All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் "கள்ளியின் கள்வன் அவன்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 10

27636
ஸ்டெல்லாவின் தந்தையும் அவரது அடியாட்களும் ஸ்டெல்லாவுடன் அந்த இடத்தை விட்டு சென்றதும் மழையடித்து ஓய்ந்தது போல இருந்தது அந்த இடம்.

ஆம்..!! அத்தனை நிசப்தம் அங்கு..!!

சித்தாராவுக்கோ நடந்து முடிந்த எதையுமே இன்னும் நம்பமுடியலில்லை. எல்லாம் ஏதோ சொடக்கிடும் நேரத்தில் நடந்திருக்க அது தந்த தாக்கத்தில் இருந்து வெளி வர முடியாமல் இருந்தாள் பெண்ணவள்.

அப்போது தான் அவளுக்கு சர்வாவின் நினைவு வர

அதை நினைத்த இவளுக்கோ லேசாய் நெஞ்சில் குளிர் பரவ தொடங்கியது. இருக்காதா பின்ன இந்த நாடகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே இவள் அல்லவா பின் எப்படி பயப்படாமல் இருப்பாள்.

"ஐயோ அவன் அப்பவே திட்டுனானே நான் தான் பெரிய இவ மாதிரி மாலை போட்டுட்டு பக்கம் பக்கமா டையலாக் பேசுனேன். இப்போ பாரு அவன் கிட்ட நல்லா வசமா மாட்டிக்கிட்டேன்...!!" என்று மனதில் புலம்பியவள் மெல்ல தன் தலையை நிமிர்த்தி அவனை ஏறிட்டு பார்க்க அவனோ எங்கேயோ வெறித்தபடி தாடை இறுக நின்றுக் கொண்டு இருந்தான்.

அதில் மேலும் பதறியவளோ "போச்சு அவன் சும்மாவே என்னை துரத்தி துரத்தி அடிப்பான் இதுல இப்ப நடந்து முடிஞ்ச எல்லாத்துக்கும் முக்கிய காரணமே நான் தான் இப்ப என்ன பண்ணப் போறானோ..??" என்று உள்ளுக்குள் கலவரமாய் எண்ணியவள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல்.

"டேய் ஷிவ்..!! என்ன டா இப்படி ஆகிடிச்சு...!!" என்று சோகமான குரலில் அவனை பார்த்து கேட்க அதில் அதுவரை எங்கையோ வெறித்துக் கொண்டிருந்தவன் இவளது கேள்வியில் சீற்றத்துடன் சடார் என்று இவள் புறம் திரும்பி தன் ஆள்காட்டி விரலை வாயில் வைத்து "உஷ்ஷ்ஷ்...!!! இதுக்கு மேல ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வெளிய வந்திச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன்..!!" என அவளை உறுத்து விழித்தபடி உறும அவனது சீற்றத்தில் சித்தாராவின் தொண்டைக் குழியே வற்றி போனது அத்தனை ஆக்ரோஷம் அவனது பேச்சில்.

மேலும் தொடர்ந்த அவனோ "உன்னால தான் உன்னோட முந்திரிக் கொட்டைத் தனத்தால தான் இவ்வளவு பிரச்சனையும்...!!" என்று வார்த்தைகளைக் கடித்து துப்ப அதில் சிலிர்த்த அவள் "இங்க பாரு சும்மா என்னையே குறை சொல்லாத..!! உன்னை யாரு தாலி கட்ட சொன்னா ..?? எல்லாத்தையும் இவரு பண்ணிட்டு கடைசியில குத்துதே குடையுதேனு நம்மளை சொல்லுவாரு..!!" என்று எரிச்சலுடன் தொடங்கி மெல்ல தனக்குள்ளேயே முனங்க.

அதில் சட்டென்று திரும்பி அவளை சூடான ஒரு பார்வை பார்த்தான் சர்வா.

அதில் தன் வாயை மூடிக்கொண்ட சித்தாராவோ அவனை பார்க்காது மறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

இங்கு விக்கியோ சர்வா அருகில் சென்று "என்ன மச்சான் எனக்கு கல்யாணம் நடக்கவேண்டிய இடத்துல உங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சு ..??" என்று பாவமாக சொல்ல அதில் அதுவரை உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த மொத்த கோபத்தையும் ஒன்று திரட்டி "டப்..!!" என்று விக்கியின் மூக்கிலேயே ஓங்கி குத்தியிருந்தான் சர்வா.

குத்தி முடித்ததும் தன் கைகளை இவன் உதறியபடி விக்கியை பார்த்து கோபத்தோடு "உனக்கு எல்லாம் என்ன ம***க்கு டா லவ் வேண்டி கிடக்கு. எதையும் தைரியமா பேஸ் பண்ண முடியலைனா நீங்க எல்லாம் எதுக்கு டா லவ் பண்ணுறீங்க..!!" என்று சூடாய் கேட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி விட.

அவன் குத்தியதின் பயனாய் தன் ரத்தம் வடியும் மூக்கில் கைவைத்தபடி வலி தாங்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டான் விக்கி.

அவனை பார்க்க சித்தாராவுக்கு பாவமாக இருந்தாலும் கொஞ்சமாச்சும் ஸ்டெல்லாவின் தந்தையிடம் இவன் போராடியிருக்கலாம் என்பதே அவள் மனதில் ஓட "உங்க கிட்ட அப்புறமா பேசுறேன் அண்ணா..!!" என்று விட்டு சர்வாவின் பின்னாலே ஓடினாள். பின்ன அவளை யாரு வீட்டில் கொண்டு போய் விடுவது.

பைக்கில் அமர்ந்தபடி அதை ஸ்டார்ட் செய்தவனை ஓடி வந்து பிடித்தவள் அதே வேகத்தில் அவனது அனுமதியை எதிர்பார்க்காமலேயே அவனது பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ஏனோ அவளிடம் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அமைதியாய் தன் வாகனத்தை இயக்கி வீட்டை நோக்கி செலுத்தினான் சர்வா.

அமைதியாகவே அந்த பயணம் தொடர அந்த அமைதி பிடிக்காத சித்தாராவோ "ப்ச் நீ ஒண்ணும் பயப்படாத ஷிவ், நடந்த எதையுமே நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். முக்கியமா நம்ம வீட்டுல யாருகிட்டயுமே சொல்லமாட்டேன்..!!" என்று தானாய் அவனிடம் வாக்குமூலம் கொடுக்க.

அதை சிறிதும் கண்டுகொள்ளாத சர்வாவோ கருமமே கண்ணாக தன் வண்டியை செலுத்தினான்.

இவர்கள் வீட்டை அடைய, இவர்கள் இருவரையும் வரவேற்க இவர்கள் வீட்டு ஆட்கள் வாசலுக்கே வந்து நின்றனர்.

அனைவரும் சொல்லி வைத்தது போல "உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்ததை எங்க கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா நாங்களே கல்யாணம் பண்ணி வச்சிருப்போமே எதுக்கு தேவை இல்லாம இந்த திருட்டு கல்யாணம்..??" என்று கேட்க.

விழி பிதுங்கி போய் நின்றாள் சித்தாரா.

அதற்குள் அவள் அருகில் வந்த அவளது தாய் சந்திரா அவள் தலையில் ஓங்கி கொட்டியபடி "அது வேணும் இது வேணும்னு கேட்டு நல்லா கொட்டிக்க தெரியுது இல்லை. நம்ம சர்வாவை தான் புடிச்சிருக்குன்னு சொன்னா கொறைஞ்சா பொயிடுவே..??" என்று கடிய

தலையும் புரியாது வாலும் புரியாத கதை நம் சித்தாராவுக்கு.

அதற்குள் ஆரத்தி தட்டுடன் அந்த இடத்தை அடைந்த சீதா "கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வந்த பிள்ளைங்களை இப்படி தான் வாசல்ல நிற்க வச்சு பேசிட்டிருப்பீங்களா..??" என்று எல்லாரிடமும் கடிந்து விட்டு அவர்கள் அருகில் சென்று புதுமண ஜோடிக்கு ஆரத்தி எடுத்துவிட்டு "நீங்க உள்ள வாங்க டா..!!" என்று அழைத்தபடி அவர்களை கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய.

அவர்களை தொடர்ந்து அனைவரும் வீட்டினுள் நுழைந்தனர்.

சர்வாவையும் சித்தாராவையும் சோபாவில் அமர வைத்த சீதா அவர்கள் இருவருக்கும் பால்பழம் கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்து குழப்பமுற்ற சித்தாரா அதுவரை பூட்டி வைத்திருந்த தன் வாயை திறந்து "ஹையோ அத்தைமா நாங்க பண்ணது ஒரு டிராமா கல்யாணம்..!!" என்று சொல்ல.

அதில் அதிர்ந்த மொத்த குடும்பமும் அவளையும் சர்வாவையும் கேள்வியுடன் பார்க்க யாரையும் பார்க்காமல் இறுக்கத்துடன் தலையை குனிந்து கொண்டான் சர்வா.

ஆனால் சித்தாராவோ நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க. அங்கிருந்தவர்களின் முகமோ ரத்தமென சிவந்து போனது கோபத்தில் ஆனால் அதை உணராத இவளோ "இது தெரியாம நீங்க வேற காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. நல்ல வேளை நான் இப்போவே எல்லாத்தையும் சொல்லி முடிச்சேன் இல்லாட்டி எங்களுக்கு ரிஷப்ஷனே வச்சு முடிச்சிருப்பீங்க போங்க..!!" என்று அனைவரையும் பார்த்து கூறியவள் "இல்லை டா...!!"என்று தன் கூற்றிற்கு ஆதரவு வேண்டி சர்வாவிடம் கேட்க.

அவன் எங்கு இவளை பார்த்தான் இவள் கூற கூற தரையை அல்லவா அழுத்தமாக வெறித்துக்கொண்டு இருந்தான்.

அந்த நேரம் யாரும் எதிர்பார்காத வகையில் சித்தாராவை நோக்கி கோபத்துடன் பாய்ந்த ஆனந்த் அவளது கன்னத்துலயே பளார் என்று அறைந்திருக்க அதில் கன்னத்தில் கைவைத்தபடி அவரை பார்த்து அதிர்ந்து நின்றாள் சித்தாரா.

"கல்யாணம்ன்னா உனக்கு விளையாட்டா போச்சா..?? ஈசியா சொல்லுற டிராமா கல்யாணம்னு ஹான்..!!" என்று அவர் உறும.

அவளோ அவர் அடித்ததில் உண்டான வலியில் உதடு குவித்து அழத் தொடங்கி விட்டாள்.

அதில் மேலும் ஆத்திரம் அடைந்த ஆனந்த் அவளை மீண்டும் அறைய போக அதற்குள் அவரை வந்து பிடித்துக்கொண்ட விஷ்வநாத் "சும்மா இரு ஆனந்த் அவ தான் ஏதோ சின்ன பொண்ணுன்னா நீ அவளுக்கு மேல இருக்க. அவளை குறை சொல்லியோ அடிச்சோ ஒண்ணும் ஆக போறது இல்லை இதோ அவ கழுத்துல தாலி கட்டிட்டு இப்படி குத்து கல்லா நடுவீட்டுல உட்கார்ந்திட்டு இருக்கானே.. இவனை சொல்லணும்..!!" என்று சர்வாவை பார்த்து அவர் பங்குக்கு பொங்க.

அதில் அதுவரை குனிந்து கொண்டு இருந்த சர்வா இவரது கூற்றை கேட்டு நிமிர்ந்து அவரை நேர்கொண்ட பார்த்தை பார்த்தான்.

அதை பார்த்து "பண்ணுறதையும் பண்ணிட்டு திமிரா பார்க்குறதை பாரேன்..!!" என்று விஷ்வநாத் கடுப்புடன் முனங்க.

தாய்மார்களோ நடப்பதையும் பதட்டத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

நிலைமை கைமீறிக்கொண்டே போக அங்கு வாக்கு வாதம் பெரிதாகியது.

சர்வாவோ விஷ்வாந்தின் ஒவ்வொரு பேச்சிற்கும் அலட்சியமும் திமிரையும் காண்பிக்க அதில் எரிச்சலுற்றவர் "நடந்தது நடந்து முடிஞ்சிடுச்சு, கல்யாணம்னா விளையாட்டு இல்லை அதனால இனிமே ஒழுங்கா அந்த பந்தத்திற்கு மதிப்பு கொடுத்து நல்லா வாழுங்க..!!" என்று முடிவாய் சொல்ல.

அதுவரை அமைதியாய் இருந்த சர்வா "எங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா செட் ஆகாது சோ எங்களால இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியாது..!!" என்று உறுதியாய் சொல்ல. கன்னத்தில் கைவைத்தபடி அழுதுக் கொண்டு இருந்த சித்தாராவும் இவனது கூற்றை கேட்டு கன்னத்தில் கைவைத்தபடியே ஆம் என்று தன் தலையை மேலும் கீழும் ஆட்ட.

மீண்டும் அங்கு ஒரு கலவரம் நடந்தது.

பெரியவர்கள் அவர்கள் முடிவில் உறுதியாய் இருக்க சிறியவர்கள் அவர்கள் முடிவில் உறுதியாய் இருந்தனர்.

கடைசியில் கோபம் கொண்ட பெரியவர்கள் தங்கள் பேச்சுக்கு கட்டுப் படவில்லை என்றால் இந்த வீட்டை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்று சர்வா மற்றும் சித்தாராவிடம் கூற.

விறுவிறுவென தனது அறைக்கு சென்ற சர்வா தன் உடமைகள் சர்ட்டிபிக்கெட்ஸ் என அனைத்தையும் டிராவல் பேகில் போட்டுவிட்டு ஹாலுக்கு வர.

பதறிய சீதா "டேய் சர்வா என்ன டா பண்ணுற. அவரு தான் ஏதோ கோபத்துல சொல்லுறாருன்னா நீயும் ஏன்டா இப்படி பண்ணுற..!!" என்று அழுகையுடனே கேட்க

தாயின் அழுகையில் நிதானித்தவன் "ம்மா நீங்க எதை நினைச்சும் பீல் பண்ணாதிங்க..!! நான் எங்கையும் கண்காணாத இடத்துக்கு போகல இதோ இங்க இருக்குற போரூர்ல தாத்து என் பேர்ல வாங்குன பிளாட்டுக்கு தான் போறேன். கொஞ்ச நாள் அங்க தான் இருப்பேன் சோ பயப்படாதீங்க. என்னை பார்க்கணும்னு தோணுனா அங்க வாங்க...!!" என்று சொல்லிவிட்டு பேகை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி விரைய "நில்லு பா..!!" என்று குரல் கொடுத்து அவனது நடையை நிறுத்தினார் ஆனந்த்.

அதில் இவனோ அவரை கேள்வியுடன் திரும்பி பார்க்க.

அவரோ அங்கு இன்னும் கன்னத்தில் கை வைத்தபடி அழுதுக் கொண்டு இருந்த சித்தாராவின் கையை பற்றி எழுப்பியவர் அவளை சர்வாவின் அருகில் கொண்டு சென்று விட்டபடி அவளிடம் "நீயும் சேர்ந்து தானே இந்த தப்பை பண்ண சோ நீயும் அவனை போலவே வீட்ட விட்டு வெளிய போ...!! அவன் கூட நீ வாழ்ந்தாலும் சரி பிரிஞ்சாலும் சரி அது எல்லாம் இனி உன் பாடு ஏன்னா நீங்க தான் எங்க யாரு தயவும் இல்லாம கல்யாணத்தையே முடிச்சிட்டீங்களே..!! அதுவும் டிராமா கல்யாணம்..!!" என்று கூறியவர் அழும் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் கடந்து அங்கிருந்து வெளியேறி தன் வீட்டினுள் சென்று அடைந்துக் கொண்டார்.

சித்தாராவோ அழுதவாறே அங்கிருந்தவர்களை பார்க்க சீதாவுக்கோ நெஞ்சம் உருகியது.

ஆனால் கணவரின் கடுமையான கண்ணசைவில் அங்கு உதவ முடியாமல் நின்றவர் அவர்களை வேதனையுடன் பார்த்தார்.

விஷ்வநாத்தோ "ம்ம்..! இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்கையே நிப்பீங்க..?? உங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு வெளியேற சொல்லி ரொம்ப நேரம் ஆகிடிச்சு..!!" என்று சொல்ல.

அதை கேட்டு தன் அருகில் அழுதுக் கொண்டு இருந்தவளின் கைகளை அழுத்தமாக பற்றிய சர்வா அவளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.

தொடரும்.
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 11

சர்வாவும் சித்தாராவும் வீட்டை விட்டு வெளியேறி முழுதாய் மூன்று மணிநேரம் கடந்து விட்டது. வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள் தனியாய் எப்படி சமாளிப்பார்களோ என்ற கவலையில் தாய்மார்கள் இருவரும் இருக்க ஆனால் தந்தைமார்கள் இருவருக்கும் அப்படி ஒன்றும் கவலை இல்லை போலும்.

முகம் எல்லாம் பிரகாசிக்க அமர்ந்துக் கொண்டு இருந்தனர். அதை பார்த்த சீதாவுக்கோ கோபம் வர சட்டென்று எழுந்து விஷ்வநாத் மற்றும் ஆனந்த் முன் வந்து நின்றவர் அவர்கள் இருவரையும் கூர்மையாக பார்த்தபடி "நாங்க இரண்டு பேரும் இங்க பிள்ளைங்க தனியா போய் எப்படி வாழபோறாங்கனு பயத்துல தவிச்சிட்டு இருக்கோம் ஆனா நீங்க இரண்டு பேரும் அதை பத்தி கொஞ்சம் கூட கவலை படாம முகம் எல்லா பிரகாசமா உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க. உண்மைய சொல்லுங்க வேணும்னு தானே நம்ம பசங்களை வெளியே அனுப்புனீங்க..!!" என்று கேட்க

அதை கேட்ட விஷ்வநாத்தும் ஆனந்த்தும் ஒருவரை ஒருவரை பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். பின் சீதா புறம் திரும்பி அதே போல புன்னகைத்த விஷ்வநாத் "ஹா..ஹா கரெக்ட்டா கண்டு புடிச்சிட்ட சீதா. பசங்களை வேணும்னு தான் நாங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளிய அனுப்புனோம்...!!" என்று அமைதியாய் சொல்ல அதிர்ந்து தான் போயினர் சீதா மற்றும் சந்திரா.

அமர்ந்துக் கொண்டு இருந்த சந்திராவோ இதைக் கேட்டு சட்டென்று எழுந்து இவர்கள் புறம் வந்து "என்ன சொல்லுறீங்க அவங்க சின்ன பசங்க..??" என்று அதிர்ச்சியுடன் வினவ.

ஆனந்த்தோ இப்போது தன் மனைவி சந்திராவை பார்த்து "நம்ம பசங்க சின்ன பசங்க தான் ஆனா அவங்க பண்ண காரியம் சின்னதில்லையே சந்திரா. விளையாட்டுக்கு பண்ணுற விஷயமா கல்யாணம். அதுவும் ஒருத்தரை ஒருத்தர் சுத்தமா பிடிக்காமலேயே கல்யாணம் பண்ணியிருக்காங்க. கொஞ்சம் விட்டுருந்தா உன் பொண்ணு சுலபமா கழுத்துல இருக்க தாலியை கழட்டி போட்டு இருப்பா..!!" என்று சொல்ல அதை ஆமோதிப்பது போல் தலையாட்டிய விஷ்வநாத் "அதனால தான் நாங்க இரண்டு பேரும் அவங்களை தனியா அனுப்புனோம்..!! இவங்க ஒண்ணும் சின்ன வயசுல இருந்தே இப்படி எலியும் பூனையுமா இல்லையே இடைல வந்தது தானே இது. சோ அவங்க தனியா இருந்தா அவங்களுக்குள்ள புரிதல் வர நிறைய வாய்ப்பிருக்கு..!! அதுவும் இல்லாம கல்யாணம் என்கிறது வாழ்க்கையில ஒரு முறை தான் இருக்கணும் மனம் ஒத்து வாழுறதுக்கு முன்னாடியே பிரியுறது எந்த விதத்துல சரி" என்று சொல்லியவர்.

"நம்ம கடமை அவங்களை ஏதோ ஒரு வழியில சேர்த்து வச்சிட்டோம்..!! இனி விதி படி என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும்..!!" என்றவர் வேறு வழியில்லாமல் இறைவன் மீது தன் மன பாரத்தை போட்டார்.

அவர் சொன்னதை கேட்டு பெருமூச்சு விட்ட மற்றவர்களும் அவரை போலவே இறைவன் மீது பாரத்தை போட்டனர்.

மாலையில் வீடு திரும்பிய கண்மணியிடம் விஷயத்தை பகிர, தமக்கையின் மனநிலையை எண்ணி ஒரு புறம் வருத்தமுற்றாலும் தனது அத்தானும் அக்காளும் சேர்ந்தது அவளுக்கு ஆனந்தத்தை தான் கொடுத்தது. கூடவே அழையா விருந்தாளியாய் அக்னியின் எண்ணம் வந்து போக அதில் முகம் கறுத்தவளுக்கோ தன் மீதே அத்தனை கோபம் உண்டானது. அவன் தன்னை அத்தனை தூரம் இழிவு படுத்திய பின்பும் அவனையே எண்ணுகிறாயே என்று மனதிடம் சாடியவளுக்கோ கொஞ்சமும் அவனை மறக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவள் முயற்சிக்கவில்லை என்பது சரியோ..??

இங்கு சித்தாராவை தனது பைக்கில் அழைத்து வந்த சர்வேஷ்ஷோ முக இறுக்கத்துடன் அந்த பிளாட்டை வந்து அடைந்தான். அவனுக்கு பின்னே இருந்தவளோ ஆனந்த் அடித்ததில் உண்டான வலியில் இன்னும் அழுது கொண்டே வந்தாள்.

மிக பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் நடுநிலையில் இருந்தது அந்த பிளாட். சர்வா பிறந்த போது அந்த பிளாட்டை அவனது தாத்தா அவன் பெயரில் வாங்கி இருந்த காரணத்தால் அது சற்று பழசு தான். அந்த காலத்தில் பிளாட் என்பது பெரியவிஷயம் ஆனால் இப்போதோ அது மிக சாதாரணமான ஒன்று. அந்த காலத்தில் பெரிதாய் தெரிந்த பிளாட் இப்போது நடுத்தர மக்கள் வாழுமிடமாய் மாறியிருக்க...

குழாய் சண்டையில் இருந்து குழந்தைகள் அங்கும் இங்கும் விளையாடி பட்டம் இட்டுக் கொண்டுயிருப்பது வரை அங்கு அரங்கேறிக்கொண்டு இருந்தது.

அதை எதையும் சட்டை செய்யாத சர்வா கீழே இருந்த பார்க்கிங்கில் தனது பைக்கை நிறுத்தி விட்டு தனது உடமைகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அங்கு ஒருத்தி இன்னும் அழுது கொண்டு இருப்பதை கூட பொருட்படுத்தாமல் விறுவிறுவென அங்கிருந்த படிக்கட்டு வழியாய் மேலே ஏற..!!

எங்கே அவன் தன்னை விட்டு விட்டு சென்று விடுவானோ என்று பயந்தவள் அவன் பின்னாடியே ஓட்டமும் நடையுமாய் செல்ல அவள் கண்ணுக்கு தெரிந்தது என்னமோ முதல் தளத்தில் இருந்த மூன்றாவது வீட்டின் கதவை திறந்துக் கொண்டு இருந்த சர்வா தான்.

அவனை கண்டவள் வேகமாக அவன் அருகில் சென்று நிற்க அவனோ தன் அருகில் ஒருத்தி நிற்பதை சிறிதும் கண்டுகொள்ளாமல் கருமமே கண்ணாக வீட்டின் பூட்டை திறந்துக் கொண்டு உள்ளே செல்லபோக அறிந்தோ அறியாமலோ அவனுடனே வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டினுள் நுழைந்தாள்.

பச்சை வண்ணம் தீட்டப்பட்ட சிறிய ஹாலும் அதன் வலது புறம் சிறிய கிச்சனும் அதற்கு நேர் எதிரே அந்த ஹாலை ஒட்டியபடி சிறிய பெட்ரூம் என இருவர் வாழத் தகுதியானதாய் இருந்தது அந்த வீடு.

தன் கண்களை சுழல விட்டு அந்த வீட்டை பார்த்தாள் சித்தாரா வீட்டில் டீவி பிரிஜ் என எந்த பொருளும் இல்லை. பல நாள் உபயோகிக்கப்படாமல் இருந்த காரணத்தால் வீட்டில் வலை மற்றும் டஸ்ட் ஃபார்ம் ஆகி இருக்க அதை எல்லாம் பார்த்தவள் அப்படியே தன் பார்வையை சர்வா புறம் திருப்பினாள்.

அவனும் அந்த வீட்டை தான் நெற்றியை நீவியவாறு பார்த்துக்கொண்டு இருந்தான்.

சித்தாராவுக்கோ பசி வயற்றை கிள்ள மேலும் தந்தை அடித்த இடம் வேறு இன்னும் எரிந்து கொண்டு இருக்க இங்கோ இவனும் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமலும் பேசாமலும் நின்றுக் கொண்டு இருக்க வாழ்க்கையே வெறுத்து போன உணர்வு அவளுக்கு.

இப்படி ஒரே நாளில் அவளது வாழ்க்கை மாறும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை அல்லவா.

காலையில் இருந்து வருத்தம் அழுகை கோபம் எல்லாவற்றையும் அடக்கி அடக்கி உள்ளுக்குள் வைத்தவள் இப்போது சர்வாவின் புறக்கணிப்பில் அது கட்டு அவிழ்ந்து விட என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமல் வந்த கோபத்தில் அவன் கையில் இருந்த பேகை ஆக்ரோஷமாய் பறித்தவள் அதை அதே ஆக்ரோஷத்துடன் தூக்கி ஒரு மூலையில் வீசினாள்.

இவளது இந்த செய்கையை சிறிதும் எதிர்பார்க்காத சர்வா வந்த கோபத்தில் "ஏய்..!!" என்று சீறியபடி அவளை அடிக்க கையை ஓங்க.

அதில் அவள் பயந்தவளுக்கோ சட்டென்று கண்களில் கண்ணீர் தேங்க.

அதை கண்டு "ச்ச..!!" என்று வெறுப்புடன் சலித்துக்கொண்ட சர்வா அவள் அழுகை கூடிக்கொண்டே போவதை பார்த்து எரிச்சலுடன் "ச்சை சும்மா அழுது வடியாம அமைதியா நில்லு .!! நீ பண்ண காரியத்துக்கு உன்னை கொன்னு பொதைச்சாலும் என் ஆத்திரம் அடங்காதுடி. ஏதோ போனா போகுது அத்தை மாமா முகத்துக்கு வேண்டி உன்னை சும்மா விட்டா அழுது வடிஞ்சே என் எரிச்சலை கூட்டுற நீ ..!!" என்று கோபத்தில் கத்தியவனுக்கோ மனம் முழுக்க அவள் மீது கோபம் நிறைந்து இருந்தது.

அவன் கத்தலில் பயந்தவள் "நா.. நான் என்ன பண்ணேன்னு இப்போ நீ என் கிட்ட கோபத்தை காட்டுற..!!" என்று அழுகையை அடக்கியபடி கேட்க.

அதில் வெகுண்டவன் ஆக்ரோஷத்துடன் அவளை நெருங்கியபடி "என்ன கேட்ட..?? ஹான் என்ன கேட்ட..!!" என்று உறும

அவளோ ஆக்ரோஷத்துடன் தன்னை அவன் நெருங்குவதை பார்த்து பயத்துடன் வேகவேகமாய் பின்னே சென்று சுவற்றில் முட்டி நிற்க அப்போதும் விடாத அவனோ அவளை தன் பார்வையால் எரித்தபடியே முன்னேறி அவள் உயரத்திற்கு குனிந்து நின்றவாறு "இன்னைக்கு நடந்த எல்லாத்துக்கும் முக்கிய காரணமே நீயா இருக்கும்போதும் உன்னால எப்படி டி கூசாம இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியுது..!!" என்று அழுத்தமாக கேட்க

அவளோ எச்சிலை விழுங்கியபடி அவனை ஏறிட்டு பார்த்தாள்.

"உன்னால நான் அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவமானம் பட்டுட்டு இருக்கேன் டி..!!" என்று கூறியவனது முகமோ கறுத்து போக.

அதை கண்டு இவளோ "எனக்கு மட்டும் உன்னை கல்யாணம் பண்ண ஆசையா என்ன ..?? ஏதோ எதிர்பார்க்காம நடந்தது இந்த கல்யாணம் அதுவும் என் கழுத்துல தாலி கட்டுனது நீ தான் நான் இல்லை..!!" என்று அவனை முறைத்தபடி சொல்லியவளின் எண்ணமோ "சும்மா என்ன மட்டும் குறை சொல்லிட்டு இருக்கான் இவனுக்கும் தானே இதுல பங்கு இருக்கு இவனை யாரு என் கழுத்துல தாலி கட்ட சொன்னது..!!" என்று அவனை குறைகூற

மேலும் தொடர்ந்தவள் "நான் ஒண்ணும் உன் கூட வாழ போறேன்னு சொல்லலையே. இப்ப என் வீட்டுலயும் என்னை சேர்த்துக்கல எனக்கு போக வேற எந்த வழியும் இல்லை படிப்பு முடியுற வரை இங்க உன் ரூம்மெட் போல இருக்கேன். அடுத்து சட்டப்படி பிரிஞ்சிடலாம் அப்புறம் நீ உனக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ நான் எனக்குன்னு ஒரு வேலையை தேடி செட்டில் ஆகிடுறேன்..!!" என்று கூறியவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்து "என்ன சொல்ற..??" என்று கேட்க

அதை கேட்டு ஒரு நொடி தன் கண்களை அழுத்தமாக மூடி தன் கோபத்தை அடக்கிய சர்வா மீண்டும் கண்களை திறந்து அவளை அலட்சியமாய் பார்த்தபடி "சொன்னதை எப்பவும் போல காத்துல விடாம இருந்தா சந்தோஷம்..!! ஏன்னா உன் கூட வாழ எனக்கு ஒரு துளி கூட விருப்பம் இல்லை..!!" என்று வெறுப்புடன் சொல்ல.

அதை கேட்டு உள்ளே ஏதோ செய்தது சித்தாராவுக்கு. சற்று முன் அவளும் அதை தான் சொன்னாள் ஆனால் அப்போது தோன்றாத ஏதோ இப்போது தோன்ற அதை என்ன என்று ஆராயும் முன் "கண்டிப்பா, எதுல சரியா இருக்கேனோ ஆனா இதுல நான் சரியா இருப்பேன்..!!" என்று உறுதியுடன் கூற அதை கண்டு நக்கலாக சிரித்தவன் "இருந்தா சரி..!!!" என்றபடி அவளை விட்டு விலகினான்.

அவனது அந்த ஒரு நொடி கோபம் எதற்காக இவள் அவனை குறை கூறியதாலா அல்லது வேறு ஏதுமா..??

சித்தாராவுக்கோ மீண்டும் பசிக்க அதில் தன்னை விட்டு விலகியவனின் கையை பற்றியவள் "பசிக்குது ஷிவ்..!!" என்றாள் பாவமாக.

அதில் அவளை ஒரு நொடி அழுத்தமாக பார்த்தவன் "வா..!!" என்றபடி அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.

அவளும் அமைதியாய் அவனுடன் சென்றாள்.

அவர்கள் வீட்டின் அருகே இருந்த கையேந்தி பவனில் அவளுக்கு உணவு வாங்கி கொடுத்தவன் அப்படியே வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி வந்தான்.

சோம்பேறியில் சோம்பேறியான சித்தாராவோ அவன் அந்த பொருட்களை எல்லாம் வாங்கிய உடன் "ஏன்னு தெரியலை ரொம்ப தலைவலிக்குற மாதிரி இருக்கு ஷிவ்..!!" என்று சொல்ல அவனோ அதற்கு பதிலே சொல்லாமல் வீட்டை வந்து அடைந்தான்.

வீட்டினுள் சென்றதும் அவள் கையில் துடைப்பத்தை கொடுத்து "சீக்கிரம் க்ளீன் பண்ணு நான் மேல் வலைய கிளீன் பண்ணுறேன். .!!" என்று சொல்ல

அதில் அதிர்ந்த அவளோ சோர்வான குரலில் "எனக்கு தலை வலிக்குது ஷிவ்..!! பிளீஸ் எனக்கும் சேர்த்து நீயே பண்ணிடேன்..!!" என்று பாவமாக அவனை பார்த்து சொல்ல.

அசரவே இல்லை அவன்..!!

"தலை தானே வலிக்குது கை வலிக்கலயே சோ ஒண்ணும் பிரச்சனை இல்லை கிளீன் பண்ணு...!! நான் வீட்டுக்கு தேவையான புராடெக்ட்ஸ் சிலதை ஆர்டர் போட்டிருக்கேன் அது இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும் சோ அதுக்கு முன்ன வீட்டை கிளீன் பண்ணி தான் ஆகணும்..!!" என்று விளக்கத்தை கூறியவன் அழுத்தமாக முடிக்க.

தன் நிலையை நொந்து கொண்டவள் சிணுங்கியபடி காலை தரையில் உதைத்துவிட்டு துடைப்பத்தை எடுத்து வீட்டை பெருக்க தொடங்கினாள்.

ஒழுங்காக வீடு கூட்டத்தெரியாமல் ஏனோ தானோ என்று வீட்டை கூட்ட அதை கண்டு அவளை மீண்டு முதலில் இருந்து வீட்டை கூட்ட வைத்தான் சர்வா.

அவளோ மனதில் வசை பாடியபடியே வேறு வழியின்றி எல்லாவற்றையும் செய்ய அந்த இடம் சுத்தமான பின்பே அவளை விட்டான் சர்வா.

பின் இருவரும் சேர்ந்து அந்த வீட்டுத் தரையை மாப் போட்டு துடைக்க.

சித்தாரா வீட்டுக்கு மாப் போட்டாளோ அல்லது அவளுக்கு மாப் போட்டாளோ அவளது உடையெல்லாம் அவ்வளவு தூரம் ஈரம் ஆகி இருந்தது.

வீட்டை அவர்கள் சுத்தம் செய்து முடிக்கவும் பொருட்கள் எல்லாம் வீடு வந்து சேரவும் சரியாய் இருக்க அதை அந்த ஆட்களை வைத்தே அரேஞ்ச் செய்தான் சர்வா.

பெரிதாய் வாங்காவிட்டாலும் சமைப்பதற்கு சில பாத்திரமும் எலக்டிரிக்கல் ஸ்டவ்வும் வாங்கியிருந்தவன்.

ஹாலுக்கு ஒரு சின்ன சோபா ஒன்றை வாங்கி இருந்தான் மேலும் ரூம்மிற்கு கபோட் உடன் கூடய ஒரு டிரெஸ்சிங் டேபிள் அதோடு அவனுக்கு உறங்க ஒரு பெட் பெட்சீட் பில்லோ மற்றம் சித்தாராவுக்கு உறங்க ஒரு பாய் பில்லோ பெட்சீட் என்று வாங்கியிருந்தவன் கிச்சனுக்கு மினி சைஸ் பிரிட்ஜும் வாங்கி இருந்தான். கூடவே பாத்ரூமிற்கு பக்கெட்டு மக் போன்றவற்றையும் வாங்கி இருந்தான்.


எல்லாவற்றையும் செட் செய்து முடித்ததும் டையர்டில் அப்படியே அந்த சோபாவில் படுத்து விட்டாள் சித்தாரா.

இடுப்பெல்லாம் அப்படி வலித்தது அவளுக்கு வீட்டு வேலை அதிகம் செய்து பழக்கமில்லா காரணத்தால் உடல் வேதனை சற்று அதிகமாக இருந்தது.

"ஹப்பாடி .!! இப்ப தான் சுகமா இருக்கு..!!" என்று கண்மூடி சோபாவில் படுத்து இருந்தவளை அப்போது தான் தண்ணீர் குடித்து விட்டு கிச்சனில் இருந்து வந்த சர்வா பார்த்தான்.

குளித்திருப்பான் போலும் தலை எல்லாம் ஈரமாய் இருக்க அவன் உபயோகித்த டவல் அவன் தோளில் கிடந்தது. வெள்ளை நிற டீ சர்ட் கறுப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்.

அவளை பார்த்தவன் கையில் இருந்த தண்ணீர் கேனை அங்கிருந்த செல்ப்பில் வைத்துவிட்டு அவள் அருகில் சென்று நின்றபடி "ப்ச், ஏய் எந்திரி டி..!! புது சோபால அழுக்கா வந்து படுக்குற அறிவில்லை..!!" என்று எரிச்சலுடன் கத்த.

அதில் இப்போது கடுப்பான சித்தாரா "பேசாம போயிடு ஷிவ் நானே டயர்ட்டுல இருக்கேன்..!!" என்று சொல்ல சற்று நேர மொனத்திற்கு பின் தொப்பலாக நனைந்தபடி அந்த சோபாவில் இருந்த அடித்து பிடித்து எழுந்தாள் சித்தாரா இவளுக்கு அருகிலோ கையில் இருந்த தண்ணீரை குடித்தபடி இவளை அலட்சியமாய் பார்த்துக்கொண்டு நின்றான் சர்வா.

அவளோ "ஷிவ்வூ.......!!!" என்று கோபத்தில் கத்த

அவனோ அவளை பார்த்து கூலாக "போடி போடி போய் குளிச்சிட்டு வாடி அழுக்கு மூட்ட..!!" என்று சொல்லியவன் தன் தோளில் கிடந்த துண்டை அவள் மீது எறிந்தான்.

அதில் நெற்றிக்கண்ணை திறந்து அவனை எரித்தவள் இதற்கு மேலும் இங்கு இருந்தால் இவன் தன்னை மேலும் அசிங்கப்படுத்துவான் என்பதை நன்கு அறிந்த காரணத்தால் தன் மேல் கிடந்த துண்டை எடுத்துக்கொண்டு கோபமாக குளியலறையினுள் நுழைந்து கொண்டாள்.

பின் குளித்து முடித்தவளுக்கு அப்போது தான் தான் எந்த துணியும் எடுத்து வராதது நினைவு வர கூடவே வீட்டில் இருந்தே அவள் வெறுங்கையை வீசியபடி வந்ததும் நினைவு வர தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள்.

இருக்க இருக்க வெற்றுடல் வேறு குளிர் எடுக்க தொடங்க ஆபத்துக்கு பாவம் இல்லை என்று எண்ணியபடி "டேய் ஷிவ்..!!" என்று சர்வாவை அழைக்க சோபாவில் அமர்ந்தபடி போனில் எதையோ நோண்டி கொண்டு இருந்த சர்வாவோ இவளது அழைப்பை கேட்டு போனில் இருந்து தலையை நிமிர்த்தாமலேயே "ம்ம்..!!" என்று மட்டும் சொல்ல.

அதில் "வாயை திறந்து என்னனு கேட்டா கொறைஞ்சா போயிடுவான்..!!" என்று உள்ளுக்குள் கடுப்புடன் புலம்பியவளின் மனமோ "காரியம் முக்கியம் பிகிலு..!!" என்று குரல் கொடுக்க அதில் தெளிந்தவள் "டேய் ஷிவ்வு..!! என் டிரெஸ்சு எல்லாம் அங்க வீட்டுலயே இருக்கு டா இப்போ எனக்கு போட டிரெஸ் இல்லை..!!" என்று சொல்ல

அதில் அதுவரை போனை நோண்டி கொண்டிருந்தவனது கை வேலை செய்வதை ஒரு நொடி நிறுத்திவிட்டு தொடர அவன் குரலோ அலட்சியமாய் "சோ வாட்.??" என்று கேட்க

அதில் அப்போது அவனை குனிய வைத்து அவன் மண்டையில் நங்கு நங்கு என்று கொட்ட வேண்டும் போல இருந்தது சித்தாராவுக்கு ஆனாலும் காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலை பிடித்துதான் ஆகவேண்டும் என்று எண்ணியவள்.

"டேய் ப்ளீஸ் டா ஆல்ரெடி குளிருது வேற..!! கொஞ்சம் பாவம் பார்த்து உன் டிரெஸ்சுல ஏதாச்சும் தாயேன்..!!" என்று கெஞ்சும் குரலில் கேட்க.

பெருமூச்சு விட்டவனோ எரிச்சலுடன் தன் உடை ஒன்றை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.

கூடவே "உன் டிரெஸ்சை போல என்னோடதையும் அழுக்காக்காத டி அப்புறம் அடிச்சிடுவேன்..!!" என்று எச்சரிக்க.

"பொல்லாத டிரெஸ்சு..!!" என்று அலட்சியமாய் முனங்கியவள் "செய்ய மாட்டேன் தா டா..!!" என்று கூறியபடி லேசாய் பாத்ரூம் கதவை திறந்து லேசாய் கையை மட்டும் வெளியே நீட்டி அவனிடம் இருந்து வாங்கினாள்.

அவனோ அவளுக்கு கொடுத்து முடித்ததும் மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து போனை நோண்ட.

தொள தொள வென முட்டி வரை இருந்த அவனது டீ சர்ட்டையும் சாக்கு போல இருந்த அவனது டிராக் பேண்டையும் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள் சித்தாரா.

அவளை வீட்டில் அமர்த்தியவன் அப்போது உண்ட அதே கையேந்தி பவனில் இருந்து இரவு உணவு வாங்கி வர இருவரும் உண்டு முடித்தனர்.

பின் தூக்கம் கண்களை சுழற்ற அவள் கையில் ஒரு பாய் தலையணை பெட்சீட் கொடுத்து ஹாலில் படுக்க சொன்ன சர்வா ரூமில் இருந்த பெட்டில் போய் படுத்துக்கொள்ள.

அதை கண்டு கோபம் கொண்ட இவளோ "அது என்ன உனக்கு மட்டும் பெட் எனக்கு மட்டும் பாயா எனக்கு தெரியாது நானும் பெட்ல தான் படுப்பேன்..!!" என்று கூறி அவனிடம் சண்டைக்கு போக

"ப்ச் எரிச்சல கிளப்பாம போய் ஹால்ல படு டி வந்துட்டா மனுஷனை கடுப்பு ஏத்துறதுக்குன்னே..!!" என்று எரிந்து விழ

அதை காதிலேயே வாங்காதவள் "இல்லை நான் பெட்டுல தான் படுப்பேன் நீ வேணும்னா பாய்ல போய் படு..!!" என்று சொல்ல

ஏற்கனவே டயர்டில் இருந்த சர்வாவுக்கு தூங்க விடாமல் இவள் செய்யும் செயல் கடுப்பை கிளப்பியது.

இருந்த எரிச்சலில் அவளை பார்த்தவன் "நான் வாங்குன பெட் இது சோ இதுல நான் தான் படுப்பேன். உனக்கு வேணும்னா நீ வாங்கிக்கோ ..!" என்று சூடாய் சொல்லிவிட்டு பெட்டில் படுத்து விட.

சிறிது நேரத்தில் அவன் அருகில் அரவம் கேட்டது அதில் என்ன என்று திரும்பி பார்க்க சித்தாரா தான் இவன் பெட்டில் சற்று தள்ளி படுத்துக்கொண்டு இருந்தாள்.

அதை கண்டவனுக்கோ கோபம் சுர்ர் என்று ஏற "ஏய் எந்திரி டி, நான் அவ்வளவு சொல்லியும் வந்து படுக்குற..!!" என்று கத்த

அதில் அவனை பாவமாக பார்த்த சித்தாரா "ஆல்ரெடி ரொம்ப உடம்பு வலிக்குது ஷிவ்வூ மாமா. பாய்ல படுத்தா இன்னும் வலிக்கும் அதுவும் இல்லாம அதில படுத்து எனக்கு பழக்கம் இல்லை ப்ளீஸ் .!! ப்ளீஸ்..!! நான் இங்கேயே படுக்குறேனே உன்னை டிஸ்டர்பே பண்ணமாட்டேன் ப்ளீஸ் மாமா..!!" என்று கண்களை சுருக்கி மாமா மாமா போட்டு கெஞ்ச.

சர்வாவுக்கோ ஆறு வயது சிறுமி சித்தாரா தன் பின்னே மாமா மாமா என்று சுற்றியது நினைவு வந்தது.

அந்த நினைவில் அவளிடம் மேற்கொண்டு மறுத்து பேசாமல் அமைதியாய் படுத்து விட அவளும் சமத்தாய் படுத்துக்கொண்டாள்.

அவளது மனமோ "அப்படி வாடி வழிக்கு, எப்படி ஐஸ் வச்சு உன்ன ஆப் பண்னேன் பார்த்தியா...? ஹும்ம்... சித்தாராவா கொக்கா..!!" என்று மனதில் தன்னை பற்றி பெருமையாய் எண்ணியபடி தூங்கி போனாள்.

தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 12

அந்த காலை பொழுதில், வெயில் சுள்லென்று முகத்தில் அடிக்க அதில் தூக்கம் கலைந்த சர்வா கண்களை சுருக்கியபடியே எழுந்து அமர்ந்தான்.

"ஹா....!!" என்று கொட்டாவி விட்டவன் தன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தவாறு அந்த பெட்டில் இருந்து எழுந்து முகம் கழுவ பாத்ரூம் நோக்கி செல்ல அச்சமயம் அவன் கால்களின் கீழே ஏதோ ஒன்று தட்டுப்பட்டது .

அதுவரை அரைதூக்கத்தில் இருந்தவன் இதில் சற்றுத் தெளிந்து என்ன அது என்று குனிந்து பார்க்க அங்கோ தன் கால் கைகளை விரித்து வைத்து பே..!! என்று படுத்திருந்தாள் சித்தாரா.

சித்தாராவுக்கு தூக்கத்தில் நன்றாக உருளும் பழக்கம் உண்டு நேற்று பெட்டில் சர்வாவுக்கு அருகில் படுத்து இருந்தவள் இப்போதோ உருண்டு உருண்டு கீழே அந்த பெட்ரும் டோருக்கு அருகில் கிடந்தாள்.

அவள் அப்படி படுத்ததில் சர்வாவின் டீ சர்ட் வேறு மேலே தூக்கி அவளது பளீர் இடையை காட்ட அவளோ இதை எதையும் உணராது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
இதை கண்டு எரிச்சலுற்ற சர்வாவோ அதே எரிச்சலுடன் பெட்டில் கிடந்த பெட்சீட்டை எடுத்து அவள் மீது போட்டான்.

போடும் சமயம் அவனது வாயோ "ச்ச எப்படி படுத்திருக்கா. கொஞ்சமாச்சும் காமன்சென்ஸ் இருக்கா. ஒரு பையன் கூட இருக்கோமேன்னு பயம் இருக்கா..??" என்று திட்டியபடியே தான் செய்தது.

பின் பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவன் சோபாவில் அப்படியே கண்மூடி அமர்ந்து விட்டான்.

ஏதோ அதிக எடையுள்ள பாரம் தன்னை அழுத்துவது போல இருந்தது.
நேற்று பொருட்கள் வாங்கி இருந்ததால் தற்சமயம் கையில் செலவுக்கு காசு வேறு பற்றாகுறையாய் இருக்க.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

வீட்டை விட்டு துரத்திய பெற்றோரிடம் பணம் கேட்க முடியாது. இங்கு இனி வீட்டு செலவுக்கு என்ன செய்வது என்றும் தெரியாத நிலை.

இதில் அவனது கனவு வேலை வேறு அடங்கி இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தான் போனான்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவன் மனதில் ஒரு சில முடிவுகள் எடுத்த பின்பே அமைதியானான்.

பின் அந்த சோபாவில் இருந்து எழுந்தவன் தனது வண்டி சாவியை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் கடையில் இருந்து பால் பாக்கெட் மற்றும் ஒரு சில சமைக்கும் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தான்.

பெண்ணவளோ இதை எதையும் அறியாமல் தூக்கத்தில் இருக்க வீட்டிற்குள் வந்தவனோ இன்னும் அவள் தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு எரிச்சலுற்றான்.

"வெயில் இப்படி அடிக்குது அப்ப கூட எப்படி தூங்குறா பாரு!!" என்று முனங்கியபடியே அவள் அருகில் சென்றவன் "ஏய் எந்திரி டி..!! மணி என்ன ஆச்சு இன்னும் தூங்கிட்டு இருக்க..!!" என்று சத்தம் போட

அதில் கடுப்புடன் புரண்டு படுத்தவள் தூக்க கலக்கத்திலேயே "ப்ச் அமைதியா போடா தூக்கத்தை கலைக்காம..!!" என்று அவனை எச்சரிக்க.

அடங்குபவனா சர்வா கீழே குனிந்து அவள் காலை பற்றியவன் தயவு தாட்சண்யமே பார்க்காமல் தரதரவென இழுத்துக்கொண்டு ஹாலுக்கு செல்ல அதில் தூக்கம் கலைந்தவள் பயத்துடன் "டேய்...!! விடு டா.. விடு டா என்னை. என் காலை விடுடா டேய்..!!" என்று கத்த

அவளது தூக்கம் நன்றாக கலைந்து விட்டதை உணர்ந்தவன் அப்போது தான் அவள் காலை விட்டான்.

அவன் காலை விட்டதும் பதறியடித்துக்கொண்டு எழுந்து நின்றவள் அவனை பார்த்து கோபமாக "மனுஷனா டா நீ..!! இப்படி காலை புடிச்சு தரதரனு இழுத்துட்டு வர..!!"என்று சீற

அதில் சுண்டு விரலால் தன் காதை குடைந்த சர்வா "என்கிட்ட மேடம் அடி வாங்கி ரொம்ப நாள் ஆச்சு இல்ல..!!" என்று நக்கலாக கூற
அதில் அவனை முறைத்தவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பாத்ரூமினுள் நுழைந்து கொண்டாள்.

பாத்ரூமினுள் இருந்து வெளியே வந்தவள் கையில் காப்பி அரிப்பை(வடிகட்டி ) கொடுத்த சர்வா "நல்லா ஒரு ஸ்டிராங் காப்பி குடிக்கணும் போல இருக்கு போய் காப்பி போட்டு கொண்டு வா..!!" என்று சர்வசாதாரணமாய் சொல்ல

அதில் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தவள் "என்ன விளையாடுறீயா..??" என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.

"உன் கூட விளையாட நான் என்ன சின்ன பாப்பாவா..?? போய் காப்பி போட்டு கொண்டு வாடி" என்று இவளிடம் கூறியவன் சோபாவில் சென்று அமர்ந்து அவனது போனை நோண்ட தொடங்க.

"ஷிவ்வூ...!! என்னை கொலைகாரியா மாத்தாத..!! நான் காப்பி போட மாட்டேன்..!!" என்றாள் பிடிவாதமாய்.

அதில் அவளை கூர்மையாக பார்த்த சர்வா "ஏன் போட மாட்ட..??" என்று அழுத்தத்துடன் கேட்க

"நான் ஏன் டா உனக்காக போடணும்..?? உனக்கு வேணும்னா நீ போடேன்" என்று கூறினாள் அவள்

"நீ தான் போடணும் ஏன்னா இப்போ என் செலவுல தானே நீ இருக்க அப்போ நீ தான் போட்டு ஆகணும்..!!" என்றான் அதுவரை இருந்த தோணி மாறி சீறலாய்.
அவன் கூறியதை கேட்ட அவளோ அவனை அதிர்ந்து பார்க்க.

"இங்க நான் என்ன ஃப்ரீ சர்வீஸ்சா பண்ணுறேன்..?? ஓசில சோறு போட்டு படிக்க வைக்க..?? உனக்கு தேவைனா நீ எனக்கும் சேர்த்து வீட்டு வேலை பண்ணிதான் ஆகணும்..!!" என்று முகத்தில் அடித்தது போல சொல்ல

விக்கித்து தான் போனாள் சித்தாரா. என்ன வார்த்தை சொல்லிவிட்டான். நான் அவன் செலவில் இருப்பதை சொல்லி காட்டிவிட்டான் அல்லவா..?? மனமே கலங்கியது அவளுக்கு .

சிறு பெண் அவளுக்கு எதிலும் விளையாட்டு தனம். அவளது வீட்டில் வேலை செய்ய சொன்னாலும் சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பவள் அதே போல இங்கேயும் செய்ய. வேலை செய்யவேண்டும் என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டான் சர்வா.
இவளோ அழுதுக் கொண்டே காப்பி போட கிச்சனுக்கு செல்ல.

அதை கண்ட இவனோ "செவனேனு வீட்டுல இருந்த என்ன தேவை இல்லாத பிரச்சனைக்குள்ள இழுத்து விட்ட இல்ல. இப்படி கொஞ்சம் நீ அழுறதை பார்க்கும் போது தான் மனசு நிம்மதி அடையுது..!! வந்துட்டா பெரிய இவளாட்டும்.. உனக்கு வேணும்னா நீயே போட்டுக்கோவா...?? நல்லா அனுபவி டி..!!" என்றவனுக்கோ சிறிதும் குற்ற உணர்ச்சியே இல்லை.

அவன் சொன்னது போலவே காப்பி போட்டுக்கொண்டு வந்தவள் அதை அவன் புறம் நீட்டாமல் டங்..!! என்று அருகில் இருந்த செல்பில் வைத்து விட்டு ரூமிற்குள் சென்று விட்டாள்.

இவனோ அதை பெரிதாய் கண்டுக் கொள்ளாமல் காப்பியை எடுத்து பருகி விட்டு கிச்சனில் அந்த கப்பை வைத்து விட்டு பெட்ரூம் நோக்கி சென்றான்.

அங்கோ அவள் பெட்டில் படுத்துக்கொண்டு அழுது கொண்டு இருக்க அதை கண்டும் காணாதவன் போல தனது டிராவல் பேக்கில் இருந்து ஒரு செட் உடை எடுத்துக்கொண்டு பாத்ரூமினுள் நுழைந்தான்.

அவனது அந்த உதாசீனம் அவளை மேலும் வலிக்க செய்ய தேம்பி தேம்பி அழுதாள்.
குளித்து முடித்து டிப்டாப்பாக பார்மல் உடையில் வந்த சர்வா டிரெஸ்சிங் டேபிள் மீது இருந்த சீப்பை எடுத்து கண்ணாடியை பார்த்தபடி தலை சீவ.

அழுதுக் கொண்டே இவனை தான் யோசனையுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா.

அவனோ சரியாய் ரெடியாகிவிட்டு கண்ணாடியில் தன் பிம்பத்தை ஒருமுறை சரிபார்த்துவிட்டு இவளை நோக்கி திரும்ப.
அதுவரை இவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் அவன் திரும்பியதும் வேறு புறம் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

அதை கண்டும் காணாதவன் போல அவள் அருகில் வந்தவன் "காலைலைக்கு சமைச்சு சாப்பிட்டு மதியத்துக்கும் சமைச்சு வை..!! நான் இனி ஆப்டர்நூன் தான் வருவேன் சோ பிரிபேர் பண்ணி வச்சிடு..!!" என்று கூறியவன் தான் எங்கு செல்கிறேன் என்பதை அவளிடம் கூறவே இல்லை.

அதை உணர்ந்து இவளும் "உனக்கு ரொம்ப ஏத்தம் டா..!! இரு இரு இதுக்கு ஒரு நாள் உன்னை பழிவாங்குறேன்..!!" என்று மனதில் கருவியவள் எழும்பி சமையல் செய்யப் போனாள்.

சந்திரா சமையல் செய்யும்போது பார்த்திருக்கிறாள் சில முறை அவர் உதவியுடன் சமைத்திருக்கிறாள் ஆனால் தனியாய் சமையல் செய்வது இதுவே முதல் முறை என்பதால் சற்று பயத்துடனே ஸ்டவ்வை பற்ற வைத்தாள்.

காலையில் காப்பி கிட்டிலின் உதவியுடன் போட்டதால் பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை ஆனால் இப்போதோ ஸடவ்வில் செய்ய பயமாய் இருந்ததது.

ஸ்டவ்வை பற்ற வைத்தவளுக்கோ எல்லாம் மறந்தது போல இருக்க பின் மூளையை பிசைந்து யோசித்தவள் கடகடவென கீழே கொட்டியிருந்த வெங்காயத்தை எடுத்தாள்.

வெங்காயத்தின் தோலை எப்படியோ பிய்த்தவள் கத்தியை எடுத்து அதை வெட்ட தொடங்க இதுவரை காய்கறிகளை வெட்டி பழக்கமில்லாதவளுக்கு அது மிகவும் சிரமமாக இருந்தது.

ஓரிரு முறை அவள் சமைத்தபோது சந்திரா உடன் இருக்க அவள் சும்மா எல்லா மசாலாவையும் சந்திரா எடுத்துகொடுத்த அளவில் போட்டு விட்டு கிண்டி மட்டும் விடுவாள் அதில் காய்கறி முதற்கொண்டு வெட்டுவது சந்திரா தான்.

இப்போது புதிதாய் செய்யும்போது கஷ்டமாக இருக்க மெதுவாய் வெட்டினாள்.

அவளது நிலைமை அடுப்பில் இருந்த பாத்திரத்திற்கு தெரியுமா என்ன அது அடுப்பு சூட்டில் நன்றாக காய்ந்து புகை வர ஆரம்பிக்க இவளோ அதை பார்த்து பதட்டத்தில் தெரியாமல் கையை வெட்டிக்கொள்ள கத்தியை கீழே போட்டவள் வலியில் "ஸ்..!!" என்று கத்தியபடி கையை பார்த்தாள் ஆழமாய் அறுக்காமல் இருந்தாலும் கொஞ்சம் அறுபட்டு இருக்க ரத்தம் வந்துக் கொண்டு இருந்தது.

பாத்திரம் வேறு நன்றாக பற்றிக்கொள்ள இப்போது அதிகமாய் புகை வந்தது.
அதில் இருமியவள் பதட்டத்தில் அறிவு அற்று போய் அப்படியே தன் கைகொண்டு அந்த பாத்திரத்தை தூக்க பாத்திரத்தின் சூடு இவள் கையை பதம் பார்த்து விட்டது.

அதில் "ஆ...!!" என்று அலறியவள் அப்படியே அந்த பாத்திரத்தை போட்டுவிட்டு வலியில் கையை பிரித்துக்கொண்டு கதறி துடித்தாள்.

மதியம் வருவேன் என்று சொன்ன சர்வா இரவு 8 மணிபோல வீட்டினுள் நுழைய இருண்ட வீடே அவனை வரவேற்றது.

தொடரும்...!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 13

காலையில் ஆழ்ந்து யோசித்த சர்வாவுக்கு ஒன்னு மட்டும் விளங்கியது அது தற்போது அவனுக்கு ஒரு வேலை வேண்டும் என்பது.

அதன்படி தனது சர்டிபிகெட்ஸ் எல்லாம் எடுத்தவன் பார்மல் வேர் அணிந்து கூகுளின் உதவியுடன் அருகில் இண்டர்வியூ நடக்கும் கம்பெனிகளுக்கு சென்றவன் அங்கு நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்று செலக்ட்டும் ஆனான்.

என்னதான் எம்.பி.ஏ கிராஜுவேட் என்றாலும் பிரெஷ்ஷர் என்பதால் இருபதாயிரமே சம்பளமாய் கூறப்பட்டது சர்வாவுக்கு.

இருக்கும் நிலைக்கு இது தேவை என்று எண்ணியவன் மனதில் வீட்டு செலவு போக சித்தாரா படிப்புக்கு போதுமானதாய் இருக்குமா என்ற யோசனை ஓட.

அப்போது அங்கு வந்த டீம் லீடர் "நீங்க இன்னைக்கே வேலைக்கு ஜாயின் பண்ணுறதா இருந்தாலும் ஓகே நாளைக்கு ஜாயின் பண்ணுறதா இருந்தாலும் ஓகே பட் இன்னைக்கே ஜாயின் பண்ணா இன்னைக்கும் சேர்த்து மன்த் எண்டுல சேலரி கிரெடிட் ஆகும் இதுவே நாளைக்கு பண்ணா நாளைல இருந்து கணக்கிடப்படும்..." என்று கூற

இருக்கும் நிலையில் இன்றுள்ள சம்பளத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று எண்ணிய சர்வா "ஓகே சார் நான் இன்னைல இருந்தே ஜாயின் பண்ணுறேன்..!" என்றிருந்தான்.

அதன் படி இன்று மாலை வரை வேலை செய்தவன் இடையில் பசிக்கும் சமயம் ஒரு டீ மட்டுமே வாங்கி பருகினான்.

காலையில் இருந்த காசிற்கு மாளிகை சாமான் வாங்கி இருக்க இப்போது அவனிடம் போதுமான அளவு காசு இல்லை. அதனால் பசியை போக்க மதியம் ஒரு டீ வாங்கி பருகியவன் மீண்டும் ஒரு இரண்டு மணி போல டீ வாங்கி பருகினான்.

ஆபிஸ் முடிந்ததும் அவன் நேரே சென்றது அவனது தந்தை வீட்டிற்கு தான். இந்த வேலையில் லேப்டாய் மிகவும் முக்கியம் என்பதை இன்று ஒரு நாளிலேயே புரிந்துகொண்டவன் கையில் லேப்டாப் இல்லாத காரணத்தால் இருக்கும் நிலையில் புதிதாகவும் வாங்க முடியாது என்று எண்ணி வீட்டில் இருக்கும் தன் லாப் டாப்பை எடுத்து வர முடிவு செய்தான். அந்த லேப்டாப் அவன் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்கு கிடைத்த பரிசு என்பதால் எந்த வித உருத்தலும் இல்லாமல் அதை எடுக்க முடிவுசெய்தான்.

வரவேற்பறையில் அமர்ந்து இருந்த சீதா மகனது வரவை கண்டு இன்பமாக அதிர்ந்தார்.

"சர்வா கண்ணா..!!!" என்றவருக்கோ கண்கள் கலங்கியது அந்த ஒருநாள் பிரிவில்.

வீட்டினுள் நுழைந்தவன் கலங்கி நிற்கும் தாயை கண்டு மென்மையாக புன்னகைத்தவாறு அவரை அணைத்துக்கொண்டான்.

"ம்மா என்ன இது சின்ன குழந்தை போல பிகேவ் பண்ணுறீங்க. ஜஸ்ட் ஒன் டேக்கு இப்படியா..??" என்று மென்னகையுடன் கேட்க

"போடா நீ வீட்டவிட்டு போன நினைப்பே எதோ பல வருஷம் உன்னை விட்டு பிரிஞ்ச உணர்வை கொடுக்குது..!!" என்று சொல்ல


தாயின் துயரை அவர் குரலிலே தெரிந்து கொண்டவன் இதனை பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

யோசனையில் இருந்தவனது நினைவை தாயின் குரல் மீட்க அதில் தெளிந்தவன் அவர் புறம் திரும்பி "என்ன மா..??" என்று கேட்க

அவரோ மீண்டும் "சித்தாரா எப்படி டா இருக்கா..?? நீ அவ கூட சண்டை போடல இல்ல..!!" என்று கேட்க.

அதில் அவரை பார்த்து பொய்யாய் முறைத்தவன் "என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு..??" என்று கேட்டவன் "அவ என் கிட்ட சண்டை போடாம இருந்தா சரி தான்..!!" என்றான் அலட்சியமாய்.

அதில் இன்னும் இருவருக்கும் இடையே உள்ள விரிசல் தீரவில்லை என்பதை உணர்ந்த சீதா மேற்கொண்டு அதை பற்றி எதுவும் பேசாமல் பேச்சை மாற்றும் பொருட்டு "ஆமா நீ எதுக்கு இப்ப இங்க வந்திருக்க, அதுவம் சித்து குட்டி இல்லாம..??" என்று கேட்க

அவனோ "என் லேப்டாப் எடுத்திட்டு போகலாம்னு வந்தேன் மா..!!" என்று மட்டும் கூற

லேப்டாப் தானே என்று எண்ணிய சீதாவும் அதை பற்றி மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.

மேலே தன் அறைக்கு சென்றவன் லேப்டாப் மற்றும் சில பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே வர.

பெரிய கேரியர் நிறைய உணவை அடைத்து வைக்க.

அதை பார்த்த உடனே புரிந்துகொண்டவன் "என்ன மா இது..!!" என்று புருவத்தை நீவியபடியே கேட்க.

அவரோ "இதுல நைட்டுக்கு சப்பாத்தி இருக்கு தொட்டுக்க பன்னீர் கிரேவி இருக்கு சித்தாராக்கும் உனக்கும் இது புடிக்கும் இல்ல அதான் வச்சேன்..!! மிச்ச மாவு இருக்கு சோ எங்களை பத்தி கவலை படாத" என்று சொன்னவரை பார்த்து

அவனோ "எதுக்கு மா இதெல்லாம்..??" என்று சலிப்புடன் கேட்க

அவரோ விடாபிடியாய் அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

அவனும் வேறு வழியின்றி அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் அறையில் இருந்து வெளியே வந்திருந்தார் விஷ்வநாத்.

"போய்ட்டானா..?? டின்னர் கொடுத்து விட்டுட்டேல்ல..??" என்று கேட்டபடி சீதாவை அவர் நோக்க.

அவரோ இடுப்பில் கைவைத்து கணவரை முறைத்தவாறே "இதுக்கு இதை நீங்களே அவன் கிட்ட கொடுத்து இருக்கலாம்..!!" என்றார் ஆதங்கமாய் கணவரும் மகனும் நல்ல பிணைப்புடன் இருக்கமாட்டார்களா என்று ஏங்குபவராயிற்றே.

"ப்ச் சீதா இதுக்கு ஏன் பீல் பண்ணுற..!! நான் கொடுத்தா உன் பையன் பிகு பண்ணுவான் டி அதான் கொடுக்கல..!!" என்று சொல்ல

அதில் அவரை பார்த்து முறைத்த சீதா "என் பையன் அப்படி ஒன்னும் பண்ண மாட்டான்..!!" என்றார் உடனே.

அதில் அவரை பார்த்து சிரித்த விஷ்வநாத் "ஹா..ஹா உன் பையனை நீ தான் மெச்சுக்கணும்..!! சரி சரி எனக்கு பசிக்குது வந்து பரிமாறு..!!" என்கவும் கணவனுக்கு உணவு பரிமாற சென்றுவிட்டார் சீதா.

இங்கு தன் வீட்டுக்கு வந்த சர்வாவோ வண்டியை பார்க் செய்து விட்டு எல்லா பொருட்களையும் கையில் எடுத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி நகர்ந்தான்.


வீட்டை அடைந்ததும் கதவை தட்டியவன் கதவு திறக்காமல் இருக்க தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே செல்ல இருண்ட வீடே அவனை வரவேற்றது.

அதில் புருவத்தை சுருக்கியவன் அருகில் இருந்த ஸ்விட்ச் போர்டை தட்டி லைட்டை ஆன் செய்தான்.


"எங்க போனா அந்த அடங்காபிடாரி.!!" என்று முணுமுணுத்தபடியே உள்ளே சென்றவன் பெட்ரூமிலும் லைட்டை போட்டு விட்டு பார்க்க அங்கோ அவனது மனையாள் பெட்சீட்டை போர்த்திக்கொண்டு சுகமாய் தூங்கிக்கொண்டிருந்தாள்.

அதை பார்த்து கடுப்புற்றவன் "வீட்டுல லைட் கூட போடாம தூங்குறதை பாரு..!! ஒருத்தன் வெளிய போனானேனு கவலை இருக்கா. இங்க நான் அவளுக்கும் சேர்ந்து உழைக்கிறேன் அவ என்னடா னா ஹாயா தூங்கிகிட்டு இருக்கா..!!" என்று எரிச்சலுடன் முனங்கியவன் காலையில் செய்தது போலவே அவளை எழுப்ப பார்க்க.

இப்போது அவன் கையில் சிக்கியது அவளது கைதான் அதை பற்றி அவன் இழுக்க வலியில் கத்தியவாறு துடித்து போய் எழுந்து அமர்ந்தாள் சித்தாரா.

அவளது குரல் வேறுபாட்டில் புருவம் சுருக்கிய சர்வா பதற்றத்துடன் அவள் அருகில் சென்று "ஹேய்..!! என்னடி ஆச்சு..?? நான் லேசா தானே புடிச்சு இழுத்தேன். கை வலிக்குதா என்ன..??" என்று கேட்ட படி அவள் கைகளை பற்றி ஆராய அவன் உள்ளங்கையை தொட்டதும் மீண்டும் வலியில் கத்தினாள் சித்தாரா அதில் அவளது உள்ளங்கைக்கு மேல் பற்றியவன் அவளது உள்ளங்கையை ஆராய அங்கோ செக்கச்செவேல் என்று சிவந்து போய் தோல் உப்பி தண்ணீர் கட்டியிருந்தது. அதை கண்டு மற்ற கையிலும் ஆராய அங்கும் அதே போல் தான் இருந்தது.

அதை கண்டு அதிர்ந்தவன் "ஏய் என்ன டி இது..!! வா ஹாஸ்பிட்டல் போகலாம்" என்று அவளிடம் பதற்றத்துடன் கூற அவளோ அவனுக்கு பதில் கூறாமல் அவனிடம் இருந்து தன் கையை விலக்கிக்கொண்டாள்.

அதை கண்டு பல்லை கடித்தவன் "காயம் பட்டாலும் உனக்கு கொழுப்பு குறையலை டி ..!!" என்றபடி அவளது கைகளை வலிக்கும்படி அழுத்தி பிடித்தவன் அப்படியே அவளை இழுத்துக்கொண்டு வெளியே செல்ல போக..

அவனிடம் இருந்து விடுபட முயன்றவளோ கடைசியில் அவளது சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி அவனை உதறி தள்ள.

அதில் எழுந்த கோபத்தில் அவளை அடிக்கவே சென்றுவிட்டான் சர்வா ஆனால் கடைசி நிமிடத்தில் தன்னை சுதாரித்துக்கொண்டவன் கையை கீழே இறக்க.

அதற்குள் தன் கைவலியையும் பொருட்படுத்தாமல் அவன் நெஞ்சில் கைவைத்து வேகமாக தள்ளிவிட்ட சித்தாரா "அடி டா ஏன் நிறுத்திட்ட, அடி.. நல்லா அடி...!!" என்று ஆக்ரோஷமாக கத்த

எரிச்சலுடன் அவளை பார்த்தவன் "நம்ம சண்டையை அப்புறம் வைச்சுக்கலாம் டி இப்போ ஹாஸ்பிட்டல் வா..!!" என்று வராத பொறுமையை கடைபிடித்து அவளிடம் அழுத்தமாய் சொல்ல.

அதில் அவனை பார்த்து ஆக்ரோஷமாக திரும்பியவள் "வா..ன்னா..?? எப்படி இப்படியே வா..??" என்றாள் தன் உடையை சுட்டிக்காட்டி.

அப்போது தான் அவனும் அவளது உடையை கவனித்தான் நேற்று உடுத்திய அவனது உடையிலேயே தான் இன்னும் அவள் இருந்தாள் .

அதை கண்டு தன் பெருவிரலால் நெற்றியை நீவியவன் கண்களில் அவனது கையில் இருந்த தங்க மோதிரம் தட்டுப்பட ஆபத்துக்கு பாவம் இல்லை என்று எண்ணியவன் அவளை சிறிது நேரம் வீட்டில் இருக்க சொல்லி விட்டு அருகில் இருந்த அடகு கடையில் அடகு வைத்து விட்டு அதில் கிடைத்த பணத்தில் கொஞ்சம் எடுத்து அவளுக்கான உடைகள் சில வாங்கி வந்தான்.

"இந்தா..!! சீக்கிரம் இதுல இருக்க டிரஸ்ச போட்டுட்டு வா..!!" என்று கூறி அவளிடம் துணியை நீட்ட.

அவளோ அவனை முறைத்து பார்த்தாள்.

அதில் "பச் இன்னும் என்ன டி..!!" புரியாது அவளை பார்த்து கேட்க.


அவளோ தன் கை இரண்டையும் அவன் முகத்துக்கு நேரே நீட்டி "பாரு நல்லா பாரு .!! இந்த கையை வச்சுட்டு நான் எப்படி டிரஸ் மாத்துவேன்...!!" என்று ஆதங்கமாக கேட்க அப்போதும் அவளது ஆத்திரம் குறையவில்லை போலும் தன் காலை கொண்டு அவன் காலை எட்டி உதைத்தவள் "உன்னால தான் டா..!! உனக்கு சமைக்க போய் தெரியாம சூடான பாத்திரத்தை பிடிச்சு தான் டா இப்படி என் கைக்கு இந்த நிலைமை வந்துச்சு..!!"என்று சொல்லியவள்

"என் கை எப்படி எரியுது தெரியுமா..??" என்று கூறி உதடு பிதுக்கி ஏங்கி ஏங்கி அழ தொடங்க.

"பச் சுத்தி வளைச்சு என் பேரை சொல்லாம உன் கேர்லெஸ்னால தான் இப்படி ஆச்சுன்னு டைரெக்டா சொல்லு டி பாப்பா...!!" என்று நக்கலாக கூறியவன் அழுதுக் கொண்டு இருப்பவளை காண சகிக்காது அவளை இழுத்து ஆறுதலாய் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

அவளும் அப்போது ஆறுதல் வேண்டினாளோ என்னமோ மறுக்காமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

எவ்வளவு நேரம் இருவரும் அப்படி நின்றார்களோ தெரியாது நேரம் ஆவதை உணர்ந்த சர்வா அவளை தன்னை விட்டு பிரித்து "சரி நான் உனக்கு டிரஸ் சேஞ்ச் பண்ண ஹெல்ப் பண்ணுறேன்...!!" என்று சொல்ல

அதில் அதிர்ச்சியுடன் அவனை பார்த்த அவள் "என்ன விளையாடுறீயா..??"என்று கேட்க

அதில் அதுவரை அமைதியாய் இருந்தவனுக்கு கோபம் சுர் என்று ஏறியது.


"என்ன பார்த்தா உனக்கு எப்படி இருக்கு பொறுக்கி போலவா..??" என்று கண்கள் சிவக்க கத்தியவனை பார்த்து உண்மையிலேயே மிரண்டு தான் போனாள் சித்தாரா.

அவனது கோபத்தை குறைக்க தன் நிலை விளக்கம் கூற "இல்ல டா அது வந்து..!!" என்று எதோ சொல்ல வந்தவளை பார்த்து கை நீட்டி தடுத்தவன் "இங்க பாரு பாவம் வலியில கஷ்டபடுறீயேனு மனிதாபிமானத்துல தான் ஹெல்ப் பண்ண கேட்டேன். அதுவும் இல்லாம நீ அரைகுறையா என் முன்னாடி நின்னா இல்ல டிரஸ்சே போடாம நின்னா கூட உன் மேல எனக்கு எந்த பீலிங்ஸ்சும் வராது..!!" என்று முகத்தில் அடித்தது போல கூறினான்.

பின் தன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு அவளிடம் திரும்பியவன்" ஹாஸ்பிடல் போக நேரம் ஆச்சு இப்போ உனக்கு ஹெல்ப் வேணுமா வேண்டாமா..??" என்று சிடுசிடுப்பாய் கேட்க

வெறுத்து போனது சித்தாராவுக்கு.

அவளால் தனியாகவும் துணிமாற்ற முடியாது அதற்காக இவனிடம் உதவி கேட்கவும் கூச்சமாக இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தவளை பார்த்து பொறுமை எல்லாம் பறக்க.

அவளது கையை பற்றி விறுவிறுவென அறைக்குள் அழைத்துச்சென்றவன் "இங்க பாரு என்ன இப்போ ஒரு பையனா பார்க்காம ஜஸ்ட் ஒரு நர்ஸ் போல பாரு சரியா..??" என்று கூறியவன் அவளுக்கு சம்மதமா என்று கூட கேட்காமல் அவள் போட்டு இருந்த தன் டீசர்டில் கைவைத்து கழட்டி எடுத்தான்.

அதில் அதிர்ந்து போன அவள் அவன் முகத்தை பார்க்க அவனோ இவள் மேல் சிறிதும் கண்ணை பதிக்காமல் வேறெங்கோ பார்த்தபடி அடுத்து அடுத்து அவளது துணிகளை சலனமே இல்லாமல் மாற்றிக்கொண்டிருந்தான்.

எந்த வித எண்ணமும் இல்லாமல் சுலபமாய் அவள் துணிகளை மாற்றியவனுக்கு அவள் மீது ஏதும் தோன்றாமல் இருக்கலாம் ஆனால் அவன் உதவியுடன் துணிமாற்றிக்கொண்டு இருந்தவளுக்கு அப்படி இருக்க முடியவில்லை போலும் முதன் முதலில் அவளிடம் சலனம் அதுவும் அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியாதபடி.

கடகடவென துணி மாற்றி முடித்தவன் "டன் எல்லாம் முடிஞ்சிச்சு..!! வா ஹாஸ்பிட்டல் போகலாம்..!!" என்று கூறியபடி அவளை அழைத்துக்கொண்டு போக ஏதோ கீ கொடுத்து பொம்மை போல அவன் பின்னே சென்றாள் சித்தாரா.

ஹாஸ்பிட்டல் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாயிற்று ஆனால் சத்தியமாக ஹாஸ்பிட்டலில் டாக்டர் என்ன சொன்னார் என்று கூட நினைவில் இல்லை. ஏனெனில் அவளது நினைவை மொத்தமாக ஆக்ரமித்து இருந்தது அவளது ஷிவ் மாமா தான்.

ஆனால் இது காதல் என்றெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை ஏனோ அதிசயமாய் இன்று அவனை பிடித்திருந்தது அவனை பற்றி எண்ண தூண்டுகிறது அவ்வளவே..!!

இவள் ஏன் என்று எண்ணிக்கொண்டு இருக்க அதற்குள் அவள் அருகில் வந்து உட்கார்ந்த சர்வா கையில் வைத்திருந்த தட்டில் உள்ள சப்பாத்தியை பிய்த்து பன்னீரில் முக்கி "ஏய்..!! ஆ காட்டு டி..!!" என்றபடி அவள் வாய் அருகே கொண்டு செல்ல.

அதில் சட்டென்று நிகழ் உலகத்திற்கு வந்த சித்தாரா அவனையும் அவன் கையில் இருந்ததையும் மாறி மாறி பார்த்து புரியாமல் விழிக்க.

அதில் சலிப்புடன் அவளை பார்த்தவன் "படுத்தாத டி உன் கைதான் காயம் ஆகி இருக்கு இல்ல உன்னால தனியா திங்க முடியுமா..??" என்று கேள்வி எழுப்ப இவளோ யோசித்துவிட்டு இல்லை எனும் விதமாய் தலையாட்டினாள்.

அதில் "ம்ம்..!! தெரியுது இல்ல அப்போ வாய தொற..!!" என்றவன் கையில் இருந்ததை அவள் வாயில் வைத்து அமுக்க.

அதில் அதுவரை இருந்த மாயவலையில் இருந்த விடுபட்டவள் "டேய் பார்த்து ஊட்டு டா பன்னி..!!" என்றாள் அவனை பார்த்து முறைத்துக்கொண்டே.

அதில் பதிலுக்கு அவன் ஏதோ சொல்ல இப்படி வாயாடிக்கொண்டே இரவு உணவை உண்டு முடித்தார்கள் இருவரும்.

தூங்க போகும் முன் அவளுக்கு மாத்திரை கொடுத்து விழுங்க சொன்னவன் அவள் கையில் ஆயில்மெண்டையும் போட்டு விட்டு படுக்க வைத்தான்.

வார்த்தை என்னமோ சிடுசிடுப்பாய் வந்தாலும் அவனது செய்கை எல்லாம் ஒரு குழந்தையை கவனிப்பது போலவே இருக்க அது புரியவேண்டியவளுக்கு புரியாமல் போனது தான் பரிதாபத்திலும் பரிதாபம்...!!

தொடரும்..!!
 
Last edited:

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 14

"ஏய் உன்னை எத்தனை வாட்டி எழுப்புறது..?? எனக்கு ஆபிசுக்கு டைம் ஆச்சு எந்திரி டி..!!" என்று விடாது தன் மனையாளின் சுகமான துயிலை கலைக்க போராடிக்கொண்டு இருந்தான் சர்வா.

இதே மற்ற நேரமாய் இருந்திருந்தால் அவள் காலை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு ஹாலில் போட்டு இருப்பான் இல்லை என்றால் ஒரு பக்கெட் தண்ணீரில் அவளை குளிப்பாட்டி இருப்பான்..!!

ஆனால் இப்போதோ அப்படி செய்ய முடியாதே..!! ஏற்கனவே அவள் கையில் காயம் ஏற்பட்டு இருக்க அவளிடம் எந்த வன்முறையையும் வளர்க்கவில்லை அவன்.

அதான் தனக்கு வராத பொறுமையை இழுத்து பிடித்து அவளை எழுப்பிக்கொண்டு இருக்கிறான். ஆனால் அவனது மனையாளுக்கு அதை பற்றி எல்லாம் சிறிதும் கவலை இல்லை போலும். நீ எவ்வளவு வேண்டும் என்றாலும் முயற்சி செய் நான் என் உறக்கத்தில் இருந்து எழும்பவே மாட்டேன் என்பது போல படுத்துக்கிடந்தாள்.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் இது வேலைக்காகாது என்ற முடிவுடன் அவளது கை தசையை பிடித்து வலிக்கும்படி அழுத்தமாக கிள்ளி வைத்தான்.

அது தந்த அதிகமான வலி காரணமாய் "அம்மா..!!" என்று அலறியபடி எழுந்து அமர்ந்த சித்தாராவின் கண்களிலோ முணுக்கென்று கண்ணீர் வர அவளது இந்த தோற்றத்தை யார் பார்த்தாலும் அவள் பால் இரக்கம் சுரப்பது உறுதி.

ஆனால் அவள் எதிரில் நிற்பவனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போலும் அவள் எழுந்து அமர்ந்ததை பார்த்து பொறுமையாய் டிரெஸ்சிங் டேபிள் மேல் இருந்த சீப்பை எடுத்து கண்ணாடியை பார்த்து தன் தலையை வாரியபடியே "அடி உதவுறது போல அண்ணன் தம்பி உதவ மாட்டாங்களாம்..!! இந்த பழமொழியோட அர்த்தம் எனக்கு இன்னைக்கு தான் தெளிவா புரிஞ்சிது. எத்தனை வாட்டி பொறுமையா உன்னை எழுப்புன போதும் எழும்பாத நீ லேசா ஒரு கிள்ளு கொடுத்தத்தும் டக்குன்னு எழுந்துட்ட பார்த்தியா..??" என்று கண்ணாடி வழியே அவளை பார்த்தபடி ஏதோ அரிய வகை கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல பேசிய அவனை பார்க்க பார்க்க பத்திக்கொண்டு வந்தது சித்தாராவுக்கு.

கண்களில் தேங்கி நின்ற கண்ணீரோடே அவனை முறைத்தவள் அருகில் இருந்த தலையணையை தூக்கி அவன் முதுகில் ஓங்கி அடித்து விட்டு பாத்ரூம் நோக்கி நகர்ந்தாள்.

அவள் அடித்த இடத்தை கொசு கடித்தது போல தட்டி விட்ட சர்வா தன் தலை வாரும் பணியை மீண்டும் தொடர்ந்தான்.

பாத்ரூமில் இருந்து முகம் கழுவி வந்தவள் முகத்தை கூட துடைக்காமல் சோபாவில் வந்து அமர.

அப்போது ஹாலுக்கு வந்த அவன் இவளது தோற்றதை பார்த்து பல்லை கடித்தபடி துண்டை தூக்கி போட்டான்.

அவளோ இவன் மீது இருந்த கடுப்பில் அந்த துண்டை அலட்சியமாய் அவன் மீதே எறிந்துவிட்டு அமர்ந்து இருக்க.

கோபம் கொண்டவன் அந்த துண்டை வைத்து அவள் முகம் சிவந்து போகும் வண்ணம் அழுத்தி பரபரவென துடைத்துவிட்டான்.

அவளுக்கோ இவனது இந்த செயலில் முகம் எல்லாம் எரிய வந்த கோபத்தில் தன் வாய்க்கு எட்டிய அவனது தோளை பிடித்து வலிக்கும் படி அழுத்தி கடித்து வைத்தாள்.

அவள் கடிக்கவும் வலியில் "ஆ...!!பைத்தியம், விடுடி விடுடி ...!!" என்று அலறிய சர்வா அவளை கஷ்டப்பட்டு தன்னிடம் இருந்து பிரித்து அவளை உறுத்து விழிக்க.


அதற்கும் மேல் அவனை முறைத்த அவள் "எப்படி இருக்கு நல்லா குளுகுளுனு இருக்கு இல்ல, இப்படி தான் எனக்கு இருக்கும்..!!"என்றாள் நக்கலாய்

அவனோ அதற்கு பதிலுக்கு ஏதோ சொல்ல வர கிச்சனில் இருந்து வந்த விசில் சத்தம் அதை தடைசெய்தது. அதில் அவளை ஏதும் சொல்லாமல் முறைத்துவிட்டு கிச்சனுக்கு சென்றவன் தட்டில் ஏழு இட்லி சாம்பார் ஊற்றி கொண்டு வந்து அவள் அருகிலே அமர்ந்தான்.

ஒரு இட்லியை லேசாய் பிய்த்து அதை சாம்பாரில் தொட்டவன் அவள் வாயருகே அதை கொண்டு செல்ல அவளோ அவனை முறைத்தவண்ணம் "இட்லி யாரு செஞ்சது..!!" என்றாள் உர்ரென்று.

அதில் கடுப்புடன் அவளை பார்த்தவன் "ஆங்..!! நம்ம செத்துபோன பாட்டி செஞ்சாங்க...!!" என்றான் நக்கலாய்.

அதில் அவளோ அவனை மேலும் முறைக்க அதில் கண்ணைமூடி தன்னை நிலைபடுத்தியவன் "ரொம்ப சோதிக்கிற டி என்னை..!!" என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவண்ணம் "நான் தான் சமைச்சேன் போதுமா..??" என்று கடுகடுக்க

அதில் முகத்தை சுருக்கியவள் "நீ சமைப்பியா..?? அப்போ ஏன் நேத்து நீ சமைக்காம என்ன சமைக்க சொன்ன..??" என்று ஆரம்பத்தில் குழப்பமாய் கேட்டவள் கடைசியில் கோபமாய் முடிக்க.

அதில் அச்சமயம் எச்சில் கையிலே அவளை அடித்தால் என்ன என்று தான் தோன்றியது சர்வாவுக்கு

ஆனாலும் அதை செயல்படுத்த முடியாதபடி அவளது கையின் நிலை தடுக்க.


புருவத்தை சுருக்கியவன் "எப்படி எப்படி நானே வேலைக்கு போயிட்டு நானே உனக்கு சமைச்சு போடணுமா..??" என்று கேட்டான் நக்கல் கலந்த கோபத்துடன்.

அதில் புருவ முடிச்சுடன் அவனை பார்த்தவள் "என்ன நீ வேலைக்கு போறீயா..??" என்றாள் குழப்பமாய்.

அதில் அவனோ நேற்று தான் வேலைக்கு சேர்ந்ததை பற்றி கூறி "பாவமாச்சே கைல அடிபட்டு இருக்கேன்னு போனாபோகுதுன்னு இன்னைக்கு சமைச்சா..!! நீ மொத்தமா என்னை சமையல் பண்ணவைக்கலாம்னு இருக்கீயா..?? தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை..!!" என்று மிரட்டிவிட்டு.

"பக்கத்து வீட்டு பாட்டி கிட்ட உன் கையை பத்தி சொல்லிவச்சிருக்கேன் அவங்க மதியம் வந்து உனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு போவாங்க. நான் ஈவ்னிங் சீக்கிரமே வந்திடுவேன் சோ எந்த ஆர்வகோளாறான வேலையும் செய்யாம ஒழுங்கா அடங்கி ஒடங்கி இரு...!!" என்று சொல்ல


முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்தாள் சித்தாரா அவளுக்கோ இதுக்கு மேல் சமையல் செய்ய எல்லாம் இஷ்டமில்ல எப்படியாவது சர்வாவிடம் சொல்லி அவன் தலையில் சமையல் வேலையை கட்டிவிடலாம் என்று அவள் எண்ணியிருக்க அவனோ முதலிலே அதற்கு கேட் போட்டு விட்டான்.


அதில் கடுப்புடன் அவள் அமர்ந்து இருக்க இவனோ அதை எல்லாம் கணக்கிலேயே எடுக்காமல் அவள் வாய் அருகே உணவை கொண்டு போக மறுத்தால் மீண்டும் தனக்கு வலிப்பது போல எதாவது செய்வான் என்று உணர்ந்த சித்தாரா பேசாமல் வாயை திறந்து வாங்கிக்கொண்டாள்.

ஆகா ஓகோ என்று இல்லாவிட்டாலும் சுமாராக சாப்பிடும் படி இருக்க "நல்லாவே இல்லை உப்பு உறைப்பு எதுவும் இல்லை. !!" என்று குறை கூறிக்கொண்டு தான் சாப்பிட்டாள்.

அதில் அவனோ அவளை பார்த்து முறைத்தபடி "நீ தீச்சு வச்ச சட்டியை விட இது நல்லாதான் இருக்கு மூடிட்டு சாப்பிடு டி" என்றான் நக்கலாய்.

அவளோ அவனை முறைத்தபடி அவன் ஊட்ட ஊட்ட வாங்கிக்கொள்ள.

இவனும் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு அடுத்த வாயை இவன் உண்டு என அந்த ஏழு இட்லியையும் காலி ஆக்கினான்.


பின் அவள் கைக்கு மருந்து இட்டவன் அவளை காலை நேரத்துக்குள்ள மாத்திரைகளை விழுங்க செய்துவிட்டே ஆபிசுக்கு புறப்பட்டான்.

அவன் சென்றதும் "ஹப்பா போயிட்டான்..!!" என்று நிம்மதி பெருமூச்சு விட்ட சித்தாரா சென்று பெட்டில் படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

இங்கு ஆபிசுக்கு வந்த சர்வா அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கவனிக்க தொடங்க.

அச்சமயம் அவனை டீம் லீடர் அழைப்பதாய் சொல்ல அதில் தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் டீம் லீடரை நோக்கி செல்ல அப்போது "ஹே சர்வா..!!"என்ற பெண்ணின் குரல் அவன் காதுகளில் விழ

அதில் புருவம் சுருக்க திரும்பியவன் அங்கு நின்றிருந்தவளை கண்டு ஆனந்தமாய் அதிர்ந்தான்.

"ஹே பூஜா..!! வாட் ஏ சர்பிரைஸ்..!!" என்று சிரித்தபடி கேட்ட வண்ணம் அவள் அருகில் செல்ல.

"ரியலி இது எனக்கு தான் சர்பிரைஸ்..!!" என்ற வண்ணம் அவனை சென்று அணைத்துக்கொண்டாள் பூஜா என்னும் பூஜவர்ஷினி.

பதிலுக்கு அவளை அணைத்து விடுவித்தவனை கண்டு உற்சாகமாய் "ஹவ் ஆர் யூ மேன்..!!" என்று அவனது புஜத்தில் குத்தி கேட்க.

"எனக்கென்ன ஐயாம் டோட்டலி பைன். வாட் அபவுட் யூ.!!" என்றான் தெற்றுப்பல் தெரிய சிரித்தபடி . சர்வா சிரிப்பது மிக அரிது அப்படி சிரித்தால் அவன் சிரிக்கும் சமயம் தெரியும் அவனது தெற்றுப்பல் தான் அவனுக்கு மேலும் அழகு சேர்ப்பது.

"ஐயம் ஆல் வேஸ் பைன் பார்த்தா தெரியல யூஜில உன் கூட படிச்ச அதே பூஜா தான் இப்பவும் ...!!"என்று கூறி அழகாய் சிரித்தாள்.

"ஆமா நீ எங்க டா இங்க..??"என்றவள் அவனது தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியுடன் "வொர்க் பண்ணுறீயா டா..??" என்று கேட்க.

அதில் உதட்டுக்கு எட்டாத ஒரு புன்னகையை சிந்திய சர்வா ஆம் எனும் விதமாய் தலையாட்டினான்.

அதில் மேலும் அதிர்ந்தவள் "என்ன டா சொல்லுற அப்போ உன்னோட கனவு..??" என்று கேட்க.


"ப்ச் அது இருக்கு பூஜா ஒரு ஓரமா..!! இப்ப அதுக்கு என்ன அவசரம்..!!" என்று சலிப்புடன் கேட்க.

"என்னது ஓரமா இருக்கா..?? டேய் உனக்கு என்ன டா ஆச்சு..!!" என்று கண்கள் விரிய அவனை பார்த்துக்கேட்டாள் பூஜா.

"ஹே பூஜா ஜஸ்ட் சேஞ்ச் தி டாப்பிக் இட்ஸ் இரிட்டேட்டிங்..!!" என்று எரிச்சலுடன் சொன்னவன் "ஜஸ்ட் எ மினிட் என்ன டீம் லீடர் கூப்பிட்டார் நான் ஏன்னு கேட்டுட்டு வரேன் . .!!" என்றபடி அவளை கடந்து செல்ல.

போகும் அவனை அதிர்ச்சியும் குழப்பமுமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள் பூஜா ..!!



தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 15

"சொல்லு சர்வா, வாட் ஹேப்பெண்ட்..?? ஏன் இங்க வேலைக்கு வந்து இருக்க. இங்க நீ வேலைக்கு வந்து இருக்கேன்னா தென் வாட் அபவுட் யூவர் டிரீம்..??" என்று அந்த ஆபிஸ் கேண்டினில் தனக்கு எதிரே அமர்ந்து இருந்த சர்வாவை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்டாள் பூஜா..!!

அதை கேட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்த சர்வாவோ எதையோ நினைத்தவனாய் அலட்சியமாய் தன் தோளைக் குலுக்கியவாறு "ப்ச், வில் சீ பூஜா எங்க போயிடபோகுது..?? எனக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு,சோ பொறுமையா டிரீம் சைட் போகலாம்..!!" என்று சொல்ல

அதில் "வாட்..??" என்று அதிர்ந்தாள் பூஜா அவள் பழகிய வரை சர்வா இப்படி இல்லையே..?? என்ன வந்தாலும் தன் காரியம் தான் முதல் என்று கருதுபவன் அவன் இதற்காக பலமுறை இவர்கள் இருவரும் மோதிக்கொண்டது உண்டு அப்படி இருந்தவன் இன்று தனது லட்சியக்கனவையே அலட்சியமாய் கடக்கிறான் என்றால் "சம்திங் ஃபிஷ்ஷி..!!" என்று எண்ணிக்கொண்டாள் பூஜா..!!

"ஹே பூசை.!! உன் 007 மூளையோட ஆராய்ச்சிய இப்போ நிறுத்திட்டு இப்போ சாப்பிடுறீயா..??" என்று சர்வா சொல்ல.

அதில் தன் யோசனையில் இருந்து வெளிவந்து அவள் "ஹே சர்வா..!! நான் பூசை இல்லை பூஜா..!! பூ.. ஜா...! சோ டோன்ட் கால் மீ பூசை..!!" என்று கோபமாக சொல்ல.

அதை அலட்சியம் செய்தவன் "ஓகே பூசை..!!" என்றான் கையில் இருந்த கட்லெட்டை ஒரு கடி கடித்தபடி..!!

அதில் "ஹே சர்வா..!!" என்று மூக்கு விடைக்க கோபமாக சிணுங்கியவளை பார்த்து பக்கென்று சிரித்தவன் தன் கைகளை மேலே தூக்கியவண்ணம் "ஓகே லெட்ஸ் டேக் த ஸ்நாக்ஸ் டியூட்...!!" என்று சரண்டர் ஆவது போல் சொல்ல.

அதை கண்டு சிரித்த இவளும் பிளேட்டில் இருந்த கட்லெட்டை எடுத்துக் கடித்தபடி "நீ இன்னும் மாறவே இல்லை டா சர்வா..!!" என்றாள் புன்னகையுடன்.

****************************************

அன்று எப்போதும் போல ஆபிஸ் முடித்து இரவு தன் வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியே சென்றுக் கொண்டு இருந்த சர்வாவின் மனமோ ஏனோ குழம்பி போய் இருந்தது.

அதே குழப்பத்துடன் வீட்டை அடைந்தவன் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டை திறக்க "ஹே அத்தான் வந்தாச்சு..!!" என்று கூவியபடி அவனை வந்து கட்டிக்கொண்டாள் கண்மணி.

அதில் அதிர்ந்தவன் சிறுபுன்னகையுடன் அவளை பதிலுக்கு அணைத்துவிட்டு அவளது தலையின் மீது கையை வைத்து ஆட்டியபடி "ஹே வாலு எப்படி இருக்க..??" என்று புன்னகையுடன் கேட்டவன் சட்டென்று "ஆமா நீ எப்படி இங்க வந்த..??" என்று யோசனையாய் கேட்க.

அதில் பளிச்சென்று புன்னகைத்த கண்மணி "நல்லா இருக்கேன் அத்தான்...!!" என்று முதல் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவள் இரண்டாவது கேட்ட கேள்விக்கு "அது...!! உங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சா அதான் அம்மா கிட்ட சொன்னேனா உடனே அம்மா அப்பாட்ட ஏதோ சொல்லி அவரை சமாளிச்சு என்னை இங்க அனுப்பி வச்சாங்க..!!" என்று கண்களை விரித்து சொல்ல.

"அது சரி..!!" என்று சொன்னவன் தோளில் கிடந்த பேகை கழட்டியவாறு ஹாலில் இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.

அவனை தொடர்ந்து அவன் அருகில் அமர்ந்த கண்மணி "என்னத்தான் நடக்குது..?? அங்க வீட்டுல கிச்சன் போய் ஒரு கப் தண்ணீ கூட எடுத்து குடிக்க மாட்டீங்க இங்க மொத்த சமையலும் உங்களுது தானாம் அதுவும் அக்கா வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல கேட்காம அவளுக்கு ஊட்டி விடுறீங்களாம்..?? ஹான் என்ன நடக்குது..??"என்று இரு புருவத்தையும் உயர்த்தி கேலியாக அவள் கேட்க.

அதில் " மானத்தை வாங்குறதுக்குன்னே இருக்கா..?? எதை எதோட கோர்த்து சொல்லியிருக்கா..?? அவளை..!! இரு டி இவ போகட்டும் உனக்கு இருக்கு..!!" என்று சித்தாராவை நினைத்து பல்லை கடித்தவன்

கண்மணியின் தலையில் கொட்டிவிட்டு "அடிங்க..!!! என்னையே கேலி பண்ணுறீயா..??" என்று ஒற்றை விரல் நீட்டி பொய்யாய் முறைக்க அதில் தன் தலையை தேய்த்துக்கொண்ட கண்மணி "ஸ்..!! அதுக்கு ஏன் த்தான் கொட்டுன..!!" என்று தலையை தடவியபடியே அவனை முறைத்தாள்.

"சரி எங்க உங்க அக்கா..??" என்று சித்தாராவை ஹாலில் காணாது அவன் கேட்க.

"ஐயோ மறந்தே போயிட்டேன்..!! நானும் அக்காவும் ரூம்ல உக்காந்து லாப்ல படம் பார்த்துட்டு இருக்கோம். அக்காவோட லேப்டாப் தான் வீட்டுல சும்மாவே இருந்திச்சா அதான் இங்க எடுத்திட்டு வந்துட்டேன்..!!" என்று சொன்னவள்

"ஓகே த்தான் பாய் உங்க கூட பேசி பாதி படம் முடிஞ்சிருக்கும் போல நான் போய் அதை கன்டினியு பண்ணுறேன்..!!" என்றவள் அறைக்குள் சென்று விட

"இரண்டும் ஒன்னுக்கொண்ணு மிச்சம்...!!" என்று போனவளை பார்த்து வாய்க்குள் புலம்பியவனது கவனத்தை கலைத்தது அவனது ஃபோனின் ஒலி அதில் பேன்ட் பாக்கெட்டில் இருந்த போனை கையில் எடுத்தவன் அதில் ஒளிர்ந்த பூசை காலிங்கை பார்த்து அட்டெண்ட் செய்து காதில் வைத்தான்.

"ஹே பூசை..!!" என்று பேசியபடி ஹால் ஜன்னல் அருகே நின்றவன் அவளுடன் உரையாடத்தொடங்கினான்.

அரை மணி நேரம் கழித்து லாப்டாப்பில் தன் தங்கையுடன் சேர்ந்து படம் பார்த்துக்கொண்டு இருந்த சித்தாராவுக்கு தண்ணீர் தாகம் எடுக்க "ஹே கண்மணி இரு டி, எனக்கு தண்ணீ தாகம் எடுக்குது நான் போய் தண்ணீ குடிச்சிட்டு வரேன்..!!"என்று கண்மணியிடம் சொன்ன சித்தாரா தண்ணீர் குடிக்கவேண்டி அறையை விட்டு வெளியேற அவள் கண்களில் விழுந்தான் யாருடனோ போனில் சிரித்து பேசிக்கொண்டு இருந்த சர்வா.

அதை கண்டு புருவம் சுருக்கியவள் "அதிசயமா யார்ட்ட இப்படி சிரிச்சு சிரிச்சு கடலை போட்டுட்டு இருக்கான் இவன்..??" என்று சந்தேகமாக எண்ணியவள் மெல்ல நடைபோட்டு அவன் அருகில் செல்லவும் ஃபோன் பேசி முடித்து சர்வா திரும்பவும் சரியாய் இருந்தது.

அதில் அவன் அருகில் சென்றவள் இப்படி அவன் திரும்புவான் என்று எதிர்பாராமல் அவன் மீது மோதி, மோதிய வேகத்தில் தன் கைகளை அசைத்து கீழே சரிய போக இவனோ அதை பார்த்து அவளுக்கு கஷ்டம் வைக்காமல் அவள் தோள்களில் தன் கைகளை வைத்து பின்னே தள்ளி விட்டான்.

அதில் விழவா வேண்டாமா என்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த சித்தாரா இதில் தொப்பென்று கீழே விழுந்துவிட.

"அம்மா..!!" என்று கீழே விழுந்த வேகத்தில் வலியில் முனங்கியவள் தன்னை தள்ளிவிட்டவனை நிமிர்ந்து பார்க்க அவனோ கைகளை கட்டியவாறு இவளை தான் குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தான்.

அதில் "பண்ணுறதையும் பண்ணிட்டு லுக்கா டா விடுற லுக்கு..??" என்று மனதுள் சினந்தவள் சிறிதும் யோசிக்காமல் தன் கால் அருகே நின்று கொண்டு இருந்தவனின் கால்களிலேயே எட்டி ஒரு மிதி மிதிக்க.

இவள் இப்படி செய்வாள் என்று சுதாரிக்காத சர்வா அவள் மிதித்ததில் முட்டி மடங்கி அவள் மீதே வந்து தொப்பென்று விழுந்தான்.

பட்டக்காலிலே படும்..!! என்று சொல்வார்களே அந்த பழமொழி இப்போது தான் சித்தாராவுக்கு நன்கு புரிந்தது.

தன் மேலே தொப்பென்று விழுந்தவனின் பாரம் தாங்க இயலாதவள் மூச்சு விட சிரமப்பட்டவாறே "ஐயோ ஷிவ்வூ.. எந்திரி டா எந்திரிச்சு தொலை டா என்னால மூ.. மூச்சு விட முடியலை .!!" என்று சிரமப்பட்டு பேசியவாறு அவள் அவனுக்கு கீழ் நசுங்க.

இவனோ அதை பார்த்து சிறிதும் இரக்கம்கொள்ளாமல் "என் காலையா எட்டி மிதிக்கிற ஹா..!! நல்லா அனுபவி டி இன்னைக்கி நீ மூச்சு முட்டி செத்தாலும் பரவாயில்லை நான் உன் மேல இருந்து எந்திரிக்க போறது இல்லை..!!" என்றவன் மேலும் அவள் மீது தன் பாரத்தை அழுத்த.

அதில் அவனை பார்த்து பல்லை கடித்தவள் கஷ்டப்பட்டு அவனை தன்னிடம் இருந்து பிரிக்க பார்க்க பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். ஒரு இஞ்ச் கூட அவனை அசைக்க முடியவில்லை அவளால்.

அதில் கடுப்புற்றவள் அவள் வாய்க்கு எட்டிய தூரம் இருந்த அவனது காதை நறுக்கென்று அழுத்தி கடித்து வைக்க. உயிர் போன வலியில் தன் உடலை தளர்த்தினான் சர்வா அதில் இது தான் சமயம் என்று அவனிடம் இருந்து விடுபட்டு எழும்பியவள் இப்போது படுத்திருந்தவன் மீது வந்து வேகமாக அமர்ந்துக் கொண்டு அவன் தலை முடியை தன் கைகளால் சுருட்டி பிடித்துக்கொண்டு"ஏண்டா எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கொலைபண்ண பார்ப்ப..?? எத்தனை நாள் ஆசை இது ஹாங்..?? இப்ப நான் கவனிக்கிற கவனிப்புல இனி என் பக்கம் வர கூட நீ யோசிக்கணும்..!!" என்று மூச்சுவாங்க அவனை உறுத்துவிழித்தபடி பேசியவள் அவன் முடியை பற்றி வேகமாய் அதே சமயம் வலிக்கும் படி ஆட்ட

"ஸ்...!! ஏய் என்ன விடுடி பைத்தியம்..!! உனக்கு என்ன முத்தி போச்சா..??" என்று சீறியபடி அவளது கைகளை தன் நகங்கள் பதிய அழுத்தமாக பற்றி தன் தலைமுடியில் இருந்து விடுவிக்க .

தன் சதையை கிழித்துக்கொண்டு லேசாய் ரத்தம் கசிய வைத்து இருக்கும் அவனது கைநகங்களால் வலி ஏற்பட்டாலும் அதை முகத்தில் காட்டாதவள் கை இரண்டும் அவனிடம் சிக்கி இருக்கும் நிலையில் முன்பு போல தன் பல்லை கொண்டு அவனை தாக்க நினைத்து குனிய அதை இம்முறை யூகித்து கொண்ட சர்வா சட்டென்று தன் ஒற்றை கையில் அவளது இருகைகளையும் அடக்கியபடி மற்றொரு கையால் அவள் முகத்தை தன்னை விட்டு பிடித்து தள்ளினான்.

அதே சமயம் இங்கே அறையினுள் ஹெட்போன்சை போட்டுக்கொண்டு படம் பார்த்துக்கொண்டு இருந்த கண்மணி தண்ணீர் குடிக்க சென்றவளை இன்னும் காணாமல் "என்ன இவளை இன்னும் காணும்..?? தண்ணீ குடிக்க இவ்வளவு நேரமா..??" என்று யோசித்தவள் முன்னே இருந்த லேப்டாப்பை பார்த்து "ம்கூம்.!! அப்புறம் நம்ம அதிகமா படம் பார்த்தா என்னை விட்டுட்டு எப்படி பார்ப்பேன்னு சண்டைக்கு நிப்பா அந்த வம்பே வேண்டாம் பேசமா நாமளே போய் அவளை கூட்டி வருவோம்..!!அது தான் சரி" என்று எண்ணியவள் ஹெட் போன்சை கழட்டி வைத்து விட்டு "லாலாலா...!!" என்று பாட்டு பாடியவாறே ஹாலுக்கு வர அங்கு கண்ட காட்சியில் லா.. என்று வாயை திறந்தவள் கடைசியில் ஆ..!! என்று வாயை பிளந்தவாறு அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

எல்லாம் ஒரு நிமிடம் தான் சடுதியில் தன்னை சுதாரித்துக்கொண்டவள் "இங்க என்ன நடக்குது..??" என்று காட்டமாக குரல் கொடுக்க.

அதில் சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரும் கண்மணியின் குரல் கேட்டு அடித்து பிடித்துக்கொண்டு எழுந்து நின்றனர்.

"நீங்க இரண்டும் பேரும் இன்னும் மாறவே இல்லைல..??" என்று கடுப்புடன் கேட்க.

அந்த கேள்வியில் திரும்பி தம் தம் துணையை காட்டமாக முறைத்த இருவரும் ஒரே போல ஒருவர் புறம் ஒருவர் கை நீட்டி "நான் இல்லை இவ(ன்) தான்..!!" என்றனர் சேர்ந்து.

அதை கண்டு தலையில் அடித்துக்கொண்ட கொண்ட கண்மணியோ இருவரையும் இடுப்பில் கைவைத்தபடி முறைத்து பார்த்தாள்.


தொடரும்
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 16

"நீங்க இரண்டும் பேரும் இன்னும் திருந்தலையா..??" என்று முறைத்தபடி கேட்ட கண்மணியை கண்டு திருதிருத்த இருவரில் முதலில் சுதாரித்தது சர்வா தான்.

"இதுல திருந்த என்ன இருக்கு..!!" என்று அலட்சியமாய் கேட்டவன் அருகில் கையை பிசைந்துக் கொண்டு நின்ற சித்தாராவை நக்கலாக பார்த்து "ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம் இவளுக்கு தெரிஞ்சிடிச்சுன்னு நீ இப்படி முழிச்சிட்டு நிற்குற..?? அடச்சீ..!! நார்மலா இரு..!!" என்று நக்கலுடன் கடிந்தவன் கண்மணியிடம் திரும்பி "இங்க பாரு கண்மணி நாங்க எப்பவும் மாறபோறது இல்ல மோர் ஒவர் இந்த மஞ்சள் கயிறு மேஜிக் எல்லாம் எங்க இரண்டு பேர் கிட்டயும் ஒர்க் அவுட் ஆகும்னு நினைச்சிட்டு இருக்க நம்ம வீட்டு பெரிய மனுஷங்க கிட்ட போய் சொல்லு அவங்க ஆசை பலிக்காதுன்னு..!!" என்று உறுதியாய் சொல்ல

ஏதோ புரிந்து புரியாமலும் இருந்தது கண்மணிக்கு.

அவள் திருதிருப்பதை பார்த்து தன் நெற்றியை அழுத்தமாக வருடியவன் "ப்ச்..!! இந்த டாக்கை இதோட விட்டிடு கண்மணி. பிகாஸ் இதை புரிஞ்சிக்குற வயசும் உனக்கு இல்லை இது சரியா தப்பான்னு ஏத்துக்குற பக்குவமும் உனக்கு இல்லை..!!" என்று சொல்லிவிட்டு தன் அருகில் நின்றிருந்த சித்தாராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைய.

போகும் அவனை பார்த்து "இப்ப இவன் ஏன் சம்மந்தமே இல்லாம என்னை முறைச்சு பார்த்திட்டு போறான்..!!" என்று புரியாமல் யோசித்தாள் சித்தாரா.

அருகில் தன்னைபோலவே நின்றுக் கொண்டு இருந்த தன் தங்கையை பார்த்தவளுக்கோ சிரிப்பு வர பார்க்க அதை கஷ்டப்பட்டு அடக்கியவள் "விடு கண்மணி அவன் கிடக்குறான்..!! எப்ப சைக்கோ சங்கரா மாறுவான்னு அவனுக்கே தெரியாது..!! நீ அவனை கண்டுக்காத..!!" என்றவள் அவளை அழைத்துக்கொண்டு படம் பார்க்க சென்றாள்.

அன்று இரவு கண்மணி அங்கையே தங்க அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு போகிறேன் என்று சொன்னவளை கொண்டு சென்று வீட்டில் விட்டு வந்தான் சர்வா.

அதற்கடுத்து நாட்கள் அவர்களுக்கு எப்பொழுதும் போல சென்றாலும் சதா ஏதோ யோசனையிலேயே சுற்றினான் சர்வா.

அதில் "என்னாச்சு இவனுக்கு..!!" என்று சித்தாரா யோசித்தாலும் பின் அலட்சியமாய் தோளை குலுக்கி "இவனுக்கு என்ன ஆனா நமக்கு என்ன..??"என்று எண்ணி அதை கடந்துவிடுவாள்.

வீட்டில் சும்மா இருக்க சந்தோஷமாக தான் இருந்தது அவளுக்கு.

சமையல் இதுவரை அவன் தான் செய்துக்கொண்டு இருக்கிறான்.

இவளது கையில் காயம் ஆறி இருந்தாலும் அவனே சமையல் செய்ய அதை பற்றி வாயே திறக்காமல் அமுக்கமாய் இருந்தாள் சித்தாரா.

ஒரு வேலையும் செய்யாமல் வீட்டில் இருப்பதை சொர்க்கத்தில் இருப்பது போல உணர்ந்த சித்தாராவின் தலையில் இடியை இறக்கி இருந்தான் அவளது கணவன் சர்வா. அதில் அதுவரை சொர்க்கத்தில் மிதந்தவள் அந்த நொடி நரகத்திற்கு போக போவதை போல மனதுள் துடித்தாள்.


"என்.. என்ன சொன்ன ..??" என்று தான் கேட்டது சரிதானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டி சித்தாரா கேட்க.

சோபாவில் அமர்ந்தபடி குனிந்து தன் காலில் ஷூவை மாட்டிக்கொண்டு இருந்த சர்வா இவள் கேட்டதை கேட்டு "ப்ச் நீ என்ன செவுடா..?? எத்தனை வாட்டி டி உனக்கு சொல்லுறது...?? நம்ம காலேஜ்ல நெக்ஸ்ட் இயர் நீ கண்டினியூவ் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். கண்மணிகிட்ட உன் புக்ஸ் எல்லா எடுத்து தர சொல்லியிருக்கேன் ஈவ்னிங் வரும்போது அதை வாங்கிட்டு வந்திடுவேன். நீ நாளைக்கு காலேஜ் போக ரெடியா இரு..!!" என்று சொல்லியவன் அவ்வளவு தான் என்பது போல தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட, ஸ்தம்பித்து நின்று விட்டாள் சித்தாரா.

மீண்டும் கல்லூரி..!! அதை நினைக்கையிலேயே மனதுள் அத்தனை வலி எழுந்தது சித்தாராவுக்கு.

எதிர்பாராத இந்த திருமணம் நடந்ததில் இருந்து காலேஜிற்கு முழுக்கு போட்டுவிடலாம் என்று எண்ணிய அவள் எண்ணத்தில் தீயை வைத்து கொளுத்தி விட்டான் அல்லவா அவன்..!! இவனிடம் இனி எப்படி சமாளித்து கல்லூரிக்கு போகாமல் இருக்கலாம் என்று எண்ணியவளுக்கு ஒரு ஐடியாவும் வராமல் போக தலையில் கைவைத்தபடி அப்படியே அமர்ந்து விட்டாள் .

***************************
"ஷிவ்வூ மாமா ப்ளீஸ் டா..!! வீட்டு வேலைய கூட இனி நானே பார்த்துக்குறேன் டா. இந்த காலேஜ் எல்லாம் தேவை இல்லாத தண்டச்செலவு டா நம்ம இப்போ இருக்க நிலமைக்கு அது தேவையா சொல்லு..??" என்று காலையில் தன்னை கல்லூரிக்கு செல்ல சொன்னவனிடம் சோக பதுமையாய் நல்ல பெண் போல் பேசிய சித்தாராவை தன் இரு புருவத்தை உயர்த்தி பார்த்த சர்வாவோ கையில் இருந்த தன் கைகடிகாரத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு

"பேசி முடிச்சிட்டீயா..?? காலேஜ் கிளம்பலாமா..??" என்று மட்டும் கேட்க

அதில் "நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண் ஆகிவிட்டதே..??" என்பது போல அவனை பாவமாக பார்த்துக்கொண்டு இருந்தாள் சித்தாரா.

அதற்கெல்லாம் அசரும் ஆளா அவன் "ப்ச் எனக்கு டைம் ஆகுது..!! இப்போ நீ வர்றியா இல்லையா டி..!!" என்று சத்தம் போட

அதில் பயந்தவள் இப்போது சற்று எரிச்சலுடன் "அதான் நான் காலேஜ் வர வேண்டாம்னு சொல்லி தான் இவ்வளவு பேசுறேன்னு உனக்கு புரியுதில்லை பின்ன என்ன சும்மா வள்ளு வள்ளுன்னு இப்படி கத்துற..??" அவனை கோபமாக பார்த்து கேட்க

அதில் அலட்சியமாய் அவளை ஏறிட்டுப் பார்த்த சர்வாவோ "ஆமாதான்..!! எனக்கு புரியுதுதான்..!! அதுக்குன்னு உன்னை அப்படியே விட்டிடுவேன்னு நினைச்சியா..??" என்று கேட்டவன் அவளை பார்த்து நக்கல்சிரிப்புடன் பல்லை கடித்தபடி

"நீ என் வாழ்க்கையையே நாஸ்தி பண்ணவ டி உன்னை அவ்வளவு சீக்கிரம் நிம்மதியா இருக்க விட்டிடுவேனா..?? ஹான்..??" என்று கோபத்தோடு சீற

அதில் கண்கள் விரிய அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் சித்தாரா. அவளது மனமோ "அப்போ இவன் மாறவே இல்லையா..??" என்று கேள்வி கேட்க அதற்கு அவளது மூளை உடனடியாக "இல்லை..!!" என்றது திட்டவட்டமாக.


அது தந்த கோபத்தில் அவனை பார்த்தவள் "நான் முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ..??" என்று திமிராக கேட்க

அதில் ஒரு புற உதட்டை வளைத்து ஒருமாதிரி சிரித்த அவன் அவளை பார்த்து தன் தாடையை தடவியபடி "நீ என் செலவுல தான் இப்பவர இருக்கிறதா எனக்கு ஞாபகம்...!!" என்று சொல்ல அவனது அந்த கூற்றில் என் செலவில் இருக்கும் நீ என் பேச்சை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற மறை பொருள் இருந்தது.

அதை கேட்டு சட்டென்று கலங்கிவிட்ட கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்த இவள் தொண்டை அடைக்க "ரொம்ப பண்ணுற டா நீ..!! எனக்கு காலேஜ்க்கு போறது பிடிக்காதுன்னு தெரிஞ்சும் வேணும்னே என்னை பிளாக்மெயில் பண்ணி அனுப்புற, அது.. அதுவும் இல்லாம உன் செலவுல நான் இருக்கேன்னு சொல்லி வேற காட்டிட்ட இல்ல..!!" என்று கேட்டவள் தன் கண்களில் தன்னை மீறி வடிந்த கண்ணீரை "ப்ச்..!!" எரிச்சலுடன் துடைத்து விட்டு

"பைன் மிஸ்டர் சர்வா..!! நான் காலேஜ் போறேன் அட் தி சேம் டைம் உங்க செலவுல உட்கார்ந்து தண்ட சோறு சாப்பிடணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை..!!" என்று அழுத்தமாக கூறியவள் நேற்று அவன் தன் தங்கையிடம் இருந்து வாங்கி வந்த புத்தக பையை வேகமாக எடுத்து தனது தோளில் மாட்டிக்கொண்டு வெளியேறியிருந்தாள்.

போகும் அவளை பார்த்து எரிச்சலுடன் "அரைவேக்காடு..!!" முணுமுணுத்த சர்வாவோ தன் தலையை சலிப்புடன் இருபுறமாக ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

தொடரும்...
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 17

வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த சர்வா தனது வண்டியை பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்து விட்டு அதன் கீயை விரல்களில் சுற்றிய படி இரண்டு இரண்டு படிகளாய் தாவி முதல் தளத்தை அடைய அங்கு அவனது வீடோ அதிசயமாய் பூட்டிக்கிடந்தது அதில் புருவ முடிச்சுடன் தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டை திறந்தவன் ஒரு முறை வீட்டை சுற்றி தன் மனையாளை தேடினான்.

ஆனால் அவனது தேடலில் அவள் கிடைக்காமல் போக கையில் கட்டியிருந்த வாட்சை உயர்த்தி பார்த்தான் மணி 8 என்று அதில் இருக்க.

பல்லை கடித்தவன் "என்ன மனுஷனா இருக்க விட மாட்டா போலையே..!! இந்த லேட் நைட்ல இப்ப இவ எங்க போய் தொலைஞ்சா..?? வரட்டும் அவளுக்கு இருக்கு..!!" என்று கறுவியபடி சோஃபாவில் அமர்ந்தவன் கால்களை வேகமாக ஆட்டியபடி அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

அச்சமயம் மின்னலென காலையில் அவளுக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதம் நினைவு வர அதில் சடாரென்று அமர்ந்து இருந்த சோபாவை விட்டு எழுந்தவன் தலை முடியை அழுத்திபிடித்தபடி "ஹோ ஷிட்..!! பைத்தியகாரி ரோஷத்துல வீட்டை விட்டு போயிட்டாளா..??" என்று வாய் விட்டு புலம்ப அதை நினைக்கவே பதற்றம் தொற்றிக்கொண்டது அவனை‌.

சட்டென்று தன் ஃபோனை எடுத்தவன் அவளது எண்ணுக்கு அழைக்க

உன் பேஷ நான் பார்த்தா போதும்

என் பேட் டைம்மு ஸ்டார்ட் ஆகும்

முன்ன வராத டா மூஞ்ச காட்டாத டா

என் கோபத்தை தூண்டாத டா

என்ற ரிங்டோன் பாடல் சித்தாராவின் ஃபோனில் இசைக்க அதில் ஒலித்த பாடலை வைத்தே புரிந்துக்கொண்டாள் அது சர்வா என்று.

"காலைல மனசாட்சியே இல்லாம எப்படி திட்டுன.?? நீ போன் பண்ணா உடனே எல்லாத்தையும் மறந்துட்டு உன் கால் அட்டெண்ட் பண்ணனுமா..?? போடா..!!" என்று அந்த போனை பார்த்து திட்டிய சித்தாரா அதை சைலெண்ட் மோடிற்கு மாற்றி விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்‌.

இங்கு மூன்று முறை அவளுக்கு முயன்றபின்னும் அவள் காலை அட்டெண்ட் செய்யாமல் போனதால் அவள் வீட்டு லேண்ட் லைனிற்கு முயன்றான் சர்வா.

நான்கு ரிங் போனதும் "ஹலோ..!!" என்ற கண்மணியின் குரல் அந்த புறம் கேட்க அதில் நல்ல வேளை அத்தை மாமா எடுக்கவில்லை என்று ஆசுவாசம் அடைந்த சர்வா.

"ஹே கண்மணி சத்தம் போட்டு பேசாம நான் கேக்குறதுக்கு ஆமா இல்லை னு மட்டும் பதில் சொல்லு சரியா‌..??" என்று இவன் சொல்ல

எதுவும் புரியாவிட்டாலும் மாமன் பேச்சிற்கு "சரி..!!" என்றாள் கண்மணி

"உன் அக்கா அங்க வந்தாளா..??" என்று இவன் கேட்க

"இல்லையே..!!" என்று சொன்னவள் தொடர்ந்து "ஏ.‌.!!" என்று ஏதோ கேட்க வர அதை இடையிட்டவன் "சரி ஓகே கண்மணி இதை பத்தி வீட்டுல எதுவும் சொல்லிக்காத உன் அக்கா பக்கத்து கடைக்கு போயிருக்கா போல பயப்பட ஒண்ணும் இல்லை..!!" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க

இப்ப இவன் எதற்கு அழைத்தான் என்று புரியாமல் முழித்தாள் கண்மணி

"எங்க டி போய் தொலைஞ்ச..!!" என்று கோபத்தோடு எண்ணியவனுக்கு பயமே அதிகமாய் இருக்க

அதற்கு மேல் காலம் தாழ்த்தாதவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாய் வீட்டை பூட்டியவன் விறுவிறுவென கீழே இறங்கி சென்று அதை வேகமாக இயக்கி அதே வேகத்தில் ரோட்டில் ஓட்டினான் ‌.

ரோட்டில் நாலா பக்கமும் அவளை பதற்றத்தோடு தேடியவன் அப்படியே தங்கள் காலேஜ் இருக்கும் பகுதிக்கும் சென்று தேட அவனின் தேடல் என்னமோ தோல்வியில் தான் முடிந்தது‌‌.

அதில் சோர்வுடன் வீட்டை வந்து அடைந்த சர்வா பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறக்க போக அங்கோ வீடு பூட்டப்படாமல் இருந்தது. சட்டென்று தோன்றிய பரபரப்போடு வேகமாக வீட்டு கதவை இடைவிடாது இவன் தட்ட.

பட்டென்று கதவு திறக்கப்பட்டது அதை தொடர்ந்து "உனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு ராத்திரி நேரத்துல இப்படி போட்டு கதவை தட்டுற..??" என்று எரிச்சலுடன் கத்தியபடி அவனை கோபத்தோடு முறைத்து பார்த்துக்கொண்டு நின்றாள் சித்தாரா

கோபமாக பேசியபடி நின்றது தான் அவள் நினைவில் இருந்தது அதற்கு அடுத்த நொடி சர்வாவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அவள்.

காற்று கூட போக முடியாமல் அவளை இறுக்கி அணைத்தவன் வாசலில் அப்படியே நிற்க அந்த நொடி விவரிக்க முடியாத உணர்வு ஒன்று சித்தாராவை தாக்கியது‌.

பேச நா எழாமல் தொண்டை குளற அதை செருமியவள் அவன் நெஞ்சில் புதைந்து இருந்த தன் முகத்தை திருப்பி "என்னாச்சு...??" என்று கேட்க சத்தமாக கேட்க நினைத்தது ஏனோ ஹஸ்கி வாய்ஸாய் மாறி வந்து தொலைத்தது. அது அவன் காதில் விழுந்ததா என்பது சந்தேகமே..!!

சிறிது நேரம் அவளை இறுக்கி அணைத்தவன் அந்த நெருக்கத்தை கொஞ்சமும் விலக்காமல் தன் உள்ளங்கைகளால் அவளது இரு கன்னத்தையும் பற்றி அவளை நோக்கி குனிய.

"கிஸ் பண்ண போறானா..?? ஐயோ இப்ப என்ன பண்ணுறது..?? வயிறு எல்லாம் வேற என்னமோ ஒருமாதிரி பண்ணுதே..!! பாத்ரூம் வருதா என்ன..?? ச்சீ ச்சீ இல்ல இல்ல இது வேற ஒரு வித்தியாசமான ஃபீல்லா இருக்கு..!! சரி இப்ப இவன் இங்கிலிஷ் படத்துல வர மாதிரி கிஸ் பண்ணப்போறானா இல்லை தமிழ் படத்துல வர மாதிரி கிஸ் பண்ணப்போறானா..??" என்று மனதில் நினைத்தவளுக்கோ வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க வறண்டு இருந்த உதட்டை தன் நாவால் ஈரமாக்கியவள் கண்களை இறுக மூடி அவன் முத்தத்தை எதிர்பார்த்து காத்து இருக்க

அச்சமயம் சுள்லென்று அவள் இரு கன்னங்களிலும் வலியெடுக்க அதில் பட்டென்று கண்களை திறந்தவள் முன்னே பல்லை நறநறவென்று கடித்தவாறு அவளது இரு கன்னத்தையும் பிடித்து அழுத்தமாக கிள்ளிக்கொண்டு இருந்தான் சர்வா.

இதை சற்றும் எதிர்பார்க்காத சித்தாரா வலிதாங்க முடியாமல் "ஆஆஆ....!! டேய் தடியா விடுடா என்னை.!!" என்று அலறினாள்.

விட்டால் இரு கன்னமும் அவன் கையோடு போய்விடும் போல அந்த அளவுக்கு அவன் இவள் கன்னத்தை கிள்ளிக்கொண்டு இருக்க.

இருகன்னமும் தீ போல எரிந்து வலித்தது சித்தாராவுக்கு. வலி தாங்க முடியாதவள் "ஆ....!! டேய் என்ன டா பண்ணுற விடு டா ..!!" என்று அலறியபடி அவனை தன் பலம் கொண்டு தன்னை விட்டு தள்ள பார்க்க சிறிதும் அசையாதவன் தன் வேலையை சரியாய் செய்துக் கொண்டிருந்தான்.

"விடு.. விடு டா..!!" என்று தொடர்ந்து அவனை தன்னை விட்டு பிரிக்க பார்த்தவளுக்கு தோல்வியே மிஞ்ச வலியினால் வெளிவந்த அவளது கண்ணீர் அவளது கன்னத்தை தொட்டபின் தான் அவளை விட்டான்‌ சர்வா..!!

அவனை விட்டு பிரிந்ததும் பரபரவென வலித்த தன் கன்னத்தை தேய்த்தவள் தன் முன்னே தன்னை முறைத்தபடி நின்றுக்கொண்டிருந்தவனை சீற்றத்தோடு பார்த்து "மனுஷனா டா நீ ச்சை..!!!" என்று சீற

அதில் அதை விட அவளை முறைத்து பார்த்த இவன் "கேட்ப டி கேட்ப உன்னை காணும்னு ரோடு ரோடா இந்த ராத்திரி நேரத்துல தேடுனேன்ல என்னை நீ இதுவும் கேட்ப இதுக்கு மேலையும் கேட்ப..!!" என்றான் கோபத்துடன்.

அதை கேட்ட இவளோ புருவம் சுருங்க "உன்னை யாரு டா என்னை தேட சொன்னது நான் என்ன தொலைஞ்சா போனேன்..!!" என்று கத்த

அதில் எழுந்த கோபத்தை கண்களை மூடி அடக்கிய சர்வா "சரி இவ்வளவு நேரம் எங்க போய் தொலைஞ்ச..??" என்று கேட்டான் அமைதியாய்

அதில் அலட்சியமாய் அவனை பார்த்த அவள் "நீ என்ன அம்னீஷியா பேஷன்ட்டா காலைல தானே நான் உன்கிட்ட சபதம் போட்டேன் இனி உன் செலவுல இருக்க மாட்டேன்னு..!!" என்று சொல்ல

அதில் கண்கள் சுருங்க அவளை பார்த்தவன் "எனக்கு புரியல அப்போ நீ.." என்று கேள்வியோடு இழுக்க

"எஸ்...!! இனி நான் என் செலவ பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் அதான் பார்ட் டைம் ஜாப் போனேன்...!!" என்றாள் கூலாக

அதில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தவன் "வாவ்..!! வாழ்க்கையிலேயே உருப்படியான காரியம் பண்ணிருக்க..!! இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு இனி உன் செலவ என் தலைல சுமக்க தேவையில்லை...!!" என்றவன் உல்லாசமாய் விசிலடித்தபடி அவளை கடந்து சென்று சோபாவில் போய் தொப்பென்று விழுந்தான்.

பேசிவிட்டு போகும் அவனை பார்த்த அவளுக்கு ஏனோ ஏமாற்றமாய் இருந்தது "என்ன இவன் வேலைக்கு போறேன்னு சொல்லுறேன் கோபப்படுவான்னு பார்த்தா சந்தோஷமா போறான்..??" என்று ஏமாற்றத்துடன் எண்ணியவள் அதில் எழுந்த எரிச்சலுடன் அப்படியே அவன் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்

நேரம் ஆக பசிவேறு வயிற்றை கிள்ள அவனோ இரவு உணவை தயாரிக்கும் எண்ணம் இன்றி தன் கைபேசியோடு ஐக்கியம் ஆகி இருந்தான்.

அதை பார்த்தவளோ கோபமாக "ப்ச்..!! இந்த எருமைக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா..?? நைட் சமைக்குற எண்ணமே இல்லாம எப்படி இருக்கான் பாரு..! பசி வேற வயிற்றை கிள்ளுதே இவ்வளவு தூரம் பேசுன அப்புறம் அவன் கிட்ட போய் கேட்டா நமக்கு தான் அசிங்கம்..!!" என்று எண்ணியவள் போனை தீவிரமாக நோண்டிக்கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு "அவனும் இப்ப போய் சமைக்குறது போல தெரியல..!! ப்ச் வேற வழியில்ல நம்ம வயத்தை நம்ம தான் பார்க்கணும்..!!" என்று எண்ணியபடி எழுந்து கிச்சனை நோக்கி சென்றாள்.

வேலை செய்து பழக்கம் இல்லாத அவளுக்கு இந்த பகுதி நேர வேலை சோர்வை கொடுத்திருக்க இப்போது அவளே சமைப்பது வேறு ஒரு வித எரிச்சலை உண்டாக்கியது .

அதே எரிச்சலுடன் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தவள் கவனமாக இந்த முறை அடுப்பை பற்ற வைக்க முயன்றாள் ஆனால் அவளது கஷ்டகாலமோ அவளை சோதிக்கவென்றே அடுப்பு பற்றாமல் சதி செய்தது அதில் ஏற்கனவே கடுப்பில் இருந்தவளுக்கு இது வேறு மேலும் வெறுப்பாய் போக "ப்ச் ச்சே..!! இந்த கடவுள் ஏன் என்ன மட்டும் இப்படி சோதிக்கிறாரு...!!" என்று சத்தமாக புலம்பியவள் கோபத்தில் லைட்டரை தூக்கி சமையல் மேடையில் எறிந்துவிட்டு சோர்ந்து போய் அப்படியே அந்த மேடையில் கையை ஊன்றி நின்று விட்டாள்‌.

அச்சமயம் அவளது இடை அருகே ஒரு வலிய கரம் நீண்டு செல்ல அதில் பதறி நிமிர்ந்தவள் பின்னே நின்றிருந்தவனின் மேனியில் முட்டினாள்.

அவனோ அதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் அவள் இடையை சிறிதும் தன் கை உரசிவிடாமல் முன்னேறி சென்று அவள் எறிந்த லைட்டரை எடுக்க.

இங்கு அவன் நெருக்கத்தில் ஸ்தம்பித்து நின்றவள் இதில் தெளிந்து "ஹே என்ன டா பண்ணுற..??" என்றாள் அவனது நெருக்கத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில்‌

அதற்கு அவனோ அந்த லைட்டரை கொண்டு அடுப்பை பற்ற வைத்துவிட்டு ஒரு பாத்திரம் எடுக்க முயல இவள் நின்றிருந்த காரணத்தால் அது அவனுக்கு வசதியாய் இல்லாமல் போனது‌‌.


அதில் சிறிதும் யோசிக்காமல் தன் மற்றொரு கையை வைத்து அவள் தலையை பிடிக்க அதில் கண்கள் படபடக்க அவனை ஏறிட்டு பார்த்தாள் சித்தாரா. ஆனால் அவனோ அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் "அடச்சீ தள்ளிபோ..!!" என்று கூறி பிடித்த அவள் தலையை வலப்புறத்தில் தள்ளிவிட்டுவிட்டு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி தக்காளி வெங்காயம் வெட்டி கடகடவென வதக்க தொடங்கினான்.

இங்கு அவன் தள்ளிவிட்டதில் தலையை தேய்த்தபடி அவனை முறைத்து பார்த்த சித்தாரா அவனை உர்ரென்று பார்த்தபடியே கிச்சன் மேடையில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்‌.

அவனோ அடுத்த அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசை மாவை எடுத்து தோசை ஊற்ற ஆரம்பிக்க. நம் சித்தாராவின் வாய் தான் சும்மா இருக்காதே

சமையல் செய்து கொண்டிருந்தவனை முறைத்து பார்த்தபடியே "உன் மனசுல என்ன டா நீ பெரிய இவன்னு நினைப்பா..?? அதான் நான் குக் பண்ணுறேன்னு உன் நொள்ள கண்ணுக்கு தெரியுது இல்ல, நான் பண்ணி முடிச்ச பின்னே வந்து சமைச்சு தொலைக்க வேண்டியது தானே நீ..!! அதவிட்டுட்டு உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வந்து இப்போ சமைப்ப அதும் என்னை தள்ளிவிட்டுட்டு..!!" என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக பேச

அவனோ அதை காதில் கூட வாங்காமல் ஒரு பிளேட்டை எடுத்தவன் அதில் இப்போது சுடசுட போட்டு வைத்திருந்த தோசையை மாற்றி அடுத்த அடுப்பில் இருந்த தக்காளி தொக்கை வைத்து அவளிடம் நீட்ட அதில் அதுவரை கத்திக்கொண்டிருந்தவள் இதில் கண்கள் விரிய அவனை "ஆஆ..!!" என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்

"பார்த்து வாய்ல கொசு போயிட போகுது ..!!" என்று அவளை கேலிசெய்தவன் தன் கையில் இருந்த தட்டை சுட்டிக்காட்டு "ப்ச் வாங்கி சாப்பிடு டி..!! அடுப்புல தோசை கருகுது" என்றான் அவசரமாய்

அதில் அதிர்ச்சி விலகியவள் அவனை முறைத்துக்கொண்டே அந்த தட்டை வாங்கி உண்ணத்தொடங்கினாள்.

"அவன் கிட்ட பெரிய இவ மாதிரி சவால் விட்டுட்டு இப்போ அவன் கிட்டயே வாங்கி திங்கிறியே உனக்கு வெக்கமா இல்ல..??" என்று கேட்ட மனசாட்சியிடம் "ச்ச ச்ச எனக்கு சோறு தான் முக்கியம்..!!" என்று வெக்கமே இல்லாமல் பதில் கூறிய சித்தாரா கடகடவென தோசையை காலி செய்தாள்‌.

அடுத்த தோசையை இவன் அவள் பிளேட்டில் வைக்க அதில் அதை பிட்டு தக்காளி தொக்கில் முக்கியவள் அதை வாயில் வைக்க போக அவள் முன்னே வேர்க்க விறுவிறுக்க நின்று தோசை சுட்டுக்கொண்டு இருந்த சர்வா அவள் கண்ணில் பட்டான்.

அதை பார்த்தவள் என்ன நினைத்தாளோ சாப்பிட கொண்டு போன அந்த தோசையை அவன் வாய் அருகே நீட்ட அதில் தோசை சுட்டுக்கொண்டிருந்தவன் தன் முன்னே நீட்டபட்ட தோசையில் புருவம் சுருங்க அவளை பார்க்க அவளோ உம்மென்ற முகத்துடன் அவன் புறம் தோசையை நீட்டிக்கொண்டு இருந்தாள்.

அதை பார்த்து அவளை கேலியுடன் நோக்கியவன் "மேடமுக்கு என் மேல பாசம் பொங்கி வழியுது போல..!!" என்று கேலியுடன் கேட்க

"ஆமா ஆமா‌‌ அப்படியே வழிஞ்சிட்டாலும் ப்ச் எவ்வளவு நேரம் டா நீட்டுறது வாங்கி சாப்பிடு டா..!!" என்றாள் சிடுசிடுப்பாய்

அதில் சிரித்தபடி அதை வாங்கியவன் அடுத்து அடுத்து தோசைகளை சுட்டு அவள் தட்டில் வைக்க அவளோ ஒருவாய் அவள் உண்டு அடுத்த வாய் அவனுக்கு கொடுத்தும் என கணக்கே இல்லாமல் உள்ளே தள்ளினாள்‌.

தொடரும்..!!
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 18

உணவை முடித்துக்கொண்ட இருவரும் உறங்க அறைக்குச்செல்ல எப்போதும் சர்வாவுடன் மெத்தையில் படுக்கும் சித்தாரா இன்று பாயை எடுத்து விரித்துக்கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த இவனோ ஒன்றும் பேசாமல் அமைதியாக மெத்தையில் சென்று படுத்துக்கொண்டான்.

ஆனால் இங்கு பாயில் படுத்த சித்தாராவுக்கு தான் உறங்க முடியவில்லை.

வெகுநேரம் புரண்டு புரண்டு படுத்தவள் திரும்பி சர்வாவை பார்க்க அவனோ உறங்கிக் கொண்டிருந்தான்.

"எங்க இருந்து தான் இவனுக்கு தூக்கம் வருதோ..??" என்று எண்ணியவளின் மனக்கண்ணில் சர்வா அணைத்தது வர அதில் தானாய் அவள் முகம் சிவந்தது "இப்படியா கட்டிப்புடிப்பான்..?? ஹையோ ஒரே வெக்கமா இருக்கே..!! " என்று சிணுங்கியவள் திரும்பி தலையணையில் தன் முகத்தை புதைத்தபடி சிணுங்க.

அப்போது தான் உறக்கத்திற்கு சென்ற சர்வாவோ இவளது இந்த சிணுங்கல் சத்தம் காதில் கேட்டு தூக்கத்தை கெடுக்க அதில் எரிச்சலுற்றவன் கண்களை மூடியபடி அதே எரிச்சலுடன் தன் அருகில் கையை வைத்து தடவ அவன் கைகளில் அழகாய் சிக்கியது தலையணை அதை எடுத்தவன் கண்களை மூடியவண்ணமே குத்து மதிப்பாய் அவள் படுத்த பக்கம் வீச சரியாய் அது அவளது முதுகில் சென்று விழுந்தது.

அதை தொடர்ந்து "நடுராத்திரியில மனுஷன் தூக்கத்தை கெடுக்காம மூடிட்டு படுடி..!!" என்று சர்வாவின் சீறலான குரல் கேட்க

"ஐயோ..!! இவன் இன்னும் தூங்கலயா..??" என்று பதறிய சித்தாரா கண்களை இறுக மூடி அமைதியாய் படுத்து விட்டாள்.

அடுத்த நாள் காலையில்

"ஏய் குந்தாணி எந்திரி டி..!! ப்ச் இப்ப எந்திரிக்க போறியா இல்லையா..??" என்று உறங்கிக்கொண்டு இருந்த தன் மனையாளை தொடர்ந்து பத்து நிமிடங்களாய் எழுப்பிக்கொண்டு இருந்தான் சர்வா.

அவளோ தான் எழுவேனா என்று உறங்கிக்கொண்டு இருக்க கடைசியில் தொப்பலாக நனைந்தபடி சர்வாவை தன் கண்களால் எரித்தவாறே எழுந்து அமர்ந்தாள்.

அதை சற்றும் பொருட்படுத்தாத சர்வா கையில் இருந்த ஜக்கை பாத்ரூமினுள் போட்டு விட்டு "ம்ம்..!! எந்திரி எந்திரி வந்து சமைக்க ஹெல்ப் பண்ணு..!! எனக்கு இன்னைக்கு சீக்கிரமா ஆபீஸ் போகணும்..!!" என்று சொல்லியபடி அந்த அறையை விட்டு அவன் வெளியேறி செல்ல

"உனக்கு போகணும்னா நீ போயேன் டா..!! என்ன ஏன் டா எழுப்புற..??" என்றவளின் கத்தல் கடைசியில் காற்றோடு காற்றாக தான் சென்றது.

இவள் வரவில்லை என அவன் கிச்சனில் இருந்து அழைக்க வேறுவழியில்லாமல் பாத்ரூம் சென்று பிரெஷ் ஆகி விட்டு கிச்சனுக்கு சென்றாள்.

அவளிடம் சில காய்களை கொடுத்து வெட்ட சொல்லியவன் தானும் சிலதை வெட்ட சலித்துக்கொண்டே அவன் சொன்னதை செய்தாள் சித்தாரா.

ஒருவழியாய் இருவரும் சமைத்து முடித்து விட்டு குளிக்க செல்ல அங்கும் நான் தான் முதலில் குளிப்பேன் இல்ல நான் தான் முதலில் குளிப்பேன் என்று சண்டை வர அதில் சித்தாராவை ஓரே தள்ளில் பெட்டில் தள்ளிவிட்ட சர்வா பாய்ந்து சென்று பாத்ரூம் கதவை சாத்தினான்.

இங்கே அவன் தள்ளிவிட்டதில் கண்ட மேனிக்கு அவனை திட்டிக்கொண்டு இருந்தாள் சித்தாரா‌.

குளித்து முடித்து அவன் வெளியே வர இவளோ அவனது வயிற்றில் ஒரு குத்து குத்தி விட்டே பாத்ரூமினுள் நுழைந்தாள்‌.

அவள் குத்தியதில் " உப்ஃ..!! ஆஹ்..!!" என்று வயிற்றை பற்றிய சர்வா "வெளிய வாடி உனக்கு இருக்கு..!!" என்று கத்திக்கொண்டே ஆபிஸ் பைலை எடுத்து வைக்க

அங்கோ "போடா டேய் போடா போடா..!!" என்று உள்ளிருந்து நக்கலாக குரல் கொடுத்தாள் சித்தாரா.

பின் இருவரும் உண்டு முடித்து கிளம்பி செல்ல தயாராக ஷூவை மாட்டிக்கொண்டு இருந்த சர்வாவோ "நீ வேலை செய்யுறது எல்லாம் சரி ஆனா தயவுசெஞ்சு நான் ஃபோன் பண்ணா எடு..!!" என்று சொல்ல.

சுடிதாரில் ஷாலை பின் பண்ணிக் கொண்டு இருந்த அவளோ "அதெல்லாம் எடுக்க முடியாது போடா..!!" என்றாள் அலட்சியமாய் உள்ளுக்குள்ளோ "நேத்து என்னை எப்படி பிடிச்சு கிள்ளுன..??" என்று கோபத்தோடு
எண்ணிக்கொண்டாள்.

அவளது கூற்றை கேட்டு பதில் ஒன்றும் சொல்லாத சர்வா அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு விருட்டென்று வீட்டை விட்டு வெளியேற.

"என்ன ஒண்ணும் சொல்லாம அமைதியா போறான்..?? இவன் இப்படி எல்லாம் கிடையாதே..??" என்று யோசனையோடு எண்ணிக்கொண்டாள் சித்தாரா.

நேற்றுபோலவே இன்றும் கல்லூரி முடித்து கல்லூரிக்கு அருகில் இருந்த ப்ரவுஸிங் சென்டருக்கு சென்றவள் தனது தோள் பேகை அங்கிருந்த கபோர்டில் வைத்து விட்டு அங்கிருந்த கல்லாவின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.

அங்கு வரும் நபர்களுக்கு கேட்பதற்கு ஏற்ப ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தும் பிரின்ட் எடுத்து கொடுத்தும் என தனக்குரிய வேலையை பார்த்துக்கொண்டு இருந்தவள் அக்கடையின் முதலாளி வந்ததும் எழுந்து நின்றாள்.

வந்தவர் வந்ததும் வராததுமாய் கல்லாவில் இருந்து ஆயிர ரூபாயை எடுத்து சித்தாரா கையில் கொடுத்தவர் "இந்தா மா நேத்தைக்கும் இன்னைக்கும் நீ வேலை செஞ்சதுக்கு சம்பளம்..!!" என்று சொல்ல

அதில் புரியாமல் அவரிடம் இருந்து வாங்கியவள் அவரை கேள்வியுடன் நோக்க அதை புரிந்துக்கொண்ட அவர் "இங்க பாரு மா நீ நல்லா தான் வேலை செய்யுற ஆனா உன் கிட்ட வேகம் இல்லை இந்த வேலைக்கு வேகம் ரொம்ப முக்கியம் அது இல்லாட்டி அவசரமா இருக்க கஸ்டமர் எரிச்சலாகி வேற கடைய பார்த்து போயிடுவாங்க..!!" என்று சொல்ல ஓரளவு அவர் சொல்ல வருவது அவளுக்கு புரிந்தது.

"இந்த வேலைக்கு நான் வேற ஆளை பார்த்துட்டேன் மா..!! நீ எதுக்கு இந்த வேலைக்கு வந்திருக்கேன்னும் எனக்கு தெரியும் உன் அப்பா ஸ்தானத்துல இருக்குறதால சொல்லுறேன் கேட்டுக்கோ புருஷன் பொண்டாட்டினா சண்டை வரதான் செய்யும் அதை பெண் நீ தான் மா அனுசரித்து போகணும் ஆம்பளைங்க ஆயிரம் டென்ஷன்ல இருப்பாங்க.." என்று தொடர்ந்தவர் பக்கம் பக்கமாய் அவளுக்கு அட்வைஸ் செய்ய

"இந்தாளு இப்ப எதுக்கு சம்மந்தமே இல்லாம இப்படி பிளேடு போடுறாரு..??" என்று உள்ளுக்குள் குழப்பமாக எண்ணிக்கொண்ட சித்தாரா அவர் கூறுவதற்கு எல்லாம் கடனே என்று தலையாட்டி வைத்தாள் கூடவே உள்ளுக்குள் வேலை போனதால் ஒருவித சோகம் அப்பிக்கொண்டது.

அதே சோகத்துடன் தன் பேகை எடுத்துக்கொண்டு அந்த கடையை விட்டு வெளியே வந்தவளை தன் பைக்கில் சாய்ந்து நின்றபடி வரவேற்றது வேறு யாரும் இல்லை சாட்சாத் நம் சர்வாவே தான்.

அவனை அங்கு எதிர்பாராதவள் குழப்பத்துடன் அவன் அருகில் செல்ல

அருகில் வந்தவளிடம் "என்ன டி வேலை புட்டுகிச்சா..??" என்று படுநக்கலாய் கேட்டான் சர்வா.

அவனது அக்கேள்வியில் "இவனுக்கு எப்படி தெரியும்..?" என்று உள்ளுக்குள் அதிர்ந்த சித்தாரா நடந்ததை கூட்டி கழித்து பார்க்க காலையில் அவன் அமைதியின் காரணம் இப்போது புரிந்தது‌.

ஆக காலையில் தான் அவனை அலட்சியபடுத்தியதற்கு தன் வேலையை இல்லாமல் செய்து விட்டான் என்று எண்ணியவளுக்கு அவன் மீது கட்டுக்கடங்காத கோபம் வர

அவனை வெறுப்புடன் ஏறிட்டு பார்த்தவள் "உனக்கு மனசாட்சியே இல்லையா‌...??" என்று கேட்டாள் பல்லை கடித்தபடி.

அதில் நக்கலாக அவளை பார்த்த சர்வா "நீ தான் நான் போன் பண்ணா எடுக்க மாட்டேன்னு சொன்ன நானும் பாவம் நம்ம அத்தை பொண்ணுக்கு வேலை ரொம்ப கஷ்டமோ அதான் எடுக்கமாட்டேன்னு சொன்னாளோனு நினைச்சு ஒரு நல்ல எண்ணத்துல நீ எங்க வேலைக்கு போறேன்னு உன்னை பாலோவ் பண்ணேன்..!! பார்த்தா.. நீ நம்ம காலேஜ் பக்கத்துல அதுவும் எனக்கு நல்லா தெரிஞ்ச கடையில வேலைக்கு சேர்ந்திருக்க. அதான் சொல்ல வேண்டியது எல்லாம் உன் கடை ஓனர் கிட்ட சொன்னேன் ஆனா அவர் இவ்வளவு ஸ்பீடா உன்னை வேலைய விட்டு தூக்குவாருன்னு நான் உண்மையாவே எதிர்பாக்கலை டி...!!!" என்று போலியாய் ஆச்சரியப்படுவது போல் கூற அவனது அந்த தோணியில் நக்கலே‌ அதிகமாக வழிந்தது‌.

அவனது அந்த பதிலை கேட்டவளுக்கு அப்போது தான் ஒரு விஷயம் புரிந்தது அது சர்வா என்றும் பழைய சர்வாவே தான். இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன தான் அவன் அவளிடம் சிரித்து பேசி இருந்தாலும் அவனது ஈகோவை தொட்டால் அவன் அதற்கு பதிலடி கொடுக்காமல் விட மாட்டான் என்பதை அவள் அக்கணம் புரிந்துக்கொண்டாள்.

அதில் எழுந்த கோபத்திலும் தன் வேலை போயும் போயும் இவனால் போய் விட்டதே என்ற கழிவிரக்கத்திலும் கண்களில் கண்ணீர் தேங்க அதே கண்ணீர் தேங்கிய கண்களோடு அவனை ஏறிட்டு பார்த்தவள் "என் மூஞ்சிலையே முழிக்காத..!!" என்று கோபமாக உதடு துடிக்க கூறிவிட்டு அவனை திரும்பி பாராமல் நடக்க தொடங்க.

"போடி போ..!! உன் மூஞ்சை எல்லாம் சும்மா காட்டுனா கூட எவனும் பார்க்கமாட்டான்...!!" என்று இங்கிருந்து அவள் காதில் விழ வேண்டும் என்றே சத்தமாக இவன் கத்த.

அதை கேட்டு காதை இறுக்கமாக மூடியவள் தன் வேகத்தை கூட்டி நடந்தாள்‌.

போகும் அவளை கடுப்புடன் பார்த்து "மூஞ்சில முழிக்க கூடாதாமே..??" என்று எரிச்சலுடன் வாயினுள் முணுமுணுத்தவன் அங்கு சில பேர் தன்னையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு நிற்பதை பார்த்து இருந்த எரிச்சலில் அவர்களிடம் "என்ன வேணும்..??" என்று சீற.

இவனிடம் வாயை கொடுக்க அவர்கள் என்ன முட்டாளா அமைதியாய் தம்தம் வேலையை கவனிக்க தொடங்கினர்.

இருந்த கோபத்தில் பைக்கின் கிக்கரை ஓங்கி மிதித்தவன் அது ஸ்டார்ட் ஆனதும் வண்டியை முறுக்கிவிட்டு அதை விருட்டென்று இயக்கி இருந்தான்.

வீட்டிற்கு சென்றவன் வெளியே சித்தாராவின் செருப்பு இருப்பதை பார்த்தே அவள் வந்து விட்டாள் என்பது தெரிய அவளது செருப்பை ஒரு மிதி மிதித்த அவன் வேகமாக உள்ளே நுழைந்தான்.

ஹாலிலும் கிச்சனிலும் அவள் இல்லாமல் இருக்க புரிந்து விட்டது அவள் ரூமில் தான் உள்ளாள் என்று அவளை சென்று பார்க்க அவனது தன்மானம் தடுக்க ஹால் சோபாவில் அப்படியே அமர்ந்தவன் டீவியை இயக்கி பார்க்கத்தொடங்கினான்.

சிறிது நேரத்தில் இயற்கை அவனை அழைக்க அதில் சோபாவை விட்டு எழுந்துக் கொண்டவன் பெட்ரூம் கதவை திறக்க முயல அதுவோ உள்பக்கம் பூட்டி இருந்த காரணத்தால் திறக்க முடியவில்லை.

அதில் "அவசரம் புரியாம இவ வேற..!!" என்று எரிச்சலுடன் முணுமுணுத்தவன் கதவை வேகமாக தட்டி "ஏய் கதவ திற டி..!! கதவை திற..!!" என்று சத்தம் போட

அவளோ ஒரு பதிலும் கூறாமல் அமைதியாய் இருந்தாள்.

அதில் மேலும் கடுப்புற்றவன் "இப்ப கதவை திறக்க போறீயா இல்லையா டி..!!" என்று கூறி நன்றாக அக்கதவை தட்ட

அப்புறத்திலோ இப்போதும் எந்த பதிலும் இல்லை. இவளிடம் இப்படி பேசினால் சரிவராது என்று உணர்ந்தவன் "சித்துமா பீளிஸ் டா கதவை திற மாமாக்கு ஒரு முக்கியமான வேலை அங்க இருக்கு..!!" என்று கெஞ்ச

சிறிது நேர அமைதிக்கு பின் "நான் கதவை திறக்கணும்னா நீ என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்..!!" என்ற சித்தாராவின் குரல் கேட்க

அதை கேட்டு "இவளை..!!" என்று பல்லைக் கடித்த சர்வாவுக்கு அவளை எண்ணி ஆத்திரம் ஆத்திரமாய் வர அவனது மாண்புமிகு மனசாட்சியோ சரியாய் அச்சமயம் வெளியேவந்து "டேய் சர்வா அவசரபடாத ஆத்திரத்தை கூட அடக்கலாம் ஆனா அதை அடக்க முடியாது டா..!!" என்று எடுத்துகூற அதில் தற்போது இயற்கையின் அழைப்பே முக்கியம் என்பது புரிய தன்னை கல்லாக்கி கொண்டு "சரிடி சாரி என்னை மன்னிச்சிரு...!!" என்றான் பல்லை கடித்தவண்ணமே

அடுத்த நொடி கதவு திறக்கபட அவரசமாக உள்ளே சென்றவன் எதிரில் இருந்தவளின் தலையை பிடித்து வேகமாக இழுத்து நாலு கொட்டை அழுத்தமாய் அவளது தலையில் இறக்கி விட்டு "இருடி உன்னை வந்து வச்சுக்குறேன்..!!" என்று ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டலாக சொல்லிவிட்டு அவசர அவசரமாய் பாத்ரூமினுள் சென்று மறைந்தான்

தொடரும்
 

Pavichandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 19

சர்வா சித்தாராவின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் செல்லா விட்டாலும் சலசலக்கும் அருவியாக அமர்க்களமாகவே சென்றது.

தினமும் ஒரு சண்டை அடி திட்டு என்று சலிப்பே இல்லாமல் பலவண்ணங்களாய் அவர்கள் வாழ்க்கை நகர்ந்தது.

இதற்கிடையே சித்தாராவுக்கு அஜய் மற்றும் சந்தியா என்ற இரு நண்பர்கள் கிடைத்தனர்.

காலேஜில் அவர்கள் அடிக்காத லூட்டியே இல்லை எனலாம்.

விஷ்வநாத் மற்றும் சித்தாராவின் உறவு கல்லூரியில் தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தது. ஒரு சில முறை சீதாவும் கல்லூரிக்கு வந்து சித்தாராவை பார்த்து சிறிது நேரம் பேசி விட்டு செல்வார். வீட்டில் எப்போதும் கண்மணியை அழைத்து போன் பேசுபவள் ஒருமுறை கண்மணி சந்திராவிடம் போனை கொடுக்க தயங்கியபடி அன்னையிடம் பேசியவள் கடைசியில், " எங்க கிட்ட பேச உனக்கு இப்போ தான் மனசு வந்துச்சா...??" என்ற அன்னையின் அழுகையில் இவளும் உடைந்து போய் அன்னையை சமாதானப் படுத்தினாள் அன்று முதல் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

அதே போல சர்வாவும் ஆனந்தியிடம் பேசிக்கொண்டு தான் இருந்தான். இன்று நேற்று தொடங்கிய பேச்சு இல்லை அவர்கள் என்று வீட்டை விட்டு துரத்தினார்களோ அன்று தொடங்கிய பேச்சு.

ஆம் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற்றி விட்ட அன்றே மருமகனை அழைத்து பேசினார் ஆனந்த் என்ன இருந்தாலும் பெண்ணை பெற்றவராயிற்றே. கூடவே தன் தாயிடமும் சிலநேரம் ஃபோன் செய்து பேசுவான்‌. ஆனால் தந்தையிடம் தான் இதுநாள் வரை அவன் பேசவில்லை.

ஆக இருவரும் எதில் ஒத்து போகிறார்களோ இல்லையோ தம் தம் தந்தையிடம் முறுக்கிக்கொள்வதில் மட்டும் நன்றாக ஒத்துபோயினர்.

அன்று மதியம் கல்லூரியை நண்பர்களோடு சேர்ந்து கட்டடித்த சித்தாரா கல்லூரிக்கு அருகில் உள்ள பீச்சுக்கு செல்ல அங்கிருந்த கடலில் நண்பர்கள் மூவரும் காலை நனைத்து விளையாடினர்.

மூச்சு வாங்க விளையாடியவர்கள் அங்கிருந்த மணலில் அப்படியே அமர அப்போது சித்தாராவின் அருகில் வந்த அஜய், "சித்தாரா உனக்கு என்ன பிளேவர் ஐஸ்கிரீம் வேணும்..??" என்று கேட்க "பட்டர்ஸ்காச் வேணும் டா..!!" என்றிருந்தாள் சித்தாரா.

"சரி..!!" என்று கூறியவன் உடனே அருகில் இருந்த சந்தியாவுக்கு கண்ணை காட்ட அவளோ புரிந்துக்கொண்டு, "மச்சி இரு டி நானும் அவன் கூட போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்..!!" என்று கூறிவிட்டு வேகமாக எழுந்து அவனுடன் செல்ல அவர்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த சித்தாரா கடலை பார்க்க தொடங்கினாள்.

இங்கு அஜயுடன் வந்த சந்தியா, "டேய் இன்னைக்கு நேரம் இடம் எல்லாம் செமையா பொருந்தி வந்திருக்கு ஐஸ்கிரீமை அவ கைல கொடுத்துட்டு டக்குன்னு அவக்கிட்ட லவ்வை சொல்லிடு..!!" என்று அவனிடம் சொல்ல

அதை கேட்ட இவனோ "பயமா இருக்கு டி ஒரு வேளை அவ நோ சொல்லிட்டா..??" என்று கேட்டான் கலக்கமாய்

"ப்ச் பயபடாத டா லூசு அவ அப்படி எல்லாம் சொல்ல மாட்டா டிரை பண்ணி பாரு..!! அப்புறம் நடக்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்..!!" என்று சொல்லி அவனுக்கு தைரியம் கொடுக்க

அதில் புது தெம்பு கிடைக்க சந்தோஷமாக சித்தாராவுக்கு பிடித்த ஐஸ்கிரீம் பிளேவரை வாங்கினான்.

இங்கு கடலை பார்த்துக்கொண்டிருந்த சித்தாராவோ தற்செயலாய் திரும்ப அங்கு கடலை வெறித்துக்கொண்டு நின்றான் விக்னேஷ்‌. இவர்கள் இருவரின் திருமணம் நடக்க காரணமாக இருந்த அந்த நல்லவன்.

அவனை கண்டதும் "ஹேய் இது விக்கி அண்ணால..!!" என்று எண்ணிய சித்தாரா வேகமாக எழுந்து அவன் அருகில் செல்ல.

கடலை வெறித்துக்கொண்டு இருந்த விக்னேஷ் "விக்கி அண்ணா..!!" என்ற குரல் கேட்டு தன் நினைவலையில் இருந்து கலைந்து திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்த சித்தாராவை கண்டு அதிர்ச்சி கலந்த சிரிப்புடன் "ஹே சித்தாரா..!! எப்படி மா இருக்க..??" என்று கேட்க.

அவனுக்கு பதில் கூறாமல் அவனை தான் தலைமுதல் பாதம் வரை பார்த்துக்கொண்டு நின்றாள் சித்தாரா‌.

அதில் அவளை பார்த்து முழித்த இவன் "என்னாச்சு மா..?? நல்லா இருக்க தானே" என்று மீண்டும் கேட்க.

அதில் அவளோ "நான் நல்லா இருக்குறது இருக்கட்டும் அண்ணா நீங்க ஏன் இப்படி இருக்கீங்க..??" என்று கேட்டவளது பார்வையோ சிகையை கூட வெட்டாமல் பல மாதம் ஷேவ் செய்யப்படாத தாடியுடன் கண்களில் கருவளையத்தோடு தன் முன்னே நின்றுக் கொண்டிருந்த விக்னேஷை அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அதில் விரக்தியாக சிரித்த விக்கி "ப்ச் எல்லாமே நாசமா போச்சு மா..!!" என்றான் மரத்து போன குரலில்.

அதில் அவளுக்கு ஏதோ புரிவது போல இருக்க "ஸ்டெல்லா அக்கா...??" என்று கேள்வியுடன் அவள் நிறுத்த.

"அவளுக்கு போன மாசமே கல்யாணம் முடிஞ்சிடிச்சு மா..!!" என்றான் சோர்வுடன்.

அதில் அதிர்ச்சியானவள் அதே அதிர்ச்சியுடன் "என்ன அண்ணா சொல்லுறீங்க..??" என்று கேட்க.

"அவ அப்பா ஒரு மத வெறி புடிச்சவர் மா அதனால தான் யாருக்கும் தெரியாம நாங்க கல்யாணம் பண்ண பார்த்தோம் பட் எப்படியோ அவர் அதை கண்டுபிடிச்சு வந்து ஸ்டெல்லாவ கூட்டிட்டு போயிட்டார் ஆனா பாவம் இதுல சம்மந்தமே இல்லாம நீங்க மாட்டிக்கிட்டீங்க..!!" என்று வருத்தமாக கூறியவன்

"ப்ச் எல்லாமே அர்த்தம் இல்லாம போச்சு மா அதற்கடுத்து எவ்வளவோ தடவை அவளோட அப்பாவை பார்த்து பேச முயற்சி பண்ணேன். என்னை மதிக்கவே இல்ல மா அவரு அடிச்சு தூக்கி வெளிய போட்டுட்டார் ஸ்டெல்லாவுக்கு கால் பண்ணாலும் அவ அட்டெண்ட் பண்ணுறது இல்லை லாஸ்ட்ல பேஸ்புக்ல அவ எங்க பேச்ல ஒரு பொண்ணை டேக் பண்ணி அவ கல்யாண போட்டோவை போட்டிருந்தா அதை பார்த்து தான் அவளுக்கு கல்யாணம் ஆனதே தெரியும் மா..!!" என்று கூறியவனது கண்களில் லேசாய் கண்ணீர் மின்ன அவனை பார்க்கவே அத்தனை கவலையாய் இருந்தது சித்தாராவுக்கு.

"விடுங்க அண்ணா உங்களுக்காக பொறந்தவங்க அவங்க இல்லை போல வேற எங்கையோ தான் உங்களுக்காக பொறந்தவங்க இருக்காங்க போல நீங்க கவலை படாதீங்க கண்டிப்பா அவங்களை கூடிய சீக்கிரம் நீங்க மீட் பண்ணுவீங்க அவங்க உங்களுக்கு அள்ள அள்ள குறையாத லவ்வை தருவாங்க.!!" என்று சொல்ல

அதில் இப்போது சத்தமாக சிரித்தவன் இகழ்ச்சியான குரலில் "காதல்..!! அந்த காதல் மேல இருந்த நம்பிக்கை எல்லாம் சுத்தமா அழிஞ்சு போச்சு மா..!! அந்த காதல் என் வாழ்கையில நுழையிறது மட்டும் இல்ல அது என் பக்கத்துல நெருங்குறதை கூட நான் விரும்பல..!!" என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் சொல்ல.

அதை கேட்டு மேற்கொண்டு அவனிடம் வாதிடாமல் அவனை எப்படி சமாதானம் படுத்துவது என்பது புரியாமல் முழித்தவள்.

"வாங்க அண்ணா பக்கத்துல தான் வீடு இருக்கு உங்க பிரெண்ட் கிட்ட உண்மையை சொன்னா நீங்க இரண்டு பேரும் பழைய படி ஆகிடுவீங்க‌.!!" என்று சொல்ல

அதில் விரக்தியாக சிரித்தவன் "இல்லை மா வேண்டாம்..!! தெரிஞ்சோ தெரியாமலேயோ என் பிரச்சனையில உங்க இரண்டு பேர சிக்க வச்சுட்டேன் அதுக்கு எனக்கு எப்பவும் மன்னிப்பே கிடையாது..!! இப்போ அவன் கிட்ட என் கதையை சொல்லி சிம்பத்தி கிரியேட் பண்ண நான் விரும்பல..!!" என்று உறுதியுடன் சொல்ல

அவனது உறுதியை கண்டு இவளால் தான் ஒன்றும் கூற முடியாமல் போனது.

அச்சமயம் சித்தாராவை தேடி வந்த அவள் நண்பர்கள் அவள் ஒரு ஆடவனுடன் நின்று பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து விரைந்து அவள் அருகில் செல்ல.

அவர்களை கேள்வியுடன் பார்த்தான் விக்கி.


அதை புரிந்துக் கொண்ட சித்தாரா "என் பிரெண்ட்ஸ் தான் அண்ணா..!!" என்று சொல்ல

அதை கேட்டு "சரி மா அப்போ நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் வரேன்..!!" என்று கூறியவன் அங்கிருந்து விடைபெற்றிருந்தான்.

அவன் சென்றபின் அவளுக்கும் அங்கு இருக்க மனம் இல்லாமல் போக ஐஸ்க்ரீமை கூட வாங்கி உண்ண மனம் இல்லாமல் நண்பர்களிடம் இருந்து விடை பெற்று சென்றாள்.

அன்று முழுவதும் இதையே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு சர்வாவிடம் சொல்லக்கூட பயமாக தான் இருந்தது ஏனென்றால் அவன் எப்போது எப்படி இருக்கிறான் என்று இவளால் கணிக்க முடியவில்லை.

ஒருவேளை அதை கூறி அவன் கோபம் கொண்டால் என்று குழப்பமாக எண்ணியவள் விக்கியின் பேச்சை மீறி அவனிடம் சொல்லவும் தோன்றவில்லை.

அவளது அமைதியை பார்த்து சர்வா கூட "என்ன இன்னைக்கு மழை வரது போல இருக்கு..!! அடடே..!! சித்தாரா மேடமோட மிக்ஸி வாய் இன்னைக்கு சத்தம் போடாம அமைதியா இருக்கா..!! அதானே பார்த்தேன் என்ன டா சென்னைல திடீர் வானிலை மாற்றம்னு..!!" என்று நக்கலாக கூற அவள் மற்றதை மறந்து அவனிடம் சண்டைக்கு போய் விட்டாள்.

இப்படி சென்றுக்கொண்டு இருந்த இவர்கள் வாழ்க்கையில் அன்று தான் சித்தாரா சர்வா மீது உள்ள காதலை முழுதாக புரிந்துக்கொண்டாள்.

எப்போதும் போல கல்லூரிக்கு சென்றுக்கொண்டிருந்த சித்தாராவை அன்று அதிசயமாய் அழைத்து வர சென்றான் சர்வா.

அவனை பார்த்த அக்கல்லூரியின் மாணவ மாணவிகள் அவனை கண்டு கொண்டு அவனை சூழ்ந்துக்கொள்ள.

இது தெரியாத சித்தாரா அவ்வழியே வரும்போது அங்கு கூட்டமாய் இருப்பதை பார்த்து "என்ன ஒரே கூட்டமா இருக்கு..?? எதாச்சும் வித்தை காட்டுறாங்களா என்ன..??" என்று எண்ணியபடி கூட்டத்துக்குள் நுழைந்து பார்க்க அங்கோ தன் பல்வரிசை தெரிய சிரித்து பேசிக்கொண்டு நின்றான் சர்வா.

அதை பார்த்தவளோ "இவன் எங்க இங்க...??" என்று எண்ணியபடியே பார்க்க அச்சமயம் அவளது தோழி சந்தியா இந்த வருடம் தான் அந்த கல்லூரியில் சேர்ந்ததால் சர்வாவை அவளுக்கு தெரியவில்லை.

"யாரு மச்சி இது செம்ம ஸ்மார்ட்டா இருக்கான்..??" என்று ஆர்வமாக கேட்க

அதில் அவள் வாயிலேயே ஒன்று விட்டு என் புருஷன் டி அவன் என்று சொல்ல வேண்டும் போல இருந்தது சித்தாராவுக்கு.

ஆனாலும் தன் நிலை கருதி அதை அடக்கியவள்.

"நம்ம காலேஜ் ஓல்ட் ஸ்டூடென்ட்..!!" என்று மட்டும் சொல்ல

அதை கேட்டு "வாவ்..!!" என்று மகிழ்ந்த சந்தியா "இனிமே அது என் ஆள்..!!" என்றாள் தடலடியாய்.

அவள் சொன்னதை கேட்டு நெஞ்சில் கைவைத்த சித்தாரா "என்னது உன் ஆளா..??" என்று அதிர்ச்சியுடன் கேட்க

"ஆமா நான் முடிவு பண்ணிட்டேன் இன்னைக்கே வீட்டுல போய் அப்பா கிட்ட சொல்லி அவங்க வீட்டுல பையன் கேட்க போறேன்..!!" என்றாள் உறுதியுடன் அதை கேட்டவளுக்கோ உள்ளுக்குள் ஏதோ செய்ய அவன் என்னவன் என்பது மட்டும் உள் உணர்வு சொல்ல "இல்லை இது நடக்காது..!!" என்றாள் சத்தமாய் தன்னை மீறி.

அதில் அவளை கேள்வியுடன் பார்த்த சந்தியா "நடக்காதா என்ன டி சொல்லுற..??" என்று கேட்க

அதில் என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தவள் "அது.. அது வந்து.. ஆங்..!! அவர் ஆல்ரெடி கமிட்டெட் டி..!!" என்றாள் சட்டென்று‌.

அதை கேட்டு "அப்படியா..??" என்று சோகமாக கேட்ட சந்தியா "சரி அவராச்சும் நல்லா இருக்கட்டும்..!!" என்று சொல்லிவிட

அதை கண்டு "பத்து வருஷம் லவ் பண்ண பில்டப்பை கொடுக்குறாளே..!!" என்று எண்ணிக்கொண்டாள் சித்தாரா.


சர்வா மாணவர்களுடன் பிசியாகி விட அவளோ அவன் எதுக்கு இப்ப காலேஜூக்கு வந்தான் என்ற கோபத்தோடு அங்கு நில்லாமல் பஸ்சை பிடித்து வீட்டுக்கு வந்து விட்டாள்.

"என் ஆளாமே அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் சர்வாவை அதுவும் என்னோட புருஷனை பார்த்து அப்படி சொல்லி இருப்பா..??" என்று சந்தியாவை எண்ணி வாய்விட்டு திட்டிவந்தவள் ஸ்தம்பித்து போனாள் சற்று முன் அவள் கூறிய வார்த்தையை உணர்ந்து.

"இது எப்படி சாத்தியம் அவனை எப்போதில் இருந்து அவ்வாறு நினைக்க தொடங்கினேன்..!!" என்று எண்ணியவளுக்கு பதில் சிறுவயதில் சர்வா அவளது கையை பிடித்து கடைக்கு அழைத்து சென்று தேன்மிட்டாய் வாங்கி தந்தது காட்சியாய் கிடைக்க.

அக்கணம் புரிந்துக்கொண்டாள் அவளது நேசம் இன்று நேற்று வந்ததில்லை அது சிறுவயதிலேயே உருவானது என்று.

"ஐயோ ஜித்து பையா உன்னை நான் லவ் பண்ணுறனா டா..??" என்று வாய்விட்டு கேட்டுக்கொண்டவளுக்கு வெட்கம் வந்து தொலைய தன் கைகொண்டு முகத்தை மூடிக்கொண்டாள்.

அச்சமயம் வீட்டினுள் நுழைந்த சர்வா இவளது தோற்றத்தை பார்த்து குழப்பமாக "என்ன டி சித்து கையை மோந்து பார்த்துட்டு இருக்க..??" என்று கேட்டபடி வண்டி கீயை செல்ப்பில் வைக்க அவன் குரல் கேட்டு முகத்தில் இருந்த கையை விலக்கிய சித்தாரா படபடப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ அதை கவனிக்காமல் "நான் இன்னைக்கு உன்னை பிக்கப் பண்ண நம்ம காலேஜுக்கு போனேன் டி ஆனா உன்னை அங்க காணல..??" என்று கேட்க

அதில் அப்போது தான் நினைவு வந்தவளாக "இங்க பாரு ஜித்து மாமா இனி நீ நம்ம காலேஜ் பக்கம் வர கூடாது..!!" என்றாள் உறுதியாய்.

அதில் அப்போது தண்ணீரை குடித்துக்கொண்டிருந்தவன் இதை கேட்டு பாட்டில் கேப்பை மூடியபடி "ஏன்..??" என்றான் புரியாமல்.

"காரணம் எல்லாம் கேட்காத நீ வர கூடாதுன்னா வர கூடாது அவ்வளவு தான்..!!" என்று சொன்னவள் அங்கிருந்து எழுந்து அறைக்குள் சென்றுக் கொண்டாள்.

போகும் அவளை பார்த்து
"நல்லா தானே இருந்தா..!! இப்ப இவளுக்கு என்ன ஆச்சு..??"
என்று தலையை சொறிந்தபடி யோசித்தான் சர்வா.

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top