All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "தடுமாற்றம் தாங்கல" - கதை திரி

Status
Not open for further replies.

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏 🙏 ....

அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன். இத கொஞ்சம் பெரிய கதையா எழுதலாம்னு எண்ணம். நம்ம பெரிய கதைனா ஒரு 30 31 தான். கடைசியா எழுதுன இரண்டும் சின்னதா 10 12லயே முடிஞ்சி போச்சி. அதான்.

இந்த மாறி கதை இதுக்கு முன்ன வந்து இருக்கலாம். இல்ல வராமலும் இருக்கலாம். ஆனா இந்த கான்செப்க்ல எழுதனும்னு தோணிடுச்சி. அதான்.

கதை என்னனா...

20220730_090401.jpg

தனக்கு என்ன தேவைனே ஒரு கிளியர் ஐடியா இல்லாம சொல்வார் பேச்ச கேட்டு நடக்கற பொண்ணு...

தனக்குனு கிடைச்சது சின்னதோ பெரிசோ அதை புதையலா பாத்துகற பையன்...

இவங்க இரண்டு பேரும் வாழ்க்கை எப்படி ஒன்னு சேருராங்க?? இவங்க வாழ்க்கை எப்படி போகுது?? என்ன நடக்குது?? அப்படிங்கறது தான் கதை. விரைவில் அத்தியாத்தோட வரேன். இது எப்பவும் போல ஞாயிறு அன்று வரும்.

மத்த கதை போல இதுக்கும் உங்க ஆதரவை நல்கும் எழுத்தாளர்
திரா ஆனந்த் 🍀.
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏🙏 ....

இதோ அத்தியாயம் 1 உடன் வந்து விட்டேன்.

தடுமாற்றம் - 1

தபால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தான் குரு பிரசாத். வயது கிட்டதட்ட 34 இருக்கும். ராமசாமி - திலகா தம்பதியினரின் மூத்த மகன்.


ஏறு நெற்றி... மேலும் முன் பக்கம் முடிகளும் சற்று குறைந்து தான் இருக்கும். ஆனால் பார்ப்பவர்கள் யாரும் அவனை குறை சொல்லும் அளவு இருக்க மாட்டான். இரசிக்க தக்கவன் தான். நம்மில் ஒருவன் தான்.

தபால் அலுவலகத்தில் கணக்கு ஆரம்பித்து சுமாராக இரண்டு வருடம் ஆகி இருக்கும். மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அதில் போட்டு கொண்டு வருகிறான்.

தனது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைத்து கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு சில தூரம் கடந்து இருப்பான். அவனுக்கு எதிரே ஒரு சின்ன மிதிவண்டியில் ஒரு சிறுவன் வந்து கொண்டு இருந்தான்.

சரியாக இருவரும் எதிர் எதிரே இருக்க, குரு சாலையின் ஓரம் நகர்ந்து அந்த மிதிவண்டி செல்ல வழி விட்டு, போகும் அந்த சிறுவனையே பார்த்து கொண்டு இருந்தான்.

பின்னர் பெரு மூச்சுடன் தனது அன்றாட வாழ்க்கையை வாழ சென்றான்.

கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை வைத்து நடத்துகிறான் குரு பிரசாத். அங்கே சில மாணவர்கள் அவனிடம் சி, சி++, ஜாவா, ஜெ எஸ், பைதான் போன்ற மென்பொருள் மொழிகளை கற்று வருகின்றனர். அது மட்டுமில்லாமல்
வகுப்பு போக மற்ற நேரங்களில் அதை ப்ரசிங் சென்டராகவும், சில மாணவர்களுக்கு அவர்களது மினி ப்ராஜெக்டிலும் உதவி செய்கிறான். அருகிலே பிரபல பொறியியல் கல்லூரி இருப்பதால் அவனுக்கு வாடிக்கையாளர்களுக்கு குறைவில்லை.

அவன் அங்கிருந்து நகர்வதை பார்த்த ஒருவன், "எப்பா குரு என்ன பாத்துட்டு ஒன்னும் பேசாம போறானு வருத்தமா??" என்று கேட்டான். அவன் குருவின் பால்ய காலம் தொட்டே நண்பனான சம்பத்.

"இல்லடா... நான் யாருனு அவனுக்கு தெரியுமோ என்னவோ!!. இல்ல தெரிஞ்சாலும் என்னனு சொல்லி வச்சி இருக்காங்கனு யாருக்கு தெரியும்" என்று அந்த சிறுவனை விட்டு கொடுக்காமல் பேசினான் குரு.

"என்னவோ போடா!!" என்று அவன் தோளை தட்டி கூறி விட்டு, "எங்கடா போற?? கம்ப்யூட்டர் சென்டருக்கா??" என்று கேட்டான் சம்பத்.

"ஆமா டா... பசங்க வந்துடுவாங்க" என்று சொன்னான் குரு.

"அப்படியே வழில என்ன நம்ம வேலு ஸ்டோர்ஸ் பக்கத்துல இறக்கி விட்டுடு" என்று சொல்லி, குருவின் இரு சக்கர வாகனத்தின் பின்னே தொத்தி கொண்டான் சம்பத்.

அவனை இறக்கி விட்டுட்டு, தனது கடையை/டியூசன்/பிரவுசிங் சென்டரை திறந்தான்.

"அண்ணா எங்களுக்கு நாளைக்கு கேம்பஸ் இன்டர்வியூ இருக்கு ணா. காலேஜ்லயும் நிறைய டிரைனிங் கொடுத்தாங்க. நீங்களும் எதுனா சொல்லி கொடுங்கணா" என்று கேட்டான் ஒரு இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் கேட்டான்.

எல்லா கல்லூரியும் போல ப்ளேஸ்மெண்ட் டிரைனிங் என்ற ஒன்று அவர்களது கல்லூரியிலும் இருந்தது. அதையும் தாண்டி எதையாவது கற்று கொள்ள குருவை சுற்றி அமர்ந்தனர் அவர்கள்.

---------------

அதே ஊரில் ஒரு வீட்டில்...

வாணிஸ்ரீ தனது இரண்டு வயது மகளை வைத்து கொஞ்சி கொண்டு இருந்தாள். அப்போது தான் அவளது தாய் சின்னவளை குளிப்பாட்டி விட்டு, உடல் முழுதும் பவுடர் போட்டு நெற்றி, கன்னம், உள்ளங்ககை மற்றும் உள்ளங்கால்களை மை வைத்து விட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.


"அம்மு குட்டி... அழகு குட்டி" என்று வாணி சின்னவளை கொஞ்ச, குழந்தையோ பொக்கை வாயை திறந்து சிரித்து கொண்டு இருந்தது.

"வாணி இந்தா சாப்பிடு" என்று காலை உணவை ஒரு தட்டில் போட்டு வந்து கொடுத்தாள், வாணியின் தாய் சாந்தி.

குழந்தையை தரையில் படுக்க வைத்து விட்டு, உணவை வாங்கி உண்டாள். இன்று வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு ஊருக்கு வந்து இருந்தாள் வாணி. அதனால் எப்போதும் போல் அரக்க பரக்க உண்ணாமல், பொறுமையாய் சாப்பிட்டாள்.

வாணிஸ்ரீ, சாந்தி - களியபெருமாள் தம்பதியின் மூத்த மகள். இருபத்தி எட்டு வயது மங்கை. அவளுக்கு இரு பிள்ளை செல்வங்கள். மூத்தவன் ஆண் குழந்தை. ஏழு வயது ஆகிறது. பெயர் பரத். இரண்டாவது பெண். இரண்டு வயதாகிறது. பெயர் கனிகா. போட்டி தேர்வு எழுதி, அரசு பணியில் கடந்த மூன்று வருடங்களாக பணி புரிந்து வருகிறாள். அவள் தற்போது இந்த ஊரில் இல்லை. அவளது வேலை திருநெல்வேலியில் தான். அங்கே தான் வசித்து வருகிறாள். பிள்ளை செல்வங்கள் இரண்டும் சாந்தியிடம் தான் வளர்கின்றன.

வாணிக்கு ஒரு தம்பி இருக்கிறான், அவன் இப்போது தான் கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கின்றான்.

"டேய்... நாளைக்கு உனக்கு கேம்பஸ் இன்டர்வியூ இருக்கு தான??!!. ப்ரிப்பேர் பண்ணிட்டயா??. எல்லாம் ஓகே வா??" என்று அங்கே தரையில் அமர்ந்து உண்டு கொண்டு இருந்த, தனது தம்பி ஸ்ரீநாத்திடம் கேட்டாள்.

"ம்ம்ம்.... ஆச்சி ஆச்சி" என்று பட்டும் படாமல் பேசினான்.

வாணிக்கு அதில் எந்த பெரிய கவலையும், இந்த இரண்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் தான். இரண்டு வருடங்களுக்கு முன் எல்லாம் இவளை பார்த்தாலே முறைத்து விட்டு செல்வான். தற்போது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறான்.

அப்போது தயிர் வாங்க கடைக்கு சின்ன மிதிவண்டியில் சென்று இருந்த பரத், வீட்டிற்கு வந்து சைக்கிளை நிறுத்தி விட்டு தயிரை தனது பாட்டி சாந்தியிடம் கொடுத்தான்.

தயிர் பாக்கெட்டை கழுவி விட்டு, அதை கட் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்த இருவருக்கும் ஊற்றி, உப்பு போட்டார் சாந்தி.

அடுத்து மற்றொரு தட்டில் சுடு சாதம் போட்டு, தயிர் விட்டு பிசைந்து, பொறியலையும் வைத்து பரத்திடம் சாந்தி தர, அதை வாங்கி உண்டான்.

பிறகு களியபெருமாள் அவனை பள்ளியில் சென்று விட்டு விட்டு, தனது வேலையை பார்க்க சென்றார்.

--------------

அதே ஊரில் மற்றொரு வீட்டில், ராமசாமி உண்டு கொண்டு இருக்க, திலகா பரிமாறி கொண்டு இருந்தார்.

"என்னங்க!!! அவனை இப்படியே விட்டுட முடியுமா??" என்று கேட்டார் திலகா.

"என்ன பண்ண சொல்லற திலகா?? சொன்னா கேக்கற பிறவியா அவன்??" என்று கேட்டார்.

"இதுக்கு தான் கல்யாணம் பண்ணும் போதே தலபாடா அடிச்சிகிட்டேன். யாரு கேட்டா??" என்று மூக்கை உறிஞ்சியவாறே பேசினார் திலகா.

"அவன் மட்டும் எடுத்துமே சரினு சொல்லிட்டானா??. என்ன என்ன பேசி அவன் மனச மாத்தி சரி சொல்ல வச்சாங்க!! ஆனா இப்ப அவன் தான் யாரும் இல்லாம இருக்கான்" என்று ராமசாமியும் புலம்பினார்.

அந்த அங்கே வந்த சுபலட்சுமியோ, "அம்மா... ஏன்மா சாப்பிடற நேரத்துல இத பேசற!!!" என்று தனது தாயிடம் சொல்லி விட்டு, "அப்பா... நீ முதல்ல சாப்பிடு... அப்பறம் எல்லாம் பேசலாம். இன்னிக்கு அவன் வரட்டும் நானே கேக்கறேன்" என்று சொன்னாள்.

சுபலட்சுமி, ராமசாமி மற்றும் திலகாவின் இளைய மகள் மற்றும் ஒரே பெண் குழந்தை. குருவின் தங்கை. சுபாவுக்கு கல்யாணம் முடிந்து கிட்டதட்ட ஆறு வருடங்கள் முடிய போகிறது. சுபாவுக்கு இரு பெண் குழந்தைகள். அவளது புகுந்த வீடு... அவள் வீடு என்று குறிப்பிட வேண்டுமோ, ஆமாம். திருமணத்திற்கு பின் இத்தனை நாளாய் அவள் வீடாய் இருந்தது, பிறந்த வீடு என்ற அடை மொழியுடன் தானே குறிப்பிடப்படும். சரி... சுபாவின் வீடு ராமசாமி - திலகாவின் வீட்டில் இருந்து இரு தெருக்களே தள்ளி இருக்கிறது. அதனால் அடிக்கடி வந்து செல்வாள்.

இவர்கள் இத்தனை நேரமாக பேசி கொண்டு இருந்தது வேறு யாரை பற்றியும் அல்ல. நமது கதையின் முக்கிய கதாபாத்திரமான குருவை பற்றி தான்.

அதுவும் அவனுக்கு திருமணம் செய்து வைப்பதை பற்றி தான் பேசி கொண்டு இருந்தனர். அவனது முதல் திருமணம் தான் சரியாய் அமையவில்லை. இதையாவது நன்றாய் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஆனால் அவன் அதற்கு பிடி கொடுத்தால் தானே... வாயில் வைத்தால் வழுக்கி கொண்டு போகும் அல்வாவை போல தப்பித்து கொண்டு இருந்தான். அதை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் என்ன பெற்றோர்கள். அதனால் அவனது சம்மதத்தை கேட்காமல், அவன் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த பெண் கலைச்செல்வி.

"சரி நான் அந்த புரோக்கர பாத்து மத்த சேதி எல்லாம் பேசிட்டு வரேன்" என்று ராமசாமி, திலகா மற்றும் சுபாவிடம் சொல்லி கொண்டு கிளம்பினார்.

"அம்மா பொண்ண பத்தி நல்லா விசாரிச்சிட்டயா??" என்று கேட்டாள் சுபா.

"ம்ம்ம்... எல்லாம் ஆச்சி... அந்த பிள்ளைக்கி கல்யாணம் முடிந்து ஒரு ஒரு வருடம் தான் வாழ்ந்து இருப்பா. அதுக்குள்ள புருஷன் செத்திட்டானாம். குழந்த எல்லாம் எதும் இல்ல. 23 வயசு தான் ஆவுது. அப்ப பக்கமும் பெருசா எதும் பாக்கல... நம்மளும் எதும் பாக்கல. அதனால ஒத்து வரும்னு தான் நினைக்கறேன்" என்று சொன்னார் திலகா.

"அது எல்லாம் சரி மா!!!. அந்த புள்ள குணம் எப்படி??" என்று கேட்டாள் சுபா.

"நல்ல அமைதியா புள்ளனு சொன்னாங்க. இதுவரைக்கும் எந்த சண்ட சச்சரவும் இல்லனு தான் சொன்னாங்க. நம்மளும் ஒன்னும் அந்த புள்ளய ஒதுக்கி வைக்க போறது இல்லயே!!!. எம்புள்ள வாழ்க்க பட்டு போகாம, தளைக்க வர போற புள்ள நானும் பாத்துக்க மாட்டனா!!" என்று அந்த பெண்ணை பற்றி சொல்லி தனது நிலையும் சொன்னார் திலகா.

"மொதல்லயும் இப்படி தான மா இருந்த!!!. எவ்வளவோ பண்ண, ஆனா என்ன ஆச்சி??. மொத மாறி இப்ப எதுவும் ஆகாது இல்ல மா. அண்ணே பாவம் மா" என்று வேதனையாக சொன்னாள் சுபா.

"ச்சே... நல்ல பேச்சு அப்போ அந்த இலவ பத்தி பேசாத... எம்புள்ள அது பாட்டுக்கு இருந்துச்சி. அவன் அத்தகாரி என்ன என்னவோ பேசி, அவ புள்ளக்கு கல்யாணம் பண்ணி வச்சா!!!. இப்ப அவன் வாழ்க்கய இப்படி பண்ணிட்டு, அவ நல்லா இருக்கா!!!. அப்படியேவா இருந்துடுவா??. பண்ணதுக்கு எல்லாம் அனுபவிக்கா போவ மாட்டா" என்று பேச வேண்டாம் என்று சொல்லி ஆதங்கத்தில் அவரே பேசி கொண்டு இருந்தார்.

சுபாவோ, 'இதுக்கு மேல போனா அம்மா இன்னும் இன்னும் பேசி வருத்தம் தான் படுவாங்க. ச்சே நானும் வாய் இருக்க மாட்டாத அத வேற நெனப்பு பண்ணி விட்டுட்டேன்' என்று தனக்குள்ளே திட்டி கொண்டு, தனது தாயை சமாதான படுத்த ஆரம்பித்தாள்.

"சரி சரி... விடுமா" என்று சொல்லி விட்டு, "அண்ணங்கிட்ட என்ன சொல்லி சம்மதம் வாங்கிறது. அது பாட்டுக்கு எதேதோ சொல்லி பினாத்திகிட்டு கல்யாணமே கட்ட மாட்டேனுட்டு திரியுதே" என்று பேச்சை மாற்றினாள் சுபா.

அது நன்றாய் வேலை செய்தது. என்ன செய்யலாம் என்ற யோசனைக்கு போய் விட்டார் அவர்.

தாங்கும்...

படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...


"தடுமாற்றம் தாங்கல" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏🙏 ....

இதோ அத்தியாயம் 2 உடன் வந்து விட்டேன்.

தடுமாற்றம் 2

ராமசாமி தரகரிடம் பேசி விட்டு, இந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாக சொல்லி விட்டும் வந்து விட்டார். எப்படியாவது தலயால தண்ணி குடிச்சாவது அவன சம்மதிக்க வைக்கனும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

'இன்னும் இப்படியே எல்லாம் இவன வுட்டு வைக்க போறீங்களா??. உங்களுக்குனு ஒரு வாரிசு வேணாமா??. இப்பயே வயசு 35 ஆவ போவுது. இப்பவே இரண்டாவது கல்யாணத்துக்கு கொழந்த இல்லாம பொண்ணு கெடைக்கறது முடியாத காரியம். இன்னும் போனா கல்யாணமே பண்ண முடியாது போனா கூட சொல்லறதுக்கு இல்ல' என்று இவரது உறவுகள் சொல்ல மளமளவென வேலைகளை ஆரம்பித்து விட்டார் ராமசாமி.

அது தான் தற்போது குருவிடம் கூட கலந்து ஆலோசிக்காமல், இவர்களே முடிவு எடுத்தது.

குருவின் கடையில், கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்கள் வந்த வேலை முடிந்து கிளம்பினர்.

அங்கே குருவை தவிர இன்னொரு பெண்ணையும் பணியில் அமர்த்தி இருந்தான். அவர் பெயர் அனிதா. இவர்கள் வீட்டிற்கு அருகில் தான் குருவின் கடை இருக்கிறது.

வீட்டில் சும்மா இருப்பதற்கு இங்கே வேலைக்கு வரலாம் என்று வந்து இருக்கிறாள். 22 வயது ஆகிறது. இவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

"அண்ணா... கணக்கு எல்லாம் எழுதிட்டேன் ணா. கரெண்ட் பில் கட்டன ரசிது மட்டும் கொடுத்தா அதுல சேத்து வச்சிடுவேன்" என்று குருவிடம் கேட்டாள் அனிதா.

"சரி டா. நான் வச்சிக்கறேன். நீ போய் சாப்பிட்டு வா" என்று அவளை மதிய உணவு உண்ண அனுப்பினான் குரு.

"ம்ம்ம்... சரி ணா" என்று சொல்லி விட்டு அருகில் இருந்த அவள் வீட்டுக்கு சென்றாள்.

அவள் வந்தவுடன் தான் குரு உணவு உண்ண தனது இல்லம் செல்வான்.

அதே போல் அவள் முடித்து வந்தவுடன், அவன் மதிய உணவுக்கு செல்ல, அங்கே ராமசாமி, திலகா மட்டுமே இருந்தனர். சுபா தனது இல்லம் சென்று விட்டாள்.

"கை கால் கழுவிட்டு வா... சாப்பிடுவயாம்" என்று சொல்லி கொண்டே தங்கள் உரையாடலை நிறுத்தி விட்டு குருவை கவனிக்க சென்றார் திலகா.

சுடு சோற்றில், நிறைய பருப்பு குழம்பு ஊற்றி, அதில் முருங்கை இலை போட்டு காய்ச்சிய நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டான். அந்த நெய்யின் வாசம் மூக்கை துளைக்க ஒரு நொடி உலகம் மறந்து தன் துக்கம் கலைந்து அதை அனுபவித்தான். சிறு பிள்ளையில் அவனது விருப்ப உணவு இது.

அவ்வளவு தான் மீண்டும் அவன் முகம் பழையபடி மாறி, உணவை உண்டான்.

ராமசாமி திலகாவிடம் கண்ணசைக்க, திலகா 'மொத சாப்புட்டும். அப்பறம் பேசறேன்' என்று பதில் சைகை செய்தார்.

குருவும் உண்டு முடித்து விட்டு, அவர்களை பார்த்து அமர்ந்து இருந்தான்.

திலகா, "தம்பி ஒனக்கு கல்யாணம் பண்ணிலாம் நினைக்கறோம்" என்று சொன்னார்.

"எனக்கு தான் ஏற்கனவே ஆகிடுச்சே மா" என்று சொன்னான் குரு.

"அது தான் நிலைக்கலையே!!" - பதிலுக்கு திலகா.

"சரி... அதுக்கு??" - குரு.

"அதுக்கு.... அப்படியே விட்டுட முடியுமா??. உனக்குனு ஒரு வாழ்க்க வேணாமா??" என்று திலகா ஆதங்கத்துடன் சற்றே கோபத்துடன் கேட்டார்.

"என் வாழ்க்கைக்கு என்ன?? நல்லா தான் இருக்கு" என்று இலகுவாக சொன்னான் குரு.

"என்ன நல்லா நாளைக்கு உன் பேரு சொல்ல ஒரு புள்ள வேணாமா??. எங்களுக்கே ஒன்னுன்னா உன்ன பாக்க யாரும் வேணாமா??" என்று கவலையுடன் கேட்டார் திலகா.

"அப்படி எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும் என்ன பாத்துக்க என்னால முடியும். அப்பறம் என்ன?? ஆன்... புள்ள... எனக்கு தான் இருக்கே!!. அப்பறம் என்ன??" என்று பதிலும் கேள்வியுமாய் சொன்னான் குரு.

"என்ன இருக்கு?? எங்க இருக்கு?? உன்கிட்ட இருக்கா??. அந்த புள்ளக்கு நீ தான் அது அப்பனாவது தெரியுமா??. இப்படியே தனி மரமா தான் இருப்பேன் சொல்லிட்டு இருக்க!!" என்று ஏறிய குரலில் வேக வேகமாக கோபமாக கேட்டார் திலகா. அவரால் அவரையே அடக்கி கொள்ள முடியவில்லை... பைய வாழக்க இப்படி ஆகி போச்சே என்று.

"என்ன மா என்கிட்ட இல்ல??.. ம்ம்ம்??.. எனக்கானது என்னைக்கு ஆனாலும் என்கிட்ட வந்து சேரும். அப்ப அத ஏத்துக்க என்கிட்ட எதுவும் தடையா இருக்க கூடாது!!. நீ சொல்லறனு இப்ப கல்யாணம் பண்ணா நாளைக்கு என்ன தேடி வரும் போது எப்படி ஏதுக்க முடியும்??" என்று குருவும் கோபமாக கேட்டான்.

திலகா கண்ணீருடன் இருக்க ராமசாமி தான், "புரியாம கிறுக்கு மாறி பேசாதடா??. எப்படி உன்ன தேடி வரும்??. அப்டி எந்த நம்பிக்கைல சொல்லற??" என்று கேட்டார்.

"வரும்னா வரும். அவ்வளவு தான். அந்த நம்பிக்க எனக்கு இருக்கு. அப்படி இல்லனா வரும்ங்கற நம்பிக்கல வாழந்துடுவேன். போதுமா??" என்று கோவமாக சொன்னான் குரு.


"சத்தியமா உனக்கு கிறுக்கு தான் புடிச்சி இருக்கு. உன் வாழ்க்கைல எங்களுக்கு இருக்க அக்கறல கொஞ்சம் கூட ஒனக்கு இல்லையா??" என்று ஆதங்கமாக கேட்டார் ராமசாமி.

"அத பத்தி உங்களுக்கு என்ன??. இனி இந்த மாறி எல்லாம் பேசிட்டு என்கிட்ட வராதீங்க. எனக்கு வாழ்க்கைய பாத்துக்க எனக்கு தெரியும். நீங்க இனி அதுல தலயிட வேணாம்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் குரு.

அவன் கிளம்பியதும், "என்னங்க?? இப்படி சொல்லிட்டு போறான். நம்ம என்ன அவனுக்கு கெட்டதா பண்ண போறோம். அவனும் நல்லா இருக்கனும்னு தான பண்ணறோம். நம்மளயே அவன் வாழ்க்கைல தலையிட வேணாம் சொல்லிட்டு போறான் " என்று மிக மிக வருத்தமாக கேட்டார் திலகா.

"நீ வருத்தப்படதா!!. அவனுக்கு மதம் ஏறி போய் கிடக்கு. இப்ப ஒன்னும் தெரியாது. பின்னாடி தான் நம்ம சொல்லறது புரியும். அப்பவும் நம்ம மட்டும் தான் கூட இருப்போம். பாத்துக்கலாம். அவனுக்கு புடிச்ச மாறி இருந்துட்டு போகட்டும். நான் போய் அந்த புரோக்கர் கிட்ட வேணாம்னு சொல்லிட்டு வந்துடறேன்" என்று திலகாவ சின்ன ஆறுதல் சொல்லி விட்டு, அவரும் வெளியே கிளம்பி விட்டார்.

"சனியனுங்க... என்னிக்கு அத கல்யாணம் பண்ணானோ அன்னிக்கு புடிச்சது பீட... நல்ல உத்தியோகத்துல சென்னைல இருந்தான். வந்து சேந்தது... வேலயும் போய் அது கூடவும் இல்லாம... இப்ப இவன் வாழ்க்க தான் அந்தரத்துல தொங்குது... தலப்பாடா அடிச்சிக்கிட்டேன்... வேணாம்னு கேட்டானா!!" என்று புலம்பி கொண்டே, அவர்கள் சாப்பிட்டு விட்டு சென்ற பின் குழம்பு குண்டா, சோத்து குண்டா என்று எல்லாவற்றையும் சமையலறைக்கு எடுத்து சென்றார்.

பின் ஜலதாரியில் இருந்த பாத்திரங்களை துலக்கி கொண்டே, "இங்க இருந்த வரை ஒரு வேல சொல்லி இருப்பனா... நாந்தான் அவளுக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரி... தனி குடுத்தனம் போயாச்சும் நல்லா இருப்பானு பாத்தா... அதுக்கும் ஒத்து வரல அந்த மவராசி... இப்ப அதுங்க எல்லாம் நல்லா இருக்கு... இவன் தான் பைத்தியம் புடிச்சி அலையுறான்" என்று புலம்பினார்.

குருவிடம் பேசி கல்யாணத்துக்கு ஒத்து வரல என்றவுடன், அந்த முதல் திருமணம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று, அதையும் அவளையும் திட்டி கொண்டு இருந்தார் திலகா. வேறு என்ன தான் செய்ய முடியும் அவரால் மட்டும். முக்கால் வாசி இல்லதரசிகளின் நிலை அது தானே.

வெளியே சென்று இருந்த ராமசாமி, வழியிலே அந்த புரோக்கரை பார்த்தார்.

"பொண்ணு வீட்டுல எல்லாம் ஓகேவாம். எப்ப பொண்ணு பாக்க வறீங்கனு கேட்டாங்க!!" என்று ராமசாமியிடம் சொன்னார் அந்த புரோக்கர்.

சிறிது தயங்கிய ராமசாமி, "இல்ல... வேண்டாம்... இப்ப கல்யாணம் பண்ணல" என்று சொல்லி விட்டார்.

"அட ஏன் சாமி... நல்ல சம்பந்தம்... இரண்டாம் கல்யாணத்துக்கு இப்படி அமையுறதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பன வேணும். எல்லாம் பொருந்தி வரப்ப ஏன் வேணாம் சொல்லுற??" என்று கேட்டார் அவர். அவருக்கு இந்த வேல ஆக வேணும். அந்த கமிஷன் தானே அவர் சம்பளம்.

"பைய வேணாம் சொல்லிட்டான்" என்று மட்டும் சொன்னார் ராமசாமி.

"ஓஓஓ... வேற எந்த மாறி பொண்ணு வேணுமாம்??" என்று கேட்டார் அவர்.

"இல்லங்க... அவனுக்கு கல்யாணம் பண்ணற மாறியே இல்ல" என்று சொன்னார் ராமசாமி.

"என்ன சாமி இது??. அவங்களா வந்தா கல்யாணம் பண்ணுங்கனு கேப்பாங்க!!. நம்ம தான் பேசி சொல்லி புரிய வக்கனும்" என்று மேலும் சொன்னார் அந்த புரோக்கர்.

"ம்ம்ம்... பாப்போங்க" என்று விட்டு சொல்லி, "சரி வரேங்க" என்று மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து அகன்று விட்டார் ராமசாமி.

வீட்டில் இருந்து கிளம்பிய குரு, மீண்டும் கடைக்கு செல்லவில்லை. தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அவர்களது ஊரின் கடைசியில் இருந்து ஒரு கரட்டுக்கு சென்றான். கரடு என்பது வேறு ஒன்றும் காலி இடம் தான். ஆனால் விவசாயம் செய்ய தகுந்த இடம் அல்ல. நிறைய கற்கள் கொண்டு இருக்கும் இடம். அதே போல் இடம் முன்பு எல்லாம் நிறைய இருக்கும். தற்போது அதை எல்லாம் வீட்டு மனைகளாக மாற்றி விற்று விட்டனர்.

அது போல் வீட்டு மனைகளாக மாறாமல் இருந்த ஒரு கரட்டுக்கு தான் சென்றான் குரு. அந்த மொத்த இடத்துக்கும் ஓரே ஒரு பெரிய மரம் தான் இருந்தது. அதிலும் நிறைய கிளைகள் / இலைகள் இல்லை. ஆனால் இவன் ஒருவனுக்கு நிழல் தரும் அளவு இருந்தது. அந்த மரத்தின் நிழலில் கீழே இருந்த கல்லில் அமர்ந்தான் குரு.

பசங்களுக்கு இது ஒரு அட்வாண்டேஜ்... ஏதேனும் கோபம் வருத்தம் இருந்தால், யாருக்கும் சொல்லாமல் செருப்பை மாட்டி கொண்டு வண்டி எடுத்து கொண்டு எங்கேனும் சென்று விடலாம். வீட்டில் இருப்பவர் தான் சண்டையினாலும் எங்க சென்றாரகள் என்ற கவலையிலும் இருப்பார்கள். அலைபேசியில் அழைத்தாலும் எடுக்க மாட்டார்கள்.

அப்படியே இரு கைகளையும் தலைக்கு பின் கோர்த்தவாறு அந்த மரத்தின் மீது சாய்ந்து கண்களை மூடி கொண்டான் குரு.

தனிமையிலே இனிமை காண முடியுமா???.. என்றால் குருவால் முடிந்தது தான். தனிமை கொடுமையாய் இருந்தாலும், தனது உறவுக்காக காத்திருப்பது ஒரு வித இனிமையாய் தான் இருந்தது அவனுக்கு. அந்த இனிமையுடனே அப்படியே கண்ணயர்ந்தான் குரு.

அவன் தூங்கட்டும். குரு பிரசாத்தின் வாழ்வில் நடந்ததை நாம் பார்த்து விட்டு வரலாம்.

தாங்கும்...

அடுத்த அத்தியாயத்தில் இருந்து கடந்த காலம் தான் வரும் தோழமைகளே... அப்ப பாக்கலாம் என்ன ஆச்சி குரு வாழ்க்கையிலனு...

படித்து விட்டு எப்படி இருக்குனு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"தடுமாற்றம் தாங்கல" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே ...

மன்னிச்சிடுங்க... இந்த ஞாயிறு கதை போட முடியாததுக்கு...

3d160120-d4d1-4f56-a655-9d437bf29dcf.png.jpg

நாங்க ஊருக்கு போய் இருந்தோம்... சொந்த காரங்க எல்லாம் வந்து இருந்தாங்க... நான் முத ஞாயித்து கிழமை நைட்டே வந்துடுவோம். நேத்து கதை எழுதி போட்டுடலாம் நினைச்சேன். அதனால தான் முன்னாடியே சொல்லல.

ஆனா எல்லாம் இருக்கோம் இருங்கனு புடிச்சி வச்சிகிட்டாங்க... அதனால நேத்து நைட் தான் வீட்டுக்கே வந்தோம்.

ஒரு கொஞ்சம் எழுதி வச்சி இருக்கேன். அத முடிச்சி இந்த வாரத்துலயே போடுறேன். இல்லனா ஞாயிறு இரண்டு அத்தியாயமா போடுறேன் தோழமைகளே...

நன்றி !!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏🙏 ....

இதோ அத்தியாயம் 3 உடன் வந்து விட்டேன்.

தடுமாற்றம் - 3

வாணி ஸ்ரீ அன்று பதட்டமாய் இருந்தாள். இன்று தான் அவள் எழுதிய மேல் நிலை பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

சும்மாவே எல்லாருக்கும் இந்த நாளில் சிறு பதட்டம் இருக்கும். இதில் வாணி வேறு நடுநிலை பொது தேர்வில் பள்ளி இரண்டாம் இடம். முதல் இடம் எடுத்த மாணவிக்கும் இவளுக்கும் ஒரு மதிப்பெண் தான் வித்தியாசம். அதிலே வாணிக்கு அவள் மீது சிறு மனத்தாங்கல்.

சரியாக பத்து பதினைந்துக்கு மதிப்பெண்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டன.

குரு தான் அவனது தெருவில் இருந்த அனைவருக்கும் மதிப்பெண்கள் பார்த்து சொல்லி கொண்டு இருந்தான்.

முதலில் வாணி மதிப்பெண் தான் பார்த்தான். பார்த்தவுடன் தனது அத்தை சாந்திக்கு போன் பண்ணி சொல்லி விட்டான்.

"அத்த... வாணி மார்க் வந்துடுச்சி. 973 மொத்தமா" என்று சொல்லி விட்டு தனி தனி பாடங்களில் எவ்வளவு மதிப்பெண்கள் என்று சொல்லி கொண்டு இருந்தான். அதை எல்லாம் ஒலி பெருக்கியில் போட்டு கேட்டு கொண்டு இருந்தாள் வாணி.

அவளது சொல்லி முடித்தவுடன், "அம்மா காவ்யாது எவ்வளவுன்னு கேளு மா" என்று சொன்னாள். காவ்யா தான் நடுநிலை பொது நிலை தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவள்.

"குரு அப்படியே இந்த நம்பருக்கும் பாத்து சொல்லேன்" என்று நம்பரை சொல்ல, "சரி அத்த... இங்க பசங்க இருக்காங்க.. அவங்களுக்கு பாத்துட்டு இத பாத்து சொல்லறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் குரு.

வாணி தனது தோழிகளுக்கு அழைத்து பேச போக, அவர்களே இவளுக்கு அழைத்தார்கள்.

"ஏய்... ஸ்கூல் பஸ்ட் மார்க் என்ன தெரியுமா??. 1087" என்று சொன்னாள் அவள்.

'அப்ப நிறைய மார்க் வித்தியாசம் தான்' என்று நினைத்து கொண்டவள், "யாரு டி அது??" என்று கேட்டாள் வாணி.



"ஏய்.. என்னடி தெரியாத மாறி கேக்கற??. நம்ம காவ்யா தான். பத்தாவதுல அவ தான் முத மார்க்னு இப்பவும் அவ தான வரனும்னு எல்லாம் எதிர் பாத்தாங்க. அதே மாறி அவ தான்" என்று சொன்னாள் அவள்.

ஏனோ அத ஏற்று கொள்ள முடியவில்லை வாணியால். வாணி முதல் மதிப்பெண் இல்லை என்பது கூட ஏற்று கொள்ள கூடியது தான். ஆனால், காவ்யா... தன் அருகிலே அமர்ந்து இருப்பவள் என்று அது சிறு சங்கடமாக தான் இருந்தது வாணிக்கு.

சாந்தி, அவரது இன்னொரு போனில் பேசி கொண்டு இருந்தார். அறிந்தவர், தெரிந்தவர், உற்றார், உறவினர் எல்லாம் அழைத்து இருந்தார்கள், வாணியின் மதிப்பெண்ணை கேட்டு. டிவில மாநில முதல் மதிப்பெண் பெற்றவரின் நேர்காணல் நடந்து கொண்டு இருந்தது.

போன் பேசி கொண்டே அந்த இடைவெளியில் களியபெருமாள், ஸ்ரீநாத் மற்றும் வாணிக்கு உணவு வைத்து வந்து தட்டை நீட்டினார் சாந்தி.

களிய பெருமாள் வாணியின் மதிப்பெண்ணை பற்றி எல்லாம் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. அவர் அப்படி தான் பட்டும் படாமல் இருப்பார்.

உண்டு விட்டு, "நான் கிளம்பறேன்" என்று தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

காவ்யாவே வாணிக்கு அழைத்தாள். ஆனால் வாணி அந்த அழைப்பை ஏற்கவில்லை. காவ்யா ஏதோ தான் நிறைய மதிப்பெண் எடுத்து விட்டேன் என்று வாணியை நக்கல் செய்ய தான் அழைக்கிறாள் என்பது போல் எண்ணி கொண்டாள் வாணி. அதனால் தான்.

மேலும் சில நேரம் கடக்க, குரு அங்கே வந்தான் சாக்லெட் வாங்கி கொண்டு.

"அத்த" என்று குரு அழைக்க, "இதோ வரேன்" என்று வெளியே வந்தார் சாந்தி.

"வாணி எங்க அத்த??" என்று கேட்டான் குரு.

எங்க என்று அவளை தேட, பின் பக்கம் கிணற்றின் பக்கத்தில் நின்று இருந்தாள் வாணி.

"ஓய்... வாணி இந்தா முட்டாய்" என்று அவளிடம் கொடுத்தான் குரு.

எதுக்கு? என்பது போல் கேள்வியாய் வாணி பார்க்க, "புரியலையா??. நம்ம நாலஞ்சு தெருவுலயே நீ தான் நிறைய மார்க். அதுவும் அந்த ஓவக்கா வூட்டு பையன் எப்படி ஆடுனான். தனியார் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டு என்னமா பீத்திட்டு இருந்துச்சி. அவன் உன்ன விட கம்மி தான்" என்று சொல்லி சாக்லெட்டை கொடுத்தான் குரு.

"என்ன அப்படியா??" என்று கேட்டு கொண்டே அந்த மிட்டாயை வாங்கி உண்டாள். இப்போது அவள் மனம் ஓரளவு சமாதானம் அடைந்து இருந்தது.

குருவும் வாணியும் அந்த அளவு நெருக்கம் கிடையாது. ஏன் சாந்தி குடும்பத்திடமே அந்தளவு நெருக்கம் இருந்தது இல்லை. ஏன் என்றால் ஏன்?? ஏதாவது உதவி தேவைப்படும் இடத்தில் குரு செய்து கொடுப்பான். அப்படி தான் இருந்தது அவர்களது உறவு நிலை. அதே போல் சாந்தி ராமசாமியின் சொந்த தங்கையும் அல்ல. ராமசாமியின் சித்தப்பா மகள் தான் சாந்தி.

அதன் பின் சில நாட்கள் கடந்தது. அதில் எந்த கல்லூரியில் எந்த பாடத்தில் சேர்க்கலாம் என்ற ஆலோசனை தான் நடந்தது. வாணியின் மதிப்பெண்ணுக்கு மருத்துவம் கிடைக்காது. பொறியியலுக்கும் முதன்மை கல்லூரிகளில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் வாணியை வெளி ஊர் அனுப்பி விடுதியில் சேர்த்து படிக்க வைக்க சாந்தி களியபெருமாள் விரும்பவில்லை.

அந்த கால கட்டத்தில் தான் ஒரு புதிய கல்லூரி அவர்கள் ஊரில் துவங்கப்பட்டது. அது தான் முதல் வருடம். எனவே ஒரு சில விரிவுரையாளர்கள் தான் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட அளவு மாணவர்களை கல்லூரியில் சேர்க்க வைக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு அந்த ஆசிரியர்களுக்கு சன்மானமும் வழங்கப்படும்.

அதன் படி அந்த ஊரில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மூளை சலவை செய்ய புறப்பட்டார்கள் சிலர். உண்மை தான். ஒரு கல்லூரி பேர் புகழ் பெற்று விட்டால் அதில் சேர்த்து விட முண்டி அடித்து கொண்டு செல்வார்கள். இது போல் ஆரம்ப கல்லூரிகள் எத்தனை தரமுடையதாய் இருந்தாலும் எல்லோரும் தயக்கம் காட்டுவார்கள். முதல் நான்கு வருடம்... அதாவது முதன்முதலில் அந்த கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் வெளியேறும் போது வேலையுடன் சென்று, நல் நிலையில் இருந்தால் தான் மேலும் அந்த கல்லூரியில் மாணவர்கள் சேர விருப்பப்படுவார்கள். அதனால் நன் மதிப்பெண் பெற்றவர்களை அந்த முதல் நான்கு வருடமும் சேர்க்க பாடுபட வேண்டும். அவர்கள் நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர, அந்தந்த கம்பெனிக்களுக்கு சென்று தங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த கோர வேண்டும்.

சரி அப்படி தேர்ந்தெடுத்த மாணவிகளில் காவ்யாவும் ஒருவள். கல்லூரி கட்டணத்தில் 75% குறைப்பு என்று சொல்லி 1050 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தவர்களை சேர சொல்லி கேட்டார்கள். இந்த கட்டணம் அவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாங்கும் அளவை விடவும் சற்று குறைவாக இருக்க, அவளது பெற்றோர் அங்கே அவளை சேர்த்து விட்டனர்.

இதற்கு முன்னரே வாணிக்கு, B.Sc (கணிதம்) சேர்த்து விட்டனர். அதுவும் நல்ல கல்லூரி என்று பெயர் பெற்றது தான். மேலும் அது பெண்கள் மட்டும் பயிலும் கல்லூரி. வாணி பள்ளி படித்ததும் பெண்கள் பள்ளி தான். அரசு நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் தான் படித்தாள் அவள்.

இரு பாலரும் படிக்கும் கல்லூரியில் அவளை சேர்க்க விரும்பவில்லை சாந்தி. அதனால் தான் நல்ல கலை கல்லூரி என்று தெரிந்து, மேலும் அது பெண்கள் கல்லூரி என்பது அந்த முடிவுக்கு வலு சேர்க்க, அந்த கல்லூரியில் சேர்த்து விட்டாள்.

காவ்யாவை பற்றி அறிந்ததும் அவளுக்கு உள்ளுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி.

"பேரே தெரியாத காலேஜ்ல சேந்து இருக்கா??. அங்க படிச்சா எப்படி சொல்லி கொடுப்பாங்களோ என்ன வேலை கிடக்குமோ என்னவோ!!. என்னையும் கூப்பிட்டாங்க. நான் தான் போகல. அவளையும் என் கூடவே பி.எஸ்சி எடுக்க சொன்னேன். எங்க??!!!. அவ தான் கேக்கல" என்று தனது மற்ற தோழிகளிடம் சொல்லி கொண்டு இருந்தாள் வாணி.

அன்று சென்னை செல்வதால், தனது துணி மணிகளை பேக் செய்து கொண்டு இருந்தான் குரு.

குரு சென்னையில், ஒரு ஐடி கம்பெனியில் பணி புரிகிறான். ஐடி கம்பெனியில் பணி புரிவது ஒரு கவுரமாக பார்க்க பட்டது அந்த ஊர் மக்களிடையே.

"சுபா போய்ட்டு வரேன்" என்று சொன்ன குரு, திலகாவிடமும் விடை பெற்றான்.

"பாத்து போ பா. ஊருக்கு போனதும் போன் போடு. வேளா வேளைக்கு சாப்பிடு. நேரத்துக்கு தூங்கு" என்று எப்போது ஊருக்கு கிளம்பினாலும் சொல்லும் வாசகத்தை சொன்னார் திலகா.

எல்லாவற்றிற்க்கும், 'சரி மா', 'சரி மா' என்று தலையை ஆட்டிய குரு, எல்லாம் சொல்லி முடித்தவுடன் இறுதியாய் தலையை பெரிதாக ஆட்டி, "போய்ட்டு வரேன் மா" என்று, சுபாவின் தலையை கலைத்து விட்டு கிளம்பினான்.



ராமசாமி, அவனை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றார்.

வழியில் பார்த்தவர்கள், "என்ன தம்பி ஊருக்கு கிளம்பியாச்சா??" என்று கேட்டு விட்டு, "பாத்து பத்தரமா போய்ட்டு வா பா" என்றும் சொல்லி விட்டு சென்றார்கள். ராமசாமியும், அவர்கள் பேசுவதற்கு ஏதுவாக வண்டியை அவ்வப்போது நிறுத்தி கொண்டு இருந்தார்.

பேருந்து நிலையம் வர, அவர்கள் ஊரில் இருந்தே பெரு நகரங்களுக்கு செல்லும் பேருந்து எதுவும் இல்லை. அதனால் டவுன் பஸ்ஸில் ஏறி பெரிய பஸ் நிலையம் செல்ல வேண்டும். அங்கே இருந்து தான் சென்னை, கோயம்பத்தூர் போன்ற பெரு நகரங்களுக்கு செல்ல முடியும்.

ராமசாமி, நேராக அந்த பேருந்து நிலையத்திற்கு தான் அழைத்து சென்றார். டவுன் பஸ்க்கு ஏன் காத்திருக்க வேண்டும்? என்று. நேரம் பார்த்து சரியாக தான் வந்து இருந்தார்கள்.

எப்போது சென்றாலும், அந்த பஸ்ஸில் தான் ஊருக்கு செல்வான் என்பதால் அதன் கண்டக்டர் குருவுக்கு நல்ல பரிச்சயம்.

"தம்பி... வண்டி கிளம்பி இன்னும் கால் மணி நேரம் இருக்கு" என்று குருவிடம் சொன்னார் அவர்.

"சரிங்க ணா" என்றவன், தன் தந்தையிடம் திரும்பி, "சரி பா. நீங்க கிளம்புங்க. நானும் பஸ்ல உக்காந்துக்கறேன்" என்று சொன்னான் குரு.

"சரி பா" என்றவர், அவனது பாக்கெட்டில் நூறு ரூபாய் தாள்கள் இரண்டை வைத்தார்.

எப்போதும் அவர் செய்வது தான் எத்தனை பெரிய வேலையில் இருந்து எவ்வளவு சம்பாதித்தாலும், வெளியே செல்லும் போது பிள்ளைகள் கையில் பணம் கொடுப்பது.

புன்னகையுடன் தந்தையிடம் விடை பெற்று பேருந்தில் ஏறினான் குரு.

தாங்கும்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"தடுமாற்றம் தாங்கல" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏🙏 ....

இதோ அத்தியாயம் 4 உடன் வந்து விட்டேன்.

தடுமாற்றம் 4

நாட்கள் ஓடி வாணி கல்லூரி செல்லும் நாளும் வந்தது. கல்லூரி செல்வதற்கு என்றே புது ஆடைகள் எல்லாம் வாங்கி இருந்தாள் அவள்.

முதல் நாள் கல்லூரி தலைக்கு குளித்து ரெடி ஆகி, காலையிலே கோவில் சென்று வணங்கி விட்டு வந்தாள். பின்னர் வீட்டில் சொல்லி விட்டு கல்லூரி பேருந்தில் ஏறி சென்றாள்.



முதல் நாள் கல்லூரி...

பள்ளியில் இருந்து வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. ஒரு வழியாக தனது வகுப்பை கண்டுபிடித்து சென்று இரண்டாவது வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அதே போல் அதே இரண்டாவது வரிசையில் வந்து இரண்டு பேர் அமர்ந்தார்கள்.

"ஹாய் நான் நித்யா" என்று ஒருத்தி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.

"ஹாய் நான் வாணி ஸ்ரீ" என்று சொன்னவள், நித்யாவுக்கு அருகில் இருந்தவளை பார்க்க, "அவ பேரு நளினி. நானும் அவளும் ஒரே ஸ்கூல் தான்" என்று சொன்னாள்.

அடுத்து என்ன பேச்சு இருக்கும் அவர்களிடத்தில் எல்லாம் மதிப்பெண் பற்றியது தான். வாணியும் தன் மதிப்பெண்ணை சொல்ல, "ஏய்... அவ்வளவு மார்க்கா?? செம்ம" என்று சொல்ல, வாணிக்கு பெருமையாக இருந்தது. அவள் இந்த கல்லூரியில் இந்த வகுப்பில் சேர்ந்ததை வரமாக நினைத்தாள்.

சாந்தி இவளை இந்த கல்லூரியில் சேர்த்ததை முதலில் நினைத்தாள். யாரோ கொடுத்த யோசனை படி தான் இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்தார்.

முதலில் வாணிக்கு, "அம்மா எல்லாரும் இன்ஜீனியரிங், ஆக்ரி அப்படி தான் மா சேருராங்க. கொஞ்ச பேரு தான் இப்படி பி எஸ் சி-ல சேருராங்க மா" என்று தான் கேள்வி பட்டதை சொன்னாள்.

ஆனால் சாந்தி, "அவங்க எல்லாம் அவ்ளோ நல்ல காலேஜ்லயா சேந்து இருக்காங்க??. இங்க இப்ப தான் ஆரம்பிச்ச காலேஜ். அக்ரி படிச்சி நீ என்ன காடு மேடு எல்லாம் அலையவா போற!!. இப்படி எதுனா படிச்சிட்டு பி.எட் படிச்சா டிச்சராவே போலாம்" என்று மண்டையை கழுவி இங்கே சேர்த்து விட்டார்.

அவளுக்கு என்ன வேண்டும் என யோசிக்கவோ தேர்ந்தெடுக்கவோ வாய்ப்பு கொடுக்கவில்லை. பள்ளியில் படிக்கும் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒன்றை தவிர அவள் மனதில் வேறு எதுவும் இல்ல. எல்லா குழந்தைகளும் சொல்வது போல் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான் இருந்தது. அது என்னவோ தெரியவில்லை மருத்துவர் என்பது மட்டும் தான் நல்ல படிப்பு என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடுகின்றனர். பின் அவர்கள் வளர்ந்து யோசிக்கும் போது தான் புரிந்து கொள்கின்றனர். தற்போது என்ன ஏது என்று யோசிக்கும் போதே தடுத்து விட்டார். அவர் சொன்னதை கேட்டு கொண்டாலும் மனதில் சின்ன நெடுடல் இருந்தது. இப்போது நித்யாவும் நளினியும் பேசியதை கேட்டு அது எல்லாம் காணாமல் போய் ஒரு வித பெருமிதம் வந்து விட்டது.

மேலும் எல்லோரும் வர, வகுப்புகள் ஆரம்பித்தது. முதல் நாள் என்பதால் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டனர். முதல் வகுப்பில் அனைவரும் பெயர்கள் சொல்லும் போது ஆர்வமாக கேட்டவர்கள், அடுத்த அடுத்த வகுப்பில் அதே நடக்க நொந்து போய், எப்படா இந்த நாள் முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

நித்யாவும், நளினியும் வேறு ஊர் என்பதால் அவர்கள் வேறு பேருந்தில் ஏற, வாணி தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறினாள். அதே பேருந்தில் வாணியின் ஊரை தாண்டி இருக்கும் ஊருக்கு செல்ல அவளது வகுப்பு தோழி கோமதியும் ஏறினாள். அவளை நட்பு பிடித்து கொண்டு, அவளுடன் அரட்டை அடித்து கொண்டே சென்றாள். கோமதியும் வாணியுடன் நெருங்கி விட்டாள். தினமும் கோமதி தான் முதலில் பேருந்தில் ஏறுவாள். அதனால் தனக்கு அருகில் உள்ள இருக்கையை வாணி என்று பிடித்து வைத்து கொள்வாள். இருவரும் ஒன்றாகவே சென்று வருவர்.

குரு சென்னை தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்து விட்டான். நண்பர்கள் ஆறு பேர் அந்த 2BHK வீட்டில் தங்கி இருக்கின்றனர்.

ஆறு பேருக்கு அது சற்று நெருக்கடியாக தான் இருக்கும் என்றாலும், வாடகை அவர்கள் எதிர் பார்த்ததை விட குறைவாக தான் இருந்தது. அதனால் சமாளித்து கொண்டு இருக்கின்றனர்.

அங்கே அருகிலே ஈஸ்வரி மெஸ் இருக்க காலை மற்றும் இரவு உணவை அங்கே தான் உண்பர். (நம்ம மதியோ சதியோ விதியோ பாலுவோட கடை தான்).

காலை நான்கு மணிக்கு வந்த குரு, எட்டு மணி வரை உறங்கி விட்டு குளித்து ரெடி ஆகி ஈஸ்வரி மெஸ்ஸில் உண்டு விட்டு தனது அலுவலகம் சென்றான்.

அன்று குருவுக்கு ராசியான நாள் போல... அவனது கேரியரில் சின்ன முன்னேற்றம் கிடைத்தது.



"குரு நம்ம டீமுக்கு புதுசா இரண்டு பேரு வேலைக்கு சேந்து இருக்காங்க. அதுல ஒருத்தர நீ மானிட்டர் பண்ணிக்கோ" என்று அவனுக்கு மேல் இருப்பவர் கூறினார்.

குரு இங்கே வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட இரண்டரை வருடங்கள் ஆகிறது. அவர்கள் குழுவிலே இவன் தான் சின்ன பையனாக இருந்தான், தற்போது வரை. இப்போது இவனும் சீனியர்... மென்டர்... இவனுக்கு கீழ் ஒருவர்... மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. மேலும் அவனுக்கு ரோல் சேஞ்சும் நடந்து, சம்பள உயர்வும் கிடைக்கும், அடுத்த இன்க்ரிமெண்ட் அப்போது.

இவனுக்கு கீழ் சேர்ந்தவன் விவேக். தற்போது தான் கல்லூரி முடித்து விட்டு சேர்ந்து இருக்கிறான்.

"ஹாய் விவேக். ஐ எம் யுவர் மெண்டர். யூ ஹேவ் டூ லேர்ன் திஸ் அண்ட் திஸ் எஸ் எ ஸ்ட்டிங்" என்று அவன் முதலில் படிக்க வேண்டியவைகளை கூறினான்.

"ஓகே சார்" என்று விவேக் சொல்ல, குரு சிரித்து விட்டு, "ஏ... இது ஒன்னும் ஸ்கூல் காலேஜ் இல்ல. சும்மா பேரு சொல்லியே கூப்பிடு" என்று சொல்ல தயங்கினார்.

"சரி விடு. ரொம்ப தயக்கமா இருந்தா அண்ணானு கூப்பிடு. நான் கூட சகல பேர அப்படி தான் கூப்பிடுவேன்" என்று சொன்னவன், "ஆனா மீட்டிங்ல லாம் அப்படி கூப்பிட்டு வச்சிடாத..." என்று பயந்தது போன்ற போலியான குரலில் கூறினான்.

குரு நல்ல விதமாக தான் பேசுகிறான் என்று புரிந்து கொண்ட விவேக்கும், "சரி ணா" என்று வேகமாக தலையாட்டினான்.

"சரி முதல்ல இத படி" என்று சொல்லி விட்டு தனது வேலைகளை பார்க்க சென்றான் குரு.

சில நாட்கள் செல்ல விவேக், குருவுடன் நன்றாக ஒட்டி கொண்டான்.

அன்றும் அப்படி தான்.

"அண்ணா இன்னிக்கு புது படம் ரிலீஸ். இன்னிக்கு நைட் போலாமா?? வெள்ளி கிழம தான!!!" என்று கேட்கும் அளவுக்கு இருந்தது.

குருவும் சிரிப்புடன், மேலும் அவர்களது குழுவில் இருந்த இருவரையும் சேர்த்து கொண்டு போனார்கள்.

படம் முடிந்து திரும்பி வரும் போது, படம் இப்படி படம் அப்படி என்று சொல்லி கொண்டு வந்தான் விவேக்.

படம் முடிந்து இரவு இரண்டரைக்கு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

படத்தை பத்தி எல்லாம் பேசி முடித்த விவேக் தற்போது, "அண்ணா பசிக்குது" என்று பாவமாக சொன்னான்.

அப்படியே போகும் வழியிலேயே ஏதேனும் ஹோட்டல் உள்ளதா என்று பார்க்க, ஒரு பிரியாணி கடை கண்ணில் பட்டது.

அந்த இரவு நேரத்தில் நிறுத்தி, நால்வரும் மட்டன் பிரியாணி, சிக்கன் ப்ரை என்று வாங்கி, அங்கேயே நின்று கொண்டே சாப்பிட்டனர்.

குருவின் தோழன் ஒருவன், "மச்சா இத எப்படி நம்ம மிஸ் பண்ணோம் தெரில. செம்மயா இருக்கு" என்று சொன்னான்.

"ம்ம்ம்" என்று குருவின் மற்றொரு தோழன் சொல்ல, அருகில் இருந்த ஒருவனுடன் பேசி கொண்டு இருந்த விவேக், "அண்ணா எல்லா இன்பர்மேஷனும் கலெக்ட் பண்ணிட்டேன். இந்த கடை நைட் பன்னென்டு மணிக்கு தான் திறப்பாங்கலாம். இங்க பக்கத்துல இருக்க கம்பெனில நைட் ஷிப்ட்ல வேலை பாக்கறவங்க அப்பறம் அக்கம் பக்கத்துல இருக்க கடைல வேல செய்யறவங்க தான் இங்க வந்து சாப்பிடுவாங்கலாம்" என்று சொன்னான்.

"அடேய் எப்படிடா... உன் வாய் இல்லனு வச்சிக்கோ!!. இரண்டு நிமிடம் பேசி இருப்பயா??? அதுக்குள்ள... எனக்குலாம் அவங்ககிட்ட இன்ட்ரோ ஆகவே அரை நாள் ஆகும்" என்றான் குருவின் நண்பன்.

"அதுக்குலாம் ஒரு முக ராசி வேணும் ணே" என்று சிரித்து கொண்டே சொல்லி குரு நண்பன் தோளில் இடித்தான் விவேக்.

"ஆட்டம் அதிகமா தான்டா இருக்கு. இரு" என்று விவேக்கிடம் சொன்னவன், "டேய் மச்சா... நாளைல இருந்து இவனுக்கு எந்திரிக்கவே முடியாத மாறி வேலைய கொடுடா. அப்பறம் எப்படி ஆடறானு பாக்கறேன்" என்று குருவிடம் சொன்னான்.

குரு சின்ன சிரிப்புடன், "வுடு டா. சின்ன பைய... பொழச்சி போறான்" என்று சொல்லி விட்டு இலையை குப்பையில் போட்டு பணம் கொடுக்க சென்றான்.

பசங்களிடம் உள்ள ஒரு பழக்கம், செலவை குறைக்கனும், வீட்டுக்கு கொடுக்கனும், அது பண்ணனும். இது பண்ணனும் என்று நினைப்பார்கள். ஆனால் எங்கேனும் வெளியே சென்றால், இவ்வளவு செலவாச்சி அவ்வளவு செலவாச்சி என்று கணக்கு பார்த்து கேட்பதோ, சாப்பிட்டாலோ டீ குடித்தாலோ நீ கொடு நான் கொடு என்றோ எதுவும் சொல்ல மாட்டார்கள். யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்கள் கொடுத்து விடுவார்கள். அதை திருப்பி கேட்கும் எண்ணமும் இருக்காது. ஆனால் ஒருவன் எப்போதும் செலவு செய்ய மாட்டான் என்று தெரிந்தால் அவனுடன் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்து விடுவார்கள்.

இந்த முறை விவேக் தான் அனைவருக்கும் தியேட்டரில் டிக்கெட் புக் செய்தான்.

குரு சொன்னதை கேட்ட விவேக், "ஹாஹா" என்று சிரித்தவன், "எங்க அண்ண எங்களுக்கு தான் சப்போட்டு" என்று சொல்லி விட்டு மீதி இருந்த உணவை ஒரு வாயில் அள்ளி போட்டு விட்டு இலையை குப்பையில் போட்டான்.

அதன் பின் மீண்டும் கிளம்பி, அவரவர் இல்லம் சென்று சேர்ந்தனர் அனைவரும்.

நாட்கள் விளையாட்டு போல் ஓடி, ஒரு வருடம் முடிந்து இருந்தது.

இந்த ஒரு வருடத்தில், குருவின் அவன் எதிர் பார்த்த மாற்றங்களான ஊதிய உயர்வு மற்றும் பதிவு உயர்வு கிடைத்தது. மேலும் அவன் வாழ்வில் எதிர் பாக்காத மாற்றமாக சிங்கிளில் இருந்து மேரிட் என மாற்ற வேண்டிய வேலைகளையும் செய்து கொண்டு இருந்தார்கள் குருவின் பெற்றோர்கள்.

அதற்காக ஒரு பொண்ணையும் பார்த்து அவளை பெண் பாக்க போக, அவனை அந்த வாரம் வீட்டுக்கு வர சொல்லி இருந்தார்கள்.

தாங்கும்...

படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

"தடுமாற்றம் தாங்கல" - கருத்து திரி

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே 🙏🙏 ....

இதோ அத்தியாயம் 5 உடன் வந்து விட்டேன்.

தடுமாற்றம் 5

வாணி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடியும் நிலையில் இருந்தது.

அன்று வாணியின் கல்லூரியில் கலை விழா.

அதில் இருந்த குழு நடனத்தில் நித்யாவும், வாணியும் பெயர் கொடுத்து இருந்தனர்.

அதனால் கல்லூரியில் இருந்த ஒரு அறையிலே அந்த மாலை நேரத்தில், வாணி சிவப்பு நிற பரதநாட்டிய உடையும், நித்யா வெள்ளை நிற பரதநாட்டிய உடையும் அணிந்து அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள். காலுக்கு சலங்கை, கைகளில் மருதாணி வைத்தது போன்ற செயற்கை மருதாணி என்று செய்து கொண்டு இருந்தார்கள்.

முதல் நடனமே இவர்கள் இருவருதும் தான், இறை வணக்க பாடல் முடிந்ததும்.

"பி.எஸ்.சி(கணிதம்) முதல் ஆண்டு மாணவிகள், வாணி ஸ்ரீ மற்றும் நித்யா, நமது பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை ஆடி நமது கண்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். அவங்களுக்கு இந்த மேடையை இப்ப கொடுத்துட்டு நான் கிளம்பறேன்" என்று அந்த விழாவை தொகுத்து வழங்கும் ஒரு மாணவி கூறி விட்டு சென்றாள்.

பாடல் போட்டு ஒலிபெருக்கியுடன் இணைந்து இசைக்க ஆரம்பித்தது. வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் இருந்து கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடல் தான் அது.

பாடல் போட்டவுடன் முதலில் நித்யா வெள்ளை நிற பரதநாட்டிய உடையில் நளினமாக இசைக்கு ஏற்றபடி நடந்து வந்தாள்.

ஏனோ இன்பமே
புதுமையாய் காண்பதே
காதல் என்பது இது தானோ
இது தானோ அறியேனே…

கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே

கன்னி என்றேனடி கைகளை பிடித்தார்
காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார்
கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே

நித்யா தனது பாகத்தை முடித்து ஒரு முத்திரையில் வந்து நின்றாள்.



அடுத்த இசைக்கு ஏற்ப அசைந்து ஆடியபடி முகத்தில் தேவையான பாவனையுடன் மேடையின் நடுவே வந்தாள் வாணி ஸ்ரீ. அந்த நேரம் சரியாக அந்த பாடலில் வரும், "சபாஷ் சரியான போட்டி" என்ற வசனம் வந்தது.

ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்

ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்

ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி
இனி அனைவரும் மயங்கிட

ஜில்லு ஜிலுஜிலு ஜிலுவென்று நானே
ஜகத்தை மயக்கிடுவேனே
கல கல கல கலவென்று ஜோராய்
கையில் வளை பேசும் பாராய்

நித்யா ஆடிய பகுதியை ஒப்பிடும் போது, வாணி ஆடும் பகுதியில் இசை சற்று துள்ளலாக இருக்க, அதற்கு அவளின் முக பாவனையும் கூடுதல் அழகை சேர்க்க, நன்றாக கை தட்டி ரசித்தனர் பார்வையாளர்கள் ஆன ரசிகர்கள்.

தன் பகுதியை முடித்து வாணி, ஒரு நடன அடவில் நின்றாள். வாணி அவள் பகுதியை ஆடும் போது நித்யா கண்களால் பிடித்தாள்.

அவள் முடிய மீண்டும் நித்யா அவளின் பகுதியை ஆடினாள்.

ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ

பேதமையாலே மாதே இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே

நித்யா அவள் பகுதியை முடித்து நிற்க, முகத்தில் பாவனையுடன் நின்ற வாணி அவளின் பகுதியை தொடங்கினாள்.


சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி

சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி

நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி

பாடல் முடிந்து இசை ஒலிக்க, வாணி அதற்கு ஆடினாள். அவள் பகுதி முடிய, தற்போது சின்ன கோப முகத்துடன் நித்யாவின் பகுதி தொடங்கியது.

ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடேதடி
நீ படமெடுத்து ஆடேதடி

அவள் முடித்ததும், மீண்டும் வாணி தனது பகுதியை தொடர்ந்தாள்.

இன்னொருத்தி நிகராகுமோ
எனக்கின்னொருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ

வாணி முடிக்க, நித்யா தொடர்ந்தாள்.

மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி


நித்யா ஆடி முடிக்கும் வரை வாணி அவளை ஒரு அலட்சிய, நித்யாவை பிடிக்காத முகத்துடன் இருக்கும் பாவனையை முகத்தில் கொண்டு வந்து ஒரு அடவில் நின்றாள்.

பின்னர் இசை மட்டும் வர சின்ன சின்ன அசைவுகளை இருவரும் மாறி மாறி ஆடி, பின்னர் ஒன்றாய் ஆட ஆரம்பித்தனர். இறுதியை நெருங்க, இருவரும் கை கோரத்து ஒன்றாய் சுற்றினர், அந்த பாடலில் வருவது போலவே. பாடல் முடிந்தவுடன் இருவரும் அரை மண்டியிட்டு, நித்யா வலது கையை மேலே தூக்கியும், வாணி இடது கையை மேலே தூக்கியும் இறுதி அசைவில் நின்றனர்.


இருவரின் நடனமும் அந்த பாடலில் வருவது போலவே 90% அசைவுகளை கொண்டு இருந்தது. பரத நாட்டியத்தை பொருத்தமட்டில் ஒரு ஒரு அசைவும் அவ்வளவு எடுத்து கொடுக்கும். மக்களுக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு இடுப்பை வளைத்து நின்றாள். 'ஏய் எப்படி வளஞ்சி அப்படியே நிற்கிறாங்க பாரேன்' என்று இருக்கும்.

ஆடி முடித்தது மிகப்பெரிய கைதட்டல் பார்வையாளர்களிடமிருந்து அவர்களுக்கு கிடைக்க அந்த மகிழ்ச்சியுடனே மேடையில் இருந்து இறங்கி, மீண்டும் உடை மாற்ற சென்றனர் இருவரும்.

இருவரும் பரதநாட்டிய உடையை மாற்றி விட்டு, ஒரு அனார்கலி சுடிதாரில் வந்து தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.

இருவரும் முறையாக பரதம் கற்றவர்கள். இந்த பாடலை தேர்வு செய்ததும் யார் எந்த பகுதி ஆடுவது என்று முடிவு செய்யும் போது வாணி இரு மனநிலையில் இருந்தாள். ஒன்று அந்த பாடலில் அதிக நேரம் ஆடல் அசைவுகள் இருப்பது முதல் பகுதிக்கு தான் யார் தொடங்குவார்களோ அவர்களுக்கு. ஆனால் அது மெலிதாக தான் தொடங்கும். அடுத்து இரண்டாவது தொடங்குவது துள்ளலான இசை அனைவரின் கவனத்தையும் ஈரக்கும். சிறிது நேரம் யோசித்த வாணி, இரண்டாம் பகுதியை தேர்ந்தெடுத்தாள். அவள் எண்ணப்படியே தான் இருந்தது பார்வையாளர்களின் வரவேற்பு.

மறுக்க முடியாத உண்மை இருவரின் நடனமும் அவ்வளவு அழகாக நளினமாக ரசிக்க தக்கதாக இருந்தது தான்.

மேலும் சில நடனங்களும், பாடல்களும் மற்ற மாணவ மாணவிகளால் முடிக்கப்பட்டது.

எல்லாம் முடிந்து சிறப்பு விருந்தினரின் உரையாடலும் முடிந்து பரிசு வழங்கும் நேரம் நெருங்கியது.

பாடல் பிரிவில் முதல் பரிசு என்று சொல்லி அந்த பிரிவு முடிய, அடுத்து நடன போட்டியின் முடிவை சொல்ல இருந்தனர்.

தனி நடனம் முடிந்து, "குழு நடனம் - முதல் பரிசு வாணி ஸ்ரீ மற்றும் நித்யா. பி.எஸ்.சி (கணிதம்)" என்று சொன்னவுடன் கைதட்டல்கள் புடை சூழ வாணியும் நித்யாவும் மேடை ஏறினர். அழகான புடவை அணிந்து பரிசு பொருளை எடுத்து வந்து சிறப்பு விருந்தினர் கையில் ஒரு மாணவி கொடுக்க, அதை வாங்கி, "வாழ்த்துக்கள்" என்று சொல்லி இருவரின் கையையும் குலுக்கி, புகை படம் எடுக்க நின்றனர், வாணி, நித்யா மற்றும் சிறப்பு விருந்தினர்.

விழா முடிய இரவு உணவும் அங்கே தான் இருந்தது. வாணி அவளது நண்பர்களுடன் உண்டு கொண்டு இருக்க, அவளது சீனியர்கள் அங்கு வந்தனர்.

"நித்யா, வாணி" என்று அழைத்தனர்.

"ஆன் சொல்லுங்க கா" என்று சொன்னாள் நித்யா.

"நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடனீங்க" என்று சொன்னாள்.

"தேங்க்ஸ் கா" என்று இருவரும் ஒன்றாக சொன்னார்கள்.

"அடுத்த மாசத்துல ஒரு காம்படேஷன் இருக்கு. வேற காலேஜ்ல. நீங்க ரெண்டு பேரும் எங்க டீம்ல சேந்துகறீங்களா??" என்று கேட்டாள் அவள்.

"கண்டிப்பா கா" என்று இருவரும் ஒன்றாக சொன்னார்கள்.

"சரி டா. அப்ப நாளைல இருந்து ப்ராக்டீஸ்க்கு வந்துடுங்க" என்று சொன்னாள் அவள்.

"சரிங்க கா" - வாணி.

"எத்தன மணிக்கு கா?? எவ்வளவு நேரம்??" - நித்யா.

"சாய்ந்தரம் 4 மணிக்கு. ஒரு ஒரு மணி நேரம்" - சீனியர்.

"ஓகே கா. இவ காலேஜ் பஸ் செகண்ட் டிரிப் போகும் போது போய்க்கலாம்" என்று வாணியை காட்டி சொன்ன நித்யா, "எனக்கு எப்பவும் 5 மணிக்கு தான் பஸ். அதனால பிரச்சனை இல்ல கா" என்று சொன்னாள்.

அவள் சென்றதும், "லூசு வாணி. எப்ப என்ன ஏதுனு கேக்காம நீ பாட்டுக்கு சரிங்க சொல்லற?? போற வரதுக்கு, க்ளாஸ் ஹவர் இதுல எல்லாம் எதுனா பிரச்சனை வருமானு கேட்டு தெரிஞ்சிக்க மாட்டியா??" என்று திட்டினாள் நித்யா.

"இல்ல... டக்குனு கேட்டதும் சொல்லிட்டேன்" என்று சிரித்து கொண்டே சொன்னாள் வாணி.

"சரி விடு டி. சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கு. வாங்க சாப்பிடலாம்" என்று சொன்ன நளினி, வாணியை காப்பாற்றி, கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.

அங்கே இருந்த அவர்களது வகுப்பு மாணவிகளும், அவர்களை பாராட்டி விட்டு, "ஆமா நள்ளி... உனக்கும் ஆட தெரியுமா??" என்று நளினியை பார்த்து கேட்டார்கள்.

அதை கேட்டவுடனே நித்யா சிரித்து விட்டாள்.

"ஏய் என்ன சிரிப்பு!!!. நானும் ஆசைப்பட்டேன். ஆனா அந்த டான்ஸ் மாஸ்டருக்கு என்ன புடிக்காது. அதனால் என்ன மட்டும் கால் மணி எச்சா அரமண்டி போட சொல்லுவாரு. அப்பறம் ஸ்டெப் சொல்லி கொடுத்துட்டு, எல்லாரையும் ஆட சொல்லுவாரு. நான் ஆடும் போது மட்டும், சாணி தட்டுற ஆட கூடாது. காலை தூக்கி வச்சா பூல வக்கற மாறி இருக்கனும். இப்படி சதக்கு சதக்கு சத்தம் வர கூடாது சொல்லிட்டாரு" என்று மூக்கை சுருக்கி சொன்னவள் தொடர்ந்து, "நானும் கம்முனு இருக்க மாட்டாம ரோஜா பூவ கீது போட்டுறாதீங்க முள்ளு குத்தி வாயில சத்தம் வந்துடும் அப்பறம்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்பறம் அந்த மாஸ்டர் எங்க அம்மாவ கூப்பிட்டு என்ன சொன்னாங்களோ தெரியாது... என்ன அதுக்கு அப்பறம் டான்ஸ் க்ளாஸ் அனுப்பல. சரி ஒரு சிறந்த கலைஞரை இழந்துட்டாங்கனு நானும் விட்டுட்டேன்" என்று பாவனையுடன் சொன்னாள் நளினி.

எல்லோரும் அதை கேட்டு சிரித்து கொண்டே தங்களது உணவை உண்டனர். பின்னர் அவரவர் பேருந்தில் ஏறி இல்லம் சென்று சேர்ந்தனர்.

வெள்ளி கிழமை முக்கால் வாசி காலியாகும் நேரம், குருவும் இரவு பத்து மணி போல தனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான். அந்த பேருந்து நிலையமே ஒரு திருவிழா போன்று கலகலவென மினுக்கி கொண்டு இருந்தது.

சென்னையை சொந்த ஊராய் கொண்டவர்கள் குறைவாய் தான் இருப்பார்கள். மற்ற ஊரில் இருந்து வேலை தேடி வந்து அதன் பின் இங்கேயே செட்டில் ஆனவர்களும் இருப்பார்கள். அதை தவிர மற்றவர்கள் எல்லாம் இது போன்ற விடுமுறை நாட்களில் கண்டிப்பாக வீட்டுக்கு செல்வார்கள். அது தான் இந்த திரு விழா கோலத்தின் காரணம்.

குரு ஏறி அமர்ந்த பஸ்ஸும் புறப்பட்டது. முதலில் திருமணம் என்றவுடன் அவனுக்கு இப்போதேவா!!! என்று இருந்தது. என்ன வயது தனக்கு!! 25 தானே என்று. பின்னர் பெண் பார்க்க போலாம் என்றவுடன் சின்ன குறுகுறுப்பு. அந்த உணர்ச்சியை உணர்ந்து கொண்டே ஊருக்கு சென்றான் குரு.

தாங்கும்...
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

எப்பவும் பாடல் வரிகள் எழுதினா ஒரு நாலு இல்லனா அஞ்சு வரி தான் சேர்ப்பேன். இப்ப முழு பாடலும் சேத்து இருக்கேன். ஏன்னா எனக்கு இந்த பாட்டை ரொம்ப புடிச்சிடுச்சி. அது மட்டும் இல்லாம இதுல வரிகள் நிறைய இருக்காது. இசை தான் நிறையா இருக்கும்.... நடன அசைவுகளுக்காக...

விருப்பம் உள்ளவங்க இந்த லிங்க்ல போய் பாக்கலாம்...

- "கண்ணும் கண்ணும் கலந்து"

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

என்னை தெரியுதா??... நியாபகம் இருக்கா??..

ரொம்ப நாளா கதை எதுவும் எழுதவில்லை. காணாம போய்ட்டேன் இல்ல. என்ன பண்ணறது ??. திடீர்னு என்ன எழுதுறது?? என்ன பண்ணறது??. எழுதலாம்னு முயற்சி பண்ணனாலும் முடியல... ஒரு வார்த்தை கூட எழுதல இரண்டு மாசமா... ஆனா எழுதனும்னு ஆசையா இருக்கு.

இப்ப தான் எனக்கு ஒரு மெசேஜ் கூட வந்தது... எழுத இயலாமையை எப்படி கடப்பதுனு... உங்களுக்கு எழுத தூண்டன கதை எதுவோ ஒன்னா இருக்கும். அத திரும்ப படிங்க... உங்களுக்கு மீண்டும் எழுதனும் தோணும் சொல்லி இருந்தாங்க... ஆனா அத நான அல்ரெடி பண்ணிட்டு தான் இருந்தேன்...

அப்பறம் காலேஜ் படிக்கும் போது நிறைய சீரிஸ் பாப்போம். அத தான் கடந்த ஒரு மாசமா பண்ணிட்டு இருந்தேன். இப்ப ஒரு சீரிஸ் பாத்துட்டு இருக்கேன். அத பாக்கும் போது திரும்ப எழுதனும் தோணுச்சி. ஆனா ஏன்னு தெரியல... அது ஒரு க்ரைம் சீரிஸ். அதுக்கும் நான் திரும்ப எழுதனும் நினைக்கறதுக்கும் என்ன சம்மந்தம்னு தெரில... பட் அந்த ஹீரோவோட ஒரு சீரிஸ் ஒன்னு தான் பாத்தேன் ரொம்ப நாளுக்கு முன்னாடி... காலேஜ் படிக்கும் போது... இப்ப தான் திரும்ப அந்த ஹீரோவோடது பாக்கறேன். எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு.

என்னடா இப்படி என்ன என்னவோ சொல்லறா நினைக்கறீங்களா??... ரொம்ப நாள் கழிச்சி எழுதறனா... அது மட்டும் இல்லாம எனக்கு தோணுத சொல்லனும் நினைச்சேன்.

இப்ப கூட இதை எல்லாம் சொல்லனும் தோணல. ஆனா என்னை நம்பி இரண்டு மூணு பேரு என் கதையை எதிர்பார்த்து வந்தாங்க இந்த ஒரு மாசத்துல... நான் எதுவும் இப்ப எழுதலனு தெரிஞ்சும்... அதுக்காகவே எழுதனும் தோணுச்சி.... என் மேல என் எழுத்து மேல எதோ அவங்களுக்கு தோணி இருக்குனு.


images - 2022-11-19T095232.148.jpeg

இப்ப என்னோட ப்ளான் என்னனா... கொஞ்ச கொஞ்சமா எழுத போறேன். அதே போல பழைய கதைய மீண்டும் போடலாம்னு இருக்கேன். அதுக்கு எதுனா விமர்சனம் வந்தா கொஞ்சம் பூஸ்ட்-அப் ஆ இருக்கும்னு நம்பறேன்...

மதியோ!!! சதியோ!!! விதியோ!!! கதையை நாளைல இருந்து திரும்ப போடறேன்.

நீங்க எல்லாம் படிச்சி விமர்சனம் கொடுத்து... திரும்ப என்ன எழுத வைப்பீங்கனு நம்பறேன் 😇🤗

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
 
Status
Not open for further replies.
Top