All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"துளி துளியாய்" - கதை திரி

Status
Not open for further replies.

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...

இது என்னோட முதல் கதை.. ஒரு வருடம் முன்னாடி ஆரம்பித்தது.. இப்போ அதை சில திருத்தங்களுடன் பதிவிடபோகிறேன்..

இது முதல் முதலாக எழுதியது.. சோ கொஞ்சம் தப்பும் நிறைய தப்பும் இருக்கலாம்.. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு ஒரு வரி சொல்லிட்டு போங்க...
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
TT-1:

(அனைவர்க்கும் வணக்கம் , இது என்னுடைய முதல் கதை . இதில் எதாவது பிழை இருந்த எடுத்து சொல்லுங்க . கொஞ்சம் எழுத்து பிழை இருக்கலாம் , pls அட்ஜஸ்ட் பண்ணிகொங்க )


சட சடவென கொட்டும் மழைக்கு பயந்து அவசரமாக துணிகளை எடுத்துக்கொண்டு இருந்தாள் நம் கதாநாயகி. ஒருவழியாக எல்லா துணிகளையும் பாதி ஈரமாகவும் மீதி காய்ந்தும் அள்ளிக்கொண்டு அருகில் உள்ள டேபிள் மீது போட்டுவிட்டு வழக்கம் போல மழையை ரசிக்க தொடங்கி விட்டாள்.


அதற்குள்ளாக நம் கதைநாயகி பற்றி சிறு விளக்கத்தை காண்போம்.


நம் நாயகியின் செல்லப் பெயர் முகில், முழுப்பெயர் மகிழினி.பெயருக்கு ஏற்றாற்போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வலம்வருவாள் . பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறாள். படிப்புக்கு ஏற்ற வேலையும் கேம்பஸ் இன்டெர்வியூவில் கிடைத்துவிட்டது. முகில் பார்ப்பதற்கு 5 '2 அடி உயரம் அளவான உடல் , வெள்ளையும் இல்லாத மஞ்சள் கலந்த தேகம். வட்டமுகம் வில்புருவங்கள் , கூர்நாசி etc.., இது எல்லாத்துக்கும் மேல எப்பொழுதும் புன்னகை சிந்தும் குழந்தை முகம். ( இவ்ளோ போதும்னு நினைக்குறேன் நாமளும் போய் முகிலோட சேர்ந்து மழையை ரசிப்போம் ).


முகில் , கோடைகாலத்துல இதமா இப்படி மழை பெய்த எவ்ளோ சுகம். ம்ம் இதுல போய் டான்ஸ் போட்ட எவ்ளோ சுகமாயிருக்கும். என்ன பண்ணுறது எல்லாம் விதி. அந்த dog மட்டும் சொல்லாம இருந்தா இப்போ நான் எவ்ளோ jolly ஆஹ் enjoy பன்னிட்டு இருந்துஇருப்பேன். இப்போ மழைல ஆட்டம் போட்டாலும் அவனுக்கு தெரியவா போகுது ," முகில் , இந்த சான்ஸ் ஆஹ் விட்ட அவ்ளோதா , எவ்ளோ ஆட்டம் போடா முடியுமோ அவ்ளோ போடலாம் " சொல்லிட்டு போய் ஆட்டம் போடா ஆரம்பிச்சுட்டா.


ஒவ்வொரு மழைத்துளியையும் ரசித்து அதில் குழந்தையாய் ஆட்டம் போட்டாள். "இவ்ளோ சுகமா இருக்கு. இதைப்போய் வேண்டாம் மழைல ஆட்டம்போடத அந்த dog சொல்லுது , அவன் சொன்ன நான் கேட்கணுமா போடா dog " னு திட்டிட்டே நல்லா ஆட்டம் போட்டாள்.


அப்படியே ஈரத்தோட வீட்டுக்குள்ள வந்து ஹேர் dryer போட்டு தலையை கயவச்சு டிரஸ் மாத்தி முன்ன எப்படி இருந்தாலோ அதே மாறி இப்பவும் உக்காந்து நல்ல பிள்ளையாக ஈரத்துணியை காயப்போட்டாள்.


அதுக்குள்ள அவங்க அப்பா சிவசேகர் ,அம்மா ரதி ,அண்ணன் மகிழரசன் (அந்த dog இவன்தான் ) பாட்டி கற்பகம் , தாத்தா ராஜசேகர் எல்லாரும் வீட்டுக்குள்ள வந்துட்டாங்க. எல்லாத்துக்கும் முகில் na ரொம்ப இஷ்டம் . அதுலேயும் மகி அவள் மீது உயிரே வைத்துஇருக்கான். ( இப்போ தெரிஞ்சுருக்குமே ஏன் முகில் இப்படி திட்டிட்டு இருந்தானு ).


மகி ," முகில் எதுக்குடா மழைல ஆட்டம்போட்ட , உனக்கு எதாவது சரியிலேன்னா இங்க யாரும் என்ன நிம்மதியா இருக்க விடமாட்டாங்கனு தெரிஞ்சுதானே ஆட்டம் போட்ட "


முகில்" நான் எப்போடா மழைல ஆட்டம் போட்டேன் ,நீயா எதாவது சொல்லிட்டு இருக்காதா ",மனசுக்குள்ள இவனுக்கு எப்படி தெரிஞ்சது யோசிச்சுட்டு இருந்த.


நான் சொல்லவில்லை டி , வீடுதான் உன்ன காட்டி கொடுத்துச்சு . எல்லாமே சரியாய் செஞ்சுட்ட ,ஆனா வீட்டை சுத்தம் செய்யலியே , பாரு நல்ல உன்னோட முட்டைக்கண்ண விரிச்சு பாரு . வாசலிருந்து பாத்ரூம் vara ஈரம். என்று மகி சொல்லிவிட்டு சிரித்தான் .


அதுக்குள்ள வீட்டுல எல்லாரும் முகிலை கேள்விமேல கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க , ஒரே பாசமழையப்போச்சு. முகில் இதுலேயும் ஒரு குளியல் போட்டுட்டு மகி ஆஹ் அடிக்க ஓடிட்டாள்.


அதுக்குள்ள அவனும் escape ஆகிட்டான்.


இப்படி எல்லா சொந்தங்களும் பேரன்பும் இருந்தும் அவள் இது எதுவுமே வேண்டாம் என எல்லாரையும் விட்டு போகப்போகிறாள்..


விதி யாரை விட்டது ,இவ்வளவு சொந்தகள் இருந்தும் அனாதை ஆகப்போகிறோம் என்று யாராவது சொல்லியிருந்த அவ உடனே அவங்களே கிண்டல் பண்ணியே கொன்னுஇருப்ப.


சிரிப்பை மற்றும் போலியான அழுகையை தவிர வலியின் கண்ணீரை அறியாத முகில் , இனி நீ வலியின் கண்ணீரை தவிர வேற ஆறுதல் இல்லேனு நினைக்க போற . விதியின் விளையாட்டு ஆரம்பிப்பது அறியாமல், இன்றைய மகிழ்ச்சியை அனுபவிக்கிறாள்.


விதியின் விளையாட்டு ஆரம்பமாகிறது அடுத்த அத்தியாயத்தில் .


*********************part-1*********************************
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
TT-2:


டேய் ரிமோட் கொடு டா"



"போடி தரமாட்டேன் "



"டேய் dog ரிமோட் கொடு என்னோட சீரியல் மிஸ் ஆகிடும் கொடு டா "



"என்னது சீரியலா ? நீ எங்கேடி அதெல்ல பாக்குற , குழந்தை மாறி கார்ட்டூன் தானே பாக்குறே . நான் தரமாட்டேன் போடி , 7 donkey வயசாச்சு இன்னும் கார்ட்டூன் பாக்குற "



டேய் நீதாண்டா dog , donkey எல்லாமே , கடைசியா கேக்குறேன் இப்போ தரமுடியுமா முடியாத ?



சில்லுனு ஒரு காதல் படத்துல மில்லுக்கு வடிவேலு தன்னோட பெயர் வைக்கச்சொன்னதுக்கு



அவங்க wife ஒரு reaction கொடுப்பாங்க அதே மாறி மகி , மேலிருந்து கீழ பாத்துட்டு "முடியாது முடியாது போடி "



இதுக்குமேல சும்மா இருக்கக்கூடாது முகில் ,நம்ம வேலைய ஆரம்பிப்போம் . போய் மெயின் போர்டுல இருக்க பியூஸ் எடுத்துட்டு வந்துட்டா . வீட்டுல கரண்ட் போய்டுச்சுன்னு நினைச்சங்க . பக்கத்து வீட்டுல போய் ரதி பாக்குற அங்க கரண்ட் இருக்கு. மெயின் போர்டு போய் பார்த்தாள் . " முகில் இது உன்னோட வேலைய " ஞாயிற்றுக்கிழமை அதுவுமா இப்படி ரெண்டு பேரும் அராஜகம் பண்ணுறீஙகளே , இப்போ நான் எப்படி சமைக்குறது ?"



"அம்மில அரைச்சுக்கோ மம்மி", ஹையா அம்மி-மம்மி நல்லருக்குல.



"வர வர உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு காலையில பொட்டப்புள்ள கொஞ்சம் சீக்கிரமே எழுந்து அம்மாக்கு ஹெல்ப் பன்னாட்டியும் , ப்ரஸ் பன்னிட்டு குளிச்சுட்டு சாப்டுட்டு டிவி பார்க்கலாம்ல , மணி என்ன ஆகுதுன்னு பாத்தியா "



"மணி என்ன ஆகுதுன்னு சொல்லு மம்மி , எனக்கு தான் மணி பார்க்க தெரியாதே "



"அடிக்கழுதை ,1 ஆகப்போகுது இன்னும் கொஞ்சநேரத்துல உங்க அப்பா வந்து பசிக்கிது இவ்ளோ நேரம் என்ன பன்னிட்டு இருந்தானு என்ன திட்டுவாரு , எரும எழுந்தது 12 மணிக்கு ,எழுந்ததும் அவனோட சண்டை எப்போதான் இதெல்லாம் ஓயுமோ "



அதுக்குள்ள கரண்ட் வந்துடுச்சு ,மகி "அம்மா போய் சமையல் செய் மா , சும்மா அவள திட்டாதீங்க ,



முகில் நீ டிவி பாருடா செல்ல எருமைக்குட்டி "



"டேய் இது எல்லாத்துக்கும் நீதாண்டா காரணம்,பரவாயில்ல பொழைச்சுப்போ"



ரிமோட் வாங்கி shinchan பாக்க ஆரம்பிச்சுட்டா.



"டேய் நீதாண்டா அவளை செல்லம் கொடுத்து கெடுக்குற ,ரிமோட்டா முன்னாடியே குடுத்து இருக்கலாம்ல ,ஏய் முகில் போய் ப்ரஸ் பண்ணுடி அப்புறம் டிவி பாரு "



"ஏய் இப்போ எதுக்குடி என்னோட பொண்ண திட்டுற " சிவா உள்ள வந்துட்டே மனைவியை வம்புக்கு இழுக்குறார் .



"ஆமா இப்போ மட்டும் சரியா வந்து என்ன திட்டுங்க, லீவு விட்டாலும் விட்டாங்க என்னவே எல்லாரும் உயிரை எடுங்க"



"சரி சரி விடு, பசங்களா எல்லாரும் ஊருக்கு போகணும்ல எல்லாத்தையும் பேக் பன்னுங்க" சொல்லிட்டு மனைவியை சமாதான படுத்த போய்ட்டாரு.



பொள்ளாச்சி அருகே உள்ள சிறிய கிராமம் சேத்துமடை , அங்கே நிகிதா " இங்க பாரு இன்னும் பத்து நாள் தான் இருக்கு என்னோட கல்யாணத்துக்கு அதுக்குள்ள எதாவது பண்ணு இல்லேன்னா என்ன உயிரோட பார்க்க முடியாது "



ரமேஷ்" நீ ஒன்னும் கவலைப்படாதே எல்லாம் சரியா நடக்கும் , அவன் கல்யாண மணமேடைல அவமானப்பட்டு சாகணும் . "



"அதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படுறேன் இது எல்லாமே உனக்காக தான் "



"நீ ஒன்னும் கவலைப்படாதேடி நான் இருக்கேன் உன்னோட புருஷன் , அந்த இளமாறன் அவமானத்துல துடிக்குனும் "



சரிடா நீ என்ன திட்டம் வச்சுஇருக்க சொல்லு "



சொல்றேண்டி ரமேஷ் அவனோட திட்டத்தை நிகிதாக்கு விளக்கினான் .



"சூப்பர் டா இதுமட்டும் சரியா நடந்துச்சு இளமாறன் இனி மேல் யாருமுகத்துலேயும் முழிக்க முடியாது"



சரி நீ போ கல்யாண பொண்ணு நீ உன்ன ரொம்ப நேரம் காணோம்னு தேடுவாங்க "



"பிளான் ரெடி பண்ணி வச்சுக்கோ அவங்க எல்லாரும் நாளைக்கு வந்துடுவாங்க"



ரமேஷ் -நிகிதா ரெண்டு பேரும் அவங்க வழில போய்ட்டாங்க .



முகில் வீட்டில் ..



"டேய் கண்ணுங்களா ! போய் பல்லு விலக்கிட்டு சாப்பிடுங்க" பாட்டி சொல்லிட்டு போய் அவங்க ஊருக்கு போக பேக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க



"கிழவி நம்ம ஊருக்கு போய் எவ்ளோ நாள் ஆச்சு . இப்போ அந்த அரைலூசு கல்யாணம் அதுக்கு நம்ம எதுக்கு 10 நாள் முன்னாடியே போகணும் ?"



"யாரடி அரைலூசுன்னு சொல்ற அவன் என்னோட பேரன் டி ,ஒழுங்க மரியாதையா பேசுடி



அவன் உனக்கு அத்தை பையன் ,இன்னும் சொல்லப்போனா அவனெவே உனக்கு கட்டிவச்சுயோருக்கானும் "



"இந்தா கிழவி முறைப்பையனு முறை வச்சு பேசாதே அந்த அரைலூச கட்டிக்கிறதுக்கு நான் மென்டல் ஹாஸ்பிடல அட்மிட் ஆகிக்குறேன்"



"உனக்கு ரொம்ப வாய் திமுருடி ,இத அடக்குறதுக்குனு ஒருத்தன் வருவான் அப்போ இருக்குடி உனக்கு"



"ஹேய் கிழவி அப்படி எவனாவது வந்து என்ன அடக்குறப்போ இப்படி டக்குனு ஒன்னு குடுத்த போதும் அவன் புஷ்வணமாகிடுவான் " பாட்டி கன்னத்துல முத்தம் குடுத்துட்டு ஓடிட்டா



"போடி போ , அப்போ எப்படி சமாளிக்குறேனு நான் பாக்குறேன்"



டேய் அரைலூசு உனக்கு கல்யாணமாம் பாவம் அந்த நிகிதா உன்னோட என்ன பாடுபடபோறாளோ ,இந்த 10 நாள் நான் உன்னை கிண்டல் பண்ணுறதுல நீ என் முன்னாடியே வரக்கூடாது கல்யாணத்துக்கு அப்பறம் என்னோட கண்ணுல படனும். நிறைய இருக்கு டா உனக்கு அனுபவிக்க கொஞ்சம் காத்துஇரு .



"டேய் மகி, ரெண்டு நாள் தான் நமக்கு நேரம் இருக்கு அதுக்குள்ள அவனை முழு பைத்தியமாக்கிடனும் சரியா"



"டன் முகி, நாம பிளான் போடுவோம் "



மகி- முகில் அவங்க திட்டம் என்ன ,ரமேஷ் -நிகிதா திட்டம் என்ன .. ரெண்டு திட்டத்துக்கு நடுவுல மாட்டிட்டு இளமாறன் இனி அவதி மாறனா மாறப்போறானா இல்ல இவங்க ரெண்டு திட்டத்தையும் முறியடிக்க போறான்னு அடுத்த பகுதியில் பார்ப்போம்



------------part-2---------------------
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3

காலை 10 மணிக்கு பொள்ளாச்சி வந்து இறங்கினர் நம் முகில் குடும்பத்தார். அவர்களை அழைத்துச்செல்ல இளமாறன் வண்டியோடு ரயில்வேஸ்டேஷன் வந்துஇருந்தான்.

வழக்கம்போல் பெரியவர்கள் நலவிசாரணை முடிந்ததும் முகில் அருகே வந்தான் .

"முகில் எப்படி இருக்க ? நல்ல படிக்கிறியா ?"

நான் நல்ல இருக்கேன் அத்தான் ..நல்ல படிக்குறேன் அத்தான் ..நீங்க எப்படி இருக்கீங்க அத்தான் ?

வீட்டுல எல்லாரும் சுகமா அத்தான் ? " அத்தானுல நல்ல அழுத்தம் குடுத்து பதிலடி குடுத்தாள் முகில்.

"முகில் என்ன ரொம்ப மரியாதை குடுக்குற ஏதோ சரி இல்லியே,அத்தை மாமா பாட்டி தாத்தா மகி, முகில்க்கு என்ன ஆச்சு, தலையில அடிப்படிருச்சா?

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, உன்ன நான் தான் மரியாதை குடுத்து கூப்பிடச்சொன்னேன்.அதான் அவ அத்தான் சொல்லிட்டு திரியுற, நீ வாப்பா நாம போலாம் என்றார் பாட்டி.

கிழவி இரு உன்ன அப்புறம் வச்சுக்கறேன் முகில் கார் கிட்ட போய்ட்டாள்.


எல்லாரும் வீட்டுக்கு போய் நலவிசாரணை முடிந்து பிரெஷ் ஆக போய்ட்டாங்க .

இளமாறன் பற்றி ஒரு சிறு விளக்கம்

சுந்தரம்- விசாலாட்சி தம்பதியரின் ஒரே அருமைபுதல்வன் இளமாறன்.
6 அடிக்கும் கொஞ்சம் குறைவாய் மாநிறத்துக்காளை , பொள்ளாச்சியில் டிகிரி முடிச்சுட்டு வீட்டோட தொழில் ,விவசாயம் பண்ணுகிறான். ரொம்ப பொறுப்பானவன் , அமைதியானவன் .
ஆனா தானா எந்த சண்டைக்கும் போகமாட்டான் வந்த சண்டையை விடவும்மாட்டான் .
நிகிதா அவனோட அத்தை பொண்ணு. வீட்டுல முறைப்படி நடக்குற கல்யாணம்.அவனுக்கு நிகிதான்னா உயிர் .

நிகிதா ராமசாமி -அகிலா தம்பதியரின் ஒரே அருமைப்புதல்வி நிகிதா .
கோயம்பத்தூர்ல டிகிரி முடிச்சுட்டு வீட்டுல இருக்க.
இளமாறனுக்கு ஏத்த ஜோடி. அமைதியான பொண்ணு ஆனா என பண்ணுறது காதல் படுத்தும்பாடு அவ குடும்பத்துக்கு எதிரே நிக்கவைக்குது .
நிகிதாவும் முகிலும் நெருங்கிய நண்பிகள்.

ரமேஷ் ராமச்சந்திரன்- அரசி தம்பதியரின் 10 வருட தவத்திற்கு கிடைத்த சீமைந்தபுத்திரன். கோயம்பத்தூரில் நிகிதா படித்த கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தான் . படிப்பை தவிர அனைத்து வேலைகளையும் செய்வான். லவ் அட் பர்ஸ்ட் சைட் மாறி நிகிதாவ லவ் பண்ணுறான்.

"அத்தான் என்னோட ட்ரெஸ் எப்படி இருக்கு?" என்றாள் முகில். இளஞ்சிவப்பு நிற தாவணி, சந்தனநிற பாவாடையும் அதே நிற ரவிக்கையும் அணிந்து தேவதைபோல் இருந்தவளை பார்த்து கண்ணிமைக்க மறந்து அவளையே பார்த்தான்.
"அத்தான் என்ன ஆச்சு"
"ஒன்னுமில்ல நீ இப்படி அழகா இருப்பேன்னு தெரிஞ்சு இருந்த நான் உன்னையவே கட்டியிருப்பேனே"
இப்பவும் ஒன்னும் கெட்டுபோகுல அத்தான் என்ன கல்யாணம் பண்ணிக்குறீங்களா ?
"டபுள் ஓகே டி, நிகிதாவோட உன்னையும் சேர்த்து கட்டிக்குறேன்
"இல்ல அத்தான் அது சரி வராது. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுயிருக்கு, நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்"
"முகில், ஆர் யு சீரியஸ்? என்னோட மேரேஜ்க்கு இன்னும் எட்டு நாள் தான் இருக்கு. "
"எஸ் அத்தான். ஐ அம் வெரி சீரியஸ் அபௌட் திஸ் மேரேஜ்."சொல்லிட்டு அழுதுட்டே ரூம்க்கு போய்ட்டாள்.
ரூம்ல கட்டில் மேல படுத்துட்டு குலுங்கி குலுங்கி அழுதுட்டு இருக்காள். பின்னாடியே வந்த இள பாத்துட்டு சோகமா அந்த இடத்தை விட்டு நகருகிறான்.
உடனே மகி அவன் போய்ட்டானு பார்த்துவிட்டு "முகில் போதும் எழுந்திரு, பயபுள்ள மூஞ்சி சுருங்கிப்புடுச்சு "
" ஐயோ மகி என்னால முடியலடா " விழுந்து விழுந்து சிரிக்குறாள்.
"முகில், நம்ம பர்ஸ்ட் பிளானே சூப்பரா ஒர்கவுட் ஆகுது"
"இனி நாளைக்கு வேற எங்காவது தனியா அவனை மீட் பண்ணனும், சரி நான் போய் நிகிதாவ பாத்துட்டு வரேன்"
"முகில் அவளுக்கு இந்த பிளான பத்தி எதும் சொல்லிடாதே "
"சரி டா பை"

நிகிதா வீட்டில் ..
"நிக்கிமா உன்னோட செல் அடிக்குது பாரு" என்றார் அம்மா.
நிகிதா உடனே செல் எடுத்து பார்த்துவிட்டு யோசையில் ஆழ்ந்தாள். எப்படி இளாவை தனியா அவ்ளோதூரம் போக சொல்றதுனு யோசிச்சுட்டு இருக்காள்.அப்போது முகில் நிகிதாவை கட்டிப்பிடித்து
"நிக்கி டார்லிங், என்ன யோசனை பண்ற? கல்யாண கனவுகளா?"
முகிலை பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ச்சியாகி பின் இயல்பானாள்.
"இல்ல முகில் , நான் ஒரு வேண்டுதல் பத்தி நெனைச்சுட்டு இருந்தேன். சரியான நேரத்துல நீ வந்துஇருக்க , நாளைக்கு இளாவ நீ மலைக்கோயிலுக்கு கூட்டிட்டு போய் நான் தர எலுமிச்சமாலையை சாமிக்கு போட சொல்லுறியா , இளா தனியா சாமிக்கு மாலை போடணும் ஓகே ஆஹ் ?"
அடடா ஆடு தன்னால வந்து தலையை குடுத்து வெட்டச்சொல்லுதே. நாளைக்கு நம்ம பிளானை அங்க எப்படி பண்ணுவோம்னு யோசிச்சிட்டு இருக்காள்.
"என்ன முகில், என்ன யோசிக்குற ? பரவலா விடு நான் இளாகிட்டே சொல்லிக்கறேன் "
"இல்ல நிக்கி, அத்தானை எப்படி அங்க கூட்டிட்டு போறதுன்னு யோசிக்கிறேன் அவ்ளோதான். விடு நான் பார்த்துக்குறேன் . நாளைக்கு 8 மணிக்கு நாங்க கோவில்ல இருப்போம் . இப்போ நான் கிளம்புறேன் பை "வீட்டுக்கு வந்து மகிகிட்டே நடந்த எல்லாத்தையும் சொல்லுறாள்.
அதேசமயம் நிகிதா ரமேஷ்கிட்ட எல்லா விவரத்தியும்சொல்லுறாள்.

ஒரு நெடிய உருவம் மகி- முகில் பேசியதை கை முஷ்டி இறுக ஆத்திரத்துடன் கவனித்துவிட்டு சிறு புன்னகையுடன் நாளையை நினைத்து வெளியேறுகிறது.
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4

மாமனே உன்னை காண்காம
வட்டியில் சோறும் உண்காம
பாவி நான் பருத்தி நாரா போனேனே

காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே

ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே

ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே

அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே

முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே..........

இந்த பாட்டை காரில் போட்டுவிட்டு இளாவை பார்த்தபடியே அமர்த்துஇருந்தாள் முகில். மனதில், ஒருவழியா இவனை இங்க வர இழுத்துட்டு வந்தாச்சு என்ன பாடுபடவேண்டியதா போச்சுனு நினைத்து பார்க்கிறாள்.

நேற்றிரவு முகில், இளாகிட்ட போய் " அத்தான் நான் சொன்னதை யோசிச்சுபாத்தீங்களா , எவ்ளோவோ முயற்சி பண்ணுனேனு உன்ன சாரி உங்கள மறக்கணும்னு , என்னால முடியல " யாரோ வரும் அரவம் கேட்டு பேச்சை மாத்துறதுக்காக " அத்தான் என்ன நாளைக்கு நம்ம மலைக்கோயிலுக்கு கூட்டிட்டு போறீங்களா ? உங்க கல்யாணம் நல்லபடியா நடக்குறதுக்காக எலுமிச்சமாலை வச்சுஇருக்கேன். நீங்க தான் சாமிக்கு போடணும் "
இளாவோ என்ன சொல்லுறான்னு குழம்பிப்போய் பார்த்துட்டுஇருக்கான்.
அங்க வந்த விசாலாட்சி ," டேய் இளா ,அவள கூட்டிட்டு போய்ட்டு வா , காலைல வெள்ளணமா போய்ட்டு வந்துடுங்க "
"அத்தான் காலைல 6 மணிக்கு நான் ரெடியா கார்கிட்ட இருப்பேன் வந்துடுங்க."

காரில் இளாவோ இவளுக்கு எப்படி புரிய வைக்குறதுன்னு யோசிச்சுட்டே வண்டியோட்டிட்டு கோவிலுக்கு போறான்.முகில் கார் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கிவிடுகிறாள்.
அந்த நெடிய உருவம் இவர்களை தொடர்ந்து பின்வருகிறது தனது இதயத்தை திருடியவளிடம் புலம்பிக்கொண்டே வருகிறது.
ரமேஷ் தனது நண்பர்களுடன் வீடியோ கேமெராக்களுடன் கோவிலுக்கு வந்து சேர்ந்தான். தனது திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டுமென்று நண்பர்களிடம் கூறிக்கொண்டே வருகிறான்.

குளிர்காலத்தில் ரோஜா செடிக்கு நடுவில் முகிலோடு விளையாடிய படியே முகில் தனக்கு மிக அருகில் கேட்ட குரலை கண்டு திரும்பி புன்னகைத்து விட்டு அவனை உற்று நோக்குகிறாள்.
ஆறடிக்கு மேலாய் கண்ணில் காதலுடன் monkey cap போட்டு நிற்பவனை ரசிக்கிறாள் . அவனது பரந்த மார்பில் தஞ்சம் புகுந்து கொள்கிறாள். எப்பொழுதும் கேட்கும் அதே குரல் அதே காதல் சொல்லும் கண்கள் , அவனது மார்பில் பாதுகாய்ப்பாய் உணரும் முன் அவனது இதய துடிப்பு அது அது நான் என சொல்லுவது போல் இறுக்கி அணைத்து கொள்கிறாள்.

திடீரென்று அவனது 'அம்ம்ம்மா' சத்தத்தில் அவனிடமிருந்து விலகி அவனது முகத்தை பார்க்க விழைகிறாள். அதற்குள் அவனை யாரோ இழுத்து செல்கின்றனர். அவள் அவனுடைய சட்டையை பற்றி இழுக்கிறாள். சட்டையோடு அவனது செயின் அவளிடத்து வந்துவிடுகிறது. அவள் "இனியா " எனக்கூறி கத்தி மயக்கமுறுகிறாள். அவளருகில் "முகில், முகில் என்ன ஆச்சு" இளா அவளை எழுப்ப முயற்சிக்குறான்.
"என்ன ஆச்சு முகில், எதுக்கு இப்படி கத்துன?"
"எதோ கெட்ட கனவு அதான், கோவிலுக்கு போறோம்ல அங்க சாமி கும்பிட்ட சரி ஆகிடும்"
"இந்த தண்ணீர் குடி", அவன் யோசனையோடு வண்டிய ஓட்டுறான்.
முகில், இந்த கனவு ஏன் எனக்கு அடிக்கடி வருது ,இவ்ளோ நாள் இல்லாம இப்போ அவனுக்கு அடிபடுற மாறி வருது , மனதிற்குள் 'கடவுளே என்னோட இனியனுக்கு ஏதும் ஆகக்கூடாது' வேண்டி கொள்கிறாள்.

இருவரும் அந்த கோவிலுக்கு வந்து சேர்கின்றனர். அந்த கோவில் சேத்துமடையில் இருந்து 2 மணி நேரத்தொலைவில் உள்ள மலைமேல் அமைந்துள்ள கோவில். கேரளா அருகே அமைந்துள்ள அந்த சிறிய கோவில் அருகே எங்கு திரும்பினாலும் இயற்கை அன்னையின் வாசம் இதுதான் என்று கூறுமளவிற்கு அவ்வளவு செழிப்பான இடம்.

சுற்றியுள்ள அழகை ரசிக்க முடியாமல் இரு உள்ளங்களும் அதனதன் துணையின் அருகாமை இல்லாததை நினைத்து வருந்தி கொள்கின்றனர்.

அந்த நெடிய உருவமும் கோவிலை சென்றடைந்து அங்கே மறைந்து அவர்களை கண்காணிக்கிறது.

ரமேஷ் அவர்கள் இருவரையும் நெருக்கமாக இருப்பது போல் கேமராவில் பதிந்து கொள்கிறான்.

இருவரும் கோவிலில் சாமி கும்பிட்டதும் அருகே உள்ள திண்ணையில் உக்காந்து ஒரு முடிவுடன் பேச ஆரம்பிக்கின்றனர் . இளா முகிலிடம் தனது காதலை பற்றி சொல்கிறான். நிகிதாவை சிறுவயதிலிருந்து காதலிப்பதாக சொல்கிறான். அவளை தவிர வேறு யாரையும் மனைவியாக ஏற்க முடியாதுனு அழுத்தமாக சொல்கிறான். அதைக்கேட்டு முகில் அப்போ என்னுடைய காதலுக்கு முடிவு என்ன என்று கேட்கிறாள் .
"நீ உன்னோட மனச மாத்திக்கணும் முகில்"
"முடியாது என்னால என் இ.. ( மனதிற்குள் என் இனியன்) மறக்க முடியாது"
இளா தவறாக நினைத்து அருகே சென்று அவளை சமதானப்படுத்துகிறான்.
அப்பொழுது அந்த நெடிய உருவம் இருவரையும் நோக்கி வருகிறது ,
அந்த நெடிய உருவம் வருவதை கண்ட ரமேஷ் தன் நண்பர்களுடன் விரைந்து கோவில் அருகே சென்று அவர்களை தாக்க தொடங்கினான்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த முகிலை தன் மார்போடு அனைத்து அந்த நெடிய உருவம். முகில் கண்ணை மூடிக்கொண்டு அவனை விடாது பிடித்துஇருந்தாள். எங்கே விட்டால் அவனை யாராவது ஏதவாது செய்துவிடுவார்களோ என்று பயந்து இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

அந்த நெடிய உருவமும் அவளை காக்கும் பொருட்டு அடிகளை வாங்கிக்கொண்டே அணைத்து இருந்தது.
ரமேஷ் அவன் தலையில் கட்டையால் அடித்தான். அவன் 'அம்மம்மா 'என்ற அலறலோடு அவளை இறுக்கி அணைத்தான். அவனது சத்தத்தில் இது கனவல்ல நிஜம் என்று உணர்ந்து அவனை பார்ப்பதுற்குள் அவனை திருப்பி தலையில் அடித்தான் ரமேஷ் நண்பன்.
இளாவும் தலையில் காயங்களுடன் எழுந்து வர முயற்சி செய்தான்.
அதற்குள் தன்னுடைய பாக்கெட்லிருந்து ஒரு செயினை எடுத்து முகிலின் கழுத்தில் போட்டது அந்த நெடிய உருவம்.

இந்த அதிர்ச்சியில் உறைந்துகிடந்தாள் முகில். அவன் முகத்தை கூட பார்க்காமல் அந்த செயினை பார்த்து கதறினாள்.

"இனியா" என கத்தினாள். அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுது மயக்கமானாள்.

அந்த நெடிய உருவம் திரும்பி அவளை பார்த்து புன்னகைத்து வலியை பொருட்படுத்தாது " இளா என்னோட மூஞ்சுறுவ நல்ல பாத்துக்கோ நான் திரும்பி வரும்வரை. இப்போ என்னோட பொண்டாட்டி அவ . பாத்துக்கோ " சொல்லிட்டு மயக்கமடைந்தான்.

இளா எழுந்துக்க முயற்சி பண்ணுறப்போ அவன மறுபடியும் அடிச்சு மயக்கமடைய வைத்தார்கள்.

ரமேஷ் மற்றும் அவனது நண்பர்கள் நெடிய உருவத்தை கட்டிப்போட்டு விட்டு இளா மற்றும் முகிலின்
காயத்தை சுத்தப்படுத்தி அவர்களை அலங்கோலமாக போட்டோ எடுத்தார்கள்.

வந்த வேலை முடிந்தது என கிளம்பும்போது ரமேஷ் நண்பன் இருவரிடத்திலும் உள்ள நகைகளை களைய முயன்றான்.
ரமேஷ் " நகையை கழட்டாதே ,மாட்டிக்குவோம்"
"இந்த செயின் புதுசு டா இத மட்டும் எடுத்துக்குறேன்" சொல்லிவிட்டு முகிலிடத்து இருந்த செயினை கழற்ற முயன்றான்.

அவள் அதை இறுக்கி பிடித்துஇருந்தாள் மயக்கத்திலும்.
"டேய் விடுடா போலாம் அதுக்கும் சேர்த்து நான் பணம் தரேன் வா"
அவர்களை அங்கேயே விட்டுவிட்டு நெடிய உருவத்தை தூக்கிக்கொண்டு சென்றார்கள்.
போகும்வழியில் இனியனது வண்டியையும் எடுத்து சென்றார்கள்.

காதலியிடம் தனது செயின் சென்ற சந்தோஷத்தில் இனியனும் , இனியன் கனவல்ல நிஜம் என்ற சந்தோஷத்தில் முகிலும் , நிகிதாவின் நினைவில் இளாவும் மயக்கத்திலே சந்தோஷமடைந்தனர்.

மயக்கம் தெளிந்து அவரவர் சூழ்நிலையினை நினைத்தால் மூவருக்கும் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

விதி அவர்களை பார்த்து சிரித்தது..
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் சைட் பக்கம் எட்டி பார்க்குறேன்.. கொஞ்சம் அதிகமாவே உடம்பு சரி இல்லை.. இப்போ நான் ஓரளவுக்கு ஓகே.. துளி துளியாய் கதை மட்டும் தினமும் அப்டேட் சைட்ல அப்டேட் குடுத்துறேன்..சாரி பார் தி டிலே பிரண்ட்ஸ்..
துளி துளியாய் நான் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தேன்.. அதில் எத்தனை தவறுகள் இருக்கும்னு தெரியவில்லை.. உங்களுக்கு எதுவெல்லாம் தப்புன்னு தோணுதோ அதெல்லாம் சுட்டி காட்டுங்க மக்களே..
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -5

தலைக்கனக்க மெல்ல கண்திறந்து பார்த்தான் இளா. அவர்களிருந்த நிலை அவனை கவலை கொள்ள செய்தது. தன்னுடைய சர்ட்டை கழட்டி முகிலுக்கு போர்த்திவிட்டான்.அருகில் தண்ணீர் எடுத்து அவன் முகம் கழுவிட்டு அவகிட்ட சென்றான். முகிலை மயக்கம் தெளிய வைத்து இருந்த நிலையை சொல்லி சமாதானப்படுத்தினான்.
அவளோ இனியனின் நினைவில் புலம்பினாள். இளாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இனியனை அடையாளம் கூட தெரியவில்லை. ஆனால் அந்த இனியன் கூறியது மட்டுமே நினைவில் இருந்தது.
"இளா என்னோட மூஞ்சுறுவ நல்ல பாத்துக்கோ நான் திரும்பி வரும்வரை. இப்போ என்னோட பொண்டாட்டி அவ . பாத்துக்கோ "
பொண்டாட்டி யாருக்கு யாரு பொண்டாட்டி அவன் குழம்பிப்போய் அவளை பார்த்தான்.
அவள் செயினோடு கரைந்துகொண்டு இருந்தாள்.
அந்த செயின் தாலிக்கொடி போல் இருந்தது.அதில் ஐ அண்ட் எம் நடுவில் கோர்த்து இருந்தது
அவனைஅறியாமலே இனியன் அண்ட் முகில் என்று கூறினான்.
அவர்களிருவரும் நடந்ததை பகிர்ந்துகொண்டு வீடு வந்து சேர்ந்தனர். ஒருவரும் அறியாமல் அனைத்தையும் மறைத்தனர்.
அனைவரிடமும் சிறுவிபத்து என்று கூறி சமாளித்தனர். அதற்குப்பிறகு இருவரிடமும் மிகப்பெரிய மாற்றம் இருந்தது. இருவரும் கடனே என்று 8 நாட்களும் வாழ்ந்தனர்.


இன்று இளாவுடைய திருமணநாள்.

காலை முகூர்த்தத்துக்கு தேவையானவற்றை எடுத்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர்.
முகிலோ இனியன் கெடைக்கணும்னு தன்னை உருகி தவமிருந்தாள்.
இது முகிலா என ஆச்சர்யப்படும் அளவுக்கு அமைதியாக இருந்தாள்.
அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர் மூவரைத்தவிர. இளா,முகில், மகி.
மகி , ஏதோ பிரச்சனைன்னு யூகித்தான். இளாவிடத்தும், முகிலிடத்தும் ஒரு பதிலும் இல்லை.
அதனால் அவனும் முயற்சி பண்ணி அவர்களை இயல்பாக்க முயன்றான்.
பொம்மைபோல் இருப்பவளை என்ன செய்வதுஎன்று குழம்பி கல்யாண வேலைகளை பார்க்க தொடங்கினான்.

கல்யாணமேடைல ஐயர் " பொண்ண கூட்டிட்டு வாங்கோ ,முகூர்த்தத்துக்கு நாழி ஆயிட்டு " சொல்லிட்டு மந்திரம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போது ராமசாமி " யோவ் ஐயரே , கல்யாணத்த நிறுத்தியா " சொல்லிவிட்டு கத்திக்கொண்டு மணமேடை அருகே வருகிறார்.

இளாவை பார்த்து " உன்ன நல்லவன்னு நெனச்சேன் நீ இப்புடி பண்ணிபுட்டியேலே "
ஒரு கட்டு போட்டோவை அவனிடத்து தருகிறார். அதை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைகிறான்.
எல்லாரும் ஒரு ரூமுக்குள் சென்று இளாவிடமும் முகிலிடமும் கேள்விமேல் கேள்வி கேக்கின்றனர்.
முகிலோ அதை பார்த்து அதிர்ச்சியில் மௌனமாயிருந்தாள்.
"இளா என்னடா இது " என்றார் விசாலாட்சி.
"..."
"பேசுடா எதாவது பேசுடா" அப்படினு இளாவை பெல்ட்டால் விளாசித்தள்ளினர் சுந்தரம்.
"ஐயோ என்னோட மானம் போச்சே இப்புடி பண்ணுவேன்னு எதிர்ப்பாக்கலடா " இளா வீட்டினரும் நிகிதா வீட்டினரும் அவர்களை திட்டி தீர்த்தனர்.

முகிலோட அம்மாவும் அப்பாவும் ஏதும் பேசாமல் மூலையில் கண்ணீர் விட்டு கொண்டு இருந்தனர்.
"எல்லாரும் அமைதியா இருங்க , இந்த போட்டோ உண்மையா பொய்யானு தெரியாது எனக்கு . ஆனா என்னோட பேரன் இளாவும் சரி முகிலும் சரி உண்மையானவங்க .நீங்க எல்லாரும் நம்புனா நம்புங்க இல்லாட்டி போங்க" கற்பகம் சொல்லிவிட்டு நிகிதா அறைக்கு சென்றார்.
நிகிதாவை அதே ரூமிற்கு அழைத்துச்சென்று அந்த போட்டோவை காட்டி கற்பகம் அவளை பார்த்து "நம்புறியா இத " என்று கேட்டார்.

அந்த போட்டோவை பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். ரமேஷ் ஏன் இப்படி செஞ்சான். ஒரு நல்லவன் இப்படி செய்யலாமா என குழம்பி மௌனமானாள்.

"பாட்டி நீங்க எங்களை நம்புறீங்களா?" என்றான் இளா.
பாட்டி ,போடா போக்கிரிப்பயலே, உங்கள நம்பாம வேற யாரை நம்ப போறேன்"
இது எல்லாத்தையும் கேட்ட முகில் பாட்டி காலில் விழுந்து " என்ன மன்னிச்சுடு பாட்டி ,இந்த பாவி இளா வாழ்க்கையும் கஷ்டப்படுத்துறேன் " கதறினாள்.

அப்போது உள்ள வந்த மகி, நடந்ததை அறிந்து , கதறியவளை அரவணைத்து " நான் நம்புறேன் குட்டிமா "
முகில் " அதுல இருக்குறது நானும் இளாவும்தான் "என்று சொல்லி முடிக்கையில் அவளது கன்னத்தில் ஒரு அறைவிட்டார் சிவா.
ரதியோ " நான் பெத்த பொண்ணு செத்து போச்சுடி , வாங்க தண்ணி ஊத்திட்டு வரலாம் "சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்தனர்.
தாத்தாவும் பாட்டியும் மகியும் எவ்ளோ சொல்லிப்பார்த்தும் அவர்கள் கேட்கவில்லை.
முகிலோ அதில் செத்துவிட்டாள்.
சுந்தரமும் விசாவும் " இளா உன்ன எங்களால மன்னிக்க முடியாது, ஆன முகிலை மருமகளா ஏத்துகிறோம். போய் அவ கழுத்துல தாலிகட்டிட்டு வா "
"என்னால முடியாது அப்பா ,நான் நிகிதாவை உயிர நினைக்குறேன்,முகிலை என்னால அந்த இடத்துல வச்சு பாக்க முடியாது "
அதற்குள் நிகிதா ," இளாவை நான் நம்புறேன் , எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூர்ண சந்தோஷம்"
அங்கிருந்த எல்லாரும் நிகிதாவை திட்டினர்.
இளா , " என்ன நம்புறியா , இத பாத்தும் என்ன நம்புறியா? " கண்ணீர் விட்டு கேட்டான் .
"ஆமா, நீங்க தப்பே பண்ணிடீங்கனு யாராவது சொன்னாலும் முகிலும் இளாவும் பண்ணியிருக்க மாட்டாங்கனு நான் நம்புறேன் ,நம்புவேன் எப்பவுமே"
பாட்டி அவளை நெட்டி முறித்து "அடி என் ராசாத்தி ", கல்யாணமேடைக்கு இருவரையும் கூட்டிட்டு போனார்.
"என்னால இளாவை மன்னிக்க முடியாது என்னோட பொண்ணு இந்த வீட்டு மருமகளாக
முடியாது. அப்புடி ஆனா என்னோட பொண்ணும் செத்துப்போச்சு " சொல்லிவிட்டு ராமசாமி ,அகிலா அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
பாட்டி .,தாத்தா ,மகி ,முகில் அனைவரும் சேர்ந்து இளா -நிகிதா திருமணத்தை நடத்தினர்.
இருவரும் பாட்டி தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
இளா ,அவனுடைய பெற்றவர்களை பார்த்து " புள்ளைகள நம்பாம நீங்க இந்த போட்டோவ நம்புனீங்களே அதுவே கட்டிட்டி அழுங்க . "
நிகிதாவை பார்த்து " இப்போ நான் பரமஏழை அடுத்த செட் டிரஸ் கூட நம்கிட்ட இல்ல என்னோட வரியா "
"எங்க கூப்பிட்டாலும் வருவேன்" சொல்லிட்டு அவன்மேல் சாய்ந்து கொள்கிறாள்.
மகி,"எல்லாரும் சென்னைக்கு வந்துடுங்க ,ஒண்ணா இருக்கலாம் " சொல்லிவிட்டு அனைவரும் புறப்படஏற்பாடு செய்தனர்.

இதையெல்லாம் பார்த்த ரமேஷ் ஆத்திரத்துடன் வெளியேறினான். நேராக அந்த நெடிய உருவத்தை அடைத்து வைத்துஇருந்த இடத்திற்கு சென்றான்.
அவனை கண்டபடி அடித்து "முகில்கிட்ட அந்த போட்டோல இருக்குறது நானும் இளாவும் தான்னு சொல்லு இல்லேன்னா உன்ன உயிரோட பார்க்கமுடியாதுனு சொல்லி அவளும் சொல்லியும் நிகிதா அந்த பொட்டச்சி இளாவ கட்டிக்கிட்டா .
என்ன பார்த்த லூஸு மாறி தெரியுதா அவளுக்கு .சும்மா விடமாட்டேன்டா உன்ன ,இளாவை ,முகிலை அப்புறம் அந்த நிகிதாவ. எல்லாத்தையும் கொன்னு .. இல்ல கொன்னுட்டா ஈஸியா செத்து போயிடுவீங்க ..உயிரோட நீங்க எல்லாரும் சாகனும் .. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ,உன்ன கொன்னுட்டா முகில் உயிரோட செத்துருவா " குரோதத்துடன் மொழிந்து அவனை சரமாரியாக தன் கத்தியால் குத்தி பக்கத்தில் உள்ள ஆற்றில் தூக்கி போட்டான்.

அவன் செத்துவிட்டான் என்று முகிலுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அந்த போனையும் தூக்கி வீசி எறிந்தான்.

எப்படியும் இந்த நியூஸ் கிடைச்ச முகில் பைத்தியம் ஆகிடுவா . இளாகிட்ட நிகிதாவ பத்தி சொன்ன அவ வாழ்க்கை அதோட முடிஞ்சுரும்..ஹஹஹஹா என்று பழிவாங்கிய வெறியில் சிரித்தான்.

இளாவிற்கு போன் செய்து ரமேஷ் நிகிதா பற்றி கூறினான்.
ரமேஷ் " இதை நீ நம்பமாட்டாய்னு எனக்கு தெரியும் .. நீ நிகிதா கிட்டவே கேட்டு தெரிஞ்சுக்கோ "சொல்லிவிட்டு போனை கட் செய்தான்.

எல்லாரையும் பழிவாங்கிய திருப்தியில் அம்மாவிற்கு போன் செய்து அவர்கள் பாத்த பொண்ணை கல்யாணம் செய்ய சம்மதித்தான்.

இந்த சந்தோசத்தை கொண்டாட தண்ணி அடிக்க தொடங்கினான்.

விதி அவனோடு சேர்ந்து அதன் சந்தோஷத்தை கொண்டாடியது.
 
Status
Not open for further replies.
Top