ட்டிங் கிளம்புறோம்..
சீ யூ பை நிர்மலா.. நிம்மி ரைட், என்று புன்னகைத்தவாறே கிளம்பினான் தேவ்.

அதுக்குள்ள உஷார் பண்ணிட்டான் பாரு, ஹேய் இவள் போடுற ஒரே பந்துல சிக்ஸர் அடிக்கிறான் டீ... என்றாள் நிம்மி.

பட், தேவ்... ஹீ இஸ் எ ஹாண்டசம் கய், ஜென்டில்மேன் .. அப்புறம் நீ சொல்லுற மாதிரியெல்லாம் எதுவும் தப்பா இருக்காது, என்றாள் ஆராத்யா வெட்கச் சிரிப்புடன்.
கப்பல் லேசா சாய்கிற மாதிரி தெரியுதே, நிம்மி கூற, முதன்முதலாய் நாணத்தில் சிரித்தாள் ஆராத்யா.

கண்களை மூடி அந்த முதல் சந்திப்பை யோசித்தவள் புன்னகைத்தபடி விழித்த போது..

உடனடியாக ஏ ஒன் பி பாசிட்டிவ் ப்ளட் வேணும், நிறைய ரத்தம் வீணாயிருக்கு, என்றாள் அங்கே வந்த நர்ஸ் ஆங்கிலத்தில்.
பட் டோன்ட் ஒரி வி வில் அரேஞ்ச் தேட் என்றாள்.

அங்கே சைரன் சத்தத்துடன் வந்த ஆஸ்திரேலிய போலீஸ் தடாலடியாக உள்ளே நுழைந்து கேட்டது, இங்கே தீவிரவாதி ஒருவனுக்கு சிகிச்சையளிப்பதாக அறிந்தோம், அவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் அவன் பெயர் தேவ், என்றது.

மறுபடியும் பேரதிர்ச்சி ஆராத்யாவிற்கு, என்ன செய்யப் போகிறாள்.
டேவிட், இப்போ என்ன செய்றது. கேன் யூ ப்ளீஸ் கால் எடிட்டர் எப்படியாவது உதவி கேட்கலாமா?.
நிச்சயமாக..
ஹலோ சாம்சன்.. உதவி கோரினான்.
வெயிட் ஐ வில் கம் தேர் இன் டுவென்டி மினிட்ஸ். ஜஸ்ட் மேனேஜ் டில் தென். வரும்வரை சமாளிக்கும் படி கூறி தொடர்பை துண்டிக்கிறார் எடிட்டர் சாம்சன். சைரன் சத்தம் மீண்டும் ஒலிக்க
காவல் உயர் அதிகாரி உதவியுடன் அங்கே சாம்சன் வரவும் போலிஸ் என்று முன்பு வந்தக் கூட்டம் மின்னல் போல் தெறித்து பறக்கிறது.
அதிர்ச்சியில் ஹாஸ்பிடல். அப்போது தான் யார் இவர்கள் தேவ்விற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு முடிச்சு அவிழ்கிறது. நிஜ போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, இரவு கனமாய் நகர்கிறது. டேவிட் இரவு கிளம்பிய பின் மறுநாள் விடியலுக்காய் கண் விழித்துக் காத்திருக்கிறாள் ஆராத்யா.
தேவ் ட்ரீட்மென்ட் முடிந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்படுகிறான்.
இரண்டு வருடமாய் பிரிந்திருந்த இளம் காதல் மான்கள் மீண்டும் சந்திக்கின்றன.
இன்டெர்ன் காலக்கட்டத்தில் ஏதோ பல வருடம் பழகிய ஜோடி போல் நியூஸ் ரிப்போர்ட்டிங்கிற்காக பல்சார் பைக்கின் டயர்கள் மட்டையாய்
தேயுமளவு
சுற்றியிருக்கிறார்கள். தமிழ் ஆர்வலர்கள், மனிதர்களை வாசிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள், அவள் நினைப்பதை இவன் பேசுவான், அவன் நினைப்பதையே
இவளும்பேசுவாள். வேறு பொருத்தமும் வேண்டுமா. நட்பெனவே நகர்ந்தது,
காதல் ஏதும் பரிமாறப்படவில்லை.. விரல் தாண்டி அவன் கை அவளைத் தொடவில்லை‌..

முப்பது நாட்களாய்
தாஜ் கோரமென்டல் ஹோட்டல் முதல் கோர்ட், போலிஸ் ஸ்டேஷன் வரை, கோவில் திருவிழா முதல் மியூசிக் அகாடெமி நிகழ்ச்சி வரை சென்னையில் ரிப்போர்ட்டிங் செய்யப் போன இவர்கள் கால் படாத இடமேயில்லை.

நான்காம் நாளே நிம்மி அவள் அம்மாவிற்கு சுகமில்லையென்று இன்டெர்ன்ஷிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டாள். தேவ் முதல்நாள் அறிமுகம் செய்த ரேகாவும் ஒரு ஸ்பெஷல் நியூஸ் கவரேஜ் செய்ய ஒரு மாத காலம் டெல்லி சென்ற யோகம் ஆராத்யா தேவ் நட்பு மெல்ல மெல்ல மலர்ந்தது.
இவர்கள் இருவரும் கொடுத்த செய்திகள் வராத நாளில்லை. பெஸ்ட் ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டர்ஸ் பெயர் வேறு.
நியூஸ் தலைமை ஆசிரியர் இருவரையும் அழைத்து ட்ரெயினிங் முடிந்ததும் வேலைக்கு சேரவும் சொல்லியாயிற்று.
 
Last edited:

Arun Gourav Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2

ரிப்போர்ட்டர் ரேகா சென்ற பின் நான்கு நாட்கள் ஆராத்யா, நிர்மலா இருவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது, நிர்மலா என்ற நிம்மி தமிழ் திரைப்படங்களில் வரும் கதாநாயகியின் தோழி போலவே பேச்சில் கொஞ்சம் காமெடி கலந்தே இருக்கும், கொஞ்சம் வெகுளிப் பெண். அவள் சென்ற பிறகு இவர்கள் இருவரும் பழகும் நிலை ஏற்பட்டது.
முதல் நாள் கண்ட போது ஆராத்யா அணிந்து வந்த கொலுசு அவள் அவனிடம் முதல் வந்து பேசும் முன்பே அவனை அவள்பால் திருப்பியிருந்தது. அவள் பேசி சென்ற போதே அவன் யோசித்திருந்தான். அவன் ரசனைக்கேற்ற ஒரு பெண்ணை அவன் சந்திக்க நேரிடும் என அவன் உள்ளுணர்வு சொல்லிற்று.

அவள் தானா இவள் அறியேன்
வில் போல் நின்றெனை வினவும் புருவமும்
கூர்வாள் போல் என் மீது விழும்
இவள் பார்வையும்

யார் இப்பாவை

இவள் விழியும்
பேசும் போதெழும் குறு நகையும்
இவள் பால் எனை ஈர்க்கிறதே
அவள் இவள்தான் எனில் வருவாள்
என் நிழலாய்
என்னுடல் இம்மண்ணில்
இறுதியில் விழும் வரை
என் ஆன்மாவின் இறுதிப்பயணம் வரை
அப்போது நான்
அறிவேன்
என் வாழ்வின் எல்லைவரை வரும்
வானவில் இவள் தானென்று
இல்லையேல் இவள் வந்து போகும்
எனை கடந்து செல்லும் ஒரு பிம்பத்துகளே

எவ்வா
றெனினும் அடியே
பிறர் கவனம் உன்மேல்
திரும்பாமல் இருப்பதற்கேனும்
கொஞ்சம் அந்த கொஞ்சும் கொலுசுகளை
பேசாதிருக்கச் சொல்
மனதிற்குள் இவன் பேச
இரண்டாம் நாள் முதலாய்
அவள் அந்த பேசும் கொலுசுகள் அணிந்திருக்கவில்லை
அவள் அவனுக்கான
முதல் புரிதல் அது

அதை அவள் அறிந்திருக்கவில்லை

ஒரு கண நேரத்தில் வந்து போன காட்சியாய் தேவ் இதை உணர்ந்திருந்தான், அதை வெளிப்படுத்தாது, வெளிப்படுத்த வழியும் இல்லாது. துறுதுறுவென சிறு குறும்பென நிற்பாள், நடப்பாள், பேசுவாள் ஆராத்யா, பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு தத்துவம் இருக்கும். அதில் இவன் குயவன் போல் ஒரு கவிதை வனைவான். ரிப்போர்டிங் நீண்ட நேரம் எழுதிக்கொண்டிருக்கிறான் என்றே அவள் நம்பிக்கொண்டிருந்தாள், நியூஸ் கவரேஜ் துவங்கி கவிதையில் முடிப்பான் சிறு புன்னகையுடன்.
மூன்றாம் நாளில் அவன் டயரியில் எழுதிய அந்த முதல் இரு கவிதைகளும் இவை தான்.

எனக்கு மட்டும் ஏனடி
பொய் பொய்யாய் தோன்றுகிறது
நீ மட்டுமே அழகியென்று

இருக்கும் என்பது ஆண்டுகள்
உன்னோடு தான் குழம்பவில்லை
இருபது ஆண்டுகள்
தனிதெப்படி வாழ்ந்தேன்

குழம்பிப் போகிறேன்

குழப்பம் அவன் கவியின் வரிகளில் தானே தவிர, அவன் தெளிவாகவே இருந்தான், ஆராத்யா அதை அறியாதிருந்தாள். ஒன்ன மாதிரி ஒரு நண்பன் எல்லோருக்கும் வேண்டும்டா தேவ் என இவனை நட்பிலேயே வைத்து நகர்த்தி கொண்டிருந்தாள். நிழல் போல் அவனும் காதலுடன் மௌன மொழி பேசி நகர்ந்து கொண்டிருந்தான். அன்று இறுதி நாள் அவர்கள் நட்பு டைம்ஸ் ஆப் இந்தியாவில் முடியும் நாள்.
 
Last edited:

Arun Gourav Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவ், இன்னிக்கு லாஸ்ட் டே.. ஐ ஃபீல் லைக் கோயிங் டு பீச், வில் யூ டேக் மீ ?.. அங்கே மட்டும் தான் நாம இவ்ளோ நாள்ல போகவே இல்ல
நானும் சின்ன வயசுல போனது, அப்புறம் போனதே இல்லடா, வாட் டூ யூ சே..
ஷ்யூர்.. போகலாம் ஆராத்யா என்றான் தேவ் ஆனந்தமாக.

அந்தி சாயும் நீல வானம், செந்நிறச்சூரியனை கடல்மகள் மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தாள். கடலுக்கு இந்தப்பக்கமும் எழும்பும் அலைபோல் ஆர்பரிக்கும் மக்கள் கூட்டம். வெள்ளிக்கிழமை இரவு, மக்கள் அந்த நாளைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் என்பது போல் சாந்தோம் பீச் கூட்டம் களை கட்டியது.
அருகில் மீனவர் வசிக்கும் பகுதியில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும், அங்கே போகலாம் எனக்கூறி மெல்ல நடந்தார்கள்.
பத்து நிமிடங்களாக நடக்கிறார்கள், ஒரு வார்த்தை பேச்சு இல்லை. நீண்ட மௌனம்.
ஆராத்யா, அப்புறம்.. பேச்சை எடுத்தான் தேவ்.
சொல்லு தேவ், என்றாள் ஆராத்யா புன்னகையுடன்.
நாளைக்கு அப்போ நாம பார்க்க முடியாது இல்ல.
ஆமாடா அது தான் எனக்கும் கஷ்டமா இருக்கு
முப்பது நாள் போனதே தெரியல, அதுக்கு முன்னாடி உள்ளதெல்லாம் மறந்து போச்சு எனக்கு, ஜஸ்ட் இந்த தர்ட்டி டேஸ் மட்டுமே ஞாபகமா இருக்குடா. என்ன செய்யப்போறேன் நாளைக்கு தெரியலையே என்றாள், குழந்தை போல்.
உட்காருடா, என்றாள். அமர்ந்தார்கள்.
தேவ், நெஸ்ட் என்ன பண்ண போறே? கேட்டாள்.
யு எஸ்லே இருந்து மெயில் வந்திருக்கு ஆராத்யா.
நான் அங்கே டாகுமெண்டரி ஃபில்ம் மேக்கர் மைக்கேல் மூர் இருக்காரே, அவருக்கு என்னோட ப்ரீவியஸ் ஒர்க்ஸ்ல்லாம் வச்சு அனுப்பியிருந்தேன். லாஸ்ட் வீக் தான் ஸ்கைப் ல பேசினார், நெஸ்ட் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றார். நெஸ்ட் மந்த் கடைசில கெளம்புறேன் ஆராத்யா, அசிஸ்டன்ட் டைரக்டர் டு ஹிம், ஆல்ரெடி பத்து பேர் அவர்கிட்ட இருக்காங்க. ஆனாலும் கெடச்சது பெரிய விஷயம்.
கூல், ஹேய்.. வாவ் என்னடா எவ்ளோ பெரிய விஷயம், சாதாரணமா சொல்றே, என்றாள் மகிழ்ச்சியாக.

அங்கே தான் லாஸ் ஏஞ்ஜெல்ஸ்ல மிஸ்டர் வைத்யநாதன், என் அப்பா
இருக்கார்.
பரமஹம்ச யோகானந்தர் தெரியுமா?, கேட்டான் தேவ்.
ம்ம்.. ஆட்டோபயோகிராபி ஆஃப் அன் யோகி புக் எழுதியிருக்காரே, அவரா?.
பரவாயில்லையே இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே. ஏய் என்னப்பா நெனச்ச. எனக்கு ஸ்டீவன் ஹாக்கின்ஸ்யும் தெரியும் பாபாஜி கதையும் தெரியும், சிரித்தபடி சொன்னாள்.
உனக்கு தெரியாததது ஏதாவது இருந்தா சொல்லேன், சிரித்தபடியே கிண்டலாக கேட்டான் தேவ்.
ம்ம் இருக்கு கண்ணா இருக்கு, அது வந்து.. நீ அடிக்கடி டயரில் ஏதோ எழுதிகிட்டே இருக்கியே, அதுல அப்படி என்னதான் இருக்கு, அது எனக்கு தெரியாது என்றாள்.
ஹேய்.. பார்த்தியா
ம்ம் அவ்ளோதானே,
நீ கேட்குறதுக்கு ரொம்ப வருஷம் ஆகும்னு நெனைச்சேன், நீ ஷார்ப் தான், மறுபடியும் நிரூபிச்சிட்டே, என்றான்.
என்னடா புதிர் போடுறே, என்றாள் சிரித்தபடி
இரு தர்றேன். அவன் ஆசை ஆசையாய் அவளை நினைத்து எழுதிய கவிதை டயரி. மொபைல் வெளிச்சத்தில் படித்தாள், அவள் கண்கள் நட்சத்திரமாய் மின்னியது.
வாவ்.. என்னடா தேவ்.. இவ்ளோ அழகா எழுதிருக்கே
யார்டா இந்த லக்கி கேர்ள், கேட்டாள் அப்பாவியாய்.
அவளா.. தெரியல கோடம்பாக்கத்துல எங்க அப்பார்ட்மெண்ட் எதிர்ல இருக்கா அடிக்கடி பார்ப்பேன். ஆனா பேசுனது இல்ல, என்றான் சமாளித்தவனாய்.
என்னடா சொல்றே, பேசாமலே இவ்ளோ எழுதியிருக்கியா.
டேய் கவிதை நல்லா இருக்கு, அவள் கிட்ட கொடுக்கப்போறியா? எப்போ, எங்கே, ஆவலாய் கேட்டாள்.
இல்ல, இல்ல அவ வெளியூர் பொண்ணு, லீவுக்கு அவங்க அக்கா வீட்டுக்கு வந்திருந்தா போல, இன்னைக்கு.. அநேகமா இப்போ கெளம்பியிருப்பா, என்றான்.
டேய்.. அப்போ சும்மா எழுதினியாடா. இருட்டில் அவளால் அனைத்தையும் படிக்க முடியவில்லை. நாளைக்கு தர்ரேண்டா, எனக்கு இது முழுசும் படிக்கணும்.
நாளைக்கு ஆஃபிஸ் வர்ரியா, கேட்டான்.
ஆமால்ல.. நாளைக்கு பார்க்க முடியாதே. ஆனா எனக்கு உன் கவிதை படிக்கணுமே,
என்றாள் ஆராத்யா.
சரி, எடுத்துட்டு போ, பத்திரம், என்றான் தேவ்.
அந்த பொண்ண ரொம்பப் பிடிக்குமா உனக்கு? வினவினாள்.
தெரியலடா.. தினமும் பார்த்ததினால அப்படி இருக்கலாம், இட்ஸ் ஆல் பார்க்கும் போது தோணுச்சு. பார்காம இருந்து ஒண்ணுமே ஃபீல் ஆகலேன்னா அங்கே ஒன்னும் இல்லன்னு அர்த்தம், அப்படித்தானே தத்துவம் பேசினான் தேவ்.
கரெக்ட் டா, ஆமோதித்தாள் ஆராத்யா.
யூ டேக் லைஃப் வெரி லைட், சூப்பர் டா.
ஆமா.. தேவ்.. உன் அம்மா அப்பா பத்தி நீ ஒன்னும் சொல்லவே இல்லையேடா, என்றாள்
நீ கேட்கவே இல்லையே, என்றான் இவன்.
அம்மா, ஏஞ்சல். தி லவ் ஆப் மை லைஃப், அப்பா வைத்யநாதனுக்கு ரெண்டு விஷயம் முக்கியம். ஒண்ணு அவரோடஎக்ஸ்போர்ட் பிசினஸ். இன்னொன்னு ஆன்மிகம். மணிக்கணக்கா தியானம் பண்ணுவார். கேட்டா கிருஷ்ணா கிட்டேயும், ஜீசஸ் கிட்டேயும் பேசிட்டு இருந்தேன்னு சொல்வார். மாசக்கணக்கில் அங்கே யூ. எஸ் போய்டுவாரு. ஸெல்ப் ரியலைசேஷன் பெல்லோவ்ஷிப் இன்டர்நேஷனல் ஹெட் குவாட்டர்ஸ்ல, எல் ஏ ல இருப்பார். அம்மா பத்தி கேட்டீயே, ம்ம்.. சொல்றேன், இதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, ஒரே பிள்ளை என்னையும் பார்த்து படிக்க வச்சு அழகு பார்க்கும் அன்பு அன்னை அவள். காதல் திருமணம். அப்பா கல்யாணத்துக்கு அப்புறம் தான் பிஸினெஸ்ல பெரிய ஆளானாரு. அம்மா வோட லக் தான் காரணம்னு சொல்லுவாரு. ஒரு முதியோர் இல்லம், ஒரு அனாதைகள் காப்பகம் இருக்கு, ரெண்டையும் அம்மா தான் பார்த்துக்குறாங்க. அவங்களுக்கு இப்போ மூணு விஷயம் முக்கியம், ஒண்ணு நான், இன்னொன்னு காப்பகங்கள், இன்னொன்னு பைபிள். ரீட் பண்ணிட்டே இருப்பாங்க. அப்பா பத்தி கவலை இல்ல, ஹி டேக்ஸ் கேர் ஆப் ஹிம்ஸெல்ப். திஸ் இஸ் ஆல் அபௌட்மீ அண்ட் மீ அண்ட் மை பேமிலி, சிரித்தபடியே சொல்லி முடித்தான் தேவ்.

ரியல்லி சூப்பர் டா. சாரி டா, உன்னப்பத்தி ஒண்ணுமே இவ்ளோ நாள் நான் கேட்கவே இல்லையே, உன் அம்மாவை ஒருநாள் பார்க்கணும் போல தோணுது டா.
"அக்கா அக்கா சுண்டல் வாங்குக்கா, என்றான் அருகில் வந்த சிறுவன். தேவ் இரு இரு நான் வாங்குறேன், சொல்லி வாங்கி கொண்டான். பீச் வந்தாலே இது தான், இவங்க கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது.
பட் சின்ன பையன் பாரு டா, அது இருக்கட்டும் ஹேய்.. தேவ். உன் அம்மாவை ஒரு நாள் நான் பார்த்தே ஆகணும், என்றாள்
ஸ்யூர் வாயேன் ஒருநாள், புன்னகையோடு சொன்னான், பட் நான் யூ எஸ் போறதுக்கு முன்னாடி வா, அழைச்சிட்டு போறேன்.
எங்கேடா, நான் டெல்லி ஐ ஐ எம் சி யில் மாஸ்டர்ஸ் அப்ளை பண்ணியிருந்தேன், நாளைக்கு காலைல கிளம்புறேன், எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கு. ஃபிளைட் காலை ஆறு மணிக்கு, ஸ்பைஸ் ஜெட் மீனம்பாக்கம் ஏர்போர்ட் , என்றாள்.
அப்புறம் அக்கா வீடு அங்கே தான் கிரேட்டர் நொய்டாவில், முப்பது நாள் அங்கே தான். அக்கா பசங்க இருக்காங்க, டைம் அங்கேயே போய்டும் நெனைக்கிறேன்.
அப்போ அம்மா என்ன செய்வாங்க, கேட்டான்.
அவங்களா, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் டாக்டரம்மா, அவங்களுக்கு ஹாஸ்பிடல், பேஷண்ட்ஸ் அப்படியே டைம் போய்டும். கைனகாலஜிஸ்ட் எப்பவும் பிஸி, வீட்லேயும் உதவிக்கு மெய்ட்ஸ் இருக்காங்க.
ஷி வில் மேனேஜ் என்றாள் ஆராத்யா.
அப்பா எங்களைப் பிரிஞ்சு போன பிறகு குடும்ப வாழ்க்கை மேல உள்ள நம்பிக்கையே போயிடுச்சு, அவங்களும் லவ் மேரேஜ் தான்.
உன் அப்பா அம்மா கேஸ்ல அது சக்ஸஸ், எங்க அம்மா கேஸ்ல லவ் ஃபெயிலியர். அவ்ளோ தான் டிஃப்ரன்ஸ் டா
சிம்பிள், என்றாள்.
அப்பா விட்டுட்டு போகும் போது எனக்கு மூணு வயசு. ஒண்ணும் ஞாபகம் இல்ல. எங்க அம்மா நான் சின்னவளா இருக்கும் போது அழுதுகிட்டே இருப்பாங்க அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு. என்ன வாழ்க்கைடா இது அப்படின்னு ஆயிடுச்சு. ஆண்கள் மேல உள்ள மரியாதையே போய்டுச்சு. ரொம்ப வருஷத்துக்கப்புறம் தேவ், உன்ன பார்த்ததும் தான் எல்லா ஆண்களும் அப்படி இல்லன்னு தோணுது. உன் கிட்டே பழகின அளவுக்கு நான் யார் கிட்டேயும் பழகியதில்ல. யூ ஆர் அ ஜெம் ஆஃப் பெர்சன். அம்மாவையே பார்த்து வளர்ந்ததால காதல் மேலே நம்பிக்கையே போயிடுச்சு. உன் இடத்துல வேறொருத்தன் இருந்திருந்தான் இந்நேரம் எனக்கு பத்து வாட்டியாவது ப்ரப்போஸ் பண்ணியிருப்பான், சொல்லிக்கொண்டு சிரித்தாள்.
தேவ் அப்படியே அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் பேசத் தோன்றவில்லை. மௌனமாய் சிரித்தான்.
பட் உன் லவ் சக்ஸஸ் ஸ்டோரி எனக்கு சொல்லணும், தேவ். ஐயாம் நாட் லக்கி, நீ அப்படி இல்ல, ஹண்ட்ரட் பெர்ஸன்ட் நீ எலிஜிபிள், என்றாள், ஆராத்யா.
ஒகே ட்ராப் மீ நியர் பை, நாம கிளம்பலாம் என்றாள்.
காதில் விழாதவனாய் கடல் அலைகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான், அலை வந்து அவன் கால்களைத் தழுவி ஆறுதல் சொன்னது. அவள் கைகளில் அவன் கவிதைகள் நிரம்பிய டயரி.
சூழ்நிலை கை மீறிப் போகும் போது மௌனம் மட்டுமே காக்கும் உணர்ந்தவன் தேவ். ஒ.கே எழுதி வைத்தது
தான் நடக்கும், நம்பியவனாய் எழுந்தான் தேவ். யோசித்தபடியே.. போகலாம் ஆராத்யா, என்றான்.
காதல் உனதென்றால் இவள் மீண்டும் வருவாள் இது காதல் இல்லையென்றால் என் வாழ்வின் முப்பது நாள் பக்கங்களில் மட்டுமே வந்து போன ஒரு சிறுகதாபாத்திரம் இவள், நினைத்தபடியே பைக்கை ஆன் செய்தான், பறந்தது, பை தேவ். டேக் கேர், என்றபடி அவன் தோளைத் தட்டியபடி சென்றாள்.
பஸ் நிறுத்தம் அருகில் வேகமாய் வந்து நின்றது அந்தப் பேருந்து, ஆராத்யா ஏறினாள்.
எதையோ எங்கோ தொலைத்து விட்டது போல் இனம் புரியாத உணர்வு அவளுக்குள்.
பேருந்து மெல்ல மறைகிறது.

இரவு இங்கே கனக்கிறது. தேவ் வானின் நட்சத்திரங்களை சில நிமிடங்கள் பார்த்தான். ஒரு எரி நட்சத்திரம் பாய்ந்து எங்கோ விழுந்தது. அவன் கண்களில் ஒரு துளி கண்ணீர். நான் சொல்லியிருக்க வேண்டுமோ, வாய்ப்பே இல்லை. ஏற்று கொண்டிருக்க மாட்டாள். காலம் பதில் சொல்லும் என்று நினைத்தபடி கிளம்பினான் தேவ். இரவு மணி பத்து. செல்போன்கள் இல்லாத காலக்கட்டம் இது. தொன்னூறுகளின் காலம். பேச வேண்டுமென்றால் தொலைபேசி மட்டுமே. பரஸ்பரம் அந்த எண்கள் மட்டும் பரிமாறியுள்ளனர்.
எப்போதாவது தோன்றினால் பேசிக்கொள்ளலாம், அதுவும் அங்கே அவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் ஆராத்யா டெல்லி போகிறாள். தேவ், யூ எஸ் போகிறான். வாய்ப்புக்கள் எப்படி உருவாகும்?
இரவில் கண்மூட இயலவில்லை, ஆராத்யா டயரி எப்போது படிப்பாள், படித்தால் அது என் காதலை கூறி விடுமே, பின் என்னைப் பற்றி என்ன நினைப்பாள். தவறாக நினைத்து விடுவாளோ, நினைத்தான். தூக்கம் வரவில்லை.
இரவு நீண்டது,
திடீரென்று ஆராத்யா நீ அப்படியில்லை, யூ ர் அ ஜெம் என்று நேரில் சொன்னது போலிருந்தது. ஆறுதல் அடைந்து, தூங்கினான்.

காதல் செய்து
கருவில் சுமந்து
என்னை கரையேற்றிய
என் தாய் தந்தை
இருவர் ஈருயிர்
எனை இயக்குவது
உயிரியல் விதி
இதென்ன ஒரு பார்வையின்
ஸ்பரிசம் பட்ட மாத்திரத்தில்
மரபணுமாற்றம் நிகழ்ந்து
மூன்றாவதாய் எனை
உன் உயிரும் இயக்குகிறதே


அன்பே.. ஆராத்யா..

மூன்றாம் கவிதையை வாசித்திருந்தாள் அவள், இரவு ஒரு மணிக்கு.
கண்கள் ஸ்தம்பித்து இமைக்க முடியாமல் நின்றன. தேவ் என்னை நேசிக்கிறானா? ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்ல வில்லையே.
ஒருவேளை இது முப்பது நாள் பழக்கத்தில் வந்த மயக்கமா?
தேவ். உனக்கு என்னை பிடிக்குமா?அது அவளில்லையா, நானா?
ஒரு சின்ன புன்னகை, வெட்கம், சொல்லவில்லையே என்று சிறு கோபம், இல்லை இது மிகவும் அவசரம் என்ற எண்ணம், அவளை ஒன்றும் மேற்க்கொண்டு பேச விடாமல் செய்ததது.
வாழ்க்கையில் எதுவாயிருந்தாலும் நான் அவசரப்பட்டது போல் அவசரப்பட்டு விடாதே, அம்மா தேவகியின் வார்த்தை காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இல்லம்மா நான் உன்னோட பொண்ணு, என எண்ணியவளாய்.. உறங்கினாள்.

விடிகாலை ஐந்து மணி, காரில் வந்து விமான நிலையம் இறங்கினாள், ஆராத்யா. காரை அனுப்பி விட்டு லக்கேஜை எடுத்தாள்,
ஏய் கொடு நான் கொண்டு வர்றேன், மாய தேவன் போல் வந்து நின்றவன் கேட்டான்.
ஹேய்.. தேவ்.. வாட் எ சர்ப்ரைஸ்.. எப்போ டா வந்தே,
நீயும் ட்ராவலா? என்றாள்.
சொல்லு உன் கூடவே வந்துடுறேன்.. சொன்னான் கிண்டலாக.
டேய்.. நிஜமாகவே என்னை பார்க்கத்தான் வந்தாயா..?
எனக்கு இங்கே வேற யாரையும் தெரியாது ஆராத்யா, என்றான் தேவ்..
என்னடா இப்படி பண்ணிட்டே..? ஆராத்யா கேட்டாள்.
என்னடா நான் செஞ்சேன்..? தேவ் அப்பாவியாய் கேட்டான்.
உன் கவிதைகள் படிச்சேன் டா..
உண்மையில் அது நானா.. ?வெட்கத்தை வீசிவளாய் ஆராத்யா.
என் அப்பார்ட்மெண்டில் உன்ன மாதிரி யாரும் இல்ல ஆராத்யா, சொல்லிச் சிரித்தான் தேவ்.
உன்ன எனக்குப் ரொம்பப் பிடிக்கும்டா, ஐ ரியல்லி மீன் இட். உன்ன மாதிரி ஒருத்தன யாரு மிஸ் பண்ண முடியும்? பட் எனக்கு டைம் வேணும் டா.
எவ்ளோ வருஷம் வேணும், கேட்டான் தேவ்.
நான் மாஸ்டர்ஸ் முடிக்கிறேன். ஜஸ்ட் டூ இயர்ஸ், அப்புறம் பேசுவோமா?
அதுவரைக்கும் நாம பிரெண்ட்ஸ் ஆகவே இருப்போமேடா.

இப்போ நாம பிரெண்ட்ஸ் இல்லேன்னு யாரு சொன்னது.

இல்ல டா, நான் அப்படி சொல்லலே

நீ எப்படியும் சொல்ல வேண்டாம்
எக்ஸாம் நல்ல எழுது, அக்கா வீட்டுக்கு போ, லேண்ட் லைன் நம்பர் இருக்குல்ல,
கால் பண்ணு பேசலாம்,
நீ வேற.. எங்கிட்ட பேசாமலே போய்டுவியோ, பார்த்தா பேசுவியோ பேசமாட்டியோ
நான் பயந்தே போய்ட்டேன்,
நீ வேற மத்தவன் எவனாவது இருந்தா.. பத்து வாட்டி காதலை சொல்லியிருப்பான், அது இது அப்படின்னு சொன்னே, என்றான்.

தேவ், மத்தவனும் நீயும் ஒண்ணாடா, என்றாள்.

வைத்த கண் வாங்காமல் ஆராத்யாவையே பார்த்தான் தேவ் மீண்டும்.

அருகில் வந்தாள்.
இருவரும் மெல்ல ஆரத் தழுவிக்கொண்டனர், நீண்ட ஐந்து நொடிகள் . வெளியே வீசும் வாடைக் காற்றில் இதயம் இன்னும் குளிர்ந்தது, உள்ளுக்குள் இனித்த கணம் அது.

கிளம்புறேன் தேவ். ஐ லவ் யூ டா.. உன்ன ரொம்ப மிஸ் பண்ண போறேன், நாணத்துடன் சிரித்தாள்.

யூ ர் மை லைஃப் ஆராத்யா.. என்றான் தேவ் உணர்வுபூர்வமாய்.
நான் உன் கூடவே இருக்கும் போது எப்படி மிஸ் பண்ணுவே, என் கவிதை படி, நான் அதிலேயே இருப்பேன், என்றான்.
எனக்கு உன் முகம் போதும். அது இங்கேயே இருக்கு என்று தன் நெஞ்சில் கை வைத்து சொன்னான்.
உருகி ஒரு காதல் பார்வையை முதன் முதலாய் வீசினாள், மெல்ல நகர்ந்தாள்
டேக் கேர் தேவ்.. என்றபடி திரும்பி அவனையே பார்த்தவளாய் கடந்து சென்றாள் ஆராத்யா.
அவள் மெல்ல மறையும் வரை அவள் செல்லும் திசையையே பார்த்து நின்றான் தேவ்.

அருகில் ஒரு டீ ஸ்டாலில்.
அண்ணா, ஒரு டீ, ஸ்டராங்கா கொடுங்க, பெருமூச்சு விட்டபடி புன்னைகைத்தான்,
டீ மாஸ்டர் கேட்டார் , என்ன தம்பி காலையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?
அது ஒண்ணும் இல்லன்னா, ஒரு ஹாப்பி மூட் என்றான்.
இந்தாங்க அப்படியே இதை சாப்பிடுங்க,
ஆல் ரைட், இவள் பிம்பத்துகள் அல்ல, என் வானவில்லின் வண்ணம் என்று நினைத்தான். அவளின் ஸ்பரிசம் விட்டுச்சென்ற வாசனைகள் அவன் நாபிக்கமலம் புகுந்து ஆன்மாவில் ஆழம் வரை பாய்ந்தது , கண்கள் மூடி மயங்கினான் தேவ். இதுவரை இப்படி அவன் உணர்ந்ததில்லை.
ஆராத்யா தன் முன்னின்று புன்னகைச்சாரல் தூவியதாய் உணர்ந்தான்.. காதல் மழையில் நனைந்தான்.. ஆஹா!

என்ன ஆயிற்று எனக்கு, தேவ் நேரில் வந்ததும் ராத்திரி நான் நினைத்தது எல்லாம் ஒன்றும் இல்லாமல் போயிற்றே, அம்மாவிடம் என்ன சொல்வது, அப்போதுதான் உணர்ந்தாள், அவன் கவிதை புத்தகத்தை திருப்பியபடி, மெல்ல அதன் பக்கங்களை வருடினாள். என் வாழ்வின் அர்த்தமாகப்போகும் ஆண்மகன், இருளிலும் நிழல் போல் என்னுடன் வரப்போகிறவன் நீதானா தேவ் என்று நினைத்தபடி மெல்ல புன்னகைத்தாள், கண்களில் ஏனோ சிறு ஈரம்.
முப்பது நாளில் என்னை கொள்ளை கொண்டவனே, என் அன்பே.. தேவ் என்றது அவள் இதயம்.

விமானம் மட்டும் அல்ல ஆராத்யாவும் மேகங்களுக்கிடையில் மேலே மேலே பறந்தாள்.
 
Last edited:

Arun Gourav Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நெஞ்சங்களே
தாமதமாய் வருவதற்கு வருந்துகிறேன்
எனது பணி நிமித்தமான அலுவலக
வேலைகள் காரணமாய் என்னால்
தற்போது எழுத இயலவில்லை
ஜூலை முதல் வாரத்தில்
அத்தியாயங்கள் மூன்றையும் நான்கையும்
முடிப்பதற்கு எண்ணியுள்ளேன்
மீண்டும் சந்திப்போம்
கதையுடன் கவிதைகளும்
மலரக் காத்திருக்கின்றன.
ஆவலுடன் உங்களை சந்திக்க வருவேன்


அன்புடன்
தேவ் மித்ரன்
 

Arun Gourav Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நெஞ்சங்களே
ஒரு திரைப்படதிற்கான கதை எழுதுவதற்கும் இயக்குவதற்குமான வாய்ப்பு பெற பெற்றமையால், அதற்கான முழு வீச்சுடன் இறங்கியுள்ளேன்..
அது ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர் கதை. நிறைய ஆராய்ச்சியும் புதுமையும் தேவைப்படுகிறது. சொல்லாத கதையை சொல்ல வேண்டுமே..
ஆராத்யாவும் தேவும் காதலுடன் காத்திருக்கிறார்கள்.. ஆராத்யா டெல்லியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறாள்.. தேவ் உடல் நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது.. சில நாட்களில் நிகழப்போகும் திருப்பங்கள் அசாதாரணமாகவே உள்ளது.. எப்படி அதை எதிர்கொள்வார்கள்.. ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ் நாட்டில் கதை விரைவில் திரும்பும்.. இங்கு பல வேலைகள் உள்ளது.. டெல்லியில் ஆராத்யா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நிறையவே இருந்தன.. தேவ் இடையில் வந்தானா.. அஜ்மல் என்றொரு நண்பன் வந்தான் ஆராத்யாவிற்கு .. ஆராத்யா அக்கா, அக்கா கணவர், குழந்தைகள் அவர்கள் நிலை என்ன.. சொல்வேன் விரைவில்.. காத்திருங்கள்..

மறவேன் மீண்டும் வருவேன் புத்துயிர்ப் பெற்று.. உங்களின் பொறுமையும் அன்பும் ஆதரவும் பெற விரும்பும்

உங்கள் நான், தேவ் மித்ரன்
 
Status
Not open for further replies.
Top