All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாய்மை

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேய் தாய்

கருமை சூழ்ந்த நீச்சல் குளம்
நித்தம் நீந்தும் நீர்குமிழியாய் நான்.
பழகிப்போன இருட்டு அறை
மெல்லிசையாக இரு இதய துடிப்பு
ஒன்று நீயாக ஒன்று நானாக
இருளை பழகியே இயங்கியது என் அமைதி ஊர்வலம் பத்துதிங்களாய்..
இருள் விடிந்து பகல் உதிக்க நானும் உதித்தேன் உணர்வுகள் நிறைந்த உலகில் என் முதல் உணர்வான
அழுகை கொண்டு
உன் அழுகையை என் செவிக்கோர்ந்து..
முதல் அமுதமாய் உன் இதழ் என் நெற்றி ஒற்றி செல்ல
இருள் தந்த கதகதப்பை உன் இருகரம் தர ஒன்றி போனேன் உன் மாராப்பு சேலைக்குள்..
உன்னுள் புகுந்து நான் கண்ட முதல் இருட்டு பயமறியாது.
வெளிவந்த பின்னும் இல்லம் கொண்ட இருட்டு மிரட்சி தராதது..
என்னை மிரட்டி நீ காட்டிய இருட்டு
உன் முந்தானைக்குள்ளே மூழ்கி போகிறது.
இருட்டு என் விழி என்றால் ஒளி நீயே அம்மா..
பொத்தி பொத்தி வளர்த்தாய்
தத்தை மொழி ரசித்தாய்
தடுக்கி நான் விழ துடித்தாய்
தோளில் தட்டி கொடுத்தாய்
வாழ்க்கை படிகள் பல நான் ஏற ஏணியென நின்றாய்
தாய் என்பதாலோ இத்தனையும் செய்தாய்.
ஏனெனில் நான் உன் சேய் தாய்....

*†*************************///////////////////////////////////////////





அம்மா

அம்மா
உயிர் சுமக்கும் உன்னதம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
வலிகள் தாக்கும் நொடி
தாய்மடி ஒன்றே மருந்தாகும்.
இதயமும் அது ஒன்றுக்கே ஏங்கும்.
என்ன மாயமோ அவள் விழிமொழி ஆயிரம் ஆறுதல் கூறும்.
என் பிடித்தம் எதுவென்று உணர்ந்து சொல்லும் உயிரவள்..
தவறு செய்து தந்தையிடம் அடி வாங்க நிற்கும் நொடி
முதல் அடியை தன் முதுகில் தாங்கி நிற்பாள் பிள்ளையை அடிக்காதே என்று..
அவளே கோபம் கொண்டு அடிகையில்
விழுந்த தழும்புக்கு களிம்பிடுவாள் விழி நீர் கோர்க்க..
உயிர் கொண்ட தெய்வம் அவள்
நெஞ்சில் நிறைந்த அன்பு ஆழியவள்
என்னை ஆளும் அழகியவள்..
அம்மா அம்மா அம்மா..

#####################################

காதல்

காதல்
என் அரிவை மேல் அளவில்லா காதல்
என்னை கண்டதும் கலங்கும் விழிகள் மீது காதல்
இனிதாய் சிரிக்கும் புன்னகை
மீது காதல்.
பூக்கும் இதழ் என் கன்னம் தொட்டு செல்லும் அழகின் மீது காதல்
இதயத்துடன் இறுக அணைத்திட துடிக்கும் உன் இரு கரத்தின்
மீது காதல்.
எனக்காய் காத்திருக்கும்
உன் பிஞ்சு பாதத்தின் மீது காதல்..
துவண்டு போகும் எனக்கு துணையாய் நிற்கும்
உன் துணிவின் மீது காதல்
என் விழி பார்த்தே மனமறியும்
உன் புரிதல் மீது காதல்
எனக்காய் எத்தனை செய்யினும் எதுவும் எதிர்பார்க்கா
உன் இயல்பின் மீது காதல்
என்னை மட்டுமே முதன்மையென கொள்ளும்
உன் அன்பின் மீது ஆழமான
காதல்
ஏன் உன் மீது இத்தனை காதல்
கேட்டால் பதிலில்லை
உன் காதலின் பரிசாய் உந்தன் உயிரணுவில் ஜனித்ததால் வந்ததோ

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



தாய்மை தந்தேன்

கையில் நீள் வடிவ அட்டை அதில் சிறு நீல இரு சிகப்பு கோடு.
என்னுள் புது உயிராய் நீ இருப்பதை உறுதிப்படுத்தியது.

மசக்கை வாட்டி வதைக்க வருந்தாமல் ஏற்றேன் உனக்காக

வளையல் சத்தம் உனக்கு இதத்தை தந்ததா
வகை வகையான உணவுகள் ருசித்ததா..
என் குரல் கேட்கிறதா
என் கரத்தின் வருடல் உணர்கிறாயா
என விடை வராத பல கேள்விகள்
உன்னிடத்தில் இருக்க.
நீயோ அசைவில் உன் பதிலை தந்தாய்

என்னுள் பல வலிகள் ரணமென வலித்தும் ஏற்றேன் கடமையென

உனை ஈன்றெடுக்க பத்து திங்கள் காத்திருந்தேன் தாய்மை உணர்வில் திளைத்து நின்றேன்
என்னை போல இன்னொரு ஜீவனும்

உயிர் போன வலி உதிரம் போனது உதிர உடையுடன் உருவாய் நீ பிறந்தாய்

தேடி களைத்து கண்டு கொண்டாய் உன் அமுதசுரப்பியை
உள்ளம் பூரித்தது அள்ளி அணைத்தேன் முத்தமிட்டேன்.

இரு கரம் உன்னை கேட்க
உரிமை இல்லாதவள் நான் ஊமையாகி போனேன்

ஈரம் காயா பால் துளிகள் உன் இதழில்
ஈரம் பெருகி சிதறும் கண்ணீர் துளிகள் என் விழியில்

ஒரு உயிர் காக்க ஒரு உயிர் ஈன்றேன்
தாய்யை காக்க தாய்மை அடைந்தேன்
பெற்று இழந்தேன் உன்னை
ஊமையாய் அழும் வாடகை தாய்.....

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹////////////////////////////////


தாய்மை

மகள் தொப்புள் கொடி அறுத்து
உயிர் மீட்டு உயிர் பெற்ற நொடி அவளவன் அவன் உயிரை
காண செல்ல
நெஞ்சம் துடித்து இறைவனடி வேண்டுதலோடு நிற்பவள்
ஓடி வருவாள் மகளின் மகவை
காண அல்ல
தன் மகவின் நலன் காண


*****************************************₹₹₹


நானும் அன்னையே

மணம் முடிந்த முப்பது நாட்களில் ஒருத்தி கேட்டாள் விசேஷம் இல்லையா என்று

என் பதில் ஒரு வெட்க புன்னகை

சில நாள் கழித்து அதே கேள்வி
பதிலில் சில மாறுதல் ஒரு சங்கட புன்னகை

மாதங்கள் ஓடி வருடங்கள் வர நான் பயந்த கேள்வி
பதிலோ உதட்டு ஒட்ட ஒரு விரக்தி புன்னகை

உற்றவர்களே குத்தி கிழிக்கும் வார்த்தையில் அதே கேள்வி
நெஞ்சம் உடைந்த வலி புன்னகை

இறைவனிடம் வரம் கேட்டேன்
காகித மலர்களை தூதுவிட்டேன் மாலையென

தொலைந்து போன தூக்கத்தில் வதைக்கும் கனவுகள் கண்ணீராய்

அன்பு கணவன் ஆயிரம் ஆறுதல் சொன்னவனும் சுமந்து வந்தான் பொம்மை குவியலை..

பொம்மைகளும் கேட்டது எங்களை ஆளும் அரசர்கள் எங்கே என்று
பதில் மௌனம்..

போதும் கோவில் கதவையும் மருத்துவமனை கதவையும் தட்டியது போதும்

புது தோட்டத்தின் வாசலுக்கு சென்றேன் அங்கோ ஆயிரம் மழலை மொட்டுகள் ஒன்றை வேண்டி வந்தேன்

மலடியென இருந்தேன் மொட்டால் மலர்ந்தேன் அன்னையென

கடவுள் அளிக்கா வரத்தை

காப்பகம் தந்தது..

தாய் என்ற தகுதியை...

/////////////////////////////////////////////////


வணக்கம் அக்காள் அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️ கவிதை எப்படி இருக்குனு படிச்சி சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் நன்றிகள்...
 
Top